அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி/2
உள் இழைப்பு வேலை செய்வதற்கான ஒர் எந்திரம்
donkey engine : (பொறி.) பாரம் இழுப்பு எந்திரம் : கப்பலின் மேல் தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி எந்திரம்
doorbell: (மின்.) வாயில்மணி : வெளிப்புறம் கைப்பிடி அல்லது விசைக் குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி
door check: (க.க.) கதவுத்தடை : கதவு வேகமாகச் சார்த்திக் கொள்வதைத் தடுத்து மெதுவாகச் சார்த்திக் கொள்ளுமாறு செய்யும் அமைவு
door frame: (க,க.) கதவு நிலை.: கதவினைத் திறக்கவும் மூடவும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலை
door head:(க,க.) கதவு நிலை மேல் முகடு: கதவு நிலையின் மேற்பகுதி
dope: (கம்.) வண்ண மெருகு: புரியிழையுடைய குழாய் இணைப்புகளுக்கு மசகிடுவதற்குப் பயன்படும் ஒரு கூட்டுப் பொருள்
dope: (வானூ.) விமான வண்ண மெருகு: விமானப் பூச்சுக்குரிய ஒரு திரவப் பொருள்
doppler (விண்.)டோப்ளர், கிறிஸ்டியன் (1803-1853); ஆஸ்திரிய இயற்பியலறிஞர்
doppler effect: (இயற்.) டோப்ளர் விளைவு : ஒலி, ஒளி, ராடார் போன்றவற்றின் அலை அதிர்வில் ஏற்படும் மாற்றம். ஆதாரமும், நோக்குபவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நகரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது. நோக்குபவரை ஆதாரம் நெருங்கி வரும்போது இந்த அலை அதிர்வு அதிகமாகிறது; விலகிச் செல்லுங்கால் குறைகிறது. இந்தத் தத்துவம். தடம் பற்றிச் செல்வதிலும், மீகா மத்திலும் பயன்படுகிறது
doric frieze: (க.க.) கிரேக்க ஒப்பனைப் பட்டை : கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம்
doric order:(க.க.) கிரேக்க கட்டிடபாணி: பண்டைய கிரேக்கக் கட்டிடக்கலைப்பாணி
dormer window: (க.க.) பல கணி: சாய் கூரையில் செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணி
dormitory: (க.க.) துயிற்கூடம் : பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடம். உறங்குவதற்குரிய ஒரு தனிக் கட்டிடத்தையும் குறிக்கும்
dosimeter: (இயற்.) கதிரியக்க அளவுமானி: ஒருவர் பெற்றுள்ள கதிரியக்கத்தின் அளவினை அளவிடுவதற்கான ஒரு கருவி
dote: (மர.) இற்றுப்போதல்: பார்க்க: மட்குறு
dot generator :(மின்.) வெண் புள்ளியாக்கி : தொலைக்காட்சித் திசையில் வரிசையான வெண் புள்ளிகளை உண்டாக்கும் ஒரு தொலைக்காட்சி பழுது பார்க்கும் கருவி. வண்ணத் தொலைக்காட்சியில் குவியத்தைச் சரிசெய்வதற்கு இது பயன்படுகிறது
dot-sequential system : (மின்.) புள்ளித் தொடர் விளைவு முறை : தொலைக்காட்சிப் பட ஒளி-ஒலிக் கூறுகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துத் தொலைக்கனுப்பும் முறை double acting hinge: (தச்சு.) இருதிசைக்கீல் : இரு திசைகளில் இயங்குவதற்கான கீல். ஊசலாட்டக் கதவுக்ளில் இது பயன்படுத்தப்படுகிறது
double action press : (எந்.) இருதிசை இயக்க அச்சு ஏந்திரம்: இவ்வொரு சுழற்சியின் போதும் இருவகைச் செயற்பாடுகளைச செய்யக்கூடிய வகையில் அமைந்த அச்சு எந்திரம்
double belting :இரட்டை வார்ப் பட்டை : தோலின் மிகுதியான கனத்துடன் அல்லது இருமடங்கு கனத்துடன் அமைந்த வார்ப் பட்டை
double bond: இரட்டைப் பிணைப்பு: எத்திலீன் H2C=CH2 கரிம வேதியியலில் ஒரே தனிமத்தின் இரு அணுக்களிடையிலான இரட்டைப் பிணைப்பில், ஒரு பிணைப்பு மற்றதைவிட அதிக வலுவுடையதாக இருக்கும்
double break switch : (மின்.) இரட்டை முறிப்பு விசை: ஒரே சமயத்தில் இரு கம்பிகளில் மின் சுற்றிணை உண்டாக்கவும் முறிக்கவும் வல்ல ஒரு விசை
double contact lamp : (மின்.) இரட்டைத் தொடர்பு விளக்கு : இரு அடிச்சேர் முனைகள உடைய ஒரு விளக்கு இதனைக் குதை குழியில் செருகியதும் மின்தொடர்பு ஏற்படும்
double cut : (பட்.) இரட்டை வெட்டு அரம் : ஒன்றுக்கொன்று 45-60° கோணத்தில் குறுக்காக வெட்டுகிற இரு பல் வரிசைகளைக் கொண்ட அரம்
double demy : இரட்டைவரை படக் காகிதம்:50x16செ.மீ. அளவுடைய வரைபடத்திற்கான காகிதம்
double end bolt : (எந்.) இருமுனை மரையாணி: இரு முனைகளிலும் சுரைகளுக்கான் வரிப்பள்ளம் உடைய திடமான தலையில்லாத மரையாணி. இதனைத் தண்டு மரையாணி என்றும் கூறுவர்
double filament lamp : (மின்.) ஈரிழை விளக்கு : இரண்டு இழைகள் உள்ள விளக்கு. ஒரு சமயத்தில் ஒரே இழைமட்டுமே எரியும். இந்த் இழைகள் ஒரே அளவுத் தடைகளை உடையவனாக இருக்கலாம்
double geared: (எந்.) இரட்டைப் பல்லிணையுள்ள : சாதாரணமாகப் பின்புறப் பல்லிணையுள்ள ஒரு கடைசல் எந்திரத்தின் அல்லது துரப்பன எந்திரத்தின் பல்லிணை அமைப்பு
douple hung window : ( க.க.) இரட்டைப் பல்கணி: மேலும் கீழும் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகையுள்ள ஒரு பலகணி
double ionization : (மின்.) இரட்டை அயனியாக்கம் : வாயு நிரப்பிய இருமுனையத்தில் ஒவ்வொரு வாய் மூலக்கூற்றிலிருந்தும் இரண்டு எலெக்ட்ரான்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலை
double pitch skylight: இரு கவர் மோட்டுப் பலகணி: இரு திசைகளில் சாய்வாக உள்ள ஒரு மேல்தளச் சாளரம்
double point push button : (மின்.) இரட்டை முனை அழுத்து பொத்தான் : ஒரே இயக்கத்தில் இரு தனித்தனி மின்சுற்றுகளைக் கட்டுப்படுத்த வல்ல அழுத்து பொத்தான். இதில் ஒரு கொண்டையும் இரு அடித்தொடு நிலைகளும் இருக்கும்
double pole : (மின்.) இரட்டை முளை : இரட்டை முனை விசை போன்று இரு தொடர்புகளை அல்லது இணைப்புகளைக் கொண்டிருததல
double roll: (அச்சு.) இரட்டை அச்சுருளை: ஒவ்வொரு அச்சுப்பதி வினையும் இருமுறை மையொற்றி அழுத்தும் உருளை
double riveting: இரட்டைக் குடையாணி: தண்டவாளம் - கம்பம் முதலியவற்றில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறையில் இரு வரிகள் அல்லது முனைகளைப் பொருத்தும் முறையில் நான்கு வரிகள் இரட்டைக் குடையாணி இணைப்பானது, இரு இணையான குடையாணி வரிசைகள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது
double row radial engine : (வானூ.) இரட்டை ஆரை எஞ்சின்: ஒரு பொதுவான திருகு சுழல் தண்டினைச் சுற்றி ஆரைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ள இருவரிசை நீள் உருளைகளைக் கொண்ட ஒர் எஞ்சின் முன்னும் பின்னுமாக உள்ள நேரிணை நீர் உருளைகள் வரியிணைக் கொண்டிருக்கவோ, கொண்டிராமலோ இருக்கலாம்
double seaming machine : இரட்டை வெட்டுவாய் இணைப்பு எந்திரம் : கப்பலின் உடலில் வெட்டு வாய் இணைக்கப்பட்ட பின்பு எஞ்சியிருக்கும் விளிம்புகளைச் சமனப்படுத்துவதற்கான எந்திரம்
double threaded screw : (எந். .) ஈரிழைத் திருகு : இரு தனித்தனி திருகு சுழல்களுடைய ஒரு திருகு, இந்தத் திருகு சுழல்கள் உடற்பகுதியைச் சுற்றி ஒன்றுக்கொன்று இணையாகச் சுழன்றிருக்கும். இது செலுத்து வேகத்தை அதிகரிக்க உதவுகிறது
double throw switch : (மின்.) இருவழி விசை : இருவேறு திசைகளில் திருப்பக்கூடிய ஒரு மின் விசை. இது ஒரு மின்சுற்றினை இருவேறு மின்சுற்றுகளுடன் வெவ்வேறு சமயத்தில் இணைக்கிறது
douse : திரவத் தோய்வு : உலோகத்தைக் கெட்டியாக்கும் போது சூடாக்கிய உலோகத் துண்டினைக் குளிர்விப்பது போன்று ஒரு திரவத்தில் நன்கு தோய்த்தல்
douzieme : டுசியெம் : கடிகாரம் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் ஒர் அளவீட்டு அலகு. இதன் அளவு. .0188செ.மீ
dovetail : (மர.வே.) பொருத்திணைப்பு : ஒன்றை ஒன்றுடன் பொருத்தி இறுக்கிப் பிணைக்கும் இணைப்பு. இதில் புறாவின் வால் போன்று வடிவுடைய ஒரு பொருத்து முளை அதேபோன்று வடிவுடைய துளைப் பொருத்துச் சட்டத்துடன் பொருந்தி இணைகிறது
dovetail cutter: (மர.வே.) பொருத்திணைப்பு வெட்டு கருவி: பொருத்திணைப்பின் உள்முகங்களையும், வெளிமுகங்களையும் வெட்டுவதற்குப்பயன்படும் கருவி. இதன் உதவியால் விளிம்புகளை வசதியாகச் சமனப்படுத்தலாம்
dovetail dado: (மர.வே.) பொருத்திணைப்புச் சால்வரி : திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது
dovetail halved joint: (மர.வே. ) அரைப் பொருத்திணைப்பு : இந்த அரைப் பொருத்திணைப்பில் இரு வெட்டுவாய்களும் புறாவின் வால் போன்று பாதத்தில் குறுகியிருக்கும்
dovetailing: பொருத்திணைத்தல்: (1) பொருத்திணைப்புகள் மூலம் இறுக்கிப் பிணைத்தல் (2) அச்சுக் கலையில் ஈய அச்சு வரிக்கட்டைகளை இரட்டிப்பாக்குதல், இதில் பிளவு இணைப்புகள் ஒன்றின் மேல் ஒன்று பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும்
dovetail saw: (மர.வே.) பொருத்திணைப்பு ரம்பம் : இது தடித்த புறமுடைய ரம்பம் போன்றது; ஆனால் அதைவிடச் சிறியது. இதில் பற்களும் நுண்ணியதாக இருக்கும். கைப்பிடியும் வேறு வடிவில் அமைந்திருக்கும்
dowel இணைப்பாணி : மரத் துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்துவதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத ஆணி
doweling : இணைப்பாணி இணைப்பு : இணைப்பாணிகளின் உதவியினால் இணைப்புகளை ஏற்படுத்துதல்
dowel pin : (மர.வே.) இணைப்பூசி: உள்ளீடற்ற பெட்டியின் இரு பகுதிகளை இணைப்பதற்கு அல்லது கெட்டிப்படுத்தும்போது தோரணியின் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும் அல்லது உலோகத்தாலான ஊசி
dowel screw : இணைப்பாணித் திருகு : இருமுனைகளில் திருகிழை அமைக்கப்பட்ட மரத்தாலான திருகு
downdraft carpuretor. (தானி.. ) கீழ்வழி எரி-வளி கலப்பி : காற்று மேற்பகுதி வழியே உட்புகுந்து கீழ் நோக்கிச்சென்று தெளிப்பான் நுனியை அடையும் அமைப்புடைய ஒர் எரி-வளி கலப்பி
down spout: ( க.க.) கீழ்நோக்கிய கெண்டி வாய்க்குழாய் : கூரையிலிருந்து தரைக்கு அல்லது சாக்கடைக் குழாய்க்கு மழை நீரைக் கொண்டு செல்வதற்கான ஒரு குழாய் அல்லது குழாய்க் கால்வாய்
downwash : (வானு.) கோட்டக்கோணம்: விமானத்தை உயர்த்தும் மேற்பரப்புகள் காற்றோட்டத்திலிருந்து கோட்டமுறும் கோணம்
drachm : திராம் : மருந்துத் திரவங்களை அளவிடப் பயன்படும் 'அவுன்ஸ்' என்னும் எடுத்தலளவை வீசக்கூறு.
draft : (வார்.) வாரிழைப் பட்டை: ஒரு தோரணியை மண்லிலிருந்து எளிதாக அகற்றுவதற்கு உதவுகிற அத்தோரணியிலுள்ள வாரிழைப் பட்டை
drafting : வரைதல் : முன் வடிவ வரையும் கலை
draftsmans : உரு வரைப்படங்களை வரைபவர்
draftsmans’ scale : வரைவாளர் அளவுக்கோல் : உருவரைப்படங்களை வரைபவர்கள் பயன்படுத்தும் முக்கோண வடிவ அல்லது தட்டையான அளவுகோல். இதன் ஒரு விளிம்பு 1¼,⅛, ¾, ½ முதலிய அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்னொரு விளிம்பு பின்ன அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன
dragft stop on fire stop; (க.க..) இழுவை நிறுத்தம் அல்லது நெருப்புறுத்தம் : கட்டிடத்தின் குறுக்கே எரிதழல் பாதையினைத் தடுப்பதற்காக விமானப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்
drag : (வானூ.) இழுவை விசை : இயங்கும் ஒரு பொருளின் மீது அதன் இயக்கத் திசைக்கு இணையாக ஒரு திரவத்தின் வழிச் செயற்படும் ஒரு பின்னோக்கிய விசை. இது அந்தப் பொருளின்மீது செயற்படும் மொத்தத் திரவ விசையின் ஒரு கூறாக இருக்கும்
drag link : (தானி..) இழுவை இணைப்பு : இடது இயக்கக் கை பிடிக்கரத்தினை இயக்குக் கருவிக்கரத்துடன் இணைக்கும் ஒரு கோல். இந்தக் கரங்களின் குண்டு முனைகளை இயக்குவதற்காக இரு முனைகளிலும் இரு கிண்ணங்களும் ஒரு விற்சுருளும் இருக்கும்
dragon's blood : (வண்..) குங்கிலியம் : சயாமில் வளரும் ஒருபனை வகையிலிருந்து பெறப்படும் ஒரு பிசின் பொருள். மணமற்றது; சுவையற்றது; நீரில் கரையாதது; ஆல்ககாலிலும் ஈதரிலும் கரையக் கூடியது. சிவப்புத் திரவ வடிவில் உள்ளது. வண்ணச் சாயங்கள் தயாரிப்பதிலும், ஒளிச்செதுக்கு முறையிலும் பயன்படுகிறது
drag rope : (வானூ.) இழுவை வடம் : ஒரு பலூனின் மேற்பகுதியிலுள்ள நீண்ட் வடம். இது ஒரு தடையாகவும், இறங்கும் போது மாறுகிற பாரமாகவும் பயன்படுகிறது
drain : வடிகால் : சாக்கடை நீர் அல்லது மற்றக் கழிவுத் திரவங்கள் வெளியேறுவதற்கான ஒரு குழாய்
drainage : வடிகால் அமைப்பு : சாக்கடையை அப்புறப்படுத்துவதற்கு அமைக்கப்படும் வடிகால்களின் அமைப்பு
drain cock : (கம்.) வடிகால் குழாய் முனை: சாக்கடை வடிவுதற்கு அனுமதிப்பதற்காக குழாய்த் தொடர்பின் கீழ் முனையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய ஒரதர்
drain tile: வடிதாரை ஓடு : ஈரப் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காகப் பயன்படும் வடி தாரை ஒடு
dram : திராம் : ஒர் அவுன்சின் 1/16 பகுதி
draw : (1) வரைதீட்டு: வரிகளினால் வரை தீட்டுதல் (2) நெகிழ்விப்பு : எஃகினை மிக அதிகமான முடுக்கத்திலிருந்து தேவையான அளவுக்கு நெகிழ்வித்தல் (3) இழுத்தல்: கம்பியினை இழுத்து மெல்லியதாக்குதல்
draw bar : இழுவைச் சலாகை : உந்து வண்டியில் இழுத்துச் செல்லப் பயன்படும் ஒரு சலாகை. இதன் இரு முனைகளிலும் கண் இருக்கும். இதே நோக்கத்திற்குப் பயன்படும் பிற சாதனங்களையும் குறிக்கும்
draw bolt : இழுவை மரையாணி : கதவுகளை பிணைப்பதற்குப் பயன்படும் மரையாணி
draw chisel : (எந்.) இழுவை சிற்றுளி : ஒரு கூர்மையான சிற்றுளி. துவாரமிடுகையில் மையத்தை மாற்றியமைக்கப் பயன்படுகிறது
draw chuck : இழுவை ஏந்தமைவு : சிறிய துல்லியமான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது. இது ஒரு தேய்ந்து செல்கிற தாங்கியில், நீளவாக்கில் இயங்குகிறது draw cut shaper : (எந்.) இழுவை வெட்டு வடிவாக்கி: தட்டுதல் மூலம் அல்லாமல் இழுத்தல் மூலம் வடிவுகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
drawing back: (உலோ..) மறு சூடாக்கம் : எஃகின் கடினத் தன்மையை மாற்றுவதற்காக, எஃகு கெட்டியான பின்பு, முட்டுபதன் வெப்ப நிலைக்குக் குன்றத்த ஒரு வெப்ப நிலைக்குக் மீண்டும் சூடாக்குதல்
drawing board : படம் வரை சட்டம் : படம் வரைவதற்குத் தாளைப் பரப்பிக் குத்திவைப்பதற்கான பலகைச் சட்டம். இது வெண்தேவதாரு, எலுமிச்சை. நெட்டிலிங்கம் ஆகிய மரங்களிலிருந்து செய்யப்படுகிறது
drawing die : (உலோ.வே, ) வரை படிவ அச்சு : உலோகத் தகட்டினை கிண்ண வடிவுகளில் அழுத்தித் தயாரிப்பதற்கு விசை அழுத்திகளில் பயன்படுத்தப்படும் பொறிப்புக் கட்டை அல்லது படிவ அச்சு
drawing in : நூலிழைத்தல் : வார்ப்பு இழைகளைத் தறியின் பாவு வழியாக நூலிழைத்தல்
drawing of pattern : (வார்.) தோரணி இழுப்பு : வார்ப்பு மணலிலிருந்து ஒரு தோரணியை வெளியில் எடுத்தல்
drawing of temper : எஃகினை செம்பதமாகச் சூடாக்கி, அதனை மெல்ல மெல்ல குளிர்வித்தல். இது கெட்டியாக்கும் அல்லது உறுதியூட்டும் முறைக்கு எதிர்மாறானது
drawing out : நீட்டுதல் : உலோகத்தைச் சூடாக்கி சம்மட்டி கொண்டு அடித்து நீட்டுதல். இதனால் பரப்பளவு வீத அளவுப்படி குழையும்
drawing paper : படம் வரைதாள் : பென்சில், வண்ணக்கோல், பேனா மை இவற்றால் படம் வரைவதற்கு ஏற்ற தாள்
drawing pen : படம் வரை பேனா: வரைவாளர்கள் பயன்படுத்தும் வரை பேனா
draw knife வரைவுக் கத்தி: இரு கை பிடிகள் உடைய மரம் வெட்டும் கருவி. இது குறுகலான நீண்ட கத்தி முனையை உடையது. இரு கைபிடிகளும் கத்திக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும்
draw plate : (வார்.) தோரணி இழுவைத் தட்டம் : ஒரு தோரணியில் வைக்கப்பட்டுள்ள திருகிழைத் துவாரமுள்ள ஒரு தட்டம். இதன் துவாரத்தில் செருகப்படும் மணலிலிருந்து தோரணியை அகற்றுவதற்கு உதவுகிறது
draw screw : (வார்.) இழுப்புத் திருகு : திருகிழைகள் கொண்ட ஒரு சலாகை. இதன் ஒரு முனையில் தோரணியில் தட்டத்தை இழுப்பதற்கான திருகிழையிட்ட துவாரம் இருக்கும்
draw sheet : அச்சு சமனத் தகடு : அச்சுத் தகட்டுப்பாளத்தின் மீதான சமனத் தகட்டின் மேற்படலம். இதனுடன் இயக்கு தண்டுகளும், தடுப்புக் காப்புகளும் இணைக்கப்பட்டிருக்கும்
draw spike : (மர.வே..) இழுவைச்சலாகை : வார்ப்பு மணலிலிருந்து ஒரு தோரணியை இழுத்தெடுப்பதற்குப் பயன்படும் ஒரு கூர்மையான உலோகச் சலாகை
dredge: துர்வாரி : நீரோடையின் படுகையிலிருந்து சேற்றினை அல்லது மணலைத் துாரெடுத்து அகற்றுவதற்குப் பயன்படும் எந்திரம் dress : (எந்.) செப்பனிடல் : ஒரு கருவியைச் சாணை பிடித்து அதன் மூல வடிவத்திற்குச் செப்பனிடுதல்
dresser: (கம்.) செப்பனிடு கருவி: உலோகக் குழாய்களையும் தகடுகளையும் சீர்மை செய்வதற்கு அல்லது நேராக்குவதற்குப் பயன்படும் எந்திரம்
dressing: மெருகுப் பொருள்: துணிகளுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படும் பொருள்
drier : (வண்.) உலர்த்து பொருள்கள் : வண்ணங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் பல்வேறு பொருள்களான ஈயம், மாங்கனீஸ் ஆகியவற்றின் உப்புகளும், ஆக்சைடுகளும் இவற்றுள் சில
drift : (வானூ.) காற்று விசையியக்க அழுத்தம் : விமானத்தின் வெளிப்புறங்களில் செயற்படும் விசையியக்க அழுத்தம்
drift angle: (வானூ.) திசைமாறு கோணம் : ஒரு விமானத்தின் நீள் வாக்கு அச்சுக்கும், தரைக்கு மேல் அதன் பாதைக்குமிடையிலான கிடைமட்டக் கோண்ம்
drift bar: (வானூ.) திசைமாற்றக் கோல் : விமானத்தின் அச்சுக்கும் அதன் இயக்கத் திசைக்குமிடையிலான மாற்றத்தைக் காட்டும் திசை மாற்ற மானியின் ஒரு பகுதி. இதில் இந்த இயக்கத் திசையையொட்டி அமைத்திடத்தக்க ஒரு கம்பி அல்லது புயம் அமைந்திருக்கும்
drift meter : (வானூ.) திசைமாற்று மானி : ஒரு விமானத்தின் நீள்வாக்கு அச்சுக்கும் தரைக்கு மேல் அதன் பாதைக்குமிடையிலான கிடைமட்டக் கோணம்
drift pin - (எந்.) குடையாணி முனை : குடையாணித் துவாரங்கள் ஒழுங்கு வரிசையில் இல்லாத போது அவற்றில் செலுத்தப்படும் ஒரு வட்டவடிவக் கூம்பு முனை. பல சமயங்களில் குடையாணியைப் பொருத்துவதற்கு அனுமதிக்கும் அளவுக்கு இந்தத் துவாரங்கள் திருத்தியமைக்கப்படும்
drift plug : (கம்..) நீட்சிஆப்பு ; இடைமுறுக்கினை நீக்குவதற்காக ஓர் ஈயக் குழாயினுள் செலுத்தப்படும் ஒரு மரஆப்பு
drift punch : (எந்.) இணைப்பாணி : குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி
drill : (எந்.) துரப்பணம்: கல்லிலோ, உலோகத்திலோ, பற்களிலோ பிற திண்ணிய பொருள்களிலோ துளையிடுவதற்கான ஒரு கருவி
drill bushings: (எந்.) துரப்பணச் செருகிகள் : துவாரங்களைச் சரியான இடத்தில் நிலைப்படுத்த உதவும் இடுக்கிகள், பொருத்திகள் ஆகியவற்றின் நுழைவாயில் பொருத்துவதற்கான கடினமான எஃகுச் செருகிகள்
drill chuck : (எந்.) துரப்பண ஏந்தமைவு : துரப்புணங்களை ஏந்தி வாகாகப் பிடித்துக் கொள்ளவல்ல அமைவு
drilled hole: துரப்பணத் துவாரம்: துரப்பணத்தால் துளையிடப் பட்ட துவாரம் drill guage : (எந்.) துரப்பண அளவி: துரப்பணததின வடி வளவினை எளிதாகத் தீர்மானிக்க உதவக்கூடியவாறு முறையாகக் குறியிடப்பட்ட வெவ்வேறு வடிவுகளில் துவாரங்களையுடைய ஒரு தட்டையான எஃகுத் தகடு
drill grinding gauge : (எந்.) துரப்பண அரைவை அளவி : துரப்பணத்தின் வெட்டு இதழ்களின் நீளத்தையும் கோணத்தையும் அளவிடப் பயன்படும் கருவி
drilling jig : (எந்.) துரப்பண இடுக்கி : துவாரங்களைத் துல்லியமாகத் துரப்பணம் செய்வதற்கு உதவும் வகையில் வார்ப்பிரும்பினால் துல்லியமாக வார்க்கப்பட்ட ஒரு சாதனம்
drill motor: (மர.வே..) துரப்பண மின்னோடி : துரப்பண வேலைகளுக்கும், கருவிகளுக்கு மெருகேற்றுவதற்கும் பயன்படும் கையால் இயக்கப்படும் சிறிய மின்னோடி
drill press : (எந்.) துரப்பணத் துளைப் பொறி : உலோகத்தில் துவாரங்களைத் துரப்பணம் செய்வதற்குப் பயன்படும் பல் விணையுள்ள தானியங்கிச் சாதனம்
drill press vise : (எந்.) துரப்பணத் துளைக் குறடு : துரப்பணம் செய்யப்படும் உறுப்புகளைப் பற்றிப் பிடித்துக்கொள்வதற்கு ஒரு துரப்பணத் துளைப்பொறி மேசையில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகைக் குறடு
drill rod: (எந்.) துரப்பணச் சலாகை : 90 முதல் 100 அலகுடைய கார்பன் ஆதாரத்துடன் 0.0013செ.மீ. வரையில் அளவுடைய மெருகேற்றிய எஃகுச் சாதனம்
drill socket: (எந்.) துரப்பணக் குழி : ஒரு துரப்பணத்தின் கூம்புத் தண்டினை ஏற்றுக் கொள்ளும் துரப்பனக் குழி
drill spindle : (எந்.) துரப்பணக் கதிர்ச் சலாகை : ஒரு துரப்பண எந்திரத்தின் செங்குத்தான கதிர்ச் சலாகை. இது துரப்பணத்தை ஏந்திக் கொண்டு சுழல்கிறது. இதன் செங்குத்தான இய்க்கத்தின் வழியே ஊட்டமைவு இயங்குகிறது
drill vise : (எந்.) துரப்பணக் குறடு : துரப்பணம் செய்ய வேண்டிய பொருளைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்காக ஒரு துரப்பணத் துளைப்பொறி மேசையில் பயன்படுத்தப்படும் ஒரு குறடு
drip line : (எந்.பொறி.) கசிவுக் குழாய் : ஒரு சூடாக்கும் அமைப்பு முறையில், வெப்பம் பரவுவதன் மூலம் ஏற்படும் செறிமானத்தினால் நீர்மம் மீண்டும் கொதிகலனில் பாய்வதற்கான குழாய்கள்
drip mould ( க. க..) கசிவு வார்ப்பு படம் : ஒரு சுவரின் முகப்பின் வழியே மழைநீர் கசியாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வார்ப்படம்
drip stone : ( க. க..) கசிவுக்கல் : மழை நீரைச் சன்னலுக்கு அப்பால் விழச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு மேற் கட்டமைவு. இதனைப் 'படிமுகக்கல்' என்றும் கூறுவர்
drive chain : (தானி.) இயக்குச்சங்கிலி:எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கலைக்கும் சக்கரங்களுக்கு விசையினை வழங்கப் பயன்படும் ஒரு கனமான உருள் சங்கிலி
driven : (எந்.) இயக்குவித்தல் : ஒர் இயக்கியினால் இயக்கப்படும் சக்கரம், சக்கரங்கள் அல்லது கப்பிகள் drive pinion : (தானி.) இயக்குவிசை நுனி : ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரிந்தியக் குவிக்கும் இணைப்பமைவுடன் இணைக்கப்பட்டுள்ள சரிவுப் பல்லிணை
drive : (எந்.) நேர்முக இயக்கச் சக்கரம் : இயக்கிக்கு நேர்முகமாக விசையைச் செலுத்தும் சக்கரம் அல்லது கப்பிகள்
drive punch : இயக்கத் தமரூசி : சம்மட்டியால் அடித்து இயக்கப்படும் எஃகு தமரூசி, இது கப்பற்பாய் முதலியவற்றில் நுண்துளைகளிடுவதற்குப் பயன்படுகிறது
drive screw or screw nail : இயக்குத்திருகு அல்லது திருகாணி: சம்மட்டியால் பொருத்தப்படும் ஒரு வகைத் திருகு. இதனை ஒரு மரையாணி முடுக்கியினால் கழற்றிவிடலாம்
drive shaft : (தானி.) இயக்கு சுழல் தண்டு : இணைப்புகள் மூலம் சக்கரங்களுடன் விசை ஊடிணைப்பியை இன்ணக்கின்ற சுழல் தண்டு
driven pulleys: (உலோ.) இயக்கு கம்பி : இயக்கு கப்பியிலிருந்து விசையினைப் பெறுகிற கப்பி
driving mechanism : (பட்.வே.) இயக்குப் பொறியமைவு : இயக்கத்தைப் பரப்பீடு செய்வதற்குப் பயன்படும் சக்கரங்கள், கப்பிகள், இணைப்பு வார்கள், நெம்புகோல்கள் முதலிய தொகுப்பமைவுகள்
drone : (வானூ.) ஆளியக்கா விமானம் : விமானம் ஒட்டி இன்றி இயக்கப்படும் விமானம். இது சேய்மையிலிருந்து அல்லது தானியக்க முறையில் இயக்கப்படுகிறது. இது இபரும்பாலும் ராணுவத்தில் இலக்குகளைக் குறிபார்த்துத்தாக்கும் பயிற்சிகளிலும், எதிரிகளின் இலக்குகளைத் அழிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது
dorp தொங்கல் மணி : பதக்கம் போன்ற தொங்கல் அணிகலன்
dorp elbow : (கம்..) தொங்கு இயக்க முனை : கட்டிடத்தில் எரிவாயு பயன்படுத்தப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சிறு கை முட்டுமுனை. இரு இருபுறங்களிலும் சுவரில், முகட்டில் அல்லது சட்டகங்களில் பொருத்துவதற்கு ஏற்ப இறகுகளைக் கொண்டிருக்கும்
drop_ell , (கம்.) தொங்கு முனை: பக்கங்களில் பொருத்து முனைகள் கொண்ட ஒரு முட்டு முனை. இதனை ஓர் ஆதாரத்துடன் இணைத்து விடலாம்
drop-feed oiler : (எந்.) மசகு கிண்ணி : மசகு எண்ணெய் ஊற்றி வைக்கப்படும் கிண்ணி
drop front : சாய்வு முகப்பு :முன் புறமாகச் சாய்ந்துள்ள மேசை
drop hammer : (பொறி..) விழு சம்மட்டி : காய்ச்சி வடித்து வார்ப் படம் உருவாக்கப் பயன்படும் ஒரு கனமான சம்மட்டி
drop handle: (எந்.) தொங்கு கைபிடி : பதக்கம் போல் தொங்கும் பல்வேறு வடிவிலுள்ள கைபிடிகள்
drop hanger : (எந்.) தூக்குச் சங்கிலி: ஒரு முகட்டுடன் அல்லது ஒரு தூலத்தின் உட்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊடிணைப்பு ஆதாரம்
drop ornament: தொங்கு ஆடை : தூசாடை போன்று ஒர் உடுப்பு: ஆனால், சட்டத்தின் முழு அகலத்தையும் போர்த்தியிருக்காது dropout : (வார்.) வார்ப்புச் சிதறல் : வார்ப்படத்தை மூடும் போது மண் தளர்ச்சியுற்றுச் சிதறுதல
drop siding : (க.க..) சாளரப் பலகை : கட்டிடங்களின் புறப்பரப்பின் மீது பயன்படுத்தப்படும் ஒருவகை சாளரப் பலகை
drop tee : (கம்.) டிராம் டீ : தொங்கு இயக்கு முனையைப் போலவே இறகுகளைக் கொண்ட ஒரு சிறிய முகட்டு முனை
drop window : (க.க..) இறக்கு பலகணி : தள்ளு வண்டிகளில் உள்ளது போன்று பலகணிப் படிக் கல்லுக்குக் கீழுள்ள ஒரு குழியினுள் இறக்கக் கூடிய ஒரு பலக்னி
dross : (வார்.) கசடு : உருக்கிய உலோகங்களின் மேற்பரப்பில் மிதக்கும் பொடுகுகள், ஆக்சைடுகள் போன்ற கழிவுப் பொருள்கள்
drum ; (பட்.வே.) : வட்டுருளை : ஒரு சுழல் தண்டின் மீது ஏற்றப் பட்டிருக்கும் உட்புழையுள்ள நீள் உருளை விசையினை_வார்ப்பட்டைகள் அல்லது கம்பி வடங்கள் மூலம் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது
drum armature : (மின்..) உருளை மின்னகம் : இயங்கும் மின்னகங்கொண்ட ஒரு நேர் மின்னாக்கி. இதில் கம்பிச் சுருள்கள் நீளவாக்கில் அல்லது அதன் அச்சுக்கு இணையாகச் சுற்றப்பட்டிருககும்
drum switch : (மின்..) சுழல் விசை : நீள் உருளை வடிவிலான சுழலும் விசை
drum winding : (மின்..) சுழல் சுருணை : மின்னாக்கியின் மின்னகத்தில் சுருணை செய்யும் ஒரு முறை. இதில், மின் கடத்திகள் மின்னகத்தின் மேற்பரப்பின் அருகே இயைவடுப்பள்ளங்களில் அமைந்திருக்கும்
dry air: (குளி.ப.த.) வறள் காற்று: நீராவி இல்லாத வெறுங்காற்று
dry battery : (மின்..) பசை மின் கலத் தொகுதி: உலர்ந்த வேதி மின் கலத் தொகுதியின்ைக் கொண்ட ஒரு மின்கல அடுக்கு.இச்சொல் சில சமயம் ஒற்றை உலர் மின்கலத்தைக் குறிக்க தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது
dry cell : (மின்.) பசை மின்கலம்: திரவ மின் பகுப்பான் பயன்படுத்தப்படாத ஒர் அடிப்படை மின் கலம். இதில் திரவம் இல்லாதிருப்பதால் இதனை எந்த நிலையிலும் பயன்படுத்தலாம்
dry disk clutch : (தானி..) உலர் வட்டு ஊடிணைப்பி: இதில் இயக்கு வட்டுகள் இரு புறங்களிலும் ஒர் உராய்வுப் பொருளால் மூடப்ப்ட்டிருக்கும். எஞ்சினின் சமனுருள் சக்கரத்துடன் பொருத்தப்பட்டி ருக்கும் ஊடிணைப்பி வளையத்திலுள்ள விசைகள் மூலம் இவை இயக்கப்படுகின்றன. இதில் ஊடிணைப்பி முகப்புகளில் எண்ணையோ பசையோ படக் கூடாது என்பதால் 'உலர்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது
dry friction : (தானி.) வறள்: உராய்வு : மசகிடப்படாத வறண்ட்_மேற்பரப்புகளுக்கிடையிலான இயக்கத்திற்கு ஏற்படும் தடை
dry fuel rocket : விண் உலர் எரிபொருள் ராக்கெட்டு : விரைவாக எரியும் தூள் கலவையைப் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டு
dry grinding : உலர் மாவரைத்தல் : நீர் அல்லது பிற குளிர் திரவமின்றி மாவரைத்தல் dry ice : (குளிர். பத.) உலர் பனிக்கட்டி : குளிர்பதன முறையிலும், பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் திட கார்பன்டையாக்சைடு
dry indicator : (ஒளி..) உலர் வளவி : ஈரப்பதனைக் கண்டறிந்து காட்டும் ஒரு தூள். இதில் குருணை விடிவச் சர்க்கரையின் 10 பகுதிகள், மெத்தில் கலவையின் 1/10 பகுதியுடன் கலக்கப்பட்டிருக்கும்
dry kiln :(மர..)உலர் உலை: மரத்தை விரைவாகப் பதப்படுத்தப் பயன்படும் ஒரு சூளை
dry measure : முகத்தலளவை : கூலம் முதலிய பண்டங்களை அளப்பதற்கான முகத்தலளவை முறை
2 பிண்ட் = 1 குவார்ட்
8 குவார்ட் = 1 பெக்
4 பெக் = 1 புஷல்
105 குவார்ட் = 1 பேரல்
dry rot . உளுப்பு : காளான் வகைகளினால் வெட்டு மரத்திற்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை
dry rubble : உலர் கட்டுமானக்கல் : சுவரில் காரையின்றி கொத்தாத கட்டுமானக்கற்களை அடுக்கி வைத்தல்
dry run வெற்று ஒத்திகை : ஒளிப் படக் கருவிகள் அல்லது பிற சாதனங்கள் இன்றி நடைபெறும் ஒத்திகை
dry sand : (வார்..) உலர் மணல் : மணற் கலவைகள், இது உலர்ந்தவுடன் உருகிய உலோகத்தினால் ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்கும் ஆற்றலுடையது.
dry sand core : (வார்..) உலர் மணல் வார்ப்படம் : அடுப்பில் முழுவதுமாக வதக்கிய அல்லது உலர்த்திய வார்ப்பட உருச்செறிவு
dry spot : (குழை.) உலர் பரப்பு : தகடாக்கிய பிளாஸ்டிக்குகள், கண்ணாடி ஆகியவற்றில், உள் (படுகையும் கண்ணாடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதிருக்கிற பரப்பிடம்
dry steam . உலர் நீராவி : ஈரப்பதம் இல்லாமல் பூரிதமாகிய நீராவி
dry weight: (விண்) :உலர் எடை : எரிபொருள் இல்லாத ராக்கெட்டு ஊர்தியின் எடை
dry weight of an engine : (வானூ.) உலர் எடைமானம் : ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காது. எஞ்சினின் ஒரு பகுதியாக முடுக்கு கருவியும் அமைக்கப்பட்டிருக்குமாயின் அதனையும் உள்ளடக்கும்
dry well ; (கம்..) உலர் குழி: தரையில் கல்பாவிய ஒரு பள்ளம்; அதில் சுற்றுப்புற மண்ணில் பாயும் கழிவு நீர் அல்லது சாக்கடைத் திரவங்கள் கசிந்து தேங்கும்
dry wood :உலர் மரம்: பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம்
dryer : உலர்த்தி : மென்பூச்சுமானத்திலிருந்து ஈரப்பதனை அகற்றுவதற்குப் பயன்படும் உலர்த்து எந்திர வகை
drying : (வார்.) உலர்த்தல் : ஒரு வார்ப்படத்தில் சூடான காற்றினை உட்செலுத்தி ஈரப்பதத்தை ஆவியாகச் செய்து உலர்த்தும் செய்முறை drying oil : (குழை.) உலரும் எண்ணெய் : காற்றுப்பட்டே எளிதில் கெட்டியாகக் கூடிய மரப்பூச்செண்ணெய் அல்லது பெரில்லா போன்ற தனிவகை எண்ணெய்
drying rack : (அச்சு,) உலர்த்து அடுக்கு : அச்சிட்ட காகிதங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் ஒர் அடுக்கு அல்லது சட்டகம்
dual ignition : இரட்டை மூட்டம் : இரு ஆதாரங்களிலிருந்து மின்னோட்ட்த்தைக் கொண்டிருக்கிற, ஒரே தொகுதி. பொறிவினை முனைகளைப் பயன்படுத்துகிற ஒர் மூட்ட அமைப்பு. ஒவ்வொரு நீள் உருளையிலும் ஒரே சமயத்தில் தீ மூட்டுகிற இரட்டைப் பொறிவினை முனைகளைக் கொண்ட ஒரு மூட்ட அமைப்பையும் குறிக்கும்
dubbing : (மின்.) ஒலி இணைப்பு: திரைப்படத்திற்கு வேறு மொழியில் புதிய ஒலிப்பதிவை இணைத்தல்; இயக்கத் திரைப்படத்துடன் ஒலிப்பதிவு இணைத்தல்
duct (குளி, பத.) கம்பி வடக் குழாய் : காற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் உலோகக்கம்பிவடக் குழாய்
ductile : (உலோ) நெகிழ் திறன்: உலோகங்களில் எளிதில் கம்பியாக இழுத்து நீட்டுவதற்கான நெகிழ்வுத் திறன்
ductless glands :(உட.) நாளமில்லாச் சுரப்பிகள் : இழைநாளமில்லாமலேயே நேரடியாகக் குருதிக்குள் கசிவுநீர் பரப்பும் சுரப்பிகள்
ductility : ஒசிவுத்திறன் : உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்குவதற்கு ஏற்ற தன்மை, உலோகத்தைக் கம்பியாக நீட்டுவது இதற்கு எடுத்துக்காட்டு
dull coated paper : (அச்சு.) மழுங்கல் மெருகுத்தாள் : மெருகேற்றாத வளவள்ப்பான எனாமல் காகிதம்
dull finish paper : (அச்சு.) மெருகற்ற தாள் : பளபளப்பாக மெருகேற்றாத பரப்புடைய காகிதம்
dull iron: (வார்.) மழுங்கல் இரும்பு: ஊற்றுவதற்கு மிகவும் உதந்ததாக இருக்கும் அளவுக்கு நன்கு சூடாகாத இரும்பு
dumb waiter : ( க.க..) சுழல் நிலை மேடை : பரிமாறுபவரின் தேவையில்லாமல் உணவு முதலியவற்றைப் படைக்க உதவும் நகரக் கூடிய சுழலுசசி மேடையையுடைய ஒரு நிலைதாங்கி
dummy : (அச்சு.) அச்சிடாப் போலி வெள்ளேடு : அச்சுப் பார்வைப் படிகளிலிருந்து துணுக்குகளை ஒட்டி அச்சிடுவதற்காக உருவாக்கிய போலி வெள்ளேட்டு உருவமைப்பு அச்சிடாத கவற்றுக் காகிதங்களைத் தைத்துப் புத்தகத்தின் உரு மாதிரியில் வடிவமைத்த நூல் படிவம்
dumpy levels: (எல்..) காட்சித் தள மட்டம்: தொலைநோக்கியுடன் மட்டத் தொடர்பில் இணைக்கப்பட்டுள்ள அளவாய்வாளரின் காட்சித் தளமட்டம்
duplex cable: (மின்.) இருமடிக் கம்பிவடம்: ஒரு மின்காப்பு உறையினுள், ஒன்றையொன்று தொடாதவாறு மின்காப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இரட்டைக் கம்பிகள்
duplex gas-burner:இரட்டை வாயு விளக்கு : இரு பீற்றின் ஒரு சுடரான வாயு விளக்கு
duplex lamp: இரு திரி விளக்கு : duplex telegraphy : இரட்டைத் தந்தி முறை : இருபுறமும் ஒரு கம்பி யின் மூலம் செய்தி அனுப்பப் பெறும் தந்தி அம்மைப்பு
duodecimo : பன்னிரு மடிப்புத் தாள் : பன்னிரண்டாக மடிக்கப்பட்ட (13x19செ.மீ) தாள் மடிப்பு
duograph : (அச்சு.) இரட்டை நுண்படப் பதிவு: ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட இரு நுண் பதிவுப்படத் தகடுகள். இதில் ஒன்று கருமையாகவும், இன்னொன்று மெல்வரிப் பின்ன வண்ணச் சாயலுடனும் அச்சடிக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு திரைக் கோணங்களுடன் தயாரிக்கப்படும் இரு தகடுகள்
duotone : (அச்சு.) இரட்டை வண்ண நுண்பதிவு: ஒரு வண்ணத்தில் அச்சடித்த் காகித்த்தில் மை உலர்ந்தவுடன் இருவேறு வண்ணங்களில் அச்சடித்ததுபோல் தோற்றமளிக்கும் ஒருவகை மை
dயotype : (அச்சு.) இரட்டை அச்செழுத்து : ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட் இரு நுண்பதிவுப் படத் தகடுகள். இவற்றில் வெவ்வேறு விதமாக செதுக்குருச் செய்யப்பட்டிருக்கும்
duplex carburetor : (தானி.) இரட்டைஎரி-வளி கலப்பி : கலவைப் பகிர்மானத்திற்காக இரட்டை அமைவுடைய எரி-வளி கலப்பி
duplex printing : இரட்டை அச்சடிப்பு : ஒரு துணியின் இருபக்கங் களிலும் ஒரு துணியின் இருபக்கங்களிலும் ஒரு தோரணியை அச்சடிக்கும் முறை
duplex steel : (உலோ.)இருமடி எஃகு : காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பாய விட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்குகின்ற பெஸ்ஸமர் முறைப்படித் தயாரித்த எஃகினை மேலும் அடிப்படைத் திறந்த உலையில் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் மலிவான குறைந்த அளவு கார்பன் கொண்ட எஃகு. இரண்டாம் சுத்திகரிப்பானது, ஒரு மின் உலையில் செய்யப்படுமாயின் கிடைக்கும் இரும்பு அதிகத் தரமுடையதாக இருக்கும்
duplicate : இருமடிப் பகர்ப்பு : மூலப்படியை அப்படியே பகர்த்துப் படியெடுத்தல்
duplicate part : நிகரொத்த உறுப்பு : ஒர் உறுப்புக்கு நிகரொத்த மற்றொரு உறுப்பு
durability : (க.க.) உழைப்புத் திறன் : நெடிய கடினமான பயன் பாட்டிற்குத் தாக்குப் பிடிக்கும் திறன்
duralumin : (வானூ.) வவிவலுமினியம் : விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும், 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அலுமினியமும், கலந்திருக்கும். இதன் இறுதி விறைப்பாற்றல் - 55,00 பவுண்டு / ச.அங். நெகிழ்திறன் வரம்பு 30,000 பவுண்டு / ச.அங். வீத எடைமானம் - 2.85 க்கு மேற்படாமல்
dur iron : (உலோ.) டூர் இரும்பு : சிலிக்கன் செறிவு மிகுதியாகவுள்ள இரும்பின் வாணிகப்பெயர். இது அமிலத்தை எதிர்க்கும் தன்மையுடையது. எனவே, ஆய்வுக் கூடங்களுக்கு வடிகுழாய்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது
dust bottom : தூசுப்படிவு அடித்தளம் : இரு இழுவறைகளிடையே மெல்லிய் மரப்பலகை
dutch arch : டச்சுக் கவான் : உச்சியிலும் அடித்தளத்திலும் தட்டையாக இருக்கும். ஒரு பிணைப்புக் கவான் இதில் செங்கற்கள் ஒரு பொதுவான் மையத்திலிருந்து சாய்வாக அடுக்கப்பட்டிருககும்
Dutch bond, or English cross bond : டச்சுப் பிணைப்பு அல்லது ஆங்கிலக் குறுக்குப் பிணைப்பு : செங்குத்துச் செங்கற்களும், நீளவாட்டுக் கிடைச் செங்கற்களும் மாற்றிமாற்றி அமைக்கப்பட்டுள்ள் ஒருவகைக் கவிகைப் பிணைப்பு
dutch metal : டச்சு உலோகம் : மிகுந்த நெகிழ்திறனுடைய உலோ கக்க்லவை. இதில் 11 பகுதி செம்பும்,இரு பகுதி துத்தநாகமும் கலந் திருக்கும்
dwell : (தானி.) தொடர்பறு காலம் : இருமுனைகளின் தொடர் பினைத் துண்டிக்கும் கால அளவு. வளைகோல் வடிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது
dwelling : (க.க.) குடியிருப்பு : குடியிருக்கும் வீட்டினை அல்லது உறைவிடத்தைக் குறிக்கும் ஒரு விரிவான பொருள்கொண்ட சொல்
dye : (1) சாயந்தோய்த்தல். (2) வண்ணக் கறைப்படுத்துதல், (3) சாயப் பொருள்; சாயந் தோய்க்கப் பயன்ப்டும் சாயப்பொருள்.
dye wood : சாய மரம் : சாயந் தோய்ப்பதற்கான வண்ணப்பொருள் தரும் ஒருவகை மரம்.
dyna-flow transmission : (தானி.எந்.) இயங்கு பாய்வுச் செலுத்திடு : இதில் ஒரு நீரியல் ஒரு போக்கியும், நிலை திறப்புப் பல்லிணைத் தொகுதியும் அமைந்திருக்கும். இதனால், ஓட்டுநர், நேரடியாக ஓட்டவும், நெருக்கடி நிலையில் மெதுவாக ஓட்டவும்.பின்னோக்கி ஓட்டவும், இயங்கா நிலையில் நிறுத்தவும் முடிகிறது
dynamic balance : (தானி.) இயக்கச் சமநிலை : உறுப்புகள் எந்த வேகத்தில் சுழல்வதற்கெனச் சமநிலைப் படுத்தப்பட்டுள்ளனவோ அந்த வேகத்தில் அதிர்வு இன்றிச் சுழல்வதற்கு அனுமதிக்கும் சமநிலை அமைப்பு
dynamic factor : (வானூ) இயக்க காரணி : ஒரு விமானம் வேகம் எடுக்கும்போது, அதன் உறுப்பு எதுவும் தாங்கும் பளுவிற்கும், அதற்கு நேரிணையான அடிப்படைப் பளுவிற்குமிடையிலான விகிதம்
dynamic lift : (வனூ.) இயக்க எழுச்சி : விமானம் பறக்கும்போது அதன்மீது செயற்படும் நான்கு விசைகளில் ஒன்று. இந்த எழுச்சி விசை விமானத்தை உயரத்தில் நிலைத்து நிற்கச் செய்கிறது
dynamic load : (வானூ.) இயக்கப் பளு : விமானத்தின் வேக முடுக்கம் காரணமாக உண்டாகும் பளு. இந்த இயக்கப் பளுவானது. விமானத்தின் பொருண்மைக்கு வீத அளவில் அமைந்திருக்கும்
dynamic pressure : (வானூ.) இயக்க அழுத்தம் : 1/2 PV2 என்ற சூத்திரத்தின் பெருக்குபலன். இதில் P- காற்றின் அடர்த்தி.V 2 காற்றின் ஒப்புவேகம்
dynamics : விசையியக்கவியல் : இயக்க ஆற்றல் இயக்கத்தாக்கு ஆற்றல் ஆகியவற்றையும் ஆராயும் இயற்பியலின் இயக்கவியல் சார்ந்த துறை
dynamic speaker : இயக்க ஒலி பெருக்கி : ஒலி அதிர்வு ஓட்டங்களை ஒலியலைகளாக மாற்றக் கூடிய ஒரு கருவி. இதில் ஒரு மின்காந்தப் புலம் அமைந்திருக்கும் அதில், ஒரு பிரிசுவருடன் இணைக்கப்பட்டுள்ள நகரும் ஒலிச்சுருள் வைக்கப்பட்டிருக்கும்
dynamic, stability : (வானூ.) இயக்க உறுதி நிலை : ஒரு விமானம் பறக்கும்போது அதன் சீராக இயக்கம் சீர்குலையுமானால் அதனை உறுதி நிலைக்குக் கொண்டு வருவதற்கான உறுதிப் பாட்டு நிலை
dynamite : சுரங்க வெடி : நைட்ரோ கிளிசரின் என்னும் வெடி மருந்து வகை
dynamiting : (மின்.) பளுவேற்றுதல் : பட்டுத் துணிகளுக்கு கனிம உப்புகள் மூலம் பளுவேற்றுதல்
dynamo : (மின்.) நேர் மின்னாக்கி : காந்தச் சூழுறவில் செப்புக் கம்பி களைச் சுழற்றுவதன்மூலம் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எந்திரக் கருவி
dynamometer : (மின்.) திறன்மானி : பணியில் செலவிடப்படும் ஆற்றலின் அளவினை அளவிடுவித்ற்கான ஒரு கருவி அல்லது எந்திரம்
dynamometer : (குளி.பதன.) திறன்மானி : ஒரு மின்னோடியின் அல்லது எஞ்சினின் திறனை அளந்து கணிக்கும் கருவி
dynamotor : (மின்.) விசையியக்க மின்னோடி : ஒரே மின்னகத்தில் இரு சுருணைகளாய் பயன்படுத்தும் ஒரு மின்னோடி-மின்னாக்கி இணைப்பு. இது மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது
dyne : (இயற்.) நொடி விசையழுத்தம் : ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசையாற்றல் அலகு
dynode : (மின்.) வெற்றிடக் குழல் மின் முனை : ஒரு வெற்றிடக் குழலிலுள்ள் மின்முனை. இது எதிர்மின் உமிழ்வினைச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள பணியைச் செய்கிறது
dysentery : (நோயி.) சீதபேதி : சீழும் இரத்தமுமாக மலம் போகும் வயிற்று அளைச்சல் நோய்
e.m.f. (electro-motive force) (மின்.) மின்னியக்கு விசை : ஒரு மின் கடத்தியின் வழியாக
மின்னோட்டத்தைத் தொடங்கி நிலைப் படுத்துகிற விசை; இதனைப் பொதுவாக "ஒல்ட்"
என்னும்மின்னலகுகளில் கணக்கிடுவர்
ear : காதுப்புறம் : காது வடிவ விளிம்புப் பகுதியைக் குறிக்கும் மெத்தை - திண்டு ஒப்பனைச் சொல்
early warning radar : (விண்.) முன்னெச்சரிக்கை ராடார் : ஒரு பாதுகாப்புப் பகுதியை ஒரு விமானம் அணுகும்போது, அது பற்றி எச்சரிப்பதற்காக அப்பகுதியின் புறவிளிம்பு அருகே நிறுவப்பட்டிருக்கும் ஒரு ராடார் அமைப்பு
ear mark : அடையாளக் குறி : ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டத்தெனத் தனிப்பட இட அடையாளக் குறி
ear piece : (மின்.) செவிக்கருவி : தொலைபேசியில் கேட்போர் காதுப்புறமாக வைத்துக் கேட்பதற்குரிய செவிக் கருவி
ear phones : (மின்.) காதொலிக்கருவி : தொலைபேசியில் செவியுடன் பொருந்தத்தக்க ஒலிவாங்கும் கருவி
earth inductor compass : (வானூ.) நிலைக்கிளர் மின்னோட்டமானி : பூமியின் காந்தப் புலத்தில் சுழலும் ஒரு கம்பிச்சுருளில் உற்பத்தியான மின்னோட்டத்தின் அளவினைக் குறித்துக் காட்டும் கருவி
earth oxides : (மின்.) மண் ஆக்சைடுகள்: எலெக்ட்ரான்களை வெளிப்படுத்தும் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் பேரியம், ஸ்டிரான்ஷியம் போன்ற பொருள்கள்
earth pigment : (விண்.) மண் நிறமிகள் : மண்ணில் படிவுகளாகக் கிடைக்கும் நிறமிகள். இவற்றைச் சுரங்கம் தோண்டி எடுக்கிறார்கள்
earth satellite : (விண்.) பூமி செயற்கைக் கோள் : பூமியை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு கலம்
easel : நிலைச்சட்டம் : ஒவியர் பயன்படுத்தும் நிலைச் சட்டம்
easement : (க.க.) துணை விரிவுக் கட்டுமானம் : கைபிடிக் கிராதியின் அல்லது அடிப்பலகையின் வளைந்த பகுதி, படிக்கட்டுக் கட்டுமானத்தில், சுவரின் உட்புற நிலைக்கட்டும் சுவரின் அடித்தளமும் படிக்கட்டின் அடிப்புறத்தில் சந்திக்கும் இடத்திலுள்ள பளுக்குறைவான அல்லது முக்கோணப் பகுதி
eaves : (க.க.) இறவாரம் : கூரையின் பிதுக்க விளம்பு
eaves trough: (க.க.) இறவாறத்தொட்டி : மழைத்தண்ணிர் வடிவதற்குரிய ஒரு வாய்க்கால் அல்லது தொட்டி
ebonite : வன் கந்தகம் : கருநிறத் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை அல்லது கடினமான ரப்பர் ebonize : கருங்காலிக் கருமெருகு : கருங்காலி மரம் போன்று கருநிற மெருகேற்றுதல்
ebony : கருங்காலி மரம் : கடினமான, நெடுநாள் உழைக்ககூடிய கருநிறமான மரம். இது வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இது செதுக்கு வேலைகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது
ebulator : (குளி.பத.) குளிர்திரவ இயக்கத் தடுப்பான் : ஒரு குளிர்பதனச் சாதனத்தில், குளிர்விக்கும் திரவமானது அதன் கொதி நிலையில் அல்லாமல் குறைந்த அழுத்தத்தில் இயங்காமல் இருப்பதைத் தடுப்பதற்காக அந்தச் சாதனத்தின் ஆவியாக்கக் குழாய்களில் செருகப்படும் ஒரு சாதனம்
ebullition : பொங்கழற்சி : நுரை பொங்கும் வகையில் கொதித்தெழுதல்
eccentric : (பொறி.) பிறழ்மையம் : சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல்கீழான நேர் வரை இயக்கமாக மாற்றும் எந்திர அமைவு
eccentric adjustment : (தானி.) பிறழ் மையச் சீரமைவு : பிறழ் மையமாகத் துளையிடப்பட்ட செருகுவகைக் கப்பியினைத் திருப்புவதன் மூலம் தொடர்புடைய உறுப்புகளைச் சீரான அமைப்பு நிலைக்குக் கொண்டுவருதல்
eccentric clamp : (உலோ.வே.) பிறழ்மையப் பற்றிரும்பு : பிறழ்மையத் தத்துவத்தின் அடிப்படையில் துரிதமாகச் செயற்படும் இறுகப் பற்றிக்கொள்ளும் ஒரு சாதனம்
eccentric fitting : (கம்.) பிறழ்மையப் பொருத்தி : மையக் கோடு எதிரீடாக இருக்கக் கூடிய ஒரு பொருத்தி
eccentric fluted reamer : (எந்.) பிறழ்மையத் துளைச்சீர்மி : உட்குழிவான செல்வழிகளில் அலம்பல்ஒலி கேட்காதவாறு ஒரே சீரான இடைவெளி கொண்ட ஒரு துளைச் சீர்மி. ஆனால், இது விட்டத்தை ஒரு நுண்ணளவியினால், அளப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கும்
eccentricity : பிறழ்மையத் திறன் : இரு வட்டங்களின் மையங்கள். ஒன்றுக்கொன்று பிறழ்ந்திருக்கும் தன்மை
eccentric rod : (பொறி.) பிறழ்மையச் சலாகை : ஓரதர் எந்திர அமைவுடன் பிறழ்மையத்தை இணைக்கிற சலாகை
eccentric starp : (பொறி.) பிறழ்மையப் பட்டை : பிறழ் மையப் பள்ளத்தைச் சுற்றியுள்ள உலோகவளையம் அல்லது கலம். இது, நீராவி எஞ்சினிலுள்ள சலாகைகளுக்கு ஓரதர் பல்லிணைக்கும் இயக்கத்தைக் கொண்டு செல்கிறது
eccentric turning : (எந்.) பிறழ்மையச் சுழற்சி : அச்சுடன் பொது மையங் கொண்டிராத கடைசல் சுழற்சிப் பணி
echinus : (க.க.) புறங்கவி ஆதாரம் : தூண் தலைப்பின் மேல்மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான முட்டை வடிவ அடிப்பகுதி
echo : (மின்.) எதிரொலி : ஒலி பரப்பீட்டின்போது ஒரு குறுகிய இடைவெளியில் அந்த அலை எதிரொலியாக மீண்டு வந்து ஒலித்தல்
echo box : (மின்.) எதிரொலிப் பெட்டி : ஒலிபரப்புவதில் செயற்கை எதிரொலிகளை உண்டாக்குவதற்குப் பயன்படும் உட்குழிவான அல்லது குழாய் போன்ற சாதனம்
ecliptic : (விண்.) கோள வீதி : சூரியனைச் சுற்றி பூமிக்கோளம் வலம் வரும் தளப்பரப்பு. இதனை அடிப்படையாகக் கொண்டே மற்றக் கோளங்களுக்கு இடையிலான சுற்றுப்பாதைகள் கணக்கிடப்படுகின்றன
economic : பொருளியல் : நிதியியல் அல்லது செல்வம், வளமான வாழ்க்கை வழிமுறைகள் தொடர்பானவை
economic speed : (வானூ.) சிக்கன வேகம் : எரிபொருள் மிகக் குறைவாகச் செலவழிகிற வேக அளவு
economizer : (பொறி.) சிக்கனக் கருவி : வெப்பம்-எரிபொருள் முதலியவற்றை மிச்சப்படுத்துவதற்கான எந்திர அமைவு
economy coil: (மின்.) சிக்கனக்கம்பிச் சுருள் : தூண்டு சுருளும் மின்மாற்றியும் ஒருங்கிணைந்த அமைப்பு. இது மாற்று மின்னோட்டத்துடன் பயன்படுத்தப்படுகிறது
eddy currents : (மின்.) சுழல் மின்னோட்டம் : ஒரு காந்தப் புலத்தில் ஒரு திடமான உலோகப் பொருளைச்சுழற்றும்போது உண்டாகும் தூண்டு மின்னோட்டம். இதற்குப் பெருமளவு எரியாற்றல் தேவைப்படும். பல சமயங்கள் தீங்கு விளைக்கும் வெப்ப உயர்வு ஏற்படும்
eddy current loss : (மின்.) சுழல்மின்னோட்ட இழப்பீடு : உள்ளீட்டுத் தடையின் வழியே பாயும் சுழல் மின்னோட்டத்தினால் உண்டாகும் வெப்ப இழப்பு
edged tools : வெட்டுக் கருவிகள் : கூர் விளிம்புடைய வெட்டுக் கருவிகள்
edge flare : விளிம்புச் சுடர் : தொலைக் காட்சியில் படத்தின் விளிம்பினைச் சுற்றி மின்னிடும் சுடரொளி
edging machine : (உலோ.) விளிம்பமைப்புக் கருவி : உலோகத் தகடுகளின் விளிம்புகளை மடக்குவதற்குப் பயன்படும் கருவி
edging trowel : விளிம்புச் சட்டுவம் : ஒரு செவ்வக வடிவச் சட்டுவக் கரணடி. இதில் ஒரு புற விளிம்பு கீழ்நோக்கித் திரும்பியிருக்கும். இது மேடைகளின் விளிம்புகளையும் வளைவுகளையும் அமைக்க உதவுகிறது
edifice : (க.க.) மாளிகை : ஒரு பெரிய கட்டிடம். சிறப்பான கட்டிடக் கலை வேலைப்பாடுகளுள்ள ஒரு பெருஞ் செயற் கட்டமமைவு
Edison cell : (மின்.) எடிசன் மின்கலம் : நிக்கல் ஆக்சைடை நேர்மின் முனையாகவும், இரும்புத்தூளை எதிர்மின் முனையாகவும் பயன்படுத்தும் மின்கலம். இதில் மின்பகுப்புக் கரைசலாக நீர்த்த சோடியம் ஹைடிராக்சைடுக் கரைசல் பயன்படுத்தப்படுகிறது
Edison effect : (மின்.) எடிசன் விளைவு : ஒரு வெற்றிடக் குழாயில் ஒரு நேர்மின் தகட்டை நோக்கி எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்படும் விளைவு. இந்த விளைவினை முதன்முதலில் கண்டறிந்தவர் தாமஸ் எடிசன்
Edison socket : (மின்.) எடிசன் குதை குழி : திருகு வகை ஆதாரமுடைய ஒர் ஒளிக்குழலை ஏற்கிற குதை குழி
Edison storage battery : (மின்.) எடிசன் மின்சேமக்கலம் : உந்து வண்டிகளில் பயன்படுத்துவதற்காக எடிசன் தயாரித்த ஓர் இரு உலோக மின்கலம். இதில் நேர்மின் தகடு நிக்கல் பெராக்சைடினாலும், எதிர்மின் தகடு இரும்பினாலும் அமைந்திருக்கும்
effective area : (வானூ.) பயன் முனைப்புப் பரப்பிடம் : ஒரு திருகு அலகின் பயன் முனைப்புப் பரப்பிடம் என்பது, அந்த அலகினைச் சம தளத்தில் அதன் அச்சுக்குச் செங்கோணத்தில் உருவரை செய்வதால் உண்டாகும் பரப்பிடம் ஆகும்
effective conductance : (மின்.) பயனுறு கடத்துத் திறன் : ஒரு மாற்று மின்னோட்ட மின்சுற்றில் மொத்த மின்னியக்க விசைக்கும், அதன் விசையாற்றல் பகுதிக்குமிடையிலான விகிதம்
effective current : (மின்.) பயனுறு மின்னோட்டம் : அம்மீட்டரில் குறிக்கப்படும் மின்னோட்ட வலிமை
effective helix angle : (வானூ.) விளைவுறு திருகு சுழல் கோணம் : விமானம் காற்றினூடே முன்னோக்கிச் செல்லும்போது அதன் முற்செலுத்து அலகிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஏற்படும் திருகுசுழல் கோணம்
effective horse - power : (பொறி.) விளைவுறு குதிரைத் திறன் : ஒர் எஞ்சின் அளிக்கக் கூடிய பயனுறு ஆற்றலின் அளவு
effective landing area : (வானூ.) பயனுறு தரையிறங்கு பரப்பிடம் : விமானம் தரையிறங்கும் போதும், தரையிலிருந்து மேலேறும்போதும் அதன் ஏற்ற, இறக்கக் கோணங்களுக்குப் பாதுகாப்பான அளவுக்குக் கிடைக்கக் கூடிய தரைப் பரப்பின் பகுதி
effective propeller pitch : (வானூ.) பயனுறு முற்செலுத்து வீச்சு : முற்செலுத்தி ஒரு முறை சுழலும்போது விமானம் முன்செல்லும் தூரத்தின் அளவு
effective propeller thrust : (வானூ.) பயனுறு முற்செலுத்து அழுத்தம் : விமானத்தின் முற்செலுத்தியினால் உண்டாகும் நிகர இயக்க விசை
effective resistance : (மின்.) பயனுறு தடை : ஒரு மின்சுற்று வழியில், உள்ளபடி ஈர்த்துக் கொள்ளப்படும் விசைக்கும், அதில் பாயும் பயனுறு மின்னோட்டத்தின் வர்க்கத்திற்குமிடையிலான விகிதம்
effective value : (மின்.) பயனுறு மதிப்பு : ஒரு மாற்று மின்னோட்டத்தின் மதிப்பு அல்லது மின்னழுத்த அளவு. இது மின்சுற்றில் இணைக்கப்பட்டுள்ள அம்மீட்டரில் குறித்துக் காட்டப்படும்
effer-vescence : நுரைத்தெழுச்சி : ஒரு திரவம் கொதிக்கும் போது அல்லாமல் பிறவாறு அதிலிருந்து வாயு குமிழியிட்டுப் பொங்கி எழுதல்
efficiency : திறம்பாடு :எந்திரத்தில் இயக்காற்றல் மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு
efflorescence : (வேதி.) பொடியார்ந்த மேற்படலம் : திறந்தவெளிக்காட்டுப் பொருட்களின் மீது பொடிப் பொடியாகக்கூடிய மேற்படலம் உருவாதல்.நிலஞ்சுவர்ப் பரப்புகள் வகையில் உப்புப் பொலிவுறுதல்
eggshell finish : வெண்மெருகு : முட்டையின் வெண்தோட்டினைப் போன்ற காகித மேற்பரப்பில் மெருகேற்றுதல்
ejector pin : (குழை.) வெளியேற்றுமுனை : ஒரு வார்ப்படத்திலி ருந்து பணி முற்றிய ஒருபொருளை வெளியில் எடுப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
elastic : (பொறி.) மீட்சிம நிலை : ஒரு பொருளின் மீது விசையினைப் பயன்படுத்தும்போது அப்பொருள் உருத்திரிபடைந்து, அந்த விசையினை அகற்றி அப்பொருள் தனது மூல வடிவத்திற்கு மீண்டும் வருவதற்கு அனுமதிக்கும் நிலை
elastic axis : (வானூ.) மீட்சிம அச்சு : ஒரு கட்டமைப்பில், திருகு விலக்கம் ஏற்படாமல் விசையினைச் செலுத்துவதற்குரிய அனைத்துப் புள்ளிகளின் நிலையிடம்
elastic deformation : (குழை.) மீட்சிம உருத்திரிபு : ஒரு பொருளின் மீது செலுத்திய தகைவினை விடுவித்த பிறகு அந்தப் பொருள் தனது மூலப் ப்ரிமாணங்களுக்குத் திரும்பும்போது வடிவம் மாறுபட்டிருத்தல்
elasticity : (பொறி.) மீட்சிமத் திறன் : ஒரு சலாகையில் அல்லது கட்டமைவில் விறைப்பாற்றல் விசையினைச் செலுத்தி, அதில் நிரந்தரக் கோட்டம் ஏற்படுத்தாமல் அதனை நீட்சியுடையதாக்கும் திறன்
elastic limit : (பொறி.) மீட்சிம வரம்பு : ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு
elastic strength : (பொறி.) மீட்சிம வலிமை : மீட்சிம வரம்புக்குள் ஒரு சலாகையின் அல்லது கட்டமைவின் மீது மிக அதிக அளவு செலுத்தப்படும் தகைவின் அளவு
elaterite : எலாட்டரைட் : எளிதில் தீப்பற்றக்கூடிய நிலக்கீல் என்னும் கனிமப்பொருள்களுள் ஒன்று. இதில் கந்தகம் கணிசமான அளவு அடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவில் கொலொரோடோ, ஊட்டா மாநிலங்களில் கிடைக்கிறது. இது கூரையிடுவதற்குப் பயன்படுகிறது
elbow :(கம்.) இணைப்பான் : இரு குழாய்களை ஒரு கோணத்தில் இணைப்பதற்குரிய ஒரு பொருத்தி
electrical capacity altimeter : (வானூ.) மின்திறன் உயரமானி : பூமியின் மேற்பரப்பிலிருந்து உயரத்தை மதிப்பிடும் கருவி. இதில் மின்திறன் மாற்றத்தின் மூலம் உயர்த்தின் அளவு குறித்துக் காட்டப்படுகிறது
electrical conductivity : மின் கடத்து திறன் : பல்வேறு பொருள்களில் மின்விசையைக் கடத்துவதற்கு உரிய திறம்பாடு. தூய செம்பின் கடத்து திறனை ஒரு திட்ட அளவாகக் கொண்டு இந்தத் திறன் அளவிடப்படுகிறது
electrical engineer : மின் பொறியாளர் : மின்விசை உற்பத்தி, பயன்பாடு பற்றிய கோட்பாடுகளிலும், நடைமுறைகளிலும் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற பொறியாளர்.
electric brazing : மின் பற்றாசு : மின்னோட்டத்தின் மூலம் வெப்பம் உண்டாக்கும் ஒரு வகைப்பற்றாசு முறை
electric drill : மின் துரப்பணம் : மின் விசையால் இயங்கும் துரப்பணக் கருவி
electrical height : (மின்.) மின்னியல் உயரம் : செயற்படும் அலை நீளத்தின் பின்னமாகக் குறிப் பிடப்படும் வானலை வாங்கியின் உயரம் electric horsepower : மின் குதிரையாற்றல் : இது 746 வாட் மின்விசைத் திறனாகும்
electrician : மின்னியல் நுட்பாளர் : மின்விசைப் பயன்பாடு குறித்த கோட்பாடுகளிலும் நடைமுறை களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு நிபுணர்
electricity :(மின்.) மின்விசை : ஒட்ட மின்விசை என்பது இயங்கும் எலெக்ட்ரான்கள் ஆகும். நிலை மின்விசை என்பது நிலையாகவுள்ள எலெக்ட்ரான்கள்
electric motor : (மின்.) மின்னோடி : மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றுவதற்குரிய ஒர் எந்திரம்
electric potential : மின்னியக்காற்றல்
electric power : (எந்.பொறி.) மின்னாற்றல் : மின்விசை கொண்டு பணியாற்றும் வேகவீதம். இதனை வாட் அல்லது கிலோவாட் அளவுகளில் கணக்கிடுவர்
electric pyrometer : மின் உயர் வெப்பமானி : வெப்பநிலையைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு நுட்பமான உயர் வெப்பமானி. சூடாக்கும்போது பிளாட்டினத்தின் மின்தடை காரணமாக ஏற்படும் மாறுதல்களை இது பயன்படுத்திக் கொள்கிறது
electric steel : (உலோ.) மின் எஃகு : ஒரு மின் உலையில் தயாரிக்கப்படும் உயர்தரமான எஃகு. இந்த முறையில் கந்தகமும் பாஸ் விரமும் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடும். மிகக் குறைந்த குறைபாடுகளுடன் தூய எஃகினைத் தயாரிப்பதற்கு மற்ற முறைகளைவிட இது மிகவும் சிறந்தது
electrification : (மின்.) மின்னூட்டம் : ஒரு பொருளுக்கு நிலைமின்னூட்டம் அளித்தல் electroacoustic : (மின்.) மின் ஒலியியல் : ஒலியியல் மற்றும் மின்னியல் பண்பியல்புகளைக் கொண்ட சாதனங்கள்
electro cardiograph : (மின்.) மின்னணு இதயத் துடிப்புப் பதிவு கருவி : இதயத் துடிப்பினை அள விட்டு. பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனம்
electro-chemical action : மின் வேதியியல் வினை : மின்னோட்டத்தைப் பயன்படுத்தி வேதியியல் வினையை உண்டாக்குதல் அல்லது அத்தகைய வினையை நிலைபெறச் செய்தல்
electrode : (மின்.) மின்முனை : வெற்றுக்கல மின்னோட்டத்தில் இருகோடி முனைகளில் ஒன்று
electro-forming : (குழை.) மின் உருவாக்கம் : இரும்பினால் மின்முலாமிடுவதன் மூலம் ஒரு வார்ப்படப் பள்ளத்தை உருவாக்கும் முறை
electro-lier : (மின்.) மின் விளக்குத் தொகுதி : முகட்டில் தொங்க விடுவதற்கான கொத்தான மின் விளக்குகளின் தொகுதி
electrolysis : (மின்.பொறி.) மின்னாற்பகுத்தல் : ஒரு பொருளினுள் மின்னோட்டத்தைச் செலுத்தி அதனை அதன் ஆக்கக்கூறுகளாகப் பகுத்தல்
electrolyte : (மின்.) மின்பகுப்பான் : மின்னாற் பகுப்பதற்குப் பயன்படும் நீர்மப் பொருள், அமிலங்கள், உப்பு மூலங்கள், உப்புகள் ஆகிய அனைத்தும் மின்பகுப்பான்களேயாகும்
electrolyte level : (தானி.) மின்பகுப்பான் அளவு : சேம மின்கலத்திலுள்ள தகடுகளிலுள்ள மின்பகுப்பானின் முறையான அளவு electrolytic condenser : (மின்.) கொண்மி மின்பகுப்பான்
electrolytic copper : (உலோ.) மின்பகுப்பான் செம்பு : மின்பகுப்பான் செய்முறைகளின் மூலம் சல்பைடு தாதுக்களிலிருந்து முக்கியமாகத் தயாரிக்கப்படும் செம்பு
electrolytic corrosion : (மின்.) மின்பகுப்பான் அரிமானம் : நீருடன் தொடர்புடைய உலோகப் பொருள்கள் மின்னோட்டங்களுக்கு அருகில் இருக்கும்போது மின்னாற் பகுத்தல் மூலம் ஏற்படும் அரிமானம்
electrolytic iron : (உலோ.) மின்பகுப்பு இரும்பு : மின்பகுப்பான் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மிகத் தூய்மையான இரும்பு. இதில் மிகச் சிறந்த காந்தப் பண்புகள் உள்ளன. எனவே இது காந்த மையச் சலாகையாகப் பயன்படுத்தப்படுகிறது
electrolytic rectifier : (மின்.) மின்பகுப்பான் திருத்தி : மின்-வேதியியல் தத்துவத்தினைப் பயன்படுத்தி மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுக் கருவி
electrolytic refining : மின்பகுப்பான் சுத்திகரிப்பு : மின்னாற்பகுத்தல் மூலம் உலோகங்களைச் சுத்திகரித்தல்
electro magnet : மின்காந்தம் : சுற்றி வரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச் சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப்பிழம்பு
electro magnetic field : (மின்.) மின்காந்தப் புலம் : ஒரு மின்காந்தத்தின் இரு துருவங்களுக்கிடையிலான அல்லது காந்த விளைவுள்ள பகுதி.இந்த புலத்தினூடே காந்தவிசைக்கோடுகள் பயணஞ்செய்யும்
electromagnetic induction : (மின்.) மின்காந்தத் தூண்டல் : ஒரு காந்தப் புலத்தின் காந்த விசைக் கோடுகளைக் குறுக்கே வெட்டும் ஒரு கம்பியில் அமைந்திருக்கும் தூண்டப்பட்ட மின் இயக்க விசை
electricmagnetic waves : (மின்.) மின் காந்த அலை : வானொலி அலைகள், ஒளி அலைகள், எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை
electromagnetism : (மின்.) மின்காந்த விசை : மின் விசையினால் உண்டு பண்ணப்படும் காந்த ஆற்றல்
electro motive : மின் இயக்கம் : ஒரு மின் கடத்தியின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி, அம்மின்னோட்டத்தை நிலை பெறச் செய்யும் விசை. இது ஒல்ட்டுகளில் அளவிடப்படும்
electromotive force of self induction : (மின்.) தற் தூண்டல் மின்னியக்க விசை : தனியொரு கம்பிச் சுருளில், அதன் சுற்றுகளுக் கிடையிலான தூண்டு விளைவு காரணமாக ஏற்படும் மின்னியக்க விசை
electrode : (விண்.) மின்வாய் : வெற்று மின் கல மின்னோட்டத்தில் இரு கோடி முனைகளில் ஒன்று
electrodynamic : (மின்.) மின்னியக்கவியல் : இயக்க நிலையிலுள்ள மின் விசை தொடர்பான ஆய்வு
electro jet : (விண்.) மின்னியக்கத் தாரை : ஒரு கோளத்தில் மேல் வாயு மண்டலத்திலுள்ள அயனியாக்கிய படுகையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மின்னோட்ட இயக்கம்
electro luminescence : (மின்.) மின்னியக்க ஒளிர்வு : ஒளி உண்டாக்குவதற்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஒருமுறை.இதில் ஒரு பரஸ்பர வெண்களிமண் படுகை, ஒளியை உண்டாக்குவதற்கு மின்விசை விளைவு கடத்தியாகச் செயற்படுகிறது. நேர்மின்னோட்ட அழுத்தத்தைக் கொடுக்கும்போது, எலெட்ரான்கள் விடுபட்டு, பரஸ்பர அணுக்களைத் தாக்கி ஒளி உண்டாக்குகின்றன
electrolytic capacitor : (மின்.) மின் பகுப்பான் கொண்மி : ஓர் அலுமினிய நேர் மின் தகட்டினை உடைய கொண்மி. இதில் ஒர் உலர்ந்த பசை அல்லது திரவம் எதிர் மின் தகடாக அமைகிறது. மின் விளைவு கடத்தியாக ஒரு மெல்லிய ஆக்சைடு படலம் அலுமினியம் தகட்டில் படிகிறது
electrometallurgy : (மின்.) மின் உலோகத் தொழில் : உலோகங்களைச் சுத்திகரிப்பதற்கும், பற்றவைப்பதற்கும், குளிர்வித்துப் பதனப்படுத்துவதற்கும், பகுப்பதற்கும், படியவைப்பதற்கும் பயன்படும் மின்னியல் செயல்முறை
electro meter : (மின்.) மின் மானி : மின்னேற்றத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி
electron : (மின்னி.) எலெக்ட்ரான் : மிகச்சிறிய மின்னியக்க அணுத்துகள். இது இயற்கையில் காணப்படும் சிறிதளவு எதிர்மின்னேற்றத்தைக் கொண்டிருக்கிறது
electron beam : (மின்னி.) எலெக்ட்ரான் கற்றை : புற நிலை மின்னியல் காந்தப் புலங்களின் மூலமாக ஒரு கற்றை வடிவில் ஒரு முகப்படுத்தப்படும் எலெக்ட்ரான்களின் தொகுதி. இதனை எதிர் மின் கதிர்க் கற்றை என்றும் அழைப்பர்
electron gun : (மின்.) எலெக்ட்ரான் பீற்று : தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்பு உருவங்களை நுண்ணாய்வு செய்வதற்கும், தொலைக்காட்சித் திரையில் அந்த உருவம் மறுபடியும் உண்டாவதற்கும் பயன்படும் எலெக்ட்ரான் கற்றை ஏற்படுகிறது
electronics : (மின்னி.) மின்னணுவியல் : மின்மங்கள் (எலெக்ட்ரான்கள்) போன்ற அணுத் துகள்களைப் பற்றிக் கூறும் இயற்பியல் பிரிவு. இது சுதந்திரமான் எலெக்ட்ரான்களையும் அவற்றை விடுவிக்கும் வழிமுறைகளையும். சுதந்திரமாக இருக்கும்போது அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய்கிறது. வானொலி, தொலைக்காட்சி, ஒளியியல் மின்கலங்கள் போன்ற சாதனங்களில் பயன்படும் எலெக்ட்ரான் தத்துவங்கள் பற்றிய ஆராய்ச்சியும் இதில் அடங்கும்
electron lens : எலெக்ட்ரான் ஆடி : ஒரு கண்ணாடி வில்லை ஒளிக்கற்றையை ஒரு முகப்படுத்தும் ஒரு காந்தப்புலம்
electron microscope : எலெக்ட்ரான் நுண்ணோக்காடி : சாதாரண நுண்ணோக்காடியில் பொருள்களைப் பார்க்கும்போது, ஒளியின் ஒரு பகுதியை அந்தப் பொருள்கள் பிரதிபலிப்பதால் அப்பொருள்களைப் பார்க்கிறோம். ஆனால், பார்க்கப்படும் பொருள் ஒளியின் அலை நீளத்தில் 1/5 பகுதிக்குக் குறை வாக இருக்குமானால், ஒளி அதனைச்சுற்றிப்பாயும். அதனால் அப்பொருளைப் பார்க்க இயலாது.ஓர் எதிர் முனையிலிருந்துவரும் எலெக்ட்ரான் கற்றை, ஓர் ஒளிக்கற்றைபோல் செயற்படுகிறது. எலெக்ட்ரான் ஒளிக்கற்றையின் அலை நீளம் ஒளியைவிடப் பல்லாயிரம் மடங்கு குறைவாக இருப்பதால், 100-300-க்குக் குறைவில்லாத அணுக்களின் மூலக் கூறுகளைக் காட்டக் கூடியவை
electron tube : (மின்னி.) எலெக்ட்ரான் குழாய் : இது ஒர் எலெக்ட்ரான் சாதனம். இதனுள், உட்புகாத ஒரு கொள்கலத்தில் உள்ள ஒரு வெற்றிடத்தில் அல்லது வாயு ஊடகத்தின் வழியே எலெக்ட்ரான்கள் மூலமாக மின் கடத்தல் நடைபெறுகிறது
electron metal : (உலோ.) எலெக்ட்ரான் உலோகம் : இது ஒரு மக்னீசிய உலோகக் கலவை. இதில் 5% துத்தநாகமும், 5% செம்பும் கலந்திருக்கும். இது உந்துவண்டிகளின் உந்துதண்டு தயாரிக்கப் பயன்படுகிறது
electroplating : மின்முலாம் பூசுதல் : மின்பகுப்பு முறையின் மூலம் உலோக முலாமிடும் செய்முறை
electroscope : (மின்.) மின் காட்சி : ஒரு பொருளில் மின்னாற்றல் இருப்பதையும், அதன் இயல்பினையும் காட்டும் கருவி
electrophorous : (மின்.) அணுக்க நிலை மின்னாக்கி : அணுக்கத்தால் நிலை மின் ஆற்றலை உண்டு பண்ணும் பொறி அமைவு
electropism : (மின்.) தாவர மின்னியல் : தாவரங்களின் வளர்ச்சியும் மின்விசையும் தொடர்பான அறிவியல்
electrostatic corona : (மின்.) நிலைமின்னியல் ஒளிர்வு : ஒரு நிலை மின்விசை போதிய அளவு ஆற்றலுடன் உருவாகும்போது மின்முனைகளைச் சுற்றி உண்டாகும் மின்மயத்துகள்.
electrostatic discharge : (மின்.) நிலைமின்னியல் மின்னோட்டம் : நிலைமின்னியல் பொருட்களுக் கிடையிலான ஆற்றலின் வேறுபாட்டினால் உண்டாகும் சுடர்
electrostatic field : (மின்.) நிலைமின்னியல் புலம் : நிலைமின்னூட்டம் பெற்ற ஒரு பரப்பிடம்
electrostatistic focus : (மின்.) நிலைமின்னியல் குவிமையம் : சரிசம இல்லாத நிலைமின்னியல் புலங்களைக் கொண்ட நேர்முனை வழியாகப் பாயும் ஒர் எலெக்ட்ரான் கற்றையைக் குவி மையப்படுத்துதல்
electro-statics : (மின்.) நிலைமின்னியல் : நிலையான மின்விசை நிகழ்வுகளைப்பற்றி ஆராயும் மின் அறிவியல் பிரிவு.
