அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விருந்தை மறந்தவர்
(20) விருந்தை மறந்தவர்
பிரிட்டிஷ் கண்காட்சிசாலையின் பொறுப்பாளர் ஒருவர், தம்முடைய நண்பர்களுக்கெல்லாம் விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பினார்.
குறிப்பிட்ட நாளில், ஒரு உணவு விடுதிக்கு வந்து சேருமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த விடுதியில் தகுந்த ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார்.
ஆனால், நண்பர்களை வரவேற்பதற்கு, குறிப்பிட்ட நாளுக்கு மறுநாள் அவர் போய்ச்சேர்ந்தார். ஞாபகமறதி. அவர் என்ன செய்வார், பாவம் !