அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி/3

onyx; (வேதி.) பல்வண்ண மணிக் கல் : பற்பல வண்ண அடுக்குகள் கொண்ட மணிக்கல் போன்ற சலவைக்கல்

oolitic limestone: (க.க) மணிக்கல் சுண்ணம் : மிக நுட்பமானக் கோளவடிவத் துகள்களினாலான பரல் செறிவுடைய சுண்ணக்கல்

ooze : ஆற்று வண்டல் : நீராளமான அடிச்சேறு

ஈரக்கசிவு : துளைகள் வழியாக ஈரம் கசிதல்

ooze leather :தோல் மெருகு : தோல் பதனிடுவதற்கான ஒரு முறை. தோலுக்கு வெல்வெட்டு போன்ற மென்மையான தன்மையளிப்பதற்கு இந்த முறை பயன்படுகிறது

opacimeter : ஒளிபுகாத்திறன் மானி : காகிதத்தின் ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி

opacity : (அச்சு.) ஒளிபுகாத் திறன் : காகிதத்தின் ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை

opaque : ஒளிபுகா : ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத இயல்பு

open circuit: (மின்) திறப்பு மின் சுற்று வழி : மின் சுற்று முழுமை பெறாமலும், மின்னோட்டம் இல்லாமலும் இருக்கும் ஒரு மின்சுற்று வழி

open circuit cell : (மின்.) திறப்பு மின்சுற்று வழிக்கலம் : இடையிடைப் பணிகளுக்காக திறப்பு சுற்று வழியில் வைக்கப்கப்பட்டுள்ள மின்கலம்

open hearth : திறந்த உலை: ஆழமற்ற முட்டு அனல் உலை. இது எஃகு செய்வதற்கான திறந்த உலை முறையில் பயன்படுகிறது

open hearth proeass : திறந்த உலை முறை : ஆழமற்ற முட்டு அனல் உலையில் எஃகு செய்யும் முறை

open mould (வார்) திறப்பு வார்ப்படம் : நீண்ட சலாகைகளும் தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம்.சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்துவிட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்

open string stairs : (க.க) திறப்பு மென் படிக்கட்டுகள் : ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கைப்பிடியும் உடைய மாடிப்படி. மின் கட்டைகளும் செங்குத்துப் பகுதியும் பக்கவாட்டிலிருந்து புலனாகுமாறு கட்டப்படுகிறது

open wiring : (மின்) திறப்பு வகை மின் கம்பியமைப்பு : மின் கடத்திகள் வெளி தெரியுமாறு கம்பிகை அமைத்தல். இந்த முறையில் மின்கடத்திகள் பீங்கான் குமிழ்களில் அல்லது முளைகளில் பொருத்தப்பட்டிருக்கும்

operating speed : (வானூ) இயக்க வேகம் : விமானத்தில் எஞ்சின் வேகத்தின் 87.5% வேகத்திற்கு இணையாகப் பறக்கும் வேகம்

operator (எந்.) இயக்குபவர்: அல்லது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துபவர்

opposite : மறுதலை : எதிர் முகமான, எதிர் நிலையான, முற்றிலும் நேர் எதிரான

optical altimeter: (வானூ) விழாக்காட்சி உயரமானி: பொருத்தமான பார்வை முறை மூலம் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை உயரமானி

optical center: (அச்சு) விழிக்காட்சி மையம்: அச்சிட்ட பக்கத் தில் அல்லது வரைபடத்தில் நமது கண் நாடும் ஒரு மையப்பகுதி. இது உள்ளபடியான மையத்திற்கு மேலே, மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பகுதியாக இருக்கும்

optical distortion; (குழை) காட்சித் திரிபு: ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் வழியாகப் பார்க்கும் போது தோன்றும் தோற்றத் திரிபு பிளாஸ்டிக்கின் ஒரு சீர்மையற்ற காட்சித் தன்மையினால் உண்டாகிறது

optical pyrometer: ஒளியியல் மின்முறை வெப்பமானி: கடும் வெப்பத்தினால் உண்டாகும் நிறத்தையும், மின்னோட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சூடாக்கப்பட்ட கம்பியின் நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து உயர்ந்த அளவு வெப்பத்தை அளவிட உதவும் சாதனம்

orbit: (விண்.) கோளப்பாதை: ஒரு வான்கோளம் இன்னொரு கோளத்தைச் சுற்றிவரும் பாதை

order: (1) (க.க.) மரபொழுங்கு: ஒரு கட்டிடக்கலைப் பாணியின் தனிச்சிறப்பான மரபொழுங்கு

(2) (தாவ.) இனக்குழுமம்: தாவர வியலில் ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த குழுமம்

(3) (கணி.) படிமுறை: கணிதவியலில், அடுக்குத் தொடரின்படி முறை எண்ணின் மதிப்பளவு

orders of architecture: (க.க) கட்டிடக் கலைப்பாணிகள்: கட்டிடக் கலையில் பழைமையான ஐந்து பாணிகள். அவை: டாஸ் கன் பாணி, டோரிக் பாணி; அயோனிக் பாணி, கோரிந்தியன் பாணி, கலவைப்பாணி

ordinate: (கணி) நாண்வரை: வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டுக்கு இணையான வரை

ore: (கனிம.) தாது: உலோகம் கலந்துள்ள பாறை, இதிலிருந்து உலோகங்கள் எடுக்கப்படுகின்றன

organic: (வேதி.) கரிமப் பொருள்: விலங்குகளிலிருந்தோ, தாவரங்களிலிருந்தோ இயற்கையாக கரிமச்சேர்க்கையுடைய பொருள்

organism: (உயி..) உயிரி: விலங்கு, தாவர இன உயிர்களில் ஒன்று. மனிதன் சிக்கலான உறுப்பமைதியுடைய ஓர் உயிரி. அமீபா ஒரே உயிரணுவுடைய ஓர் உயிரி

oriel : (க.க.) தொங்கற் பலகணி: சுவர் ஆதாரத் தண்டயக் கைகள் மீதமர்ந்த பல்கோணத் தொங்கற் பலகணி

orient : கீழ்த்திசை : கீழ்த்திசைக் குரிய

oriental walnut: கீழ்த்திசை வாதுமை: இது ஒருவகை மரம். இதனைக் 'கீழ்த்திசை மரம்' என்றும் கூறுவர். பெரிய வடிவளவில் வளரும் ஆஸ்திரேலிய மரவகை. அலங்கார அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

oriantation : திசைத் தொடர்பு நிலை : கிழக்குத் திசைபான திசைத் தொடர்பமைவு. ஓர் விளையாட்டரங்கம், விளையாடும் வீரர்களின் கண்களில் சூரியஒளி படாதவாறு அமைக்கப்படும்

orifice : (பற்) புழைவாய் : வாயுக்கள் பாய்வதற்கான துவாரம். இந்தப்புழைவாய் ஓரதரினால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்

Original : மூலப்படிவம் : பிறி தொன்றை மூலமாகக் கொள்ளாத மூல முதற்படி. வேறொன்றைப் பார்த்துப் பின்பற்றத்தக்க, தற்பண்பு வாய்ந்த படைப்பு ormolu: பளபளப்பு வெண்கலம் : தட்டு முட்டுச் சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம்

ornament : அணி வேலைப்பாடு : அணி ஒப்பனை செய்யப் பயன்படும் அழகு வேலைப்பாடு

ornithopter : (வானூ) Aஆர்னித்தோப்டர்: ஒருவகை விமானம். இது காற்றைவிடக் கனமானது. படபட என்று அடிக்கும் சிறகுகள் உடையது

orometer : ஒரோ மானி : கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைப் பதிவு செய்யக்கூடிய அனிராய்டு பாரமானி

orthographic : புடை போவியக் கலை : நிலப்படங்களில் உயர்ச்சி யூட்டும் தொலைத் தோற்ற முறை

orthographic projection : தொலைத் தோற்ற முறை : நிலப்படங்களில் உயர்ச்சியூட்டும் தொலைத்தோற்றமுறை, இதில் முகப்புத் தோற்றம், மேல்முகத் தோற்றம், வலப்பக்க தோற்றம் முதலியவற்றைக் காட்டலாம்

orthoptera ; (உயி) அடுக்குச் சிறகிகள்: நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டு இனம். இவற்றின் முதல் இணைச் சிறகுகள் கனமாகவும், இரண்டாம் அடுக்குச் சிறகுகள் சவ்வு போன்றும் அமைந்திருக்கும்

ortho style: (க.க) நேர் வரிசை தூண்: நேர்கோட்டில் தூண்களை அமைக்கும் முறை

oscillation: (க.க.) ஊசலாட்டம் : ஓர் ஊசலைப்போல் முன்னும் பின்னுமாக ஊசலாடுதல் இருமுனைகளுக்கிடையே இங்குமங்குமாக அசைதல்

oscillator : அலைவி : மாறு மின் னோட்டம் உண்டாக்குவதற்குப் பயன்படும் உயர் அலைவெண் உள்ள ஒரு மின் சுற்றுவழி

osciliograph : (மின்) அலைவு பதிப்பி : தங்கப் பேனாக்களின் முள் நுனிகளிலும், அரிமானத்தை எதிர்க்கும் உலோகக் கலவைகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி

oscillograph, oscilloscope : (இயற்.) அலை அளவுமானி: அலைகளை ஒளிப்படச் சுருளில் பதிவு செய்யக் கூடிய ஒரு கருவி. ஓர் எதிர்மின் முனைக் கதிர்க் குழலை இதற்குப் பயன்படுத்தலாம்

osmium : (உலோ) ஆஸ்மியம்: வெண்மக் குழுவினைச் சேர்ந்த, எடையில் எல்லாப் பொருட்களையும் விஞ்சிய அரிய உலோக வகை. இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது

osmosis (இயற்.) ஊடு கலப்பு : துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் தம்முள் கலந்திடும் தன்மை

osophone : (மின்) செவிடர் தொலைபேசி : செவிப்புலன் குறைந்தவர்கள் கேட்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொலைபேசி. இதில், ஒலி அதிர்வுகள் நேரடியாகத் தலை எலும்புகளை அடைகின்றன

ottoman : சாய்மான இருக்கை : சாய்மானம் கைகள் இல்லாத மெத்தையிட்டுத் தைத்த மெத்தை. இது முதலில் துருக்கியில் பயன்படுத்தப்பட்டது என்பர்

outboard motor : புறப்பொறி: கப்பலுக்கு அல்லது. படகுக்கு வெளிப்புறத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஒரு பெட்ரோல் எஞ்சின். இதனை சிறிய படகுகளின் பின் புறத்தில் வேண்டும் போது பொருத்தி, வேண்டாத போது கழற்றி எடுத்துக் கொள்ளலாம். மிகவேகமாக ஓடும் பந்தயப்படகுகளில் இது பயன்படுத்தப்படுகிறது

outlet : (மின்.) மின் வடிகால் : மின்கம்பி அமைப்பில் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் நுகர்வுக்கு மின் விசையை எடுக்கலாம். அவ்வாறு மின் விசை எடுக்கப்படும் புள்ளியை மின் வடிகால் என்பர்

outlet box : (மின்.) மின் வடிகால் பெட்டி : மின் கம்பிக் காப்புக் குழாய் அமைப்பில் செருகப்பட்டுள்ள ஓர் இரும்புப் பெட்டி. இதிலிருந்து விளக்கு போன்ற ஒரு சீர்தனத்திற்கு மின் விசையை எடுக்கலாம்

outlined halftone : (அச்சு) திண்ணிழல் உருப்படிவம்: இது ஒரு நுண் பதிவுப் படம். இதிலிருந்து ஓர் உருவத்தின் எந்தப் பகுதியையும் சுற்றியுள்ள திரையை வெட்டி எடுக்கலாம்

outlining : உருவரை: (1) முக்கியக் கோடுகளை மட்டும் காட்டி வரைந்த திருந்தா உருவம் (2) முக்கியக் கூறுகளை மட்டும் விவரித்துக் கூறுதல் (3) உருமாதிரி வரைதல

out of gear : (எந்) செயற்படா நிலை : வழக்கமாகப் பிணைந்திருக்கும் பல்லிணைச் சக்கரங்களின் பற்கள் பிணையாமலிருக்கும் போது அல்லது எந்திரத்தின் இயக்கியின் தொடர்பு நீக்கப்படும்போது, அவை செயற்படா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

out of phase : (மின்) இயங்காப் படி நிலை: மாற்று மின்னோட்டத்தில் ஒரே சமயததில் பெரும், குறும அளவுக்கு மின்னோட்டம் பாயாமலிருக்கும் நிலை

out-put : (மின்.எந்) எடுப்பு அளவு : மின்னாக்க ஆதாரத்திலிருந்து ஒரு புறச்சாதனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் மின் விசையின் அளவு

output device: (மின்) மின் வெளிப்பாட்டுச் சாதனம் : ஒரு கணிப் பொறியியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை இறுதியாகப் பதிவு செய்து கொடுக்கும் கருவி. இது மிக விரைவாக வாசித்தறியும் சாதனமாகவோ அட்டைத் துளையிடு கருவியாகவோ, தட்டச்சுப் பொறியாகவோ ஒலிப்பதிவுக் கருவியாகவோ இருக்கலாம்

output meter : (மின்) மின் வெளிப்பாட்டு மானி : ஒரு மின் சுற்று வழியின் மின் வெளிப்பாட்டுச் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவு கருவி. இது வாட், வோல்ட் அளவுகளின் மின்னழுத்தத்தைக் காட்டும்

output stage (மின்) வெளிப்பாட்டு நிலை: ஒரு மின்னணுவியல் சுற்றுவழியில் இறுதி நிலை, பொதுவாக இது ஒரு விசைப் பெருக்கியாக இருக்கும். இது வெளிப்பாட்டுச் சாதனத்தை இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஒலிபெருக்கி அமைப்பில் இறுதி விசைப் பெருக்க நிலையில், ஒலி பெருக்கி இயக்கப்படுகிறது

output transformer: - (மின்) வெளிப்பாட்டு மின்மாற்றி : இது ஒரு மின்மறிப்பு பிணைப்பு மின்மாற்றி. இது இறுதிநிலை வெளிப்பாட்டு மின்மறிப்பினை ஒலி பெருக்கி போன்ற இயல் மாற்றி மின்மறிப்புக்கு இணையாகும்படி செய்கிறது

outside caliper : (பட்) புற விட்ட மானி: புற அளவுகளை அல்லது வடிவளவுகளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும்விட்டமானி outside loop : (வானூ) புறக்கரண வளைவு : விமானம் இயல்பாகப் பறப்பதிலிருந்து கழுகுப் பாய்ச்சல், தலைகீழாகப் பறத்தல், உயரே ஏறுதல், மீண்டும் இயல்பான நிலைக்கு வருதல் போன்று கரண வளைவுகள் செய்தல். இவ்வாறு செய்யும்போது விமானி பறக்கும் பாதையினின்றும் புறத்தே இருப்பார்

oval : (கணி.) நீள் உருளை வடிவம்: முட்டை வடிவ உருவம் நீள் உருளை வடிவம். இதன் வளைவுகளின் முனைகள் சமமின்றி இருக்கும்

over-all length: (வானூ) முழு நீளம் : விமானத்தில் செலுத்தி, வால் பகுதி உள்ளடங்கலாக முன் புறத்திலிருந்து பின்புறக் கடைசி வரையிலான முழு நீளம்

over hanging pulley : தொங்கு கப்பி : தொங்கலாக இருக்கிற ஒரு சுழல் தண்டில் உருண்டு செல்லும் ஒரு கப்பி. இதில் ஒரு பக்கத்தில் ஆட்டுமே ஓர் ஆதாரத் தாங்கி இருக்கும்

overhaul : (எந்.) எந்திரப் பகுப்பாய்வு : ஓர் எந்திரத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஆராய்ந்து செப்பனிட்டு மீண்டும் ஒருங்கிணைத்தல்

overhead cost : அலுவலகச் செலவுகள் : வாடகை,வட்டி முதலீடு, பராமரிப்பு, தேய்மானம்போன்ற செயலாட்சிக்கான செலவினங்களின் தொகை. இது தொழிலாளர்களுக்கும் மூலப் பொருட்களுக்கும் ஆகும் செலவைவிடக் கூடுதலான செலவாகும்

overhead shafting : (பட்) தொங்கு சுழல் தண்டு : முகட்டில் தொங்கும் இடைச்சுழல் தண்டு. இதிலிருந்து எந்திரங்களுக்கு விசை அனுப்பப்படுகிறது

overhead-valve motor; (தானி) மேல் ஓரதர் மின்னோடி : ஓரதர்கள் அனைத்தும் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் மின்னோடி

overheating : (தானி) மிகைச் சூடாக்கம்: பாதுகாப்பாக இயங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகமாக ஓர் எஞ்சின் சூடாதல். இது பொதுவாக் குளிர்விக்கும் முறையில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது குறைவான மசகிடல் காரணமாக ஏற்படலாம்

overload : (மின்) மிகை மின் சுமை : ஒரு மின்னியல் சாதனத்தின் வழியாக இயல்பான அள வுக்கு அதிகமாக மின்னோட்டம் பாய்தல்

overload capacity: (மின்) மிகைச் சுமைத்திறன் : ஓர் எந்திரம் அல்லது மின் சுற்றுவழி. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனக்குக் குறிக்கப்பட்ட திறனளவுக்கு மேற்பட்டு இயங்கக்கூடிய திறன்

overload switch : (மின்) மிகை மின் சுமைவிசை : ஒரு மின் சுற்று வழியில் மிகையான மின்விசை பாயுமானால் மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை

overmodulation : (மின்) மிகை அலைமாற்றம்: : ஒரு தொடர் ஊர்தி அலையின் வீச்சுக்கு மிகுதியாக அலை மாற்றி அலை அதிகமாகி ஊர்தி அலையின் ஆற்றலை பூச்சியத்திற்குக் குறைக்கின்ற ஒரு நிலை

overrunning clutch : (தானி) விஞ்சியோடும் ஊடிணைப்பி : உள்ளும் புறமும் வளையங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஊடிணைப்பி. உள் ஊடிணைப்பில் பல முக்கோண வடிவக் காடிகள் வெட்டப்பட்டிருக்கும். அவற்றில் கடின மான எஃகு உருளைகள் செருகப் பட்டிருக்கும். இந்த அமைப்பின் மூலம் உள்வளையம் புறவளையத்தை உந்தித் தள்ளும். புறவளையம் உள்வளையத்தைவிட வேகமாக இயங்குமானால், அது உள் வளையத்தை விஞ்சியோடும்

over-shoot : (வானு) இலக்கு கடத்தல்: விமானம் தரையிறங்கும் போது குறி இலக்குகளைக் கடந்து தவறாகப் பறத்தல்

over time : மிகை நேரம் : குறித்த வேலை நேரத்திற்கு மிகுதியாக வேலை செய்யும் நேரம்

ovolo : (க.க) கால்வட்டச் சித்திர வேலை : கால் வட்டவளை பகுதியுடைய சித்திர வேலைப்பாடு

oxalic acid : (வேதி.) ஆக்சாலிக் அமிலம் : நச்சுத் தன்மை வாய்ந்த அமிலம். மரத்தூள், கடுங்காரச் சோடா, கடுங்காரப் பொட்டாஷ் ஆகியவற்றின் கலவையிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இது சலவை. சாயமிடுதல், காலிக்கோ அச்சு ஆகியவற்றில் முக்கியமாகப் பயன்படுகிறது

oxidant : (விண்) ஆக்சிகரணி : ராக்கெட்டில் செலுத்து பொருளாகப் பயன்படுத்தப் படும் திரவ ஆக்சிஜன், நைட்ரிக் அமிலம் போன்ற் எரிபொருளை எரித்து ஆக்சிஜன் கொடுக்கும் பொருள்கள்

oxidation : (வேதி) ஆக்சி கரணம் : ஒரு பொருளை வேதியியல் முறைப்படி ஆக்சிஜனுடன் ஒருங்கிணையும்படி செய்தல்

oxide : (வேதி) ஆக்சைடு: தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள்

oxidizing : ; ஆக்சிஜனேற்றுதல் : ஓர் அமிலக்கரைசல் மூலம் ஆக்சிஜனேற்றி ஓர் உலோக வேலைப் பாட்டுக்கு மெருகேற்றுதல்

oxidizing agent :(வேதி.) ஆக்சிஜனேற்று பொருள் : ஒரு பொருள் தன்னிடமிருக்கும் ஆக்சிஜனில் ஒரு பகுதியை உதறிவிட்டு இன்னொரு பொருளை ஓர் ஆக்சைடாகவோ வேறு கூட்டுப் பொருளாகவோ மாறறுகிறது. இந்தப் பொருள் ஆக்சிஜனேற்று பொருள் எனப்படும்

oxidizing flame: ஆக்சிஜனேற்றுச் சுடர் : ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர், இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும்

oxvacetylene : (பொறி ) ஆக்சி அசிட்டிலின் : மிகவும் சூடான சுடரை உண்டாக்கும் வகையிலான விகிதங்களில் ஆக்சிஜனும் அசிட்டிலினும் கலந்துள்ள ஒரு கலவை. உலோகவேலைத் தொழிலில் பற்ற வைப்பதற்கும், வெட்டுவதற்கும் இந்த வாயு பயன்படுகிறது

oxygen : (வேதி.) ஆக்சிஜன்: சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர்

oxygen - acetylene cutting : (பற்.) ஆக்சிஜன் - அசிட்டிலின் வெட்டு : ஆக்சிஜன் அசிட்டிலின் சேர்க்கப்பட்டுள்ள ஆக்சிஜன் தாரையைப் பயன்படுத்தி உலோகங்களை வெட்டுதல்

oxygen - acetylene welding : (பற்.,) ஆக்சிஜன் அசிட்டிலின் பற்ற வைப்பு : ஆக்சிஜன், அசிட்டிலின் ஆகிய இருவாயுக்களும் இணைந்த ஓர் எரிப்பொருளைப் பயன்படுத்திப் பற்றவைப்பு செய்யும் முறை oxygen cylinder : (பற்) ஆக்சிஜன் நீள் உருளை: ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனைச் சேமித்து வைக்கவும், கப்பல்களில் கொண்டு செல்லவும் பயன்படும் தனிவகைக் கொள்கலம்

oxyen-hydrogen flame : (பற்) ஆக்சிஜன்-ஹைட்ரஜன் சுடர் : ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிவாயுவுடன் இணையும் போது ஏற்படும் சுடர்

oxygen-LP gas flame : (பற்) ஆக்சிஜன்-எரிவாயுச் சுடர் : ஆக்சி ஜன், எரிவாயுவுட்ன் (திரவமாக்கிய பெட்ரோலியம்) வேதியியல் முறையில் இணைந்து உண்டாகும் சுடர்

oxygen regulator : (பற்) ஆக்சிஜன் ஒழுங்கியக்கி : நீர் உருளை அழுத்தங்களை வேண்டிய அளவுக்குக் குறைக்கவும், அழுத்தத்தை நிலையாக வைத்திருக்கவும் பயன்படும் ஒரு தானியங்கி ஓரதர்

ozocerite : (வேதி) மெழுகு அரக்கு : மெழுகுதிரி, மின்காப்பு ஆகியவற்றில் பயன்படும் மெழுகு போன்ற புதைபடிவ அரக்குப் பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது

ozone : (வேதி.) ஓசோன் : கார நெடி கொண்ட நிறமற்றவாயு (O3). சலவை எண்ணெய்கள், மெழுகுகள், மாவு, மரப்பொருள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் குடிநீரைக் கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிவகைச் சாதனத்திலுள்ள உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றின் வழியே உயர் அழுத்த மின்விசையைச் செலுத்துவதன் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது

ozone : (குளி.பத.) ஓசோன் : மூன்று அணுவுடைய ஆக்சிஜன் காற்றைத் துய்மைப் படுத்துவதற்குப் பயன்படுகிறது

ozonospher : (விண்) ஓசோன் மண்டலம் : வாயு மண்டலத்தின் மேற்படுகையில் சுமார் 65கி.மீ. உயரத்தில் மிக அதிக அளவு ஓசோன் செறிவுள்ள மண்டலம்
P

packaging: (தானி.) சிப்பங் கட்டுதல்: பொருள்களை நுகர்வதற்கு வழங்கும் வகையில் பெட்டியில் இட்டு கட்டுதல்

pack harden; (உலோ.) கார்பனாக்குதல்: (1) கார்பனாக்குதல் அல்லது கெட்டிப்படுத்துதல். (2) மென் எஃகிற்குக் கடினமான புறப் பரப்பினைக் கொடுக்கும் முறை எஃகினை ஒரு கார்பன் பொருளுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தி எண்ணெயில் அமிழ்த்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது

packtong: (உலோ.) பேக்டாங்: நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஓர் உலோகம். ஜெர்மன் வெள்ளியை ஒத்தது. உலோக வேலைப் பாடுகளுக்குப் பயன்படுகிறது

pad. (தாள்.) காகித அட்டை: ஒட்டுத்தாள் இணைபொதி. பல காகிதங்களைச் சேர்த்து ஒட்டிச் செய்யப்பட்ட அட்டை

pad: (விண்.) செலுத்து மேடை: விண்வெளிக்கலத்தைச் செலுத்துவதற்கு நிரந்தரமாகவோ அல்லது, தற்காலிகமாகவோ அமைக்கப்பட்டுள்ள பளு தாங்கும் மேடை

padauk: (தாவ.) பர்மா வெட்டு மரம்: பர்மா நாட்டு வெட்டு மர வகை. இது கடினமானது; கனமானது; பெரிய திறந்த துளைகள் உள்ளது. சிவப்பு நிறக்கோடுகள் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. அறைகலன்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது

padlock: பூட்டு: நாதாங்கியுடன் இணைவாகப் பயன்படுத்தப்படும் பிரித்தெடுக்கக்கூடிய ஒரு வகைப் பூட்டு

pad lubrication: தின் மசகிடல்: எண்ணெய்ப் பூரிதமாகிய அடை பஞ்சுடன் இணைத்து மசகிடும் முறை

pad saw: பொதி ரம்பம்: ஒரு வகைக் கைரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த் அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன் படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் பயன்படும்

page: பக்கம்: ஏட்டிதழின் ஒரு புறம்

pagoda: கூருருளையொடு: கூர்ங் கோபுரம் வடிவிலான ஒரு முகடு

paint; (வேதி.) வண்ணம்: எண்ணெய் அல்லது நீருடன் கலந்த அல்லது உலர்ந்த வண்ணப்பூச்சு

paint base: (வேதி.) வண்ண ஆதாரம்: ஈயம் அல்லது துத்தநாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள்

paint drier: (வண்.) வண்ண உலர்த்தி: வண்ணம் பூசியதும் அந்த வண்ணத்தை விரைவாக உலரும்படி செய்வதற்குப் பயன்படும் பொருள். பெரும்பாலான வண்ண உலர்த்திகள் ஈயத்தினாலும், மாங்கனீசினாலும் ஆனவை. இந்தப் பொருளை அள்வோடு பயன்படுத்துவது நலம். அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது கெடுதல்

paint for concrete: , (வண்.) கான்கிரீட் வண்ணம். துத்த ஆக் சைடை அல்லது பேரியம் சல்பேட்டை எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் வண்ணப் பொருள்

painting: (வண்.) வண்ணம் பூசுதல்: வண்ணம் பூசி அலங்கார வேலைப்பாடுகள் செய்தல்

paint thinner: (வண்.) வண்ண நெகிழ்ப்பான்: திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் சுற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சாராவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன

paint remover: (வண்.) வண்ணம் நீக்கி: சாயம், வண்ணப்பூச்சுகளை நீக்குவதற்குப் பயன் படுத்தப்படும் செயல் திறமுடைய கரைப்பான்களின் கலவை

palette knife. (அச்சு.) வண்ண அலகுக் கத்தி: வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி

palisade layer: (உட.) அடித் தோல் படலம்:ஓர் இலையில் மேல் தோலுக்கு நேர் கோணத்திலுள்ள புறத் தோலுக்கு அடியிலுள்ள படலம்

palladium; (வேதி.) பல்லேடியம்: வெண்ணிறமான, கம்பியாக இழுக்கக்கூடிய, தகடாக்கக்கூடிய ஓர் அரிய உலோகம். இது பிளாட்னத்துடன் கிடைக்கிறது

pallet: (பொறி.) சக்கரக்கைப்பிடி:சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி

palm fiber: தென்னை நார்: தேங்காயின் புறநார் இழை. மெத்தை, திண்டு வேலைகளில் பயன்படுகிறது. கம்பளிக்குப் பதிலாகப் பயன்படும் மலிவான பொருள்

pamphlet: (அச்சு.) துண்டு வெளியீடு: அட்டைகளின்றி அல்லது கட்டுமானம் செய்யப்படாமல் காகிதத்தில் அச்சிடப்படட ஒரு சிறு புத்தகம்

pan: (மின்.) பின் தொடர்தல்: தொலைக் காட்சியில் காட்டப் படும் காட்சியைப் பின் தொடரும் வகையில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியைச் சுழற்றி இயக்குதல்

pan: தாலம் : (1) ஓர் ஒளிப்படக் கருவியின் இயக்கம். இது ஒரு தொகுதியின் அடுக்கணிக்காட்சியைக் காட்டக்கூடியது

(2) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகள் பயன்படுத்தப்படும் ஒரு பிரதிலிப்பு அலகு. இதில் பெரும்பாலும் நுண்ஊதாக்கதிரால் ஒளிரும் விளக்குகள் பயன்பயன்படுகிறது

pancake: (வானூ.) தட்டைச் சிறகுத் தரையிறங்கல்: விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்

panchromatic: (ஒ.க.) நிறப்பதிவுப் பசை: ஒளியின் நிறங்கள் அனைத்தையும் பதிவு செய்யக் கூடிய பசைக் குழம்புகள்

pancreas: (உட.) கணையம்:

செரிமானத்திற்கேற்ற நீர் சுரக்கும், இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி

panel board: (மின்.) விசைப் பலகை: மின்விசைகளும், உருகு கம்பிகளும் உடைய ஒரு கட்டுப்பாட்டுப் பலகை

pantile: (க.க.) வளைகூரை ஓடு: எழுதக வளைவான குறுக்கு வெட்டுட்ன் கூடிய கூரை ஓடு; குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு

pantograph: படப்படியெடுப்பான்: வரைபடங்களை பெரிதாக்கிய அளவிலோ, சுருங்கிய அளவிலோ படியெடுக்கப் பயன்படும் ஒரு சாதனம்

pantometer: (கணி.) கோணமானி:கோணங்கள், உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம்

paper: வரைதாள்: படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்துத் திருத்த இடமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இதற்குப் பொதுவாக கையினால் செய்யப்படும் காகிதம் பொருத்தமாக இருக்கும்

paper birch: காகிதப் பிரம்பு மரம்: இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 15மீ. முதல் 23மீ. அடிவரைவளரும். மரம் வலுவானது: கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதக்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது

paper condenser: (மின்.) காகிதத் செறிவுறுத்து சாதனம்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காகிதத்தினாலான மின்தடைப் பொருள் கொண்ட கெட்டிப்படுத்தும் சாதனம்

paper cutter: (அச்சு.) காகித வெட்டி: காகிதத்தை வேண்டிய வடிவளவுகளில் பயன்படும் ஒர் எந்திரம். இதனை கையினாலோ விசையினாலோ இயக்கலாம்

paper drill: (அச்சு.) காகிதத் துளைக்கருவி:அடுக்கிய காகிதங்களில் துளையிடுவதற்குப் பயன்படும் கருவி

paper machine: காகித எந்திரம்: காகிதத்தை வடிவமைக்கவும். அழுத்தவும், உலர்த்தவும், மெரு கூட்டவும். சுருளகளாக சுருட்டவும், தகட்டுத் தாள்களாக வெட்டவும் பயன்படும் எந்திரம்

papier machine:தாள்கூழ்:பல் வேறு வடிவங்களில் காகிதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் காகிதக்கூழ்

parabola (பொறி;கணி.) மாலை வளைவு: கூருருளையின் பக்கத்திற்கு இனணயான தளவளைவு. ஒரு கூருருளையை பக்கத்திற்கு இணையாகச் செலுத்துவதன் மூலம் இது கிடைக்கிறது

parabolic girder: (பொறி .) மாலை வளைவு உத்தரம்: ஒரு மாலை வளைவுக்குள் வரையபபட்ட பல கோண வடிவில் அமைந்த ஒர் உத்தரம், இது பாலங்கள் அமைப்பதற்குப் பயன்படுகிறது

parabolic reflector: (மின்.) நீள்வட்ட பிரதிபலிப்பான்: ஆற்றலை ஒரு குறுகிய கற்றையாகச் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஒர் ஒளி அல்லது ஒலிப்பிரதிபலிப்பான். பிரதிபலிக்கும் பரப்பு நீள வட்ட வடிவில் அமைந்திருக்கும் parachute : (வானூ.) வான்குடை (பாராசூட்): வானிலிருந்து மெதுவாக மிதந்து கொண்டே தரையிறங்குவதற்குப் பயன்படும் குடை வடிவச் சாதனம். இதன் குடை வடிவம் வானிலிருந்து இறங்கும்போது காற்றை எதிர்த்து வேகத்தைக் குறைத்து மெதுவாகத் தரையிறங்குவதற்கு உதவுகிறது

parachute canopy : (வானூ.) வான்குடை மேற்கட்டி: ஒரு வான் குடையின் முக்கிய ஆதார மேற்பரப்பு

parachute flare : (வானூ.) குடை மின்னொளி: ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமான த்திலிருந்து குதிக்கும்போது ஒரு பரந்த பரப்பளவில் மின்னொளி பரவும்படி வடிவமைக்கப்பட்ட சாதனம் பொருத்திய வான்குடை

parachute harness : (வானு) வான்குடைச் சேணம்: வான் குடையை அணிந்து கொள்பவர் தன்னோடு பிணைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பட்டைகள், பட்டைப்பிடிகள், இணைப்பான்கள் அமைந்த ஒரு கூட்டு அமைப்பு

parachut pack : (வானூ.) வான் குடைக் கொள்கலம்: கொள்கலம் கொண்டுள்ள ஒரு வான்குடை

parachute vent : (வானூ.) வான் குடைப் புழை : ஒரு வான்குடையின் மேற் கவிகையின் உச்சியிலுள்ள புழை. இது வான்குடை கீழே இறங்கும்போது மிகை அழுத்தத்தினைக் குறைத்து, வான்குடையை நிலைப்படுத்த உதவுகிறது

paraffin : (வேதி.) பாரஃபின் மெழுகு :பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் ஒருவகை மெழுகு. இது ஒளி ஊடுருவக் கூடியது;திண்மையானது

parallax : (மின்.) மாறு கோணத் தோற்றப் பிழை : நோக்கு மயக்கம்; பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல் கோண அளவு

parallax : (விண் ) விழிக்கோட்டக் கோணளவு : ஒரு பொருளை இரு வேறுபட்ட புள்ளிகளிலிருந்து பார்க்கும்போது அதன் இயக்கத் திசையில் மேற்போக்காகக் காணப்படும் வேறுபாடு

parallel : இணைகோடு : ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை. எல்லா முனைகளிலும் இனை தொலைவுடையவை

parallel cells : (மின்) இணைமின்கலங்கள் : மின்கலங்களை அனைத்து நேர் மின்முனைகளும் இணைந்திருக்குமாறும், அனைத்து எதிர்மின்முனைகளும் இணைந்திருக்குமாறும் இணைக்கும் ஒரு முறை

parallel circuit: (மின் ) இணைச் சுற்று வழி :பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்பு வாயும் உடைய இரு மின்சுற்றுவழி ஊட்டு வாய்க்கும்டையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒல்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாயிலிருந்து தனித்தனி அளவு மின்னோட்டம் பாயும்

parallel connected transformer : (மின்.) இணை இணைப்பு மின்மாற்றி :ஒரே மின் வழங்கு ஆதாரத்துடன் தொடக்கக் சுருணைகள் இணைக்கப்பட்டுள்ள ஒன்று. அதற்கு மேற்பட்ட மின் மாற்றிகள், இதில் அழுத்தப் பெற்ற மின்னழுத்தம ஒவ்வொரு நேரிவிலும் மின் வழியிலுள்ள அதே அளவுக்கு இருக்குமாறு அமைக்கப்பட்டிருககும் parallel feed : (மின்.) இனண மின்னூட்டம் : மின் சுற்றுவழியில் நேர்மின்னோட்டமும் மாற்று மின்னோட்டமும் வெவ்வேறு வழிகளில் பாயுமாறு அமைக்கப்பட்ட ஒரு மின்சுற்றுவழி

parallel forces: (எந்.) இனண விசை : இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் சமமாகவும் இருக்கும். இரு விசைகளும் எதிர்த் திசைகளில் செயற்படுமானால், அப்போது கூட்டு விளைவாக்கம், அவ்விரு விசைகளுக்குமிடையிலான வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்

parallel jaw pliers ; (பட்.) இணைத்தடை இடுக்கி : செங்கோணியக்க இணைப்புடைய இடுக்கி. இது வாயளவு எவ்வாறிருப்பினும் தாடைகள் இணையாக இருப்பதற்கு இடமளிக்கிறது

parallel resonance : (மின்.) இணை ஒத்திசைவு : தூண்டு எதிர் வினைப்பும், கொண்மை எதிர் வினைப்பும் சரிசமமாக இருக்கும் போது, ஒர் அலைவெண்ணில் ஒரு கிளர்மின்கருவியும் ஒரு கொண்மியும் உள்ள ஒர் இணை மின் சுற்று வழி

parallel rulers : இனணகோடு வரைகோல் : ஒரு போகுக் கோடுகள் வரைவத்ற்குரிய, சுழல் அச்சால் இணைக்கப்பட்ட வரை கோல்

parallelogram :(கணி.) இணைவகம்: எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம்

parallelogram of forces : (எந்.) இணைவக விசை :இரண்டு விசைகள் இணைந்து ஒரே விசையாகச் செயற்படும்போது திசையிலும் அளவிலும் மூல விசைகள் இரண்டும் ஓர் இணைவகத்தின் இரு புடைப் பக்கங்களுக்கும் இணை விசை அவற்றுக்கிடைப்பட்ட மூலை விட்டத்திற்கும் சமமாக இருக்கும் நிலை

paramagnetic : (மின்.) காந்த ஈர்ப்புப் பொருள் : ஒரு காந்தத்தினால் ஈர்க்கப்படத்தக்க பொருள்கள். இவற்றில் காந்தம் ஊடுருவ இடம் தரும் இயல்பின் அள்வு ஒன்றுக்குக் கூடுதலாக இருக்கும்

paramount : மேதகவு : அனைத்திற்குமேலான தகைமைச் சான்று

parapet : (க.க.) கைப்பிடிச்சுவர்: மேல்முகடு, மேல்மாடி, அல்லது ஒரு பாலத்தின் பக்கதில் மறைப்பாகக் கட்டப்படும் தாழ்வான சுவர்

parasite drag : (வானூ.) ஒட்டு இழுவை : விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி

parasitic array : (மின்) அடுக்கு வானலை வாங்கி :ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கி மற்றும் பிரதிபலிப்பான் அலகுகள் உடைய ஒர் இரு துருவ வானலை வாங்கி

parasol monoplane : (வானூ.) விமானத்துள் விமானம் : விமானத்தின் கட்டுமானச் சட்டகத்திற்கு மேலே இறகு அமைந்துள்ள ஒரு குறு விமானம்

parathyroid glands : ( உட.) இணை நாளமில் சுரப்பிகள் : நாளமில் சுரப்பிகளுக்குப் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள நான்கு சிறிய சுரப்பிகள். இவை நமது உடல் கால்சியத்தையும் பாஸ்ஃபரசையும் பயன் படுத்திக் கொள்வதைக் கட்டுப்படுத்துகிறது. உடல் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால் உடம்பில் கால்சியம் குறைகிறது; இரத்தத்தில் கால்சியம் அதிகமாகிறது; இரத்தத்தில் பாஸ்ஃபரஸ் குறைகிறது

paratyphoid fever : (நோயி .) போலி குடற்காய்ச்சல் : குடற்காய்ச்சல் போன்ற ஒரு நோய்; ஆனால் அதைவிடக் கடுமை சற்று குறைவானது; இது 3 வாரங்கள் வரை நீடிக்கும்

parchment: வரைதோல் தாள்: எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்ப்ட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப் படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக்கூடிதாகவும் இருக்கும்

pargeting:(சு.சு.) : சுண்ணாசாந்து:சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனை வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரக் காரை

paring chisel: (மர.வே.) செப்பனிடு உளி: சீவிச் செப்பனிடலும், தறித்து ஒழுங்குபடுத்தவும்,விளிம்பு வெட்டவும் ஓரம் நறுக்கவும் பயன்படும் ஒரு நீண்ட உளி

paris green: (வேதி.) பாரிஸ் வண்ணம்: (CuHAsO3) பூச்சிகொல்லியாகவும் வண்ணப்பொருளாகவும் பயன்படும் தாமிர ஆர்சனைட் என்ற நச்சு வேதியியற் பொருள்

parquetry. (க.க.) மரக்கட்டை எழில் விரிப்பு :தளங்களில் மரக் கட்டையினால் எழிற்பரப்பு: அமைத்தல்

particle: துகள்: சிறுதுண்டு அணுக்கூறு

parting: (வார்.) வகிடு: ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளைப் பிரிக்கும் இணைப்பு அல்லது பரப்பு

partition : (க.க.) தடுப்புச் சுவர்: ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக் கேற்பத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன

party wall : (சு.சு.) இடைச்சுவர்: கட்டிடங்களுக்குப் பொதுவுரிமையாக வழங்கப்படும் இடைச்சுவர்

Pascal's law (இயற்.) பாஸ்கல் விதி: "ஒரு திரவத்தின் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் செலுத்தப்படும் அழுத்தமானது, அந்தத் கொள்கலத்தின் அதே அளவுப் பகுதி ஒவ்வொன்றுக்கும் சற்றும் குன்றயாமல் செலுத்தப்படுகிறது என்பது பாஸ்கல் விதி

passive : (விண்.) செயப்பாடு : ஒரு சைகையை அனுப்பீடு செய்யாமல் பிரதிபலித்தல்

pasteboard : தாள் அட்டை : இன்று நடுத்தர அளவு கனமுடைய கெட்டியான அட்டை எதனையும் இது குறிப்பிடுகிறது. முன்னர் பல தகட்டுத் தாள்களை அடுக்கி ஒட்டிய அட்டையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது

pasted plate. (மின்.) ஒட்டுத்தகடு: மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது நேரத்தில் பயன்படுத் தப்படும் வேதியியற் பொருளைப் பொறுத்து நேர்மின் தகடாகவோ எதிர்மின் தகடாகவோ மாறுகிறது

pastel :வண்ணக்கோல் : வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல்

pasteurization : (குளி.ப.த.) பால் துப்புரவாக்கம் : ஃபிரெஞ்சு விஞ்ஞானியான லூயி பாஸ்ட்ர் முறைப்படிப் பாலைச் சூடாக்கித் துப்புரவு செய்தல்

patella: (உட.)கால் முட்டெலும்பு: கால் மூட்டெலும்பு,

முழந்தாள் முட்டுச்சில்லு

patent : காப்புரிமை : புதுமுறை ஆக்க விற்பனைகளுக்கு அரசு வழங்கும் தனிக் காப்புரிமை

patent application: புனைவுரிமை விண்ணப்பம் : புத்தமைப்பாளர் தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவதற்காக புனைவுரிமை அலுவலகத்திற்கு வரைபடங்கள், உரிமைக்கோரிக்கை ஆகியவற்றுடன் அளிக்கும் விண்ணப்பம்l

patenting: மெருகிடல்: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் அளவுக்குச் சூடாக்கி, பிறகு அளவுக்குக் குறைவாகக் காற்றிலோ அல்லது 700° ஃபா. வெப்பமுடைய உருகிய ஈயத்திலோ குளிர்வித்து மெருகிடுதல்

patina : பசுங்களிம்பு : பழைய வெண்கலப் பொருள்களில் காலத்தால் ஏறும் உலோகக் களிம்பின் மென்படலம்

pattern : (வார்.) தோரணி : ஒர் எடுத்துக்காட்டு வார்ப்பு. முன் மாதிரியாகக் கொண்டு ஒரே மாதிரியான பொருள்களை வார்ப் படம் மூலம் செய்வதற்கான படிவம்

pattern letter : (வார்.) முன் மாதிரி எழுத்து : ஈயம், வெள்ளியம் அல்லது பித்தளையில் செய்த எழுத்து. இது ஒரு தோரணையில் பொருத்தப்ப்ட்டிருக்கும். அதிலி ருந்து ஒரே மாதிரியான பெயர் அல்லது இலக்கத்தை வார்த்தெடுக்கலாம்

pattern - making : தோரணி வார்ப்படம் : வார்ப்படத் தொழிலில் பல்வேறு மாதிரிகளை அல்லது உருவரைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் வார்ப்படம்

pattern shop : தோரணிப் பட்டறை: வார்ப்படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதற்கான மரத் தோரணிகளைத் தயாரிக்கும் பட்டறை

pavement : (க.க.) தள வரிசை: சாலை அல்லது ஒர நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம்

pavilion : (க.க.) காட்சி அரங்கம் : முற்றிலும் சுவர்களினால் அடைக்கப்படாமல் கூடாரமிட்ட ஒப்பனைப் புறத் தாழ்வாரம். காட்சி அரங்காக அல்லது கேளிக்கை அரங்காக இது பயன்படும்

pay load: (வானூ.) வருவாய்ப் பகுதி : விமானத்தில் பயணிகள், சரக்குகள் போன்ற வருவாய் தரும் பாரத்தின் பகுதி

payne's process : தீத்தடைக் காப்பு முறை : மரத்தில் இரும்பு சல்போட்டை ஊசிமூலம் செலுத்தி, அதன்பின் சுண்ணாம்புச் சல்பேட்டு அல்லது சோடா கரை சலை ஊசிமூலம் செலுத்தி தீத் தடைக்காப்பு செய்யும் முறை

peak : (மின்.) உச்ச மின்னழுத்தம்: ஒரு குறிப்பிட்ட சுழற்சியின்போது மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம், மின்னோட்டம் அல்லது மின் விசை

peaking coil: (மின்.) உச்ச நிலைச் சுருள்: பகிர்மானம் செய்த கொண்ம விளைவினைக் குலைப்பதற்காக ஒர் உயர் அலைவெண் மின் சுற்றுவ்ழியில் உள்ள ஒருசிறு தூண்டு கருவி

peak inverse voltage : (மின்,) உச்சநிலைத் தலைகீழ் மின்னழுத்தம்: ஒர் இரு முனையத்தின் குறுக்கே எதிர்மாறான திசையில் செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் அளவு

peak load : (மின்) உச்ச மின் விசை : ஒரு மின்னாக்கி அல்லது மின்விசை உற்பத்தி அமைப்பு, 20 மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இன்ட்வெளிகளில், மிக உயர்ந்த அள்வு வழங்கும் மின் விசையின் அளவு

peak value : (மின்.) உச்ச மதிப்பு: மாற்று மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் உச்ச மதிப்பளவு

pearl : (வேதி.) முத்து : இது அரும்பொருள்களில் ஒன்று. முத்துச் சிப்பியில் கால்சியம் கார்பொனேட் என்ற வேதியியற் பொருளினால் உண்டாகிறது

pearling : இழை முடிப்பூவேலை : இழைமூடி கண்ணியிட்டுச் செதுக்கிப் பூவேலைப்பாடுகள் செய்தல்

pearlite : (உலோ.) பியர்லைட் : கார்பனும் இரும்பும் கலந்த எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய உலோகக் கலவை இதில் 0.9% கார்பன் கலந்திருக்கும்

pearwood : பேரிமரம் : இளம்பழுப்பு நிறமுடைய, நெருக்கமான மணிக்கரன் அமைந்த ஒரு வகை மரம். மிதமான கடினத்தன்மையுடையது. வரைவாளர்கள் T-சதுரம், முக்கோணங்கள் முதலியவை செய்யப் பயன்படுகிறது

peat : (வேதி.) புல்கரி : ஒரளவு கார்பனாக்கிய தாவரக் கனிமப் பொருள். எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தோண்டியெடுக்கும்போது இதில் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் இத்னை அழுத்தி, உலர்த்தி எரி பொருளாகப் பயன்படுத்த வேண்டும்

pebble dash : ( க.க.) கூழாங்கல் பதிப்பு : சாந்து அல்லது சிமென்ட் பூசிய சுவர்களில் கூழாங்கற்களைப் பதித்து அலங்கார வேலைப்பாடு செய்தல்

pedestal : நிலை மேடை : தூண் நிலை போன்றவற்றின் அடிப் பீடம்

pedestal : (மின்) ஒளி மதிப்பளவு: தொலைக்காட்சியில் கறுப்புப்பட மதிப்பளவினைக் குறிக்கும் ஒளிச் சைகையின் மதிப்பளவு

pediment : ( க.க.) முக்கோண முகப்பு முகடு : பண்டையக் கிரேக்க கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட வரி முக்கோண முகப்பு முகடு

pedometer: அடியீடுமானி: காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி

peen (எந்.) சுத்தி மென் நுனி: உலோக வேலைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சுத்தியல் தலைப்பின் மெல்லிய நுனி

peening : (உலோ.வே.) சமதளமாக்கல் : சுத்தியலின் தலைப்பின் மென் நுனியினால் ஒர் உலோக மேற்பரப்பினை அடித்தல் அல்லது சமதளமாக்குதல் peg : ஆப்பு : அறைகலன்களின் உறுப்புகளை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு ஆணிகளுக்குப்பதிலாகப் பயன்படும் மரத்தினாலான முளை

pellயcid : தெள்ளத் தெளிவான : தெள்ளத் தெளிவான, ஒளி எளிதில் ஊடுருவிச் செல்ல்க்கூடிய

peltier effect (மின்.) இணைப்பு மின்னோட்ட விளைவு : ஒன்று போல் இல்லாத இரண்டு பொருள்களின் இணைப்பைச் சுற்றியுள்ள பரப்பில் வெப்பத்தை குறைப்பதற்காக அந்த இணைப்பின் வ்ழியாகப் பாயும் மின்னோட்டத்தின் செயற்பாடு

pelvis : (உட.) இடுப்பெலும்பு : கால்கள் இணைக்கப் பட்டிருக்கும்.உடலின் இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள்

pendant: , பதக்கம்: கழுத்தணியில் கோக்கப்பட்டுள்ள தொங்கணி

pendant switch : (மின்.) பதக்க விசை : முகட்டிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள் ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது

pendulum : ஊசல் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து தொங்குகிற ஒரு பொருள். இது கடிகாரத்தின் ஊசல் போன்று இருபுறமும் தங்கு தடையின்றி ஊசலாடக்கூடியது

penetrating oil : ஊடுருவு எண்ணெய்: துருப்பிடித்த அல்லது அரிக்கப்பட்ட உறுப்புகளை எளிதாக இயக்குவதற்குப் பயன்படுத் தப்படும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஒரு தனி வகை எண்ணெய்

penetration (பற்.) ஊடுருவுத்திறன் : மதிப்புக் குறைந்த உலோகத்தினுள் ஊடுருவிச் செல்லும் திறனளவு. இது அந்த உலோகத்தின் மேற்பரப்பைக் கொண்டு அளவிடப்படுகிறது

penetromater: (குழை.) ஊடுருவு மானி : திடப்பொருள்களின் மேற் பரப்பில் ஊடுருவும் திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி

penicillin; (மருந்.) பெனிசிலின் : பூஞ்சக் காளானில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. நோய் நுண்மங்களை அழிக்கும் மருந்துகளில் மிகுந்த வலிமையுடையது. இது நோயாளிக்குத் தீங்கு எதுவும் செய்வதில்லை

penny: (மர;வே.) பென்னி: ஆணிகளின் நீளத்தைக் குறிக்கும் ஒரு சொல். பத்துப் பென்னி என்பது ஒர் ஆணியின் 3" நீளத்தைக் குறிக்கும். ஆதியில் 'பென்னி' என்பது நூற்றுக்கு விலையைக் குறித்தது

panny-weight: பென்னி எடை : இருபத்து நான்கு குன்றிமணி எடை அளவு

pentagon: (கணி.) ஐங்கோணம்: ஐந்து பக்கங்கள் கொண்ட ஒர் உருவம்

pentode: (மின்.) ஐம்முனையம்: கம்பியில்லாத் தந்தி தடுக்கிதழ்களில் ஐந்து மின் வாய்கள் கொண்ட எலெக்ட்ரானிக் குழல்

penumbra; அரைநிழல்: பூமி, நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம்

percentage: (கணி ;எந்.)விழுக்காடு: நூற்றில் பகுதி; சதவீதம்: நூற்று விழுக்காடு

percentage of modulation: (மின்.) அலைமாற்ற வீதம்: இயல் பான ஊர்தி மதிப்பளவிலிருந்து, அலைமாற்றம் காரணமாக மிக உயர்ந்த அளவுக்கு ஏற்படும் கோட்டம். இது சதவீத அளவில் குறிக்கப்படுகிறது

percentage of ripple: (மின்.) அதிர்வலை வீதம்: சராசரி வெளிப் பாட்டு மின்னழுத்த மதிப்பளவில் அதிர்வலை மின்னழுத்தத்தின் பயன் மதிப்பளவின் வீத அளவு, இது சதவீதத்தில் குறிக்கப்படுகிறது

perch: அளவுகோல்: கல் வேலைப்பாட்டில் மாற்றமுறு அளவு. இது சுமார் 25 கன அடி அளவுடையது

perfecting press: (அச்சு.) இரு பக்க அச்சுப்பொறி; காகிதத்தின் இரு புறங்களிலும் ஒரே சம்யத்தில் அச்சிடக்கூடிய வகையில் இரு அச்சுப் பதிவு நீள் உருளைகளையுடைய அச்சு எந்திரம்

perforating: (அச்சு.) துளையிடல்: தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளையிடுதல்; கிழிப்பதற்கு வசதியான துளை வரிசை

perforating machine: (அச்சு.) துளையிடு கருவி: தாளைக் கிழிப்பதற்கு வசதியாகத் தாளில் துளையிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

perforating rule; (அச்சு.) துளையிடு உருளை: ஒரே இயக்கத்தில் அச்சடித்தல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளையும் செய்யக்கூடிய அச்சு உருளை

performance-type glider (வானூ.) செயல்திறன் சறுக்கு விமானம்: மிக உயர்ந்த அளவு செயல்திறன் வாய்ந்த ஒரு சறுக்கு விமானம்

perigynous: (தாவ.) சூலகப் பூவிழை: கருவகத்தை அல்லது சூலகத்தைச் சுற்றிலும் பூவிழைகளையுடைய தாவரம்

perimeter: சுற்றளவு: வட்டமான சுற்றுவரை உருவின் நீளம்

periodical: (அச்சு.) பருவ இதழ்: ஒழுங்கான கால, இண்டவெளிகளில் வெளியாகும் பத்திரிகை அல்லது இதழ்

periodic arrangement: (வேதி.) எண்மானப் பட்டியல்: ஒத்த வேதியியற் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தனிமங்களின் அணு எண் படியான வரிசைப் பட்டியல்

periodic systems (வேதி.) அணு எண்வாரிப் பட்டியல்: ஒத்த வேதியியல் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப் பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண் வாரியான பட்டியல். இந்தத் தனிமங்கள், ஒத்த தனிமங்கள் ஒரே நேர் வரிசையில் வருமாறு குறுக்கு வரி சைகளில் அமைக்கப்ப்டுகின்றன. தனிமம் எந்த வரிசையில் உள்ளது என்பதைப் பார்த்து அது எந்த வகையான தனிமம் என்பதைக் கண்டு கொள்ளலாம்

peripheral speed: (எந்.) பரிதி வேகம்: ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக் கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம்

periphery: ( கணி.) பரிதி: வட்டம் நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு

periscope: புறக்காட்சிக் கருவி: நீர்மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற் பரப்புக் காட்சிக் கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி

peristyle: (க.க.) சுற்றுத் தூண் வரிசை: கோயில், மடம், மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை

permalloy: (மின்.) காந்தக் கூருணர்வு உலோகக்கலவை: இரும்பு, நிக்கல், கோபால்ட், குரோமியம், வனேடியம், மாலிப்டினம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய உலோகக் கலவை

permanent load: (பொறி.) நிலைச் சுமை: எந்திரத்தில் அதன் கட்டமைப்புச் சுமை போன்ற ஒரு போதும் மாறாத நிலையான சுமையின் அளவு

permanent magnet : (மின்.) நிலைக் காந்தம்: ஒரு காந்த எஃகு தான் பெற்ற் காந்த சக்தியை ஒரு போதும் இழக்காமல் ஒரு காந்தப் புலத்தின் ஆற்றலுடன் நிரந்தரமாக இருத்தி வைத்துக் கொள்கிறது. இக்காந்தம் நிலைக் காந்தம் எனப்படும்

permanganate: (வேதி.) பெர் மாங்கனேட் (HMnO4): பெர்மாங் கனிக் அமிலத்தின் உப்பு. இது அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும்

permeability (மின்.) கசிவுத் திறன்: ஊறி உட்புக இடந்தரும் திறன்

permeability curve: (மின்.) ஊடுருவுதிறன் வளைகோடு: காந்த மூட்டும் விசையின் அளவு மாறு படும்போது, ஒரு பொருளின் வழியே உண்டாகும் காந்தவிசை யின் அடர்த்தியை அல்லது கோடு களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வரைபடத்திலுள்ள ஒரு வளை கோடு