electrotheraphv : (மின்.) மின்னியல் நோய்ச் சிகிச்சை : மின்னாற்றலைச் செலுத்தி நோய் தீர்க்கும் முறை
electro-type : (அச்சு.) மின்அச்சு : மின்னாற் பகுக்கும் முறையின் மூலம் அச்சுருவின் மீது செம்பு பூசிச் செய்யப்படும் அச்சுத் தகடு
electrum : (வேதி.) பொன் வெள்ளிக் கலவை : பொன்னும் வெள்ளியும் இயல்பாகக் கலந்த ஒர் உலோகக் கலவை. இதில் ஏறத்தாழ 40% வெள்ளி கலந்திருக்கும்
element : (வேதி.) தனிமம் : அறிவியல் அறிந்த வழிமுறைகளில் எதனாலும் பகுக்க முடியாத ஒரு பொருளின் அடிப்படைக் கூறு
elementary : தனிமஞ்சார்ந்த : ஒரு தனிமத்தை அல்லது தனிமங்களைச் சார்ந்த, elementary particle : (இயர்.) மூலத் துகள் : தானே ஓர் அணுவாக இல்லாமல், அணுக்களைப் பிரிப்பதால் உண்டாகும் ஒரு துகளின் பொதுப் பெயர். எடுத்துக்காட்டு: புரோட்டான்: எலெக்ட்ரான்; நியூட்ரான். இவை அனைத்தும் ஒரு புரோட்டானின் எடையைவிட இரு மடங்கு குறைவாக இருக்கும்; சில இன்னும் இலேசானவை
elements of a storage battery : (மின்.) சேமக்கலத் தனிமங்கள் : ஒரு சேமக்கலத்தின் எதிர்மின் மற்றும் நேர்மின் உலோகத் தகடுகள். இவற்றில் மின்னோட்டத்தின் போது வேதியியல் மாற்றங்கள் ஏற்படும்
elephantiasis : (நோய்.) யானைக் கால் நோய் : கால்கள் மிகப்பெரிய அளவில் வீங்கிக்கொள்ளும் ஒரு வகை நோய். "ஃபிலியாரிசிஸ்' என்னும் நுண்ணிய புழுக்கள் நிண நீர் நாளங்களை அடைத்துக் கொள்வதால் இந்நோய் உண்டாகிறது
elevation : ஏறுசரிவு : எந்திரவியல் வரைபடங்களில் செங்குத்துச்சாய் தளத்தின் மீதான வடிவியல் எறிவுப் படிவம்
elevator : (வானூ.) உயர்த்தி : விமானத்தின் பின்புற ஏற்ற இறக்கத் தட்டு
elevator angle : (வானூ.) ஏறுகோணம் : விமானம் நடு நிலையிலிருந்து உயர்ந்து ஏறுமுகமாகச் செல்லும் கோணம். உயர்த்தியின் இழுவை முனை நடுநிலைக்கு கீழே இருப்பின் இந்தக் கோணம் நேர் எண் ஆகும்
elevator rope : (பொறி.) உயர்த்தி வடம் : சணல் நார் சுற்றப் பட்ட கம்பி வடம், இதனைச் சுற்றி, ஒவ்வொன்றும் 19 கம்பிகள் கொண்ட 6 சரங்கள் அமைந்திருக்கும்
eliminating : அகற்றீடு : விட்டொழித்தல்; விலக்கீடு; முக்கியமில்லாதது அல்லது பயனற்றது என நீக்கிவிடுதல்
eliminating : பிரித்தகற்றி : மின்னாற்றல் பயன்படுத்தும் கம்பியில்லாத தந்திக்குரிய கருவி
elixir of life : (வேதி.) கற்பம் : வாழ்நாளை நீடிக்கவல்ல மருந்து
Elizabethan : (க.க.) எலிசபெத் காலத்திய : இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் ஆட்சிக் காலத்துக்குரிய
elk hide : மரைமான் தோல் : மரைமான் எனப்படும் காட்டுமான் இனப் பெருவிலங்கின் தோல். இது கனமானது; இது செருப்பு, காலணிகள் தயாரிக்க ஏற்றது
ell : (க.க.) 'எல்' அலகு : ஏறத்தாழ 114செ.மீ.குச் சரியான நீட்டலளவைக் கூறு
ellipse : (வடி.) நீள் வட்டம் : ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும்
பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854
ellipsoid : (வடி.) ஓரைவட்ட உரு : குறுக்கு வெட்டுகள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற உரு elliptical arch : (க.க.) நீள் வட்டக் கவான் : மூன்று மையங்களை அளாவி அமைக்கப்படும் நீள்வட்ட வடிவ ஒரு வில் வளைவு
elliptical or eccentric gears: (பட்.) நீள் வட்ட அல்லது பிறழ்மையப் பல்லினை : இந்தப் பல்லிணையில் சுழல் தண்டு மையத்தில் இருக்காது. முட்டை வடிவம், இதய வடிவம் போன்ற எந்த வடிவிலும் இது அமைந்திருக்கும், அச்சு எந்திரங்கள் இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு
elm : (மர.) எல்ம் மரம் : இரட்டை ரம்பப் பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துகளும் உள்ள மரம்
elongation : (எந்.பொறி) நீட்சி : தகடாகக்கூடிய இரும்பும், எஃகும் விறைப்பாக்க அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும்போது முறிகின்ற வரையில் நீட்சியடையும். இதனால் பரப்பளவு குறையும். நீட்சியளவும் பரப்பளவுக் குறையும் அதன் தரத்திற்குச் சோதனை யாகும். குழைமப் பொருட்களில், அழுத்தத்திற்குள்ளான பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு
em : (அச்சு.) 'எம்' அலகு : அச்சுவரி நீளத்திற்குரிய அலகுகளில் பெரும்படி அலகுக்கூறு
embellish : ஒப்பனை : ஒப்பனை செய்தல் அல்லது அழகுபடுத்துதல்.அலங்கார வேலைப்பாடுகள் செய்து நுணுக்க நயமுடையதாக்குதல்
emblazon : மரபுருவ ஒப்பனை : மரபுரிமைச் சின்ன உருவங்களால் ஒப்பனை செய்தல்
emblem : இலச்சினை : மரபுச் சின்னமாகப் பயன்படும் சிறப்பு அடையாளக் குறி
embossed : (பட்.) புடைப்புச் சித்திர வேலைப்பாடு : மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி புடைப் புருப்படச் செதுக்கிச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு
embossing : புடைப்புச் சித்திரக்கலை : புடைப்பு உருப்படக் செதுக்கிச் செய்யப்படும் சித்திரக்கலை
embossing hammer : புடைப்புச் சித்திரச் சுத்தி : உட்புழைவான பொருள்களின் உட்பரப்பில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் சுத்தி
embossing plate : (அச்சு.) புடைப்புச் சித்திரத் தகடு : ஒரு தகட்டின் பரப்புக்குக் கீழே செதுக்கப் பட்டுள்ள பகுதிக்குள் காகிதத்தை நுழைத்து அச்சுப் பக்கத்தின் உருவத்தை புடைப்பாக்கம் செய்யலாம்
emergency brake : (தானி.) அவசரத் தடுப்புக் கருவி : உந்து வண்டியில் கையினால் இயக்கப்படும் தடுப்புக் கருவி. இதனைப் பொதுவாக நிறுத்தும் தடுப்புக் கருவி என்பர். இதனை உந்து வண்டி ஏற்றத்தில் ஏறும்போது மட்டுமே மிக அரிதாகப் பயன்படுத்துவர். நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் உந்து வண்டி நகராமல் தடுப்பதே இதன் பணி
emergency floatation gear : (வானூ.) அவசர மிதவைப் பல்லிணை : விமானம் அவசரமாக நீரில் இறங்க வேண்டியிருக்கும் நேர்வில் மிதப்பாற்றல் அளிப்பதற்காகத் தரைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்
emergency switch : (மின்.) அவசர இணைப்பு விசை : ஓர் அவசர நிலையின்போது அல்லது தீ விபத்தின்போது ஒரு கட்டிடத் தின் எல்லாப் பகுதிகளிலிருந்து மின்னோட்டத்தை துண்டிப்பதற்காக மின் நிறுவனத்தின் மானிக்குமேலாக இணைக்கப்பட்டுள்ள ஓர் இணைப்பு விசை
emery : குருந்தக்கல் : சானை பிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிமம். இது அலுமினியா இரும்பு, சிலிக்கா, சுண்ணாம்பு ஆகியவற்றின் ஆக்சைடினாலானது. இது உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது
emery cloth : தேய்ப்புத்துணி : உலோகப் பரப்புகளைத் தேய்த்து மெருகேற்றுவதற்குப் பயன்படும் குருந்தக்கல் தூள் பூசிய துணி
emery paper : (க.க.) தேய்ப்புத்தாள் : உப்புத்தாள் : உலோகங்களுக்கு மெருகேற்றுவதற்குப் பய்ன்படுத்தப்படும் குருந்தக்கல்தூள் பூசிய தாள்
emery wheel : (எந்.) சாணைக்கல் : சாணை பிடிப்பதற்காகக் குருந்தக்கல் ஒட்டப்பட்ட சக்கரம். இதனை வேகமாகச் சுற்றிச் சாணை பிடிக்கப்பயன்படுத்துவர்
emission : (மின்.) ஒளி வெளிப்பாடு: ஒரு பரப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிப்படுதல் emission theory : ஒளி வெளிப்பாட்டுக் கோட்பாடு : "ஒளிவிடு பொருள்களின் நுண்ணிய பகுதிகளிலிருந்து ஒளிவெளிப்படுகிறது" என்னும் கோட்பாடு
emissivity : (குளி.பத.) ஒளிவெளிப்பாட்டுத் திறன் : ஒரு பரப்பிலிருந்து கதிரியக்கம் மூலம் வெப்பம் வெளிப்படுத்தப்படும் திறன்
empennage : (வானூ.) வால் பரப்பு : விமானத்தின் வால் பகுதியின் பரப்புகள்
empirical rule : (பொறி.) அனுபவ விதிமுறை : முற்றிலும் கணித அல்லது இயற்பியல் வழியில் அல்லாமல், செயலறிவின் அல்லது அனுபவத்தின் அடிப்படையிலமைந்த ஒரு விதி முறை அல்லது சமன்பாடு
e.m u. : (மின்.) மின்காந்த அலகு (இ.எம்.யூ.) : மின்காந்த அலகுகளைக் குறிப்பிடும் பன்னாட்டு அடிப்படை அளவு
emulsification : (குளி.பத) திரவக் குழம்பு : ஒன்றில் ஒன்று. கரையாத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட திரவங்களின் கலவை
emulsify : (குழை) குழம்பாக்கு : ஒரு திரவத்தில் நேர்த்தியாகக் குழம்பாக்கிய நிலையில் ஒரு பொருளை மிதக்கவிடுதல்
emulsion : (ஒளி.) பசைக் குழம்பு : ஒளிப்படத் தகடுகளுக்கும். படச்சுருளுக்கும் பயன்படும் வெள்ளி உப்புக் கலவை
en : (கம்.) 'என்' அலகு : அச்சுக்கோப்பதில் உள்ள ஓர் அகல அளவு. இது 'எம்' அலகில் ஒரு பாதி
enamel : எனாமல் : வண்ணமாகிப் பூசப்படும் ஒரு பொருள். இந்தப் பூச்சு காய்ந்தவுடன் கடினமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
enameled : காகித மெருகு : காகிதத்திற்கு மிக நேர்த்தியாகப் பளபளப்பு மெருகேற்றுதல்
enameled brick : (க.*க) மெருகேற்றி செங்கல் : எனாமல் போன்று நன்கு பளப்பளப்பாக மெருகேற்றிய செங்கல்
enameled wire : (மின்.) மெருகேற்றிய மின்கம்பி : மின்காப்பு எனாமல் மூலம் மெருகு பூசப்பட்ட கம்பி. இது பெரும்பாலும் பஞ்சு அல்லது பட்டுத்துணியால் பொதியப்பட்டிருக்கும்
enargite : (உலோ.) எனார்கிட் : Cu3 AsS4. இது ஒரு செம்புத்தாது. (செம்பு ஆர்சனிக் சல்பைடு)
encircle : வளை(தல்) : வட்டவடிவமாகச் சூழ்ந்து கொள்ளுதல்; வட்டவடிவமாகக் கோடு வரைதல்
enclosed arc lamp : (மின்.) அடைப்புச் சுடர்விளக்கு : ஒரு சுடர்விளக்கில், சுடரினை ஒரு கோள வடிவம் அடைத்துக் கொண்டிருக்குமாறு அமைத்தல். இதனால் சிறிதளவு காற்று மட்டுமே உட்புக முடியும். அதனால் கார்பன் செலவழிவு குறையும்
enclosed fuse : (மின்.) அடைப்பு உருகி : காற்றுப் புகாத காப்புறை அண்டையிடத்து வைக்கப்பட்டுள்ள ஓர் உருகி இது. வாயு அல்லது தூசு தீப்பற்றி விடாமல் தடுக்கிறது
endive scroll : சுருள் இலைவடிவு : சுருள் இலைபோல் செதுக்கப்பட்ட வடிவமைப்பு
end-lap joint : முனை கவிகணைப்பு : இணைக்கப்படும் இரு துண்டுகளையும் அவற்றின் அகலங்களின் அளவுக்கு இரு பகுதிகளாகப் பகுத்து அமைக்கப்படும் முனை இணைப்பு
endless saw : முனையிலா ரம்பம் : சுற்றுவரிப்பட்டையிட்ட ஈர்வாள்
end mill : (எந்.) முனை வெட்டு எந்திரம் : கதிர்களுடன் அல்லது பொருத்து குழியுடன் நேரடியாகப் பொருத்துவதற்கான, கூம்பு வடிவத் தண்டு கொண்ட வெட்டு எந்திரம்
endogen : (தாவ.) தண்டக வளர்ச்சித் தாவரம் : தண்டில் அகவளர்ச்சியுடைய தாவர வகை
end paper : இறுதிக் காகிதம் : கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறமும் பின்புறமும் வைத்துத் தைக்கப்படும் காகிதம்
end play : (மின்.) இறுதி முனை இயக்கம் : ஒரு சுழலும் உறுப்பின் இறுதி முனைகளிலுள்ள இயக்கம்: அதாவது, நீளப்பாங்கான திசையிலுள்ள இயக்கம்
end thrust : (பொறி.) முனை உதைப்பு : செங்குத்தான அல்லது கிடைமட்டமான ஒரு சுழலும் தண்டினால் ஏற்படும் முனை இயக்க அல்லது நீளப்பாங்கான அழுத்தம். இது பெரும்பாலும் ஒர் உதைப்புத் தாங்கியினால் உண்டாகும்
endurance : (வானூ.) இசைதகைவு : ஒரு விமானம், வானத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில், குறிப்பிட்ட வேகத்தில் நிலைத்து நிற்கக்கூடிய உயர்ந்த அளவு நேரம்
endurance limit : (உலோ.) இசைதகைவு வரம்பு : ஒரு பொருள் நலிவுறாமல் எவ்வளவு அதிக அளவுத் தகைவுக்கு உட்படுத்தப்படலாமோ அந்த அளவு
energy : (இயற்.) விசையாற்றல் : ஒரு பொருள் தடையினைச் சமாளித்து செயலுறுவதற்குத் திறனுடையதாக இருக்குமாயின், அது விசையாற்றல் உடையதெனக் கூறப்படும். இந்த (1) விசையாற்றல் (2) உள்நிலையாற்றல் என இருவகைப்படும் engage : (எந்.) பிணைப்பு : எந்திர உறுப்புகளை, இயக்கத்தை அல்லது விசையை அனுப்பீடு செய்வதற்காக ஒன்றாக இணைத்தல் அல்லது தொடர்புபடுத்துதல். அதாவது, பல்லிணை மாற்று நெம்புகோல் உந்து வண்டியின் வேகமாற்றப் பல்லிணைகளை பிணைக்கவோ, விடுக்கவோ செய்கின்றன
engine : (இயற்.) எந்திரம்/பொறி : பல்வேறு உறுப்புகளுள்ள எந்திர ஆமைப்பு. நீராவி, எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றினால் இயக்கக்கூடிய பலவகை எந்திரங்கள் உள்ளன
engine altimeter : (வானூ.) எந்திர உயரமானி : அளவுக்கு மீறி அழுத்தம் நிரம்பிய எந்திர அறையில் ஏற்படும் அழுத்தத்திற்கு நேரிணையான உயரத்தைக் குறித்துக் காட்டும் உயரமானி
engine control : (வானூ.) எந்திரக் கட்டுப்பாடு : எந்திரத்தின் விசை வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்தப் பயன்படும் சாதனம். காற்றுக் கட்டுப்பாடு அல்லது எந்திரக் கட்டுப்பாடு மூலம் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்
engine cowling : (வானூ.) எந்திர மூடி : விமானத்தின் எந்திர அமைப்பில் குளிர்காற்றுப் பாய்வதை நெறிப்படுத்தி முறைப்படுத்துவதற்காக அந்த எந்திரத்தைச் சுற்றி வைக்கப்படும் ஒரு மூடி
engine_displacement : (வானூ.) எந்திர இடப்பெயர்ச்சி : ஒவ்வொரு உந்து தண்டின் ஒரு முழு உகைப்பின்போது நீள் உருளைகள் அனைத்தின் உந்து தண்டுகளினாலும் இடம் பெயரச் செய்யப்படும் மொத்தக் கன அளவு
engineer : பொறியாளர் : மின்னியல், சுரங்கவியல், எந்திரவியல்,கட்டிடவியல் முதலிய துறைகளில் வடிவமைப்பு, கட்டுமானம், மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்
engineering : பொறியியல் : தொழில் துறையின் பல்வேறு துறைகளில் திறமையாகத் திட்டமிட்டு கட்டுமானம் செய்யும் கலையும் அறிவியலும்
engineer's chain : (எல்.) பொறியாளர் சங்கிலி : இதில் ஒவ்வொன்றும் 30செ.மீ. நீளமுள்ள 100கண்ணிகள் இருக்கும். நில அளவையில் முன்னர் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட குன்டர் சங்கிலி 20மீ. நீளமுடையது. இதில் ஒவ்வொன்றும் 18-234செ.மீ.நீள00 கண்ணிகள் இருக்கும்
engine lathe : (எந்.) எந்திரக் கடைசல் பொறி : ஒரு குறுக்குச் செருக்குழைவும், கூட்டு ஆதாரமும், முன்னிட்டுத் திருகு, விசையூட்டம்_உடைய ஒரு கடைசல் எந்திரம். இதில் மாற்றப் பல்லிணைகளும் அமைந்திருக்கும்
engine weight per horse power : ஒரு குதிரை ஆற்றலுக்கு எந்திர எடை : ஓர் எந்திரத்தின் உலர் எடையை அதன் குதிரை ஆற்றலினால் வகுத்துப் பெறும் ஈவு
engraving : (அச்சு.) செதுக்கு வேலைப்பாடு : (1) ஒரு தகட்டில் உட்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல். (2) செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட வடிவமைப்பு. (3) செதுக்கு வேலைப்பாடு செய்த ஒரு தகட்டிலிருந்து அச்சிடப்பட்ட L] L— LD «
enrichment : நுண் நய ஒப்பனை : சாதாரண வேலைப்பாட்டில் நுண் நய ஒப்பனை சேர்த்து அழகுடையதாக்குதல் ensemble : பொதுத் தோற்றம் : ஒரு வேலைப்பாட்டின் பகுதியல்லாமல், முழுமையான மொத்தத் தோற்றம்
entablature : (க.க.) தூண் தலைப்பு : பண்டைய பாணிக் கட்டிடங்களில் ஒரு துணுக்கு மேலுள்ள தலைப்பு அமைவு
entasis of a column : தூண்மையப் புடைப்பு : ஒரு தூணின் மிகச் சிறிதளவான மையப் புடைப்பு முறை. இது உட்புழைவுத் தோற்றம் ஏற்படாமல் செய்ய உதவுகிறது
entrance switch :(மின்.) நுழைவு விசை : ஒரு கட்டிடத்திற்குள் நுழையும் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ள விசை
entropy : (இயற்.) அகவெப்பம் : வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு
enumerated : கணக்கீடு : ஒன்றன்பின் ஒன்றாக எண்ணிடுதல்; தனித்தனியே குறித்துரைத்தல்
envelope corner card : (அச்சு.) கடித உறை முகவரி : கடித உறைகளில் இடது மேல் முனையில் அச்சடிக்கப்பட்டுள்ள முகவரி
eosin : (வேதி.) சாயப் பொருள் : சிவப்பூதா நிறச்சாயப் பொருள், கரி எண்ணெயிலிருந்து எடுக்கப்படுகிறது. பருத்தி, பட்டு, கம்பளித்துணிகளுக்குச் சாயமிடுவதற்கும், சிவப்பு மை, அரக்கு ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது
epicycloid : (வடி.) வளைவரி : வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி
epoxy resins : (குழை.) இப்போக்சிப் பிசின் : இன்றியமையாத பிளாஸ்டிக்பொருள். பிஸ்பினால், எபிகுளோரோஹைட்ரின் ஆகியவை வினைபுரிவதால் தயாரிக்கப்படுகிறது. தொழில்துறையில் காப்புப் பூச்சுப் பொருட்களாகப் பயன்படுகிறது
epsom salt : (வேதி.) வெளிமக் கந்தகி : இதன் வேதியியற் பெயர் மக்னீசியம் சல்பேட் நிறமற்ற படிக உப்பு. பேதிமருந்தாகவும் , பருத்தித் துணிகளுக்கு மெருகேற்றவும் பயன்படுகிறது
equal forces : (இயற்.) சமநிலை விசைகள் : எதிர்மாறான திசைகளில் செயல்புரிந்து சமநிலையை உண்டு பண்ணும் விசைகள்
equalizer : ((மின்.) சமன்படுத்தி : குறைந்த அளவுத்தடையுள்ள மின் கம்பிகள் அல்லது சலாகைகள். இவை, இணையாக இயங்கும் கூட்டு மின்னாக்கிகள் அனைத்திலும் மின்னகம், தொடர்புலங்கள், இணைப்புலம் ஆகியவை சேரும் முனைகளை இணைக்கின்றன
equalizer brake : (தானி.எந்.) சமன்படுத்தித் தடை : உந்து வண்டியில் நெம்புகோல்களையும், சலாகைகளையும் சீரமைத்து வைத்திருக்கும் முறை. இதில், தடைமிதி கட்டையில் அல்லது தடை நெம்புகோலில் அழுத்தம் செலுத்தப்படும் போது, சலாகை வழியாக, சக்கரங்களுக்குத் தடையழுத்தம் அளிக்கும் முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சலாகைகளுக்கு அழுத்தத்தை அனுப்புவதற்கென வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்
equalizer wire : (மின்.) சமன்படுத்திக் கம்பி : சமநிலை மின்னோட்டம் பாய்கிறவாறு இணையாக இணைக்கப்பட்டுள்ள இரு கூட்டு மின்னாக்கிகளை இணைக்கும் கம்பி equalizing current : (மின்.) சமன்படுத்தி மின்னோட்டம் : மின் உற்பத்தியைச் சமன்படுத்துவதற்கு இணையாக இணைக்கப்பட்டுள்ள இரு கூட்டு மின்னாக்கிகளுக்கிடையில் ஓடும் மின்னோட்டம்
equation : (கணி.) சமன்பாடு : கணிதத்தில், இரு அளவுகளின் சமன்மையைக் குறிக்கும் சமன்பாடு. வேதியியலில் வேதியியல் வினைகளைக் குறியீடுகளாகக் குறித்தல்
equilibrator : சமநிலைப்படுத்தி : சமநிலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
equilibrium : (இயற்.) சமநிலை : சரியமைதி நிலை
equivalent : சம மதிப்புகள் : எண்ணிக்கையில் ஒன்றுக்கொன்று சரிசமமாகவுள்ள, ஆனால் வெவ்வேறு வகையில் குறிக்கப்படும் எண்கள் அல்லது அளவுகள்
equivalent evaporation : (பொறி.) சரிநிகர் ஆவியாதல் : ஒரு கொதிகலனுக்கு212°ஃபா. சூடான் நீர் வந்து, அது அதனை அதே வெப்ப நிலையிலும், வாயுமண்டல அழுத்தத்திலும் ஆவியாக்குமானால், ஒரு மணிநேரத்தில் ஆவியாகக் கூடிய நீரின் அளவு
equivalent monoplane : (வானூ.) சரிநிகர் ஒற்றைத் தட்டு விமானம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறகுகளின் எதற்கும் பொருட்களைத் தூக்குவதற்குச் சரிநிகரான ஒற்றைத் தொகுதிச் சிறகுகளையுடைய விமானம்
equivalent weights of paper : (அச்சு.) சரிநிகர் எடைமானங்கள் : ஒரே அடிப்படையான எடையுள்ள ஆனால், வேறுபட்ட வடிவளவு காரணமாக வேறுபட்ட கட்டு (ரீம்) எடை கொண்ட பல்வேறுவகைக் காகிதங்களின் எடைமானங்கள்
erecting : நிறுவுதல் : எந்திரங்களின் பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்துப் பொருத்தி இறுதியாக நிறுவுதல்
erosion : (மண்.) அரிமானம் : மழை, வெப்பம், குளிர்காற்று முதலிய இயற்கையாற்றல்களால் பாறைகள் அடையும் அரிப்புத் தேய்மான அழிவு
errata : (அச்சு.) அச்சுப்பிழைகள் : அச்சுப்பிழைத் தொகுப்புப் பட்டியல்
escalator : இயங்கு படிக்கட்டு : பண்டக சாலைகள், ரயில் நிலையங்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கும் படிக்கட்டு
escalop shell : சிப்பியணிகலன் : ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியினாலான அணிகலன்
escapement : இயக்க மாற்றி : கடிகாரங்களில் செங்குத்து இயக்கத்தை எதிரீட்டு இயக்கமாக மாற்றுகிற ஒரு சாதனம். இது கடிகாரங்களில் ஒரு சீரான இயக்கம் நடைபெற வழிசெய்கிறது
escape velocity : (விண்.) வெளிச்செல் வேகம் : ஒரு பொருள் பூமியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்வதற்குத் தேவையான வேக அளவ.
escritoire : சாய்வு மேசை : தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை
esparto paper : எஸ்பார்ட்டோ தாள் : ஸ்பெயின் ஆஃப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'எஸ்பார்ட்டோ' என்னும் புல்வகையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் espognolette : பலகணித் தாழ்ப்பாள் : ஃபிரெஞ்சு நாட்டு அலங்காரப் பலகணித் தாழ்ப்பாள்
ester : (வேதி.) ஈஸ்டர் : ஒரு கரியக உப்பு மூலப் பொருளும் அமிலமும் வினைபுரிவதால் கிடைக்கும் ஒரு கலவை. (உ-ம்) (CH3C7H5O3) = மெத்தில் சாலிசைக்ளேட்
ester gum : (வேதி.) ஈஸ்டர் கோந்து : படிக வண்ண மெருகு தயாரிக்கப்படும் பொருள். பிசின், கிளிசரின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது
estimating : (க.க.) மதிப்பீடு செய்தல் : ஒரு வேலைப்பாட்டுக்குத் தேவைப்படும் பொருளின் அளவு, உழைப்பின் அளவு, முடிவுற்ற பொருளின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுதல்
etching : செதுக்கு வேலைப்பாடு : மெழுகு பூசிய தகட்டுப் பரப்பில் ஊசியினால் செதுக்கு வேலை செய்து, செதுக்கப்பட்ட பகுதிகளை அமிலத்தில் வினைபுரியச் செய்து உருவம் அமைத்தல்
ethane : (வேதி.) ஈத்தேன் : வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6)
ethanol : (வேதி.) எத்தனால் : எத்தில் ஆல்ககால் (C2H5OH)
ether : (வேதி.) ஈதர் : (C2H5)2O மயக்க மருந்தாகப் பயன்படுகிற, எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்ம வகை. கந்தக அமிலத்துடன் ஆல்ககால் கலந்து தயாரிக்கப்படுகிறது
ethyl : (வேதி.) எத்தில் : C2H5, வெறியம் (ஆல்ககால்) முதலியவற்றிலடங்கிய அடிப்படை நீர்க்கரியகப் பொருள். ஈத்தேனிலிருந்து ஒரு ஹைட்ரஜன் அணுவை விலக்கி விடுவதன் மூலம் இது கிடைக்கிறது
ethyl cellulose : (வேதி. குழை.) எத்தில் செல்லுலோஸ் : மரக்கூழ் அல்லது பருத்திக் கந்தல்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வலுவான வெப்பந்தாங்கக் கூடியது; எளிதில் தீப்பிடிக்காதது. இது வார்ப்படங்கள் தயாரிக்கவும், காப்புப் பூச்சுகளுக்கும், மின்காப்புக்கும் பயன்படுகிறது
ethylene : (வேதி.) எத்திலீன் : நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது
eucolloids : (வேதி. குழை.) ஈக்கோலாய்டுகள் : ஆயிரத்திற்கு மேற்பட்ட மீச்சேர்மங்கள். அதாவது இதில், ஒவ்வொரு மூலக்கூறும், தனிப்பொருளின் 1000 அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் கரைசல்கள் மிகுந்த பசைத் தன்மையுடனிருக்கும். திட நிலையில் இவை மிகவும் கடினமானவை
eutectic : (இயற்;உலோ,வேதி.) கூறு நிலையமைவுடைய : கலவைகளில் ஒரே வெப்ப நிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய
eutectic alloys : (உலோ.)கூறு நிலையமைதி உலோகக் கலவைகள்: அலுமினியம், சிலிக்கன், காட்மியம், பிஸ்மத் போன்ற உலோகக் கலவைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒன்றில் மற்றொன்று முற்றிலுமாகக் கரைந்து விடக் கூடிய இரு உலோகங்களின் கலவை
evaporate : (வேதி.) ஆவியாக்கு : ஈர நயப்பு நீக்கி ஆவியாக மாற்றுதல்
evaporation : ஆவியாக்குதல் : ஈர நயப்பு நீக்கி ஆவியாக்குதல்; வேதியியற் பொருட்களை உலர்த்திச் செறிமங்களாக்குதல்; திரவத்தை ஆவியாக மாற்றுதல்
evolution : (உயி.) உயிர்மலர்ச்சி/ பரிணாமம் : உயிரினங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகை வளமும் வகை வளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்னும் உயிரியல் கோட்பாடு
excavation : (க.க.) அகழ்வு : பொறியியல் பணிகளுக்காக நிலத்தை அகழ்தல் அகழ்வு செய்த பள்ளம்
excelsior : உட்திணிவு மரச்சீவல் : உட்திணித்து இடம் நிரப்பப் பயன்படுத்தப்படும் மரச்சீவல்
exchange : பரிமாற்றம் : பணத்திற்காக பணிபுரிதல் அல்லது சரக்குகளை விற்பனை செய்தல்; சரக்குகளுக்குப் பணம் கொடுத்தல்; வாணிகத்தில் பண்டங்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல்; நாணயப் பரிமாற்றம்
excitation of field : (மின்.) புலக்கிளர்ச்சி : ஓர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் புலங்களிலுள்ள கம்பிச் சுருள்களின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி காந்த இயக்கம் உண்டு பண்ணுதல்
excited molecule : (இயற்.) கிளர்வுறு மூலக்கூறு : ஒரு மின்னியல் வெளியேற்றத்திலிருந்து ஆற்றலை ஈர்த்துக் கொள்ளும் ஒரு மூலக்கூறு. அவ்வாறு ஈர்த்துக் கொள்ளும் மின் ஆற்றலை அந்த மூலக்கூறு ஒளியாக வெளியிடுகிறது
exciter : (மின்.) கிளர்ப்பி : மாறு மின்னாக்கிப் புலத்திற்கு மின் விசையளிப்பதற்குப் பயன்படும் ஒரு சிறிய நேர்மின்னாக்கி
exciter current : (மின்.) கிளர்ப்பி மின்னோட்டம் : ஒரு பெரிய மாறு மின்னாக்கிக்கு அல்லது மின்னாக்கிக்குப் புல மின்னோட்டமளிப்பதற்குப் பயன்படும் ஒரு சிறிய மாறு மின்னாக்கி உற்பத்தி செய்யும்மின்னோட்டம்
exciiter generator : (uğlair.) கிளர்ப்பி மின்னாக்கி : ஒரு மாறு மின்னாக்கிக்குப் புலமின்னோட்டமளிப்பதற்குப் பயன்படும் ஒரு நேர் மின்னாக்கி
exhaust : (எந்.) புறம் போக்கி : ஓர் எஞ்சினின் நீள் உருளையிலிருந்து பயன்படுத்தப்பட்ட நீராவியை வெளியேற்றுவதற்கான எந்திரப் பொறியமைவு
exhaust collector ring : (வானூ.) உள் வெப்பாலை வெளியேற்றமைவு : எஞ்சினின் நீள் உருளைகளிலிருந்து வெளியேறும் வாயுக்களைப் புறம்போக்குவதற்கான வட்ட வடிவச் செல்வழி
exhaust fan : (மின்.) புறஞ் செல்காற்றோட்ட விசிறி : தூசு, புகை முதலியவற்றை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான சுழல் விசிறி
exhaust manifold : (தானி.) வெளியேற்றுப் பல்புழை : பல்வேறு நீள் உருளைகளிலிருந்து வெளியேற்றுக் குழாய்க்கு வாயுக்களைக் கொண்டு செல்வதற்கான பல்புழைவாய்
exhaust pipe : (தானி.) வெளியேற்றுக் குழாய் : நீள் உருளைகளிலிருந்து வெளியேறும் நீராவியை அல்லது வாயுக்களை வெளியே கொண்டு செல்லும் குழாய் exhaust valve : வெளியேற்று ஓரதர் : எஞ்சினிலிருந்து வாயு அல்லது நீராவி வெளியேறுவதற்கு மட்டுமே அனுமதிக்கும் ஓரதர்
exlibris : (அச்சு.) முகப்புச் சீட்டு : புத்தக உடைமை உரிமையாளரின் பெயர், சின்னம் முதலிய விவரங்களடங்கிய முகப்புப் பொறிப்புச் சீட்டு
exophthalmic goitre : (நோயி.) கழுத்துக் கழலை : தைராய்டுச் சுரப்பிகளில் உண்டாகும் ஒரு வகை நோய்.இது கண்களைப் புறந்தள்ளி, கழுத்தைவீங்கச் செய்கிறது
exosphere : (விண்.) புறக்கோடிவாயு மண்டலம் : வாயு மண்டலத்தின் புறக்கோடி விளிம்பு அல்லது படுகை
exotic fuel : (விண்.) அயற்பண்பு எரிபொருள் : விமானங்களுக்கும், ராக்கெட்டுகளுக்கும் பயன்படும் பல்வேறு வாயுக்கள் கலந்த எரிபொருள்
expanded metal : (உலோ.) விரிவாக்கிய உலோகம் : வெட்டிக்காரைக் கட்டுமான உள்ளீடாகப் பயன்படும், பின்னால் சட்டமாக விரிவாக்கப்படுகிற உலோகத்தகடு
expanding mandrel : (எந்.) விரிவாக்கிய நடுவச்சு : விரிவாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்த கடைசல் பிடிக்கும் பொறியின் நடுவச்சு
expanding universe : (விண்.) அகல் விரிவு அண்டம் : நாம் கண்ணால் காணும் சூரியனும், விண் மீன்களும் ஒருவகைப்பால் வீதிமண்டலத்தின் ஒரு பகுதி. இது தவிர, வேறு வகைப்பால் வீதிமண்டலங்களும் உள்ளன. இவற்றின் ஒளி, ஓர் ஊடகத்தின் ஒளிச் சிதறலால் உண்டாகும் நிறமாலையில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட சிவப்பு நிறமுடையவை. இதனாலேயே, இவை நம்மிடமிருந்து தூர விலகிச் செல்வது போல் தோன்றி, அண்டம் அகன்று விரிந்து செல்வதாகத் தோன்றுகிறது
expansion : (இயற்.) விரிவாக்கம் : பரவுதல்; விரிவடைதல்; வடிவளவில் பெருக்கமடைதல்
expansion bit : (மர.வே.) விரிவாக்க வெட்டிரும்பு : ஒரு துளையிடும் வெட்டிரும்பு. இதில் வெட்டுக்கத்திகள் ஆரைபோல் அமைக்கப்பட்டிருக்கும். இதனால், ஒரே கருவியினால், பல்வேறு விட்டங்களுடைய துளைகளைச் செய்யலாம்
expansion bolt : விரிவாக்க மரையாணிகள் :ஆப்பு போல் செயற்படும் பிரிப்புப் பெட்டியுள்ள மரையாணி. இது செங்கலுடன் அல்லது கான்கிரீட்டுடன் இணைக்கப் பயன்படும்
expansion fit : (மர.வே.) விரிவாக்க இணைப்பு : உலோக உறுப்புகளை ஒன்றோடொன்று இறுகப் பொருத்தி இணைத்தல். உட்பகுதி பனிக்கட்டி மூலம் சுருக்கவோ உறைவிக்கவோ செய்யப்பட்டு, சுருங்கும் இணைப்புக்கு எதிரான நிலையில் பொருத்தப்படுகிறது
expansion joint : (பொறி.) விரிவாக்க மூட்டு : குழாய்களில் விரிவாக்கத்தாலும் சுருக்கத்தாலும் ஏற்படும் இயக்கத்தைச் சமாளிப்பதற்குரிய சாதனம். ஒரு நீராவி மற்றும் வென்னீர் சூடாக்கும் அமைப்புகளில் விரிவாக்க மூட்டு கள் இருவகைப்படும்: (1) நடுவு குழல் வகை. குறைந்த அழுத்தத்தில் துருத்தி வகை சிறந்தது
expansion reamer : (எந்.) விரிவாக்கத் துளைச்சீர்மி: வடிவளவுக்கேற்ப அளவு நேரமைவுக்கு அனுமதிக்கும் ஒரு துளைச் சீர்மி. இத்தகைய நேரமைவு, திருகி மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆப்பு வினை வாயிலாக நடைபெறும்
'experiment : பரிசோதனை : அறிந்து கொண்ட சூழ்நிலைகளில் முடிவுகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் சோதனை அல்லது செய்முறை
experiment : (வானூ.) பரிசோதனை (அல்லது சோதனை) அறை :விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி
explosive : வெடி பொருள் : ஒரு விசையினால் உரக்க வெடிக்க கூடிய ஒரு பொருள் exponent : (தானி.) விசைக் குறி எண் : ஒர் எண்ணில் எத்தனை காரணிகள் உள்ளன என்பதை குறிக்க ஒரு கணித அளவில் வலது தலைப்பகுதியில் இடப்படும் சிறிய இலக்கம் அல்லது குறியீடு, எடுத்துக்காட்டாக: a4 என்பது a, a, a, a என்னும் நான்கு காரணிகளைக் கொண்டது exposure (ஒளி) ஒளிபடர் நேரம்: ஒளிப்பட சுருளில் ஒளிபடரும் மொத்த நேரத்தின் அளவு,இது ஒளித்திரையின் ஊடுருவும் திறன், கால நீட்சி, வடிவளவு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது
exposure meter : (ஒளி.) ஒளி படர் நேரமானி: ஒளிப்படச் சுருளில் சரியான அளவு ஒளிபடர் நேரத்தைக் காட்டுகின்ற ஒரு சாதனம்
extended type : (அச்சு.) நீட்சி அச்செழுத்துரு : கூடுதலான அகலமுடைய அச்செழுத்துரு.
extension bit : (மின்.) நீட்சி வெட்டிரும்பு: சற்று நீண்ட தண்டுடைய ஒரு வெட்டிரும்பு. வழக்க மான வெட்டிரும்பினைப் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்தல்லாம்.
extension cord : (மின்.) நீட்சிவடம் : தேவையான இடத்திற்கு மிக அருகில் விளக்கினை அல்லது மின்விசையினைக் கொண்டு வருவதற்கு ஒரு செருகியை அல்லது குதை குழியை உடைய ஒரு கம்பி அல்லது விளக்கு வடம்
extension tap : (எந்.) : நீட்சிகுழாய்: எட்டுவதற்குக் கடினமான இடங்களில் குழாய் அமைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் சற்று நீண்ட தண்டுடைய ஒரு குழாய்.
extensometer : நீட்சிமானி : (1) உடலின் விரிவாக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு நுட்பக் கருவி (2) உலோகங்களைச் சோதனை செய்வதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
exterior : (க.க.) புறத்தோற்றம் : ஒரு கட்டிடத்தின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்புறத் தோற்றம்; புறச்சுவர்
exterier finish:(வண்,)புறஅலங்காரம்:புறத்தோற்றத்திற்குப் பொருத்தமான அலங்கார வேலைப்பாடு
external aileron (வானு.) புற ஓர மடக்கு:ஒரு விமானத்தின் சிறகுப் பரப்புக்ளுக்குபம் புறத்தே, ஆனால் பக்கவாட்டில் திருப்பு வதற்காக அவற்றுடன் இணைக் கப்பட்டுள்ள ஒரு தனி காற்றழுத்தத் தளம்
external circuit : (மின்.) புறமின்சுற்று : மின்னோட்ட ஆதாரத்திற்கு வெளியேயுள்ள ஒரு மின்சுற்றின் பகுதி
external drag wire : (வானூ.) புற இழுவைக் கம்பி : விமானத்தின் கட்டுமானச் சட்டத்திற்கு அல்லது பிற உறுப்புகளுக்குச் சிறகிலிருந்து செல்லும் ஒர் இழுவைக் கம்பி
external thread:(எ.ந்) புற இழை: ஒரு திருகின் அல்லது மரையாணியின் வெளியேயுள்ள இழை
extra condensed : (அச்சு.) அதிகம் குறுகிய: சராசரி அளவை விடச் சற்றுக் குறுகிய முகப்பினையுடைய அச்செழுத்து
extrados: (க.க.) வெளி வளைவு: வளை முகட்டின் வெளிப்புற வளைவு
'extrusion: (குழை.) புற உந்துப் பொருள்: வெப்பமூட்டி, அழுத்த மூட்டுவதன் மூலம் குருணை வடிவக் கூட்டுப் பொருளைத் திரவ மாக்கி, ஒரு துவாரத்தின் வழியாகச் செலுத்தி, குழாய், தகடு, சலாகை போன்றவற்றின் வடிவில் உருவாக்கம் செய்தல்
extrusion of metal : (உலோ. வே.) உலோகப் புற உந்து : உலோகத்தைத் தேவையான வடிவத்திற்கு உருவாக்கம் செய்வதற்காக ஒரு துவாரத்தின் வழியாக அதிக அழுத்தத்தில் சூடான அல்லது குளிரான உலோகத்தைச் செலுத்தும் செய்முறை.
eyebolt : (எந்.) கண் மரையாணி: ஒரு முனையில் வழக்கமான
©>==
கண் மரையாணி
கொண்டைக்குப் பதிலாக, ஒரு துவாரத்தை அல்லது கண்ணை உடைய மரையாணி.இந்த கண்ணில் மரையாணின் விசையினைத் தாங்கும் ஒரு பிணைப்பூசி, குமிழ்முனை பொருத்தப்பட்டிருக்கும்
fabricate : (குழை.) உருவாக்கம் : ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி
முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல்
fabrication : (பொறி.) உருவாக்கம் செய்தல் : பல பொருட்களை ஒன்றாக இணைத்து உருவாக்கம் செய்தல். உதாரணமாக, ஒரு கப்பலை அல்லது ஒரு பாலத்தை உருவாக்குதல்
fabric universal joint : (தானி.) பொதுமுறைக் கட்டிணைப்பு மூட்டு : இது குறுகிய சுழல் தண்டுகளுக்கும், நெருக்கமான கண்டங்களின் இணைப்புக்கும் மிகவும் ஏற்புடையது. எனினும், சிலசமயம் இது அனுப்பீட்டு அச்சுக்கும் மின்அச்சுக்குமிடையிலும் பயன்படுத்தப்படுகிறது
facade : (க.க.) கட்டிட முகப்பு : ஒரு கட்டிடத்தின் முகப்புத்தோற்றம் அல்லது புறத்தோற்றம்
face : (எந்.) முகப்பு : (1) மெருகேற்றப்படும் வார்ப்படத்தின் முகப்பு (2) பல்லிணைச் சக்கரத்தின் முகப்பு, அதன் பல்லின் அகலத்தைக் காட்டும்; (3) கப்பி வார்ப் பட்டையின் முகப்பு; (4) வெளி விளிம்பின் அகலம்; (5) அச்சுருவின் எழுத்து வடிவப் பாணி; (6) கடைசல் மையங்களுக்கிடையிலான முகப்பு முனை
facebrick : (க.க.) முகப்புச் செங்கல் : சுவர்களின் எடுப்பான் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தரமான செங்கல்
face hammer : (க.க.) முகப்புச் சுத்தி : கரடுமுரடான கற்செதுக்கு வேலைகளுக்குப் பயன்படும் சுத்தி. இதில் ஒரு முனை மொட்டையாகவும், இன்னொரு முனை வெட்டு முனையாகவும் இருக்கும்
face lathe : (எந்.) முகப்புக் கடைசல் எந்திரம் : பெரிய, தட்டையான மேற்பரப்புகளை எந்திரத்தால் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள குறுகிய படுகையுள்ள ஆழ்ந்த இடைவெளியுள்ள எந்திரம்
face mark : (மர.வே.) முகப்புக்குறி : வேலைப்பாடு செய்யப்படும் மரத்துண்டின் ஒரு பரப்பின் மீது பொறிக்கப்படும் குறி. இந்த அடையாளக் குறியினைக் கொண்டு, அதனை முகப்பு என அறிந்து, அதிலிருந்து மற்ற முகப்புகள் உருவாக்கப்படும்
face mould :(க.க.) முகப்பு வார்ப்படம் : சாய்ந்து செல்லும் கைபிடிக்கிராதியின் மேற்பகுதியின் உண்மையான பரிமாணத்தைக் காட்டும்
face plate or face chuck : முகப்புத் தகடு அல்லது முகப்பு ஏந்தமைவு : ஒரு கடைசல் எந்திரத்
facet : பட்டை தீட்டிய முகப்பு : நவமணிகளில் பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு
facilitate : எளிதாக்கு : எளிதாக அல்லது முழுமையாக இயங்குவதற்கு உதவிபுரிதல்
facing : (வார்.) முகப்பமைத்தல் : வார்ப்படத்திலிருந்து ஒரு தோரணியை அகற்றிய பின்பு காரீயம், அப்பிரகம் போன்ற முகப்புப் பொருளைக் கொண்டு சிறிய வழுவழுப்பான வார்ப்பு வேலைகளைச் செய்தல்
facsimile : உருவ நேர்ப்படி : எழுத்து மட்டுமின்றி வடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் காட்டும் நேர் படி உருப்பகர்ப்பு
facsimile transmission : (மின்.) உருவ நேர்ப்படி அனுப்பீடு : தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி படத்தின் நிழல்ஒளிக்கூறுகளைத் தனித்தனியே பகுத்து, திரையில் தோன்றும் வகையில் நிழல் கூறுகளை மின்னியல் தூண்டுதல்களாக மாற்றுதல்
factor of safety : காப்புக் கரணி : உறுதிப்பாட்டுக்கும் உயர்வெல்லைப் பாரத்துக்கும் இடையேயுள்ள வீத அளவு
fade in : உருத்தோற்றம் : தொலைக் காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்களை படிப்படியாக உருவாகுமாறு செய்தல்
fade out : உருவ மறைவு : தொலைக்காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்கள் படிப்படியாக தேய்ந்து மறையுமாறு செய்தல்
fading : (மின்.) குன்றல் : வானொலியில், வாயுமண்டலச் சூழ்நிலைகளினால் சைகை வலிமை தற்காலிகமாக மாற்றமடைதல்
fagot : எஃகுக் கம்பிக்கற்றை : சூடாக்கி, கத்தியால் அடித்து, வேறொரு சலாகையாக மாற்று வதற்காக ஒன்று சேர்த்துக் கூட்டப்படும் எஃகுக் கம்பிகளின் கற்றை
fahlum metal : (உலோ.) ஃபாஹ்லம் உலோகம் : மலிவான அணிகலன்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு வெண்ணிற உலோகக் கலவை. இதில் 40% வெள்ளீயமும், 60% ஈயமும் கலந்திருக்கும்
fahrenheit :ஃபாரன்ஹீட் : ஜெர்மன் இயற்பியலறிஞர் கேப்ரிய்ல் ஃபாரன்ஹீட், உறை நிலை 32° ஆகவும், கொதிநிலை 212 ஆகவும் கொண்ட வெப்பமானி இவருடைய பெயரில் அழைக்கப்படுகிறது
faience : ஒப்பனை மண்பாண்டம் : சித்திர வேலைப்பாடுகளுடன் ஒப்பனை செய்யப்பட்ட பீங்கான் மண்பாண்டங்கள்
failure : தளர்வு : பொருட்களும், கட்டமைவுகளும் எந்தப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டனவோ அந்தப் பணிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்வுறுதல்
fairing : (வானூ.) நேரொழுங்கமைப்பு : விமானத்திற்குரிய மேற்பரப்பில் நேரொழுங்கமைதிப்படுத்த இணைக்கப்பட்டுள்ள பளுவற்ற மழமழப்பான புறக்கட்டமைப்புப்பகுதி
fald stool : சாய்வு மேசை : முழங்காற் படியிடுவதற்குரிய அசைவியக்கமுள்ள சாய்வு மேசை.மடிக்கக்கூடிய கையில்லா நாற்காலியையும் குறிக்கும் false key : போலி இருசாணி : ஒரு பாதி ஒரு கதிரின் முனையிலும் இன்னொரு பாதி குமிழாகவும் துரப்பணம் செய்யப்பட்டுள்ள ஒரு துவாரத்தினுள் செலுத்தப்படும் ஒரு வட்ட வடிவமுளை
false rafter : (க.க.) போலி இறை வாரக்கை : ஓர் எழுதகத்தின் மேலுள்ள பிரதான வாரக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறுகிய விரிவாக்கம்
falsh wing rib : (வானூ.)இறக்கைக் குறுக்குக் கை : முழுமையற்ற குறுக்குத் கை. இது, விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் வளைவு கூர்மையாக இருக்கும் இடத்தில் சிறகின் வடிவத்தைப் பராமரித்து வருவதற்கு உதவப் பயன்படுத்தப்படும் முன்புறக் கழிக்கு முனைப்பு முனையிலிருந்து நீண்டு செல்லும் மரத்துண்டினை மட்டும் கொண்டுள்ளதாக இருக்கும்
false work : (பொறி.) போலிச்சட்டகம் : கட்டுமானத்தை முடிவுறுத்துவதற்குப் பயன்படும் தற்காலிகச் சட்டகம் அல்லது ஆதாரம்
family : (அச்சு.) அச்செழுத்துக் குடும்பம் : பல்வேறு வடிவளவுகளிலுள்ள முகப்புகள் கொண்ட தொடர்புடைய அச்செழுத்துக்களை வகைப்படுத்துதல்
fan belt : (தாணி.) விசிறி வார்ப்பட்டை : குளிர்விக்கும் விசிறி, மின்னாக்கி, நீரேற்றும் எந்திரம் ஆகியவற்றை இயக்குவதற்கான வார்ப்பட்டை
fan blower : ஊது விசிறி : காற்றோட்டத்தை உண்டாக்குவதற்கான சுழல் விசிறி. வேதியியற் பொருட்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகைகளை வெளியேற்றுவதற்கும் இது பயன்படுகிறது
fancy rule : (அச்சு.) சித்திர இடைவரித் தகடு : பல்வேறு சித்திர வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பித்தளை இடைவரித் தகடு
fan dango : கட்டுமான அட்டை : புத்தகங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் அட்டையின் வாணிகப் பெயர்
fan bolt : (பொறி.) விசிறி மரையாணி : வெட் டு மரத்துடன் இரும்பு வேலைப்பாட்டினை இணைத்திடப் பயன்படும் மரையாணி. இந்த மரையாணி, மரத்தைக் கல்விக் கொள்வதற்கேற்பப் பற்களைக் கொண்டிருக்கும்
fan out : (அச்சு.) விசிறிப் பிரிப்பு : அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்காகத் தாள்களைத் தனித் தனியாகப் பிரித்திடும் முறை
fan pulley : (தானி.) விசிறிக்கப்பி : விசிறியை இயக்கும் வார்ப்பட்டையை முடுக்கிவிடுவதற்காக, விசிறியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கப்பி. உந்து வண்டிகளில் காற்றோட்டம்- உண்டாக்குவதற்கும், மின்னாக்கியைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது
farad : (மின்.) ஃபாரட் : மின்திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. ஒரு ஃபாரட் திறனுள்ள கொண்மியில், ஒரு கூலோம் அளவின் மூலம் ஒரு ஓல்ட் மின்னழுத்தத் திறன் ஏற்றப்படும். நடைமுறைப் பணிகளில் இது மிகப் பெரிய அலகு. இது 'நுண்ஃபாரட்' அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது
faraday, michael : ஃபாரடே, மைக்கேல், (1791-1867) : ஆங்கி லேய விஞ்ஞானி; மின்மாற்றிகளைக் கண்டுபிடிப்பதில் முதல் ஆராய்ச்சிகள் செய்தவர்
faraday's laws of electrolysis : ஃபாரடேயின் மின்பகுப்பாய்வு விதிகள் : (1) மின்பகுப்பாய்வுப் பொருட்களின் எடையானது,மின் பகுப்பரன் வழியாகச் செலுத்தப்படும் மின்விசையின் அளவின் வீத அளவில் இருக்கும் (2) ஒரு குறிப்பிட்ட அளவு மின் விசையைப் பொறுத்தவரையில், மின்பகுப்பாய்வுப் பொருட்களின் எடையானது, அப்பொருட்களின் மின்-எந்திரவியல் நிகர் எண்களின் வீத அளவில் இருக்கும்
farmers’ drill : (உலோ;வே.) உழவர் துரப்பணம் : நேர்மட்டமான, புல்லாங்குழல் வடிவான திருகு துரப்பணம். இது மென்மையான உலோகங்களில் பயன்படுத்த உதவுகிறது
fasces : சலாகைக்காட்டுச் சின்னம் : கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச் சின்னம். இது பண்டைய ரோமாபுரியில் உயர் நடுவரின் அதிகாரச் சின்னம்
fascia : (க.க.) மதிற்சிற்பம் :மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பத் தொகுதி
fascicle : தொகுதி : தனியாக வெளியிடப்படும், ஒரு நூலின் பல பகுதிகளில் ஒன்று
fast charger : (தானி.) விரைவு மின்னேற்றம் : உந்து வண்டியில் சேம மின்கலத்தில் அரைமணி நேரத்திற்குள்ளாக விரைவாக மின்னேற்றுவதற்கான ஒரு மின்சாதனம்
fast pulley : விரைவுக் கப்பி : சுழல் தண்டுடன் ஒரு சாய்வுத் திருகு மூலம் இணைக்கப்படும் ஒருகம்பி, இது இயக்கத்தை அனுப்பீடு செய்ய உதவுகிறது
fastening :(எந்.) கட்டிறுக்குதல் : மரையாணிகள், திருகாணிகள் போன்ற இறுகப்பற்றி இறுக்கக் கூடிய சாதனங்கள்
fat : (1) பசைக்களிமண் : பசைமிக்க களிமண் வகை (2) கொழுப்புப் பசை : கொழுப்பு நிறைந்த வேதியியற் பொருள். இது பெரும்பாலும் ஒலயிக், ஸ்டிபரிக், பால்மிட்டிக் போன்ற அமிலத் தன்மை வாய்ந்தது (3) திண்அச்சுரு : திண்ணியதான அச்சுரு. படங்கள் வெற்றுக்கோடுகள், இடைவெளியிடங்கள் உடையது
fathon : கடல் ஆழ அளவு : கடலின் ஆழத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் அலகு. இந்த அலகு ஆறு அடி அளவு அல்லது 1.828 மீட்டர் அளவுடையது
fatigue of material : பொருளயர்ச்சி : பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளில் ஏற்படும் நலிவு. இவ்வாறு நலிவுறுவதால் அப்பொருள் முன்பு பாதுகாப்பாகத் தாங்கிய பளுவினை ஏற்றும் போது முறிந்து போகும்
fat spark : (தானி.) தடித்த அனற்பொறி : குள்ளமாகவும் தடிமனாகவும் உள்ள மூட்ட அனற்பொறி
faucet : (கம்.) திறப்படைப்புக் குழாய் : திரவங்கள் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்குரிய திறப்பும் அடைபட|ம உடைய குழாய்
faun : (க.க.) ஆடு-மனித உருவம் : பாதி ஆட்டின் உடலும், பாதி மனித உடலும் கொண்ட பண்டைய ரோமாபுரிச் சிறு தெய்வத்தின் உருவம். இது அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது
fauteuil : கைநாற்காலி : 18ஆம் நூற்றாண்டு பாணியில் அமைந்த நாடக அரங்குகளில் பயன்படுத்தப்படும் நாற்காலி
favus : (க.க.) சித்திர வேலை : தேன்கூடு போன்று செய்யப்படும் வண்ணப் பின்னல் சித்திர வேலைப்பாடு
feather : (வானூ.) சுழல் இறகு : விமானத்தில் சுழலும் வகையில் அமைந்த இறகு அமைப்பு.விமானத்தில் இறக்கை முனையிலிருந்து இறக்கை முனையளவான இடையகலச் சுருணையைச் சுற்றி இறகு அலகினை ஊசலாடச் செய்வதன் மூலம் அந்த அலகின் வீழ் தகவினைக் குறைக்கவும் கூட்டவும் செய்ய இது உதவுகிறது
feather or sunk key: (எந்.) வரி இருசாணி : எந்திரச் சுழல் தண்டின் ஓர் அங்கமாக அமைந்திருக்குமாறு அச்சுழல் தண்டின் உட்புழையில் ஒரு பகுதி புதைந்துள்ள ஓர் இணையான இரு சாணி. சுழல் தண்டின்மீது இந்த இருசாணி நீளவாக்கில் செல்லும் வகையில் சுழல் தண்டில் வழி அமைக்கப்பட்டிருக்கும்
feather edge : ஆப்புமுனை : ஆப்பு வடிவில் அமைந்துள்ள கூர்முனை
feed : (அச்சு.) ஊட்டு : (1) அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்காக ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள் (2) எந்திரங்களுக்கு எரிபொருளுட்டுதல்
feed-back coil : பின்னூட்டச்சுருள் : ஒரு வெற்றிடக் குழாயின் தகட்டு மின் சுற்றில் இணைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள். இது அந்த மின்சுற்றிலிருந்து அதே குழாயின் இணைப்பு மின்சுற்றுக்கு மின் விசையை மீண்டும் செலுத்துவதற்கு அல்லது பின்னூட்டம் செய்வதற்குப் பயன்படுகிறது
feed back :(தானி.) யின்னூட்டம் : ஓர் எந்திரத்தின் வெளிப்பாட்டி இருந்து அதன் உட்பாட்டிற்குத் திரும்பிவரும் அளவீடுகள் போன்ற தகவல்கள.
feed edge : (அச்சு.) ஊட்டுமுனை : அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தாளின் முன் பகுதி முனை
feeder : (மின்.) (1) ஊட்டுகருவி : கிளை மின்சுற்றுகளுக்கு மின்விசையைக் கொண்டு செல்லும் கருவி. 2) ஊட்டுவோர் : அச்சு எந்திரத்தினுள் தாள்களைச் சீராகச் செலுத்துபவர் (3) ஊட்டி : அச்சு எந்திரத்தினுள் தாளினை ஒரே சீராகச் செலுத்தும் சாதனம்
feed gears : (எந்.) ஊட்டுப் பல்லிணை : ஊட்டுச் சலாகையினை இயக்கி, ஊட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பல்லிணைகள்
feed guides : (அச்சு.), ஊட்டு நிலைப்படுத்தி : அச்சு எந்திரத்தினுள் செலுத்தப்படும் தாளினை அச்சிடுவதற்கேற்ற நிலைக்குக் கொண்டுவரும் சாதனங்கள்
feeding :(அச்சு.) ஊட்டுதல் : அச்சு எந்திரத்தினுள் தாள்களை ஒழுங்கு நிலையுடன் செலுத்தல்
feed mechanism : (எந்.)ஊட்டுப் பொறியமைவு : எந்திரத்திற்குள் தேவையான பொருட்களைச் செலுத்துவதற்குப் பயன்படும் பொறியமைவு
feed pipe : (கம்.) ஊட்டக் குழாய் : பிரதானக் குழாயிலிருந்து பயன்படுத்தப்படும் இடத்திற்குப் பொருட்களை நேரடியாகக் கொண்டு செல்லும் குழாய்
feed screw : ஊட்டுத் திருகு : ஓர் எந்திரத்தின் வெட்டுக் கருவிக்கு ஊட்டுப் பொருளைச் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் திருகு
feed water heater : ஊட்டுநீர் அடுப்பு : ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் செலுத்தப்படும் நீரினைச் சூடாக்குவதற்கான ஒரு கொதிகலன்
feeler: உணர்விக்கடிகை : வேலைப்பாடு செய்யவேண்டிய ஒரு பொருளின் வடிவளவைக் கண்டறிவதற்கான ஒரு கருவி. தொடு உணர்வின் தன்மையைப் பொறுத்து இந்தச் சோதனையின் துல்லியம் அமையும்
feeler : (உலோ.) உணரிழை : அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் துல்லியமாக அமைக்கப்பட்ட நுண்ணிய உலோக இழை
feet : (அச்சு.) ஆதாரப் பகுதி : அச்சு எழுத்தினைத் தாங்குவதற்காக அதன் உடற்பகுதியின் அடியிலுள்ள இருபகுதிகள்
feldspar : (வேதி.) களிமம் : பொட்டாசியம், சோடியம், கால்சியம் ஆகியவற்றுடன் அலுமினியம் சிலிக்கேட்டுகள் கொண்ட பாறையின் பெரும்பான்மைக்கூறு
felloe or felly : புறவட்டம் : ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறச்சுற்று வட்டப்பகுதி
felt papers : (க.க) ஒட்டுக் காகிதங்கள் : ஈரம், வெப்பம், குளிர் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக முகடுகளிலும், பக்கச்சுவர்களிலும் ஒட்டப்படும் கவசத் தாள்கள்
felt side of paper : காகித ஒட்டுப் பக்கம் : காகிதத்தின் ஒரு பக்கத்தில் கம்பியின் அல்லது திரையின் கரைபடாமலிருப்பதற்காக அக்காகிதத்தில் செய்யப்படும் மெருகு வேலை
female : புழை : கருவியின் புற| முனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாக அமைந்துள்ள புழை
female screw : புரியாணி மரை : திருகாணி செல்வதற்கிசைவான புழையுள்ள மரை
famale thread : உட்புழைத் திருகிழை : ஒரு துவாரத்தினுள் அல்லது உட்புழையுள்ள பரப்பில் வெட்டப்படும் திருகிழை
fence : (மர.வே.) எந்திரக் காப்பு : வாள்கொண்டு அறுக்கும் வட்ட வடிவ எந்திரத்தில் தற்காப்புக்காக அமைக்கப்படும் உலோகச் சலாகை அல்லது பட்டை
fender : தடுப்புக்காப்பு : (1) திறந்த தீமூட்டத்திலிருந்து தரையினைப் பாதுகாப்பதற்காக அலங்காரமாக அமைந்த உலோகச் சலாகை (2) உந்து வண்டிகளில் சக்கரங்கள் நீரை அல்லது சேற்றை இறைக்காமல் தடுப்பதற்கான காப்பு (3) அச்சு எந்திரத்தில், ஊட்டும் தாள்கள் நழுவி விழுந்து விடாமல் சமணத் தகட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பு அட்டை
fenestral : (க.க.) காப்புச் சட்டகம் : பண்டைக் காலத்தில் பலகணிக் கண்ணாடிகள் இல்லாதிருந்தபோது, காற்றிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பதற்காக பசைக் காகிதம் அல்லது மெல்லிய துணி ஒட்டப்பட்ட ஒரு சட்டகம்
fenestration : (க.க.)சாளர வரிசை : ஒரு கட்டிடத்தின் சாளரங்களின் ஒழுங்கு வரிசை
feretory : (க.க.) பள்ளிப்படை : திருத்தொண்டர்களின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில் fermentation : (வேதி.) நொதித்தல் : உயிரிகள் அல்லது வேதியியல் காரணிகள் மூலமாக ஒரு கரிமக் கூட்டுப் பொருளை வேதியியல் முறைப்படி சிதைவுறச் செய்தல்
fermi, enrico : (மின்.) ஃபெர்மி, என்ரிக்கோ (1901-1954) : இத்தாலிய அமெரிக்க விஞ்ஞானி; 1942இல் முதலாவது அணுவியல் தொடர் விளைவினை உண்டாக்குவதில் முக்கிய பங்கு கொண்டவர்; 1938இல் நோபல் பரிசு பெற்றவர்
feron : (வேதி.) ஃபெரோன் : (F12) குளிரால் உறை பதனம் ஊட்டும் பொருளாகப் பயன்படும் டைக்ளோடைஃபுளுரோமீத்தேன்
ferric oxide : (மின்.) அயஆக்சைடு : ஒலிப்பதிவு நாடாக்களில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் காந்தத் தன்மையுடைய அய ஆக்சைடு
ferrite : (மின்.) ஃபெர்ரைட் : இரும்பு மற்றும் நிக்கல், துத்த நாகம், மாங்கனிஸ் போன்ற பிற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தத் தன்மை வாய்ந்த பொருள். கம்பிச் சுருள்களுக்கான ஃபெர்ரைட் உட்புரி தயாரிக்கப்பயன்படுகிறது
ferrite core : (மின்.) ஃபெர்ரைட் உட்புரி : ஃபெர்ரைட்லிருந்து தயாரிக்கப்படும் காந்த உட்புரி
ferrochromium : (உலோ.) அயக்குரோமியம் : இது குரோமியமும் இரும்பும் கலந்த உலோகக்கலவை. எஃகுகளைத் தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதில் 5% கார்பன் கலந்திருக்கிறது. இது கருவிகளும், உந்து வண்டிகளுக்கான எஃகும் தயாரிக்கப் பயன்படுகிறது
ferromanganese : (உலோ.) அயமாங்கனீஸ் : 20% முதல் 80% வரையிலான மாங்கனீசும், 5% முதல் 7% வரையிலான கார்பனும் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை. இது ஆக்சிகரணத்தை நீக்கும் கார்ன்ரியாக்ச் செயற்பட்டு, மிகையான கந்தகத்தின் பாதிப்பை நீக்குகிறது
ferro-magnetic : (மின்.) நேர்காந்தத் திறம் : ஒன்றுக்குமேல் கணிசமான அளவு ஊடுருவும் திறன் பெற்ற ஒரு பொருளின் பண்பு. கோபால்ட், இரும்பு, நிக்கல், எஃகு போன்ற் உலோகங்களும், இவற்றின் உலோகக் கலவைகளும் இந்தப் பண்பு உடையவை
ferro-nickel : (உலோ.) அயநிக்கல் : இது நிக்கலும் எஃகும் கலந்த உலோகக் கலவை. இது தடை மாற்றிகளும், மின் கம்பிச் சுருள்களும் தயாரிக்கப் பயன்படுகிறது
ferro-phosphorous : (உலோ.) அயஃபாஸ்வரம் : அதிக அளவு ஃபாஸ்வரம் கலந்துள்ள ஒருவகை இரும்பு. தகரத் தகடுகளுக்கான எஃகு தயாரிக்கப்படுகிறது
ferro-silicon : (உலோ.) அயசிலிக்கன் : கடினமான எஃகு. இதில் 97.6% இரும்பும், 2% சிலிக்கனும், 0.4% கார்பனும் அடங்கியிருக்கும்
ferro-typing : (ஒளி.) அயஒளிப்பட முறை : மெல்லிய இரும்புத் தகட்டின்மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால ஒளிப்படமுறை
ferrous : (வேதி.) அயக : இரும்புக் கூட்டுப் பொருட்கள் அடங்கிய பொருட்கள்
ferrule : (எந்.) உலோகப் பூண் : மரக்கருவிகளின் முளை உடைந்து விடாமல் காப்பதற்கெனப் பொருத்தப்படும் வளைய வடிவ உலோகப் பூண்
ஒரு குழாயின் உட்பகுதியைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்படும் முகப்புப் பூண்
fertilizer : (வேதி.) உரம் : மண் வளத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதியியற் பொருட்களின் கலவை
festoon : (க.க.) தோரணம் : மலர் மாலைகள், மலர் வளையங்கள், பசும் இலைகள் இவற்றைக் கொண்டு அலங்காரமாகக் கட்டப்படும் தோரணங்கள்
f-head engine : (தானி.) எஃப்-முகப்பு எஞ்சின் : எல்-முகப்பும், ஐ-முகப்பும் இணைந்த எஞ்சின், இதில் உள்ளிழுப்பு ஓரதர்கள் மேற்பகுதியிலும், வெளியேற்று ஓரதர்கள் நீள் உருளைத் தொகுதியிலும் அமைந்திருக்கும்.இந்த வகை எஞ்சின்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை
fiber: இழை/இழைமம் : நூற்பதற்கும் நெசவு செய்வதற்கும் ஏற்ற கடினமான இழை
fiber-glass : (குழை.) கண்ணாடி இழை : கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள்
fibrous : இழைமத் தன்மையதான : உலோகங்களுக்குள்ள இழைமைத் தன்மை; இது குருணை இயல்பிலிருந்து மாறுபட்டது
fibrous tissue : (உயி.) நார்ப்பொருள் திசு : உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளை இணைத்திடும் வெள்ளை நிற நாரியற் பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையைச் சீர்படுத்திக் காயத்தை ஆற்றுவதும், காயம்பட்ட இடத்தில் வடு ஏற்படுவதற்கும் இதுவேகாரணம். மஞ்சள் நார்ப் பொருள் திசுவும் இது போன்றதே, ஆனால் இது மிகுந்த நெகிழ்திறனுடையது; இரத்த நாளங்களின் தமனி சுவர்களில் இது உள்ளது
fiddle back : பிடில் முதுகு நாற்காலி : வாத்தியக் கருவியின் வடிவில் முதுகுப் பகுதியைக் கொண்ட ஒரு வகை நாற்காலி
fidelity : (மின்.) முற்றுருப் படிவாக்கம் : மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல்
field : (மின்.) புலம் : (1) மின்காந்த ஆற்றல் களம் (2) தொலைக்காட்சியில், இறுதிப்படத்தின் ஒரு பகுதியாக அமையும் நுண்ணாய்வு வரிகளின் ஒரு தொகுதி. இப்போதையத் தர அளவுகளின்படி, மாற்று வரி களைக்கொண்ட இரு புலங்களில் படங்கள் அனுப்பப்படுகின்றன. வினாடிக்கு 30 முழுமையான படங்கள் உருவாகும் வகையில் 525 வரிகள் கொண்ட படம் அமைகிறது
field book : (மின்.) களப்புத்தகம் : பொறியாளர்களும், மற்றவர்களும் பணிபற்றிய குறிப்புகள் எழுதுவதற்குப் பயன்படுத்தும் ஒரு புத்தகம்
field coil : (மின்.) புலச் சுருள் : ஒர் இயக்கத்தின் அல்லது மின்னாக்கியின் புலக்காந்தங்களை அல்லது துருவத் துண்டுகளைச் சுற்றி அமைந்துள்ள சுருள் அல்லது சுற்றுச்சுருள்
field core : (மின்.) புல மையம் : ஒரு மின்னாக்கியின் அல்லது இயக்கியின் புலச்சுருள் சுற்றப்படுகிற இரும்பு நீட்சி field density :(மின்.) புல அடர்த்தி : காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள திருப்பங்களின் எண்ணிக்கை, துருவத்துண்டுகளின் வடிவளவு, பண்பியல்புகள் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்
field distortion : (மின்.) புலத்திரிபு : ஒரு மின்னாக்கியில், மின் காந்த வடதுருவத்திற்கும் தென் துருவத்திற்குமிடையில் மின்னகச் சுருணைகளில் உண்டாகும் எதிர் மின்னியக்க விசையின் காரணமாக சாதாரணப் புலத்தில் ஏற்படும் திரிபு
field excitation : (மின்.) புலக்கிளர்ச்சி : ஒரு மின் காந்தத்தில் சுருணையின் வழியாக ஒர் இரும்புத்துண்டினைச் செலுத்தி மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் காந்த விளைவு
field frequency : புல அலை வெண் : காந்தப்புலத்தில் அடுக்கு நிகழ்வு வேகம், இப்போதுள்ள தொலைக்காட்சி அமைப்பு முறையில், இது வினாடிக்கு 6 புலங்கள் என்ற வேகத்தில் அமைந்திருக்கும்
field magnets : (மின்.) புலக் காந்தம் : ஒரு நேர்மின்னாக்கியில் காந்தப்புல விசையை உண்டாக்கப் பயன்படும் மின்காந்தம்
field resistance : (மின்.) புலத் தடை : புலச்சுருணைகளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் அளவினைக் கட்டுப்படுத்துவதற்காக புலச் சுருள்களுடன் வரிசையாக இணைக்கப்பட்டுள்ள தடை
field rheostat : (மின்.) புலத் தடை மாற்றி : ஒரு மின்னாக்கியின் உற்பத்தி அளவினைக் கட்டுப்படுத்துவதற்காக புலமின் சுற்றில் செருகப்பட்டுள்ள குறைந்த மின்னோட்டத் திறன் கொண்ட மாறுநிலை மிகைத் தடை
field strength : (மின்.) புல வலிமை : ஒரு குறிப்பிட்ட தொலைவிலும், திசையிலும் ஒரு மின்புலத்தின் வலிமையை அளவிடுதல். இது ஒரு மீட்டருக்கு இதனை ஒல்ட்ஸ் என்று கணக்கிடப்படும்
field voltage control : (தானி. மின்.) புலமின்னழுத்தக் கட்டுப்பாடு : மின்னாக்கியின் புலச்சுருணையில் செலுத்தப்படும் மின்னழுத்ததினைக் கட்டுப்படுத்தும் முறை. பொதுவாக, இது அதிர்வு மின்னழுத்தத்தாலும், தடையினாலும் செய்யப்படுகிறது. இதனால், மின்னாக்கியின் உற்பத்தியளவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்கலாம்
field winding : புலச் சுருணை : மின்காந்தப்புலம் ஏற்படுத்துவதற்காக இயக்கிகள், மின்னாக்கிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்தங்கள்
fifth wheel : ஐந்தாம் சக்கரம் : ஒரு வாகனில் அல்லது அது போன்ற ஊர்தியிலுள்ள கிடைமட்டத் தட்டையான்தாங்கி திருப்பங்களில் திரும்பும்போது உந்து வண்டியின் உடற்பகுதியின் நிலைக்கேற்ப அச்சின் நிலையைக் கொண்டு வருவதற்கு இது அனுமதிக்கிறது
filament : இழை : மெல்லிய கம்பி அல்லது இழை.பிளாஸ்டிக் தொழில், பிசினிலான அல்லது கண்ணாடியாலான ஓர் இழை
filament transformer : இழை மின்மாற்றி : வானொயில், வானொலிக் குழாய்களின் இழைகளுக்கு அல்லது சூடேற்றிகளுக்குச் சீரான அளவு மின்னழுத்தத்தைச் செலுத்துவதற்கு மின்னழுத்த அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் மின்மாற்றி
filament voltage : (மின்.) இழை மின்னழுத்தம் : ஓர் எலெக்ட்ரான் குழலின் வெப்ப மூட்டிகளுக்கு அல்லது இழைகளுக்குத் தேவைப்படும் மின்னழுத்தம். இதன் மதிப்பளவு, முதல் எண் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6BE6 என்பதற்கு 6.3 ஓல்ட் இழை மின்னழுத்தம் தேவை
filament winding : (மின்.) இழைச் சுருளை : வெற்றிடக் குழல்களுக்குத் துல்லியமான இழை மின்னழுத்தங்களை வழங்குவதற்கு ஒரு மின் மாற்றியிலுள்ள சுருணை
file/அரம் : அராவுவதற்காகப் பல்வேறு வடிவளவுகளில் அமைந்த கடினமான எஃகுக் கருவி. இதனைக் கொண்டு மரத்தை அல்லது உலோகத்தை அரா மழமழப்பாக்கலாம்.அரத்தைக் கொண்டு அராவுதல் பளபளப்பாக்குதல், சமனப்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கும்
file card : அராவு சிக்குவாரி : குறுகிய நுண்ணிய கம்பிகள் பொருத்தப்பட்ட ஒரு வகைத் தூரிகை. இது அரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுகிறது
file hard : (உலோ.) அராவ இயலாக் கடினம் : அராவ இயலாத அளவுக்குக் கடினமாகவுள்ள ஓர் உலோகம், "அராவ இயலாக் கடினத்தன்மை" வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
files, kinds of : (உலோ.) அரங்களின் வகை : அரங்கள், அவை பயன்படுத்தப்படும் நோக்கங்களுக்காகத் தனிவகையில் தயாரிக்கப்படுகின்றன; அவை அந்த நோக்கங்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சமன அரம், மழிப்பு அரம், இரண்டாம் வெட்டு அரம், மழமழப்பாக்கு அரம் என்று அழைக்கப்படுகின்றன
filigree : சரிகை சித்திரவேலை : தங்கத்திலும், வெள்ளியிலும் செய்யப்படும் நுட்பமான அலங்கார வேலைப்பாடு
filing : (உலோ.வே.) அராவு வேலைப்பாடு : அரத்தினைப் பயன்படுத்திப் பொருள்களை அகற்றுவதற்கோ, மெருகேற்றுவதற்கோ, பொருத்துவதற்கோ செய்யப்படும் வேலை
fill : (பொறி.) நிரப்பு வேலைப் பொருள் : பொறியியல் தாழ்வான பகுதியை தேவையான நிலைக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படும் பொருள்
filler : திண்பொருள் : (1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர்
(2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்தன்மையும், வலிமையும், விறைப்பும் அளிப்பதற்காகக் குழைமப் பொருளுடன் கலக்கப்படும் சீனக் களிமண், மரத்துள், கல்நார், முதலியவை
(3) மரவேலைப்பாட்டில் ஓவியம் தீட்டுவதற்கு அல்லது வண்ண மடிப்பதற்கு முன்பு அதிலுள்ள பள்ளங்களையும் துவாரங்களையும் அடைப்பதற்குப் பயன்படும் கலவைப் பொருள் filers : (பொறி.) அடைப்புப் பொருள் : பொறியியலில் வலிவுத்தட்டு பயன்படுத்தப்படாதபோது இரு உறுப்புகளைப் பிணைப்பதற்குப் பயன்படும் இடைவெளி அடைப்புப் பொருள்கள்
filler specks : (குழை.) அடைப்புக் கறைகள் : பிளாஸ்டிக் பிணைப்புகளில் பலவித வண்ணங்களில் காணப்படும் மரத்தூள், கல்நார் போன்ற அடைப்புப் பொருள்களினால் உண்டாகும் மாறுபட்ட வண்ணப்புள்ளிகள்
fillet : கட்டுமான வளைவிணைப்பு : ஒரு கோணத்தில் சந்திக்கும் இரு பரப்புகளை இணைக்கின்ற குழிவான வளைவு. இதில், கூர்மையான கோணம் தவிர்க்கப்படுவதால், வடிவமைப்புக்கு வலிவும் அழகும் கூடுகிறது
filling : நிரவுப் பொருள் : பருத்தித் துணிகளில் இடைப்பிறிதிட்டு நிரப்பிக் கலவை செய்யும் களிமண் அல்லது மாப்பொருள். இது துணிக்கு எடையும் விறைப்பும் அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது
filling in : (க.க.) இடை நிரப்பி : கட்டிடங்களில் முகப்புக்கும் பின் புறத்திற்குமிடையிலான சுவரின் மையத்தில் இட்டு நிரப்புவதற்கான அமைவு
fillister : சறுக்கு வழி : (1) பல கணிக் கண்ணாடியின் சறுக்குச் சட்டம் (2) ஒரு கொண்டைத் திருகின் நீள் உருளை வடித்தலைப் பகுதியில் திருப்புளி செல்வதற்கான வரிப் பள்ளம்
film : (குழை.) மென்படலம் : மெல்லிய பிளாஸ்டிக் படலம்
filter : (மின்.) வடிப்பான் : தூண்டுச் சுருள்களும் கொண்மிகளும் உடைய ஒரு சாதனம். இது பல்வேறு மின்னோட்டங்களைச் சீராக அமைக்கவும், ஒரு சில மாற்று மின்னோட்ட அலைவெண்களை அகற்றவோ செல்வதற்கு அனுமதிக்கவோ செய்கிறது
filter element : (தானி.) வடிகட்டும் பொருள் : உந்து வண்டிகளில் எண்ணெய் வடிப்பானிலுள்ள துணி போன்ற வடிகட்டும் பொருள். உந்துவண்டி எரிபொருளிலிருந்து தூசு, கசடு போன்ற அயற்பொருள்களை வடிகட்டி நீக்குவதற்குப் பயன்படுகிறது
filter paper : வடிகட்டு தாள் : வடிகட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படும் முற்றிலும் இழைகளினாலான காகிதம்
filtration of water : நீர் வடிகட்டும் முறை : குடிநீரை மணற்படுகைகளில் செலுத்தி மாசுப் பொருள்களை நீரிலிருந்து வடித்தெடுக்கும் முறை
fin : செதில் : (1) ஒரு பெரிய உலோகப் பகுதியில் பக்கத்தில் அல்லது விளிம்பில் ஏற்படுகின்ற நீர் போன்ற மெல்லிய விரிவாக்கப் படலம்
(2) வானூர்திப் பின்புறத்தின் நிமிர்நேர் விளிம்பு
(3) நிமிர் நேர் விளிம்புடைய தகடு
fine arts : நுண்கலைகள் : கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை போன்ற கவின் கலைகள்
fine feed :(எந்.) நுண்ணூட்டு : செப்பமற்ற ஊட்டுக்கு எதிர்மாறானது. அளவில் மிக நுண்ணிய ஊட்டு
fineness ratio : (வானூ.} நுண்மை விகிதம் : விண்வெளிக்கலத்தின் உடற்பகுதி போன்ற ஓர் இழைவரி உடற்பகுதியின் பெரு மளவு விட்டத்திற்கும் நீளத்திற்கு மிடையிலான விகிதம்.
fine pitch : நுண் இடைவெளியளவு : சிறிய பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை அல்லது ஓர் அங்குலத்தில் மிக அதிக அளவில் இழைகள் கொண்ட திருகு
fines : (குழை) நுண்துகள்கள் : நுண்படிகளில் சிறுகச் சிறுக மாற்றியமைத்த பொருள்
finger : (எந்.) விரற்குறி : ஒரு பற்சக்கரத் தடைக்கான அடைதாழாகப் பயன்படும் ஒரு குறுகிய நீண்ட விரல் வடிவத் துண்டு
finial : (க.க.) முகட்டு ஒப்பனை : கூரை முகட்டு ஒப்பனை; தூபி வேலைப்பாடு
fining : நேர்த்தியாக்குதல் : விலையுயர்ந்த உலோகங்களைத் தூய்மையாக்குதல்
finish : மெருகேற்றுதல் : துணி, காகிதம், தோல் போன்ற புத்தகக் கட்டுமானப் பொருள்களுக்கும் மெருகும் பளபளப்பும் ஏற்றுதல்
finish all over : (எந்.) முழுமை மெருகு : எல்லாப் பரப்புகளும் மெருகேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கச் செயல்முறை வரைபடத்திலுள்ள ஒரு குறியீடு
finish allowance : மெருகு விளிம்பு : மெருகு வேலைப்பாடு செய்வதற்காக ஒரு தோரணியில் சேர்க்கப்படும் விளிம்பளவு
finishing : இறுதியாக்கம் : முடிவுறுத்துதல் இறுதியாக முற்றுவித்தல். பிளாஸ்டித் தொழிலில், மணலால் மெருகிட்டு, அழல் நீக்கி, அச்சிட்டு, அலங்கரித்து, முலாமிட்டு, செதுக்கு வேலை செய்தல்
finishing cut : (எந்.) இறுதிப்பட்டை தீட்டல் : இறுதியாகச் செப்னிட்டு மெருகேற்றிப் பட்டை தீட்டுதல்
finishing tool : மெருகு வேலைக்கருவி : உலோகத்தில் நுட்பமான மெருகு வேலைப்பாடுகள் செய்வதற்கான கருவிகள்
finneck bolt : ஏந்து மரையாணி : மரத்திலும் உலோகத்திலும் துளையிட்டுப் பிணைக்கப் பயன்படும் மரையாணி. தலைப்பகுதிக்கு அடியிலுள்ள இரு செதில்கள், மரையாணியை இறுக்கும்போது அல்லது கழற்றும்போது திரும்பாமல் தடுக்கிறது
fire brick : தீக்காப்புச் செங்கல் : தீக்காப்புடைய் செங்கல். இது பெருமளவு வெப்பத்தைத் தாங்கக் கூடியது
fire clay : சுடுகளிமண் : சுடு செங்கலுக்குரிய களிமண். இது அதிக அளவு வெப்பத்தைத் தாங்க வல்லது. இதில் பெருமளவு மண்ணும் சிறிதளவு உருகும் பொருட்களும் கலந்திருப்பதே இதற்குக் காரணம். இது, தீக்காப்புச் செங்கல், ஊதுலைச் சுவர்ப் பூச்சுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
fire damp : (சுரங் ) சுரங்க எரியாவி : நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெளி விபத்து விளைவிக்கும் கரிய நீரகைவாயு
fire irons : அடுப்படிக் கருவிகள்: அடுப்படி இரும்புக் கருவிகள் fire proof : தீத்தடைக் காப்பு : நெருப்பினால் பாதிக்கப்படாமலிருக்கச் செய்யப்படும் தீத்தடைக் காப்பு.
fire screen : தீத்தடைத்திரை : வெப்பத்தைத் தடுக்கும் தீயின் திரை
fire wall : (வானூ.) தீத்தடுப்புச் சுவர் : எஞ்சின் அறையில் தீயைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்
firing : வெப்பூட்டுதல் : மண் பாண்டங்களை சூளையிலிட்டுச் சூடாக்கி வலிமையூட்டுதல்
firing chamber : (விண்.) எரியூட்டு அறை : ஒரு ராக்கெட் எஞ்சினில் அல்லது மின்னோடியில், எரிபொருளும், ஆக்சிகரணியும் எரியூட்டப்பட்டு, போதிய அளவு உந்து ஆற்றலை அளிக்கும் அளவுக்கு வாயுவின் அழுத்தத்தைப் பெருக்குவதற்குரிய ஓர் அறை
firing order : (தானி.) வெடிப்பு வரிசை : பன்முக நீள்உருளை வாயு எஞ்சின்களில் வெடிப்புத் தொடர் வரிசை
firm joint caliper : (எந்.) அசையா இணைப்பு இடுக்கியளவி : இரு கால்களும் அசையாத பெரிய இணைப்புமூலம் பிணைக்கப்பட்டுள்ள சாதாரண இடுக்கியளவி
first class lever : (எந்.) முதல் தர நெம்புகோல் : விசைக்கும் எடைக்கு நடுவில் ஆதாரம் உள்ள ஒரு நெம்புகோல்
first gear : (தானி.) முதற் பல்லிணை : மிகக் குறைந்த வேகத்தில் செல்லப் பயன்படும் பல்லிணை இணைப்பு. இதனைத் தாழ் பல்லிணை என்றும் கூறுவர்
fished joint : (மர.வே.) கொக்கிப் பிணைப்பு : கொண்டை ஆணி போன்ற உறுப்புகளை நீட்சியுறச் செய்வதற்காக அதன் நெடுக்குவாக்கிற்கு எதிராக ஓர் உபரித்துண்டு பிணைக்கப்படுகிறது. இவ்விரு துண்டுகளும் ஒருங்கிணைந்த பிணைப்பு. எதிர்ப் பக்கங்களில் ஆணி அடித்திறுக்கப்படுகிறது. அல்லது மரையாணியால் முறுக்கப்படுகிறது
fish eye : (குழை.) மீன் கண் : ஒளி புகும் அல்லது ஒளியுருவலான பிளாஸ்டிக்கில், பொதிந்துள்ள பொருளுடன் முழுமையாக இணையாத காரணத்தினால் உள்ள சிறிய கோள வடிவ உருண்டை
fish glue : மீன் பசை : மீன் வகைகளினின்றும் கிடைக்கிற பசை செய்ய உதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள்
fishing : (மின்.) கொக்கிழுப்பு : மின் கடத்திகளை வெளியில் எடுப்பதற்காக ஒரு வடிகாலிலிருந்து இன்னொரு வடிகாலுக்கு தனியொரு கம்பிவடம் முதலியவற்றை இழுப்பதற்குப் பயன்படும் முறை
fish oils : மீன் எண்ணெய்கள் : உலராத, வெறுப்பூட்டும் நெடியுடைய எண்ணெய் வகைகள். இவை, மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் வெப்பந்தாங்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகின்றன
fish plate : (எந்.) இணைப்புக் கட்டை : தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை
fish tail : (வானூ.) மீன் வால் துடுப்பு : விமானத்தில் மீன் வால் போன்ற வடிவுடைய துடுப்பு அமைப்பு. விமானம் தரையிறங்குவதற்கு தரையை அணுகும்போது வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது fishtail cutter : (எந்.) மீன் வால் வெட்டுளி : வரிப்பள்ளங்கள் அல்லது சுழல் தண்டுகளில் கால்கள் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி
fish wire : (மின்.) இழு கம்பி : சுவர் முகடு, ஊடு கடத்தி இவற்றிலிருந்து மின்கம்பிகளை இழுப்பதற்குப் பயன்படும் தட்டையான எஃகுக் கம்பி
fish paper : (மின்.) மின் காப்புத்தாள் : மின் கடத்திகளையும் மின் மாற்றிச் சுருணைகளையும் பொதிவு செய்வதற்குப் பயன்படும் வலுவான மின்காப்புத் தாள்
fission : (இயற்.) அணுப் பிளப்பு : ஓர் அணுவின் உட்கருவைப் பிளப்பதன் விளைவாகக் கதிரியக்கமும், வெப்பமும் உண்டாகும்
fissure : பிளவு : பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச் சந்து பிளப்பு
fitment : தட்டுமுட்டுப்பொருட்கள் : ஒரு சுவரில் அல்லது அறையில் பொருத்தப்படும் சன்னல் கதவுகள், புகைபோக்கிகள், அறைகலன்கள் போன்ற பொருட்கள்
fitting : (வானூ.) (1) தள வாடங்கள் : விமானங்கள் தயாரிப்பதில் பயன்படும் சிறுசிறு உறுப்புகள்
(2) பொருத்துதல் : எந்திரவியலில் எஞ்சின்கள், பொறிகள் முதலிய பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைவாகப் பொருத்துதல்
fittings : (கம்.) துணைக்கருவிகள் : இணைப் பொருத்துவதற்குப் பயன்படும் கருவிகள் fixative : சாய நிலைப்பாட்டுப் பொருள் : சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள்
fixed landing gear : (வானூ.) தரையிறங்கு நிலைப்பல்லிணை : விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தரையிறங்கு பல்லிணை. இதனை இணக்கமற்ற தரையிறங்கு பல்லிணை என்றும் கூறுவர்
fixed light : (வானூ.) நிலைப்பாட்டு விளக்கு : இருளில் நிலையாக ஒளி வீசுகின்ற விளக்கு. இது விமான நிலையங்களில் பயன்படுகிறது
fixed pitch propeller : (வானூ.) நிலை அலகு முற்செலுத்தி : அலகின் கோணம் மாற்றப்படாதிருக்கிற விமான முற்செலுத்தி
fixture : (மின்.) நிலைப்பொருத்தி : விளக்குத் தண்டு அல்லது கொத்தான விளக்குகளின் தொகுதி. எந்திர சாதனங்களில் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய உறுப்புகளைத் தயாரிப்பதில் பயன்படும் சாதனம்
fixture splice : (மின்.) பொருத்துப் பொறியிணைவு :முதன்மை மின் கடத்தியைச் சுற்றி நெருக்கமாகச் சுற்றப்பட்டுள்ள பொருத்து கம்பி. இந்த முதன்மை மின் கடத்தியின் முடிவில், பொருத்துக் கம்பியின் சுருணைகளுக்குப் பின்புறமாக இறுக வளைக்கப்பட்டிருக்கும்
fixture wire : (மின்.) பொருத்து கம்பி : இது பொதுவாக 16-18 வரையளவுடையது; திடமானது; பிரியிழையுடையது; மின்காப்பிடப்பட்டது. இது மின் பொருத்து கருவிகளில் மின்கம்பி இணைப்பதற்குப் பயன்படுகிறது flagging : கல்பாவுதல் : தட்டையான தளவரிசைக் கற்களால் தளம் பாவுதல்
flagstones : பாவுகற்கள் : தளவரிசைக்கான தட்டையான தள வரிசைக் கற்கள்
flam-boyant : (க.க.) அழல் வண்ண ஒப்பனை : அலைத்தெழும் தழல் போன்ற தோற்றம் வாய்ந்த ஒப்பனை வேலைப்பாடு
flame hardening : (உலோ.) அனல் வழிக் கெட்டியாக்கம் : ஆக்சி அசிட்டிலீன் சுடர் மூலமாக எஃகைச் சூடாக்கிக் குளிர்விப்பதன் மூலம் எஃகைக் கெட்டிப்படுத்தும் முறை
flaming arc : (மின்.) எரிசுடர் : உள்ளீடகற்றிய கனிமக் கார்பன்கள் பயன்படுத்தப்படும் சுடர் விளக்கு. இது அதிக அளவுச் சுடரொளியை உண்டாக்க வல்லது
flaming of arc : (மின்.) சுடர்ப்பிழம்பு : தொலைவில் லைக்கப்பட்டுள்ள இரு கார்பன்களுக்கிடையில் உள்ள் அனற்பிழம்பு வீசும் சுடர்
flange : (எந்.) விலா விளிம்பு : ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு, இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும்
flanged pulley : (எந்.) விளிம்புக்கப்பி : ஒரு விலா விளிம்புள்ள ஒரு கப்பி. இதில் முகத்தின் ஒரு விளிம்பின் விட்டம் அதிகமாக இருக்கலாம். இது ஒரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும். இரு விளிம்புகளின் விட்டமும் அதிகமாக இருந்தால் அது இரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும்
flange nut : (எந்.) விளிம்பு மரை: அகன்ற விளிம்புடைய ஒரு மரை. இது தனி வளையத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது
flange pipe : (கம்.) விளிம்புக்குழாய் : மற்றக் குழாய் இணைப்புகளுடன் இணைப்பதற்காக முனைகளில் விளிம்புகளுடைய நீராவி அல்லது நீர்க்குழாய், வார்ப்பிரும் புக் குழாய்களில், இந்த விளிம்புகள் வார்ப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும்
flange union : (கம்.) விளிம்பு இணைப்பு : இணைக்கப்படவேண்டிய குழாய்களின் முனைகளுடன் இழைவரி மூலம் - இணைக்கப்படுவதற்குரிய ஓர் இணைவிளிம்புகள் குழாய்களை இணைக்கும்போது இந்த விளிம்புகள் மரையாணியால் இறுக்கப்படும்
flange wheel : (எந்.) விளிம்புச் சக்கரம் : தண்டவாளத்திலிருந்து சக்கரம் இறங்கிவிடாமல் தடுப்பதற்காக விளிம்புகளுள்ள ஊர்திச் சக்கரம்
flank : (க.க.) புடைச்சிறை : ஒரு கவானின் பக்கப் பகுதி. எந்திரத்தில், இடைவெளிக்கோட்டிற்குக் கீழேயுள்ள பல்லிணையின் பக்கப் பகுதி
flap : (வானூ.) ஆடல் விளிம்பு : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் பின்பகுதியாக அமைந்துள்ள கீலுள்ள அல்லது திருகு குடுமியுள்ள தளம். இது மேல் வளைவினை மாற்றுவதற்கு உதவுகிறது
flapping_angle : (வானூ.) ஊசலாட்டக் கோணம் : விமானத்தில் சுழல் அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள தளத்திற்குத் தொடர்பான சுழலும் சிறகு அமைப்பின் ஓர் அலகின் வீச்சளவு. அச்சின் படுகோணத்திற்கும் திரும்பு கோணத்திற்குமிடையிலான வேறுபாடு flare : கதிரொளி : உருவ நோக்காடியில் நுண்ணாய்வு முனைகளில் ஒளி குறைவாக இருக்கும் போது உண்டாகும் வெண்ணிறச் சைகை. அதிக ஒளியும் இருளும் நிறைந்த பொருட்கள் அருகருகே இருக்கும்போது வரம்பிற்கு அப்பால் உண்டாகும் ஒளி
flash : (குழை.) அழற்பாய்ச்சல் : (1) கண்ணாடி வார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப் பாய்ச்சுதல்
(2) வார்ப்படத்தில் வேகமாகப் பாய்ந்து பெருகும் மிகுதியான வார்ப்படப் பொருள்
(3) தடைப் பற்றவைப்பில் இணைப்பிலிருந்து வெளியேற்றப்படும் உலோகமும் ஆக்சைடும்
flash butt welding : சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு : இது தடை முட்டுப் பற்றவைப்பு முறையாகும். இதில், உறுப்புகள் ஒன்றையொன்று தொடுவதற்கு முன்னர் மின்னழுத்த நிலை உண்டாக்கப்படுகிறது. அப்போது, பற்றவைக்கப்படும் உறுப்புகளுக்கிடையிலான தொடர்வரிசைச் சுடர்களிலிருந்து வெப்பம் உண்டாகிறது
flash-dry ink : (அச்சு.) சுடர் முறை உலர்மை : செயற்கை வண்ணங்களிலிருந்தும் கோந்துகளிலிருந்தும் தயாரிக்கப்படும் மை. உருளைகளிலிருந்து வெளிவரும் அச்சிட்ட தாளில் உள்ளமை தீவிர வெப்பம் காரணமாக உடனடியாக உலர்ந்து படிகிறது
flasher : (மின்.) மின்னொளிர்வான் : சில மின் சைகைகளில் உள்ளது போன்று விளக்குகளில் ஒளி தோன்றித் தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு
flash tube : (மின்.) சுடரொளி குழல்விளக்கு : மிகவும் பிரகாச மான சுடரொளியை உண்டாக்கும் மின்னியல் விளக்கு
flashing : (க.க. ) கூடல் தகடு : மழைநீர் உள்ளே கசியாமல் விலக்குவதற்காக மோட்டின் கூடல் வாய்களிற் பொருத்தப்படும் உலோகத் தகடு
flashing light : (வானூ.) ஒளிர்விளக்கு : ஒரு திசையிலிருந்து பார்க்கும்போதும் விட்டுவிட்டு ஒளிரும் விளக்கு
flashing over : (மின்.) பாய்ச்சல் மின்னோட்டம் : ஓர் எந்திரம் இயங்கும்போது ஒரு திசைமாற்றியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மின்னோட்டம் பாய்வதைக் குறிக்கும் சொல். இது, திசைமாற்றியின் தவறான மின்காப்பு காரணமாக, குதித்து குதித்துச் செல்லும் நெருப்பு வளையம் போல் இருக்கும்
flash light : (மின்.) மின்பொறிக் கை விளக்கு : பசை மின்கலங்கள் மூலம் இயங்கும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய மின்பொறி விளக்கு
flash light powder : (வேதி.) மின்னொளித் தூள் : மெக்னீசியத்தூள் இரு பங்கும், பொட்டாசியம் குளோரைடுத்துள் ஒரு பங்கும் கலந்த ஒரு கலவைத்தூள்
flash lines : (குழை.) சிதறுவரிக் குறிகள் : வார்ப்படத்திலிருந்து மிகையான வார்ப்படப்பொருள் வழிந்து வடிந்த வரிக்குறிகள்
flash mould : (குழை.) சிதறல் வார்ப்படம் : இறுதி அடைப்பின் போது மிகையான வார்ப்படப் பொருள் வழிந்தோடுவதற்கு அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வார்ப்படம்
flash point : தீப்பற்று நிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்ப நிலை flashpots : மின்னொளிக் கலங்கள் : மின்னொளித்தூள் நிரப்பிய கொள்கலங்கள். இவை குறுக்குவெட்டு மின்னோட்டம் மூலம் மின்னியல் முறையில் இயக்கி வைக்கப்படும்
flask : (வார்.) வார்ப்புச் சட்டகம் :வார்ப்படச் சாலையில் வார்ப்படம் திணித்து அடைக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான சட்டகம்
flat : (அச்சு.) நீளத்தாள் : மடிக்கப்படாத தாள். பொதுவாக 43 x 71செ.மீ. அளவு வரையிலான தாள்கள் இப்பெயரில் அழைக்கப்படுகின்றன
flat arch or jack arch : சமதளக்கவான் : வளைவடிச் செதுக்கு மானம், வளை முகட்டின் வெளிப்புற வளைவு இரண்டும் சமதளமாக இருக்கும் ஒரு கட்டுமானம்
flat bed : (அச்சு.) சமதள அச்சுப் படிவம் : அச்சு எந்திரத்தில் அச்சடிப்பதற்கான சமதள அச்சுப்படிவம்
flat carving : (மர.வே.) சமதள செதுக்கு வேலைப்பாடு : பின்னணி மட்டும் செதுக்கப்பட்டு, வடிவமைப்புச் சமதளமாக இருக்குமாறு அமைக்கப்படும் செதுக்கு வேலைப்பாடு
flat chisel : (உலோ.வே.) சமதள உளி : உலோகத்தில் சிராய்ப்பு மூலம் சமதளமான மேற்பரப்பை உண்டாக்குவதற்குப் பயன்படும் உலோகத்தாலான உளி
flat drill : (எந்.) சமதளத் துரப் பணம் : ஒரு வகைத் துரப்பணக் கருவி. இதில் வெட்டும் அலகு. இணையான, சாய்வான முனைகளைக் கொண்டிருக்கும். இது உட்புழையுள்ள துவாரங்களை வெட்டுவதற்குப் பயன்படுகிறது
flat moulding : சமதள வார்ப்படம் : மரவேலைப்பாட்டுப் பொருட்களில் இறுதி மெருகு வேலை செய்வதற்குப் பயன்படும் மெல்லிய, சமதளமான பட்டைகள்
flat plate : (அச்சு.) தட்டை அச்சுத் தகடு : வேறுபாட்டு முனைப்பு அதிகமின்றி, செதுக்கு வேலை செய்யப்பட்ட அச்சுத் தகடு
flat pull : (அச்சு.) சமதளப் பார்வைப் படி : அச்சு வகையில் அடிப்பதிவு அல்லது மேற்பதிவு செய்து எடுக்கப்பட்ட பார்வைப் படி
flat roof : (க.க.) சமதள முகடு : மழைநீர் வடிவதற்குப் போதிய பள்ளமுடைய ஒரு முகடு
flat skylight : (க.க.) சமதள மேல் சாளரம் : நீரை வடித்துக் கொண்டு செல்வதற்குப் போதிய அளவு மட்டுமே பள்ளமுடைய சமதள மேற்பரப்பு கொண்ட சாளரம்
flat spin : (வானூ.) சமதளத்திருகியக்கம் : விமானத்தில், நீள வாக்கு அச்சு, கிடைமட்ட அச்சிலிருந்து 45°க்குக் குறைவாக இருக்கும் திருகியக்கம்
flat spots : (வண்.) சமதளப் புள்ளிகள் : வேலைப்பாடு முடிவுற்ற மேற்பரப்பில் உள்ள பளப்பில்லாத புள்ளிகள். இப்புள்ளிகள், சீரற்ற மேற்பரப்புப் பூச்சுமானம் காரணமாக ஏற்படும் நுண்துளைகளாகும்
flatter : தட்டையாக்குச் சம்மட்டி : கொல்லர்கள் தட்டையாக அடிப்பதற்குப் பயன்படுத்தும் ஒருவகைச் சம்மட்டி
flat-tube radiator : (தானி.) சமதளக் குழாய்க் கதிர்வீசி : தட்டையான குழாய்களினாலான கதிர்வீசி. இதில் வெப்பம் கலத்திற்குக் கலம் நேரடியாகப் பாய்வதற்குப் பதிலாக, இரண்டு மூன்று மடங்கு நீளமாக இருக்கும் வகையில் குழாய்கள் வளைக்கப்பட்டிருக்கும். இந்த வளைவு நீரை இருத்தி வைத்துக் கொண்டு அதிகக் குளிர்ப் பரப்பினை உண்டாக்குகிறது. இதனைப் பொதுவாகத் தேன் கூட்டுக் கதிர்வீசி என்பர். ஆனால், உண்மையில் இது தேன் கூட்டின் அமைப்புடையதன்று
flaw : வெடிப்பு/பிளவு : வார்ப்படத்தில் ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.பொதுவாக, செயற்படுவதைத் தடை செய்யும் பழுது
flax : (தாவ.)ஆளிவிதைச்செடி : பல நாடுகளில் வளரும் செடி. இது 2.5-10செ.மீ.வளரும். இதன் விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் நாரிலிருந்து இழைகள் தயாரிக்கப்படுகின்றன
flaxseed : (தாவ.) ஆளிவிதை :ஆளிவிதைச் செடியிலிருந்து கிடைக்கும் விதை. இந்த விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது
flax twine : ஆளிச் சரடு : ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் சரடு. இது முனைகளையும் பாய்களையும் தைப்பதற்குப் பயன்படுகிறது
fleming, john ambrose : ஃபிளெமிங், ஜான் அம்புரோஸ் (1849 - 1945) : மின்மாற்றிகள், உயர் அழுத்த மின்விசை அனுப்பீடு பற்றிய ஆய்வுகள் நடத்திய ஆங்கிலேய மின்னியல் பொறியியலறிஞர். 'ஃபிளெமிங் ஓரதர்' எனப்படும் 'வானொலிக் குழல்' கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர். இவர் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்
fleming"s rule : (மின்.) ஃபிளெமிங் விதி/வலக்கை விதி : ஆட்காட்டி விரல் இயக்கத் திசையினையும், கட்டைவிரல் கடத்தியின் இயக்கத் திசையினையும் காட்டுமாயின், நடுவிரல் மின்னியக்க விசையினைக் காட்டும்
இடக்கை விதி : ஆட்காட்டி விரலை இயக்கத் திசையை நோக்கியும், நடுவிரலை கடத்தியில் மின்னோட்டத்தின் திசையிலும் காட்டும்போது, கட்டை விரல் கடத்தி இயங்கத் தொடங்கும் திசையைக் காட்டும். இந்த விதிகள், ஒரு மின்னாக்கி சுழலும் திசையினை அல்லது ஒரு மின்னாக்கியின் பொது மின்னோட்டத்தின் முனைமையைத் தீர்மானிக்க உதவுகின்றன
flemish bond : (க.க.) பிளெமிஷ்பாணிக் கவிகைப்பிணைப்பு : பிளெமிஷ் பாணியில் அமைந்த கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு
flemish bond double : (க.க.) இரட்டைக் கவிகைப் பிணைப்பு : வெளிப்புறச்சுவரின் உட்புற வெளிப்புறப் பரப்புகள் ஃபிளெமிஷ் பாணியில் பற்றுமானமாக அமைக்கப்படும்போது முன்புறச் செங்கற்கள் அல்லது கற்கள் அனைத்தும் முழுமையானவையாக இருக்கும். இவற்றை "இரட்டைக் கவிகைப் பிணைப்பு" என்பர்
flemish garden bond : (க.க.) ஃபிளெமிஷ் தோட்டக் கவிகைப் பிணைப்பு : இதில் ஒவ்வொரு வரிசையிலும் கவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கற்கள் மூன்று அமைந்திருக்கும். அவற்றைத் தொடர்ந்து முகப்புச் செங்கற்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வரிசையிலுள்ள முகப்புச் செங்கல் மேலும் கீழுமுள்ள இடைச் செங்களுக்கிடையில் அமைந்திருக்கும்
fleur-de-lis : ஃபிரெஞ்சு அரசுச் சின்னம் : ஃபிரான்ஸ் நாட்டரசரின் அரசுச் சின்னம். இது அலங்கார வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது
flexible conduit : (மின்.) துவள் காப்புக் குழாய் : மின் கடத்திகள் பாதுகாப்பாக வைக்கப்படும் துவள் உலோகக் குழாய்
flexible coupling : துவள் இணைப்பி : துவள்கின்ற உருண்டை இணைப்பி. இதில் தண்டின் முனைகளுடன இணைக்கப்பட்டுள்ள இரு வட்டத் தகடுகள் அமைந்திருக்கும். இந்த தகடுகள் அவற்றின் முகப்புகளுக் கிடையில் வைக்கப்படும் உருண்டையில் சுழலும் வண்ணம் அம்முகப்புகளில் புழை செய்யப்பட்டிருக்கும்
flexible mould : (குழை.) துவள் வார்ப்புப்படம் : திரவ பிளாஸ்டிக்குகளை வார்ப்படம் செய்வதற்குப் பயன்படும் ரப்பர் மரப்பாலினாலான அல்லது நெகிழ்திறனுள்ள பிசினிலான வார்ப்படம்
flexible shaft : (எந்.) துவள் சுழல் தண்டு : துவள் காப்புக் குழாயினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சங்கிலித்தொடர் இணைப்புச் சுழல்தண்டு பயன்படுத்த இயலாத இடங்களில் விசையினைச் செலுத்துவதற்குப் பயன்படுகிறது
flexure formula : (பொறி.) வளைவுச் சூத்திரம் : உத்தரங்களில் கிடைமிட்ட விறைப்பு, அழுத்த இறுக்கவிசைகளைத் தொடர்பு படுத்தும் சூத்திரம்
இதில், 'S' என்பது, உத்தரத்தின் புற இழை எதிலும் வளைத்திறன் காரணமாக அழுத்தும் இறுக்க விசையின் அலகு 'C' என்பது அந்த இழையிலிருந்து மையப்பரப்பிற்குள்ள தூரம்; 'M' என்பது தடைத்திறன் அளவு 1 அந்தப் பகுதியுள்ள இயக்கத்திறன் அளவு
flexure linkage :(கணிப்.) வளைவு இணைப்பு :
flicker : (மின்.) சுடர் நடுக்கம் : தொலைக்காட்சியில் படம் தாறுமாறாக அசைவுறுதல் அல்லது நடுங்குதல்; ஒளித் தெளிவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு
flier : (க.க.) தாவுபடி : படிக்கட்டின் நாற்கட்டான ஒரு படி
fliers : (அச்சு.) முன்னறிவிப்பு விளம்பரம் : எதிர்வரும் ஒரு நிகழ்ச்சியை அறிவிப்பதற்கான, கவர்ச்சியான வடிவமைப்பிலுள்ள ஒரு சிறிய விளம்பரம் flight indicator : (வானூ.) பறக்கும் தூரங்காட்டுங் கருவி : விமானம் பறக்கும் தூர அளவினைக் காட்டும் கருவி
flight bird : (விண்.) சோதனை ஏவுகணை : சோதனைக்காகப் பறக்க விடுவதற்குக் காத்திருக்கும் ஒர் ஏவுகணை
floating anchor : மிதவைச் சட்டம் : மிதந்து செல்லும் நிலையில் கப்பலின் காற்றுவாட்ட வேகம் தடுக்கும் மிதவைச் சட்டம்
flight of stairs : (க.க.) படிக்கட்டு வரிசை : தளங்களுக்கிடையிலான படிக்கட்டு வரிசைகள். இரு வரிசைப் படிக்கட்டுகளுக்கிடையில் ஒரு தளம் அமைந்திருக்கலாம்
flight path : (வானூ.) பறக்கும் பாதை : விமானம் பறக்கும் பாதை. அதன் புவியீர்ப்பு மையம் செல்லுகின்ற பாதை
flight path angle : (வானூ.) பறக்கும் பாதைக் கோணம் : விமானம் பறக்கும் பாதைக்கும் அதன் கிடைமட்டத்திற்குமிடையிலான கோணம்
flight recorder : (வானூ.) விமான இயக்கப் பதிவுக் கருவி : விமானம் இயங்குவது பற்றிய சில குறிப்புகளைப் பதிவு செய்வதற்கான கருவி
flint : (கணி.) சக்கிமுக்கிக்கல் : மங்கலான நிறமுடைய படிகக்கல் வகையைச் சேர்ந்த பளிங்குக் கல்
flip titles : (தொலை.) சொடுக்குப் பெயர்ப் பட்டிகள் : வளையப் பிணைப்புச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர்அட்டைகள். இவை தனியாகவோ ஒன்றன்பின் ஒன்றாகவோ ஒளிப்படக்கருவியின் முன்புள்ள இடத்தில் திடீரெனத் தோன்றுகிறது
flitch beam : துண்டு உத்தரம் : மையத்திலுள்ள ஓர் இரும்பு உத்தரத்தைச் சூழந்துள்ள புற உத்தரத் துண்டுகள், மரையாணிகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் உத்தரங்களின் ஒருங்கிணைப்பு
float : (வானூ.) மிதவை : (1) விமானம் நீரில் மிதப்பதற்கு அனுமதிப்பதற்கு அந்த விமானத்தில் இணைக்கப்பட்டுள்ள நீர் புகா அமைப்பு
(2) எந்திரத்தில் அரம் போன்ற வடிவுடைய ஒரு கருவி. இதில் ரம்பத்தில் உள்ளது போன்ற பற்கள் அமைந்திருக்கும்
(3) சுவர்களின் பரப்பில் பூச்சுப் பொருட்களைப் பூசுவதற்குப் பயன்படும் அகலமான இழைப்புக் கரண்டி
(4) ஊடிழையுடன் பின்னிச் செல்லும் பாவிழைப் பகுதி
float carburetor : (தானி.) மிதவை எரி-வளி கலப்பி : உந்து வண்டியில் எரிபொருளின் உயரத்தைக் கட்டுப்படுத்துவதற்குற்றதக்கையினாலான அல்லது உட்புழையுள்ள உலோகத்தினாலான மிதவையுள்ள எரி-வளி கலப்பி
floating : சாந்துப்பூச்சு : சாந்து, சிமெண்டு முதலியவற்றைச் சமதளமாகப்பூசுதல். இதற்குப் பயன்படும் சாதனம் "மிதவை" எனப்படும்
floating axle : மிதவை அச்சு : பாரங்கள் அல்லது அழுத்தங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டுள்ள சுழல் தண்டுடைய அச்சு
floating power : (தானி.) மிதவை விசை : எஞ்சினின் அதிர்வினை ரப்பர் திண்டுகள் தாங்கிக் கொள்ளும் வகையில் சட்டகத்தில் எஞ்சினை ஏற்றியமைக்கும் முறை
floating ribs : (உட.) நிலை பெயர்வு விலா எலும்புகள் : நெஞ்சு எலும்புடனோ மற்ற விலா எலும்புகளுடனோ இணையாமலிருக்கிற 11ஆவது, 12ஆவது விலா எலும்புகள்
floating tool : (எந்.) மிதவை கருவி : வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் கருவியானது, வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் மீது மிதந்தவாறே இயங்கிச் செல்லும் அமைப்புடைய கருவி
float switch : (மின்.) மிதை மின்விசை : ஒரு மிதவை மூலம் தொடுக்கவும் விடுக்கவும் பயன்படும் ஒரு மின்விசை. இது தொட்டியில் திரவத்தின் மட்டத்திற்கேற்ப ஏறி இறங்கும்
float system : (வானூ.) மிதவையமைப்பு : கடல் விமானத்திற்கு அல்லது ஒரு பறக்கும் படகிற்கு அது மிதப்புத் தன்மையினையும், உறுதிப்பாட்டினையும் அளிக்கவும், உயரே எழும்போது நீரியல் இயக்க ஏந்துவிசையளிக்கவும் பயன்படும் நிரந்தரமான மிதவைகளின் அமைப்புமுறை
float trap : மிதவைப் பொறியமைப்பு : வடிவாலையில் காற்று உள்ளே செல்லவும் நீராவியை இறுத்தி வைத்துக்கொள்ளவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ள உட்புழையுள்ள உலோக மிதவையினால் இயங்கும் ஓரதர்
float valve : (கம்.) மிதவை ஓரதர் : கழிப்பிடத் தொட்டியில் பயன்படுத்தப்படுவது போன்ற ஓர் ஓரதர். மேற்பரப்பில் மிதக்கும் ஓர் உட்புழையுள்ள உருண்டை நீர் உட்புகுந்ததும் அடைத்துக் கொள்கிறது
flock : (நூற்பு.) குஞ்சம் : கம்பளி மயிர்க் கழிவு அல்லது கிழிந்த துணிகளினாலான குஞ்சம்
flong : (அச்சு.) பதிவச்சுத் தாள் : பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள். இந்தத் தாள் படிவத்தில் உருகிய உலோகம் குளிர்ந்த அச்சுப்படிவப் பக்கங்கள் கிடைக்கின்றன
flooding : (தானி.) மிகை எரி பொருள் : கலவையை அதிக அளவில் எஞ்சினுள் செலுத்துதல். இதனால் எஞ்சினை இயக்குவதில் சிரமம் ஏற்படும்
flood light : (மின்.) பேரொளி : நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப் பெருக்கு
floor : (க.க.) (1) தளம் : ஒரு கட்டுமானத்தில் அல்லது கட்டிடத்தில் ஒருவர் நடப்பதற்குரிய பகுதி
(2) தள அடுக்கு : விட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று. இவற்றை கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என அழைப்பர்
floor chisel : (மர;வே.) தள உளி : தள அட்டைகள் முதலியவற்றை அகற்றுவதற்குப் பயன்படும் 5-7.5.செ.மீ. அகல விளிம்புள்ள எஃகு உளி
floor molding : (வார்.) தள வார்ப்படம் : தளத்தில் வார்ப்படங்கள் செய்வதற்கான முறை. இது மேசை வார்ப்படத்திலிருந்து வேறுபட்டது. இது பெரிய அளவு வார்ப்பட வேலைகளுக்குப் பயன்படுகிறது
floor plan : (க.க) தள அமைப்புப் படம் : ஒரு கட்டிடத்தின் நீள அகலங்களையும், அவற்றில் அடங்கும் அறைகளின் நீள அகலங்களையும் காட்டும் வரைபடம். ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி அமைப்புப் படம் வரையப்படும்
flore lated : மலர் உரு ஒப்பனை : மலர் உருவரைகளால் ஒப்பனை செய்தல்
floatation gear : (வானூ.) மிதவைப் பல்லிணை : தரை விமானம் நீரில் இறங்குவதற்கும், நீரின் மேற்பரப்பின் மீது மிதக்கச் செய்வதற்கும் அனுமதிக்கும் நெருக்கடி நிலைப் பல்லிணை
flowering dogwood : (தாவ.) மலர் மரம் : இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல ஒரு மரவகை. இந்த மரம் மிகக் கடினமானது. குளிர்ப் பந்தாட்டக் கோல், கருவி கைபிடிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது
fluctuation : ஏற்ற இறக்கம் : அலையலையாக எழுந்து தளர்ந்து ஊசலாடுதல்
fluctuating current : (மின்.) நிலையிலி மின்னோட்டம் : சீரற்ற இடைவெளிகளில் அளவு மாற்றமடையும் மின்னோட்டம்
flue : புகை போக்குக் குழல் : வெப்பக்காற்று, புகை முதலியவற்றை வெளிக்கொண்டு செல்வதற்கான குழாய்
fluid : நீர்மம் : கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றி விடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமே யொழிய, தனியாகப் பிரிந்து விடுவதில்லை
fluid drive : (தானி.) நீர்ம வழி இயக்கம் : அரை நீர்மங்களின் வழி ஆற்றல் இயங்கச் செய்யும் முறை. உந்து வண்டியின் சமனுருள் சக்கரத்தில் இது பயன்படுகிறது
fluid friction : (எந்.) நீர்ம உராய்வு : ஒரு நீர்மத்தின் துகள்கள் இயங்கி நீர்மத்தின் புறப்பரப்புகள் திடப்பரப்பினைத் தொட்டுக் கொண்டிருக்கும்போது, நீர்மத் தொகுதி தனக்குள் பல்வேறு அடுக்குகளாகப் பிரிகிறது. இந்த அடுக்குகள் ஒன்றன்மீது ஒன்று நகரும் போதும் ஏற்படும் உராய்வு மூலம் ஏற்படும் உரசல் விளைவு 'நீர்ம உராய்வு' எனப்படும்
fluidity : (குழை.) நீர்மத் திறன் : இதனைக் குழைமத் திறன் என்றும் கூறுவர்
fluid pressure : நீர்ம அழுத்தம் : நீர்மத்தில் அழுத்தமானது. எல்லாத் திசைகளிலும் செலுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் அழுத்தம், அனைத்துத் திசைகளிலும் சம அளவிலும், மேற்பரப்பின் பரப்பளவிற்கு நேர்விகித அளவிலும் இருக்கும்
fluorescent lamp : (மின்.) உமிழொளி விளக்கு : மின் ஆற்றலின் அளவு மிகாமல் நிறை ஒளி தரும் விளக்கமைவு. இது பாதரசச் சுடர்த் தத்துவத்தின்படி செயற்படுகிறது. பாதரசச் சுடர் உமிழும் புறவூதாக்கதிர்கள் உமிழொளிர்வுப் பொருளைத் தூண்டி ஒளியூட்டுகிறது
fluorescent paint : (வண்.) ஒளிர்வுறு வண்ணம் : புறவூதா அல்லது 'கறுப்பு' ஒளியில் செயலூக்கம் பெற்று ஒளிவிடும் வண்ணம்
fluorescent substances : ஒளிர்வுறு பொருள்கள் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் புலனாகும் ஒளியின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடும் பொருள். எடுத்துக்காட்டு: தொலைக்காட்சித் திரை
flourine : (வேதி.) ஃபுளோரின் : நிறமற்ற, அரிக்கும் தன்மையுள்ள நச்சு வாயு. நீர் நீக்கப்பட்ட ஹைட்ரோபுளோரிக் அமிலத்தை மின்னால் சிதைத்து வடித்தல் மூலம் இது பெறப்படுகிறது
fluorite or flour spar : ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம் : மணியுருப் படிக வடிவத்தில் கிடைக்கும் கால்சியம் ஃபுளோரைடு என்னும் கனிமப் பொருள். அமெரிக்காவில் கென்டக்கி, இலினாய்ஸ் மாநிலங்களில் கணிசமாகக் கிடைக்கிறது. உராய்வுச் சக்கரங்கள் தயாரிப்பில் எளிதில் உருகும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது
fluoro Carbons : (குழை.) ஃபுளோரோ கார்பன் : பிளாஸ்டிக் அணுக்கள். இதில் கார்பனும், ஃபுளோரினும் அடங்கிய மூலக் கூற்றுக் கட்டமைவு அமைந்திருக்கும். இது வேதியியல் பொருட்களின் தாக்குதலைத் தடுக்கும் திறனும், உயர்ந்த வெப்பநிலைப்பாட்டுத் திறனும், மின்னழுத்தத்தைத் தாங்கும் திறனும் உடையது. எனினும், இதன் பசையற்ற தன்மைக்கும், குறைந்த உராய்வுத் திறனுக்குமே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகள், வளையங்கள், மின்சாதனங்கள், நாடாக்கள் முதலியன தயாரிக்க இது பயன்படுகிறது
fluoroscopy : (மின்.) உமிழொளி கணிப்பு : ஒளி ஊடுருவிச் செல்லாத பொருள்களை ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) மூலம் ஆராய்வதற்குப் பயன்படும் நுட்பம். பொருளின் வழியாக ஊடுகதிர் சென்று ஒரு வண்ண ஒளிகாலுகிற திரையில் உடனடியாகப் பிம்பத்தை உண்டாக்குகிறது
flush : (பட்.) நேர்தள பரப்பு : தடைபடாத சரிசமமான நேர்தளப் பரப்புடைய உறுப்புகள் எனப்படும்
flush bolt : நேர்தள மரையாணி : எதிர் துளையிட்ட துவாரத்தினுள் நுழைவதற்கேற்ப தலை அமைந்துள்ள ஒரு மரையாணி. இதன் தலைப்பகுதி அது செருகப்படும் தட்டின் முகப்புக்குச் சமதளத்தில் இருக்கும்
flush head rivet : நேர்தளத் தலைத் தரையாணி : செலுத்தப்படும் தட்டின் தளப்பரப்புக்குமேல் நீட்டிக்கொண்டிராதவாறு தலைப் பகுதி அமைந்துள்ள ஒரு தரையாணி
flush receptacle : (மின்.) நேர்தளக் கொள்கலம் : சுவரில் உள்ளமைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் காப்பிட்ட பிணைப்பூசி அல்லது திருகு வகையான கொள்கலம். இதில், தகடு மட்டுமே மேற்பரப்புக்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் flush switch : (மின்.) நேர்தளமின் விசை : சுவரில் உள்ளமைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் இதில் இயங்கும் எந்திரப் பொறியமைவு மட்டுமே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்
flush valve : (கம்.) நேர்தள ஓரதர் : விசைநீர் கொட்டுவதன் மூலம் துப்புரவு செய்வதற்குப் பயன்படும் ஓரதர். இதில், நீர் வழங்கும் குழாய்களிலிருந்து நீர் விசையுடன் பாய்ந்து தொட்டிகளைத் துப்புரவு செய்யும்
flute : (க.க.) (1) வரிப்பள்ள ஒப்பனை : தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ஒப்பனை (2) நெசவுத்தறியின் ஓடம்
fluted reamer : வரிப்பள்ளத் துளைச் சீர்மி : நீளவாக்கில் வரிப் பள்ளங்கள் இடப்பட்ட ஒரு துளைச் சீர்மி. இது பக்கங்களை வெட்டிச் சீர்படுத்த உதவும்
fluting cutter : (எந்.) வரிப்பள்ள வெட்டி : நீர்வரிப்பள்ளம் இட்டு வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் வெட்டுக் கருவி
flutter : (வானூ.) ஒழுங்கிலா அதிர்வு : விமானத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏற்படும் தடுமாற்றம் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு உண்டாகும் ஒழுங்கில்லாத அதிர்வு. இது அந்த உறுப்பின் மற்றப் பண்புகள் காரணமாகச் சீரடைகிறது
flux : (வேதி.) உருகு பொருள் : உலோகங்களை அல்லது கனிமங்களை எளிதில் உருகச் செய்வதற்கு அவற்றுடன் சேர்க்கப்படும் காரங்கள், போரக்ஸ், சுண்ணாம்பு ஃபுளோரைட் போன்ற கலவைப் பொருள்கள்
flux density : (மின்.) பெருக்கடர்த்தி : மின்தூண்டலில், ஓர் அலகு பரப்பளவில் தூண்டலுக்குச் செங்குத்தாகச் செயற்படும் விசை அல்லது தூண்டல் விசைக் கோடுகளின் எண்ணிக்கை. தங்கு தடையற்ற இடப்பரப்பில் பெருக் கடர்த்தியும், புலச்செறிவும் எண்ணிக்கையில் சமமாக இருக்கும். ஆனால் காந்தப் பொருளினுள் இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டிருக்கும்
flux leakage : (மின்.) பெருக்கிக் கசிவு :பிணைப்பு மின்சுற்று வழியை இணைக்காத பெருக்கியின் ஒரு பகுதி
fluxometer : பெருக்களவி : எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் கசிவை அளவிடும் கருவி
fly : (வானூ.) (1) பறத்தல் : விமானத்தை நெறிப்படுத்தி ஓட்டி வானில் பறந்து செல்லுதல். (2) பயணிகளை வான்வழியில் விமானத்தில் இட்டுச் செல்லுதல். (3) நீர் உருளை அச்சு எந்திரத்தில் தாள்களை ஊட்டுவதைக் கட்டுப்படுத்தும் கருவி
fly boat : மிதவை விமானம் : கடலில் படகு போல் மிதக்கக் கூடிய விமானம்
fly cutters : (எந்.) விரைவு வெட்டுக் கருவி " கடைசல் எந்திரத்திலும், பிற எந்திரங்களிலும் தொகுதியாக அல்லது ஏந்தமைவாகவுள்ள வெட்டுக்கருவிகள். உலோகச் சலாகைகளின் முனைகளில் வேலைப்பாடுகள் செய்வதற்கு உதவுகிறது
flying boat : (வானூ.) கடல் விமானம் : கடலில் படகு போல் மிதக்கவல்ல விமானம். இதன் உடற்பகுதிநீரில் மிதக்க ஏற்றவாறு அமைககப்பட்டிருக்கும். அது விமானத்தின் கட்டுமானச் சட்டமாகவும் இயங்கும். இதற்குப் பக்க வாட்டில் உறுதிப்பாடு அளிப்பதற்கு இறகுகளின் முனைகளில் மிதவைகள் அமைக்கப்பட்டிருக்கும்
flying bomb : பறக்கும் குண்டு : ஆளில்லாமல் இயக்கப்படும் தரை விமான வடிவிலான வான்செல் வெடிகுண்டு
flying buttress : (க.க.) உதை கால் வளைவு : உயர் கட்டுமானங்களுக்குச் சுவரின் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம். பண்டைய ஜெர்மானியப் பாணிக் கட்டிடக் கலையில் இந்த அமைப்பு பெருமளவில் இடம் பெற்றிருக்கும்
flying saucer : பறக்கும் தட்டு : வானில் அவ்வப்போது மிகுந்த உயரத்திலும் பெருவேகத்திலும் பறந்து செல்வதாகத் தெரியவரும் தட்டுப் போன்ற ஒளி வடிவம்
fly leaf : (அச்சு.) திறவுப் பக்கம் : கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள்
fly over : மேம்பாலம் : போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களில் பெரும் பாதைக்கு மேலாகக் கிளைப்பாதையைக் கொண்டு செல்லும் பாலம்
fly title : திறவுத் தலைப்பு : உண்மையான தலைப்புப் பக்கத்திற்கு முன்புள்ள பக்கத்திலுள்ள புத்தகத் தலைப்பு. இதனைக் குறுந்தலைப்பு என்றும் கூறுவர்
fly wheel : (எந்.) சமனுருள் சக்கரம் : எந்திரத்தில் ஒரே சீரான இயக்கம் ஏற்படுவதற்காக - எதிரீட்டு இயக்கத்தினை சுழல் இயக்கமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கனமான சக்கரம்
fly wheel marking : (தானி.) சமனுருள் சக்கரக் குறியீடு : ஒரு சமனுருள் சக்கரத்தின் மேற்பரப்பிலுள்ள அளவுக்குறிகள். இது எஞ்சினில் ஓரதரின் இயக்கம் சரியான நேரத்தில் நடைபெறச் செய்வதற்கான வழிகாட்டியாகப் பயன்படுகிறது
F.numbers : (ஒளி.) F எண்கள் : ஒளிப்படக் கருவிகளில் இடையீட்டுத் திரையின் திறப்பு வடிவளவுகளைக் குறிக்கும் எண்கள். எடுத்துக்காட்டு; F-4,5; F-5.6; முதலியன
foamed plastics : (குழை.) கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள் : திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன; மிதவைகளில் இது பயன்படுகிறது. மெத்தை-திண்டு வேலைப்பாடுகளில் நெகிழ்வுக் கடற்பஞ்சு பயன்படுகிறது. யூரித்தேன் கடற்பஞ்சு, பிளாஸ்டிக் கடற்பஞ்சுக்கு உதாரணம் (பார்க்க: ஐசோ சையனேட்.)
