அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/வரியும் வர்ண விளக்கமும்


(41) ரியும் ர்ண விளக்கமும்



அமெரிக்கர் ஒருவர், ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரிடம், “உங்கள் நாட்டு தேசியக் கொடி எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“அதில் சிவப்பு வெள்ளை, நீலம் ஆகிய மூன்று நிறப் பட்டைகள் இருக்கும். எங்கள் நாட்டின் வரிகளைக் குறிப்பிடவே அந்த நிறங்களை ஏற்படுத்தியுள்ளனர்” என்று எண்ணுகிறேன்.

அதாவது வரி அறிவிப்பு வந்ததும், எங்கள் முகம் சிவந்து விடும் வரியைச் செலுத்தத் தொடங்கினால் எங்கள் உடல் வெளுத்து விடும்; வரி முழுவதையும் செலுத்தி முடித்தோமானால், நாங்கள் செத்துச் சவமாகி நீலம் பாரித்து விடுவோம்” என்று விளக்கிக் கூறினார் ஹாலந்து நாட்டுக்காரர்.

‘எங்கள் நாட்டுக் கொடி விஷயமும் இதே கதை தான்! ஆனால், அதை நோக்கி, அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறோம்” என்றார் அமெரிக்கர். .

உலகில் எங்கே பார்த்தாலும் அரசு விதிக்கும் பல வகை வரிகளால் பொதுமக்கள் பெரிதும் சலிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது தெரியவருகிறது.