permeameter: (மின்.) காந்தவிசைமானி:ஒரு பொருளின் வழியாகச் செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கையையும், காந்தமூட்டும் விசையினையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

permutation: (கணி.) முறை மாற்றம்: ஒரு தொகுதியில் அடங்கிய பொருட்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு

perpend: (க க.) ஊடுகல்: சுவரின் ஒரு கல்லிலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனூடே செல்லும் கல்

perpendicular: செங்குத்துக் கோடு: வழி கோட்டிற்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக உள்ள கோடு

perron: (க.க.) வாயிற்படி மேடை: ஒரு கட்டிடத்திற்கு வெளியே முதல் மாடிக்குச் செல்ல அமைந்துள்ள வாயிற்படி

persimmon : (தாவ.) ஈச்சமரம் : அமெரிக்கவகை ஈச்சமரம். இது பெரிதாக வளர்வதில்லை. அதனால் இதற்கு வாணிக மதிப்பு அதிகம் இல்லை. இதன் வெட்டு மரம் மஞ்சள் நிறமுடையது; அதில் கறுப்புக்கோடுகள் இருக்கும்.இது வலுவானது.மிகுந்த பளப்ளப்புடையது. பில்லியர்ட்கோல் மேலடை மெல்லொட்டுப் பலகை செய்யவும் இது பயன்படுகிறது

persistence of vision :பார்வை எதிர்ப்பாற்றல்: ஒருபிம்பம் உருவாவதற்குக் காரணமாக ஒளி நின்ற பிறகும் 1/12 வினாடி வரை அந்தப்பிம்பம் கண்ணில் தொடர்ந்து நிலைத்திருக்கும். கண் வேதியியல் முறையில் செயற்படுவதும், வேதியியல்பொருட்கள் மீண்டும் பழைய நிலைக்கும் உடனடியாகத் திரும்பு வதில்லை என்பதும் இதற்குக் காரணம். இதனாலேயே, திரைப் படச்சுருளில் எடுக்கப்படும் வெவ்வேறு படங்கள் தொடர்ச்சியான ஒரே படமாக நம்க்குத் தோன்றுகிறது

personal equation ; திருத்தச் சமன்பாடு :கருவிகாட்டும் கணக் கெடுப்பவர் அந்தக் கணக்கினைச் சரியாக எடுக்கும் பாங்கற்றவராக இருப்பதன் காரணமாக, அக்கணக்கில் செய்ய வேண்டிய திருத்தம்

perspective ; பரப்புத் தோற்றம் : ஒரு சமதளப் பரப்பில் உள்ள பொருட்கள் கண்ணுக்குத் தோன்றுகிற அதே தோற்றத்தில் காட்சிப் படங்களை வரைந்து காட்டுதல்

persuader : நெம்பு கருவி :கணமான பொருட்களைக் கையால் நகர்த்துவதற்கு உதவக் கூடிய கடப்பாறை, நெம்பு கோல் போன்ற கருவிகள்

pestle : சிறு உலக்கை : உரலில்

பொருட்களை இடிப்பதற்குப் பயன்படும் கருவி

petcock: அடைப்புக்குமிழ்: நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான சிறு அடைப்பிதழ்

petrochemicals : பெட்ரோலிய வேதியியல் பொருட்கள் : பெட்ரோலியத்திலுள்ள மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் பொருட்கள்

petrography : (வேதி) கற்பாறையியல் : கற்பாறைகளின் அமைப்பு, உருவாக்கம் முதலியவற்றை ஆராய்ந்தறிதல்

petrol : கல்லெண்ணேய் - (பெட்ரோல்) : பொறி வண்டிகளுக்கும், விமானம் முதலியவற்றுக்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய். அமெரிக்காவில் இதனை 'கேசோலின்' என்பர்

petroleum : (வேதி) பெட்ரோலியம் : உள் வெப்பாலைகளிலும் பிறபொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நிலப்படுகைக்குரிய தாது எண்ணெய்

pew (க.க.) சூழிருக்கை : திருக் கோயில்களிலுள்ள குடும்பத்தினருக்குக்கான சூழிருகைத் தொகுதி

pewter : ( உலோ.) பீயூட்டர் : வெள்ளியமும் காரீயமும் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை

phaeton: (தானி.) திறப்புவண்டி: இரட்டைக் குதிரை திறப்பு. இதில் மடக்கக்கூடிய காற்றுத் தடுப்பும் பக்கத்திரைகளும் இருக்கும்

phantom drawing: (வரை.) புனைவுறு வரைபடம் : ஒரு திட்ட வரை படத்தில் கருத்துருவைக் காட்டும் வகையில் புள்ளிகளால் வரையப்பட்டுள்ள பகுதி

pharmaceuticals: (வேதி .) ஆக்கமருந்து : மருந்துத் கடைகளில் ஆக்கம் செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் வேதியியற் பொருட்கள்

phase : (மின்.) மின்னோட்டப் படி நிலை : மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை

phase angle : (மின்.) மாற்று நிலைக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்க்ப் படிநிலையைக் குறிக்கும் கோணம்

phase, meter : (மின்.) மின்னோட்டப் படிநிலை மானி: மின் சுற்று வழியில் அலைவெண்ணைக் குறிக்கும் மானி. இதனை அலை வெண் மானி என்றும் கூறுவர்

phenol : (வேதி.) கரியகக் காடி: (C2H5OH) ஒரு படிகப் பொருள் கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபொனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப் படுகிறது. கிருமி நீக்கியாகப் பயன்படுகிறது

phanolic-resins molding type: (வேதி;குழை,) பெனோலிக் பிசின் வார்ப்படம் : பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிமானப் பொருட்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள், அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

pheno plast : (வேதி;குழை,) பெனோ பிளாஸ்ட்: பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை 'பெனோலிக்ஸ்' என்றும் கூறுவார்

phonograph : (மின்.) இசைப் பெட்டி : நீள் உருளைகளைப் பயன் படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவு முறை இசைப் பெட்டி

phonography : (மின்.) ஒலிப்பதிவுக் கருவி : ஒலிகளைப் பதிவு செய்யும் கருவிகொண்டு தானே ஒலிப்பதிவு செய்யும் கருவி

phosphor bronze : ( உலோ.) பாஸ்போர் வெண்கலம் : தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை, இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப் பயன்படுகிறது

phosphorus : (வேதி.) பாஸ்பரஸ் : இளமஞ்சள் நிறமுள்ள மெழுகு போன்ற் திடப்பொருள். ஒப்பு அடர்த்தி 1.83; உருகுநிலை 44.4°C. இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இதனை எப்போதும் தண்ணிரிலேயே அமிழ்த்து வைத்திருக்கவேண்டும். இது சிறுசிறு குச்சிகளாக விற்பனை செய்யப்படுகிறது

photo-chemistry : (வேதி.) ஒளிவேதியியல்: பொருட்களின் மீது ஒளியின் விளைவுகள் குறித்து ஆராயும் வேதியியல் ஒளிப்படக் கலையிலும் ஒளி வேதியியல் மின் கலங்களிலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன

photo composing : (அச்சு.) ஒளிப்பட அச்சுக்கோப்பு: ஒளிப்பட முறையில் அச்சுக்கோக்கும் முறை

photo-elasticity : (குழை.) ஒளி நெகிழ்திறம் : ஒரு செல்லுலாய்ட் அல்லது கண்ணாடி மாதிரியில் இரட்டை ஒளிக்கோட்டத்தை உண்டாக்குவதற்குப் போதுமான நெகிழ்திறன் இழுவிசை பற்றிய ஆய்வு

photo electric cell : (மின்.) ஒளி மின்கலம் : ஒளியாற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு சாதனம். ஒளி ஆதாரத்தின் மூலம் தானாகக் கட்டுப்படுத்து வதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது

photo electric effect : (மின்.) ஒளிமின் விளைவு : சில பொருட்களின் மீது ஒளிபடும் போது, எலெக்ட்ரான்களை வெளியிடும் இயல்பு photo electrons : (மின்.) ஒளி எலெக்ட்ரான்கள்: ஒளியின் காரணமாக வெளியிடப்படும் எலெக்ட்ரான்கள்

phto-engraving : (அச்சு.) ஒளி செதுக்கு வேலை : ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை

photography : (வேதி.) ஒளி படக்கலை : ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை

photagravure ; (அச்சு.) ஒளிப் பட மறிபடிவத் தகட்டுச்செதுக்குரு: ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல்

photometer : (இயற்.) ஒளிச் செறிவுமானி: ஒளியின் செறிவினை அள்விடுவதற்கு அல்லது பல்வேறு ஒளிகளின் செறிவினை ஒப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

photomicrograph: (உலோ.) உருப்பெருக்கு ஒளிப்படம் : உருப் பெருக்காடியினால் விரிவாக்கம் செய்யப்பட்ட பொருளின் ஒளிப் படம். உருப் பெருக்காடியையும், ஒளிப்படக் கருவியையும் இணைத்து இந்தப்படம் எடுக்கப்படுகிறது. உலோகப் பொருட்களின் விரிவாக்கம் 100 முதல் 500 மடங்குவரை அமைந்திருக்கும்

photomultiplier : (மின்.) ஒளி விசைப்பெருக்கி: எதிர்முனையை ஒளி தாக்கும் போதும் எலெக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்கள், தொகுப்புத் தகட்டினைத் தாக்குவதற்கு முன்பு, ஒரு துணைத் தகட்டு வரிசையினைத் தாக்கும்படி இயக்கப் படுகிறது. இதன் விளைவாக, துணை உமிழ்வு மூலம் மின் மிகைப்பு ஏற்ப்டுகிறது

photostat : ஒளி நகல் படவிருப் படிவம்: ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு

photosynthesis, (வேதி.) ஒளிச் சேர்க்கை: தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளிபடும்போது, நீரிலிருந்தும் கார்பன்டையாக்சைடிலிருந்தும் தாவரங்கள் கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரித்துக் கொள்ளும் முறை

photon: (மின்.) ஃபோட்டோன் : மின்காந்த விசையின் ஒரு சிறு கூறு

photosensitive" (மின்.) ஒளியுணர்வு: ஒளியின் மூலம் ஆற்றலூட்டப்ப்ட்ட தனது மேற்பர்ப்பிலிருந்து எலெக்ட்ரான்களை வெளியிடும் ஒரு பொருளின் இயல்பு

photosphere: (விண்.) ஒளிக் கோசம்: சூரியன், விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்

photo-transistor : ஒளிமின் பெருக்கி: ஒரு வகை மின்பெருக்கி. இதில் ஒளிபடும்போது அதன் மின்னோட்டத் தடை வெகுவாகக் குறைக்கப்படுகிறது

phototropic: ஒளிமுகச்சாய்வு: தாவரங்கள் ஒளியை நோக்கி நகர்தல் அல்லது வளைதல். இவற்றில் தண்டுகள் ஒளியை நோக்கி வளர்கின்றன

photo tubes (மின்.) : ஒளிக்குழல் :ஒளியுணர்வுப் பொருளைத் தனது உமிழ்வானாக அல்லது எதிர் முனையாகப் பயன்படுத்தும் ஒரு வெற்றிடக்குழல் photovoltaic: (மின்.) ஒளி வேதியியல் விளைவு : இரு பொருட்களின் இணைப்பில் ஒளிபடும் பொழுது மின்னழுத்தம் உண்டாதல்

photo-voltaic cell: ஒளி வேதியியல் மின்கலம்: இரண்டு வேறுபட்ட பொருட்கள் (தாமிரம், தாமிர ஆக்சைடு) இணையும் போது, ஒளிபடும்போது ஒரு மின் கலம் மின்விசையை உற்பத்தி செய்வது போல், மின்விசையை உற்பத்தி செய்யும் மின்கலம்

physical astronomy : (இயற்.) இயற்பியல் வானியல் : வான் கோளங்களின் இயற்பியல் நிலையையும் வேதியியல் நிலையையும் ஆராயும் அறிவியல் துறை

physical change : (இயற்.) இயற்பியல் மாற்றம் : ஒரு பொருளின் தற்பண்புகள் மாறாத வகையில் ஏற்படும் மாற்றம். எடுத்துக்காட்டு: ஒரு பலகையை ரம்பத்தால் அறுத்துச் சிறுசிறு துண்டுகளாக ஆக்குதல்

physical chemistry : இயற்பியல் வேதியல் : இயற்பியல் சார்ந்த வேதியியல் கூறுகளையும், வேதியியல் சார்ந்த இயற்பியல் பண்புகளையும், வேதியியல் இயைபுகளோடு உடனடியாக ஏற்படும் இயற்பியல் மற்றங்களையும் ஆராய்ந்தறியும் துறை

physical geography : (இயற்.) இயற்பியல் நிலவியல் : இயற்கை அமைப்புகளைப் பற்றிக்கூறும் நிலவியல்

physical metallurgy : இயற்பியல் உலோகவியல் : உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆராய்ந்தறியும் துறை

physics : இயற்பியல் : இயற்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை

physiology : (உட.) உடலியல்  : விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் பற்றிய ஆய்வியல்

physiotherapy : (நோயி.) இயற்கை மருத்துவம் : உடம்பு பிடித்து விடுதல். தூயகாற்று, மின்சாரம் முதலிய இயற்கை முறைகளினால் நோய்களுக்கு மருத்துவம் செய்யும் முறை

pi: (கணி.) பை: வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் 'பை' என்ற வட்டலகின் அடையாளம், இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது பை(π) = 3.1416

piano wire: (உலோ. பியானோ கம்பி: மிகவும் வலுவான ஒரு கம்பி. இதன்விறைப்பாக்க வலிமை ஒருசதுர அங்குலத்திற்கு 3,00,000 முதல் 3,40,000 பவுண்டு ஆகும். இதில் கார்பன் 0.570, சிலிக்கன் 0.090, சல்பர் 0.011, பாஸ்பரம் 0.018, மாங்கனீஷ் 0.425 அடங்கியுள்ளது

pica: பிக்கா: ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருவப் படிவம்

picket (தச்சு.வே.) கட்டுத்தறி: வேலிகளுக்கான முளை, குதிரை முதலியவற்றைக் கட்டிவைப்பதற்கான முளை

pickle: வார்ப்படக்கரைசல்: வார்ப் படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன pickling: (வார்.) வார்ப்புத் துப்புரவாக்கம்:வார்ப்படங்களிலிருந்து மணல் போன்ற அயல் பொருள்களை நீக்கித் துப்புரவாக்கும் முறை

picric acid: பிக்ரிக் அமிலம் :
 :ஒரே உப்பு மூலமுடைய அமிலம். பெனால்-சல் போனிக் அமிலத்தை நைட்ரிக் அமிலத்துடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் படிக வடிவில் இருக்கும். வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும், சாயத் தொழிலிலும் பயன்படுகிறது

pictorial : uடமிகு இதழ் : படங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிற செய்திகள் மிகுதியாகக் கொண்ட பத்திரிகை

picture element : (மின்.) படப் புள்ளி : ஒரு காட்சியின் தோற்றம் பற்றிய தகவலைக் கொண்டுள்ள, கறுப்பு முதல் வெண்மை வரையிலான பல்வேறு செறிவளவுடைய சிறு பகுதிகள் அல்லது புள்ளிகள்

picture frequency : (மின்.) பட அலைவெண் : தொலைக்காட்சியில் ஒரு வினாடி நேரத்தில் அலகிடப்படும் முழுப்படங்களின் எண்ணிக்கை

picture information : (மின்.) படத்தகவல் : தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியினால் பதிவு செய்யப்பட்டு, தொலைக்காட்சி ஒளிபரப்பீட்டுக் கருவியை அலை மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் படத்தகவல்

picture mould: (க.க.) படச் சட்டம் : சுவரில் படங்களைத் தொங்கவிடுவதற்கான ஒரு வார்ப்படச் சட்டம்

picture noise : படஒலி: ஒளி வாங்கிப் பெட்டிகளில் படங்கள் தாறுமாறாக ஏற்படவும், ஒளிப் புள்ளிகள் உண்டாகவும் செய்யக் கூடிய சைகைக் குறுக்கீடுகள்

picture signal : படச் சைகை: தொலைக்காட்சியில் ஒளிப்படங்களை உருவாக்கும் மின் தூண்டல்கள்

picture tube : படக் குழல் : தொலைக்காட்சிப் பெட்டியில், ஒளிக்கற்றைச் செறிவு மாற்றத்தின் மூலம் உருக்காட்சிகளை உண்டாக்கும் எதிர்மின் கதிர்வகைக் குழல்

piece work : (அச்சு.) துண்டு வேலை : நேரக்கணக்கில் அல்லாமல் அளவுக்கேற்பக் கூலி பெறும் வேலை

pier : (க.க.) அலை தாங்கி :இரேவு; அலை இடைகரை பாலந்தாங்கி

pier glass : (க.க.)  : நிலைக்கண்ணாடி : முற்காலக் கட்டுமானங்களில் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ள நிலைக்கண்ணாடி

piezoelectricity : (மின்.) அழுத்த மின்விசை : சில படிகங்களின் மீது குறிப்பிட்ட திசைகளில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் மின்னேற்றம் உண்டாக்குதல்

piezometer : அழுத்தமானி : பாய் மங்கள் அல்லது திரவங்கள் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அளவு கருவி

pig : (உலோ.) இரும்புப் பாலம் : உலையிலிருந்து எடுக்கப்பட்ட நீள் இரும்புப் பாளம்

pigeon-hole: புறாமாடம் : கடிதங்கள் முதலியவற்றை பிரித்து அடுக்கி வைப்பதற்கான புறாக் கூட்டறை

pig iron : (உலோ.) தேனிரும்பு : உருக்கும் உலையிலிருந்து வாணி கத்திற்கு வரும் வார்ப்பிரும்பு. இது பொதுவாக 45 கி.கி. எடையுள்ள பாளங்களாக இருக்கும்

pigment : (வேதி;அச்சு.) நிறமி : வண்ணப் பொருளுக்கு அல்லது சாயப்பொருளுக்கு நிறம் சேர்க்கச் சேர்க்கப்படும் பொருள்

pigskin : பன்றித் தோல் : பதனிட்ட பன்றித்தோல். வீட்டில் வளர்க்கப்படும் பன்றியின் தோலிலிருந்து நெடுநாள் உழைக்கக் கூடிய, தரமான தோலினைப் பதனிட்டு, கையுறைகள், சிகரெட் பெட்டிகள், கைப்பைகள் முதலியன தயாரிக்கிறார்கள்

pigtail : (மின்.) புரியிணைவு மின் கடத்தி:

இணை மின்கடத்திகளின் அவிழ்முனைகளை புரியாகத் திரித்துத் தயாரிக்கப்படும் மின் கடத்திகள்

pilaster : (க.க.) : சதுரத் தூண் : அலை இடைகரையில் அல்லது சுவரில் நீட்டிக் கொண்டிருக்கும் சதுரத் தூண்

pile driver : பதிகால் எந்திரம் : கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால்களை அடித்திறக்கு வதற்கான எந்திரம்

piling : (பொறி.) பதிகால் : ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால்

pillar : (க.க.) தூண் : கட்டு மானத்தைத் தாங்கி நிற்பதற்கான தூண்

pillar (க.க.) தூண் : ஒரு கட்டு மானத்தின் ஆதாரக்கால்

pillow block: (எந்.) முட்டுத் திண்டுக்கட்டை : ஒரு சுழல் தண்டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை

pilot : (வானூ.) விமானம் ஓட்டி : விமானம் பறப்பதைக் கட்டுப் படுத்தி இயக்குபவர்

pilot : (வானூ.) விமானம் ஓட்டி : விமானப் பயணத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர்

pilot balloon : (வானூ.) திசயைறி புகைக் கூண்டு: காற்றுவீசும் திசையையும் வேகத்தையும் கண்டறிவதற்காக மேலே பறக்கவிடப்படும் சிறு புகைக் கூண்டு

pilot drill ; (கணி.) முன்னோடித் துரப்பணம் : ஒரு பெரிய துரப் பணத்தைச் செலுத்துவதற்கு வசதியாக ஒரு முன்னோடித்துளையிடுவதற்குப் பயன்படும் சிறிய துரப்பணம்

pilot hole: (உலோ.) முன்னோடித் துளை : ஒருபெரிய துளையிடுவத்ற்காகத் துரப்பணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படும் ஒரு சிறிய துளை

pilotless aircraft : (வண்.) ஆளில்லா விமானம் : செலுததுவதற்கு ஆளில்லாமல் இயங்கக் கூடிய ஒருவகை விமானம். இது தானியங்கும் சாதனம் அல்லது வானொலி ஆணை மூலம் இயக்கப்படுகிறது

pilot light: (மின்.) வழிகாட்டி விளக்கு : ஒரு சுவர்ப்பெட்டியில் அல்லது கொள்கலத்தில் கட்டுப்பாட்டு விசையில் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு விளக்கு. இது அதனுடன் இணைக் கப்பட்டுள்ள சாதனம் இயங்குகிறதா என்பதைக் காட்டும்

pilot parachute : (வானூ.) முன்னோடி வான்குடை: முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை

pilot plant : (முன் மாதிரி எந்திரம்)

pin : (தச்சு.வே.) பிணைப்பூசி : மரம் அல்லது உலோகத்தினாலான முளை

pincers: குறடு; இரு கவர் உள்ள இடுக்குப் பொறி

pine : (தாவ.) தேவதாரு: பசுமை மாறாத ஊசி இலை மரம். கடினமானது; கனமானது; கனரகக் கட்டுமானத்திற்குப் பயன்படக் கூடியது

ping : (தானி.) விண்ணொலி: துப்பாக்கிக் குண்டு பாய்தல் அல்லது எஞ்சின் நீள் உருளை வெடித்தல் மூலம் உண்டாகும் விண்ணென்ற ஒலி

pinion : (பல்.) சிறகுப் பல்லிணை: வடிவளவு எவ்வாறிருப்பினும், சரி வாக்கிய அல்லது குதிமுள்ளுடைய ஒரு சிறிய பல்லிணை

pin-knot (மர.வே.) ஊசி முடிச்சு: 1.27 செ.மீக்கு மேற்படாத விட்டமுடைய ஒரு வகை முடிச்சு

pinnacle : (த.க.) கோபுர முகடு : உயர்ந்த அல்லது மிக உயர்ந்த மோட்டு முகடு

pin punch : (பொறி .) முளைத் தமருசி : இறுக்கமாகப் பொருத்திபுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமருசி

pin spanner : (எந்.) முளைப்பு முடுக்கி: சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதறகுள்ள துவாரங்கள் கொண்ட வட்ட மரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முனைப்புரி முடுக்கி

pin-wheel: (பொறி.) சிறுசக்கரம்: கடிகார மணியடிக்கும் நெம்பு கோலை உயர்த்தும் பற்களை விளிம்பில் கொண்ட சிறு சக்கரம்

pint : பிண்ட் : நீர் முகத்தளவைச் சிற்றலகு. ஒரு காலனின் எட்டில் ஒரு பகுதி

pintle : ((எந்.) தாழ்கட்டை : சுழலுறுப்புக்கு ஊடச்சாக உதவும் தாழ்கட்டை

pipe : (உலோ.) குழாய் : திரவங்கள் முதலியவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் உட்புழையுடைய நீண்டகுழாய். குழாய்கள் எஃகு, இரும்பு, செம்பு, பித்தளை, உலோகக் கலவைகள் முதலியவற்றால் செய்யப்படுகிறது

pipe coupling : (கம்மி.) குழாய் :இணைப்பி : இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படும் மரையுள்ள குழல்

pipe cutter (கம்மி.) குழாய் வெட்டி : இரும்பு, எஃகுக் குழாய்களை வெட்டுவதற்குப் பயன்படும் கருவி. இதன் வெட்டுமுனை வளைவாக இருக்கும். இந்த முனையைத் குழியில் பதித்துச் சுற்றுவதன் மூலம் குழாய் வெட்டப்படுகிறது

pipe die : (கம்மி.) குழாய் மரை பொறிப்புக் கட்டை : குழாய்களில் திருகிழகளைப் பொறிப்பதற்குப் பின்படும் திருகு தகட்டுக் கருவி

pipe thread : ((எந்.) குழாய்த் திருகிழை : குழாய்களிலும், குழல்லும் பய்ன்படும் 'V' வடிவத்து கிழை. இதுறுக்கமான இணைப்புகளை அமைக்கப் பயன்படுகிறது pipette (வேதி.) வடிகுழல்: சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்வுக்கூடக் கூர்முகக் குழாய்க்கலம்

pipe vise: (கம்மி.) குழாய்க்குறடு: குழாய்க் குறடுகள் இருவகைப்படும். (1) சிறிய குழாய்களுக்கான 'V' வடிவத் தாடைகளுடைய கீல் பக்கமுடைய வகை; (2) பெரிய குழாய்களுக்கான சங்கிலிவகை

pipe wrench : (கம்மி.) குழாய்த் திருகுக் குறடு : ரம்பப் பல் விளிம்புடைய, தாடைகள் கொண்ட, தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய ஒருவகைத் திருகுக்குறடு. இதன் தாடைகள் ரம்பப் பல் விளிம்புடையதாக இருப்பதால் அது குழாயை நன்கு பற்றிக் கொண்டு திரும்புகிறது

pique : (அ.க.,) ஊடுதுகில் :விறைப்பான ஊடு நூலுடைய பருத்தித் துகில்

piston : (பொறி.) உங்து தண்டு : ஒர் எஞ்சினில் அல்லது இறைப்பானில் உள்ள நீர் உருளைக்குள் இயங்குகின்ற தண்டு. இத்தண்டு சரியாகப் பொருந்தியிருப்பதைப் பொறுத்து அழுத்தத் திறம்பாடு அமையும்

piston head : (தானி.) உந்து தண்டு முனை : ஒர் உந்து தண்டின் மூடப்பட்ட மேல் முனை

piston pin: (தானி.) உந்து தண்டு முளை: உந்து தண்டுடன் இணைப்புச் சலாகையை இணைக்கும் மேல் முனையை இணைக்கின்ற ஒர் உட்புழையுள்ள எஃகுச் சுழ்ல் தண்டு. இது கெட்டிப்படுத்தப் பட்டதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்கும். இதனை 'மணிக்கட்டு முளை' என்றும் கூறுவர்

piston pin bosses : (தானி.) உந்து தண்டு முளைக் குமிழ் :உந்து தண்டு முளைக்குமிழ். முனைகளைத் தாங்கும் உந்து தண்டின் பகுதிகள்

piston ring : ( எந்.) உந்து தண்டு வளையம் : ஒர் உந்து தண்டுக் குரிய வில்சுருள் பொதிந்த வளையம்

உந்து தண்டு

piston rod: (எந்.) உங்து தண்டுச் சலாகை : உந்து தண்டினை இயக்குகிற ஒரு சலாகை. இது கோட்டச் சுழல் தண்டின் குறுக்கு மேல் முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும்

piston skirt : (தானி.) உந்து தண்டு விளிம்பு :உந்து தண்டு முளைக்குக் கீழேயுள்ள பகுதி

piston slap : (தானி.) உந்து தண்டு அதிர்வு : உந்து - தண்டு தனது விசை வீச்சினைத் தொடங்கும்போது திடீரெனச் சாய்தல் அல்லது அதிர்தல்

piston stroke : ((தானி.) உந்து தண்டு இயக்கம் : உந்து தண்டு அதன் நீள் உருளையில் ஒரு முறை முழுமையாக முன் பின் இயங்குதல்

piston valve : (பொறி.) உந்து தண்டு ஓரதர் : ஒரு நீள் உருளை இயங்கும் கூண்டினுள் காற்றுப் புழைகள் இருக்கும். இந்தப் புழைகள் உந்து தண்டு இயங்கும் போது திறந்து மூடும்

pitch : (வேதி; குழை.) நிலக்கீல்கருநிறமான, சூட்டில் களியாக இளகும் தன்மையுடைய பசை போன்ற கட்டிப் பொருள். நீரில் கரையாதது. ஆனால் கார்பன் டை சல்பைடு பென்சோல் முதலியவற்றில் ஒரளவு கரையக் கூடியது

(2) இடைத் தொலையளவு : எந் திரங்களில் சக்கரப் பற்களின் இடைத் தொலையளவு

pitchblende : (கனிம.) பிட்ச் பிளண்டி : யுரேனிய ஆக்சைடு வகை. கருமைநிறக் கனிமப் பொருள். நிலக்கீல் போல் பள பளப்புடையது,யுரேனியமும் ரேடியமும் அடங்கிய ஒரு தாதுப் பொருள்

pitch circle : வீச்செறி வட்டம் : தூக்கி எறியும் வட்டக் கோட்டின் சுற்றளவு. வலைப் பின்னல் பல்லினணத் தொடர்பு வட்டம்

pitch diameter : (பல்லி.) வீச் செறி வட்டவிட்டம் : ஒரு பல்லிணைச் சக்கரத்தின் வீச்செறி வட்டத்தின் விட்டம்

pitch indicator : (வானூ.) வீச் செறி அளவி : ஒரு விமானத்தில் வீச்செறி விசை வேகம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி

pitch of a roof : (க.க.) சாய் வளவு: மோட்டுச் செவ்வு நிலை அளவு

pitch of a screw : (எந்.) திருகு இடைத்தொலையளவு : ஒரு திருகின் இழையில் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த சுற்றின் நேரிணையான புள்ளி வரையிலான தொலைவின் அளவு. இதனைத் திருகின் ஒரு சுழற்சிக்கான முன்னேற்ற அளவு என்றும் கூறுவர்

pitch of gears: (எந்.) பல்லிணை இடை வெளியளவு : சக்கரப் பற்களின் வடிவளவினைக் குறிக்கும் பல்லிணைகளுக்கிடையிலான இடைவெளியளவு

pitch ratio : (வானூ.) வீச்செறி விகிதம் : விமானச் சுழல் விசிறியின் வீச்செறிவுக்கும் அதன் விட்டத்திற்குமிடையிலான விகிதம்

pith knot : ( மர.) உள்ளீட்டு முடிச்சு : ஒர் உட்துளையுடைய, 1.27 செ.மீ.க்கு மேற்படாமல் விட்டம் கொண்ட ஒருவகை முடிச்சு

pitman : (எந்.) இணைப்புக்கரம்: ஒரு சுழல் எந்திரத்தை அதன் நேரெதிர் உறுப்புடன் இணைக்கும் தண்டு அல்லது கரம்

pitot tube : (வானூ.) நீள் உருளைக் குழாய் : நீள் உருளை வடிகுழாய். இதன் ஒரு முனை மேல் நோக்கித் திறந்திருக்கும். இதனால் காற்று இதன் வாயை நேரடியாகச் சந்திக்கும்

pivoted casement : (க.க.) சுழல் முளைப் பலகணி : மேல் முனையிலும் கீழ்முனையிலும் சுழல் முளை மீது திருகி இயங்கும் அமைப்புடைய பலகணி

pivot pin : திருகு முளை : திருகிச் சுழலும் ஆதாரமுடைய ஒரு முளை

placenta : (உட.) நச்சுக்கொடிதாயின் வயிற்றிலுள்ள குழந்தையை தாயுடன் இணைக்கும் கனத்த கடற்பஞ்சு போன்ற கொடி இது. 20x2 54செ.மீ. அளவாக இருக்கும் இதன் வழியாகவே குழந்தைக்கு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன

plages : (விண்) சூரிய ஒளித் திட்டுகள் : சூரியனில் கண்ணால் பார்க்கக்கூடிய் பரப்பில் பிரகாசமான ஒளித்திட்டுகளாகக் காணப்படும் கால்சியம் அல்லது ஹைட் ரஜன் ஆவிமேகங்கள்

plan : வரைபடம் : நகரம், நகரப் பகுதி, நிலம், கட்டிடம் முதலிய வற்றின் நிலவரைப்படிவ உருவ வரை படம் planchet : (பட்.வே.) உருப்பெறா நாணயம் : உலோகத் தகட்டிலிருந்து வெட்டப்பட்ட முத்திரைகள் எதுவும் பதிக்கப்படாமலிருக்கும் உருப்பெறாத நாணயம்

plane : (1) சமதளம் :சரிமட்டமான சமதளப் பரப்பு. இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு அதே பரப்பில் அமைந்திருக்குமானால் அது சமதளம் ஆகும்

(2) இழைப்புளி : உலோகம் அல்லது மரத்தை இழைத்துத் தளமட்டப்படுத்தும் கருவி

plane trigonometry : (கணி.) திரி கோண கணிதம்: முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்து ஆராயும் கணிதவியல் பிரிவு: இதில் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆறு சார்பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கணிதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை

plane : (1) சமதளம் : சமதளமான பரப்பு

(2) இழைப்புகருவி : இழைத்து வழவழப்பாக்குவதற்கான கருவி

(3) விமானம் : வான ஊர்தி

planer : (எந்.) இழைப்புளி : உலோகத்தை இழைத்துத் தளமட்டப்படுத்துவதற்கான இழைப்புக் கருவி

planetary electrons : (மின்.) கருமைய எலெக்ட்ரான் :ஒர் அணுவின் கருமையத்தைச் சுற்றி வலம் வருவதாகக் கருதப்படும் எலெக்ட்ரான்கள்

planetary hour : கோளநேரம் : இயற்பகலின் அல்லது இயலிரவின் பன்னிரண்டில் ஒரு கூறு வேலை

planetary influence: கோள் விளைவு : கிரகபலன்

planetary system : கதிரவன் மண்டலம் :

planetesimal : கோளணு : குளிர் நிலையில்கோள்கள் திரண்டு உருவாவதற்குக் காரணமாக இருந்ததாக்க் கருதப்படும் கோளநிலை அணுத் துகள்

planetoid : குறுங்கோள் : செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றி வரும் ஆயிரக்கணக்கான சிறு கோங்களில் ஒன்று

planimeter : ((கணி.) தளமட்ட மானி : சமதளப்பரப்பு எதனின் பரப்பளவையும் அளவிடுவதற்கான ஒரு கருவி. இக்கருவியின் முள்ளை எல்லையோரமாக நகர்த்தி அளவுகோலைப் பார்த்து பரப்பளவை அறியலாம்

planish : (உலோ.) மெருகூட்டுதல் : உலோகப் பரப்புகளை சுத்தியால் அடித்து அல்லது உருட்டி மெருகூட்டுதல்

planishing hammer : (உலோ.) மெருகூட்டு சுத்தி : ஒளிரும் முகமுடைய பரப்புகளில் ஒழுங்கற்ற பகுதிகளை நீக்கி மெருகூட்டுவதற்குப் பயன்படும் சுத்தியல். இதன் கொண்டையை வேலைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம்

plank : (மர.வே.) பலகை : ஒர் அட்டையை விடக் கனமான அகலமான மரப்பலகை.3.81-15 செ.மீ. கனமாகவும் 15.செ.மீ அகலமாகவும் இருக்கும்

plankton ; (உயி.) மிதவை உயிர்கள் : கடல் முதலியவற்றில் நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி

plankton : (உயி.) மிதவை உயிர்கள் : கடல் முதலியவற்றில் நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி planometer: (எந்.) தளப்பரப்புத் தகடு: தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு

plans and specifications: (பட்.) வரைபடங்களும் தனிக் குறிப்பீடுகளும்: வரைப்படங்களும் முழு விவர அறிவுறுத்தங்களும்

plant engineer ; எந்திரப் பொறியாளர் : ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குரிய எந்திர நுட்பச் செயல் முறைகளைச் செயற்படுத்தும் பொறியாளர். தொழிற்சாலைக்குத் தேவையான எந்திரங்களைத் தயாரிப்பது இவரது பொறுப்பு

plaque : (க.க.) அலங்காரத் தட்டு : உலோகம், மரம், தந்தம், வெண்களிமண் போன்றவற்றினாலான அலங்காரத் தட்டு

plasma : (உட.) நிணநீர் : குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்ப்டை ஊனீர்கூறு

plaskmodia : (நோயி.) ஒட்டுயிர் நுண்மம் : மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்

plaster : (க.க.) அரைச்சாந்து : கனிக்கல்லை (ஜிப்சம்) போதிய அளவு சூடாக்கி அதிலுள்ள நீரை வெளியேற்றி, நீரற்ற எஞ்சிய பொருளைத் தூளாக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது சுவர்களிலும் முகடுகளிலும் பூசுவதற்குப் பயன்படுகிறது

plaster board : (க.க.) சாந்து அட்டை : அரைச் சாந்தினால் செய்யப்பட்டு இருபுறம் காகிதம் ஒட்டிய அட்டை

plaster cast : சாந்து வார்ப்படம்:வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூளினாலான வார்ப்படம்

plastering : மருத்துவக் கட்டிடுதல் : மருத்துவக்கட்டுக் கட்டி மருத்துவம் செய்தல்

plastering trowel: சாந்துக் கரண்டி: சாந்து பூசப் பயன்படும் சட்டுவக் கரண்டி. இது எஃகினா லானது. 4"-5" அகலமும், 10"-12" நீளமும் உடையது. அலகுக்கு இணையாகக் கைப்பிடி கொண்டது

plaster lath: (க.க.) சாந்துக் பட்டிகை: சுவர், தளம், மச்சு ஆகியவற்றில் சாந்து பொருத்துவதற்காக அமைக்கும் மரப்பட்டிகை

plaster of paris: ( (வேதி;க.க.) பாரிஸ் சாந்து: வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது

plastic: (குழை.) பிளாஸ்டிக்: குழைத்து உருவாக்கத்தக்க வார்ப்புப் பொருள்

plastic art: குழைமக் கலை: உருவாக்கம் சார்ந்த சிற்பம், மட்பாண்டத் தொழில் முதலிய கலைகள்

plasticine: செயற்கைக் களிமண் : குழைவுருவாக்கத்திற்குரிய களி மண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப் பொருள்

plasticity (இயற்.) குழைவியல்பு: எளிதில் உருமாறுந் தன்மை. வார்ப்பட உருவத்தை ஏற்று இருத்திக் கொள்ளும் திறன்

plasticize: (குழை.) குழைமமாக்குதல்: குழைபொருள் குழுமத்தை உருவாக்குதல் அல்லது வளமாக்குதல்.

plasticizers: (குழை.) குழைமை உருவாக்கப்பொருள்: குழை பொருள் குழுமத்தை உருவாக்குகிற அல்லது வளமாக்குகிற பொருள் plastics: குழைபொருட் குழுமம்: நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை. குழைம ஆதாரப் பொருட்களில் பல கூட்டிணைப் பொருட்கள் உள்ளன. எனவே, குழைமப் பொருட்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்னிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இவற்றின் முக்கிய பிரிவுகளாவன

1. வெப்ப உருக்குழைமம் : வெப்ப மூட்டப் பெற்ற நிலையில் உருக்கொடுக்கப் பெற்ற குழைமம். அமினோ, பாலிஸ்டர், ஆல்க்கிட், பைனோலிக் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை 2. வெப்பியல் குழைமம்: வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் தன்மையுடைய குழைமம். ஸ்டைரீன் மீச்சேர்மங்கள், கூட்டு மீச்சேர்மங்கள், செல்லுலோசிக்ஸ். பாலித்திலீன், வினைல், நைலான்கள், பல்வேறு புளோரோ கார்பன்கள் இவ்வகையைச் சேர்ந்தவை

குழைமப் பொருள் குடும்பத்து ஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட பண்புகள் உண்டு. சில கடினப் பரப்புடையவை; சில அரிமான எதிர்ப்புடையவை; சில நெகிழ்திறனுடையவை; சில முரடானவை; சில மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடியவை

plastic surgery: ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை: உடலில் முகம் போன்ற உறுப்புகளில் இழந்த அல்லது சேதமடைந்த பகுதிகளை அறுவைச் சிகிச்சை மூலம் புதுப்பித்தல் அல்லது புத்துருவாக்கம் செய்தல்

plastic wood: (மர.வே) குழைம மரக்கூழ்: காற்றுப்பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம்

plastisol: (குழை.) பிளாஸ்டி சோல்: குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது

plate: (மின்.) மின் தகடு: ஒரு வெற்றிடக் குழலின் நேர்முனை. ஒரு குழலில் எலெக்ட்ரான்களை ஈர்க்கக்கூடிய பகுதி

plate circuit: (இயற்.) தகட்டு மின்சுற்றுவழி: (1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி

(2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைகள், விசை ஆதாரம், இவை தொடர்பான பகுதிகள் ஆகியவை அடங்கும்

plate clutch: (தானி;எந்.) தகட்டு ஊடிணைப்பி: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகடுகளின் மூலம் விசையை அனுப்புகிற ஊடிணைப்பி. இத்தகடுகள் விற்சுருள்களின் அழுத்தத்தின் மூலம் பற்றி வைத்துக் கொள்ளப்படுகின்றன

plate condenser: தகட்டு மின் விசையேற்றி: மாற்று உலோகத் தகடுகளை இணைத்து இரு மின் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விசையேற்றி, இத்தகட்டுகள் அப்பிரகம், மெழுகேற்றிய தாள், போன்றவற்றாலானதாக இருக்கும் plate current; தகட்டு மின்னோட்டம்: தகட்டு மின்சுற்று வழியில் பாய்கிற அதிர்வு நேர் மின்னோட்டம்

plate cylinder: (அச்சு.) தகட்டு நீள் உருளை: ஒரு சுழல் அச்சு எந்திரத்தில் சுழல்கின்ற பகுதி. இதனுடன் வளைவுடைய அச்சுத்தகடுகள் இணைக்கப்படும்

plated bar; (உலோ.) தகட்டிரும்பு: காய்ப்புடைய தகட்டு எஃகு. இது சலாகைகளாக இருக்கும். உலோகத்தைச் சூடாக்கிச் சுத்தியலால் அடித்துக் கடினமாக்கப்படுகிறது

plate modulation: (மின்.) தகட்டு அலைமாற்றம்: அலைமாற்றச் சைகையானது, அலைமாற்ற நிலையின் தகட்டு மின்சுற்று வழிக்கு ஊட்டப்படுகிற ஒர் அலைமாற்ற மின்சுற்றுவழி

platen: (எந்.) தகட்டுப் பாளம்: (1) உலோக வேலைப்பாடுகளில் உலோகத்தை அழுத்தித் தகடாக்குவதற்குப் பயன்படும் தகடு

(2) அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்

platen press: (அச்சு.) தகட்டுப் பாள அச்சு எந்திரம்: அச்சிடும் போது காகிதமும் அச்சுப் படிவமும் தட்டையாகப் பொருந்தியிருக்கக் கூடிய அச்சு எந்திரம்

plate voltage: ( இயற்.) தகட்டு மின்னழுத்தம்: ஒரு வெற்றிக் குழலின் ஆதாரத்திற்கும் தகட்டுக்குமிடையே மின்விசை மூலம் அழுத்தி வைக்கப்பட்ட நேர் மின்னோட்ட மின்னழுத்தம்

platform: (க.க.) தள மேடை: தரையிலிருந்து உயரமாகக் கிடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மரததினாலான அல்லது கட்டுமானத்திலான ஒரு மேடை

plating: (உலோ.) முலாம் பூசுதல்: உலோகக் குழம்பில் அமிழ்த்துவதன் மூலம் அல்லது மின் பகுப்பு முறை மூலம் உலோக முலாம் பூசுதல்

platinite: (உலோ.) பிளாட்டினைட்: 46% நிக்கல் எஃகு அடங்கிய ஒர் உலோகம். இது பிளாட்டி னத்தைப் போன்று அதே அளவு வெப்ப விரிவாக்கக் குணகம் உடையது. இதனாலேயே இது மின் விளக்குக் குமிழ்கள் தயாரிப்பதில் பிளாட்டின்த்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது

platinoid (உலோ.) பிளாட்டினாய்டு: செம்பு, துத்தம், ஜெர்மன் வெள்ளி, டங்ஸ்டன் முதலிய உலோகங்கள் அடங்கிய உலோகக் கலவை. அணிகலன்கள், அறிவியல் கருவிகள் செய்யவும், சில தொழில்துறைச் செயல்முறைகளிலும் பயன்படுகிறது

platinum: (உலோ.) பிளாட்டினம்; விழுப்பொன்: அணு எடை 78 கொண்ட மதிப்பு மிகுநத ஒண் சாம்பர் நிறமுடைய உலோகத் தனிமம். இதன் ஒப்பு அடர்த்தி 21.5. இது எளிதில் வளையும் தன்மையுடையது; துருப்பிடிக்காதது. அணிகலன் செய்யவும், அறிவியல் சாதனங்கள் செய்யவும் பயன்படுகிறது

plenum: (குளி;பத) பொருள் நிறை இடைவெளி: பல்வேறு அறைகளுக்குக் காற்றைப் பகிர்ந்தளிப்பத்ற்கு முன்னர் அழுத்தப்பட்ட காற்றினை ஏற்றுக் கொள்கிற ஒர் அறை

pliant: ஓசிவான : தொய்வான முறியாமல் எளிதில் கூடிய

pliers: (எந்.) சாமணம்: அகலமான, தட்டையான, சொரசொ ரப்பான தாடைகளுடைய இடுக்கி போன்ற ஒரு கருவி

pliers: (உலோ.) சாமணம் : சிறு பொருள்களை இடுக்கிப் பிடிப்பதற்கான இடுக்குக் குறடு. இது பல்வேறு வகைகளிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. சிலவற்றில் வெட்டு முனைகளும் உண்டு

plinth (க.க.) தூண்பீடம்: ஒரு தூணை அல்லது பீடத்தை அடிப்பகுதியையொட்டியுள்ள சதுர வடிவப் பகுதி

plotting points: (கணி.) மனையிட முனைகள் : ஒரு வரைபடத்தில் மனையிடத்தை வரையறுக்கும் முனைகள்

plug: (மின்.) மின்செருகி : மின் கருவிகளுக்கும், மின்வழங்கு ஆதாரங்களுக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கெனச் செருகிப் பொருத்துவதற்குரிய சாதனம்

plug fuse: (எந்.) செருகு மின் காப்பிழை: திருகு இழைத் தொடர்பு மூலம் நிலையில் பொருத்தப்படும் மின்காப்பு இழை

plug gauge: (எந்.) செருகு அளவி: எந்திர வேலைப் பொருள்களின் உள்விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் செருகு அளவி


plug tap: (எந்.) செருகுநாடா:எந்திரங்கள் மூன்று வரிசைகளி இடையீட்டு நாடா: (1)தொடக்க நாடா; (2)செருகு நாடா; (3) அடி நாடா

plug weld (பற்.) செருகு பற்றாசு:எந்திர உறுப்புகளில் ஒன்றில் அல்லது இரண்டிலும் உள்ள துவாரத்தின் வழியே பற்றாசு பொருத்தி தகடுககளை இணைக்கும் முறை

plumb: (க.க.) செங்குத்து: சுவர் போன்று துல்லியமாக நேர் செங்குத்தாக இருக்கும் அமைப்பு

pulumbago: காரீயம்: எழுது கோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை. இது மேற்பரப்புகளில் எளிதில் கடத்தாப் பொருளாகப் பூச்சு வேலைக்கும் பயன்படுகிறது

plumb and level: (க.க.) தூக்கு நூற்குண்டு : துல்லியமான கிடைமட்டத்தையும், துல்லியமான செங்குத்தையும் அறிவதற்காகப் பயன்படும் உலோக அல்லது மர நூற்குண்டு

plumb bob: (க.க.) ஈயக்குண்டு: கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு

plumber : (கம்மி.) குழாய் செப்பனிடுபவர்: ஈயம், துத்தநாகம், வெள்ளியம் முதலியன கொண்டு குழாய், தொட்டி முதலியவற்றைப் பழுதுபார்ப்பவர்

plumbing : குழாய் வேலை : ஈயக் குழாய் முதலியவற்றப் பொருத்துதல், பழுது பார்த்தல் போன்ற வேலை

plummet: தூக்கு நூல்: செங்குத்து ஆழம் பார்ப்பதற்கான கருவியின் தூக்கு நூற்குண்டு

plutonium : (உலோ.) புளுட்டேனியம்|பொன்னாகம் : யுரேனியத்திலிருந்து உண்டான ஒரு புதிய தனிமம்.இதன் அணு எண் 94. யுரேனியும்238; (அணு எண் 92) + 1 நியூட்ரான் = யுரேனியும்239: - 1 எலெக்ட்ரான் - நெப்டியூனியம் (அணு எண் 95)-ஒர் இரண்டா வது எலெக்ட்ரான்=புளுட்டோனியம் (அணு எண் 94). இது அணு ஆயுதங்களிலும், சில அணு உலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

ply : படலம் : பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும்

plywood : (மர.வே.) ஒட்டுப் பலகை : படலங்களின் இழைவரை ஒன்றற்கொன்று குறுக்காக வைத்து ஒட்டிக் செய்யப்படும் மெல்லிய வன் பலகை

pneolator :(எந்.) செயற்கைச் சுவாசக் கருவி; இடம் விட்டு இடம் கொண்டு செல்லக்கூடிய தானாக இயங்கும் செயற்கைச் சுவாசக் கருவி

pneumatic : (பொறி.) காற்றுப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை

pneumatic brakes : (தானி.) காற்றுத் தடை: காற்று அழுத்தம் அல்ல்து வெற்றிடம் மூலம் இயக்கப்படும் தடை

pneumatic dispatch:காற்றழுத்த இயக்க முறை: காற்றழுத்தத்தினால் அல்லது காற்று வெளியேற்றத்தினால் இயக்கப்பட்டுக் குழாய்கள் வழியாகச் சிப்பங்கள் முதலியவற்றை இடம் பெயர்த்துக் கொண்டு செல்லும் முறை

pneumatic tire : (தானி.) காற்றுக் குழாய்ப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை

pneumatic tools : (போறி.) காற்றழுத்தக் கருவி: காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் சாதனம்

pneumatic trough : வளிக்கொள் கலம் : நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத் திரட்டுவதற்கான கலம்

pock marks : (வண்.) அம்மைத்தழும்பு : அம்மை நோயினால் உடலில் ஏற்படும் தழும்புகள் போன்ற வண்ணப் பரப்பு

point : (அச்சு.) அச்செழுத்துரு அலகு: அச்செழுத்துருவின் ஒர் அலகு. ஒர் அலகு=.031837 அங்

pointing : (க.க.) இணைப்புக் காரைப்பூச்சு: கட்டுமானத்தில் இணைப்புக் காரைப்பூச்சு

point system : (அச்சு.) அச்செழுத்து அலகு முறை அச்செழுத்துகளை வார்ப்பதற்கான அளவை முறை

polar circle : துருவச் சக்கரம் : நில முனைக்கோடி வட்டம்

pointing trowel : (க.க.) கூர் சட்டுவக் கரண்டி: சுவர் இணைப்புகளில் கூர்மையாகச் சாந்து பூசவும், எஞ்சிய சாந்தினை அகற்றிச் சுத்தப்படுத்தவும் பயன்படும் சிறிய சட்டுவக்கரண்டி

polar coordinates : (மின்.) துருவ ஆயத் தொலைவுகள் : ஒர் ஏவரையின் பரிமாணத்தினால் வரையப்படும் ஏவரையும், தொடர்புக் கோட்டுடன் அதன் கோணமும் துருவ ஆயத்தொலைவுகள் எனப்படும்

polar disfance : துருவ கோணத் தொலைவு :அண்மையிலுள்ள நில முனைக்கோடியிலிருந்து கோளப் புள்ளிக்குள்ள கோணத்தொலைவு

polarimeter : : வக்கரிப்புக் கோட்ட மானி:ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்ட மானி

polarity: (மின்.) துருவ முனைப்பு: இருகோடிகளும் நில்லுலக முனைக் கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல், காந்த ஊசி முதலியவற்றின் இயல்பு; மின்னுரட்டு முனைக்கோடி இயல்பு

polarization : (மின்.) : மின் முனைப்பாக்கம் : அடிப்படை மின் கலத்தில், நேர்மின் தகட்டில் ஹைட்ரஜன் குமிழ்கள் சேர்தல். இதனால் அகத்தட்டை அதிகரித்து, மின்னோட்ட வலிமை குறைகிறது

polarized light: (குழை.) முக ஒளிக்கதிர்: போக்கின் திசை ஒரு முகப்படுத்தப்பட்ட ஒளிக் கதிர்கள்

polar molecule : (மின்.) துருவ மூலக்கூறு : ஒரு முனை எதிர் மின் முனையாகவும் இன்னொரு முனை நேர்மின் முனையாகவும் செயற்படுகிற ஒரு மூலக்கூறு, எடுத்துக் காட்டு ஹைட்ரஜன் குளோரைடு

polaroid : (மின்.) மின்முனைப் பூட்டி: ஒளியை மின்முனைப்பாக்க மூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் அயோடினும் கொய்னாவும் கலந்த ஒரு கூட்டுப் பொருளின் படிகங்களையுடைய தகடு

polar vectors: (மின்.) துருவ நேறியங்கள் : ஒரு பொதுவான மையத்திலிருந்து அல்லது துருவத்திலிருந்து நீட்சியாகின்ற நேறியங்கள்

pole : (மின்.) (1) மின்முனை : மின்கலம் மின்கல்த்தொகுதி அல்லது நேர்மின்னாக்கியின் இரு முனையங்களில் ஒன்று

(2) துருவம் : ஒரு காந்தத்தின் காந்தமுனைபபுளள ஒரு முனை

pole piece : (மின்.) துருவமுனை முகம்: ஒரு மின்னாக்கிப்புலத்தில் தலச்சுருணைகளைச் சுற்றிவைப்ப தற்காகவுள்ள இரும்பு மென் தகட்டு உள்ளீடு

pole pitch: (மின்.) துருவச்சாய் அளவு: ஒரு மின்னாக்கிப் புலத்தில் இரு அண்டைத் துருவங்களின் மையங்களுக்கிடையிலான புற எல்லைத் தொலைவு

poles : (மின்.) மின் முனைப்புக் கோடிகள் : ஒரு மின் சுற்று வழியின், மின்முனைப்புக் கோடிகள் (துருவங்கள்)

pole shoes : (மின்.) காந்தலாடம் : லாடம் போல் வளைந்த துருவ முனைக் காந்தம்

polio : (நோயி.) இளம்பிள்ளை வாதம் : குழந்தைகளின் முதுகுத் தண்டின் சாம்பல்நிற உட்பகுயில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படுகின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு புகுகின்றன என்பது தெரியவில்லை. இந்நோய் பெரியவர்களையும் பாதிக்கிறது

polish : மெருகு : தேய்ப்பதனால் உண்டாகும் மினுமினுப்பு அல்லது பளப்பளப்பு

polychrome: : பல்வண்ணக்கலை:பல வண்ணங்களைக் கொண்டு பூச்சு வேலைப்பாடுகள் செய்தல். இந்தக் கலை எகிப்தில் தோன்றியது. இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது

polymers: (வேதி;குழை) மீச்சேர்மம்: ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்

polyester: (குழை.) பாலியஸ்டர் : குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அணு ஆல்கஹால்களையும். இரு காடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிறவற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்ற பாலியஸ்டர் தயாரிக்கப்படுகிறது. திரவவடிவில் இதனை எளிதில் கையாளலாம். இது வெப்பத்தையும், அரிமானத்தையும் தாங்கக் கூடியது. சிறிய மின்சாரச் சாதனங்கள், கட்டிடச் சேணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

polyethylene: (குழை.) பாலித்திலீன்: வெப்புத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடையது. எத்திலீன் மீச்சேர்மங்களாலானது. கெட்டியான மெழுகு போன்றது. நீரினால் பாதிக்கப்படாதது. நெகிழ்வுடைய புட்டிகள் வெப்பத்தைத் தாங்கும் விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

polygon: பலகோணக் கட்டம்: நான்கிற்கு மேற்பட்ட பக்கங்களையும், கோணங்களையும் உடைய வரைபடிவம்

polygon of forces: விசைகளின் பலகோணக் கட்டம்: விசைகளின் முக்கோணங்களின் விரிவாக்கம், ஒரு பல கோணக் கட்டத்தின் பக்க்ங்களால் வரிசைப்படி அளவிலும் திசையிலும் பல விசைகள் குறிப்பிடப்படுமானால், அவை சம நிலையில் இருக்கும்

polymer: (குழை.) மீச்சேர்மம்:ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்டபிறதுருச் சேர்மம்

polymerization: (வேதி.) மீச்சேர்ம இணைவு:ஒரே வகைப்பூட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுப்ட்ட பிறிதுருச் சேர்மமாக இணைதல். எடுத்துக்காட்டு: தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் 6 பாரமால்டிஹைடு மூலக் கூறுகள் (CH2O) பச்சையம் மூலமாக ஒரு சர்க்கரை (CH6H{sub|12}}O{sub|6}}) கூறாக மாறுதல்

polyphase: (மின்.) பன்னிலை:இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்னோட்ட இயக்கப் படி நிலை அல்லது மின்னியல் முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் சுற்றுவழிகள்

polystyrene: (வேதி;குழை.) பாலிஸ்டைரீன்: வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய அமிலத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வகைப்பிசின். அமிலக் கொள்கலங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

polytechnic: பல தொழில் நுட்பப் பயிற்சியகம்: பல தொழில் நுட்பங்கள் பயிற்றுவிப்பதற்கான பள்ளி அல்லது நிறுவனம்

polyvinyls: : (குழை.) பாலிவினில் : பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இது நீர், ஆல்கஹால், அமிலங்கள் காரங்க்ள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியது

pons: (உட.) மூளைப் பாலம்: மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை

pons varo]li (உட.) மூளை இணைப்பு: மூளையின் இரு பாதிகளையும் இணைத்து, மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கின்ற நரம்பிழைப் பட்டை

poplar (மர.வே.) நெட்டிலிங்கம்: ஒருவகை மரம்; மென்மையானது எடை குறைந்தது. வெள்ளை அல்லது இளம் பசு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் எளிதில் வேலைப் பாடுகள் செய்யலாம். கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது

poppet: (எந்.) கடைசல் தலை:கடைசல் எந்திரத்தின் தலைப்பாகம்

poppet volves: (பொறி.)கடைசல் திருகு: தானியங்கிப் பொறியியலில் பயன்படக் கூடிய வட்டத் தகடு, தண்டோடும் கூடிய கடைசல் திருகுக் கருவி