F.O.B : கலத்தில் ஒப்புவிப்பு : சரக்குகளைக் கட்டணமின் கப்பல் தளம் வரையில் அல்லது பிறஊர்திகள் வரையில் கொண்டு வந்து ஒப்புவிப்பது குறித்த ஒப்பந்தம்
foci : குவிமையங்கள் : ஒரு நீள் உருளை வடிவின் முனை வளைவுகள் இந்த மையங்களிலிருந்து வரையப்படும்
foil : (க.க) பலகணி வளைவு : பலகண விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு. இது விளிம்பிடை வளைவுப் பள்ளம் உருவாக்கி ஒப்பனை செய்யும் ஒரு முறை folders : (அச்சு.), மடிதாள் : அச்சடித்த தாள்களின் மடிக்கப்பட்ட பக்கங்கள். பொதுவாக ஒரு தாள் ஒரு முறை மடிக்கப்பட்டு நான்கு பக்கங்களாகச் செய்யப்படும்
folding machine : (அச்சு.) மடிக்கும் எந்திரம் : அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் எந்திரம். நூல்கள், செய்தியிதழ்கள் முதலிய வற்றின் பக்கங்களை மடிப்பதற்கு இது பயன்படுகிறது
folding rule : மடக்கு அளவுகோல் : அளவிடுவதற்குப் பயன்படும் மடக்கக் கூடிய ஒரு கருவி
foliated : இலை வேலைப்பாடு : இலைகள் போன்ற வடிவமைப்புடன் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு
folio : (1) இருமடி : ஒரு தடவை மடித்த தாள். அவ்வாறு மடித்துக் கட்டுமானம் செய்த புத்தகத்தையும் குறிக்கும்
(2) பக்க எண் : அச்சடித்த புத்தகத் தாள் எண்
follow board : (வார்.) உண்மை வார்ப்படப் பலகை : உள்ளமைவாகவுள்ள அல்லது வெட்டியெடுக்கப்பட்ட வார்ப்படப் பலகை. இதில், பயன்படுத்தப்படவிருக்கும் தோரணி பிரிவுக் கோட்டுடன் பொருந்தியிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்தும்போது மணல் மூலம் பகுப்பீடு செய்ய வேண்டியதில்லை
follower : (எந்.) (1) இயக்கு எந்திரம் : மற்றொரு சக்கரத்தினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். (2) இயக்கு சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்புப் பகுதிக்கு எதிராக இயங்கும் உருளை அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள உருளையும் புயமும்
follower rest : தொடர் ஆதாரம் : கடைசல் வேலைப்பாட்டுக்காக ஊர்தியுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஆதாரம். இதுவெட்டுக் கருவியைத் தொடர்ந்து அல்லது அதற்கு எதிராக இயங்கி வேலைப்பாடு செய்யப்படும் பொருள் கருவியிலிருந்து துள்ளிச் சென்று விடாமல் தடுக்கிறது
font : தீக்கைக் கலம் :(1) தீக்கைக் குரிய நீர் வைக்கும் கலம். (2) அச்செழுத்து முகப்பு : அச்செழுத்தின் முகப்பு வடிவளவு
fontanelles : (உட.) உச்சி மையம் : குழந்தையின் தலையில் எலும்பு வளராமல் மென்தோல் மட்டும் உள்ள உச்சி மையம்
foolscap : முழு அளவுத் தாள் :எழுதுவதற்குத் தட்டச்சு செய்வ தற்கும் பயன்படும் 33.x 41 செ.மீ. வுள்ள தாள்
foot : காலடி : தட்டுமுட்டுப் பொருட்களின் ஆதாரக் காலடிப் பாதம்
foot and mouth disease : (நோயி.) கால்-வாய் நோய் : செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் கொப்புளங்கள் ஏற்படும்
foot brake : (தானி.) கால்தடை : உந்து வண்டிகளில் காலினால் இயக்கப்படும் தடை. இது கையினால் இயக்கப்படும் தடையிலிருந்து வேறுபட்டது foot candle : (மின்.) ஓரடி மெழுகுவர்த்தித் திறன் : தரத் திட்ட அளவுடைய ஒரு மெழுகுவர்த்தி ஓரடி தூரத்திலிருந்து உண்டாக்கும் ஒளியின் அளவு
footing : (க.க.) காலடி ஆதாரம் : துணுக்கு உள்ளது போன்ற அடித் தளம்
foot lever : அடியாதார நெம்பு கோல் : காலடி ஆதாரத்தின் அழுத்தத்தினால் மிட்டுமே செயற்படும் ஒரு நெம்புகோல்
foot note : (அச்சு.) அடிக்குறிப்பு : புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அடிப்புறத்தில் அச்சிடப்படும் விளக்கக் குறிப்பு
foot pound : (இயற்.) வேலை அலகு : ஒரு கல் எடையுள்ள பொருளை ஓரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு
foot selector switch : (தானி.) காலடித் தெரிவு விசை : முகப்பு வெளிச்சத்தின் அளவினை கூட்டவும் குறைக்கவும் பயன்படும் காலடியிலுள்ள விசை
footstep or footstep bearing : (எந்.) காலடித் தாங்கி : ஒரு செங்குத்தான சுழல் தண்டின் அல்லது கதிரின் கீழ்முனையில் இறுதி அழுத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தாங்கி
foot switch : (தானி;மின்.) காலடி விசை : காலழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் ஒரு மின் விசை. உந்து வண்டியில் தளப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கினைக் கட்டுப்படுத்தும் விசை இதற்குச் சான்று
forbidden region : (மின்.) தடை மண்டலம் : ஓர் அணுவின் இணை திறனுக்கும், கடப்புப் பட்டைக்கும் இடையிலான ஒரு பகுதி
force : (எந்:இயற்.) விசையாற்றல் : ஒரு பொருள் நிலையாக இருக்கும்போது அல்லது இயங்கும் போது அதன்மீது செயற்பட்டு அதன் நிலையை மாற்றுகிற அல லது மாற்ற-முனைகிற ஆற்றல், இதற்குத் திசை, பயன்படுத்தப்படும் இடம், பரிமாணம் என மூன்று பண்பியல்புகள் உண்டு
force feed lubricators : (தானி; எந்.) விசையூட்டு உயவிடுவான்கள் : மூழ்குவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் எந்திர உறுப்புகளின் அமைப்பு முறை. இந்த உறுப்புகள், இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்புடைய சுழல்தண்டில் மேலும் கீழும் சென்று இயங்கும்
force feed of oil : (தானி; எந்.) எண்ணெய் விசையூட்டல் : விசையூட்டு என்பது ஒரு வகை உயவிடு அமைப்பு முறை. இதில் பிரதான தாங்கிகள், சலாகைத் தாங்கிகள், உந்துதண்டுத் தாங்கிகள் போன்றவற்றுக்கு விசையூட்டு மூலம் எண்ணெயைச் செலுத்துகிறது. இந்த மூன்றுக்கும் எண்ணெய் செலுத்தப்படும்போது முழு விசையூட்டு முறை எனப்படும்
force fit : (எந்.) விசைப் பொருத்தி : விசை மூலம் செய்யப்படும் பொருத்திணைப்பு. இதன் விளைவாக உறுப்புகள் ஒரு தனி அலகு போல் தோன்றுமாறு பொருந்த இணைக்கப்படுகின்றன
force plate : (குழை.) விசைத் தட்டம் : வார்ப்படத்தின் மூழ்கு அல்லது விசை முளை, செலுத்துச் செருகிகள், அல்லது செருகு காப்பிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தட்டம். இது பெரும்பாலும் நீராவி அல்லது நீர்க் குழாய்களுக்காகத் துரப்பணம் செய்யப்படுவதால், இதனை 'நீராவித் தட்டம்' என்றும் அழைப்பர் force plug : (குழை.) விசைச் செருகி : வார்ப்படக் குழி அச்சினுள் நுழைந்து வார்ப்புப் பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் வார்ப்படத்தின் பகுதி. இதனை மூழ்குதண்டு அல்லது உந்து தண்டு என்றும கூறுவர்
force pump : (எந்.) விசை இறைப்பி : ஒரு வெற்றிடத்திற்கு எதிராக வாயு மண்டல அழுத்தம் செயற்படுவதன் காரணமாக ஏற்படும் விசையினால் நீர் இறைக்கும் சாதனம்
forecooler : (குளி;பத.) முன் குளிர்விப்பான் : குளிர்பதன சாதனத்தில் பயன்படுத்துவதற்கு முன்னர் நீரைக் குளிர்விப்பதற்கான ஒரு சாதனம்
forging : (உலோ.) உலோக வடிவாக்கம் : உலோகங்களைக் காய்ச்சி அடித்து, வளைத்து இழுத்து தகடாக்கிக் குறிப்பிட்ட வடிவத்தில் உருவாக்குதல்
foreign matter : (குழை.) புறப்பொருள் : ஒரு பிளாஸ்டிக் பொருளில், அதன் சராசரி அமைப்பான் களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றும் பொருளின் துகள்கள்
foreman : மேன்முறையாள் : வேலை செய்து கொண்டே பிற தொழிலாளர்களைக் கண்காணிக்கும் பொறுப்புடைய ஒரு குழுமத்தின் பொறுப்பாளர்
fore plane ; (மர;வே.) முதற்படி இழைப்புளி : வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல்தள மட்டம் செய்யப் பயன்படும் கருவி
fore shortened : தொலைக் குறுக்க நோக்குப்பட வரைவு : தொலைக் காட்சியினால் குறுக்கப்பட்டது போன்று தோற்றுவிக்கும் வகையில் வரையப்பட்ட படம்
forge : (1) கொல்லுவேலை : கொல்லுலையில் உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல்
(2) உலைக்களம் : கொல்லரின் உலைக்களத்தில் தீ மூட்டும் துருத்தியுள்ள இரும்பினாலான அல்லது செங்கல்லினாலான கொல்லுலை
forge welding : உலைப்பற்ற வைப்பு : பற்ற வைக்க வேண்டிய உறுப்புகளை உலையில் தகுந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி அழுத்தம் செலுத்தி அல்லது அடித்துப் பற்றவைக்கும் முறை
forging brass : (உலோ.) உருக்குப் பித்தளை : செம்பு, துத்தநாகத் துடன் சிறிதளவு வெள்ளியமும், ஈயமும் கலந்த உலோகக் கலவை. இது வார்ப்பட உலைகளில் பயன்படுகிறது
forging press : (எந்.) உலையழுத்தக் கருவி : வார்ப்பட உலையில் தேவைப்படும் அழுத்தம் செலுத்துவதற்குப் பயன்படும் எந்திரம்
forgings : உலை வார்ப்புகள் : சுத்தியால் அடித்து வடிவாக்கம் செய்யப்பட்ட உலோகத் துண்டுகள்
'forked canter : (எந்.) கவர் மையம் : கூம்புடைய அல்லது நீண்ட பிடியுடைய கரண்டி. இது 'V' வடிவத் தலையும் உடையது. இது துரப்பணம் போன்ற நட வடிக்கைகளில் நீள் உருளை வடிவப் பொருட்களை நிலையில் பிடித்துக் கொள்ளப் பயன்படுகிறது
form : உருப்படிவம்/அச்சுருப்படிவம் : (1) வார்ப்படம் தயாரிப்பதற்காக ஒரு தோரணியில் சாந்து ஊற்றுவதற்கான ஒரு கலம் (2) காங்கிரீட் ஊற்றி தேவையான வடிவத்தைத் தயாரிப்பதற்கான கலம்
(3) அச்சிடுவதற்காகத் தளைச் சட்டத்தில் முறையாக வைத்து இறுக்கப்பட்ட அச்சுருப் படிவம்
form factor : (மின்.) வடிவக் காரணி : ஓர் மாற்று மின்னோட்ட அலையின் சராசரி அளவில் உள்ள படியான அளவின் வீத அளவு. அனைத்து நெடுக்கை அலைகளும் 1:11 என்ற வடிவக்காரணியை உடையவை
formaldehyde : (வேதி.) ஃபார்மால்டிஹைடு (HCHO) : நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்படும் தொற்று நீக்கு மருந்துகளில் மிகச் சிறந்தது. சாயப் பொருட்கள், மைகள், தோல் பதனிடுதல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது
format : நூல் வடிவளவு : அச்சிட்டு, கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு நூலின் வடிவம், அளவு, அச்செழுத்து முகப்பு, பக்க ஓர இடம், பொதுவான பாணி ஆகியவற்றைக் குறிக்கும் சொல்
formed plate : (மின்.) வடிவாக்கத் தகடு : ஒரு தனிவகைச் சேமக்கலத்திலுள்ள் தகடு.இது மின்னேற்றமும் மின்னிறக்கமும் செய்யும் முறையின் மூலமாக உருவாகிறது
forming process : (மின்.) வடிவாக்கச் செய்முறை : சேமக்கலங்களில், கந்தக அமிலத்திலும், நீரிலும் ஈயத்தகடுகளை மூழ்கச் செய்து, அவை ஈய ஆக்சைடாகவும் ஈயமாக ஆகும் வரையில் மின்னேற்றமும்,மின்னிறக்கமும் செய்து சேமக்கலம் உண்டாக்கும் செய்முறை
forming rolls : (உலோ; வே.) வடிவாக்கச் சுருள்கள் : பல்வேறு அளவு கனமுள்ள தகட்டு உலோகத்திற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய மூன்று தொடர் சுருள்கள். இவை தேவையான விட்டத்துடன் நீர் உருளைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன
forming tools : வடிவாக்கக் கருவிகள் : வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் எந்த வடிவத்தை உருவாக்க வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டுமுனைகள் அமைந்துள்ள கருவிகள்
form truck : (அச்சு.) அச்சுருப்படிவ ஊர்தி : கனமான அச்சுருப் படிவங்களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் இரு சக்கர ஊர்தி
formula : (கணி.) சூத்திரம் : கணிதத்தில், அல்லது இயற்கணிதத்தில், ஒரு கணக்கிற்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான கணிதச் செய்முறைகளைக் குறிப்பதற்கு முறைபட அமைக்கப்பட்ட இலக்கங்கள், எழுத்துக்கள், சைகைகள் குறியீடுகள் அடங்கிய வாய்ப்பாடு
form wound coil : (மின்.) வடிவச் சுற்றுச்சுருள் : ஒரு மரச்சட்டத்தில் அமைக்கப்படும் அல்லது வடிவாக்கம் செய்யப்படும் மின்னகச் சுருள் அல்லது சுருள். பின்னர் இந்தச் சுருள் மின்னகத்தில் முழுமையாக வைக்கப்படுகிறது
forward welding : (பற்ற.) முனைப் பற்றவைப்பு : சுடர்பிழம்பு சுட்டிக் காட்டுகிற உலோகத்தை உருக்குதல்
forwarding : (அச்சு.) முந்துறு கட்டுமானம் : புத்தகத் தாள்களை ஒன்று சேர்த்துத் தைத்த பிறகு, கட்டுமானம் செய்யும் முறை fouling : அடைப்புறுதல் : நீராவிக் கொதிக்கலன்களிலும் நீராவி நீளக் குழாய்களிலும் மேலேடு படிந்து அடைப்புறுதல். இதனால் எந்திரங்களிலும், உறுப்புகளிலும் பொதுவாக இயக்கம் பாதிக்கப்படும்
foundation : (க.க.) அடித்தளம் : கட்டிடத்திற்கு அல்லது சுவருக்குக் கீழே தரைமட்டத்திற்குக் கீழே போடப்படும் அடிப்படை ஆதாரம். இந்த அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானம் கட்டப்படுகிறது
foundation bolts : அடித்தள மரையாணி : எந்திரங்களை அல்லது கட்டமைவு உறுப்புகளை அவற்றின் அடித்தளத்துடன் இறுக்கிப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மரையாணிகள்
foundation plate : (பொறி.) அடித்தளத் தட்டம் : (1) ஓர் இறைப்பி, ஓர் எஞ்சின் அல்லது ஓர் இயக்கி இணைத்துப் பிணைக்கப்படும் ஒரு தட்டம் (2) வார்ப்படத் தொழிலில் வீச்சளவினை நிலைப்படுத்துவதற்காகக் கதிரைத் தாங்குவதற்கென வார்ப்படத்தின் அடிப்பகுதியில் வைக்கப்படும் வார்ப்பிரும்புத் தட்டம்
foundry : வார்ப்படச் சாலை : வார்ப்படத் தொழில் நடைபெறும் கட்டிடம் அல்லது இடம்
foundry sand : வார்ப்பட மணல் : வார்ப்படங்களில் தேவையான வடிவங்களைப் பெறுவதற்கு உருகிய உலோகத்தை ஊற்றுவதற்குப் பயன்படும் மணல்
fourdrinier : ஃபூர்டிரினியர் எந்திரம் : காகிதம் தயாரிப்பதற்காகப் பயன்படும் எந்திரம். இந்த எந்திரத்தின் உதவியால் முதன் முதலில் அச்சுத் தயாரிக்கப்பட்டது. இந்த எந்திரத்தை முதலில் கண்டுபிடித்தவர் லூயி ராபர்ட். இதனை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹென்றி மற்றும் சீலி ஃபூர்டிரினியர் என்பார் பிரியான் டோங்கின் உதவியுடன் சீரமைத்தார்
fournier : (அச்சு.) ஃபூர்னியர் : அச்செழுத்தில் அலகு முறையைக் கண்டுபிடித்த ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியர் சைமன் ஃபூர்னியர்
four pole : நாற்துருவம் : ஒரு விசையில் உள்ளது போன்று நான்கு தொடர்புகளை உடைய, ஒரு மின்னாக்கியில் உள்ளது போன்று நான்கு துருவங்களை உடைய
four-pole design : (தானி.) நாற்கோல் வடிவமைப்பு : நான்கு களக் கோல்களைக் கொண்ட மின்னாக்கி அல்லது தொடக்க இயக்கி
four-stroke cycle : (தானி.) நான்கடிச் சுழற்சி : எஞ்சினின் நான்கடிகளில் முடிவுறும் ஒரு விசைச் சுழற்சி உந்து வண்டியின் எஞ்சினில், கீழ்நோக்கிய முதல் அடி உள்ளிழுப்பாகவும், அடுத்த மேல்நோக்கிய அடி, அழுத்தத்தை அனுமதிப்பதாகவும், மூன்றாவது அடி எரியூட்டுதலாகவும் விரிவாக்கமாகவும், நான்காவது அடி வெளியேற்றமாகவும் அமையும்
fourway switch : (மின்.) நான்குவழி விசை : மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து மின்விசையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் விசை. இதற்கு மூவழி விசைகள் இரண்டும், மற்ற அனைத்தும் நான்குவழி விசைகளாகவும் அமைந்திருக்கும் four-wheel drive : (தானி.) நான்கு சக்கர இயக்கி : முன்னும் பின்னும் விசையியக்கம் தூண்டு கிற இருசுகளையுடைய ஓர் இயக்கி. இது நான்கு சக்கரங்களுக்கும் இயக்க விசையைச் செலுத்தும்
foxed : (தாள்.) உருவழிந்த : பூஞ்சணம்பற்றுவதால் காகிதம் உருவழிதல் அல்லது அதில் புள்ளிகள் விழுதல்
fox lathe : (எந்.) நரி கடைசல் எந்திரம் : திருகிழை வெட்டுவதற்கான செதுக்குச் சலாகை அல்லது நரி' உள்ள பித்தளை வேலைப்பாட்டுக்கான கடைசல் எந்திரம்
fraction : பின்னம் : (1) ஒரு பொருளின் சிறு கூறு. (2) கீழ்வாய் எண்
fractional distillation : (வேதி.) வடித்துப் பிரித்தல் : படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல்
fractional horizantal spacing : (கணிப்.) பகுமுறைக் கிடைநிலை இடைவெளி அமைப்பு
fractional verticle paper spacing : (கணிப்.) பகுமுறை செங்குத்துக் காகித இடைவெளி அமைப்பு
fracture : (உலோ. எந்.) முறிவு : உலோகங்கள் திடீர் அதிர்ச்சியினால் அல்லது அளவுக்கு மீறிய அழுத்தத்தினால் உடைந்து முறிதல்
frame : (க.க.) (1) நிலைச்சட்டம் : சன்னல்கள், கதவுகள் முதலியவற்றின் மரநிலைச் சட்டம் (2) மரச்சட்டம் : தளங்களையும் கூரைகளையும் தாங்கும்மரச் சட்டம் (3) சித்திர வேலைத் துணை வரிச்சட்டம் (4) அச்சுப்பக்க உருப்படிவச் சட்டம் (5) தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்திற்குரிய வரைத்தொகுதி (6) திரைப்படத்தில், 35 மி.மீ. அல்லது 16 மி.மீ. சுருளிலுள்ள முழுப்படம்
frame high : (க.க.) நிலைச்சட்ட உயரம் : சன்னல் அல்லது கதவுச் சட்டங்களின் மேல்நிலை உயரம். வாயில்-பலகணி அல்லது மேல் விதானம் அமைக்கப்பட வேண்டிய உயரம்
frame of a house : (க.க.) சட்டக வீடு : பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு
frame work : வரைச் சட்டம் : கட்டுமானம் செய்யப்படவிருக்கும் கட்டமைப்பின் புனையா வரைச் சட்டம்
framing : (தக்) உருவரைச்சட்டம் : ஒரு கட்டுமானத்தின் உருவரைச் சட்டம். அதனைக்கட்டுகின்ற செயல்
framing control : உருப்படிவக் கட்டுப்படுத்தி : தொலைக்காட்சியில் படத்தின் மறுபகர்ப்பு வீதத்தை அனுப்பீட்டுக் கருவிக்கு இயைபாக நேரமைவு செய்வதற்கு அனுமதிப்பதற்கு ஒளிவாங்கிப் பெட்டிலுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம்
fraying : (நூ.க.) புரியவிழ்த்தல் : ஒரு நூலுக்கு நுனிமுனை அமைப்பதற்கு ஆயத்தமாக மூட்டு நூல் இழைகளை அல்லது கட்டுத் தளைகளைப் பரவலாக்குதல்
free : (தாள்.) நீர்க்கட்டிலாக் காகிதம் : நீரிலிருந்து எளிதாகப் பிரித்தெடுக்கப்படும் காகிதப் பொருள் free balloon : (வானூ.) தடையிலாப் பலூன் : ஒரு கோள் வடிவப் பலூன். இதன் ஏற்றமும் இறக்கமும் அடிச்சுமை அல்லது வாயு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பலூன் பறக்கும் திசை காற்றினால் தீர்மானிக்கப்படுகிறது
free burning coal : எளிதில் எரியும் நிலக்கரி : இந்த நிலக்கரி எரிந்தாலும், ஒன்றாக இணைந்து இளகுவதில்லை; மாறாகச் சூடாகும் போது ஒரு பசைத் திரள் உண்டாகிறது
free burning mixture : (தானி.) எளிதில் எரியும் கலவை : எடையில் காற்றைப் போல் பெட்ரோலின் 12-16 மடங்கு அல்லது கன அளவில் காற்றைப்போல் 9,000 மடங்கு கொண்ட ஒரு கலவை; அதன் பொருள் திரட்சியில் எங்கு தீப்பற்றினாலும் அந்தத் திரள் முழுவதிலும் ஒரே சமயத்தில் தீப்பற்றி எரியக்கூடியது
free end : தனி இயக்க முனை : ஒற்றைத் தாங்கியில், எதனுடனும் பொருத்தப்படாமல் தனித்து இயங்கக்கூடிய முனை
free fit : (எந்.) தன்னியக்கப் பொருத்திகள் : எந்திர உறுப்புகள் தங்குதடையின்றி இயங்குவதற்கு அனுமதிக்கும் பொருத்திகள்
free flight rocket : (or.) தன்னியக்க ராக்கெட் : மின்னணுவியல் கட்டுப்பாடு அல்லது வழிச் செலுத்தம் இல்லாமல் பறக்கும் ராக்கெட்
freehand : கை வரைவு : கருவிகளின்றி இயல்பாகக் கையினால் வரைதல்
freestone : (க.க.) மாக்கல் : பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல் வகை
free wheeling : (தானி.) இயல்புச் சக்கர இயக்கம் : இரண்டாவது உயர் பல்லிணை ஒருங்கிணைப்பில் பொருத்தப்பட்டுள்ள விஞ்சியோடும் ஊடிணைப்பி. இது, எஞ்சின் வேகம் எவ்வாறிருப்பினும், எளிதாக இயங்குவதற்கு அனுமதிக்கிறது
freezer : (குளி.பத.) உறைவுச் சாதனம் : அழுகும் பொருள்களை உறையவைக்கும் ஒரு சாதனம். இது பொதுவாக 30°F வெப்ப நிலைக்குக் குறைவாக வெப்பமுள்ள ஒரு குளிர் சேம அறையாக இருக்கும்
freezing-mixture : உறைவுக் கலவை : பொருட்களை உறையும்படி செய்யும் கலவைப் பொருள்
freezing point : (குளி.பத.) உறைநிலை : ஒரு திரவம் உறைந்து திடப்பொருளாகும் வெப்பநிலை
french curve : வளை கோடு வரைவான் : கவான்கள் அல்லாத வளைகோடுகளை வரைவதற்கு வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. இதனைப் பொதுமுறை வரைகோடு வரைவான் அல்லது சீரற்ற வளைகோடு வரைவான் என்றும் கூறுவர்
french fold : (அச்சு.) ஃபிரெஞ்சு மடிப்பு : செங்குத்தாகவும் கிடைமட்டத்திலும் காகிதத்தை மடித்தல்
french folio : (அச்சு.) ஃபிரெஞ்சு மென்தாள் : பார்வைப் படிகள் எடுப்பதற்குப் பயன்படும் இலேசான எடையுடைய மெல்லிய தாள்
french seam : ஃபிரெஞ்சுத் தையல் விளிம்பு : நிமிர் நேர்வான தையல் மூட்டுவாய்
french window : (க.க.) ஃபிரெஞ்சுப் பலகணி : இரட்டைப் பலகணிச் சட்டம். இது தளம் வரையிலும் நீண்டிருக்கும். இது புகுமுக மண்டபத்திற்கு அல்லது மேல் தளத்திற்கு வாயிலாகவும் பயன்படும்
frequency : (மின்.) அலைவெண் : (1) ஒரு மாறு மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் ஏற்படும் இரட்டை அதிர்வுகளின் எண்ணிக்கை
(2) தொலைக்காட்சியில் ஓர் அலகு நேரத்தில் அதிர்வுகளின் அல்லது சுழற்சிகளின் எண்ணிக்கை. வானொலி அலைகள் குறைந்த அலைவெண்களும் நுண்ணலைகளும் உடையவை
frequency departure : (மின்.) அலைவெண் மாற்றம் : அலைவெண் மாற்றத்தில் அலைவெண் மாற்றம் காரணமாக மைய அலைவெண்ணிலிருந்து உடனடியாக ஏற்படும் மாறுதல்
frequency deviation : (மின்.) அலைவெண் விலக்கம் : அலை வெண் மாற்றச் சைகையின் உச்சி நிலையின்போது மைய அலை வெண்ணிலிருந்து மிக அதிக அளவில் ஏற்படும் விலகல்
frequency meter : (மின்.) அலைவெண் அளவி : ஒரு மாறு மின்னோட்ட மானி. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் சுற்றின் அலைவெண்ணை இது நேரடியாகக் குறித்துக் காட்டும்
frequency modulation(தொலை) அலைவெண் மாறுபாடு: பேச்சுக்கும் பாட்டுக்கும் இசைந்த வானொலி அனல் அதிர்வின் மாறுபாடு
frequency response : (மின்.) அலைவெண் உடன் விளைவு : ஒரு குறிப்பிட்ட அலைவெண் வீச்சின் போது செயற்படும் திறனைக் காட்டும் கருவியின் திறனளவு
frequency swing : (மின்.) அலைவெண் ஊசல் : மிக அதிக அளவிலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு அலைவெண்ணின் மொத்த ஊசலாட்டம், இது அலைவெண் விலக்கத்தைப்போல் இருமடங்குக்குச் சமம்
frequency tripler : (மின்.) அலைவெண் முப்பெருக்கி : தகட்டு மின் சுற்று வழியில் அலைவெண் மும்மடங்காகப் பெருக்கப்பட்டுள்ள மின் மிகைப்பு நிலை
fresco : (க.க) சுவர்க்கோல ஓவியம் : ஈரச்சாந்தினைக் கொண்டு ஒவியந் தீட்டும் முறை. இதனைத் தவறுதலாக, உலர்ந்த சுவரில் ஓவியம் வரைவதைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்
fresh air inlet : (கம்.) காற்றோட்ட வாயில் : வீட்டின் வடிகாலிலிருந்து மேல் நோக்கி மாசுற்ற காற்றைக் கொண்டு செல்லும் இணைப்புக் குழாய்
fret : அரிவரிச் சித்திரவேலைப்பாடு : நேர்வரைச் செங்கோணத்தொடர்புக் கோலமான செதுக்கு வேலைப்பாடு
fret saw : சித்திர வேலை இழைவாள் : சித்திரச் செதுக்கு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்
friable : தகர்வுறு : எளிதில் தகர்ந்து விழக்கூடியது
friction : (இயற்.) உராய்வு : ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது நழுவிச் செல்வதைத் தடுக்க முயலும் ஆற்றல். உராய்வு விசையை விட ஒரு விசை அதிகமாக இருந்தால், அது உராய்வினை விஞ்சி, பொருளை நகரும்படி செய்யும், இயக்கத்தடையாற்றலானது, மேற்பரப்புகளுக்கிடையிலான விசையினை உராய்வுக் குண கம் என்ற இலக்கத்தினால் பெருக்கிய விசைக்குச் சமம். உராய்வுக் குணகம் வெவ்வேறு பொருள்களுக்கும், வெவ்வேறு மேற்பரப்பு களுக்கும் வெல்வேறு அளவில் இருக்கும்
friction calender : (தாள். ) உராய்வு உருளை : காகிதத்தை மழமழப்பாக்குவதற்கு வெவ்வேறு வடிவளவுகளில் உருளைகளைக் கொண்ட ஓர் எந்திரம்
friction catch : (அக.) உராய்வுப்பற்றுக்கொளுவி : அறைகலன்களின் சிறிய கதவுகளைப் பூட்டாமல் இறுக மூடிவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாதனம். இதில் ஒரு வில் சுருளும் நுழைவு குண்டலமும் அமைந்திருக்கும்
friction coupling : (எந்.) உராய்வு இணைப்பி : உராய்வுத் தொடர்பு மூலம் செயற்படும் இணைப்பிகளின் வகையைச் சேர்ந்த ஒன்று
friction disk : உராய்வு வட்டு : உராய்வு இயக்கமுடைய ஒரு வட்டு
friction drive : (எந்.) உராய்வு இயக்கி : உராய்வுத்தொடர்புமூலம் விசையை அனுப்பீடு செய்தல்
friction feed : (கணிப்.) உராய்வு ஊட்டுமுறை
friction of motion : (எந்.)இயக்க உராய்வு : ஒரு சமதளப் பரப்பில், திட, கோள அல்லது நீள் உருளைப் பொருள் எதனையும் இயங்கச் செய்தபின் அது தொடர்ந்து இயங்கும்படி செய்வதற்காக விசையினால் கட்டுப்படுத்தவேண்டிய உராய்வு
friction of rest : (எந்.) ஆதார உராய்வு : திட, கோள அல்லது நீள் உருளை வடிவப்பொருள் எதனையும் ஒரு சமதளப் பரப்பில் சறுக்கி அல்லது உருண்டு செல்லும்படி செய்வதற்கு விசையினால் கட்டுப் படுத்தவேண்டிய உராய்வு
friction tape : (மின்.) உராய்வு நாடா : மின் கடத்திகளில் புரியிணைவினைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படும் ரப்பர் நாடாவைக் காப்பிட்டு வைப்பதற்குப் பயன்படும் செறிவூட்டிய பஞ்சினாலான மின்காப்பு நாடா
friction wheel : உராய்வுச் சக்கரம் : உராய்வு மூலம் இயக்கப்படும் சக்கரம். இதில், வழுவழுப்பான அல்லது வரிப்பள்ளமிட்ட பரப்புகளிடையில் மட்டுமே தொடர்பு ஏற்படும்போது இயக்கம் உண்டாகிறது
friesland design : ஃபிரிஸ்லாந்து வடிவமைப்பு : ஆலந்து நாட்டிலுள்ள ஃபிரிஸ்லாந்து பகுதியில் தட்டையான செதுக்குப் பரப்பில் செய்யப்படும் கோண மற்றும் வட்ட வடிவமைப்பு
frieze : (க.க.) ஒப்பனைப் பட்டை : கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள சிற்ப வேலைப்பாடுள்ள பகுதி. ஒரு சுவருக்குச் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள எழுதகத்தின் கிடைமட்ட உறுப்பு
frise aileron : (வானூ.) மிகு இழுவைச் சிறகு : அச்சுக்கு முன்னதாக மூக்குப்பகுதியையும், சிறகின் கீழ்ப் பரப்புக்குச்சமநிலையில் கீழ்ப்பரப்பினையும் கொண்டுள்ள விமானச் சிறகின் ஓரமடக்கு. இதனை இழுத்துச் செல்கிற முனை உயர்த்தப் படும்போது, மூக்குப்பகுதி, சிறகின் கீழ்ப்பரப்புக்குக் கீழே நீண்டு சென்று இழுவையை அதிகரிக்கிறது
frisket : (அச்சு.) குறுக்குச் சட்டம் : அச்சுக்கலையில் தாள் நிலைத் திருக்க உதவும் குறுக்குப் பட்டைகள் வாய்ந்த மெல்லிய இரும்புச் சட்டம் frithstool : (அ.க.) கூம்பு முக்காலி : ஆங்கிலோ-சாக்சன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டமான முக்காலி
fritted : (மட்.) கண்ணாடிக் கலவையாக்கிய : கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியல் கலவைப் பொருளாக்குதல். தூளாக்கிய பொருளை உருக்கித் திடீரெனக் குளிரவைப்பதன் மூலம் இந்தக் கலவை கிடைக்கிறது
frontispiece : (நூ.க.) முகப்புப் படம் : ஒரு நூலின் பெயர் முகப்புப் பக்கத்திற்கு எதிர்ப்புறத்திலுள்ள படம்
front-wheel drive : (தானி.) முன்சக்கர இயக்கம் : இயங்கும் செலுத்து அச்சுகள் முன்புற முனையிலுள்ளவாறு அமைத்தல். இதில் பின்புற அச்சுகள் இயங்குவதில்லை
frosting : (குழை.) உறைபனி உருவாக்கம் : ஒரு பிளாஸ்டிக்கின் பரப்பில் உறைபனி போன்ற படிகத் தோரணித் தோற்றம் அமைத்தல்
frozen batteries : (தானி.) உறை மின்கலத் தொகுதி : ஒரு மின்கலத் தொகுதி முழுமையாக மின்னிறக்கம் செய்யப்படும்போது வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் கணிசமாக இருக்குங்கால் அது உறைந்துவிடும். குளிர்காலத்தில், உந்துவண்டியினை உடனடியாக ஓட்டுவதாக இருந்தாலன்றி அதன் மின்கலத் தொகுதியில் நீர் படக்கூடாது. அப்படிப் படுமாயின், நீர் மேற்பகுதியில் தேங்கி உறைந்துவிடும்
frozen iron : (வார்.) உறை இரும்பு : திண்மமாகிய இரும்பு, இது ஊற்ற முடியாத அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்
frustum : (வடிக.) அடிக்கண்டம் : அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வடிவில், குவி பரப்பு = மேல் அல்லது அடி ஆதாரங்களின் சுற்றளவுகளின் கூட்டுத் தொகை + 1/2 சாய்வு உயரம்.முழுப் பரப்பு = குவி பரப்பு + மேல் ஆதாரப் பரப்பு + கீழ் ஆதாரப் பரப்பு. கன அளவு = கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்பளவுகளின் கூட்டுத் தொகை + கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்புகளின் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் x அடிக்கண்டத்தின் செங்குத்து உயரத்தின் பகுதி
fue : எரி பொருள் : விறகு, நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்ற எரிபொருட்கள். இவை, தீமூட்டுவதற்கு அல்லது எஞ்சினை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன
fuel by-pass regulator : (வானூ.) எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி : அதிமின்னேற்றிய எஞ்சினில், எரிவளி கலப்பி அறையில் அதிலுள்ள காற்றழுத்தத்திற்குமேல் ஒரு குறிப்பிட்ட அளவுதகு எரிபொருள் அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான ஒரு சாதனம்
fuel consumption : (வானூ.) எரிபொருள் நுகர்வு : ஒரு தடை குதிரைத் திறன் - மணியின்போது நுகரப்படும் எரிபொருளின் அல்லது எண்ணெயின் எடையளவு
fuel dope : (வானூ.) எரிபொருள் மசகு : விமானத்தில் வெடிப்பினை மட்டுப்படுத்துவதற்காக எரிபொருளுடன் சிறிதளவில் கலக்கப்படும் பொருள் fuel level indicator : (தானி.) எரிபொருள் மட்டமானி : எரிபொருள் கலத்திலுள்ள எரிபொருள் அளவினைச் சுட்டிக்காட்டும் சாதனம்
fuel lock : (தானி.) எரிபொருள் அடைப்பு : பார்க்க ஆவியடைப்பு
fuel pump : (தானி.) எரிபொருள் இறைப்பி : எரி-வளி கலப்பி அறைக்குள் எரிபொருளைச் செலுத்துவதற்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு உந்துதண்டு அல்லது இடையீட்டுத் தகடு மூலம் இயக்கப்படும் ஒரு சாதனம்
fuel-tank vent : (வானூ.) எரிபொருள் கலப்புழை : விமானத்தில் எரிபொருள் கலத்திலிருந்து உபரி எரிபொருளை வெளியேற்றி அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திடப் பயன்படும் ஒரு சிறிய குழாய்
fugitive colours : நிலையற்ற வண்ணம் : ஒளிபட்டால் நிலைத்து நிற்காத வண்ணங்கள்
fulcrum : (எந்.) ஆதாரம் : நெம்பு கோலின் தாங்குநிலை இயக்க ஆதாரம்
full annealing : முழுமையான பதப்படுத்தல் : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலைக்கு அதிகமாகச் சூடாக்கி, ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு அதே வெப்பநிலையில் வைத்திருந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆறவைத்தல் மூலம் பதப்படுத்துதல்
fuller : இரும்புப் பள்ளம் : இரும்பை உருவாக்கும் கொல்லுலைப் பள்ளம்
fuller faucet : (கம்.) மிடாக் குழாய் : ஒரு மிடாவில் திறப்புக்காக ரப்பர் பந்து உள்ள ஒரு குழாய்
fuller's earth : வண்ணான் காரம் : துணிகளை வெளுப்பதற்குச் சலவையாளர்கள் பயன்படுத்தும் ஒருவகைக் களிமண்
full floating axle : (தானி.) முழு மிதவை அச்சு : இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்தில் பொருத்தி வைக்கப்படுகிறது. சுழல் தண்டு அகற்றப்பட்டு, சுழில் தண்டு வெளியே இழுத்து எடுக்கப்படுகிறது. சில உந்து வண்டிகளில் ஒரு வில்வளையும் சக்கரக்குடத்தின் காடியினுள்ளும், சுழல் தண்டின் கொளுவியினுள்ளும் பொருத்தப்படுகிறது. இதனால் குடத்து மூடியில் அச்சு உராய்ந்துவிடாமல் தடுக்கப்படுகிறது
full gilded : முழு மெருகேற்றிய நூல் : மூன்று விளிம்புகளும் மெருகேற்றப்பட்டிருக்கும் நூல்
fulling or milling : கம்பளி வெளுப்பாலை : கம்பளித் துணிகளை வெளுக்கும் ஆலை
full load : (வானூ.) முழுச்சுமை : விமானம் காலியாக இருக்கும் போது எடையுடன் சேர்த்து பயனுறும் எடை. இதனை "மொத்த எடை" என்றும் கூறுவர்
full point : (அச்சு.) முற்றுப் புள்ளி : அச்சுக்கலையில் ஒரு நிறுத்தற் குறியீடு
full size : முழு வடிவளவு ஓவியம் : முழு உருவத்தின் அளவுக்கு வரையப்படும் ஒவியங்கள்
full thread : (எந்) முழுத்திரு கிழை : வேண்டிய ஆழத்திற்குத் துல்லியமாகவும் கூர்மையாகவும் வெட்டப்பட்டுள்ள மரையாணியின் திருகிழை
fully formed characters : (கணிப்.) முழு வடிவாக்கிய வரி வடிவங்கள்
fully formed character serial printer : (கணிப்.) முழு வடிவாக்கிய வரிவடிவத் தொடர் வரிசை அச்சடிப்பான்
fuming :(மர.வே.)மர முதுமையாக்கம் : வேதியியல் இயைபால் புகையெழுப்பி வெட்டுமரத்திற்கு முதிர்ச்சியூட்டுதல்
fuming sulphuric acid : (வேதி.) புகையும் கந்தக அமிலம் பெட்ரோலியத்தைச் சுத்திகரிப்பதற்குப் பயன்படும், எண்ணெய் போன்ற தோற்றமுடைய பசைத்திரவம். இது வெடிபொருட்கள், சாயப் பொருட்கள். காலணி மெருகு முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது
function : (தானி.) சார்பலன் : ஓர் எந்திரத்தின் சார்பலன் என்பது அதன் தனித்தனிச் செயற்பாடுகளின் கூட்டுத் தொகையாகும்
functional disorder : (உட.) உறுப்பியக்கக் கோளாறு : உடலின் ஓர் உறுப்பு இயங்கத் தவறுவதால் ஏற்படும் நோய். எடுத்துக்காட்டு; அஜீரணம்
functional view point: (தானி.) செயல் முறை நோக்கு : ஒரு பொருளின் அல்லது சாதனத்தின் ஒரு செயல் முறையின் குறிக்கோள்
fundamental frequency : (இயற்.) அடிப்படை அலைவெண் : ஒரு சுரத்தின் ஒலி அலை என்பது முக்கியமாக ஓர் அலைவெண் (அடிப்படை அலைவெண்) ஆகும். அதே சமயம், அந்தச் சுரம், அடிப்படை அலைவெண்ணின் இரண்டு, மூன்று மடங்கு அலைவெண்களையும் கொண்டிருக்கும். அதே போன்று, ஒரு மாற்று மின்னோட்டம் அல்லது மின்னியல் அலையும் முக்கியமாக அடிப்படை அலை வெண்ணாக இருக்கும். எனினும், உயர்ந்த அலைவெண்களின் பகுதிகளைக் கொண்டிருக்கும்
fungus :(தாவ.) காளான் : மட்கிய உயிர்ப்பொருள் மீது வரும் நாய்க் குடை, பூஞ்சணம், பூஞ்சக்காளான் புள்ளிப் பூஞ்சை, கருங்காளான் முதலியவை. இவை விதைகளினால் அல்லாமல், நுண்துகள்கள் மூலம் முளைக்கின்றன. இவற்றில் பச்சையம் இருப்பதில்லை
funnel : (பொறி.) (1) புனல் : ஒரு கொள்கலத்திலிருந்து இன்னொரு கொள்கலத்திற்கு திரவங்களை எளிதாக ஊற்றுவதற்குப் பயன்படும் ஒரு முனையில் கூம்பு வடிவ ஊற்று வாயுடைய புனல். (2) புகை வாயில்: நீராவிக் கப்பல்களில் பயன்படுவது போன்ற புகை வாயில்
furlong : ஃபர்லாங் : ஒரு மைல் தொலைவில் எட்டில் ஒரு பகுதி; 220 கஜ நீளம்; 660 அடி, 201மீ
furnace : (பொறி.) உலை : நீரைச் சூடாக்குவதற்கும், உலோகங்களையும் மற்றப் பொருட்களையும் உருக்குவதற்கும், பல்வேறு பொருட்களையும் சூடாக்குவதற்கும், உலர்த்துவதற்கும், வதக்குவதற்கும் எரிபொருள் எரிக்கப்படும் கணப்பு அடுப்பு உள்ள இடம்
furnace brazing : உலை இணைப்பு : உலையிலிருந்து வரும் வெப்பத்தினால் பொடி வைத்து இணைத்திடும் ஒரு செய்முறை
furniture : அறைகலன் : ஒரு கட்டிடத்திலுள்ள மேசை, நாற்காலி போன்ற அலங்காரத் தட்டுமுட்டுப் பொருள்கள் அச்சுக்கலையில் அச்சுப் படிவங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் மரத்துண்டு அல்லது உலோகத்துண்டு
furniture fenders : அறைகலன் நீள் தாங்கி : அறைகலன்களுடன் இணைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆணி அல்லது திருகுழுனையுடன் கூடிய அரைவட்ட வடிவ ரப்பர் தாங்கிகள்
furniture glides : (அ.க.) அறைகலன் சறுக்கு : மேசை, நாற்காலி போன்றவற்றின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கிண்ணம் போன்ற உலோகத்துண்டுகள். இவற்றின் குவிவான பக்கம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பேர்து அறைகலன்களைச் சத்தமின்றி எளிதாக இடம் விட்டு நகர்த்தலாம்
furring : (க.க.) தளச்சமனம் : நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்ததுல்
furring strips : (க.க.) சமனப் பட்டைகள் : கடைசல் எந்திரத்தில் உள்ளது போன்று ஒரு பரப்புடன் இணைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகள்
fuse : (மின்.) மின்காப்பு உருகி : எல்லை மீறிய மின் வலியில் உருகி இடர் தடுக்கும் மின் இடையிணைப்பான உருகு கம்பி
fuse block : (மின்.) மின்காப்பு உருகிப்பெட்டி : மின்காப்பு உருகி கன்ளப் பற்றி வைத்துக் கொள்வதற்காக உருகி ஊக்குகளைப் பிணைப்பதற்கான ஆதாரப் பெட்டி
fuse clips : (மின்.) மின்காப்பு உருகி ஊக்குகள் : வெடியுறை உருகியின் உலோகப் பூண்களைக் கொண்டிருக்கும் விசையின் விற்சுருள் பகுதி
fuselage : (வானூ.) விமானச் சட்டம் : விமானத்தின் கட்டுமானச் சட்டம். இதனுடன் சிறகுகளும் வால்பகுதியும் இணைக்கப்படுகிறது
fuse link : (மின்.) உருகி இணைப்பு : வெடியுறை உருகியிலுள்ள உருகக்கூடிய பகுதி
fuse plug : (மின்.) உருகிச்செருகி : பார்க்க: செருகி உருகி
fuse wire : (மின்.) உருகிக் கம்பி : குறைந்த வெப்பநிலையில் உருகக் கூடிய ஓர் உலோகக் கலவையினாலான கம்பி
fusibility : உருகுதிறன் : ஓர் உலோகம் திட நிலையிலிருந்து ஆருதித் திரவ நிலை அடையுந்திறன்
fusible alloys : (வேதி.) உருகும் உலோகக் கலவைகள் : ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு வெப்ப நிலையில் உருகக்கூடிய உலோகக் கலவைகள்
fusible plug : உருகும் செருகி : எளிதில் உருகக்கூடிய மென்மையான உலோகத்தினால் அல்லது உலோகக் கலவையினாலான ஒரு செருகி. இது பித்தளை வார்ப்படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும். இது நீராவிக் கொதிகலத்தின் உலைமுகட்டில் பொருத்தப்பட்டிருக்கும். உலை முகட்டின் அளவுக்கு மட்டம் தாழ்வுறும்போது, இது உருகும். இதனால் வெளியேறும் நீரும் நீராவியும் தீயை அணைத்து விடும்
fusing point : உருகுநிலை : உலோகங்களும், உலோகக் கலவைகளும் உருகித் திரவமாகும் வெப்பநிலை
fusion : (இயற்.) உருகிணைப்பு : மிகப் பெருமளவு வெப்பத்தின் மூலம் அணுவின் உட்கருக்களைச் சிதைத்து ஒருங்கிணைத்தல்
fusion : (விண்.) கூட்டிணைவு : ஆற்றலை வெளியிடுவதற்காக அணுக்கள் ஒன்றாகக் கூடி இணைதல்
fusion bomb : நீர் வாயுக் குண்டு : அணுவின் கரு உட்சிதைவினால் ஆறறல் பெறும் குண்டு வகைகளில் ஒன்று
fusion : (பற்ற.) உருகிய பிழம்பு :உருகி இளகிய உலோகங்களின் கூட்டுக் கலவை
fustic : (தாவ.) மஞ்சள் மரம் : மஞ்சள் சாயமாகப் பயன்படுத்தப் படும் வெப்ப மண்டலத்து மர வகை
fuzz : (தாள்) காகிதப்பஞ்சுப்படலம் : காகிதங்களில் பஞ்சு போன்ற தலை முடிபோல் தோன்றும் ஒரு படலப் பொருள். இது தனித்தனி இழைகளினால் உண்டாகிறது gable (க.க.) மஞ்சடைப்பு: இறை வாரங்களுக்கு மேலுள்ள புறச்சுவரின் முக்கோணக் கோடி.
gable moulding : (க.க) மஞ்சடைப்பு வார்ப்படம் : ஒரு மஞ்சடைப்பினை முடிவுறுத்துவதற்குப் பயன்படும் வார்ப்படம்.
gable roof : (க.க.) மஞ்சடைப்பு முகடு : ஒரு மஞ்சடைப்பில் முடிவடைகின்ற நீள்வரைக் கூறுகளாயமைந்த கூரை.
gadget : (பொறி.) சிறு பொறி : சிறிய கையடக்கமான கருவி அல்லது சாதனம்.
gaggers : (வார்.) மேற்கட்டி ஆதாரங்கள் : மேற்கட்டியிலுள்ள மணலுக்கு வலுவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உலோக ஆதாரங்கள். தரையில் வார்ப்படங்கள் செய்யத் தொங்கிக் கொண்டிருக்கும் மணற் பொருள்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
gain : (மர.வே.) துளைப் பொருத்து : உத்தரத்தின் முனையைப் பொருத்துவதற்கு மரத்தில் வெட்டப்படும் துளைப்பொருத்து.
galaxy : (விண்.) வான்கங்கை : கோடிக்கணக்கான சூரியன்களும், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்களும், ஒண்மீன் படலங்களும் அடங்கிய வான்கங்கை. பூமியின் சூரியன் இதனைச் சார்ந்தது. இதனை பால்வீதி மண்டலம் என்றும் அழைப்பர்.
galena : (கணி.) கேலினா : ஈயத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள். இது ஒரு சல்பைடு. இது ஈயமும் கந்தகமும் கலந்த கலவை. இதில் 8.5% ஈயம் கலந்திருக்கும்
gali-bladder : (உடலி) பித்தப்பை : நுரையீரலில் சுரந்து, இரைப்பை கொழுப்புப்பொருள்களைச் சீரணிப்பதற்குப் பயன்படும் பசும்பழுப்பு நிறமுடைய பித்தநீர் என்ற திரவத்தின் கொள்கலன்
gallery : (க.க.)
(1) படியடுக்கு மேடை: இருபுறமும் கட்டிட அறை வாயில் பலகணிகளையுடைய இருக்கைப் படியடுக்கு வரிசை மேடை
(2) கலைக்கூடம் : கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கலைக் காட்சிக்கூடம்
galley: (அச்சு.) அச்செழுத்துத் தட்டு: அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.இது மரத்தினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டிருக்கும்
galley lock: (அச்சு) அச்செழுத்துப் பிடிப்பான்: அச்செழுத்துத் தட்டிலிருந்து பார்வைப்படிகள் எடுக்கப்படும் போது, அச்செழுத்துக்களை இறுகப் பிடித்துக் கொள்ளும் ஒரு சாதனம்
galley press: (அச்சு) பார்வைப் படி அச்சு எந்திரம்: பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படிகள் எடுப்பதற்குப் பயன்படும் ஓர் அச்சு எந்திரம். இதில், ஓர் ஆதாரமும், தடத்தில் ஓடும் கனத்த உருளையும் இருக்கும்
galley proof: (அச்சு) அச்சுப் பார்வைப்படி:பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படி
galley rack; (அச்சு) அச்செழுத்துத் தட்டடுக்கு: அச்செழுத்துத் தட்டுகளை வைப்பதற்குப் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட அடுக்கு
gallic acid: (வேதி.) காலிக் அமிலம்/காழகிக் காரம்: [C6H2(OH)8COOH]: மரவகைக் கரணைலிருந்து எடுக்கப்படும் மணிக்கார வகை. இது நிறமற்றதாக அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். படிக ஊசிகளாக அல்லது பட்டகைகளாக அமைந்திருக்கும். இதன் வீத எடைமான 1.694: உருகுநிலை 222°C முதல் 240°C வரை. ஒளிப்படக் கலையிலும், மை, சாயம், மருந்து முதலியன தயாரிக்கவும் பயன்படுகிறது
galling: (உலோ.) ஒட்டுதல்: உலோகங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது அவை ஒன்றையொன்று பற்றிக் கொள்ளுவது உலோகங்களின் இயல்பு. உராய்வுப்பொருள் இன்றி அழுத்தத்தின் கீழ் இல்வாறு ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும் தன்மையுடைய பொருள் ஒட்டுப் பொருள் எனப்படும்
galli-pot: சாடி: தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட் பாண்டம்.
gallon: காலன்: நீர்மப் பொருள்களை, அளவிடுவதற்குரிய முகத்தலளவை அலகு. 4 குவார்ட்ஸ், 8 பிண்டுகள், 231 கன அங்குலம் அளவுடையது
galloon : கட்டு இழைக்கச்சு : ஆடை விளிம்பில் இணைக்கப்படும் கசவாலான இழைக்கச்சு
galvanic action (வேதி) மின்னியக்க வினை : நேர்மின் உலோகங்களுக்கும், எதிர்மின் உலோகங்களுக்குமிடையிலான இயக்க வினை. இதன் காரணமாக நேர் மின் உலோகம் வீணாகிறது. குறிப்பாக இரும்பும், செம்பும், அல்லது பித்தளையும் இரும்பும் அமிலங்கலந்த நீரில் ஒன்றாக இருக்கும்போது இந்த வினை நடைபெறுகிறது
galvanic corrosion : (உலோ ) மின்னியக்க அரிமானம் : அதிகம் துருப்பிடிக்காத உலோகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது இன்னொரு உலோகம் விரைவாக அரித்தழிக்கப் படுதல். எடுத்துக்காட்டாக எஃகும் செம்பும் கடல் நீரில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்குமாயின், எஃகு விரைவாக அரிமானத்திற்குள்ளாகும்; செம்பு பாதுகாப்பாக இருக்கும்
galvanize : நாகப்பூச்சு : இரும்புக்கு துத்தநாகத்தால் மேற் பூச்சிடுதல். இது மின்னியல் செய்முறையால் செய்யப்படுவதில்லை. உருகிய துத்தநாகத்தில் இரும்பை அமிழ்த்து எடுத்தாலே இரும்பில் துத்தநாகப்பூச்சு ஏற்பட்டுவிடும்
galvanized iron: நாகப்பூச்சு இரும்பு: துருப்பிடிக்காமலிருப்பதற்காக துத்தநாகத்தால் மேற்பூச்சு பூசப்பட்ட இரும்பு. இதில், இரும்பினைச் சுத்தம் செய்து உருகிய துத்தநாகத்தில் அமிழ்த்து எடுக்கப்படுகிறது.இது மின்னியல் செய்முறையால் நடைபெறுவதில்லை
galvanized sheets : நாகப்பூச்சுத் தகடுகள் : துத்தநாகத்தால் மேற் பூச்சு பூசப்பட்ட இரும்புத்தகடுகள். இது 51செ.மீ.முதல் 76செ.மீ. ஆகலமும் 244செ.மீ.நீளமும் உடையதாக இருக்கும்
galvanizing : நாகப்பூச்சிடுதல்: இரும்பு துருப்பிடிக்காமல் துத்த நாகத்தால் மேற்பூச்சு பூசுதல்
galvanometer : (மின்) மின்னோட்டமானி : சிறிதளவு மின்னோட்டத்தையும் காட்டுவதற்கான ஒரு கருவி gambrel roof : (க.க) விரிகோணச் சாய்வுமுகடு: விரிகோணத்தில் சாய்வுடைய ஒரு கூரை
gamma : (மின்.) காமா : ஒரு பொதுச் சேமிப்பான் இணைக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவைக் குறிக்கும் குறியீடு. இது, சேமிப்பான் அழுத்தம் நிலையாக இருக்கும் போது ஆதாரமின்னோட்டத்தில் ஏற்படும் ஒரு வீத அளவுக்குச் சமமாகும்
gamma rays : (இயற்) காமாக் கதிர்கள்; காமாக் கதிரியக்கம்: மிகக் குறுகிய ஒளிக்கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள்
gang drilling machine : கூட்டுத் துரப்பண எந்திரம் : பல கதிர்களைக் கொண்ட துரப்பண எந்திரம். இதனால் ஒரே சமயத்தில் பல துளைகளைத் துரப்பணம் செய்யலாம். பெருமளவு உற்பத்திப் பணிகளுக்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது
gang drill : (உலோ) கூட்டுத் துரப்பணம் : ஒரு பொதுவான ஆதாரத்துடன் செயற்படும் பல துரப்பணங்களின் தொகுதி
gang mills : கூட்டு எந்திரங்கள்: வேலைத் திறனை அதிகரிப்பதற்காகக் கடைசல் எந்திரத்தின் ஒரே நடுவச்சில் அமைக்கப்பட்டுள்ள வரிசையான வெட்டுக் கருவிகள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரப்புகளில் வேலைப்பாடு செய்யப் பயன்படுகிறது
gangway : ஊடுவழி : கப்பல் ஏற்ற இறக்க இடைவெளி
gantry : (விண்.) நிலைத்தாங்கி: ஏவுகணைகளைச் செலுத்துவதற்கான இடங்களில் பேரளவு ஏவுகணைகளை நிறுவவும். ஒருங்கிணைக்கவும், பழுதுபார்க்கவும் பயன்படும், பல்வேறு மட்டங்களில் மேடைகளைக் கொண்ட, நகரக் கூடிய பாரந்தூக்கி போன்ற அமைபபு
gap : (வானூ.) (1) இடைவெளி : இருதள விமானத்தில் இறகுகளுக்கு இடையிலான தொலைவு
(2) பொறிவினைச் செருகி
(3) திறந்திருக்கும்போது இரு தொடர்பு முனைகளுக்கிடையிலான தூரம்
(4) ஒரு மின் சுற்றுவழியில் உள்ள ஒரு வளி இடைவெளி
gap bed : (எந்.) சந்துப்படுகை : கடைசல் எந்திரத்தில் அமைந்துள்ள அளவைவிட அதிக அளவு விட்டமுடைய பொருளைப் பொருத்துவதற் காக,தலைமுனைத் தாங்கிக்குக் கீழே முன்புறம் பின்னொதுக்குப் பகுதியைக் கொண்ட ஒரு கடைசல் எந்திரப் படுகை. இந்தப் படுகை. சந்துக்குக் கீழே வலுப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சந்து பயன்படுத்தப்படாத போது இடைவெளிப் பாலத்தினால் மூடப்பட்டிருக்கும்
gap shears: (உலோ.வே) இடைவெளித் துணிப்பான்கள் : சதுர வெட்டுத்துணிப்பான் போன்ற ஒரு கத்திரிப்புக் கருவி, அடைப்புத் துளைகளுக்குள் உள்ள இடை வெளியில், நீளவாக்கிலோ குறுக்கு வாக்கிலோ உலோகத் தகடு செருகப்பட்டிருக்கும். இடைவெளி குறைவாக இருக்குமிடத்து நீளத் துணிப்புகள் செருகப்பட்டிருக்கும்
garbage : (விண்) சிதைவுப் பொருள்கள்: வட்டப்பாதையில், சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பிற செயற்கைக் கோள்களின் சிதைவுகள் உட்பட பல்வேறு பொருள்கள்
garden bond ; (க.க) தோட்டப் பிணைப்பு: இது ஒவ்வொரு வரிசை யிலும் மூன்று நீளவாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருக்கும், இதைத் தொடர்ந்து ஒரு முகப்புச் செங்கல் அமைந்திருக்கும். சில சமயம் இந்தப் பிணைப்பு,முகப்புச் செங்கற்களிடையே 2-5 நீள வாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருப்பதுமுண்டு
garderobe : (மர.வே.) ஆடை அலமாரி: துணிமணி நிலையடுக்கு
gargoyle: (க.க.) நீர்த் தாரை தூம்பு : விலங்கு மனித வடிவுகளுடன் கூடிய பழைய சிற்பப் பாணியில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு
garnet : செம்மணிக்கல்: பளிங்கு போன்று ஒளிரும் செந்நிற மணிக்கல். இது உராய்வுப் பொருளாகவும் கைக்கடிகாரங்களில் தாங்கிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது
garnet paper : மணிக் காகிதம் : நுண்மணிகள் பூசிய காகிதம். இது பட்டைச்சீலைபோல் பயன்படுகிறது
garnierite : (உலோ) கார்னியரைட்டு : நிக்கல் உலோகத்தின் முக்கியத் தாதுப்பொருள். இதில் 5% நிக்கல் அடங்கியிருக்கும்
gas brazing : வாயுப் பற்றவைப்பு: வாயு எரிவதால் உண்டாகும் வெப்பத்தின் மூலம் பற்றவைக்கும் ஒரு முறை
gas engine : வாயு எஞ்சின்: வாயுவும் காற்றும் கலந்த எரிபொருள் கலவையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளெரி எஞ்சின்
gaseous fuel, or “producer gas" : "வாயு எரிபொருள்" அல்லது "விளைவு எரிபொருள்" :' நிலக்கீலார்ந்த நிலக்கரியிலிருந்து வாயுத் தயாரிப்பாளில் தயாரிக்கப்படும் ஒரு வாயு. சூடான காற்றுடன் கலக்கும்போது. ஒரே சீரான வெப்பத்தை உண்டாக்குகிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளில் கண்ணாடி உருகக்ப்படும் தொட்டிகளில் இது பயன்படுத்தப்படுகிறது
gas-filled lamp : (மின்) வாயு நிறை விளக்கு : காற்று வெளியேற்றப்பட்டு, பின்னர் அதில் நைட்ரஜனும் ஆர்கானும் கலந்த மந்த வாயுக் கலவை நிரப்பப்பட்ட ஒரு விளக்கு
gas-filled tube : (மின்) வாயுக் குழல்: காற்றுக்குப் பதிலாக, நைட்ரஜன், நியோன், ஆர்கோன், பாதரச ஆவி ஆகியவற்றில் ஏதேனு மொரு குறிப்பிட்ட வாயுவைக் கொண்டுள்ள குழல்கள்
gashing : (எந்.) ஆழ்ந்த வெட்டு: எந்திர உறுப்புகளைக் கரடு முரடாக வெட்டுதல். குறிப்பாக, சாய்வுப்பல்லிணைகளின் பற்களை வெட்டுதல்
gasket : (எந்) ஆவித் தடுப்பான்: (1)ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான்
(2) சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு கயிறு
gasoline : கேசோலின்: எளிதில் ஆவியாகித் தீப்பற்றக்கூடிய, பெட்ரோலியத்திலிருந்து வடித்தெடுக்கக் கூடிய நீர்மம். முக்கியமாக உள்ளெரி எஞ்சின்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது
gasoline engine : (தானி.) கேசோலின் எஞ்சின் : கேசோவிலும் காற்றும் கலந்த ஒரு கலவை எரிபொருளாகப் பயன்படுத்தப் படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளெரி எஞ்சின்
gas pliers : (கம்) வாயுச் சாமணம்: சிறிய குழாய்களை அல்லது வட்ட வடிவப் பொருள்களைப் பற்றி எடுப்பதற்குப் பயன்படுத் தப்படும் இடுக்கிக் குறடு
gas producer : வாயு தயாரிப்பான் :வாயு தயாரிக்கும் உலை. இதில், எரிபொருளை வடித்திறக்குவதன் மூலம் நிலக்கரி வாயு தயாரிக்கப்படுகிறது
gas refrigerator : (குளி.பத) வாயு குளிர்பதனச் சாதனம் : வாயு எரிவதால் உண்டாகும் வெப்ப ஆற்றல் மூலம் இயங்கும் குளிர்பதனச் சாதனம்
gassing : (மின்) வாயுக் குமிழ்: மின்னேற்றிய சேமக்கலத்தில், மின்வேதியியல் வினை காரணமாக வெளிவரும் வாயுக் குமிழ்கள்,நெசவுத்தொழிலில், மெருகேற்றுவதற்காக பஞ்சுக் குஞ்சங்களை விடுதல்
gas turbine : (வானூ) விசையுருளை வாயு பீற்றுள்ளி விசைப் பொறியுருளையில் உள் ள து போன்று, விரிவடையும் வாயுக்களினால் சுழலும் ஒரு விசையுருளை
gas welding: வாயுப் பற்றவைப்பு; வாயுப் பிழம்பிலிருந்து கிடைக்கும் வெப்பத்தின் மூலம் பற்ற வைககும் ஒரு முறை
gate : (வார்.) வார்ப்பட வாயில் : ஒரு வார்ப்பட வடிவத்தை உருவாக்குவதற்காக உலோகத்தை ஊற்றுவதற்குள்ள வாயில்
gated pattern (வார்.) வாயில் தோரணி : ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு உலோகத் தோரணிகள் கொண்ட ஒரு தொகுதித்தோரணி. இதனைக் கொண்டு ஒரே சமயத்தில் பல வார்ப்படப் படிகளை எடுக்கலாம். சிறு உறுப்புகளைத் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது
gate-leg table: (மர.வே) மடிப்புக்கால் மேசை : மேசை வகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து ழுவதற்கு வசதியாகக் கதவுச் சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட மேசை
gate valve : (பொறி) வாயில் ஓரதர்: உள்வழி,புறவெளித் திறப்புகளிடையிலுள்ள ஆப்பு வடிவ வாயிலின் இயக்கத்தைப் பொறுத்து இயங்கும் ஓரதர்
gathering : (அச்சு.) ஒன்றிணைப்பு: புத்தக அச்சிட்ட முழு மடித் தாள்களைக் கட்டுமானம் செய்வதற்கு வரிசை முறையில் அடுக்கி ஒன்று சேர்த்தல்
gauge : (உலோ.) அளவி: (1) உலோக உறுப்புகளின் வடிவளவைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி அல்லது சாதனம். பல்வேறு நோக்கங்களுக்கான அளவிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்கள் உண்டு
(2) சாந்துக் கலவை விரைவாக இறுகுவதற்காகச் சாதாரணச் சாந்துடன் பாரிஸ் சாந்தினைக் கலத்தல்
(3) மட்டப் பலகை : தள மட்டத்தைக் கணிப்பதற்குக் கொத்தனார்கள் பயன்படுத்தும் சாதனம்
gauge : (குளி.பத) அளவை கருவி : வாயுவின் அழுத்தத்தை அல்லது திரவத்தின் மட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி
gauge pins : (அச்சு) அச்சுச் சறுக்குச் சட்ட பிணைப்பூசிகள் : ஓர் அச்சு எந்திரத்தின் சமனத் தகட்டின் மீது வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் உலோகத் தகட்டுத் துண்டுகள்
gauging: அளவிடுதல்: (1) ஒரு பொருளின் வடிவளவு, ஒரு கலத்தின் கொள்ளளவு போன்ற வற்றை அளவிடுதல்
(2) செங்கற்களை அல்லது கற்களை ஒரே வடிவளவில் வெட்டியமைத்தல்
gauss, karl friedrich : (1777-1855) (மின்.) காஸ், கார்ல் பிரிட்ரிக்: ஜெர்மானியக் கணித மேதை. இவர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை கோட்டிங்கன் பல்கலைக் கழக வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகக் கழித்தார். கணிதம், வானியல், இயற்பியல் ஆகிய துறைகளில் துறை போகியவர்
gear : (எந்) பல்லிணை : பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், எந்திரத்தையும் அதன் துணைப் பொறிகளையும் இணைக்கும் சாதனம்
gear case : (எந்) பல்லிணைப் பெட்டி : பல்லிணைகள் இயங்குவதற்குரிய ஓர் உலோகப் பெட்டி. பொதுவாக, பல்லிணைப் பெட்டியில் மசகுப் பொருள் நிரப்பப்பட்டிருக்கும்
gear cutters: பல்லிணை வெட்டுக் கருவி: கடினமாக்கிய எஃகினாலான வட்டவடிவ வெட்டுக்கருவி. இது வெட்டும் பல்லிடைவெளிகள், இதன் வெட்டுவாயின் அளவினதாக இருக்கும்
gear driven super charger (வானூ.) பல்லிணை இயக்க உகைப்பான் : உந்துகலம், விமானம் முதலியவற்றில் பல்லிணைகளினால் இயங்கும் மீவிசை அழுத்த மூட்டுவதற்கான அமைவு
geared chuck : பல்லிணை எந்தமைவு : எல்லாவற்றிற்கும் பொருந்துகிற ஏந்தமைவு வடிவம்
geared head : பல்லிணைத் தலைமுனை: பின் பல்லிணை பொருத்தப்பட்ட தலை முனை
geared propeller : (வானூ) பல்லிணை முன்செலுத்தி: பல்லிணை மூலம் இயக்கப்படும் ஒரு முன்செலுத்தி, பொதுவாக இது எஞ்சின் வேகத்தைவிடச் சற்று அதிக வேகத்தில் இயங்கும்
geared pump: பல்லிணை இறைப்பான்: பல்லிணையைப் பயன்படுத்துவதன் மூலம் ஓர் எஞ்சினால் இயக்கப்படும் ஓர் இறைப்பான்
geared shaper : (எந்) பல்லிணை வார்ப்புப் பொறி: ஒரு பற்சட்டமும் இறக்கைப் பகுதியும், மெதுவாக வெட்டும் ஒரு திமிசினை விரைவாக இயக்கி வார்ப்புருவங்களை உண்டாக்குகிறது
gearing : பல்லிணைப்பு : பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு
gearing down: பல்லிணைப்பு: பல்லிணைச் சக்கரங்கள் இயக்கும் உறுப்பின் வேகத்தைவிட இயக்கப் பெறும் உறுப்பின் வேகத்தை மிகுதிப்படுத்துதல்
gear ratio : (தானி) பல்லிணை விகிதம் : இயங்கும் பல்லின் எண்ணிக்கைக்கும், இயக்கப்படும் பல்லிணைகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்
gear shifting: (தானி) பல்லிணை மாற்றுதல் : எஞ்சினுக்கும் மின் அச்சிக்குமிடையிலான வேக விகிதத்தையும்,விசையையும் மாற்றுவதற் காக மாற்று வேகப் பல்லிணைகளின் பல்வேறு தொகுதிகளைக் கொளுவியிணைத்தல் gear-shift lever : (தானி) பல்லிணை மாற்று நெம்புகோல்: மாற்று வேகப் பல்லிணைகளை மாற்றுவதற்கான ஒரு நெம்புகோல்
gear stocking cutter : (பல்லி.) பல்லிணை வெட்டி: விரைவான உற்பத்திக்கும், துல்லியமான வெட்டுதலுக்கும் இயல்விக்கக் கூடிய பல்லிணைப் பற்களை வெட்டுவதற்கான கருவி
gear-tooth caliper : (எந்) பல்லிணை திட்பமானி : பல்லிணைப் பல்லின் கனத்தையும் ஆழத்தை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் வகைத் திட்பமானி
gear train : (எந்) பல்லிணைத் தொகுதி: இயங்கும் உறுப்புகளையும் இயக்கப்படும் உறுப்புகளையும் இணைக்கின்ற ஒன்று,அதற்கு மேற்பட்ட பல்லிணைகளின் தொகுதி
geiger counter : (இயற்) கதிரியக்கக் கண்டுபிடிப்புக் கருவி : கதிரியக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒருவகை வாயு நிரப்பப்பட்ட ஒரு மின்னியல் சாதனம்
gel : (வேதி. குழை.) அரைத் திண்மக் கரைசல் : கூழ்ப் போலியான அரைத்திண்மக் கரைசல். இது ஒளி ஊடுருவக் கூடியது
gelatin : (வேதி.) ஊன்பசை : எலும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு, உணவுப் பொருள் துறையிலும், ஒளிப்படத் தகடுகளிலும், பசைகளிலும் பயன்படுத்தப்படும் கூழ் போன்ற பொருள்
gelation : (குழை.) கெட்டியாக்குதல் : திரவ பிளாஸ்டிக்கை உறைய வைத்துக் கெட்டியாக்கும் முறை. இதில் திரவ நிலையிலுள்ள பிசினில் மூலக்கூறுகள் ஊன்பசையாகி பின் கெட்டியாகிறது
geltime : (குழை.) அரைத்திண்ம நேரம் : பிசினின் இயைபூக்கத்திற்கும், தொடக்க நிலைக் கெட்டிமத்திற்குமிடையிலான இடைவெளி நேரம்
genelite: (உலோ.) ஜெனலைட்டு: வெண்கல உலோகக் கலவை. இதில் 40% கன அளவுக்கு காரீயகக் கனிமப் பொருள் கலந்திருக்கும். இது எண்ணெயை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையது
general drawing : பொது வரைபடம் : எந்திரத்தின் அல்லது பிற பொருள்களின் அமைப்பினைக் காட்டும் வரைபடத்தை வீத அளவுப்படி வரைதல். இதில் எந்திரத்தில் உறுப்புகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பும், அவை அமைந்திருக்கும் இடமும் குறிக்கப்பட்டிருக்கும். இதனை ஒருங்கிணைப்பு வரைப்டம் என்றும் கூறுவர்
generator : (மின்) மின்னாக்கி: எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்திரங்களைக் குறிக்கும் சொல். அதாவது மின்விசையை உண்டாக்கும் பொறியமைவு
generator bus bars : (மின்.) மின்னாக்கி மின்வாய்க் கட்டை: மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது
geneva motion : (பட்,) ஜெனீவா இயக்கம் : இயக்கப்படும் சக்கரங்
geocentric : (விண்) புவிமையம்: பூமியை மையமாகக் கொண்டதாகக் கருதப்படுபவை
geodetic surveying : புவிப்பரப்பு அளவாய்வு : பூமியின் மேற்பரப்பின் கோளவடிவைக் கவனத்திற் கொண்டு, மிகத் துல்லியமாக அள வாய்வு செய்வதற்கான ஒருமுறை, இந்த முறை புவியமைப்பியல், நீரியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது
geology : புவியமைப்பியல் : நிலவுலக மேல் தோட்டின் ஆடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் குறித்துப் பாறைகளைக் கொண்டு ஆராய்ந்தறியும் அறிவியல் துறை
geometrical : வடிவியல் சார்ந்த: வடிவியலுக்கு இணங்கிய உருவுடைய, வடிவியல் விதிகளுக்கு இணங்க அமைந்த, கோணங்கள் போன்ற வடிவியல் கூறுகளை அமைத்தல் அல்லது கொண்டிருத்தல்
geometrical mean : பெருக்க மூலம் : இரு எண்களைப் பெருத்தி அந்தப் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் காண்பதால் கிடைக்கும் எண்
geometrical pitch of a propeller: (வானூ.) விமான முன் செலுத்தி வடிவியல் இடைமுகம் : ஒரு விமானத்தின் முன் செலுத்தியானது. அதன் அலகுக் கோணத்திற்குச் சமமான ஒரு கோணத் தைக் கொண்ட ஒரு திருகுசுழல் வட்டத்தின் வழியே நகருமாயின் அந்த முன் செலுத்தியின் ஒரு கூறு ஒரு சுழற்சியில் முன்செல்லும் தூரம்
geomatrical progression : (கணி.) பெருக்க ஏற்றத் தொடர்பு : ஒரே வீதத்தில் ஏறிச்செல்லும் எண் தொடர்பு. இத்தொடர்பின் ஒவ்வொரு எண்ணும் முந்திய எண்ணின் ஒரு காரணியால் பெருக்கப்பட்டுக் கிடைக்கும் தொகையாக இருக்கும். (உதாரணம்:) 2, 4, 8, 16,32 ஆகிய எண்கள் பெருக்க ஏற்றத் தொடர்பில் அமைந்துள்ளன, இதில் பெருக்கக் காரணி 2
geometrical stair : (க.க) வடிவியல் படிக்கட்டு : குறுகிய கிணறுகளில் திருகுமுறுகாக அமைக்கப்படும் படிக்கட்டு. இதனை சுழல் படிக்கட்டு என்றும் அழைப்பர்
geometry: வடிகணிதம்: கோடுகள், மேற்பரப்புகள், திடப்பொருள்கள் ஆகியவற்றின் பண்பியல்புகள் பற்றி ஆராயும் கணித அறிவியல்
georgia pine : (மர) ஜார்ஜியா தேவதாரு: கரணகளைக் கொண்ட கருநிறமரம். இது இறுதி மெருகுப் பொருளாகப் பயன்படும். இந்த மரம் கடினமானது; கனமானது; வலுவானது. ஆனால் ஈரமான இடங்களில் எளிதில் மட்கிவிடக் கூடியது. இது பிசின் தன்மை கொண்டிருப்பதால் இதில் வண்ணங்கள் ஒட்டுவதில்லை
geophysics : (இயற்) புவி இயற்பியல் : பூமியின் இயற்பியல் பண்புகளை ஆராயும் அறிவியல். எடுத்துக் காட்டாக, பூமியின் காந்தத் தன்மை, அதன் மின்கடத்தும் தன்மை, அதன் அடர்த்தி, நில அதிர்ச்சிகள், மாகடல்கள், வாயு மண்டலம் போன்றவற்றை ஆராய்தல்
germanium : (வேதி.) ஜெர்மானியம் : எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத் தனிமம். மிகுந்த பளபளப்புடையது. இதன் உருகு நிலை 1562°F
german silver: ஜெர்மன் வெள்ளி: செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்கள் கலந்த ஓர் உலோகக் கலவை. வெள்ளி போல் வெண்ணிறமானது. நுண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது
gesso : ஓவிய உறைகள் : வண்ணந் தீட்டுவதிலும், சிற்பக்கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள்
get away speed: (வானூ) பறக்கும் வேகம் : ஒரு கடல் விமானம் முற்றிலுமாக வானில் பறப்பதற்கான வேகம்
ghost : இரட்டைத் தோற்றம் : தொலைக் காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட இரட்டைத் தோற்றக் குளறுபடி. ஒளி வாங்கி அருகில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள், குன்றுகள் முதலியவை சைகைகளைப் பிரதிபலிப்பதால் இந்தக் குளறுபடி ஏற்படுகிறது
gib : (எந்.) உலோக ஆப்பு : திர உறுப்புகளை இறுக்கமாகப் பொருத்துவதற்குப் பயன்படும் ஒரு மெல்லிய எஃகுத்துண்டு.கடைசல் எந்திரத்தில் குறுக்கு நழுவு சட்டத்தில் இது பயன்படுகிறது
gib headed key : ஆப்புத்தலை திறவுகோல் : கனத்த முனைக்கு செங்கோணத்திலுள்ள ஒரு கவர் முள் உடைய ஒரு திறவுகோல். இது அதனைத் திரும்ப எடுப்பதை எளிதாக்குகிறது
gilbert , (மின்.) கில்பெர்ட் ; காந்த இயக்க ஆற்றல் அலகு
gilbert,william : (மின்) கில்பெர்ட், வில்லியம் (1540-1603) : முதலாம் எலிசபெத் அரசி காலத்தில் வாழ்ந்த ஆங்கில மருத்துவர். இவர் முதன் முதலில் திசைகாட்டியின் செயல் முறையைக் கண்டு பிடித்தார். பூகோளக் காந்த விசை ஆய்வியலின் தந்தை எனப் போற்றப்படுவர்
gilding: பொன்முலாமிடுதல்: மின் முலாம் பூசுதல் மூலம் தங்க முலாமிடுதல் அல்லது தங்கத் தகட்டினால் கையால் பூச்சுவேலை செய்தல்.இந்தச் சொல் பெரும்பாலும் வெண்கலத் தூளினால் அல்லது திரவத்தினால் பூச்சுவேலை செய்வதைக் குறிக்கும்
gilt . பொன்பூச்சுமானம் : பொன் முலாமிடுதல் மூலம் இறுதியாகக் கிடைக்கும் மெருகு
gimbals : (உலோ.) எந்திரக் குழையச்சு : கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான எந்திரக் குழையச்சு அமைவு
gimlet : துரப்பணம்: மரவேலைத் துளைப்புக் கருவி
gimp: கெட்டி இழை: பூ வேலைப் பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்த கெட்டி இழை "கட்டு இழைக்கச்சு" எனப்படும், இது ஆடை விளிம்புகளில் இணைக்கப்படும் gimping : கெட்டி இழை: வேலைப்பாட்டில் சித்திர விளிம்புக் கெட்டி இழை அமைத்தல்
gin ; விதை நீக்குதல் : பருத்தியிலிருந்து விதைகளை எந்திரத்தினால் நீக்குதல்
ginger-bread work: : (க.க) குமிழ்மாட்டி வேலைப்பாடு : வீடுகளில் உள்ளது போன்ற, அலங்கார அல்லது நுட்பமான செவ்வொழுங்கு வேலைப்பாடு
gin pole : (பொறி.) பாரந்துக்கிக் கம்பம் : மரத்தால் அல்லது எஃகினாலான ஒரு செங்குத்தான கம்பம். இதில் கயிறு கப்பிக் கலனும், கட்டைகளும் கயிற்று வடம் அல்லது எஃகு வடத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு கனமான பொருள்களை எந்திரவிசையினால் வேண்டிய உயரத்திற்கு ஏற்றலாம். இது பளுதூக்கி போன்று பயன்ப்டுகிறது
giran dole: மெழுகுதிரிக் கொத்து விளக்கு: ஒரு மையத்தண்டினைச் சுற்றியுள்ள வட்டத்தில் பொருத்தப்படும் மெழுகுதிரிக் கொத்து விளக்கு
girder : (க.க) தூலம்: தள ஆதாரமாகப் பயன்படும் மரத்தாலான அல்லது எஃகினாலான பெரிய உத்தரம்
girt : முரண் கணிப்பீட்டளவை : (1) தட்டையாக இராத பரப்புகளில் மேடுபள்ளக் கணிப்புகளுடன் குறுக்காகவும், சுற்றியும் எடுக்கப்படும் அளவை
(2) நீள் உருளை ஒத்த அளவுடையவற்றின் சுற்றுப் பட்டை அளவு
glair: (நூ.க.)முட்டைப்பசை: முட்டை வெண் கருவிலிருந்து செய்யப்படும் மெருகுப் பூச்சுக்கான பசைப் பொருள்
gland : (எந்.) உள்திகைப்பு வாய் தாங்கி: காற்று முதலியவை உட்புகாதவாறு இயங்கவல்ல உள்திணிப்புப் பொறியமைவின் தாங்கி வாயை அடைத்துக் கொண்டு உந்துதண்டின் தேய்மானத்தைத் தடுக்கும் சிறிய தாங்கி
gland : (உடலி.) சுரப்பி ; உடலின் இயக்கத்திற்குத் தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, சீரணத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை
glare: (தாள்.) காகிதப் படரொளி: பளபளப்பான காகிதத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளி
glass : கண்ணாடி : மணல் அல்லது சிலிக்காவை சுண்ணாம்பு,பொட்டாஷ், சோடா அல்லது ஈய ஆக்சைடு இவற்றுடன் சேர்த்து உருக்குவதால் கிடைக்கும் கடினமான, ஆனால் எளிதில் உடையும் தன்மையுள்ள பொருள்
glass cloth : (குழை) கண்ணாடித் துணி : கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணி. இது பிசின் தகடுகளில் பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்கு வலிமையும், எஃகு போன்ற உறுதியும் அளிக்கிறது. கட்டுமானத்திற்குப் பலவகைப் பிசின்கள் பயன்படுகின்றன. பாலியஸ்டர் அவற்றில் ஒன்று
glass cutter: கண்ணாடி வெட்டி; கண்ணாடியை வேண்டிய அளவுகளில் அறுப்பதற்கு உதவும் ஒரு சாதனம். இது பெரும்பாலும்,கைப்பிடி கொண்ட ஒரு சுழல் சக் கரத்தில் பொருத்தப்பட்ட ஒரு வைரமாக இருக்கும்
glass hard: (உலோ) கண்ணாடிக் கடினம்: கண்ணாடியில் கீறல் உண்டாக்கும் அளவுக்குக் கடினமாகவுள்ள பொருள்
glass ine: (தாள்) பளிங்குத்தாள்: பளிங்கு போன்ற தாள். செலோ போன் காகிதம் போன்று ஒளி ஊடுருவக் கூடியது. துப்புரவு நோக்கங்களுக் காகப் பயன்படுகிறது. சல்ஃபைட் கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது
glass insulator:(மின்) கண்ணாடி மின்காப்பான்: மின்கம்பக் கம்பி அமைப்பதில் பயன்படுத்தப்படும் மின்விசை பாயாமல் காப்பிடுவ தற்கான காப்புப் பொருள். இது குறுக்குப் புயங்களில் ஊசிகொண்டு பிணைக்கப்படுகிறது. தொடர் கம்பிகள் இந்த மின்காப்பானுடன் இணைக்கப்பட்டிருக்கும்
glazed: மெருகூட்டிய: மெருகிட்டு பளபளப்பான் பர்ப்பினை உண்டாக்குதல்
கட்டிடங்களில் கண்ணாடிப் பலகணிகள் அமைத்தல்
glazed brick (க.க) மெருகுச் செங்கல்: மெருகிட்ட பளபளப்பான பரப்புடைய செங்கல். மெருகுப் பொருள்களை ஒன்றாகக் கலந்து இது தயாரிக்கப்படுகிறது
glazed doors: (அ.க.) மெருகுக் கதவுகள்: கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றமுடைய கதவுகள். இதில் பெரும்பாலும் கண்ணாடிச் சில்லுகளிடையே வேலைப்பாடுடைய மரத்தினாலான தோரணிகள் அல்லது பின்னல் வேலை அமைந்திருக்கும்
glazed tile: (க.க) மெருகு ஓடு; மெருகிட்ட பளபளப்பான தோற்றமுடைய கண்ணாடி போன்ற மேற்பரப்புடைய ஓடு
glazing: (1) கண்ணாடி பொருத்தும் கலை: பலகணிகளுக்குக் கண்ணாடி பொருத்தும் கலை
(2) மெருகுப் பூச்சுக்கலை: மாவரைக்கும் எந்திரத்தின் அல்லது சாணைச் சக்கரத்தின் மேற்பரப்பின் இடைவெளிகளை துண்துகள் களைக் கொண்டு நிரப்புதல்
glide: (வானூ.) சறுக்கு': விமானம் இயங்குப்பொறி இல்லாமலேயே சறுக்கிச் செல்லுதல்
glide landing: (வானூ) சறுக்கித் தரையிறங்குதல்: விமானம் இயங்கு பொறியின்றி சறுக்கிப் பறந்து தரையிறங்குதல்
glider: (வானூ.) சறுக்குவிமானம்: இயங்கு பொறியமைப்பில்லாமல் பறக்கும் சறுக்கு விமானம்
gliding angle: (வானூ) சறுக்குக் கோணம்: ஒரு சறுக்கு விமானத்தின் பறக்கும் பாதைக்கும், இடை அச்சுக்குமிடையிலான கோணம்
globe valve: (கம்) கோள வடிவ ஒரதர்: ஒருவகை ஒரதர். இதில் இரு வட்டத்தகடு ஒரு திருகு மூலம் செயற்படுகிறது. ஒரு வட்ட வாயின் மீது கைச்சக்கரம் அமைந்திருக்கும். இதன் கீழ்ப்புறத்திலிருந்து அழுத்தம் மேல்நோக்கி மோதுகிறது
gloss. மேல் மினுக்கு: மேற்பரப்பு பளபளப்புடன் இருக்கும் மினு மினுப்பான தோற்றம்
glost: (மட்.க.) மெருகு மட்பாண்டம்: சூளையில் இடப்படவிருக்கும், வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த மட்பாண்டம்
glowcoil: (மின்) : ஒளிர்சுருள்: ஒரு கூம்பு வடிவத்தில் சுற்றப்பட்டுள்ள தடைக்கம்பி. இது சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது glow-tube: (மின்) ஒளிர் குழல்: ஜின்னழுத்தத்தை முன்றப்படுத்துகிற நியான் ஒளிர் குழல் போன்ற ஒளி வெளியிடும் குழில்
glucose : (வேதி.) பழ வெல்லம் : மரச்சத்திலிருந்து வெப்பமும் அமிலங்களும் வினைபுரிவதன் மூலம் உண்டாக்கப்படும் மணமற்ற ஒளிப்பான பாகுப்பொருள். கற்கண்டு, பழச்சத்துகள், வடிசாறுகள் முதலியவை தயாரிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படும் பொருள்
glue : வச்சிரப்பசை: விலங்கின் தோல், எலும்பு முதலியவற்றை உரிய அளவுக்குக் கொதிக்க வைத துப் பெறப்படும் திண்ணிய பசைப் பொருள். இது தகடாகவும், பட்டை களாகவும், மென்படலங்களாவும், குருணையாகவும் விற்கப்படுகின்றது. வெள்ளை,மஞ்சள், பழுப்பு முதலிய பல வண்ணங்களிலும் கிடைக்கிறது
glue injector : (மர.வே) வச்சிர ஊசி : மிக நுண்ணிய துவாரங்களுக்குள் விச்சிரப் பசையினைச் செலுத்துவதற்குப் பயன்படும் சிறிய கூரிய முனை கொண்ட ஓர் உலோகப் பீற்றுக் குழல்
glycerin : (வேதி) கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு : தொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கிப்பட்டு, மருந்துக்கும், பூச்சுநெய்க் களிம்புகளுக்கும், வெடிமருந்துக்கும் பயன்படுத்தப் படும் நீர்மப் பொருள். சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கும், ரொட்டித் தொழிற்சாலைகளிலும் அச்சக உருளைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற, திண்மமான திரவம்
glyph (க.க.) ஒப்பனைச் சால்வரி: சிற்ப வேலைப்பாட்டுக்கு அடையாளமாகவுள்ள குறுகிய செங்குத்தான ஒப்பனைச் சால்வரி
gneiss : (கனிம.) நிஸ் : படிகம் களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்த அடுக்குப் பாறை
go bo :ஒளித்திரை: மேடையில் தேவை யில்லாத இடங்களில் ஒளிபடாமல் மூடிமறைக்கப் பயன்படும் ஒரு திரை
goggles : காப்புக் கண்ணாடி : பற்ற வைப்பவர்களும், சாணை பிடிப்பவர்களும் கண்ணுக்குப் பாதுகாப்பாக அணிந்து கொள்ளும் கண்ணாடி
gold : பொன்/தங்கம் : உலோகங்களில் விலைமதிப்பு வாய்ந்த உலோகங்களில் ஒன்று. உலோகங்கள் அனைத்திலும் மிகவும் நெகிழ் விணக்கமுள்ள உலோகம்; கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது
golf ball : (கணிப்.) குழிப்பந்து:
gonio photo meter : படரொளிமானி : வண்ணப் பொருள்களின் படரொளியை அளவிடும் சாதனம்
go or no-go gauge : (எந்) இருமுனை அளவி : அளவிடுவதற்கான இருமுனைகளைக் கொண்ட அளவி. ஒரு முனையில் அளவிடப்பட வேண்டிய பொருள் நுட்பமாகப் பொருத்தப் பட்டிருக்கும். மற்றொரு முனை, வெளிப்புற விட்டத்திற்கு மிகச்சிறியதாகவும், உட்புற விட்டத்திற்கு மிகப்பெரியதாகவும் இருக்கும்
goose neck : வாத்துக் கழுத்து: வாத்தின் கழுத்தினைப் போல் வளைந்திருக்கும் கொக்கி, குழல், தாங்கி முதலியவை, கட்டிடங்களில் வாத்துக் கழுத்துப் போன்று வளைந்துள்ள படிக்கட்டின் கைபிடி
gordon press : (அச்சு) கோர்டோன் அச்சு எந்திரம்: அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப்பான அச்சு எந்திரத்தில் மிகப் பழைய வகை
gothic (க.க.) கூர்மாடப் பாணி : (1) இடைநிலைக் காலத்து கிழக்கு ஜெர்மனியின் கூர்மாடச் சிற்பப் பாணியில் அமைந்த கட்டிடம்
(2) அச்சுருப் படிவ வகையில் அமைந்துள்ள அச்சுரு
gothic arch : (க.க.) கூர்மாடக் கவான்: உயர்ந்து, குறுகிக் கூர்மையாகச் செல்லும் வில்வளைவு
gouge : நகவுனி : தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி
governor : (எந்.) ஆள்வான் : எஞ்சின்களிலும், எந்திரங்களிலும் வேகத்தைச் சீராக்கிடும் விசை அமைவு
grab : (எந்.) இறுகுப்பிடிப்பான் : வலித்திழுப்பதற்காகவும்,உயரத்தூக்குவதற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்
grab hook : (வார்.) இறுகுப்பிடிப்புக் கொக்கி: பாரந்துக்கிக் கொக்கியுடன் பாரங்களை இணைப்பதற்கான குறுகிய சங்கிலிகள் அல்லது சலாகைகளுடன் இணைக்கப்பட்டுள்ள கொக்கிகள்
grade : (க.க) தரைமட்டம் : ஒரு கட்டிடத்தைச் சுற்றியுள்ள தரைமட்டம்
grading : சாய்தள அமைப்பு : (1) ஒரு மனையில் தேவையான கோணத்திற்கு சாய்தளம் ஏற்படுத்துதல்
(2) பக்க நடைபாதையை மழை நீர் சீராக வடியும் வகையில் சாய்வாக அமைத்தல்
gradual load: படிப்படியான பாரம்: ஒரு கட்டமைப்பில் படிப்படியாக ஏற்றப்படும் பாரம். இது அழுத்தத்திற்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும்
graduate : நுண்படியளவீடு: நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடுதல்
graduation : படியளவுக் குறியீடு : நுண் படியளவிட்டுப் படியளவுக் குறியிடுதல்.