рорру heads: (க.க.) ஒப்பனை முகடு: திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு

porcelain: பீங்கான்: சீனாக் களிமண் அல்லது வெண் களிமண் செய்யப்படும் பீங்கான் கலங்கள்

porch: (க.க.) புகுமுக மண்டபம்: ஒரு கட்டிட்த்தின் முகப்பில் தனிக் கூரையுடன் கூடிய மண்டபம்

porosity: கசிவுத்திறன்: உலோகம் அல்லது பிற பொருட்களின் வழியாக அழுத்தப்படும் போது காற்று, வாயு அல்லது திரவம் கசியும்படி செய்யும் திறன்

porosity: (பற்.) நுண்துளை: உலோகத்திலுள்ள வாயுக்கள் அல்லது வெற்றிடங்கள்

port; (தனி.) காற்றுப்புழை: எஞ்சினின் உள்ளெரி அறைக்குள் எரிபொருள் செல்வதை அனுமதிக்கக் கூடிய அல்லது வாயுக்கள் வெளியேற அனுமதிக்கக்கூடிய ஒரு வழிப்புழை

portal: (க.க.) நுழைவாயில்: அணிவாயிற் கதவம் அல்லது அணி கெழுவாயில், பொதுவாக பெரிய கட்டிடங்களில் உள்ளது

portal vein: (உ.ட.) : கல்லீரல் சிரை: சீரண உறுப்புகளிலிருந்து கல்லீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளம். இது மற்றச் சிரைகளிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால், இது இதயத்திற்கு நேரடியாக இரத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பதிலாகத் தந்துகிகள் என்னும் சிறு இரத்த நாளங்களாகப் பிரிகின்றது

portico: (க.க.) மூடு மூன்றில்: துரண்கள் தாங்கும் கூரையுடைய இடம், பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம்

portiere: (அ.க.) கதவத்திரை: கதவுநிலையில் பயன்படுத்தப்படும் ஒரு திரை

portland cement: (க.க.) சீமைக்காரை:சீமைச்சுண்ணாம்பு. களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் செயற்கைப் பசைமண்

positive; ஒளிப்பட நேர்படிவம்: ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர்மாறானது

positive carbon: (மின்.) நேர்மின் கார்பன்: நேர்மின்னோட்டச் சுடர் விளக்குகளில் ஏற்படும் கார்பன் குழி

positive electricity: (மின்.) நேர்மின்னாற்றல்: கண்ணாடியைப் பட்டுத் துணியில் தேய்ப்பதால் ஏற்படும் மின்னாற்றல்

positive group: (மின்.) நேர்மின் குழுமம்: ஒரு பொதுவான மின் முனையத்துடன் இணைக்கப்பட் டுள்ள பல சேமக் கலத்தகடுகளின் ஒரு தொகுதி. இது ஒரு தனி மின் கலத்திற்கு நேர்மின்முனையாக அமைகிறது

positive pole : (மின்.) தென் துருவம்: காந்த வகையில் வடக்கு நோக்கிய முனை; நிலவுலகக் கோளவகையில், தென்முனைக் கோடி

positive electricity: நேர்மின் ஆற்றல்: கண்ணாடியைப் பட்டுத் துணியால் தேய்ப்பதனால் ஏற்படும் மின் ஆற்றல்

positive plate: (மின்.) நேர்மின் தகடு: ஒரு சேமக்கலத்திலுள்ள தகடு. இது பொதுவாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும், மின்சுற்றுவழி முற்றுப் பெறும்போது இதிலிருந்து மின்விசை பாய்கிறது

positive temperature coefficient (மின்.) நேர்வெப்பக் குணகம்: வெப்பத்தில் நேரடியாக ஏற்படும் ஒரு மாறுதலின் விளைவாக, அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் நேர்படிவ மாற்றம்

positive terminal: (மின்.) நேர் மின் முனையம்: ஒரு மின் சுற்றுவழியில் அல்லது மின்கலத்தொகுதியில் இணைப்பு முனை. மின்சுற்று சுற்றுவழி முழுமையடைந்ததும் இதிலிருந்து மின்விசை பாயும்

positron:(மின்.)நேர்ஆக்கமின்மம்: மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாகத் தற்காலிகமாகக் கருவிகளில் உருவாகும் நேர்மின் திரள்

post office bridge: (மின்.) அஞ்சலகப் பாலம்; ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தளையை அகற்றுவதன் மூலம் சமநிலை கிடைக்கிறது. பெட்டியின் முகத்தில் செருக்ப்பட்டுள்ள் செருகிகளின் வரிசையைப் பொறுத்து இந்தப் பெயர் ஏற்பட்டது

pottassium: (வேதிி.) பொட்டாசியம்: வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனடையவை

potential: (மின்.) மின்னழுத்த நிலை: மின்னூட்டத்தின் அளவு அல்லது மின் அழுத்தத்தின் அளவு. வேண்டும்போது செயல்திறப் படுத்தப்படும் அடங்கிய மின்னாற்றல் வளம். இது ஒல்ட் என்னும் அலகுகளில் அளவிடப்படுகிறது

potential difference: (மின்.) மின்னழுத்த நிலைவேறுபாடு: நிகழக்கூடும் மின்னோட்டத்தின் ஏற்நத்தாழ்வு உச்சநிலைகளின் வேறுபாடு. இது ஒல்ட் அலகுகளில் அளவிடப்படுகிறது

potential energy: (இயற்.) உள் நிலை ஆற்றல்: உள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல்

potential gradient: (மின்.) மின்னழுத்த நிலைச்சரிவு: ஒரு நீள அல்கின் மின்னழுத்த அளவில் ஏற்படும் வேறுபாடு

potential regulator : (மின்.) மின்னூட்ட ஒழுங்கமைவு : ஒரு மின்னாக்கியின் அல்லது மின் சுற்றுவழியின் மின்னழுத்த வழியின் மின்னழுத்த வெளிப்பாட்டு அளவைகட்டுப்படுத்தும் சாதனம்

potentiometer : (மின்.) மின்னழுத்த ஆற்றல் மானி : மின்ன ழுத்த நிலைகளை ஒரு தர அளவுடன் ஒப்பிட்டு அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

pothook : (கம்மி.) பானைக்கொக்கி : உலையிலிருந்து உருகிய ஈயமுள்ள ஒருபானையைத் தூக்குவதற்குப் பயன்படும் கொக்கி

potted circuit : (மின்.) கலத்திரட்ட மின் சுற்று வழி: ஈரப்பதம், வெப்பம் இவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு மின்காப்புப் பொருளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு மின்சுற்று வழி

potters wheel : வேட்கோத் திகிரி: குயவர்கள் களிமண்ணுக்கு உருக்கொடுக்கப் பயன்படுத்தும் சக்கரம்

pottery : மட்பாண்டத் தொழில் : சட்டி பானை செய்யும் மட்பாண்டத்தொழில் அல்லது களிமண் பாண்டத் தொழில்

pounce: (வரை.) வண்ணப்பொடி: மை உறிஞ்சுவதற்காகப் பதி வெடுப்புத்துணியின் மேற்பரப்பில் தூவப்படும் வண்ணப்பொடி

pound : பவுண்ட் : 12 அவுன்ஸ் கொண்ட எடை அலகு, .454கி.கி

pour point depressant: (தானி.) பாய்வுச்சேர்மானம் : தாழ்ந்த வெப் நிலைகளில் எண்ணெய் தங்கு தடையின்றிப் பாயும்படி செய்வதற்காக சேர்க்கப்படும் சேர்மானப் பொருள்

powder metallurgy : (உலோ.) தூள் உலோகக்கலை: வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிகளாக உரு வாக்குகிறார்கள். இக்கட்டிகளை ஒர் உலையிலிட்டு வெந்நீரருவிப் படிவமாக்கி வலுவான பயனுள்ள பொருளாக ஆக்குகிறார்கள்

power : (மின்.) மின்விசை : மின் விசையின் அலகு வாட் மின் விசையினால் இயக்கத்தின்போது செய்யப்படும் வேலையின் விகிதத்தைக் கொண்டு இது அளவிடப்படுகிறது எந்திரவிய்லில் விசை= (இயக்குத்திறம் x தொலைவு) / காலம்

power amplifier: திறன்மிகைப்பி: ஒலிபெருக்கிக்குப் பெருமளவு விசையை அளிக்கப் பயன்படுத்தப் படும் ஒரு வகை மின் கருவி

power brakes : (தானி; எந்.) விசைத் தடை : மின்னியக்கச் செறிவு முறை மூலம் நீரியல் முறையில் இயக்கப்படும் தடை

power factor : ( மின்.) திறன்கூறு : உண்மைத் திறனுக்குமிடையிலான,தோற்றத் திறனுக்குமிடையிலான விகிதம் திறன் கூறு = (உண்மைத்திறன்(W) / தோற்றத்திறன் (WXA))

power factor meter : ( மின்.) திறன் கூறு மானி : மின் திறன் கூற்றின் மதிப்பளவைக் காட்டக் கூடிய மின்னோட்ட மானி, மின்னழுத்த மானி திறனளவி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஒர் அளவைக் கருவி

power feed: ( எந்..) : விசையூட்டம்: கடைசல் எந்திரம் திருகிழை வெட்டுக்கருவி போன்ற எந்திரங்களுக்குத் தானியக்க முறையில் உட் செலுத்துதல்

power hammer: விசைச் சம்மட்டி:காற்று, நீர் எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது power landings (வானூ.) விசை இறக்கம் : விமான எஞ்சினின் நீராவிிப் புழையின் வாயடைக்கப் பெற்று மெல்ல இயங்குமாறு செய்து விமானத்தைத் தரை இறங்கச் செய்தல்

power loss : (மின்.) மின் விசை இழப்பு : மின் கடத்திகளில் ஏற்படும் தடை காரணமாக ஒரு மின் சுற்றுவழியில் உண்டாகும் மின் விசை இழப்பு

power pack : (மின்.) திறன் அடைப்பு : வானொலிப் பெட்டி, பொது ஒலிபெருக்கி அமைப்பு முதலியவற்றுக்குத் தேவையான மின்னிழையை அல்லது வெப்ப ஆற்றலை வழங்கும்

power plant ; (தானி. ) விசை எந்திரம் :எரிபொருள் கரியச் சேர்மானச்செறிவு, எரியூட்டம், குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக்கான அமைவுகள் அமைந்த எந்திரம்

எந்திரவியலில் மின்விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள், மின்னாக்கிகள் முதலியவை

power sensitivity :(மின்..) (மின்னுணர் திறன்: வலைச்சைகை மின்னழுத்தத்தின் உள்ளபடியான மதிப்பளவின் வர்க்கத்தில் வாட்டுகளில் மின்விசை வெளிப்பாட்டு அளவின் விகிதம்

power steering : (தானி;எந்.) விசை இயக்காழி : எஞ்சின் இயங்கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது

power transformer : (மின்.) விசை மின் மாற்றி : உயர்ந்த மின்னழுத்தத்தையும் குறைந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னோட்டத்துடனும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இணைப்புதற்கும், குறைந்த மின்னழுத்தத்தையும், உயர்ந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னழுத்தத்துடனும், குறைந்த மின்னோட்டத்துடனும் இணைப்பதற்கான ஒரு சாதனம். இவை பொதுவாக 60 சுழற்சி அலைவெண்ணுடன் பயன்படுத்தப்படுகிறது

power transistor : (மின்.) விசை மின் பெருக்கி : ஒரு குறிப்பிட்ட அளவு மின் விசையினை வெளிப்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள மின்விசைப் பெருக்குக் கருவி (டிரான்சிஸ்டர்)

power tube : விசைக் குழல்: ஒலி அலைவெண் மிகைப்பியல். கடைசிக் கட்டத்தில் பயன்படுத்தப்படும் வெற்றிடக்குழல், ஒலி பெருக்கி இயக்கத்திற்கு இது பெரிய அளவிலான ஒலி அலைவெண் அளிக்கிறது

power unit : (மின்.) மின் விசை அலகு : மின் சுற்று வழிகளில் மின் விசையின் அலகு வாட் . இது வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஒர் அலகு செயற்படும் வீதம் ஆகும்

practice: தொழில் முறைப் பணி : வழக்கறிஞர், மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி

preamplifier: (மின்.) தாழ்நிலை மின் மிகைப்பி: தரஅள்வு மின் மிகைப்பியை இயக்குவதற்குப் போதுமான அளவு ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய மின் உணர்வுள்ள குறைந்த அளவு மின் மிகைப்பி

precipitate : ( குழை.).) வீழ்படிவு : வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு கரைசலில் கரையாத வண்டலாகப் படியும் மண்டிப்படிவு precision blocks : (உலோ.) துல்லிய எஃகுப்பாளங்கள்: தொழில் துறையில் அளவுத்திட்ட முறையில் பயன்படுத்தப்படும் துல்லியமாகச் செய்யப்பட்ட எஃகுப் பாளங்கள். இது, அங்குலத்தில் 20 இலட்சத்தில் ஒரு பகுதி அளவு வரைப் பல்வேறு வடிவளவுகளில் தயாரிக்கப்படுகிறது

precision grinding: (எந்.) துல்லியச் சாணை: எந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டளவு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடி எந்திரச் சாணை

precision lathe : (எந்.) துல்லியக் கடைசல் எந்திரம் : துல்லியமான கடைசல் வேலைப்பாடுகளைச் செய்வதற்கேற்ற சிறிய மேசைக் கடைசல் எந்திரம்

recooler : (குளி.பத.) குளிர்விப்புச் சாதனம் : கனிகள், காய்கறிகள் போன்றவற்றைக் கப்பலேற்றுவதற்கு முன்பு, அவற்றிலிருந்து உணர் வெப்பத்தை அகற்றுவதற்கான ஒரு குளிர்விப்பு சாதனம்

prefabricated : முன்னிணைப்பு : கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைக்கு வேண்டிய பகுதிகளை அல்லது_உறுப்புகளை தனித்தனியாக வேறிடங்களில் முழுமையாக உருவாக்கி, பயன்படுத்த வேண்டிய இடத்திற்குக் கொண்டுவந்து இறுதியாக ஒருங்கிணைத்து அமைத்தல்

preforming (குழை.) முன்னுரு வாக்கம் : பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக்கும் முறை

preheat : (குளி.பத.) முன்வெப்ப மூட்டுதல் : (1) பிற செய்முறைகளுக்கு ஆயத்தமாக காற்று, திரவம், உலோகம் போன்றவற்றுக்கு முன்னதாகவே வெப்பமூட்டுதல். ஓர் உலோகத்தை ஒரு செய்முறைக்கு உட்படுத்துவதற்கு முன்பு, அந்த உலோகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெப்ப மூட்டுதல்

preignition : (தானி.) முன்னிடு வெடிப்பு :உள்வெப்பாலை எரி பொருளின் உரிய நேரத்திற்கு முற்பட்ட வெடிப்பு சூடான கார்ப்ன் படிவுகளாலோ, தவறான எரியூட்டத்தினாலோ இது நிகழலாம்

pressed prick : (க.க.) அழுத்தச் செறிவுச் செங்கல் : கட்டிடங்களில் வெளியே தெரியும் பரப்புகளுக்குப் பயன்படக்கூடிய நன்கு அழுத்தித் தயாரிக்கப்பட்ட உயர்தரச் செங்கல்

pressed steel : (உலோ.வே.) வடிவமைப்பு எஃகு : எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடிவமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும்

press room : (அச்சு.) அச்சடிப்பு அறை : அச்சடிக்கும் பணி நடைபெறும் அறை

pressing : (மின்.) அழுத்தத் தயாரிப்பு : இசைத் தட்டுகளை அழுத்த வார்ப்படம் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறை

pressure : (மின்.) மின்வலி இயலாற்றல் வேறுபாடு : மின்னியக்க விசை. இது பொதுவாக மின்னழுத்தம் எனக் கூறப்படும்

இயற்பியலில் ஒர் அலகு பரப்பளவில் விசையழுத்தம்

prssure airship : (வானூ.) அழுத்த விண்கலம் : முழுமையாக வோ பகுதியாகவோ உள்ளழுத்தம் மூலம் தனது வடிவத்தை பேணிக்கொள்ளும் விண்கலம்

pressure altitude ; (வானூ.) அழுத்த உயரம் : ஒரு தரநிலைப் படுத்திய வாயு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அழுத்த நிலைக்கு நேரிணையான உயரம்

ஒரு விண்கலத்தில் வாயுப் பைகள் முழுமையாக நிரம்பியிருக்கக் கூடிய உயரம்

pressure, atmospheric : ( குளி.பத.) வாயு மண்டல அழுத்தம் : பூமியின் மேற்பரப்பில் அதன் வாயுமண்டலம் காரணமாக ஏற்படும் அழுத்தம். இது 32°F வெப்ப நிலையில் பாதர்சத்தின் 29.921 அங்குலத்திற்கு 76செ.மீ. சமம்

pressure cable : அழுத்த வடம்

pressure, critical : (குளி.பத.) முட்டு அழுத்தம்: முட்டுபதனுக்கு நேரிணையான ஆவி அழுத்தம்

pressure, drop : (குளி.பத.) அழுத்த வீழ்ச்சி : உராய்வு காரணமாக ஒரு குழாயின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்லும் போது அழுத்தத்தில் இழப்பு ஏற்படுதல்

pressure, dynamic : (குளி.பத.) இயக்க அழுத்தம் : ஒரு நீர்ம அமைப்பில் ஒரு அளவீட்டு நிலையில் நிலையழுத்தம் வேக வீத அழுத்தம் இரண்டின் கூட்டுத்தொகை

pressure, gauge :(குளி.பத.) தரமதிப்பு அழுத்தம்: வாயுமண்டல அழுத்தத்திற்கு அதிகமான அழுத்தம்

pressure nozzle: (வானூ.)அழுத்தக் கூம்பலகு: காற்றில் விமானத்தின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவிடு கருவி

pressure reducing :அழுத்தக் குறைப்பு : விசை நோக்கங்களுக்காக மிக உயர்ந்த அழுத்தத்தில் கொதிகலன்கள் இயக்கப்படும் வெப்பமூட்டும் அமைப்புகளில் நீராவி அழுத்தத்தைக் குறைப்பதற்கான சாதனம்

pressure welding : அழுத்தப் பற்றவைப்பு : ஆழுத்தத்தின் மூலம் பற்றவைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை

pressurized capsule : (விண்.)அழுத்தக் கூண்டு: சுற்றியுள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிக அழுத்தமுள்ள வாயுவைத் தனக்குள் கொண்டுள்ள ஒரு கூண்டு

pressurized suit : (விண்.) அழுத்தமூட்டும் ஆடை : உடலின் சுவாசமும். இரத்த ஒட்டமும் இயல்பான முறையில் தொடர்ந்து நடைபெறும் வகையில் உடலின் மீது அழுத்தம் செலுத்தக் கூடியவாறு வடிவமைககபபட்ட ஆடை

pressure-rigid airship: (வானூ.) அழுத்த - கட்டிறுக்க வான்கலம் : கட்டிறுக்கமான வான்கலத்திலும் கட்டிறுக்கமற்ற வான்கலத்திலும் பயன்படும் தத்துவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் ஒரு வான்கலம். வடிவத்தையும் தோல் விறைப்பையும் பேணுவதற்கு இது உதவுகிறது

prick punch : (எந்.) ஊசித்துளை: ஒரு சிறிய மையத்துளை. இதனை

'அமைப்புத் துளை' என்றும் கூறுவர்

primary : (மின்.) குறைமின் சுற்று வழி: குறைந்த அழுத்த (6 ஒல்ட்ஸ்) மின் சுற்றுவழியைக் குறிக்கிறது primary amputation : (நோயி) முதனிலை உறுப்பு நீக்கம்: அழற்சி அல்லது வீக்கம் இடையூறாக நிகழ்வதற்கு முன் செய்யப்படும் உறுப்புத் துண்டிப்பு

primary paltery : (மின்.) அடிப்படை மின்கலத் தொகுதி : மின் விசை உண்டாக்கும் அடிப்படை மின்கல அடுக்கு

Primary cell : (மின்.) அடிப்படை மின்கலம் : வேதியியல் ஆற்றலை மின்னியல் ஆற்றலாக மாற்றக் கூடிய மின்கல அடுக்கு. இதில் ஒரு ஜாடியில் மின்பகுப்புக் கரைசலும் இரு மின் வாய்த் தகடுகளும் இருக்கும்

primary coil : (மின்.) அடிப்படைச் சுருள் : இந்தச் சுருளில் மூல ஆற்றல் செலுத்தப்பட்டு, விசையின் காந்தக்கோடுகள் உண்டாக் கப்படுகின்றன. அவை இன்னொரு சுருளுடன் இணைக்கப்படும்போது அதில் ஆற்றல் தூண்டப்படுகிறது

primary colours : அடிப்படை வண்ணங்கள் : கலவை மூலக் கூறாய் உதவும் சிவப்பு, பச்சை, ஊதா, மஞ்சள் ஆகிய தலையாய வண்ணங்கள்

primery planets : அடிப்படைக் கோள்கள் : கதிரவனை மையமாகக் கொண்டு சுழலும் நேர் கோள்கள்

primary-type glider ; (வானூ.) அடிப்படை வகைச்சறுக்கு விமானம்: சறுக்கு விமானிகள் அடிப்படைப் பயிற்சி பெறுவதற்காகத் திருத்தமின்றிச் செய்யப்பட்ட சறுக்கு விமானம்

primary winding : (மின்.) அடிப்படைச் சுருணை: மாற்று மின்னோட்ட ஆதாரத்திலிருந்து மின் விசை பெறுகிற ஒரு மின்மாற்றியின் சுருணை

primavera : (மர.வே.) சீமை நூக்கு : மத்திய அமெரிக்க மர வகை. மஞ்சள் நிறமுடையது; நாளடைவில் கருமை நிறம் பெறும் அலங்கார மேலடை மெல்லொட்டுப் பலகைகளுக்கும், சன்னல் கதவுகளுக்கும் அறைகலன்களுக்கும் பயன்படுகிறது

prime : (கணி.) (1) பகா எண் : கணிதத்தில் பகா நிவையான எண்

(2) தனி அணு : வேதியியலில் இயை நிலையில் அலகான தனி அனு

prime number : (கணி.) பகா எண்: பொதுக் காரணிகள் கொண்டிராமல் ஒருமை அளவுடைய எண்

priming paint : ( விண்.) முற்சாயம் : முற்சாயமாகச் சாயக்காரர்கள் பயன்படுத்தும் கலவை. இது மேற் பரப்பிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு முதல் சாயமாகப் பூசப்படுகிறது

prime vertical | prime vertical circle : (விண்.) வான் வட்டம் : தொடுவானத்தின் கிழக்கு-மேற்கு மையங்களைக் கடந்து உச்சத்தில் நடுநிரல் வான் கோட்டினை செங்குத்தாக வெட்டிச் செல்லும் வான் வட்டம்

priming ; வேலை நீர் ஏற்ற இறக்க மாறுவிதை : வியன்கால் வேலை ஏற்ற இறக்கத்திலிருந்து சமன் கால் வேலை ஏற்ற இறக்கத்துக்கு இடையே நிகழும் வேலை ஏற்ற இறக்க விசைவிரைவியக்கம்

preventive leads: (மின்.) தடுப்பு முனைகள் : மாற்று மின்னோட்ட மின்னோடித் தொகுதியில் திசை மாற்றுச் சுடர் பொறியைக் குறைப்பதற்குப் பயன்படும் தடுப்பு முனைகள்

principle of moments: (பொறி.) நெம்புதிறன் விதி : "ஒரு புள்ளி யைச் சுற்றிச் சுழலும் பல்வேறு தாக்கு விசைகளின் இயற்கணிதக் கூட்டுத் தொகையானது, அந்தப் புள்ளியில் அவற்றின் கூட்டுவிளை வாக்கத்திற்குச் சமம்' என்னும் விதி

printer's mark: (அச்சு.) அச்சக முத்திரை : அச்சக வாணிக இலச்சினை அல்லது அடையாள முத்திரை

printing : அச்சிடுதல் : தாள் முதலியவற்றில் எழுத்துகளையும் படங்களையும் அழுத்திப் பதிய வைத்தல்

printing press :அச்சு எந்திரம் : அச்சிடும் எந்திரம். அச்சகம், அச்சிடும் தொழிற்சாலையையும் இது குறிக்கும்

prism: (கணி.) பட்டகை: மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீள் உருளை உரு

prismatic colours : (வண்.) பட்டகை வண்ணங்கள்: கதிரவன் ஒளியில் அடங்கியுள்ள சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம். பச்சை முதலிய வண்ண நிறங்கள்

prismatic compass : காட்சிக் கருவி: காட்சியின்போதே திசைக் குறிப்புத் தரும் நில அளவைக் கருவி

prismatic powder : கூழாங்கற் பொடி : அறுகோணப் பிழம்புரு வான் வெடி மருந்துப் பொடி

prismoid: முரண்பட்டகை: முரண் இணைவகப் பக்கங்களையுடைய பட்டகை

process : (தானி.) செய்முறை : விரும்பிய பலனை அல்லது பொருளை உண்டாக்குவதற்கான தொடர் செயல்முறைகள்

process annealing : பதப்படுத்து முறை : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆற விடுவதன் மூலமோ கடும் பதப்படுத்தும் முறை

process or chemical metallurgy : செய்முறை அல்லது வேதியியல் உலோகக் கலை : உலோகங்களை உருகவைத்து சுத்திகரிக்கும் முறை

process industries : (தானி.) செய்முறைத் தொழில்: தொடர்ச்சியான செயல் முறைகளைக் கையாளுகின்ற பெட்ரோலியம் மற்றும் வேதியியல் தொழிலைக் குறிக்கும் பொதுவான பெயர்

product ;(பொறி.) உற்பத்திப் பொருள் : தொழில்துறையின் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு

production: உற்பத்தி: (1) உற்பத்தி செய்யும் செயல்முறை (2) உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பொருள் (3) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு

production basis : சிக்கன உற்பத்தி : மிகவும் சிக்கனமான உத்திகளைக் கையாண்டு உறுப்புகளை உற்பத்தி செய்யும் முறை

production engineer : (பொறி.) உற்புத்திப் பொறியாளர்: உற்பத்திப் பிரிவினைப் பராமரித்து வருவதற்குப் பொறுப்பாகவுள்ள பொறியாளர். மிகத் திறம்பட்ட உற்பத்தி முறைகளைக் கையாளும் வகையில் கருவிகளை இயக்குவதற்கும் கருவிகளை வடிவ்மைப்பதற்கும் இவர் பொறுப்பாக இருப்பார்

productivity : உற்பத்தித் திறன் : ஆள்பலம், மூலப்பொருள்கள் எந் திரங்கள் போன்ற பொருளாதார ஆதாரப் பொருள்களையும், ஊழியங்களையும் மிகத் திறமையோடு பயன்படுத்தும் திறன்

profile : உருவரைப் படிவம் ; பக்க வாட்டான உருவப் படிவம் அல்லது உருவரை

profileometer : தளப்பரப்பு அளவு மானி: ஒரு தளப்பரப்பின் வழவழப்பினை அல்லது சொரசொரப்பினை அளவிடுவதற்குப் பயன்படும் மிகத் துல்லியமானதொரு கருவி. இதில் வைரமுனையுடைய வரைப்ப்டக்கரம் தளப்பரப்பில் நகரும்போது, அந்தக் கரம் ஒரு மின்னியல் களத்தில் ஒரு சுருளை நகர்த்துவதன் மூலம், தளப்பரப் பின் சொரசொரப்புக்கேற்ப ஒரு மின்னோட்டத்தைக் குறியீட்டு சுட்டிக்காட்டுகிறது

profiling machine : (எந்.) உருவரை வெட்டு எந்திரம் : உருவரை படிவத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை எந்திரம். இது சிலவகை வேலைப் பாடுகளுக்கு மிகவும் பயனுள்ள எந்திரம்

programme:(விண்.)செயல்முறை: பறக்கும்போது அல்லது பிற நடவடிக்கைகளின்போது தொடர் நிகழ்வுகளுக்கு வகை செய்வதற்கு ஒரு மின்னணுவியல் தொடர் நிகழ்வுப் பதிவு கருவியில் இயக்கங்களின் வரிசை முறையை அமைத்தல்

programme log: ( மின்.) நிகழ்ச்சி அட்டவணை : ஒரு வானொலி நிலையத்தில், நிகழ்ச்சிகள், அவற்றின் விளம்பரதார்ர்கள்,நிகழ்ச்சித் தன்மை ஆகியவற்றைக் காட்டும் வகையில் பேணப்பட்டுவரும் ஒரு பதிவேடு

programmers : (தானி.) செயல்முறை அமைப்பாளர்கள் : கணிப்பொறிகளுக்குச் செயல்முறை களைத் தயாரிக்கும் அலுவலர்கள்

programmers : (தானி.) செயல்முறை அமைப்பு : தானியங்கிக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான செயல்களை படிப்படியாக ஒர் எந்திரத்திற்கு அளித்திடும் அறிவுறுத்துங்கள்

progression : (கணி.) படிமுறை வரிசை:கணிதத்தில், கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக எண்களின் தொடர் வரிசை அதிகமாகிற அல்லது குறைகிற வரிசை முறை. நிலை எண்ணால் பெருக்கி வகுத்துக் கொண்டு வரும் படிமுறைப் பாங்கு

progression, arithmetical : (கணி.) அளவு வளர்ச்சி : கணிதத்தில் கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக ஒரு எண் வரிசை கூடிக் குறைந்துவரும் பாங்கு

progression, geometrical : பெருக்க வளர்ச்சி : நிலையெண்னால் பெருக்கி வகுத்துக் கொண்டு போகும்போது பெருக்க ஏற்ற இறக்கத் தொடர்புப் பாங்கு

progression, hormonic : இசை இயைபுப் படிமுறை வளர்ச்சி: கீழ் வாய்ப் படிமுறை வரிசையின் கணக்கியல் மேல்வாய் மானப்பாங்கு

projection : எறிவுப்படம்: தளத்திலிருந்து தளத்தின்மீது படிவிக்கப்படும் எறிவுப்படம்

projection receiver : எறிவுப்பட வாங்கி : தொலைக்காட்சியில் ஒளியியல் எறிவுப்படத் தத்துவத்தை உள்ளடக்கிய படம் வாங்கிப் பெட்டி

projection welding : எறிவுப் பற்றவைப்பு: இரு தளப்பரப்பு களுக்கிடையே வெப்பத்தை ஒரு வரம்புக்குள் ஒருமுகப்படுத்தி எறிவு மூலம் பற்றவைப்பு செய்யும் முறை

projector : ஒளி எறிவுக் கருவி : ஒளி எறிவுக்கருவி அமைவு

திரைப்பட ஒளியுருப்படிக் கருவி

prony brake : (மின்.) தலைகீழ் தடை : ஒரு தனிவகைக் கம்பித் தொகுதி, தடை இணைப்பு, ஒரு தராசு ஆகியவை கொண்ட ஒரு எந்திர சாதனம். இது ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாரம் ஏற்றியிருக்கும்போது இது உண்டாக்கும் குதிரைத் திறனை இது அளவிட்டுக் காட்டுகிறது

proof: (அச்சு.) மெய்ப்பு: அச்சுப்படி: பிழைதிருத்தம் செய்வதற்கான அச்சுப்படி அல்லது மெய்ப்புப் படி

proof plane : (மின்.) மின்னூட்ட அளவி : காப்புறையிட்ட கைப்பிடியின்மேல் மின்கடத்திப் பொருளின் மின்னூட்ட அளவு கருவி

proof press : (அச்சு.) பார்வைப் படி அச்சு எந்திரம் : அச்சுப்படிவங்களை ஒர் இரும்புச் சட்டத்தில் வைத்து பூட்டாமல், பார்வைப் படிகள் எடுப்பதற்க்கு உதவும் அச்சு எந்திரம்

proof-reader : ((அச்சு.) பிழை திருத்துபவர்: அச்சுப் பார்வைப்படி மெய்ப்புத் திருத்துபவர்

propellant:(விண்.) முற்செலுத்தம்: விமானத்தை முன்னோக்கி உந்திச் செலுத்துதல்

propeller ; முற்செலுத்தி : கப்பல்களை முற்செலுத்த உதவும் இயக்குறுப்பு. விமானத்தின் நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய சுழல் விசிறி

propeller-blade angel: (வானூ.) முற்செலுத்து அலகு கோணம்: ஒரு சுழல் விசிறியின நாண்வரைக்கும் சூழல் விசிறிச் சுழற்சி அச்சுக்கும் செங்குத்தாகவுள்ள ஒரு தளப் பரபபுக்கும்டையிலான கூர்ங்கோணம். இதனை "அலகு கோணம்' என்றும் கூறுவர்

propeller efficiency: (வானூ.) முற்செலுத்தித் திறம்பாடு : உந்து ஆற்றலுக்கும் முற்செலுத்தியின் உட்பாட்டு ஆற்றலுக்குமிடையிலான விகிதம்

propeller hub : (வானூ.) முற்செலுத்திக் குடம் : விமானச் சூழல் விசிறியின் மையப்பகுதி; இது இடைத்தொலைவு அளவினைமாற்றும் எந்திர அமைப்பு உடையது. இதனுடன் அலகுகளும் இணைக்கப்ப்ட்டிருக்கும்

propeller rake : (வானூ.) முற்செலுத்திச் சாய்வுகோணம் : விமானத்தில் ஒரு சுழல் விசிறி அலகின் மையப்பகுதியை அச்சுக்குச் செங்குத்தான தளப்பரப்புடன் இணைக்கும் கோட்டின் சராசரிக் கோணம்

propeller root : (வானூ.) முற்செலுத்திக் கொளுவி : புடைப்புப் பகுதியின் அருகிலுள்ள முற்செலுத்தி அலகின் பகுதி

propeller shaft : (தானி.) முற்செலுத்திச் சுழல் தண்டு; இதனை 'இயக்குச் சுழல் தண்டு' என்றும் கூறுவர். உந்துவிசையை பின்புற இருசுக்கு அனுப்பிவைப்பது இதுதான்

propeller thrust : (வானூ.) முற்செலுத்தி உந்துவிசை : விமானத்தின்முற்செலுத்தியின்முன்னோக்கி உந்தித்தள்ளும் திறன்

propeller tipping : (வானூ.) முற்செலுத்திச் சரிவுக் காப்பு : முற் செலுத்தி அலகின் நுனியிலுள்ள சாய்ந்து விழுவதைத் தடுக்கம் பாதுகாப்பு அமைவு

propeller turbine :(வானூ.) முற்செலுத்து உருளை: நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம்

proportional dividers :

அளவுக் கவராயம் : வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இருமுனைகளுடைய கால்கள் ஒரு சுழல் முனை யுடனும் திருகுடனும் இணைக்கப் பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு சுவராயத்தை வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து அளவிடலாம்

proportional limit : (உலோ.) வீத அளவு வரம்பு : உலோகங்களில் நீட்சியடைவது அல்லது பாரத்தின் வீத அளவில் இருப்பது அற்றுப் போகும் நிலை

proportionately: வீத அளவு  : வடிவளவு, பெறுமானம், முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு உரிய சரி சமவீத அளவில் இருத்தல்

propulsion system : (விண்.) உந்து விசை அமைப்பு : ஒர் ஏவு கணையை அல்லது பிற விண்வெளி ஊர்தியை தரையிலிருந்து மேல் நோக்கி உந்தி எறிகிற உந்துவிசை அமைப்பு

propulsive efficiency: ( வானூ.) உந்தெறிவுத் திறன் : விமானத்தில் உண்மையான உந்து திறனுக்கும் முற்செலுத்தத்திற்குமிடையிலான விகிதம்

proscenium : அரங்கு முகப்பு : நாடக அரங்கின் முன்பகுதி. திரைக்கு முன்புள்ள மேடைக்கு மேலுள்ள கவான்பகுதியையும் இது உள்ளடக்கும்

prostate gland : ( உட.) ஆண்பால் சுரப்பி : பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித்திரள்களாலான பெருஞ்சுரப்பி

protein : புரதம் : ஒவ்வொரு உயிருள்ள உயிரணுவில் அடங்கியுள்ள வெடியமும் பிற இன்றியமையாத உயிர்ச்சத்துக்களும் உள்ளடங்கிய உயிர்ப் பொருள். இது, பல அமினோ அமிலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சிக்கலான பொருள். புரதங்களில் சுமார் 50% ஆக்சிஜன்; 25% நைட்ரஜன், 15% ஹைட்ரஜன், பாஸ்பரம், கந்தகம் அடங்கியுள்ளன

proton : (வேதி.) புரோட்டான் : அணுவின் கருவினில் உள்ள நேர்மின்மம்

proto-planet: கோளப்பாகு: இது ஒரு பாகுபோன்ற பொருள். இந்தப் பாகுப் பொருளிலிருந்துதான் கோளங்கள் உருவாகியதாகத் தற்போதுள்ள கோட்பாடுகள் கூறுகின்றன

protophyte :(தாவர.) ஓரணுத்தாவரம் : ஒரே அணுவுடைய உயிர்த்தாவரம்

protoplasm : ஊண்மம் : ஒளி ஊடுருவக்கூடிய அரை நீர்ம இயலான ஆக்சிஜன், கார்பன், ஹைட் ரஜன் அடங்கிய உயிர்ச்சத்துப் பொருள்

proto-therial : முன்னோடிப் பாலுண்ணி : பால்குடி இனத்தின் மிகத் தாழ்ந்த உட்பிரிவைச் சேர்ந்த முன்னோடி உயிரினம்

prototype : (விண்.) மூல முன் மாதிரி : வடிவம், வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றை முழு மையாக மதிப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு முன்னோடி மாதிரி

protozoa : (உயி) ஓரணுவுயிர் : மிக நுண்ணிய ஓரணுவுயிர்ப் பிரிவைச் சார்ந்த உயிர்கள், அமீபா, பாரமோசியம், மலேரியா ஒட்டுண்ணி போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை

protractor : கோணமானி : கோணங்களை அளவிடுவதற்கும், காகிதத்தில் கோணங்களை வரைவதற்கும் பயன்படும் ஒரு கருவி. இது படம் வரைவதில் பயன்படுகிறது

proximity effect : (மின்.) அணிமை விளைவு: அருகிலுள்ள ஒரு மின்கடத்தியில் ஒரு மாற்று மின்னோட்டத்தின் நடவடிக்கை காரணமாக ஒரு மின்கடத்தியில் மின்னோட்டப் பகிர்மானத்தில் ஏற்படும் மாறுதல்

proximity of blood : அணிமை உறவு : மிக நெருங்கிய உறவு முறை

prussian blue :(வேதி) அடர் நீலம்  :
. அய உப்பில் பொட்டாசியம் அய சயனைடு வினைபுரிவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. அடர்ந்த நீல வண்ண வீழ்படிவாகக் கிடைக்கிறது. சாய்ப் பொருளாகவும், காகிதத்திற்கு வண்ண மூட்டவும் பயன்படுகிறது

psychrometer : ஈர உணக்க வெப்பமானி: ஈரக்குமிழுடன், ஈரம் நீக்கிய குமிழும் உடைய ஒருவகை வெப்பமானி. ஆவியாகும் வேகத்தை அளவிடுவதற்கு உதவுகிறது

puddle: (பொறி.) கலக்குதல் : (1) தேனிரும்பாக்குவதற்கு உருகிய இரும்பைக் கலக்குதல்

(2) களிமண்ணையும் மணலையும் நீரோடு கலந்து பிசைந்து குழை சேறாக்குதல்

pugging : (க.க.) ஒலித்தடுப்பான்: ஒலி ஊடுருவாகாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண், வாள்துள், சாந்து முதலியவற்றின் கலவை

puller : (தானி.) இழுவைக் கருவி: இறுகப் பொருந்திய பாகங்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் எந்திர அல்லது நீரியல் சாதனம். எடுத்துக்காட்டு: சக்கர இழுவை: பல்லிணை இழுவை

pulley (எந்: பொறி.) கப்பி :பாரங்களை இழுப்பதற்குப் பயன்படும் உருளை அல்லது கப்பித்தொகுதி

pulley lathe: (எந்.) கப்பிக்கடைசல் எந்திரம்: நேரான அல்லது முனையுள்ள முகப்பினைக் கப்பிகள் மீது திருப்புவதற்குப் பயன்படும் ஒருவகைக் கடைசல் எந்திரம்

pulley stile : (க.க) கப்பிக் கட வேணி ; கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒருபுறம் ஏற்று மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம்

pulley tap : (எந்) கப்பி நாடா: மிக நீண்ட எந்திரத்தண்டு உடைய ஒரு நாடா. இது கப்பிகளின் குடத்தில் திருகிழைத் துளைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுகிறது

pull out :(வானூ.) விளிம்பொட்டு இதழி : ஒத்துப் பார்வையிடுவது எளிதாக்கும் பொருட்டுச் சுவடித் தாள்களின் முகப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம்

pulp : காகிதக்கூழ்: காகிதம் செய்வதற்கு மரத்துண்டுகள், கந்தைகள் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு கலவைக் கூழ் pulp board ;(தாள்) கூழ் அட்டை : காகித மரக்கூழ் கலவையிலான கரடுமுரடான அட்டை

pulping :(தாள்.) கூழாக்குதல் : மரம், கந்தைத் துணிகள் போன்ற மூலப் பொருட்களைக் காகிதம் செய்வதற்கான கூழாகச் செய்யும் முறை

pulpit : (க.க.) உரை மேடை: திருக்கோயில் சமய உரை மேடை

pulsating current : (மின்) துடிப்பு மின்னோட் டம் : மின்னோட்ட அளவு ஒரே அளவாக இல்லாமல் ஒரே திசையில் மின்னோட்டம் பாயக்கூடிய நேர்மின்னோட்டம்

pulsation welding (பற்.) துடிப்பு பற்ற வைப்பு: அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறை பற்றவுைப்பு செய்யும் முறை

pulse-jet engine : (வானூ.) துடிப்புத் தாரை எஞ்சின் : ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின். இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடைபெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை' என்றும் கூறுவர்

pulsometer : (பொறி) வளிதீர் குழல் : நீராவியைக் கவான் குழாய் வழி கொண்டு செல்வதற்கான வளிதீர் குழாய். இது பெரும்பாலும் நீருக்கடியில் கடைக்கால் போட உதவும் நீர் புகாக்கூண்டு அமைவிலிருந்து நீராவியைக் காலி செய்வதற்குப் பயன்படுகிறது

pumice : மாக்கல் : மெருகேற்றுவதற்குப் பயன்படும் மாக்கல் வகை. இதனைப் பொடியாக்கிப் பயன்படுத்துவர்

pump: (எந்.)இறைப்பான் : திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய்

punch : (எந்.) தமரூசி: தோல், உலோகம், தாள் முதலியவற்றில் துளையிடுவதற்கு எஃகினால் செய்த ஒரு கருவி

punch card ; (தானி.) துளை அட்டை : ஒரு குமூஉக்குறித் தகவல் முறையில தகவல்களைத் துளையிட்டுப் பதிவு செய்வதற்கான அட்டை

punched : (தானி.) துளையிட்ட நாடா : துளையிடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாடா

punching : துளையிடுதல் : தாள் ,தோல், உலோகம் முதலியவற்நில் தமரூசியால் துளையிடுதல்

punch press : வார்ப்பழுத்துப் பொறி : வார்ப்புத் தாய்ப்படிவ அழுத்தும் பொறி

punctuation : (அச்சு.) நிறுத்தக் குறியீடு : வாக்கியங்களைச் சொற்றொடர்களாகப் பகுத்துக்காட்டுவதற்குப் பயன்படும் நிறுத்தக் குறியீடுகள்

purlin : (க.க.) உத்தர கெடுவிட்டம் : தாங்கணைவுகளுக்கிடையாகவும் கூரை உத்தரங்களுக்கு ஆதாரமாகவும் அமைக்கப்படும் தாக்கமைவுக் கட்டுமானம்

push button: (மின்.) மின் விசைக் குமிழ் : ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக்கொண்டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம்

push-button starter : (தானி.) அழுத்து பொத்தான் இயக்கி : உந்து ஊர்தியை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் இயக்கத் தொடங்குவதற்குப் பயன்படும் சாதனம். இது காலால் இயக்கும் விசைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது

push-button switch : (மின்.) அழுத்தப் பொத்தான் விசை: மின்னியல் இணைப்புகளை ஒரு பொத்தானை அழுத்தி தொடர்பேற்படுத்தவும் இன்னொரு பொத்தானை அழுத்தி இயக்கவும் பயன்படும் விசை

pusher airplane : (வானூ.) உந்து விசை விமானம் : முதன்மை ஆதார மேற்பரப்புகளுக்குப் பின்னால் முற்செலுத்தியை அல்லது முற்செலுத்திகளை உடைய ஒரு வகை விமானம்

pusher propeller : (வானூ.) உந்து விசை முற்செலுத்தி : விமானத்தில் எஞ்சினின் பிற்பகுதியில் அல்லது முற்செலுத்தி சுழல் தண்டின் பின் நுனியில் பொருத்தப்பட்டுள்ள முற்செலுத்தி அல்லது சுழல் விசிறி

putlog : (க.க, ) சாரக்கட்டை ; சாரப்பலகைகளைத் தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு

putty : (வேதி; க.க.) மெருகு சுண்ணத்தாள் : கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தாள் வகை

puzzolan or slag cement : எரிமலைச் சாம்பற்காரை : எரிமலைச் சாம்பல் அல்லது கொல்லுலைச் சாம்பற்கட்டி மூலம் தயாரிக்கப்படும் சீமைக்காரை அல்லது சிமென்ட். இது சீமைச் சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் சீமைக்காரைபோல் அத்துணை வலுவுடையதன்று. இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமில்லை

pylorus: (உட.) சிறுகுடல் வாய்: இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையின் சிறு குடல் திறப்புவாய்

pyramid : (கணி.) கூம்பு வடிவம்: ஒரு சமதள பல கோண முக்கோணத்தை ஆதாரமாகவும் பொதுவான முகட்டு முனையும் உடைய கூர்ங் கோபுர வடிவம்

pyridine : (வேதி.) பைரிடின் : காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப் பொருள். இது மஞ்சள் நிறமுடையது. இதனை ஆல்கஹாலின் இயல்பு நீக்கியாகவும் பயன்படுத்துகின்றனர்

pyrite : (வேதி) பைரைட் :' அயச்சல்பைடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் பித்தளை போன்ற மஞ்சள் நிறப்பொருள். இதனை 'முட்டாளின் தங்கம்' என்றும் கூறுவர்

pyrographing : செதுக்கு வேலை: சூடாக்கப்பட்ட கருவியினால் தோல் அல்லது மரத்தின் மீது தீட்டப்பட்ட செதுக்கு வேலை

pyrogravure: செதுக்கு வேலைப்பாடு: சூடாக்கப்பட்ட இரும்புக் கருவியால் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு

pyrolusite : (உலோ.) பைரோலூசைட் : முக்கிய மாங்கனீஸ் தாதுப் பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனிஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள் வண்ண உலர்த்திகள் ஆயகிவற்றில் பயன்படுகிறது

pyrometer : உயர் வெப்பமானி : உயர்ந்த வெப்பங்களைத் தொலைவிலிருந்து அளப்பதற்கான கருவி. இரண்டு உலோகங்கள் இணையும் இடத்தில் மின்னோட்டம் ஏற்படுகிறது என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது

pyroxylin : (வேதி.) பைரோக்சிலின் : வண்ணநெய், செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப் படச் சுருள்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது
Q


Q : (மின்.) கியூ : தரம்; தர அளவு காந்தப் புலத்தின்போது ஒரு தூண்டு கருவியில் சேமித்து வைக்கப்படும் ஆற்றலுக்கும் அதே நேரத்தில் ஏற்படும் இழப்பீட்டுக் கிடையிலான விகிதம்

q demodulator : (மின்.) கியூ எதிர் அலைமாற்றி : வண்ணத் தொலைக்காட்சியில், சதுரச் சரியீட்டளவு வண்ண ஒளிர்வு ஊடகங்களை மீண்டும் 'கியூ' துணை ஊடகங்களாக மாற்றுகிற எதிர் அலை மாற்றி மின் சுற்றுவழி

q factor : (மின்.) கியூ காரணி : ஒரு மின் சுற்றுவழியின் போது தூண்டப்பட்ட மின்னழுத்தத்தின் மதிப்பளவினை அதிகரிப்பதற்கான மின் சுற்று வழியின் திறனை இது குறிக்கிறது

q-signal : (தொ.கா.) கியூ சைகை: வண்ணத் தொலைக்காட்சியில் பச்சை அல்லது கருஞ்சிவப்பு வண்ணத் தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகை

quad : (அச்சு.) இட அடைப்பு எழுத்துரு : அச்சுத் துறையில் இடி அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயர்த்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும்.இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகளில் முடிவில் வரிகளிடையே இடைவெளியை அகலமாக்குவதற்கும், ஓர இடம் விடுவதற்கும் இது பயன்படுகிறது

quadrangle : (க.க.) நாற்கட்டரங்கம் : கல்லூரி விளையாட்டுத்திடல்போன்று நாற்புறமும் கட்டங்கள் சூழ்ந்த சதுரமான அல்லது நாற்கட்டமான இடப்பரப்பு

நாற்கட்டு அரங்கம்

quadrant : (1) கால் வட்டம் : செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்கால் சுற்று வரை

(2) கோண மானி : உயரங்களை அளவிடப் பயன்படும் கருவி

quadratic equations : (கணி.) இருவிசைப்படிச் சமன்பாடு : அறியப்படாத ஓர் அளவின் இருமடி வர்க்கத்தை மட்டும் கொண்டுள்ள ஒரு சமன்பாடு, உருக்கணக்கியலில் இரு விசைப் படிமை சார்ந்துள்ள சமன்பாடு

quadrilateral : நாற்கரம் : நான்கு பக்கங்களையும் நான்கு கோணங்களையும் உடைய வரை வடிவம்

quadruplane : (வானூ.) நாற்சிறகு விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு தொகுதி சிறகுகளையுடைய ஒரு வகை விமானம்

quadruple-expansion engine : நான்மடி விரிவாக்க எஞ்சின் : நீராவி நான்கு மடங்காக விரிவாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக்கூட்டு எஞ்சின். முதலில் ஓர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத்தில் நீராவி அழுத்தம் குறைந்தது ,91கிலோ அளவுக்கு இருக்க வேண்டும்

quantitative analysis : (வேதி.) பண்பியல் பகுப்பாய்வு : வேதியியல் பொருளில் என்னென்ன தனிமங்கள் அல்லது கூறுகள் எந்த அளவுகளில் அடங்கியுள்ளன என்பதை அறிவதற்கான பகுப்பாய்வு

quantity : தரநிலை : (1) பண் புத்தரம். (2) தனி இயல்பு அல்லது குணம்

quanta : (மின்.) உகைப்பளவு : ஓர் எலெக்ட்ரானை அதிக அளவு ஆற்றலுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல்

quantitative analysis : (வேதி.) அளவைப் பகுப்பாய்வு : ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு

quantity : அளவு : கூடவோ குறையவோ கூடிய பொருண்மை, கன அளவு எண்ணிக்கை போன்ற இயல்பின் அளவீடு

quantum : (தானி.) எண் அலகு : ஓர் அளவீட்டு முறையில் மிகச் சிறிய அலகினைக் குறிக்கும் எண் மதிப்பளவு

quantum : (மின் ) இயற்பியல் அலகு : இயங்கு விசை, ஆற்றல், பொருண்மை முதலிய இயற்பியல் பண்புகளின் மிகச்சிறிய மதிப்பளவு

quantum theory : (இயற்.) கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடு : ஒரு சூடான பொருளிலிருந்து அல்லது விளக்கிலிருந்து ஒரு சீரான அளவில் பாயாமல், எண் அலகு எனப்படும் ஆற்றல் துளிகளாகக் கதிரியக்கமாக வெளிப்படும் ஆற்றலின் அளவு, இந்த அளவுகள், கதிரியக்கத்தின் அலை வெண்களுக்கேற்ப, பல்வேறு அளவுகளில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு வெப்பு ஒளியின் எண் அலகு, ஓர் ஊதா ஒளியின் எண் அலகைவிடக் குறைவாக இருக்கும்

quarantine : (நோயி.) தொற்றுத்தடைக் காப்பு : பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக்காப்புக்காக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தொற்றுத் தடைக்காப்பில் வைத்தல்

quarry : (1) கற் சுரங்கம் : உடைத்தல், வெடித்தல் மூலம் கற்கள் எடுக்கப்படும் தொடுகுழி. 2) சன்னல் கண்ணாடி : நூல்களை வைப்பதற்கான சன்னல் முகப்புகளையுடைய 18ஆம் நூற்றாண்டு நூல் பேழை

quarry-faced masonry : ( s.s. ) பாவுகல் முகப்புக் கட்டுமானம் : கற் சுரங்கத்திலிருந்து எடுத்து. மெருகேற்றப்படாமல் அப்படியே பதித்த கல் முகப்புடைய கட்டுமானம்

quarry tile : (க.க.) உலா மேடை ஓடு : எந்திரத்தினால் செய்யப்பட்ட மெருசிடப்படாத ஓடு. இது 3/4 அல்லது அதற்கு மேற்கனமுடையதாக இருக்கும்

quart : முகத்தலளவை அலகு : கால் காலன் அல்லது இரண்டு பைண்டு அளவு. கால்காலன் அளவு கலம்

quartam mafaria : (நோயி.) நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்காம் நாள்தோறும் விட்டு விட்டு வரும் மலேரியாக் காய்ச்சல் வகை quarter : கால் பங்கு : ஒரு பொருளின் நான்கு சமமான பகுதிகளில் ஒன்று. கவராயத்தின் நான்கு முக்கிய முனைகளில் ஒன்று quartile : கோள் இடைத்தொடர்பு : ஒன்றுக்கொன்று 90° இடைத் தொலைவுடைய இரு கோளங்களிடையிலான இடைத்தொடர்பு

quarto : (அச்சு.) நான்கு மடித்தாள் : நான்கு தாள்களும், எட்டுப் பக்கங்களும் அமையும் வகையில் இரு தடவை மடித்தாளின் அளவு. நான்மடித்தாள் அளவுள்ள ஏடு

quartz : படிகக்கல் : கன்ம ஆக்சிஜனுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்

quartzite : (மண்.) படிகக்கல் தாது : உருத்திரிபடைந்த மணற்பாறை. பெரும்பாலும் படிகக்கல் கொண் அடர்த்தியான குருணை வடிவக்கல்

quaternary Steel : (உலோ.) நாற் தனிம எஃகு : இரும்பு, கார்பன், மற்றும் இரு சிறப்புத் தனிமங்கள் அடங்கிய ஒரு வகை எஃகு உலோகக் கலவை

quaternion : நான்கன் தொகுதி : ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்களின் தொகுதி

quatrefoil : (க.க.) நாற்கதுப் பணி : நான்கு இலை மலர் வடிவத்தில் செய்யப்படும் அணி வேலைப்பாடு

queen closer : (க.க.) அரைச் செங்கல் : (க.க.) செங்கல்லை நீளவாக்கில் இரண்டாக வெட்டிச் செய்த செம்பாதிச் செங்கல்

queen truss : (க.க.) அரசித் தாங்கணைவு : செங்குத்தான இரு கட்டுக் கம்பங்களுடன் கட்டமைப்பு செய்த ஒரு தாங்கணைவு. ஒரே யொரு கட்டுக்கம்பம் உடைய அரசுத் தாங்கணைவிலிருந்து இரு வேறுபட்டது

quenching : (எந்.) குளிர்விப்பு : எஃகைப் போதிய அளவு கெட்டிப்படுத்துவதற்காகச் சூடான எஃகை நீர், எண்ணெய் அல்லது வேறு திரவங்களில் நனைத்துக் குளிர்வித்தல்

quenching oils : குளிர்விப்பு எண்ணெய் : சூடாக்கிக் குளிர்வித்துக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள். மீன் எண்ணெய் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.கனிம மீன், தாவர, விலங்கு எண்ணெய்கள் கலவை செய்யப்பட்டு வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன

quick change : (எந்.) துரித மாற்றம் : கடைசல் எந்திரங்களில் பல்லிணைகளை அகற்றி மாற்றுவதற்குப் பதிலாக நெம்பு கோள்களை இடம் பெயரச் செய்வதன் மூலம் ஊட்டத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் பல்லிணைகளை அமைத்தல்

quick-charge : (மின்.) வேக மின்னேற்றம் : மின்னேற்ற வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சேமக் கலத்திற்கு மறு மின்னூட்டம் செய்தல்

quicklime : (க.க.) நீற்றாத சுண்ணாம்பு : தூய்மையான சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட நீற்றாத சுண்ணாம்பு

quicksand : உதிர்மணல் : ஒரு கனமான பொருளின் அளவுக்கு நீருடன் கலந்த உதிரிமணல்

quicksilver : (உலோ.) பாதரசம் : பாதரசம் என்ற திரவ உலோகம். முகம் பார்க்கும் கண்ணாடிகளின் பின்புறம் பூசப்படும் வெள்ளீயரசக்கலவை

quill : (எந்.) புழைத்தண்டு : உட்புழையுள்ள சுழல்தண்டு கதிர் quill gear : (எந்.). புழைப் பல்லிணை : ஒரு புழைத்தண்டில் அல் லது குழலில் வெட்டப்பட்ட ஒரு பல்லிணை அல்லது துளை நுனி

quire : இருபது நான்கு மடிதாள் : இருபத்து நான்கு கொண்ட எழுது தாள்மடி. ஒரு தடவை மடித்து 8 ஆக்கப்பட்ட தாள் நான்கு தாள் தொகுதி

guire fold : மடிதாள் : ஒரு தடவை மடித்து 8 ஆக்கப்பட்ட நான்கு தொகுதி

quirk : கூரகக் குடைவு : புற வளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக்குடைவு

quotidian malaria : (நோயி.) காள்முறைக் காய்ச்சல் : நாள்தோறும் விடாது வரும் மலேரியாக் காய்ச்சல் வகை

quoin key : (அச்சு.) அச்சுருப்பற்றாப்பு முடுக்கி : அச்சுருப் படிவத்தில் உள்மூலையை முடுக்குவதற்குப் பயன்படும் 'T' வடிவ முடுக்கி

quoins : (க.க.) மூலைக்கற்கள் : கட்டிடங்களின் உள் மூலைகளில் பொருத்தப்படும் மூலைக்கற்கள்
R


rabbet: (மர.வே.) மூலைப் பொருத்துவாய்: இசைப்பு வாய் மூலம் இணைப்பதற்கு விளிம்பில் செய்யப்படும் இசைப்பு வாய் வெட்டு

rabbet joint: (மர.வே.) மூலை இணைப்பு: மூலைப் பொருத்து வாய் மூலம் இணைத்தல்

rabbet plane: (மர.வே.) மூலைப் பொருத்துவாய் இழைப்புளி: மூலைப் பொருத்துவாய் இழைப்ப தற்கான ஓர் இழைப்புளி

race: (விண்.) வான்கோளப் போக்கு: வான்கோளங்கள் இயங்கு பாதை

race rotation: (வானூ.) இயங்கு சுழற்சி: விமானத்தில் முற்செலுத்தி மூலமாக அல்லது அதன் விளைவாகச் செல்லும் காற்றோட்டத்தின் மீது முற்செலுத்தியின் இயக்கத்தினால் உண்டாகும் சுழற்சி

raceway: (மின்.) புழைவழி: காப்புக்குழாய், வார்ப்படக்குழாய் போன்ற உட்புழையுடைய பொருட்களைக் குறிக்கும் சொல். இவை பெரும்பாலும் மறைவாக இருக்கும். இவற்றின் வழியாக மின்கம்பிகள் ஒரு வெளிச் செல் வழியிலிருந்து இன்னொரு வழிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன

rack and pinion: (அ.க) பற்கம்பிச் சூழல் சட்டம்: பற்கள் பொளிந்துள்ள சட்டம் மூலம் சுழலியக்க, நேர் இயக்க மாறுபாடு செய்யும் அமைவு

rack: அழிச்சட்டம்: (1) பொருள்களை வைப்பதற்கான கொள்கலச் சட்டம். (2) பற்கள் பொளிந்த கம்பி அல்லது சட்டம். (3) அச்செழுத்து அடுக்குப் பலகைகளை வைப்பதற்குப் பயன்படும் உலோகத்தாலான அல்லது மரத்தினாலான சட்டம்

radar: ராடார் (தொலை நிலை) இயக்கம்: ஆற்றல் வாய்ந்த மின் காந்த அலை அதிர்வியக்க மூலம் தன்னிலையும், விமானங்கள். கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு

radar mile: (மின்.) ரேடார் மைல்: ரேடார் துடிப்பு, ஒரு மைல் துாரமுள்ள இலக்கிற்குச் சென்று திரும்புவதற்குப் பயணம் செய்யும் தொலைவு. ரேடார் துடிப்பானது ஒரு மைல் தூரம் சென்று வர 10.75x 10-8 வினாடி நேரம் தேவை

radial: மையவிலக்கு: மையத்திலிருந்து அல்லது இருசிலிருந்து புற நோக்கி விலகிச் செல்கிற அமைவு

radial arm: (எந்.) ஆரைக்கரம்: இயங்கும் பிடிமானம் இது ஆரை. துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது

radial axle: (எந்.) ஆரை இருசு: பாதை, வளைவுக்குத் தக்கபடி அமைந்த இருசு

radial bar: ஆரைச் சலாகை: இது ஒரு மரச்சலாகை இதன் நுனியில் ஒரு பென்சில் இணைக்கப்பட்டிக்கும். இதனைக் கொண்டு பெரிய வளைவுகளை வரையலாம் radial bearings : (தானி.) ஆரத்தாங்கி : நீள் உருளைகளுடன் அல்லது பீப்பாய் வடிவ உருளைகளுடன் கூடிய தாங்கி

radial drill: (உலோ.) ஆரத்துரப்பணம்: ஒரு தூணின் ஆதாரத்தின் மீது ஆரம் போன்ற கரத்தில் ஏற்றப்பட்ட ஒரு துரப்பணம்

radiol drilling machine: (எந்.) ஆரைத் துரப்பண எந்திரம்: ஒரு கனரகத் துரப்பண எந்திரம். துரப்பணம் செய்யப்படும் பொருளை நகர்த்தாமல் துரப்பணத்தின் நிலையைச் சரி செய்யக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும்

radial engine : (வானூ.) ஆரை எஞ்சின்: நிலையான நீள் உருளைகள் ஒரு பொதுவான வளைவுச் சுழல் தண்டினைச் சுற்றி ஆரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்

radian: (மின்.) ஆரைக்கோணம்: ஆரையின் வட்டச்சுற்று வரை மீது ஆரை நீளக் கூறுகொள்ளும் கோணம். ஒரு வட்டத்தின் சுற்றளவு 2π ஆரைக் கோணங்களுக்குச் சமம். ஒரு ஆரைக்கோணத்தின் அளவு ஏறத்தாழ 57°

radiant heat: (இயற்.) தாவு வெப்பம்: மையத்தினின்றும் நாற்றிசையிலும் வெப்பம் தாவிச் சென்று பரவுதல்

radiating surface: கதிர்வீச்சுப் பரப்பு: வெப்பக் கதிர்களை வீசிப் பரப்புகிற பரப்பு

radiation (எந்.பொறி.) வெப்பக் கதிர்வீச்சு: வெப்பக்கதிர் வீசிப் பரவுதல. அணுக்கதிர்வீச்சு அணுத் துகள் அல்லது கதிர்கள் மிக வேகமாக வீசிப் பரவுதல்

radiation loss: (மின்) கதிர் இழப்பீடு : மின்னியல் மற்றும் காத்தவியல் புலங்களில் கதிர்வீச்சு காரணமாக அனுப்பும் கம்பிகளில் இழப்பு ஏற்படுதல்.

radiation resistance: (மின்.) கதிர்வீச்சுத் தடை: ஒரு வானலை வாங்கியிலிருந்து ஆற்றல் கதிர்வீச்சின் விளைவாக, அதில் ஏற்படும் தடை.

radiator: (எந்.பொறி.) வெப்பாற்றுப் பொறி: உந்துவண்டிப் பொறியின் வெப்பாற்றும் அமைவு.

radiator hose: (தானி.) வெப்பாற்றுப்பொறி நெழிவுக் குழாய் : உந்து ஊர்தியில் வெப்பாற்றுப் பொறியினையும், எஞ்சினையும் இணைக்கும் நெளிவுக் குழாய்.

radical: (கணி.) விசைமூலஅளவு: எண்களின் வர்க்கமூலம் தொடர்பான அளவு. மூல உறுப்பு- சேர்மத்தின் அடிப்படைக் கூறாக அமைத்து சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனி அணு அல்லது அணுக்களின் கூட்டம்.

radio: (மின்.) வானொலி: கம்பியில்லாச் செய்திப் பரப்பு; கம்பியில்லாச்செய்தி வாங்கும் அமைவு: வானொலிப்பெட்டி, வானொலி ஒலி பரப்பு.

radio acoustics:(மின்) அலை ஒலியியல் : ஒலி அலைகளை அனுப்புதல், உண்டாக்குதல், பெருக்குதல் பற்றி ஆராய்தல்.

radioctive: (மின்.) கதிரியக்கமுடைய: பொருட்கள் நேர் மின்னேற்றமும், எதிர் மின்னேற்றமும் உடைய துகள்களை வெளியிடுதல்.

radioctivity: (வேதி.) கதிரியக்கம்: ஒருவகை அணு இன்னொரு வகை அணுவாக மாறும்போது எற்படும் மாறுதல். இந்த மாற்றத் தின்போது அணுவின் உட்கருவிலிருந்து எரியாற்றல் வெளிப்படுகிறது

radio-astronomy: கதிரியக்க வானியல்

radio broadcasting: வானொலி ஒலிபரப்பு: செவிப்புலன் ஆற்றலை வானொலி ஆற்றலாக மாற்றி வானொலி அலைகளின் வடிவில் அனுப்புதல்

radio channel: வானொலி அலைவரிசை: வானொலி, தொலைக் காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரையளவுகளின்படி, ஓர் அலை வரிசை என்பது 6 மெகா சைக்கிள் அகல் விரிவுடையது

radio communication : வானொலிச் செய்தித் தொடர்பு: வானொலி ஆற்றல் மூலமாக வாய்மொழிச் செய்தியை அல்லது குறியீட்டுச் செய்தியை அனுப்புதல்

radio compass: (வானூ.) : வானொலித் திசைகாட்டி: கதிரியக்கத் தத்துவத்தின் மூலம் திசைகளைக் குறித்துக் காட்டும் கருவி. இது வானொலி ஒலிபரப்புப் பெட்டியில் அமைந்திருக்கும். அதை நோக்கியே இதன் முள் திரும்பி இருக்கும். இதன் முள் வடக்குத் திசையை நோக்கி இருக்காது

radio direction finder: (இயற்.) வானொலித் திசை காட்டி : வானொலிச் சைகை எந்தத் திசையிலிருந்து அனுப்பப்படுகிறது என்பதை நிருணயிப்பதற்கு வடிவமைக்கப்ப்ட்டுள்ள வானொலி வாங்கி. இது மீகாமத்தில் பயன்படுகிறது

radio frequency : (மின் வானொலி அலைவெண் : வானொலிச் சைகைகளை அனுப்புவதில் பயன்படுத்தப்படும் மின்னலைகளின் அலைவெண். இது ஏறத்தாழ வினாடிக்கு 40.000-க்கும் 30,000,000க்கும் இடைப்பட்ட அதிர்வுகளைக் கொண்டிருக்கும்

radio meter : சைகை இயக்கமானி : கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்கும் கருவி

radiogram : கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி : வானொலி வாயிலாக அனுப்பப்பட்டு, ஏதோவொரு வழியில் முகவரியாளருக்கு அஞ்சல் செய்யப்படும் செய்தி

radiograph : வெயில்மானி: வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி

radiography : (மின். ) ஊடுகதிர்ப் படமெடுப்பு : ஊடுகதிர்கள் (எக்ஸ் ரே) படும்படி செய்து ஒரு பொருளை ஆராய்வதற்கான ஒளிப்பட அறிவியல்

radioisotope: (வேதி.) கதிரியக்க ஓரகத் தனிமம் : கதிரியக்கமுடைய ஒரு தனிமத்தின் வடிவும். இது தனிமத்திற்கு இயற்கையாக அமைந்திருக்கலாம் அல்லது அனுப்பிளப்பு போன்ற வேறு அணுவியல் மாறுதல்கள் மூலம் உண்டானதாக இருக்கலாம்

radiology : (மருத்.) ஊடுகதிர் கதிரியக்க மருத்துவம்: ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துதல்

radiometallography: (இயற்.) ஊடுகதிர் உலோக உள்ளமைப்பு ஆய்வியல் : உலோகங்களின் உள் கட்டமைப்பினையும் பண்புகளையும் ஊடுகதிர்கள் (எக்ஸ்ரே)மூலம் ஆராயும் முறை radiometer : கதிரியக்கச் செறிவு மானி : கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக் காட்டும் கருவி

radio network : வானொலி இணைவனம் : ஒரு பொதுவான நிகழ்ச்சியை ஒலிபரப்பும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பல வானொலி நிலையங்களின் தொகுதி

radio phone : வானொலித் தொலைபேசி : வானொலி மூலமாக குரல் செய்தியை அனுப்புவதற்குப் பயன்படும் கருவி

radio phony : ஒளி வெப்பநிலை ஒலியாக்கம் : ஒளியலை வெப்ப நிலைகளினால் ஒலியுண்டாக்கும் முறை

radio receiver : வானொலிப் பெட்டி : வானொலி ஆற்றலை ஏற்று, கேட்பு ஆற்றலாக மாற்றுவதற்குத் தேவையான சாதனம்

radioscopy : ஊடுகதிர்ஆய்வியல்

radio sonde : மீவளி நிலைமானி : வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம், வெப்பநிலை, ஈர்மை நிலைகளைக் குறித்து ஒலிப்பரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடை மூலம் இறக்கப்படும் சிறு வானொலிப் பரப்புக் கருவி

radiosonic : (மின்.) வானொலியாக்கம் : ஒலியாக்கத்திற்கு வானொலி அலைகளைப் பயன்படுத்துதல்

radio spectrum : (மின்.) வானொலி ஊடகம் : வானொலிக்குப் பயன்படுத்தப்படும் மின்காந்த ஊடகப் பிரிவு

radio station : வானொலி நிலையம் : வானொலிச் செய்திகளை அனுப்பவும் பெறவும் பயன்படும் கருவி அமைந்துள்ள இடம்

radio-telegram : வானொலித் தந்தி : கம்பில்லாத் தந்திமூலம் பெறப்படும் செய்தி

radio telegraphy : (மின்.) வானொலித் தந்திமுறை : மோர்ஸ் தந்தி முறையில் பயன்படுத்தும் புள்ளிகள், கோடுகள் மூலம் தொடர் அலைகளாகச் செய்திகளை அனுப்பும் முறை

radio telephony : (மின்.) வானொலித் தொலைபேசி : குரல் மூலம் வானொலிச் செய்தித் தொடர்பு கொள்ளுதல்

radio telescope; (மின்.) வானொலித் தொலை நோக்கி: புறவெளியிலிருந்தும் வானொலி அலைகளைக் கண்டுபிடிப்பதற்கான மிகவும் கூருணர்வுள்ள வானொலி வாங்கி அமைவு

radio-therapy (மருத்.) ஊடுகதிர் மருத்துவம் : ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை

radio wave : (மின்.) வானொலி அலை : ஓர் அனுப்பீட்டு வானலை வாங்கியிலிருந்து பரப்பப்படும் சிக்கலான மின்நிலையியல் மற்றும் மின்காந்தப்புலம்

radium . (வேதி.) ரேடியம் (கதிரியம்) : தார், வண்டல் திரள்களிலிருந்து பெறப்படும் இயற்கையாகக் கதிரியக்கமுள்ள உலோகத் தனிமம். இது யுரேனியத்தை விட அதிகக் கதிரியக்கம் வாய்ந்தது. யுரேனியம் பெறப்படும் அதே தாதுப் பொருட்களிலிருந்து கிடைக்கிறது

radium-therapy : (மருத்.) ரேடிய மருத்துவம் : கதிரியக்கத்தையோ, அதன் விளைபொருட்களையோ பயன்படுத்தி நோய் தீர்க்கும் முறை

radius : ஆரை : ஒரு கோளம் அல்லது வட்டத்தின் மையத்திலி ருந்து அதன் சுற்று வரைக்கு அல்லது தளப்பரப்புக்குச் செல்லும் ஒரு நேர்கோடு

radius gauge : (எந்.) ஆரை அளவி : மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி

radius of gyration : (பொறி.) சுழல் ஆரம் : மடிமைத் திரும்புமையை வெட்டுத் தளப்பரப்பினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவின் வர்க்கமூலத்திற்குச் சமமானது. R=√(I/A) R=சுழல் ஆரம், I=மடிமைத் திருப்புமை, A=பரப்பளவு

radius planer: (எந்.) ஆரை இழைப்புளி: வட்டவரைகள் உந்து ஊர்திகளின் இணைப்புகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகை இழைப்புளி

raffia : (க.க.) பனைநார்: பனையின் மரவகையிலிருந்து எடுக்கப்படும் நார்

rail : (க.க.) கம்பியழி : கம்பித் தடைவேலி, கம்பிக் கைபிடி

rail : தண்டவாளம் : இருப்பூர்திகளுக்கான தண்டவாளம்

rail way track gauge : இருப்பூர்தி பாதை அகலம் : அமெரிக்க இருப்பூர்தித் தண்டவாளங்களுக்கிடையிலான அகலம். இது 4' 8 1/2" அளவு இருக்கும்

rainbow : வானவில் : வெயில் அடித்துக் கொண்டு மழைத்துாறல் விழும் போது, நீர்த்துளிகளில் ஒளிச்சிதறல் ஏற்படுவதன் காரணமாக சூரியனுக்கு எதிர்த்திசையில் வில் போல் காணப்படும் ஏழு நிறங்களின் தொகுதி. இதில் செங்கருநீலம், நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் வரிசையாக அமைந்திருக்கும்

rainbow generator : (மின்.) வண்ணக்கோல உருவாக்கி : வண்ணத் தொலைக் காட்சியில் படக்குழாயில் வண்ணப்பட்டை முழுவதையும் உண்டாக்குகிற கருவி

rainbow, secondary : எதிர் வானவில் : வானவில்லின் உட்புறமோ, வெளிப்புறமோ காணப்படும் தலைகீழான நிறவரிசையுடைய வானவில்

raised printing : (அச்சு.) புடைப்பு அச்சு முறை : எழுத்துகள் மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி அச்சிடும் முறை

rake : (பட்.) சம்மட்டம்: சம மட்டமாக்கப் பயன்படும் கருவி

ram (எந்) தூலப்பொறி : மதிற் சுவர்களைத் தகர்ப்பதற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்துாலம்

raman effect : (இயற்.) இராமன் விளைவு : ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊடகம் ஒருவகைப் பிரகாசமான கோட்டினையும், வேறு சில கோடுகளையும் காட்டும். இந்தப் பக்கக்கோடுகள் திரவத்தின் மூலக்கூறுகளுக்கு எதிராக ஒளியின் துகள்கள் தாக்கி அதனால் ஆற்றலை ஈட்டுவதால் அல்லது இழப்பதால் உண்டாகின்றன. இதனைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சர்.சி.வி இராமன் ஆவார். இந்தக் கண்டுடிப்புக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது rammer : (வார்) திமிசுக் கட்டை : மண்ணை அடித்து இறுக்கும் கருவி

ramp (க.க.) கோட்டைச் சாய் தளம் : கோட்டை அரணில் இரண்டு தரைமட்டங்களை இணைக்கும் சாய்தளம்

random : தொடர்பின்மை :அங்கொன்றும் இங்கொன்றுமான முறைமை, ஒழுங்கற்ற அளவும் வடிவும் கொண்டிருப்பவை

random joints : தொடர்பற்ற இணைப்புக்ள் : மேலொட்டுப் பலகையில் அகலம் சமமாக இருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தொடர்பின்றிச் செய்யப்படும் இணைப்புகள்

random work : ஒழுங்ககற்ற வேலைப்பாடு : ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்படும் கல் வேலைப்பாடு. ஒரு சீராக இல்லாத கற்களைக் கொண்டு ஒரு சுவர் கட்டுதல் போன்ற பணி

range at economic speed : (வானூ.) சிக்கன வேக வீச்சு : ஒரு விமானம், உயரத்தில் பறக்கும் எல்லா நிலைககளிலும் மிகவும் சிக்கனமான வேகத்தில் பறக்கும் போது மிக அதிக அளவு செல்லக் கூடிய தூரம்

range at full speed : (வானூ.) முழுவேக வீச்செல்லை : ஒரு விமானம் மிகச் சிக்கனமான வேகத்திலும் உயரத்திலும் பறக்கும்போது செல்லக்கூடிய உச்ச அளவு தூரம்

range at maximum speed : (வானூ.) அதிவேக வீச்சு : விமானம், உயரத்தில் குறிப்பிட்ட நிலைகளில் முழுவேகத்தில் பறக்கும்போது செல்லக்கூடிய மிக அதிக அளவு தூரம்

rapeseed oil : கடுகு எண்ணெய் : கடுகிலிருந்து பெறப்படும் கனமான பழுப்பு எண்ணெய். இது மசகெண்ணெயாகவும் எஃகினைப் பதனப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது

rasp (எந்.) முரட்டு அரம் : கரடு முரடான பரப்புடைய அரம் போன்ற கருவி

raster: (மின்.) எலெக்ட்ரான் ஒளிர்வு : படக்குழாய் திரையில் எலெக்ட்ரான் கற்றையை வீசுவதன் மூலம் உண்டாகும் ஒளிர்வு

ratchet : (எர்.) ஒருவழிப் பற்சக்கரத் தடை: சலாகை மீது அல்லது சக்கரம் மீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அல்லது மறுவழித் தடுக்கும் தடைக்கோல் அமைவு

ratchet bar : (மர.வே.) பற்சக்கரத் தடைச் சலாகை : ஒருவழித் தடைப் பற்சக்கரத்தில் உள்ளது போன்ற பற்கள் கொண்ட ஒரு நேர்ச் சலாகை. இது எந்திரப் பற்களைத் தடுக்கும் அடை தாழினை ஏற்றுக் கொள்ளும்

ratchet bit brace : (மர. வே.) : பற்சக்கரப் பிணைப்புக் கட்டு பற்சக்கரப் பிணைப்புக் கட்டு (படம்)

ratchet drill : (எந்) ஒரு வழித் தடைப் பற்சக்கரத் துரப்பனம்: இது ஒரு நெம்புகோலுடைய கையால்

இயக்கப்படும் இரு துரப்பணம். இதன் ஒரு முனையில் ஒரு துரப்பணப்பிடி அமைந்திருக்கும். இது ஒரு வழித்தடப் பற்சக்கரம். அடைதாழ் மூலம் சுழலக் கூடியது

rachet wheel : ஒரு வழித் தடைப்பற்சக்கரம் : ஒரு வழிப் பற்சக்கரத் தடை அமைக்கப்பட்ட சக்கரம்

rated horse power of an engine : (வானூ.) விசை மானம்: ஒரு குறிப்பிட்ட வகை எஞ்சினின் வேக அளவு கணிக்கப்பட்டிருந்து, அது முழுவேகத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அல்லது பெருகிய அழுத்தத்தில் இயங்கும் போது உண்டாகும் சராசரிக் குதிரை விசை

rated revolutions : (வானூ.) சுழற்சி வேகம் : விசைமானத்திற்கு இணையான சுழற்சிகளின் எண்ணிக்கை

rate of climb : (வானூ.) : ஏறுமுக வேகம்: ஒரு விமானம் காற்றை எதிர்த்துச் செங்குத்தாக ஏறும் வேக வீதம்

rate - of - climb indicator: (வானூ.) ஏறுமுக வேகமானி : ஒரு விமானம் உயரே ஏறுகிற அல்லது உயரத்திலிருந்து இறங்குகிற வேக வீதத்தைக் காட்டும் கருவி

rate of speed : (எந்.) வேக வீதம்: எந்திர வேலைகளில் வேக வீதம் ஒரு நிமிடத்தில் சுழற்சிகளின் எண்ணிக்கை அல்லது ஒரு நிமிடத்தில் அடி என்ற அளவில் கணக்கிடப்படுகிறது

rating of alternators : (மின்.) மாறு மின்னாக்கி வேகம் : மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட் ஆம்பியர்களில் (KWA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் பெறப்படுகிறது

ratio : வீதத் தொடர்பு: ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு

ratio of compression: (குளி.பத.) அழுத்த வீதம் : அழுத்தத்திற்கு முன்பும் பின்பும் அழுத்தங்களிடையிலான வீதம்

ratio of transformation : மின் மாற்று வீதம் : ஒரு மின்மாற்றியில் முதனிலைச் சுருளிலுள்ள சுழல் எண்ணிக்கைக்குமிடையிலான வீத அளவு

rawhide : பதனிடாத் தோல் : பதனிடப்படாத தோல்

rawhide gears : (எந்.) தோல் பல்லிணை : இறுக்கமாக அழுத்தப்பட்ட பதனிடப்படாத தோல் வட்டுகளினாலான ஓசை எழுப்பாத பல்லிணை

rawhide hammer : தோல் சுத்தி : பதனிடப்படாத தோல் கொண்டையுடைய கைச்சுத்தி. உலோக உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும் போது அந்த உறுப்புகளில் கீறல்கள் ஏற்படாமல் இருக்கும்

raw material : மூலப்பொருள் : செய்பொருளுக்குரிய மூல இயற்கைப் பொருள்

raynauds disease : (நோயி.) ரேனாட்ஸ் நோய் : விரல்களுக்கும் சில சமயம் காதுகளுக்கும் கீழ்த் தாடைக்கும் இரத்தம் செல்வதில் ஏற்படும் கோளாறு. பெரும்பாலும் 50 வயதான பெண்களுக்கு மாத விடாய் சமயத்தில் இந்நோய் உண்டாகும் rayon: ரேயான் (மரவிழைப்பட்டு): மர இழையிலிருந்து உருவாக்கப் படும் செயற்கைப்பட்டு வகை

reactance: (மின்.) எதிர்வினைப்பு: ஒரு மாற்று மின்னோட்டச் சுற்று வழியில், மின்னோட்டத்தை எதிர்க்காமல், ஆனால் அதற்கும் அதன் மின்னியக்க விசைக்குமிடையிலான நிலைவேறுபாட்டினை உண்டாக்குகிற தடையின் உறுப்பு

reaction : எதிர்வினை: வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்பு மாறுபாடு

reaction coil : எதிர் வினைப்புச் சுருள்

reaction engine : (வானூ.) எதிர் வினைப்பு எஞ்சின் (எதிர்வினைப்பு விசைப் பொறி): ஓர் எஞ்சின் அல்லது விசைப்பொறி வெளியேற்றும் பொருளுக்குத் தனது எதிர் வினைப்பு மூலம் உந்து விசையை உண்டாக்குகிறது. இந்த எஞ்சின் எதிர்வினைப்பு எஞ்சின் எனப்படும்

reaction , turbine : (வானூ.) எதிர்வினைப்பு விசையாழி: சுழலி அலகுகள் கூம்பலகுகளின் வளையமாக அமைந்த ஒரு வகை விசையாழி. இந்த அலகுகளிடையிலிருந்து வெளியேற்றப்படும் திரவத்தின் எதிர்விணைப்பு மூலம் விசையாழி சுழல்கிறது

reaction turbine  : (மின்.) எதிரடி விசையாழி : நீரோட்டம் அல்லது வாயு அல்லது நீராவி பாய்வதால் மின்விசையை நேரடியாக உற்பத்தி செய்யும் பொறி. ஒரு தூண்டு விசையாழியில் ஒரு சக்கரத்தின் அலகில் நீர் (அல்லது நீராவி) தாக்கி சக்கரத்தைச் சுழலச் செய்கிறது. நீர் (நீராவி) முன்னோக்கிப் பாயும்போது சக்கரம் பின்னோக்கிச் சுழல்கிறது

reaction voltage : எதிர்வினைப்பு மின்னழுத்தம்

reactor : (மின்.) எதிர்வினைப்பான் : மாற்று மின்னோட்டங்களின் ஒட்டத்திற்கு எதிர்ப்பை அளிக்கும் ஒரு சாதனம். பொதுவாக, இரும்பு உள்ளீட்டின் மீதான கம்பிச் சுருள்களைக் கொண்டிருக்கும்

reactor : (இயற்.) அணு உலை : யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வேகங்குறைந்த அணுஉலையில், காரீயம், நீர் போன்ற ஓர் இடையீட்டுப் பொருளின் மூலம் அணுக்களின் வேகம் குறைக்கப்படுகிறது. ஒரு வேகம் மிகுந்த அணு உலையில், நியூட்ரான்களின் வேகம் குறைக்கப்படுவதில்லை. ஓர் அணு உலையிலிருந்து, கார்பன்டையாக்சைடு, நீர், உருகிய சோடியம் போன்ற குளிர்விக்கும் பொருள்களின் மூலம் வெப்பம் அப்புறப்படுத்தப்படுகிறது. சில அணு உலைகளில், நியூட்ரான்களை உறிஞ்சிக் கொள்ளும் காட்மியம் அல்லது போரோன் போன்ற கட்டுப்பாட்டுச் சலாகைகள் மூலம் வெப்பம் நீக்கப்படுகிறது

reactor, saturable (மின்.) பூரித எதிரியக்கி : நேர் மின்னோட்டம் சுருணைகளின் தொகுதி வழியாகச் செல்லக்கூடிய வகையில் அமைந்த ஒருவகை மின்மாற்றி. காந்த உட்புரியின் அளவினை நேர் மின்னோட்டம் கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் மின்மாற்றியின் மாற்று மின்னோட்டமும் கட்டுப்படுத்தப்படுகிறது

reagent (வேதி.) வினையூக்கி : எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணர உதவும் பொருள். இது பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் பொருள் reactive load: (மின்.) எதிர்வினை மின்சுமை: மின்விசை ஆதாரத்தின் மின்னோட்டத்தைச் செலுத்தும் அழுத்தத்திலிருந்து குறையுமாறு செய்கிற மின்சுமை. தூண்டு எதிர் வினைப்பு கொண்ட மின்சுமை

reactive power : (மின்.) எதிர் வினைப்பு மின்விசை : ஒரு மின் சுற்றுவழியின் எதிர்வினைப்பு அமைப்பின் பயன்படுத்திக் கொள்ளும் மின்விசை

ream: ரீம்: 20 தாள்மடி, 480 தாள்கள் அடங்கிய கட்டு, கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அடங்கிய கட்டு

reamer : (உலோ.) துளைப் பெருக்கு கருவி : உலோகத்தில் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ள துளையைப் பெரிதாக்குவதற்கான ஒரு கருவி

rear axle : (தானி.) பின் இருசு: பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள் பட்டை வளையங்கள் போன்ற இயக்குவதற்குத் தேவையான துணை உறுப்புகளையும் கொண்ட பின் இருசு

Reaumur thermometer: (இயற்.) ரோமர் வெப்பமானி : ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வெப்பமானி. இதில் பனிக்கட்டியின் உருகுநிலை 0°, நீரின் கொதிநிலை 80°

receiver : (மின்.)செவிக்குழல் தொலைபேசிச் செய்தியைக் கேட்பதற்கு காதருகே வைத்துக் கேட்கப்படும் கருவிஇ (2) ஒலி-ஒலிப்பெட்டி- அலை பரப்புகளை ஒலியாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு

receptacle : (மின்.) கொள்கலம் : வெண்சுடர் மின் விளக்கினைப் பொருத்துவதற்கான சுவர்க் குதை குழி

reciprocating : (எந். ) எதிரெதிர் இயக்கம் : முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குதல்

recondition : மறு சீரமைப்பு : பயன்படுத்தத் தக்கவாறு பழுது பார்த்துச் சீரமைவு செய்தல்

reconnaissance : முன்னாய்வு : நில அளவைப் பணியில் நில அளவைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் முன்னீடான ஆய்வு

recorder : பதிவு கருவி: மின்னியல் சைகைகளை அல்லது ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் மாறிவரும் இயற்பியல் அல்லது மின்னியல் நிலைமைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ஒலிப்பதிவு கருவியானது ஒலி பெருக்கி வழியாக நுழையும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றி, ஒரு காந்த நாடாவில் பதிவு செய்து வைக்கிறது

recording thermometer: பதிவு வெப்பமானி: வெப்பமாறுதல்களை நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளும் ஒரு வெப்பழானி. இது ஒரு காகிதப் பட்டையில் அல்லது சுருளில் தானாகவே வெப்பநிலையைப் பதிவு செய்து கொள்ளும்

recrystallization : (உலோ.) மறு படிகமாக்கல்: கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமாகவோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண்பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டுவருதல்

rectangle : (கணி.) நாற்கரம் : நான்கு பக்கங்களைக் கொண்ட நாற்கட்ட வடிவம். இதன் கோணங்கள் செங்கோணமாக இருக்கும், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் இருக்கும். அண்டைப் பக்கங்கள் சமமாக இருக்க வேண்டியதில்லை

rectangular : (கணி.) செவ்வக வடிவம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்கோணங்கள் உடைய நாற்கர வடிவம்

rectifier : (மின்.) மின்திருத்தி : மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றும் கருவி

rectifier tube : ,மின்திருத்திக் குழாய் : மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு வெற்றிடக் குழாய்

red : சிவப்பு: நிறமாலையில் ஆரஞ்சு நிறத்திற்கும் வெங்கரு நீலத்திற்கும் இடைப்பட்ட அடிப்படை வண்ணம்

red brass : (உலோ.) செம் பித்தளை: சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும்

red cedar : (மர. வே.) சிவப்புத் தேவதாரு : இதனைச் செம்மரம் என்றும் கூறுவர். இது 9 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். சில வகை மரம் 100 அடி வரை கூட உயர்ந்து வளரும். இதன் வெட்டு மரம் மென்மையானது; எளிமையாக வேலைப்பாடுகள் செய்வதற்கு ஏற்றது. பென்சில் உறைகள், பெட்டிகள் செய்வதற்கு உதவுகிறது. வடமேற்கு அமெரிக்காவிலுள்ள பெரிய செம்மரங்கள் கடை விளம்பரம் பலகைகள் செய்யப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன

red lead : (வேதி.) வங்கச் செந்தூரம் : (Pb3 O4,); ஈய மோனாக்சைடை அல்லது காரீயத்தைச் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. கண்ணாடிக்கலம், இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் செஞ்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. குழாய் இணைப்புகளைக் கசிவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது

red oak (பட்.) செங்கருவாலி : வெண்கருவாலியை விடக் கருமையாகவும், முரட்டுக் கரணைகளும் உடைய மரம். எளிதில் உடையக் கூடியது. நுண்துளைகளுடையது. கட்டிடங்களில் உள் அலங்காரத்திற்கும், அறைகலன்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

red shortness or hot shortness: (பொறி.) செம்மைக் குறைவு அல்லது வெப்பக் குறைவு: செந்தழல் நிலையில் உருட்டவோ வேலைப்பாடு செய்யவோ முடியாததாகவுள்ள தேனிரும்பின் அல்லது எஃகின் நிலை, கந்தகம் அதிக அளவில் இருப்பதே செம்மைக் குறைவுக்குக் காரணம்

reducer:(கம்.)செறிவுகுறைப்பான்: ஒளிப்பட மறிநிலைத் தகட்டின் செறிவினைத் தளர்த்த உதவும் பொருள்

reducing agent : (வேதி.) ஆக்சிஜன் குறைக்கும் பொருள் : இரண்டாம் ஆக்சிஜனை அல்லது வேறு தனிமங்களை நீக்கும் ஒரு பொருள்

reducing flame: (பற்.) ஆக்சிஜன் குறைக்கும் பிழம்பு : எரிவாயு சற்று மிகுதியாகவுள்ள ஓர் ஆக்சிஜன் எரிவாயுப் பிழம்பு

reducing glass : குறைப்பு ஆடி : பொருட்களின் வடிவளவினைக் குறைத்துப் பார்க்க உதவும் ஓர் இரட்டைக்குழி ஆடி

reduction gears : (பொறி.) வேகக் குறைப்புப் பல்லிணை: சுழல் தண்டின் வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படும் பல்லிணை

redwood : செம்மரம் : எடை மிகக் குறைவாகவுள்ள ஒருவகை மரம். இதன் ஒரு கன அடி எடை 281 பவுண்டு. இது மென்மையானது. இதன் இழையமைப்பு மிக நேர்த்தியானது; சுரணையுள்ளது. இது வெட்டுமரம். செம்புழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் வேலைப்பாடுகள் செய்வது எளிது. ஆனால் எளிதில் பிளவுபட்டு விடும். நீரையும், ஈரத்தையும் தாங்கி நெடுநாள் உழைக்கக் கூடியது

reeding : (மர.வே.) (1) நாணல் வரி ஒப்பனை : நாணல் போன்ற வரி ஒப்பனை செய்தல். (2) நாணயச் சூழ்வரி : நாணயத்தின் விளிம்புச் சூழ்வரி

reference marks : (அச்சு.) சுட்டுக் குறிப்புகள் : நூல்களில் மேற்கோள்களைச் சுட்டும் குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காட்டுதல்

reflex reflectors : (தானி. எந்.) பின்னொளிப் பிரதிபலிப்பான்: ஒரு கோணத்திலிருந்து வந்து ஒரு பொருளை ஒளிர்வுடையதாகக் காட்டும் ஒளியைப் பிரதிபலிக்கிற ஓர் ஒளியியல் சாதனம்

reflection : (மின்.) பிரதிபலிப்பு : ஒளிவகையில், ஓர் ஒளிக்கதிர் எந்த ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்கிறதோ அந்த ஊடகத்திலிருந்து வேறுபட்ட ஓர் ஊடகத்தைத் தாக்கம்போது பிரதிபலித்தல்

reflector: (மின்.) பிரதிபலிப்பான்: ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி. ஏற்கப்பட்ட சைகைகளை வலுப்படுத்தி, பின்புறமிருந்தோ அல்லது தேவையற்ற திசையிலிருந்தோ சைகைகளைப் பற்றி எடுப்பதைத் தடுப்பதற்கான ஒரு வானலை வாங்கிக் கம்பி

reflex circuit: (மின்.) திரும்பு மின்சுற்றுவழி: இது ஒரு வானொலி ஏற்பு மின்சுற்று வழி. இதில், சைகைகளைக் கண்டறிந்த முன்பும் பின்பும் சைகைகளைப் பெருக்குவதற்கு ஒரே குழல்கள் பயன்படுகின்றன

refraction: (இயற்.) ஒளிக்கோட்டம்: வெவ்வேறு அடர்த்திகளுடைய ஊடகங்கள் வழியாக ஒளிக் கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமுறுதல். எடுத்துக்காட்டாக, காற்றிலிருந்து நீருக்குள் ஒளிக்கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமடைகிறது

refraction index: (மின்.) கோட்ட விகிதம்: தடையற்ற இடப்பரப்பில் அலைக்கதிர் வீச்சின் வேக வீதத்திற்கும் மற்றப் பொருள்களில் வேக வீதத்திற்குமிடையிலான விகிதம்

refractory: உருகாப் பொருள்: உயர்ந்த அளவு வெப்பத்திலும் உருகாமல் வெப்பத்தை ஏற்கக் கூடிய பொருள். எடுத்துக்காட்டாக, சீனக்களிமண் உருகாமல் வெப்பத்தின் செயலை எதிர்த்து நிற்கக்கூடியது

refrigerant: (குளிர். பத.) உறை குளிரூட்டி: ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் சுருங்குவதன் மூலம் வெப்பத்தை வெளியிடுகிநிறது

refrigerating: (எந். பொறி.) குளிர்சேமிப்பு முறை: உணவுப் பொருள்களைக் குளிர்சேமிப்பு செய்து பாதுகாப்பதற்கான முறை

refrigerator: குளிர்காப்புப் பெட்டி: குளிர்பதனப்படுத்துவதற்கான குளிர்காப்புப் பெட்டி

regelation: (குளிர்.பத.). மறு உறைதல்: உருகிய அழுத்தத்தில் நீரை மீண்டும் உறையும்படி செய்தல், பனிக்கட்டித் துண்டுத் துகள் குவியல் வகையில் புறமுருகி இணைந்து உறைதல்

register:, (அச்சு.) ஒத்தியைபு நிலை (1) அச்சுக்கலையில் தாளின் இரு புற அச்சமைவின் ஒத்தியைவு. வண்ணங்களின் ஒத்தியைவு. (2) ஒளிப்படக்கலையில், தகடு ஒளிக்கதிர்த் திரைக்குவியம் ஆகியவற்றின் ஒத்தியைபு நிலை

regular polygon: (கணி. ) வடிவொழுங்குப் பலகோணக்கட்டம்: அமைப்பொழுங்குடைய நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்

regulation: (மின்.) சீர்மை: மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின்சுமையில் மாறுதல் ஏற்படும் போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்

regulation, percentage of (மின்.) சீர்மை : மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின் சுமையில் மாறுதல் ஏற்படும்போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல். சதவீதம் (விழுக்காடு)

மின்சுமையின்மை-முழுமின்சுமை X 100 / முழு மின்சுமை = ...%

reinforced concrete: (க.க) வலுவாக்கிய வார்ப்புக் காரை: வலுவை அதிகமாக்குவதற்காக இரும்புக்கட்டை, கம்பிகள் கொண்டு வலுவாக்கிய வார்ப்புக்கரை

reinforcement: (குழை.) வலிவூட்டும் பொருள்: பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக்கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை, நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது

reinforcing steel: (பொறி.) வலிவூட்டும் எஃகு: கான்கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள்

reject circuit: (மின்.) ஏலாச்சுற்றுவழி : ஒத்திசைவுள்ள இணையாக இசைவிப்பு செய்யப்பட்டுள்ள மின்சுற்றுவழி. இது ஒத்திசைவு அலைவெண்ணில் சைகைகளை விலக்கி விடுகிறது

relative conductance : (மின்.) தொடர்பு மின்கடத்தாற்றல்: வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு ஒரு மின்னூடு கடத்தியின் மின் கடத்தாற்றல். வெள்ளியின் மின் கடத்தாற்றல் 100% relative humidity: சார்பு ஈரப்பதன்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், காற்றில் இருத்தி வைத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஈரப்பதன் அளவுக்குமிடையிலான வீத அளவு

relative inclinometer: (வானூ.) சார்புச் சாய்வுமானி: விமானம் பறக்கும் உயரத்தை வெளிப்படைப் புவியீர்ப்பு அடிப்படையில் காட்டும் ஒரு சாதனம். விமானத்தின் முடுக்கு விசை, புவியீர்ப்பு விசை இவற்றின் கூட்டு விளைவாக்கம்

relative motion: (இயற்.) சார்பு இயக்கம்: ஒரு பொருளைச் சார்ந்து இன்னொரு பொருள் இயங்குதல்

relative resistance: (மின்.) தொடர்புத்தடை: வெள்ளியுடன் ஒப்பிடும் போது ஒரு பொருளின் ஒப்பீட்டுத்தடையின் மதிப்பளவு. வெள்ளிக்கு ஒப்பீட்டுத்தடை மதிப்பளவு 1.0

relativistic: (விண்.) இடையுறவுப் பொருள்: ஒளியின் வேகத்தில் கணிசமான பின்னப்பகுதி வேகத்தில் இயங்கும் பொருள். அணுவின் உட்கூறமைவுள்ள துகள்கள் இந்த வகையினம்

relative wind: (வானூ.) தொடர்புக் காற்று : காற்றிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்து காற்றின் வேக வீதம். காற்றின் மீது பொருளின் இடையீட்டு விளைவு அற்பமாக இருக்கும் அளவுக்கான தூரத்திலிருந்த எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து இது நிருணயிக்கப்படுகிறது

relay (மின்.) துணைமின் விசையமைவு: ஒரு முதன்மை மின்சுற்று வழியில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஓர் உள் சுற்று வழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம்

relay station: அஞ்சல் நிலையம்: வானொலி அல்லது தொலைக்காட்சியில், இன்னொரு நிலையத்தின் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளை வாங்கி அஞ்சல் செய்யும் நிலையம்

relaxation oscillator: (மின்.) தளர்வுறு ஊசல்: இது ஓர் எதிர் (சைன் வடிவ) ஊசல். இதில், ஒரு தடுப்பான் வாயிலாகக் கொண்மிக்கு மின்னூட்டுகிற அல்லது மின்னூட்டத்தை வெளியேற்றுகிற நேரத்தைப் பொறுத்து அலைவெண் அமைகிறது

relay rack: (மின்.) அஞ்சல் சட்டம்: அடிச்சட்டமும் கருவியும் கொண்ட 48செ.மீ.சட்டங்களைத் தாங்கியுள்ள ஓர் எஃகுச் சட்டம்

relief: (பொறி.) புடைப்பு: ஒரு மேற்பரப்பிலிருந்து முனைப்பாக எழுந்து நிற்கும் புடைப்பு

relief map: புடைப்பியல் நிலப்படம்: வண்ண வரைக் குறியீடுகள் மூலம் புடைப்பியல் தோற்றம் அளிக்கப்பட்ட நிலப்படம்

relief printing: (அச்சு.) புடைப்பியல் அச்சடிப்பு: வண்ண வரைக் குறியீடுகளால் அமைக்கப்படும் புடைப்பியல் தோற்ற அமைவுடன் அச்சடித்தல்

relieving: (உலோ.) முனைப் பழிப்பு: உராய்வையும், வெப்பத்தையும் குறைப்பதற்காக ஒரு கருவியின் வெட்டுமுனையின் பின் பகுதியிலுள்ள பொருளை அகற்றுதல்

relieving arch: விடுவிப்பு வில்வளைவு: சுவரின் அடிப்பகுதிப் பளுக் குறைக்கும்படி உள்வரியாகக் கட்ட்ப்படும் வில் வளைவு relish: (தச்சு.) தோள் பட்டை: பொருத்து முளையின் மீதுள்ள தோள்பட்டை

reluctance (மின்.) காந்தத்தடை: காந்தமேற்றிய பொருள் காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு

reluctivity:(மின்.) காந்தத்தடைத் திறன் : காந்தமூட்டுவதை எதிர்க்கும் திறன். இது காந்தமூட்ட இடமளிக்கும் திறனுக்கு எதிர்மாறானது

remote. (தொ.கா.) தொலை நிகழ்ச்சி : நிலையங்களுக்கு வெளியே நெடுந்தொலைவிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி

remote control: (தொ.கா.) தொலைக் கட்டுப்பாடு: தொலைக் காட்சி நிகழ்ச்சி போன்றவற்றை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் கருவி

remote control: (வானூ.) : தொலைக் கட்டுப்பாடு: மின்காந்தவியல், நெம்புகோல் போன்ற சாதனங்கள் மூலம் நெடுந்தொலைவிலிருந்து கட்டுப்படுத்தல்

அஞ்சல் அல்லது பிற மின்காந்தச் சாதனங்கள் மூலம் மின்னியல் கருவிகளை அல்லது எந்திரத்தை இயக்குதல்

remote pickup :(மின்.) தொலை ஒலி-ஒளிப்பதிவு: தொலைக்காட்சி வாதொலி நிலையத்திற்கு வெளியே நெடுந்தொலைவிலிருந்து தனிவகை ஊர்திச் சாதனங்களின் மூலம் பதிவு செய்தல்

remote pickups : சேய்மை அஞ்சல் : தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியேயுள்ள ஊர்தி ஒளிபரப்புச் சாதனம் அல்லது தொலைவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள சாதனம் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளி பரப்புதல்

renaissance: (க.க) மறுமலர்ச்சி : மத்திய காலத்தைப்பின் பற்றி 14-16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை, இலக்கிய, கட்டிடக்கலை மறுமலர்ச்சி. இது இத்தாலியில் முதலில் தோன்றியது

rendezvous : (விண்.) விண்கலச் சந்திப்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட விண்வெளிக் கலங்கள், முன்னரே குறித்த நேரத்திலும் இடத்திலும் பறக்கும் போதே சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி

renewable fuse : (மின்.) புதுப்பிக்கத்தக்க உருகி : உருகும் பொருளை எளிதில் மாற்றக் கூடியவாறு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள உருகி

repair kit : செப்பனிடு கருவிக்கலம் : ஒரு குறிப்பிட்ட துறையில் பழுதுபார்ப்பதற்குப் பயன்படும் கருவிகளும், உறுப்புகளும் அடங்கிய ஒரு கலம்

repeater : (மின்.) திருப்புக் கருவி : அனுப்பிய தந்திச் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்பும் கருவி

repetition : மீளச் செய்தல் : ஒரே செயலைத் திரும்பத் திரும்பக் கூறியது கூறல்; மனப்பாடம் செய்தல், செய்து ஒப்பித்தல்

replacing : பதிலமர்த்துகை : பழைய இடத்திலேயே மறுபடியும் வைத்தல், பதிலாக இடங்கொள்தல், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்புதல்

replica ; உருவநேர்படி : ஓர் உற்பத்திப் பொருளின் நேர் பகர்ப்பு

repousse - (உலோ.) புடைப்பகழ்வு : மெல்லிய உலோகத்தில் புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு representative : உருமாதிரி :மிகச் சிறந்த வகையின் அல்லது பாணியின் வகைமாதிரி

reprint : (அச்சு) மறு அச்சுப் பதிப்பு : மூல அச்சுப்பதிப்பு காலியான பிறகு, அதிகத் திருத்தங்கள் இல்லாமல் முன்னயதைப்போல வேறு அச்சுப்பதிப்பாக அச்சிடுதல்

reproducing : மறுபடி எடுப்பு : மீண்டு படி எடுத்தல். திரும்பப் படியெடுத்து வழங்குதல்

reproduction : (அ.க.) (1) படியெடுத்தல் : வேறுபடி உருவாக்கி எடுத்தல், உருவப்படி எடுத்தல் (2) இனப்பெருக்கம் - இனப்பெருக்கமுறுதல் இனம் பெருக்குதல்

reptile press : பணிமுறைசாரா செய்தித்தாள் : பணிமுறைசாராத அரசுச் சார்புடைய செய்தித்தாள்கள்

repulsion : (மின்.) புறவிலக்கு விசை : ஒரே மாதிரியாக மின்னேற்றஞ் செய்யப்பட்ட இரு பொருட்கள் தம்மிடையே ஒன்றையொன்று உந்தித்தள்ளும் ஆற்றல்

repulsion motor : புறவிலக்க மின்னோடி

reredos : பலிபீடத் திரை : பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை

reserve cell : (மின்.) சேம மின்கலம் : பயன்படுத்த ஆயத்தமாகும் வரையில் மின்வாய் உலரவைத்திருக்கப்படும் ஒரு மின்கலம்

residual magnetism : (மின்.) எஞ்சு காந்தம் : ஓர் இரும்புத் துண்டிலிருந்து காந்தவிசை நீக்கப்பட்ட பிறகு அதில் எஞ்சியிருக்கும் சிறிதளவு காந்தவிசை

residue (தானி.) எஞ்சுபடிவு : எரித்த பிறகு படிந்திருக்கும் எச்சப் பொருள்

resilience : எதிர் விசைப்பு : வில் போல் நிமிர்ந்து எதிர்த்தடிக்கும் செயல் அல்லது ஆற்றல். ஒரு பொருள் நலிந்து தொய்வுற்ற பின்பு மீட்டெழுந்து முன்னுருப் பெறும் ஆற்றல்

resin : பிசின்: சிலவகை மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பிசின். இது நீரில் கரையாமல் ஆல்ககால், ஈதர் முதலியவற்றில் கரையக்கூடியது

resinoid : (குழை.) செயற்கைப் பிசின் : இயற்கைப் பிசின்களிலிருந்து வேறுபட்ட செயற்கைப் பிசின் பொருட்கள்

resistal : (உலோ.) ரெசிஸ்டால்: மிக உயர்ந்த தரமுடைய துருப்பிடித்காத எஃகு, இதில் காந்தம் ஏறுவதில்லை. இது அமிலத்தை எதிர்க்கக் கூடியது

resistance : (மின்.) தடை : மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கக் கூடிய ஒரு பொருளின் பண்பு

resistance coil : (மின்.) தடைச்சுருள் : குறிப்பிட்ட அளவு அதிகத் தடையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும்பினாலான இந்தக் கம்பிச் சுருள் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும்

resistance unit : (தானி. ) தடை அலகு : எலெக்ட்ரான் பாய்வதை மிகுதியாகத் தடுக்கும் திறன் கொண்ட ஓர் உலோகத்தினாலான ஒரு சிறிய கம்பிச்சுருள் அல்லது ஒரு சிறிய கார்பன் சலாகை. இந்த அலகுகள், உந்து ஊர்தியின் மின்னியல் சுற்றுவழிகளில் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காகச் செருகப்படுகின்றன resistance welder : தடைப் பற்ற வைப்பு எந்திரம் : தடையமைப்பு கொண்ட ஒரு பற்றவைப்பு எந்திரம்

resistance welding: தடைப்பற்ற வைப்பு : மின்னோட்டம் பாய்வதைத் தடுப்பதன் மூலம் உண்டாகும் வெப்பத்தின் வாயிலாக அழுத்தம் ஏற்படுத்திப் பற்றவைக்கும் முறை

resistance wire: (மின்.) தடைக் கம்பி : மின் தடையுண்டாக்கும் நிக்கல் - குரோமியம் மின்தடைக் கம்பி

resisting moment : (பொறி.) சுழற்சித்தடை : எதிரெதிராக இயங்கும் இரண்டு உள்முக விசைகள் கொண்ட எந்திரத்தின் பகுதியில் விறைப்புச்சூழல் திறன் மூலம் சுழற்சிக்குத் தடை உண்டாக்குதல்

resisting shear : (பொறி.) தடைத் துணிப்பு : ஓர் எந்திரப் பகுதியின் செங்குத்துத் துணிப்புக்குச் சமமான எதிரெதிர் உள்முக விசை

resistivity : (மின்.) தடைத் திறன் : ஒரு பொருளின் ஒரு கன செ.மீ. அளவு மின்னோட்டம் பாய்வதற்கு அளிக்கும் உதிர்ப்பாற்றல். இது ஓம் அலகில் குறிக்கப்படுகிறது

resistor : (மின்) தடுப்பான் : மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கும் தடையுள்ள ஓர் உறுப்பு

resolution : படத்தெளிவு : தொலைக்காட்சிப் படத்தின் தெளிவுத் திறன்

resolution of forces : (இயற்.) விசைப் பிரிவீடு : இரண்டு அல்லது அவற்றுக் மேற்பட்ட விசைகளின் பிரிவீடு. இவற்றின் கூட்டுவிளைவானது, ஒரு குறிப்பிட்ட விசைக்குச் சமமாக இருக்கும்

resonance: (மின்.) ஒத்திசைவு : ஒரு மின்சுற்று வழியில் தூண்டு எதிர் வினையினை மட்டுப்படுத்தி, மின்னோட்டம் பாய்வதற்கு ஓர் தடையை மட்டுமே விட்டுச் செல்லும் நிலை

resonant frequancy : (மின்.) எதிரொலி அலைவெண் : இயைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழி ஊசலாடுகிற அலைவெண்

resonant line : (மின்.) எதிரொலிப் பாதை: நிலையான அழுத்த அலைகளையும், மின்னோட்ட அலைகளையும் கொண்டிருக்கிற ஒரு பாதை

retard : இயக்கத் தடை : அலை இயக்கத்திற்குத் தடை ஏற்படுத்துதல்

restoration : மீட்டாக்கம் : ஒவியங்கள், கட்டிடங்கள், மரபு வழியுற்ற உயிர்-தாவரவகை ஆகியவற்றை மூலவடிவுக்கு மறு புனைவாக்கம் செய்தல்

retaining walls: (க.க. ) அணை சுவர்: கரை உடைந்து விடாமல் காக்கும் சுவர்

retard:(தானி.) வேகங்குறை: அலை இயக்கத்திற்கு தடங்கலாக இருத்தல், கோள் இயக்கத்தைத் தடுத்து மந்தமாக்குதல்

retardation: வேகக்குறைப்பு : இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப் பின்பு நிகழ்வு

retardation of tide / retardation of high water: நீரேற்ற இடைவெளி: முழு நிலவுக்கும் கடல் நீரேற்றத்திற்கும் உள்ள இடைவெளி

retentivity: (மின்.) காந்த இருத்தி வைப்புத் திறன் : ஒரு பொருளிலிருந்து காந்த ஆற்றல் நீக்கப்பட்ட பின்பு அதில் காந்த ஆற்றலை இருத்தி வைத்துக் கொள்ளும் திறன்

reticule: நுண்வலைப் பின்னல்வரி: தொலை நோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல் வரி

reticulum: (உட.) இரண்டாம் இரைப்பை: அசைப்போடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை

retina: (உட.) விழித்திரை: கண் விழியின் பின்புறத் திரை

retort; வாலை: காய்ச்சி வடித்தலில் பயன்படுத்தப்படும் கீழ் நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம்

retrace: மீட்சி: (மின்.) நுண்ணாய்வு செய்யும் மின் கதிர்க் கற்றையானது, ஒரு வரியை நுண்ணாய்வு செய்த பிறகு மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்புதல்

retractable wheel: (வானூ.) உள்ளிழுப்புச் சக்கரம்: விமானத்தில், உடற்பகுதிக்குள் அல்லது சிறகுகளுக்குள் இழுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சக்கரம்

retrograde motion: (விண்.) பின்னோக்கு இயக்கம் : விண்கோள வகையில் கிழக்கு மேற்காகச் செல்லுதல் கோள் வகையில் சூரியன் நெறியிலே பின்னோக்கிச் செல்வது போல் தோன்றுதல்

retro rocket: (விண்.) பின்னோக்கி உந்து ராக்கெட்: ஒரு பொருளின் வேகத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளின் திசைக்கு நேர் எதிர்த்திசையில் உந்தித் தள்ளுகிற ராக்கெட்

return bend: (பட்.) வளை குழாய்: "U" வடிவில் அமைந்த பொருத்தப்பட்டுள்ள வளைவுக் குழாய்

reveal: (க.க.) பக்கச்சுவர் பரப்பு: கதவு, பலகணி ஆகியவற்றின் உட்புறப் பக்கச் சுவர்ப் பரப்பு

reverberation time: (மின்.) எதிரலை நேரம்: ஒரு குறிப்பிட்ட அலைவெண் கொண்ட ஒலியானது, ஒலி நின்ற பின்பு அதன் தொடக்க மதிப்பளவில் 10 இலட்சத்தில் ஒரு பகுதிக்குக் குறைவதற்குப் பிடிக்கும் நேரம்

reverse curve: மறுதலை வளைவு : "S" வடிவ வளைவு

reverse mould (வார்.) மறுதலை வார்ப்படம்: உள்ளபடியான வார்ப்படத்தைத் திணிப்பதற்குரிய ஒரு மாதிரி வார்ப்படம்

reverse plate : (அச்சு.) மறுதலை அச்சுத்தகடு: கறுப்புப் பின்னணியில் வெள்ளை வடிவங்களைப் பதிவு செய்யும் வகையில் கறுப்பு, வெள்ளை வண்ணங்களை மறுதலையாக அச்சிடக்கூடிய அச்சுத் தகடு

reversed polarity (மின்.) எதிர்த் துருவ முனைப்பு (மின் நேர்முனை): ஆதார உலோகத்திலிருந்து மின் முனைக்கு எலெக்ட்ரான்கள் பாயும்படி செய்கிற நேர் மின்னோட்டம்

reversible propeller; (வானூ.) மறுதலை முற்செலுத்தி : விமானத் தடை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மறுதலை அழுத்தம் விளைவிக்கும் வகையில் விசை மாற்றம் செய்யக்கூடிய முற் செலுத்தி அல்லது சுழலி

reversing gear: (எந்.) மறுதலைப் பல்லிணை: ஓர் எஞ்சினை அல்லது எந்திரத்தை எதிர்த்திசையில் இயங்குமாறு செய்யக்கூடிய பல்லிணை

revolution: (பட்.) சுற்றுகை: ஒரு பொருள் தனது அச்சில் ஒரு முழுமையான சுற்றினைச் சுற்றும் செயல். இது சுழற்சியிலிருந்து வேறுபட்டது. சுழற்சி என்பது ஒரு முழுச்சுற்றினையோ ஒரு சுற்றின் ஒரு பகுதியையோ குறிக்கிறது. சுழல் தண்டின் சுற்றுகை போன்ற ஒரு தொடர்ச்சியான சுழற்சியைச் சுற்று குறிக்கிறது

revolution counter: (எந்.) சுற்றுகை அளவி: ஒரு சுழல் தண்டின் சுற்றுகைகளின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான ஒரு சாதனம். ஒரு சுழல் தண்டின் முனையில் ஒரு முள்ளினை அழுத்துவதன் மூலம் சுற்றுகையின் எண்ணிக்கையான ஓர் எண் வட்டில் பதிவு செய்யப்படுகிறது

revolutions per minute: சுற்றுகை வேதம்: ஓர் எந்திரம் ஒரு நிமிடத்திற்குச் சுற்றும் வேகத்தின் வீதம்

revolving field: (மின்.) சுழல் புலம்: புலச்சுருள்களும் துருவங்களும் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டிருத்தல்

rf pickup; வானொலி அலைவெண் அனுப்பீடு: ஒலி,ஒளிச் சைகைகளின் வானொலி அலைவெண்

RH.(உயி.),ஆர்எச் காரணி:ரீசஸ்' (Rhesus) என்னும் சிறு குரங்கு வகையிலும், மனித இனத்திலும் குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைமம் ஊக்குவிக்கும் கூறு. இது எதிர்ச் செயல்காட்டாத ஆர்எச் காரணி (RH-negative) என்றும், எதிர்ச்செயல் காட்டுகிற ஆர்எச் காரணி (RH-positive) என்றும் இரு வகைப்படும். மனிதரிடையே குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப்படும்போது எதிர்ச்செயல் காட்டாமலிருப்பது எதிர்ச்செயல்காட்டாத ஆர் எச் காரணியாகும். எதிர் செயல் காட்டுவது எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியாகும். பிறக்காத குழந்தையிடம் எதிர்செயல்காட்டும் ஆர்.எச். காரணியும் தாயிடம் எதிர்ச் செயல்காட்டாத ஆர் எச் காரணியும் இருக்குமானால், தாயின் குருதியில் பாதுகாப்பான ஆர் எச் எதிர்ப்புப் பொருள் உண்டாகிறது. இந்தப் பொருள், இரண்டாவது எதிர்ச்செயல் காட்டும் ஆர் எச் காரணியுடைய குழந்தையின் குருதிக்கு எதிராகச் செயற்பட்டு, அக்குழந்தையின் குருதியில் சிவப்பணுக்களை அழித்துவிடக்கூடும். இதனால் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். தாயிடம் எதிர்ச்செயல் காட்டாத ஆர்எச் காரணி இருந்து, அவருக்கு முன்னர் எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியுடையகுருதி செலுத்தப்பட்டிருக்குமானால், இதே விளைவு ஏற்படும்

rheo-stat: (மின்.) தடைமாற்றி :உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு

rheostatic control: (மின்.)தடைமுறைக் கட்டுப்பாடு: ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு

rhodium: (உலோ.) ரோடியம்: பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த திண்ணிய வெண்ணிற உலோகத் தனிமம்

rhomboid: (கணி.) செவ்விணையகம்: எதிரெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரி சமமாக இருக்கும் இணைவகம்

rhombus: (கணி.) செவ்விணைவகம்: அண்டைப் பக்கங்கள் சரி சமமாகவும், கோணங்கள் விரி கோணங்களாகவும் உள்ள ஒரு இணைவகம்

rib: (உட.) விலா எலும்பு: உடலின் கவிமோட்டு உள்ளறைக்கு ஆதாரமாகவுள்ள எலும்புக்கூட்டின் வில்வளைவான சட்டக உறுப்பு

riddle: (வார்.) சல்லடை: கூலம், சரளைக்கல், கரித்ததூள் முதலியன சலிப்பதற்கான பெரும்படி அரி தட்டு

ridge: (க க.) கூடல் வாய்: இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு

ridge pole: (ச.க.) முகட்டு உத்தரம் : கூரை முகட்டு உத்தரம்

ridge roof: (க.க.) முகட்டுக் கூரை: மோட்டுக் கூடல் வாயில் உத்தரங்கள் சந்திக்கும் கூரை

ridge tiles: (க.க.) மோட்டு ஓடு : மோட்டுக் கூடல்வாய் ஓடு

riffler (உலோ.) தக்கப் பள்ளம்: அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக் கொள்ளும் பள்ளம்