grain : (1) மயிர் களைதல்: தோல் பதனிடுவதில் தோலிலிருந்து மயிர் களைதல்
(2) மயிர் களைவுக் கத்தி : தோல் பதனிடுவதில் மயிர் களைவதற்குப் பயன்படுத்தும் கத்தி
(3) அடுக்குவரி அமைவு : காகித எந்திரத்தில் இயக்கத் திசைக்கு நேரிணையாகக் காகிதத்தில் நீள் வாக்கில் அடுக்கு வரி அமைவுறச் செய்தல்
(4) நெல் மணி எடை: மிகச் சிறிய எடை அளவு. 7,000 மணி எடை = 1 அவுன்ஸ்-பவுண்டு
grained cowhide: மயிர் களைந்த தோல் : தோலில் மயிர்களைந்து, பல்வேறு மேற்கரண் பரப்புடைய தோல். இது பல வண்ணங்களிலும் இருக்கும், இதனால் பைகளும், பெட்டிகளும் செய்யப்படுகிறது
graining: அகவரி வண்ணமிடுதல்: கருவாலி, வாதுமை போன்ற உயர்தர மரங்களைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் அகவரி வண்ணம் கொடுக்கும் முறை
graining comb : (மர.வே) கரண் சீப்பு: மரப்பலகைகளில் கரண் போன்ற தோற்றம் ஏற்படுமாறு செய்வதற்குரிய எஃகினாலான அல்லது தோலினாலான ஒரு சீப்பு போன்ற கருவி
gram : கிராம் : மெட்ரிக் சீரெடை முறையில் பொதுநிலை எடையலகு அளவு 1 கிராம் = 15. 432 நெல்மணி
gramme ring winding : (மின்) சீரெடை வளையச் சுருணை: இது ஒரு மின்னகச் சுருணை. இந்த முறை.இப்பொழுது மிகுந்த தனிவகைப் பயன்பாடுகளைத் தவிர்த்து, மற்றப்படி நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை
gram molecular weight : (வேதி.) அணுக்கட்டு நிறை : தனி மத்தின் அணு எடை அளவின் பரும அளவெண். ஒரு வாயுவின் அணுக்கட்டு நிறை யானது, இயல்பான சூழல்களில் 22.4 லிட்டர் அளவாக இருக்கும்
granite : (க.க) கருங்கல் : வெள்ளை அப்பிரகம் கலந்த கருங்கல். இது மிகவும் கடினமானது; மிகுந்த பளப்பளப்புடையது. கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது
gramular : மணியடர்த்தியுள்ள : இழையாக அமைந்திராமல் சிறு மணி போன்ற செறிவுள்ளது
granular carbon : (மின்) அக வரிக் கார்பன் : சிறுமணிகள் போன்ற அகவரிச் செறிவுள்ள சொரசொரப்பான மேற்பரப்புள்ள கார்பன். தொலைபேசி ஒலியனுப்பீட்டுக் கருவிகளிலும் மாற்றுத் தடைகளிலும் பயன்படுகிறது
granular structure : (குழை) அகவரிக் கட்டமைவு: அமைப்பான்கள் முழுமையாக ஒருங்கிணையாததன் காரணமாக பணிமுடிவுற்ற பிளாஸ்டிக் பொருட்கள், சொரசொரப்பான மேற்பரப்பினைக் கொண்டிருத்தல்
grape sugar : (வேதி) பழச் சக்கரை: இது அங்காடிகளில் கடினமான, மெழுகு போன்ற திடப் பொருளாகக் கிடைக்கும். தயாரான புதிதில் இது செறிமான முறாத பழவெல்லமாக அல்லது குளுக்கோசாக இருக்கும். ஒயின், ரொட்டி தயாரிப்பதிலும், புகையிலையைப் பக்குவப்படுத் துவதிலும், குரும உப்பு மூலம் தோல் பதனிடுவதிலும் பயன்படுத்தப்படுகிறது
graphic : வரையுரு : கருத்துக்களைப் படங்களாகவும், வரையுரு வங்களாகவும் சித்தரித்தல்
graphic arts :வரைகலை : ஓவியம், படம் வரைதல், சித்திரம் செதுக்குதல் போன்ற வரையுருக்கலைகள்
graphic building blocks : வரைகலைக் கட்டுமானத் தொகுதிகள்
graphic forms : வரைகலை வடிவங்கள்
graphic methods : வரைகலை முறைகள் : வரையுருவங்கள் வாயிலாகக் கட்டிடங்கள் மீதான அழுத்தம், வேகவீதம் முதலியவற்றைக் கணக்கிடுவதற்கான முறைகள்
graphic lines : வரைகலைக் கோடுகள்
graphic plotting: வரைகலை வரைதல்
graphic shapes : வரைகலை வடிவுகள்
graphite : (வார்;பொறி.) காரீயகம்: செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொழிற்சாலைகளில் வார்ப்புப் பூச்சுப் பொருளாகவும் பயன்படுகிறது
graphite paint ; (வண்) காரீயக வண்ணம் : காரீயகமும், கொதிக்க வைத்த ஆளிவிதை எண்ணெயையும், சிறிதளவு உலர்த்து பொரு ளையும் கலந்த கலவை. இரும்பு வேலைகளில் வண்ணம் பூசுவதற்கு மிகவும் உகந்தது
graphitizing : (உலோ) காரீயக மாக்குதல் : ஒரு சாம்பல் நிற வார்ப்பிரும்பிலுள்ள கார்பனின் பெரும்பகுதியை ஒரு பதப்படுத்தும் முறையின் மூலம் காரீயக நிலைக்கு மாற்றுதல்
grate area or grate surface: ஒரு கொதிகலனில் கணப்புக் கம்பிகள் அமைந்த பரப்பளவு. இது சதுர அடிக்கணக்கில் கணக்கிடப் படும். இது முழுமையான உள்ளெரிதல் நடைபெறும் பரப்புக்குச் சமமானதாகும்
gravel: சரளைக்கல்: மணலும் கூழாங்கற்களும் கலந்த சரளைக் கலவை
graver : செதுக்கு உளி : சித்திரம் செதுக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவி
gravisphere: (விண்) ஈர்ப்பு மண்டலம் : விண்மண்டலக் கோளங்களில் மற்றக் கோளங்களை ஈர்ப்பதற்கான ஈர்ப்பாற்றல் முனைப்பாக உள்ள கோளப்பரப்பு
gravity : ஈர்ப்புவிசை : பூமியின் மையத்தை நோக்கி அல்லது அதன் மேற்பரப்பை நோக்கி பொருள்கள் அனைத்தும் ஈர்க்கப்படும் விசை
gravity cell ; (மின்) ஈர்ப்பு மின்கலம் : டேனியல் மின்கலத்தின் மாற்றியமைத்த வடிவம். இதில் இரு மின்பகுப்பான்கள் ஈர்ப்பு விசை மூலம் பிரிக்கப்பட்டிருக்கும்
gravity - drop annunciator : (மின்.) ஈர்ப்புவிசை அறிவிப்பான்: மின்காந்தங்கள் மூலம் இயங்கும் ஒரு சைகைச் சாதனம். இதில் காந்தத்திலிருந்து ஒரு கீல் உறுப்பு விடுபட்டு கீழே விழும் போது எண், பெயர் முதலியன வெளித் தெரியும்
gravity lubrication system : (தானி.எந்.) ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு : உயரத்திலுள்ள கொள்கலத்திலிருந்து ஈர்ப்புவிசை மூலம் உராய்வுத்தடைக்காக உறுப்புகளுக்கு எண்ணெய் பாயவிடுதல். இந்த அமைப்பு முறையில், எண்ணெய் ஓர் இறைப்பான் மூலம் அது முதற்கண் இருந்த கொள்கலத்திற்கே கொண்டு வரப்படுகிறது
gravity water system : ஈர்ப்பு விசைநீர் அமைப்பு : ஈர்ப்பு விசை மூலம் அழுத்தம் பெறப்படும் ஒரு நீர் அமைப்பு முறை
gravity well ; (விண்) ஈர்ப்புக் கேணி: ஈர்ப்புப்புலம் ஓர் ஆழமான கேணியாகக் கருதப்படும் பகுதி. ஒரு வான் கோளிடமிருந்து தப்புவதற்கு ஒரு விண் வெளி ஊர்தி இந்தக் கேணிக்குள்ளிருந்து ஏறி வெளியே வர வேண்டும்
gray iron : சாம்பல் வார்ப்பிரும்பு: தேனிரும்பு அல்லது வார்ப்பிரும்பு. இதில் முறிவு ஏற்படுமாயின், சாம்பல் நிறப்படிகக் கட்டமைவு உண்டாகும்
grease : (தானி.) மெழுகுப் பசை: தாவர எண்ணெய்களின் குழம்பும், சோடா அல்லது எலுமிச்சை சோப்பும் அடங்கிய ஒரு மசகு எண்ணெய்ப் பொருள்
grease gun : (தானி) மசகு பீச்சாங் குழல் : உயவுப் பொருளை தாங்கியினுள் பீச்சிச் செலுத்துவதற்கான ஒரு சாதனம் grease lubricants : மசகு உயவுப் பொருள்கள் : இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இரண்டாவது வகைக் காரீயகம், வெளிமக் கன்மசி, அல்லது அப்பிரகத்துடன் கலந்த கலவை, (4) கற்பூரத் தைல வகை. (5) நீர்மமல்லாத எண் ணெய்கள்; (6) தனிவகை வடிப்பான்கள் உள்ள தனிவகை மசகுகள்
grease trap : (கம்) மசகுப் பொறி: வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது
green : பசுமை நிறம் : ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்திற்கும் மஞ்சளுக்குமிடைப்பட்ட வண்ணம்
காகிதத்திலும், அச்சு உருளைகளிலும், முழுமையாகப் பக்குவப்படுத்தப்படாத நிலையைக் குறிக்கும் சொல்
green core: (வார்.) பக்குவமடையா உள்ளீடு: வார்ப்படத்தில் முற்றிலும் எரிந்து பக்குவப்படாத உள்ளீடு
green field : (மின்) பசும்புலம்; துவள் குழாய்க்கு முதற்கண்ணிருந்த வாணிகப் பெயர்
green gold : (வேதி) பசும் பொன் : 25% வெள்ளியும் 75% தங்கமும் கலந்த உலோகக் கலவை
green sand : (வார்) பசுமணல்: பச்சை நிறங்கொடுக்கும் கனிப் பொருள் நிறைந்த மணற்கல். இதனை உலர்த்தாமல், நீருடன் கலந்து ஈரமாக்கி வார்ப்படத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள்
grand sand core : (வார்) பசுமணல் உள்ளீடு : ஈரமான பசுமணலினாலான ஓர் உள்ளீடு
green vitriol or copper as : (வேதி.) பசுங்கந்தகத் திராவகம் அல்லது இரும்புக் கந்தகை : எஃகினை ஊற வைப்பதால் கிடைக்கும் துணைப்பொருள். இதனை அய சல்ஃபேட்டு என்றும் கூறுவர். தொற்றுத் தடைமருந்தாகப் பயன் படுகிறது. மை, ஆழ்ந்த நீல வண்ணப்பொடி, சிவப்பு ஆக்சைடு ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகின்றது
green wood: பசுமரம் : ஒருவகை வெட்டுமரம். இதில் சாறு அகற்றப்பட்டு, உலர்த்தப்படுவதில்லை
grid : (மின்.) (1) மின்வாய் : எலெக்ட்ரான்கள் அல்லது அயனிகள் செல்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறப்புகள் கொண்ட ஒரு மின்வாய்
(2) இணைப்பு வரைச்சட்டம் : மின் னாக்கிகளின் இணைப்பு வரைச் சட்டம்
(3) சேமக்கல அடித்தளம் : சேம மின் கலங்களில் தகடுகள் அமைக்கப்படுவதற்கான அடித்தளம்
(4) வார்ப்பிரும்புச் சட்டம் : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப்பாளங்களிலிருந்து நீராவித் தகடுகளை புறத்தே பிடித்து வைத்துக் கொள்வதற்கான வார்ப்பிரும்புச் சட்டம்
(5) வானொலிக் குழாய் : வானொலியில் உருகாது அழலொளிவிடும் மின்குமிழ் இழைக்கும் தகட்டிற்கு மிடையேயுள்ள வானொலிக் குழாய்ப் பகுதி grid condenser ; கம்பிக் கொண்மி: கம்பிவலை மின்சுற்று வழியின் ஒரு பகுதியாகவுள்ள கொண்மி
grid current : (மின்) இணைப்பு மின்னோட்டம்: ஓர் எலெக்ட்ரான் குழலின் இணைப்பு மின் சுற்று வழியில் பாயும் மின்னோட்டம்
grid dip meter : (மின்.) இணைப்பு மின் இறக்க அளவுமானி: ஒத்திசைவு அலைவெண்களை அளவிடுவதற்கான ஒரு கருவி
grid leak : கம்பிக் கசிவு: ஒரு மின்னணுக்குழாயின் கம்பிவலை மின் சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் மின்தடை
grid leak detector : (மின்) இணைப்புமின் கசிவு காட்டும் பொறி: ஒரு மூன்று மின்முனை காட்டும் பொறியாகவும், மின் மிகைப்பியாகவும் செயற்படும் வகையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு மூன்று மின்முனை மிகைப்பி இணைப்பு மின் சுற்றுவழியில் இந்தக் கண்டுபிடிப்பு நடைபெறுகிறது
grid modulation : (மின்.) இணைப்பு அலை மாற்றம் : இது ஓர் அலைமாற்ற மின் சுற்றுவழி. இதில் அலைமாற்றச் சைகையானது, இணைப்பினுள் அலைமாற்ற நிலையில் செலுத்தப்படுகிறது
grid resistance : (மின் ) வலை மின்தடை : மிகப்பெரிய அளவிலான மின்னோட்ட இயக்கிகளுக்கான தொடக்க மின்தடை. இது வார்ப்பிரும்பிலிருந்து கம்பி வலைகள் வடிவில் தயாரிக்கப்படுகிறது
grid resistor : வலைமின் தடுப்பான் : ஒரு வானொலிக் குழாயின் கம்பிவலை மின்சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் அதிக அளவுத் தடையுள்ள மின் தடுப்பான்
grid voltage : (மின்) இணைப்பு மின்னழுத்தம் : ஒரு வெற்றிடக் குழலின் இணைப்பில் பயன்படுத்தப்படும் சார்பு மின்னழுத்தம்
grill (க.க.) வலைத்தட்டி : திறந்த வாயில்களுக்கு அல்லது கதவில் அல்லது பல்கணியிலுள்ள கண்ணாடிகளுக்குப் பாதுகாப் பாக உலோகத்தால் அல்ல மரத்தால் அமைக்கப்படும் வலைத் தட்டி அமைப்பு
grind : சாணையிடல் : சுழலும் சாணைச் சக்கரத்தில் சாணையிட்டுத் தீட்டுவதன் மூலம் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல்; வேண்டிய வடிவளவுக்கு அராவிக் குறைத்தல்; அல்லது அகற்றிவிடுதல்
grinder: (பட்.) அரைவை எந்திரம்: அரை வைப் பணிக்குப் பயன்படும் கருவி அல்லது சாதனம்
grind finish : (எந்) சாணை தீட்டுதல்: சாணைச் சக்கரத்தில் அராவித்தீட்டி மெருகேற்றுதல். முன்னர் கருவிகளில் மெருகிடப் பட்ட பல வேலைகள் இன்று சாணை தீட்டுதல் மூலம் நடைபெறுகின்றன
grinding allowance : சாணைக் கழிவு : வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் சாணை தீட்டுவதால் ஏற்படும் கழிவுக்காக விட்டு வைக்கப் படும் அளவு. நேர்த்தியான வேலைப்பாட்டில் .0076-.0177செ.மீ. போதுமானது. கனமான பொருள்களின் வேலைப் பாடுகளில் 1/64 அல்லது 1/32 அளவு தேவைப்படும்
gridding compound ; (தானி) சாணை இணைப்பு: சாணை தீட்டுவதன் மூலம் நுட்பமாக மெரு கூட்டி உறுப்புகளை முற்றிலுமாகப் பொருந்துமாறு இணைத்தல் இதனைக் கையினாலோ, எந்திரத்தினாலோ செய்யலாம் grinding machine : (உலோ) சாணை எந்திரம் : ஓர் உராய்வுச் சக்கரத்தைச் சுழற்றி சாணை தீட்டுவதற்கான எந்திரம்
grindstone_: சாணைக்கல் : இது சாணை தீட்டுவதற்கான ஒரு கருவி. இது இயற்கையாகக் கிடைக்கும் மணற்பாறையினாலானது, சுழலும் இக்கல்லில் பொருள்களை உராய்ந்து சாணை தீட்டப்படுகிறது
grip : (எந்.) பிடிப்பாணி : பொதுவாக, எந்திரத்தில் இறுகப்பிடிக்கும் பகுதியைக் குறிக்கும்
grippers: (அச்சு.) பிடிப்பான்கள்: அச்சு எந்திரத்தில் அச்சிடும்போது காகிதத்தை உரியநிலையில் இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்குப் பயன்படும் உலோகத்தாலான சிறிய விரல்கள் போன்றஅமைப்பு
gri-saille : புடைப்போவியம்: ஒரு வண்ணத்திறமாகச் சாம்பல் நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் திற ஓவிய ஒப்பனை
grit : பருமணல்: சாணைச் சக்கரங்கள் செய்வதற்குப் பயன்படும் பொடிக்கற்கள். இந்தப் பொடிக்கற்களின் வடிவளவினைப் பருமணல் எண்மூலம் குறிக்கின்றனர்
groin : (க.க.) கட்டுமான இடைக் கோணம் : கட்டிடக்கலையில் இரு வளைவு மாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம்
groined vaulting : (க.க.) இடைக்கோணக் கவிகை மாடம் : கவிகை மோடுகள் ஒன்றை யொன்று குறுக்கே வெட்டிச் செல்லும் வண்ணம் கட்டிடங்களுக்கும் நடைபாதைகளுக்கும் மோட்டுக் கவிகை அமைக்கும் முறை
grommet: வட்டுவளையம்: பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை
மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாகப் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தித் திரி வளையம்
கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிற்று வட்டு அல்லது வளையம்
groove : (க.க.) வரிப்பள்ளம்': சால்வரி நீண்ட வரிப்பள்ளம்; தவாளிப்பு: வரித்தடம்
grooving : (க.க) வரிப்பள்ளமிடுதல்: வரிப்பள்ளமிடும் கருவி கொண்டு நீண்டபள்ளத் தடமிடுதல் அல்லது சால்வரி அகழ்தல்
grooving machine: தவாளிப்புக் கருவி : செல்தடப்பள்ளம் அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி
grooving stake : தவாளிப்பு முளை : பல்வேறு வடிவளவுகளில் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஒரு சலாகை. கையால் வரிப்பள்ளமிடும் கருவியைப் பயன்படுத்தாமல், கொட்டாப்புளியினால் பூட்டு விளிம்புகளை மூடுவ வதற்கு இது பயன்படுகிறது. இதில் பட்டறைப் பிடிப்புக் குறட்டில் சலாகை இறுகப் பற்றிக் கொள்ளப்படுகிறது
gross : குரோஸ் : பன்னிரண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு. எண்ணிக் கையில் 144
grotesque : விசித்திர பாணி: விசித்திரக் கற்பனைக் கதம்பமாக அமைந்த அலங்காரப் பாணி
ground (க.க.) (1) ஆதார மரத் துண்டு : செங்கல் அல்லது கற்சுவருடன் இணைக்கப்பட்டுள்ள ஆணி அடிப்பதற்குரிய மரத்துண்டு (2) மின்விசை நிலத்தொடர்பு : மின்சுற்று வழியை முற்றுவிப்பதற்காக மின்னாக்கி, மின்னியக்கி மின் விளக்கு முதலியவற்றுக்கு நிலத்தொடர்பு உண்டு பண்ணுதல்
(3) நிலத்தில் மின்கசிவு : மின்னோட்டம் தேவையான வேலைக்கு மாறாக, நிலத்தில் கசிந்துவிடுதல்
ground circuit : (மின்) நிலமின் சுற்றுவழி : இரண்டு அல்லது மூன்று கம்பி மின்சுற்று வழியில், நிலத்தை ஒரு கம்பியாகப் பயன்படுத்தும் ஒரு சுற்று வழி
ground clamp : (மின்) நிலப்பற்றுக் கட்டை: மின்தொடர்புகளைச் சிறந்தமுறையில் ஏற்படுத்து வதற்காக ஒரு குழாயுடன் ஒரு கம்பியை அல்லது பிற மின்கடத்தியைப் பிணைப்பதற்குப் பயன்படும் பற்றுக்கட்டை
ground detector : (மின்) நிலத்தொடர்பு நுண்கருவி : ஒரு மின் விசைப் பலகையில், ஒரு மின்சுற்று வழிக்கம்பியில் மண்தொடர்பு ஏற் படும் போது அதனைக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளக்கு
ground gear : (வானூ) தரைப் பல்லிணை : ஒரு பறவைக் கப்பலைத் தரையிறங்கச் செய்வதற்கும், அதனைத் தரையில் இயக்கு வதற்கும் தேவைப்படும் பல்லிணை அல்லது சாதனம்
grounding : (மின்) மின்விசை நிலத்தொடர்பு : மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறையில் ஒன்றாக இணைத்தல்
grounding conductor : (மின்) நிலமின் கடத்தி : நிலத்தொடர்பு மின் முனைனய அல்லது மின் முனைகளை கம்பியிணைப்புடன் பிணைப்பதற்குப் பயன்படும் மின் கடத்தி
grounding out: பின்னணியை அகற்றுதல் செதுக்கு வேலைப் பாட்டில் வடிவமைப்பின் பின்னணியை அகற்றுதல்
ground joint : (கணி) தேய்ப்பு மூட்டு : உறுப்புகளை உராய் பொருள் பசையுடன் சேர்த்துத் தேய்த்து அல்லது உராய் பொருளை எண்ணை யுடனோ நீருடனோ சேர்த்துப் பொருத்துதல். (உ.ம்) உந்துவண்டிகளின் ஓரதர்களைத் தேய்த்தல்
ground joist : நிலத்துலாக் கட்டை: நிலத்திலிருந்து மேல் நோக்கி எழுப்பப்படும் துலாக் கட்டை
ground loop : (வானூ.) தரைக்கரண வளைவு: விமானம் நிலத்தில் இயங்கும்போது அல்லது தரையிறங்கும் போதோ உயரே ஏறும் போதோ தரையில் ஓடும் போதோ கட்டுப்படுத்த முடியாமல் திடீரெனக் திரும்புதல்
ground re-turn : (தானி.மின்) நிலமீட்சி ; உந்து வண்டியில் மின்னியல் சாதனங்கள் அனைத்தும் முழுமையான மின் சுற்றுவழி அமையும் வகையில் அந்த வண்டியின் அடிச்சட்டத்துடன் மின்னியல் சாதனங்களை இணைத்தல்
ground speed : (வானூ) தரையோட்ட வேகம் : ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 290கி.மீ. ஆகும் ground speed: (வானூ.) தரை வேகம்: விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதம்
ground speed meter : (வானூ.) தரை வேகமானி: விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதத்தை அளவிடும் கருவி
ground strap: (தானி.) இணைப்புப் பட்டை: காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை
ground water (கம்.) தரையடி நீர்: தரையடியில் தேங்கி நிற்கும் அல்லது நீரோட்டமாக ஓடும் நீர்
ground waves : (விண்.) நில அலை : ஒரு வெடிப்பு காரணமாக நிலத்தில் உண்டாகும் அலை
ground wire: (மின்.) தரையடிக் கம்பி: தரையடியில் இரு மின்னியல் சாதனங்களை இணைக்கும் கம்பி
ground wood: தோப்பு மரம்: இது எந்திர வெட்டு மரம் என்றும் அழைத்தப்புெறும். மரத்தடிகளை அராவித் தேய்த்து இந்த மரம் பெறப்படுகிறது
group of dots : (கணிப். ) புள்ளிக் குறிகளின் குழுமம்.
grout : அரைசாந்து: கட்டிட இடைவெளிகளை நிரப்புவதற்கான நீளமான அரைசாந்து
growler : (மின்.) உறுமின்மாற்றி: மின்னகங்களில் குறுக்கீடுகள், திறப்புகள், மண்தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படும் சிறிய மின்மாற்றி
growth: (மின்.) வளர்ச்சி நிலை: மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றின் அளவுகளில் படிப்படியாக ஏற்படும் அதிகரிப்பைக் குறிக்கும் சொல்
guard : இடர்காப்பமைவு: (எந்.) எந்திரத்தை இயக்குபவருக்கு உடற்காயம் எதுவும் ஏற்படாமல் காப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காப்புச் சாதனம்
guard band: (மின்.) காப்புப் பட்டை: அலைவரிசைகளிடையே இடையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையின் மேல் முனையிலுள்ள ஒரு குறுகிய அலைவெண்பட்டை
gudgeon pin : (தானி. ) also go தண்டு முனை: இது இருசுக்கடையாணி அல்லது உந்துதண்டு பிணைப்பாணி போன்றதாகும்
gudgeons : (அச்சு.) சுழல்சக்கரங்கள்: அச்சு எந்திரங்களில் உருளையின் முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள் உலோகச் சக்கரங்கள். இவை சுழல்நெறிப் பட்டைகளில் உருண்டு உருளைகளைச் சுழலச் செய்கின்றன
guide bearings: (எந்.) சால்வரித் தாங்கிகள்: உறுப்புகள் நழுவிச் செல்லக்கூடிய சால்வரி அல்லது வரிப்பள்ளம் உடைய தாங்கிகள்
guided aircraft missile. (விண்.) ஏவு விமானக் கணை: வானத்தில் பறக்கும்போது இலக்குகளைத் தாக்குவத்ற்காக விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஒரு வகைத் தானியங்கி ஏவுகணை. இதனை வானில் செலுத்திய பிறகு இலக்கை நோக்கி ஏவலாம்
guided missile : (விண்.) ஏவுகணை: வானொலி போன்ற கருவி களைக் கொண்டு தொலைவிலிருந்தே வேண்டிய நெறியில் செலுத்தப்படத் தக்க படைக்கலம்
guide pins : (குழை.) ஆற்றுப்படையாணிகள்: வார்ப்படம் மூடிக் கொள்கிறபோது அழுத்தச் செருகியும், பள்ளமும் முறையாக ஒருங்கிணைவதற்கு உதவும் சாதனம்
guide rail : ஆற்றுப்படைத் தண்ட வாளம் : இருப்பூர்தியின் சக்கர விளிம்புகளை ஆற்றுப்படுத்திச் செல்வதற்காக இருப்புப்பாதையின் பிரதான தண்டவாளத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிகைத் தண்டவாளம். இந்தத் தண்டவாளம் வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகிச் செல்லாமல் தடுக்கின்றன
guides : (அச்சு.) இயக்கு தண்டுகள்: ஒவ்வொரு தாளிலும் ஒரே இடத்தில் அச்சிடுதல் நடைபெறுமாறு செய்வதற்காகத் தாளில் வைத்து வழிப்படுத்துவதற்கு உதவும் சாதனம். இந்தச் சாதன்த்தை தேவையான நிலையில் சீரமைத்துக் கொள்ளலாம்
guilloche : (க.க.) பின்னற்சடை ஒப்பனை: கட்டிடங்களில் பின்னற்சடை போன்று செய்யப்படும் சிற்பக்கலை ஒப்பனை
guillotine cut : தலைத் தறிப்பு வெட்டு: தலையை வெட்டுவதற்காகப் பயன்பட்ட வெட்டுப்பொறியின் கத்தி அலகு போன்ற வெட்டுவதற்கான எந்திரக் கருவி
gum bloom : (வண்.) பிசின் அரக்கு : இயல்பான பளபளப்புள்ள, ஒளி ஊடுருவக்கூடிய பிசின் குழம்பு
gumming test for oils : பிசின் சோதனை: எண்ணெய்கள் பிசினாக மாறுந்திறனைச் சோதிக்கும் சோதனை. வாயு எஞ்சின் நீள் உருளைகளில் எண்ணெய்கள் எந்த அளவுக்கு கார்பனாக மாறும் என்பதை அளவிடுவதற்கு இச்சோனை பயன்படுகிறது. எண்ணெயை அமிலத்துடன் சேர்ப்பதால் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு இது அறியப்படுகிறது
gums: (வேதி; குழை.) கோந்துகள்: தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பசை வகைகள், பிசின்கள் போலன்றி, இவை தண்ணீரில் கரையக்கூடியவை. வண்ணத் தொழிலில் குங்கிலியம் போன்ற இயற்கைப் பிசின்களை இப்பெயர் குறிக்கிறது
gum wood: குங்கிலிய மரம்: நடுத்தர அளவு கனமான, கருநிறமான, வாதுமை மரத்தில் உள்ளது போன்று மணிக்கரணைகள் உள்ள மரம், அறைகலன்கள் செய்யவும், கட்டிடங்களில் உட்புற அலங்கார வேலைகளுக்கும் முக்கியமாகப் பயன்படுகிறது
gun cotton: (வேதி.) வெடிப்பஞ்சு : வெடிப்பாற்றலுள்ள நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவற்றில் தோய்ந்த மிகுந்த வெடிப்புத் திறனுடைய பஞ்சு
gun lather (எந்.) பீரங்கிக் கடைசல் எந்திரம்: பீரங்கிகளில் கடைசல் வேலை செய்வதற்கும், அவற்றில் துளையிடுவதற்கும் பயன்படும் பெரிய அளவிலான கடைசல் எந்திரம்
gun metal: கருங்கலம்: துப்பாக்கி செய்யப் பயன்படும் செம்பு, துத்தநாகம், வெள்ளியம் கலந்த உலோகக் கலவை. ஒரு காலத்தில் பீரங்கிகள் செய்ய மிகுதியும் பயன்படுத்பட்டது
gunning : (வானூ.) முழு வுேக இயக்கம் : விமான எஞ்சினை முழுவேகத்தில் இயங்கும்படி செய்தல் gun powder : (வேதி.) வெடிமருந்து : துப்பாக்கி மருந்தாகப் பயன்படும் வெடி மருந்துக்கலவை. வெடியுப்பு, மரக்கரி, கந்தகம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. இது கருநிறமாகவோ சிவப்பு நிறமாகவோ இருக்கும்
Gunters chain : நில அளவைச் சங்கிலி : நில அளவையாளர்கள் பயன்படுத்தும் 20மீ. நீளமுள்ள நில அளவைச் சங்கிலி இதில், ஒவ்வொன்றும் 20செமீ நீள்முள்ள 100 கண்ணிகள் இருக்கும்
gusset : (பொறி.) வலிவுக் கொண்டி: வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் ஒரு முனைக்கு அல்லது கோணப் பகுதி வலுவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் இரும்பு வளையக் கொண்டி
Gutenberg, johann : (அச்சு.)கூட்டன்பர்க், ஜோகான் (1398-1468): நகர்த்தக்கூடிய அச்செழுத்து முறையைக் கண்டுபிடித்த ஜெர்மானிய அச்சுக் கலைஞர்
gutta-percha: (மின்.) மரப்பால் பிசின்: பல்வேறு மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பாலினால் செய்யப்படும் கட்டிறுக்கமான சாம்பல் நிறப் பிசின். இது பலவகைகளில் பயன்படுகிறது. முக்கியமாக மின் காப்பிடுவதற்குப் பயனாகின்றது
guttae : (க.க.) துளி ஒப்பனை : கிரேக்கச் சிற்ப வகையில் துளி போன்ற அணி ஒப்பனைகள்
gutter: (க.க.) (1) வடிநீர்க்கால்: சாக்கடை நீர் வழிந்தோடுவதற்காக தெருவோரமாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் (2) வாரி நீரோடை : தெருவில் நடைபாதையினையொட்டி செங்கல் அல்லது கல்பாவிய வடிகால் (3) வரிப்பள்ளப் பட்டிகை: அச்சுத் துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை
guy: (பொறி.) சமநிலைப் பிணிப்பான்: பாரந்தூக்கி, கூடாரம் முதலியவற்றைச் சமநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு
guy rope : (பொறி.) சமநிலைப் பிணிப்பு வட்டம் : துத்தநாகத்தால் மேற்பூச்சு பூசப்பட்ட வடம். இது ஒவ்வொன்றும் 7 கம்பிகள் கொண்ட 6 சரங்களையும், சணல் நார் உட்புரியினையும் கொண்டது
gypsum . (க.க.) கனிக்கல்: கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO42H2O). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அழைக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் கட்டுப்போடுவதற்கான காரைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்
gyrate: திருகு சுருள் : சுழல் அச்சினை திருகு சுருளாகச் சுற்றிச் செல்லச் செய்தல்
gyro horizon (வானூ.) திருகு சுருள் விளிம்பு : இது திருகு சுழல் கருவி. இது இயல்பான அடிவான விளிம்பினை ஒத்து விமானத்தின் பக்கவாட்டு உயரத்தையும் நீளவாட்டு உயரத்தையும் குறித்துக் காட்டுகிறது
gyro-pilot : , (வானூ.) திருகு சுழல் செலுத்தி : விமானத்தைத் தானாகவே திருகு சுழலாகச் சுற்றிச் செல்லச் செய்யக்கூடிய திருகு சுருளாகச் சுழலும், எந்திர சாதனம். குறுக்கு வழியில் வழக்கமாகச் செல்லும் விமானத்தின் செலுத்திகள் சோர்வடையாமல் இது தடுக்கிறது
gyro-plane : (வானூ.) நிமிா் விமானம் : தலைக்கு மேலே விரைவாகச் சுழலும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் செங்குத்தாக மேலெழுந்து செல்லும் விமானம்
gyro scope : (இயற்.) திருகு சுழலாழி : சுழல் வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள். இது கப்பல்களை நிலைப்படுத்துவதற்கும், விமானங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது
gyro-scopic turn indicator : (வானூ.) திருகு சுழல்மானி: திருகு சுழல் இயக்கத்தைப் பொறுத்து இயங்கித் திசைகாட்டும் அளவு கருவி H beam:(க.க.) H வடிவ உத்தரம்: ஆங்கில எழுத்து 'H' போன்ற வடிவிலுள்ள எஃகு உத்தரம். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு விளிம்பு அகலங்களை பலவிதமாக இருக்கும் வகையில் அமைக்கப்படும் கட்டுமான வடிவம். இதில் விளிம்புகளின் உட்புறம் பெரும்பாலும் வெளிப்புறத்திற்கு இணையாக இருக்கும். இந்த வகை வடிவமைப்புகள், முக்கியமாகத் தூண்களின் வரிசை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது
உத்தரம் (படம்)
hackling textile: (நூற்.) சிக்கெடுத்தல்: நீண்ட சணல் இழைகளின் சிக்கலை ஏஃகுச் சீப்புக்கொண்டு சீவிச் சிக்கறுத்துத் துப்புரவு செய்தல்
hack saw : உலோக ரம்பம் : உலோகப் பொருட்களை வெட்டுவதற்கான ரம்பம். இதனை மின் விசையினாலோ, கையினாலோ இயக்கலாம்
உலோக ரம்பம்(படம்)
haemoglobin : (உடலி.) செங்குருதியணு : இரத்தத்திலுள்ள செந்நிறப் பொருள். இதில் 'குளோபின்' என்ற புரதமும், ஹேம்’ என்ற இரத்தச் சிவப்பு வண்ணப் பொருளும் அடங்கியிருக்கும்
haemophilia : (நோயி.) குருதிப் பெருக்குநோய்: சிறுகாயத்திலிருந்து இரத்தம் உறையாது பெருகிடும் ஒரு பரம்பரை நோய்
haermorrhage : (உடலி.) இரத்தப் போக்கு : குருதிக் குழாய்களிருந்து இரத்தம் வெளிப்படுதல்
haft: கைப்பிடி : குத்துவாள், தத்தி, தமரூசி போன்றவற்றில் உள்ளது போன்ற கைப்பிடி.
hair: (குழை.) மயிர்க்குச்சு : கால் நடைகளின் முடியிலிருந்து செய்யூப்படும் மயிர்க்குச்சு, இது முடிச்சிக்கல் எடுக்க உதவுகிறது. இப்போது முடிக்குப் பதிலாக கல்நார், மணிலா சணல் நார் இழைகளும் பயன்படுத்தப்படுகின்றன
hair hook : (குழை.) மயிர்க் கொக்கி: இரண்டு அல்லது மூன்று கவர் முட்கள் கொண்ட ஒருதருவி. இந்தக் கவர் முட்கள் ஒரு நீண்ட கைப்பிடியில் செங்குத்துக் கோணங்களில் பொருத்தப்பட்டிருக்கும். சுண்ணாம்புச் சாந்துடன் முடியினை இணைப்பதற்குப் பயன்படுகிறது
hair line : (அச்சு.) நுண்வரிக் கோடு : எழுத்து, அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக் கோடு
hair spring : (எந்.) கடிகாரச் சுருள்வில் : கடிகாரத்தில் துடிப்பியக்கச் சக்கரத்தை முதலில் ஒரு பக்கமும், பிறகு மறுபக்கமும் ஊசலாடச் செய்யும் ஒரு நுண்னிய சுருள் வில்
half bearings : (எந்.) அரைத் தாங்கிகள் : பாரம் எப்போதும் ஒரே திசையில் இருக்கக் கூடிய ரயில்வேக் கார்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தாங்கிகள். இது இருசுக் கட்டைகளைத் தாங்கிக்கு எதிராகத் தாங்கிப்பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் போதுமான கனமுடையதாக இருக்கும்
half binding : அரைக்கட்டுமானம் : புத்தக மூலையும், முதுகுப் புறமும் தோலால் அமைந்த கட்டுமானம்
half - diamond indention : (அச்சு.) அரை வைர வடிவ ஓரம் : அச்சிடும்போது பக்கங்களில் அரை வைர வடிவத்தில் ஓரப்பகுதியில் இடம்விட்டு அமைத்தல்
holf-lap joint : (மர.வே.) சமநிலைப்பிணைப்பு : இணைக்கப்பட வேண்டிய இரு துண்டுகளின் கனத்தைப் பாதியளவுக்குக் குறைத்துப் பொருத்துதல்
half-life : (மின்ன.) பாதிக்கால அளவு: அணு ஆற்றல் சக்திப் பொருள் இயல்பாக வானிலிருந்து விழும் அளவில் அரைப்பகுதி விழும் கால அளவு
half moon stake : (உலோ.) அரைவட்ட முளை: மேற்புறம் சந்திரனின் பாதிப்பிறை போன்று வளைந்து ஒரு புறம் சாய்ந்துள்ள ஒரு முளை. வட்டவடிவு விளிம்பு இயக்கங்களில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது
half nut : (பட்.) அரைச் சுரையாணி : நீளவாக்கில் பிளக்கப்பட்டுள்ள ஒரு சுரையாணி. சிலசமயம் ஒருபாதி ஒரு திருகின் மீது இயங்கும். சிலசமயம் ஒரு கடைசல் ஊர்தியிலுள்ள அரைச்சுரையாணி போன்று ஒரு திருகாணியைச் சுற்றி இயங்கும்
half-pack bench saw: (மர.வே.) இரட்டை கைவாள் : வெட்டப்பட வேண்டிய பொருள் முழுவதையும் வெட்டுவதற்கு வேண்டிய விறைப்பான வெட்டு முனைகளையும், திறனையும் கொண்ட இரம்பம், இது பெரும்பாலும் 35-50 செ.மீ. நீளத்தில் செய்யப்படுகிறது. விறைப்பான தண்டுப்பகுதி அலகின் நீளத்தில் ஒரு பகுதி வரையில் மட்டுமே நீண்டிருக்கும். இதன் மூலம் கைவாள், நைவாள் ஆகிய இரண்டின் செயல் முறையும் இதில் இணைந்திருக்கும்
half pattern : அரைத்தோரணி : ஒரு தோரணியின் ஒரு பாதி. இது வார்ப்படத்தின் வசதிக்காக மையத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும்
half-round file: அரைவட்ட அரம் : ஒரு புறம் தட்டையாகவும், மறு புறம் வளைவாகவும் உள்ள ஓர் அரம். இதிலுள்ள புறங்குவியின் அளவு ஒருபோது அரைவட்டத்திற்குச் சமமாக இருக்காது
half section : அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி : எந்திரவியல் வரைபடத்தில், மையக்கோட்டில் முடிவுறும் குறுக்குவெட்டுத் தோற்றம். இதனால், ஒரு பகுதி, புறத் தோற்றத்தையும், மறுபகுதி உட்புறத் தோற்றத்தையும் காணலாம்
half-step-increments: (கணிப்.) அரைப்படிமுறை ஏறுமுகப்படிகள்
half story: (க.க.) அரைக்கூரை: - கூரைக்கு நேர் கீழே வேயப்பட்டுள்ள கூரைக்கட்டமைவின் ஒரு பகுதி. இது முடிவுற்ற முகட்டினையும், தளத்தினையும், பக்கச் சுவரையும் கொண்டிருக்கும்
half title : (அச்சு.) குறுந் தலைப்பு : புத்தகத் தலைப்பும் புத்தகத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறு தலைப்பு
half tone : (அச்சு.) நுண்பதிவுப் படம் : ஒளிப்படத்தில் ஒளி நிழல் மாறுபாட்டளவுப் புள்ளிகளைக் காட்டுகின்ற படம். இது ஒரு தகட்டில் ஓர் அங்குலப்பகுதியில் 55200 வரிகள் வரை நேர்த்தியாக வரியிடப்பட்ட கண்ணாடித்திரையில் ஒளிப்படம் செதுக்குருவாக்கம் செய்யப்பட்டிருக்கும்
halftone paper : (அச்சு.) நுண் பதிவுப் படத்தாள் : நுண்பதிவுப் படங்கள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பளபளப்பான அச்சுத்தாள்
half-wave rectifier : (மின்.) பாதி அலை மின்னோட்ட மாற்று கருவி : (வேதி.) ஒரு மாற்று மின்னோட்டச் சுழற்சியின் ஒரு பகுதி மட்டும் செல்வதற்கு அனுமதித்து எதிர் மின்னோட்டத்தை அனுமதிக்காதிருக்கிற ஒருமின்னோட்ட மாற்று கருவி
halogen : (வேதி.) உப்பீனி : ஃபுளோரின், குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை அடங்கிய தனிமங்களின் குடும்பத்தைக் குறிக்கும். இவை 'உப்பு உண்டாக்குபவை எனப்படும்
haived pattern : பாதியாக்கிய தோரணி : இரு சம பகுதிகளாக உருவாக்கப்பட்ட வார்ப்படத் தோரணி. இவ்வாறு செய்வதால் வார்ப்படம் செய்யும்போது எளிதில் வெளியில் எடுக்க முடியும்
halving : செம்பாக இணைப்பு : ஒரு பகுதியை ஓர் உறுப்பின் முகப்பிலிருந்தும், இன்னொரு பகுதியை அதனுடன் இணைக்கபடவிருக்கும் உறுப்பின் பின்பகுப்பிலிருந்தும் வெட்டியெடுத்து ஒன்றாக இணைத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் இணைக்கப்படும் இரு உறுப்புகளின் புறப்பகுதிகள் தடைபடா நேர்தளப்பரப்புடன் இருக்கும்
ham : (மின்.) பயில்முறை வானொலி (ஹேம்) : பயில் முறை அல்லது பரிசோதனை வானொலியைக் குறிக்கும் சொல்
hammer : சம்மட்டி / சுத்தி : உலோக வேலையில் ஆணி அறைதல் போன்றவற்றில் அடித்து இறுக்குவதற்குப் பயன்படும் சாதனம் அல்லது கருவி. இது பல வகைப்படும். ஒவ்வொன்றும் அதனதன் பயனுக்கேற்பப் பெயருடையவை
hammer movement : (கணிப்.) சுத்தியல் இயக்கம்.
hammer toe: (உடலி.) கால்விரல் கோணல்: கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருத்கும் அங்கக் கோணல்
கால்விரல் கோணல்(படம்)
hams language : (மின்.) பயில்முறை வானொலி குறியீட்டு மொழி : பயில்முறை வானொலி இயக்குபவர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் குறியீட்டு மொழி
handbill: (அச்சு.) துண்டறிக்கை: கையினால் வழங்குவதற்கான சிறிய அச்சிட்ட விளம்பர வெளியீடு
hand blocking : கைப்பட அச்சு : மெத்தை-திண்டு வேலையில் ஒரு வடிவமைப்பின் அச்சுருவை கையினால் எடுக்கும் முறை
handbook : கையேடு : கையில் எடுத்துச் செல்லக்கூடிய வழிகாட்டு நூல். பொறியியல் முதலிய ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான தகவல்கள், சூத்திரங்கள் அடங்கிய தனித்தனிக் கையேடுகள் உண்டு
hand brake : (தானி.) கைத் தடை : உந்து வண்டிகளில் கையினால் இயக்கப்படும் தடை. இது முக்கியமாக நிறுத்துத் தடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடையை போட்டுவிட்டால், மீண்டும் கையினால் அத்தடை நீக்கப்படும்வரை அது அப்படியே இருந்து வரும்
hand dolly (உலோ.வே.) கைத் துடுப்பு : செவ்வக வடிவ எஃகுப்பாளம். இதன் அடிப்புறத்தில் ஒரு கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் 13x15x3 செ.மீ.அளவில் அமைந்திருக்கும். தீத்தாங்கிகளிலும்,தொட்டிகளிலும் பொருத்துவதற்கேற்ப இதன் செயல் முகப்பு வளைவாக இருக்கும்
hand drill : கைத் துரப்பணம் : கையினால் இயக்கப்படும் ஒரு துரப்பணம்
கைத் துரப்பணம்(படம்)
handed: கையுடைய: ஒரே மாதிரியான இரு உறுப்புகளை ஒன்றினை இடப்புறமாகவும். மற்றொன்றினை வலப் புறமாகவும் பயன்படுத்தும்போது அல்லது வேறேதேனும் உறுப்புடன் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் போது அது வலக்கையுடையதென அல்லது இடக்கையுடையதெனக் கூறப்படும். கருவிகள், அவை இடப்புறமாக அல்லது வலப்புறமாகப் பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன
hand feed : கையால் ஊட்டுதல் : எந்திரங்களில் மூலப்பொருள்களைக் கையால் செலுத்துதல்
hand file : (பட்.) கை அரம் : இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது
hand hook or hook wrench : (எந்.) கைக்கொக்கி அல்லது கொக்கித் திருக்குக்குறடு : ஒரு கொக்கியுள்ள நீண்ட சலாகை, இருசுகள் போன்ற வளைந்த உறுப்புகளை நேராக நிமிர்த்துவதற்குப் பயன்படுகிறது
handiwork : கைவினை : கையினால் நுட்பமாகச் செய்யப்படும் வேலைப்பாடு
handmade finish : கைமெருகு : சிலவகைக் காகிதங்களில் கையினால் செய்யப்பட்ட மெருகின் தோற்றத்தை உண்டாக்குதல், ஆனால் உண்மையில் இத்தோற்றம் கையினால் உண்டாக்கப்படுவதில்லை
hand miller : (எந்.) கையியக்க வெட்டுப்பொறி : கையினால் இயக்கி உலோகங்களில் வேலைப்பாடுகள் செய்வதற்கான சிறிய பொறியமைவு
handrail: (க.க.) கைபிடிக் கிராதி: கையினால் பிடித்துக்கொள்வதற்கு வசதியாகப் படிக்கட்டுகளில் அல்லது ஒரு மாடத்தின் விளிம்பில் அமைக்க்ப்படும் கைபிடி
handrail wreath: (க.க.) கைப்பிடி வளையம் : படிக்கட்டுக் கைபிடிக் கிராதியின் வளைவான பகுதி
hand rule : (மின்.) கைவிதி : மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு மின் கடத்தியினை, மின்னோட்டம் பாயும் திசையை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி வலதுகையால் பிடிக்குங்கால், மின் விசையின் விளைவுறு வரிகளின் திசையினை விரல்கள் குறிக்கும்
handsaw : (பட்.) கை ரம்பம் : மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடி யுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும்
கை ரம்பம் (படம்)
hand screw : கைத்திருகாணி : இரு இணையான அலகுகளும் இரு திருகாணிகளும் உடைய, மரத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பற்றிரும்பு. இரு திருகாணிகளும் ஒவ்வொரு அலகின் வழியாகவும் இயங்குவதன்மூலம் பற்றும் பிடிப்பும் ஏற்படுகிறது
hand tools : (பட்.) கைக் கருவிகள் : கையினால் செலுத்தப்படும் அல்லது இயக்கப்படும் கருவிகள்
hand turning : (பட்.) கைக் கடைசல்: கையால் இயக்கப்படும் கருவிகள் வாயிலாகக் கடைசல் வேலைப்பாடுகள் செய்தல்
hand vise : (பட்.) கைப் பற்றுகுறடு : இலேசான வேலைப்பாடுகள் செய்யும்போது கையால் பற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய பட்டறைப் பற்றுக்குறடு
hand wheel: (எந்.) கைச்சக்கரம்: கையினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். இது பெரும்பாலும் சீரமைவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது
hangar : விமானக் கூடாரம்: விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை
hanger: (க.க.) ஆதாரப் பட்டை : (1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை
(2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்
hanger bearing :(எந்.) ஆதாரப்பட்டைத் தாங்கி : ஓர் ஆதாரப் பட்டையினால் தாங்கப்படும் சுழல் தண்டுத் தாங்கி
hanger bolt : தாங்கு மரையாணி : ஒரு முனையில் நீண்ட திருகாணியும் மற்றொரு முனையில் எந்திர மரையாணி இழையும் சுரைகளும் உடைய மரையாணி
hanging core : (வார்.) தொங்கு உள்ளகம் : உள்ளகத்துடன் பிணைக்கப்பட்டுள்ள கம்பித் தொங்கலை ஆதாரமாகக் கொண்ட உள்ளகம். ஆழத்திற்குச் சென்று விடாமலிருப்பதற்காக இந்தத் தொங்கு உள்ளகங்கள் பயன்படுத்தப்படுகின்றன
hanging , indention : (வண்.) வெளி ஓர வெட்டீடு: ஒரு பத்தியின் முதல்வரி, வாசகத்தின் இடப்புறம் நீட்டியிருத்தல்
hanging stile : (க.க.) தொங்கு நிலை வரிச்சட்டம்: கதவு, சுவர், வேலி முதலியவற்றின் பாவு கூற்றில் நிலைக்கம்ப உறுப்பு
hard : கடினப் பொருள் : பற்ற வைக்கவோ உருக்கவோ முடியாத பொருள்
hard copy : (கணிப்.) திண்மைப் பகர்ப்புப் படி
hard brass : கடினப் பித்தளை : நீட்டப்பட்டபின்பு அல்லது உருட்டப்பட்ட பின்பு பதப்படுத்தப்படாத பித்தளை. விற்கருள்கள் முதலியவற்றிற்குப் பயன்படுகிறது
hard drawn copper wire : (மின்.) கடினச் செம்புக் கம்பி : பல்வேறு வடிவளவுகளுள்ள பொறிப்புக் கட்டைகளின் வழியே உட் செலுத்தி நீட்டும்போது கடினத் தன்மை பெறுகிறது. இந்தக் கடினமான கம்பி, தொலைபேசிக் கம்பியாகவும், தந்திக் கம்பிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது
hardeing : கெட்டியாக்குதல் : எஃகினைக் கெட்டியாக்குதல். எஃகினை உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி, பின்னர் அதனை எண்ணெய், நீர் அல்லது வேறு பொருத்தமான கரைசல்களில் திடீரென அமிழ்த்திக் குளிர்விப்பதன் மூலம் கெட்டியாக்கப்படுகிறது. தனிவகை எஃகுகளைக் கெட்டியாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன
harden : (உலோ.) கடினமாக்கல்: முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம் விரைவாகக் குளிர்விக்கிறார்கள்
hard iron : கெட்டியிரும்பு : அடர்த்தியாகவும், சொரசொரப்பாகவும் உள்ள வார்ப்பிரும்பு. இது தேனிரும்பைவிட மங்கலான நிறமுடையது
hardness : (இயற்.) கடினத்தன்மை: ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை.இந்தக் கடினத் தன்மை, மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும்
1.வெளிமக் கன்மகி,
2.கணிக்கல்.
3.சுண்ணகம்,
4.ஃபுரோரைட்.
5.அப்பைட்டைட்
6.களிமம்.
7.படிகக்கல்.
8.புட்பராகம்
9.நீலமணி.
10.வைரம்.
hardpan : புறணிப்படலம் : மேலீடான மண்ணுக்கு அடிப்படையாகவுள்ள கெட்டியான நிலப்படலம்
hard rubber : (மின்.) கடின ரப்பர் : கந்தகம் கலந்து வலுவூட்டிய ரப்பர். இது மின்காப்புப் பொருளாகப்பயன்படுகிறது
hard-sized : கெட்டியளவு : ஈரம் மை ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் அமைந்த காகித வடிவளவு
hard solder: (பட்.) கடின பற்றாசு: செம்பும், துத்தநாகமும் அமைந்த ஒரு பற்றாசு. இதனைத் துத்தநாகப பற்றாசு என்றும் கூறுவர், பற்ற வைத்தல், ஒட்ட வைத்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன
hard top : (தானி.எந்.) உலோக முகடு: இரண்டு அல்லது நான்கு கதவுகளுள்ள பயணிகள் செல்லும் உத்து வண்டி. இதன் மேற்பகுதி உலோகத்தால் மூடப்பட்டிருக்கும்
hardware : (க.க.) உலோகப் பொருட்கள்: பூட்டுகள், கதவுக் கீல்கள், ஆணிகள் போன்ற வீடுகளுக்குத் தேவையான உலோக உறுப்புகள்
hardware: (கணிப்.) வன்கலம்/ வன்பொருள் hard water; கடின நீர்: கால்சியம், மக்னீசியம் கூட்டுப்பொருட்கள் பெருமளவு கரைந்துள்ள நீர்
hardwood : வயிரமரம் : இலையுதிர்க்கும் மரவகைகளின் வயிரம் பாய்ந்த கட்டை, கருவாலி வாதுமை, அசோகு, புங்கம் போன்றவை வயிரம் பாய்ந்த மரங்கள்
hardy : கொல்லன் பட்டடை : உலோகத்தை வெட்டும்போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை
hardy hole : பட்டடைத் துவாரம்: பட்டடைக் கல்லிலுள்ள சதுரத் துவாரம். இது பட்டையின் தண்டுப்பகுதியைத் தாங்கிக்கொள்கிறது
harmonic analysis: (மின்.) கிளையலைப் பகுப்பாய்வு : சிக்கலான கிளையலைகளைப் பகுப்பாய்வு செய்தல்
harmonic frequency : (மின்.) கிளையலை அலைவெண் : ஓர் அடிப்படை அலைவெண்ணின் ஒரு மடங்காகவுள்ள எடுத்துக்காட்டு: அடிப்படை அலைவெண் 1000Kc என்றால், இரண்டாவது கிளையலை 2x1000KC அல்லது 2000Kc ஆகும்; மூன்றாவது கிளையலை 3 x 1000Kc அல்லது 3000Kc
harmonize : இணக்குவிப்பு : பல்வேறு உறுப்புகளை இணக்கமாக பொருத்துதல்
harness : (மின்.) காப்புக் கவசக் கம்பி இணைப்பு: கம்பிகள் அல்லது மின் கம்பிவடங்கள் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு, குழுமங்களாக இணைக்கப்பட்ட ஓர் இணைப்புக் குழுமம்
hasp: கொண்டி: கதவில் கொளுவி மாட்டிப் பூட்டுவதற்குரிய கொளுவி
hatchet copper: (உலோ.வே.) கோடரிச் செம்பு : கைப்பிடிக்குச் செங்குத்துக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ள தலையுடைய, ஒரு கோடரி போன்ற வடிவமைந்த பற்றாசுச் செம்பு
hatchet irons : (கம்.) கோடரி இரும்பு: ஒரு தனிவகையான பற்றாசு இரும்பு
hatchet stake : கோடரிமுனை : வெள்ளீயத் தகடுகளை வளைப்பதற்குக் கொல்லர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி
hatchings : நிழல் வண்ணம் : நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல். இதில் 45° கோணத்தில் இணைக்கோடுகள் அல்லது குறுக்குக் கோடுகள் பயன்படுத்தப்படும்
hatch way: (க.க.) தளப்புழை வாய்: சரக்குகளை இறக்குவதற்காகத் தளத்திலுள்ள புழை, நிலத் தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில்
haunch : உட்சரிவு: வளைவு மாடத்தின் உட்பக்கச் சரிவு
haunched mortise and tenon : (மர.வே.) உட்சரிவுத் துளைச் சட்டம்: துளைச்சட்டத்தின் அகலம், அதன் நீளத்தின் பகுதிக்குப் பதிலாகக் குறைக்கப்பட்டு, துளைப் பொருத்து வெட்டப்பட்டுச் செய்யப்படும் இணைப்பு
hawk: (குழை.) பூசுதட்டு : காரை பூசுபவரின் கைப்பிடியுள்ள சதுரப்பலகை
hawser-laid rope: நங்கூரகம்பி வடம் : மூன்று புரிகள் ஒன்றாகத் திரிக்கப்பட்ட வடம்
haze : (குழை.) மங்கல் படலம் : ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிகிலுள்ள மங்கலான தோற்றம் இதனை "அக" அல்லது "புற" மங்கல் என்பர்
head : (அச்சு.) தலைப்பு: ஒரு செய்திக்குரிய தலைப்பு. ஒரு பக்கத்தின் தலைப்பகுதியையும் குறிக்கும்
headband : (அச்சு.) தலைப்பட்டி: ஒரு அச்சுப்புத்தகத்தின் ஒரு பக்கத்தின் அல்லது அத்தியாயத்தின் தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பட்டை
header : முகப்புக்கல் : சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் பொருத்தப்பட்ட கல் அல்லது செங்கல்
header joist : (க.க.) முகப்புத் துலாக்கட்டை : படிக்கட்டுகள், புகைபோக்கிகள் போன்றவற்றுக்கான திறப்புகளைச் சுற்றி அமைக்கப்படும் பொதுத் துலாக்கட்டைகளைச் செருகுவதற்குரிய துலாக் கட்டை
heading tool : கொண்டைக் கருவி: மரையாணிகளின் கொண்டைகளை வடிவமைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி. மரையாணியின் உடற்பகுதியை ஒரு தகட்டிலுள்ள துவாரத்தினுள் நுழைத்து, மரையாணியின் முனையை அடித்துத் தட்டையாக்கித் தலைப் பகுதியாக்கப்படுகிறது
headless set screw : (எந்.) தலையிலாநிலைத் திருகாணி : கொண்டைக்குப் பதிலாகத் திருப்புளியினால் சீரமைப்பதற்கு இடமளிக்கும் தடம் அமைந்துள்ள நிலைத்திருகாணி
head of water : (இயற்.) நீர்த் தலைமட்டம் : நீரின் மிக உயர்ந்த மட்டத்திற்கும் நீர்த்தலைமட்டத்திலிருந்து ஒரு புள்ளியின் துரத்திற்குமிடையிலான செங்குத்துத் தொலைவு. எடுத்துக்காட்டாக, ஒரு நிலைக்குத்துக் குழாயிலுள்ள நீர்மவடத்திற்கும், நீர் வெளியேற்றப்படும் திறப்படைப்புக் குழாய்க்குமிடையிலானது செங்குத்துத்தூரம்
head piece (அச்சு.) ஒப்பனைத் தலைப்பு: அச்சுத்துறையில் நூலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப் பகுதி
head room ; (க.க.) தலைப்பிடம்: (1) படிக்கட்டுக்கும் அதற்கு மேலேயுள்ள முக்ட்டுக்குமிடையிலான செங்குத்தான இடம்
(2) தொலைக்காட்சியில் திரையில் தோன்றும் உருவத்தின் உச்சிக்கும் தொலைக்காட்சிப் பெட்டியின் மேற்பகுதிக்குமிடையிலான இடம்
head set: தலைமுனை ஒலிவாங்கி: (மின்.) தொலைபேசியில் செவியுடன் பொருந்த வைத்து ஒலிவாங்கும் கருவி
head stock : (எந்.) தலைமுனைத் தாங்கி: கடைசல் கருவியில் முகப்புத் தகட்டினை அல்லது சுழல் கொளுவு வாரினைத் தாங்கிச் செல்லும் நிலையான தலைமுனை
heart cam: (எந்.) இதய முனைப்பு : இயக்கும் சக்கரத்தின சுற்றுவட்டம் கடந்த முனைப்பு. இது இதய வடிவில் அமைந்திருக்கும். இது சுழல் இயக்கத்தை மறுதலை இயக்கமாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது
hearth : (க.க.) கணப்படுப்பு : ஒரு கணப்பறையிலுள்ள கணப்படுப்பு
heart-lung machiñe : ( உடலி.எந்.) இதயம்-நுரையீரல் எந்திரம் : இதய அறுவைச் சிகிச்சையின் போது இரத்தத்தைச் செலுத்தி, அதற்கு ஆக்சிஜன் கொடுத்து இறைப்பதற்குப் பயன்படும் எந்திரம் heart wood : (மர.) மரவைரம் : ஒரு மரத்தின் மையப்பகுதி. இதனைமென்மரம் சூழ்ந்திருக்கும். இதில் உயிருள்ள உயிரணுக்கள் இரா
heat : (வார்.) வெப்ப நிலை : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பின் வெப்பச் செறிவினை நீர்மநிலைக்குக் குறைத்தல்
heat-affected zone : (பற்ற.) வெப்பம் பாதிக்கும் பகுதி : உலோகங்களைப் பற்றவைக்கும்போது வெப்பத்தினால் நிலைமாற்றம் பெறுகிற உலோகத்தின் பகுதி
heat conductivity : (பற்.) வெப்பங்கடத்துத் திறன் : ஒரு பெர்ருளின் வழியாக வெப்ப ஆற்றல் பாய்ந்து செல்லும் வேகம் மற்றும் திறம்பாடு
heat distortion point : (குழை .) வெப்பத் திரிபு நிலை : தரமானதொரு பிளாஸ்டிக் பொருளின் ஒரு சலாகையை..0254செமீ அளவு வளைப்பதற்கேற்ற வெப்பநிலை
heat engine : (மின் .) வெப்ப எஞ்சின் : வெப்ப ஆற்றலை நீராவி உள்ளெரிவு போன்ற எந்திர அல்லது இயங்கு ஆற்றலாக மாற்றுகிற எஞ்சின். விசைப்பொறி உருளை எஞ்சின்கள், ராக்கெட் எஞ்சின்கள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை
heater : (மின்.) சூடேற்றி : ஒரு வெற்றிடக் குழலில் எதிர்முனையைச் சூடேற்றுவதற்குப் பயன்படும் தடையுள்ள சூடேற்றும் கருவி
heater tube: (மின்.) வெப்பூட்டுக் குழாய் : மின் தடைக்கம்பியை அல்லது வேறு பொருள்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் வடிவ, கார்பன் இழை விளக்கு அல்லது குழாய்
heating : வெப்ப மூட்டுதல் : உலைக்களத்தின் உலையில் இரும்புத் துண்டினை உரிய வடிவில் வடிப்பதற்கு ஏற்ற வெப்ப நிலைக்குச் சூடாக்குதல்
heat exchange : (குளி. பத.) வெப்பப் பரிமாற்றம் : வெப்பத்தை ஓர் அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றுகிற ஒரு சாதனம் அல்லது பன்முக அமைப்பு
heating effect of current: (மின்.) மின்னோட்ட வெப்ப விளைவு : மின்னோட்டத்தின் வெப்ப விளைவு. பாயும் மின்னோட்டத்தின் அளவுக்கு நேர் விகிதத்தில் அமைந்திருக்கும்
heating of bearings: தாங்கிகள் சூடாதல்: தவறான உயர்வுகாரணமாக, தாங்கிகளின் வெப்பநிலை உயர்தல். இதனால் இருசும் தாங்கியும் ஒட்டிக்கொள்ளும். அவை விரைவாக இற்று விடவும் காரணமாகும்
heating of dynamos: (மின்.) மின்னாக்கப்பொறி சூடாதல் : மின்னாக்கப் பொறிகள் மூன்று காரணங்களால் சூடாகின்றன: (1) தாங்கிகளில் எந்திர உராய்வு; (2) சுழல் மின்னோட்டங்கள், காந்தத் தயக்கம் காரணமாக உள்ளீட்டு இழப்புகள்; (3) சுருணைகளில் இழப்புகள்
heating surface: சூடாக்கும் பரப்பு: ஒருபுறம் சூடான வாயுக்களையும், மறுபுறம் நீராவி அல்லது நீரையும் கொண்டுள்ள கொதிகலனின் அனைத்துப் பரப்புகளும்
heating unit: (மின்.) சூடாக்கும் அலகு : மின்னியல் முறையில் சூடாக்கும் சாதனத்தில், மின் விசை உண்டாக்கப்படும் பகுதி
heat mark: (குழை.) வெப்பக்குறி : பிளாஸ்டிக் பரப்பில் காணப்படும் மிக நுட்டமான வரிப்பள்ளம். கூரியவிளிம்பு அல்லது கரடுமுரடான பரப்பு காரணமாக இது தோன்றுகிறது
heat latent : (குளி.பத.) மறைநிலை வெப்பம் : ஒரு பொருளின் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய வெப்பம்.எடுத்துக்காட்டு: ஆவியாக்க வெப்பம்
heat loss : (மின்.) வெப்ப இழப்பீடு : தடை காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பீடு
heat of condensation : (குளி. பத.) உறைமான வெப்பம் : ஒரு வாயு ஒரு திரவமாக மாறும் போது வெளியாகும் மறைநிலை வெப்பத்தினால் உண்டாகும் வெப்பம்
heat seal : (குழை.) வெப்ப முத்திரை : ஒருபொருளை அதனுடனோ, வோறொரு பொருளுடனோ வெப்பத்தினால் மட்டுமே பிணைத்தல் அல்லது பற்றவைத்தல்
heat sensible: (குளி. பத.) நுண்ணுணர்வு வெப்பம்: வெப்பநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்பம்
heat sensitive dye: (கணிப்.) அனல் ஏற்புச் சாயம்
heat specific: (குளி. பத.) வெப்ப அலகு எண்: பொருளின் பரும அலகின் வெப்பநிலையை ஒரு பாகை உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்ப அலகு எண்
heat time: (பற்.) வெப்ப நேரம்: அதிர்வுப் பற்றவைப்பு முறையில் ஒவ்வொரு மின்னோட்டத் துடிப்பின் காலநீட்சி
heat transmission : (குளி.பத.) வெப்ப அனுப்பீடு : வெப்பத்தைக் கடத்துதல், பரப்புதல் மற்றும் வெப்ப அலை பரப்புதல்
heat treating furnace: (உலோ ) வெப்ப உலை :உலோக உறுப்புகளை வெப்பத்தின் மூலம் பதப்படுத்தும் வாயுவினால் எரியும் உலை
heat treatment : (உலோ .) வெப்பப் பதனம் : எஃகினை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வெப்ப மூட்டி, மீண்டும் குளிரவைப்பதன் மூலம் மிக உயர்ந்த உழைப்புத் திறன் கொண்ட தாக்குதல். வெவ்வேறு எஃகுக்கு வெவ்வேறு பதனமுறை கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எஃகுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள பதனமுறையையே கையாள வேண்டும்
heat wave : (மின்,) வெப்ப அலை: ஊடகத்தின் அகச்சிவப்பு மண்டலத்திலுள்ள மின் காந்த அலை
heavy joist : (மர.வே.) கனத் துலாக் கட்டை 12-15செமீகனமும், 20செமீஅல்லது அதற்கு அதிகமான அகலமும் உடைய வெட்டுமரம்
hecto graph: கைப் படி பெருக்கி: கையெழுத்துப்படி எடுக்கும் கருவி
heel: (க.க.) உத்தர முனை: இறைவாரக் கையின் அல்லது உத்தரத்தின் முனை. இது சுவர் முகட்டு உத்தரத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும்
height : (க.க.) கவான் உச்சி : ஒரு கவானின் நாணின் மையக் கோட்டிலிருந்து அதன் வளை முகட்டின் உட்புற வளைவுக்குள்ள தூரம்
helical angle : (எந்.) திருகுசுழல் கோணம் : ஒரு திருகு சுழலின் அச்சுக்குச் செங்கோணத்தில் வரையப்படும் ஒரு கோட்டுடன் ஒரு திருகு சுழலின் அல்லது திருகின் பகுதி எதுவும் ஏற்படுத்தும் கோணம்
helical gear: (எந்.) ஏழுசுருள் பல்லிணை : இந்தப் பல்லிணையில் சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்டுகள், குறுக்கு வெட்டாமல், ஏதேனும் கோணத்தில் சாய்வாகவுள்ள சுழல் தண்டுகள் ஆகியவற்றிடையே விசையை அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது
helical groove : திருகு சுழல் வரிப்பள்ளம் : ஒரே சீராக முன்னேறுவதற்கென அமைந்துள்ள வரிப்பள்ளம் தனியொரு திருகு, சூழல் வரிபள்ளத்தில் ஒரு சுழற்சியில் முன்னேறும் அளவினை "இடைத்தொலையளவு" என்பர். இருவரிப்பள்ளம், மூவரிப்பள்ளம் போன்ற பலவரிப்பள்ளங்களில்: ஒரு சுழற்சியில் ஏற்படும் முன்னேற்றத்தின் அளவு, 'முந்து நிலை அளவு' எனப்படும்
helical spring : திருகுசுழல்விற்சுருள் : ஒரு கூம்பின் ஒகு அடிக் கண்டம் போன்று வடிவுடைய அழுத்தும் வகை விற்கருள்
helicoid : திருகுசுருள்: ஒரு திருகு சுழலை ஒத்திருக்கும் வகையில் சுருளாக்கப்பட்ட சுருள்
helicopter :(வானூ) உலங்கு வானூர்தி : செங்குத்தான மேழும்பி இறங்கவல்ல விமானம். இது உலங்குபோன்று முன்னேயும், பின்னேயும், பக்கவாட்டிலும் பறக்கக்கூடியது. அத்துடன் இது அந்தரத்தில் நகராமல் பறக்கக் கூடியது. ஐகோர் சிகோர்ஸ்கி முதலாவது உலங்கு வானூர்தியைத் தயாரித்தார்
heliport or helipad : (வானூ) உலங்கு வானூர்தித் தளம் : உலங்கு வானூர்திகள் தரையிறங்கவும். உயரே எழுந்து பறக்கவும் பயன்படும் பரப்பு
helium : பரிதியம்/ஹீலியம் : மிக அரிதான தனிமங்களுள் ஒன்று. இது சிலவகை யுரேனியம் தாதுக்களிலும், சிறிதளவு காற்றிலும் கலந்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் கிடைக்கும் இயற்கை வாயுவிலிருந்துதான் இது முக்கியமாகக் கிடைக்கிறது
helix : திருகுசுழல் : ஒரு நீள் உருளையைச் சுற்றியுள்ள புரியிழையைச் சுழற்றுவதன் மூலம் உண்டாகும் வளைவு. இதில் ஒவ்வொரு சுழற்சியின்போது ஒரே அளவான முன்னேற்றம் ஏற்படும்
helix angle : (எந்) திருகு வட்டக்கோணம்: அச்சுக்கும் செங்குத்தாகவுள்ள ஒரு தளத்துடன் இடைத்தொலையளவு விட்டத்தில் புரியிழையின் திருகுசுழல் ஏற்படுத்தும் கோணம்
hellbox : (அச்சு.) கூளப்பெட்டி : அச்சுத்துறையில் உடைந்துபோன அச்செழுத்துக்களும், மற்ற பயனற்ற அச்சுப் பொருட்களும் போட்டு வைக்கப்படும் பெட்டி
helper : உதவியாளர் : தேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உதவியாகவும், அவருடைய பணிப்புரையின் படியும் பணிபுரியும் உதவியாளர்
helve : கோடரிக்காம்பு : ஒரு கோடரியின் அல்லது கைக்கோடரி கைப்பிடி
'hematite : ஹேமட்டைட்: முக்கியமான இரும்புத் தாது
hemecolloids : ஹெம்கோலாய்டுகள் : 20-000 மோனோமெரிக் அலகுகளுக்குச் சமமான அளவுக்கு மீச்சேர்ம இணைவுக்கு நேரிணையாக, 10,000வரை அணுஎடை கொண்ட் மீச்சேர்மங்கள், குறைந்த குழைம நிலையுடைய கரைசல்களில் இவை பொங்குதலின்றிக் கரையும். கரை சலிலிருந்துதான் வீழ்படிவு, தூள் வடிவில் கிடைக்கிறது
hemisphere : அரைக்கோளம் : அரையுருண்டை வடிவம்.
hemlock : தேவதாரு : தேவதாரு மரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் வெட்டுமரம் தோற்றத்தில் ஊசியிலை மரம் போன்றிருக்கும். சட்டங்கள் செய்வதற்கு மிகுதியாகப் பயன்படுகிறது
hempseed oil : சணல் விதை எண்ணெய்: சணல் செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இந்த எண்ணெய் இறக்கியவுடன் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். பின்னர், பழுப்பு மஞ்சள் வண்ணத்திற்குமாறிவிடும். வண்ணச்சாயங்கள்,சோப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
henry : (மின்.) ஹென்றி : தூண்டத்தின் மின்னியல் அலகு. ஒரு மின்சுற்றுவழியில், மின்னோட்ட்ம் வினாடிக்கு ஓர் ஆம்பியர் என்ற வீதத்தில் மாறும்போது, அந்த மின் சுற்றுவழியில் ஒரு ஒல்ட் மின்னியக்கவிசை உண்டாகிறது. அப்போது அந்த மின்சுற்று வழியில் ஒரு ஹென்றிதுாண்டம் இருக்கிறது
henry, joseph (மின்.) ஜோசஃப் (1797-1878) : காந்தத்தூண்டல் தத்துவத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி.எனினும், இத்தத்துவத்தைப் பின்னர் ஃபாரடே கண்டுபிடித்த பிறகே இவரது பணி வெளியிடப்பட்டு புகழ்பெற்றது. பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அமெரிக்க வானியல் கழகத்தை நிறுவியவர்
hepplewhite : ஹெப்பிள்ஒயிட் :லண்டனைச் சேர்ந்த ஹெப்பிள்ஒயிட் என்பவர் தயாரித்த அறைகலன்களின் பானியில் அமைந்த அறைகலன்கள். கேடய இதய வடிவ நீள்வட்டம் போன்ற வடிவங்களில் இந்த அறைகலன்கள் அமைந்திருக்கும்
heptagon : எழுகோணக் கட்டம் : ஏழுபக்கங்களும், ஏழு கோணங்களும் உடைய ஒர் உருவடிவம்
heptode : ஏழுமுனையம் : ஏழுமுனையங்களைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான். இதில் ஒர் எதிர்முனைத் தகடும், ஐந்து இணைப்பு வரைச்சட்டங்களும் இருக்கும்
hermer phrodite caliper: முரண் இடுக்கியளவி: இதில் ஒரு கால், கவராயத்தில்உள்ளது போன்று கூர்மையாக இருக்கும்; மற்றொரு கால், சாதாரண வெளிப்புற இடுக்கியளவில்_உள்ளது போன்று சற்றேவளைந்திருக்கும்
hernia: (உடலி) குடலிறக்கம்: குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள் தசைச்சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித்தள்ளப்படுதல்
herringbone bond : மீன் எலும்புப் பிணைப்பு : தையலிலும், கல் செங்கல் ஒடு பாவுதலிலும்’ தச்சுக் குறுக்குக் கை இணைப்புகளிலும் மீன்வகையின் எலும்பு போல எதிரெதிர்ச் சாய்வான வரிசைப்பட அமைந்த பிணைப்பு
herringbone gear : மீன் எலும்புப் பல்லிணை : பல்லிணை முகப்பின் மையக்கோட்டிலிருந்து இருபுறமும் சாய்வாக இருக்கும் பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை. இதில் இரு அகச்சுருள் பல்லிணைகளில் இருப்பதுபோன்று, ஒன்று இடப்புறமும், ஒன்று வலப்புறமாகப் பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். சுரங்கங்களில் பயன்படும் கனரக எத்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது
herring boning: எதிரெதிர்ச்சாய்வு படிவ அமைப்பு : தச்சுக் குறுக்குக்கை இணைப்புகளில் மீன் வகையின் எலும்புகள் போல எதிரெதிர்ச் சாய்வாக் வரிசைப்பட அமைத்தல்
hertz antenna : (மின்) கம்பியில்லா வானலை வாங்கி : தனது இயக்கத்திற்குத் தரையைச் சார்ந்திராமல் கம்பியில்லாத்தந்தி மின் அலைகளைப் பயன்படுத்தும் வானலை வாங்கி
heterodyne :(வானொலி) ஒலியலைமாற்றி: தந்தியில்லாக் கம்பி வகையில்,கேளா உயர்விசை அலை மற்றோர் அலையில் மோதுவித்து, அதிர்வூட்டிக் கேட்கும் ஒலி அலையாக மாற்றுவதற்குரிய கருவியமைப்பு
hewing : வெட்டி உருவாககுதல் : கோடரி, வாள் போன்ற வெட்டுக் கருவிகளினால் மரத்தை வெட்டி வேண்டிய வடிவத்திற்கு உருவாக்குதல்
hexagon : அறுகோணக் கட்டம் : ஆறுபக்கங்களையும் ஆறு கோணங்களையுமுடைய உருவடிவம். இதில் எல்லாக் கோணங்களும் சமமானவை; கோணங்கள் அனைத்தின் கூட்டுத்தொகை 720°
hexagon nut:ஆறுகோணக்சுரையாணி : ஆறு பக்கங்கள் கொண்ட சுரையாணி
hex head :ஆறுகோணக்கொண்டையானிகள் : அறு கோணக் கொண்டைகளையுடைய திருகாணிகளும் மரையாணிகளும்
hexode (மின்.) ஆறுமுனையம்: ஆறு மின்முனைகளைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான் குழல். இது பொதுவாக ஒர் எதிர்முனை தகடு நான்கு வரைச்சட்டங்களைக் கொண்டிருக்கும்
hickey (மின்.) குழாய் வளைப்பான் : (1) ஒரிடத்தில் பொருத்தபட்டுள்ள பொருளின் இணைப்பில் நடுத்தண்டிற்கும் ஆதாரத்திற்குமிடையில் பொருத்தப்பட்டுள்ள திருகிழையுடைய, சிறிய பித்தளை அல்லது இரும்புச் சாதனம். இது அந்தப் பொருளின் நடுத்தண்டிலிருந்து வெளிவரும் கம்பிகளுக்குப் புற வழியை உண்டாக்குகின்றன (2) மி ன் கம்பிக் காப்புக் குழாயை அல்லது வேறு குழாயினை தேவையான வடிவத்தில் வளைப்பதற்குப் பயன்படும் குழாய் வளைப்புச் சாதனம்
hichory : வாதுமை மரம் : திண்னிய பளுவான வெட்டுமரம். வாதுமை போன்ற கொட்டையும் தரும் மரவகை. இதன் வெட்டு மரம் கடினமானது; திண்மை வாய்ந்தது; இதில் வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைகளில் மிகுதியும் பயன்படுகிறது
'hidden surface line: மறைபரப்புக்கோடு : எந்திர வரை படத்தில் மறைந்திருக்கும் உறுப்பின் பரப்பினைக் குறிக்கும் குறுகிய இடைக்கோடுகளான கோடு
highboy :உயர்பேழை : கால்கள் மீது நிற்கும், இழுவைப் பெட்டிகள் உடைய உயரமான பேழை
high brass : (உலோ) உயர்தரப் பித்தளை: வாணிக முறையில் தகடுகளாகவும் துண்டுகளாகவும் கிடைக்கும் பித்தளை. இதில் 65% பித்தளையும் 35% துத்தநாகமும் கலந்திருக்கும். நெசவுக்காகவும், கரைதலுக்காகவும், வடிவமைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது high carbon steel : (உலோ.) உயர் கார்பன் எஃகு : 0.50%க்கு அதிகமான கார்பனும். நல்ல நெகிழ்வுப் பண்பும் உடைய எஃகு வகை. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு ஏற்புடையது
high commutator bars : (மின்) உயர் திசை மாற்றுச் சலாகைகள் : எந்திரக் கோளாறுகள் காரணமாக, சுழலும் மின்னகத்தினால் உண்டாகும் மையம் விலகும் விசையின் மூலம் அடுத்துள்ள சலாகைகளுக்கு மேலே எழுகின்ற திசை மாற்றுச் சலாகைகள்
high compression: (தானி எந்.) உயர் அமுக்க இயக்கம் : உள்ளெரி அறையில் வாயுக்கள் அழுத்தப்பட்டுள்ள நிலை. அந்த அறையின் மேல்பகுதியில் சிறிதளவான அழுத்த இடத்தினால் இந்நிலை உண்டாகிறது
high discharge :(மின்) உயர்மின்னிறக்கம்:சேமக்கலத்திலிருந்து பெருமளவில் மின்னோட்டம் பாய்தல்
high fidelity radio : உயர்ஒலி வானொலி: (வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் துலக்கம், குறைந்த அலை அதிர்வெண் துலக்கம், திரிபு ஆகியவற்றின் மூலம் ஒலித்துல்லியத்தை அளவிடலாம்
high flashing point : தீப்பற்று வெப்பநிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.