'rigging: (வானூ.) கம்பிக் கயிற்றமைவு: விமானத்திலுள்ள கம்பிக் கயிற்றமைவுத் தொகுதி

right angle: செங்கோணம்/நேர்கோணம்: ஒன்றுக்கொன்று செங்குத்தாக நிற்கும் கோடுகளினால் உண்டாகும் 90° கோணம்

right-hand engine: (வானூ.) வலம்புரி எஞ்சின்: விமானத்தில் எதிரே நின்று பார்ப்பவருக்கு வலம்புரியாகச் சுழலும் முற்செலுத்தியினைக் கொண்ட எஞ்சின்

right-hand screw: (உலோ.) வலப்புறத் திருகாணி: கடிகாரம் சுற்றும் திசையில் (வலப்புறமாக) திருப்பும்போது முன்னேறிச் செல்லும் அமைவுடை திருகாணி

right- hand screw : (எந்.) வலம்புரியாணி : வலம்புரியாகச் சுழற்றும் போது முன்னேறும் அடைப்புடைய புரியாணி

right-hand tools: (பட்.) வலக்கைக் கருவி : வலது கையினால் கையாள்வதற்கேற்பச் செய்யப்பட்ட கருவி

right line : நேர்கோடு : இரு புள்ளிகளுக்கிடையிலான மிகக் குறுகிய தொலைவு

rigidity : விறைப்பு : வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை

ring : (கணி.) வளையம் : (1) ஒரே மையத்தைக் கொண்ட இரு சுற்று வட்டங்களிடையில் அடங்கிய சம தள உருவம். (2) சனிக்கோளின் தட்டு வளையம்

ring bolt : வளை மரையாணி : கண்வழியே ஒரு வளையம் கொண்ட கண்மரையாணி

ring cowling : (வானூ.) வளைய மேல் மூடி : வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக் கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது

ring gauge : (எந்.) வளை அளவி: புற விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி

ring gear : (தானி.) வளையப் பல்லினை : குடம் அல்லது மையத்துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை

ripple factor : (மின்.) , அதிர்வலை விகிதம் : ஒரு திருத்து பொறியின் உற்பத்தி அளவி அதிர்வலை மின்னழுத்தத்தின் பயன் மதிப்புக்கும் உற்பத்தி மின்னழுத்தத்தின் சராசரி நேர் மின்னோட்ட மதிப்புக்குமிடையிலான விகிதம்

ripple voltage : (மின்.) அதிர்வலை மின்னழுத்தம்: போதிய அளவு வடிகட்டுதல் இல்லாமையினால் மின் வழங்கீட்டின் நேர் உற்பத்தியில் ஏற்படும் மாற்று மின்னோட்டத்தின் அளவு

riprap : (பொறி.) ஆழ் நீர் அடித்தளம் : ஆழமான நீரில் அல்லது மென்மையான அடிப்பரப்பில் செறிவில்லாமல் சேர்த்துப் போடப்படும் உடைந்த கல் அடித்தளம்

ripsaw (மர.வே.) பிளப்பு ரம்பம் : மரக்கட்டைகளின் நார்வரி அமைப்பின் திசையிலே அவற்றை அனுப்புவதற்கு உதவும் ரம்பம், இதன் பல்லமைப்பு, ஓர் உளியைப் போல் அமைந்திருக்கும்

rise : (க.க) செங்குத்துத் தொலைவு : (1) ஒரு வில்வளைவின் பக்க உச்சிக்கும் வளைமுகட்டின் கீழ்வளைவுக்குமிடையிலான செங்குத்துத் தொலைவு

(2) ஒரு படியின் நிலைக் குத்துப் பகுதி.

rise and run ; (மர.வே.) சரிவு : செங்குத்தான நிலையினின்றும் சரிந்து செல்லும் கோண அளவைக்குறிக்கும் சொல்

riser : (க.க.,) படி நிலைக் குத்து : (1) இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர் வாயு முதலியவற்றைச் கொண்டு செல்வதற்கான அமைப்பின் செங்குத்து: குழாய் (3) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின்கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய்

rívet:(உலோ.வே.) குடையாணி :மறுபுறம் தட்டிப் பிணைத்து இறுக்குவதற்கான ஆணி. இவை தட்டையான அல்லது தட்டம் போன்ற அல்லது பொத்தான் போன்ற அல்லது காளான் போன்ற அல்லது வீங்கிய கழுத்துப் போன்ற கொண்டையுடையனவாக இருக்கும்

rivet forge : குடையாணி உலை : குடையாணிகளை அவை தேவைப்படுகிற இடத்தில் சூடாக்குவதற்காகக் கொதிகலன் செய்பவர்களால் அல்லது இரும்பு வேலை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய உலை

riveting: குடையாணி அடிப்பு : குடையாணிகளைக் கொண்டு இறுக இணைத்தல் அல்லது பிணைத்தல் rivet set: குடையாணி பொருத்தி:குடையாணிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் குடைவான அல்லது கிண்ண முகப்புக்கொண்ட எஃகுக் கருவி

roach: (வானூ.) கப்பல் கவிவு: கப்பலில் சதுரப்பாயின் அடியிலுள்ள கவிவு. இதிலிருந்து கணமான நீர்த்தாரை நீர்ப்பரப்புக்கு மேலே பீச்சி எறியப்படும்

road drag : சாலை இழுவை : சாலையின் மேற்பரப்பினைச் சமப்படுத்துவதற்காக அதன்மேல் இழுக்கப்படும் சாதனம். இது சாலையைச் சுரண்டிச் சமனிடும் எந்திரத்திலிருந்து வேறுபட்டது

roaster (தானி.) தங்குதுறை நாவாய்: கரையோரம் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல். இதில் இருவர் இருக்கலாம். பின்புறத்தில் சரக்குகள் வைப்பதற்கான அறை இருக்கும்

roadster: நீற்று உலை: கனியங்கள் அல்லது உலோகங்களிலிருந்து தீங்கு தரும் வாயுக்கள். கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை

roasting: (உலோ.) நீற்றுதல் : கனியங்கள் அல்லது உலோகங்களி லிருந்து தீங்கான வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாகச் செய்வதற்காகக் கையாளப்படும் செய்முறை

robot: எந்திர மனிதன்: மனிதன் செய்யும் காரியங்களைத் தானியங்கு எந்திர நுட்பங்கள் மூலம் தானே செய்திடும் எந்திரம். இத்தகைய கருவி மூலம் இயக்கப்படும் ஊர்தி அல்லது பொறி

rock crystal: (கனி.) படிகப் பாறை: நிறமற்ற, ஒளி ஊடுருவக் கூடிய படிகக்கல் வகை

rocket : (வானூ.) உந்து கூண்டு (ராக்கெட்): அக எரிபொருளாற்றலால் தொலைவுக்கு அல்லது உயரத்திற்கு உந்தித் தள்ளப்படும் உலோகத்தாலான நீள்வட்டு

rocket engine: (விண்.) ராக்கெட் எஞ்சின்: ஒருவகை ராக்கெட் செலுத்தும் சாதனம். இது தனது செயல்முறையில் ராக்கெட் முன்னோடியைவிடச் சற்றுச் சிக்கலான அமைப்புடையது

rococo : (க.க.) மிகு ஒப்பணை, கலைப் பாணி : மனைப்பொருள், சிற்பம் முதலியவற்றில் 17, 18 ஆம் நூற்றாண்டுப் பாணியை அடியொற்றி மிகையான உருவரை ஒப்பனைகளைச் செய்தல்

rod (மர.வே.) அளவு கோல் : செங்குத்துப் படிகளில் செங்குத்து உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல். கட்டுமானத்தில் 11 முழம் நீளமுடைய அளவை அலகு

rod assembly: (தானி.) இணைப்புக்கோல் தொகுதி: இணைப்புக் கோல், உந்து தண்டு, உந்து தண்டு ஊசி, உந்துதண்டு வளையங்கள் போன்றவை அடங்கியது

rod cell : (உட.) கண் நுண்கம்பி: கண்ணிலுள்ள நரம்பு உயிரணு, இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண் கூம்புகள் (கூம்புவடி நரம்பு முனைகள்) தீவிரமாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும்

rod ends , (பொறி.) இணைப்புக் கோல் நுனி: தாங்கிகளைக் கொண்ட இணைப்புக்கோல்களின் நுனிப்பகுதி. இதில் இணைப்புத் தகடு, திண்ணிய கொண்டை போன்ற வகைகள் உண்டு roentgen : (மின்.) ரான்ட்ஜென் : காமா கதிர்வீச்சுக் கதிர் படும் பரப்பினை அளவிடும் அலகு

roll : (விண்.) சுழல் வாட்டம்: ஒரு விண்வெளிக் கலத்தின் நீளவாக்கு அச்சின் நெடுகே சுழல்தல் அல்லது ஊசலாடி இயங்குதல்

roll : (தானி.) உருள்வு : சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம். நீட்டுப்போக்கான ஓர் அச்சில் ஒரு முழுச் சுழல்வு சுழலுதல்

rolled gołd: பொன் முலாம் உலோகம் : உலோகத்தின் மேலிடப்பட்ட மெல்லிய தங்கத் தகடு

rolled iron : (பொறி.) உருட்டு இரும்பு : உருட்டுதல் மூலம் வேண்டிய வடிவத்தில் செய்யப்பட்ட இரும்புத் தகடுகள்

rolled iron : (பொறி.) உருட்டு இரும்பு : உருட்டு முறையின் மூலம் தேவையான வடிவில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடு

roller bearing : (பொறி) உருள் தாங்கி : குண்டு தாங்கிகளில் பயன்படுத்தப்படும் வட்ட எஃகுக் குண்டுகளுக்குப் பதிலாகக் கெட்டிப்படுத்திய எஃகு உருளைகளினாலான தாங்கி

roller chain : உருளைச் சங்கிலி : ஓசையையும், உராய்வையும் குறைப்பதற்காக நீள் உருளைகளினால் அல்லது உருளைகளினால் செய்யப்பட்ட கண்ணிகளைக் கொண்ட சங்கிலி

rolley : பாரப் பொறி வண்டி : நான்கு தட்டை உருளைப் பொறி வண்டி

rolling : (வானூ.) உருள்வு : நீள அச்சுவாக்கில் ஒரு கோணத்தில் இயங்குதல்

rolling friction : (எந்.) உருள்வு உராய்வு : (1) ஒரு கோளவடிவ அல்லது நீள் உருளை வடிவப் பொருள் சமதளப் பரப்பில் உருளும் போது உண்டாகும் தடை (2) ஓர் ஊர்தி சாலையில் ஒடும் போது, சாலையிலுள்ள மேடுபள்ளம் காரணமாக ஏற்படும் தடை

rolling mill : உருட்டு ஆலை : உருட்டுதல் மூலம் இரும்பைத் தகடாக்கு ஆலை

rolling-press : அழுத்துப் பொறி

rolling stock : உருள் ஊர்தி : இருப்புப் பாதைமேல் உருண்டு செல்லும் இயக்கு பொறிகள். வண்டிகள் முதலியவற்றின் தொகுதி

roll titles : (தொ.கா) சுழல் தலைப்புகள் : சுழல் வட்டுருளையிலுள்ள வரிசையான பெயர்ப்பட்டியல், ஒளிப்படக் கருவியின் முன்பு இந்த வட்டுருளை சுழலும்போது இந்தப் பெயர்ப் பட்டியல் தொடர்ச்சியாக நகரும்

roman : (அச்சு.) ரோமன் அச்செழுத்து: எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண் வரைமான முனைப்பாகவுள்ள அச்செழுத்து வகை

roman-esque: (சு.சு.) ரோமானிய பாணி : பண்டைய ரோமானிய ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக் காலத்திய கோதிக் பாணிக்கும் இடைப்பட்ட நிலையில் வில் வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் நிறைந்த சிற்பப் பாணி

roof boards or roofers : (க.க. ) கூரைப் பலகைச் சட்டம் : கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்

roof truss : (க.க.) கூரைத்தாங்கணைவு : கூரைக்கு ஆதாரமாக ஒன்று சேர்த்துப் பிணைக்கப் பட்டுள்ள மரத்தினாலான அல்லது இரும்பினாலான ஆதாரக்கட்டு root : (எந்) வர்க்க மூலம் : கணிதத்தில் ஓர் எண்ணின் பெருக்க மூலம்

root diameter : (எந்.) ஆதார விட்டம்: ஒரு திரிகியையின் ஆதார விட்டம்

ஒரு பல்லிணைச் சக்கரத்தில் பல்லின் அடிப்புறத்தில் உள்ள விட்டம்

rope drilling : கயிற்றுத் துரப்பணம் : கயிற்றினால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடுதல்

rope driving : (எந். பொறி.) கயிற்று இயக்கம் : கயிற்றுப் பல்லிணை மூலம் விசையை மாற்றம் செய்தல். இது வார்ப்பட்டை இயக்கத்திலிருந்து வேறுபட்டது

rosebit : (எந்.) துளையிடு கருவி: துரப்பணத் துவாரங்களுக்கு மெருகேற்றும் திண்மையான நீள் உருளை வடிவ இணைத் துளையிடு கருவி

rose cutter : (பட்.) பட்டை வெட்டு கருவி : அரை உருள் வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட பட்டை வெட்டுகருவி

rose-engine : கடைசல் பொறி : ஒரு வகைக் கடைசல் பொறி அமைவு

Rosendale cement : ரோசண்டேல் சிமென்ட் : நியூயார்க் அருகிலுள்ள ரோசண்டேல் அருகில் கிடைக்கும் இயற்கை சிமென்டுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர்

rose reamer : (எந்.) பட்டைத் துளைச் சீர்மி : உலோகங்களில் துளையிடுவதற்கான பொறியமைவு. இதில் பக்கங்களுக்குப் பதிலாகச் சாய்வாகவுள்ள நுனி மூலம் வெட்டுதல் நடைபெறுகிறது

rosette : (க.க.) ரோசாவடிவ ஒப்பனை : ரோசா வடிவ ஒப்பனையுள்ள மரபுச்சின்னம்

rosette : (க.க.) ரோசாப் பூவணி: ரோசா வடிவத்திலான பூவணி வேலைப்பாடு

rose window : (க.க.) ரோசாப் பலகணி : ரோசாப்பூ வடிவில் அமைந்த பலகணி

rose wood : (மர.வே.) கருங்காலி : கறுப்பு நிறமுள்ள, கனத்த, கடினமான மேலடை மெல்லொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது

rosin : மண்டித்தைலம்: தேவதாரு மரங்களிலிருந்து பிசின் வடிவில் கிடைக்கும் பொருள். வெள்ளீய வேலைப்பாடுகளில் பற்ற வைப்பதற்கான உருகு பொருளாகப் பயன்படுகிறது. வண்ணங்கள். சோப்புகள் செய்வதற்கும் பயனாகின்றது

roster : வேலை முறையேடு : ஓர் அட்டவணை அல்லது பெயர்ப் பட்டியல்

rostrum : (க.க.) உரை மேடை : பொதுவில் உரையாற்றுவதற்குப் பயன்படும் பேச்சு மேடை

rotary : சுழல் பொறி :. ஒரு சக்கரம் போல் தனது அச்சில் சுழலும் பொறி

rotary converter : (மின்.) சுழல் ஒரு போக்கி : மாற்று மின்னோட்டச் சுற்று வழியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பொறி. இது நேர் மின்னோட்டத்தை அல்லது மாற்று மின்னோட்டத்தை வழங்கும்

rotary cutter : (எந்.) சுழல் கத்தி : ஒரு சுழல் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள, சுழலும் கத்தி. இது சுழலும் போது வேலைப்பாடு செய்யப்படும் பொருள் வெட்டப்படுகிறது rotary engine : (வானூ.) சுழல் எஞ்சின் : ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள் கொண்ட ஓர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத் தண்டினைச் சுற்றிச் சுழலும்

rotary induction system : (வானூ.) சுழல் தூண்டல் முறை : ஆரை எஞ்சின்கள் மீது பயன்படுத்தப்படும் எரி-வளி கலப்பித் தூண்டல் முறை. இதில் எரி பொருள் செறிவினை நீர் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்வதில் ஒரு சுழல் விசிறி உதவுகிறது

rotary press : (அச்சு.) சுழல் அச்சு எந்திரம் : சுழல் முறையில் அச்சுப் பொறி. இதில் அச்சிடும் பரப்பு ஒரு சுழலும் நீள் உருளையு பிணைக்கப்பட்டிருக்கும். ஓர் உருளைச் சுருளிலிருந்து காகிதம் ஊட்டப்படும்

rotary switch : (மின்.) சுழல் விசை : ஒரு சுழல் தண்டின் சுழற்சி மூலம் முனைகளிடையே தொடர்பு உண்டாகும் ஒரு மின் விசை

rotogravure : (அச்சு.) சுழல் செதுக்குருவ அச்சு வேலை : ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைபாட்டிலிருந்து ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சு வேலை

rotor : (வானூ.) சுழலி : (1) விமானத்தில் ஒரு சுழல் சிறகு அமைப்பிலுள்ள முழுச் சுழற்சிப் பகுதி (2) ஒரு மாற்று மின்னோடியின் அல்லது மின்னாக்கியின் ஒரு சுழல் உறுப்பு

rotor-craft : (வானூ.) சுழலி விமானம்: எல்லா உயரங்களிலும் சுழலி அல்லது சுழலிகளினால் முழுமையாக அல்லது பகுதியாகத் தாங்கப்படுகிற ஒரு விமானம். இதில் விமானத்தின் காற்றழுத்தத் தளம், ஓர் அச்சினைச் சுற்றிச் சுழல்கிறது

rotten-stone : மெருகுச் சுண்ண மணற்கல் : நுண்ணிய பொடியாக விற்பனை செய்யப்படும் சிதைந்த சுண்ணாம்புக்கல். இது பரப்புகளை மெருகிடுவதற்குப் பயன்படுகிறது

rottenstone : (மர.வே.) சுண்ண மணற்கல் : சிதைந்து போன சுண்ணாம்புக் கல்லிலிருந்து செய்யும் நுண்ணிய தூள். இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது

rotunda : (க.க.) வட்டக் கூடம் : வட்ட வடிவ அறை

rouge : (வேதி.) அய ஆக்சைடு : (Fe2O3:) இது அயச் சல்பேட்டைச் (FeSO4) சூடாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வண்ணச் சாயமாகவும், கண்ணாடி, உலோகம், நவமணிகள் ஆகியவற்றில் மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது

roughcast :, (க.க.) குத்துச் சாந்து : சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து

rough cut : (எந்.) அராவுதல் :கரடுமுரடான பகுதிகளை அராவி அறைகுறையாக மெருகிடுதல்

roughing tool : (எந்.) அராவு கருவி : சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது

rough lumber : முரட்டு வெட்டு மரம் : ரம்பத்தினால் வெட்டப்பட்ட சீர்வடிவற்ற வெட்டு மரம்

roundel : பதக்கம் : வட்டவடிவ மான ஒப்பனை வாய்ந்த விருதுப் பதக்கம்

round measurements: (உலோ,) வட்ட அளவீடுகள்: ஒரு பொருளின் விட்டம், ஆரம் போன்றவற்றின் அளவீடுகள்

round nose tool: (எந்.) வட்ட முனைக் கருவி: சொர சொரப்பான பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கருவி

round-point chisel: (எந்.) வட்ட நுனி உளி: எண்ணெய் வரிப் பள்ளங்களை வெட்டுவதற்குப் பயன்படும் வட்ட நுனி கொண்ட சிற்றுளி

round-tube radiator: (தானி.) வட்டக்குழாய்க் கதிர்வீசி: சேமக்கலத்தின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்பகுதிக்குச் செல்லும் வகையில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட வட்ட வடிவக் குழாய்கள் பயன்படுத்தப்படும் வெப்பம் கதிர் வீசி. வரிசையாக அமைந்த மென் தகடுகள் வழியே இந்தக் குழாய்கள் செல்லும் போதும் அவற்றில் ஆவிக் கசிவு ஏற்பட்டு, குளிர்விக்கும் அமைப்பில் உண்டாகும் வெப்பம் முழுமையான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறது

Roving: (குழை.) முதிரா இழை: இழுத்துச் சற்றே முறுக்கப்படும் பஞ்சு, கம்பளம் முதலியவற்றின் சிம்பு

Rowland's law:(மின்.) ரோலண்ட் விதி: காந்தச் சுற்று வழிகளுக்கான ஒரு விதி. காந்தப் பாய்வின் கோடுகளின் எண்ணிக்கையானது மின்காந்த இயக்க விசைக்கு நேர் விகிதத்திலும் மின்சுற்று வழியின் காந்தத் தடைக்கு தலைகீழ்வீதத்திலும் இருக்கும் என்பது இந்த விதி

rowlock: (க.க.) உகை மிண்டு: படகுத் துடுப்பு உகைப் பாதாரமான அமைவு

royal: எழுது தாள்: எழுதுவதற்கான 24" x 19" அளவுள்ள தாள்

royal drawing paper: பட வரைவுத் தாள்: படம் வரைவதற்கான 61 x 48 செ.மீ. அளவுள்ள தாள்

rubber :(வேதி.) ரப்பர்: சில வெப்ப மண்டல மரங்களின் பால் போன்ற சாற்றிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன். இது மிகுந்த நெகிழ்திறன் உள்ளது. நீரும் வாயுக்களும் இதில் உட்புகா. எனவே, இது தொழில் துறையில் மிகுதியாகப் பயன்படுகிறது. உந்து ஊர்திகளுக்கான டயர்கள், நீர்காப்பு, மின்காப்பு ஆகியவற்றுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது

rubber cement: ரப்பர் சிமென்ட் : பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு முறைகளில் ரப்பர் சிமென்ட் செய்யப்படுகிறது. கச்சா ரப்பரை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கரைப்பானைச் சேர்ப்பதன் மூலம் சாதாரண ரப்பர் சிமென்ட் செய்யப்படுகிறது. கரைப்பானாகப் பயன்படுத்த கார்பன் டை சல்பைடு மிகச் சிறந்தது. பென்சால் நல்லது; மிகவும் மலிவானது; கேசோலினும் கரைப்பானாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

rubble: (க.க.) கட்டுமானக் கல்: கொத்தாத கட்டுமானக் கல்

rubble masonry: (க.க.) கற்கட்டுமான வேலை: கொத்தாத கட்டுமானக் கல் கொண்டு அடித்தளம் அமைதல் போன்ற நயமற்ற கட்டிட வேலை செய்தல்

rubidium: ருபீடியம்  :மென்மையான வெள்ளீய உலோகத் தனிமம் rubrication : (க.க.) பின்புல வண்ணப்பூச்சு : இனாமல் அல்லது வண்ணப்பூச்சு மூலம் ஒரு பின் புலத்திற்கு வண்ணம் பூசுதல்

rub stone : சாணைக்கல்: சாணை பிடிப்பதற்குப் பயன்படும் கல்

ruby: கெம்புக்கல்: ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம் வரை உள்ள மணிக்கல் வகை

rudder: (வானூ.) சுக்கான்: விமானம் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்துவதற்காக விமானத்தின் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு

rudder angle: (வானூ.) சுக்கான் கோணம் : விமானத்தின் சுக்கானுக்கும் அதன் சமதள ஒரு சீர்மைக்குமிடையிலான கூர்ங்கோணம்

rudder pedals: (வானூ.) சுக்கான் மிதிகட்டை: சுக்கானைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கான மிதி கட்டைகள்

rudder torque: (வானூ.) சுக்கான் முறுக்கம்: விமானத்தின் மீது சுக்கான் மூலம் செலுத்தப்படும் திரிபு முறுக்கம்

rule: (அச்சு.) இடைவரித் தகடு: அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக்கோடு

ruling machine: (அச்சு.) வரியிடு பொறி: அச்சுக்கலையில் தாளில் இணைவரிகள் இடுவதற்கான கருவி

rumen: (வில.) தீனிப்பை: அசை போடும் விலங்கின் முதல் இரைப்பை

rung (wood turns): குறுக்குக் கம்பி : குறுக்கு ஆரவரிப் பட்டிகை, ஏணிப்படி

runic: (அச்சு.) அணிவரி அச்சுரு:பண்டைய ஜெர்மானிய இன வரிவடிவ எழுத்துப் பாணியில் அமைந்த அணிவரி அச்சுரு

runner (குழை.) வார்ப்புப் புழை: உலோக வார்ப்புச் சட்ட வார்ப்புப் புழை

running head: (அச்சு.) தொடர் தலைப்பு: ஒரு நூலில் பக்கந் தோறும் திரும்பத் திரும்பத் தொடர்ந்து வரும் தலைப்பு

runway: (வானூ.) ஓடுபாதை: விமான நிலையத்திலுள்ள எல்லாப் பருவ நிலைகளிலும் ஏறி இறங்குவதற்கான ஓடுபாதை

runway localizing beacon: (வானூ.) ஓடுபாதை ஒளிவிளக்கு: விமான நிலையத்தில் ஓடுபாதை நெடுகிலும் அல்லது தரையிறங்கு தளத்தில் அதற்குச் சற்றுத் தொலைவிலும் பக்கவாட்டிலும் ஒளி பாய்ச்சி வழிகாட்டுவதற்கான சிறிய ஒளி விளக்கு

rupture: குடற்சரிவு : குடற்சரிவினால் உண்டாகும் கோளாறு

rupture member: (குளி.பத.) முறிவு உறுப்பு: முன்னரே தீர்மானிக்கப்பட்ட அழுத்தத்தை எட்டியதும் தானாகவே முறிந்துவிடக் கூடிய ஒரு சாதனம்

rush: நாணற்புல்: நாற்காலிக்கு அடியிடுவதற்குப் பண்டைக்காலம் முதல் பயன்படும் பிரம்பு வகை நாணற்புல்லின் தண்டு

rust: (வேதி.) இரும்புத்துரு: நீருடன் இணைந்த அய ஆக்சைடு

rustication: (க.க.) மேற்பரப்பு அளி: கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடு முரடான மேற்பரப்பு அளி rusting: (வேதி.) வண்ணச் சாய மிடல்: நவச்சாரக் கரைசலில் அல்லது வலுக்குன்றிய ஹைட்ரோ குளோரிக் அமிலக் கரைசலில் பளபளப்பான உலோகத் தோரணிகளை நனைத்து, வண்ணப் பூச்சு உறிந்துவிடாத் வகையில் சாயமிடுதல்

rust joint : (கம்.) துருப்பிணைப்பு: கசிவைத் தடுப்பதற்கு அல்லது மிகுதியான அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஓர் ஆக்சிகரணியைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிணைப்பு

ruthenium: (உலோ.) ருதேனியம்: விழுப்பொன் வகையைச் சார்ந்த அரிய திண்மத் தனிமம். இது பிளாட்டினத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும், பேனாமுனை உலோகக் கலவைகள் செய்வதற்கும் பயன்படும் அரிய உலோகம் 
S

sabin: (குளி.ப.த.) சபீன்: ஒலி ஈர்ப்புத் திறனை அளவிடுவதற்கான அலகு. ஒரு பொருளின் மேற்பரப்பின் ஒரு சதுர மீட்டரின் நிகழ்வு ஒலியாற்றல் முழுவதையும் ஈர்த்துக் கொள்வதற்கு இது சமம்

sacral: (உட.) இடுப்படி மூட்டெலும்பு: இடுப்பு முக்கோண மூட்டெலும்பு

saddle: சேணம்: (1) மெருகிட்ட மட்பாண்டங்களைச் சுடும்போது அவற்றைத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் களிமண்னினாலான கோல் (2) கடைசல் எந்திரத்தின் படுகையில் அமைந்துள்ள ஒரு சறுக்கு ஆதாரம்

(3) ஓர் ஆரைத் துரப்பணத்தில் துரப்பணக் கதிரையும், பல்லிணைச் சக்கரங்களையும் கொண்டு செல்லும் சறுக்குத் தகடு

saddle-boiler: குடுவை கொதி கலம்: கருவி கலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற் கவிவான கொதிகலம்

saddle stitch: சேனத் தையல் : ஒரு துண்டு வெளியீட்டின் தாள்களைச் சேர்த்துத் தைப்பதற்கான ஒருமுறை. இதில் நடு மடிப்பில் நூல் அல்லது கம்பி மூலம் தைக்கப்படும். இவ்வாறு தைப்பதன் மூலம் துண்டு வெளியீட்டினைத் தட்டையாகத் திறந்திட முடியும்

S.A.E. formula : உந்து ஊர்திப் பொறியாளர் கழகச் சூத்திரம்: கேசோலின் எஞ்சின்களின் குதிரைத் விசைத் திறனைக் கணக்கிடுவதற்கு உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E.) வகுத்துள்ள சூத்திரம். அதாவது, ஒரு நிமிட உந்து தண்டின் வேகத்திற்கு 1000 அடி என்ற அடிப்படையில்

குதிரைத்திறன் (H.P.) = (D2 X N)/2.5

D - நீள் உருளையின் துவாரத்தின் விட்டம் (அங்குலத்தில்) N - நீள் உருளைகளின் எண்ணிக் கை. 2.5 மாறாத எண்

S.A.E. or society: உந்து ஊர்திப் பொறியாளர் கழகம்: (S.A.E.): S.A.E. என்பது உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (Society of automotive engineers) என்பதைக் குறிக்கும். எந்திரவியல் உறுப்புகளில் S.A.E. என்ற சுருக்கெழுத்துகள் இருந்தால், அந்த உறுப்பு இந்தக் கழகம் நிர்ணயித்துள்ள் தர அளவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும்

S.A.E. steels: எஸ்.ஏ.இ. எஃகு: உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E. ) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இல்க்கம், ஓர் எஃகு பொதுவாக கார்பன் எஃகு, நிக்கல் எஃகு, நிக்கல் குரோமியம் முதலியவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம், உலோகக் கலவைத் தனிமம் எது என்பதைக் குறிக்கும். கடைசி இரண்டு அல்லது மூன்று இலக்கங்கள், கார்பனின் அள வைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 2345 என்ற எண், 3% நிக்கல், 0.45% கார்பன் கொண்ட நிக்கல் எஃகினைக் குறிக்கும்

safe carrying capacity : (க.க) காப்புச்சுமைத் திறனளவு: எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புகம்பிகளுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும், மின் கடத்திகளைப் பொருத்தும் போது இந்தத் திறனவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

safe edge: (பட்.)காப்பு முனை: ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும்போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது

safe load: (பொறி.) காப்புப் பாரம் : எந்திரத்தில் செயற்படும் அழுத்தத்திற்கு மேற்படாத வகையில் ஒரு பகுதி தாங்கிக்கொள்ளக்கூடிய பாரத்தின் அளவு

safety factors: (பொறி.) காப்புறுதிக் காரணிகள்: எதிர்பாராத சூழ் நிலைகளில் எந்திரங்களில் பாரம் சற்று அதிகமாகிவிட்டால், அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் காப்புறுதியாக அமைக்கப்படும் காரணிகள்

safety lamp:(கனி.) காப்பு விளக்கு : சுரங்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் எளிதில் தீப்பற்றாத விளக்கு

safety paper: (அச்சு.)இணை காப்புத் தாள்: பொருளகக் காசு முறிக்குரிய போலி செய்ய முடியாத தாள்வகை

safety switch: (மின்.) காப்பு விசை: ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து, வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கத்தி முனை மின்விசை

safety valve : (பொறி.) காப்பு ஒரதர் : கொதிகலனில் அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு

sag : புடை சாய்வு : பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ்ந்து தாழ்வுறுதல். காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் தன்மை

sagger : சூளைக்களிமண் உறை : நுட்பமான களிமண் பொருள்களைச் சூளையில் சுடும் போது அவற்றை வைப்பதற்கான களி மண உறை

sal ammoniac : (வேதி. ) நவச்சாரம்: அம்மோனியம் குளோரைடு (NH4CL) வாயு உற்பத்தியில் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. பற்ற வைத்தல், சாயப்பொருட்கள் உற்பத்தி,காலிக்கோ, அச்சு முதலியவற்றில் உருகு பொருளாகப் பயன்படுகிறது

salon : (க.க.) வரவேற்பு அறை: வரவேற்புகள் நடத்தவும் காட்சிப் பொருள்களை வைப்பதற்கும் பயன்படும் ஒரு பெரிய அறை

salt soda : (வேதி.) சலவைச் சோடா : கண்ணாடி தயாரிப்பு. சோப்பு உற்பத்தி, துணிகளைச் சலவை செய்தல், சாயமிடுதல், காகித உற்பத்தி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சலவை சோடா

salt : (வேதி.) உப்பு : ஓர் உப்பு மூலத்தினால் ஒர் அமிலத்தைக் காடி-காரச் செயல்கள் இரண்டு மற்றதாகச் செய்யும் போது உண்டாகும் ஒரு பொருள் உலோகத் தனிமமும், அலோகத் தனிமமும் அடங்கிய ஒரு கூட்டுப் பொருள்

salt of tartar : (வேதி.) பொட்டாசியம் கார்பனேட்டு: புடமிடப்பட்ட சாம்பரக் கரியகை (K2CO3H2O)

salt of vitriol : துத்தக் கந்தகி

salt of wisdom : பாதரச நவச்சிய பாசிகை

saltpeter : வெடியுப்பு : பொட்டாசியம் நைட்ரேட்டு (KNO3) வெடி மருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண் படிக உப்பு

samite : பொன்னிழையாடை : பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப் பெற்ற இடைக்கால உயர் ஆடை வகை

sandal wood : சந்தன மரம் : நறுமணமுடைய நெருக்கமான அகவரி வண்ண நெருக்கமுடைய கனமான மரம். கிழக்கிந்தியத் தீவுகளில் தோன்றியது

sand-bath : (வேதி.) மணற்புடம்: வேதியியல் செய்முறையில் சம வெப்பத்திற்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம்

sand-box : (உலோ.) ஒத்து மணற்கலம் : வார்ப்புக்குப் பயன்படுத்தப்படும் மணற்கட்டி வார்ப்பு அச்சுரு

sand-glass : மணல் வட்டில் :மணல் நாழிகை வட்டில்

sandivar : கண்ணாடிப்புரை : கண்ணாடி உருக்கும் போது உண்டாகும் நுரை

sand blasting: மணல் ஊதைப் பீற்று: கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணியதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல் பீற்று

sanding: மணல் மெருகு : மேற்பரப்புகளுக்கு மணல் மூலம் மெருகூட்டுதல்

sand paper: உப்புத் தாள்: கூர்மையான மணல் பூசிய தாள். இது உராய் பொருளாக, முக்கியமாக மரவேலைப்பாடுகளின் மேற்பரப்புகளுக்கு மெருகிடு பொருளாகப் பயன்படுகிறது. இதனைப் 'பளிங்குத்தாள்' என்றும் கூறுவர்

sand-pump: ஈர மணல் இழுப்புக் குழாய்: துரப்பணம் முதலிய கருவிகளைத் துப்புரவு செய்யும் கருவி; துப்புரவுக் குழாய்

sand-stone: மணற்பாறை : அழுத்தமுற்ற மணல் அடுக்குக்கல்

sandstone: மணற்பாறை: சிலிக்கா அய ஆக்சைடு, சுண்ணாம்புக் கார்பனேட்டு ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டு அழுத்தமுற்ற மணல் அடுக்குக்கல் கட்டிடக் கல்லாகப் பயன்படுகிறது. இயற்கை மணற்பாறையினால் சாணைக் கற்கள் செய்யப்படுகின்றன

sandwich : (குழை.) இடையீட்டுப் பொருள் : இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்குத் தகடுகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது

sanitary : சுகாதாரம் : உடல் நல மேம்பாட்டிற்குரிய, சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய

sanitary sewer : சாக்கடை நீர்க்கால் : கழிவு நீரை வெளியேற்றுவதற்கான குழாய் அல்லது சுரங்க வழி

sanitation : (பொறி.) சாக்கடை நீக்கம் : சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய ஏற்பாடுகள்

sans-serif : (அச்சு.) மொட்டை அச்சுரு : அச்சுருவகையில் ஓரங்கட்டாத மொட்டை முனையுடைய அச்சுரு

sap: (தாவர.) தாவர உயிர்ச் சாறு: தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாறு

sapling : (தாவர.) நாற்று : கன்று, இளஞ் செடி

saponification : சவர்க்காரமாக்குதல் : சவர்க்காரம் போன்று வழுவழுப்பானதாக ஆக்குதல்

sap wood : மென்மரம் : புறமரத்தின் மென்மையான உட்பகுதி

sash : (க.க.) பலகணிச் சட்டம் : பலகணியின் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகை

sash chain : பலகணிச் சட்டச் சங்கிலி : சறுக்குப் பலகணிச் சட்டம் இயக்கும் பளுவேந்திய சங்கிலி

sash weight : பலகணிச் சட்ட இயக்கு பளு : சறுக்குப் பலகணிச் சட்டத்தின் இயக்கு பளு

sassafras : (தாவர.) மருந்துப் பட்டை மரம் : மங்கலான ஆரஞ்சு நிறமுடைய, துளையுடைய, எளிதில் முறியக் கூடிய மென்மரம். இது தென் அமெரிக்காவில் வளர்கிறது

satellite : துணைக் கோள் : ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் சார்புக் கோள்

satellite television station : செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் : ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இணைவனத்திலிருந்து ஒளிபரப்பப் படுமானல் அதனைச் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் என்பர். இந்த நிலையம் இணைவன நிகழ்ச்சிகளோடு, உள்ளுர்ச் செய்திப் படங்களையும் ஒளிபரப்பும். இந்நிலையம், ஒரு தலைமை நிலையத்தின் ஒளிப்பரப்புப் பகுதிக்கு வெளியேயுள்ள சமுதாயத்திற்கும் பணிபுரிய முடியும்

satelloid : (விண்.) செயற்கைக் கோள் கலம் : பூமியைச் சுற்றி விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் வகையில் பாதி விமானம் போன்றும், இன்னொரு பாதி செயற்கைக்கோள் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ள மனிதரால் இயக்கக்கப்படக் கூடிய ஒரு விண்வெளி ஊர்தி

satin wood : முதிரை மரம் : ஒரு வகை மென்மரம். முக்கியமாக இலங்கையில் காணப்படுகிறது. கனமானது; வெண்மைகலந்த நிறமுடையது; மெல்லிழை போன்ற கோடுகளுடையது. உயர்தரமான் அறைகலன்கள் தயாரிக்கப் பயன்பயன்படுகிறது

saturated air : (குளிர் பத.) பூரிதக் காற்று: ஒரே வெப்ப நிலையில் காற்றும் நீராவியும் கலந்த ஒரு கலவை

saturated steam : பூரித நீராவி : ஒரு குறிப்பிட்ட அழுத்து நிலுைக்கு நேரிணையான கொதி நிலை வெப்பத்தில் உள்ள நீராவி. நீராவி எந்த நீரிலிருந்து உண்டாகிறதோ அந்த நீருடன் தொடர்பு கொண்டுள்ள நீராவி

saturation : (மின்.) செறிவு நிலை : பொருளில் மின்னாற்றல் செறிந்துள்ள நிலை. இந்த நிலையை எட்டியபின் ஆம்பியரை அதிகரித்தாலும் காந்த் விசைக் கோடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை saturation current : (மின்.) பூரித மின்னோட்டம் : பூரித மின்னழுத்தம் ஒரு தகட்டில் செலுத்தப்படும் போது எலெக்ட்ரான் குழல் வழியாகச் செல்லும் மின்னோட்டம்

saturation voltage : (மின்.) பூரித மின்னழுத்தம்: ஒரு வெற்றிடக்குழலின் தகடு, வெளிப்படும் எலெக்ட்ரான்கள் அனைத்தும் ஈர்க்கும் வகையில் அந்தத் தகட்டில் செலுத்தப்படும் மின்னழுத்தம்

saturation temperature : (மின்.) பூரித வெப்பநிலை : ஓர் எலெக்ட்ரான் குழலில் வெப்பநிலை மேலும் உயர்ந்தாலும் தகட்டின் மின்னோட்டம் அதிகரிக்காமலிருக்கும் போதுள்ள எதிர்முனை வெப்ப நிலை

saw : (மர.) ரம்பம் / ஈர்வாள்: பலகைகளை அறுப்பதற்கேற்ப வாள்போல் பற்கள் அமைந்த மெல்லிய தட்டையான உலோக அறுப்புக் கருவி

sawdoctor (பொறி.) ரம்பப்பல் எந்திரம் : ரம்பத்தின் பற்கள் செய்வதற்கான எந்திரம்

sawhorse : (மர.வே.) அறுப்பணைப்புச் சட்டம்: தச்சர்கள் பயன்படுத்தும் வழக்கமான சாய்கால். சில சமயம் இது 'X' வடிவ சட்டத்தையும் கொண்டிருக்கும்

saw set : (மர.வே.) ரம்பநெளிவுக் கருவி : ரம்பப் பற்களை இரு பக்கமும் திருப்புவதற்கான கருவி

ரம்ப நெளிவுக்கருவி (படம்)

sawtooth wave : (மின்.) ரம்பப்பல் அலை: இரம்பத்தின் பற்களைப் போன்று வடிவமுடைய அலை

saw toothed skylight : (க.க.) ரம்பப் பல் சாளரம் : ரம்பப் பற்களின் வடிவத்தில் முகப்புடைய மேல்தளச் சாளரம்

saw trimmer : (அச்சு.) ரம்பக் கத்திரி: அச்செழுத்து வரிப்பாளங்களையும், தகடுகளையும் செம்மையாகக் கத்திரித்து விடுவதற்குப் பயன்படும் ஒருவகை எந்திரம்

sawyer : (மர.வே.) மரம் அறுப்பவர் : ஆலையில் அல்லது களத்தில் ஒரு வட்ட ரம்பத்தை இயக்கி மரம் அறுப்பவர்

saxatile: (உ.யி.) பாறை உயிர்கள்: பாறைகளிடையே உயிர் வாழ்கிற உயிரினங்கள்

saybolt test : (தானி.) பசைச் சோதனை : எண்ணெயின் பசைத் தன்மையை அளவிடும் சோதனை

scaffold : (க.க.) சாரக்கட்டு : கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதாரமாகப் பயன்படும் தற்காலிகக் கட்டமைப்பு

scaffold height : (க.க.) சாரக்கட்டு உயரம் : சாரக்கட்டின் பல்வேறு நிலைகளுக்கிடையிலான இது பொதுவாக 4 அல்லது 5 இருக்கும். இந்த இடைவெளிக்குள் கொத்தனார் நின்று கொண்டு தன் வேலையைச் செய்வார்

scagliola : (க.க.) செயற்கை ஒப்பனைக்கல்: ஒப்பனைக்கல் போலியாகச் செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு. தளங்கள், தூண்கள் முதலியவற்றை அழகுபடுத்துவதற்கும் பிற உள் அலங்கார வேலைகளுக்கும் பயன்படுகிறது

scale : அளவுகோல் : (1) சிறு அளவுக் கூறுகள் குறிப்பிடப்பட்ட அளவு கோல்

அளவுகோல்(படம்) (2) குறியீட்டு முறையின் அடிப்படையிலான அளவுத் திட்டம் (3) உலோகக் கலையில் அளவுப் படிநிரை (4) உலோகக் கலையில் வார்ப்படத்தின் புறப்பூச்சு

scaled drawing: படிவிழுக்காட்டு வரைபடம் : ஒரு பணியினை சிறிய அளவு வீதங்களில் வரைந்த வரைபடம்

scale height : (விண்.) நிரை உயரம் : வாயு மண்டலத்தில் எந்த ஒரு நிலையிலும் அடர்த்திக்கும் வெப்ப நிலைக்குமிடையிலான தொடர்பினை அளவிடும் அலகு

scalene (கணி.) ஒவ்வாச்சிறை முக்கோணம் : எந்த இரண்டு பக்கங்களும் சமமாக இல்லாத ஒரு முக்கோணம்

முக்கோணம்(படம்)

scalene cone : அடிச்சாய்வு கூம்பு : அச்சு அடியை நோக்கிச் சாய்ந்துள்ள கூம்பு

scalene cylinder : அடிச்சாய்வு நீள் உருளை: அச்சு அடியை நோக்கிச் சாய்ந்துள்ள நீர் உருளை

Scalpel: (மருந்.) அறுவைக்கத்தி: அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கத்தி

scalper : (மருந்.) அறுவை அரம் : அறுவை மருத்துவர் பயன்படுத்தும் அரம்

Scanmony - (மருத்) பேதி மருந்துப்பிசின்: கடும் பேதி மருந்தாகப் பயன்படும் பிசின்

scan : (மின்.) நுண்ணாய்வு : தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி நிழல், ஒளிக் கூறுகளை நுண்ணாய்வு செய்து தனித் தனியே பகுத்தல்

Scanning : தொலை நுண்ணாய்வு: தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி நிழல் - ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து இடமும் வலமும் மேலும் கீழுமாக கடும் வேகத்தில் செலுத்தி உருகாட்சி தோன்றும்படி செய்தல்

scanning line : நுண்ணாய்வுக் கோடு : தொலைக் காட்சியில் தொலைவுக்கனுப்பப்படும் படத்தின் இடம் வலம் செல்லும் ஒரு கோடு

scantling : (க.க) மரப்பட்டியல் :' 13செ.மீ. கனத்திற்குக் குறைவான அகலத்திட்டங்களையுடைய மரப்பட்டியல்

scarehead : பரபரப்புத் தலைப்பு : செய்தித் தாள்களில் பரபரப்பூட்டக் கூடிய கொட்டை எழுத்துச் செய்தித் தலைப்பு

scarification : கிளறல் : சாலையைப் பழுது பார்ப்பதற்காக மேலீடாகக் கிளறிவிடுதல்

scarfing : சமநிலைப் பொருத்தீடு : மரம், தோல், உலோகம் முதலியவற்றில் வாய்களைச் சமநிலைப்டுத்தி ஒன்றாக இணைத்துப் பொருத்துதல்

scatter propagation : (மின்.) பரவல் அனுப்பீடு : வானொலி அலைகளை அடிவானத்திற்கு அப்பால் பரவலாக அனுப்பீடு செய்தல்

schematic: (மின். ) விளக்க வரைபடம் : மின் இணைப்புகளையும் பல்வேறு உறுப்புகளையும் காட்டும் மின்னியல் அல்லது மின்னணுவியல் சுற்றுவழியின் வரைபடம்

sciagram : (இயற்.) ஊடுகதிர் ஒளிப்படம்: உட்புறம் தெரியும்படி எடுக்கப்பட்ட செங்குத்து வெட்டு ஒளிப்படம் sciagraphy: (இயற்.) ஊடுகதிர் ஒளிப்படக்கலை: உட்புறம் தெளிவாகத் தெரியும்படி நேர்குத்து வெட்டாக ஒளிப்படம் எடுக்கும் கலை

scientific: அறிவியல் முறை: அறிவியலுக்குரிய திட்பநுட்பத்திறம் வாய்ந்த முறை

scissors truss (க.க.) கத்திரித் தாங்கணைவு: கத்திரி போன்று அமைப்புடைய ஒருவகை கூரைத் தாங்கனைவு. மண்டபங்கள், தேவாலயங்கள் போன்றவற்றின் கூரைகளைத் தாங்குவதற்கு இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

sclerometer: (பொறி.) உலோகத் திண்மைக் கணிப்புமானி : உலோகங்களின் கடினத் தன்மையைக் கணித்தறிவதற்கான ஒரு கருவி. உலோகத்தின் மேற்பரப்பில் இதனை ஒரு முறை முன்னேயும் பின்னேயும் பாய்ச்சிக் கிடைக்கும் சிம்பினை ஒரு தர அளவுடைய சிம்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கடினத் தன்மை கணக்கிடப்படுகிறது

sclerroscope : (உலோ.) திண்மை அளவு கருவி: ஒரு பொருளின் கெட்டித் தன்மையை அளவிடுவதற்கான ஒரு கருவி

sconce : மெழுகுத்திரி: அலங்கார மெழுகுவர்த்தி விளக்கு

scored cylinders : உள்வரி நீள் உருளை (தானி. எந்.): உந்து ஊர்தி போன்றவற்றின் எஞ்சின்களிலுள்ள பளபளப்பான நீர் உருளைகளின் சுவர்களில், நீர் உருளைக்குள் அயல் பொருட்களை உட்செலுத்துவதற்காக உள்வரியிடுதல். இவ்வாறு உள்வரியிட்ட உருளைகள் உள்வரி நீள் உருளைகள் எனப்படும்

scoring of pistons and cylinders : (தானி.) உள்வரியிடல் : நீள் உருளைகளுக்கும், சுழல்தண்டுகளுக்கும் முறையாக மசகிடுவதற்காக உள்வரியிடுதல்

scotia : (க.க.) தூண்டிக் குழிவு : ஒரு தூணின் அடிப்பகுதியில் காணப்படும் குழிவான வார்ப்படம்

scrap : (வார்.) உலோகச் சிம்பு: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் பயனற்றதென ஒதுக்கித் தள்ளப்படும் தேனிரும்புத் துண்டுகள். இத்துண்டுகளை மீண்டும் உருக்கலாம்

scraping: (எந்.) சுரண்டு மெருகு: ஒரு சுரண்டு கருவியுைப் பயன்படுத்தி தட்டையான மேற்பரப்புகளையும் தாங்கிகளையும் கையால் சுரண்டி மெருகிடுதல்

scrap iron : (உலோ.) துண்டு இரும்பு : ஒதுக்கித் தள்ளப்படும் இரும்பு அல்லது எஃகுத் துண்டுகள் அனைத்தையும் இது குறிக்கும். இதனைப் புதிய எஃகு தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்

scraper : செதுக்குக் கருவி : மரத்தின் பரப்புகளை வழவழப்பாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எஃகினாலான சுரண்டு கருவி. உலோகத் தொழிலாளர்களும் இதனைப் பயன்படுத்துவர்

scraper plane : (மர.வே.) செதுக்கு இழைப்புளி : இழைத்து வழவழப்பாக்குவதற்குப் பயன்படும் இழைப்புக் கருவி. தளங்களையும், பெரிய பரப்புகளையும் மட்டப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது

scratch : கீறல்: மேற்பரப்பில் ஏற்படும் கீறல், கீறுதடம் அல்லது கீற்றுவரி

scratch awl : (பட்.) கீற்றுத் தமருசி : உலோகத்தில் குறியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூர்முனையுடைய எஃகுத் தமரூசி

கீற்றத் தமரூசி (படம்)

scratch brush : கீற்றுத் தூரிகை : உலோகப் பரப்புகளிலிருந்து அயல் பொருட்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியிலான துரிகை

Scratch coat : (க.க.) கீற்றுப் பூச்சு : அடுத்துவரும் பூச்சுகளுக்குப் பிடிப்பு ஏற்படுத்துவதற்காகக் கீற்றுக் கீற்றாகப் பூசப்படும் முதற்பூச்சு

Screen : (அச்சு.) கண்ணாடித் திரை : ஒளி, நிழல் மாறுபாட்டளவைக் காட்டுகின்ற நுண்பதிவுப் படச் செதுக்ககோவிய அச்சடிப்பில் பயன்படுத்தப்படும் வரியிட்ட கண்ணாடித் திரை

screenings : சல்லடைக் கழிப்பு : சிப்பங்கட்டவும் அட்டை போடவும் பயன்படும் மலிவான காகிதம்

screen : திரை : மறைப்புத் திரை, மின்தடை காப்பு, காட்சிப் படத்திரை; தொலைக்காட்சித் திரை

screen grid : (மின்.) திரைவலை: ஓர் எலெக்ட்ரான் குழலில் கட்டுப்பாட்டு வலைக்கும் இடை மின் முனை கொண்மத்திற்குமிடையிலான இரண்டாவது வலை

screw : (எந்.) திருகாணி : மேல்வரி அல்லது அகல்வரிச்சுற்றுடைய திருகுச் சுரை

screw adjusting caliper: (எந்.) திருகு விட்டமானி: திருகு அமைப்புடைய வட்டமானி. இதில் நுட்பமானச் சீரமைவுக்கேற்ற வில்சுருள் அமைந்த திருகாணி அமைப்பு உள்ளது

திருகு விட்டமானி (படம்)

screw chuck : (மர.வே.) திருகு கவ்வி : ஒரு மரச்சுழற்சிக் கடைசல் கருவிக்கான ஒரு கவ்வி. இதில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு திருகு இயக்க மையமாகச் செயற்படுகிறது

screw cuttlng lathe : (எந்.) திருகுவரிக் கடைசல் எந்திரம் : திருகாணி வரிகளை வெட்டுவதற்கேற்ற கடைசல் எந்திரம்

screw driver : திருப்புளி : திருகாணிகளின் கொண்டையிலுள்ள வரிப்பள்ளத்தில் நுனியை வைத்துத் திருப்புவதற்கான எஃகுக் கருவி

திருப்புளி (படம்)

screw eye : (எந்.) திருகு கண் : கொண்டை முற்றிலும் அடைப்புடைய ஒரு வளையமாக அல்லது வட்டமாக அமைந்துள்ள ஒரு மரத்திருகு

screw jack : (பொறி.) திருகு கோல்: வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகு நிலை உதை கோலமைவு

screw plate : (எந்.) திருகு வெட்டுத் தகடு: திருகு புரிகளை வெட்டுவதற்கான துளைகளையுடைய எஃகுத் தகடு

திருகு வெட்டுத் தகடு(படம்)

screw stock : (உலோ.) திருகு உலோகம் : சிறு திருகுகளும், திருகு எந்திரங்களில் செய்யப்படும் உறுப்புகளுக்கும் பயன்படும் மென்மையான எஃகு

screw threads : (எந்.)திருகுபுரி : திருகாணிச் சுரையின் உட்சுற்றுத் திருகுபுரி

scribe awl or scriber :வரை கோல் : மரக்கட்டை, செங்கல் முதலியவற்றில் கோடுகள் வரை வதற்கான கூர்மையான கருவி

script : (அச்சு.) அச்சுருக் கையெழுத்து : கையெழுத்து போன்று வடிவமைத்த அச்சுரு

scroll : சுருள் போதிகை : சுருள் வடி அணியொப்பனை செய்த போதிகை

scroll saw : (மர.வே.) மெல்லிழை வாள் : சித்திர அறுப்பு வேலையில் மெல்லிய பலவகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்

scroll shears : (உலோ.வே.) சுருள் கத்திரி : ஒழுங்கற்ற வடிவுகளை சீராக வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கையினால் இயக்கக் கூடிய கத்திரி

scroll work : சுருளொப்பனை : மென்தோல் சுருளில் செய்யப்படும் ஒப்பனை வேலைப்பாடு

scutcheon or es-cutcheon : காப்புத் தகடு : சாவித் துளையில் சுழலும் காப்புத் தகடு

sea coal : (வார்.) கடல் நிலக்கரி : நியூகாசில் என்னுமிடத்திலிருந்து கடல் மூலம் முன்பு கொணரப்பட்ட மென்மையான நிலக்கரி

sealing compound : (மின்.) காப்புப் பொருள் : சேம மின்கலங்களில் அமில மின்பகுப்பான்கள் சிந்தாமல் தடுப்பதற்காக மின்முனைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினாலான, அமிலத்தை எதிர்க்கக் கூடிய, மின்கடத்தாத கூட்டுப் பொருள்

sealing wrappers : காப்பு உறைக் காகிதம் : சிப்பங் கட்டுவதற்காகவும் காப்பு உறையிடுவதற்காகவும் பயன்படும் பளபளப்பான காகிதம்

seam : மூட்டுவாய் : ஓர் உலோகத் தகட்டின் ஒரு முனை இன்னோர் உலோகத் தகட்டின் மடித்த முனையுடன் இணைத்துப் பொருத்திய மூட்டுவாய்

seaming iron : (உலோ.வே.) மூட்டுவாய் இரும்பு : உலோகத் தகட்டு வேலையின் வரிப்பள்ளம் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி

seam welding : மூட்டுவாய்ப் பற்றவைப்பு : ஓர் உலோகத் தகட்டின் ஒரு முனையை இன்னோர் உலோகத் தகட்டின் மடித்த முனையுடன் இணைத்துப் பற்றவைக்கும் முறை

seaplane: (வானூ.) முந்நீர் விமானம்: கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானூர்தி

seasoning modeling: பதப்படுத்திய உருப்படிவம்: வார்ப்படங்களுக்கு அரைச்சாந்து உருப்படிவங்களை உருவாக்கும் முறை. இதில் வார்ப்பட்ங்களும், ஊன்பசை வார்ப்படங்களுக்கான கூடுகளும் உறிஞ்சுவதைத் தடுக்கும் ஒரு பொருளினால் செய்யப்படும்

seasoning of lumber: (மர.வே.) வெட்டுமரப் பதப்பாடு: மரத்தைச் சூளையில் உலரவைப்பதன் மூலம் பதப்படுத்துதல். இது வெட்டு மரத்தைக் காற்றில் காயவிடுவதன் மூலம் இயற்கையாகப் பதப்படுத்துவதிலிருந்து மாறுபட்டது

secant (கணி.) வெட்டுக்கோடு: செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய் வரை அடி வரைகளின் விகிதம்

secondary: (மின்.) கிளர்மின் கம்பிச்சுருள்: கிளர் மின்னோட்டத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிச் சுருள். இது அடிப்படைக் கம்பிச் சுருள்' எனப்படும் மற்றொரு மின்கம்பிச் சுருளுடன் காந்த முறையில் இணைக்கிப்பட்டிருக்கும்

secondary cell: (மின்.) துணை மின்கலம்: மின்னோட்டம் மூலம் வேதியியல் செயற்பாட்டினை நேர்மாறாகத் தாக்கக்கூடிய மின்கலம்

secondary coil : (மின்.) துணைக் கம்பிச்சுருள்: கிளர் மின்னோட்டத்தைத் தாங்கிச் செல்லும் கம்ச்சுருள்

Secondary colour: (அச்சு.) கலவை நிறம்: சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய முதன்மை நிறங்களில் இரு நிறங்களைக் கலப்பதால் உண்டாகும் நிறம். மஞ்சளையும், ஊதாவையும் கலப்பதால் பச்சை நிறம் உண்டாகும்

secondary emission : (மின்.) துணைஉமிழ்வு: ஓர் எலெக்ட்ரான் குழலின் தகட்டினை எலெக்ட்ரான்கள் தாக்குவதன் விளைவாக எலெக்ட்ரான்கள் வெளிப்படுதல்

secondary planet: (விண்.) துணைக்கோள்: ஒரு கோளினைச் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு கோள். பூமிக்கோளத்தை சந்திரன் சுற்றி வருவதால் சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும்

secondary-type glider:(வானூ.) துணைமைச் சறுக்கு விமானம்: முதனிலைச் சறுக்கு விமானத்தை விட அதிக வானூர்தி இயக்கத் திறனுடையதாத வடிவமைக்கப் பட்ட சறுக்கு விமானம்

second-class lever (எந்.) இரண்டாம் நிலை ருெம்புகோல்: ஆதாரத்திற்கும் விசைக்குமிடையே எடையை வைப்பதற்குள்ள நெம்பு கோல்

secondary winding: (மின்.) துணைச் சுருணை: முதனிலைச் சுருணையிலிருந்து ஒன்றோடொன்று நடைபெறும் தூண்டல் மூலம் ஆற்றலைப் பெற்று மின் சுமைக்கு ஆற்றலை அளிக்கிற சுருணை

second harmonic distortion: (மின்.) இரண்டாம் கிளையலைத் திரிபு: ஓர் அலையானது அதன் இரண்டாவது கிளையலையினால் திரிபடைதல்

seconds: மட்டச்சரக்குகள்: முதல் தரமாக அல்லாத சரக்குகள். அச்சுத் தொழிலில் 'மட்டச் சரக்குகள்' என்பது காகிதத்தைக் குறிக்கும்

section: (க.க;எந்.) வெட்டுவாய் வரைபடம்: ஒரு பொருள் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக வெட்டப்பட்டது போன்று, அப் பொருளின் உள்ளுறுப்புகளைக் காட்டும் வரைபடம்

sector: (கணி.) வட்டகோணப் பகுதி: இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு

sedan: அடைப்பு வண்டி: முன்னும் பின்னும் அகலம் முழுவதற்கும் குறுக்காக இருக்கைகள் கொண்ட நான்கு கதவுகள் உள்ள அடைப்புடைய ஒரு வகை வண்டி

sediment படிவு: ஒரு திரவத்தின் அடியில் வண்டலாகப் படியும் மண்டி

sediment bowl: வண்டல் கலம் : எரிபொருளிலுள்ள தூசு, நீர் முதலியவற்றைச் சேகரிப்பதற்கு எரி பொருள் அமைப்பிலுள்ள ஒரு கண்ணாடி அல்லது உலோகக் கொள்கலம்

sedimentary rock: (கணி.) படிவுப்பாறை: நீருக்கு அடியில் அழுத்தம் காரணமாக உண்டாகும் படிவியற்படுகைப் பாறை

seeback effect : (.மின்) பின்னோக்கு விளைவு: வேறுபட்ட இரண்டு உலோகங்களை ஒன்றோடொன்று ஒட்ட வைத்துச் சூடாககுவதன் மூலம் அனல் மின்விசை உண்டாக்கும் விளைவு

seeker: ஆய்வு தொலைநோக்காடி: ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் தொலைநோக்காடி

segment: வெட்டுக்கூறு: ஒரு வட்டத்தின் நாண் வரைக்கும் அதன் வில்வரைக்கும் உள்ளீடானப் பகுதி

segmental arch: (க.க.) பிறை வில் வளைவு: மையம் உள்ளடங்கலாக இல்லாத பிறை வில் வளைவு

segmental rack or segmental Wheel : (எந்.) பிறைமச் சக்கரம்: வில்வரைக் கூறு வடிவமுடைய விசைப் பற்சக்கரம்

segregation : தனிமையாக்கம்: மணியுருவாக்க வகையில் பொதுப் பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடி உருவாக்குதல்

seismogram: (இயற்.) நிலநடுக்கப் பதிவு : நிலநடுக்கக் கருவி தரும் நிலநடுக்கப் பதிவு

seismography: (இயற்.) நில நடுக்க ஆய்வியில்: நிலநடுக்கம் பற்றிய ஆய்வியல் துறை

seize: சிக்குறுதல்: வழக்கமாக ஒன்றன் மீது ஒன்று தங்கு தடையின்றி உருளும் மேற்பரப்புகள், மசகு போதாமல் உண்டாகும் உராய்வு காரணமாக ஏற்படும் வெப்பத்தினால் ஒன்றோடொன்று ஒட்டி சிக்குறுதல்

selective fading: (மின்.) தெரிவுத் தேய்வுறல்: வானொலி வாங்கியில், சமநீளமில்லாத பன்முகப் பாதைகளின் வழியாக ஒரு சைகையை வாங்கும் போது, அந்தச் சைகை ஓரளவுக்குக் குறைந்து அல்லது நிலையிழந்து இருக்கும் நிலை

selectivity: தேர்திறம் : வானொலிகளின் ஏற்பு அமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படும் திறம்

selenium: (மின்.) செலினியம் (மதிமம்): இது ஓர் அலோகத் தனிமம். ஒளிக்கற்றைக்கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளும் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம். இது ஒளிக்கடப்பு மின்கலங்களிலும், உலோகத் திருத்திகளிலும் பயன்படுகிறது

seleno centric: (விண்.) சந்திர மையம்: சந்திரன் கோளின் மையத்திலிருந்து பார்த்தாற் போன்ற தோற்றம்

self acting: தற்செயற்பாடு: புறத் தூண்டுதல் இல்லாமல் தானாகவே செயற்படுதல்

self-bias: (மின்.) தற்சார்பு: ஒரு வலைத் தடுப்பான் வழியாக எலெக்ட்ரான்கள் பாயும் போது உண்டாகும் தற்சார்பு

self excitation : (மின்.) தற்கிளர்ச்சி : நேர்மின்னோட்ட மின்னாக்கியின் இணைப்புகளிலிருந்து பெறும் நேர்மின்னோட்டத்தினை, அதன் மின் காந்தப்புலனுக்கு மின்னோட்டம் அளிப்பதற்காகத் அளித்தல்

self-excited : (மின்.) தற்கிளர்ச்சி மின் பொறி : தனது புலத்திற்கு அளிப்பதற்காக தனது சொந்த மின்னோட்டத்தை உண்டாக்கிக் கொள்ளும் பொறி self excited alternator: (மின்.) தற்கிளர்ச்சி மாறு மின்னாக்கி: இது ஒரு மாற்று மின்னோட்டம் உண்டாக்கும் கருவி. இது தனது முதன்மைப் புலங்களுக்கு காந்தமூட்டுவதற்காக, நேர்மின்னோட்டம் உண்டாக்கும் பல வழிமுறைகளில் ஒன்றின் மூலம் நேர்மின்னோட்டத்தை உண்டாக்குகிறது

self hardening steel : (உலோ.) தானாகக் கெட்டிப்படுத்திய எஃகு : காற்றில் குளிர்விப்பதன் மூலமாக தானாகச் கெட்டிப்படுத்தப்படும் ஒரு கலவை எஃகு. இது கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது

self-induced current : (மின்.) தற்தூண்டல் மின்னோட்டம் : ஒரு மின்கம்பிச் சுருளில் காந்தப்புலம் திசையில் அல்லது செறிவில் மாற்றமடையும்போது அதே கம்பிச் சுருளில் அமைந்துள்ள தற்தூண்டல் மின்னியக்கு விசையினால் உண்டாகும் மின்னோட்டம்

self-inductance : (மின்.) தற்தூண்டம் : ஒரு மின் சுற்று வழியில் கம்பிச்சுருளின் திருப்பங்களிடையே நிகழும் மின்காந்தத் தூண்டல் என்னும் நிகழ்வு

self-induction : (மின்.) தற்தூண்டல் : ஒரு மின் கம்பிச் சுருளின் காந்தப்புலம் அதன் மீதே ஏற்படுத்தும் தூண்டல் விளைவு

selvage : ஆடை விளிம்பு : ஆடை கிழிப்பதற்குரிய திண்ணிய ஊடு விளிம்பு

semaphore : விளக்கக் கைகாட்டி: அசையும் கைகளும் சைகை விளக்கமைப்பும் கொண்ட இருப்புப் பாதைக் கைகாட்டி மரம்

semiautomation : பகுதி தானியக்கம் : எந்திர இயக்கியைத் தடைசெய்யாமல் உற்பத்திக்கு உதவி செய்கிற தானியங்கிக் கருவிகள்

semielliptio spring : (தானி.) அரை நீள்வட்ட விற்சுருள்: ஏறத்தாழ அரைநீள் வட்ட வடிவில் உள்ள விற்சுருள். உந்து ஊர்திகளில் இது மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது

semíchord : அரைநாண் : ஒரு வட்டவரையின் நாணின் நீளத்தில் சரிபாதி

semicircle : அரைவட்டம் : வட்டத்தின் சுற்றுவரைக் கோட்டுக்கும் விட்டத்திற்கும் உள்ளடங்கிய அரைவட்டம்

semicircular archi (க.க.) அரை வட்டக் கவான் : வளை முகட்டின் உட்புற வளைவு அரைவட்டமாகவுள்ள கவான்

semiconductor : (மின்.) ஓரளவு மின்கடத்தி : தாழ்வெப்ப நிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள். இதன் தடைத் திறன், மின்கடத்திகளுக்கும் மின்காப்பிகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்

semiconductor ‘n’ type: (dor.) :N வகை ஓரளவு மின்கடத்தி: எலெக்ட்ரான்களை முக்கிய ஊர்தியாகப் பயன்படுத்தும் ஓரளவு மின் கடத்தி

semiconductor ‘p' type ; "P" வகை ஓரளவு மின்கடத்தி: துவாரங்களை முக்கிய ஊர்தியாகப் பயன்படுத்தும் ஓரளவு மின்கடத்தி

semi-steel.: (உலோ.) மிகுவலி எஃகு: உருகிய தேனிரும்புடன் ஒரு பகுதி எஃகுச் சிம்புகளைச் சேர்ப்பதின் மூலம் தயாரிக்க மிகுவலிமை வாய்ந்த வார்ப்பிரும்பு

semi-transparent: ஓரளவு ஒளி ஊடுருவும் பொருள்: ஒளி ஓரளவு ஊடுருவிச் செல்லக் கூடிய பொருள். இதில் பொருள் அரை குறையாகவே தெரியும் sensible atmosphere: (விண்.) உணர்வு வாயு மண்டலம்: உணர்ந்தறியக்கூடிய, அதாவது தடையுடைய வாயு மண்டலத்தின் ஒரு பகுதி

sensible heat: (பொறி.) உணர்வெப்பம்: வெப்பமானி மூலம் அளவிடக்கூடிய வெப்பம். இது உட்செறி வெப்பத்திற்கு மாறானது

sensitivity: (மின்.) கூருணர்வுத் திறம்: மிகச்சிறிய சைகை மின்னழுத்தங்களுக்கும் உடனடி எதிர் விளைவினைக் காட்டும் ஒரு மின் சுற்று வழியின் திறன்

sensitivity of meter: (மின்.) மானிகூருணர்வுத்திறம்: ஒரு மானியின் மின்சுமை விளைவின் குறியீடு. முழு அளவுக்கோட்டத்திற்குத் தேவையான மின்னோட்டத்தினால் ஒன்றை வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமமானது கூருணர்வுத் திறம் ஆகும்

sensors: (தானி) நுண்ணலை உணர்விகள்: இயற்பியல் நிலைமைகளைக் கட்டுப்பாட்டு அமைப்பு முறை மூலம் அறிந்து கொள்ளத்தக்க தகவல்களாக மாற்றும் சாதனங்கள்

separately excited generator: (மின்.) பிறிதின் கிளர்ச்சி மின்னாக்கி: தனது காந்தப்புலத்திற்குத் தேவையான மின்னோட்டத்தை அதற்கு வெளியிலுள்ள ஆதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் ஓர் எந்திரம்

separators : (தானி; மின்.) பிரிப்புக் கருவி : ஒரு மின் கலத்தின் தகடுகளுக்கிடையே மின்காப்பு களாகப்பயன்படுத்தப்படும் கருவி. இவை மரத்தினாலோ வேறு சிறப் புப் பொருள்களாலோ செய்யப் பட்டதாகவும், மின் பகுப்புப் பொருளின் சுழற்சியை அனுமதிக்கக் கூடிய நுண்துளைகளை உடையதாகவும் இருக்கும்

sepia : (வண்.) பழுப்பு வண்ண்ம்: சிவப்பு நிறங்கலந்த பழுப்பு வண்ணம்

septic tank : (கம்.) நச்சுத் தடை மலக்குழி : திடக்கழிவுப் பொருள் களை மட்கும்படி செய்வதற்கான ஓர் அமைப்பு. இதில் கழிவுப் பொருள்களை இயற்கையான பாக்டீரிய நடவடிக்கை மூலம் திரவமாகவும், வாயுவாகவும் மாற்றி மட்கும்படி செய்யப்படுகிறது. முழுமையாகச் சுகாதார முறைப் படி அமைந்ததாகும்

sequence:தொடர் நிகழ்வு : திரைப்படத்தொடர் நிகழ்ச்சிப் பதிவு

serial taps : (எந்.) தொடர் குழாய்கள் : 1, 2, 3 என்ற வரிசையில் அமைக்கப்பட்ட தொடர்கள். 1ஆம் எண் குழாய் கூம்பு வடிவில் இருக்கும். 2ஆம் எண் குழாய் நுனியில் மட்டும் சற்றுக் கூம்பியிருக்கும். 3ஆம் எண் குழாய் திருகிழை அமைந்ததாக இருக்கும்

series: (மின்.) மின்கல அடுக்கு வரிசை : ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வரிசையாக மின்னோட்டம் பாயுமாறு அமைந்த மின்கல அடுக்கு வரிசை

series cells : (மின்.) தொடர் மின்கலம் : ஒரு மின்கலத்தின் நேர் முனை, அடுத்துள்ள மின்கலத்தின் எதிர் முனையுடன் இணைந்திருக்குமாறு மின் கலங்களை இணைக்கும் முறை

series circuit. : (மின்.) தொடர் மின் சுற்று வழி : மின் சுற்று வழியே எலெக்ட்ரான்களுக்கு ஒரே பாதையை மட்டுமே கொண்டுள்ள ஒரு மின் சுற்று வழி

series coil : (மின்.) தொடர் கம்பிச்சுருள் : தொடர் வரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்பிச் சுருள்

series motor: (மின்.) தொடர் மின்னோடி: மின்னகமும் புலமும் தொடர்வ்ரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு நேர்மின்னாக்கி மின் உயர்த்திகள் போன்ற வெவ்வேறு பாரங்கள் ஏறும் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது, பாரத்தின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப இதன் வேகம் அமையும்

series parallel circuit : (மின்.) தொடர் இணைமின் சுற்றுவழி: தொடர்மின்கல அடுக்கு வரிசையில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட இணை மின்சுற்றுவழிகளைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழி

series resonance : (மின்.) தொடர் ஒலியலை எதிர்வு : ஒரு தூண்டுகருவி, ஒரு கொண்மி, ஒரு தடுப்பான் ஆகியவை தொடர் வரிசையில் உள்ள ஒரு தொடர் மின்சுற்றுவழி. இதில், தூண்டு எதிர் வினைப்பும், கொண்ம எதிர் விணைப்பும் சரிசமமாகவும், ஒன்றையொன்று நீக்கும் வகையிலும் அலைவெண் அமைந்திருக்கும்

series welding : தொடர் பற்றவைப்பு : மின் தடையுடைய பற்ற வைப்பு முறை. இதில், தனியொரு பற்றவைப்பு மின்மாற்றி மூலம் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்றவைப்புகளைச் செய்யலாம். இதில் ஒவ்வொரு பற்றவைப்பின் வழியாகவும் மொத்த மின்னோட்டமும் செல்லும்

series wound generator : தொடர் சுருணை மின்னாக்கி

serif : (அச்சு.) முனைக்கட்டு : எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமாணம்

serrated pulse (மின்.) ரம்பப்பல் துடிப்பு : தொலைக்காட்சியில் செங்குத்து ஊசலை ஒருங்கிசைவுப் படுத்துவதற்குப் பயன்படும் நீண்ட துடிப்பு. இந்தத் துடிப்பு, கிடைமட்ட ஒருங்கிசைவைப் பேணுவதற்காக குறுகியகால ரம்பப் பல் விளிம்புகளாகப் பகுக்கப்பட்டிருக்கும்.

serration : ரம்பப் பல் விளிம்பு: ரம்பத்தில் உள்ளது போன்ற பல் விளிம்பு அமைப்பு

serum : (உட.)நிணநீர்: குருதியிலுள்ள தெளிவான ஒளியூடுருவும் தன்மையுடைய மஞ்சள் நிறத் திரவம். ஒரு வகை நோய்கண்ட குதிரையிலிருந்து எடுக்கப்படும் நிணநீர். நோய் நஞ்சுக்கு எதிராகச் செயற்படும் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிணநீரை நோயை எதிர்ப்பதற்காக நோயாளியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துகிறார்கள்

serum sickness : (நோயி.) நிணநீர் நோய்:நிணநீர் ஊசியால் உண்டாகும் கொப்புளங்கள்

Service area: (மின்.) வானொலிப் பரப்பெல்லை : வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் போதிய அளவுக்குத் தெளிவாகக் கேட்கக் கூடிய புவியியல் பரப்பெல்லை

service main : மின் நுகர்வாய்

service pipe : (கம்பி.) வழங்கீட்டுக் குழாய் : நீர், வாயு ஆகியவற்றைத் தலைக்குழாயிலிருந்து கட்டிடத்திற்குக் கொண்டு செல்லும் தனிக்குழாய்

servo motor : (எந்.) பின்னியக்கப் பொறி : கப்பல் எந்திர இயக்கத்தைப் பின்னோக்குவிக்கும் துணை விசைப்பொறி

service switch : (மின்.) கட்டுப்பாட்டு விசை : ஒரு கட்டிடத்தின் மின் கருவிகள் முழுவதையும் கட் டுப்படுத்தும் வகையில் அக்கட்டிடத்தின் மின் கம்பி அமைப்பின் நுழைவாயில் நுனியில் செருகப்பட்டுள்ள இணைப்பு விசை

service tank : (வானூ.) எரிபொருள் கலம் : ஒவ்வொரு மின் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ள நிலையான எரிபொருட் கலம். இதனுள் மற்ற கலங்களிலிருந்து எரிபொருள் இறைத்துச் செலுத்தப்படும். இக்கலத்திலிருந்து எஞ்சினுக்கு எரிபொருள் எடுத்துக் கொள்ளப்படும்

service wires: (மின்.) மின் வழங்கு கம்பிகள் : ஒரு கட்டிடத்திலுள்ள மின் சுமையுடன் இணைந்த மின் வழங்கீட்டுக் கம்பிகளை ஒரு மின்மாற்றியிலிருந்து மின் வழங்கீட்டு ஆதாரத்துடன் இணைக்கும் மின் கம்பிகள்

servo control : (வானூ.) பணிப்புக் கட்டுப்பாடு : வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல் இடைமாற்றீடு மூலம் விமானம் ஓட்டியின் முயற்சிக்கு ஆதாரமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம்

servo motor: பணிப்பு முன்னோடி

sesqui-plane: (வானூ.) குறையலகுப் பரப்பு விமானம் : ஒரு சிறகின் பரப்பளவு இன்னொரு சிறகின் பரப்பளவில் பாதிக்கும் குறைவாகவுள்ள ஒருவகை இருதள விமானம்

set screw (எந்.) சதுரத் திருகு : சதுர வடிவ அல்லது வேறு வடிவக் கொண்டையுடைய சமதளங்கொண்ட திருகு. இது நகர்த்திச் சரியமைவு செய்யக் கூடிய உறுப்புகளை உரிய நிலையில் நிறுத்தி இறுக்குவதற்குப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பப் பதனாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது

set square : முக்கவர் : செங்கோண முக்கோண வடிவ வரை கருவி

setting hammer : (உலோ.) பொருத்துச் சுத்தி : ஒரு முனை கூரிய முனையுட்ன் சாய்தளமான கொண்டையுடையதாகவும், இன்னொரு தட்டையான முனையுடையதாகவும் சதுரமான அடிக்கட்டையுடன் செய்த சுத்தி. இது முனைகளில் அல்லது கோணங்களில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படுகிறது

settle : விசிப்பலகை : உயர் சாய்மானமும் கைகளும் அடியில் அறைப் பெட்டிகளும் உடைய விசிப்பலகை

settlement : (மர.வே.) அமிழ்வு : நிலம், கட்டிடம், சுவர் ஆகியவற்றின் அமிழ்வு. பொதுவாக அடித்தளத்தின் வலுக்குறைவு, கட்டுமானப் பொருள்களின் தரக் குறைவு. பதப்படுத்தப்படாத மரம் ஆகியவற்றினால் இது ஏற்படுகிறது

severy: (க.க.) குவிமாடமோடு : பல்கெழு வளைவுக் குவிமாட மோட்டுப் பகுதி

sevres: சீனமங்கு : விலைமிகுந்த சீனக் களிமண்ணினாலான அலங்கார மங்குப்பாண்டவகை

sewage :(கம்மி.) சாக்கடைநீர் : கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக் கழிவுப் பொருட்கள்

sewer :(கம்மி.) கழிவு நீர்க்கால் : நகரக் கழிவுநீர்க் குழாய்

sextant (கணி.) மாலுமிக் கோணமானி : மாலுமிகள் பயன்படுத்தும் நிலப்பரப்பாய்வுக் கோணமானி. ஆறுகோண வட்டப்பகுதி: வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி shackle:(எந்.) சங்கிலிக் கொளுவி: ஓரளவு இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடிய சங்கிலிப் பூட்டுக் கொளுவி

கொளுவி(படம்)

shackle bolt: (எந்.) முளையில்லாக் கொண்டி: முளையில்லாது மாட்டும் தாழ்

shade: நிறத் திண்மை : வண்ணங்களில் செறிவான அல்லது மங்கலான வண்ணப் படிநிலை

shadow mask : (மின்.) நிழல் திரை : வண்ணத் தொலைக் காட்சியின் படக்குழலில் பொருத்தமான வண்ணத்தைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் துளைகளிட்ட உலோகத் தகடு. இது எலெக்ட்ரான் பீற்று விசைக்கும் பாஸ்போர் திரைக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. நுண்ணாய்வின் போது எந்தக் கணத்திலும் பொருத்தமான பாஸ்போர் புள்ளிகள் மட்டுமே கிளர்ச்சியடையுமாறு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்

shaft : (எந்.) சுழல் தண்டு : எந்திரங்களில் சுழலும் உறுப்புகளுக்கு ஆதாரமுள்ள சுழல்தண்டு

shake : மரவெடிப்பு : வெட்டு மரத்திலுள்ள ஒரு வெடிப்பு அல்லது முறிவு. இது மரத்தில் ஆண்டு வளையங்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்குகின்றன

shakes : (க.க.) அரை ஆப்பு : கையினால் செய்த அரை ஆப்பு

shank : (எந்.) எந்திரத் தண்டு : ஒரு கருவியை அதன் கைப்பிடியுடன் அல்லது குதை குழியுடன் இணைக்கும் உறுப்பு. கருவியின் வெட்டிடைப்பகுதி

shaper : (எந்.) வார்ப்புப் பொறி : உலோகங்களுக்கு உருவங்கொடுக்கும் கடைசல் வார்ப்புப் பொறி

shapes: (பொறி.) உலோக உருவப் படிவம்: உலோகத்தில் செய்யப்படும் பொருட்களின் உருமாதிரிப் படிவம்

sharp sand : (க.க.) கூர்மணல் : கூர்மையான கோணங்களையுடைய தூய்மையான மணல்

shatter-proof glass : (தானி.) உடையாத கண்ணாடி : அதிர்ச்சியைத் தாங்கி உடையாமலிருக்கும் ஒருவகைக் கண்ணாடி. இது இப்போது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிர்ச்சியைத் தடுப்பதற்காக நடுவில் பிளாஸ்டிக் தகட்டினைக் கொண்ட இரு கண்ணாடித் துண்டுகளினாலானது

shear : (பொறி.) தடைவிசை : இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடைவிசை. கத்திரி- கத்திரி மூலம் வெட்டுதல். சறுக்குப் பெயர்ச்சி- அழுத்தங்காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி

shears : உலோகக் கத்திரி: உலோகங்களைக் கத்திரிப்பதற்குப் பயன்படும் கருவி

கத்திரி(படம்)

shears : (எந்.) கம்பளிக் கத்திரி : கம்பளி மயிர் வெட்டுவதற்கான கத்திரிக்கோல், தழை வெட்டு கருவி

shear-steel : (உலோ.) கத்தரி எஃகு : கத்திரிக்கோல் செய்வதற்கான எஃகு sheath : (மின்.) காப்புறை : மின் சம்பியின் அல்லது வடத்தின் புறப்பாதுகாப்பு உறை

sheave : (உலோ.) ஓடு குழிவு :கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம்

sheave wheel : (பொறி) கப்பிச் சக்கரம் : வட்டம் அல்லது சங்கிலி ஓடுவதற்கான பள்ளம் உடைய சக்கரம்

shed (க.க.) கூடாரம்: ஒரு கட்டிடத்துடன் இணைந்துள்ள அல்லது இணையாதிருக்கிற, குறைந்தது ஒரு பக்கம் திறப்புள்ள ஒரு கொட்டாரம்

sheeter lines : (குழை.) நறுக்குக் கோடுகள் : பிளாஸ்டிக் தகடுகளில் கணிசமான பரப்பளவில் பரவலாகவுள்ள இணைக்கீறல்கள் அல்லது புடைப்பு வரைகள். இவை துண்டுகளாக நறுக்கும்போது ஏற்படும் கோடுகள் போன்று அமைந்திருக்கும்

sheet metal gauge : (எந்.) உலோகத்தகடு கன அளவுமானி : உலோகத் தகட்டின் கனத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒருவகை மானி

sheet metal working: உலோகத்தகடு வேலைப்பாடு : தகட்டு வடிவிலுள்ள உலோகங்களில் செய்யப்படும் வேலைப்பாடுகள்

sheet steel : (உலோ.வே.) தகட்டு எஃகு: உலோகத் தகட்டு வேலைப்பாடு செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் மெல்லிய எஃகுத்தகடுகள், இதன் எண்ணிக்கையைக் கொண்டு இதன் கனம் கணக்கிடப்படும். கனமான தகடுகள் பாளங்கள் எனப்படும்

sheet tin : (உலோ.வே.) வெள்ளீயத் தகடு: அரிமானத்தைத் தடுப்பதற்காக வெள்ளீய முலாம் பூசப்பட்ட மெல்லிய இரும்பு அல்லது எஃகுத் தகடு

shellac : அவலரக்கு : மெருகு எண்ணெய் செய்வதற்குப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரக்கு. இது பொதுவாக வெள்ளை நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்

shellac varnish: அவலரக்கு வண்ணம் : அவலரக்கினை ஆல்கஹாலில் கரைத்துச் செய்யப்படும் வண்ணப்பொருள். இதனை வடிவமைப்பாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர்

shell button: குமிழ்மாட்டி : துணியால் பொதிந்த உலோகத் தட்டை இணைகளாலான குமிழ்மாட்டி

shell drill : (எந்.) உட்புழைத் துரப்பணம் : சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிரில் செய்யப்படும் உட்புழையான துரப்பணம் செலுத்தப்படும் துவாரங்களை விரிவாக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது

sherardize : (உலோ.) நாகமுலாமிடல் : உலர் வெப்ப முறையில் மின்பகுப்பு மூலம் துத்தநாக முலாம் பூசுதல்

sheraton: (அ.க.) அலங்கார நாற்காலி: பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலி. இதனை தாமஸ் ஷெராட்டன் (1751-1806) உருவாக்கினார்

shield , (மின்.) காப்பு : ஒரு மின் சுற்றுவழியில் சிதறிப் பரவும் காந்தப்புலங்கள், வானொலி அலைவெண் புலங்கள் ஆகியவற்றின் விளைவுகளைக் குறைப்பதற்காக உறுப்புகளைச் சுற்றி அமைக்கப்படும் காப்பு

shield , (பற்.) காப்புக் கேடயம் : பற்றவைப்பு வேலையின்போது கண்ணுக்கும் முகத்துக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் கேடயம். இதில் ஒரு தனிவகை ஆடி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்சுடரை தீங்கின்றி நேரடியாகப் பார்க்கலாம்

shielded arc : (பற்.) காப்புச் சுடர்: கனமான உருகும் பொருள் பூசப்பட்ட மின்முனை பயன்படுத்தப்படும் ஒரு வகை மின்பற்றவைப்பு முறை

shielded cable : (மின்.) காப்பிட்ட கம்பிவடம் : பின்னல் கம்பி வலையினால் காப்பிடப்பட்டுள்ள மின் கம்பி அல்லது கம்பி வடம்

shifter forks: (பட்.) இடமாற்றுக் கவடு: ஒரு வார்ப்பட்டையில் கால்பரப்பி, அதனைக் கப்பியை இறுக்குவதற்கும், இறுக்கமான கப்பியைத் தளர்த்துவதற்கும் பயன்படும் கரம்

shim: (எந்.) சிம்பு: பொறிப் பகுதிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் மெல்லிய துணுக்கு

shimmy: (தானி.) முன்சக்கர அதிர்வு: உந்து ஊர்திகளில் முன் சக்கரங்கள் அதிர்வுறுதல். சீரற்ற கம்பிச்சுருள் அமைப்பு டயரில் சமனற்ற காற்றழுத்தம், மறையாணிகள் கழன்றிருத்தல் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம் முன் சக்கர அதிர்வு சிம்பு (படம்)

shooting star: (விண்.) எரிமீன்: விண்ணிலிருந்து எரிந்து வீழ்கின்ற விண்மீன்

shingles: (க.க.) அரையாப்பு: கூரைகளையும், பக்கச் சுவர்களையும் மூடுவதற்குப் பயன்படும் மரத்துண்டுகளிலான அல்லது பிற பொருள்களினாலான சிறிய துண்டு. இதன் கனம் 16செ.மீ. முதல் 1.27செ.மீ. வரை இருக்கும்

shipping measure: கப்பல் அளவை: ஒரு கப்பலின் உள் கொள்ளளவினை அளவிடுவதற்கான அளவுமுறை. 1 பதிவு டன் - 100 கன அடி கப்பல் சரக்குகளை அளவிடுவதற்கு 1 யு.எஸ். கப்பல் டன் = 40 கனஅடி=32,143 யு.எஸ். புஷல்கள்

ship plane: (வானூ.) கப்பல் விமானம்: கப்பலின் மேல் தளத்திலிருந்து ஏறவும், அதில் வந்து இறங்கவும் ஏற்ற வகையில் கட்டப்பட்ட விமானம்

shock: (பொறி.) அதிர்வு: திடீரென விசையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் திடீர் அதிர்ச்சி

shock absorber: (வானூ.) அதிர்வு தாங்கி: விமானம் தரையில் இறங்கும் போதும், தரையிலிருந்து ஏறும்போதும் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதி

shoe: (எந்.) உராய்வு தடைக் கட்டை: ஊர்திகளின் சக்கர உராய்வு தடைக்கட்டை

shopwork: பட்டறைப்பணி: பட்டறையில் செய்யப்படும் எந்திரவியல் பணி

shore: (க.க.) உதைவரிக்கால்: கப்பல் கட்டுதளத்தில் கப்பலைத் தாங்கி நிற்க வைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச் சாய்த்து நிறுத்தப்படும் வரிக்கட்டைகள்

shoring: (க.க.) உதை வரிக்காலிடுதல்: உதை வரிக்கால் கொடுத்துதாங்கி நிறுத்துதல்

short circuit: (மின்.) மின்குறுக்குப் பாய்வு: மின் சுற்றுவழியில் குறுக்கு வெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நின்றுவிடுதல்

short circuit fault: மின் முடிப்புப் பிழை: shortline: குறுமின்வழி

short rib: (உட.) குறுவிலா எலும்பு : மறுபுறம் மூட்டுச் சேராத விலா எலும்பு

short-sight: (நோயி.) கிட்டப் பார்வை: அணுக்கப் பார்வைக் கோளாறு

short-time duty: (மின்.) குறுகிய நேர மின்னோட்டப்பணி: ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு ஒரே சீரான அளவில் மின்னோட்டம் தேவைப்படும் பணி

short ton: குறுஎடையளவு: இரண்டாயிரம் கல் எடை அளவு

short waves: (மின்.) சிற்றலை: பத்து முதல் நூறு மீட்டர் வரை நீளமுள்ள வானொலிக் குற்றலை

short wave radio: குற்றலை: புத்து முதல் நூறு மீட்டர் வரை நீளமுள்ள வானொலிச் சிற்றலை

short weight: குற்றெடை: ஒன்றுக்குக் குறைந்த அலகுடைய சில்லறை எடை

shot effect : (மின்.) வெடிப்பு விளைவு: ஓர் எலெக்ட்ரான் குழிலில் எதிர்முனையிலிருந்து வெளிப்படும் எலெக்ட்ரான் வீதங்களில் ஏற்படும் மாறுபாடு காரணமாக உண்டாகும் ஒலி

shoulder-blada: (உட.) தோள் எலும்பு: தோளிலுள்ள பட்டை எலும்பு

shoulder-brace: (உட.) தோள் மூட்டு: தோள் எலும்புகளின் மூட்டு

shrine: (க.க.) கோயில்: புனிதப் பேழை

shrinkage : (வார்.) அளவுக் குறுக்கம்: வார்ப்படத்தைக் குளிர்விக்கும் போது அதன் வடிவளவையும், எடையையும் உருவத்தையும் துல்லியமாக இருத்தி வைத்துக் கொள்வதற்காகச் சுருங்கும் அளவு

shrinkage crack (வார்.) சுருங்கு வெடிப்பு: வார்ப்படத்தின் உறுப்புகளை ஏற்றதாழ்வுடன் குளிர்விக்கும் போது வார்ப்படத்தில் உண்டாகும் வெடிப்பு

shrink holes in castings: (வார்.) வார்ப்படச் சுருங்கு துளைகள்: ஏற்றத்தாழ்வான குளிர்விப்பு மூலம் வார்ப்பட உறுப்புகளில் ஏற்படும் பள்ளங்கள்

shrinking : (எந்.வார்.) சுரிப்பு: குளிர்விக்கும்போது வார்ப்படத்தில் ஏற்படும் சுருக்கம்

shroud: (எந்.) தட்டை விளிம்பு: பல்லிணைச் சக்கரத்தின் பற்களின் முனைகளில், அப்பற்களின் வலிமையை அதிகரிக்க அல்லது வழுவழுப்பான இயக்கத்திற்கு வசதி செய்ய இணைக்கப்படும் அல்லது வார்ப்பு செய்யப்படும் தட்டையான விளிம்பு

shrouded wheels : (தானி.) மூடு சக்தரங்கள்: தொடர் உந்து ஊர்திகளில் தீத்தங்கிகளில் பக்கப்பட்டிகள் மூலம் அடைக்கப்பட்ட சக்கரங்கள்

shunt (எந்.) இணை : இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைக்கும் மின் கடத்துக் கட்டை

shunt for ammeter : (மின்.) அம்மீட்டர் இணை : மின்மானி வழியாகச் செல்லும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மீட்டருடன் இணையாகப் பொருத்தப்பட்டுள்ள தடை

shunt generator: (மின்.) இணை மின்னாக்கி: காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள் சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம் shunt-wound motor : (மின்.) இணைச் சுருணை மின்னோடி: மின் சுமை மாறுபட்டிருப்பினும் மின்னோடியின் வேகம் ஒரே அளவில் இருக்கும் வகையில் பயன்படுத்தப்படும் மின்னோடி

shutter : ஒளித்தடுப்புத் திரை : ஒளிப்படக் கருவியில் ஆடி வழியாக ஒளி புகுந்து செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாதனம்

side bands : (மின்.) சம அதிர்வுப் பட்டிகள்: அலை மாற்றம் காரணமாக, ஊர்தி அலைவெண்ணுக்கும் மேலும் கீழும் உள்ள அலைவெண்கள்

side carrier frequencies : (மின்.) பக்கஊர்தி அலைவெண்கள்: ஊர்தி அலை அலைவெண், அலை மாற்றி அலைவெண் இரண்டின் கூட்டுத் தொகைக்கும் அவற்றுக்கிடையிலான வேறுபாட்டுக்கும் சமமான அலைவெண் அலைகள்

side head : (அச்சு.) ஓரத் தலைப்பு: அச்சுப் பக்கங்களில் மையத்தில் அல்லாமல் பக்கத்தின் ஓரத்தில் அச்சடிக்கப்படும் தலைப்பு

side milling cutter : (எந்.) பக்கத்துளை வெட்டு கருவி : பக்கங்களிலும் சுற்றுக் கோட்டிலும் வெட்டுவதற்குப் பயன்படும் குறுகிய முகப்புக் கொண்ட வெட்டுக் கருவி சுழல் இருசு மீது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டுக் கருவிகளை அமைத்திருந்தால் அவை கவட்டு வெட்டுக் கருவி எனப்படும்

side rake : (எந்.) பக்கவெட்டுச் சரிவு : கடைசல் எந்திரம், இழைப்புளி, வடிவாக்கக் கருவிகள் போன்றவற்றின் மேல் முகப்பின் மீதான வெட்டு முனையிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குச் சரிவு

sidereal day : (விண்.) மீனாள்: நாள் மீன் இயக்கக் கணிப்புக் காலம். இது சூரியநாள் எனப்படும் நமது நாளைவிட நான்கு நிமிட நேரம் குறைவாகும்

sidereal time : (விண்.) நாள் மீன் காலக் கணிப்பு : நாள் மீன் சார்ந்த காலக்கணிப்பு முறை

sidereal year : (விண்.) நாள் மீன் ஆண்டு : நாள் மீன் இயக்கக் கணிப்பு ஆண்டு

siderography: (உலோ.) எஃகு செதுக்கு வேலை: எஃகின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு

side-saddle : புடைச் சேணம் : இரு கால் மிதிகளையும் ஒரு புறமாகக் கொண்ட சேணப் பின்னிருக்கை

siderite : (உலோ.) சைடரைட்: (F3CO3) குறைந்த அளவு இரும்பு கொண்ட ஓர் உலோகத் தாதுப் பொருள்

side slipping : (வானூ.) ஓரச்சாய்வு : விமானத்தின் ஓரச்சாய்வு இயக்கம், விமானத்தின் பக்க ஊடச்சு சாய்வாக இருந்து, அந்த அச்சின் கீழ்முனையின் திசையில் சறுக்கல் ஏற்படும் போது உண்டாகும் நிலை

side-wheel : பக்கத் துடுப்பாழி : நீராவிக் கப்பலின் பக்கத் துடுப்பாழி

side stick: (அச்சு.) பக்க அச்சுக் கோப்புப் கட்டை : அச்சுப் பணியில் அச்சுப் படிவங்கள், நீர் அச்சுப் படிவங்கள் ஆகியவற்றை இறுக்குவதற்குப் பக்கவாட்டில் அடித்திறுக்கப் பயன்படும் ஆப்பு போன்ற நீண்ட கட்டை

side stitch :(அச்சு) பக்கத் தைப்பான் : நூல்களைக் கட்டு மானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள்

siding (க.க.) புடைமரம் : கட்டிடத்தின் புறச் சுவர்களுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படும் வெட்டு மரம்

sienna : (விண்.) சீயெனா மண் : சாயப்பொருள் தரும் காவிக் களி மண் வகை

sieve : (க.க.) சல்லடை : மணலிலிருந்து பெரிய கற்களைப் பிரித்தெடுப்பது போன்று. பொருள்களை வடிவளவுக்கேற்பப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் சலித்துப் பிரிக்கும் கருவி

sight-feed lubricator : (எந்.) காட்சியூட்டு மசகுப் பொருள்: எண்ணெய் பாய்வது அல்லது பாயாமலிருப்பது எப்போதும் கண்ணுக்குப் புலனாகத் தக்கதாக அமைந்துள்ள ஒரு மசகுப்பொருள்

sight glass : (குளி.பத.) காட்சிக் கண்ணாடி : ஒரு திரவத் தொட்டியில் திரவத்தின் மட்டத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு கண்ணாடி

signal : (மின்.) சமிக்ஞை : ஒரு செய்தித் தொடர்புச் சாதனத்தின் வழியாக அனுப்பப்படும் செய்திக்கு நேரிணையான மின்னியல் அலை

signal strength : (இயற்.) சமிக்ஞை ஆற்றல் : கம்பியில்லாத்செய்தி தந்தியின் சுட்டுக்குழிச் ஏற்பாற்றல்

signal தொலைக்காட்சிச் சைகை: தொலைக்காட்சிகளை ஒளி பரப்புவதில் இரு வகைச் சைகைகள் உண்டு. ஒன்று பட அல்லது ஒளிச் சைகை, இன்னொன்று ஒலிச்சைகை. ஒவ்வொரு சைகையும் அது ஒலியை அல்ல்து ஒளியை அனுப்புவதற்கேற்ப மின்னியல் தூண்டல்களைக் கொண்டிருக்கும்

signal ganerator : (மின்.) சமிக்ஞை உருவாக்கி : ஒரு வானொலி அலைவெண் தொடர் அலையை அல்லது அலைமாற்றிய தொடர் அலையை உண்டாக்குகிற ஒரு மின்னணுவியல் சோதனைக் கருவி

signal to noise ratio : (மின்.) சமிக்ஞை-ஒலிவீதம் : வானொலிச் சாதனம் அனுப்பும் சமிக்ஞைக்கும் அந்தச் சாதனத்திற்குள் உண்டாகும் ஓசைக்குமிடையிலான விகிதம்

signature : (அச்சு) அச்சு முழுத்தாள் வரிசைக் குறி: ஒரு நூலில் பல்வேறு பிரிவுகள் எந்த வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுவதற்காக ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்படும் எண் குறியீடுகள்

signature press : (அச்சு.) தாள் அழுத்து கருவி : அச்சு முழு மடித் தாள்களை ஒன்றாக இணைத்து அழுத்துவதற்காகப் புத்தகம் கட்டுமானம் செய்வோர் பயன்படுத்தும் ஒரு சாதனம்

silencer (மின்) ஓசையடக்கு கருவி: சமிக்ஞைகள் எதுவும் வாராதிருக்கும்போது, ஏற்பியைச் செயலிழக்கச் செய்யும் மின் சுற்றுவழி

silica : சிலிக்கா (SiO2) : மணலிலும் பளிங்குக் கல் வகைகளிலும் புெருங் கூறாய் அமைந்த மணற்சத்து

silicon : (கனி.) கன்மம்: உலோகமல்லாத மணற்சத்து பெருமளவாகவுள்ள ஒரு தனிமம். கார்பனையும், பளிங்குக்கல்லையும் ஒரு மின் உலையில் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. எஃகுத் தயாரிப்பில் கெட்டியாக்குவதற்கும் ஆக்சிகர நீக்கத்திற்கும் இது பயன்படுகிறது

silicon carbide : சிலிக்கன் கார்பைடு : மின் உலையில் மணல் கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாககும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும் பொருளாகவும் உராய்வுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது கார்போரண்டம் கிறிஸ்டோலான் கார்போஃபிராக்ஸ் கார்போரா, கார்போரைட், கிரிஸ்டோலைட் என்று பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது

silicon copper : (உலோ.) சிலிக்கன் செம்பு: துவாரங்கள், புடைப்புகள், இல்லாமல் சுத்தமான, திண்மையான வார்ப்படங்கள் தயாரிப்பதற்காக உருகிய செம்புடன் சேர்க்கப்படும் செம்பு மிகுதியாக அடங்கிய ஒரு வகை உலோகக் கலவை

silicon diode: (மின்.) சிலிக்கன் இரு முனையம் : மின்வெப்பம் கடத்தாத இரு முனையம்

silicon resins : சிலிக்கோன் , பிசின் : சிலிக்காவிலிருந்து பெறப்படும் பிசின் வகை. இது வெப்பக் கடத்தலைத் தடுக்கக் கூடியது; வேதியியல் பொருள்களின் அரிமானத்தையும் தடுக்க வல்லது சிறந்த மின்னியல் பண்புகள் கொண்டது

silicon steel : (உலோ.) சிலிக்கன் எஃகு : 1% முதல் 2% வரை சிலிக்கான் அடங்கிய எஃகு. இது கம்பிச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுகிறது

sill : (க.க.) பலகணிப் படிக் கட்டை : கதவு அல்லது சன்னல் அடியிலுள்ள மரத்தினாலான அல்லது கல்லினாலான அடித்தளம்

sill high : (க.க.) வாயிற்படிக்கல் உயரம் : தரை முதல் வாயிற்படிக்கட்டை வரையிலான உயரம்

silo : (விண்.) ஏவுகணைக் காப்பிடம் : ஏவுகணைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கானக் காப்பிடம். இது தரையில் கெட்டியான செங்குத்துத் துவாரமுடையதாகவும், ஏவுகணையைச் செலுத்தும் நிலைக்கு உயர்த்துவதற்கு அல்லது நேரடியாக காப்பிடத்திலிருந்தே செலுத்துவதற்கு ஏற்ற வசதிகளை உடையதாகவும் இருக்கும்

silt : வண்டல் : ஓடும் தண்ணீரினால் படியும் நுண்ணிய சேற்றுப் படிவு

silumin : (உலா.) சிலுமின் : அலுமினியமும், சிலிக்கனும் கலந்த ஒரு வகை ஜெர்மன் உலோகக் கலவை. மிகுந்த நெகிழ் திறனுடையது; குறைவாகச் சுருங்கக் கூடியது. இதனால நுட்பமான வார்ப்படங்கள் செய்யப் பயன்படுகிறது

silver : (கனி) வெள்ளி :வெள்ளை நிறம் கொண்ட நெகிழ் திறன்கொண்ட தகடாக்கக்கூடிய ஓர் உலோகம். இதன் உருகுநிலை 1750°F ஒப்பு அட்ர்த்தி தூய்மைக்கேற்ப 10 முதல் 11

silver solder : வெள்ளிப் பற்றாசு: ஒரு பகுதி செம்பும் 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியம் கொண்ட சிறு திற உலோகக் கலவை. அணிகலன் தயாரிப்போர் இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர் silver white : வெள்ளிப் பூச்சு: வெண் ஈயத்தின் தூய்மையான வகை, வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா

similar poles : (மின்.) ஒத்த துருவங்கள் : ஒன்றையொன்று எதிர்க்கும் இரு காந்தத் துருவங்கள் ஒத்த துருவங்கள் எனப்படும். இவை காந்த முறையில் ஒத்திருப்பவை

simple equation: (கணி.) நேர் சமன்பாடு : கணிதத்தில் விசைப் பெருக்க உரு இல்லா சமன்பாடு

simple machine : (எந்.) விசையாக்கமற்ற பொறி : விசை உற்பத்தி செய்யாமல், நெம்புகோல், புல்லி, சாய்தளம், திருகு, சக்கரம் அச்சு, ஆப்பு போன்றவற்றில் ஒன்றின் செயலினால் இயங்கும் பொறி

sinad: (மின்.) சினாட்: ஒரு வானொலி வாங்கியின் கூருணர் திறனை அளவிடுவதற்கான ஒரு திட்ட அளவு முறை. கணிக்கப்பட்ட உற்பத்தி அளவில் 50% வரை சமிக்ஞை உற்பத்தி செய்யும் வகையில் வானொலி வாங்கியில் சீரமைவு செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளில் செலுத்தப்படும் சைகையின் நுண் மின்னழுத்தங்களின் எண்ணிக்கை 12 டிபிசினாட் அல்லது பயனுறு கூருணர்வுத் திறன் எனக் குறிக்கப்படும்

sine: (கணி.) நிமிர்வீதம்: செங்கோண முக்கோணத்தின் மீது சிறிதுகோண எதிர் வரை அடி வரை வீத அளவு

sine bar: (கணி.)நிமிர்வீத அளவு கருவி: கோணங்களைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம்

sine wave: (மின்.) எதிர்வ அலை: ஒரே அலைவெண் மாற்று மின்னோட்டத்தின் அலை வடிவம். ஒரு கோணம் 360° வழியே சுழலும் போது அக்கோணத்தின் எதிர்வம் (சைன் வடிவம்) தொட்டுச் செல்லும் அனைத்துப் புள்ளிகளையும் குறிக்கும் வரைபடம்

singing flame: (இயற்) இசையொலி அனற் பிழப்பு: குழாயினிடமாக இசையொலி எழுப்பும் அனற்பிழம்பு

singing sands : (இயற்.) ஒலிப்புப் பருமணல்: நடக்கும்போது பண்ணாரொலி எழுப்பத்தக்க சீரளவுடைய பருமணல்

single acting: (எந்.) ஒரு திசை இயக்கம்: நீராவி எந்திர வகையில் உந்து தண்டின் ஒரு பக்கம் மட்டுமே நீராவி ஏற்கிற இயக்கம்

single bar current transformer: ஒற்றைச்சலாகை மின்னோட்ட மாற்றி

single contact lamp: (மின்.) ஒற்றைத் தொடுமுனை விளக்கு: உந்து ஊர்திகளில் முக்கியமாகப் விளக்கு, இதில் அடிப்பகுதியின் முனையில் ஒரு தொடு முனை இருக்கும். அடிப்பகுதியின் பக்கங்களும், குதை குழியும் மின் சுற்று வழியை நிறைவு செய்கின்றன

single cut file: (உலோ.வே.) ஒரு திசை வெட்டுவரி அரம் : ஒரு திசை வெட்டுவரிகளை உடைய அரம். இதில் பற்கள் அரத்தின் முகப்புக்கு மூலைவிட்டமாக 65° கோணத்தில் ஒரே திசையில் இணையாக வெட்டப்பட்டிருக்கும்

single ended amplifier: (மின்.) ஒற்றைமுனை மின்மிகைப்பி: தனது இறுதி மின்விசைக் கட்டத்தில் தனியொரு வெற்றிடக்குழலை அல்லது மின்மப் பெருக்கியை (டிரான்சிஸ்டர்) கொண்டுள்ள ஒரு மின்மிகைப்பி

single phase motor: (மின்.) ஒற்றைங்லை மின்னோடி: ஒற்றை நிலை மாற்று மின்னோட்டத்தில் இயங்குகிற ஒரு மின்னோடி

single layer winding : ஒற்றையடுக்குச் சுருணை

single phase: (மின்.) ஒரு நிலையான மின்சுற்றுவழி: ஒரு நிலையான மாற்று மின்னோட்டச் சுற்றுவழி

single-phase alternating current : (மின்.) ஒருநிலை மாற்று மின்னோட்டம்: ஒரு மாற்று மின்னாக்கியிலிருந்து கிடைக்கும் மின்விசை, ஒரு தொடர் சுருள் அல்லது சுருள்களிலிருந்து கிடைக்குமானால், அது ஒரு நிலை மின்னோட்டம் எனப்படும்