high frequency : (மின்) உயர் அலை அதிர்வெண் : ஒரு வினாடியில் பல்லாயிரம் மாற்றங்களை அல்லது சுழற்சிகளை உடைய மாறுமின்னோட்டம்
high gloss: (வண்) உயர்மெருகு வண்ணம் : உலர்ந்ததும் இனாமல் போன்று பளபப்பர்க இருக்கக்கூடிய வண்ணம்
high lead bronze : (உலோ) உயரளவு ஈயக்கலவை வெண்கலம் : 75% அளவுக்குச் செம்பும், வெள்ளீயமும், ஈயமும் மாறுபட்ட விழுக்காடுகளிலும் கொண்ட உலோகக் கலவை. மிக வேகமாக இயங்கக் கூடிய தாங்கிகள் தயாரிக்க இது பயன்படுகிறது
hígh level modulation : (மின்) உயர்நிலை அலைமாற்றம் : இறுதி மின் பெருக்கியில் தகட்டு மின்னழுத்தத்தின் உயர்ந்த நிலையில் ஏற்படும் அலைமாற்றம்
high light : முனைப்பு மெருகு: அறைகலன்களுக்கு முனைப்பான பகுதிகள் விளக்கமாகத் தெரியும் படி மெருகேற்றுதல்
high maintenance : (மின்) மிகுந்த பராமரிப்பு
high mica: (மின்) மிகை அப்பிரகம்: மெதுவாகத் தளர்ச்சியுறும் தன்மையினால் மின்னகத்தின் செப்புத் திசைமாற்றிச் சலாகைகளை விட அதிகத் திறனுடைய அப்பிரகம்
high potential :(மின்) உயர்மின்னழுத்தம் :அறுநூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஒல்ட் உள்ள உயர் மின்னழுத்தம்
high potential testing transformer : உயர் மின்னழுத்தச் சோதனை மின்மாற்றி : மின்கட்த்திகள் முதலியவற்றை சோதனை செய்வதற்காகத் தேவையான அளவுக்கு மிக அதிசமான மின்னழுத்தங்களைத் தரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட தனிவகை மின்மாற்றி high pressure cylinder : உயர்அழுத்த நீள் உருளை: கொதிகலனிலிருந்து நீராவியை நேரடியாகப் பெறுகிற ஒரு கூட்டு எஞ்சினின் மிசச்சிறிய நீள் உருளை. இந்த நீள் உருளையில், நீராவி முதலில் விரிவாக்கப்பட்டு, பின்பு அடுத்துள்ள குறைந்த அழுத்த நீர் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது
high relief :வன்புடைப்பு:மெய்வடிவத்திலிருந்து மிகுதி அடுத்துள்ள அளவானபுடைப்புச் செதுக்கம்
higher resistance :(மின் உயர் மின்தடை :வழக்கமான அழுத்த அளவுடைய மின்னோட்டத்தில் முழு அளவு மின்னோட்டம் பாய்வதைத்தடையுறுத்தும் துரு, அரிமானம் போன்ற வினைகள்
high speed : (தாளி) மிகைவேகம்: சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம்
high speed line printer : (கணிப்.) அதிவேக வரி வாரி அச்சடிப்பான்
high speed print: (கணிப்.) அதிவேக அச்சடிப்பு
high speed skipping : (கணிப்.) அதிவேகத்தில் தாவிச் செல்லுதல்
high speed steel: மிகைவேக எ.கு:எஃகின் வெட்டுந்திறனை அதிகரிப்பதற்காக டங்க்ஸ்டன் அல்லது மாலிப்டினம் சேர்க்கப்பட்ட எஃகு. இந்த எஃகினால் செய்த கருவிகளை, சாதாரண கார்பன் எஃகினாலான கருவிகளைவிட மிகுதியான வேகத்தில் சேதம் ஏதுமின்றி இயக்கலாம்
high spots : (எந்) மிகைக் கறைகள் : (1) சமதளப் பரப்புகளிலுள்ள களங்கக் கறைகள். அப்பரப்புகளை முற்றிலுமாகச் சமதளப்படுத்துவதற்காக இக்கறைகளைச் சுரண்டி அல்லது தேய்த்து அப்புறப்படுத்தப்படுகின்றன
(2) உண்மையான சமதளத்திலிருந்து நீட்சியாகவுள்ள இடத்தின் பரப்பளவு
high technology printers :(கணிப்.) உயர்நுட்ப முறை அச்சடிப்பான்கள்
high tension : (மின்)உயர்மின்னழுத்தம் : உயர்ந்த அளவு மின்னழுத்தம் அல்லது மின்னியக்கு விசை
high test fuel : (தாளி) மிகைச்சோதனை எரிபொருள்: 75க்கு அல்லது அதற்கு அதிகமான ஆக்டேன் வீத அறுதிப்பாடுடைய கேசோலின் எரிபொருள்
high voltage: (தாளி.எந்) மிகை மின்னழுத்தம் : (1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும்
(2) சுடர் மூட்டக்கம்பிச் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்பட்ட மின்னழுத்தம். இந்த மின்னழுத்தம் பகிர்ந்தளிப்பான் வழியாக்ப் பொறிவினைச் செருகிக்கு அனுப்பப்படுகிறது
highway engineer : நெடுஞ்சாலை பொறியாளர் ; நவீன நெடுஞ்சாலைகளின் பொறியியல் பணி, வடிவமைப்பு, கட்டுமானம் ஆகிய்வற்றைத் திட்டமிடும் வல்லுநர் high volume printing: (கணிப்.) அதிகப் பக்கங்கள் அச்சடிப்பு
high-wing monoplane: (வானூ.) உயர்நிலைச் சிறகு ஒற்றைத் தட்டு விமானம்:கட்டுமானத்தின் மேல் நேரடியாகவோ, அதற்கு மேலேயோ சிறகு பொருத்தப்பட்டுள்ள ஒற்றைத்தட்டு விமானம்
hinge: கீல்: கதவினைத் திறக்கவும் அடைக்கவும் இயல்விக்கும் வகையில் ஒரு குடுமிமீது திருகி இயங்கும் அமைப்புடைய சுழல் திருகு
கீல்(படம்)
hip : (க.க.) மோட்டு இணைப்பு வாரி: ஒன்றுக்கொன்று கோணத்தில் அமைந்துள்ள ஒரு சாய்வான கூரையின் இரு பகுதிகளுக்குமிடையில் இறவாரங்களிலிருந்து கூடல் வாய்வரையுள்ள புற இணைப்பு இந்தச் சொல் கூடல் வாயைக் குறிப்பதில்லை. இது உட்கோணமுடைய "மோட்டு உள்மடி"வுக்கு எதிர்மாறானது
hip rafters : கீழ்விளிம்பு : இற வாரக்கை :கூரையின் இணைப்பு வாரியாக அமைந்துள்ள இறவாரக்கைகள். இது கூரைக்கூடல் வாயிலிருந்து வேறுபட்டது
hip roof : இணைப்பு வரி மோடு :கீழ் விளிம்பும்,பக்கங்களும் சாய்வாக அமைந்த கூரை
hob: (எந்.) (1) சக்கரப்பல்வெட்டு:புழுப்பற் சக்கரப் பற்களையும், முள் பல்லிணைகளையும் வெட்டுவதற்கான கருவி
(2) முதன்மை வார்ப்பு: கெட்டியான எஃகினாலான முதன்மை வார்ப்பு. இது மென்மையான எஃகுப்பாளத்தில் வார்ப்படத்தின் வடிவினை பதிப்பதற்குப் பயன்படுகிறது
(3) கணப்புத் தட்பம்: அடுப்பருகிலுள்ள கணப்புத் தட்பம்
hobbing : பல்வெட்டுதல் :புழுப் பற்சக்கரங்களின் பற்களையும், வார்ப்புருப் படிம இழைகளையும் செதுக்குக் கருவிகளையும் சக்கரப் பல்வெட்டி கொண்டு வெட்டுதல்
hock leg : வளைக்கால் பாணி : முடக்கு வளைவின் கீழ்ப்பகுதியின் மீது ஒரு வளைவும் கோணமும் உடைய வளைகால் பாணி
hod : சாந்துத் தட்டு : கொத்து வேலைச் சாந்து எடுத்துச்செல்லும் தட்டு
hoffman apparatus : (வேதி.) ஹாஃப்மேன் கருவி : நீரைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி
hogging : (எந்.) பெருவெட்டுமானம் : பட்டறைகளில் எந்திரக் கருவிகளில் மிகக் கனமாக வெட்டு வேலைகள் செய்வதைக் குறிக்கும் சொல்
hoke blocks : ஹோக் அளவிகள் :பட்டறை அளவிகளைச் சரி பார்ப்பதற்குப் பயன்படும் அளவிப் பாளங்கள். இதனை மேஜர் ஹோக் என்பவ்ர் வடிவமைத்தார்
hold control : (மின்.) நிறுத்தக் கட்டுப்பாடு : தொலைக்காட்சிப் பெட்டியில் கிடைமட்ட மற்றும் செங்குத்து வீச்சு அலைவெண்களைத் தக்கவாறு அமைப்பதற்காகக் கையால் இயக்கப்படும் கட்டுப்பாட்டுச் சாதனம்
hold-down clamp : (பட்.) பிடிப்புப் பற்றிரும்பு : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை உரிய இடத்தில் இறுகப்பிடித்து வைத்துக் கொள்வதற்கென ஒரு சமதளத்தில் பொருத்தப்பட்டுள்ள பற்றிரும்பு hold time : (பற்.) நிலைப்பாட்டுக் கால அளவு:பற்றவைப்பு மின்னோட்டம்' நின்ற பிறகு மின் முனைகளில் அழுத்தம் நிலைத்திருக்கும் கால அளவு
hole gauge : (உலோ.) துளை அளவி;ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அந்த விற்சுருளைத் துவாரத்திலிருந்து எடுத்து நுண்ணளவை மானி மூலம் அளவிடப்படுகிறது
hole injection : (மின்.) மின் துளையிடல் :மின்கடத்தாத் திண்மப் பொருளிலிருந்து, ஒரு வலுவான மின்னியல் புலத்தின் மூலம் எலெக்ட்ரான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் அதில் துவாரங்கள் உண்டாக்குதல்
hole saw: (உலோ.) துளை ரம்பம்:உலோகம்,மரம்,இழை போன்றவற்றில் பெரிய துளைகள் இடுவதற்குப் பயன்படும் வட்டவடிவ ரம்பம்
துளை ரம்பம் (படம்)
hollow plane : உட்புழைச் சமதளம் :மணிகள்,வார்ப்படங்கள் உருண்டையான மேற்பரப்புகளை உருவாக்குவதற்காகப் பயன்படும் உட்புழையுள்ள சமதளப்பரப்பு
hollow punch : (உலோ.) உட்புழைத் தமரூசி :உட்புழையான தலைப்புடைய கெட்டியான எஃகினாலான தமரூசி. உலோகங்கள், அட்டைகள், துணிகள் முதலியவற்றில் துளையிடுவதற்கு இது ஒரு கைச்சுத்தியுடன் பயன்படுத்தப்படுகிறது. மென்மையான பொருள்களை விட உலோகங்களில் பயன்படுத்துவதற்கான தமரூசிகள் அதிக மழுங்கலாக இருக்கும்
உட்புழைத் தமருசி (படம்)
hollow tile : உட்புழை ஓடு :புறச் சுவர்களுக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் மிகுதியாகப் பயன்படும் கட்டுமானப் பொருள். இது பல்வேறு வடிவங்களிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. புறச் சுவருக்குப் பயன்படுத்தும்போது, இது பெரும்பாலும் சிற்ப ஒப்பனைக்குரிய குழைகாரை பூசி மூடப்படும்
holly : இலையுதிரா மரம் :முன் இலைகளையும்,பசிய சிறு மலர்களையும், செங்கனிகளையும் உடைய, மெதுவாக வளரும் ஒரு சிறிய மரம். இதன் வெட்டு மரம் வெண்மையானது; கடினமானது, நெருக்கமான கரணைகளையுடையது. பியானோவிரற்கட்டைகள், உட்பூச்சு வேலைகள் உட்புற அலங்காரங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது
home : (விண்.) இலக்கு நோக்கிச் செலுத்துதல்:ஏவுகணையை வெப்ப அலைகள், ராடார், எதிரொலிகள், வானொலி அலைகள் போன்றவற்றை வழிச்செலுத்துவதன் மூலம் ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துதல்
homeopathy : (மருந்.) இனமுறை மருத்துவம் (ஓமியோபதி) : நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிகளுக்குச் சிறிதளவு கொடுத்து அதன் மூலம் நோய் நீக்கும் மருத்துவமுறை, எடுத்துக்காட்டாக, வேனற்கட்டியை உண்டாக்கும் ஒரு மருந்தினை உடலில் செலுத்துவதன் மூலம் வேணற்கட்டியைக் குணமாக்குதல்
homogeneous : ஒருபடித்தான : ஒரே இனம் அல்லது வகையைச் சேர்ந்த உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உடைய, எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட
homosexual: (பாலின.) ஒரு பாலின விருப்பு: தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விருப்பு உடையவராக இருத்தல்
hone: (உலோ.) சாணைக்கல்: சவரக்கத்தி முதலியன தீட்டுவதற்கான தீட்டுகல்
hone or oilstone: சாணைக்கல் : கூர்ங் கருவிகளுக்கு வெட்டுவதற்குத் தேவையான கூரிய முனையை உண்டாக்குவதற்கு சாணை தீட்டுவதற்குப் பயன்படும் கல்
honey-comb: (குழை.) தேனடை பாணிப்பொருள்: தேன்கூடு போன்ற அறுகோண அமைப்புடைய உலோகத்தினாலான அல்லது பிசினால் செறிவாக்கம் செய்த காகிதத்தினாலான உள்மையப் பகுதி. சில விமானக் கட்டமைப்புகளுக்கு மிக இலேசான, ஆனால் மிகவும் வலுவான சேணங்களைத் தயாரிக்க இது பயன்படுகிறது. இவ்வகைப் பொருட்களில் சில, தனது எடையைவிட இரண்டுகோடி மடங்கு பாரத்தை கொண்டு செல்லக்கூடியவை
honey-comb radiator: (தானி.) தேன்கூட்டு கதிர்வீசி : இது முன்னும் பின்னுமாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் அமையுமாறு ஒட்டவைக்கப்பட்ட ஏராளமான சிறிய அறைகளினாலானது. இந்த அறைகளைச் சுற்றி நுண்படலமாகத் தண்ணிர் பாய்ந்து, அவற்றில் பாய்ந்து செல்லும் காற்றினைக் குளிர்விக்கிறது
honey locust:(மர.)தேன் இலவங்கம்: நடுத்தர வடிவளவுடையமரம். பூவும் நெற்றும் அளிக்கக்கூடியது. இதன் வெட்டுமரம் கடினமானது; வலுவானது; மண்தொடர்புடன் நீண்டநாள் உழைக்க வல்லது. வேலிக்கம்பங்கள், கைப்பிடிகள், சக்கரக் குடங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது
honing : (தானி.) சாணை தீட்டுதல் : எஞ்சின் நீள் உருளைகளை சாணைக் கற்களிலிருந்து தீட்டி வேண்டிய வடிவங்களாக உருவாக்குதல் அல்லது மெருகேற்றுதல்
hood : ஊர்தி முகடு (தானி.): (1) உந்து ஊர்தியின் இயக்கியை மூடி, கதிர் வீசியிலிருந்து தடுப்பு உந்து கட்டை வரையில் நீண்டிருக்கும் மடிப்பு முகடு
(2) கணப்படுப்பு, கொல்லுலை முதலியவற்றில் நீண்டிருக்கும் மூடி
hook bolt : (எந்.) கொக்கி மரையாணி : மரையில்லாத முனை U வடிவில் வளைந்து அல்லது மரையாணியின் உடற்பகுதிக்குச் செங்குத்துக் கோணங்களில் நேராக உள்ள ஒரு மரையாணி
hooked scale: (உலோ.) கொக்கித் தராசு : ஒரு முனையில் ஒரு சிறு கொக்கியும் மறுமுனையில் எடையைக் காட்டுவதற்கான முள்ளும் உடைய ஒருவகைத் தராசு
hooke's law : (பொறி.) ஹூக்ஸ் விதி : "மீட்சிம வரம்பினுள் உண்டாகும் உருத்திரிபு, தகைவுக்கு வீத அளவில் அமைந்திருக்கும்" என்னும் விதி
hook joint: கொக்கி மூட்டு: காட் சிப் பெட்டிகளின் கதவுகளுக்கான தூசி புகாதபடிக்கான மூட்டு
hook rule : (பட்.) கொக்கிச் சட்டம் : அலகுக்குச் செங்கோணங்களில் ஒரு முனையில் புறந்துருத்திய ஒரு துண்டினையுடைய சட்டம்
hook spanner : (எந்.) கொக்கிப் புரி முடுக்கி : புறப்பரப்பின் மீது வெட்டுத்தடமுடைய சுரையாணிகளில் பயன்படுத்துவதற்கான முடுக்குக் கருவி
hook up (மின்.) மின் இணைவு: ஒரு மின் சுற்றுவழியில் அல்லது சாதனத்தில் உள்ள உறுப்புகளுக்கிடையிலான இனணப்புகள்
hoop iron : இரும்புப் பட்டை : மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப் பட்டை
hopper : பெய் குடுவை : எந்திரங்தளுக்கு அல்லது ஊதுலைகளுக்குப் பொருள்களை ஊட்டுவதற்குப் பயன்படும் ஒரு கொள்கலம்
horizontal : கிடைநிலை : அடி வானத்திற்கு ஒரு போகாக அல்லது இணையாக உள்ள நிலை
horizontal axis : (கணி.) கிடைநிலை அச்சு
horizontal boiler : கிடைநிலை கொதிகலன் : செங்குத்தாகவும், நீளவாக்கிலும் தக்கவாறு அமைத்துக் கொள்ளத்தக்க இடைநிலைக் கதிர்ச் சலாகையுடைய கொதிகலன்
horizantal centre movement : (கணிப்.) கிடைகிலைத் துப்புரவுச் சீப்பு இயக்கம்
horizontal boring machine : (எந்.) கிடைநிலைத் துளையிடு எந்திரம் : துளையிடுவதற்கான கிடைமட்டக் கதிர் உள்ள ஒரு கருவி. இதனைக் கிடைநிலையிலும், செங்குத்து நிலையிலும் அமைத்துக் கொள்ளலாம்
horizontal centering : கிடைநிலை மையக் குவிப்பு: தொலைக் காட்சியில் எதிர்மின் கதிர்க் குழாயின் அச்சினைப் பொறுத்து படத்தின் அமைவு நிலை. ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மூலம் இதனை உருவாக்க முடிகிறது
horizontal drill press : (எந்.) கிடைநிலைத் துரப்பண அழுத்தப் பொறி: செங்குத்தாக அல்லாமல் கிடைநிலையில் இயங்குகிற துரப்பண அச்சுப்பொறி
horizontal hold control : கிடைநிலைப் பிடிக்கட்டுப்பாடு: தொலைக் காட்சி ஒளிவாங்கிப் பெட்டியில் கிடைநிலை அலைவீச்சு அலைப்பான், வாங்கும் படச்சைகையுடன் ஒருங்கிணைப்புச் சைகைகள் இயைபாக இருக்கும் வகையில் நேரமைவு செய்வதற்கான கட்டுப்பாட்டுக் கருவி
horizontal matrix printing : (கணிப்.) கிடைநிலை அச்சுவார்ப்பு அச்சடிப்பு
horizontal milling machine : கிடைநிலைத் துளையிடு எந்திரம் : கிடைநிலையான கதிரும், சுழலும் வெட்டுச் சக்கரமும் உடைய துளையிடும் எந்திரம். இது உலோகங்களில் இடுவரிசைத் துளைகள் இடுவதற்குப் பயன்படுகிறது. இதில் சமதளப்பலகையை வேண்டிய நிலைக்கு உயர்த்திக் கொள்ளவோ தாழ்த்திக் கொள்ளவோ முடியும்
horizontal polarization: (மின்.) கிடைநிலை முனைப்பாடு : ஒரு வானலை வாங்கியின் மின்னியல் புலமானது, பூமியின் மேற்பரப்புக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட வானலை வாங்கி horizontal return tubular boiler: கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன்: . இது ஒரு வகை எஃகுக் கொதிகலன். இதில், நெருப்புக் குழாய்கள் உடைய நீள் உருளை வடிவ நுண்ணறைகள் இருக்கும். இவை செங்கற் கட்டுமானத்தால் மூடப்பட்டு, ஊதுலையாகவும், உள்ளெரி அறையாகவும் அமைக்கப்பட்டிருக்கும்
horn : (வானூ.) கொம்பு நெம்பு கோல் : விமானத்தின் கட்டுப்பாட்டுப் பரப்புடன் பொருத்தப்பட்டுள்ள ஒரு குறுகிய நெம்பு கோல். இதனுடன் இயங்கு கம்பி அல்லது சலாகை இணைக்கப்பட்டிருக்கும்
hornblende : பச்சைத் துத்தம்: திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சை நிறமுடைய கணிப்பொருள். இதில், இரும்பு, மக்னீசியம், கால்சியம், அலுமினியம் ஆகியவற்றின் சிலிக்கேட்டுகள் அடங்கியிருக்கும்
horn center : கொம்பு மையம் : வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு சிறிய, வட்டவடிவான, ஒளி ஊடுருவக்கூடிய வட்டு. காகிதத்தில் வட்டங்கள் வரையும்போது காகிதம் கிழிந்துபோகாமல் இருப்பதற்காக, காகிதத்தின் மேல் இதனை வைத்துக் கவராயங்களைச் சுழற்றி வட்டம் வரைவார்கள்
horning press :(எந்.)கொம்பு அழுத்தப் பொறி : வாளிகள் போன்ற உலோகத் தகட்டினாலான கொள்கலங்களின் விளிம்புகளை மழுங்க மடக்குவதற்குப் பயன்படும் கருவி
horn relay : (தானி.எந்.) கொம்பு உணர்த்தி : கொம்பு வடிவ மின் சுற்றுவழியில் செலுத்தப்படும் ஒரு காந்தக் கட்டுப்பாட்டுச் சாதனம். இதில், கொம்புப் பொத்தானை அழுத்துவதால் அது ஒரு மின்னகத்தை நகரச் செய்து தொடர்பு முனைகளுக்கு மிக நெருக்கமாகக் கொணர்கிறது. இதனால் மின்னோட்டத்தின் முழு விளைவும் கொம்புக்கு அல்லது கொம்புகளுக்கும் நேரடியாகப் பாய்கிறது
horology : கடிகாரக் கலை : கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் முதலியவற்றைத் தயாரித்தல், அவற்றைப் பழுதுபார்த்தல், மணிப் பொறிக்கலை, காலமளப்பது பற்றிய அறிவியல் துறையினையும் குறிக்கும்
horse (க.க.) தாங்கு சட்டம் : (1) சால்கால். (2) மிதிகட்டைகளும், படியின் நிலைக் குத்துப்பாதிகளும் இணைக்கப்பட்டுள்ள படித்தொகுதிகளை தாங்குகிற ஒரு சாய்வான ஆதாரம்
horse hair: குதிரை முடித்திண்டு: குதிரை முடியினை உள்திணித்து நிரப்பிச் செய்யப்பட்ட ஒரு திண்டு
horse power : குதிரைத் திறன் : எந்திரவியலில், ஒரு குதிரை வலிமைக்கு ஈடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு. 33,000 பவுண்டு எடையை, ஒரு நிமிட நேரத்தில் ஓர் அடி உயரத்திற்குத் தூக்குவதற்குத் தேவையான ஆற்றல் ஒரு குதிரைத்திறன் எனப்படும்
horse power rating : (தானி.) குதிரைத் திறன் வீத அறுதிப்பாடு: குதிரைத்திறன் அங்குலத்தில் துளைX நீள் உருளை எண்ணிக்கை/2.5- D2 x N / 2.5 horse shoe magnet : (மி ன்) குதிரை லாடக்காக்தம் : குதிரை லாட வடிவில் அல்லது U-வடிவில் உள்ள ஒரு காந்தம்
hose clamp : நெகிழ்வுப் பற்றுக் கட்டை : ஒரு நெகிழ்வுக் குழாய்க்கும், அதன் முனை பொருத்தப்பட்டுள்ள நெகிழ்வுத் திறன் குறைவான பொருளுக்குமிடையில் இறுக்கமான பிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஒரு பற்றுக்கட்டை
hose coupling: நெகிழ்வு இணைப்பான்: நீண்ட நெகிழ்வுக் குழாய்களின் முனைகளை ஒன்றாக இணைப்பதற்காகப் பயன்படும் ஓர் இணைப்புச் சாதனம்
hot: மிகை ஒளிப்பரப்பு: தொலைக் காட்சியில் அளவுக்கு மிகுதியான ஒளியையுடைய அல்லது ஒளியைப் பிரதிபலிக்கிற பரப்பு
hot box : (எந்.) கடுவெப்பப் பெட்டி : தவறாகப் பொருத்திய தன் காரணமாக அல்லது குறைந்த மசகிடுதல் காரணமாக அளவுக்கு அதிகமாகச் சூடாகக் கூடிய தாங்கி
hot-die steel :வெப்ப வார்ப்பட எ.கு : பழுக்கக் காய்ச்சிய உலோகத்துடன் தொடர்புறுத்தி, வார்ப் புருக்களை அடித்து உருவாக்குதற்குப் பயன்படும் எஃகு
hot dipping : வெப்பத் தோய்ப்பு : சூடான் கரைசலில் தோய்த்துத் தூய்மையாக்கும் அல்லது முலாம் பூசும் முறை
hot embossing: (அச்சு) வெப்பப் புடைப்பகழ்வு வேலை : சூடாக்கிய வார்ப்புருக்களைப் பயன்படுத்தி புடைப்பகழ்வுச் சித்திர வேலைப்பாடு செய்தல்
hot metal : (வார்.) உருகிய உலோகம் : மிக உயர்ந்த வெப்ப நிலையில் உருகிய நிலையிலுள்ள இரும்பு அல்லது பித்தளை
hot plug: (தானி.) சுடர்ப் பொறிச் செருகி : நீண்ட பீங்கான் தொடர் அடுக்குகள் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி. இது குறுகிய பீங்கான் தொடர் அடுக்குகளை விட அதிகச் சூடானது. எனவே, இதனை 'வெப்பச்செருகி' என்றும் கூறுவர்
hot rolled : (உலோ.) வெப்ப உருட்டு: எஃகினைச் சூடாக இருக்கும்போதே வணிகப் பயன்பாட்டிற்கான வடிவங்களில் உருட்டி உருவாக்குதல்
hot short : நொறுங்கு இரும்பு : சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்கதாகவுள்ள தேனிரும்பு. கந்தகம் கலந்திருப்பதால் தேனிரும்புக்கு இந்நிலை உண்டாகிறது. இதனால் இதனை இரும்பு மிகவும் கடினமாகவே பற்றவைக்க முடிகிறது; அல்லது பற்றவைக்க முடியாமல் போகிறது
hot wire ammeter: (மின்.) சுடு கம்பி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி நேரமைவு செய்யவேண்டும். இதனால், இது இப்போது புழக்கத்தில் இல்லை
hot working steels : (உலோ.) வெப்ப வேலை எ.கு : 5-15% டங்க்ஸ்டன், சிறிதளவு குரோமியம், மிதமான அளவு கார்பன் அடங்கிய எஃகு சூடான் நிலையில் வேலைப்பாடு செய்வதற்குரிய கருவிகளுக்கு இது பயன்படுகிறது
hourglass worm : (தானி.) மணல் வட்டில் இயக்காழி : மணல் சொறிந்து காலங்காட்டுங்கருவி போன்று புழுப்போல் வளைந்த உந்துகல இயக்காழி
house drain : (கம்.) வீட்டு வடிகால் : சாக்கடை நீரை ஏற்று, வடிகாலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் அமைப்பு
housed string : (க.க.) அடைப்பு ஏணிப்படி : இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதிகளையும், ஏறுபடிக்காலின் மிதிகட்டைகளையும் ஏற்பதற்கென உட்புறத்தில் செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஏணிப்படி
house organ : (அச்சு.) அகச் செய்தியேடு : ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கால இடைவெளிகளில் வெளியிடும் செய்தியேடு. இதில் ஒரு பகுதியில் பொதுவான செய்திகளும், ஒரு பகுதியில் அந்த நிறுவனத்தின் பொருட்கள் பற்றிய விளம்பரங்களும் இடம்பெற்றிருக்கும்
house slant: (கம்.) வீட்டுச்சாய்வு நிலை வடிகுழாய் : வீட்டுக்கழிவு நீர்க்குழாய் இணைப்பை ஏற்பதற்கென ஒரு கழிவுநீர்க்காலில் உள்ள T அல்லது Y வடிவ இணைப்பு
housing : (எந்.) உள்ளிடம் : உரு வார்ப்படம், முதன்மை உறுப்பு, கொள்கலன், மேலுறை, பிற உறுப்புகளுக்கான ஆதாரம் போன்றவற்றைக் குறிக்கும் சொல்
howe truss : விதானத் தூலக்கட்டு : கூரைகளையும், பாலங்களையும் அமைப்பதற்குப் பயன்படும் ஒருவகைத் தூலக்கட்டு. இது மரம், எஃகு இவற்றினாலான கட்டுமானத்திற்கு மிகவும் ஏற்புடையது
hub : சக்கரக்குடம் : வண்டிச் சக்கரத்தின் குடம். இதன் வழியே சக்கரத்தின் அச்சு செல்லும். இது பெரும்பாலும் நீள் உருளை வடிவில் அமைந்திருக்கும்
hubbing : (பட்.) மென் எஃகு உருவாக்கம் : வார்ப்புப் படிவத்தை அல்லது வார்ப்படத்தைச் செய்வதற்கான கடினமான வார்ப்புப் படிவத்தை அல்லது 'குடத்தை' ஒரு குளிர்ந்த, மென்மையான எஃகுப் பாளமாக ஆக்குதல். இது பொதுவாக 1.27 செ.மீ. கனம் இருக்கும். இது சராசரியாக ஒரு சதுர அங்குலத்தில் 100டன் அழுத் தத்தைத் தாங்கவல்லது
hub dynamometer : (வானூ.) குடத் திறன்மானி: விமானத்தில் எஞ்சின் அழுத்தம், சுழற்சித்திறன் போன்ற உறுப்பாற்றல்களைக் கணிக்கும் கருவி. இது விமானத்தின் முற்செலுத்தியின் குடத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும்
hue (வண்.) வண்ணச் சாயல் : ஒரு வண்ணத்துடன் பிறிதொன்றைச் சேர்ப்பதால் ஏற்படும் வேறொரு வண்ணச் சாயல்
hull: (வானூ.) கப்பல் உடற்பகுதி: ஒரு பறக்கும் படகின் உடற்பகுதி, படகு நீரில் மிதக்கும் போது இந்தப்பகுதி மிதவையாகப் பயன்படும். இப்பகுதியில் மாலுமியும், பயணிகளும் அமர்ந்திருக்கலாம். மிதவையாகவும், உடற்பகுதியாகவும் ஒரே சமயத்தில் செயலுறுகிறது
hum . (மின்.) முரற்சி : ஒரு மின் பெருக்கியில் சிதறலான மின்காந் தப்புலத்துடன் அல்லது நிலை மின்னியல் புலங்களுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக ஏற்படும் ஒருவகைத் திரிபு
humidifier : (குளி.பத.) ஈரப்பதனாக்கி : காற்றில் ஈரப்பதனை அதிகமாக்கும் ஒரு சாதனம்
humidify : (குளி.பத.) ஈரப்பதனாக்கம் : காற்றில் அல்லது பிற பொருள்களில் நீராவியைச் சேர்த்திடும் செய்முறை
humidity : ஈரப்பதம் : காற்றிலுள்ள ஈரத்தின் அளவு. காற்றோடடத்திற்கான காற்றில் ஈர நயப்பூட்டுவதற்காக, அக்காற்றினை ஒரு நீர்ப்படலத்தின் வழியே செலுத்தி ஈரப்பதமாக்குவர்
humidity relative: (குளி.பத.) ஒப்பீட்டு ஈரப்பதன் : ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றில் எந்த அளவுக்கு ஈரப்பதன் அடங்கியிருக்கலாகுமோ அந்த அளவுடன் ஒப்பிடத்தக்க வகையில் உள்ள ஈரப்பதன் அளவு
humus : மட்கிய மண் : இலை தழை முதலிய தாவரப் பொருட்கள் அல்லது விலங்குப் பொருட்கள் மட்கிய தோட்ட மண்
hunting link : (தானி.) துருவ கண்ணி : ஒரு சங்கிலியில் ஒரு கண்ணியை எடுத்தோ, சேர்த்தோ நீளத்தைத் தக்கவாறு அமைப்தற்கு வசதியாகக் காலத்திட்டச் சங்கிலியைப் பிரிப்பதற்குரிய கண்ணி
hutch : (1) சிற்றறை : ஒரு சிறிய இருண்ட அறை
(2) பெட்டி - குழி முயல்களுக்கான பெட்டி
(3) அளவை
(4)சேமத்தட்டம்
hydrant : நெடுநீர்க் குழாய் : நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருத்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய். இது தீயணைப்புக்குப் பயன்படுகிறது
hydrate : (வேதி.) சேர்மப் பொருள்: (1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள்
(2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல்
hydrate : காகிதக்கூழ் : நீர்த் தடுப்புக் காகிதமாகச் செய்வதற்குரிய ஊன் பசையாக்கிய கூழ்
hydrated lime : (க.க.) நீற்றிய சுண்ணாம்பு: கட்டுமானத்திற்குப் பயன்படும் சுண்ணாம்புத் தூள், இது பெரும்பாலும் 50-ராத்தல் கொண்ட பைகளில் கிடைக்கும். இது தேவையான திண்மைக்கேற்ப நீருடன் கலந்து பயன்படுத்தப்படும்
hydraulic brake : (தானி.) நீரழுத்தத் தடை: நீர் அழுத்தத்தின் மூலம் ஏற்படும் விசையினால் இயங்கும் எந்திரத் தடையமைப்புகள் கால் மிதியை அழுத்தும் போது, ஒரு சுழல்தண்டு ஒரு நீள் உருளைக்குள் அழுந்தி, அதிலுள்ள நீர்மத்தை (இயல்பு-திரிந்த ஆல்ககாலும் விளக்கெண்ணையும் கலவை) செப்புக் குழாய்களின் வழியாகப் பல்வேறு உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகிறது
hydraulic bronze : (உலோ.) நீரியல் வெண்கலம் : ஓரதர்கள் நீர் இறைப்பான் உறுப்புகள் முதலியவை செய்வதற்குப் பயன்படும் வெண்கலத்தை அல்லது பித்தளையைக் குறிக்கும் சொல்
hydraulic drive: (தானி.) இயக்கம் : (பார்க்க: நீர்ம இயக்கம்.) hydraulic engineer : பொறியாளர் : வடிகால் அமைப்புகள், நீரியல் பணிமானங்கள், அணைகள், நீரியக்க மின்விசை எந்திரங்கள் முதலியற்றை வடிவமைத்தல், நிறுவுதல், கட்டுமானம் செய்வித்தல் ஆகிய பணிகளில் தேர்ந்த வல்லுநர்
hydraulic glue : நீரியல் வச்சிரம் : ஈரப்பதத்தின் வினையைத் தடையுறுத்தும் இயல்புள்ள வச்சிரப்பசை
hydraulic jack : நீரியல் பாரத்தூக்கி : ஒரு சிறிய நீர் இறைப்பான் விசையால் இயங்கும் ஒரு பாரந்தூக்கி. இது வெளிப்புறத்தில் ஒரு நெம்புகோலால் இயக்கப்படும்
hydraulic lime : (க,க) நீரியல் சுண்ணாம்பு : கொண்ட பறையிலிருந்து இயற்கைச் சிமெண்டு தயாரிக்கப்படுவது போல் தயாரிக்கப்படும் ஒரு சுண்ணாம்புக் கிளிஞ்சல் போன்று நீற்றுவதற்குரியது. இது நீரியல் சிமென்ட் போன்று எளிதில் கெட்டியாகிவிடக் கூடியது
hydraulic press : (எந்.) நீரழுத்த எந்திரம்: நீர்விசை மூலம் இயங்கக் கூடிய ஓர் எந்திரம்
hydraulic ram : நீரியல் உயர்த்தி: இயங்கு நீரின் தடையாற்றல் மூலம் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு
hydraulics : நீரியல் : திரவங்களின் குறிப்பாக நீரின் இயக்காற்றல் பற்றிய அறிவியல்
hydraulic valve : நீரியல் ஓரதர்: நீரின் இயக்கத்தை ஒழுங்குறுத்துவதற்கும், நீரைப் பகிர்மானம் செய்வதற்கும் பயனாகும் ஓரதர்
hydro-barometer : நீர்ம எடைமானி : நீர்ம எடைமான ஒப்பீட்டளவினைக் காட்டும் கருவி. இது கடல் நீரின் ஆழத்தை அதன் அழுத்தத்தைக் கொண்டு அளவிட உதவுகிறது
hydrocarbon fuel : (விண்.) ஹைட்ரோகார்பன் எரிபொருள் : ஹைட்ரோகார்பன் இணைந்த கேசோலின், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்
hydrochloric acid : ஹைட்ரோ குளோரிக் அமிலம் : (HCl) எரிமலை உமிழும் வாயுக்களின் ஓர் அமைப்பானாக இயற்கையாகக் கிடைக்கிறது. வாணிக முறையில் கந்தக அமிலத்தை உப்புடன் வினை புரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. பற்றாசு வைப்பதில் உருகும் பொருளாகப் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது
hydrocyanic : ஹைட்ரோசயனிக் அமிலம் : இதனை நீரசயனிக அமிலம்'என்றும் அழைப்பர்.தீவிர நச்சுத் தன்மையுடையது. நிறமற்ற வாயு அல்லது திரவ வடிவில் உள்ளது. பொட்டாசியம் சயனைடுச் செறிவுக் கரைசலை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வாலை வடித்து நீரில் ஈர்த்துக் கொள்வதன் மூலம் இது பெறப்படுகிறது
hydrodynamics : நீரியக்கவியல் : நீர், மற்றத் திரவங்கள் ஆகியவற்றின் இயக்கம், வினை பற்றிய விதிகளை ஆராயும் எந்திரவியல் துறை
hydroelectric : (மின். ) புனல் மின் விசை : நீராற்றலால் உண்டாக்கப்படும் மின்விசை
hydrofluoric acid : ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்: (HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்டங்கள் ஆகியவற்றிலும் செதுக்குவேலை செய்தல், மதுவடித்திறக்குதல், நொதிமானம் ஆகியவற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது
hydrofoil or hydrovane : (வானூ.) நீரியல் இயக்கப் பரப்பு : நீரின் வழியாக இயங்குவதன் மூலம் வினைபுரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரப்பு
hydrogen : (பற்.) ஹைட்ரஜன் : ஹைட்ரஜன் என்ற தனியொரு தனிமத்தினாலான ஒரு வாயு. மிகுந்த செயற்பாடுடைய வாயுக்களில் ஒன்று. இது ஆக்சிஜனுடன் இணையும்போது தீப்பிழம்பு உண்டாகிறது
hydrogen : (வேதி.) ஹைட்ரஜன் : இயற்கையில் மிகக்குறைந்த அளவில் கிடைக்கக் கூடிய வாயு. மற்றத் தனிமங்களுடன் இணைந்து ஏராளமான அளவில் கிடைக்கிறது. தூய்மையான நிலையில், நிறமற்றதாகவும், சுவையற்றதாகவும், மணமற்றதாகவும் உள்ளது
hydrogen bomp : (இயற்.) ஹைட்ரஜன் குண்டு : நீரகச்சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணுகுண்டினால் நீரகம் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரும் விசையாற்றல் ஏற்படுத்தும் குண்டுவகை
hydrogenation : (குழை.) நீரகச் செறிவூட்டுதல்: ஒரு கூட்டுப் பொருளினுள் ஹைட்ரஜன் வாயுவினைச் செலுத்துவதற்குரிய ஒரு வேதியியல் செய்முறை
hydrolysis : (குழை.) நீரியல் பகுப்பாய்வு : நீரினைச் சேர்ப்பதன் மூலம் ஒரு பொருளைத் தனிக்கூறுகளாகப் பகுத்தல்
hydrolyte: (குளி.பத.) நீரியல் பகுப்பான்: நீரியல் பகுப்பாய்வுக்கு உட்படும் ஒரு பொருள்
hydromatic welding: நீரகப் பற்ற வைப்பு: இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நீரியல் வரிசைப்படுத்துக் கருவியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முழுமையான பற்றவைப்புச் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது
hydro mechanics : (இயற்.) நீரியக்க எந்திரவியல் : திரவங்கள், அவற்றில் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை, இயக்கம் பற்றி ஆராயும் எந்திரவியலின் ஒரு பிரிவு நிலை நீரியல்,இயக்க நீரியல் ஆகியவை நீரியக்க எந்திரவியலின் பிரிவுகளாகும்
hydrometer : நீரிம எடைமானி: நீர்ம எடைமான ஒப்பீட்டளவு காட்டும் கருவி
hydrophobia: (நோயி.) நீர் வெறுப்பு நோய் : மனிதரை வெறி நாய் கடிப்பதால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய். இதனை 'வெறி நாய்க்கடி நோய்' என்றும்கூறுவர். இது மூளையையும் தண்டுவடத்தையும் தாக்கித் தசைகளை முக்கியமாகத் தொண்டைத் தசைகளைச் சுருங்கச் செய்கிறது. இதனால், தண்ணிர் குடிக்கும்போது அல்லது பெருத்த ஓசையைக் கேட்கும்போது பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது உடலின் அனைத்து உறுப்புகளும் சுருங்குகின்றன
hydrophone : (மின்.) நீரியல் ஒலியலைக் கருவி: நீரினுள் ஒலியலைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு வகைக் கருவி. இது நீரில் உண்டாகும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றுகிறது
hydro static brakes: (தானி.) நிலை நீர்மத் தடைகள் : காற்றிடை புகாமல் மூடப்பட்டுள்ள, நீர்மங் கொண்ட ஒருவகைத் தடை அமைப்பு. கால்மிதியை அழுத்தும் போது நீர்மதேக்கம் திரிபடைந்து, அழுத்தம் நான்கு சக்கரங்களுக்குச் சரிசமமாகப் பகிர்மானம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்திலுமுள்ள தடைதிரவக் கலம் வெளிப்புறமாக விரிவடைந்து தடை வட்டுருளையில் ஆறு தடைக்கால் மிதிகள் உரசும்படி செய்கிறது
hydro static joint: (கம்.) நிலை நீரியல் இணைப்பு : இது பெரிய நீரிணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஒரு திரவத்தின் நிலைநீரியல் அழுத்தத்தின் மூலம் ஒரு குழாயின் மூட்டு வாயினுள் ஈயத்தகடு இறுக்கமாக நுழைக்கப்படுகிறது
hydro statics: நிலை நீரியல் : (1) அமைதி நிலையிலுள்ள நீர்மத்தின் அழுத்த மற்றும் சமநிலை ஆற்றல்களைக் கையாள்தல்
(2) நீர்மங்களின் அழுத்த நிலை சமநிலை பற்றி ஆராயும் அறிவியல்
hydro static pressure: (குளி. பத.) நிலைநீர்ம அழுத்தம்: ஒரு திரவத்தில் மூழ்கச் செய்து, அந்தத் திரவத்தின் பாய்ச்சலோடு நுகர்கின்ற ஒரு சிறிய பொருளின் மீது ஓர் அலகு பரப்பளவில் உண்டாகும் அழுத்த விசை
hydrous; (வேதி.) நீரகப் பொருள்: வேதியியலில் நீரடங்கிய களிப் பொருட்கள். இவை ஹைட்ரஜன் அணு ஒன்றையும், ஆக்சிஜன் அணு ஒன்றையும் கொண்டிருக்கும்
hygrometer : ஈரமானி : வாயு மண்டலத்தில் ஈரநிலை அளவினைக் கணித்துக் காட்டும் கருவி
hygroscopic : (குழை.) ஈரம் உறிஞ்சுந் தன்மை : ஈரம் உறிஞ்சும் தன்மையுடைய பொருள்
hyperbola : நிமிர்மாலை வட்டம் : குவிகையுருவில் அடித்தளத்தின் மீது சாய் பக்கங்களுக்குள்ள கோணத்திலும் பெருங்கோணம் படும்படி வெட்டிய குறுக்கு வெட்டுவாயின் வடிவம்
நிமிர்மாலை வட்டம் (படம்)
hyperbolic : (கணி.) குவிபிறை சார்ந்த : நிமிர்மாலை வட்டவடிவம் உடைய
hyper eutectoid : (உலோ.) உயர் நிலையமைதிப் பொருள் : நிலையமைதிப் பொருளை கார்பனிலுள்ள பொருளின் வீதத்தைவிடக் குறைந்த அளவில் கொண்ட எஃகு
hyper acoustic zone : (விண்.) ஒலிச்செறிவுக் குறைவு மண்டலம் : உயர் வாயுமண்டலத்தில் 96 முதல் 160கி.மீ. வரையுள்ள மண்டலம். இங்கு, அடர்த்தி குறைந்த காற்று மூலக்கூறுகளுக்கிடையிலான தூரம். ஒலியின் அலைநீளத்திற்குச் சமமாக இருக்கும். இதனால். ஒலியானது, கீழ்மட்டங்களிலுள்ளதை விடக் குறைந்த ஒலி அளவுடன் அனுப்பப்படுகிறது
hypocycloid : உள் உருள்வரை : வட்டத்தின் சுற்றுவரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும் போது இயக்கும் வளை வரை வடிவம்
hypoid : (எந்.) குவிபிறை வடிவம்: நிமிர் மாலை வட்டவடிவைக் குறிக்கும் சுருக்கச்சொல். இது சுழல் சாய்தளப் பல்லிணை பல் உடைய தனிவகைப் பல்லிணையைக் குறிக்கும்
hypoid gears : (தானி.எந்.) (குவி பிறைப் பல்லிணைகள் : சுழல் சாய்தளப் பல்லிணை களின் ஒருவகை. இது பல்லிணையின் மையத்திற்கு மேலே அல்லது கீழே இறக்கைப் பகுதியை அமைப்பதற்கு அனுமதிக்கிறது
hypotenuse : நெடுங்கை வரை : ஒரு செங்கோணத்தின் முக்கோணத்தின் பக்கங்களை இணைக்கும், செங்கோணத்திற்கு எதிர்முகமான உறுநீள் கோடு
hypotenuse oblong : (தச்சு) நீள்நெடுங் கைவரை : காகிதத்தில் கனத்திற்கும் அகலத்திற்குமிடையிலான விகிதம். ஏறத்தாழ, 11/2:1
hypothermia : (நோயி) ஆழ் உறைநிலைச் சிகிச்சை முறை : ஒரு நோயாளியை இயல்பான உடல் வெப்பநிலையிலிருந்து பல பாகை கள் குறைந்த குளிர்ந்த வெப்ப நிலையில் வைத்திருந்து நோயைக் குணமாக்க ஆழ்ந்த உறைநிலை மருத்துவச் சிகிச்சைமுறை
hypothesis: புனைவுகோள்: வாத ஆதாரமாகத் தற்காலிகமாகக் கொள்ளப்படும் ஓர் அனுமானக் கருத்து
hysteresis : (மின்.) காந்தத் தயக்கம் : காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும் நிலை, இந்த நிலையினால் வெப்பம் உண்டாகும் I beam , (பொறி.) வடிவ உத்தரம்: I-என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த எஃகு உத்தரம், இது கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது
ice box: (குளி.ப.த.) குளிர்ப்பதன பேழை: பனிக்கட்டியைக் குளிர்விக்கும் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு குளிர்பதனப் பெட்டி
ice point : (குளி.பத.) உறை நிலை: இயல்பான அழுத்த நிலையில் நீர் பனிக்கட்டியாக உறையும் வெப்பநிலை
ichneumon files :ஒட்டுண்ணிப்பூச்சி : மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை
icing : (தானி.) பணிப்படிவு : எரிபொருள் விரைவாக ஆவியாவதன் விளைவாக எரி-வளி கலப்பியில் பணி படிதல்
iconoscope: உருவமாற்றுக்குழாய்: ஒரு காட்சியின் ஒளியையும், நிழலலையும், மின்னியல் தூண்டல்களாக மாற்றுவதற்கெனத் தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியில் உள்ள ஒரு குழாய்
identification light : (வானு.) அடையாள ஒளி : இரவில் விமானத்தை அடையாளங்காட்டுவதற்தாக அதன் பின்புறத்தில் உள்ள,வெண்மையாகவோ வண்ணத்திலோ அமைந்துள்ள விளக்குகளின் தொகுதி
identity : (கணி.) முற்றொருமை / சர்வ சமம் : முற்றிலும் ஒத்துள்ள அல்லது சர்வ சமமான நிலை
idle circuit: (தானி) செயலற்ற மின்சுற்றுவழி :ஒர் எரி-வளி கலப்பியில் நீராவித் தடுக்கிதழ்
idler gear : (உலோ) காப்புப் பல்லிணை : ஒரு பல்லிணைத் தொடரில் இயங்கு பல்லிணைக்கும் இயக்கு பல்லிண்னைக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள பல்லிணை
idle wheel or Idler : (எந்.) காப்புப் சக்கரம் : திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்
idling : (தானி.) மெல்லியக்கம் : உந்து ஊர்தி இயங்காமல் இருக்கும்போது எஞ்சின் மெதுவாக இயங்குதல்
idling jet : (தானி) மெல்லியக்கத் தாரை : மெல்லியக்க வேகத்தில் எஞ்சினை இயக்குவதற்குத் தேவையான எரி பொருளின் (கேசோலின்) அளவினைக் கட்டுப்படுத்துகிற தாரை
igneous rock: எரிமலைப் பாறை : எரிமலை குமுறுவதால் உண்டாகும் வெப்பத்தினால் உருவாகும் பாறைகள். தீக்கல், கருங்கல்,படிகக்கல் முதலியவை இவ்வகையின ignition (மின்.) சுடர் மூட்டம் : வாயு எஞ்சின்களில் மின்சுடர் மூலமாகத் தீமூட்டும் ஏற்பாடு
ignition battery : (தானி) சுடர் மூட்ட மின்கலம் : கேசோலின் எஞ்சின்களின் சுடர் மூட்ட அமைப்பிற்கு மின்னோட்டம் பாய்ச்சுவ தற்காகப் பயன்படுத்தப்படும் சேமமின்கலங்களின் அல்லது உலர் மின்கலங்களின் ஒரு தொகுதி
ignition coil: (மின்) சுடர் மூட்டச் சுருள் : உந்து ஊர்தியில் சுடர்ப் பொறித்தாவு மின் முனைகளைத் தாவிச் செல்வதற்கு உயர் மின்னழுத்த மின்னோட்டத்தை உண்டாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்சுருள்
ignition distributor : (தானி;மின்.) சுடர்மூட்டப் பகிர்வான் : உயர்அழுத்தச் சுடர்ப் பொறியை மின்சுருளிலிருந்து சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பகிர்மானம் செய்வதற்கான காலமுறைப் பகிர்மான நுட்பமுறை
ignition points : (மின்) & சுடர் மூட்டமுனை: மின்னோட்ட முறிப்பானில் சுடர் மூட்டத்திற்கான ஓர் உயர் மின்னழுத்தத்தை உண் டாக்கும் வகையில் சுடர் மூட்டக் கம்பிச்சுருளின் அடிப்படை மின் சுற்றுவழியைத் திறந்துவிடுகிற முனை
ignition spark : (தானி)சுடர் மூட்டப்பொறி: சுடர்மூட்ட மின் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்படும் உயர் அழுத்தச் சுடர்ப் பொறிஅல்லது சுடர். இது சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பாய்ந்து எஞ்சின் நீள் உருளைகளிலுள்ள வாயுக்களை வெடிக்கச் செய்கிறது
ignition system : (மின்) சுடர் மூட்ட அமைப்பு முறை : ஒரு தானியங்கி எஞ்சினில் உயர் அழுத்த சுடர் மூட்டத்தை உண்டு பண்ணுகிற உறுப்புகளின் முழுமையான தொகுதி
ignition switch : (தானி)சுடர் மூட்டவிசை: சுடர் மூட்டச் சுருளுடனான மின் சுற்று வழியை முற்றுறுத்துகிற அல்லது முறிக்கிற மின்னியல் கட்டுப்பாட்டுக் கருவி
ignition temperature : சுடர் மூட்ட வெப்பநிலை : எரியும் தன்மையுடைய பொருள் அக்சிஜனுடன் விரைவாக வேதியியல் முறையில் இணைவதற்காக எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டுமோ அந்த அளவு வெப்பநிலை
ignition timer : (தானி) சுடர் மூட்ட நேரப் பதிப்பான்: திறம்பட்ட கனற்சியை உண்டாக்குவதற்கென சுடர் மூட்ட நேரத்தைக் குறிப்பதற்காகப் பயன்படும் ஒரு எந்திர சாதனம்
ignition timer distributor : (தானி.) சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான் : இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த மின்விசை, அந்தந்த நீள் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்யப்படுகிறது
I-head engine : (தானி.) I-முகப்பு எஞ்சின்: 'ஓரதர் முகப்பு'- என்றும், 'மேல்முகப்பு ஓரதர் இயக்கி' என்றும் இது அழைக்கப்படும்
ileo : (உட.) அடிச் சிறுகுடல்: சிறு குடலை பெருங்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் அடிப்பகுதி
illuminating : (அச்சு) மெருகிவிடு தல் : நூல்களின் பக்கங்களில் அலங்கார வண்ண மெருகிடுதல்.
iliuminating gas: (வேதி) ஒளிரும் வாயு : (1) நிலக்கரி, கரியஞ் சேர்ந்த நீர்வாயுக்கள், அவற்றின் பல்வேறு கலவைகள் ஆகியவை
(2) எண்ணெய் வாயுக்களின் பல்வேறு வகைகள்
(3) அசிட்டிலின் வாயு, கேசோவின் வாயு மற்றும் உற்பத்தி வாயு ஒளிரும் நோக்கங்களுக்கு முக்கியமானது. எரிபொருள் மற்றும் விசை வாயு வகையில் உற்பத்தி வாயு மிக முக்கியமானது
illumination: ஒளிர்வித்தல் : ஒளிரச் செய்த நிலையிலுள்ள
illustrate : பட விளக்கம் : உரு வரைப் படங்கள் மூலம் விளக்கம் செய்தல். எடுத்துக்காட்டாக, ஒப்பீடுகள் போன்றவை
ilmenite : இல்மனைட்: டைட்டேனியம் தனிமத்தின் கனிமம் கருநிறமுடையது. தென்கிழக்கு அமெரிக்காவில் நீண்டகாலம் உழைக்கக் கூடிய வெண்மை நிற வண்ணப்பொருள் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது
image : உருக்காட்சி : தொலைக்காட்சியில் ஒளிப்படக் குழாயில் ஒருமுகப்படுத்தப்படும் படம் ஆல்லது காட்சி. படக்குழாயில் மின்னணுவியல் முறையில் பிரதிபலிக்கப்படும் படம்
imageorth : மிகு ஒளியுணர்படக் குழாய்: அரைகுறை இருட்டிலும் காட்சிகளைப்படம் பிடிக்கக்கூடிய மிகுந்த ஒளியுணர் திறனுடைய ஒளிப்படக் குழாய்
imaginary number : (கணி ) கற்பனை எண் : ஓர் எதிர்மறை எண்ணின் வர்க்கமூலம் உள்ளடங்கிய அளவு அல்லது மதிப்பு. இது உண்மையல்லாதது
imitation embossing : (அச்சு) போலிப் புடைப்புருவம்: புடைப்பு அச்சுப் பரப்பினை உருவாக்கும் முறை. புதிதாக அச்சிட்ட காகிதத்தில் பொடியினைத் தூவி வெப்ப மூட்டும்போது மையுள்ள பகுதிகளில் பொடி இணைந்து கொள்கிறது
immelman turn : (வானூ) இம்மல்மன் சுழற்சி: விமானத்தின் வழக்கமான கரண வளைவின் முதற்பாதியை முடிவுறுத்தும் இயக்கமுறை. கரண வளைவின் உச்சியில் தலைகீழ் நிலையிலிருந்து விமானத்தைப் பாதியளவு சுழ்ற்சி சமநிலைக்குக் கொண்டு வருதல். இதனால், உயரம் கூடும். அதே சமயத்தில் 180° அளவுக்குத் திசை மாற்றமும் கிடைக்கிறது
immerse :மூழ்குநிலை: நீரில் முற்றிலும் மூழ்குவித்தல் நீர்மத்தில் உள் அமிழ்த்துதல்
immersion heater : மூழ்கு வெப்பூட்டுக் கருவி : நீர்மத்தில் உள்தோய்ந்து நின்று வெப்பூட்டும் மின்கருவி
immobile : இயங்காத : அசையாத, ஒரே நிலையில் பொருத்தி வைக்கப்பட்ட
immunological reaction: (உட) தடைகாப்பு எதிர்வினை; மற்றொருவரின் தோல் போன்ற அயல் பொருள்கள் உடலினுள் செலுத்தப்படும் போது, அதை எதிர்ப்பதற்காக எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகின்றன. இவற்றை தடைக்காம்பு எதிர்வினை என்பர். எடுத்துக்காட்டாக, வேறொருவரின் தோலை உடலில் பொருத்தினால், அந்தத் தோல் வளர்வதில்லை
impact: மோதல் விளைவு: மோதித் தாக்குதலின் விளைவு
impact strength : (குழைவு) மோதல் விளைவு வலிமை : சோ தனை முனையில் திடீரெனப் பாரந்தாக்கும் முறிவு ஏற்படாமல் தடுப்பதற்குப் பிளாஸ்டிக் அல்லது பிறபொருள்களுக்கு உள்ள திறன்
impacted tooth : (உட) தெற்றுப் பல் :
impact test : (பொறி) மோதல் விளைவுச் சோதனை : அதிர்ச்சியைத் தாங்குவதற்குப் பொருள்களுக்குள்ள திறனைச் சோதனை செய்தல்
impair : பதங்கெடுத்தல் : அளவிலோ தரத்திலோ குன்றச்செய்தல்
impedance : (மின்) மின்மறிப்பு : ஒரு மின் சுற்றுவழியில் மாற்று மின்னோட்டத்திற்கு ஏற்படும் புறத்தோற்றத் தடை. ஒரு மின்சுற்று வழியில் தடை. தூண்டு மற்றும் கொண்மை எதிர்வினைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவுகள் ஓர் அலகுகளில் கணக்கிடப்படும்
impedance matching : (மின்) மறிப்புப் பொருத்தீடு : மிக உயர்ந்த அளவு மின்விசை மாற்றத்தைப் பெறுவதற்காக இரு வேறுபட்ட மின்மறிப்புகள் பொருத்தப்படும் மாற்று மின்னோட்டப் புறத் தோற்றத்தடை
impeller : (தானி) தூண்டு தட்டம் : பல விசை விசிறி அலகுகளைக் கொண்ட ஒரு நீர் இறைப்பானிலுள்ள சுழல் உறுப்பு. இது தான் பயணம் செய்கிற ஊடகத்தினை இயங்கச் செய்கிறது
imperial : படவரைதாள்: சாதாரணத் தரமுடைய படம் வரைவதற்குரிய தாள். இது 76x5 செ.மீ. அளவுடையது. இதன் மேற்பரப்பு சொரசொரப்பர்கவோ. வழுவழுப்பாகவோ இருக்கும்
imperviousness : (க.க) துளைப்புத் தடைத்தன்மை : துளைப்புக்கு இடங்கொடாத தன்மை. இது சுவரில் செங்கல் பாவி, மென்ட் அல்லது சிமென்ட் காரை பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் செங்கற்கள் பாவும்போது நன்கு உலர்ந்திருக்க வேண்டும்
impetus : தூண்டு விசை :தூண்டு திறம், ஒரு பொருளை இயக்குவதற்கான செயல் தூண்டு விசை
impinge: மோதுதல் : இயக்கத்திற்குப் பின்பு ஒரு பொருளின்மீது வந்து மோதுதல் தாக்குதல்
imposing stone : (அச்சு) அச்சுக் கோப்புக் கல்:அச்சுக்கோக்கப்பட்ட உருக்களை இருப்புச் சட்டத்தில் வைத்துப் பொருத்தி அமைப்பதற்கான கல் அல்லது உலோகத் தளமுடைய மேசை
imposition : (அச்சு.) அச்சுப்பக்க உருவாக்கம்: அச்சுக்கோக்கப்பட்ட உருக்களை இரும்புச் சட்டத்தில் பக்கம் பக்கமாக வைத்துப் பொருத்தி அமைத்தல்
impost : (க.க.) தூண்தலை : மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி
impregnated : வலுவேற்றிய: வெளிக் கதவுக்கான வெட்டுமரம் வாயுமண்டலத்தின் பாதிப்பினால் சிதைவுறாமலிருப்பதற்காக பல்வேறு நீர்மங்களைக் கொண்டு வலுவூட்டப்படும்
impressed voltage: (மின்.) தூண்டு மின்னழுத்தம்: ஒரு சாதனத்தில் மின்னழுத்தம்
impression: (அச்சு) அச்சுப் பதிவு: பக்கத்தில் அல்லது காகிதத் தில் அச்செழுத்துக்களை அல்லது அச்சுப்படங்களைப் பதிவு செய்தல்
impression screws : (அச்சு) அச்சுப்பதிவுத் திருகாணிகள் : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளத்தின் நிலையை வேண்டியவாறு அமைப்பதற்குப் பயன்படும் திருகாணிகள்
imprint : (அச்சு.) பெயர் விவரப் பொறிப்பு : ஓர் அச்சு வெளியீட்டினை அச்சடித்தது யார் என்ற விவரம் அடங்கிய அடையாள முத்திரை
impulse: (தானி. எந்) உந்து வேகம்: உந்து ஊர்தி எஞ்சினிலும், விமான எஞ்சினிலும் வேகத் தைத் தூண்டிவிடுவதற்கான உந்து விசையாற்றல்
impurity: (மின்.) மாசுப் பொருள்: ஒரு படிக வடிவத் திடப்பொருள் உள்ள அப்படிகத்திற்குப் புறம்பான அணுக்கள்
:inboard stabilizing float : (வானூ) மைய நிலைப்படுத்து மிதவை:' கப்பலில் பிரதான மித வைக்கு அல்லது உடற்பகுதிக்கு மிக நெருக்கமாகப் பொருத்தப்பட்டுள்ள நிலைப்படுத்து மிதவை
incandescence : வெண்ணொளி: மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் உணடாகும் வெண்சுடர் ஒளி
incandescent : வெண்சுடர் வீசுகிறது: வெப்பத்தோடு வெண்சுடர் வீசுகிற பொருள்
incandescent lamp: (மின்) வெண்சுடர் விளக்கு : உருகாத மின்கடத்து பொருளினாலான இழையை அல்லது கம்பியை உடைய மின்விளக்குக் குமிழ்
incarnadine : திசை நிறமுடைய : சாய வகையில் சதை விண்ணம் முதல் மிகச்சிவப்பு வரையிலான வண்ணச் சாயல்கள்
incinerator : (க.க) நீற்றுலை : குப்பை கூளங்களை எரிப்பதற்கான தொட்டி
incise: (க.க.) வெட்டு; செதுக்கு: வெட்டுதல், செதுக்குதல்
incised work : (அ.க) செதுக்கு வேலைப்பாடு : செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட பொருள்
inclination : சாய்வு: கிடைமட்டத்திற்குச் சாய்வாக உள்ள சரிவு
inclined plane: சாய்வு மட்டம்: கிடைமட்டத் தளத்திற்குச் சாய்வாக உள்ள தளம். இந்தச் சரிவின் கோணம் சாய்வுக் கோணமாகும்
inclinometer: (வானூ) சாய்வு மானி: விமானம் பறக்கும் உயரத்தைக் காட்டும் கருவி. விமானத்தின் முன்புற-பின்புற அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப அல்லது கிடைமட்ட அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான அல்லது இரு தளங்களுடனுமான சாய் வினைக் காட்டுவதற்கேற்ப சாய்வு மானியை முன்-பின் மானி, கிடைமட்டச் சாய்வுமானி, பொதுநிலைச் சாய்வுமானி என வகைப்படுத்துவர்
inclusions: (உலோ.) சேர்மானங்கள்: முடிவுற்ற நிலையிலுள்ள எஃகில் எஞ்சி நிற்கும் கசடு மற்றும் அயல் பொருள்கள்
increaser: (எந்.) விரிவாக்கி: ஒரு பொருளின் வடிவளவு, வலிமை முதலியவற்றை அதிகரிக்கும் ஒரு சாதனம். குழாய் பொருத்து வேலைகளில் ஒரு முனை மற்றதைவிட பெரி தாகவுள்ள இணைப்பிகள் increment : மிகைப்பாடு : மாறுபடு தொகையில் இரு நிலைகளுக் கிடையிலான உயர்வுத்தொகை
incrust: (அ.க.) மேலடை: ஒரு பிரதான மேற்பரப்பின் மீது அலங்காரப் பொருளினால் கடினமான மேற்பூச்சு பூசுதல். மரச்சாதனங்களில் மேலடை மெல்லொட்டுப் பலகையிடுதல்
incrustation : (பொறி) படலமிடுதல்: நீராவிக் கொதிகலன்களில் உட்புறத்தில் படலமிடுதல்
incubation period : (நோயி) நோய்க்கிருமி பெருக்க காலம்: உடலில் பாக்டீரியா நுழைவதற்கும், நோய்க்குறிகள் தான்றுவதற்கு மிடையிலான காலம்
incus (உட.) காதெலும்பு : சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காது எலும்பு
indefinite ; வரையற்ற: துல்லிய மற்ற, அறுதியற்ற, தெளிவற்ற
indent : (அச்சு:) ஓர வெற்றிடம்: அச்சுத் துறையில் ஓரத்தில் வெற்றிடம் விட்டு வரிகளைத் தொடங்தல்
indentation : விளிம்பு வெட்டுதல்: அறைகலன் ஓரங்களில் வளைவு நெளிவுடைய விளிம்பு வெட்டுதல்
indention: (அச்சு.) ஓரவெட்டீடு: ஒரு பத்தியின் தொடக்க வரிபோல் விளிம்பிலிருந்து உள் தள்ளி அமைக்கப்படும் வரிகள். மற்ற வரிகளைவிட முதல் வரி நீண்டிருக்குமானால் அது "தொங்கல் ஓரவட்டீடு" எனப்படும்
indenture : சட்ட முறையாவணம்: (1) ஒரு தொழில் பயிலுநரை வேலை தருநருடன் பிணைக்கும் ஒரு சட்ட முறை ஒப்பந்தம்
(2) ஓர் ஒப்பாவணம், அடைமானம் அல்லது குத்தகை. இத்தகைய ஆவணங்கள் முன்னர் வரை தோலில் எழுதப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது
independent jaw chuck : தற்சார்புத் தாடைக் கவ்வி: ஒன்றுக்கொன்று சார்ந்திராமல் சுதந்திர மாக நகரும் தாடைகள் கொண்ட ஒரு தாடைக்கல்வி
independent wheel suspension : (தானி.) தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை: உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும்
indastructibility : (இயற்) அழிவின்மை : பொருள்களின் அழிக்க முடியாத தன்மை
index : (அச்சு.) பொருட் குறிப்பகராதி : ஒரு புத்தகத்தில் அச்சிடப் பட்டுள்ள இனங்களை அல்லது பொருள்களை அகரவரிசையில் அமைந்த பட்டியல். இது தேவையான பொருளை எளிதாகக் கண்டு கொள்ள உதவும்
iodex die : (பட்.) பகுப்புப் பொறிப்புக் கட்டை : பெரிய வட்டத் தகடுகளின் விளிம்புகளை வெட்டுதல். மின்னகங்களுக்குத் துளையிடுதல் போன்ற சில்வகை வேலைப்பாடுகளுக்குச் சிலசமயம் பகுப்புப் பொறிப்புக் கட்டை பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சுழலும் பொறிப்புக் கட்டை அமைந்திருக்கும். இது அழுத்து பொறியில் ஒவ்வொரு முறையும் அழுந்தும்போது படிப்படியாக விளிம்புத்தடம் பொறிக்கப்படுகிறது
index head or dividing head : (எந்.) பகுப்பு முகடு : ஓர் எந்திரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஓர் எந்திரச் சாதனம். ஒரு வட்ட வடிவ உருப்படிவத்தைச் சமபகுதிகளாகப் பகுப்பதற்கு இச்சாதனம் பயன்படுத்தப்படுகிறது
indexing : (எந்.) பகுப்பீடு : பள்ளம் வெட்டுதல். நீள் வரிப்பள்ள மிட்ட வேலைப்பாடு, பல்லிணை வெட்டுதல் போன்ற நோக்கங் களுக்காக ஒரு வட்டத்தை சீரான இடைவெளி களில் பகுத்தல்
india ink : இந்திய மை : உரு வரைபடங்கள் வரைபவர்கள் பயன்படுத்தும் கருநிறப் பொடியாலான எழுதும் மை
india rubber :ரப்பர் : வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து ஊறும் மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு. இது தொழில்களில் மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது
indicate : சுட்டிக்காட்டு : விளக்கிக் சுருக்கமாகக் கூறு
indicated horse - power: (பொறி.) சுட்டளவுக் குதிரைத் திறன் : ஒரு சுட்டளவி வரைபடத்திலிருந்து தீர்மானிக்கப்படும் குதிரைத் திறன்
indicating switch : (மின் ) சுட்டிக் காட்டு மின்விசை : மின் னோட்டம் பாய்வதை அல்லது பாயாமலிருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு விசை
indicator ; (பொறி). ) சுட்டளவி: ஓர் எஞ்சினின் உந்து தண்டிலுள்ள அழுத்தத்தையும், இயக்கத்தையும் சுட்டிக்காட்டும் கருவி
indicator card : (பொறி) சுட்டளவி அட்டை : ஒரு சுட்டளவி நீள் உருளை அல்லது உந்து தண்டின் மீது சுற்றப்பட்டுள்ள காகிதம். இக்காகிதத்தில் சுட்டளவின் வரைபடம் வரையப் படுகிறது
indicator diagram : சுட்டளவி வரைபடம் : ஒரு சுட்டளவி அட்டையின் மீது அச்சுட்டளவி யிலுள்ள பென்சில் வரையும் வரைபடம்
indirectly heated : (மின்) மறைமுக வெப்பமூட்டம் : தனது எதிர்முனைக்கு தனி வெப்ப மூட்டியைப் பயன்படுத்தும் ஓர் எலெக்ட்ரான் குழல்
indirect lighting: (மின்) மறைமுக ஒளியமைப்பு : ஒளியை முகட்டில் அல்லது வேறேதேனும் பரப்பில் விழும்படி செய்து, அந்த ஒளி சிதறி அறைக்கு ஒளியூட்டுமாறு அமைக்கப்படும் ஒளி அமைப்பு முறை
indirect radiation: (இயற்) மறைமுக வெப்பூட்டம்: ஒரு மைய வெப்பூட்டும் எந்திரத்திலிருந்து, காற்றை தேவையான வெப்ப நிலைக்குச் சூடாக்கி, அந்தக் காற்றிணைப் புழைப்பகிர்மான அமைப்பின் மூலமாக வெப்பம் தேவைப்படுகிற இடத்திற்கு அனுப்பிச் சூடாக்கும் முறை
indium: (உலோ.) இண்டியம்: மிக அரிதாகக் கிடைக்கும் ஒருவகை உலோகம். இது மிகவும் பளபளப்பானது:வெண்மை நிறமுடையது; மென்மையானது; எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது. இதன் விலை மிகவும் அதிகம் என் பதால், பரிசோதனை நோக்கங்களுக்கு மட்டுமே இது பயன்படுகிறது
individual drive (எந்) தனிநிலை இயக்கம்: ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது
indraft (வானூ.) உள்ளீர்ப்பு: விமானத்தில் முன்புறமுள்ள முற் செலுத்தியிலிருந்து அலகுகளுக்கு உள்நோக்கிப் பாய்தல்
induced angle of attack: (வானூ.) தூண்டு தாக்குறவுக் கோணம்: ஒரு விமானத்தின் உள்ள படியான தாக்குறவுக் கோணத்திற்கும், அதே குணக உயர்த்திக்கான உடற்பகுதியின் வரம்பற்ற நோக்குக் கோணத்திற்குரிய தாக் குறவுக் கோணத்திற்குமிடையிலான வேறுபாடு
induced currenti (மின்) தூண்டு மின்னோட்டம்: பார்க்க: மின் தூண்டல்
induced draft: (பொறி) தூண்டு இழுவை: உயர்த்துவதன் காரணமாக உண்டாகும் செயற்கையான பார இழுப்பு
induced drag: (வானூ) தூண்டு இழுப்பு: உயர்த்துவதன் காரணமாகத் தூண்டப்படும் இழுவையின் ஒரு பகுதி
induced magnetism: (மின்) தூண்டு காந்த விசை : பார்க்க மின்தூண்டல்
Induced voltage; (மின்) தூண்டு மின்னழுத்தம்: ஒரு கம்பியுடனோ, கம்பிச்சுருளுடனோ அல்லது மின்சுற்று வழியுடனோ இணைக்கப்பட்டுள்ள மாறுகிற காந்தப் புலன் மூலமாக உண்டாகும் மின்னழுத்தம்
inductance : (மின் ) மின் தூண்டம் : ஒரு மின்சுற்று வழியின் மூலமாக உண்டாகும் மொத்த மின் தூண்டலுக்கும், அதில் உண்டாகும் மின்னோட்டத்திற்குமிடையிலான விகிதம் ஒரு மின் சுற்றுவழி மூலமாகப் பாயும் மின்னோட்டத்தில் மாற்றத்தை எதிர்க்கும் திறன்
induction : (மின்) மின் தூண்டல் : அணுக்க நிலை மின் பாய்வு. காந்தமேற்றிய பொருட்களின் அல்லது ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னோட்டத்தின் மிக்க அணுக்கத்தினால், ஆதன் அருகேயுள்ள காந்தப்புலத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் காந்தமேற்றம் அல்லது மின்னேற்றம்
induction brazing : மின்தூண்டல் பற்றவைப்பு : மின்னியல் முறையில் பற்றவைப்பு செய்யும் ஒரு முறை, இதில் தூண்டு மின்னோட்டத்திலிருந்து வெப்பம் உண்டாக்கப்படுகிறது
induction coil : (மின்) தூண்டு சுருள் : அணுக்க மின்பாய்வு மூலம் நேர்மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் சுருள்
induction compass : (வானூ) மின்தூண்டல் திசைகாட்டி : இது ஒரு வகை திசை காட்டி, இதில், பூமியின் கர்ந்தப்புலனைச் சுற்றிச் சுழலும் ஒரு மின்சுருளில் உண்டாகும் மின்னோட்டத்தைப் பொறுத்துக் குறியீடுகள் காட்டப்படுகின்றன
induction motor: (மின்.) தூண்டு மின்னோடி: மாறிமாறி வரும் மாற்று மின்னோட்டம். இதன் மூலம் உண்டாகும் மின்னோட்டங்கள், நிலைமின் சுருள்கள் வேகமாக மட்டுமே செலுத்தப்படுகின்றன. நிலை மின் சுருள்கள் மூலம் உண்டாகும் மாறும் காந்தப் புலத்தினால் தூண்டப் பெறும் மின்னோட்டங்களி னால் சுழற்றப்படும் சுழலி
inductive circuit: (மின்) தூண்டு மின் சுற்றுவழி : ஒரு மின்சுற்றுவழி, மின்னோட்டம் மாறுபடும்போது கணிசமான அளவு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது
inductive load : (மின்) தூண்டு மின்சுமை : மின்னழுத்தத்தைவிட மின்னோட்டம் குறைவாக உண்டாகும்படி செய்கிற ஒரு மாறு மின்னோட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு மின்சுமை
inductive reactance : (மின்) தூண்டு எதிர் வினைப்பு : திருகு வளைவுடைய கம்பியைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழியில் மின்னோட்டம் பாய்வதற்கு எதிரீடு. இந்தத் திருகுவளைவுகள் ஓர் இரும்பு உட்புரியில் சுற்றப்பட்டிருந்தால் எதிரீடு அதிகமாக இருக்கும். ஒரு மின் சுருள்வழியாக மாற்று மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்படும் மின் தடையின் அளவு
inductivity : (மின்) தூண்டு திறன் : மின் தூண்டலுக்கான திறன் அல்லது ஆற்றல்
inductor : (மின்) மின் தூண்டு கருவி : தூண்டு மின் இயக்க விசையை (இ.மி.வி.) உண்டாக்கப்படும் ஒரு மின் கடத்தி
inductor type magneto: (தானி.எந்.) மின்தூண்டு வகைத் தனிக் காந்த மின்னாக்கி : இது ஒரு நிலைக்காந்தம். மின்சுருள்கள் நிலையாக இருக்க, ஒரு மின்னகத்துடன் சுழல்கிறது
industrial automation: (தானி ) தொழில்முறை தானியக்கம் : சரக்குகளையும், உற்பத்திப் பொருள்களையும் தானியக்க முறையில் உற்பத்தி செய்தல்
industrial life : தொழில் வாழ்க்கை : தொழில்துறை தொடர்பான மனித நடவடிக்கை நடைபெறும் துறை
industrial system : தொழிலியல் அமைப்புமுறை: தொழிற்சாலையை நிறுவி மேலாண்மை செய்யும் அமைப்பு முறை. தொழிற்சாலையில் உற்பத்தி, தொழிலாளரை வேலைக்கமர்த்துதல் முதலியவற்றை சீரமைத்தல்
industrial waste : (கம்) தொழிலியல் கழிவு : தொழில் நிறுவனங்களில் கையாளப்படும் செய்முறைகளிலிருந்து வெளிப்படும் திரவக் கழிவுப் பொருட்கள்
inert செயலறு : எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற
inertia : (இயற்.) சடத்துவம் : நிலையாக இருக்கும் ஒரு பொருள். அதே நிலையில் நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் அல்லது இயங்கும் ஒரு பொருள் அதே இயக்க நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம்
inertial force : (விண்) செயலறு விசை : முடுக்கு விசைக்குச் சமமான அளவில் அமைந்து எதிர்த்திசை இயங்குகிற, ஒரு முடுக்கு விசைக்கு எதிர்வினையாக உண்டாகிற விசை. இந்த விசையானது. முடுக்கு விசை நீடித்திருக்கும் வரையில் மட்டுமே நீடித்திருக்கும்
interior figures and letters : (அச்சு.) அடிநிலை எண்கள், எழுத்துகள் : அச்சிட்ட வரியில் காலடியில் அமைக்கப்படும். எடுத்துக்காட்டு: C6H5OH
infiltration : (குளி.பத) ஊடு பரவல் : துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல்
infinite impedance : (மின்) வரையிலா மறிப்பு : மின்னியலில் பல கோடி மெகோ எச்.எம்.எஸ். அளவுள்ள மிக அதிக மறிப்பு
inflation : உப்பச் செய்தல் : (1) காற்று அல்லது வாயு நிரப்பி உப்பச் செய்தல்
(2) தகுதித் தரங்கள் குறித்துப் போலியான நியதிகளை ஏற்படுத்துதல்
inflow : (வானூ.) உட்பாய்வு : விமானத்தின் ஒரு முற்செலுத்தியினுள் காற்று உட்பாய்தல்
information : (மின்) நுட்பச் செய்தி : வானொலி அல்லது தொலைக்காட்சிச் சைகைகளில், படத்தகவல் போன்ற நுட்பச் செய்திகள்
infrared : (குழை.) அகச்சிவப்பு : கட்புலனாகும் கதிர்வீச்சுடைய நிறமாலையின் சிவப்பு முனையின் கீழேயுள்ள கட்புலனாகாத கதிர் வீச்சு மண்டலம். இந்த கதிர்வீச்சு அலைகள் ஒளியைவிட ஊடுருவக் கூடியது. இந்த மண்டலத்தை வெப்பம் சூழ்ந்திருக்கும்
'infrasonic : (மின்.) மிகையொலி அலைவெண் : காதால் கேட்கக் கூடிய அலைவெண் வீச்சுக்கு அப்பாற்பட்ட ஒலி அலைவெண்கள்
infrared guidance : (விண்) அகச்சிவப்பு வழிகாட்டி : அகச்சிவப்பு வெப்ப ஆதாரங் களைப் பயன்படுத்தி இலக்குகளை உளவு பார்க்கவும், திசைகாட்டவும் பயன்படுத்தப்படும் ஓர் அமைவு
infusorial earth : (மண்) மட்கிய மண் : நுண்ணிய உயிரிகளின் எச்சங்களில் படிந்துள்ள மண் படிவம்
ingle nook: (க.க) புகை போக்கி மூலை : ஒரு கணப்படுப்பின் மூலைப்பகுதி
ingot : வார்ப்புக்கட்டி : தங்கம், வெள்ளி, எஃகு போன்ற உலோக வார்ப்புக்கட்டி. உலோகம் தூய் மையாக்கப்பட்டதும் இத்தகைய வார்ப்புப் பாளங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் செவ்வக வடிவில் இருக்கும். இக்கட்டிகளில் தயாரிப்பாளர்களின் அடையாளக் குறி முத்திரையிடப்பட்டிருக்கும்
ingot iron : இரும்புக்கட்டி : மென் மையான எஃகு, இதில் கார்பன் குறைவாக இருக்கும். இது திறந்த உலை முறை அல்லது பெசமர் முறை மூலம் தயாரிக்கப்படுகிறது
ingredient : அமைப்பான் : ஒரு கலவையின் கூறுகளில் ஒன்று
inherent stability : (வானூ) உள்ளார்ந்த உறுதிப்பாடு : ஒரு விமானத்தின் உறுப்புகளை முறைபட அமைத்துப் பொருத்துவதால் ஏற்படும் உள்ளார்ந்த உறுதிப்பாடு
inhibitor: (வேதி) தடையுறுத்து பொருள் : வேதியியல் வினைப்பாட்டினை நிறுத்துகிற அல்லது மந்தமாக்குகிற ஒரு வேதியியல் கார்கி. துருப்பிடிப்பதைத் தடுக்கும் அல்லது வேகங் குறைக்கும் ஒரு பொருள்
inhibitors : (தானி) தடைகட்டுப் பொருள் : சீர் குலைவைத் தடுப்பதற்காக எண்ணெயுடன் சேர்க்கப்படும் சேர்மானப் பொருள்
initial : (அச்சு) தலைப்பு எழுத்துக்கள் : அத்தியாய்ங்களின் அல்லது முக்கிய பிரிவுகளின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் பெரிய எழுத்துக்கள்
initial velocity : (இயற்.) தொடக்க வேகவீதம் : ஒரு பொருளின் இயக்க வேகவீதம் எந்த நிலையிலிருந்து கணக்கிடப்படுகிறதோ அந்த நிலையில் அதன இயக்க வேகவீதம்
injection moulding: உட்செலுத்து வார்ப்பு: சூட்டால் நிலையாக இறுகிவிடுந்தன்மையுடைய வெப்பத்தினால் மென்மையாக்கபபட்ட வார்ப்படப் பொருளை நன்கு சூடாக்கிய ஆலோக வார்ப்படத்தினுள் ஒரு திமிசு மூலம் செலுத்தி உருவாககும வார்ப்படம். திமிசை வெளியில் எடுத்ததும், வார்ப்படம் திறந்து கொண்டு, உருவாக்கிய பொருளை வெளித் தள்ளிவிட்டு, அடுத்த சுழற்சிக்காக மூடிக்கொள்கிறது
injector: (பொறி.) உட்செலுத்தி: ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் தொடர்ந்து நீரினைச் செலுத்துவதற்குப் பயன்படுததப்படும் ஒரு சாதனம்
ink : (அச்சு.) மை அட்டை :அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் அட்டை. உருளை அச்சு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இவை பயன்படுத்தப்படுவதில்லை
ink ball : (அச்சு.) மைக்கோளம் : அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் பந்து. உருளை அச்சு எந்திரங்கள் பயனுக்கு வந்ததும் இது பயனற்றுப் போயிற்று
ink disk: (அச்சு.) மைத் தட்டம் : வட்டவடிவமான தட்டு அல்லது தட்டம். இதில் மை தடவப்பட்டு, அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளத்தில் பரப்பப்படுகிறது
ink fountain: (அச்சு) மை ஊற்று: ஓர் அச்சு எந்திரம் இயங்கும் போது அதன் தட்டத்திலும் உருளைகளிலும் தானாகவே மையை ஊட்டும் ஒரு சாதனம்
inking in : மைப்பூச்சு : ஒரு வரை படத்திற்கு மையூச்சுக் கொடுக்கும் முறை
ink knife : (அச்சு.) மைக் கத்தி : மைகளைக் கலப்பதற்காகப் பயன்படும் வண்ணத் தட்டுக்கத்தி
inlaid work : உட்பதிவு ஒப்பனை: கல் முதலியனவற்றை உள் அழுந்தலாகப் பதித்துச் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு
inlay ; உட்பதிவு : (1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு
(2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு
inlet port: (தானி) நுழைவாயில்: நீள் உருளைக்கு எரிபொருளைச் செலுத்துவதற்கான நுழைவாடம்
in-line engine : (தானி) உள்வரி எஞ்சின்: நீள் உருளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அடுக்கப்பட்டுள்ள எஞ்சின்
inorganic : (வேதி) கரியமற்ற : கரியம் (கார்பன்) உள்ளடங்கிராத வேதியியற் பொருட்கள்
input (இயற்.) உட்பாடு : ஒரு வேலையைச் செய்வதற்குச் செலவாகும் ஆற்றலின் மொத்த அளவு
inscribe : (1) எழுத்துப் பொறிப்பு : நீண்ட நாள் இருக்கும் வகையில் எழுத்துப் பொறிப்பு எழுதிப் பதிவு செய்தல் அல்லது பொறித்து வைத்தல்
(2) உள்வரை : ஓவியத்தில் ஓர் உருவத்திற்குள் இன்னொரு உருவத்தை வரைதல்
insert,(same as inset),(அச்சு) இடைச்செருகுப் பக்கம்: ஒரு புத்தகத்தைக் கட்டுமானம் செய்வதற்கு முன்பு, அதிகப்படியான பக்கங்களைத் தனியாக அச்சடித்து உரிய இடங்களில் இடைச்செருகி வைத்தல் inserted blade cutters : (எந்) செருகு வெட்டுக்கத்திகள்: உலோகத் தகட்டில் வடிவரிசைத் துளைகள் இடுவதற்கான பெரிய அள வெட்டுக்கத்திகள். இதில் அதிவேக எஃகுக்கத்திகள் உரிய நிலைகளில் செருகப்பட்டு வெட்டும் வேலை செய்யப்படுகிறது
inserted tooth cutter : (எந்) செருகு பல்வெட்டி : செருகப்பட்ட பற்களைக்கொண்ட ஒரு வெட்டுச் கருவி.இதில்,பல்வேறு முறைகளில் பற்கள் பொருத்தப்படுகின்றன.வெட்டுக்கருவி ஆறு அங்குலம் அல்லது அதற்கு அதிகமான விட்டமுடையதாக இருக்கும் போது இந்தச் செருகு பற்கள் பயன்படுத்தப்படுகின்றன
insertion loss : (மின்) செருகல் இழப்பீடு : ஒருசில சாதனங்களை அல்லது கருவிகளைச் செருகுவதன் காரணமாக மின் அனுப்பீட்டு முறையில் ஏற்படும் இழப்பீடு
inside calipers (பட்) உள்முக விட்டமானி : இதில் கால்களின் நுனியிலுள்ள புள்ளிகள், உள்முகமாக, வளைந்திருப்பதற்குப் பதிலாக வெளிப்புறமாக வளைந்திருக்கும் இதனால், உள்முக விட்டங்களை அளவிடுவதற்கு இது பயன்படுகிறது
inside thread : (எந்) உள்முகத் திருகிழை : ஒரு மரையாணியைப் பொருத்துவதற்கேற்ப உள்முக விட்டத்தில் வெட்டப்பட்ட திரு கிழை
inspection : (எந்) ஆய்வு செய்தல் : உற்பத்தி செய்த பொருட்களின் உறுப்புகளும் மூலப்பொருட்களும் குறித்துரைக்கப்பட்ட தர அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வுசெய்திடும் முறை
inspection bench: (பட்) ஆய்வு மேசை: மேல்மட்டம் வழுவழுப்பாக அமைந்த ஒரு மேசை, இது பெரும்பாலும் உலோகத்தில் செய்யப் பட்டிருக்கும். இதன்மேல் ஆளவு கருவிகள் வைத்துப் பொருட்கள் ஆய்வு செய்யப்படும்
inspection gauges (எந்) ஆய்வு அளவிகள்: கொள்வினை செய்யப்படும் பொருளின் துல்லியத்தைச் சோதனை செய்வதற்குக் கொள் வினை செய்வதற்குப் பயன்படும் அளவு கருவிகள்
inspector: ஆய்வாளர் : ஒரு பொருளின் தரமும் அளவும் வேண்டுறுத்தங்களுக்கேற்ப இருக் கின்றனவா என்பதைக் கண்டறியும் கடமை கொண்டுள்ள அதிகாரி
instellation : நிறுவுதல் : எந்திர சாதனங்கள், மின்னாக்கக் கருவிகள் முதலியவற்றை அதனதன் நிலையில் பொருத்தி வைத்தல்
instalment : தவணை : (1) தவணையில் வழங்குதல்
(2) தவணை முறையில் பணம் வழங்குதல்
instrument flying : (வானூ) கருவியால் பறத்தல் : கருவிகளைப் பயன்படுத்தி மட்டுகே விமானத்தைக் கட்டுப்படுத்தும் கலை. இதனை 'நிலங்காணாது பறத்தல்' என்றும் கூறுவர்
instrument panel : (தானி.எந்) கருவிச் சேணம் : விமானம் ஓட்டியின் கண்ணுக்கு எளிதில் தெரியும் படி பல்வேறு கருவிகளும், சுட்டு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ள மென்பலகை
instrument transformer: (மின்.) அளவி மின் மாற்றி: உயர்ந்த அளவு மின்னழுத்தங்களை அதிகப் பதிவுத் திறன் கொண்ட மானியாலும் அறிந்து கொள்வதற்கு உதவும் சாதனம் insulated: (க.க) காப்பிடப்பட்ட: (1) கட்டிடங்களை அல்லது தூண்களை மற்றக் கட்டிடங்களிலிருந்து அல்லது தீப்பற்றும் பொருள்களிலிருந்து பாதுகாப்பாகப் பிரித்து வைத்தல்
(2) மின்விசையோ வெப்பமோ பாயாதவாறு காப்பிட்டு வைத்தல்
insulating tape : (மின்) மின் காப்பு நாடா: மின் காப்புப் பொருளில் தோய்த்து மின் கடத்தாதவாறு செய்யப்பட்டுள்ள ஒட்டுப் பசையுடைய நாடாமின் இணைப்புக் கம்பி களையும், வெளியில் தெரியும் பகுதிகளையும் மூடி மறைக்கப் பயன்படுகிறது
insulating transformer : (மின்) மின்காப்பு மின்மாற்றி : கிளர் மின்னோட்டத்தை தாங்கிச் செல்லும் கம்பிச் சுருளிலிருந்து முதல் நிலை மின்னாற்றலைக் கவனமாகப் பிரித்தும் மின்காப்பு மின்மாற்றி, இதில் நிலை மின்னாற்றலுக்கும் கிளர்நிலை மின்னாற்றலுக்கும் இடையில் மின்னியல் உலோகத் தொடர்பு ஏதுமில்லை
insulating varnish : (மின்) மின்காப்பு மெருகெண்ணெய் : சிறந்த மின்காப்பு இயல்புகள் கொண்ட ஒரு தனிவகை மெரு கெண்ணெய். இது மின்சுருள்களிலும். சுருணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது
insulation (க.க.) தீக்காப்புப் பொருள் : தீப்பிடிக்காத பொருள்களில் ஒன்று. தீ விபத்துகளைத் தடுப்பதற்காகவும் வெப்ப குளிரி விரிந்து பாதுகாப்பதற்காகவும் கட்டிடக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது
insulation resistance : (மின்) மின்காப்புத் தடை : ஒரு மின்சுற்று வழியின் மின் கடத்திகளும் அல்லது ஓர் எந்திர்த்தின் மின் சுருணைக்கும், தரை, மண் அல்லது சட்டகத்திற்குமிடையிலான தடை
insulator : (மின்) மின் காப்பி: கடத்தாத கண்ணாடி, பீங்கான் போன்ற பொருள்கள்
insulin : (உட.) கணையச்சுரப்பு நீர் : கணையத்தில் சுரக்கும் நீர்ப் பொருள். இது தசைகள் இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர்களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி முலம் செலுத்தப்படுகிறது
intaglio : செதுக்கு வேலைப்பாடு: மரம், உலோகம் போன்ற கடினமான பொருள்களின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. இது புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டது
intaglio printing: செதுக்குமுறை அச்சுக்கலை: செதுக்கு வேலைப் பாட்டு அச்சுப்பாளங்களிலிருந்து செதுக்கிய செப்புத் தகடுகளிலிருந்து அச்சிடும்முறை
intake : (தானி.எந்) கொள் பொருள் : வாயு அல்லது பெட்ரோல் எஞ்சினின் புழைவாயிலின் வழியே பாயும் எரிபொருள் கலவை
intake belt course : (க.க.) உள்வாய் வார்ப்பட்டை வழி : கட்டிடத்தின் இரு சுவர்களின் வேறுபட்ட திண்மைக்களுக்கிடையில் உள் வாயாகப் பயன்படும் வகையில் சித்திர வேலைப்பாடு வெட்டப்பட்ட வார்ப்பட்டை வழி
intake header (வானூ) உள் வாய் நுண்புழை : உந்துகலம், விமானம் முதலியவற்றின் மீவிசைக் காற்றடைப்புக் குழாய்க்கு எஞ்சின் மேல் மூடியின் புறப் பகுதியிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறுகிய நுண்புழை
intake manifold: (தானி) உள்வாய்க் கவர்குழாய்: Y-வடிவிலுள்ள கிளைக்குழாய். இதன் வழியாக எரியும் வாயுக் கலவையும், காற்றும் எரி-வளி கலப்பிலிருந்து இயக்கு பொறிக்குச் செல்கின்றன
intake valve : (தானி) உள்ளிழுப்பு ஓரதர் : நீள் உருளையில் உள் இழுப்புப் பகுதியிலுள்ள ஓரதர்
intarsia ; உட்பதிவு வேலைப்பாடு: மரத்தில் செய்யப்படும் ஒருவகை உட்பதிவு வேலைப்பாடு. 15ஆம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் இதனைப் பெருமளவில் பயன்படுத்தினர்
integer : (கணி) முழு எண்: ஒரு பின்னமாக இல்லாத முழுமை பாகவுள்ள எண்
integral : முழுமை அளவை: பகுக்க முடியாத உறுப்புகளின் முழுமொத்தம் எடுத்துக்காட்டாக ஒரு முனைந்த பகுதியுள்ள சுற் றுருளையின் முனைப்புகள் அந்த உருளையின் முழுமொத்த உறுப்புகளாகும்
integral calculus : (கணி.) தொகையீட்டுக் கலனம் : வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வளைகோடுகளின் நீளங்கள்: திடப்பொருள்களின் கன அளவுகள் பரப்பளவுகள், படிமைத் திருப்புமைகள், சராசரி மதிப்பு, நிகழ்தகவு ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது
integration: தொகையீடு/ஒருங்கிணைப்பு: பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்து முழுமையாக உருவாக்குதல்
intensifier; (எந்) செறிவாக்கி: குறைந்த அழுத்தத்தினை உயர்ந்த அழுத்தமாக மாற்றுவதற் கென நீரியல் சேமிப்பானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்
intensity of light: (மின்) ஒளிச் செறிவு: ஒளியூட்டும் ஆதாரம் ஒன்றன் ஒளியடர்த்தித் திறன்
intensity of pressure : (இயற்.) அழுத்தச் செறிவு : ஒரு பாய்மரத்தின் விசை ஆற்றல் அல்லது வினைத் திறனளவு. இது செயற்படும் இடைவெளிக்கும் இதற்குமுள்ள விகிதத்தின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது
interceptor : (வானூ) · இடைமறிப்பு விமானம்: புகை விமானங்களைப் பின்பற்றிச் சென்று துரத்தி இடைமறிப்பதற்கேற்ற பளுவற்ற விரை விமானம்
inter changeable gear : பரிமாற்றப் பல்லிணை : ஒரே மாதிரியான இடைவெளி யளவுடைய பிற பல்லிணை எதனுடனும் முறையாகக் கொளுவி இணையக்கூடியவாறு பற்கள் அமைக்கப்பட்ட பல்லிணை
intercom: (மின்) இடைச் செய்தித் தொடர்பு ; தொழிற்சாலைகள், வாணிக நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் அலுவல் தங்களைக் கொண்ட அமைவனங்களில் அலுவலகங்களிடையே தொடர்பு கொள்வதற்குப் பயன்படும் இடைத்லைபேசி அமைப்பு முன்றி
intercontinental ballistic missile : (விண்) கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகனை: ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திலுள்ள இலக்குகளைத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ஏவுகணை
inter electrode capacitance: (மின்.) மின் முனையிடைக் கொண்மம்: ஓர் எலக்ட்ரான் குழலில் உள்ள உலோக உறுப்புகளிடையிலான கொண்மம்
interference : (வானூ) இடையீடு : (1) இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள் ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தும் வளியியக்கத் தாக்குறவு
(2) வானொலியில் பெறப்படும் சைகைகளில் மாற்றத்தை அல்லது ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் மின்னியல் அல்லது காந்த உலைவு
(3) தொலைக்காட்சியில் ஒலியையும் ஒளியையும் குலைக்கும் போலியான மின்னியல் சைகைகள்
interferometer: (உலோ) ஒலியலை அளவுமானி: இடையீட்டுத் தடுப்பு மூலம் ஒலியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி
intergalactic space : (விண்) வான்கங்கை இடைவெளி : வான் கங்கைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி தூரம்
interior finish: (க.க) உட்புறச் செப்பம்: (1) ஒரு கட்டிடத்தின் உட்புறத்தில் செய்யப்படும் இறுதிச் செப்பத்தின் விளைவு
(2) கட்டிடத்தின் உட்புற அலங்காரங்களை இறுதியாகச் செப்பமிடுவதற்குப் பயன்படும் ஒரு பொருள்
interlacing: இடையீட்டு இணைப்பு: தொலைக்காட்சியில் தொலைவுக்கனுப்பும்படி நிழல் ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை. இதில் ஒற்றப்படை எண்ணிக்கை வரிகள் தனிப்புலமாக அனுப்பப்படுகின்றன. இரட்டைப் படை எண்ணிக்கை வரிகள் பின்னர் மேலடுக்கில் நிரப்பப்பட்டு முழுப்படமாக உருவாக்கப்படுகிறது
interlock: (மின்.) இடைப்பூட்டு: உயர் மின்னழுத்தங்களையுடைய பெட்டிகளின் கதவுகளிலுள்ள ஒரு காப்புவிசை. கதவைத் திறந்ததும் உயர் மின்னழுத்தச் சுற்றுவழிகள் செயலற்றுவிடும்
interlocking (எந்) இடைப்பூட்டு செய்தல்: கண்ணறுத்துப் பொருத்துவதன் மூலம் ஒன்றாக இணைத்தல்
intermediate frequency: இடையீட்டு அலைவெண்: வானொலியில், மீமிகை ஒலியலை மாற்றி ஒலிவாங்கியில் கலப்பியினால் அல் லது முதலாவது பிரிப்பானால் பெறப்படும் சிறந்த அலைவெண்
intermediate gear: (பட்) இடையீட்டுப் பல்லிணை: திசை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையே பொருத் தப்படும் மூன்றாவது பற்சக்கரம்
intermittent gear: (பட் ) இடைவிட்ட பல்லிணை: பற்கள் தொடர்ச்சியாக இல்லாத ஒரு பல்லிணை. ஆனால் இதில் இடையிடையே சமதளப்பரப்புகள் இருக்கும். இந்தச் சமதளப் பரப்புகளில் இயங்கும் சக்கரம்படும் போது நிலையாக இருக்கும்
intermodulation : (மின்) இடை அலைமாற்றம் : சிக்கலான ஒரு மின்னலையை மற்றொரு மின்னலையாக மாற்றுதல். இது அலைவெண் களின் கூட்டுத்தொகையாகவும், வேறுபாடாகவும் குறிக்கப்படும்
internal circuit: (மின்) உள் மின்சுற்றுவழி : புறமுனைகளுக் கிடையே சேர்க்கப்பட்ட ஒரு மின்னியல் சுற்று வழியின் பகுதி. உள் மின்சுற்று வழியில் ஏற்படும் தடையினால் மின் இழப்பு ஏற்படுவதுடன், மின்கலத்தின் அல்லது மின்னாக்கியின் உற்பத்தித் திறனளவையும் குறைக்கிறது
internal combustion engine: (எந்.) உள்ளெரி எஞ்சின்: ஓர் அடைபட்ட அறைக்குள் அல்லது நீள் உருளைக்குள் உள்ள எரி பொருள் எரிவதால் விரிவாக்க விசை ஏற்படுவதன் மூலம் இயக்க விசை உண்டாகும் எஞ்சின்
internal forces : (இயற்) அக விசைகள்: ஒரு பொருளின் மூலக்கூறுகள் இயங்குவதால் அந்தப் பொருளின் உள்ளே உண்டாகும் விசைகள்
internal gear: அகப்பல்லிணை: ஒரு வளையத்தின் உட்புறப் பரிதியில் அமைக்கப் பட்டுள்ள பற்களில் பொருந்தி பற்சக்கரங்கள் சுழலும் போது, அந்த்ப் பல்லிணை 'அகப் பல்லிணை' எனப்படும்
internal gear drive; (தானி) அகப்பல்லிணை இயக்கம்: வேக விகிதத்தை அதிகரிப்பதற்காக, அல்லது குறைப்பதற்காக, ஓர் அகப்ப்ல்லிணை, ஒரு சுழல் நுனியுடன் கொளுவி இணைத்து இயங்கும் இயக்கம். பின்புற அச்சு இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டு
internal grinder : (எந்) அக உராய்வு எந்திரம் : நீள் உருளைகளைத் துல்லியமாக வடிவமைப்பதற்கும் மற்ற உட்புற நுட்பு வேலைப் பாடுகளுக்கும் பயன்படக் கூடிய ஒரு உராய்வு எந்திரம்
internal resistance (மின்) அகத்தடை : மின்னழுத்தத்தின் அல்லது மின்னியக்க விசையின் ஆதாரத்திலுள்ள உள்தடை, மின் கலத்தில் அல்லது மின்னாக்கியில் இந்த அகத்தடை உள்ளது
internal thread: (எந்) அகத் திருகிழை : ஒரு பொருளின் உட்புறம் வெட்டப்ப்ட்டுள்ள திருகிழை. ஒரு மரையாணியில் இவ்விதம் திரு கிழை வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம்
interplanetary space : (விண்) கோள்களிடைவெளி : சூரிய மண்டலத்தின் வரம்புகளுக்கு அப்பால், கோள்களுக்கிடைப்பட்ட தாகவுள்ள இடைவெளி
interteller flight: (விண்) விண் மீன்களிடைப் பயணம் : கதிரவன் அண்டத்திற்கு அப்பாற்பட்டு, விண் மீன்களுக்கிடையே பறந்து பயணஞ்செய்தல்
interpolation : (கணி) இடை மதிப்பீடு : கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு வரிசைகளில் இடையிலுள்ள ஓர் உருவின் மதிப்புகளை கணக்கிடுதல்
Inter-pole : (மின்) இடைமுனை : பிரதான களப் புலங்களிடையே வைக்கப்பட்டு மின்னகத்தின் மூலம் தொடர்பு வரிசைகளில் மின்னியல்முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய புலமுனை
interrupted arch : இடையறு கவான் : வில்வளைவுடைய முகப்பு. இதன் மையப் பகுதி துண்டுபட்டிருக்கும்
interrupter : (மின்) இடையறுப்பான் : ஒரு மின்சுற்றுவழியில், மிக அடுத்தடுத்த இடைவெளிகளில் மின் இணைப்பைத் துண்டிக்கவும், இணைக்கவும் செய்யக்கூடிய ஒரு சாதனம்
inter-sect: குறுக்குவெட்டு: குறுக்காகச் செல்; ஊடறுத்தல்; குறுக இட்டுப் பிரித்தல்
inter-section : (வடி.கணி) குறுக்கு வெட்டுப் புள்ளி: கன்னிதத்தில் ஒன்றையொன்று குறுக்கு வெட்டும் பொருள்கள் குறுக்கிட்டுச் சந்திக்கும் புள்ளி
interstice : சிறு இடைவெளி: சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு
inter-type : (அச்சு.) வரிவாரி அச்சுக்கோப்பான் : அச்செழுத்துக்களை வரிவரியாக வார்த்து உருவாக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்.இது வரி உருக்கச்சுப்பொறி போன்றது
interval (பட்.) இடைவெளி: ஒரே மாதிரியான எந்திரச் செயற்பாடுகளிடையே கால இடைவெளி
intestine : (உட) குடல் : உணவுக் குழாயின் கீழ்ப்பகுதி இது பெருங்குடல், சிறு குடல் என இரு பகுதிகளைக் கொண்டது
intrados or soffit : உட்புற வளைவு : ஒரு வளை முகட்டின் உட்புற வளைவு
intrinsic energy : உள்ளார்ந்த ஆற்றல்: இரு தனிமங்கள் (எ-டு ஆக்சிஜன், கார்பன்) இணையும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உண்டாகிறது. எனவே, அவை இணைவதற்கு முன்பே, அவற்றில் ஓரளவு வெப்பம் அடங்கியிருந்தது எனலாம். இது அவற்றின் உள்ளார்ந்த எரியாற்றல் ஆகும்
inwar, (மின்.) இன்வார்: மின் தடைப்பொருளாகப் பயன்படும், மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணுடைய நிக்கல் - எஃகு உலோகக் கலவை
invarstrut (தானி) கலவை எ.குக் காழ்: மிகக் குறைவான விரவகற்சி அலகெண்ணுடைய ஜெர்மன் வெள்ளி எஃகுக் கலவையில் செய்த தாங்கு காழ். இது உந்து தண்டுகளின் விளிம்புக்கும் தலைப் பகுதிக்குமிடையில் விரிவாக்கத்தைச் சமநிலைப்படுத்துவதற்காக அலுமினியம் உந்து தண்டுகளில் பொருத்தப் பட்டிருக்கும்
invention: புத்தாக்கப் புனைவு : புதிதாகப் புனைந்து உருவாக்கிய ஒரு கோட்பாடு, உத்தி அல்லது சாதனம்
inventory: விளக்க விவரப்பட்டி : ஒரு வாணிகத்தில் கையிருப்பிலுள்ள சரக்குகளின் அல்லது பண்டங்களின் இனவாரியான விவரப்பட்டி. அவ்வாறு பட்டியலிடப்பட்ட சரக்குகளையும் பண்டங்களையும் இது குறிக்கும்
inverse, தலைகீழ்த் தகவு: நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றில் தலைகீழ் எதிர்மாறான விளைவு
inverse square law: (மின்) தலைகீழ் வர்க்கவிதி : ஓர் இயற்பியல் அளவானது, மதிப்பில் தொலைவின் வர்க்கத்திலிருந்து குறைந்து வருகிறது என்னும் விதி. எடுத்துக் காட்டாக, ஆதாரத்திலிருந்து தொலைவின் வர்க்கத்திலிருந்து ஒளிர்வின் செறிவு குறைந்து கொண்டுவரும்
invert: (கம்மி.) தலைகீழ்ப் பகுதி : செங்குத்தாக இல்லாத ஒரு குழாயின் அல்லது நீர் செல்குழாயின் உட்புறத்தில் அடிப்பகுதி
inverted arch: (க.க) தலைகீழ் கவான: கவானின் வளைவு முகட்டுக்கல் மிகவும் கீழே அமைந்திருக்குமாறு அமைக்கப்பட்ட கவான்
inverted engine (வானூ) தலைகீழ் எஞ்சின் : நீள் உருளைகள் வணரி அச்சுத் தண்டுக்குக் கீழே அமைந்துள்ள ஓர் எஞ்சின்
inverted normal loop: (வானூ) தலைகீழ் இயல்பு வளைவு : விமானம் தலைகீழாகப் பறப்பதிலிருந்து தொடங்கி பாய்ச்சல், இயல்பாகப் பறத்தல், மேலேறுதல் இவற்றை வெற்றிகரமாகச் செய்து மீண்டும் தலைகீழாகப் பறக்கும் நிலைக்கு வருதல்
inverted outside loop (வானூ) தலைகீழ்ப்புற வளைவு: விமானம் தலைகீழாகப் பறப்பதிலிருந்து தொடங்கி, மேலே ஏறுதல், இயல் பாகப் புறத்தல், பாய்தல், இவற்றை வெற்றி கரமாகச் செய்து மீண்டும் தலைகீழாகப் பறக்கும் நிலைக்கு வருதல்
inverted spin; (வானூ) தலைகீழ் சுழற்சி: விமானம் தலைகீழ் நிலையிலிருந்து இயல்பாகச் சுழலும் ஓர் உத்தி
inverter: (மின்) மின்மாற்றி : நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் எந்திரவியல் அமைப்பு
involute : உட்சுருள் : வட்ட மையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளை கோட்ட முறும் வட்டவளைவு
involute gear : (எந்) உட்சுருள் பல்லிணை: உட்சுருள் முறைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பல்லிணை முறை. இது வட்டப்புள்ளி நெறிவளைவு முறையிலிருந்து வேறுபட்டது. இப்போது வட்டப் புள்ளி நெறி வளைவுமுறை பல்லிணைகளைவிட உட்சுருள் பல் லிணை முறையே அதிகம் பயன் படுத்தப்படுகிறது
involute teeth : உட்சுருள் பல்: பல்லிணையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பல். இது உட்சுருள் வளைவினை அடிப்படையாகக் கொண்டது
involution: (தானி.) விசை அமுக்கம் : கணிதத்தில் ஓர் எண்ணை அந்த எண்ணாலேயே எத்தனை மடங்குக்கும் பெருக்கி, அந்த எண்ணை எத்தனை விசைப்பெருக்கத்திற்கும் உயர்த்துதல்
iodide : (வேதி.) அயோடைடு : பிறிதொரு தனிமத்துடன் அயோடின் சேர்ந்த கூட்டுக்கலவை. பொட்டாசியம் அயோடைடு போன்ற அமில உப்பு
iodine : (வேதி.) அயோடின் (கறையம்) : கரியப் பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப் படுத்தும் இயல்புடைய ஒரு தனிமம். இது சிலியன் உவர்க்கார நைட்ரேட்டிலிருந்தும், கடற்பாசிகளின் சாம்பலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. நோயாளி களுக்கு உள்ளே கொடுக்கவும் வெளியே பூசவும் மருந்தாகப் பயன்படுகிறது. சாயப்பொருள்களாலும் பயன்படுத்தப்படுகிறது
ion : (வேதி.) அயனி: (1) மின் பகுப்புச் சிதைவுக் கோட்பாடு பற்றியது. அதாவது, அமிலங்கள், காரங்கள், உப்புகள் ஆகிய அனைத்தின் மூலக்கூறுகளும் நீரிலும் வேறு சில கரைப்பான்களிலும் கரையும்போது பல்வேறு அளவுகளில் சிதைவுறுகின்றன என்னும் கோட்பாடு
(2) ஓர் அணு அதன் எலெக்ட்ரான்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்து, அதில் நேர்மின்னேற்றம் மட்டுமே இருக்குமாயின் அது அயனி எனப்படும்
ion burn : அயனி எரியழிவு : ஓர் எதிர்முனைக் கதிர்க்குழலின் ஒளித் திரையின் மையத்தில், எதிர் மின் அயனிகள் வலுவாகத் தாக்குவதால் உண்டாகும் நிற மாறுபாடு
ionic order : அயோனிய பாணிக் கட்டிடக் கலை: அயோனியாவைச் சேர்ந்தவர்கள் வகுத்து கட்டிடக் கலைப் பாணி. இதில் தூண் தலைப்பின் இரு புறமும் சுருள் அணி அலங்கார அமைப்பு முக்கிய அம்சமாகும்
ionic valence bond : (மின்) அயனி ஒருங்கிணைவு : ஒர் அணுவின் புற வளையத்திலுள்ள எலெக்ட்ரான்கள், மற்றொரு அணுவின் புற வளையத்திற்கு எலெக்ரான்களைக் கொடுக்கும் வகையில் அணுக்கள் ஒருங்கிணைந் திருத்தல். எடுத்துக்காட்டு: ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒருங்கிணைந்து நீர் உண்டாகிறது
ionization : (வேதி) அயனியாக்கம் : மின்பகுப்புப் பொருளாகப் பயன்படும் ஒரு கலவைப் பொருளை நேர்மின், எதிர்மின் அயனிகளாகப் பகுத்தல்
ionization potential : (மின்) அயனியாக்க ஆற்றல் : வாயு நிரப்பிய குழலில் அயனியாக்கம் நடைபெறும் வகையில் செலுத்தப்படும் மின்னழுத்தம்
ionosphere : (மின்) மீவளி மண்டலம்: பூமிக்கு மேலே 63-563கி.மீ. உயரத்திலுள்ள வாயுமண்டலப் படுகை. அங்கு, மிக அதிக எண் ணிக்கையில் நேர்மின் எதிர்மின் அயனிகள் அடங்கியிருக்கும்
ion spot : (மின்.) அயனிப்புள்ளி ; அயனித் தாக்கம் காரணமாக ஒரு படத்தின் மையத்தில் உண்டாகும் பழுப்பு நிறப்புள்ளி
ion tray : அயனிக் கவணை: தொலைக்காட்சிப் படக்குழாயின் நுனியில் அயனி எரியழிவினை அகற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
iridescence : வண்ணக் கோலம் : வானவில்லின் வண்ணக் கோலத்தைக் காட்டும் தோற்றம்
iridium ; இரிடியம் (உறுதியம்) : பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளிபோல் வெண்மையான உலோகத் தனிமம். கடுமை வாய்ந்த இதன் அணு எண் 77
iris : ஒளி வகுப்பு மறைப்பு : தொலைக் காட்சியில் ஒளியை கட்டுப்படுத்தக்கூடிய சுருங்கி விரியக்கூடிய மறைப்பு
irish moss : ஐரிஷ் பாசி : கடற்பாசியி லிருந்து கிடைக்கும் ஒரு வகைப் பாசி, இதனை நீரில் கொதிக்க வைக்கும்போது, பாகு போல் மாறிவிடும். இதனை நெசவாலை, தோல் தொழில்களில் பயன்படுத்துகிறார்கள்
iron : இரும்பு : தொழில் உலகில் மிக முக்கியமாகப் பங்கு பெறும் உலோகத் தனிமம். தாதுக்களில் மற்றப் பொருள்களுடன் கலந்து இது கிடைக்கிறது. வார்ப்பிரும்பு, தேனிரும்பு. நெகிழ்விரும்பு, எஃகு என்ற வகைகளில் இரும்பு விற்பனையாகிறது
(2) தோலின் கனத்தை அளவிடுவதற்கான ஓர் அலகு.இது .053 செ.மீ அளவுடையது
iron-core inductor : (மின்) இரும்புப்புரி கிளர்மின் சுருள் : ஓர் இரும்புப் புரியின் மீது சுற்றப்பட்ட கிளா மின்னோட்ட மின் சுருள்
iron core transformer: (மின்) இரும்பு உட்புரி மின்மாற்றி: ஓர் இரும்பு உட்புரியினைச் சுற்றி மின் கம்பிச் சுருள்கள் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்மாற்றி, இதனால், மின் கம்பிச் சுருள்களில் அதிகக் காந்தப் பிணைப்பு கிடைக்கிறது
iron-oxide paint: அய ஆக்சைடு வண்ணச் சாயம்: அய ஆக்சைடு மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணச் சாயம் ஆளிவிதை எண் ணெயுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களில் காப்புப் பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது iron-work: (க.க) இரும்பு வேலைப்பாடு: அலங்கார வேலைகளுக்காக இரும்பினைப் பயன் படுத்துதல். மத்திய காலத்துக் கட்டிடக் கலையில், கதவுக் கீல்கள். கதவு தட்டும் கைப்பிடிகள் போன் றவற்றிற்கு இரும்பு வேலைப்பாடுகள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன
irradiation: (குளி.பத.) கதிரியக்கப் பதனாக்கம்: உணவிலுள்ள சில பாக்டீரியாக் களைக் கொல்வதற்காக உணவைக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துதல்
irregular curves : ஒழுங்கற்ற வளையம்: வளை வரைகளாக அல்லது வட்டங்களாக வளை இல்லாத கோடுகளை வரைவதற்காக வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி
irregular polygon: ஒழுங்கற்ற பல கோணக்கட்டம்: பக்கங்கள் ஏற்றத்தாழ்வான நீளங்களில் உள்ள பல்கோணக் கட்டம். பக்கங்கள் ஏற்றத்தாழ்வாக இருப்பதால் கோணங்களும் ஏற்றத்தாழ்வாக இருக்கும்
isinglass : (1) மீன் பசைக்கூழ்: மீன்களின் காற்றுச் சவ்வுப் பைகளிலிருந்து தயாரிக்கப்படும், ஒளி அரைகுறையாக ஊடுருவக்கூடிய ஒரு பொருள்
(2) ஒளிபுகு அப்பிரகம்
isobar: (இயற்.) சம அழுத்தக் கோடு: ஒரே வாயு மண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு
isocyanate resin: (குழை) ஐசோசயனேட்டுப் பிசின்: செயல் திறமுடைய ஹைட்ரஜன் அணுக்களுடன் ஐசோசயனேட்டுகள் எளிதாக இணைவதால், பிளாஸ்டிக் தொழிலில் யூரித்தேன் வேதியியல் என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத் துறையே தோன்றியுள்ளது. இந்த வேதியியல் நெகிழ்வும் விறைப்பும் உடைய நுரைப் பொருள் பற்றியதாகும்
isogonic lines: (அள) சரிசமக் காந்தக் கோண வரிகள்: காந்த ஊசியின் பிறழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இடங்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு படத்தின் மீது வரையப்பட்ட வரிகள்
isolating switch: (மின்) தனிப்படுத்து விசை: ஒரு மின்சுற்று வழியை அதன் விசை ஆதாரத்திலிருந்து தனியாகப் பிரித்திடப் பயன் படுத்தப்படும் விசை மின்சுற்று வழியினை வேறேதேனும் முறைகளில் திறந்திடும் போது மட்டுமே இது இயக்கப்படுகிறது
iso-metric: சமச் சீரான: ஒரே சீரான அளவுடைய
isopropyl alcohol: (வேதி) ஐசோபுரோப்பில் ஆல்கஹால் : தேய்ப்பு ஆல்கஹால்
isosceles: (கணி) இரு சமபக்கமுடைய: இரு சமபக்க முக்கோணத்தில் உள்ளது போன்ற சமநீளமான இருபக்கங்களையுடைய
isosceles triangle: சமபக்க கோணம்: இரு பக்கங்கள் சம அளவிலுள்ள ஒரு முக்கோணம்
isosotope: (வேதி) ஓரகத் தனிமம்: ஒரே பொருண்மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிமம். இதில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒரே அளவாக இருக்கும்;ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டதாக இருக்கும்
isothermal: (இயற்) சமபக்க நிலைக் கோடு: ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்ப நிலையுடைய இடங்களை இணைக்கிற கோடு itallic: (அச்சு.) அச்செழுத்து: வலப்பக்கம் சாய்ந்த அச்செழுத்து, முக்கியமான குறிப்புகளை எடுப்பாகக் காட்ட இது பயன்படுத்தப்படுகிறது. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் இது வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்டது
ivory: தந்தம்: யானை, நீர் யானை, கம்பிளி யானை, திமிங்கிலம் முதலிய விலங்குகளின் மருப்பு. இது அலங்கார வேலைப் பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது
ivory black: தந்தப் பொடி: எரிக்கப்பட்ட தந்தத்திலிருந்து கிடைக்கும் கறுப்புப் பொடி
ஒருவகை வண்ணச் சாயத்திற்கும் இந்தப் பெயர் உண்டுjack : (எந்.) தூக்கிப்பொறி : அதிக அளவுப் பாரங்களை மிகக் குறைந்த அளவு மனித ஆற்றலைப் பயன்படுத்தி குறுதிய உயரத்திற்கு உயர்த்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
jack arch : தூபிக்கவான் : வழக்கமான தட்டையான கவான். "ஃபிரெஞ்சுக் கவான்' என்றும் கூறுவர்
jack, electric : மின்தொடுமுனை : ஒருவகை உலோக விற்சுருள் தொடுமுனை.ஒரு நூல் கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு செருகியைச் செருகுவதன் மூல்ம் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொலைபேசி விசைப்பலகைகளிலும், வானொலிகளிலும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
jacket : (எந்.) உறையுள் : வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை. இது ஒர் உந்து நீள் உருளையைச் சுற்றி நீர் பாயச் செய்து வெப்பம் அல்லது குளிர்ச்சி பாதுகாக்கப்படுகிறது
jack, hydraulic (பட்.) நீரியல் பாரந்துக்கி : எடையைத் தூக்கு வதற்கான சாதனம். நீரில் அல்லது திரவத்தில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் பாரம் மேலே தூக்கப்படுகிறது
jakging Up : உயர்த்துதல் : பெரிய வடிவளவிலுள்ள எந்திரங்களையும் கனத்த கட்டுமானங்களையும் தூக்கிப்பொறியின் துணையுடன் உயரே தூக்குதல்
jack leveling (பட்.) : சரிமட்டத் திருகுப் பொறி : எந்திரத்தின் பகுதிகளை மயிரிழை கூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்குபடுத்தும் சரிமட்டத் திருகுப்பொறி
jack plane : கட்டை விமானம் : கரடுமுரடான வேலைகளுக்குப் பயன்படும் வானூர்தி
(2) திருகு தளம்: வெட்டு மரத்தைத் தேவையான வடிவளவுக்குக் கொண்டு வருவதற்கு இழைப்பதற்கெனப் பயன்படும் தளம்
jack rafter : (க.க) குறு உத்திரம் : கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்
jackscrew : (எந்) திருகுப் பொறி : பற்றுக் கருவிகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களைப் பற்றியவாறு இழைப்பதற்குப் பயன்படும் சிறிய திருகுப் பொறி
jamb : (க.க.) புடைநிலை : வாயிலின் புடைநிலை அல்லது பலகணியின் பக்க நிலை; பலகணித் தளச் சரிவு
jamming : (எந்.) வானொலி இடையீடு : வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்தில் செயலாற்றுவதன் மூலம் செய்திகளைத் தெளிவற்றதாக்குதல்
jam nut : (எந்.) : நெருக்கு மறையாணி: இது பூட்டு மறையாணி போன்றது
jam plate : (பட்.) நெருக்குத் தகடு : திருகுத் தகட்டுக்குரிய பழைய பெயர். இதில் திருகிழைகள் வெட்டப்படாமல் நசுக்கி ஏற்படுத்தப்பட்டிருக்கும் japan : திண்சாயம் : திண்ணிய சாய எண்ணெய்
japan drier : ஜப்பானிய உலர்த்தி : லினோலெனிக் அமிலத்தின் (C17 H29 HCO2, H), ஒர் உப்புப் பொருளாகிய லினோலியேட் அல்லது ஈய அல்லது மாங்கனீஸ் பிசின் பொருள்களை கற்பூரத் தைலம் அல்லது பென்சின் திரவத்தில் கரைத்துக் கிடைக்கும் சாயப் பொருள். விரைவில் உலர்வதற்காகச் சாயப் பொருட்களுடன் சேர்க்கப்படுகிறது
japanning : (வண்.சாய.) மெருகு வேலைப்பாடு : மரம் அல்லது உலோகப் பொருள்களில் கெட்டியான மெருகெண்ணெயை மேற் பூச்சுப் பூசி கறுப்பாகவும் பளபளப்பாகவும் ஆக்குதல். மரங்களில் குறைந்த வெப்பத்தில் பூசலாம். உலோகத்தில் 300-400°F வெப்ப நிலையில் பூசப்படுகிறது
iardiniere:(அ.க.) பூங்குடுவை : மரத்தாலோ, மண்ணாலோ, உலோகத்தாலோ செய்யப்பட்ட அழகுப் பூங்குடுவை மலர்த் தொட்டி
jarno taper : (எந்.) ஜார்னோ கூம்பு : ஒரடி 1/2" கூம்பு உள்ள இந்தக் கூம்பு எந்திரக் கருவிகளில் பயன்படும் கூம்புத் தமருசிகள், குதை குழிகள், எந்திரத் தண்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது
jarring machine : (வார்.) முரணியக்க வார்ப்புப் பொறி : முரண் பட்ட இயக்கத்தின் மூலம் வார்ப்படங்களை அடித்து இறுகுவதற்குப் பயன்படும் ஒருவகை வார்ப்பட எந்திரம். இதனை 'குலுக்கு எந்திரம்' என்றும் கூறுவர்
jaundice : (நோயி.) மஞ்சள்காமாலை நோய் : இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் அல்லது சிவப்பு இரத்த உயிரணுக்கள் உடைவதால் உண்டாகும் நோய். இதனால் தோல் மஞ்சள் நிறமாகும்
jaw chuck : தாடை இடுக்கி : கடைசல் எந்திரத்தில் உள்ள ஒரு இடுக்கி. இதில் வேண்டியவாறு நகர்த்தக் கூடிய தாடைகளுடன் ஒரு முகப்புத் தகடு அமைந்திருக்கும். இதில் உள்ள தாடைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ நகர்த்தலாம்
jenson : (அச்சு.) ஜென்சன் அச்செழுத்து : இது ஒருவகை அச்செழுத்து. இதனை முதல் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சு அச்சுக் கலைஞர் புகுத்தினார். அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது
jet தாரை : (1) பீற்றுக் குழாய் நுனி
(2) பீற்றுப் பொருள்
jet aircraft : (வானூ.) தாரை விமானம் : ஒரிரு தாரை எஞ்சின்கள் மூலம் பீற்று விசை பெற்று இயங்கும் விமானம் அல்லது வான்கலம்
jetavator : (விண்.) தாரைத் திசை மாற்றி : ராக்கெட்டின் தாரையோட்டத்தினுள் அல்லது அதற்கு எதிராக இயங்கும்படி செய்யக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுச் சாதனம். இது, தாரை ஓட்டத்தின் திசையை மாற்றுவதற்குப் பயன்படுகிறது
jet engine : (வானூ.) தாரை எந்திரம் : வாயுவை அல்லது பாய்மரத்தைத் தாரையாகப் பீற்றி வெளிப்படுத்தும் எந்திரம். இதன் பீற்று விசையால் விமானம் முன்னே செலுத்தப்படுகிறது
jet moulding : (குழை.) தாரை வார்ப்படம் : வெப்பமூட்டப்பெற்ற நிலையில் உருக் கொடுக் கப்படும் பொருளுக்கான தொடர்ச்சியான வார்ப்படச் செயற்பாட்டு முறை. இதில், அமைப்பான உட்செலுத்தப்படுவதற்கு முன்னர் சூடாக்கப்பட்டு, அதன் வெப்பம் சீரான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது
jet propulsion : (வானூ) (தாரை முற்செலுத்தம்) : எண்ணெயுடன் காற்றைக் கலக்கும்படி செய்து தீ மூட்டி, சூடான எரிந்த வாயுக்களைப் பின்புறமாக அனுப்பி, விமானத்தின் முன்புள்ள காற்றை உறிஞ்சுவதன் மூலம் விமானத்தை முன்னே செலுத்தும் உந்து விசை, இதில் பயன்படும் எஞ்சின் முழுவதும் தாரை எஞ்சின்
jet steering : (விண்) தாரை இயக்கி : (விண்.) விண் வெளிக் கலத்தைத் தேவையான வளை வீச்சு நெறியில் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் நிலையான அல்லது அசையும் தாரைகள்
jet stream : (விண்.) தாரை ஒழுக்கு : ஒரு தாரை எஞ்சினிலிருந்து அல்லது ராக்கெட் மின்னோடியிலிருந்து உள்ளெரிதல் மூலம் வெளிப்படும் வாயு அல்லது திரவத் தாரை ஒழுக்கு
jetty : அணைகரை : துறை முகத்தை அல்லது கடற்கரையைப் பாதுகாப்பதற்கு, நீரோட்டத்தின் திசையைத் திருப்புவதற்கென நீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கல்லால் அல்லது மரத்தால் அமைக்கப்படும் கட்டுமானம்
jewelers saw : பொற்கொல்லர் இரம்பம் : உலோகங்களை அறுப்பதற்குப் போதிய வலுவுடன் பற்கள் கொண்ட இரம்பம்
jeweling : அணிமணி ஒப்பனை : ஒரு மேற்பரப்பில் அணிமணிகளை ஒத்திருக்குமாறு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல்
jewel bearing : (மின்.) மின்மணிக்கல் தாங்கி : கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகளில் தாங்கிகளாகப் பயன்படுத்தப்படும் மணிக்கற்கள்
jib : (எந்.) (1) பாரந்துக்கிக் கை : பாரந்துக்கியில் ஆடிக்கொண் டிருக்கும் கை போன்ற கருவி
(2) முக்கோணப் பாய் : கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப் பாய்
jib crane : கை ஓந்தி : ஊசலாடும் உந்து கட்டை அல்லது கை போன்ற கருவியுடைய ஒரு பாரந் தூக்கி
jig : (எந்.) பிடிகருவி : கைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்
jig boring : (எந்.) தவ்வித்து அகழ்தல் : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை ஒரு பிடி கருவியால் பிடித்துக் கொண்டு, அந்தப் பிடி கருவியின் ஒரு பகுதியினைச் செலுத்தி அக்ழ்வு செய்தல்.இது துரப்பணத்தால் செய்யப்படும் பணியிலிருந்து வேறுபட்டது
jig bushing : (எந்.) தவ்வி உழல்வாய் : துரப்பணங்களைச் செலுத்துவதற்கு ஒரு பிடி கருவியின் முகப்பில் செருகப்பட்டுள்ள கடின எஃகினாலான உழல்வாய்
Jig drill : (பட்.) துரப்பணத் தவ்வி : துரப்பண வேலையின்போது பிடித்துக் கொள்வதற்காக அழல் வாய்கள் கொண்ட ஒரு சாதனம். இந்த அழல் வாயின் வழியாக துரப்பணம் செய்யப்பட்டு துரப்பணம் செய்யப்படும் பொருளில் துளைகள் துல்லியமாக அமையுமாறு செய்யப்படுகிறது
Jigger : (எந்.) ஏற்றி இறக்குக் கருவி : ஒர் இரட்டைக் கம்பியும் கயிற்றோடு கூடிய ஏற்றி இறக்கும் கருவி அமைவு
Jig saw : (மர.) திருகுவாள் : எந்த வடிவத்தையும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக்கூர்வாள்பொறி
Jimmy : குறுங்கடப்பாறை : நெம்பு கோலாகப் பயன்படும் கடை வளைந்த குறுகிய இரும்புக் கடப்பாறை
job shop : பணிப்பட்டறை : தரமான உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அல்லாமல் அவ்வப்போது தனித்தனிப் பணிகளைச் செய்து கொடுக்கும் பணிப்பட்டறை
job ticket : (அச்சு.) பணிக்குறிப்புகள் : அச்சுப் பணி தொடர்பான திட்டவட்டமான அறிவுறுத்தங்கள், இது தனிப்படிவத்தில் குறியீடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்
job type : (அச்சு.) சிறுபணி அச்செழுத்து : சிறுசிறு அச்சுப் பணிகளுக்கெனப் பயன்படும் அச்செழுத்துகள்
Job work : (அச்சு.) சிறுபணி : இடையிடையே செய்து கொடுக் கப்படும் பல்வேறு சில்லறை அச்சுப்பணி
joggle : (க.க.) அண்டைப் பொருத்து : (1) அண்டையிலுள்ள இரு கட்டுமானப் பகுதிகளைப் பிணைக்கும் இணைப்பு
(2) முட்டுப் பொருத்துக்கான ஒரு பக்கக் குடைவு
(3) இணைப் பொருத்துக்கான இடைத் துணுக்கு
joiner : சிறு தச்சர் : பட்டறைகளில் சிறுசிறு தச்சுவேலைகளை - குறிப்பாக இணைப்பு வேலைகளைச் செய்பவர்
joinery : சிறு தச்சு வேலை : வீட்டுத் தட்டுமுட்டுச் செப்பம் செய்யும் சிறுதிறத் தச்சுத்தொழில்
Joint : (பட்) பொருத்துதல் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களை தச்சு வினைஞர் தமக்குத் தெரிந்த முறைகளில் ஒன்றின் மூலம் பொருத்தி இணைத்தல்
jointer : (க.க ) கொல்லறு : சாந்து கலப்பதற்குக் கொத்தனார்கள் பயன்படுத்தும் தட்டையான எஃகுக் கருவி
(2) இழைப்புளி : தச்சுவினைஞர்கள் மரத்தை இழைப்பதற்குப் பயன்படுத்தும் இழைப்புளி
jointer plane : இணைப்பு இழைப்புளி : எல்லா வகையான இழைப்பு வேலைகளையும் செய்வதற்குப் பயன்படும் மரக்கருவிகள் பொருத்தப்பட்ட இழைப்புளி
jointing : பொருத்திணைப்பு : பொருத்துகளை இடையிடையே சாந்திட்டுப் பூசி இணைத்தல்
joint runner : (கம்.) பொருத்துப்பொதிவு : மணியின் ஈயப் பொருத்துகளில் ஈயத்தை இருத்தி வைத்துக் கொள்வதற்கென்ப் பயன்படுத்தப்படும் தீப்பற்றாத தன்மையுடைய பொதிவு
joint stool : (அ.க.) மனை : தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மனை
joint universal : (பட்.) பொதுநிலை மூட்டு : எந்தத் திசையிலும் இயங்கி, நேரியக்கத்திற்கு இடமளிக்கக் கூடிய சுழல் தண்டு இணைப்பு. இது, 45° வரையில் எந்தக் கோணத்திலும் விசையினை அனுப்பும்
joist: (க.க.) துலாக் கட்டை : சுவருக்குச் சுவராக இடும் தளக் குறுக்குக் கட்டை
jolt-ramming machine:(வார்.)குலுக்கு வார்ப்படப் பொறி ; இலேசானது முதல் மிகக் கனமானது வரையிலான எல்லா வகை வேலைகளுக்கும் ஏற்ற ஒரு வார்ப்பட எந்திரம். காற்றழுத்தம் மூலம் உயர்த் இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது தப்படும் ஒரு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள வார்ப்புக் கலம் கீழே விழுந்து அந்த வேகத்தில் மணலை நிரப்பிக் கொள்கிறது
jordan engine : தாள் மெருகுப் பொறி : தாள் தயாரிப்பதில், தாள் இழைகளின் நீளத்தை ஒழுங்கு படுத்தி, கலக்கும் கருவியிலிருந்து வரும் காகிதத்தில் கரணைகள் ஏற்படாமல் செய்யும் பொறியமைவு
joule: (மின்.) ஜூல் : மின்னாற்ற லின் நடைமுறை அலகு
joule, james prescott (1818-1889): (மின்னி .) யூல், ஜேம்ஸ் பிரஸ்காட் (1818-1889) : ஆங்கிலேய விஞ்ஞானி. சாராயம் காய்ச்சுபவராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, மின்னியலில் ஆர்வங்கொண்டு, பல அடிப்படைக் கண்டுபிடிப்பு களைச் செய்தார். வேலை ஊக்க ஆற்றலின் அலகினைக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்றவர்
journal : (எந்.) இருசுக் கடை : தேய்வுருளைகளுடன் இணையும் ஊடச்சின் பகுதி
journal box : (எந்.) இருசுப் பெட்டி : தாங்கி அல்லது இருசு உள்ள ஒரு பெட்டி
journey man: கைவினைஞர்: ஒரு தொழிலில் முழு தேர்ச்சி பெற்றுள்ளவரும் ,மற்றொருவருக்காக வேலை செய்பவருமான கைவினைஞர்
joyner: அறைகலன் தச்சர்; அறைகலன்கள் செய்திடும் சிறு தச்சு வேலை செய்பவர்
jumper : (மின்) இணைப்புக் கயிறு: குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது கம்பி
jump spark :(மின்.எந்) தாவு மின் பொறி: மின்பொறியூட்டும் இணைப்புகளிடையில் உள்ளது போன்று, நிலையான மின்முனை இடைவெளியின் குறுக்கே மின்விசை தாவிக்குதித்து உண்டாக்கும் பொறியமைவு
junction: சந்திப்பு ; இணைப்பு: இணைப்பிடம்; கூடுமிடம், இணைப்பு
junction box : (மின்.) சந்திப்பெட்டி : பல மின்கம்பிக் காப்புக் குழாய்கள் நுழைந்து, மின்கடத்திகள் புரியிணைவு செய்யப்படும் ஓர் உலோகப்பொடி
junction diode :(மின்) இணைப்பு இருமுனையம்: ஒரே திசையில் செல்லும் மின்னோட்டப் பண்புகளுடைய ஓர் இணைப்பு இரு முனையம்
justification : (அச்சு) அச்சு வரிச் சரிக்கட்டு; அச்சுக்கலையில் ஒரு கலையில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் பொருந்துமாறு சரிக்கட்டுதல்
'jute board :(நூ.க) சணல் அட்டை: சணல் நாரினால் செய்யப்பட்ட இலேசான, ஆனால் வலுவுடைய அட்டை. நெகிழ்வுப்பொருள்களை விறைப்பாககுவதற்குப் பயன்படுகிறது
jute bristol : சணல் அட்டைப் பலகை : படம் வரைவதற்குப் பயன்படும், சணல் நாரினாலான அட்டைப்பலகை
jute fiber : சணல் இழை :இந்தியாவில் பயிராகும் சணல் செடியிலிருந்து கிடைக்கும் நாரிழை. இந்தச் செடி 25-38 செ.மீ வரை வளரும்.இதிலிருந்து 10-20செ.மீ.நீளமுடைய இழைகள் தயாரிக்கப்படுகின்றன. கரடு முரடான திரைச்சீலைகள், சேணவரிக் கச்சைகள், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது
jute Manila: (தாள்.)சணல் தாள்: சிப்பங் கட்டுவதற்குப் பயன்படும் மண்ணிறமான தாள்kaolin : பீங்கான் களிமன் : பீங்கான் செய்வதற்கேற்ற மென்மையான களிமண்.இதனைச் "சீனாக் களிமண்" என்றும் கூறுவர். சிலிக்கா, அலுமினா ஆகிய பொருள்களை நீருடன் கலந்து வேதியியல் வினை புரியச் செய்வதன் மூலம் இது கிடைக்கிறது. பீங்கான் கலங்கள், ஓடுகள் முதலியன செய்யப் பயன்படுகிறது
kapok : இலவம் பஞ்சு : மிகச் சிறந்த மென்மையான பஞ்சு மெத்தைகள், தலையணைகள் தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது
karat : பொன் மாற்று அளவு : தங்கத்தின் தூய்மையினைக் குறித்துரைப்பதற்கான மாற்று அலகு. தூய்மையான தங்கம் 24 மாற்று உடையது. உலோகக் கலவையாக 14 மாற்று (14/24), 10 மாற்று (10/24) என்ற அளவுகளிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது
katabolism : (உட.) ஊன்மச் சிதைவு : உடலிலுள்ள சிக்கலான உயிர்ச்சத்துப் எtயாற்றல் உண்டாதல்
katathermo meter : குளிர்ச்சி அளவு மானி : காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி
kauri gum : நறுமணப் பிசின் : நியூசிலாந்தின் பெருமளவிலுள்ள ஒரு வகை ஊசியிலை மரத்திலிருந்து கிடைக்கும் நறுமணப் பிசின், வண்ணச் சாயங்கள் தயாரிப்பதற்குப் பெருமளவில் பயன்படுகிறது
keep down : (அச்சு.) சிறிய எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவ அச்சு எழுத்துக்களை இயன்ற அளவு மிகுதியாகப் பயன்படுத்துதல்
keeper : (மின்.) காந்த முனைத் தேனிரும்பு : குதிரை இலாட நிரந்தரக் காந்தம். காந்த ஆற்றலை இழந்து விடாமல் தடுப்பதற்காக இரு துருவங்களின் குறுக்கே வைக்கப்படும் தேனிரும்புச் சலாகை
keep in : (மின்.) செறிவு எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் அச்சு எழுத்துக்களை இடைவெளியின்றி நெருக்கியடுக்குதல் அல்லது குறுக்குதல்
keeps test for hardness of metals : உலோகக் கடினத்தன்மைச் சோதனை : உலோகங்களின் கடினத் தன்மையைச் சோதிப்பதற்கான ஒரு வகைச் சோதனை. சோதனை செய்யப்பட வேண்டிய உலோகத் துண்டினைத் துளைப்பதற்கு ஓர் எஃகுத் துரப்பணம் எத்தனை முறை சுழல்கிறது என்பதைக் கொண்டு கடினத்தன்மை அளவிடப்படுகிறது
keep up : (அச்சு.) முதன்மை எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் ஆங்கில எழுத்து வடிவின் பெரிய சிறப்பு முறையான முதன்மை உருவ எழுத்துகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்
kelvin : கெல்வின் : வெப்பத்தின் மூலம் ஒளியை அளவிடுவதற்கான ஒருமுறை. வண்ண ஒளிப்படத்திற்கான ஒளியின் அளவு 32௦௦௦ கெல்வின் இருக்க வேண்டும். தொலைக்காட்சிப் படப்பிடிப்பு நிலையங்களில் பொதுவாக ஒளியின் அளவு 3200கெல்வினுக்கு அதிகமாக இருக்கும்
kemp : (நூற்.) முரட்டுக் கம்பளி : சாயம் எளிதில் பிடிக்காத முரட்டுக் கம்பளி மயிர்
kennedy key : (எந்.) கென்னடி இருசாணி : இரண்டு சதுர வடிவ இருசாணிகள். அவற்றின் மூல விட்ட முனைகள் துளையின் பரிதியில் குறுக்கே வெட்டும் வகையில் அமைக்கப்படுதல். மிகக் கனமாக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது
kepler's laws : (இயற்.) கெப்ளர் விதிகள் : கோளங்களின் இயக்கம் தொடர்பான மூன்று கணித விதிகள்: (1) ஒரு கோளம், சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் இயங்குகிறது; (2) கோளத்திலிருந்து சூரியனுக்குள்ள கோடு, சமகாலத்தில் சமபரப்பளவினை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டு: கோளம், 'A'-லிருந்து B-க்கும், B-லிருந்து C-க்கும், C-லிருந்து D-க்கும் சமகாலத்தில் செல்கிறது என்றால், SAB, SBC, SCD சமமானவை. (3) ஒரு சுற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம், சூரியனிலிருந்து சராசரி தூரத்திற்கு வீத அளவில் இருக்கும்
kerf : இரம்பப் பிளவு : இரம்பத்தினால் அறுப்பதால் ஏற்படும் பிளவு
kerfing : இரம்ப வரிப்பள்ளம் : ஒரு பலகையின் குறுக்கே. அதனை எளிதாக வளைப்பதற்காக இரம்பத்தினால் அறுத்து வரிப்பள்ளங்கள் உண்டாக்குதல். இந்த வரிப்பள்ளங்கள் பலகையின் கனத்தில் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஏற்படுத்தப்படுகின்றன
kerite : கெரைட் : தார் (கீல்) அல்லது புகைக்கீல், விலங்கு அல்லது தாவர எண்ணெய் கலந்து, மின் பாயாமல் காப்பிடுவதற்குக் கந்தகம் தலந்து வலுவூட்டிய ஒரு கலவைப் பொருள். இது ரப்பருக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது
kerosene : (வேதி.) மண்ணெண்ணெய் : (1) எரிக்கவும், விளக்கேற்றவும் பயன்படும் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் (2) கச்சாப் பெட்ரோலியத்திலிருந்து வடித்திறக்கப்பட்ட வடி நீர்மம். வீத எடைமானம். .7850; வெப்ப நிலை 110°F-க்கு மேல்; எரிநிலை 125°F-க்கு மேல்
key : (எந்.) ஆப்பு இருசாணி : ஆப்புவடிவ இரும்பு அல்லது எஃகு வார்ப்பட்டை. சக்கரங்கள் அவற்றின் அச்சாணிகளில் கழன்று விழுந்துவிடாமல் தடுக்க உதவுகிறது. இது பல வகைகளிலும் வடிவளவுகளிலும் உள்ளது
keyboard : (அச்சு.) விரற்கட்டைப் பட்டை : அச்சு வார்ப்புருவை ஒருங்கிணைப்பதற்கு இடமளிக்கும் ஓர் இயக்க முறையினைக் கட்டுப்படுத்துகிற விரற்கட்டைப் பட்டை அமைப்பு. இதுபோன்ற அமைப்பு வரிவாரி உருக்கச்சுப் பொறியிலும், எழுத்துவாரி உருக்கச்சுப் பொறியிலும் உள்ளன
key. center : (பட்.) மையத் திருப்பாணி : கூம்புவடிவில் உள்ள தட்டையான எஃகுத் துண்டு. துரப் பணக் கதிரிலிருந்து கூம்பு தண்டுத் துரப்பணங்களை அகற்றுவதற்குப் பயன்படுகிறது
key drawing : (அச்சு.) வழிகாட்டு வரைபடம் : செதுக்கு வேலைப்பாடு செய்பவருக்கு அறிவுறுத்தங்கள் அடங்கிய ஒரு வரைதாள் keyed mortise and tenon : துளைப்பொருத்து மற்றும் பொருத்து முளை : நீட்டிய பொருத்து முளையுடைய ஒரு மூட்டு. இது மூட்டினை இறுக்குவதற்குப் பயன்படும் ஆப்பு இருசாணியை ஏற்கத் துளையிடப்பட்டிருக்கும்
keyhole caliper : (பட்.) பூட்டுத்துளை வடிவ விட்டமானி : ஒரு கால்
நேராகவும், இன்னொரு கால் வளைந்தும் இருக்கும் ஒரு விட்டமானி
keyhose saw : பூட்டுத் துளை வடிவ இரம்பம் : பூட்டுத்துளைகள், சித்திர அறுப்பு வேலைகள் முதலிய வற்றுக்குப் பயன்படும் சிறிய கூம்பு வடிவ அலகுடைய இரம்பம்
key light: ஆதார விளக்கு : பொது வான விளக்கு வசதி
key plate : பூட்டுத்துளைத் தகடு : பூட்டுத் துளைக்குச் கவசமாக அமைக்கப்படும் சிறிய உலோகத் தகடு. இது மற்ற உலோகப் பகுதிகளின் வடிவமைப்புக்கு ஏற்புடையதாக இருக்கும்
key seat : (எந்.) ஆதார பீடம் : எந்திரத்தின் சுழல் தண்டில் அல்லது வண்டிச் சக்கரக் குடத்தில் இருசாணியை ஏற்பதற்கென உள்ள உட்புழை வரிப்பள்ளம் அல்லது இடைவெளி
key seat rule : (பட்.) ஆதாரபீட வரைகோல் : ஆதார பீடங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வரைகோல்
keystone : மையக்கல் : ஒரு வளைவு முகட்டில் மற்ற உறுப்புகளை ஒருங்கிணைக்கும் முகட்டுக்கல்
keystone distortion : (மின்.) கோடகத் திரிபு : தொலைக்காட்சியில் படம் கோடக வடிவில் இருக்குமாறு திரிபடைதல்
keystoning : ஒருங்கிணை முனைப்பு : தொலைக்காட்சியில், குறுகிய குவிமையத் தூரம் காரணமாக இணைகோடுகள் ஒருங்குகூட முனையும் போக்கு
keyway : (எந். ) சாவி வழி : ஏதேனுமொன்றைக் கட்டிப் பிணைப்பதற்காக சாவி நுழைக் கப்படும் வரிப்பள்ளம். வணரி, பல்லிணை, தப்பி சுழல்தண்டு போன்றவற்றில் இது அமைந்திருக்கும்
kick : மிகையொளி : பளபளப்பான பரப்பின் மீதான ஒளி. ஆதாரத்திலிருந்து பிரதிபலிப்பதால் உண்டாகும் தேவையில்லாத மிகை ஒளி
kick plate : (க.க.) உதைவிசைத் தகடு : மெருகுப் பூச்சு குலையாமல் தடுப்பதற்காக ஒரு கதவின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள உலோகத்தகடு
kid finish : தோல் மெருகு : பதனிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டித் தோலினைப்போல் தோற்றமளிக்கும் வகையில் மெருகு வேலைப்பாடு செய்யப்பட்டுள்ள காகிதம் அல்லது அட்டை
kill : (அச்சு.) அச்செழுத்து அழிப்பு : அச்சுக்கோப்பு செய்த எழுத்துப் பகுதியை ஒதுக்கிவிடுதல் அல்லது அழித்து விடுதல் அல்லது பயன்படுத்த வேண்டாமெனக் குறித்தல்
killed steel : (உலோ.) செறிவற்ற எஃகு : சட்டுவத்தில் அல்லது உலையிலுள்ள உருக்கிய எஃகு உருகிய எஃகிலுள்ள வாயுக்கள் அனைத்தும் அதிலிருந்து நீங்கும் வரை இந்நிலையில் வைக்கப்பட்டிருக்கும்
kiln : காளவாய் சூளை : சுண்ணாம்புக் காளவாய்; செங்கற் சூளை; சூட்டடுப்பு அல்லது உலை
kiln-dried : (மர.வே.) உலை உலர்த்து வெட்டு மரம் : உலையில் அல்லது உலர்த்து அறையில் வைத்து உலர்த்தப்பட்ட வெட்டு மரங்கள்
kilo : கிலோ : மெட்ரிக் முறையில் ஆயிரத்தைக் குறிக்கும் சொல்; கிலோ கிராம் என்பதன் சுருக்கம்
kilocycle : (மின்.) ஆயிரவிசை விரையதிர்வலகு : வானொலியில் ஒரு வினாடிக்கு ஆயிர விசை விரையதிர்வலகு
kilogram : (மின்.) கிலோ கிராம் : மெட்ரிக் முறையில் எடையலகு ஆயிரம் கிராம் எடை; 2 204 பவுண்டுக்குச் சமமான எடை
kilometer : கிலோ மீட்டர் : மெட்ரிக் முறையில் நீளத்தின் பேரலகு. ஆயிரம் மீட்டர் நீளம் 3280 அடி 10 அங் அல்லது .62137 மைல்
kilo-volt ampere : (மின்.) கிலோ ஓல்ட் ஆம்பியர் : ஓராயிரம் ஒல்ட்-ஆம்பியர்கள்
kilowatt : (மின்.) கிலோவாட் :ஆயிரம் மின் பேரலகு (ஆயிரம் வாட்டுகள்)
kilo-watt hour : (மின்.) கிலோவாட் மணி : ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோவாட் மின்விசை செய்து முடிக்கும் வேலையளவு. மின்னாற்றலின் விலையினைக் கணக்கிடுவதற்கான அலகு
kindling temperature : (வேதி.) எரியூட்டு வெப்ப நிலை : ஒரு பொருள் தீப்பற்றுவதற்கான வெப்பநிலை
kinescope : (மின்.) படக்குழல் : தொலைக்காட்சிப் பெட்டியில் படம் உருவாகச் செய்யும் குழல். இதனைப் 'படக்குழல்' என்றும் கூறுவர்
kinematics : (இயற்.) இயக்கவியல் : ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம் சார்ந்த ஆய்வியல்
kinescope : திரை நோக்காடி : தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், கட்டுப்பாட்டு அறைகளிலுள்ள செய்தி அறிவிப்பான்களிலும் பயன்படுத்தப்படும் எதிர்மின் கதிர் அல்லது படக்குழாய்
kinetic : (பொறி.) இயக்கவினை : இயக்கத்தின் விளைவான வினை. இது உள்ளார்ந்த ஆற்றலுக்கு எதிர்மாறானது
kinetic energy : (பொறி.) இயங்காற்றல் : நகரும் பொருள் அதன் இயக்கத்தின் காரணமாகப் பெறும் ஆற்றல்
kinetic energy : (இயற்).) இயங்காற்றல் : ஓர் அசையும் பொருளின் இயக்கம் காரணமாக அந்தப் பொருள் கொண்டிருக்கும் ஆற்றல்
kinetic theory of gases : (இயற்.) வாயு இயக்கக் கோட்பாடு : நுண்துகள்களின் இயக்கத்தினாலேயே வாயுநிலை தோன்றுகிறது என்னும் கோட்பாடு
kinetic theory of heat : (இயற்.) வெப்ப இயக்கக் கோட்பாடு : நுண்துகள்களின் இயக்கத்தினாலேயே வெப்பம் உண்டாகிறது என்னும் கோட்பாடு
kinetics : (இயற்.) இயக்கத் தாக்கியல் : பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற் படுகிற ஆற்றல் தாக்கங்களுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்
kingpin : (தானி. எந்.) முதன்மைப் பெருமுளை : இது எஃகினாலான ஒரு முளை அல்லது தண்டு. இது கடினமானதாகவும் வேண்டிய வடிவளவுக்குத் தேய்த்து உருவாக்கப்பட்டதாகவும் இருக்கும். அச்சுத்தண்டுடன் இயக்கு இணைப்புக்கோலினை இணைத்துத் தாங்கி நிற்பதற்கு இது பயன்படுகிறது. இது முன்புறச் சக்கரங்கள் இடமும் வலமும் தாராளமாக இடமளிக்கிறது
king post : (க.க.) நடுமரம் :கூரைச் சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரை மேலெழும்பும் கம்பம்
kink :' (பட்.) கோட்டம் : அடிப்பதால் அல்லது அழுத்துவதால் உலோகத் துண்டில் உண்டாக்கப்படும் வளைவு அல்லது கோணம்
kip : (பொறி.) கீப் : பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும், ஓராயிரம் பவுண்டு எடையைக் குறிக்கும் சொல்
kirchhoff's law of voltages : (மின்.) கிர்ச்சாஃப் மின்னழுத்த விதி : "ஓர் எளிய மின்சுற்று வழியில், ஒரு மின்சுற்றுவழியைச் சுற்றியுள்ள மின்னழுத்தங்களின் இயற் கணிதக் கூட்டுத்தொகை பூச்சியம்" என்னும் விதி
kit : கருவிப் பெட்டி : தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்திருக்கும் பெட்டி
kite ballon : (வானூ.) வேவுக் கூண்டு : படைத்துறையினர் வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தும் பறக்கும் கூண்டு
kin dry : (மர.) வெப்ப உலர்த்தல் : வெட்டு மரங்களைச் செயற்கையாகப் பக்குவப்படுத்தும் முறை. இதில் வெட்டு மரத்தை ஒரு நீராவி அறையில் இட்டு ஒரே மாதிரியாகப் பூரிதமாக்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வெப்பத்தின் மூலம் உலர்த்துதல்
knee : (1) முழங்கால் மூட்டு : வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்ற அமைப்பு (2) இறுக்குத் துண்டு : அச்சுத் துறையில் அச்சுக்கோப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் எந்த அளவுக்கும் அச்செழுத்துக்களை அடுக்கி அடக்குவதற்குப் பயன்பட வேண்டியவாறு அமைத்திடக் கூடிய இறுக்குத் துண்டு
knee-action wheels : (தானி.) கீல் மூட்டுச் சக்கரங்கள் : உந்து ஊர்திகளில் தனித்தியங்குகிற முன் சக்கரங்கள். இதில்,மனிதன் முழங்கால் முட்டினைப் போல் இயங்குமாறு சக்கரங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்
kneeler : திசைமாற்றுக் கல் : திசை மாற்றத்திற்கு வழி செய்யும் வகையில் வெட்டப்பட்ட கல்
knife : கத்தி : வெட்டு முனையுள்ள கைப்பிடி பொருத்தப்பட்ட ஒரு வெட்டுக் கருவி
knife-blade fuse : (மின்.) கத்திமுனை உருகி : ஒரு கத்தி முனை விசையின் அலகுகள் போன்ற வடிவுடைய நுனி இணைப்புகள் கொண்ட ஓர் உருகி
knife switch : (மின்.) கத்தி முனை விசை : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சமதளப் பரப்பு கிளிடையே அல்லது தொடர்பு அலகுகளிடையேயுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளின் தொடர்பு மூலமாக ஒரு மின் சுற்றுவழியை முற்றுவிக் கவும் துண்டிக்கவும் பயன்படும் மின் விசை
knob : (மின்.) குமிழ் கைபிடி : (1) மின்கடத்திகளை அதனதன் நிலைகளில் பிடித்து வைத்துக் கொள் வதற்கான ஒரு பீங்கான் சாதனம் (2) ஒரு வகைக் கைப்பிடி
knob turning : குமிழ் கடைசல் : குமிழ் அல்லது உருண்டை வடிவக் கடைசல்
knock : (எந்.) இடிமானம் : உறுப்புகளைத் தளர்வாக பொருத்துவதன் விளைவாக உண்டாகும் அதிர்வு அல்லது இடிமானம்
knocked down : எந்திரப் பகுப்பு : எந்திரத்தின் உறுப்புதளை எளிதாக எடுத்துச் செல்வதற்காகத் தனித்தனியாகப் பிரித்தெடுத்தல்
knocking : (தானி.) உள்வெடிப் பொலி : (1) உந்து தண்டுகள் உந்து தண்டு இருசாணிகள், இணைப்புச் சலாதைகள், பிரதானத் தாங்கிகள் ஆகியவை தேய்வுறுவதால் அல்லது அவற்றைத் சீராகப் பொருத்தாதிருப்புதால் உண்டாகும் உள்வெடிப்பொலிகள் (2) நீள் உருளையிலுள்ள எரிபொருள் சீரற்ற நேரத்தகவின்மையால் உரிய நேரத்திற்கு முன்னதாகவே வெடிப்பதால் எஞ்சினுள் ஏற்படும் ஒலிகள் (3) சிலவகைக் கார்பன் வெடிப்பதால் அல்லது வெப்பத்தினால் எஞ்சினில் உண்டாகும் ஒலி
knot : (1) நெருகு : அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுப் கெட்டியான திரட்சி (2) கடல் கீட்டலகு : 1852 மீட்டர் நீளங்கொண்ட கடல் துறை நீட்டலளவை அலகு
knotting : (வண்.) நெருகு வண்ணம் : புடைப்புகள் வெளியில் தெரியாதபடி மறைப்பதற்கு வண்ணப் பூச்சாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கலவை. அவலரக்கு, சிவப்பு ஈயக்கலவை, வச்சிரப்பசை ஆகியவை இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
knuckle joint : (எந்.) முட்டி இணைப்பு : ஒரு சலாகையின் முனையிலுள்ள துளையில் மற்றொரு சலாகையின் கவர் முனையைப் பொருத்தி ஓர் இணைப்பு இரு சாணியால் இணைத்தல்
knurl : திருப்புக்குமிழ் : தட்டச்சுப் பொறியில் அச்செழுத்துத்தாள் தகட்டைத் திருப்பும் குமிழ்
koa : (மர.) கோவா மரம் : ஹவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் மரம். இதன் எடை ஒரு அடிக்கு 24 கிலோ இளம் பழுப்பு நிறமுடையது. குறுக்கே அலை அலையாகப் பட்டைகள் இருக்கும். அறைகலன்கள், இசைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
koko : (தாவ.) கோகோ மரம் : இதனைக்கிழக்கு இந்திய வாதுமை மரம் என்றும் கூறுவர். இது சொர சொரப்பான கரண் உடையது; கடினமானது; எளிதில் உடையக் கூடியது. ஒரு கன அடியின் எடை 24 கிலோ நிறமும், கரணும் கருத்த சீமை நூக்கு போன்றது. வானொலிப் பெட்டிகள் செய்யப் பயன்படுகிறது
kraft board : (தாள்.) மரக்கூழ் அட்டை : வெண்மையாக்கப்படாத சல்பேட் கூழ் அல்லது மரக்கூழ் கொண்டு தயாரித்த வலுவான் அட்டை
kraft paper : (தாள்.) முரட்டுக்காகிதம் : சிப்பங்கட்டுவதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் வலுவான பழுப்புநிறக் காகிதம் kraft pulp : மரக் கூழ் : தேவதாரு, ஊசியிலை மரங்களிலிருந்து சல்ஃபேட் முறை மூலமாகத் தயாரிக்கப்படும் திண்ணிய மரக் கூழ்
kyanize : மரக் காப்புப் பூச்சு : மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் வகையில் பாதரசக் குளோரைடுக் கரைசலை பூசுதல்
kyans process : (மர.) கியான்ஸ் முறை : பாதரசப் பைகுளோரைடு மூலம் வெட்டு மரங்கள் உளுத்துப் போகாமல் பாதுகாக்கும் முறை
kymograph : (வானூ.) ஒலியழுத்த அளவி : ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யும் கருவிL-head engine: (தானி.எந்.) 'எல்' வடிவத் தலை எஞ்சின்: தலைப் பகுதி ஆங்கில எழுத்து 'L' வடிவில் அமைந்துள்ள ஓர் எஞ்சின்
lable : (க.க.) வடிதாரை: ஒரு சுவரிலுள்ள இடைவெளிக்கு மேலாக நீட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் கட்டமைவு
table paper: குறிப்புச் சீட்டுத் தாள்: அடையாளத் துண்டுக் குறிப்புச் சீட்டுகள் தயாரிப்பதற்குப் போதிய வடிவளவில் வெட்டப்பட்ட தாள்
laboratory: ஆய்வுக்கூடம்: அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வு களைச் செய்வதற்கான செய்முறைச்சாலை
laboratory assistant: ஆய்வுகூட உதவியாளர்: ஆய்வுக்கூடத்தில் பொருள்களை வழக்கமான் முறையில் சோதனை செய்யும் ஓர் இளநிலைப் பொறியாளர்
labour saving:(அச்சு.) உழைப்புச்சுருக்கப் பொருள்: உழைப்பினைச் சுருக்கி, கால விரயத்தைக் குறைக்கும் அச்சுப் பொருள்
labyrinth: (உட.) உட்காதுத்துளை: உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் நரம்புத் தூண்டுதல்களாக மாற்றும் உறுப்பினைக் கொண்டிருக்கிறது
lac (மர.வே.) அரக்கு: அரக்குப் பூச்சியிலிருந்து சுரக்கும் பிசின் போன்ற ஒரு பொருள். இது அவலரக்கிலிருந்து வேறுபட்டது. அவலரக்கு என்பது அரக்கிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். விரைவாக உலரும் மரவண்ணப் பூச்சுப் பொருள்களையும் இது குறிக்கும்
lace wood: பட்டுக் கருவாலி: ஆஸ்திரேலியாவில் வளரும் ஒரு வகை மரம். இது விலை மலிவானது; பட்டுப்போல் சீரான புள்ளிகள் உடையது. அலங்கார வேலைகளுக்கு ஏற்றது. சிறிய பரப்புகளிலும், உள்பதிவு வேலைகளிலும் பயன்படுகிறது
lacing: (பொறி.) இறுக்கு இழை வார்: எந்திர உறுப்புகளை இணைத்தியக்கும் தோல் பட்டை வாரின் முனைகளை இழைக்கச்சினால் இறுக்கிப்பிணைக்கும் தோல் வார். இப்போது இதற்கு உலோக இணைப்பிகள் பயன்படுகின்றன
lacquer: (உலோ.) உலோக மெருகு: வாயுமண்டலப் பாதிப்பினால் வண்ணங் கெடாமல் பாதுகாப்பதற்கு உலோக வேலைப்பாடுகளில் பூசப்படும் மெருகெண்ணெய்
lacquer film: (வரை.) சாய மென்தாள்: பட்டுத் திரை வேலைப்பாடுகளுக்கான படியெடுப்பு உள்வெட்டுத் தகடுகள் செய்வதற்குப் பயன்ப்படுத்தப்படும் அரக்குச் சாயம் பூசிய மென்தாள்
lacquer work: மெருகு வேலை: வண்ணங்கெடாமல் தடுப்பதற்கு உலோக மெருகெண்ணெய் பூசப்பட்ட அலங்கார வேலைப்பாடு
lactose: (வேதி.) பால் வெல்லம்: C12H22011) பாலிலுள்ள சாக்கரை. உறைபால் தெளிவினைச் செறிவாக்குதல், படிகமாக்குதல் மூலம் பெறப்படும் இனிப்பான, மிக நுண்ணிய வெண் பொடி
lacunar : (க.க.) பொட்டிப்பு முகடு : பொட்டிப்புகள் அல்லது உள் கண்ணறைகள் உடைய மேல் முகடு
ladder (க.க) ஏணி : ஏறுவதற்கு உதவும் சாதனம். இணையான இரு கோல்களை குறுக்குப் படிகளால் இணைத்து அமைக்கப்பட்ட படிமரம்
ladder back : ஏணி நாற்காலி: பல கிடைமட்ட மரச் சட்டங்கள் கொண்ட நாற்காலிச் சாய்பலகை
ladle : (வார்.) சட்டுவம்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து உருகிய உலோகத்தைக் காதி வார்ப்படத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் கொள்கலம். இது, 25-100டன் வரைக் கொள்ளக் கூடியதாகப் பல்வேறு வடிவளவுகளில் உண்டு
la Farge cement : சுண்ணச் சிமென்ட் : சுண்ணாம்பை நீற்றும் போது துணைப் பொருளாக உண்டாகும் சிமென்ட். இது கறைபடாதது. இது போர்ட்லந்து சிமென்ட் போன்றவலுவுடையது
lagging angle : (மின்,) பின்னடைவு கோணம் : ஒரு தூண்டு மின்சுற்று வழியில் மின்னழுத்தத்தைப் பின்னடையச் செய்கிற மின்னோட்டத்தின் கோணம்
lagging current : (மின்) பின்னடைவு மின்னோட்டம் : ஒரு மின் சுற்று வழியிலுள்ள தூண்டலினால் மின்னோட்டம் பின்னடையும்படி செய்கிறது
lag screw : பின்னடைவுத் திருகு : சதுர வடிவத் தலையுடைய, கனமான தரத் திருகு. இதன் தலையில் இயைவுப்பள்ளும் இல்லாததால் இதனைத் திருக்குக் குறடு மூலம் இறுக்க வேண்டும்
laid paper : முகட்டுக் காகிதம் : கம்பிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்டதால் வரிவரியான முகடுகளுள்ள காகிதம்
lake : (வேதி) அரக்குச் சாயம் : அரக்கினால் செய்யப்பட்ட வண்ணப் பொருள்.
lake copper : (உலோ,) எரிச்செம்பு : மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள் களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு
lambre quin : முகட்டுத் திரை: கதவின் அல்லது பலகணியின் அலங்கார முகட்டுத் திரை
laminar flow : (வானூ,) தடைபடாத் துகளியக்கம் : தடைபடாத துகள்னுக்களின் இயக்கம், திட எல்லைகள் அருகே பசைத் திரவம் பாய்வதை இது குறிக்கும்
laminate : தகட்டடுக்கு : மரப் பலகைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒட்டுப் பலகை தயாரித்தல், மென்தாள் ஒட்டல்
laminated brush : (மின்) மென் தகட்டுத் தொடுவி செம்பு: வெண்கலம் போன்ற உலோகங்களின் மென்தகடுகளாலான திசை மாற்றுத் தொடுவி
laminated construction : அடுக்குக் கட்டுமானம் : குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறு வதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம்
laminated core : (மின்) மென் தகட்டு உள்ளீடு : மின் காப்பிடப்பட்ட இரும்புத்தகடு களின் அடுக்குகளினாலான ஒரு மின்னக உள்ளீடு. இது உலோகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படாமல் தடுக்கிறது
laminated liner: (தானி) அடுக்குக் காப்புறை : உந்து ஊர்திகளில் சுழற்றக்கூடிய பல அடுக்கு உள்வரி உலோகக் காப்புறை
laminated plastics : (குழை) அடுக்கு பிளாஸ்டிக்: கனமில்லாமல் வலுவாகவுள்ள பிளாஸ்டிக். கண்ணாடிப் பொருள்களை அடுக்கடுக்காக அமைத்துச் செறிவாக்குவதன் மூலம் போதிய வலிமையுள்ள பிளாஸ்டிக் கிடைக்கிறது. இவை தகடுகளாக அல்லது படகின் உடற்பகுதிக்கேற்ப வலுவாகத் தயாரிக்கப் படுகின்றன
lamp : (மின்.) விளக்கு : மின் இழை அல்லது சுடர் உள்ள ஒரு சாதனம். இது சூடாகும் போது சுடர்விட்டு ஒளியுண்டாக்குகிறது
lamp adapter : (மின்) விளக்குக் கிளைப்பான் : தொலைபேசித் தொடர்பாளரின் கவனத்தைக் கவர்வதற்காக தொலைபேசி,விசைப் பலகைகளில் பயன்படுத்தப்படும் வெண்சுடர் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம்
lamp annunciator : (மின்) தொலைபேசிச் சுடர் விளக்கு : தொலைபேசி இயக்குநரின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தொலைபேசி விசைப் பவகைகளில் பயன்படுத்தப்படும் வெண்சுடர் விளக்குகளின் தொகுதி
lamp bank : (,மின்) விளக்குப் பலகை : விலக்குகளுக்கான பல கொள்கலன்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு பலகை. இந்த விளக்கு கள் கட்டுறுத்தும் கம்பங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும்
lamp base: (,மின்) விளக்காதாரம் : ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட் டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும்
lampblack : புகைக்கரி வண்ணம்: புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப் பொருள். இது இயற்கை வாயுவிலிருந்து அல்லது எண்ணெயிலிருந்து கிடைக்கிறது
lamp cord (மின்) விளக்குக் கட்டிழை : இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும்
:lamp efficiency (மின்) ஒளித்திறன் :' ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்டாக்குவதற் குத் தேவைப்படும் ஆற்றலின் அளவு. இது வாட்டுகளில் குறிப்பிடப்படும். இதனை வாட்| மெழுகுவர்த்தித் திறன் (W.P.C.) என்று குறிப்பிடுவர்
lamp socket : (மின்) விளக்குக் குதைகுழி: விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்குரிய கொள்கலன்
'land: (பட்.) சால்வரி இடைவெளி: துரப்பணங்கள். குழாய்கள், துளைச் சீர்மிகள் போன்ற கருவிகளில் வடுப்புள்ளங்களுக் கிடையிலுள்ள இடைவெளி
:landing : (வானூ.) தரையிறங்குதல் :'பறக்கும் விமானம் பறக்கும் வேகத்தைக் குறைத்துக் கீழே இறங்கு தரையுடன் தொடர்பு கொண்டு இறுதியாக நின்று விடுதல்
landing angle: (வானூ) தரை நிலைக் கோணம்: விமானம் தரை மட்டத்தில் அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற கும் கிடைமட்டக் கோட்டிற்கு மிடையிலான கூர்ங்கோணம்
landing area floodlight : (வானூ.) தரையிறங்கு பகுதி ஒளிப் பெருக்கு: விமானம் தரையிறங்கும் பகுதியில் பல திசைகளிலிருந்து ஒளி வீசுவதற்கான சாதனம்
landing beam: (வானூ) அலைக் கதிர்க்கற்றை : விமானம் தரை றங்குவதற்கு வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை
landing direction light : (வானூ.) இறங்குதிசை விளக்கு : விமானம் எந்தத் திசையில் தரையிறங்க வேண்டும் என்பதைக் காட்டும் விளக்கு அல்லது விளக்குகளின் தொகுதி
landing field : (வானூ) தரையிறங்கு தளம் : விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற வடிவளவும் பரப்பளவும் கொண்ட ஒரு தளம். இது விமான நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம்
landing flap: (வானூ) தரையிறங்கு சிறகு : விமானத்தின் ஓர் இறகின் பின் முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓர் இணைப்பு தரையிறங்கும் போது இதைத் திருப்பும்போது இது காற்றுத்தடையாகச் செயற்படுகிறது
landing gear : (வானூ) தரையிறங்கு பல்லிணை: விமானத்தின் அடியிலுள்ள ஒரு கட்டுமானம் தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும் தரையிலோ, நீரிலோ விமானம் இருக்கும் போது அதனைத் தாங்கிக் கொள்ளவும் இது பயன்படுகிறது
landing light : (வொனூ) தரையிறங்கு ஒளி: விமானம் தரையிறங்கும் போது ஒளியூட்டுவதற்காக விமானத்திலுள்ள ஒரு விளக்கு
landing mat: (வானூ) தரையிறங்கு தளப்பாய்: விமானம் தரையிறங்குவதற்கான ஓடுபாதையாக அமைக்கப்பட்டுள்ள உலோக வலைகள் அல்லது துவாரமுள்ள உலோகத் தகடுகள்
landing newel : (க.க) தரையிறங்கு நடுத்தூண் : ஒரு படிக்கட்டின் தரையிறங்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள, படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம்
landing rocket: (விண்) இறங்கு ராக்கெட்: ஒரு செயற்கைக் கோளிலிருந்து அல்லது ஒரு பெரிய விண்வெளிக்கலத்திலிருந்து ஒரு கோளத் தின் மேற்பரப்பில் பயணிகளையும் சரக்குகளையும் மாற்றுவதற்குரிய மனிதரால் இயக்கப்படும் ஒரு விண்வெளி ஊர்தி
landing Speed:(வானூ) தரையிறங்கு வேகம்: விமான சமதளத்தில் பறந்து கொண்டு, போதிய அளவு கட்டுப்பாட்டில் நிலைத்து நிற்கக்கூடிய குறைந்த அளவு வேகம்
landing strip: (வானூ) தரையிறங்கு நீள் தளம் : விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப்பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தரையிறங்குவதற்கும்,தரையில் ஓடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது
landing T: (வானூ.) தரையிறங்கு T: ஆங்கிலத்தில் 'T' எழுத்தின் வடிவிலுள்ள ஒரு பெரிய சைகை இது, விமானம் தரையிறங்குவதற்கும், தரையில் ஓடி மேலே பறப்ப தற்கும் வழிகாட்டுவதற்காக தரையிறங்கு தளத்தில் அல்லது ஓர் உயரமான கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும்
landing tread: (க.க,) படிக்கட்டு மிதி கட்டை: படிக்கட்டின் தரையினைத் தொடும் மிதி கட்டை. பொதுவாக, இதன் முன்முனை ஒரு மிதிக்கட்டையின் கனத்தையும், பின்முனை தரைத் தளத்தின் கனத்தையும் கொண்டிருக்கும்
landing wire: (வானூ,) தரையிறங்கு கம்பி: விமானத்தை உயரே செலுத்துகிற இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசையில் இயங்கும் விசைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பி, இது உறுப்புகள் அளவுக்கு மீறி இறுகி கட்டுமானத் திரிபடைந்து விடாமல் காக்கிறது
landmark beacon: (வானூ,) நில எல்லை அடையாள ஒளி: திட்டவட்டமான புவியியல் எல்லைகளைக் குறித்துக் காட்டுவதற்குப் பயன்படும் அடையாள ஒளி. இது விமான நிலைய அடையாள ஒளி. அல்லது ஓடுபாதை அடையாள ஒளியிலிருந்து வேறுபட்டது
land plane: (வானூ) தரை விமானம்: தரையில் மட்டுமே இறங்கவும், தரையிலிருந்து மட்டுமே ஏறவும் கூடிய ஒரு விமானம்
landscape panel: இயற்கைக் காட்சிக் கரணை : கிடைமட்டக் கரணையுடைய பொட்டிப்பு
lap: (எந்.) மெருகிடு கருவி: உராய்வுப் பொருள் பூசிய மேற்பரப்பினையுடைய துல்லியமான கூர்மை கொண்ட ஒரு கருவி
lap joint (மர.வே.) மடிப்புமூட்டு: தண்டவாளம், கம்பம் முதலியவற்றின் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை
lapping: (எந்) மடிப்புறுத்துதல் : உட்புற அல்லது வெளிப்புறப் பரப்புகளை கையாலோ எந்திரத்தாலோ மடித்துச் சமனாக்குதல்
lap - riveted joint: மடித்திறுக்கு மூட்டு: தகடுகளின் முனைகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து இறுக்கிப் பிணைத்த மூட்டு
lap-seam welding: மடிப்புப் பற்ற வைப்பு: விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து வைததுப் பற்ற வைக்கும் முறை
larch: (தாவர.) ஊசியிலை மரம்: கற்பூரத் தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மரம். இது நடுத்தர வடிவளவுடையது. கூம்பு வடிவக் கனி தருவது; குறிப்பிட்ட பருவத்தில் இலையை உதிர்க்கக்கூடியது. இதன் மரம் கடினமானது; கனமானது; வலுவானது. இதன் மரம் தொலைபேசிக் கம்பங்களுக்கும் வேலிக் கம்பங்களுக்கும் கப்பல் கட்டுவதற்கும் பயன்ப்டுகிறது
lard oil: (எந்.) பன்றிக் கொழுப்பு எண்ணெய்: பன்றிக் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். உலோக வெட்டுக் கருவிகளில் திறன் வாய்ந்த உயவுப் பொருளாகப் பயன்படுகிறது
large knot: பெருங்கணு: 4 செ.மீ.க்கு மேல் விட்டமுள்ள மரக்கணு
larry: கலவைக் கருவி: வளை வான எஃகு அலகுடைய ஒரு கருவி. இதன் கைபிடி 18செ.மீ. அல்லது 3 செ.மீ. நீள்முடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது
larva: (உயி.) முட்டைப் புழு: ஒரு பூச்சியின் வாழ்க்கையில், முட்டையிலிருந்து வெளிவந்த புழு
laser: (விண்.) லேசர்: கதிரியக்கத்தின் தூண்டிய ஒளிர்வு மூலம் ஒளிப்பெருக்கம் செய்யும் கருவி. ஒரு மூலக்கூற்று அல்லது அணு அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலை ஓர் உட்பாட்டுச் சைகை மூலம் தூண்டி ஒளியை உண்டாக்குவதற்கான சாதனம்
last மிதியடிப் படியுரு: புதை மிதியடி செய்வதற்குரிய படியுருவக் கடை
lastic: (வேதி.குழை,) ரப்பர் பிளாஸ்டிக்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ரப்பரின் பண்புகளையுடைய ஒரு பிளாஸ்டிக் பொருள்
latent heat: உட்செறி வெப்பம்: ஒரு பொருளின் வெப்ப நிலையை மாற்றாமல் அப்பொருளின் இயற்பியல் நிலையை மாற்றுகிற வெப்பம், எடுத்துக்காட்டு பனிக்கட்டியை நீராக மாற்றுவதற்குத் தேவை வெப்பும்; 32° ஃபாரன் ஹீட் நீரை நீராவியாக மாற்றுவதற்குத் தேவை யானது 212° ஃபாரன் ஹீட்
lateral : பக்கம் நோக்கிய: பக்கம் நோக்கிச் செல்கிற அல்லது நீள்வாக்கிற்குக் குறுக்காகச் செல்கிற
lateral motion: பக்கம் நோக்கிய இயக்கம்: பக்கம் நோக்கிய திசையில் இயங்குதல்
laterals: (பொறி.) மூலைவிட்டத் தளை இணைப்பு: விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக எந்திரத்தின் இரு உறுப்புகளிடையே மூலை விட்டமாகத் தலைப் பட்டைகளால் இணைத்தல்
lateral stability: (வானூ) பக்க உறுதிப்பாடு: விமானத்தில் சுழற்சி விரிசல், பக்கத் தளர்வு போன்றவற்றால் சமநிலைச் சீர்குலைவு ஏற்படாமல் உறுதிநிலையை ஏற்படுத்துதல்
lateral strain: (பொறி) பக்கவாட்டத் திரிவு: எந்திரக் கட்டமைப்புக்கு எதிராகப் பக்கவாட்டில் ஏற்படும் திரிவு. இதனைத் குறுக்குத் திரிவு என்றும் கூறுவர்
lateral thrust: பக்க உந்து விசை: பக்கங்களை நோக்கி அளாவுகிற ஒரு ப்ளுவின் அழுத்த விசை
latex : ரப்பர் மரப்பால்: காகிதத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ரப்பர் மரப்பால்
lath: (க.க.) வரிச்சல்; சுவர், மச்சு ஆகியவற்றிற்குப் பாவப்படும் 4×1x10செ.மீ.அளவு மென்மரப்பட்டிகை
lathe: கடைசல் எந்திரம்: (எந்.) வட்ட வடிவப் பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் எந்திரம்
lathe bed: (எந்) கடைசல் எந்திரப் படுகை: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் ஏற்புமைவு வாய்ப்புடைய அடிப்பணிச் சட்டம்
lathe center grinder: (எந்) கடைசல் மைய அரைப்பான்: ஒருகடைசல் எந்திரத்துடன் இணைக்கப்படும் ஓர் அரைவைச் சாதனம், இது மையங்களை அராவுவதற்குப் பயன்படுகிறது lathe chuck: (எந்.) கடைசல் கவ்வி: கடைசல் எந்திரத்தின் கதிர்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கவ்வும் சாதனம். இது கடைசல் எந்திரம் இயங்கும் போது, அதில் வேலைப்பாடு செய்யப்படும் பொருளைக் கல்விப் பிடித்துக் கொள்கிறது
lathe dog: (எந்) கடைசல் எந்திரக் குறடு: ஒரு கடைசல் எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இடுக்குக் குறடு
lathe engine: _ (எந்.) எந்திரக் கடைசல் பொறி: திருகினைக் கொண்ட விசையினால் இயங்கும் கடைசல் எந்திரம்
lathe gap: (எந்.) இடைவெளிக் கடைசல் பொறி: எந்திரத்தால் இயங்கும் கடைசல் படுகை கொண்ட கடைசல் பொறி
lathe tool; (எந்.) கடைசல் கருவி: கடைசல் எந்திரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட உலோகப் பொருளிலுள்ள பிசிறுகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி. இதனை 'வெட்டுக் கருவி' என்றும் கூறுவர்
lathe work: கடைசல் வேலைப்பாடு: கடைசல் எந்திரத்தில் செய்யப்படும் துளையிடுதல், நெளிவெடுத்தல் போன்ற அனைத்து வேலைப்பாடுகளையும் குறிக்கும்
latitude: அட்சரேகை: பூமியின் மேற்பரப்பில், பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கே உள்ள தொலைவு
lattice (க.க.) பின்னல் தட்டி: வரிச்சல் அல்லது கம்பிகளின் பின்னால் அமைந்த பலகணி
lattice girder: (க.க) குறுக்குச் சட்ட உத்தரம்: இரும்பாலான பின்னற் சட்ட அமைப்போடு இணைக்கப்பட்ட பெரிய உத்தரம்
lattice work: (அ.க) பின்னல் வேலைப்பாடு: மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான பின்னல் வலை வேலைப்பாடு
laureling: (அ.க.) புன்னையிலை வேலைப்பாடு: புன்னை இலைப் புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட அலங்கார வேலைப்பாடு
launch pad: (விண்.) செலுத்து மேடை: ஓர் ஏவுகணையைச் செலுத்துவதற்கு ஏற்றி வைப்பதற்கான காங்கிரீட் அல்லது வேறு கெட்டியான ஒரு பரப்பிடம்
lava: (வேதி.) எரிமலைக் குழம்பு: எரிமலை உருகிய பாறைக் குழம்பு
lavatory: (க.க.) கழிப்பிடம்: கை கால் கழுவவும் துணி துவைக்கவும் சிறுநீர் கழிக்கவும் பயன்படும் அறை
lawn: சல்லடை : நார்த்துணி அல்லது பட்டாலான மென்மையான சல்லடை
layout: (அச்சு.) (1) அமைப்புத் திட்டம்: ஒரு பணியின் செயல் முறைத்திட்டம் அல்லது வரைபடம்
(2) மனைத்திட்ட அமைப்பு: ஒரு வீட்டுமனையின் திட்ட அமைப்பு
(3) நிலத்திட்ட அமைப்பு: வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை மனைகளாகப் பகுத்துத் திட்ட அமைப்பு செய்தல்
layout bench or a table: விரிப்பு மேசை: வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை விரித்து வைப்பதற்கான உலோகச் சமதளமுடைய மேசை layout man: (அச்சு) பக்க அமைப்பாளர்: அச்சுப்பணியில் பக்கங்களை அமைப்பாக்கம் செய் பவர். இவரை 'அச்சுப் பக்க அமைப்பாளர்' என்றும் கூறுவர்
layout paper: (அச்சு) பக்க அமைப்புக் காகிதம்: அச்சுப் பக்க வடிவாக்கத்திற்குப் பயன்படும் காகிதம். இதில் அச்சுருப் படிவச் சதுரங்கள் வரையப்பட்டிருக்கும், இதில் விளம்பரங்களும், மற்ற அச்சிட வேண்டிய பணிகளும் வடிவமைக்கப்படும்
lazy tongs : பல் திசை விளைவு நெம்புகோல் : தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியெடுப் பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு
leach : (குழை.) நீர்மக் கசிவு : ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளைக் கசிவூதல் மூலம் உள்மாசு வெளியேற்றுதல்
leaching cesspool : (கம்) கசிவு வடிகுட்டை : நீர் கசியக்கூடிய ஒரு வடிகுட்டை
lead : (மின்.) (1) தலைமை மின்னி ணைப்புக் கம்பி: ஒரு மின் இணைப்புச் செய்யப்பட்டுள்ள மின் சாதனத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு மின் கடத்தி
(2) முந்து நிலை அளவு : ஒரு நிமிர் வீத வளைகோட்டின் நீச முனையும் உச்ச முனையும் மற்றொரு வளைகோட்டின் மீதான அதே முனைக்கு முன்னேறி எட்டுகிற போது, அந்த வளைகோடு மற்ற வளைகோட்டிற்கு முந்து நிலையிலிருப் பதாகக் கூறப்படும்
(3) திருதாணி இடைவெளி : ஒரு திருகாணியில் ஒரு முழுச்சுற்று முடிந்ததும் திருகாணி முன்னேறியிருக்கக் கூடிய தூரம்
lead : ஈயம் : பழுப்பு நீலநிற உலோகம்; மென்மையானது; கம்பியாக இழுத்து நீட்டத்தக்கது. தகடாக்கத்தக்கது. வீத எடைமானம் 11 34; உருகுநிலை 327°C நைட்ரிக் அமிலத்தில் கரையக் கூடியது. பொதுவாக, கந்தகத்துடன் கலந்து ஈயச்சல்பைடு ஓர் காலினா என்ற தாதுவாகக் கிடைக்கிறது. தூய்மையர்கவும், கூட்டுப்பொருளாகவும் பல்வேறு வகையில் பயன்படுகிறது
lead bath : (உலோ) ஈயக் குழம்பு : எஃகுத் துண்டுகளை 650°F முதல் 1700°F வரைச் சூடாக்குவதற்கான உருகிய ஈயக் குழம்பு
lead burning: (தானி) ஈயப்பற்ற வைப்பு : ஈயத்தைப் பயன்படுத்திப் பற்றவைத்தல் சேமக்கலங்களில் முக்கியமாகப் பயன்படுகிறது
lead cutter: (அச்சு) ஈய வெட்டுச் சாதனம் : ஈயத்தை வேண்டிய வடிவளவுகளில் வெட்டுவதற்குக் கையினால் இயக்கப்படும் ஒரு கருவி
leaded matter ; (அச்சு) ஈய இடைவெளி :- அச்சுப்பணியில் வரிகளுக்கிடையே ஈய இடைவரிக் கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள்
leaded zinc oxide : (வண்) ஈய நாகஆக்சைடு : ஈயச் சல்பேட்டையும் துத்தநாக ஆக்சைடையும் இணைத்துத் தயாரிக்கப்பட்ட வெண்ணிறச் சாயப் பொருள்
leader : (தொ. கா.) இணைப்புத் திரைப்படச் சுருள் : திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் இணைத்துத் தொடர்புபடுத்துவதற்குத் திரைப்படச் சுருளின் இரு முனையிலும் பயன்படுத்தப்படும் வெற்றுத் திரைப்படச் சுருள்
leaders : (அச்சு.) வழி காட்டு வரை: விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளாலான வரை
lead hammer: (எந்) ஈயச் சுத்தியல் : ஈயத்தாலான கொண்டையுடைய ஒரு சுத்தியல். உறுப்புகளில் சிராய்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எஃகுச் சுத்தியலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது
lead hole : (எந்) முந்து துவாரம்: ஒரு பெரிய துவாரத்தைத் துரப்பணம் செய்வதற்கு அல்லது ஒரு சாய்வு தளத்தின் மீது மையத் துவாரமிடுவதற்கு வசதியாக ஓர் உலோகத் துண்டில் துரப்பணம் செய்யப்படும் துவாரம்
leading : (அச்சு.) வரி விரிவாக்கல் : அச்சுப்பணியில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கு ஈயத் தகட்டுப் பாலங்களிட்டு அகலமாக்குதல்
leading angle : (மின் ) முற்செலுத்து கோணம் : ஒரு கொண்ம மின் சுற்றுவழியில் மின்னழுத்தத்தை முற்செலுத்துகிற மின்னாட்டத்தின் கோணம்
leading current : (மின்) முந்து மின்னோட்டம்: மின்னோட்டத்தை உண்டாக்கும் மின்னியக்க ஆற்றலின் முன்னோடியான உச்ச நீச அளவுகளை எட்டுவதற்கான மாற்று மின்னோட்டம்
leading edge : (வானூ) முந்து முனை: விமானத்தின் முற்சலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர்
lead joint - (கம்) ஈய இணைப்பு : ஒரு மணிக்கும் மூடு குமிழுக்கு மிடையிலான வளைவடிவ இடைவெளிக்குள் உருகிய ஈய்த்தை ஊற்றி, பின்னர் கூர்முனையை இறுகப் பொருத்துவதன் மூலம் செய்யப்படும் இணைப்பு
lead monoxide : (வேதி) ஈய மோனாக்சைடு (Pb0),: மஞ்சள் நிறமான அல்லது மஞ்சள் கலந்து சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக்கண்ணாடி மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுகளை அடைக்க கிளிசரினுடன் கலந்து சாந்தாகப் பயன்படுத்தப்படுகிறது
lead paint: (வண்) ஈய வண்ணச்சாயம் : சாதாரண வண்ணப் பொருள். இதில் வெள்ளை ஈயம் ஆதாரப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் இப்பெயர் பெற்றது
lead peroxide : (வேதி.மின்) ஈயப் பெராக்சைடு : (Pb02) ஓர் ஈயக் கூட்டுப் பொருள் மின்சேமக் கலங்களின் நேர்மின் தகடுகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன்
lead poisoning: ஈய நஞ்சு : வண்ணம் பூசுவோர் ஈயத்தில் அல்லது ஈயப் பொருட்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு நோய்
leads : (அச்சு.) இடைவரிக் கட்டைகள் : அச்சு வேலையில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத் தகடுகள். இவை அச்செழுத்து அலகுகளின் மடங்குகளில் தயாரிக்கப் பயன்படுகின்றன
lead screw (எந்) முன்னேற்றத் திருகு; திருகு வெட்டுக் கடைசல் எந்திரத்தின் படுகையின் முன் புறம் நீளவாக்கில் அமைந்துள்ள திருகு
lead sponge : (மின்) ஈயப்பஞ்சு: ஒரு சேமக் கலத்திலுள்ள எதிர் மின் தகட்டிலுள்ள செயல் திறமுடைய தனிமம்
lead storage cell ; ஈய சேமக்கலம் : கந்தக அமிலத்தின் மின் பகுப்பானிலுள்ள ஈயப் பெராக்சைடு, பஞ்சு ஈயம் இவற்றினாலான தகடுகளைக் கொண்ட சாதனம்
lead tetraethyl : (வேதி) ஈய டெட்ராஎத்தில் : Pb (C2H5)4 உள்வெப்பாலை வெடிப்பைத் தடுக்கும் பொருளாகிய கேசோலின் ஒரு முக்கியமான அமைப்பான்
lead wool : (கம்) ஈயக் கம்பளி : உருகிய ஈயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஈய இழை குழாய் இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது
'leaf : (அச்சு.) சுவடித் தாள் : மடிக்கப்படாத ஒரு தாள் அல்லது ஒரு புத்தகத்தில் உள்ளது போன்று மடிக்கப்பட்ட தாளின் இரண்டு பக்கங்கள்
leaflet : (அச்சு.) துண்டு வெளியீடு : சில பக்கங்கள் மட்டுமே அச்சிடப்பட்ட சிறிய துண்டு வெளியீடு
leaf spring : இலை விற்சுருள் : அடுக்கடுக்காக அமைந்த தட்டையான பல தகடுகளினாலான ஒரு விற்கூருள். இது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது
leaf work:(அ.க.)இலை வேலைப் பாடு: அறைகலன்களிலும் கால்களிலும் சாய்மானங்களிலும் இலைகளின் வடிவில் செய்யப்படும் நுட்பமான இலை வேலைப்பாடுகள்
league : லீக் : ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு; 15,840 அடி நீளம்
leakage (மின்.) மின்கசிவு : மிக உயர்ந்த அளவு மின்காப்புடைய பரப்பின் மீது அல்லது பாதை வழியே மின்னோட்டம் பாய்தல்
leak detector :(குளி.பத.) கசிவு காட்டும் கருவி : ஒரு குளிர்பதனச் சாதனத்தில் கசிவுகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் கருவி
lean mixture (தானி) செறிவிலா எரிபொருள் கலவை : ஒரு வகை எரிபொருள் கலவை. இதில் தேசோலினைவிடக் காற்று அதிக விகிதத்தில் கலந்திருக்கும்
lease: (நெச) பாவு நூல் பிரித்தல்: தறியில் பாவு முனைகளில் பிரித்துவிட்டுத் தறிக்குத் தயாராக்குதல்
leather : பதனிட்ட தோல்: தோற் பொருட்கள் செய்வதற்காகப் பதனிடப்பட்ட தோல்
leather-board : தோல் அட்டை: பல்வேறு இழைப் பொருள்களை சீமைச் சுண்ணாம்பு அல்லது வெண்சுண்ணத்துடன் கலந்து தயாரிக்கப்படும் குழம்பினாலான அட்டை
leather craft : தோல் வேலைப்பாடு : கருவிகளைக் கொண்டு தோலில் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடுகள்
learherette cover paper : போலித்தோல் உறைக் காகிதம் : தோல் போல் செய்யப்பட்ட தாளினாலான உறைக் காகிதம்
leather fillet : தோல் கச்சை: வார்ப்படத் தொழிலில் வார்ப்படங்களின் வலிமையை அதிகரிக்கவும், வார்ப்பட மணலில் கூர் முனைகளை நீக்கவும் பயன்படும் தோலினாலான பட்டை
leatheroid : செயற்கைத் தாள் தோல் : வேதியியல் முறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத் தோல் போலிருக்கும் பருத்தித் தாள்
leclanche cels: (மின்) லெக்லாஞ்சிக் கலம் : திறந்த மின் சுற்றுவழி யுடைய ஓர் அடிப்படை மின் கலம். இதில் கார்பன் துத்தநாக மின் முனைகளும், நவச்சார மின் பகுப்பானும் மின்காந்த முனைப் பியக்க அகற்றியாக மாங்னிஸ் டையாக்சைடும் பயன்படுத்தப்படுகின்றன
lectern : சாய்மேசை : படிப்பதற்குப் பயன்படும் சாய்வான மேசை
ledge : (க.க.) வரை விளிம்பு : சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு
ledger paper : பேரேட்டுத் தாள் : கணக்குப் பதிவுப் பேரேடுகள் தயாரிப்பதற்கான கனமான தாள்
left hand engine : (வானூ) இடப்பக்க எஞ்சின் : விமானத்தின் முற்செலுத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடப்புறமாக இயங்கும் வகையில் உள்ள எஞ்சின்
left hand screw : (எந்) இடப்புறத் திருகு : வடமிருந்து-இடமாகத் திருகும்போது முற்செல்லும் வகையில் அமைந்த திருகாணி
left hand thread : (எந்) இடபுறத் திருகிழை: மரையாணி அல்லது திருகாணியை இறுக்குவதற்கு இடப்புறமாகத் திருகும் வகையில் அமைந்த திருகிழை
legend : நீளம் : பிழம்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவைக் கூறு : ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு உள்ள தூரம், கால நீட்சியையும் குறிக்கும்
length: (அச்சு.) விளக்க வாசகம்: ஒரு படத்திற்கான விளக்க வாசகம்
lens : (பற்) பற்றவைப்புக் கண்ணாடி வில்லை : பற்றறைக்கும் பணியில் மிகுந்த ஒளிவுடைய ஒளிப்பிழம்பினைக் கண்ணுக்கு ஊறு நேரிடாவண்ணம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் தனிவகைக் கண்ணாடி வில்லை
lenz’s law : (மின்) லென்ஸ் விதி : ஒரு தூண்டு மின்னோட்டத்தின் திசையானது எப்பொழு தும் அதன் காந்தப் புலன் தூண்டு மின்னியக்க விசையினை உருவாக்குகின்ற காந்தப் புலனின் வலிமையில் ஏற்படும் மாறுதலை எதிர்க்கும் என்பது லென்ஸ் விதியாகும்
leopard wood: (தாவர) வேங்கை மரம்: தென் அமெரிக்க மரம். இது கடினமானது; பல வண்ணப் புள்ளிகளுடையது.இது அலங்கார மேலொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது
leprosy : (நோயி.) தொழுநோய்: வெப்ப நாடுகளில் தோலிலும் நரம்புகளிலும் உண்டாகும் ஒரு பாக்டீரியா நோய். இதனால் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும். அந்த இடத்தில் உணர்ச்சி இல்லாமற்போகும்; தசையாற்றலும் குறையும், இறுதியில் நரம்பு இயக்கம் நின்றுபோய் உறுப்பு செயலற்றுவிடும். இன்னொரு வகைத் தொழுநோயினால் தோல் தாறுமாறாக வீங்கும்
letter board : (அச்சு) கடிதத் தாள் படிவம் : கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும்
letter press : எழுத்து அச்சுப் பொறி: எழுத்துகளைப் படியெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம்
letter-press printing : (அச்சு) அச்செழுத்தில் அச்சிடல் : அச்செழுத்துகளில் அல்லது புடைப் பெழுத்துகள் உள்ள தகடுகளில் அழுத்த அச்சிடுதல்
letter-size drills :(உலோ.வே) எழுத்து வடிவத் துரப்பணங்கள் : இவை A முதல் Z வரையிலான எழுத்துக்களின் வடிவில் அமைந் திருக்கும். A வடிவம் சுமார் 15/64 விட்டமுடையது. Z வடிவம் சுமார் 13/32" விட்டமுடையது
letter spacing : எழுத்து, இடை வெளியாக்கம் : அச்சுப்பணியில் எழுத்துகளிடையே இடைவெளியை அதிகப்படுத்திச் சொற்களை விரிவுபடுத்துதல்
level : (1) கிடைமட்டம்: கிடை மட்டமான தளத்தில் கிடைமட்ட நிலை
(2) மட்டக் கருவி : கிடைமட்டத்தைப் பார்ப்பதற்கான கருவி
(3) ஒலியாற்றல்: தொலைக்காட்சியில் அனுப்பீடு செய்யப்படும் ஒளியின் ஆற்றல் அளவு. இது டெசிபல் கணக்கில் அளவிடப்படும்
level : தளமட்டம் : சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும்
leveling instrument (பொறி) தளமட்டக் கருவி : ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளுடைய வளைவரை, இக்கருவி ஊசலாடுவதற்கு இடமளிக்கிறது. அப்போது கிடைமட்டத் தளத்தின் கோணங்களை அளவிடலாம்
leveling rod : (எந்) சமதளக் கோள்: இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன (1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல் இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்களில் அளவுகளைச் சமதள அளவாளர் நேரடியாகப் படித்தறியலாம்
level man : (எல்.) சமதள அளவாளர் : நில அளவையாளரின் சமதள மானியை இயக்குபவர்
lever ; (பொறி.) நெம்புகோல்: ஓர் ஆதாரத்தின் மீது இயங்கும் ஒரு விறைப்பான கோல்
leverage : (எந்.) நெம்புகோலியக்கம் : ஓர் ஆதாரத்தின் மீது இயங்கும் நெம்புகோலின் இயக்கம்
lewis (க.க.) கல் தூக்குப் பொறி: கனமான கற்களைப் பற்றித் தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு
lewis bolt : (க.க) நங்கூர மரையாணி : கூர்மையான பல்வெட்டும் கூம்பானவாலும் உடைய ஒரு மரையாணி. இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகிறது
leyden jar : (மின் ) லேடன் மின் கலம் : மிக எளிய வடிவ கலம். இது உட்புறமும் வெளிப்புறமும் ஓரளவு உயரத்திற்கு வெள்ளியத் தகட்டுப் படலமிடப்பட்ட ஒரு கண்ணாடி ஜாடியைக் கொண்டிருக்கும். இதன் மரமூடியின் வழியே ஒரு பித்தளைக்கோல் உட்புறப் படலத்துடன் ஒரு சங்கிலி வழியாகத் தொடர்பு கொள்ளும் liberation (விண்) விடுவிப்பு : சந்திரனின் உள்ளபடியான அல்லது வெளிப்படையான ஊசலாட்டம் குறிப்பாக, வெளிப்படையான ஊசலாட்டம்
lifespan : (விண்) ஆயுள் நீட்சி: ஒரு செயற்கைக் கோள் ஒரு சுற்றுப் பாதையை அடைவதறகும் அது பூமிக்குத் திரும்பவோ சிதை வுறவோ செய்வதற்குமிடையிலான கால நீட்சி
lift (வானூ) தூக்காற்றல்: விமானத்தைச் சமதளத்திற்கு மேலே உயர்த்துவதற்கான காற்றின் மொத்த ஆற்றல்
lifting magnet ; (மின்) தூக்கு காந்தம் : பாரந்தூக்கிப் பொறியின் கொக்கியினால் தூக்கிச் செல்லப்படும் ஒரு மின்காந்தம். பெரும் இரும்பு எஃகுக் கட்டிகளைத் தூக்குவதற்கு இது பயன்படுகிறது
liftoff : (விண்.) மேலுந்தல் : ஒரு விண்வெளி ஊர்தி செலுத்து மேடையிலிருந்து ராக்கெட் முற்செலுத்தத்தினால் வலைவீச்சு நெறியில் தொடக்கநிலையில் இயங்குதல்
ligature : (அச்சு) எழுத்து இணைப்புரு : அச்சில் fi fi போன்று இரு எழுத்தாக இணைத்து உருவாக்கப்பட்ட எழுத்துகள்
light : (அச்சு.) ஒளிப்புழை : ஒளி வருவதற்கான புழை வழி ;பல கணிக் கண்ணாடிப் பாளம்
light bridge : ஒளிமேடை: ஒளிக் கட்டுப்பாட்டுக் கருவிகளும், சில சமயம் விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மேடை
light cut : (பட்.) நுட்ப வெட்டுமானம் : உலோக வேலைப்பாடுகளில் குறுகலாகவும் நுண்ணியதாகவும் வெட்டி வேலைப்பாடு செய்தல்
light face : (அச்சு.) மென்முகப்பு: அச்சுக் கலையில் மென்மையான முகப்புடைய அச்செழுத்துகள்
light flare : (தொ.கா) வெண் புள்ளி : தொலைக்காட்சி படத்தில் மோசமான தள அல்லது குவி விளக்கு காரணமாக உண்டாகும் வெண் புள்ளிகள்
lightning rod (மின்) இடி தாங்கி : கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது
light level : ஒளி அளவு நிறை : ஒரு பொருளின் மீது அல்லது காட்சியின் செறிவளவு. இது மெழுகு விளக்கொளி அலகுகளில் அளவிடப்படும்
lightning arrester : (மின்) இடி தாங்கி : மின்னலை வாங்கிப் பூமியில் செலுத்தும் ஒரு சாதனம். இதனால் மின்னியல் எந்திரங்கள் காக்கப்படுகின்றன
light wave : (மின்) ஒளி அலை : கட்புலனாகிற ஒளியின அலை
ligne : லிக்னே : கடிகாரம் செய்பவர்கள் பயன்படுத்தும் ஓர் அள வீட்டு அலகு. இது 6 செ.மீ. அளவுக்குச் சமமானது
lignin: (மர.) லிக்னின் : மரத்தின் இழைகளை ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்கிற பொருள். இது மரத்திற்கு வலிமையும் நெகிழ் திறனும் அளிக்கிறது
lignite: ; பழுப்பு நிலக்கரி: பழுப்பு நிறமான, கெட்டியாகாத நிலக்கரி. இதில் பெருமளவு ஈரப்பதன் கலந்திருக்கும்
lignum vitae : புதர்ச் செடிமரம் : மத்திய அமெரிக்காவில் காணப் படும் நடுத்தர வடிவளவுடைய புதர்ச்செடி. இதன் மரம் மிகக் கடினமானது; கனமானது. இதன் ஒரு கன அடி 20 கி.கி. எடையுள்ளது. தாங்கிகளும், செருகு வகைக் கப்பிகளும் செய்யப் பயன்படுகிறது
lime:(க.க.) சுண்ணாம்பு: சுண்ணாம்புக்கல், சிப்பிகள் போன்றவற்றின் மீது வெப்பம் செயற்படுவதால் கிடைக்கிறது. கட்டிடப் பணிகளில் பலவிதங்களில் பயன்படுகிறது. இதனைக் கால்சியம் ஆக்சைடு (CaO) என்பர்
lime light: சுடரொளி : ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்துருவான சுடரொளி. இதனை கால்சியம் ஒளி என்றும் கூறுவர். இது பிரகாச மான ஒளியைத் தரும். மேடை ஒளியமைப்புகளுக்குப் பயன்படுகிறது
limestone: (க.க) சுண்ணாம்புக்கல்: இதனைக் கால்சியம் கார்பனேட் (CaCO8) என்பர். கட்டுமான வேலைகளுக்குப் பயன்படும் சுண்ணாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது
limiter : வரம்புறுத்துக் கருவி : தொலைக்காட்சியில் ஒலி அல்லது அதிர்வு அலை வீச்சுத் திரிபினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு மின்னணுவியல் வாயில்
limit gauge : (எந்.பட்) வரம்புறுத்து அளவி : ஒன்றுக்கொன்று மாறுவதை அனுமதிப்பதற் கென சரியான பரிமாணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மாறுதல் வரம்பு ஒன்று அனுமதிக்கப் படுகிறது.இந்த வரம்புகளுக்கேற்ப அளவிகள் செய்யப்பட்டு வேலைப்பாட்டினைச் சோதனையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன
limits of tolerance: (எந்) தாங்கு திறன் வரம்புகள் : எந்திரங்களில் உறுப்புகளின் துல்லியம் கூடுதல் வடிவளவு குறைந்த வடிவளவு பற்றிய வரம்புகள்
limonite: லைமோனைட் : ஓர் இரும்பு ஹைட்ராக்சைடு. இதனை 'பழுப்பு ஹேமடைட்' அல்லது 'சதுப்பு இரும்பு' என்றும் கூறுவர்
linden : எலுமிச்சை இனமரம் : அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும், சிறு நறுமண இளமஞ்சள் வண்ண மலர்களும் உள்ள மரவகை
line : (மின்.) (1) மின் கம்பி : மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அல்லது துணை மின் நிலையங்களிலிருந்து மின் மாற்றிகளுக்கு அல்ல கட்டிடங்களுக்கு நேரடியாக மின் விசையினைக் கொண்டு செல்லும் மின் கம்பி வழி
(2) வரி : அச்சுக்கலையில் அச்சிட்ட சொற்கள் அல்லது இலக்கம் அடங்கிய வரி
(3) பக்கக் கீற்றுவழி : தொலைக் காட்சியில் பக்கவாட்டில் கீற்றுக் கீற்றாக எழும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று
lineal foot : நேர்கோட்டு அடி: நீளவாக்கிலான அடி அளவு. இது சதுர அடி அளவிலிருந்து வேறுபட்டது
line amplifier : மின்வழி மிகைப்பான் : தொலைபேசியில் மின் அனுப்பீட்டுக் கம்பிக்குச் சைகைகளை வழங்குகிற ஒரு மின் மிகைப்பான்
linear : நீட்டலளவை சார்ந்த : ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட கோடுகள் சார்ந்த
linear molecule: (குழை) நெடிய மூலக்கூறு : மிக நீண்ட வடிவ முள்ள ஒரு மூலக்கூறு. பொதுவாக இது நீணட் சங்கிலி வடிவ மீச்சேர்மங்களைக் குறிக்கும். மீச்சேர்மங்கள் என்பவை ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணித்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும், இயற்பியல் பண்பும் மட்டும் கொண்ட மாறுபட்ட பிறிதுருச் சேர்மங்கள் ஆகும்
line cut : (அச்சு.) வரிவெட்டு: அச்சுக்கலையில், துத்தநாகத்தில் வரிகளை அல்லது பரப்புகளை செதுக்குதல்
lined board: உட்பொதிவு அட்டை: மெல்லிய காகிதத்தினால் உட்பொதிவு செய்த அட்டை
line drop; (மின்.) மின்வழி அழுத்தம் : மின்கம்பிகள் வாயிலாக மின்னோட்டத்தைச் செலுத்தும் போது பயன்படுத்தப்படும் மின்னழுத்தம்
line engraving : (அச்சு) வரி உருவப்படம் : அச்சுப் பள்ளத்தில் செதுக்கு வரி வேலைப்பாடு மூலம் படங்களை அல்லது எழுத்துக்களை அச்சிடுதல்
line frequency : வரி அலைவெண் : தொலைக்காட்சியில் ஒரு வினாடியில் அலகிடும் வரிகளின் எண்ணிக்கை
line gauge : (அச்சு) வரி அளவி: அச்சுக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஓர் அளவுகோல். இதில் அளவுகள் பிக்கா, நான்பாரைல்ஸ் என்னும் அச்செழுத்து அளவு அலகுகளில் குறிக்கப் பட்டிருக்கும்
linen finish : (அச்சு) துணிக் காகிதம் : துணி போன்று இருக்கத்தக்க முறையில் தயாரிக்கப்பட்ட காகிதம் அல்லது அட்டை
line scroll - (க.க) நார்மடி அணி: கதவுகளை அழகுபடுத்துவதற்கான நார்மடிச் சுருள் போன்ற அலங்காரவேலைப்பாடு
line of action : செயலியக்கக் கோடு : ஒரு விசையின் செயலியக்கக் கோடு என்பது, அந்த ஒரு பொருண்மையைப் புள்ளியின் மீது செயற்படும் திசை என்று பொருள்படும்
line pickup : தந்திவட இணைவு : தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளை ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்திவட இணைவு போன்ற உலோக மின்கடத்திகள் வாயிலாகச் சைகைகளை அனுப் பீடு செய்தல்
line pipe : (கம்.) கூம்பு குழாய் : பின்னோக்கிச் சரிந்து கூம்பின் இழையுள்ள இணைப்புடைய தனி வகைக் குழாய். இது பொதுவாக அதிக நீளத் திருகிழையுடையதாக இருக்கும்
liner : (எந்.) புறவுறை : ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றிவிடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும்