single phase induction motor: (மின்.) ஒரு நிலை தூண்டு மின்னோடி: மின்னகச் சுருணைகளில் எதிர்காந்தப் புலத்தை உண்டாக்கக் கூடிய களக்காந்த முறையைக் கொண்டுள்ள மாற்று மின்னோட்ட மின்னோடி

single-pole switcht : (மின்.) ஒரு முனை விசை: ஒரு மின்சுற்றுவழியில் ஒரு பக்கத்தில் மட்டுமே திறப்பும் அடைப்பும் உடைய விசை

single-thread screw: (எந்.) ஓரிழைத் திருகு: ஒரே திருகிழையினையுடைய திருகு. இதில் புரியிழை இடைவெளியளவும், முற்செல் தொலைவும் சமமாக இருக்கும்

sinkage: (அச்சு) தொடக்கக் காலியிடம்: ஒரு நூலின் ஓர் அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள காலி இடம்

sinking speed: (வானூ.) இறங்கு வேகம்: ஒரு குறிப்பிட்ட சமநிலையில் விமானம் உயரத்திலிருந்து சறுக்கிக் கீழே இறங்கும் வேக வீதம்

sinter: வெந்நீரருவிப் படிவம்: ஒத்திசைவான திடப்பொருளைத் துகள்களாக மாற்றுவதற்கு, அதனை உருக்காமல் சூடாக்குவதன் மூலம் மாற்றுதல்

sinusoidal:(மின்.) எதிர்வ அலை: ஒரு கோணத்தின் சைன் வடிவத்தின் வீத அளவில் மாறுபடுகிற அலை

siphon: தூம்பு குழாய் : மேல் வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய்

siphon: (எந்.பொறி.) துாம்புகுழாய்: மேல் வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்துள்ள குழாய். வாயு மண்டலக் காற்றழுத்தத்தின் உதவியால் திரவங்களை உறிஞ்சி இழுப்பதற்கு இது பயன்படுகிறது

siphon barometer : தூம்பு அழுத்தமானி: அடி சிறிது மேல்வளைந்த அழுத்தமானி

siphonage : (கம்மி.) கவான் குழாய் வழி இயக்கம்: வாயுமண்டல அழுத்தத்திற்குக் குறைவான அழுத்தம் காரணமாக ஏற்படும் உறிஞ்சுதல் மூலம் உண்டாகும் திரவப் பாய்வு

siphon-gauge: நீர்த்தேக்க அழுத்தமானி: பாதரசம் அடங்கிய கவான் குழாய் மூலம் நீர்த்தேக்க அழுத்தம் காட்டும் அமைவு

sisal fiber: தாழையிழை: தாழை இனத்தைச் சேர்ந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் நாரிழை. இது வலிமை வாய்ந்தது; நெடுநாள் உழைக்கக் கூடியது

site (க.க.) முனை: ஒரு கட்டிடம் அமைந்துள்ள அல்லது ஒரு கட்டிடம் கட்டப்படவிருக்கிற எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம்

size: (1) தாள்மெருகு: காகிதத்திற்கு மெருகுப்பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் (2) தாள் வடிவளவு - குறிப்பிட்ட நீள அகல அளவுடைய தாள் வடிவளவு

size control: வடிவளவு கட்டுப்பாடு: தொலைக்காட்சியில் கிடைமட்டத்திலும், செங்குத்தாகவும் படத்தின் வடிவளவை அதிகரிக்கவோ குறைக்கவோ அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைவு

sizing: வகைப்படுத்துதல்: காகிதத்தை அதன் நீர் அல்லது மை எதிர்ப்புத் தன்மைக்கேற்ப வகை மாதிரிப்படுத்துதல்

skeletonizing: (அச்சு.) மென்கீற்று அச்சுருவாக்கம்: ஓர் அச்சுப் படிவத்தில் வண்ணப் பகுதிகளை நீக்கிவிட்டு, மென்கீற்று அச்சுருவை மட்டும் பதிவு செய்வதற்காகப் பூட்டி வைத்தல். இதனால் பல்வேறு வண்ணங்களில் அச்சிட இயலும்

skelp: (உலோ.) குழாய்த் தகடு: குழாய்கள் செய்வதற்கான எஃகு அல்லது இரும்புத் தகடு

sketch: திட்ட உருவரை: முதல்நிலை மாதிரி, புனையா ஓவியம், நினைவு வரிக்குறிப்பு

sketch outline: புனையா ஓவியம் : நுணுக்க விளக்கங்களின்றி மேலோட்டமாக வரைந்த ஒரு திட்ட உருவரை

skew: (எந்.) ஓரச்சாய்வு: செங்கோணத்தில் இல்லாத சாய்வு

skew back: (க.க.) சாய்வுதைவு: கவானின் இருமுனைகளிலுமுள்ள சாய்வுதைவுப் பரப்பு

skew back saw : சாய்வுதைவு ரம்பம்: எடை குறைவாக இருக்கும் வகையில் முதுகுப்புறம் வளைந்துள்ள கைரம்பம்

skew bridge: சாய்குறுக்குப்பாலம்: இரு புறப்பக்கங்களின்டயே சாய்வாகச் செல்லும் கட்டுமானம்

skew chisel: சாய்வுளி: சாய்வு விளிம்புத் தறிப்புக் கருவி

skew curve: முப்படை சாய்வு வளைவு: தன் தளங்கடந்த சாய்வுடைய மூவளவை வளைவு

skew gear: (பல்லி.) சாய்வு பல்லிணை: சுழல் பற்களுடைய பல்லிணை. இவை இன்று பெரும்பாலும் உந்து ஊர்திகளின் பின்புற இருசுகளில் பயன்படுத்தப்படுன்றன. இவை வலிமையை அதிகரித்து, உராய்வற்ற ஓசையற்ற இயக்கத்திற்கு உதவுகின்றன

skew wheel: சாய்பற்சரிவுச் சக்கரம்: ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சாய் பற்சக்கர அமைவு

skid: (வானூ.) விமானச் சறுக்குச் சக்கரம்: விமானம் ஓடு பாதையில் ஓடும்போது அல்லது தரையிறங்கும் போது அதற்கு உதவியாக இருக்கும் தரையிறங்கு பல்லிணையின் ஓர் உறுப்பு. உந்துவிசைக் கட்டை- உந்து ஊர்தியில் சக்கரத்தை உந்தித் தள்ளும் சாய்வு உந்துவிசைக் கட்டை

skid fan : சக்கரச் சுழற்சித் தடை காப்பு:

skid fin: (வானூ.) சறுக்கு நிமிர் நேர்விளிம்பு: விமானத்தில் கிடைமட்ட உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காகச் சிறகுக்கு மேலே பொருத்தப்பட்டுள்ள நிமிர் நேர் விளிம்புடைய தகடு skidding: (வானூ.) பக்கச் சறுக்கு: விமானம் திரும்பும்போது பக்கவாட்டில் சறுக்குதல்

skimmer: (வார்.) ஏடு எடுக்கும் கரண்டி: வார்ப்பட வேலையில் உருகிய உலோகத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுப்பதற்குப் பயன்படும் கரண்டி

skim milk: ஏடு எடுத்த பால்: ஆடை அகற்றப்பட்ட பால்

skimming:(வார்.) ஏடு எடுத்தல்: உருகிய உலோகத்தை ஊற்றும் போது படியும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுத்தல்

skimming-dish: விரை மெல் விசைப்படகு: தட்டையான அடிப்பகுதியினையுடைய விரைந்து செல்லும் பந்தய விசைப்படகு

skin: மென்தோல்: விலங்கிலிருந்து எடுக்கப்பட்ட பதப்படுத்திய அல்லது பதப்படுத்தாத மெல்லிய தோல்

skin-effect : (மின்.) புறம் பரவு விசை: ஒற்றை மாற்று மின் வலி வகையில் மின்கடத்தியின் புற நிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை

skin-friction : பக்க உராய்வுத் திறம் : கப்பல் வகையில் பக்கநீர் உராய்வுத் திறம்

skin-grafting: (மருத்.) தோல் ஒட்டு மருத்துவம் : உயிர்த்தோல் ஒட்டும் அறுவை மருத்துவம்

skinning : (மின்.) மின் காப்பி உரிப்பு : மின்னிணைப்பிகள் கொடுப்பதற்கு முன்பு மின் கடத்திகளிலிருந்து மின்காப்பிகளை உரித்தெடுத்தல்

skip: அலைத் தாவல் : வானொலி பரப்பில், ஒரு வான் அலையானது பூமியின் பரப்புக்கு மீண்டும் திரும்புவதால் உண்டாகும் விளைவு

skip distance : (மின்.) தாவல் தொலைவு : வானொலி பரப்புக்கும் வான் அலை பூமிக்குத் திரும்புகிற இடத்திற்குமிடையிலான தொலைவு. அலைவெண், நாளின் நேரம், புவியியல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து இது மாறுபடும்

sky-rocket : (இயற்.) வான் ராக்கெட்: வானத்தை நோக்கி நேராக உயர்ந்து விசையுடன் பாயும் ராக்கெட்

skirting: (க.க.) அகச் சுவரோரப் பட்டி : சுவரும் தரையும் சந்திக்குமிடத்தில் சுற்று விளிம்பாக அமைக்கப்பட்டுள்ள பட்டை

skiver : தோலாடை : தோலைச் சீவிப் பெறப்படும் மென்தோல். இது புத்தகக் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது

skiver leather : சீவிய மென் தோல் : தோலைச் சீவிப் பட்டையாக எடுத்த மெல்லிய தோல். அட்டைப்பெட்டிகள் பணப்பை முதலியவற்றில் உள்வரியிடவும், புத்தகக்கட்டுமானத்திலும் பயன்படுகிறது

skylight : (க.க.) மேல்தளச் சாளரம் : கட்டிட மேல் முகட்டில் அல்லது கூரையில் வெளிச்சத்திற்காக அமைக்கப்படும் கண்ணாடிச் சாளரம்

skyscraper : (க.க.) வானளாவி : இன்றுள்ள அலுவலகக் கட்டிடங்களைப் போன்று பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடம்

sky sign : மீமுகட்டு விளம்பரம் : உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களில் காட்டப்படும் ஒளி விளக்க விளம்பரம்

sky wave : (மின்.) வான் அலை : ஒரு வானொலியின் வானலை வாங்கியிலிருந்து வானத்தை நோக்கிச் செல்லும் அலை

sky writing : (வானூ.) புகைவரி எழுத்து : வானூர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைக் கோட்டு எழுத்து முறை

slab : பாளம் : தட்டையான மேற்பரப்புடைய கல், பளிங்குக் கல், கான்கிரீட் போன்றவற்றினாலான சிலாத்துண்டம்

slab-stone : பாளக்கல் : பாளம் பாளமாகப் பிளவுறும் கல்

slack : (எந்.) முனைப்புக் குறைவு: எந்திரத்தில் நீக்கப்பட வேண்டிய உறுப்புகள் தளர்வுறுதல்

slag : (வார்.) உலோகக் கசடு : வார்ப்படத் தொழிற்சாலைகளில் உருக்கிய சுரங்க உலோகச் கசடு

slag cement : சாம்பல் சிமென்ட் : ஊதுலைச் சாம்பற் கட்டியினாலான சிமென்ட்

slag wool : கனிமஇழைக் கம்பளி: உலோகக் கிட்டப்பாகூடான நீராவியால் இழைக்கப்படும் செயற்கைக் கம்பளி

sledge (உலோ.) சம்மட்டி : கொல்லுலைக் கூடத்தில் கருமான் இரு கையாலும் அடிக்கப் பயன்படும் நீண்ட கைப்பிடியுடைய சம்மட்டி

sledge - hammer : கொல்லுலைச் சம்மட்டி : இரு கைகளினாலும் கையாளப்படும் நீண்ட கைப்பிடியுள்ள சம்மட்டி. இது கருமானின் கொல்லுலைக் கூடத்தில் பயன்படுத்தப்படுகிறது

sleeker : (வார்.) மெருகு கருவி : வார்ப்படங்களில் சொரசொரப்பான பகுதிகளைப் பளபளப்பாக்குவதற்கும், வார்ப்படத்திலிருந்து மணலை அகற்றுவதற்கும் பயன்படும் கருவி

Sleeper (க.க) குறுக்குக் கட்டை: தண்டவாளக் குறுக்குக் கட்டை, குறுக்கு விட்டம்

sleeping-drought: (மருந்.) தூக்க மருந்து : உறக்கத்தைத் தூண்டும் குடிநீர்மம்

sleeping - sickness : (நோயி.) உறக்க நோய்: ஈவகைக் கடியினால் உண்டாகும் கொடிய ஆஃப்ரிக்க நச்சு நோய் வகை

sleep-walking : (நோயி.) உறக்கத்தில் நடக்கும் ஒருவகை நோய்

sleepy-sickness: (நோயி.) மூளை விக்க நோய்: மயக்கத்தோடு கூடிய ஒருவகை மூளைவீக்க நோய்

sleet : ஆலங்கட்டி மழை : ஆலங் கட்டியாக மழை பெய்தல்

sleeve : (எந்.) பெருங்குழல் : கம்பி உருளையினுள் செருகப்பட்ட குழல்

sleeve-coupling : மேவு குழல் : குழாய்கள் இடையிணைப்புக் குழல், எந்திரத் தண்டச்சுகள் இடையிணைப்புக் குழாய்

sleeve - valve : இழையுருளைத் தடுக்கிதழ்

sleeve nut : (பொறி.) இடையிணைப்பு உறழ்சுரை: இரு சலாகைகளை இணைப்பதற்குப் பயன்படும் வலம்-இடம் புரியிழைகள் உடைய, தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய நீண்ட சுரையாணி

sleeve valve motor : (தானி.) இழையுருளைத் தடுக்கிதழ் மின்னோடி: உறழ்சுரைகளையும் உந்து தண்டுகளையும் கொண்ட தடுக்கிதழ் அமைவுடைய ஒரு மின்னாடி

slice : (உலோ.) சுரண்டு கோல் : உலைகளைத் துப்புரவுக் கரண்டி, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி

slice or slice bar : (பொறி.) சுரண்டுகோல் : உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் துப்புரவுக் கரண்டி

slicking : (பற்ற.) மெருகேற்றுதல்: வார்ப்படங்களுக்கு மழமழப்பான மெருகுத் தோற்றம் கொடுத்தல்

slide : (இயற்.) காட்சிவில்லை : ஒரு திரையில் படம் விழுமாறு செய்வதற்காகத் திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் பயன்படுத்தப்படும் ஆய்வாடிகளின் காட்சி வில்லை

side-caliper : (இயற்.) நுண் விட்டமானி : நழுவு நிண்படிக்கலமுடைய விட்டம் அளக்கும் கருவி

slide gear : (உலோ.) சறுக்குப் பல்லினை : ஒரு சுழல் தண்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பல்லிணை. இது சுழல் தண்டு சுழலும் போது சுழன்று, சுழல் தண்டுடன் சேர்த்து கிடைமட்டத்தில் சறுக்கிச் செல்லும்

slide rule : (பொறி.) உழற்படியளவைக் கோல் : நுண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவுகோல்

slide valve : (பொறி.) இழைவடைப்பு : நழுவு இயக்கத்துடன் செயற்படக் கூடிய தடுக்கிதழ்

sliding-keel : இழை கட்டை: படகு பக்கவாட்டில் சாயாமல் தடுக்கும் அடிமட்ட மையப்பலகை

sliding-rule : உறழ்படியளவைக் கோல் : துண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவு கோல்

sliding seat : நெகிழ்விருக்கை : பந்தயப் படகில் துடுப்பு வலிப்பவரின் உடலசைவுக்கேற்ப நெகிழ்ந்தசைந்து கொடுக்கும் அமர்வு பீடம்

slip : சுழல் வேக வேறுபாடு : சுழலும் காந்தப் புலத்திற்கும், அந்தப் புலத்தில் சுழலும் சுழலிக்குமிடையில் வேகத்தில் ஏற்படும் வேறுபாடு

slip rings , (மின்.) வழுக்கு வளையம் : சுழலும் மின் சுற்று வழிக்கு மின்னோட்டத்தைக் கடத்தும் முறை

slip stream : (வானூ.) பின்கால் விசை : வானூர்திச் சுழல் விசிறியின் பின்னுந்து காற்றோட்டம்

slipway : கப்பல் துறைச் சாய் தளம் : கப்பல்கட்டுந்துறைச் சாய்தளம்: கப்பல் இறங்கு துறைச்சாய் மேடை

slitter : (அச்சு.) நெக்கு வெட்டுருளை: தகடுகளை இடையிட்டு அழுத்திக் கீறும் உருளை இணைக்கருவி

slitting-rollers : நெக்கு வெட்டுருளை : தகடுகளை இடையிட்டு அழுத்திக் கீறும் உருளை இணைக் கருவி

slitting saw for metal : (எந்.) உலோக நெக்குவெட்டு ரம்பம் : உலோகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் மெல்லிய வெட்டுக் கருவி

slot ; (வானூ.) இயைவடுப் பள்ளம்: எந்திரத்தில் மற்றொரு பகுதியுடன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம்

slot-machine : துளைவிளிம்பு பொறி : துளைவிளிம்பில் காசு போடுவதனால் இயங்கும் எந்திரம்

slot-meter : காசுவீழ்வு அலகுமானி : காசு வீழ்வதனால் அலகு குறித்துக் காட்டுகிற கருவி

slot screwing : துளை விளிம்பு திருகு : திருகாணியின் கொண்டை தெரியாதபடி அதைப் பொருத்துவதற்கான ஒரு முறை

slow sand filter (பொறி.) சுணக்க வடிகட்டி: நீரைத் தூய்மையாக்குவதற்கான ஒரு வடிகட்டி. இது விரைவாக வடிகட்டும் பெரிய வடிகட்டிகளிலிருந்து அமைப்பில் வேறுபட்டது

sloyd knife : (மர.வே.) மரச்செதுக்குக் கத்தி : மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் கத்தி. அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி

sludge : குழைசேறு: கொதிகலனில் படிவது போன்ற கசடு

sludge : (குளி.பத.) குழைசேறு: குளிர்பதனச் சாதனத்தில் ஈரம், மசகுப் பொருள்களிலுள்ள மாசுகள் காரணமாகப் படியும் கசடு

slug : (அச்சு.) உலோக வரிப் பாளம் : உருக்கச்சு எந்திரத்தில் கோத்த வரிப்பாளம்

slug : (மின்.) காந்த உள்ளீடு : ஒரு சிறிய காந்த உள்ளீடு

slug casting machine : (அச்சு.) வரி உருக்கச்சுப் பொறி : அச்சுருக் கோப்பு இல்லாமல் எழுத்துக்களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடுக்கும் அச்சுப்பொறி

slum: மசகுமண்டி: மசகெண்ணையில் பயன்பாடின்போது உண்டாகும் பிசுக்குள்ள மண்டி

slur : (அச்சு.) மறைகறை : தெளிவற்ற மறைப்புத் தன்மை எழுத்தின் மேல் எழுதித் தெளிவற்றதாக்குதல்

slurry : மின் உள்வரிச் சாந்து : மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர் செய்யப் பயன்படுத்தப்படும் நுண்மணல், களிமண் கலந்த அரை நீர்மக் கலவை

slush : பணிச்சேறு : அறைகுறையாக உருகிய பனிக்கட்டி

slushing oil: குழை எண்ணெய் : உலோகங்கள், எந்திர உறுப்புகள் முதலியவற்றில் அரிமானம் ஏற்படாமல் தடுப்பதற்குப் பயன்படும் எண்ணெய்

slush moulding : (குழை.) குழை வார்ப்படம் : வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிசினைச் சூடான வார்ப்படமாக வார்ப்பதற்கான ஒரு முறை

smock: ஒற்றைப் பாய்மரக் கப்பல்: மீன் பிடிப்பதற்கான ஒற்றைப் பாய்மரக் கப்பல்

small caps : (அச்சு.) குறுந்தலைப்பெழுத்துக்கள் : குறுந்தரத் தலைப்பு வடிவ எழுத்துக்கள்

small pica : (அச்சு.) அச்செழுத்து வடிவளவு : புள்ளி அளவுடைய அச்செழுத்து வடிவளவு

smalt : (அச்சு.) நீலவண்ணப் பொடி: வண்ணம் பூசுபவர்களும் விளம்பர எழுத்தாளர்களும் அலங்கார வேலைப்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் நீலவண்ணப் பொடி வண்ணம் பூசிய பகுதிகளை காற்றும் வெயிலும் அரித்து விடாமல் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது

smashing; (அச்சு.) அச்சு வரி அழுத்தம் : அச்சு முழுமடித் தாள் வரிசை எண் தட்டையாக அமையும்படி அழுத்தி விடுதல் smecktit : வெண்களி : கறை துடைப்புக் களிமண் வகை

smelting: (உலோ.) உருக்குதல்: சுரங்கப் பொருட்களை உருக்கி அவற்றிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்

smithery : பட்டறை : உலோகத் தொழில் நடைபெறும் பட்டறை. கொல்லர் பட்டறை

smock-mill : காற்று விசை ஆலை : முகட்டுப் பகுதி மட்டும் சுழலும் காற்று விசை ஆலை

smoke-ball : புகைத் திரை ஏவு குண்டு : மூடாக்கு புகைப்படமிடப் பயன்படும் விசைக் குண்டு

smoke ball:(மருந்.) உறிஞ்சுவளிக் குளிகை : காச நோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை

smoke-stone : மது நிறமானி : மஞ்சள் நிற மணிக்கல் வகை

smoking: புகைப்பதனம்: பச்சையான மண்பாண்டங்களிலிருந்து ஈரத்தை அகற்றுவதற்கு முதற் கட்டமாகப் புகையாவி பிடித்தல்

smoothing plane: (மர.வே.) இழைப்புளி: தச்சர்கள் பயன்படுத்தும் 23செ. மீ. நீளமும் 4.4 முதல் 5.7செ.மீ. அகலமும் உடைய இரும்பினாலான இழைப்புளி

இழைப்புளி(படம்)

smooting trowel: பூசுகரண்டி:சாந்துப் பூச்சுப் பரப்புகளைச் சமப்படுத்துவதற்காகப் பயன்படும் கரண்டி.

பூசு கரண்டி(படம்)

snake : பாம்பு கம்பி : ஒரு குழாய் அல்லது ஓர் இடைத்தடுக்கு அல்லது பிற அணுக முடியாத இடங்கள் வழியாக மின்கம்பிகளைச் செலுத்துவதற்கு அல்லது இழுப்பதற்குப் பயன்படும் நெகிழ்திறனுடைய மின்கம்பி

snake stone: பாம்புக்கடி மருந்துக் கல் : பாம்புக் கடியைக் குணப்படுத்துவதற்கான ஒரு வகை மருந்துக்கல்

snap-blot : விற்பூட்டு : கதவை மூடும் பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில்லமைவு தாழ்ப்பாள்

snap-hook : பற்றிவிடாக் கொளுவி: விற்சுருள் மூலம் இயங்கும் தானே பூட்டிக்கொள்ளும் கொளுவி

snap-lock : விற்பூட்டு : கதவை மூடும்பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில் பொருத்திய தாழ்ப்பாள்

snap shot : நொடிப்பு ஒளிப்படம் : நொடிப்பு நேரத்தில் எடுக்கப்படும் ஒளிப்படம்

snap switch : (மின்.) விரைவு மின்விசை: குமிழை அல்லது விரல் கட்டையை வலப்புறமாகத் திருப்புவதன் மூலம் விரைவான இயக்கத்துடன் மின் தொடர்புகளை ஏற்படுத்துகிற அல்லது முடிக்கிற மின்விசை

snail-wheel : நந்தாழி : மணிப்பொறியில் மணியடிப்பதை முறைப்படுத்தும் நத்தை வடிவப்பல் வெட்டுச் சக்கரம்

snarling iron : (உலோ.வே.) புடைப்பு இரும்பு : உலோகக் குடுவையின் உட்புறத்தே கொட்டுவதன் மூலம் புறத்தே புடைப்பு வேலைப்பாடு அமைத்து அழகு செய்வதற்கான இரும்பு snider rifle : பிட்டச் சுழல் துப்பாக்கி : பின் எழியே மருந்துக் குண்டு அடைக்கப் பெறும் சுழல் துப்பாக்கி வகை

snifting-valve : ஏகுழி : நீராவிப் பொறி உந்து தண்டுக் குழலின் காற்று வெளியிடும் தடுக்கிதழ்

snips : (உலோ.வே.) உலோகத் திரி : உலோக வேலைப்பாட்டுத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உலோகத் தகடுகளை வெட்டுவதற்கான கத்திரி

snow : வெண்புள்ளி : தொலைக் காட்சியில் ஓசை அல்லது வலுவற்ற சமிக்ஞை காரணமாக உண்டாகும் இடையீடு. இது படத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றும்

snow blindnss : பனிக் குருடு : பனிப்பாள ஒளி வீச்சினால் ஏற்படும் பார்வைக்கேடு

snow blink : பனிவுரு நிழல் : வானத்தில் தோன்றும் பனிப் படலத்தின் ஒளி நிழல்

snow-guage : பனிவீழ்வு மானி : பூமியில் பெய்யும் பனியின் அளவைக் கணக்கிடும் அளவு கருவி

snow-plough : பனிவாரி : பாதைகளிலிருந்து பனி அடைவுகளை அகற்றுவதற்கான கருவி

snubber : (தானி.) அதிர்ச்சி தாங்கி : விற்சுருளின் பின்னதிர்வைக் குறைத்து, ஆட்டத்தைக் குறைப்பதற்காக அச்சுக்கும் சட்டகத்திற்குமிடையில் இணைப்பாகப் பயன்படுத்தப்படும் எந்திர அமைவு.இது ஒரு முரசு விற்சுருள் உராய்வுப்பட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்

soaking: (தானி.) தோய்வுறுத்தல்: எஃகில் முழுமையான ஒரே சீரான ஊடுபரவல் ஏற்படும் வரையில் எஃகை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருத்தல்

soaking pit : (உலோ.) உலோக உருக்கு உலை: உருட்டுவதற்கு ஆயத்தமாக உலோகப் பாளங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் ஓர் உலை

soar : (வானூ.) வானில் வட்டமிடல் : விமானம் தற்செலுத்தமின்றி உயர் வானவெளியில் மிதந்து தவழ்தல்

socket : (மின்.) புதைகுழி : வெண்சுடர் விளக்கின் அல்லது செருகின் திருகிழைப் பகுதி பொருத்தப்பட்டுள்ள கொள்கலம். இதனைப் பொதுவாக ஊர்திக் கொள்கலம்' என்பர்

socket chisel : (மர.வே.) குதை குழி உளி: தச்சர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உளி. இதன் மேற்பகுதி, ஒரு குதை குழிக்குள் செருகப்பட்டு, அதில் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும் குதை குழி உளி(படம்)

socketing : (அ.க.) குதை குழியில் பொருத்தல் : ஒரு மரத்துண்டை இன்னொரு மரத்துண்டின் உட்குழிவுக்குள் செருகுவதன் மூலம் இணைக்கும் ஒரு முறை

socle : (க.க.) அடிப்பீடம் : ஒரு சுவர் அல்லது தூணின் அடிப்பீடப்பகுதி

soda ash : சோடாக்காரம் : (NaCO3) தூய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

soda or sodium carbonate : (வேதி.) உவர்க்காரம் (சோடா) : இதனை சோடியம் கார்போனேட் என்றும் கூறுவர். இது வீடுகளி லும் தொழில்களிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வேதியியல் கூட்டுப் பொருள்களைக் குறிக்கும். உவர்க்காரம் உப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடித் தயாரிப்பிலும் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் சோடியம் கார்போனேட் பயன்படுகிறது

soda pulp: உவர்க்காரக் கூழ்: மை ஒட்டுத்தாள், பருமனான புத்தகத் தாள்கள் முதலியவற்றுக்கு உவர்க்கார முறையில் தயாரிக்கப்படும் ஒருவகை மரக்கூழ்

soda-water mixture : (எந்.) உவர்க்கார நீர்க்கலவை : உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளாகவும், மசகுப்பொருளாகவும் பயன்படுகிறது

sodium chloride: (வேதி.) சோடியம் குளோரைட் (NaCl): சாதாரண உப்பு அல்லது பாறை உப்பு

SOF : திரைப்பட ஒலி : திரைப்படத்தில் இணைக்கப்படும் ஒலி

soffit : (க.க.) அடிச்சிற்பம் : வளைவி. படிக்கட்டு, விட்டம் ஆகியவற்றின் அடியிலுள்ள சிற்பம்

soft : (வேதி.) மசிவுப்பொருள் : குறைந்த வெப்பநிலைகளில் உருகி இளகும் தன்மையுள்ள பளிங்குப் பொருள் அல்லது களி மண்

soft coal : மட்கரி : நிலக்கீல் தரும் கற்கரி வகை

soft brass: (உலோ.) மென்பித்தளை: கம்பியாக இழுக்கத்தக்கதாகப் பதப்படுத்தப்பட்ட பித்தளை

soft coal: மட்கரி: நிலக்கீல் தரும் கற்கரி வகை

soft corn: தொய்வாணி

soft landing: (விண்.) மெல்லத் தரையிறங்கல்: சந்திரன் போன்ற பிற கோளங்களில் தரையிறங்கும் ஊர்திகள் மோதி உடைந்து விடாத வகையில் மிகக் குறைந்த வேகத்தில் தரையிறங்குதல்

soft solder: மென்பற்றாசு: இளங்கொதி நிலைப்பற்றாசு. வெள்ளியத் தகடு பிற உலோகத் தகடுகள் போன்ற எளிதில் உருகும் உலோகங்களைப் பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்துப் பொருள். இது பாதி வெள்ளியமும், பாதி ஈயமும் கலந்ததாகவோ 90% வெள்ளியமும் 10% ஈயமும் கலந்ததாகவோ இருக்கும். இதனுடன் சிறிதளவு ஆன்டிமனியும் சேர்ப்பதுண்டு

soft steel (பொறி.) மென் எஃகு: கார்பன் அளவு குறைவாகக் கலந்துள்ள எஃகு. இது வளைவதில்லை

soft stone: இரும்பு

soft tube : (மின்.) நெகிழ் குழல் : ஒரு வாயுக்குழல்

soft water : மென்னீர்: கார்பொனேட், சுண்ணாம்பு சல்ஃபேட்டு இல்லாத நீர்

softwood : ஊசியிலை மரம்: ஊசியிலைக் காட்டு மரங்கள். இவை ஊசி அல்லது செதிர் போன்ற இலைகளை உடையவை. இதனை மென்மரம் என்பர். மென்மரம் என்பது மரத்தின் மென்மையைக் குறிப்பதில்லை

soil pipe: (கம்மி.)கழிநீர்க் குழாய்: வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பய்ன்படுத்தப்படும் 1.5மீட்டர் நீளமுள்ள வார்ப்பு இரும்புக் குழாய் soil stack : (கம்மி.) கழிநீர்க் குழாய் : கழிவுநீர்ச் சாக்கடை அமைப்பில் பயன்படுத்தப்படும் செங்குத்தான கழிநீர்க் குழாய்

sol : (குழை.) இழுதுப்படலம்: ஒரு திரவத்தின் கரைசல் அல்லது இழுதுநிலைப் படலம்

solar engine: (எந்.பொறி.) சூரிய ஒளி எந்திரம் : பெருமளவு கண்ணாடிப் பரப்பில் சூரிய ஒளி படுவதால் உண்டாகும் வெப்பத்தினால் இயங்கும் எந்திரம்

solarium : (க.க.) கதிரொளிக் கண்ணாடி மனை: மருத்துவ நலம் கருதிய கதிரொளிக் கண்ணாடி மனை

solar wind : (இயற்.) சூரியக் காற்று: சூரியனிலிருந்து புறமாக இடைவிடாது நகர்ந்து கொண்டிருக்கும் புரோட்டான்களின் தாரை

solder : (உலோ .) பற்றாசு : உலோகங்களை வெப்பத்தின் மூலம் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகக் கலவை. இது பொதுவாக ஈயமும், வெள்ளீயமும் சம அளவில் கலந்ததாக இருக்கும். இதன் உருகுநிலை சுமார் 188°C (370,4°F)

soldering : (எந்.) இடையிணைப்பு : ஒத்திராத உலோகங்களை அல்லது உலோகக் கலவைகளை உரிய வெப்பநிலையில் பற்றாசு வைத்து இணைத்தல்

soldering copper : (எந்.) பற்றாசு செம்பு : பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை இடையிணைப்பு இரும்பு என்றும் அழைப்பர் பற்றாசு செம்பு(படம்)

soldering flux : பற்றுப் பொருள் : உலோகங்களைப் பற்ற வைத்திணைக்கப் பயன்படும் சிறு திற உலோகம்

soldering furnace : (உலோ .) பற்றாசு உலை : பற்றவைக்கும் செம்பினைச் சூடாக்குவதற்கான மேசை வடிவ வாயு உலை

soldering iron: பற்றாசுச் சூட்டுக்கோல் : பற்றாசு வைக்கப் பயன்படும் கொதிநிலைச் சூட்டுக்கோல்

sole : (க.க.) அடிக்கட்டுமானம் : குமிழ் முகப்பினைத் தாங்குவதற்கான அடித்தளத்தின் உச்சியில் அமைக்கப்படும் அடிக்கட்டுமானம்

solenoid : (மின்.) மின்கம்பிச் சுருள் உருளை : ஒரு மின்காந்தத் திருகுச் சுழல். ஒருநேரான அல்லது வளைவான அச்சினைச் சுற்றி ஒரே திசையில் சமமான வட்ட மின்னோட்டம் பாயும் ஓர் அமைப்பு

solenoid relay : (தானி; மின்.) மின் உருளை அஞ்சல்: சேற்றுத் தடைக் கட்டையிலுள்ள ஓர் அழுத்து பொத்தான் மூலம் இயக்கப்படும் தொடக்க மின்னோடி மின் சுற்று வழியை முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு வகை விசை

solenoid valve : (குளி.பத.) கம்பிச் சுருள் தடுக்கிதழ் : கம்பிச் சுருள் செயற்பாடு அல்லது அழுத்தம் மூலம் அடைத்துக் கொண்டு மின்னியல் மூலம் இயங்கும் காந்த மின்கம்பிச் சுருளை உருளை வாயிலாகத் திறந்து கொள்ளும் ஒரு தடுக்கிதழ்

sole plate : (பொறி.) எந்திர அடித்தட்டு : ஓர் எந்திரத்தை வைத்து பிணைப்பதற்கான ஓர் அடித்தட்டு, solid angle : பல்தளக் கோளம் : ஒரு புள்ளியில் சந்திக்கும் பல்தளக் கோளங்களின் தொகுதி

Solid bearing: (எந்.)திடத்தாங்கி: ஒரே துண்டான கெட்டியான தாங்கி. திடத்தாங்கிகள் பொருத்தப்படும் உறுப்புகளில் திடத்தாங்கிகளை அழுத்திப் பொருத்தியதும் அது இருக உருளை எனப்படும்

solid friction : (எந்.) திடஉராய்வு : ஒரு திடப்பொருளின் மேற்பரப்பு, இன்னொரு திடப் பொருளின மேற்பரப்பின் குறுக்கே நகரும்போது உண்டாகும் உராய்வு

solid propellant : ( விண்.) திட முற்செலுத்து பொருள் : திடநிலையிலுள்ள ஒரு ராக்கெட் முற்செலுத்து பொருள். இது நிலையான வேதியியல் கனற்சிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கும்

solo : (வானூ.) தனிப்பறப்பு : விமானத்தில் துணையில்லாமல் தனியாகவே பறத்தல்

soluble : கரையத்தக்க : ஒரு திரவத்தில் கரையத்தக்க

soluble glass: படிக்கதிக் கலவை: செயற்கைக் கற்களைக் கடினப்படுத்தத் தயாரிக்கும் வெடியப் படிக்ககிக் கலவை

soluble oil : (உலோ.) கரையும் எண்ணெய் : தண்ணிரைச் சேர்க்கும்போது எண்ணெயும் நீரும் கலந்த பசைக் குழம்பு

sonic barrier : (இயற்.) ஒலிவிசை எதிர் அழுத்தம் : ஒலிவிசையடுத்து வரும் வேகங்களுக்குக் காற்று எதிர் வழங்கும் எதிரழுத்த விசை

solute : (வேதி.) கரைவம்: கரைசலில் கரைந்துள்ள பொருள்

solution : (வேதி.) கரைசல் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்து கரைந்த கலவை

solvent : (வேதி.) கரைமம் : ஒரு பொருளைக் கரைப்பதற்குப் பயன்படும் மற்றொரு பொருள் கரைமம் ஆகும். உப்பை நீர் கரைக்கும். நீர் ஒரு கரைமம்

sonic speed (விண்.) ஒலி வேகம் : ஒலி செல்லும் வேகம்

soot : புகைக்கரிக் கறை

sorts : (அச்சு). தனி எழுத்துரு : தனி எழுத்துருத் தொகுதி

sounder: (மின்.) கடல் ஆழமானி: எதிரொலி நேரம் மூலம் கடலின் ஆழத்தை அறியும் கருவி

sounder magnet : (மின்.) ஆழ் தட ஆய்வுக் காந்தம் : ஒரு தந்தி ஆய்தட ஆய்வுக் கருவியிலுள்ள மின்காந்தம்

sounding - line (sounding machine) கடலாழமானி: கடலின் ஆழம் காணப் பயன்படும் கருவி

sounding balloon : (வானூ.) மீவிசும்பு ஆய்வுக் கூண்டு : மீவிசும்பு நிலை ஆய்வுக்காக அனுப்பப்படும் சிறுகூண்டு

sounding - board : ஒலித்தடைத் தட்டி: மேடைமீது ஒலிபரவுதலைத் தடுத்து முன் செலுத்தும் மென்பலகை

sounding-lead: அடி ஈயக்குண்டு: கடல் ஆழமானியின் அடிஈயக் குண்டு

sounding rocket : வாயுமண்டல ஆய்வு ராக்கெட்: வாயுமண்டலதின் மேற்பகுதியின் நிலைமைகளை ஆராய்வதற்காக அனுப்பப்படும் ராக்கெட் sounding-rod: அடித்தேக்கமானி: கப்பலில் அடித்தேங்கு நீரளவினைக் காணும் கருவி

soundings : கடலாழ அளவீடு: கடலின் ஆழத்தைக் காட்டும் அளவீடுகள்

sound ranging altimeter : (வானூ.) ஒலிவீச்சு உயரமானி : ஒரு விமானத்திலிருந்து ஒர் ஒலி அலை பூமிக்குச் சென்று மீண்டும் விமானத்திற்கு மீள்வதற்குத் தேவையான நேரத்தின் அளவைப் பொறுத்து உயர அளவுகளைக் காட்டும் ஒர் உயரமானி

sound track : ஒலி வரி  : திரைப்படத் தட்டின் ஒலிவரி

sound wave : (மின்.) ஒலி அலை: மனிதரிடம் ஒலியுணர்வை உண்டாக்கும் காற்றின் ஒரு மாற்றுச் செறிமானம் என்றும் செறிவின்மை என்றும் கருதப்படும் ஓர் அலை

source of supply : (மின்.) வழங்கீட்டு ஆதாரம் : மின்னியக்கு விசையினை உண்டாக்கும் ஒரு மின் சுற்றுவழியின் உட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம். இது ஒரு மின்னாக்கியாகவோ, மின்கலமாகவோ, வேறு கருவியாகவோ இருக்கலாம்

southern moss : (தாவர.) தென்பாசி: இதனை லூசியானா பாசி, ஸ்பானியப் பாசி என்றும் கூறுவர். இது மரங்களில் வளர்கிறது. நீண்ட் தோரணங்கள் போல் தொங்கும். காற்றிலிருந்து இது தனக்குரிய உணவுப் பொருளை எடுத்துக் கொள்கிறது. இது மெத்தை, திண்டு வேலைப்பாடுகளில் பெருமளவில் பயன்படுகிறது

southern pine : (தாவர.) தென் தேவதாரு : நீண்ட இலைகளும் மஞ்சள் நிறமும் கொண்ட தேவதாரு மரம். கடினமான கட்டுமானப் பணிகளில் முக்கியமாகப் பயன்படுகிறது

soya bean oil : (வண்.) சோயா மொச்சை எண்ணெய்: பயறு இனம் சார்ந்த ஆண்டுத் தாவரமாகிய சோயா மொச்சை விதையிலிருந் எடுக்கப்படும் எண்ணெய்

space : (அச்சு.) எழுத்திடைவெளி : அச்சில் எழுத்துக்களுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற்களுக்கிடையிலான இடைவெளி

விண்வெளி : விண்ணிலுள்ள அகன்ற இடப்பரப்பு

space age: (விண்.) விண்வெளிக் காலம்: விண்வெளிக்கு ஏவுகணை செலுத்தியும், விண்வெளிக் கலங்களைச் செலுத்தியும் மனித அருஞ்சாதனை புரிந்துள்ள வரலாற்றுப் பருமை வாய்ந்த காலம்

space charge: (மின்.) வெளி மின்னேற்றம்: ஒர் எலெக்ட்ரான் குழலின் எதிர்முனையைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான் மேகக்கூட்டம்

space craft: (விண்.) விண் வெளிக்கலம்: விண்வெளியில் பறப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒர் ஊர்தி

space environments (விண்.) விண்வெளிச் சூழல்: விண்வெளியில் நுழையும்போது விண்வெளிக் கலங்களும், உயிர்ப் பிராணிகளும் எதிர்நோக்கும் சுற்றுப்புறச்சூழல்

space platform: விண்வெளி மேடை : அறிவியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படக்கூடிய பெரிய செயற்கைக் கோள். இது விண்வெளியில் குடியிருப்பதற்கான ஒரு தளமாக வடி வமைக்கப்படுகிறது. இந்த விண்வெளி மேடையில், குடியிருப்பு வசதிகள், மின்விசை வழங்கீட்டு அமைப்புகள், மற்ற விண்வெளிக்கலங்களிலிருந்து ஆட்களையும் சரக்குகளையும் மாற்றுவதற்கான வசதிகள், அறிவியல் சாதனங்கள், செய்தித் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை அமைந்திருக்கும்

space probe: (விண்.) விண்வெளி ஆராய்ச்சி: விண்வெளிச்சூழல் பற்றிய புதிய தகவல்களை ஆராய்ந்தறிந்து பூமிக்கு அனுப்புக்கூடிய கருவிகள் அடங்கிய கலங்களைப் பூமியைச் சுற்றி வருவதற்கு அனுப்பி ஆய்வுகள் செய்தல்

space satellite: (விண்.) விண்வெளிச் செயற்கைக் கோள்: பூமி சந்திரன் போன்ற கோளங்களை வட்டப் பாதையில் சுற்றி வருவதற்காக மனிதர் செய்து அனுப்பும் செயற்கைக் கோள்

space ship: விண்வெளிக்கலம்: விண்வெளிக்குச் செலுத்தப்படும் விசையூர்தி

space station: (விண்.) விண்வெளி நிலையம்: வட்டப்பாதையில் சுற்றி வருவதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒரு நிலையம், இதன் உதவியுடன் விண்வெளியில் பயணம் செய்யவும், விண்வெளியை மேலும் ஆராயவும் முடியும்

space time: (விண்.) இடகால தொடரளவு: இடத்தின் மூல அளவையுடன் காலம் இணைந்த இழை வளவான நாலளவைத்திறம்

space travel: (விண்.) விண்வெளிப் பயணம்: விசையூர்திகளில் விண்வெளியில் பயணம் செய்தல்

spacing: (அச்ச.) இடையிடம் விடல்: அச்சில் அழகான தோற்றப் பொலிவு ஏற்படும் வகையில் சொற்களுக்கும், வரிகளுக்குமிடையில் இடையிடம் விட்டு அமைத்தல்

spacistor: (மின்.) வெளிமின்ம பெருக்கி: ஒரு மின்மப் பெருக்கியை டிரான்சிஸ்டர் ஒத்த நான்கு கூறுகள் கொண்ட மின்கடத்தாப் பொருள். இது விண்வெளி மின்னேற்ற மண்டலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது மிக உயர் அலைவெண்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது. இதனால் உண்டாகும் முக்கிய நன்மையாகும்

spall: (க.க.) சிம்பு/சிராய்: செங்கற்களை அல்லது கற்களை நொறுக்கி ஆக்கிய சிம்பு

span: (வானூ.) இடையகலம்: விமானத்தில் ஒரு இறக்கை முனையிலிருந்து மற்றொரு இறக்கை முனை வரையிலான இடையகல அளவு

கட்டிடக்கலையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனிவளைவு அளவு

spandrel: (க.க.) கவான் மூக்கு: கவான் வளைவுக்கும் அது கவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூலையிடம்

spanner: புரிமுடுக்கி: திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி

spare: (பட்.) உதிரி உறுப்பு: எந்திரங்கள், டொறிகள், ஊர்திகள் வகையில் வேளைக் காப்பீட்டு உதிரி உறுப்பு

spark: (தானி.) மின்விசைப்பொறி : எஞ்சினில் எரிபொருள் ஏரிதல் உண்டாக்குவதற்கான மின்விசைப் பொறி

spark arrester: மின்பொறிகாப் பமைவு: மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகாதபடி தடுக்கும் அமைவு spark coil: (மின்.) அனற்பொறிச் சுருள்: மிகுந்த செறிவான அனற் பொறி உண்டாக்குவதற்கான மின்கம்பிச் சுருள்

spark-gap: (மின்.) மின்சுடர் இடைவெளி: மின்விசைப்பொறிதாவும் மின்முனை இடைவெளி நெறி

spark plug: (தானி.) அனற்பொறி அமைவு: உந்துபொறி, உள் வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு

அனற்பொறி அமைவு

படம்

spark plug electrodes: (தானி.) அனற்பொறி மின் வாய்கள்: மின் அனற்பொறி தாவிப் பாய்வதற்கான உலோக மின்வாய்கள்

spark test: (உலோ.) சுடர்ச் சோதனை: இரும்பையும், எஃகையும் சாணை பிடிக்கும்போது ஏற்படும் சுடரினைக் கொண்டு இரும்பு, எஃகு வகைகளைக் கண்டு பிடிக்கும் ஒரு முறை

spectral analysis: வண்ணப் படைப் பகுப்பாய்வு

spatula: தட்டலகுக் கரண்டி: வண்ணங்களைக் குழைக்கப் பயன்படும் நெகிழ்வான அலகுடைய கத்தி போன்ற கரண்டி

specification: தனிக் குறிப்பீடு: தனித்தனி விவரக் குறிப்பீடு

specific gravity: (இயற்.) ஒப்பு அடர்த்தி: ஒரு பொருளின் வீத எடைமானம். திடப்பொருள்களையும், திரவங்களையும், நீருடனும், வாயுக்களைக் காற்றுடனும் ஒப்பிட்டு அடர்த்தி கணக்கிடப்படுகிறது

specific heat: வீத வெப்பமானம்: குறிப்பிட்ட அளவை ஒரு பாகை வெப்பத்திற்கு உயர்த்துவதற்கான வெப்ப அளவை நீரொப்பீட்டெண்

specimen bar: (பொறி.) மாதிரி உலோகச் சலாகை: சோதனை எந்திரத்தில் சோதனை செய்வதற்காகத் தனியாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி உலோகச் சலாகை

spectral colours: (வண்.) வண்ணப்பட்டை வண்ணங்கள்: ஒரு கண்ணாடிப் பட்டகை மூலம் சூரிய ஒளிக்கதிர் வளையும்போது உண்டாகும் வண்ணப்பட்டை

spectro photometer: வண்ண அளவுமானி: வண்ணச் செறிவினை அளவிட்டறிய உதவும் சாதனம்

spectrogram: வண்ணப்பட்டைப் பதிவு ஒளிப்படம்

spectrograph: வண்ணப்பட்டைப் ஒளிப்பதிவுக் கருவி

spectrography: வண்ணப்பட்டைப் பதிவு ஒலிப்படப்பிடிப்பு

spectroheliograph: ஒரலைப் பதிவு ஒளிப்படக்கருவி: கதிரவன் ஒளி வண்ணப்பட்டையின் ஒரலைப் பதிவு ஒளிப்படக் கருவி

spectrohelioscope: ஒரலை நீர்க் காட்சிக்கருவி: கதிர்மண்டல ஒரலை நீளக்காட்சி

spectroscope: (வேதி.) வண்ணப்பட்டை ஆய்வுக் கருவி: வண்ணப் பட்டை அளவாய்வுக்கான கருவி. ஆவியான பொருட்கள் உண்டாக்கும் வண்ணப்பட்டை, அவற்றின் அமைப்பை ஆராய்வதற்குப் பயன்படுகின்றன

spectroscopy: வண்ணப்பட்டை ஆய்வியில்

speed indicator: (உலோ.) வேக அளவுமானி: சுழலும் எந்திரங்கள், சக்கரங்கள், சுழல் தண்டுகள் ஒரு நிமிடத்தில் சுழலும் வேகத்தைப் பதிவு செய்யும் அளவீடு கருவி spectrum: (இயற்.) நிறமாலை: சூரிய ஒளியை அதில் அடங்கியுள்ள ஏழுவண்ணங்களாகப் பகுக்கலாம். இந்த ஏழு வண்ணங்களையும் வானவில் வண்ணங்களில் காணலாம். இந்த வண்ணங்களின் தொகுதி நிறமாலை எனப்படும்

spectrum analysis: நிறமாலைப் பகுப்பு

speculum metal: (உலோ.) பளிங்கு உலோகம்: தொலை நோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பும் வெள்ளியமும் கலந்த கலவை

speed: (இயற்.) வேகவீதம்: ஒரு பொருள் விரைந்து செல்லும் வேகத்தின் வீதம்

speed control: வேகக் கட்டுப் பாடு: தொலைக்காட்சிப் பெட்டியில் படங்களை கிடைமட்டத்திலும் செங்குத்தாகவும் நிலைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கான சாதனம்

speed of sound: (விண்.) ஒலி வேகம்: ஒலி பயணம் செய்யும் வேகவீதம். சுற்றுப்புற ஊடகங்களின் நிலையான வெப்பநிலையைப் பொறுத்து ஒலியின் வேகம் மாறுபடுகிறது. ஒரு செந்நிற நாளில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1108 அடி அல்லது மணிக்கு 756 மைல். கடல் மட்டத்தில் 59°F வெப்ப நிலையைக் கொண்டது ஒரு செந்திற நாளாகும்

speedometer: (தானி.) வேக மானி: வேகவிதத்தை ஒரு மணிக்கு இத்தனை கி.மீ. என்ற வீதத்தில் பதிவு செய்து காட்டும் ஒரு கருவி

speed regulation : (மின்.) வேக ஒழுங்குமுறை : ஒரு சுமையை ஏற்றும்போது தனது வேகத்தைப் பேணிக்கொள்வதற்கு ஒரு மின்னோடிக்குள்ள திறன்

spelter: (உலோ.) துத்தநாகம் : வாணிக வழக்கில் 'ஸ்பெல்ட்டர்’ என்று அழைக்கப்படும் உலோகம் துத்தநாகமும் செம்பும் சம அளவில் கலந்த உலோகக் கலவையையும் இது குறிக்கும்

sphalerit: (கணி.) நாகக் கனிமம்: 'ஸ்பாலிரைட்' எனப்படும் துத்த நாகத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள்

sphere: கோளம்: (நில.) பந்து வடிவப் பொருள். இதன் ஒவ்வொரு பகுதியும் அதன் மையத்திலிருந்து சம் தூரத்தில் இருக்கும். பரப்பு : விட்டத்தின் இருமடி X 3. 1416 கன அளவு : விட்டத்தின் மும்மடி x 0.5236

sphere gap : (மின்.) கோள இடைவெளி : கோள வடிவ மின் முனைகளைப் பயன்படுத்தும் மின் சுடர் இடைவெளி

spheroid : நெட்டுருளை: நீள்வட்டச் சுழற்சி வடிவம்

spheroidzing : (உலோ.) வெப்பக் குளிர்விப்பு : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலையை விடச் சற்றுக் குறை வான வெப்ப நிலையில் அதிக நேரம் சூடாக்கி, பின்னர் மெதுவாகக் குளிர்ச்சியடையும்படி செய்தல்

sphero meter: நுண்விட்டமானி

sphygmogram : (மருத்.) நாடி அதிர்வுப் பதிவு: நாடித்துடிப் பினைப் பதிவு செய்தல்

sphygmograph : (மருத்.) நாடிப் பதிவு மானி: நாடி ஆதிர் வினைப் பதிவு செய்யும் கருவி sphygmomanometer: (மருத்.) குருதி அழுத்தழானி: இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி


குருதி அழுத்தழானி

படம்


sphygmophone : (மருத்.) நாடி அதிர் வொலிக் கருவி : நாடி அதிர்வொலியைக் காட்டும் கருவி

sphygmus : (உட.) நாடித் துடிப்பு: இதயத்தின் துடிப்பினால் உண்டாகும் துடிப்பு

spider gears : (தானி.) சிலந்திப் பல்லிணை : சிலந்தி வலைப் பின்னல் போன்று அமைக்கப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு பல்லிணை அமைப்புகள். இதன் மூலம்: பின் இருசில் வேறுபட்ட செயல் முறைகள் பெறப்படுகின்றன

spiegeleisen : (வேதி.) கன்ம வார்ப்பிரும்பு : கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு. இதில் அதிக அளவு கார்பனும், மாங்கனீசின் அளவு 15-20 சதவீதத்திற்கு மிகைப்படும் போது அது அய மாங்கனிஸ் எனப்படும்.

spigot: (கம்மி.) மூடுகுமிழ்: ஒரு குமிழுக்குள் பொருந்தக்கூடிய ஒரு குழாய் முனை

spike: (க.க.) தடியாணி: தடித்த பெரிய ஆணி

spile : (பொறி) முளைத்தடி : நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டு மரம்

spin : (வானூ.) சுழல் இறக்கம் : விமானம் சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம்

spinal anaesthesia: (நோயி.) முதுகந்தண்டு மயக்கம் : முதுகந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் ஒரு வகை மருந்தினை ஊசி மூலம் செலுத்தி, உடலின் கீழ்ப்பகுதி உணர்வுகள் மூளையை எட்டாதவாறு தடுத்தல்

spindle: நூற்புக் கதிர்: நுனியில் கூம்பிச் செல்லும் கழிசுற்று நூற்கோல்

spinet : 16-18ஆம் நூற்றாண்டுகளிலிருந்து பயன்படுத்தப்படும் விரல் கட்டை உடைய இறகு வடிவ நரம்பிசைக் கருவி

spinneret: (குழை.) இழைபுரி : சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் நூலிழை உருவாக்கும் உறுப்பு

spinning : (எந்.) நூற்பு : பஞ்சைத் திரித்து நூலாக உருவாக்குதல்

spinning jinning : (எந்.) எந்திர நூற்புக்கருவி, பஞ்சை நூலாக நூற்கும் கருவி

spinning-machine : ( எந்.) நூற்பு எந்திரம் : நூல் நூற்கும் எந்திரம்

spinning-wheel : (எந்.) கைராட்டினம் : கையால் சுழற்றி நூல் நூற்கும் சக்கரம்

spinning latha : (உலோ.வே.) சுழல் கடைசல் எந்திரம்: உலோகத் தக்டுகளில் வேலைப்பாடுகள் செய்வதற்குப் பயன்படும் சுழலும் கடைசல் எந்திரம்.

spiral : திருகு சுருள்: திருகு சுருளாகச் செல்கிற சுருள் வட்ட வளைவு. விமானம் திருகு சுருளாகக் கீழாக இறங்குதல்

திருகு சுருள்

படம்


spiral balance : சுருள் வில் எடைக் கோல் : சுருள் வில்லின் முறுக்கினால் நிறையளக்கும் துலாக்கோல்

spiral coupling : (எந்.) திருகு சுருள் இணைப்பு : ஒரு திசையில் மட்டுமே சுழற்றும் போது இணைந்து கொள்ளும் அமைப்புடைய தாடை இணைப்பு

spiral gear : (பல்.) திருகு சுருள் பல்லிணை : திருகு சுழல் வட்டத்தின் ஒரு பகுதியாகப் பல் அமைந்துள்ள பல்லிணை. இதனைத் 'திருகுப் பல்லிணை' என்றும் அழைப்பர்

spiral instability: (வானூ.) சுழல் உறுதியின்மை : சில வகை விமானங்களில் வழித் தடுமாற்றம் காரணமாக ஏற்படும் உறுதியின்மை

spiral spring : (எந்.) சுழல் விற்சுருள்: கடிகாரம் அல்லது கைக் கடிகாரங்களில் உள்ளது போன்ற சுழல் விற்சுருள்

spiral wheel : சுழல் சக்கரம்: ஊடச்சுக்குக் குறிப்பிட்டகோணத்தில் வெட்டப்பட்ட பற்களையுடைய சக்கரம்

spire : (க.க.) தூபி முனை : கூம்பு வடிவக் கோபுரம்

spirit level : (க.க.) குமிழி மட்டம்: கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்தில் நிலை நிற்குமானால், மட்டம் சரியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்