line shaft : (எந்.) தொடர் சுழல் தண்டு: பல சுழல் தண்டுகள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ள ஒரு தொடர். இது பிரதான சுழல் தண்டாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்
lines of force : (மின்) விசைக் கோடுகள் : ஒரு காந்தவிசைக் கோடு வடதிசைகாட்டும் துருவம். அதைச் சுற்றியுள்ள மற்றத் துருவங்களின் பாதிப்பினால் காட்டுகின்ற திசையினைக் குறிப்பதாகும்
lining : (அச்சு.) வரிசையமைப்பு: அச்செழுத்து முகப்புகளை கிடைமட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல் link : (எந்.) கண்ணி; சங்கிலியின் ஒரு தனிவளையம்
(2) பிணைப்புக் கருவி : எஞ்சின்களில் ஓரதர் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஒரு பொறியமைவு
link fuse : (மின்) பிணைப்புருகி: புறக்காப்புறை எதுவுமில்லாத ஓர் உருகிக் கம்பி அல்லது நாடா
link motion : பிணைப்பு இயக்கம்: ஓர் உந்து ஊர்தியின் ஓரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல்
linograph : (அச்சு) வரி உருக்கச்சு : வரி உருக்கச்சுப் பொறி போன்றதான உருக்கச்சு எந்திரத்தில் கோத்து வரிப்பாளங்ளை வார்த்தெடுக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்
linotype : (அச்சு.) வரி உருக்கச்சுப் பொறி: அச்சுகோப்பு இல்லாமலே எழுத்துக் களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடிக்கும் அச்சுப் பொறி
linseed oil : ஆளிவிதை எண்ணெய் : வண்ணங்கள் தயாரிப்பதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஆளிவிதையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய்
lintel : (க.க) வாயில் மேற்கட்டை : வாயில், பலகணி ஆகிய வற்றின் கிடைமட்டமேற்கட்டை
linters : குற்றிழைப் பருத்தி: விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குறுகிய இழைப்பருத்தி இது. மெத்தை, திண்டு வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது
lintless cotton : விதை பொதிவிலாப் பருத்தி ': நீண்ட இழைப் பருத்தி; இதில் பிற பருத்திகளில் உள்ளது போன்று விதைகள் பஞ்சில் பொதிந்திருக்காது
lip : (பட்.) வெட்டுமுனை: எந்திரப்பட்டறை வழக்கில் ஒரு கருவியின் வெட்டுமுனை
liquefaction: (இயற்) திரவமாக்குதல்: கெட்டிப்பொருளை அல்லது வாயுப் பொருளை நீர்மமாக்குதல்
lique-faction : (இயற்) திரவமாக்குதல்: கெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை திரவ மாக்குதல்
liquid : (வேதி.) திரவம் : ஒரு பொருளின் திரவநிலை. இதற்குக் குறிப்பிட்ட கொள்ளளவு உண்டு. கொண்டிருக்கும் கலத்தின் வடிவத்தைப் பெற்றிருக்கும்
liquid air : (வேதி) திரவக் காற்று : கடுங்குளிர்ச்சியினால் திரவமாக்கப்பட்ட காற்று. இது குளிர்ப்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது
liter : லிட்டர் : திரவங்களை அளப்பதற்கான ஃபிரெஞ்சு முகத்தலளவை. 61.027கன அங்குலம் கொண்டது ஒரு லிட்டர்
litharge : லித்தார்ஜ் : ஆக்சிஜன் ஓரணுவுடைய காரீயம். இதனை காரீய மோனாக்சைடு என்றும் கூறுவர்
lithium: (உலோ.) லித்தியம் (கல்லியம்): ஓர் உலோகத் தனிமம். உலோகங்களில் மிகவும் இலேசானது. இதன் ஒப்பு அடர்த்தி 0.53 மட்டுமே. அலுமினிய உலோகக்கலவைகளின் கெட்டித் தன்மையை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது
litho: (தாள்.) கல்லச்சுக் காகிதம்: கல்லச்சுக் கலையில் பயன்படுத்தப்படும் பல்வேறு காகிதங்களைக் குறிக்கும் பெயர்
lithography: (அச்சு) கல்லச்சுக் கலை : கல் செதுக்கீடு செய்து கற்பாள அச்சு முறையில் அச்சடிக்கும் முறை
lithophone : (வண்) லித்தோஃபோன்: பேரியம் சல்ஃபேட்டும் துத்தநாக சல்ஃபைடும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். வெண்ணிற வண்ணப் பொருளான இது சிறந்த பொதிவுப் பண்புகளுடையது. உள்வண்ணப் பூச்சு, சுவர் வண்ணப்பூச்சு போன்றவற்றுக்கு ஏற்றது. ஆனால் புறப்பயன்பாட்டுக்கு ஏற்புடையதன்று. லினோலியம் தயாரிப்பதிலும் ரப்பருக்கு வலி ஆட்டுவதிலும் பயன்படுகிறது
litmus; (வேதி.) லிட்மஸ்: கற்பாசி வகைலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்
litmus-paper: (தாள்) லிட்மஸ் தாள்: வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். இதனை அமிலத்தில் நனைத்தால் சிவப்பாக மாறும்; காரத்தில் நனைத்தால் நீலமாகவே இருக்கும்
live: (தொ.கா.) நேரடி ஒளிபரப்பு: தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு மூலமாக அல்லாமல் நிகழ்ச்சிகளை நேரடியாகவே ஒளிபரப்புதல்
live axles : (தானி) இயங்கு இருசுகள் : பாரமும் விசைப்பயன்பாடும் அமைந்துள்ள இருசுகள். இவற்றில் பாதி மிதவை, முக்கால் மிதவை வகைகளும் அடங்கும்
live center : (பட்) இயங்கு மையம் : கடைசல் எந்திரம் அல்லது அது போன்ற எந்திரத்தின் சுழலும் கதிரிலுள்ள மையம். வேலைப்பாடு செய்யப்படும் பொருள் திரியான பாதையில் செல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு இது இன்றியமையாதது
live load: (பொறி ) இயங்கு பாரம்: இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம். இது அதன் இயைபில் மாறாமல் இருப்தில்லை
live matter : (அச்சு) அச்சு வாசகம் : அச்சிட வேண்டிய வாசகம்
live spindle: (எந்) இயங்கு கதிர்: ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது
live testíng:(விண்) இயக்கச் சோதனை: ஒரு ராக்கெட் எஞ்சினை அல்லது விண்வெளி ஊர்தியை உள்ளபடியாகச் செலுத்திச் சோதனை செய்தல்
live wire : உயிர்க் கம்பி : மின் விசை ஓடிக்கொண்டிருக்கும் கம்பி
load : (மின்.) மின்னோட்ட அளவு: மின்விசை ஆக்கப் பொறியால் குறித்த காலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு
loaded wheel:(மின்) அரவைச் சக்கரம்: அரவை செய்யப்படும் பொருளின் துகளினால் மெருகிடப்பட்ட அல்லது தடங்கலிட்ட சக்கரம்
load factor : (வானூ) சுமைக் காரணி: ஒரு விமானத்தில் ஓர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக,முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதமாகக் குறிக்கப்படும்
loading: (தாள்.) காகித மெருகுப் பொருள்: காகிதத்தை வழுவழுப்பாக்குவதற்கு அல்லது ஒளி புகாதபடி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொருள் அல்லது கனிமப் பொருள்
load line: (மின்) பார வரை: அளவு சுமை ஏற்றப்பட்டதைக் காட்டும் கோடு loadstone : காந்தக்கல் : காந்தம்
loam : (வார்.) களிச்சேற்று வண்டல்: வார்ப்பட வேலையில் பயன்படும் மணலும் களிமண்ணும் கலந்த கலவை
loam moulds:(வார்) களிச்சேற்று வண்டல் வார்ப்படம் : செங்கற்களினால் உருவாக்கப்பட்டு களிச்சேற்று வண்டல் கொண்டு மேற்பூச்சு பூசப்பட்ட வடிவங்கள். இந்த வார்ப்படங்கள் பெரும்பாலும் பெரிய வடிவங்களை வார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன
lobby (க.க.) முகப்பு அறை : ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை. உணவகங்களில் உள்ளது போல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக் கூடமாகவும் பயன்படுத்தலாம்
lobe : தொங்கு தசை: உடலின் ஓர் உறுப்பிலிருந்து தட்டை வட்டாகத் தொங்கும் பகுதி
lobe og ear :புறக் காதுமடல்:
loblolly pine : (மர) சிவப்புத் தேவதாரு : கரணையுடைய, மென்மையான இழை கொண்ட மிகுந்த மென் மரமுள்ள ஒருவகைத் தேவதாரு மரம். அமெரிக்காவின் தென்பகுதியில் சட்டங்களுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது
local action : (மின்) உள்ளிட நிகழ்ச்சி : ஓர் அடிப்படை மின் கலத்தில், மின்பகுப்பானின் மேற்பரப்பின் கீழுள்ள நேர்மின் முனையில் (எதிர்ச் சேர்முனை) ஏற்படும் வேதியியல் வினை
local currents : (மின்) உள்ளிட மின்னோட்டங்கள்: இவற்றைச் சுழல் மின்னோட்டங்கள் அல்லது ஃபூர்க்கால்ட் மின்னோட்டங்கள் என்றும் கூறுவர்
local vent: (கம்.) உள்ளிடக் காலதர் : ஓர் அறையிலிருந்து மாசடைந்த காற்றினை வெளியேற்றுவதற்கான ஒரு குழாய் அல்லது கூண்டு
locate; இட அமைவு : ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது இடச்சூழலில் அமைத்தல் இடத்தைக் குறித்திடுதல் அல்லது எல்லைகளைக் குறித்தல்
lock: (மர.) பூட்டு: பூட்டு விசைத் தாழ்
locker (க.க.) நிலைப் பெட்டி : சிறிய அடுக்குப் பெட்டி
lockin :(தொ.கா.) ஒலித்தெளிவு : தொலைகாட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில், ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் கட்டுப்படுத்தப்படும் போது இந்த ஒளித்தெளிவு நிலை ஏற்படுகிறது
locking bolts : (எந்) பூட்டு மரயாணிகள் : எந்திர உறுப்புகளை அவற்றின் நிலைகளில் பொருத்திப் பூட்டுவதற்குரிய மரையாணிகள்
locking stile :(தச்சு) பூட்டு நிலை வரிச்சட்டம்: பூட்டு இணைக்கப்பட்டுள்ள கதவின் பகுதி
lock nut : (எந்: ) பூட்டுச் சுரை யாணிகள் : பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவி விடாமல் தடுப்புதற்காக மற்றொரு கரையாணயின் அடிப்புறம் திருகி இறுக்கப்படும் ஒரு மெல்லிய மரையாணி
lock pin: (எந்) பூட்டு முளை: எந்திரத்தின் உறுப்புகள் கழன்றுவிடாமலிருப்பதற்காக உறுப்பினுள் செருகப்படும் பிணைப்பூசி அல்லது முளை lock stitch : பூட்டுத் தையல் : தையல் எந்திரங்களில் தைப்பது போன்ற ஈரிழைத் தையல்
lockup : (அச்சு.) முடுக்கிப் பூட்டுதல் : அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல்
lock washer : பூட்டு வளையம்: அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது
locust: (மர.வே.) இலவங்க மரம்: நடுநிலக்கடலக மரவகை, கடினமானது. நீண்டநாள் உழைக்கக் கூடியது. புற அலங்கார வேலைப்பாடுகளுக்கு ஏற்றது
lodestone:(கனிம) அயக்காந்தம் : இயற்கையான காந்தக்கல்; மாக்னட்டைட்
loess : (மண்.) மஞ்சள் வண்டல் : ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் படியும் களிமண் கலந்த சாம்பல், மஞ்சள் நிறமான வண்டல் படிவு. மிசிசிப்பி பள்ளத்தாக்கிலும், சீனாவிலும் 1.5 மீ. முதல் 305மீ. ஆழத்தில் கிடைக்கிறது
loft-dried paper: (தாள்) உயர் உள் தளக்காகிதம்: மேற்பரப்பு வடிவாக்கம் செய்யப்பட்டபின்பு உயர் தளத்தில் உலர்த்தப்படும் காகிதம்
log : (கணி) (1) மடக்கை : எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்
(2) மரக்கட்டை : வெட்டப்பட்ட மரத்துண்டு
logarithm : (கணி) மடக்கை : எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்
logarithmic scale: மடக்கை எண் அளவுகோல் : எண்களின் மடக்கைகளுக்கு வீத அளவில் இருக்குமாறு தொலைவுகள் குறிக்கிப்பட்டுள்ள ஓர் அளவுகோல்
loggia : (க.க.) படிமேடை இருக்கை : திறந்த பக்கங்கள் உள்ள படிமேடை இருக்கை
logical functions: தருக்கமுறைச் சார்பலன் : ஒரு குறிப்பிட்ட நிலையினைக் குறிக்கக் கூடிய ஓர் எண் கோவை
logo-type: (அச்சு.) சொற்பாள வார்ப்பு: அச்சு முறையில் இணையெழுத்து வார்ப்பு
logwood: (வேதி.) சாயமரம்: மத்திய அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வளரும் ஒரு வகைச் சாய மர வகை. சாயத் தொழிலிலும், மருந்துகளிலும் பெருமளவில் பயன்படுகிறது
long. குழைமக் களிமண்: குழைமமாகவும் எளிதில் வேலைப்பாடு செய்வதற்கு ஏற்றதாகவும் உள்ள களிமண்
longeron: (வானூ.) நீள் உடற் பகுதி: விமானத்தின் நீட்டு வாட்டமான உடற்பகுதி
long fold: நீள் மடிப்பு: (தாள்.) காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது
longitude: தீர்க்கரேகை: இங்கிலாந் திலுள்ள கிரீன்விச் போனற ஒரு நடுவிடத் திலிருந்து கிழக்கில் அல்லது மேற்கில் உள்ள தூரம்
longitudinal dihedral angle: (வானூ.) நிரைகோட்டு இரு சமதள முக்கோணம்: விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடை யிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சகநிலையமைவுக் கோணம் குறை வாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும்
longitudinal section: (பட்) நீளப்பாங்கு வெட்டுவாய்: நீளவாக்கில் வெட்டப்பட்ட பகுதி
longitudinal stability: (வானூ) நீளப்பாங்கு உறுதிப்பாடு: விமானத்தில் சமதளச் சீர்மையில் ஏற்படும் உலைவினைப் பொறுத்த உறுதிப்பாடு
long letter: (அச்சு) நீள் எழுத்து: 'f' என்னும் ஆங்கில எழுத்தினைப் போன்று ஏறுமுக, இறங்குமுக வரைவுடைய அச்செழுத்து
long screw. (கம்) நீள் திருகு: சாதாரணத் திருகிழையைவிட அதிக நீளமுடைய 15.செ.மீ. நீள ஒரு கூர்ங்கருவி
long shunt compound connection : (மின்.) நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு: மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையை இணைக்கும் போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப்பிணைப்புக்கு மாறுபட்டது
longstroke: (தாணி.) நீள் உகைப்பு: துளையின் விட்டத்தை விடக் கணிசமான அளவு அதிக நீளம் உகைத்திடக் கூடியதான ஓர் எஞ்சின்
loom (மின்.) நெகிழ் காப்புறை: மின் கடத்திகளைக் காப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுடைய உலோகமல்லாத குழாய்
loop: (வானூ.) கரண வளைவு: விமானம் செங்குத்தான மட்டத்தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி
loop wiring: (மின்) கண்ணிக் கம்பியிடல்: மின்சுற்று வழியில் மின் கடத்திகளைக் கண்ணிகள் போல் பிணைத்து அமைத்தல்
loose dowel: தளர் இணைப்பாணி: இறுக்கமாகப் பொறுத்தப்படாத இணைப்பாணி இது வேண்டும்போது அகற்றுவதற்கு வசதியாக நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
loose pulley: (எந்): தளர் கப்பி :எந்திரம் ஓடாதிருக்கும் போது அதை இயக்கும் வார்ப்பட்டை தளர்வாக ஓடுவதற்கான கப்பி. எந்திரம் இயங்கும் போது வார்ப்பட்டை தளர் கப்பியிலிருந்து விரைவாக இயங்கும் கப்பிக்கு மாற்றப்படும்
loper: சுழல் சக்கரம்: கயிறு திரிப்பதற்குப் பயன்படும் ஒரு சுழல் சக்கரம்
loss: ஆற்றல் இழப்பீடு: பயனுள்ள பணி எதுவுமின்றி ஆற்றல் வீணாகிப் போதல்
loss factor : (மின் :குழை ) இழப்புக் காரணி: விசைக்காரணியையும் மின்காப்பு நிலை எண்ணையும் பெருக்குவதால் கிடைக்கும் தொகை
lost motion: (எந்) இயக்க இழப்பு: இயக்க வேகத்திற்கும், இயக்கப்படும் உறுப்புகளின் வேகத்திற்குமிடையிலான வேறுபாடு. இது குறை பாடான இணைப்புகள், தளர்வுகள் காரணமாக ஏற்படலாம்
loudness: (மின்) ஒலி முனைப்பு : செவியுணர்வு மூலம் தீர்மானிக்கக் கூடிய ஒலியின் திறனளவு
loud speaker: (மின்) ஒலி பெருக்கி: அதிகத் தொலைவுக்கு ஒலிஎட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம்
louis xv : (அ.க) லூயி xv பாணி ; ஃபிரெஞ்சு அரசன் பதினைந்தாம் லூயி (1723-1774) காலத்திற்குரிய பாணியி லமைந்த அறைகலன் வடிவமைப்புகள். இந்த அறைகலன்கள், நேர்கோட்டு அமைப்புகளுடனும், மென்மையான முட்டை போன்ற நீளுருண்டை வடிவுடைய பட்டயத் தகடுகளுடனும் அமைந்திருக்கும். மரத்தாலான இந்த அறைகலன்களில் பெரும்பாலும் வெண்மையான வண்ணம் பூசப்பட்டிருக்கும்
louse:(உயி) பேன் : ஒட்டுயிர்ப்பூச்சி இதன் ஒரு வகை உடலில் காணப்படும்; இன்னொரு வகை மயிரில் காணப்படும். மூன்றாவது வகை இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றியுள்ள மயிரில் காணப்படும். இரண்டாவது வகைப் பேன் காரணமாகச் ஜன்னிக்காய்ச்சல் பரவுகிறது
louver: (க.க, எந்.) காற்றுக் கூம்பு: காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு
lowboy: (அ.க) ஒப்பனை மேசை: ஆங்கில பாணி ஒப்பனை மேசை அல்லது பல இழுப்பறைகள் உள்ள சிறிய மேசை. இது அதிக அளவு 122மீ. உயரமுடையதாக இருக்கும்
low brass; (உலோ.) மந்தப் பித்தளை: 80% செம்பும், 20% துத்த நாகமும் கலந்த மஞ்சள் நிறமான பித்தளை உலோகக் கலவை. இது எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது
low carbon steels: (உலோ) மந்தக் கார்பன் எஃகு: 30%-க்கும் குறைவான கார்பன் கொண்ட எஃகு உலோகம். இத்தகைய எஃகு உலோகங்களைப் பரப்பில் கார்பனாக்குவதன் மூலம் கடும் பதப்படுத்தலாம்; ஆனால், செம்பதமாக்க இயலாது
low case: (அச்சு.) சிறு வடிவெழுத்து: ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவம்
lower case: (அச்சு) பொதுமுறை எழுத்து: ஆங்கில நெடுங்கணக்கில் முகட்டெழுத்துகள் அல்லாத சிறிய பொதுமுறை வடிவ எழுத்துகள்
low finish; பழுப்புக் காகிதம்: முட்டையின் வெண்தோடு,கன்றின் தோல் போன்றவற்றிலிருந்து செய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம்
low gear: (தானி.) தாழ்விசை இணைப்புத் திறம்: மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்கு உறுப்புகளை அமைத்தல்
low in line; (அச்சு) தாழ்வுறு வரி: அடுத்துள்ள அச்செழுத்தினை அல்லது பொருளைவிடத் தாழ்வாக உள்ள அச்செழுத்து
low - pressure laminates: (குழை.) குறைவழுத்த மென்தகடுகள்: குறைந்த அழுத்த நிலையில் அல்லது அழுத்தம் இல்லாத நிலையில் அறை வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் மென் தகடுகள்
low relief: (அ.க.)மென்புடைப்புச் சித்திரம்: மேற்பரப்பிலிருந்து சிறிதளவு புடைப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செதுக்கோவியம்
low tension: (தானி.மின்) தாழ்நிலை மின்சுற்று வழி: முதல் நிலை மின் சுற்றுவழி (6வோல்ட்).
low voltage wiring: (மின்) தாழ் மின்னழுத்தக் கம்பியிடல்: வீடுகளு க்கு மின்கம்பியிடுவதில், குறைந்த மின்னழுத்தம் செல்லுமாறு மின் சுற்றுவழிகளை அமைத்தல்
low-wing monoplane: (வானூ) தாழ்நிலை சிறகு ஒற்றைத்தட்டு விமானம் : விமான உடற்பகுதியின் அடிப்பகுதியில் சிறகுகள் பொருத் தப்பட்டுள்ள ஒற்றை தொகுதி சிறகுகளையுடைய விமானம்
lozenge : வைர வடிவம் : வைரம் போன்று சாய்சதுர உருவம்
lozenge moulding : (க.க) சாய் சதுர வார்ப்படம்: வைரம் போன்ற சாய் சதுர வடிவில் அமைந்த வார்ப்பட அலங்கார வேலைப்பாடும், நார்மானியக் கட்டிடக் கலையில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது
lubricant: (பொறி) மசகுப் பொருள்: உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள்.இது வெட்டுமானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது
lubrication : (பொறி) மசகிடல்: உராய்வைத் தடுப்பதற்காக மசகுப் பொருட்களைக் கொண்டு மசகிடுதல்
lubrication system : மசகிடு முறை : எந்திரங்களில் எண்ணெய் பூசி உராய்வினைக் குறைப்பதற்கான மசகிடல் முறை
ludlow : (அச்சு.) லட்லோ அச்சுப் பொறி: அச்சுக்கலையில், கரைகள், வரிக்கோடுகள், அலங்கார வரிகள் முதலியவற்றை வார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருக்கச்சு வரிப்பாள எந்திரம்
lug: (எந்.) பிடிவளை: எந்திர வார்ப்புப் பகுதியின் பிடிப்புக் குமிழ்
lugs: (மின்.) பொருத்து முளைகள்: விரைவான இணைப்புக்கு வசதியாக ஒரு மின்கம்பியின் முனைகளில் பொருத்தப்படும் பொருத்து முளைகள்
lumber: (மர.வே.)வெட்டுமரம்: விற் பனைக்கு ஏற்ற பலகைகள், துண்டுகள் போன்ற வடிவளவுகளில் கட்டைகளாக வெட்டப்பட்ட வெட்டுமரம்
lumber jack: (மர.வே) மரத்தொழிலாளி: வெட்டுமரத் தொழிலில் காட்டு மரங்களை வெட்டி வகைப்படுத்தும் தொழிலாளி
lumber scale; வெட்டுமர அளவி: முரட்டுக் கட்டைகளாக வெட்ட மட்ட வெட்டு மரத்தில் பலகை அளவுகளை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுக் குறியிடப்பட்ட ஒரு சாதனம்
lumen : லூமன் : ஒளிபாயும் அளவினை அளவிடுவதற்கான ஓர் அலகு
lumen bronze : (உலோ.) லூமன் வெண்கலம் : 86% துத்தநாகம் 10% செம்பு,4% அலுமினியம் கொண்ட ஓர் உலோகக் கலவை. மிகுவேகத் தாங்கிகள் தயாரிப்பதற்குக் குறிப்பாகப் பயன்படுகிறது
luminance:(மின்.) ஒளிர்வுத்திறன்: ஒளிக்கதிர் வீச்சின் ஒளிர்வு அளவு தொலைக் காட்சியில் ஒளிர்வுத் திறனைக் குறிக்கும் சொல்
luminance channel: ஒளிர்வு அலைவரிசை: வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிர்வு அல்லது ஒரே வண்ணச் சைகையை மட்டுமே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னியல் சுற்றுவழிகள்
luminosity: (மின்) சுடர் ஒளித் திறன்: இருளில் ஒளி வீசுகின்ற திறன் luminous: ஒளிர்திறனுடைய சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடுகின்ற திறனுடைய
luminous paint: ஒளிரும் வண்ணம்: இருளில் ஒளிவிடுகின்ற திறனுடைய வண்ணப்பூச்சு
lump lime : கட்டிச் சுண்ணாம்பு: சுண்ணாம்புக் காளவாய்களில் எரிக்கப்பட்ட அல்லது புடமிடப்பட்ட சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரான கட்டிச் சுண்ணாம்பு
lunar base: (விண்) நிலவுத்தளம்: அறிவியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு நிலவின் மேற்பரப்பில் நிறுவப்படும் கருவித் தொகுதிகள்
lunar gravity: (விண்) நிலவு ஈர்ப்பு: நிலவின் ஈர்ப்பு மையத்தை நோக்கித்துகள்களும் பொருள்களும் ஈர்க்கப்படுதல்
lunar probe: (விண்) நிலவு ஆராய்ச்சி: நிலவைப்பற்றியும் அதிலுள்ள நிலைமைகள் குறித்தும் ஆராய்தல்
lunar space: (அ.க.)நிலவு வெளி: நிலவின் அருகிலுள்ள வெளிப்பரப்பு
lunette: (அ.க.) தொங்கணிச் சர விளக்கு: கண்ணாடித் தொங்கணிகள் கொண்ட சரவிளக்கு
luster : (கணி.) பிறங்கொளி : ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதிபலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு
lute: கல மட்பூச்சு : காற்றுப் புகா மண்ணடைப் பூச்சு
(2) சீலைமண்: (1) காற்றுப் புகா மண்ணடைப் பூச்சுக்காகப் பயன்படும் பொருள்
lye (வேதி.) கடுங்கார நீர் : மாசு போக்கும் ஆற்றல் வாய்ந்த கழுவு நீர்ம வகை. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) போன்றவை இவ்வகையின. காரப்பொருள் உள்ள பொருளி லிருந்து கரைசலாக அல்லது துளாக இது எடுக்கப்படுகிறது. இது முக்கியமாக சோப்பு தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது
lyophiliazation : நீரகற்றல் : உறைந்து போன ஒரு பொருளிலிருந்து பதக்கமாக்கல் நிலைகளில் நீரகற்றுதல்machinable : எந்திர வேலைப்பாடு செய்யத்தக்க : கருவிகளினால் அல்லது எந்திரக் கருவியிலுள்ள வெட்டுக் கருவிகளினால் வேலைப்பாடு செய்யத்தக்க பொருள்
machine : (எந்.) எந்திரம் : விசையாற்றலை உருமாற்றுவதற்கான அல்லது இடமாற்றுவத்ற்கான ஒரு சாதனம்
machine composition : (அச்சு.) எந்திர அச்சுக்கோப்பு : எந்திர முறை மூலம் அச்செழுத்துக்களைக் கோத்தல்
machine drawing: எந்திர முறைப் பட வரைவு : எந்திரத்தின் அல்லது எந்திர உறுப்புகளின் வரைபடங்களை எந்திரத்தின் மூலம் வரைதல், இதில் குறிப்புகளும், பரிமாணங்களும் பட்டறைத் தகவல்களும் குறிக்கப்பட்டிருக்கும்
machine dried : எந்திர உலர்த்து தாள் : எந்திரத்தின் உலர்த்து உருளைகளில் உருட்டி முழுமையாக உலர்த்தப்பட்ட காகிதம்
machine drilling : (எந்.) எந்திரத் துரப்பணம்: விசையினால் இயக்கப்படும் எந்திரத்தின் மூலம் துரப்பண வேலைகள் செய்தல்
machine finish: எந்திர மெருகீடு: எந்திரத்தின் மூலமாகக் காகிதத்தின் மேற்பரப்புக்கு மெருகூட்டுதல்
machine glazed : மெருகேற்றிய தாள் : ஒருபக்கம் நன்கு மெருகேற்றப்பட்ட தாள்
machine language : (தானி.) பொறி மொழி : ஒர் எந்திரத்தை இயக்குவதற்கு அறிவுறுத்தும் குறியீட்டுச் சைகைகள்
machine moulding : (வார்.) எந்திர வார்ப்படம் : வார்ப் புருவங்களைத் தயாரிப்பதற்கான வார்ப்படங்களை தனிவகை எந்திரங்களைப் பயன்படுததி உருவாக்குதல்
machine rating : (மின்.) எந்திர அறுதிப்பாடு : ஒர் எந்திரம் அளவுக்கு மீறிச் சூடாகிவிடாமல் விசையை அனுப்பும் திறன்
machinery : எந்திரத் தொகுதி : எந்திரக் கருவிக் கலன்களின் தொகுதி. ஒர் எந்திரத்தின் செயலுறு உறுப்புகளையும் குறிக்கும்
machinery steel : (எந்.) எந்திர எஃகு : திறந்த உலை முறையில் தயாரித்த எஃகு. இதில் 0.15% முதல் 0.25% கார்பன் கலந்திருக்கும். கடும் பதப்படுத்தக்கூடிய, ஆனால் செம்பதமாக்க முடியாத மென்மையான எஃகு அனைத்தையும் இச்சொல் குறிக்கும்
machine screw : எந்திரத் திருகு : தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையுறுணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும்
machine too! : (பட்.) வெட்டுக் கருவி : கடைசல் எந்திரம், துரப்பண் எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள் இவை மற்ற எந்திரங்களைத் தயாரிப்பதற்குப் பய்ன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்"என்று அழைக்கப்படுகின்றன
machining : எந்திர வேலைப்பாடு: உலோக வேலைப்பாடுகளில் எந்திரங்களினால் செய்யப்படும் நுட்ப வேலைப்பாடுகள்
machining allowance : (எந்.) மெருகு வேலை மிகைப்பகுதி : வெட்டுக் கருவிகளினால் மெருகு வேலைப்பாடு செய்வதற்கு வசதியாகப் போதிய அளவு விடப்படும் மிகைப்பகுதி
mechanist: எந்திர இயக்குநர்: எந்திரக் கருவிகளை இயக்குபவர்
Mach number : (வானூ.) ஒப்புவேக எண் : உண்மையான காற்று வேகத்திற்கும் ஒலியின் வேகத்திற்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கும் எண். ஒலியை விடக் குறைந்த வேகத்திற்கான இந்த என ஒரு பின்னமாகும்.ஒலியிலும் மிகுதியான வேகத்திற்கு இந்த எண் ஒன்றுக்கு மேற்பட்டதாகும்
macro molecule : (குழை.) பெரு மூலக்கூறு : கரைதக்கை நிலைப் பண்புகளை வெளிப்படுத்து அளவுக்கு வடிவளவுள்ள ஒரு மூலக் கூறு
madrono : (மர.வே.) மாட்ரோனோ : ஒரு பூக்கும் இள மரம். பசிபிக் கடற்கரையோர்ம் வளர்கிறது. இதன் வெட்டு மரம் கரடுமுரடானது; கனமானது; இளஞ்சிவப்பு நிறமுடையது. அறைகலன்கள் செய்வதற்கு மிகுதியும் பயன்படுகிறது
magazine : (க, க.) படைக்கலக் கொட்டில் : போர்க்காலத்தில் படைக்கலங்களையும் போர்த் தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம்; துப்பாக்கி மருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம்
(2) பருவ இதழ் : பல எழுத்தாளர்களின் படைப்புகளடங்கிய புத்தக வடிவிலுள்ள பருவ வெளியீடு
(3) அச்சுக்கோப்பு எந்திரப் பகுதி: அச்சுக்கோப்பு எந்திரத்தின் ஒரு பகுதி. இதில், அச்சு வார்ப்புருக்கள் அல்லது எழுத்துகள் வரிகளாக ஒருங்கிணைப்பதற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்
magnalium : (உலோ.) மக்னாலியம் : அலுமினியமும் மக்னீசியமும் கொண்ட இலேசான உலோகக்கலவை. இதில் 2%-10% மக்னிசியம் கலந்திருக்கும். இந்த உலோகக் கலவை மிகக் கடினமானது. இதனை எளிதில் வார்க்கலாம்; வடிவமைக்கலாம்; இதில் எளிதில் வேலைப்பாடுகள் செய்யலாம்
magnesia : (வேதி.) மக்னீசியா: இதனை வெளிம உயிரகை என்றும் கூறுவர். இது வயிற்றுப் புளிப் பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி
magnesia : (உலோ.) மக்னீசியா: மக்னீசியம் கார்பனேட்டை நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணமாக்குவதன் மூலம் கிடைக்கும் பொருள். இலேசான வெண்ணிறப் பொடியான இது, வயிற்றில் அமிலத் தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகளை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது
magnesium : (உலோ.) மக்னீசியம் : மிக இலேசான உலோகத் தனிமம். இதன்வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலிய வற்றின் இலேசான உறுப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் எளிதில் தீப் பற்றும் தன்மைபுடையது. அதனால், இதில் எந்திரத்தால் வேலைப்பாடுகள் செய்யும்போது தீப்பிடிப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இது கண் கூசவைக்கும் ஒளி விளக்குகளிலும், வாண வேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுகிறது
magnesium silicate : (வண்.) மகனீசியம் சிலிக்கேட் : வெண்மையான வண்ணப் பொருள். இது எதனுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தப் பொருளுக்கு இழைத் தன்மையைக் கொடுக்கிறது
magnet : (மின்.) காந்தம்: வளைவில் (குதிரை லாட) அல்லது சலாகை வகைத் துகள்களைக் கவர்ந்திழுக்கும் இயல்புடைய பொருள்
magnetic amplifiers : (மின்.) காந்த மின்பெருக்கி: நேர் மின்னோட்டம் மற்றும் மாற்று மின்னோட்டச் சுருணையைப் பயன்படுத்தும் ஒரு மின்மாற்றி வகைச் சாதனம்
magnetic brake: (மின்.) காந்தத்தடை : காந்த ஆற்றல் மூலம் இயக்கப்படும் உராய்வு வகை எந்திரத் தடை
magnetic chuck : (உலோ.) காந்த ஏந்தமைவு: எந்திரப் பணிகளில் இரும்பை அல்லது எஃகை ஒரு நிலையில் ஏந்திப் பிடித்து வைப்பதற்குப் பயன்படும் வலிமையான காந்தம்
magnetic chuck: (மின்; பட். ) காந்தப்பற்றி: காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே கொண்டு பயன்படுத்த முடியும்
magnetic circuit : (மின்.) காந்த சுற்று வழி: ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஓர் இடைவெளியையும் கொண்டிருக்கலாம்
magnetic circuit breaker: (மின்.) காந்தச் சுற்றுவழி முறிப்பான்: ஒரு சுற்று வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு மின்காந்தச் சாதனம்
magnetic circuit: (மின்.) காந்தச் சுற்றுவழி: காந்தமேற்றும் ஆற்றலின் விளைவினால் ஆற்றலின் காந்தக் கோடுகளை ஏற்படுத்தும் ஒரு முழுச் சுற்றுவழி
magnetic circuit breaker: (மின்.) காந்தச் சுற்றுவழி முறிப்பான்: ஒரு மின்னியல் சுற்று வழியில் சுமை அதிகமாகும்போது ஒரு காந்தவிசை மூலம் சுற்றுவழியைத் திறக்கின்ற ஒரு காப்புச் சாதனம்
magnetic coil: (மின்.) காந்தச் சுருணை: ஒரு மின்காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின்னோட்டம் பாயும்போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும்
magnet core : (மின்.) காந்த உள்ளீடு: இது பெரும்பாலும் மெல்லிரும்பாக அமைந்திருக்கும். இதனை மையமாகக் கொண்டு கம்பி சுறப்பட்டிருக்கும். இக்கம்பியில் மின்விசை பாயும்போது மின்காந்தம் உண்டாகும்
magnetic cutout: (மின்.) காந்த வெட்டுவாய்: ஒரு மின்சுற்று வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம்
magnetic deflection : காந்த விலக்கம்: காந்தப் புலங்கள் மூலம் மட்டுப்படுத்தப்படும் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்
magnetic density : (மின்.) காந்த அடர்த்தி : பார்க்க:பெருக்கடர்த்தி
magnetic field: (மின்) காந்தப் புலம்: ஒரு காந்தத்தின் அருகிலுள்ள இடப்பகுதி. இதன் வழியே காந்த விசைகள் செயற்படுகின்றன
magnetic flux: (மின்.) காந்தப் பெருக்கடர்த்தி : மின்காந்தம், நிலைக்காந்தம் அல்லது கம்பிச் சுருள் மூலம் உருவாக்கப்படும் காந்தவிசைக் கோடுகள்
magnetic force: (மின்.) காந்த விசை : ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகிச் செல்கிற விசை
magnetic fuel pump : (தானி.) காந்த எரிபொருள் இறைப்பான்: வெற்றிட அமைப்பு முறையின் உதவியின்றி எரிபொருள் வழங்கு வதை முறைப்படுத்தும் மின்விசையால் இயங்கும் எந்திர இறைப்பான்
magnetic hoist: (மின்.) காந்த பாரந்துக்கி: மின்காந்தத்தின் மூலம் பாரத்தைத் தூக்கும் ஒரு பாரந்துாக்கி எந்திரம்
magnetic induction: (மின்.) காந்தத் தூண்டல்: பாய்வுத் திசைக்குச் செங்குத்தாகவுள்ள குறுக்கு வெட்டுப் பரப்பின் ஒர் அலகிலுள்ள காந்தக் கோடுகளின் அல்லது காந்தப் பெருக்கத்தின் எண்ணிக்கை
magnetic line of force: (மின்.) காந்தவிசைக் கோடு: ஒரு திசை காட்டியின் முள்ளுக்கு இணைவாக அமைந்துள்ள காந்தக் கோடு
magnetic materials: (மின்.) காந்தப் பொருட்கள்: காந்தம் ஈர்க்கக் கூடிய இரும்பு, எஃகு, நிக்கல், கோபால்ட் போன்ற பொருட்கள்
magnetic needle: (மின்.) காந்த ஊசி: ஒரு நுண்ணிய எஃகுக் காந்தம். இதனை ஒரு ஆதாரத்தில் வைக்கும்போது, பூமியின் காந்தத் துருவங்களுக்கேற்ப, இயல்பாக வடக்கு-தெற்குத் திசையில் நிற்கும்
வடக்கு நோக்கிய கருவியில் எப்போதும் வடக்கையே காட்டும் காந்த ஊசி
magnetic permeability: (மின்.) காந்தத் தகவு: காந்தத் தாக்குதலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு. ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு
magnetic potential: (மின்.) காந்த ஆற்றல்: காந்தப் புலத்தின் எல்லையிலிருந்து ஒரு காந்தத் துருவ அலகினைக் காந்த ஆற்றல் தேவைப்படும் புள்ளிக்கு நகர்த்துவதற்குத் தேவைப்படும் பணியின் அளவு
magnetic saturation: (மின்.) காந்தப்பூரித நிலை: ஒரு காந்தப் பொருளில் காந்தமூட்டும் பொழுது, எந்த நிலையில் காந்த மூட்டும் விசை அதிகரித்தாலும் அதன் இளக்கி அடர்த்தியில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுவதில்லையோ அந்தநிலை. அந்த நிலையில் காந்தம் ஏறுவது பூரித மடைந்து விட்டது என்று பொருள் magnetic screen or shield : (மின்.) காந்தத் திரை அல்லது கேடயம் : இது உட்புழையான் இரும்புப் பெட்டி. இதன் மையப் பகுதி காந்த விசைக்கோடுகளின்றி அமைக்கப்பட்டிருக்கும்
magnetic switch : (மின்.) காந்த இணைப்பு விசை : மின்காந்தம் மூலம் இயக்கப்படும் அல்லது தட்டுப்படுத்தப்படும் ஓர் இணைப்பு விசை
magnetic whirl: (மின்.) காந்தச் சுழற்சி : மின்னோட்டம் பாயும் ஒவ்வொரு கம்பியைச் சுற்றிலும் ஒரு வடிவமான காந்தப்புலம் நீர்ச் சுழி அல்லது சுழல் போல் அமைந்திருக்கும். இதுவே காந்தச் சுழற்சி எனப்படும். இது தூண்டலற்ற சுருணையைக் குறிப்பதில்லை
magnetism : (மின்.) காந்த விசை : இரும்பு, எஃகு, வேறு பொருள்களுக்குள்ள ஒருவகை ஈர்ப்பு இயல்பு. இந்த இயல்பு காரணமாக, இவை குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு ஈர்ப்புவிசைகளையும் செலுத்துகின்றன
காந்தவியல் : காந்தவிசை பற்றிய விதிகளையும் நிலைகளையும் ஆராயும் அறிவியல் பிரிவு
magnetite : (கனி.) அயக்காந்தம் : (மாக்னட்டைட்) காந்த விசையுடைய இரும்புக் கனிமம் (Fe3O4)
magnetization : (மின்.) காந்த விசையூட்டுதல் : காந்தத்தின் இயல்புகளை ஏற்றல் அல்லது காந்தவிசையினை ஊட்டுதல்
magnetizing current : காந்த மூட்டு மின்னோட்டம் : ஒரு மின் மாற்றியில், மின்மாற்றிக் காப்புப் பெருக்கம் ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் மின்னோட்டம்
magneto : (மின்.) தனிக் காந்த மின்னாக்கி : உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக்கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின்விசை உற்பத்தி செய்வதற்காக நிலைக் காந்தங்களும் ஒரு மின்னகமும் அமைந்திருக்கும்
magneto - hydrodynamics : (விண்.) காந்த நீரியக்கவியல்: நீர்சார்ந்த இயக்க விசை பற்றிய, அல்லது நீர்மத்தின் அல்லது நீர்மத்தின் மீது தாக்கும் ஆற்றல் பற்றிய ஆய்வியல்
magnetometer : (மின்.) காந்தமானி : ஒரு காந்தப்புலத்தின் திசையினையும் விசையினையும் அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி
magneto motive force : (மின்.) காந்தவியக்க விசை : ஒரு முழுமையான காந்தச் சுற்று வழியின் நெடுகிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான காந்தம் ஏற்றும் விசை
magnet steel : காந்த எஃகு : இது சாதாரணமாக, குரோமியமும் மக்னீசியமும் கலந்த உயர்தரன எரியும் மின்னிழைம எஃகினைக் குறிக்கும். இது நிலைக்காந்தங்களுக்குப் பயன்படுகிறது
magnetostriction: (மின்.) காந்த விளைவு : ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் சில தனிமங்களின் பரிமாணத்தில் ஏற்படும் மாறுதல் விளைவு
magnet poles : (மின்.) காந்தத் துருவங்கள் : ஒரு காந்தத்தில் உள்ள மிக அதிக அளவு ஈர்ப்பாற்றல் புள்ளிகள். இவை வடதுருவங்கள், தென்துருவங்கள் எனப்படும்
magnet wire : (மின்.) காந்தக் கம்பி : மின்னகங்கள், புலச் சுருள் கள், தூண்டு சுருள்கள் முதலியவற்றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது. ஒரே செம்புக் கம்பியினாலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிடப்பட்டது; செறிவூட்டப் பெறாதது
magnitude : (விண்.) ஒளிப்பிறக்கம் : விண்மீன்களின் ஒளிப்பிறக்க நிலை. 390மீட்டர் துரத்திலுள்ள ஒரு மெழுகுவர்த்திப் பிரம்பின் ஒளிர்வு, முதன்மை நிலை ஒளிப்பிறக்கம் எனப்படும்
mahlstick : (விண்.) தாங்கு கோல் :ஒவியம் வரைபவர்கள். இடது கைத்தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்
mahogany : (தாவ) சீமை நூக்கு: உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள் மெக்சிக்கோ, கொலம்பியா வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற்றில் மிகுதியாக வளர்கிறது. இம்மரம் வெட்டியவுடன் இளஞ்சிவப்பு அல்லது வஞ்சிரம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வெயில் படப்படக் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும். அடர்த்தி வேறுபடும். கரணைகள் கவர்ச்சியான உருவங்களில் அமைந்திருக்கும்
mahogany, Philippine: (தாவ.) ஃபிலிப்பைன் நூக்கு : ஃபிலிப்பைன் தீவுகளில் வளரும் சீமை நூக்கு மரவகை
main : (குளி.பத.) தலைப்பெருங் குழாய் : பல்வேறு கிளைக்குழாய்களிலிருந்து நீர் வழங்குவதற்கு அல்லது நீரைச் சேகரிப்பதற்குப் பயன்படும் பெரிய குழாய்
main bearings : (தானி.) முதன்மைத் தாங்கிகள் : உந்து ஊர்தி எஞ்சின்களில் வணரி அச்சுத்தண்டினைத் தாங்கி நிற்கும் தாங்கிகள் முதன்மைத் தாங்கிகள் ஆகும்
mains : (மின்.) மின் வாய்கள் : கிளைமின் சுற்று வழிகளுக்கு மின் விசை வழங்குகிற மின்னியல் கடத்திகள்
main shaft : (எந்.) முதன்மை சுழல் தண்டு : எஞ்சினிலிருந்து அல்லது இயக்கியிலிருந்து நேரடியாக மின்விசையைப் பெற்று மற்ற உறுப்புகளுக்கு விசையை அனுப்புகிற சுழல்தண்டு
main supporting surface : (வானூ) முதன்மை ஆதாரப்பரப்பு : விமானத்தில், இறகுகளின் மேற்பரப்பு. இப்பரப்பு விமானம் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது
major axis : நெட்டச்சு : ஒரு நீள் வட்டத்தின் நீள் விட்டம்
major diameter: (எந்.) நீள் வட்டம்: இதனைப் 'புற விட்டம்' என்றும் அழைப்பர். ஒரு திருகில் அல்லது சுயாணியில் உள்ள மிகப் பெரிய விட்டம்
make up: (அச்சு.) பக்கத் தயாரிப்பு: அச்சுக்கலையில் அச்சுக் கோத்த எழுத்துக்களைப் பக்கங்களாகத் தயாரித்தல்
make-up rule: (அச்சு.) பக்கத் தயாரிப்பு வரித்தகடு: அச்சுக்கலையில் பக்கங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எஃகு வரித் தகடு
malleable: (உலோ.) தகடாக்கத் திறன்: உலோகங்களின் வகையில் அடித்து, நீட்டி, வளைத்து, தகடாக்கத தக்க தன்மை malachite : (கணி.) மாலாஷைட்: தாமிரத் தாதுக்களில் ஒன்று. பச்சை நிறமான, அடிப்படைத் தாமிரக் கார்போனேட். மேலேட்டுப் படிவங்களாகப் பெருமளவில் கிடைக்கிறது. 'மலைப்பச்சை' என்னும் பெயரில் வண்ணப் பொருளாகப் பயன்படுகிறது
malleable: நெகிழ் திறனுடைய: தங்கம் போன்ற உலோகங்களை உடைந்துவிடாதபடி தகடாக நீட்டத்தக்க நெகிழ்திறத் தன்மையுடைய
malleable cast iron: (உலோக.) நெகிழ்திற வார்ப்பிரும்பு : ஒரளவுக்குக் கரிம நீக்கம் செய்ய்ப்பட்ட வார்ப்பிரும்பு. இது சாதாரண வார்ப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். இதில் கட்டமைப்புக் கரணையாக இருப்பதறகுப் பதிலாக இழை இருக்கும். கடும் அதிர்ச்சிக்குள்ளாகும் உறுப்புகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது
malleablizing: (உலோக.) நெகிழ்திறனுரட்டுதல்: வெண்மையான வார்ப்பிரும்பிலிருந்து பெரும்பாலான கார்பனை அகற்றுவதற்காக அல்லது கார்பனைச் செம்பதமாக்கிய கார்பனாக மாற்றுவதற்காகப் பதப்படுத்தும் முறை
mallet: கொட்டாப்புளி: மரச்சுத்தி
maltose: (வேதி ) மால்ட்டோஸ்: மாவூறலிலிருந்து எடுக்கப்படும் படிக் வடிவச்சர்க்கரை. ரொட்டி தயாரிக்கப் பயன்படுகிறது
management: மேலாண்மை : நிருவாகம் செய்தல்; நெறிப்படுத்துதல்; கண்காணித்தல்; கட்டுப்படுத்துதல்
mandrel: (எந்.) குறுகு தண்டு: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் நடுவச்சு. கடைசல் பிடிக்க வேண்டிய பொருளை இதில் பொருத்தி, இதனைச் சுழலச் செய்து கடைசல் வேலை செய்வார்கள்
mandrel stake: (உலோ. வே.) கடைசல் நடுவச்சு : கடைசல்பிடிக்கும் பொறியில் குழல்வடிவம் உருவாக்கப்பயன்படும் நீள் உருளைக் கோல்
maneuver : (வானூ.) நுட்ப இயக்கம் : (1) விமானத்தைத் தேர்ச்சித் திறனுடன் மிக நுட்பமாக இயக்குதல் (2) விமானத்தில் சுழன்று பறந்து சாதனை புரிதல்
maneuverability : (வானூ.) நுட்ப இயக்கத் திறன் : விமானத்தை எளிதாக இயக்குவதற்கு இடமளிக்கும் நுட்ப இயக்கத்திறன்
manganese: (கணி.) மாங்கனீஸ் (மங்கனம்) : கடினமான, எளிதில் உடைந்து போகக்கூடிய உலோகத் தனிமம். பழுப்பான வெண்மை நிறம் முதல் சிவப்பு நிறம் வரை பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது காந்தத் தன்மையற்றது. எஃகு கண்ணாடி, வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
manganese bronze : (உலோ.) மாங்கனீஸ் வெண்கலம் : ஒர் உலோகக் கலவை. இதில் 55%-60% செம்பு, 38% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ், அலுமினியம், இரும்பு, ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்படுகிறது
manganese dioxide : (மின்.) மாங்கனீஸ் டையாக்சைடு: மின் கலங்களில் மின் முனைப்பு நீக்கப் பொருளாகப் பயன்படும் வேதியியல் பொருள்
manganese steel: (உலோ.) மாங்கனீஸ் எஃகு : இதில் 0.20%-0.50% கார்பனும் 1.00%-1.30% மாங்கனீசும் கலந்திருக்கும். இது மிக அதிக அளவு விறைப்புத் திறன் உடையது 3.5% நிக்கல் எஃகுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள மாங்கனீஸ் அளவை அதிகரிப்பதால் இது முறியும் தன்மையுடையதாகிறது
manganin : (உலோ.) மாங்கானின் : செம்பு, நிக்கல், அயமாங்கனீஸ் கலந்த உலோகக் கலவை, தரமான தடைச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
mangling : (நெச.) சலவை மடிப்பு: சலவைப் பொறியிட்டுத் துணிகளை அழுத்தி மடித்தல்
manhole : (கம்.) சாக்கடை வாயிற்புழை : புதை சாக்கடைக்குத் தெரு மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு
manifold : (உலோ.) பல்வாயில் குழாய் : குடிநீர்த் தொட்டிகளின் தொகுதிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படும் பல வாயில்கள் உடைய குழாய்
manifold writer : படிபெருக்கி : மைத்தாள் படியெடுக்கும் கருவி
manifold: (தானி.) புறம்போக்குக் குழாய் : உந்து ஊர்தி எஞ்சினில் உள்ள புறம் போக்குப் பல்புழை வாய்க்குழாய்கள். இது ஒவ்வொரு நீள் உருளையிலிருந்தும் புறம் போக்கு வாயுக்களைத் தனியொரு புறம் போக்குக் குழாயினுள் செலுத்துவதற்குப் பயன்படுகிறது
manifold paper: (அச்சு.) பல்படித் தாள்: பல படிகளை ஒருங்கே எடுப்பதற்குப் பயன்படும் மென்மையான காகிதம்
manifold vacuum : (தானி.) புறம் போக்குக் குழாய் வெற்றிடம் : எஞ்சின் இயங்கும்போது புறம் போக்குக் குழாயிலுள்ள வாயு மண்டல அழுத்த நிலை
manila : சணல் தாள் : சிப்பம் கட்டுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற அல்லது மஞ்சள் பழுப்பு நிறக் காகிதம்
manometer : (இயற்.) அழுத்தமானி : ஆவி, வாயு போன்றவற்றின் அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி
mansard roof: (க.க.) இரு சரிவு மோடு: மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச் சாய்வு செங்குத்தாகவுள்ள இரு சரிவு மோடு
mansion : (க.க.) மாளிகை : ஒரு பெரிய அலங்காரமான வீடு
mantel: (க.க.) தண்டய: அடுப்பங்கரையிலுள்ள தண்டயப் பலகை
mantissa : (கணி.) மடக்கைப் பதின்மானம் : இயற்கணிதத்தில் ஒரு மடக்கையின் தசமப்பகுதி அல்லது பின்னப்பகுதி
manual : (பட்.) (1) கையேடு: அறிவுறுத்தங்கள் அடங்கிய சிறு குறிப்பு ஏடு (2) கைவேலை கைகளால் செய்யப்படும் பணிகள்
manual arts : கைவேலைப்பாடு : கைகளினால் செய்யப்படும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்
manual switch : (தானி.) ஆளியக்க விசை : உந்து ஊர்திகளில் கைகளால் அல்லது கால்களால் இயக்கப்படும் விசை. இது மற்ற வழிகளில் இயக்கப்படும் விசைக்கு மாறானது
manufacturing: (தானி.) ஆக்கத்தொழில் : மனிதரின் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற பொருள்களை உற்பத்தி செய்தல்
manuscript : (அச்சு.) எழுத்துபடி : அச்சிடுவதற்குக் கையால் எழுதி அல்லது தட்டச்சு செய்து கொடுக்கப்படும் மூல வரைபடி
mar : பாழ்படுத்து : அழித்தல் அல்லது முழுவதும் பாழ்படுத்துதல்
marble : (க.க.) (1) சலவைக் கல்; பளிங்குக் கல்: வெண்மை, கரும்பழுப்பு, பழுப்பு வண்ணங்களிலுள்ள ஒரு வகைச் சுண்ணாம்புக்கல். கட்டிடங்களின் உட்புற, வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகளுக்கு மிகுதியும் பயன்படுகிறது. (2) பளிங்குத் தாள்: பளிங்கு போல் பளபளப்பாகத் தோற்றமளிக்கும் காகிதம்
marble dust: பளிங்குத் தூள்: அரைத்துத் தூளாக்கிய சுண்ணாம் புக்கல் மெருகு. சுண்ணத்தாள் தயாரிக்கப் பயன்படுகிறது
marblizing: (வண்.) பளிங்குத் தோற்றமளித்தல்: பல வண்ணச் சலவைக்கல் தோற்றமளிக்குமாறு மெருகேற்றுதல்
marbling: பளிங்கு வண்ணப்பூச்சு: பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல்
marconi antenna: மார்க்கோனி வானலைவாங்கி : இயங்குவதற்குத் தரையைச் சார்ந்திருக்கும் ஒரு வகை வானலை வாங்கி
Marconi, Gugliemo : (மின்.) மார்க்கோனி, குக்ளிமோ(1874-1937): கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த இத்தாலியப் புத்தமைப்பாளர். அட்லாண்டிக் கடலைக் கடந்து கம்பியில்லாத் தந்திமூலம் செய்தி அனுப்புவதில் 1901 இல் வெற்றியடைந்தார் 1909 இல் சி. எஃப் பிரானுடன் சேர்ந்து கூட்டாக நோபல்பரிசு பெற்றார்
margin : (அச்சு.) பக்க ஓரம் : அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஒர இடம்
marginal note : (அச்சு.) ஓரக் குறிப்பு : பக்கங்களின் ஓர் இடத்தில் எழுதப்படும் குறிப்புகள்
marine glue : (மர.வே.) கடற்பசைப் பொருள் : ஒரு பகுதி கச்சா ரப்பர், இரு பகுதி அவலரக்கு, மூன்று பகுதி நிலக்கீல் கொண்ட பசைப் பொருள்
marker generator : (மின்.) குறியிடு மின்னாக்கி : வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒருங்கிணைப்பு சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் குறியிடு. அலைவெண்கள் 'பிப்' என்ற ஒலியை எழுப்பும்
marking - ink : குறியிடு மை : துணி குறியிடும் மை
marking awl: (மர.வே.) குறியிடு தமருசி: கடினமான மரத்தில் குறியிடுவதற்கான கூர்மையான எஃகுக் கருவி
marking machine: (மர.வே.) குறியிடு பொறி: வாணிக முத்திரைகள் புனைவுரிமைத் தேதிகள், ஆகியவற்றை வெட்டுக் கருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம் marl : (மண்.) சுண்ணக்கரிகை உரம் : களிமுண்ணும், சுண்ணக்கரிகையும் கலந்த மண்வள உரச்சத்து
marquetry : (மர.வே.) உள் இழைப்பு வேலை: மரத் தளவாடங்களில் உள் இழைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல். அரிதாக தந்தம், எலும்பு, முத்து ஆகியவற்றிலும் இந்த வேலைப்பாடு செய்வதுண்டு
marsh gas or methane: (வேதி.) சதுப்பு வாயு அல்லது மீத்தேன் : (CH4) இலேசான, நெடியற்ற, தீப்பற்றக்கூடிய, ஹைட்ரோ கார்பன் என்னும் வாயு. சதுப்பு நிலங்களிலும், சுரங்கங்களிலும் கரிமப் பொருள்கள் சிதைவுறுவதால் இயற்கையாகக் கிடைக்கிற்து. பல கரிமப் பொருள்களை வாலை வடிப்பதன் மூலமும் பெறப்படுகிறது
marsupials: (உயி.) பைம்மாவினம்: வயிற்றில் பையுடைய கங்காரு போன்ற பாலூட்டி உயிரினம். இவை இந்தப் பையில் தன் குட்டிகளைக் கொண்டு செல்கின்றன
martensite : (உலோ.) மார்ட்டென்சைட் : மிகக் கடினமான எஃகில் முதன்மைக் கட்டமைப்புத் தனிமம்
Martensit alloy steels : (உலோ.) மார்ட்டன்சிட்டிக் உலோகக் கலவை : எஃகு முழுமையாக மார்ட்டன்சைட் கொண்ட ஒரு வகை எஃகு. மார்ட்டன்சைட் என்பது, கார்பனும், ஆல்ஃபாவும் (இரும்புப் படிகங்கள்) அணுவியக்கச் சிதறல் மூலம் உண்டாவது. இந்த வகை எஃகு, மிகக் கடினமானது; ஆயினும், பதப்படுத்திய அல்லது மென்மையான எஃகினைப் போன்று அத்துணை கடினமானதன்று. ஆஸ்டினைட்டை 300°C-வெப்ப நிலையில். மெல்ல மெல்லக் குளிர வைப்பதன் மூலம் இது படிகிறது. புகழ்பெற்ற ஜெர்மன் உலோகவியலறிஞர் பேராசிரியர் ஏ. மார்ட்டன்ஸ் என்பாரின் பெயரில் இது அழைக்கப்படுகிறது
mash seam welding : (பற்ற.) மசிவு மடிப்புப் பற்றவைப்பு : இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்றவைக்கப்படுகிறது
mask : முகமுடி : முகத்தை மூடிக் கொள்வதற்கு விசித்திரமான வடிவங்களில் செய்யப்பட்ட பொம்மைத் தலைகள்
masonite : மாசோனைட் : மர இழையிலான மின்காப்பு அட்டையின் வாணிகப் பெயர். இது பல்வேறு வகையான மேற்பரப்பு மாதிரிகளில் தயாரிக்கப்படுகிறது. இது பொட்டிப்புகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது
masonry : கட்டுமான வேலை : கல், செங்கல் போன்றவற்றால் கட்டிடங்கள் கட்டும் வேலை
mass : பொருண்மை : இயற்பியலில், ஒரு திரளில் செறிந்தடங்கியுள்ள பொருளின் அளவு
அச்சுக் கலையில் ஒரு பக்க அச்செழுத்துச் செறிவுப் பகுதிகள்
mass : (குளி.பத.) பொருண்மை : குறிப்பிட்ட உருவமில்லாத ஒரு பொருளில் அடங்கியுள்ள பொருளின் அளவு
mass production : பேரளவு உற்பத்தி: எந்திரக் கருவிகளைப் பயன் படுத்தித் திட்டமிடப்பட்ட பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல்
mass spectrograph : (இயற்.) பொருண்மை வண்ணப்பட்டை ஒளிப் பதிவுக் கருவி : நேர்மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் பொருண்மைகளுக்கேற்ப தனியாகப் பிரிக்கும் கருவி. படத்தில், அணுக்களின் அயனிகள் முதலில் 'E' என்ற தகடுகளுக்கிடையே செல்லும்போது, கற்றை கீழ் நோக்கி வளைகிறது. பின்னர் காகிதத்திற்கு செங்கோணத்திலுள்ள 'M' 'என்ற காந்தப்புலம் கற்றையை மேல்நோக்கி வளைக்கிறது. இவ்வாறாக ஒரே பொருண்மையான துகள்கள் அனைத்தும் ஒளிப்படத் தகட்டிலிருக்கும் 'μ' என்ற புள்ளிக்கு வருகின்றன. வேறு பொருண்மையுள்ள துகள்கள் மற்றப் புள்ளிகளுக்கு வருகின்றன. பொருண்மை ஊடகம் மூலம் இந்தத் துகள்களைப் பார்க்கலாம்
mass-velocity relation: (இயற்.) பொருண்மை - விரைவு வீதத் தொடர்பு : ஒரு பொருள் வேகமாக இயங்கும்போது, அதன் பொருண்மையானது, ஒளியின் வேகத்தில் பொருண்மை அளவிட முடியாத அளவுக்கு மிக உயர்ந்திருக்கும் வரையில் அதிகரிக்கிறது
master cylinder : (தானி.) தலைமை நீள் உருளை: உந்து தண்டு உடைய பாய்மரப் பொருளடங்கிய நீள் உருளை. இதன் மூலம் கால் மிதியை அழுத்தித் தடுப்பு செய்யப்படுகிறது
master gauge : தலைமை அளவி: அன்றாடம் பயன்படும் அளவிகளின் துல்லியத்தை அல்வப்போது சோதனை செய்து பார்ப்பதற்குப் பயன்படும் அளவி
master keyed: (பட்.) ஆணித்திறவு: பல பூட்டுகளைத் திறக்கவல்ல திறவுகோல்
master switch : (மின்.) தலைமை விசை : ஒரு பிரதான மின்விசை. இதன்மூலம் மற்ற விசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்
master taper : (எந்.) தலைமை அளவை வார் : செந்நிறமான அளவை வார். இதன் மூலம் உட்புறம் அல்லது வெளிப்புறம் மற்ற அளவை வார்கள் அளவிடப்படுகின்றன
master workman : தலைமைத் திறனாளர் : சாதாரண அளவை விட அதிகத் தேர்ச்சித் திறன் வாய்ந்த தொழிலாளர். 'தலைமைப் பொறிவினைஞர்' என்பது பட்டறை மேன்முனையாளையும் கண்காணிப்பாளர்களையும் குறிக்கும்
msstic : பூனைக்கண் குங்கிலியம் (கல் புகைக்கீல்) : நிலக்கீலினால் இயற்கையாகப் பூரிதமடைந்த மணற் பாறை. தளம் பாவுவதற்கு மிகவும் உகந்தது
mat : (குழை.) பாய் : குழைமவியலில் நெசவு செய்யப்படாத இழைக் கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருட்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும்
mat board : பாய் அட்டை : படச் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் கனமான காகித அட்டை
matched boards : (மர.வே.) ஒட்டிணைப் பலகை : ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்
matched metal moulding : (குழை.) ஒட்டினை உலோக வார்ப் படம் : இரு உலோக வார்ப்படங் களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம்
mah plates : (வார்.) ஒட்டிணைத் தகடுகள் : தோரணிகள் ஏற்றப் பட்ட உலோக அல்லது மரத் தகடுகள். பெருமளவு எண்ணிக்கையிலான வார்ப்படங்கள் தேவைப்படும்போது உற்பத்தியை அதிகமாக்க இது பயன்படுகிறது
mated position : (தானி.) இணைவுறு நிலை : நழுவப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணைவுறு நிலையில் இருப்பதாகக் கூறப்படும்
materia medica : (மருந்.) மருந்துப் பொருள் ஆய்வு : மருந்துப் பொருட்கள் எவ்வாறு கிடைக்கின்றன, எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற என்பது பற்றிய ஆய்வு
material well: (குழை.) பொருள் குழிவிடம்: அழுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வார்ப்புப் பொருளை வைப்பதற்குரிய குழிவான இடம்
mat finish : பாய்முறைச் செப்பம்: பளபளப்பின்றி மங்கலாக இறுதிச் செப்பமிடுதல்
mathematics : கணிதவியல் : வண்ணளவுகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் அறிவியல்
matrix: (அச்சு.) அச்சு வார்ப்புரு: அச்செழுத்துக்களை வார்த்தெடுக்கும் எந்திரத்திலிருந்து எடுக்கப்படும் எழுத்து வார்ப்புருவின் பகுதி. இந்த அச்சு. வார்ப்புருக்களிலிருந்து அச்சு வார்ப்புருத் தகடுகளைத் தயாரிக்கப்படும் கனத்த அட்டையினையும் இது குறிக்கும்
matt : சரவைப் பரப்பு : கரட்டுத் தளமான சரவை வேலைப்பாடுடைய மேற்பரப்பு
matte : (உலோக.) கலவைச் செம்பு : முழுமையாகச்சுத்திகரித்து எடுக்கப்படாத செம்பு. வேறு பல உலோகங்கள் அடங்கிய கலவையையும் இது குறிக்கும்
matter : (இயற்.) சடப்பொருள் : எடையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய பருப்பொருள்
maul : சம்மட்டி : கனமான சம்மடடிக்கட்டை
mausoleum : (க.க.) கல்லறை மாடம் : வீறார்ந்த கல்லறை மாடம்
mauve : ஊதாச் சாயம் : ஒள்ளிய மெல் ஊதாநிறச் சாயம்
maxhete : (உலோ.) மாக்செட் : நிக்கல், குரோமியம், டங்ஸ்டன், செம்பு, சிலிக்கன் அடங்கிய கலவை எஃகு. இது அரிமானத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கக் கூடியது. கொள்கலன் குழாய்கள், உலைகளின் உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
maximum : (கணி.) பெருமம் : (1) அனைத்திலும் மிகப் பெரிய தான அளவு. (2) ஒரு சார்பலன் மூலம் இயன்ற வரையிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்டத்தக்க ஒரு மதிப்பு
maximum power transfer: (மின்.) பெரும விசை மாற்றம் : மின்சுமையின் தடையானது, மின் ஆதாரத்தின் உள்தடைக்குச் சமமாக இருக்கும் போது பெரும விசைமாற்ற நிலை உண்டாகிறது
maximum range : (வானூ.) பெரும வீச்செல்லை: ஒரு விமானம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அளவான வேகத்தில் அனைத்து உயரங்களிலும் மிகப் பெருமள வில் பறக்கக்கூடிய தொலைவு
maximum revolutions : (வானூ.) பெருமச் சுழற்சிகள்: ஒரு நிமிடத்தில் மிக அதிக அளவில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கை. இது பெருமக் குதிரைத் திறனுக்கு நேரிணையானது
maximum voltage : (மின்.) பெரும மின்னழுத்தம் : ஒரு மாற்று மின்னியக்க வரிசையில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் உண்டாகும் மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம்
Maxwell, James Clerk: (மின்.) மாக்ஸ்வெல், ஜேம்ஸ் கிளர்க் (1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற நூலை 1873இல் எழுதினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். கேவண்டிஷ் ஆய்வுக்கூடம் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டது
mean : (கணி.) சராசரி : இயற் கணிதத்தில் இரண்டு எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள எண்
mean chord of a wing: (வானூ.) இறகின் இடைநிலை இயைபளவு : விமானத்தில் இறகின் பரப்பளவை ஒர் இறகின் முனை வரையிலான இடையகல அளவினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவு
mean line : (வானூ.) இடைநிலைக் கோடு : விமானத்தின் உருவரைப் படிவப் படத்தில் மேல் கீழ் உருவரைகளுக்கிடையிலான இடைநிலைக்கோடு
'measure : (அச்சு.) அகலளவு : அச்சுக்கலையில் ஒரு பத்தியின் அல்லது அச்சுப் பக்கத்தின் அகலம் அல்லது ஒரு பணியின் அகலம்
measurement : அளவு : வடிவளவு; பரப்பளவு; கொள்ளளவு அளவிடுதல்
measures : அளவைகள் : நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்ற அளவைகள். இவற்றில் மெட்ரிக் முறை, ஆங்கில முறை போன்ற முறைகள் உண்டு
measuring machine : (பட்.) அளவிடு எந்திரம் : தேவையான வடிவத்திலுள்ள ஒரு அளவுமானி. இதனைக் கொண்டு குழாய்கள் துளைகள் முதலியவற்றை நுட்பமாக அளவிட உதவுகிறது. இவற்றுள் சில இப்போது எந்திர முறைகளுக்குப் பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்தி இயக்குகின்றன
measuring tape : அளவு நாடா : அளவுகள் குறிப்பிடப்பட்ட எஃகினாலான அல்லது நார்த் துணியினாலான நாடா. இது சாதாரணமாக 127-254 செ.மீ. நீளமிருக்கும். இதனைப் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுவோர், நில அளவையாளர்கள் போன்றோர் பயன்படுத்துகின்றனர்
mechanic : பொறிவினைஞர்: எந்திரங்களைப் பழுது பார்க்கிற அல்லது எந்திரங்களை அல்லது எந்திர உறுப்புகளை ஒருங்கிண்ணக்கிற தேர்ச்சி பெற்ற கைவினைஞர்
mechanical brakes: (தானி.) எந்திரத் தடை : உந்து ஊர்திகலுள்ள தடையமைப்பு முறை, இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச்சலாகைகள் நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள் ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது
mechanical drawing : எந்திர வரைப்படம் : கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன
mechanical efficiency : (எந்.) எந்திரத் திறன் : (1) ஓர் எஞ்சினின் எந்திரத்திறன் எனப்து அதன் தடைக் குதிரை விசைக்கும், அதன் குறிப்பிடப்பட்ட குதிரை விசைக்கு மிடையிலான விகிதமாகும்
எந்திரத் திறன் = தடைக் குதிரை விசை/குறிப்பிடப்பட்ட குதிரை விசை
(2) இயற்பியல், உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கு மிடையிலான விகிதம்
வெளிப்பாடு/உட்பாடு = எந்திரத் திறன்
mechanical engineer : எந்திரப் பொறியாளர் : எந்திரங்களை அல்லது எந்திர சாதனங்களை வடிவமைத்து, உருவாக்கிப் பயன்படுத்துவதில் வல்லுநர்
mechanical engineering : எந்திரப் பொறியியல் : விசையை உற்பத்தி செய்து அனுப்பும் எந்திர சாதனங்களை வடிவமைத்து உருவாக்குதல் தொடர்பான அறிவியல்
mechanical vibrator : (மின்.) எந்திர அதிர்ப்பி: எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம்
mechanic arts : கம்மியர் கலை : கைவினையில் பட்டறையிலும் கருவிகளிலும், எந்திரத்திலும் பயிற்சி பெறுதல்
mechanics : இயக்கவியல் : பொருள்களின் மீது விசையின் விளைவுபற்றி ஆராயும் அறிவியல் பிரிவு
mechanization : (தானி.) எந்திரமாக்குதல் : எந்திரங்களைத் தானியங்கு எந்திரங்களாக மாற்றுதல்
medallion : (க.க) பதக்கம் : (1) பட்டயத் தகடு (2) ஒரு பெரிய பதக்கம்
median : மையநிலை : நடுவூடான நிலை; சராசரி
medium carbon steel : (உலோ.) நடுத்தர கார்பன் எஃகு : 0.30% முதல் 0.70% வரை கார்பன் அடங்கிய எஃகு
medium wave : நடுநிலை ஒலிஅலை : வானொலியில் 100மீட்டருக்கும் 800 மீட்டருக்கும் இடைப்பட்ட நீட்சியுடைய ஒலி அலை
medulla oblongata : (உட.) பின் மூளை : மூளையின் பின் பகுதி. இது, சுவாசம், இதயத் துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்பபடுத்துகிறது
meg or mega : (மின்.) பத்து லட்சம் : மின்னியலில் பத்து லட்சம் அளவினைக் குறிக்கும் சொல்
mega volt : (மின்.) நூறு கோடி ஓல்ட் : மின்னியலில் பத்து லட்சம் ஒல்ட் மின்னியக்க விசையைக் குறிக்கும் அலகு
megger : (மின்.) தடையாற்றல் மானி : மின்தடைக் காப்பின் தடையாற்றல் மானி
meg-ohm: மெக்.ஓம் : மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு melting point : (உலோ. ) உருகுநிலை : உலோகங்கள் திடநிலையிருந்து திரவநிலைக்கு மாறுவதற்குரிய வெப்ப நிலை
melting zone : (வார்.) உருகு மண்டலம்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை, அடுப்பில், உலோகம் உருகுவதற்கான ஊதுலைக் குழாய்களுக்கு மேலுள்ள பகுதி
memory circuit: (மின்.) நினைவக மின்சுற்றுவழி: தகவல்களைச் சேமித்து வைப்பதற்கான ஒரு மின் சுற்றுவழி. இந்த மின்சுற்றுவழி தொடுநிலையிலோ விடு நிலையிலோ அமைந்திருக்கும்
Mendel-ism: (உயி.) மெண்டல் கோட்பாடு: ஜி. ஜே. மெண்டல் என்ற தாவரவியலறிஞர் கண்டுபிடித்த மரபுப் பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளாக்கும் கோட்பாடு. இதன்படி, ஒன்று அல்லது பிற மரபுக்காரணிகள் (பட்டாணியின் உயரம் அல்லது குள்ளம்) அல்லது கண்களின் நீல நிறம் அல்லது பழுப்பு நிறம்), பாலின உயிரணுக்களில் தனித் தனியே கொண்டு செல்லப்படுகின்றன; இணைப்பினால் மாறுதலடைவதில்லை. ஒரு குழந்தை, தாய்-தந்தை இருவரிடமிருந்தும் 'A' என்னும் ஒரே மரபுப் பண்பினைப் பெறுகிறது என்றால், அந்தப் பண்பினைப் பொறுத்த வரையில் அக்குழந்தை தூய்மையானது. தந்தையிடமிருந்து 'A' என்ற பண்பினையும், தாயிடமிருந்து 'B' என்ற பண்பினையும் அக்குழந்தை பெற்றிருந்தால், அக்குழந்தை 'AB' என்ற ஒரு கலப்புக் குழந்தை ஆகும்
meniere's disease: (நோ.) மெனியர் நோய்: உட்காதில் உண்டாகும் ஒரு வகை நோய். இதனால், தலைவலி, செவிட்டுத் தன்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகின்றன
meninges: (உட.) மூளைக் கவிகைச் சவ்வு: தண்டு மூளையை மூடியிருக்கும் சவ்வு
meningitis: (உட.) மூளைச் சவ்வு அழற்சி: தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய்
meningocele: (உட.) மூளை புற்று: தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி
mensuration: (கணி.) அளவியல்: நீளம், பரப்பு, கனஅளவு முதலியவற்றை அளப்பதற்கான கணிதப் பிரிவு
menthol: பச்சைக் கற்பூரம்: கடுமையான வாசனையுடைய வெண்ணிறமான, பனிக்கட்டி போன்ற பொருள். இது கற்பூரம் போன்று இருக்கும். இதனைத் தோலில் தேய்த்தால் குளிர்ச்சியுணர்வு உண்டாகும்
mer : (குழை.) மீச்சேர்ம கட்டலகு: மீச்சேர்மத்தின் கட்டுமான அலகு
mercerize : (வேதி.) துணிப் பக்குவமாக்குதல்: நூல், துணி ஆகியவற்றுக்குப் பளப்பளிப்பும் உறுதியும் கொடுப்பதற்காகக் கடுங்கார உப்பிட்டுப் பக்குவப்படுத்துதல்
merchant bar: (உலோ.) வாணிக இரும்புச் சலாகை: விற்பனை செய்வதற்கு ஏற்பக் குறுகலாக வெட்டப்பட்ட இரும்புச் சலாகை
mercury: (வேதி.) பாதரசம்: வெள்ளி போல் வெண்ணிறமான திரவ உலோகும். இதன் எடை மானம் 13.6. இரசக் கந்தகை அல்லது பாதரச சல்ஃபைடு (Hgs) மூலம் கிடைக்கிறது. சிவப்புப் படிக வடிவில் கிடைக்கிறது. இரசக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது
mercury arc rectifier: (மின்.) பாதரசச் சுடர் திருத்தி: மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பீட்டர் கூப்பர் ஹெவிட் கண்டு பிடித்த ஒரு சாதனம்
mercury vapour lamp: (மின்.) பாதரச ஆவி விளக்கு: கூப்பர், ஹெவிட் உருவாக்கிய விளக்கு. இதில் பாதரச ஆவி வழியே மின்னோட்டம் செலுத்துவதன் மூலம் விளக்கு உண்டாக்கப்படுகிறது
mercury vapour rectifier: (மின்.) பாதரச ஆவி திருத்தி: உயர்ந்த அளவு வெற்றிடத்தைப் பயன்படுத்தாமல், பாதரச ஆவியைப் பயன்படுத்துகிறது. சூடான எதிர்முனை, இருமுனைக் குழல்
meridian : (இயற்) வான் கோள மைவரை வட்டம்: (1) உச்ச நீசங்களையும் வான்கோளத்துருவங்களையும் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம்
(2) வடதுருவம், தென்துருவம் வழியாகச் சென்று மீண்டும் வட துருவ தீர்க்காம்சரேகையைச் சுற்றி அடையும் கற்பனைக்கோடு
mesh: (பட்.) வலைக்கண்: வலைப் பின்னல் அமைப்பு
mesocolloids: (வேதி.) மெசோ கொலாய்டுகள்: ஹெமிகொலாய்டுகளுக்கும் யூகொலாய்டுகளுக்கும் இடைப்பட்ட மீச்சேர்மங்கள் அதாவது, 100 முதல் 1000 வரை மீச்சேர்ம இணைவுடையவை
metabolism: (உட.) ஊன்ம ஆக்கச் சிதைவு மாறுபாடு: உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து. உயிர்ச்சத் தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப் பொருள் மாறுபாடு
metacarpal bones: (உட.) உள்ளங்கை எலும்பு : மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி
metal: உலோக: அடிப்படையான உலோகப்பொருட்களை மட்டுமின்றி நெகிழ்திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருட்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும்
metal arc welding: உலோகச்சுடர் பற்றவைப்பு: இது ஒரு வகை சுடர் பற்றவைப்பு. இதில் பற்றாசு இட்டு நிரப்புவதற்கான உலோகத்தை மின்முனை அளிக்கிறது
metal dip brazing : உலோக அமிழ்வுப் பற்றரசு இணைப்பு : உருக்கிய உலோக்த்தில் அமிழ்வித்து நிரப்பு உலோகத்தைப் பெறுவதற்குரிய ஒரு செய்முறை
metalene nails: உலோகப் பொருத்தாணி : வட்டமான, அல்லது தீட்டையான பெரிய கொண்டைகளையுடைய ஆணிகள். அறைகலன்களில் தோல் இழைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
metal filament: (மின்.) உலோக இழை: ஒரு வகை மின் தடத்தி, இதனை வெண்சுடர் விளக்கில் சூடாக்கும்போது இது ஒளியுடன் எரியும்
metal finishing: உலோக மெருகிடல்: உலோக வேலைப்பாட்டில் வேலைப்பாடு செய்யப்படும் பொருளுக்கு இறுதியாகப் பள பளப்பர்ன மெருகூட்டுதல்
metal furniture: (அச்சு.) உலோக அச்சுத்துண்டு : அச்சுக் கோத்துப் பக்கங்களை முடுக்கும் போது இடைவெளிகளை நிரப்புவதற்காகப் பயன்படும் உலோகத் துண்டு. இது அச்செழுத்தின் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும்
metalizing: (குழைம.) உலோக உறையிடல்: பிளாஸ்டிக்கிற்கு ஒரு மெல்லிய உலோகப் படலத்தின் மூலம் உறையிடுதல்
metal lacquer: உலோக மெருகெண்ணெய் : உலோகத்தினாலான பொருட்களுக்கு மெருகெண்ணெயாகப் பயன்படுத்தப்படும் வெடியகப் பஞ்சின் அமில மற்றும் மெதில் அசிட்டோ கரைசல்கள்
metallic rectifier: (மின்.) உலோகத்திருத்தி: 'எலெக்ட்ரான்கள் தாமிரத்திலிருந்து தாமிர ஆக்சைடுக்குப் பாய்கின்றன; ஆனால், தாமிர ஆக்சைடிலிருந்து தாமிரத்திற்குப் பாய்வதில்லை' என்ற தத்துவத்தின் அடிப்படையில், தாமிர ஆக்சைடினால் செய்யப்பட்ட ஒரு வகைத் திருத்தி. இது, ஒரே திசையில் மின்சாரத்தைக் கடத்தும் மின்கடத்தி
metallography: (உலோ.) உலோக உள்ளமைப்பியல்: உலோகங்களின் நுண்ணிய உள்ளமைப் புகளை ஆராயும் துறை
metallurgy :(உலோ.) உலோகக் கலை: உலோகங்களின் பண்பியல்புகளை ஆராய்ந்தறியும் துறை, உலோகத் தாதுக்களை உருக்கி, சுத்திகரிக்கும் அறிவியல்
metallurgy: உலோகக் கலை: உலோகத் தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் அல்லது உலோகக் கலவைகளை உண்டாக்கும் கலை அல்லது அறிவியல், உலோகங்கள் பற்றி ஆராயும் துறை
matal pattern: (வார்.) உலோகத் தோரணி: நீண்ட நாட்கள் உழைப்பதற்காக மரத் தோரணிகளிலிருந்து உருவாக்கப்படும் வார்ப் படத் தோரணிகள்
metal spinning: (பட். ) உலோகத் திரிப்பு: தகடாக்கக் கூடிய உலோகங்களில் இலேசான உறுப்புகளை வட்டமான வார்ப்பு வடிவங்களாக உருவாக்கும் முறை. கடைசல் எந்திரத்தில் வேகமாகச் சுழலும் போது அழுத்தம் கொடுக்கும்போது இந்தத் திரிப்பு ஏற்படுகிறது
metal spraying: உலோகத் தெளிப்பு: உலோகங்களுக்கான காப்பு மெருகுப்பூச்சு. ஒரு கம்பியை ஹைட்ரஜன்-ஆக்சிஜன் சுடர் வழியாகச் செலுத்தும்போது, அது அணுக்களாகக் குறைந்து கம்பிப் பரப்பில் மேற்பூச்சாகத் தெளிக்கப்பட்டு படிகிறது
metamorphic rock: (கனிம.) உருமாற்றப் பாறை: தனது மூலப் பண்பியல்பிலிருந்து எரிமலைக் குழம்புப் பாறையாக அல்லது படிவியற் படுகைப் பாறையாக மாற்றம் பெற்றுள்ள பாறை
metatarsal bones: (உட.) கால் விரல் எலும்பு: கணுக் காலுக்கும், கால் விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்க்ளின் எலும்புத் தொகுதி
meteor bumper: (விண்.) எரி மீன் காப்பு: விண்ணிலிருந்து விழும் எரிமீன்களின் துகள்களினால் விண்வெளி ஊர்திக்கு ஊறு ஏற்படாமல் காக்கும் ஒரு மெல்லிய கேடயம்
meteorograph : (வானூ.)வானிலைப் பதிவுமானி : பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயுள்ள வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப் பதிவித்துக் காட்டும் அமைவு. இது வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்யும்
meteorology: (இயற்.) வானிலையியல் : வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை
meter : (எந்.) (1) மீட்டர்: மெட்ரிக் அளவு முறையில் அடிப்படையான நீட்டலளவை அலகு. 1 மீட்டர் = 39.37"
(2) அளவுமானி: திரவங்கள், வாயுக்கள், மின்னோட்டம் முதலியவற்றை அளவிடுவதற்கான அளவு கருவி
meter : (மின்.) (1) மின்மானி : மின் விசையினை அளவிடுவதற்கான ஒரு கருவி
(2) நீள அளவு: (மின்.) மெட்ரிக் அளவு முறையில் நீளத்தின் ஒர் அலகு. 1 மீட்டர் =39.37"
micrometer : (மின்.) நுண்ணளவைமானி : நுண்பொருட்கள். தொலைவுகள், கோணங்களை அளந்து காட்டும் கருவி
micrometry : (மின்.) நுண்ணளவை : நுண்ணளவை மானியால் அளத்தல்
metering orifice : (தானி.) அளவித் துளை: பல்வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை
metering pin : (தானி.) அளவிப் பிணைப்பூசி: அளவித்துளையின் மீது அமைந்துள்ள ஒரு பிணைப் பூசி. இது அளவித் துறையின் வழியாக வாயு பாய்வதை முறைப்படுத்துகிறது
metering rod : (தானி.) அளவித் தண்டு : எரிபொருள் பாய்வதை முறைப்படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தண்டு
methane : (வேதி.) மீத்தேன் : மணமற்ற வாயு (CH4), தாவரப் பொருளின் இருமடிச் சேர்மானம் காரணமாக அல்லது கரிமப் பொருளின் உலர் வாலை வடித்தல் மூலமாக உண்டாகும் வாயு. ஒளிரும் வாயுவின் முக்கியமான கூறு
methanol : (வேதி.) மெத்தனால்: (CH3OH): மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மரச்சாரா போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளாகவும், வண்ணங்கள், மெருகெண்ணெய்கள் ஆகியவற்றின் கரைப்பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது
methyl : (வேதி.) மெத்தில் : (CH3) மீத்தேனிலுள்ள ஒரு ஹைட்ரஜன் அணு இடம் பெயர்வதால் ஏற்படும் மூலக்கூறு. இது பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஒர் அங்கமாக உள்ளது
methyl acetone : (வேதி.) மெத்தில் அசிட்டோன்: மெத்தில் அச்சிட்டேட்டும், அசிட்டோனும் கலந்த ஒரு கலவை ரப்பரின் கரைப்பானாகப் பயன்படுகிறது
metric gear : (பட்.) மெட்ரிக் பல்லிணை : மெட்ரிக் அளவு வடிவமைக்கப் முறைக்கிணங்க பட்ட பல்லிணை
metric plug : (தானி.) மெட்ரிக் செருகி : மெட்ரிக் தர அளவுகளுக் கேற்ப திருகிழைகளைக் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி
metric system : (பொறி.) மெட்ரிக் முறை : பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் ஆளவைகள். முதலில் இம்முறை ஃபிரா ன்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல்பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது
metric threads : மெட்ரிக் திரு கிழைகள் : மெட்ரிக் அளவுகளுக்கிணங்க விகிதமுறையில் அமைந்த திருகிழைகள்
mezzanine : (க.க.) இடைமாடி : இரண்டு உயர்மாடிக் கட்டிடங்களில் நிலத்தளத் தளத்திற்கும் முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி
mezzotint : (அச்சு.) முரட்டு அச்சுப் பாளம் : கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியையே செறி நிழல் வண்ணமாகக் கொண்டு பிற பகுதிகளில் கரடு முரடு நீக்கப் பட்ட ஒளிப்பட அச்சுப்பாளம். இதனை 1643இல் லுட் விக் கண்டுபிடித்தார்
mica : (கனிம.) அப்பிரகாம் (காக்காய்ப் பொன்) : முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில்களாகப் பிளவுபடும்
micas : அப்பிரகக் காகிதம் : அலங்காரப் பெட்டிகள் செய்வதற்கான காகிதம். இதில் அனிலைன் சாயப் பொருளுடன் கலந்து அப்பிரகம் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செதுக்கு வேலைப்பாடாகவும் புடைப்பாகவும் அச்சிடப்படும்
microampere : (மின்.) மைக்ரோ ஆம்பியர் : ஒரு ஆம்பியரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஆம்பியர்
microfarad : (மின்.) மைக்ரோ ஃபாராட் : ஒரு கொள்ளவு அலகு. மின்காந்தப் பரும அளவான ஒரு ஃபாராட்டின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி
micrometer : நுண்ணளவைமானி : நுண்பொருட்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங் கருவி
micrometer caliper : நுண் இடுக்கியளவி : மிக நுண்ணிய தொலைவுகளை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி
micron : (மின்.) மைக்ரோன் : பதின்மான நீட்டலளவை அலகில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி
microphone : (மின்.) ஒலி பெருக்கி : நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற்படுத்தும் கருவி
micro photograph : நுண்ணொளிப்படம் : ஒரு பெரிய பொருளை ஒரு சிறிய ஒளிப்படமாகக் குறைத்து உருவாக்கும் ஒளிப் படம்
microscope : நுண்ணோக்காடி (பூதக் கண்ணாடி) : மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி
microtome : நுண்ணோக்காடி வெட்டு கருவி : நுண்ணோக்காடிகளுக்கான சிறிய துண்டுகளைச் செதுக்கும் கருவி
microvolt : (மின்.) மைக்ரோ வோல்ட் : மின்இயக்க ஆற்றல் அலகின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி microwave : நுண்ணலை : ஒரு மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வானொலி அலைகள். இது நெடுந்தொலைவிலுள்ள கருவிகளை நிலையத்துடனும், நிலையங்களை மற்ற நிலையங்களுடனும் இணைப்பதற்குப் பயன்படுகிறது
microtron : (uósir swfl.) soupá ரோட்ரான் : அதிவேக எலெக்ட்ரான்களை உண்டாக்கும் சிறிய எந்திரம். இதில், எலெக்ட்ரான்கள், ஒரு காந்தத்தின் மூலம் வட்டப் பாதைகளில் சுற்றும்படி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும், ஒர் உயர் அலைவெண் வானொலி அலைப்பான் மூலம் உண்டாக்கப்படும் ஒரு மின்னியல் புலத்திலிருந்து அவை முன்னே உந்தப்படுகின்றன
microwave reflectors : நுண்ணலை பிரதிபலிப்பான் : நுண்ணலைக் கற்றைகளை நெறிப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரே மாதிரியல்லாத பிரதிபலிப்பான்கள்
middle space : (அச்சு.) நடு இடை வெளி : அச்சுக்கோப்பில் எழுத்துக்களிடையிலான இடைவெளி
middle - tones : (அச்சு.) நடு வண்ணச் சாயல் : ஒளிப்படத்தில் அல்லது நுண்பதிவுப் படத்தில் இளம் வண்ணத்திற்கும் அடர் வண்ணத்திற்குமிடையிலான வண்ணச் சாயல்கள்
midwing monoplane: (வானுT.) நடு இறகு ஒற்றைத்தட்டு விமானம்: விமானத்தின் மையத் கோட்டில் இறகு பொருத்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்
mil : மில் : கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அலகு. இது அங்குலத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதி, 0.001
mild steel : மென்னெஃகு : கரியம் குறைவாகவுள்ள எஃகு, இது பற்ற வைக்கக் கூடியது. ஆனால் இது பதமாவதில்லை
mildew : பூஞ்சணம்: ஈரம்படு பொருட்களின் மீது படியும் ஒரு வகை பூஞ்சக்காளான்
mil foot : மில் அடி: கம்பியிலுள்ள மின் தடையின் ஒரு தர அலகு. ஒர் அடிக்கம்பியில் மின் தடையின் அளவு = விட்டத்தில் ஒரு மில்
milk sugar : (வேதி.) பால் சர்க்கரை : பார்க்க பால் வெல்லம்
mill : ஆலை : (1) உற்பத்திச் செய் முறைகள் நடைபெறுவதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடம் அல்லது கட்டிடங்களின் தொகுதி. பல்வேறு ខ្ស குறிப்பிட இச் சொல் பயன்படுகிறது. (2) செய்முறை வேலைகளுக்கான திரிகைப் பொறியமைவு
milliampere : (மின்.) மிலி ஆம்பியர் : ஒரு ஹென்ரியில் ஆயிரத்தில் ஒரு பகுதி. கொள்ளளவின் ஒர் அலகு
millihenry: (மின்.) மிலிஹென்ரி: ஒரு கொள்ளளவு அலகாகிய ஹென்ரியின் ஆயிரத்தில் ஒருபகுதி
millimeter: (பொறி.) மில்லி மீட்டர்: பருமனலளவு அலகு. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி .03937"
milling : (பட்.) சால்வரிவிடல்: உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை
milling cutters: (எந்.) துளை வெட்டுங் கருவி: உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள் milling machine: (பட்.) துளையிடு எந்திரம் :உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம்
milling machine universal : (பட்.) பொதுத் துளையிடு எந்திரம் : எல்லாவகையான பரப்புகளையும் கொண்ட உலோகத் தகடுகளிலும் துளையிடுவதற்கான எந்திரம்
milling machine vertical : (பட்.) செங்குத்துத் துளையிடு எங்திரம் : துளையிடுவதற்குச் செங்குத்தான கதிர் கொண்ட எந்திரம். இது இடைமட்ட எந்திரத்திலிருந்து வேறுபட்டது
millivolt : (மின்.) மிலிவோல்ட் : ஒர் பகுதி. 0.001" வோல்ட்
millwright: ஆலை அமைப்பாளர்: ஒர் ஆலையில் அல்லது பட்டறையில் எந்திரங்களைத் திட்டமிட்டு அமைப்பவர்
mimeograph : படியெடுப்பான்: கையெழுத்து அல்லது தட்டெழுத்துப் படியின் பல படிகளை எடுப்பதற்கான தகடு ஆக்க அமைவு
minaret : (க.க.) தூபி : பள்ளி of வாயில் தூபி
mineralogy : கனிமியியல் : கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல்
miners safety lamp : சுரங்கக் காப்பு விளக்கு : பார்க்க டேவி காப்பு விளக்கு
minimum : குறுமம் : மிகக் குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை
minimum flying speed: (வானூ.) குறும பறக்கும் வேகம் : ஒரு விமானம் தனது இறகுகளின் இடைய கல் அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கும் மட்டத்தில் ஒரே சீராகப் பேணக்கூடிய மிகக் குறைந்த அளவு வேகம்
minimum gliding angle : (வானூ.) குறுமச் சறுக்குக் கோணம்: விமானத்தின் முற்செலுத்தி அழுத்தம் கொடுக்காதிருக்கும் போது, விமானத்தின் கிடைமட்டப் பாதைக்கும், ஏறத்தாழ அதன் கிடைமட்டப் பாதைக்குமிடையிலான கூர்ங்கோணம்
minimum speed : (வானூ.) குறும வேகம்: விமானத்தில் எந்தக் குறைந்த அளவு வேகத்தில் ஒரே சீராகப் பறக்க முடியுமோ அந்தக் குறைந்த அளவு வேகம்
mining : சுரங்கத் தொழில் : பூமியிலிருந்து உலோகம், கணிப் பொருட்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்தல்
mining engineer: சுரங்கப் பொறியாளர் : சுரங்கங்களைத் தோண்டி அவற்றிலிருந்து உலோகத் தாதுப் பொருள்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளைச் செய்யும் பொறியாளர்
minion : (அச்சு.) குறும அச்செழுத்து : மிகச்சிறிய அளவு அச்செழுத்து. இது 7 புள்ளி அளவுக்குச் சமமானது. அச்செழுத்தில் புள்ளி முறை பயனுக்கு வருவதற்கு முன்பு இப்பெயர் வழங்கியது
minor axis : சிறுபடி அச்சு : ஒரு நீள் வட்டத்தின் குறுகிய விட்டம் minor carrier : (மின்.) சிறு மின் கடத்தி: பெரிய மின்கடத்திகளுக்கு மாறாக மின் கடத்தாத் திண்மப் பொருட்கள் வழியாக மின் கடத்துதல். எடுத்துக்காட்டாக, எலெக்ட்ரான்கள் பெரிய மின் கடத்திகள் என்றால் துளைகள் சிறு மின் கடத்திகளாகும்
minor diameter : சிறுபடி விட்டம் : ஒரு திருகில் அல்லது மரையாணியில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம்
minus charge: (மின்.) மறிநிலை மின்னேற்றம் : கழித்தற்குறியின் மூலம் சுட்டப்படும் எதிர்மின்னேற்றம் பிசின் பொருட்களில் உரசும் போது இத்தகைய மின்னேற்றம் உண்டாகிறது
minute : (க.க.) நுண்பாகை : கோண அளவில் ஒரு பாகையின் அறுபதில் ஒரு கூறு
minuteman: (விண்.) வான்படை ஏவுகணை : கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வான்படை ஏவுகணை. இது 5,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இது, மூன்று கட்டங்களுடைய செலுத்து ராக்கெட் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது
misalignment of wheels : (தானி.) பொருங்தாச் சக்கர இணைப்பு : சீருந்தின் சக்கரங்கள் முயாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால் சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு டயர்கள் விரைவாகத் தேய்ந்துவிடும் சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஓரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்
misprint : (அச்சு) அச்சுப் பிழை: பிழையாக அச்சிடுதல்; அச்சிடுவதில் ஏற்படும் பிழை
missilery : (விண்.) ஏவுகணையியல் : ஏவுகணைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், செலுத்துதல், வழிச்செலுத்துதல் ஆகியவை பற்றிய அறிவியல்
mission type: பெரு வடிவ அறைகலன்: கருவாலி மரத்தில் கருமை வண்ணத்தில் வளைவுகளின்றி நேர்கோடுகளில் தயாரிக்கப்படும் மிகப் பெருமளவில் வடிவங் கொண்ட அறைகலன்
miter: செங்கோண இணைப்பு: மரத்துண்டுகளைச் செங்கோணத்தில் இணைத்தல்
துண்டுகளின் இணை வாயின் சாய்வு 45° கோணம்படும்படியாக இணைத்தல்
miter box : கோண அறுவைக் கருவி : மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்கு துணை செய்யும் அமைவு
miter cut: (மர.வே.) கோண அறுவை: துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45° கோணமாக அமையுமாறு அறுத்தல். இரு துண்டுகளும் இணையும் போது ஒரு செங்கோணம் உண்டாகும்
miter joint: (க.க.) செங்கோண இணைப்பு : மரத்துண்டுகளின்
miterer: (அச்சு.) செங்கோண இணைப்பான்: அச்சுக்கலையில் கரையோரங்கள், கோடுகள் முதலியவற்றை செங்கோணத்தில் இணைப்பதற்குப் பயணம் ஒரு சாதனம். இதனைக் கையினாலோ விசையினாலோ இயக்கலாம்
miter gear: (எந்.) செங்கோண இணைப்புப் பல்லிணை: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய பல்லிணை
milter plane: (மர.வே.) செங்கோண இணைப்புத் தளம்: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம்
miter-saw cut: (மர.வே.) கோண வெட்டு ரம்பம்: மரத்தைத் தேவையான கோணத்தில் வெட்டுவதற்குப் பயன்படும் ரம்பம்
miter square: (மர.வே.) கோண மட்டச்சதுரம்: மூலமட்டப் பலகை போன்ற ஒரு கோண மட்டம் கருவி. ஆனால், இதில் 90°, 45° கோணங்களை அமைக்க இடமளிக்கும் ஒரு தலைப்பினைக் கொண்டது
miter wheel: சாய் பற்சக்கரங்கள்: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்
mitography: (அச்சு.) திரையச்சுக்கலை: பட்டுத்திரைச் சீலை அச்சுக்கலை
mixture: (வேதி.) கலவை: வேதியியல் முறையில் ஒன்றோடொன்று இணையாத இரண்டு அல்லது மூன்று பொருட்களின் கலவை
Μ.Μ.F.: (மின்.) காந்த இயக்கு விசை: (கா. இ. வி.)
mobility: (மின்.) இயங்கு திறன்: மின்கடத்தாத் திண்மப் பொருளில் மின்னோட்ட ஊர்தியின் வேகவீதம். பயன்முறை மின்புலத்தில் வேகவீதத்தின் வீத அளவு. இதனை செ.மீ./ஒல்ட்/ வினாடி என்ற அளவு முறையில் குறிப்பிடு
modeling: உருப்படிவக்கலை: காட்சி மாதிரிகளை உருநிலைப் படிவங்களாக உருவாக்குதல்
mock-up: (வானூ.) எந்திர மாதிரிப் படிவம்: செய்யக் கருதியுள்ள மாதிரிப் படிவம்
modulation: (இயற்.) அலைமாற்றம்: வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது. ஆழ அலை மாற்றம்=x/y
module: (க.க.) அளவை அலகு: கட்டுமானப் பொருட்களின் தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்புதற்கான நீட்டலளவை அலகு
modulus: நிலை தகவு: மடக்கைகளின் வகை மாற்றத்திற்கான நிலையான வாய்ப்பாடு
modulus of : மின் விசை நிலை தகவு: இழு விசைத் திரிபு நெகிழ் வரம்பிற்குள் இருக்கும்போது, ஒர் அலகுப் பரப்பின் மீதான அழுத்தத்திற்கும். அதற்கு இணையான் ஒர் அலகு நீளத்தின் மீதான இழுவிசைக்குமிடையிலான வீத அளவு modulus of rigidity: (பொறி.) விறைப்பு நிலைதகவு: அழுத்தச் சறுக்குப் பெயர்ச்சி இழு விசையினால் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தத்தை வகுப்பதால் கிடைக்கும் ஈவு
mogul: (மின்.) மோகல்: 300 வாட்டுகளுக்கு அதிகமான பெரிய வெண்சுடர் விளக்குகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு குதைகுழி அல்லது கொள்கலன்
mohair: ஆங்கோரா ஆட்டுக் கம்பளி: ஆங்கோரா ஆட்டுமயிரைக் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை
Mohs scale : மோகஸ் அளவு: கனிமப் பொருட்களின் கடினத் தன்மையைத் தரம் பிரித்துக் காட்டப் பயன்படும் எண்மான முறை
moisture content: (அச்சு.) நீர் நயப்பு: தயாரித்து முடித்த காகிதத்தில் உள்ள ஈரப்பதனின் அளவு
molar solution: (வேதி) மூலக் கூற்றுக் கரைசல்: ஒரு கரைவத்தின் மூலக்கூற்று எடையைக் கொண்டுள்ள ஒரு கரைசல். இது ஆயிரம் கன செ.மீ.யில் இல்வளவு கிராம் என்று குறிக்கப்படும்
molar teeth: (உட.) பின்கடைவாய்ப் பற்கள்: பின்கடை வாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற பற்கள். இவை மேல், கீழ்தாடைகளில் ஒவ்வொரு பக்கத்திலும் கடைசியில் 3 தட்டையான பற்கள் வீதம் அமைந்திருக்கும்
mould: (வார்.) வார்ப்படம்: வார்ப்புருக்களை உருவாக்குவதற்கான ஒரு படிவம்
பிளாஸ்டிக் உருவங்களை வெப்பம், அழுத்தம் அல்லது வேதியியல் வினை மூலமாக உருவாக்குவதற்குப் பயன்படும் உலோகக் கொள்கலம். அச்செழுத்துகளை வடிவமைக்கும் வார்ப்பட எந்திரம்
mould board: (மர.வே.) முனைப் பலகை: உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் எஃகு முனைப் பலகை
moulders rammer: (வார்.) வார்ப்படத் திமிசுக்கட்டை: வார்ப்புடப்தை அடித்து இறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உருளை வடிவ மரக் கருவி
moulding: (க.க.) வார்ப்பட உருவம்: கட்டிடம், மரவேலை முதலியவற்றில் வார்ப்பட முறையில் செய்யப்படும் சித்திர வேலைப் பாடு
moulding board: (குழைம.) பிசைவுப் பலகை : வார்ப்படப் பொருட்களை வலுவாக்குவதற்காகப் பயன்படும் அழுத்திய தகடுகள், கலப்பு இழைகள், பிசின்கள் ஆகியவை
moulding plane : வார்ப்பட இழைப்புளி: வார்ப்படங்களை வெட்டியெடுப்பதற்குப் பயன்படும் சிறிய இழைப்புளி
moulding sand: (வார்.) வார்ப்பட மணல்: வார்ப்படங்கள் செய்வதற்குப் பயன்படும் வார்ப்பட மணல்
mole: (வேதி.) மூலக்கூற்று எடை: கிராம்களில் குறிப்பிடப்படும் மூலக்கூற்று எடை
molecular theory: (வேதி.இயற்.) மூலக்கூற்றுக் கோட்பாடு: சடப் பாருட்கள் 'மூலக்கூறுகள்' எனப்படும் நுண்ணிய துகள்களினாலானது என்றும், ஒவ்வொரு துகளும் அந்தப் பொருள் முழுமைக்குமுள்ள குண இயல்புகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறும் கோட்பாடு
molecular weight: (இயற்.) மூலக்கூற்று எடை: ஒரு ஹைட் ரஜன் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஒரு மூலக்கூற்றின் எடை. எடுத்துக்காட்டு: CO2 மூலக்கூற்றில் ஒரு C அணுவும் (அணு எடை 12), இரு ஆக்சிஜன் அணுக்களும் (அணு எடை 16) அடங்கியுள்ளன. எனவே, இதன் மூலக்கூற்று எடை 12 + 2 X 16 = 44
molecule: (மின்னி.) மூலக்கூறு: அணு என்பது ஒரு தனிமத்தின் மிதிச் சிறிய பகுதி, ஒரு மூலக்கூறு என்பது, தானாகவே உயிர் வாழக் கூடிய ஒரு பொருளின் மிகச் சிறிய துகள். இது, மின்னியல் விசைகளினால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அணுக்களின் ஒரு தொகுதியாகும், கூட்டுப் பொருளில் உளளது போல் அணுக்கள் வேறுபட்டிருக்கலாம். எடுத்துக்காட்டு: H2O சில தனிமங்களின் ஒரே மாதிரியாக இருக்கலாம். எடுத்துக் காட்டு:H2 (ஹைட்ரஜன் மூலக் கூறு)
molecule: (வேதி; இயற்.) மூலக்கூறு: ஒரு பொருளில் அடங்கியுள்ள மிகச் சிறிய நுண்கூறு. இதன் பண்பு, பொருளின் பண்பிலிருந்து மாறுபடாதிருக்கும்
molybdenite : முறிவெள்ளித்தாது: முறிவெள்ளி (மாலிப்டினம்) என்னும் உலோகத்தின் தாது. இது பசைத்தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும்
molybdenum: (உலோக.) முறிவெள்ளி (மாலிப்டினம்): தகர்வியல்புடைய வெள்ளி நிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக்கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது
moment: (பொறி.) நெம்புதிறன்: ஒரு விசைக்கும். அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத் தொகை. சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு
moment of a couple: (கணி.) இருவிசை இணைவு கெம்புதிறன்: விசைகளில் ஒன்றுக்கும், விசைகளின் செயல்விசைக் கோடுகளுக்கிடையிலான செங்குத்துத் தூரத்திற்குமிடையிலான அளவுகளின் பெருக்குத் தொகை
moment of a force: (பொறி.) நெம்புதிறன்: சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு. இது அடி-பவுண்டு, அங்குலம்-பவுண்டு என்ற அளவுகளில் அளவிடப்படுகிறது
moment of inertia: (பொறி.) மடிமை கெம்புதிறன்: நகரும் பொருளின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகளின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை
momentum : உந்துவிசை : இயக்க உந்து விசையின் ஆளவு. இது ஒரு பொருளின் பொருண்மையை அதன் வேக விகிதத்தினால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகையாகும்
mond gas : (வேதி.) வாயுக் கலவை : கார்பன் மோனாக்சைடு, கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இக்கலவை, நிலக் கரி மீது காற்றையும் 650°C வெப்பமுடைய நீராவியையும் செலுத்தும்போது உண்டாகிறது
monel metal : (வேதி.) மோனல் உலோகம் : 67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது
60% நிக்கல் 38% செம்பு, சிறிதளவு அலுமினியம் கொண்ட உலோகக் கலவையையும் மோனல் உலோகம் என்பர்
mond “seventy” alloy : (உலோ.) மாண்ட் "70" உலோகக் கலவை: நிக்கலும் செம்பும் கலந்த ஒர் உலோகக் கலவை. இதன் விறைப்பாற்றல் 40828 கிலோ கிராம் வரை உயர்வாக இருக்கும்
monitor :' (மின்.) உளவுச் செய்தியறிவிப்பு: அயல்நாட்டுவானொலி, தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்புகளை ஒற்றுக் கேட்டுச் செய்திகளைத் தெரிவித்தல்
monkey wrench : இயங்கு குறடு: இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மிங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது
monobloc : (எந்.) ஒற்றைப்பாளம் : ஒரே துண்டாகவுள்ள வார்ப்படம்
monochrome television: (மின்.) ஒரு நிறத் தொலைக்காட்சி : ஒரே நிறத்தின் பல சாயல்களில் படங்களைக் காட்டும் தொலைக்காட்சி; கறுப்பு-வெள்ளைப் படங்கள்
monogroph: (அச்சு.) தனி வரைவு நூல் : ஒரே பொருள் அல்லது ஒரினப் பொருட்கள் பற்றிய தனி நூல்
monolith : ஒற்றைப் பாளக்கல் : தன்னந்தனியாக நிற்கும் மிகப் பெரிய அளவிலான ஒரே பாளமாகவுள்ள கல்
monomer : (வேதி;குழைம.) எண் முகச் சேர்மம் : ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்குதல்
monomial : (கணி.) ஓருறுப்புக் கோவை : இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினைக் கொண்ட கோவை
monoplane : (வானூ..) ஒற்றைத் தட்டு விமானம் : ஒற்றைத் தொகுதிச் சிறகுகளையுடைய விமானம்
monopropellant : (விண்.) தனிமுற்செலுத்தி: எரிபொருளும், ஆக்சி கரணியும் உடனடியாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கலந்து வைக்கப்பட்டுள்ள ராக்கெட் முற்செலுத்தி
monorail crane : (பொறி.) ஒற்றைத் தண்டவாளப் பாரந்துக்கி : ஒற்றைத் தண்டவாளத்தில் இயங்கும் நகரும் பாரந்துக்கி
monoscope: சோதனை ஒளிப்படக்கருவி : சோதனைகளுக்காகப் பயன்படும் எளிய ஒளி அல்லது தோரணி அமைப்பைக் கொண்ட தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி
monotone: (அச்சு.) சமநிலை அச்செழுத்து : எல்லாக் கூறுகளும் சம அகலத்தில் உள்ள அச்செழுத்து முகப்பு
monotron hardness test : வைரகடினச் சோதனை : வைரத்தின் ஊடுருவும் ஆழத்தினைக் குறிப்பிட்ட பார நிலைகளில் எண் வட்டில் பதிவு செய்யக்கூடிய ஒரு சோதனை எந்திரம்
monotype : (அச்சு) எழித்துருக்கு அச்சுப் பொறி : தனித்தன் அச்சுரு வங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்
mordant : அரிகாரம் : செதுக்குருவக்கலையில் பயன்படுத்தப்படும் அரிமானப் பொருள் சாயத்தைக் கெட்டிப்படுத்தப் பயன்படுத்தப்படும் நிறம் கெட்டி யாக்கும் சரக்கு
moresque : அராபிய பாணி : வட மேற்கு ஆஃப்ரிக்க அராபிய இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப் பாடு
morocco goat skin ; பதனிட்ட வெள்ளாட்டுத் தோல் : சாயப் பதனீட்டு இலைத் தூள் கொண்டு பதனிடப்பட்ட வெள்ளாட்டுத் தோல். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கனத்த தோல்களில் அக உறையாகவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகிறது
morse code : (மின்) மோர்ஸ் குறியீடு : மோர்ஸ் என்பார் அமைத்த தந்திப் பதிவுக் குறியீட்டு முறை. இந்த முறையில் எழுத்துகளையும், எண்களையும் குறிக்கும் புள்ளிகள், கோடுகள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன
morse taper : (எந்.) மோர்ஸ் கூம்புச் சரிவு : துரப்பணத்தண்டுகளையும், மற்றக் கருவிகளையும் எந்திரக் கதிர்களுடன் பொருத்துவதற்குரிய 0 முதல் 7 வரையிலான திட்ட அளவுக் கூம்புச் சரிவு
mortar : (1) கல்வம் : உலக்கையால் பொருள்களை இடித்துத் தூளாக்குவதற்குப் பயன்படும் கனமான சுவருடைய குழியுரல்
(2) சாந்து : காரை, சுண்ணாம்பு. மணல் கலந்த சாந்து
mortar board : (க.க) சாந்துத் தட்டு : காரைச் சாந்து வைப்பதற்கு அடியில் கைப்பிடியுள்ள ஒரு சதுரத் தட்டு
mortar box : (க.க) சாந்துக் கலவைப் பெட்டி : சாந்து கலப்பதற்குப் பயன்படும் பெரிய பெட்டி அல்லது தொட்டி
mortar joints: சாந்து இணைப்புகள்: செங்கல் அல்லது காரைக் கட்டுமானப் பணிகளில் சாந்து கொண்டு அணைப்பதற்கான பல்வேறு பாணிகள்
mortise : (அச்சு.) துளைப் பொருத்து: பொருத்து முளையிடும் துளைச்சட்டம்.அச்சுக் கலையில் அச்சுத் தகட்டில் எழுத்துக்களைச் செருகுவதற்குகான வாயில்
mortise chisel : (,மர.வே) துளைப் பொருத்து உளி : துளை பொருத்திடும் தடித்த அலகுடைய உளி
mortise gauge : (மர.வே.) துளைச் சட்டமானி: தேவையான அகலத்திற்குத் துளைச் சட்டத்தினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
mortise lock :(க.க) துளைச் சட்டப் பூட்டு துளைச்சட்டத்துடன் பொருத்தப்படும் பூட்டு
mortising machine:(மர.வே) துளைப் பொருத்து எந்திரம் : மரத்தில் உளியாலோ சுற்று வெட்டு மூலமாகவோ துளைச் சட்டம் வெட்டுவதற்கான ஓர் எந்திரம்
mosaic : பல் வண்ணப் பட்டை : தரையில் பல வண்ணப் பட்டைகளினால் அணிசெய்தல்
mother-of-pearl: முத்துக் கிளிஞ்சல் : கிளிஞ்சல்களின் உட்புறத்திலுள்ள பளபளப்பான பொருள். பொத்தான் போன்ற சிறிய பொருட்கள் தயாரிக்கப்பயன்படுகிறது
motion : (இயற்.) இயக்கம் : ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல்
motion study : (க.க) இயக்க ஆய்வு : சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப்படுகிறது
motive power : (பொறி) எந்திர விசை :எந்திரத்தில் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் திறமுடைய ஆற்றல்
motometer : (எந்.) இயக்கமானி: நீராவி எஞ்சினின் வேகத்தைக் காட்டும் கருவி. இதனை வேகமானி என்றும் கூறுவர்
motor.(மின்.) (1) மின்னோடி : மின்விசையை எந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி (2) விசைப் பொறி: ஏந்திரத்திற்கு இயக்க ஆற்றலை அளிக்கும் பகுதி
Motor analyzer : (தானி.) இயக்கப் பகுப்பாய்வுக் கருவி: உந்து வண்டியில் ஒரு தனிப் பெட்டியில் அல்லது ஒரு தனிச்சேணத்தில் ஒருங்கிணைத்து வைத்த கருவிகளின் ஒரு தொகுதி. இதன்மூலம் நீள் உருளை அழுத்தம், காற்று -எரிபொருள், அனல் மூட்டும் நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்கலாம்
motor drive : (பட் ) மின்னோடி விசை : ஓர் எந்திரத்திற்கு ஒரு மின்னோடியின் மூலம் மின் விசையளிக்கும் நவீன முறை. இது எந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்
motor generator : (மின்.) மின்னோடி மின்னாக்கி : ஒரு மின்னாக்கியை இயக்கும் மின்னோடி. இது மாற்று மின்னோட்டத்தை நேர்_மின்னோட்டமாகவும் நேர் மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாகவும் மாற்றுவதன் மூலம் மின்னாக்கியை இயக்குகிறது
motor hoist : இயக்க உயர்த்தி; கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந்தூக்கிச் சாதனம்
motor jet : (வானூ) (1) மின்னோடித் தாரை : எதிரீட்டு வாயு எஞ்சின் மூலம் இயங்கும் அழுத்தியினைக் கொண்ட ஒரு தாரை எஞ்சின் (2) இத்தகைய எஞ்சின் உடைய ஒரு விமானம்
motor starter : (மின்.) மின்னோடித் தொடக்கி : தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மினனோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்தடைப்பெட்டி, இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தடைகுறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமாக நீங்கி விடும்
motor torque : (மின்) மின்னோடி முறுக்குப் பதக்கம் : ஒரு மின்னோடியில் சுழற்சியை அல்லது சுழலும் போக்கினை உண்டாக்கும் முயற்சி அல்லது திருகு விசை
mottled : பல் வண்ணப் புள்ளியமைவு : பல்வண்ணப் பட்டைகள் அல்லது புள்ளிகள் இட்ட அமைவு. வேண்டுமென்றே பல்வேறு வண்ணக் கோலங்களில் தயாரிக்கப்பட்ட பரப்புடைய காகிதம் mould: (வார்.) (1) வார்ப்படம்: உலோக வடிவங்களை உருவாக்கும் மாதிரி உரு அச்சு (2) பூஞ்சக் காளான் : (தாவ.) பழைய ரொட்டியில் வளரும் பசுமை நிறப் பூஞ்சக் காளான்
mount : ஒப்பனைச் சட்டம் : அறைகலனை வலுவாகப் பொருத்துவதற்குரிய அலங்கார ஒப்பனைச் சட்டம். இது பெரும்பாலும் உலோகத்தில் அமைந்திருக்கும்
movieola : திரைப்படத் தொகுப்பான் : திரைப்படத்தைத் தொகுப்பதற்குப் பயன்படும் ஒரு திரைப்படச் சாதனம்
moving coil: இயங்கு சுருள்; ஒரு காந்தப்புலத்தில் மின்னோட்டத்தைக் கொண்டு சொல்லும் ஒரு மின்கம்பிச் சுருளை நம்பியிருக்கும் ஒரு மின்னியல் சாதனம். எடுத்துக் காட்டு: இயங்கு சுருளுடைய ஒலி பெருக்கி
moving - coil galvangmeter : (மின்.) இயங்கு சுருள் மின்னோட்ட மானி : ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் சுட்டிக் காட்டும்
moving needle: (மின்.) இயங்கு ஊசி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்த ஊசி கொண்ட ஒரு சாதனம். இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் சுட்டிக் காட்டக்கூடியது
mucillage : தாவரப் பசை : ஒரு வகைத் தாவரப் பிசினிலிருந்தும் நீரிலிருந்தும் செய்யப்படும் தாவரப் பசைப் பொருள்
muck bar: (உலோ) கூள உலோகக் கட்டி : தேனிரும்புத் தயாரிப்பில் முழுவதும் உருகாத உலோகக் கட்டியைக் கூளங்களின் உருளை வழியே செலுத்துவார்கள். அப்போது அது "கூள்க்கட்டி' என அழைக்கப்படுகிறது. இந்த உலோகக் கட்டியில் கசடு அதிகமாகக் இருக்குமாதலால், இதனைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது
mudsil : (க.க.) சேற்றுப்படிக் கட்டை : ஒரு கட்டுமானத்தின் அடித்தளப் படிக்கட்டை. இது தரையில் நேரடியாக வைக்கப்படும்
muffle: (1) சூளை உலை : மண் பாண்ட வேலையில் சுடுவதற்காகப் பாண்டம் வைக்கப்படும் சூளை உலையறை (2) ஒலித்தடுப்பான் : ஒரு மின்னோடிப் புகைபோக்கொயின் ஓசையை அடக்குவதற்கான சாதனம்
muffle furnace: (உலோ.) பொதியுலை: மின்விசையினாலோ எரி வாயுவினாலோ இயக்கப்படும் ஒரு சிறிய உலை.உலோகங்களைக் கடும்பதப்படுத்துதல்,கடினமாக்குதல், முலாமிடுதல் போன்ற அதிக வெப்பம் தேவைப்படும் வேலை களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது
muffier :(தானி.) ஓசையடக்குச் சாதனம்: உட்புழையான நீள் உருளை கொண்ட ஒரு எந்திர சாதனம். இது ஒரு கேசோலின் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வழியே புறம்போக்கும் வாயு வெளியே சென்று ஒசை வராமல் அடக்கிவிடும்
mule-pulley stand: (எந்) கலப்புக் கப்பி நிலை: ஒரு துணைச்சுழல் தண்டின் மேலுள்ள தளர்வான இரு கப்பிகளை, இரு சுழல் தண்டு களுக்கிடையில் விசையினை அனுப்புவதற்கு வசதியாக அமைத்துள்ள நிலை
mullion :(க.க.) பலகணி இடைக் கம்பி: மேல் கீழான பலகணி இடைக்கம்பி
multicolour press : (அச்சு) பல வண்ண அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வண்ணங்களில் அச்சடிக்கவல்ல அச்சுப் பொறி
multi filament lamp : (மின்.) பல இழை விளக்கு : பெரிய வெண் சுடர் விளக்குகள் பெரும்பாலும் பல இழைகளுடன் தயாரிக்கப்படு கின்றன. இந்த இழைகள் இணையாக அமைந்திருக்கும். இதனால், ஓர் இழை எரிந்து போனாலும், விளக்குத் தொடர்ந்து எரியும்
multigraph : தட்டச்செழுத்துச் சாதனம் : கடிதங்களையும் ஆவணங்களையும் தட்டச்சு செய்த படிகள்போல் தோன்றுமாறு அச்சடிக்கவல்ல ஒரு சாதனம்
multigraph paper : தட்டச்செழுத்துக் காகிதம் : தட்டச்செழுத்துச் சாதனத்தில் பயன்படுத்து வதற்குரிய காகிதம்
multipart bearings : (எந்.) பல உறுப்புத் தாங்கிகள் : எந்திரத்தில் இருசுக் கட்டையுடன் இணைந்துள்ள மூன்று அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட தாங்கிகள். இவை எண்ணெய்ப் படலத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடங்கியிருக்கும். கனரக எந்திரங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன
multiplane : (வானூ.) பல தட்டு விமானம் : ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதாரத் தட்டுகளைக் கொண்ட விமானம்
multiple : பன்மடங்கு : பல் கூறு களானது; எண்ணின் பல மடங்கு; மீதமின்றி ஓர் எண்ணால் வகுக்கப் படத்தக்க தொகை
multiple disk clutch ; (தானி) பன்முக வட்ட ஊடிணைப்பி: பன்முக வட்டத் தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுத்தப்பட்ட சுருணை விற்கூருள் மூலம் அழுத்தம் கொடுக் கப்படுகிறது. ஊடிணைப்பி மிதி கட்டையை அழுத்துவதன் மூலம் ஊடிணைப்பி விடுவிக்கப்படுகிறது. இந்த ஊடிணைப்பிகள் உலர், ஊடிணைப்பி, ஈர ஊடிணைப்பி என இருவகைப்படும்
multiple drilling machine : பன் முகத் துரப்பனை எந்திரம் : ஒன்றுக் கொன்று இணையாகப் பல துரப்பணக் கதிர்கள் அமைக்கப்பட்டுள்ள ஓர் எந்திரம். இவை ஒரே சமயத்தில் இயக்கப்படும்
multiple projection welding : பன்முக வீச்சுப் பற்றவைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட பற்றாசுகளை ஒரே சமயத்தில் இயங்கச் செய்யும் முறை
multiple series : (மின்) பன்முகத்தொடர் மின்சுற்று வழி: இரண்டு அல்லது அதற்கு மேற் ப்ட்ட தொடர் மின்சுற்று வழிகளின் ஓரிணையான இணைப்பு
multiple - threaded screw : (எந்) பன்முக இழைத் திருகு : தனது உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக் கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம்
multiplex : பன்முகச் செய்தி யனுப்பீடு : வானொலி, தொலைபேசிச் செய்தித் தொடர்புகளில் ஒரே செய்தியனுப்புப் பாதையில் ஒரே திசையில் அல்லது இருதிசை களிலும் பல்வேறு செய்திகளை அனுப்புவதற்கான முறை
multipliar : (மின்.) விசைப் பெருக்கி : மின்விசை ஆற்றலளவைப் பன்மடியாகப் பெருக்குவதற்குரிய சாதனம்
multipolar motor : (மின்) பல் துருவ மின்னோடி: நான்கு அல்லது அவற்றுக்கு புலக்காந்தத் துருவங்களையுடைய ஒரு மின்னோடி
multispeed motor : (மின்.) பன் முகவேக மின்னோடி : எவ்வளவு பாரமிருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்ல ஒரு மின்னோடி
mumps : (நோயி..) புட்டாளம்மை: ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகும் தொற்று நோய்.இது: எச்சில் சுரப்பிகளில் வீக்கத்தை ஏற் படுத்துகிறது
muntz metal: (உலோ ) மண்ட்ஸ் உலோகம் : 60-62 பகுதி செம்பும் 38-40 பகுதி துத்தநாகமும் கலந்த உலோகக் கலவை, இது கப்பற் கவசத் தட்டுகள் செய்யப் பயன்படுகிறது
muriatic acid : (வேதி) நீரகப் பாசிகை அமிலம் : ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் (HCL) வாணிகப் பெயர்
mushet stael : (உலோ.) முஷட் எஃகு: 9% டங்ஸ்டன், 2.5% மாங் கனிஸ், 1.85% கார்பன் கொண்ட எஃகு. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது
muslin : மென்துகில் (மஸ்லின்) : பெண்டிர் உடைகளுக்கும், திரை களுக்கும் உதவும் நுண்ணய முடைய பருத்தியாலான மென்துகில்
mutation :வகை மாற்றம் : பெற் றோர்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டு புதிய பண்புகளுடன் தாவரம் அல்லது விலங்கு இனம் தோன்றுதல். இந்த மாற்றம் வ்ழித்தோன்றல் களுக்குச் சேர்ந்தடைகிறது. வன்கமாற்றங்கள் சில சமயம் ஊடுகதிர்களினால் (எக்ஸ்கதிர்கள்) உண்டாகிறது. அண்டக் கதிர்களினாலும் இது உண்டாகலாம்
mutual Inductance: ; (மின்.) பிறிதின் தூண்டல் : ஒரு சுருணை யின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு.ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலின் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மின்தூண்டல்
mutule : (க.க ) பிதுக்கற் கவரணை : டோரிக் என்னும் கிரேக்கக்கலவைப் பாணியின்படி தூணின் மேல் வரம்பிலுள்ள பிதுக்கக் கவரணை
myriapods : (உயி.) பலகாலிகள்: அட்டை, பூரான் போன்ற கணக்கற்ற கால்கள் உடைய உயிரினங்கள்
myrtle : புன்னை : இதனைக் கலி போர்னியர்ப் புன்னை என்றும் கூறுவர். இதன் மரம் கடினமானது; வலுவானது பசு மஞசள் நிறமுடையது. இந்தப் பசுமை மாறாத தன்மையுடைய இது பல நோக்க மரம், அமெரிக்காவின் மேற்குக் கரையில் இது மிகுதியாக வளர்கிறதுN.A.C.A. cowling : (வானூ.) என்.ஏ.சி.ஏ. மேல்மூடி : வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி.இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் பின்புறமுள்ள ஒரு பகுதியும், குளிர்விக்கும் காற்று தலைச் சீராவின் முன்புறம் வழியாக உட்சென்று, உடற்பகுதிக்கும் தலைச்சீராவின் பின்பகுதிக்குமிடையிலான வழவழப்பான கோண வடிவப் பள்ளத்தின் வழியே வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
nacelle : (வானூ.) விமான எந்திர வேயுறை : பயணிகளுக்கான அல்லது மின் எந்திரத்திற்கான அடைக்கப்பட்ட காப்பிடம். இது பொதுவாக விமானத்தின் கட்டு மானச் சட்டத்தைவிடக் குறுகலாக இருக்கும். இதில் வால்பகுதி இருக்காது
nail : ஆணி : மெல்லிய உலோகத் துண்டு. இதன் ஒரு முனை கூர்மையாகவும், இன்னொரு முனை தட்டையான அல்லது உருண்டையான கொண்டையினையும் கொண்டிருக்கும். மரத் துண்டுகளையும், பிற பொருட்களையும் இணைக்க இது பயன்படுகிறது. இணைக்க வேண்டிய பொருட்களைப் பொருத்தி ஆணியின். கொண்டையில் அடித்துப் பிணைக்கலாம்
nail puller : (எந்) ஆணிக் குறடு : (1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இருகவர்முனைகளைக் கொண்டிருக்கும். சுவர் இடை வெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம்
(2) இரு தாடைகள் கொண்ட ஒரு எந்திரச் சாதனம். இது மரத்தில் அறையப்பட்டுள்ள ஆணியைப் பிடுங்குவதற்கு ஒரு நெம்புகோலாகப் பயன்படுகிறது
nail set : (மர.வே.) ஆணித்தண்டு தண்டு : 10 அல்லது13செமீநீளமுள்ள ஒரு சிறிய எஃகுத் தண்டு. இதன் ஒரு முனை நுனி நோக்கிச் சிறுத்தும் ஆணியின் கொண்டை வழியேகழன்று விடாதவாறு சற்றே கிண்ண வடிவிலும் அமைந்திருக்கும். ஆணியின் கொண்டையை மேற்பரப்புக்குக் கீழே செலுத்துவதற்குப் பயன்படுகிறது
naphtha : (வேதி.) இரச கற்பூரத் தைலம் : பெட்ரோலியத்திலிருந்து கேசோலினுக்கும் பென்சீனுக்குமிடையே வடித்து இறக்கப்படும் பொருள். இது தூய்மைப்படுத்தும் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
naphthalene : (வேதி.) இரச கற்பூரம் : C1௦ H8 : கரி எண்ணெயில் (கீல்) கலந்திருக்கும் ஒரு கூட்டுப் பொருள். இது கரி எண்ணெயிலிருந்து வெண்படிகச் சிம்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. சாயப் பொருட்கள் தயாரிப்பதாலும், நோய் நுண்ம ஒழிப்புப் பொருளாகவும் அந்துப்பூச்சி அழிப்பானாகவும் பயன்படுகிறது
nasa : (விண்) நாசா : தேசிய வான்பயண மற்றும் விண்வெளி முகவாண்மை. இது அமெரிக்காவில் உள்ளது
national electrical code : (மின்.) தேசிய மின்விதித் தொகுப்பு : மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லு நர்களுக்கு வழி காட்டியாகவுள்ள விதிகளின் தொகுப்பு
native copper : (கனிம.) தன்னியல்புத் தாமிரம் : மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்படுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது
natural : (அச்சு.) இயற்கை வண்ணம் : சிறிதளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மரக்கூழின் இயற்கை வண்ணத்திலிருந்து கிடைக்கும் காகிதத்தின் வண்ணம்
natural cement : (பொறி.) இயற்கை சிமென்ட் : சீமைச் சிமென்ட் (போர்ட்லண்ட் சிமென்ட்) எனப்படும் சீமைக்காரையிலிருந்து வேறுபட்டது. இது விரைவாக இறுகிக் கொள்ளும்; விலை மலிவானது; வெளிர் நிறமுடையது; வலிமை குன்றியது
natural frequency : (இயற்.) இயல்பு அலைவெண் : ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஊசல், ஒரு நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட (இயல்பான) அலைவெண்ணுடன் ஊசலாடும் போக்குடையதாத இருக்கும். அதனை இழுத்து, இன்னும் அதிக வேகமாக ஊசலாடும் படி செய்யலாம். அதே போன்று, ஒரு கொண்மியும் மின்கம்பிச் சுருளும் உடைய குறிப்பிட்ட ஒரு மின் சுற்றுவழியில் மின்னோட்டமான ஒர் இயல்பான அலைவெண்ணெக் கொண்டிருக்கும்
natural gas : இயற்கை எரிவாயு : பூமியில், குறிப்பாக எண்ணெய்ப் படிவுகள் உள்ள மண்டலங்களில் கிடைக்கும் எரிவாயு. இது மிக நேர்த்தியான எரி வாயுவாகும். இது வீடுகளிலும், தொழில் துறையிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
natural resins : (வேதி. குழைம.) இயற்கைப் பிசின் : தாவரங்களிலிருந்து சுரக்கும் திடப்பொருள்; எளிதில் உடையக்கூடியது; கண் ணாடி போல் பளபளப்புடையது. கிளிஞ்சலின் தன்மையுடையது; தண்ணிரில் கரையாதது; பல்வேறு உருகுந்திறன் கொண்டது
natural selection : இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு : மரபுப் பண்புகளும், போட்டியின் விளைவான தகுதி நேர்வுப் பண்புகளும் சேர்ந்த இயற்கை இயல் வள்ர்ச்சித் தேர்வுக் கோட்பாடு. விலங்குகளின் குட்டிகள் அல்லது தாவரங்களின் கன்றுகள், தம் பெற்றோரிடமிருந்து சற்றே வேறுபட்டனவாக இருக்கும். தங்கள் சூழலுக் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய குட்டிகளும், கன்றுகளும் உயிர் வாழ்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அவ்வாறு தகவமைத்துக் கொள்ள இயலாதவை மாண்டு போய்விடுகின்றன; அவை இனப்பெருக்கம் செய்வதில்லை. இதனால், சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இவற்றின் வடிவமும் இயல்பும் மாறிவிடுகின்றன இதுவே இயல் தேர்வு விளைவு' என்பதாகும்
nautical measure : கடல் அளவை : 6080.20 அடி = 1 கடல் மைல் அல்லது அலகு
3 கடல் மைல் = 1 லீக்
60 கடல் மைல் = 1 பாகை (பூமத்திய ரேகையில்) N.B. (அச்சு.) பி.கு. பின்குறிப்பு என்பதன் சுருக்கம். பின் வருவதை நன்கு கவனி என்பது பொருள்
nave : (க.க.) நடுக்கூடம் : கிறித்தவத் திருக்கோயிலின் நடுக்கூடம்
navel : (உட.) கொப்பூழ் : உந்தி; மையப்புள்ளி
navel string : (உட.) கொப்பூழ்க் கொடி
neat cement : (க.க.) தூய சிமென்ட் : மணல் கலக்காத தூய்மையான சிமென்ட் காரை
neat's foot oil : மாட்டுக் காலடி எண்ணெய் : எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும் முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் ஒரு வகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்படுத்துவதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது
nebula-ae : (விண்.) ஒண்மீன் படலம் : ஒளி ஆவி போலத் தோன்றும் நீள் நெடுந்தொலைவிலுள்ள விண் மீன் குழாம்
neck : (க.க.) தூண் கழுத்து : தூணின் தலைப்பை அடுத்த கீழ்ப் பகுதி
(2) மரத்தண்டின் இடை இணைப்புப் பகுதி
necking : (க.க.) எருத்தம் : தூணின் தலைப்பகுதிக்கும் நடுத் தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி
needle bearing : ஊசித்தாங்கி : ஒரு வகை உருள் தாங்கி. இதிலுள்ள உருளிகள் ஊசிகளைப் போல் மெல்லிதாக இருக்கும்
needle point : (அ.க.) ஊசிப் பின்னல் வேலை : திரைச்சீலைகளில் கம் பளி இழைகளினால் செய்யப்படும் நுட்பமான ஊசிப் பின்னல் வேலை
ஊசிமுனை : (எந்.) எந்திரவியலில் ஊசி போல் கூர்முனையுடைய ஒரு கருவி
needle valve : (எந்.) ஊசி ஒரதர் : ஒரு குண்டூசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்பட்டிருக்கும்
negative : மறிநிலைத்தகடு : ஒளிப் படக் கலையில் ஒளியும் நிழலும் நேர்மாறாகப் பதிந்திருக்கும் ஒளிப்பட உருவப்படிவம்
negative brushes of a dynamo : (மின்.) நேர் மின்னாக்கி மறிநிலைத் தூரிகை : எதிர்மின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோட்ட அலைகளைத் திருப்பி விடும் கருவியின் தூரிகை
negative ion : (மின்.) எதிர்மின் அயனி : எலெக்ட்ரான்களைப் பெற்று, எதிர் மின்னூட்டம் பெற்றுள்ள ஓர் அணு
nagative carbon : (மின்.) எதிர்மின் கார்பன் : ஒரு தொடர் மின்னோட்டச் சுடர் விளக்கில் கீழ் நிலைக் கார்பன்
negative charge : (மின்.) எதிர்மின்னேற்றம் : எலெக்ட்ரான்கள் சற்று மிகுதியாகவுடைய ஒரு மின்னழுத்த நிலை
negative conductor : (மின்.) எதிர்மின் கடத்தி : எதிர் மின்வாயிலிருந்து செல்லும் ஒரு மின்கடத்தி
negative ghosts : மறிநிலை இரட்டைத் தோற்றம் : தொலைக் காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப் பட்ட அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் கறுப்பு வெள்ளைப் பகுதிகள் ஒன்றுக் கொன்று மாறி ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி negative plate: (மின்.) எதிர்மின் தகடு: (1) ஒரு சேமிக்கலத்தில் உள்ள கடற்பஞ்சு போன்ற ஈயத் தகடு. இது மின்னியக்கத்தின் போது எதிர்மின் தகடாக அல்லது எதிர்மின் வாயாகச் செயற்படுகிறது (2) ஓர் அடிப்படை மின்கலத்தில் கார்பன், செம்பு, பிளாட்டினம் முதலியவை எதிர்மின் வாயாகச் செயற்படுகின்றன
negative resistance: (மின்.) எதிர்மின் தடை: ஒரு மின்சுற்று வழியில் மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் குறைகின்ற ஒரு நிலை.
negative side of circuit: (மின்) மின்சுற்று வழியின் எதிர்மின் பாதை: ஒரு மின்சுற்று வழியில் மின்விசை நுகர்வுச் சாதனத்திலிருந்து மின் வழங்கும் ஆதாரத்திற்குத் திரும்பிச் செல்லும் மின் கடத்து பாதை
negative temperature coefficient (மின்.) எதிர் வெப்பக் குணகம்: வெப்ப நிலையில் ஏற்படும் ஆக்க முறையான மாறுதல் காரணமாக அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் உண்டாகும் எதிர்மறை மாறுதல்
neon :(மின்.) நியோன்: செவ்வொளி விளக்குகளில் பயன்படுத்தப்படும் செயலற்ற நிறமற்ற தனிம வாயு. இது மற்றப் பொருள்களுடன் வினைபுரிவதில்லை. செவ்வொளி விளக்குகளில் நிரப்பப் பயன்படுகிறது
neon light: (மின்.) நியோன் விளக்கு: மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒரு வகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும் போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன
neon - light ignition timing: (தானி.) செவ்வொளிச் சுடர்மூட்ட நேரம்: உந்து ஊர்தியின் எஞ்சினில் ஒரு சிறிய செவ்வொளி விளக்கினை கம்பிகள் மூலமாகத் தொடரிலுள்ள சுடர் மூட்டக் கம்பியின் துணைமின் சுற்றுவழியின் கம்பிகளை முதல் எண் சுடர்ப்பொறிச் செருகுடன் இணைப்பதன் வாயிலாக, முறிப்பான் தொடும் போதும் விடும்போதும் ஒளி மின்னுகிறது. சமனுருள் சக்கரத்தில் அல்லது அதிர்வு அடக்கியில் உள்ள காலக் குறியீட்டில் நேரடியாக ஒளி மின்னும் போது எஞ்சின் உரிய இயக்க நேரத்தில் இருப்பதாகக் கண்டு கொள்ளலாம்
nep; பருத்தி முடிச்சு: பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள்
nernst lamps (மின்.) நெர்ன்ஸ்ட் விளக்கு: ஒருவகை வெண்சுடர் விளக்கு. இதிலுள்ள ஒளிரும் பகுதியில் அரிய மண்களின் உருகா ஆக்சைடுகளினாலான ஒரு பென்சில் இருக்கும்
nested tables: கூண்டு மேசை: பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகி வைத்துக்கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கும்
nest of saws, (மர.வே)தொகுப்பு ரம்பம்: ஒரே கைப்பிடியில் பயன் படுத்தக் கூடிய பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது
nest plates (குழை) தொகுப்புத் தகடு: வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயன்படும் உட் குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத் தகடு
neutral: (தானி ) இயங்காநிலை: விசையூக்க எந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை. இந்நிலையில் வேகமாற்றப் பல்லினை பொருந்தாமலிருக்கும். மின்னியலில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ இல்லாமல் இருக்கும் நடுநிலை இணைவு
neutral axis: (பொறி) நொதுமல் அச்சு: ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக்கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத ஒரு புள்ளி இருக்க வேண்டும். இந்தப் புள்ளி தான் அப் பகுதியின் 'நொதுமல் அச்சு' எனப்படும்
neutral conductor: (மின்.) நடுநிலை மின்கடத்தி: இரு மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பி. மூன்று மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மின் கம்பி
neutral flame: நடுநிலைச் சுடரொளி: வாயு மூலம் பற்ற வைப்பதற்கான சுடரொளி. இதில் முழுமையான உள்ளெரிதல் இருக்கும்
neutralization: (வேதி) செயலற்ற தாக்குதல்: அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பது போல், மாறான விளைவினால் பயனற்ற தாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்
neutral position : (தானி.) நடுநிலை: உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கும் வகையில் மாற்றுப் பல்லிணைகளை ஒன்றையொன்று தொடாமலிருக்கச் செய்யும் பல்லிணை மாற்று நெம்புகோலின் நிலை
neutral wire: (மின்.) நடுநிலை மின்கம்பி; சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது
neutrino: (மின்.) நியூட்ரினோ: ஒரு நியூட்ரான் உடைந்து அல்லது சிதைந்து ஒரு புரோட்டானாகவும், ஓர் எலெக்டிரானாகவும், மாறுவதன் காரணமாக உண்டாகும் மின்னூட்டம் பெறாத துகள்
neutrodyne: (மின்.) நடுநிலை விசையழுத்தம்: கொண்மிகளைச் செயலற்றதாக்குவதன் மூலம் தேவையற்ற மின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வானொலி மின்சுற்று வழி
neutron: (இயற்.) நியூட்ரான்; நொதுமம்: மின்னியக்கமில்லாத சிற்றணு மூன்று அடிப்படை அணுத் துகள்களில் ஒன்று. இது புரோட்டான் போன்றே எடையுள்ளது. ஆனால் இதில் மின்னேற்றம் இராது
nevvel: (க.க.) நடுத்தூண்: சுழற் படிக்கட்டின் உச்சியில் அல்லது அடியில் உள்ள நடுக்கம்பம்
news: பத்திரிகைக் காகிதம்: அடி மரக்கூழிலிருந்து தயாராகும் ஒரு வகைக் காகிதம். செய்தியிதழ்கள் அச்சடிக்கப் பயன்படுகிறது
news board: செய்தியிதழ்க் காகித அட்டை: செய்தியிதழ்க் காகிதக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மலிவான காகித அட்டை
newsprint: (அச்சு) செய்தித்தாள் காகிதம்: செய்தித்தாள் அச்சிடுவதற்கான, மரக்கூழில் தயாரான தாள்
news stick: (அச்சு) செய்தி அச்சுக்கோப்புக் கட்டை: ஒரு குறிப்பிட்ட அளவுடைய அச்சுக்கோப்புக் கட்டை. பத்தி அகலத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. செய்தித்தாள் பணியில் பயன்படுத்தப்படுகிறது
newton: (மின்.) நியூட்டன்: விசையின் ஓர் அலகு. இது ஒரு கிலோ கிராம் பொருண்மைக்கு, வினாடிக்கு ஒரு மீட்டர் அளவுக்கு முடுக்கம் கொடுக்கக்கூடியது
newton, issaac (1642-1727): (மின்.) நியூட்டன், ஐசக் :புகழ் பெற்றி ஆங்கில விஞ்ஞானி; கணிதமேதை; கலன கணிதத்தைக் கண்டுபிடித்தவர். புவியீர்ப்புக் கோட்பாட்டினை வகுத்தவர்
newtonian telescope: நியூட்டானியத் தொலைநோக்கி: ஒரு குழி ஆடியினால் உருவாகும் விண் மீன் உருவத்தை குழாயின் பக்க வாட்டிலுள்ள ஓர் ஆடியின் வழியாகப் பார்ப்பதற்குரிய ஒரு தொலைநோக்கி
newton's disc: (இயற்) நியூட்டன் வட்டு: இது ஒரு வட்ட வடிவத் தகடு. இதில் நிறமாலையில் வண்ணங்கள் வீத அளவுகளில் தீட்டப்பட்டிருக்கும். இந்த வட்டினை வெகு வேகமாகச் சுழற்றும் போது அதிலுள்ள வண்ணங்கள் வெண்ணிறமாகத் தோன்றும்
newton’s law of cooling : (இயற்.) நியூட்டனின் குளிர்விப்பு விதி: "ஒரு சூடான பொருள் குளிர்ச்சியடையும் வேகமானது, அந்தப் பொருள், அதைச் சுற்றியுள்ள காற்று போன்றவற்றின் வெப்பநிலைக்கு வீத அளவில் இருக்கும்" என்னும், விதி. ஒரு பொருள், காற்றைவிட 30° அதிகச் சூடாக இருக்கும் போது, அது நிமிடத்திற்கு 6°என்ற வீதத்தில் குளிர்ச்சியடையுமானால், அது காற்றைவிட 15 °அதிகச் சூடாக இருக்கும் போது, நிமிடத்திற்கு 3° என்ற வீதத்தில் குளிர்ச்சியடையும். ஒரு பொருள் அதைச் சுற்றி யுள்ள பொருள்களைவிட மிக அதிகமாகச் சூடாக இருக்குமானால்,இந்த விதி துல்லியமாக அமையாது
newton's laws of motion: (இயற்.) நியூட்டன் இயக்க விதிகள்: முதல் விதி: புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது, ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலை யிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும்
இரண்டாம் விதி:ஒரு பொருளின் முறுக்கமானது (அதாவது, அதன் வேக வளர்ச்சி வீதம்), அந்தப் பொருளின் மீதான நிகர விசையினை அந்தப் பொருளின் பொருண்மையினால் வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமம்
மூன்றாம் விதி: "ஒவ்வொரு வினைக்கும், அதாவது, ஒவ்வொரு இயற்பியல் விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு"
nibbler :(எந்) கொந்து கருவி: உலோகத் தகடுகளைச் சிறுகச் சிறுகக் கொந்தி விசித்திரமான வடிவங்களை உருவாக்கப் பயன் படும் உலோக வேலைப்பாட்டுக் கருவி
nibs: பேனா அலகு: பேனாவின் கூர்மையான அலகு.
niche: (க.க.) சுவர் மாடம்: சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர் மாடம்
nichrome: (உலோ) நிக்ரோம்; நிக்கலும், குராமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின்தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது
nickel: (உலோ.) நிக்கல்: உலோகக் கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் பொருள். இதன் ஒப்பு அடர்த்தி 8.63 நிக்கல் முலாம்பூசவும், உலோகக் கலவைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது
nickel aluminium: நிக்கல் அலுமினியம்: 80 அலுமினியம், 20% நிக்கலும் கலந்த உலோகக் கலவை.நிக்கல் கலப்பதால் அலுமினிய உலோகக் கலவைகளின் விறைப்பாற்றல் அதிகமாகிறது
nickel cadmium cell (dair.) நிக்கல் காட்மியம் மின்கலம்: குழம்பு வகை மின்பகுப்பானைக் கொண்ட காரக் கரைசலுடைய மின்கலம். இது விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது
nickel copper: நிக்கல் செம்பு: நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக் காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன் படுகிறது. இதில் 60% நிக்கல், 33% செம்பு, 3.5% மாங்கனீஸ், 3.5% இரும்பு கலந்திருக்கும்
nickel malybdenum iron: (உலோ.) நிக்கல் மாலிப்டினம் இரும்பு: 20%-40% மாலிப்டினம். 60% நிக்கல், சிறிதளவு கார்பன் கலந்த ஒருவகை உலோகக்கலவை. இது அமில அரிப்புத் தடுப்பானாகப் பயன்படுகிறது
nickel plating: (மின்) நிக்கல் முலாம்: உலோக மேற்பரப்பில் நிக்கல் முலாம் பூசுதல். ஒரு நிக்கல் உப்பு நீரில் உலோகத்தை மூழ்க வைத்து குறைந்த அழுத்த மின்னோட்டத்தைச் செலுத்தினால் உலோகத்தில் நிக்கல் முலாம் படியும்
nickel silver: நிக்கல் வெள்ளி: இதனை ஜெர்மன் வெள்ளி என்றும் கூறுவர். செம்பு, நிக்கல், துத்தநாகம் கலந்த உலோகக் கலவை
nickel steel: நிக்கல் எஃகு: 3.5% நிக்கல் அடங்கிய எஃகு மிக வலிமை வாய்ந்தது: முறையாகச் சூடாக்கிப் பக்குவப் படுத்தினால் திண்மையாக இருக்கும்
nicket-tantalum alloy; (வேதி.) நிக்கல் டாண்டாலம் உலோகக் கலவை: 70% நிக்கல், 30% டாண்டாலம் அடங்கிய கடினமான, ஆனால் கசிவுத் தன்மையுடைய உலோகக் கலவை. மின் தடைக் கம்பிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
nipple: (உட.) முலைக்காம்பு: தாயிடம் குழந்தை பால் குடிக்கும் மார்பகத்தின் நுனிப் பகுதி. குமிழ்முளை: (கம்மி.) தோல், கண்ணாடி, உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை
nitrate: (வேதி.) . நைட்ரேட்டு: (1) நைட்ரிக் அமிலத்தின் உப்புப் இபாருள் சில்வர் நைட்ரேட்டு இந்த வகையைச் சேர்ந்தது (2) நைட்ரிக் அமிலத்துடன் அல்லது ஒரு கூட்டுப் பொருளுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற் பொருளிலிருந்து கிடைப்பது
nitric: (வேதி.) நைட்ரிக்: நைட்ரஜனிலிருந்து அல்லது நைட்ரஜன் தொடர்பான பொருள்
nitric acid: (வேதி.) நைட்ரிக் அமிலம்: சோடியம் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டைக் கந்தக அமிலத்துடன் கலந்து சிதைத்து வடிப்பதால் உண்டாகும் அமிலம். நிறமற்றது. மிகுந்த அரிக்கும் தன்மை கொண்டது
nitriding : (வேதி.) நைட்ரஜனேற்றம் : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளில் நைட்ரஜனை ஏற்றும் செய்முறை. உலோகக் கலவையை அம்மோனியா வாயுவுடனோ வேறேதேனும் நைட்ரஜனியப் பொருளுடனோ கலந்து சூடாக்குவதன் மூலம் நைட்ரஜன் ஏற்றலாம்
nitrogen : (வேதி.) நைட்ரஜன் : காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத்தனிமம். நிறமற்றது; மணமற்றது
nitroglycerin : (வேதி.) நைட்ரோகிளிசரின் : வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட் கலவை நீர்மம். இளமஞ்சள் நிறத்திலோ நிறமற்றதாகவோ இருக்கும். எண்ணெய்ப் பசையுடையது. கிளிசரின், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த வெடிப்பாற்றல் வாய்ந்தது, களிமண்ணுடன் கலந்து சுரங்கவெடி தயாரிக்கப்படுகிறது
noble metal : (வேதி.) துருப்படாத உலோகம் : விலையுயர்ந்த அல்லது தூய உலோகத்தைக் குறிக்கும் சொல். எளிதில் துருப்பிடிக்காத உலோகங்களையும் குறிக்கும்
nodes : (மின்.) அதிர்வு மையப் புள்ளி : அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப் புள்ளி
nogging : (க.க.) மரக்கட்டு மானம் : மரச்சட்டத்தில் செங்கல் வேலைப்பாடு அமைத்துக் கட்டுமானம் செய்தல்
noheet metal: செம்பத உலோகம்: இதனைச் 'செம்பத ஈயம்' என்றும் கூறுவர். இது சோடியத்துடன் கலந்து கெட்டியாக்கிய ஈயத்தைக் கொண்ட உராய்வுத் தடுப்பு உலோகம்
noil : கம்பளிச் சீவல் : குறுகிய கம்பளிச் சீவல் உல்லன் நூல்களுக்குப் பயன்படுகிறது
noise figure: (மின்.) ஒலி வீதம் :மின்மப் பெருக்கிகளில் (டிரான்சிஸ்டர்) கோட்பாட்டளவிலான ஒலிவிசையில் உள்ளபடியான ஒலி விசையின் வீத அளவு. இது டெசிபல்களில் குறிக்கப்படுகிறது
noise limiter: (மின்.) ஒலி வரையறுப்பான் : ஒலிவாங்கி மூலம் ஒலி திடீரென உயர்வதைத் தடுக்கக்கூடிய தனிவகை மின் சுற்றுவழி
no load voltage : (மின்.) பளுவிலா மின்னழுத்தம் : ஒரு மின் கலத்தில் புறமின் சுற்றுவழியில் மின்னோட்டம் பாயாமலிருக்கும் போது உள்ள முடிவான மின்னழுத்தம்
nomen clature: (பொறி.) கலைச்சொல் : ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி
nonconductor : (மின்.) மின் கடத்தாப் பொருள்: தன்வழியாக மின்விசை செல்வதை அனுமதிக்காத ஒரு பொருள்
noncorrosive flux : அரித் திடா உருகு பொருள்: பற்றாசு வைத்தல் ஒட்டவைத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் போது அரிமானம் உண்டாக்காத ஒருவகை உருகுங் கலவைப் பொருள்
nondeforming steel : (உலோ) உருத்திரியா எஃகு : 15% மாங்கனீஸ் கலந்து கடினமாக்கிய எஃகு. இது கருவிகள் செய்யவும் வார்ப்படங்கள் செய்யவும் பயன்படுகிறது
nonferrous metals : (பொறி ) அயமிலா உலோகங்கள் : இரும்பு அடங்கியிராத உலோகங்கள்
noninductive circuit' (பொறி.) தூண்டாமின் சுற்றுவழி : மின்னோட்டத்தின் காந்த விளைவு மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ள அல்லது அடியோடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு மின்சுற்றுவழி
noninductive'resistance: (பொறி.) தூண்டா மின்தடை: தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை
noninductive Winding : (பொறி.) தூண்டாச் சுருணை : சுருளின் ஒரு பாதியில் பாயும் மின்னோட்டத்தில் ஏற்படும் காந்தப் புலம், மறுபாதியில் எதிர்திசையில் பாயும் மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தப் புலத்தின் மூலம் செயலற்றதாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட சுருணை
nonmetallic :sheath cable (பொறி.) உலோகமிலா உறை பொதிக் கம்பிவடம் : உலோகமல்லாத ஓர் உறையில் அல்லது தறி போன்ற உறையில் பொதியப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று மின் கடத்திகளைக் கொண்ட ஒரு வகை மின்கம்பிப் பொருள்
nonpareil : (அச்சு) தனி நிலை அச்செழுத்து : அச்செழுத்தின் அளவு வகைகளில் ஒன்று. இது 6 புள்ளி அளவினைக் குறிக்கும்
non pressure : அழுத்தமிலா உருகிணைப்பு : அழுத்தம் எதுவுமின் )றிப் பற்றவைப்பதற்குரிய பற்ற வைப்பு முறைகளில் ஒன்று
nonrigid airship : (வானூ.) விறைப்பிலா வான்கலம் : வாயுப்பைகள், காற்றறைப் பைகள் போன்றவற்றிலுள்ள அக அழுத்தத்தின் மூலம் மட்டுமே வடிவம் பராமரிக்கப்படும் ஒரு வான்கலம்
nordberg key: (எந்) நார்ட்பெர்க் திறவுகோல் : சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்ட வடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும் பெரிய விட்டம் சுழல்தண்டின் விட்டத்தில் பகுதி 6 வரை இருக்கும். பெரிய வடி வளவுகளில் இத் திறவுகோல் சூழல் தண்டின விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத்திறவுகோல் சுழல் தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்
normal : இயல்பளவு : நிலைநாட்டப்பட்ட சட்டம் அல்லது விதிக் கிணங்க அமைந்துள்ள நிலை (2) செங்குத்துக் கோடு : (கணி.) ஒரு வளைவுக்குச் செங்குத்தாக இருக்கும் ஒரு கோடு
normalizing : (பொறி) இயல்பாக்குதல் : எஃகினை உயர்ந்த மாறுநிலை வெப்பத்திற்குக் கூடுதலாகச் சூடாக்கி, காற்றில் குளிர் வித்தல்
normal loop: (வானூ.) இயல்புக் கரண வளைவு : விமானம் இயல்பாகப் பறக்கும் நிலைக்கு வருதல்
normal or three-point landing; இயல்பான அல்லது மும்முனைத் தரையிறக்கம் : தரையிறங்கும் பரப்பிற்குத் தொடுவரைபோற் செல்கிற ஒரு பாதையில் தரை யிறங்குதல். இதில் பறக்கும் வேகத்தில் ஏற்த்தாழத் தொடுங் கணத்திலேயே ஏற்படுகிறது
normal solution: (வேதி) இயல்புக் கரைசல் : ஓர் அமிலத்தின் இயல்புக் கரைசல் 1000 க.செ.மீ கரைசலுக்கு ஒரு கிராம் ஹைட்ர ஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள் 1000 க. செ. மீ. யில் 36.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ.மீ. யில் 49 கிராம் கந்தக அமிலம் (HS<sub|2>SO<sub|4>) உற்பத்தியர்கும்,ஹைட் ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக் கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. யில் 17. கிராம் ஹைட்ராக்சில் அயனிகள் அடங்கியிருக்கும் எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம்சோடியம் ஹைட்ராக்சைடு
normal spin: (வானூ.) இயல்பு சுழற்சி : விமானம் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்மா றாக இயல்பான நிலையிலிருந்து சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், இதனைக் "கட்டுப்படுத்திய சுழற்சி என்றும் அழைப்பர்
norman : (க.க.) நார்மானிய கட்டிடக் கலை : நார்மானியர் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர் இங்கிலாந்தில் உயர் நிலையை எட்டிய நார்மானிய பாணிக் கட்டிடக் கலை
north pole : (மின்) வடதுருவம்; காந்த ஊசியின் வடமுனை காட்டும் வடதிசைப் பகுதி
nose : (பட்.) அலகு : ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றின் கூர்மையான அலகுப் பகுதி கடைசல் எந்திரத்தின் திருகிழைமுனை, துளையிடு எந்திரத்தின் கதிர், துரப்பணத்தின் கூர் அலகு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு
nose cone : (விண்.) மூக்குக் கூம்பு: விண் வெளிக்கலம் பறக் )கும்போது காற்றுத் துகள்களுடன் உராய்வதால் உண்டாகும் உயர் வெப்ப நிலையைத் தாங்கும் வகையில் அந்தக் கலத்தின் மூக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவக் காப்புக் கவசம்
nose - down : (வானூ.) கீழ்நோக்கிப் பாய்தல் : பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியைக் கீழ் நோக்கிப் பாயும்படி செய்தல்
nose heavy : (வானூ.) கூம்பு இறக்கம் : விமானம் இயல்பாகப் பறக்கும்போது, அதன்_கூம்புப்பகுதி கீழ் நோக்கி இறங்கும் போக்கு
nose - over : (வானூ) கூம்பு ஏற்றம் : விமானம் தரையிறங்கும் போது அதன் கூம்புப் பகுதி தற்செயலாக மேல் நோக்கித் திரும்புவதைக் குறிக்கும் சொல்
nose-up : (வானூ.) கூம்பு உயர்வு: பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியை உயர்த்துதல்
nose wheel : (வானூ) கூம்புச் சக்கரம் : விமானத்தின் கூம்புப் பகுதியினைத் தாங்குவதற்காக முதன்மைச் சக்கரங்களுக்கு முன்னே அமைக்கப்பட்டுள்ள, திசையறிந்து திருப்பத் தக்க சக்கரம்
nosing : (க.க.) படி வரிசை : படி வரிசை விளிம்பின் உலோக முகப்பு
notation: குறிமான முறை :குறியீடுகள், சைகைகள். உருவங்கள். எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை notching machine: வடுவெட்டுக் கருவி : உலோகத் தகடுகளில் வடுத்தடங்களை வெட்டவும், விளிம்புகளை மட்டப்படுத்தவும் பயன்படும் கருவி
novolak : (வேதி.குழை.) நோ வோலக்: நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கது மான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும், ஓர் அமில வினையூக்கியுடனும் வினைபுரிவதன்மூலம் கிடைக்கும் விளைபொருள் இது
nozzle : (எந்.பொறி.) கூம்பலகு : நீள் குழாயின் குழாய் முனை போன்ற கூம்பலகு.
nuclear energy : (இயற்) அணு ஆற்றல்: அணுவியல் வினையில் வெளிப்படும் ஆற்றல்
nuclear turbo-jet : (வானூ.) அணுவியல் விசையாழி: விசையாழியின் வழியாக வரும் காற்றினைச் சூடாக்குவதற்காக, உள்ளெரி அறைக்குப் பதிலாக, ஓர் அணு உலையைக் கொண்டிருக்கிற விசை யாழி
nucleus : (வேதி.) மையக்கரு : அணுவின் உள்மையத்தில் செறிந் துள்ள அணுக்திரள். இதில் நியூட்ரான்களும் புரோட்டான்களும் செறிந்து சேர்ந்திருக்கும்
number drills (உலோ.வே.) எண்ணிட்ட துரப்பணம் : 1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஓர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228"; 80 ஆம் எண் துரப்பணத் தின் விட்டம் 0.0135"
numbering machine : இலக்கமிடும் எந்திரம் : காசோலைகள், அனுமதிச் சீட்டுகள் முதலியவற்றில் தொடர்ச்சியாக இலக்கங்களை முத்திரையிடும் எந்திரம் அல்லது சாதனம்
numerals: (அச்சு) எண்குறி: எண்குறித்த இலக்கத் தொகுதி. பெருவழக்காகப் பயன்படுவது 1,2,3,4,5,6,7,8,9.0 என்ற அராபிய எண் குறிகள். ரோமானிய எண்கள் : I(1), v (5). L(50), C (100). D (500). M (1000)
numerator : (1)பின்ன மேல் இலக்கம் : பின்னத்தில் மேல் இலக்கத் தின் பகுதிகளைக் குறிக்கும் (2) எண்ணுபவர்
numismatics : நாணயவியல் : நாணயம், பதக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து வரலாற்றைக் கணிக்கும் அறிவியல்
nut :(எந்.) திருகாணி: சதுரமான அல்லது அறுகோண வடிவமுடையதும், உலோகத்தில் அல் லது வேறு பொருளினாலானதுமான ஒரு சிறிய துண்டு. இதன் உள்புறத்தில் மரையாணியை ஏற்பு தற்கான திருகிழைகள் அமைந்திருக்கும்
nut arbor or nut mandrel: (எந்.) ஆதார ஆச்சு : திருகாணிகளை வடிவமைப்பதற்குப் பயன்படும் சுழலும் முதன்மை ஆதார அச்சு
nut machine : (பட்.) திருகாணிப் பொறி : ஓர் உலோகப் பட்டையிலிருந்து அல்லது உலோகத் தண்டிலிருந்து திருகாணிகளைத் தயாரிப்பதற்கு வெட்டவும், துளையிடவும், தட்டி விடவும் பயன் படும் ஓர் எந்திரம்
nut shanks : (பட்) திருகாணித் துண்டு : பெரிய மரக்கைப் பிடிகளுடன் பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட திருகாணித்தண்டு அல்லது துண்டு nylon : (குழை.) நைலான் : குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் பிசின் கெட்டியானது; அதிக
வெப்பத்தையும் உராய்வையும், வேதியியல் எதிர்ப்பையும் தாங்கக் கூடியது. இதன் இந்தப் பண்புகளினால் இழைகளில் மட்டுமின்றி, எண்ணெய் வயல், கடல் போன்ற இடங்களிலும் எந்திரங்களில் இதனைப் பெருமளவில் பயன்படுத்த முடிகிறதுoak : (மர.வே.) கருவாலி : பல நோக்கங்களுக்குப் பயன்படும் மரம். இது கடினமானது; நீண்ட நாள் உழைக்கக்கூடியது; வலிமை மிகுந்தது; தட்பவெப்ப மாறுபாடுகளைத் தாங்கக்கூடியது. அறைகலன்கள் தயாரிக்கவும். தளமிடுவதற்கும், உருச்செப்பமிடுவதற்கும் பயன்படுகிறது
oak, red : (தாவ.) செங்கருவாலி : கரடுமுரடான பரப்புடைய, கடினமான, நீண்டகாலம் உழைக்கக் கூடிய மரம். செம்பழுப்பு நிறத்தில் கவர்ச்சியான கரணைகள் உடையது. இதில் வேலைப்பாடுகள் செய்வது கடினமாக இருக்கும்
oak, white : (தாவ.) வெண்கருவாலி : அமெரிக்காவில் மிகுதியாக வளரும் விலைமதிப்பு மிக்க வெட்டு மரம். இது இளம்பழுப்பு நிறத்தில், நெருக்கமான கரணைகள் உடையதாக இருக்கும்
oakum : (கம்மி.) பழங்கயிற்றுச் சிலும்பு : பழங்கயிறுகளைப் பிய்த்துச் சிலும்புவாகச் செய்து கலப்பற்றாகப் பயன்படுத்துவதற்கான பழங்கயிற்றுச் சிதைவு
obelisk : (க.க.) சதுரத் தூபி : நான்முகக் கூர்நுனிக் கம்ப வடிவமைந்த மரம்
oblique projection : சாய்வுத் தளப் படிவாக்கம் : ஒரு பொருளின் முகம் பார்ப்பவருக்கு இணையாக வரும் வகையில் அமைக்கும் முறை. இதில் இந்த முன் முகத்திற்குச் செங்குத்தாகவுள்ள முகங்கள், முன் முகத்தின் அதே கோணத்திற்கும் அளவு கோலுக்கும் வரையப்படுகிறது
oblong : (கணி.) நீள் சதுரம் : உயரத்தைவிடக் குறுக்கு அகலம் மிகுதியாகவுடைய உருவம்
obscuration : (வண்.) மங்கலாக்குதல் : ஒரு வண்ணத்தின் அல்லது இனாமலின் மலைப்புத் திறன். ஒளி ஊடுருவாத வண்ணப் பொருளின் மறைப்பு ஆற்றல்
obsidian : (கனிம.) எரிமலைப் பாறை : எரிமலைக் கரும் பளிக்குப் பாறை. இது மிகவும் கடினமான பளபளப்பானது
obstruction light : (வானூ.) தடை விளக்கு : விமானங்கள் பறப்பதற்கு ஆபத்தான உயரத்தைக் குறித்துக் காட்டுவதற்கென வடிவமைக்கப்பட்ட சிவப்பு விளக்கு
obtuse : (கணி.) விரிகோணம் : கூர் விளிம்பற்ற கோணம். இரு செங்கோணத்திற்குக் குறைந்து ஒரு செங்கோணத்திற்குப் பெரிதான கோணம்
obverse : முகப்புப் பக்கம் : நாணயம், பதக்கம் ஆகியவற்றில் முகப்புப் பக்கம். பின்புறத்திற்கு நேர் எதிரான முன்புறம்
occasional furniture : துணை அறைகலன் : பல்வேறு வடிவுகளிலுள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கான சிறிய அறைகலன். இக் காலத்தில் வரவேற்பு அறை. பகல் நேர அறை போன்றவற்றிலுள்ள அறைகலன்கள்
occultation : (வண்.) கோள மறைவு : ஒரு வான்கோளம், இன்னொரு பெரிய கோளத்திற்குப் பின்னால் மறைதல் ocher : (வண்.) மஞ்சட்காவி : சதுப்பு நிலங்களில் இரும்பும் சுண்ணாம்பும் கலந்து நீரில் உண்டாகும் மஞ்சட்காலி மண். இதனை நேர்த்தியான தூளாகச் செய்து ஆளிவிதை எண்ணையுடன் கலந்து வண்ணச் சாயம் தயாரிக்கப்படுகிறது
octagon : எண்கோணம் : எட்டுப்பக்கங்களும் எட்டுக் கோணங்களும் உடைய ஒரு சமதள உருவம்
octane rating : வெடிப்பு வீதம் : கேசோலின் வெடியெதிர்ப்புத் திறனளவு ஐசோஆக்டேன் மிகக் குறைந்த அளவு வெடிப்பு உண்டாக்கக் கூடியது; அதன் வீதம் 100. இயல்பான ஹேப்டேன் மிக அதிக அளவு வெடிப்பு உண்டாக்கும்; அதன் வீதம் 0. இவை இரண்டையும் சரி பாதி கலந்த கலவை 50 வெடிப்பு வீதம் உண்டாக்கும்
octane selector : (தானி.) நீர்க் கரிமத் தொடர்மத் தேர்வு முறை : பல்வேறு தரமுடைய கோசோலினிலிருந்து மிக உயர்ந்த அளவு திறம் பாட்டினைப் பெறுவதற்காக நேரத்தைச் சரியமைவு செய்வதற்கான ஒருமுறை
octant : (வானூ.) எண்ம வட்டமானி : வானியலிலும் கடற்பயணத்திலும் பயன்படுத்தப்படும் அரைக்கால் வளாகம் 90° வரையில் கோண அளவுகளில் இருக்கும். இதன் செயற்கை வான்விளிம்பு குமிழில் வடிவில் இருக்கும்
actopod : (உயி..) எண்காலிகள் : வாய்முகப்பைச் சுற்றிலும்எட்டு கிளையுறுப்பு களையுடைய அஞ்சத்தக்க கடல் விலங்கினம்
odd I e g caliper : (எந்.) இணையிலாக்கால் விட்டமானி : மிதமான அளவில் விளைந்தகால்களை யுடைய விட்டமானி. இதில் இரு கால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதித் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது
odeum : (க.க.) இசையரங்கு : பண்டையக் கிரேக்க ரோமானியர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்கு. இக்காலத்தில் ஒரு மண்டபம்; நீண்ட அறைக்கூடம்
odometer : தொலைவு மானி : பயணஞ் செய்த தொலைவினை ஆள விடுவதற்கான ஒரு சாதனம். இது சக்கரத்தின் குடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்
odontograph : (எந்.) பல்லிணை ஆர அட்டவணை : பல்லிணைப் பற்களின் உருவரைகளை அமைப்பதற்கான ஆரங்களின் அட்டவணை
O.D. pipe : (பொறி.) புறவிட்டக் குழாய் : கொதிகலன் குழாய்களின் பெயரளவிலான வடிவளவுகளைக் குறிக்கும். 12' விட்டத்திற்கு அதிகமான மென்குழாய்களையும் குறிக்கிறது
Oersted, Hans Christian (1777-1851) : (மின்.) ஒயர்ஸ்டெட், ஹான் கிறிஸ்டியன் : டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானி. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே ஆசிரியரானார். மின் விசைக்கும் காந்த விசைக்குமிடையிலான தொடர்பைக் கண்டுபிடித்தவர். ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின்போது, மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு கடத்தியைச் சுற்றி ஒரு காந்தப் புலம் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார்
oersted : (மின்.) ஒயர்ட்ஸ்டெட் : காந்தப்புலத்தின் செறிவினைக் குறிக்கும் திட்ட அலகு office automation: . (தானி.) அலுவலகத் தானியக்கம்: அலுவலகத்தின் தகவல்களைக் கையாள்தல், கணக்கிடுதல், விலைப்பட்டி தயாரித்தல் போன்ற பணிகளைத் தானாகவே செய்யக்கூடிய தானியங்கி எந்திரங்கள்
offset: (க.க) (1) உட்சாய்வு ; சுவரில் திட்பக் குறைவு உண்டு பண்ணும் பக்க உட்சாய்வு
(2) மாற்றுக்கறைப் படிவு: அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப்படியாக எடுக்கப்படும் கல்லச்சு முறை
offset paper, மாற்று அச்சுத்தாள்: மாற்றுக் கல்லச்சு முறைக்குப் பொருத்தமான பண்பியல்புகளுள்ள தாள்
offset printing: மாற்று அச்சு முறை: அச்சுப்படிவத்திலிருந்து அச்சுமை நேரடியாகத் தாளுக்குச் செல்லாமல், ஒரு ரப்பர் பரப்பில் முதலில் பதிந்து, பின்னர் எதிர்ப்படியாகத் தாளில் பதியும் அச்சு முறை
ogee: (க.க.) இரட்டை வளைவு: பாம்பு வடிவான அல்லது "S" வடிவான இரட்டை வளைவு
ogive; கூர்முனை வளைவு: வளைவுக் கூடத்தின் கூர்முனை வளைவு
ohm: (மின்.) ஓம்: மின்தடை அலகு
Ohm, George Simon (1787-1854): (மின்.) ஓம் ஜார்ஜ் சைமன்: ஜெர்மன் விஞ்ஞானி, மின்னழுத்தம் (ஓல்ட்டேஜ்) மின்னோட்ட அலகு (ஆம்பியரேஜ்), மின் தடை ஆகியவற்றுக் கிடையிலான தொடர்பினைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொடர்பு இப்போது ஓம் விதி என அழைக்கப்படுகிறது. இவர் முனீக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்
ohmic heating: (உலோ) மின் தடை வெப்பமூட்டல்: உலோகத்தின் தடையை மீறி உலோகத்தின் வழியே மின்னோட்டம் செலுத்தி உலோகத்தைச் சூடாக்குதல்
ohm meter: (மின்) ஓம் மானி: மின்தடையின் அளவினை ஓம்களில் நேரடியாகக் குறித்துக் காட்டும் ஒருவகை மின்னோட்டமானி
ohm resistance: (மின்) ஓம் தடை: ஒரு மின்சுற்று வழியில் (நேர் மின்னோட்டம்) ஓர் ஆம்பியர் மின்னொட்டத்தை ஓர் ஒல்ட் மின்னழுத்தம் உண்டாக்கும்போது அந்த மின்சுற்று ஓர் ஓம் தடையை உடையதாகக் கருதப்படும்
ohm's law: (மின்) ஓம் விதி : "ஒரு மின்னோட்டத்தில் பாயும் மின்னோட்டம், அதிலுள்ள தடையின் அல்லது எதிர்ப்பின் விகித அளவில் இருக்கும்" என்னும் விதி. இந்த விதி பெரும்பாலும் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது
oil: (வேதி.) எண்ணெய்: விலங்குகள், தாவரங்கள், கனிமங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ப் பொருள். இது மசகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன் தொழில்களிலும் மிகுதியாகப் பயன்படுகிறது
oil capacitor. (மின்) எண்ணெய் மின் உறைகலம்: எண்ணெய்ச் செறிவூட்டிய காகிதத்தை மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய பொருளாகப் பயன்படுத்தும் மின் னியல் உறைகலம்
oil control ring: (தானி.) எண்ணெய்க் கட்டுப்பாடு வளையம்: இது ஒரு வகை உந்து தண்டு வளைய்ம். இந்த வளையத்திலுள்ள வரிப்பள்ளத்தின் வழியாகவும், உந்து தண்டின் சுவரிலுள்ள சிறிய துவாரங்கள் வழியாகச் செல்லும் எண்ணெய் நீள் உருளைச் சுவரிலிருந்து பிறாண்டி எடுத்து திருகு கோட்டக் கலத்தினுள் வடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது
oil cup: (எந்) எண்ணெய்க் குவளை: இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையான போது எண்ணெய் இடைவிடாமலும் ஒரே சீராகவும் சொட்டுவதற்கு அனுமதிக்குமாறு செய்யப்படுகிறது
oiler: எண்ணெய்க்கலம்: சிறிய வடிவளவிலுள்ள எண்ணெய்க் கலம்
oil filters (தானி) எண்ணெய் வடிகட்டி: வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். இந்த வடிகட்டும் அமைவு 12872கி.மீ. தொலைவுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்
oil gauge; (தானி) எண்ணெய் அளவுமானி: இந்த அளவுமானிகளில் இருவகை உண்டு. ஒன்று கொள்கலத்திலுள்ள எண்ணெயின் அளவினைக் குறிக்கப் பயன்படுகிறது. மற்றொன்று பாயும் எண்ணெய் அழுத்த அளவுமானி. பொதுவாக கருவிப் பலகைமீது பொருத்தப்பட்டிருக்கும். அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்டிகையில் இது இந்த அளவுகளைக் காட்டும்
oil grinder: எண்ணெய்ச் சாணை: கூர்மையான கருவிகளைச் சாணை தீட்டுவதற்குப் பயன்படும், விசையினால் இயங்கும், ஒரு வகைச் சாணைக்கருவி
oil groove: (எந்) எண்ணெய்த் துளை: ஓர் எந்திரத்தின் பித்தளை உள்முகத்திலும், அதன் சறுக்குப் பரப்பிலும் வெட்டப்பட்டுள்ள வரிப்பள்ளம். இது மசகிடுவதற்காக எண்ணெயை வழங்குவதற்குப் பயன்படுகிறது
oil hardening: (எந்) எண்ணெய் இறுக்கம்: எஃகினை நீருக்குப் பதிலாக எண்ணெயில் ஊறவைத்துக் கெட்டியாக்குதல்
oil hole: (எந்.) எண்ணெய்த் துளை: மசக்கெண்ணெய் ஊற்றுவதற்குரிய எந்திரத்துளை
oil-hole drills: (உலோ.வே.) எண்ணெய்த் துளைத் துரப்பணம்: எந்திரத் தண்டிலிருந்து வெட்டு முனை வரைச் செல்லும் ஒன்று அல்லது இரண்டு துளைகளையுடைய துரப்பணம். ஆழமான துளைகளைத் துரப்பணம் செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது
oilless-type bearings: (தானி) எண்ணெயிலாத் தாங்கிகள்: (1) நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே எண்ணெயிடுதல் தேவைப்படும் தாங்கிகள், இவை எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் நுண் துளையுள்ள உலோகத்தினால் செய்யப்படுகின்றன
(2) காரீயகச் செருகிகள் கொண்ட வெண்கலத் தாங்கிகள்
oil line: (தானி.) எண்ணெய் குழாய் அமைவு: மசகு எண்ணெய்க்கான சுற்று வழியினையுடைய குழாயும் அதனுடன் இணைந்த சாதனங்களும்
oil pump; (தானி.) எண்ணெய் விசைக் குழாய்: எண்ணெய் விசைக் குழாய்களில் பல்லிணை வகை. இதழ் வகை, குண்டல வகை எனப் பல வகை உண்டு. இவை பெரும்பாலும் எஞ்சினின் இணைபிரியா அங்கமாக அமைந்திருக்கும். சேமிப்புக் கலத்திலிருந்து எண்ணெயை மேல்மட்டங்களுக்கு இறைப்பதற்கு இவை பயன்படுகின்றன
oil stone: (மர.வே.) சாணைக் கல்: கருவிகள் முதலியவற்றை கூரமையாக்குவதற்கான எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல்
oil-tank vent: (வானூ) எண்ணெய்க் கலப்புழை: எஞ்சினிலிருந்து எண்ணெய்க் கலத்திற்கு எண்ணெய் ஆவிகளைச் செலுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய குழாய்
oil tannage: எண்ணெய் பதனிடல்: தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக் காலத்தில் சில வகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுட னும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத்தோல், மான் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது
oil varnish : (,மர.வே) எண்ணெய் வண்ண மெருகு : ஆளிவிதை எண்ணெய், மரப்பூச்செண்ணெய் போன்று உலரும் எண்ணெய்களைக் கொண்ட வண்ண மெருகு ஆக்சிகரணம் மூலமாக மெதுவாகக் கெட்டியாதல் நடைபெறுகிறது
oleaginous: (வேதி.) எண்ணெய்ப் பசை : எண்ணெயின் இயல்புடையது
olefine : (வேதி.) ஒலிஃபைன் : எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வேதியியற் பொருள்
oleo gear: (வானூ.) எண்ணெய்ப் பல்லிணை: எண்ணெய் பூசக்கூடிய ஒரு சாதனம். இது ஒரு துவாரத்தின் வழியாகச் செல்லும் எண்ணெய் பாய்ந்து பல்லிணைக்கு மசகிடுகிறது
olive : தேவதாரு : மெதுவாக வளரும் ஒருவகை மரம். நெருக்கமான குருணை மணிகள் உடையது. கனமானது. இளமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் அடர்பழுப்பு நிறப்புள்ளி களும் பட்டைகளும் அமைநதிருக்கும். நுட்ப வேலைப்பாட்டுப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது
omega; ஒமேகா : கிரேக்க நெடுங் கணக்கின் கடைசி எழுத்து
omnigraph : தானியங்கிக் கத்தி : தானியங்கி அசிட்டிலின் கத்தி. இதில் ஓர் எந்திரமுனை அமைந்திருக்கும். அது சுத்தியின் இயக்கத்திற்கேற்ப உருவங்களைச் செதுக்கும். இதன் உதவியுடன் ஒரே சமயத்தில் பலபடித் தகடுகளை வெட்டி எடுக்கலாம்
oneside coated :ஒருபக்கப் படலத் தாள் : ஒரு பக்கம் மட்டுமே படலப் பூச்சுடைய கற்பாள அச்சுத் தாள்
onion skin: சருகுத் தாள்; தட்டச்சில் படியெடுப்பதற்குப் பயன்படும் மிக மெல்லிய தாள்