குமிழி மட்டம்


spirit varnish : (மர.வே.) வெறிய மெருகெண்ணெய் : கற்பூரத்தைலம், ஆல்கஹால் போன்ற விரைந்து ஆவியாகக்கூடிய கரைமங்கள் அடங்கிய மெருகெண்ணெய்

splash lubrication : (தானி.) தெறிப்பு மசகு : மசகுப் பொருளை வாரித் தெறித்து மசகிடும் முறை

splay : (க.க.) தளச் சாய்வுக் கோட்டம் : கதவு, பலகணி முதலிய வற்றில் விளிம்பு புறக் கோட்டச்சாய்வு

splice : (மின்.) புரியிணைவு : மின் கடத்திகளை முறுக்கிப் புரியிணைவு செய்து ஒன்றுபடுத்துதல்

spline : இணையாப்பு : ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு

spline : (மர.) இணையாப்பு : இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்கும் சிம்பு

split field : (மின்.) பிளவுப் புலம்: இரு துருவப் புலம் பொதிவு உடைய மின்னாக்கி. இதில் ஒரு புலம் ஒரு மூன்றாம் தூரிகையுடனும், மற்றொரு புலம் முதன்மைத் தூரிகையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின்னாக்கியில் மூன்றாம் தூரிகையின் மின்னோட்டக் கட்டுப்பாட்டு அம்சங்கள் நிலைத்திருக்கும்

split gear : (பல்.) பிளவுப் பல்லிணை: இரு பிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம்

split nut : (எந்.) பிளவு மரையாணி : நீளவாக்கில் பிளவுடைய ஒரு மரையாணி, இது திருகில் நழுவிச்சென்று விரைவாக நகர்வதற்கு உதவுகிறது. இது பெரும் பாலும் விற்கருள் விட்டமானியில் பயன்படுத்தப்படுகிறது

split phase : (எந்.) பிளவு மின்னோட்டப் படிநிலை : ஒரே மாற்று மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப்படி நிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள்

split - phase motor : (மின்.) பிளவு நிலை மின்னோடி: இது ஒர் ஒற்றை நிலை மின்னோடி. இதன் கருணைகளில் ஒன்றில் மற்றச் சுருணைகளைப் பொறுத்து மின்னோட்டம் பாயுமாறு செய்வதன் மூலம் தானே இயக்குவிக்குமாறு செய்யப்படுகிறது

split gear : (எந்.) பிளவுப் பற்சக்கரம் : இருபிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம்

split pulley: (எந்.) பிளவுக் கம்பி: இரு பாதிகளாக அமைக்கப்பட்டு மரையாணியால் பிணைக்கப்பட்டுள்ள கப்பி

split ring: (எந்.) பிளவு வளையம்: ஒர் உந்து தண்டிலுள்ள பலகூற்று வளையம்

split wheel: பிளவுச் சக்கரம்: இரு பிளவாகச் செய்யப்பட்ட சக்கரம்

spoke: (எந்.) ஆரை: சக்கரத்தின் குருக்குக்கை குடத்துடன் வெளி விளிம்பை இணைக்கும் கரம்

spoke shavs: (மர.) இருபிடி இழைப்புளி: இருபிடியுள்ள வளைதள இழைப்புளி. முனைகளை வடிவப்பதற்கும் வழவழப்பாக்குவதற்கும் இது பயன்படுகிறது

spoking machine : சாய்வு எந்திரம்: பளுக்களுக்கு ஒத்த சாய்வு வழங்க உதவும் எந்திரம்

sponge lead : (மின்.) கடற்பஞ்சு ஈயம் : கடற்பஞ்சு போன்று துளையுடைய ஈயம். இது சேம மின்கலத்தில் எதிர்மின் முனைத் தகடுகளாகப் பயன்படுத்தப்படுகிறது

sponginess : கடற்பஞ்சு பண்பு: கடற்பஞ்சினை ஒத்த பண்பு; உலோகங்களின் செறிவற்ற தன்மை; உறிஞ்சும் இயல்பு

sponginess : (வார்.) நிரை உள்துளை உடைமை : உலோகங்களின் செறிவற்ற தன்மை

sponson : (வானூ.) புற உந்து தளம்: கப்பலில் தளத்தின் புறத்தே உந்தும் பகுதி

spontaneous combustion : தன்னக உள்ளெரிதல் : தன்னிடத்திலேயே எழும் வெப்பத்தினால் தீப்பற்றி கொள்ளும் இயல்பு

spoon bit : கரண்டித் தமருசி: கூர்மையான முனைகளுடன் பிறை வடிவத்திலுள்ள துளையிடுவதற்கான தமருசி. இது காகிதம். அட்டைகள் போன்றவற்றில் துளையிடுவதற்குப் பயன்படுகிறது

sport road-stet : (தானி.) பந்தய ஊர்தி : இது சாதாரண உந்து ஊர்தி ன்றது. இதன் பின் புறத் தள அடுக்கு மட்டும் சாமான்கள் வைப்பதற்கான இடமாக இல்லாமல், பின் இருக்கையாக அமைந்திருக்கும்

spot : ஒளிப்புள்ளி : தொலைக் காட்சியில் ஒளிக் கற்றையானது இடமிருந்து வலமாக ஒரு கோட்டினை அல்லது உருக்காட்சியை அலகிடும்போது, எதிர்மின் கதிர் படக் குழாயின் ஒளியுமிழ் திரையின் மீது எலெக்ட்ரான் கற்றையினால் உண்டாக்கப்படும்

spotting tool : (எந்.) குறிகாட் டுக்கருவி : இதனை மையங்காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது

spout : (வார்.) கொண்டிவாய்க் குழாய்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து கட்டுவதற்கு திரவ உலோகம் பாய்வதற்கான கொண்டி வாய்க்குழாய்

spraying liquid: (தானி.) தெளிப்புத் திரவம்: எண்ணெய்கள், துப்புரவுத் திரவங்கள், வண்ணங்கள் உட்பட மெருகேற்றுவதற்குப் பயன்படும் திரவப் பொருட்கள்

sprig : (மர.வே.) எடைக் கருவி: திருத்தப்பட்டவிறைப்பு விற்கருள். ஒரு கூட்டில் அடைக்கப்பட்டுள்ள ஓர் எடை பார்க்கும் கருவி. இதில் அளவு குறிக்கப்பட்ட அளவு லில்கோ ஒரு முள் எடையைக் காட்டும்

spring balance: வில்தராசு : வில் விசையின் மூலம் எடைகாட்டும் தராசு. இதில் உறையினுள் விற்சுருள் வைக்கப்பட்டிருக்கும். உறையின் மேற்பரப்பில் எடையளவு குறிக்கப்பட்டிருக்கும். விற்கருளின் கீழ் முனையிலுள்ள கொக்கியில் எடை பார்க்க வேண்டிய பொருளை மாட்டித் தராசைத் தூக்கினால், விற்கருளோடு இணைந்துள்ள முள் நகர்ந்து எடையளவைக் காட்டும்

வில் தராசு(படம்)

spring chuck or spring collet : (எந்.) விற்கருள் கவ்வி : திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் பொருத்தி அழுத்தி மூடப்படும். அழுத்தம் தளர்த்தப்படும்போது விற்சுருள் போதிய அளவு விரிந்து பொருள் விடுவிக்கப்படுகிறது

spring clip : (தானி.) விற்சுருள் பற்றுக் கருவி: விற்சுருளை இருசுடன் இணைப்பதற்குப் பயன் படும் U-வடிவ மரையாணி. இருசுடன் விற்சுருளை இணைப்பதற்கு இரு பற்றுக் கருவிகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு விற்கருளையும் பொருத்துவதற்கு இருபற்று கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன

விற்கருள் பற்றுக் கருவி(படம்)

springer : (க.க.) கவான் அடிக்கல்: மஞ்சடைப்பு மேல்முகட்டின் அடிக்கல்

spring hangers : (தானி.) விற்சுருள் கொக்கி : உந்து ஊர்தியின் சட்டத்தில் விற்கூருள்கள் இணைககப்படுவதற்குப் பொருத்தப்பட்டுள்ள கொக்கி

spring hinge : (க.க.) விற்சுருள் கீல் : உள்ளே ஒரு விற்சுருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவுகளைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

spring leaf : (எந்.) விற்சுருள் அலகு: உந்து ஊர்திகளில் பயன்படும் விற்சுருளின் தட்டை அலகு

sprinkler system (தானி.). விற்சுருள் இருசு : விற்சுருள்கள் பொருத்தப்படும் இருசுகளின் தட்டையான மேற்பரப்புகளில் ஒன்று

sprinkler system : ( க.க.) தெளிப்புக் குழாய் : தீப்பிடிக்கும் போது தானாகவே நீரைத் தெளிக்கும் தெளிப்பு முனைகளுடைய குழாய் அமைப்பு sprocket : (எந்.) கண்ணிப் பல் : சங்கிலிக் கண்ணிச் சக்கரப் பல்

sprocket-wheel : சங்கிலிக் கண்ணிப் பற்சக்கரம்

sprue : (உலோ.) வார்ப்புக் குழி : உருகிய உலோக வார்ப்புக் குழி

spur : (மர.வே.) பலகை வெட்டி: நீண்ட மரக்கட்டைகளிலிருந்து பல்வேறு நீளங்களில் மென்வொட்டுப் பலகைகளை வெட்டுவதற்குப் பயன்படும் கூரிய முனையுடைய கருவி

spur center : (மர.வே.) சுழல் மையம்: மரக் கடைசல் எந்திரத்தில் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதியில் பயன்படுத்தப்படும் மையம்

சுழல் மையம்


spur wheel : (பல்.) பற்சக்கரம் : பற்கள் புறவிட்டத்திலும், சக்கரத்தின் பக்கங்களுக்குச் செங்கோண்திலும் அமைந்திருக்கும் பற்சக்கரம்

spurling-line : பயின் சுட்டுவரி : கப்பலில் பயின்கட்டை திருப்பும் சக்கர நிலையைக் காட்டும் கல இயக்கவழி இணைந்த கம்பிவடம்

sputnik : புடவித் துணைக்கோள் : பூமியைச் சுற்றும்படி ரஷ்யா 1957 -இல் முதன்முதலில் விடுத்த செயற்கைக்கோள்

spy : ஒற்றுத்துணை : நுண்தேர்வு நோட்டங்களை நோக்குவதற்குப் பயன்படும் சிறிய துவாரம். இது அடைத்து வைக்கப்பட்டிருக்கும்

spy glass: சிறுதொலை நோக்கரடி: ஒற்றறிவதற்குப் பயன்படும் சிறு தொலைநோக்காடி

squab: பஞ்சுறைப் பீடம் : திண்டு போன்ற மெத்தைத் தவிசு

square : (கணி.) (1) இருமடிப் பெருக்கம் : ஒர் எண்ணை அதே எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்க விளைவு (2) சதுரம் : சரிசம நாற்கர வடிவம். இதில் அனைத்துப் பக்கங்களும் சமம். எதிர்ப்பக்கங்கள் இணையானவை. கோணங்கள் செங்கோணங்களாக இருக்கும். இக்கோணங்களின் கூட்டுத் தொகை 360°

square measure : சதுர அளவை : மிகைப் பெருக்கக் கணிப்பு

square number : மிகைப் பெருக்க எண்: எண்ணின் தற்பெருக்க விளைவான தொகை

square root : (கணி.) மிகைப் பெருக்க மூலம் (வர்க்கமூலம்) : எண்ணை மிகைப்பெருக்கமாகக் கொண்ட மூல எண்

square soil : உப்பற் பாய் : பாய் மரத்திற்குக் குறுக்காகத் தொங்கவிடப்படும் நாற்கட்டமான உப்பற் பாய்

square-threaded screw : (எந்.) சதுரப் புரியிழைத் திருகு: புரியிழை நாற்கர வடிவிலுள்ள திருகு

square wave : (மின்.) சட்ட அலை : சம நேர அளவுகளில் இரண்டு நிலையான மதிப்பளவுகளை மாற்றி மாற்றி ஏற்கும் ஓர் அலை

squealing : (மின்.) கீச்சொலி : பிற வானொலி நிலையங்களின் இடையீடு காரணமாக வானொலியில் ஏற்படும் கிறீச்சொலி

squeezer : (வார்.) பிழிவு எந்திரம்: ஒரு வகை வார்ப்பட எந்திரம்

squinch : (க.க.) உள் வளைவுக் கட்டுமானம் : மூலை விட்டத்தில் அமைந்திருக்குமாறு அமைக்கப்பட்ட சிறிய கவான்

squirrel-cage rotor : (மின்.) அணில் கூட்டுச் சுழலி: சாதாரணத் தூண்டு மின்னோடி சுழலும் உறுப்பு

stability : திடநிலை : பாட்டுடன் அல்லது திடத்தன்மையுடன் இருக்கும் நிலை விமானத்தில் சமநிலையூட்டும் மீட்சியாற்றல்

stabilizer : (வானூ.) விமான சமநிலையமைவு : விமானத்தின் சமநிலையூட்டும் மிகைத்தளம். இது விமானத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இது விமானம் தலைக்குப்புறக்கவிழாமல் தடுக்கிறது

stable equilibrium : உறுதி சமநிலை : பொருட்கள் எதில் அசைத்கு முடியாமல், உறுதியான பீடத்தில் இருத்தல்

stable oscilation : (வானூ.) உறுதியான ஊசலாட்டம் : வீச்சளவு அதிகரிக்காமல் இருக்கும் ஊசலாட்டம்

stack : (க.க.) புகைக் கூம்பு : தொழிற்சாலைகளில் உள்ளது போன்ற புகையை வெளியேற்றுவதற்கான பெரிய புகைக்கூம்பு, இது செங்கல், கல் அல்லது உலோகத் தகட்டினால் அமைக்கப்பட்டிருக்கும்

stage : பார்வைத் தட்டம் : உருப் பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்கும் தட்டு

stage : (விண்.) உங்து நிலை : பல அடுக்குகளைக் கொண்ட ஒரு ராக் கெட்டை உந்திச் செலுத்துவதற்கான ஒர் அடுக்கு நிலை

staging : (க.க.) சாரக்கட்டு : கட்டிடத்திற்கான சாரங்கட்டுதல்

staging port: இடைத் தங்குதளம்: விமானப் பயணத்தில் நிலவரமான இடைத் தங்குதளம்

stainless steel : (உலோக.) துருப்பிடிக்கா எஃகு : குரோமியம் அதிக அளவிலும் நிக்கலும், செம்பும் சிறிதளவிலும் அடங்கிய உலோகக் கலவை. இந்த எஃகு கடினமானது; உரமானது; நிலையான மெருகுடையது

staircase : (க.க.) படிக்கட்டு : திருகு சுழலாகச் செல்லும் ஏணிப்படி

stairs: (க.க.) படிக்கட்டு: ஏணிப் படிகளின் தொகுதி. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு வளைவின்றிச் செல்லும் படிக்கட்டு 'நேர் படிக்கட்டு' திருகு சுழலாகச் செல்லும் ஏணிப்படி 'சுழற்படிக்கட்டு

stakes : (உலோ.வே.) மரமுளை : உலோகத் தகட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வளைப்பதற்கும், வடிவமைப்பதற்கும் பலகை மீது பயன்படுத்தும் பல்வேறு வடிவளவுகளிலுள்ள மரமுளை

மர முளை


stake-boat : நெறிகுறிப் படகு: படகுப் பந்தயப் பா குறிப்பிட்டுக் காட்டுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள படகு

staking out : (க.க.) எல்லை குறித்துக் காட்டுதல் : கட்டுமானம் கட்டுவதற்கான அடித்தள எல்லையைக் குறித்துக் காட்டுதல்

stalagmite : பொங்கூசிப் பாறை : கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தி னின்றும் மேல்நோக்கி ஊசி வடிவில் வளரும் சுண்ணக் கரியகப் பாறை

stail : (வானூ.) விமான விசை யிழப்பு : பறப்பதற்குப் போதிய விமான வேகம் குறைபடுதல்

stalling speed : (வானூ.) விசையிழப்பு வேகம் : விமானத்தின் மிக உயர்ந்த செந்தூக்கான குணக உயரத்தில் விமானம் சீராகப் பறக்கும்போது அதன் வேகம்

stamping: (உலோ.) வடிவாக்கம்: எஃகுத் தகடுகளை அறைவெப்பு நிலையில் படிவ அச்சுகளில் அழுத்தங்களுக்கு உள்ளாக்கிப் புல்வேறு வடிவங்களில் உருவாக்குதல்

stamping press: (அச்சு.) புடைப் பச்சு எந்திரம் : புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம்

stanchion: கம்பம் : பலகணிச் செங்குத்துச் சலாகை

standard : திட்ட அளவு : துல்லிய மான இலக்களவு; முத்திரை நிறையளவு.முன்மாதிரி உயர்வு நயம்

standard atmosphere: (வானூ.) திட்ட அளவு வாயு மண்டலம்: விழா னத்தின் செயல்முறையை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படும் வாயு மண்டலம்

அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திட்ட அளவு வாயுமண்டலம் என்பது, 40° உயரத்தில் காணப்படும் சராசரி நிலைமைகள் ஆகும்

standard international atmosphere: : (வானூ.) திட்ட அளவு பன்னாட்டு வாயுமண்டலம் : பன்னாட்டுத் திட்ட அளவு வாயு மண்டலம் எனப் பயன்படுத்தப்படுவது சராசரிக் கடல் மட்டத்தில், 15°C வெப்பநிலையில், 1,013.2 மில்லி பார் அழுத்தத்தில், கடல் மட்டத்திலிருந்து 11கி.மீ. வரையில் கிலோ மீட்டருக்கு 65°C இழப்பு வீதத்தில், அதன்பிறகு-56.5°C வெப்ப நிலையில் நிலவும் காற்றழுத்த நிலை

standardized cell : (மின்.) தர அளவு மின்கலம் : துல்லியமாகச் சோதனைகள் செய்வதற்கு, மின்னழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய மின்கலம் தேவை. நடைமுறையில் இந்த மின்கலத்திலிருந்து குறிப்பிடும்படியான மின்னோட்டம் எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கிளார்க் மின்கலத்தை முதலில் தர அளவு மின்கலமாக பயன்படுத்தினார்கள். இப்போது பொதுவாக வெஸ்டன் மின்கலம் பயன்படுத்தப்படுகிறது

standard knot : (மர.) செந்நிற முடிச்சு : 3.8.செ.மீ.க்கு மேற்பத விட்டமுள்ள ஓர் இறுக்க மான முடிச்சு

standard lamp : தொலை ஒளி விளக்கு : தொலை ஒளி நிலைக் கம்ப விளக்கு

standing matter : (அச்சு.) நிலுவை அச்சுரு : மேற்கொண்டு அச்சடிப்பதற்கு அச்சுக் கோத்து வைக்கப்பட்டுள்ள அச்செழுத்துத் தொகுதி

stand pipe : (பொறி.) நிலைக் குத்துக் குழாய்: நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங்குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம். குடிநீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது

standard pressure : (கம்.) செந்திற அழுத்தம் : ஒரு சதுர அங்குலத்திற்கு 125 பவுண்டு இயக்க நீராவி அழுத்தத்திற்கு ஏற்புடைய தடுக்கிதழையும் துணைக் கருவிகளையும் குறிக்கும் சொல் standard time : (உலோ) செந்திற நேரம் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரு சராசரித் தொழிலாளிக்குத் தேவைப்படும் நேரம்

standing wave : (மின்.) நிலைப்பு அலை : ஒரு புள்ளியிலுள்ள உடனடி மதிப்பளவுக்கும் இன்னொரு புள்ளியிலுள்ள மதிப்பளவுக்கு மிடையிலான விகிதமானது நேரத்துடன் மாறாதிருக்கிற ஓர் அலை. மின்வழி முடிவுறு வதிலிருந்து ஏற்படும் பிரதிபலிப்புகளின் விளைவாகச் செலுத்து மின்வழியில் உண்டாகும் அலைகள்

stanniferous : வெள்ளீயம் அடங்கிய பொருள்.

staphylococus : (நோ.) வட்ட பாக்டீரியா : காயங்களிலும் கழலைகளிலும் நோய்த் தொற்று உண்டாக்கும் வட்டவடிவ பாக்டீரியாக் குழுமங்கள்

staple : தைப்பு முள் : மரத்தினுள் செலுத்துவதற்கான கூர்மையான நுனிகளுடைய U-வடிவக் கம்பி அல்லது இரும்புத் துண்டு

star connection : (மின்.) மும்முனை இணைப்பு : மூன்று நிலை மின்னாக்கி களிலும், மின் மாற்றிகளிலும் மூன்று சுருள்கள் உண்டு. இவை முக்கிளை, Y, டெல்ட்டா எனப்படும். ஒவ்வொரு சுருளின் ஒரு முனையானது ஒன்றாக இணைக்கப்பட்டு மற்ற மூன்று முனைகளும் தனித்தனியாகப் பிரிக் கப்படும் போது அது முக்கிளை இணைப்பு அல்லது Y-இணைப்பு எனப்படும்

star drill: முக்கிளைத் துரப்பணம்: கல்லில் அல்லது கட்டுமானத்தில் துரப்பணம் செய்வதற்குப் பயன்படும் நட்சத்திர வடிவ முனை கொண்ட ஒரு கருவி

'starling : (க.க) திண்டு வரி: காலத்தின் திண்டைச் சுற்றிந் பாதுகாப்பிற்காக இடும் பெரும் தூண் தொகுதி

starter: (தானி;மின்.) தொடக்கி: எந்திர இயக்கத்தைத் தொடங்கி வைக்கிற அமைவு

starting box : (மின்) முருக்கு பெட்டி: தடையினை ஒன்றன் பின் ஒன்றாகத் துண்டித்து விட்டு, மின்னோட்டத்தைப் படிப்படியாக வழங்கு வதற்கு ஒரு விசைக்கரமும் தொடுமுனைகளும் அடங்கிய ஒரு தடை மாற்றி

starting circuit : (தானி.) தொடக்க மின்சுற்று வழி: தொடக்க விசையை நிறுத்தியவுடன் நேர்மின் முனையிலிருந்து மின்விசைக்கும் தொடக்க மின்னோடிக் களச் சுருணைக்கும். மின்னகத்திற்கும் மின்தொடு விசைக்கும் பாய்கிறது. அது பின்னர் மின்கலத்தின் எதிர் மின்முனைக்கு வருகிறது

starting motor : (தானி.) தொடக்க மின்னோடி : மின்சுற்று வழியை மூடுவதன் மூலம் எஞ்சினைத் திருப்புவதற்குப் பயன்படும் மின்னோடி

starting newel : (க.க.) தொடக்க நடுத் தூண் : படிக்கட்டின் அடியில் கைப்பிடிச் சுவரைத் தாங்கி நிற்கும் தூண்

starting torque : (மின்.) தொடக்கு திருக்கை : மின்னோட்டத்தின் தொடக்க நிலையில் ஏற்படும் மின்காந்த விளைவின் மூல மாகத் தனது சுழல் தண்டின் மீது ஒரு மின்னோடி உண்டாக்கும் திருப்பு விளைவு

startix : (தானி.) மின்கம்பிச் சுருள் உருளை: சுடர் மூட்ட விசையைப் போட்டதும் தொடக்க மின்னோடி விசையைக் தானாகவே மூடிவிடும் மின் கம்பிச் சுருள் உருளை

static ataxia ; தடுமாறு நிலை : விழாமலோ தடுமாறாமலோ நிற்கமுடியாத நிலை

static balance : நிலைச் சமநிலை: ஒரு கப்பித் தொகுதியின் அல்லது சுழல் தண்டின் எடையானது சமச் சீராகப் பரப்பப்பட்டிருக்கும் போது உள்ள சமநிலை

static balanced : (வானுர.) நிலைச் சமநிலைப் பரப்பு: பொருண்மையின் மையமானது நீல் அச்சில் அமைந்துள்ள கட்டுப்பாட்டுப் பரப்பு

star tracker : (விண்) விண்மீன் நோக்கி : ஒரு விண்மீனின் செல்வழியைக் கூர்ந்து நோக்கி வருவதற்கு ஒரு ஏவுகணையில் அல்லது வேறு பறக்கும் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தொலை நோக்கிக் கருவி. இது ஒளிசார்ந்த தாகவோ அனல் வீச்சு சார்ந்ததாகவோ இருக்கலாம்

static ceiling : (வானூ) நிலை முகடு : திட்ட அளவு வாயு மண்டலத்தில் அகற்றக்கூடிய எடைகள் அனைத்தையும் அகற்றிய பிறகு வான்கலம் நிலைச் சமநிலையில் இருக்கும் உயரம்

static characteristics : (மின்) நிலையியல் பண்புகள்: ஒரு நிலையான தகட்டு மின்னழுத்தங் கொண்ட ஒரு குழலின் பண் பியல்புகள்

static charge : (மின்) நிலையியல் மின்னேற்றம்: ஒரு பொருளின் மீது எதிர்மின் சார்ந்ததாக அல்லது நேர்மின் சார்ந்ததாக உள்ள மின்னேற்றம்

static electricity ; நிலையியல் மின்னாற்றல்: இயக்காத நிலையிலுள்ள மின்னாற்றல். இது ஓட்ட மின்னாற்றலிலிருந்து வேறுபட்டது. இது உராய்வுத்தொடர்பு மூலம் உண்டாக்கப்படுகிறது. பட்டுத் துணியில் அல்லது கம்பளித் துணியில் ஒரு கண்ணாடிக் கோலைத் தேய்ப்பதால் உண்டாகும் மின்னாற்றல் இதற்குச் சான்று

static friction : நிலையியல் உராய்வு : இரு பொருட்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் போக்கில் ஆனால் உண்மையில் விலகிச் செல்லாதிருக்கிற நிலையில் அவற்றுக்கிடையி லுள்ள உராய்வு

static load : நிலையியல் சுமை: அசையா நிலையிலுள்ள சுமை அல்லது எடை

statical electricity : நிலையியல் மின்னாற்றல்

statical pressure : நிலையியல் அழுத்தம்

statics : நிலையியல் : இயங்கா நிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருட்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி

static stability : நிலையியல் உறுதிப்பாடு: விமானம் தனது வழக்கமான உயரத்தில் அச்சிலிருந்து தமது ஈர்ப்புமையத்தின் மூலம் சற்றே சாய்ந்திடும்போது, அது முதலிலிருந்த உயரத்திற்குத் திரும்பி வருவதற் குரிய உறுதிப்பாட்டு நிலை

static testing : (விண்) நிலையியல் சோதனை : ஒரு சாதனத்தின் இயக்க நிலை வினைகளைச் சோதனை செய்து கணிப்பதற்காக அதனைச் செயலற்ற நிலையில் சோதனை செய்தல் Static thrust : நிலையியல் உந்துகை : விமானத்தில் சுமலி திசையியக்கமின்றிச் சுழலும் போது உண்டாகும் உந்து ஆற்றல்

station (தானி) நிற்கு நிலை: ஓர் எந்திரத்தின் நிற்கு நிலை அல்லது நிற்கும் இடம்

stationary engine : (பொறி) நிலை எஞ்சின்: நிலையான அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்ட இது இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் எஞ்சினிலிருந்து வேறுபட்டது

statistics : புள்ளியியல் : புள்ளி விவரங்களைத் தொகுக்கும் அறிவியல்

stator : (மின்.) நிலைச் சுருள் : ஒரு மாற்று மின்னோட்ட மின்னாக்கியின் நிலையான கம்பிச் சுருள்கள்

stator armature : (மின்) உந்து மின்கலம் : மின்னாற்றல் உண்டாகும் பொறியில் சுழலின்றி அசையாதிருக்கும் உந்து மின் கலம்

statoscope : நுண்ணழுத்த மானி : நுட்ப அழுத்த வேறுபாடு காட்டும் நீரில்லாத காற்றழுத்தமானி

statoscope : நீரில்லாத நுண்ணழுத்தமானி: விமானம் பறக்கும் உயரத்தின் நுட்ப வேறுபாடுகளைக் காட்டும் நீரில்லாத காற்றழுத்தமானி

stay bolt . அண்டைக்கட்டு : எந்திரக் அண்டைகட்டு

steady rest : (எந்.) உறுதி ஆதாரம் : நீண்ட நுண்ணிய பொருட்கள் கடைசல் வேலைப்பாடுகள் செய்யும் போது அதைத் தாங்குவதற்கு இருவழிகளிலும் பொருத்தப்பட்டுள்ள உதைகால்

steam : நீராவி: நீரைக் கொதிக்க வைப்பதால் உண்டாகும் ஆவி

steam boat : நீராவிப்படகு : நீராவியால் இயங்கும் படகு

steam boiler : நீராவிக் கொதிகலம் : எந்திர நீராவிக் கொதிகலம்

steam-box : நீராவிக் கொள்கலம்: கொதி கலத்திலிருந்து இயக்குருளைக்கு நீராவி செல்லும் இடையிலுள்ள கொள்கலம்

steam bronze : (உலோ) நீராவி வெண்கலம் : ஓரதர்களும் பொருத்து கருவிகளும் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை. இதில் 85% செம்பு, 5% துத்தநாகம் 5% ஈயம், 5% வெள்ளியம் அடங்கியுள்ளது

steam guage : நீராவி அழுத்தமானி : நீராவியின் அழுத்த நிலையை அளவிடப் பயன்படும் கருவி

steam gun : நீராவித் துப்பாக்கி: நீராவியால் இயக்கப் பெறும் துப்பாக்கி

steam hammer : நீராவிச் சம்மட்டி : நீராவி அழுத்தத்தினால் மேலும் கீழும் இயங்கும் சம்மட்டி

steam cylinder ; நீராவி இயங்கு நிலை : நீராவிப் பொறியின் இயக்குருளை

steam engine : நீராவி எந்திரம் : நீராவி விசையாக்கப் பொறி

steamer: நீராவிக் கப்பல்: நீராவியால் இயங்கும் கப்பல்

steam gas : வெப்ப நீராவி : பெருமளவு சூடேற்றப்பட்ட நீராவி

steam heat: நீராவி ஆக்க வெப்பம் : வெப்பமூட்டும் பொறியில் நீராவி வெளியிடும் வெப்பத்தின் அளவு

steaminess : நீராவி படிவு நிலை: நீராவி நிரம்பிய நிலை

steam jacket : நீராவிச் சட்டை: நீராவி இடை வழி ஊடு சென்று வெப்ப மூட்டும்படி அமைக்கப்பட்ட எந்திர இயக்குருளையின் புறத்தோடு

steam main : நீராவி முதன்மைக் குழாய் : கொதிகலத்திலிருந்து எஞ்சின்களுக்கு நீராவியைக் கொண்டு செல்லும் கிடைமட்டத்திலுள்ள குழாய்

steam packet : நீராவிக் கலம்: சில துறைமுகங்களிடையே மட்டுமே இயங்கும் நீராவிக் கலம்

steam power : நீராவி ஆற்றல்

steam roller : அமைப்புப் பொறியுருளை

steam table : நீராவி மேசை: பாள அச்சு அட்டைத் தகட்டு அச்சடிப்பு முறையில் பயன்படுத்தப் படும் அச்சு வார்ப்புரு அட்டைகளை உலர வைப்பதற்கான மேசை

steam turbine : (பொறி) நீராவி விசையாழி : நீராவி ஓர் உந்து தண்டின் மீது செயற்படுவதற்குப் பதிலாக ஒரு சுழலும் விசையாழியின் மீது செயற்படுகிற நீராவி எஞ்சின்

steatite: (மின்.)சவர்க்காரக் கல்: மக்னிசியம் சிலிக்கேட் அழுக்குப் போக்க உதவும் நுரைக்கல் வகை

steel: (உலோ.) எஃகு: 1.7% வரை கார்பன் கொண்ட இரும்பின் ஒரு வடிவம். இதில் குறைந்த அளவு கார்பன் உள்ள நெகிழ் திறனற்ற எஃகு, அதிக அளவு கார்பன் அடங்கிய நெகிழ் திறன் மிகுந்த எஃகு ஆகியவை அடங்கும்

steel alloys: (பொறி) எஃகு உலோகக் கலவைகள்: சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம், நலிவடையாதிருக்க வனேடியன் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன

steel belt: (எந்) எஃகுப் பட்டை : .02 முதல்.08செ.மீ. வரைக் கன மும், 18 20செ.மீ. வரை அகலமும் உடைய மெல்லிய, தட்டையான எஃகுப் பட்டைகள். இந்தப் பட்டைகள் நிமிடத்தில் 3047 மீ வேகத்தில் ஓடக்கூடியவை

steel casting: (பொறி ) எஃகு வார்ப்படம்: அதிர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய எந்திர உறுப்புகள் செய்வதற்கான எஃகு வார்ப்படம்

steel converter: (பொறி) எஃகுத் திரிகலம்: தேனிரும்பை எஃகாக மாற்றுவதற்குப் பயன்படும், உயர் வெப்பம் ஏற்கும் பொருள் பூசிய கொள்கலம்

steel engraving. (அச்சு) எஃகுச் செதுக்கு வேலைப்பாடு: எஃகுத் தகட்டில் கலைச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல்

எஃகு செதுக்கு வடிவமைப்புகள் செய்தல்.

செதுக்கு எஃகுத் தகட்டிலிருந்து படங்களை அச்சடித்தல்

steel girder: (பொறி) எஃகுத் தூலம்: தூலமாக்கப் பயன்படும் இரும்புப் பாளம்; பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக் கட்டுமானச் சட்டம்

steel pulley: (எந்) எஃகுக் கப்பி: எஃகினாலான கப்பித் தொகுதி. எடை குறைவாக இருப்பதற்காகவும், எளிதாக இயக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது

steel rule: (எந்) : எஃகு வரை கோல்: நெகிழ்திறனுடைய அல்லது விறைப்பான எஃகுவரை கோல். இதில் பல்வேறு ஆள்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங் களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும்

steel square: எஃகுச் செங்கோண அளவி: எந்திர நுட்பப் பணியாளர்கள் பயன்படுத்தும் எஃகினாலான மூலை நுட்பப் பலகை

steel wool: (பட்) sr: எஃகு இழை: பாய் போல் முடையப்பட்ட நுண்ணிய எஃகு இழைகள். இது மர அல்லது உலோகப் பரப்புகளை பளபளப்பாக்குவதற்குப் பயன்படுகிறது

steelyard: தராசுப்பொறி: எடை பார்ப்பதற்குப் பயன்படும் ஒரு வகைத் தராசுப்பொறி. இதில் சமமற்ற நீளமுடைய இரு கரங்கள் ஒரு நீண்ட நெம்புகோலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

steeple: (க.க.) ஊசிக்கோபுரம்: தேவாலயங்களில் உள்ளது போன்ற கூம்பு வடிவக் கோபுரக் கூம்பு

steeple jack: பவர்: தூபி பழுதுபார்ப்பவர். தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்

steering column: இயக்குத் தூண் :உந்துகல இயக்காழி பொருத்தப்பட்டிருக்கும் தூண் அல்லது கம்பம். இது வழிச்செலுத்து இயக்கத்தை முன் சக்கரங்களுக்குக் கொண்டு செல்லும் பல்வேறு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்

steering gear: (தானி.எந்.) இயக்கு பல்லிணை: உந்துகல இயக்காழியை இருசுடன் இணைக்கும் உறுப்புகளின் தொகுதி அனைத் தையும் இது குறிக்கும். இதன் மூலமாகவே உந்து ஊர்தியைச் செலுத்த முடிகிறது

steering wheel: (தானி.எந்) உந்துகல இயக்காழி: உந்து ஊர்தியின் முன் சக்கரங்களுடன் பல்வேறு பல்லிணைகள், நெம்பு கோல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள கையினால் இயக்கக்கூடிய சக்கரம். இதன் மூலமாகவே உந்து ஊர்தியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது

stellite; (பொறி.) ஸ்டெல்லைட்: குரோமியத்தையும், கோபால்டையும் பெருமளவிலும், சிறிதளவு மாலிப்டினத்தை அல்லது டங்ஸ்டைனையும் கொண்ட ஒருவகை உலோகக் கலவை. இது கருவிகளும், வெட்டுக் கருவிகளும் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை வார்ப்படமாகச் செய்யலாம். ஆனால், காய்ச்சி அடித்து உருவாக்க இயலாது. இதனை அராவித் தீட்டலாம்

stencil: படியெடு தாள்: எழுத்துக்களை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படியெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு

stepdown: (மின்) இறங்குமுக மின்னழுத்தம்: ஓர் இறங்குமுக மின்மாற்றியில் உள்ளது போன்று அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்குக் குறைதல் step down transformer: (மின்) குறைப்பு மின்மாற்றி: மின்வழி மின்னாட்ட அளவை அல்லது மின்னழுத்த அளவைக் குறைந்த அளவுக்கு மாற்றுகிற மின்மாற்றி

stepping round: (எந்) வளை வரைப் பகுப்பு: வில், வளைகோடு அல்லது வட்டத்தைக் கவராயத்தின் மூலம் பல பகுதிகளாகப் பகுக்கும் முறை. பல்லிணைச் சக்கரத்தை உருவாக்குவதில் இந்த முறை பயன்படுகிறது

step up: (மின்) ஏறுமுக மின்னழுத்தம்: ஓர் ஏறுமுக மின்மாற்றியில் உள்ளது போன்று ஓர் உயர் மின்னழுத்த்த்திற்கு அதிகரித்தல்

stereo chemistry: (வேதி.) சேணிலை வேதியியல்: விண்வெளியில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பட்ட பொருளியைபு நிலை பற்றி ஆராயும் வேதியியல் பிரிவு

stereography: திட்பக் காட்சி அமைவு முறை

stereoscope: திட்ப காட்சிக்கு அமைவு முறை: இரு கண்ணாலும் இரு கோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக் காட்சி தோற்றுவிக்கும் கருவி

stereophonic: பலதிசைத் தொனி: ஒலி வகையில் பல திசைகளிலிருந்து வருவது போலமைந்த தொனியமைப்பு முறை. இந்த முறையில் உண்டாகும் தொனியில் ஆழமும், அழுத்தமும், செழுமையும் ஏற்படுகிறது

stereopsis: இருவழி இயை கோணக்காட்சி: இருவிழி இரு கோண நிலைப்படக் காட்சியமைவு முறை

stereo type: (அச்சு.) பாள அச்சு அட்டைத் தகடு: உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு

stereotyping: (அச்சு) பாள அச்சுப் பதிவுமுறை: பாள அச்சு முறையில் அச்சடித்தல். இதில் வெப்பமுறை பொதுவாகப் பெருமளவில் பயன்படுகிறது

sterlings : ஸ்டர்லிங் வெள்ளி: வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஓர் அளவுத்திட்டமுறை. 925/1000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75|1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியாகும். அணிகலனின் 'ஸ்டெர்லிங்' என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாதமாகும்

stet (அச்சு.) மூலப்படி விடுக: அச்சுப் பணியில் பிழை திருத்துவோர் பயன்படுத்தும் சொல். அச்சுப்படியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அடித்ததை அடியா நிலையில் 'முன்போல் நிற்க' 'விட்டு விடுக' என்று பொருள்படும்

stethoscope: (மருத்) இதயத் துடிப்பு மானி: இதயத்துடிப்பு போன்ற உடலினுள் எழும் ஓசைகளைக் கேட்டறிய உதவும் கருவி

இதயத் துடிப்பு மானி: படம்

stick: (அச்சு.) அச்சுக்கோப்புக் கட்டை: அச்சுக் கோப்பவர்கள் அச்சு எழுத்துகளைக் கோத்து அடுக்குவதற்குப் பயன்படும் சிறிய கைச்சட்டகம்

stickful: (அச்சு.) அச்சுக்கோப்புக் கட்டைநிறைவு அளவு: அச்சு எழுத் துகளை முழுவதுமாகக் கோத்து நிறைவு செய்துள்ள நிலை

Sticking of valves: (தானி.மின்) ஓரதர் அடைப்பு: மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஓரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல்

stick shellac: (மர) பசை அவலரக்கு: அறைகலன்களைப் பழுது பார்ப்பதற்கும், வெடிப்புகளிலும் கீறல்களிலும் பூசுவதற்கும் பயன்படும் பசை வடிவ அவலரக்கு

stiffener: (பொறி.) விறைப்பாக்கும் பொருள்: விறைப்புத் தன்மையை அதிகரிப் பதற்காக ஓர் உறுப்புடன் பிணைக்கப்படும் கணுக்கால், தகடு அல்லது பிற வடிவப் பொருள்

stile : கடவேணி : சுவரின் அல்லது வேலியின் மீது ஒரு புறம் ஏறி மறுபுறம் இறங்குவதற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி

Stillson wrench : (கம்) ஸ்டிக்சன் திருக்குக் குறடு : குழாய்களைத் திருக்குவதற்குச் சாதாரணமாகப் பயன்படும் திருக்குக் குறடு. இதனைக் கண்டுபிடித்த ஸ்டில்சன் பெயரால் இது அழைக்கப்படுகிறது

stipple :புள்ளி ஓவியம் :கோடுகளுக்குப் பதிலாகப் புள்ளிகளிட்டுப் படம் வரைதல் அல்லது செதுக்கு வேலைப்பாடு செய்தல்

stipple-graver: செதுக்கோவியர் புள்ளியிடு கருவி: செதுக்கோவியர்கள் புள்ளிகளிட்ட வேலைப்பாட்டுக்காகப் புள்ளியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி

stippler: புள்ளி முறை ஓவியம்: புள்ளிகளால் படம் வரையும் முறை

stirrup : (பொறி) அங்கவடி : உத்திரம், சலாகை, கதிர் போன்றவற்றுற்றுக்கு ஆதாரப் பிடிப்பாகவுள்ள ஒரு பட்டை அல்லது வளையம்

stirrup-pump : தீயணைப்பு மிதிப் பொறி :

stitch-wheel: தைப்புச் சக்கரம் : துளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டு வாய்ச் சக்கரம்

stoa : (க.க.) சிற்ப வாயில்: சிற்ப வேலைப்பாடுடையவாயில் முகப்பு நுழைமாடம், முக மண்டபம்

stocks and stones: உயிரற்றபொருட்கள்

Stoker: உலையூட்டி : நீராவி எந் திரங்களுக்கு எரி பொருளுட்டும் கருவி

stomach-pump : அகற்றுப் பீற்று: வயிற்றிலிருந்து வெளியேற்றவோ அல்லது வயிற்றுக்குள் செலுத்தவோ பயன்படும் பீற்றுக்குழல்

stonatitis : (நோயி) வாய்ப்புண்: வாய் அழற்சி

stonotology: (நோயி) வாய் நேரயியல்: வாய் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவம்

stone-blindness: (நோயி) முழுக்குருடு : முற்றிலும் பார்வையிழந்த நிலை

stone-saw : கல் ரம்பம் : மணல் உதவியோடு கல் அறுக்க உதவும் பல் இல்லாத இரும்பு ரம்பம்

stop cock : நெகிழ்வுக் குழாய்: மூடவும் திறக்கவும் கூடிய குழாய் அமைவு

stop-collar : தடைக்கட்டு வளையம் : எந்திர உருளையின் இயக் கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு

stone : ஸ்டோன் : 6.350 கி.கி. எடை

stone blue : வெளிறு நீலம் : வெண்மை கலந்த அவுரி நலம்

stone butter: படிக்காரம் : படிக்காரத்தின் ஒருவகை

stone-pitch : கெட்டிக் கீல் : கெட்டியான கீல் வகை

stool : (க.க.) ஓரச்சட்டம் : பல கணி ஓரச் சட்டம்

stoop (க.க.) வாயிற் குறடு : வீட்டின் வாயிலில் உள்ள படிவாயில் அல்லது வாயிற்படி

stop : (எந்: க.க.) தடுப்புக்குமிழ் : ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் செல்லாமல் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ். ஒரு பட்டறையிலுள்ள எந்திரத்தில் அல்லது ஒரு கட்டிடத்தின் கதவில் உள்ள தடைக் கருவி போன்றது

stop-clock : நிறுத்தமைவுக் கடிகாரம் : தேவையானபோது நிறுத்தவும் ஒட்டவும், அமைவு கொண்ட கடிகாரம் விளையாட்டுப் பந்தயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது

stop cock: (கம்) நெகிழ்வுக்குழாய் : மூடவும் திறக்கவும் வல்ல குழாய்

stop-collar (எந்) தடைக்கட்டு வளையம் : எந்திரம் உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு

stop-cylinder : (அச்சு) தடைஅச்சுப் பொறி : அச்சுப் பொறி வகை

stop-drill : தடுப்புத் துரப்பணம் : சுழல்வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி

stop-plate : இருசு வரைத் தகடு:' உராய்வுத் தடைக் குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு

stop-valve; தடுக்கிதழ் அடைப்பு: நீர்மத் தடுக்கிதழ் அமைப்ப

stopwatch : விசைய்ழுத்தப் பொறி : ஓட்டப் பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குவதற்கும் நிறுத்ததிற்கும் உரிய பொறியமைவுடைய கைக்கடிகாரம்

storage: (தானி.) கணிப்பொறிச் சேமிப்பிடம் : ஒரு கணிப்பொறியில், கணிப்புகளில் பயன்படுத்துவதற்காக அறிவுறுத்தங்களும், தகவல்களும் சேமித்து வைக்கப்படும் பகுதி

storage battery : (மின்) சேம மின்கலத் தொகுதி: சேம மின் கலங்களின் ஒரு தொகுதி. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் நேர் மின் தகடுக்ளும் நீர்த்த கந்தக அமில மின் பகுப்பானில் மூழ்க வைக்கப்பட்டிருக்கும்

storage cell (மின்) சேம மின் கலம் : ஒரு சேம மின்கலத் தொகுதியின் ஒரு பகுதி

storage life: (குழை) மசிவுக் காலம் : ஒரு குறிப்பிட்ட சேம வெப்ப நிலையைப் பொறுத்து ஒரு பிசினை அதன் குண இயல்புகளோ, மசிவுத் தன்மையோ குன்றாமல் சேமித்து வைக்கக் கூடிய கால அளவு

stored energy welding : சேம ஆற்றல் பற்றவைப்பு : ஒரு வகைத் தடைப் பற்றவைப்பு. இதில் பற்ற வைப்பதற்குத் தேவையான மின்னாற்றல் பொருத்தமான தொரு சேமக்கலத்தில் பற்ற வைப்பதற்கு முன்பு குறைந்த வீதத்தில் சேர்த்து வைக்கப்பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் சேர்த்து வைக்கப் பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் வழங்கப்படுகிறது

stormdoor : (க.க) வன்புற மிகைக் கதவு: புயல் குறிக் கூம்புடன் கடும்புயல் எச்சரிக்கையாக இணைத்துக் காட்டப்படும் வட்டுருளை அடையாளம்

storm sash : (க.க) புறப் பல கணிச் சட்டம் : கடுங்குளிர்ப் பருவத்தில் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மிகையான அல்லது புறப் பலகணிச் சட்டம்

storm signal : எச்சரிக்கைச் சைகை : புயல் வருவதை முன்னரே அறிவிக்கும் அடையாளம்

stove bolt : கணப்பு மரையாணி : சுரையில்லாத மரையாணி எந்திதிரத் திருகாணி எனப்படும் சுரையுடன் கூடிய மரையாணி கணப்பு மரையாணி எனப்படும். கணப்பு மரையாணிகள் பொதுவாக எந்திரத் திருகாணிகளை விடச் சற்று சொர சொரப்பான புரியிழையினைக் கொண்டிருக்கும்

stove-pipe : கணப்புப் புகைசெல் குழாய்: கணப்படுப்புப் புகை செல்வதற்குரிய குழாய்

straddie milling: (எந்) கவட்டுத் துளையிடு கருவி : உலோகத் தகடுகளில் துளைகளிடு வதற்கும் பள்ளம் வெட்டுவதற்கும் பயன்படும் கவடு போன்ற வெட்டுக்கருவிகள் கொண்ட கருவி

straight-edge : (எந்) நேர் நுட்பல்கோல் : ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒரு புறம் கொண்ட அளவு கோல்

straight-eight engine : (தானி) எட்டுவட்டு உந்துகலம் : வரிசையாக எட்டு நீள் உருளைகளைக் கொண்ட உந்து ஊர்தி

straight jet : பீற்று விமானம்: சுழல் விசிறியற்ற பீற்று விமானம்

straight polarity : (பற்) நேர் நிலை மின் துருவமுனைப்பு : மின் முனையிலிருந்து பாயும் எலெக்ட்ரான்களை இழி உலோகத்திற்குப் பாயுமாறு நேர் மின்னோட்டத்தை இணைத்தல்

straight-shank drill : (பட்.வே) நேர் தண்டுத் துரப்பணம் : உருண்டையான நேரிணைத் தண்டு கொண்ட ஒரு துரப்பண்ம். இது தானே மையங்கொள்ளும் ஏந்தமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துரப்பனங்கள் பெரும்பாலும் பெரிய வடிவளவுகளில் செய்யப் படுவதில்லை

straight turning : (உலோ) நேர்நிலைக் கடைசல் : வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் விட்டங்கள் எல்லா இடங்களிலும் சமமாக இருக்குமாறு செய்யப்படும் கடைசல் வேலை. செய்யப்பட்ட பொருள் ஒரு நீள் உருளை வடிவில் இருக்கும்

strain : (பொறி.) இழுவிசை : உரிய வரம்புக்கு அப்பால் நெட்டிழுத்தல் வடிவம் அல்லது கன அளவில் மாறுதல் ஏற்படும் அளவுக்கு எல்லை கடந்து வலிந்து இழுத்தல்

strain gauge : (மின்) இழுவை மானி : ஒரு சாதனம் இயங்கும் போது அதன் உலோக உறுப்புகளில் ஏற்படும் இழுவிசையை அல்லது திரிபினை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

straining-beam : இடைக்கூம்பு விட்டம் : மோட்டு விட்டக் கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கின்ற கிடைமட்ட உத்தரம்

strain insulator : (மின்) இழு வகை மின்காப்பி : மின் கம்பியின் அல்லது மின் கம்பிவடத்தின் முழு எடையையும் இழுவிசையையும் தாங்குவதற்கு உயர்ந்த அளவு மின்காப்பும் விறைப்பாற்றலும் கொண்ட ஒரு மின்காப்பி

strake : (உலோவே) நீர்வரிப் பட்டி : கப்பலின் முன் பகுதியிலிருந்து பின் பகுதி வரையுள்ள தொடர்ச்சியான பலகை அல்லது தகட்டு அடைப்பு

stranded conductor : (மின்) சர மின்கடத்தி': கெட்டியான கம்பிகளின் பல சரங்களை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிய மின்கடத்தி, இது சாதாரணமாக 7,19,37 சரங்கள் கொண்டதாக இருக்கும்

stranded wires : (மின் ) சரக் கம்பி ; பின்னிய அல்லது முறுக்கிய பல சிறு கம்பி களைக் கொண்ட கம்பிச்சரடு அல்லது கம்பி வடம்

strap work : வார் ஒப்பனை. வார்முடைவுப் போலி அணி ஒப்பனை

strata : படுகைகள் : இயற்கையான அல்லது செயற்கையான நிலஅடுக்குப் படுகைகள்

stratification : அடுக்கமைவு : அடுக்கடுக்கான படுகைகளாக அமைத்தல்

stratiform : அடுக்கியல் படிவு : படுகையடுக்குகளாக உருவாகிற வடிவம்

stratigraphy: அடுக்கியல் ஆய்வு: அடுக்கியற் படிவாக்கக் கூறுகளின் தொகுதி பற்றிய ஆய்வு

stratocruiser : மீவளி மண்டல வானூர்தி : காற்று மண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்

stratosphere : மீவளி மண்டலம் : தட்பவெப்ப நிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் காற்று மண்டலத்தின் ஏழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு

Strawboard : வைக்கோல் அட்டை : முற்றிலும் வைக்கோல் கூழினாலான அட்டை

stray field . (மின்) சிதறல் காந்தப்புலம்: காந்தப் பாதைக்குப் புறத்தேயுள்ள காந்த விசைக் கோடுகள்

strays : (மின்.) இடைத் தடங்கலொலி : வானொலியில் ஒலிபரப்புடன் தொடர்புடையதாக இல்லாத மின்காந்த உலைவுகள்

stream-anchor : இழுவை நங்கூரம் : கப்பலை நிலம் நோக்கி இழுக்கும் போது பயன்படும் சிறு நங்கூரம்

streamline : (வானூ) இழை வரி: ஒழுகு நீர்மம் பின்பற்றும் இயல்தளக்கோடு

stream line flow : (வானூ) இழைவரிப் பாய்வு : உடற்பகுதியின் அருகிலுள்ளதும், குறுகிய பின்கல அலைவிலுள்ளதும் நீங்கலாக, இழைவரிகள் நேரத்துடன் மாறாதிருக்கிற திரவப் பாய்வு

strength of current : (மின் ) மின்னோட்ட வலிமை : ஒரு மின் சுற்று வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் ஆம்பியர் எண்ணிக்கை. இது நீர்க் குழாயில் ஒரு நிமிடத்தில் பாயும் நீரின் காலன் அளவு போன்றது

strength of materials : (பொறி) இயற்பொருள் வலிமை : பொருள்களின் வடிவிலும், வடிவளவுகளில் மாறுதல் உண்டாக்குகிற ஆற்றல் களின் விளைவுகள் குறித்து ஆராயும் அறிவியல்

stress : (மின்.) இறுக்கவிசை : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது வடிவளவை மாற்றுவதைத் தடை செய்கிற அகவிசை

stress accelerated corrosion : (உலோ.) இறுக்கவிசை முடுக்கு அரிமானம் : உலோகத்தில் இறுக்க விசை அதிகரிப்பதால் உலோகத்தின் அரிமானம் முடுக்கி விடப்படுகிறது. இந்த அரிமானம் சில உலோகக் கலவைகளை விட எஃகில் அதிகம்

stretch : நீட்சி : வினை வேகத்தைக் குறைத்தல்

stretcher : கிடைச் செங்கற்சுவர்: முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல்

stria : (குழை.) படுகைவரி: மேற்பரப்பில் உள்ள படுகைக் கோட்டு வரி அடையாளம்

string course or sailing course : சுற்றுவரி மேடை : கட்டிடச் சுற்றுவரி மேடை, செங்கல் அல்லது கல்லினாலான அலங்கார அமைப்பு

stringer : (க.க.) இடையிணை தளம் : படிக்கட்டுகளிலுள்ள இடையிணைதளம்

stroboscope : (மின். ) சுழற்சி நோக்கி : ஒரு சுழலும் எந்திரத்தின் வேகத்தை அளவிடுவதற்கான அல்லது அதன் இயக்கத்தை ஆராய்வதற்கான ஒரு கருவி இதில் மாறுகிற வேகமுடைய பொறி விளக்கு இருக்கும். இதனைசூழலும் எந்திரத்திற்கேற்ப ஒருங்கியைபு செய்து கொள்ளலாம். இவ்வாறு ஒருங்கியைபு செய்த வேகத்தில் சுழலும் உறுப்புகள் நிலையாக இருப்பது போலத் தோன்றும்

strobotron : (மின்.) ஸ்டிரோ போட்ரான்: சுழற்சி நோக்கியில் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பானுடன் கூடிய ஒரு நியான் விளக்கு துல்லியமான் நேரத்தில் மின்னழுத்தத் துடிப்புகளினால் ஆற்றலூட்டப்படும் பொழுது இது பிரகாசமான ஒளியை உண்டாக்கும்

stroke : (தானி.பொறி.) உதைப்பு: உந்துதண்டு ஒருமுறை உதைத்துச் சுழலும் இயக்கம்

strontium : ஸ்டிரான்ஷியம் : மஞ்சள் நிறமுள்ள அரு உலோக வகை

structural load : (பொறி) கட்டமைப்புப் பளு: எந்திரத்தின் கட்டமைப்பினால் உண்டாகும் பளு. இது ஏற்றிய பளுவிலிருந்து வேறுபட்டது

structural steel : (பொறி.) கட்டமைப்பு எஃகு : பாலங்கள், கட்டிடங் கட்டுவதற்குப் பொறியியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட எஃகு வடிவங்கள். இவை I, H, Z முதலிய பல்வேறு வடிவங்களில் அமைந்திருக்கும்

strut : விட்டக்காழ் : விட்டத்தின் குறுக்காக உறுதி நாடி இடப்படும் இரும்பு அல்லது மர ஆப்பு

strut girder: விட்டக்காழ் தூலம்: குறுக்குச் சட்டத் துாலம். இதன் உச்சி உறுப்பும், அடி உறுப்பும் செங்குத்தான விட்டக்காழ்களால் இணைக்கப்பட்டிருக்கும்

strut tenon : (மர.வே) விட்டகாழ் பொருத்து முளை: கனமான வெட்டு மரங்களில் உறுதி நாடிவிட்டத்தின் குறுக்காக இடப்படும் பொருத்து முளை

stucco : குழை காரை : சுவர்ப் பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைச் சாந்து

stuck molding: (க.க) ஒட்டுவர் படம் : தரைத் தளத்திலோ மேசையிலோ ஒட்டிக் கொள்ளக்கூடிய வடிவத்தில் அமைந்த வார்ப்படம்

stud : (க.க.) குமிழ் முகப்பு : ஒப்பனைக் குமிழ் முனைப்புப் பரப்பு

stud bolt; மரை திருகாணி : திருக்குக் குறடு பற்றிக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் இருமுனைகளிலும் வெற்றிடத்துடன் திருகிழை அமைக்கப்பட்ட மரையாணி

stud gear: (எந்) குமிழ்ப் பல்லிணை : குமிழ்மீது அமைந்த ஓர் இடைநிலைப் பல்லிணை

stuffing box : (எந்) உள்திணிப்புப் பொறியமைவு : காற்று முதலியவை உட்புகாதவாறு இயங்கவல்ல உள் திணிப்புப் பொறியமைவு

stuffing regulator : உள்திணிப்பு ஒழுங்கியக்கி :மெத்தை திண்டு வேலைப்பாட்டில் உள் திணிப்பில் ஏற்படும் மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமப்படுத்தப்படும் கருவி. இது 6" முதல் 10" நீளத்தில் கூம்பு வடிவில் ஊசி போல் அமைந்திருக்கும்

stunt or dunt: திடீர் வெடிப்பு குளிர்விக்கும் போது திடீரென ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு

style: பாணி: ஒரு குறிப்பிட்ட காலத்தில் செல்வாக்குப் பெற்ற ஒப்பனைப் பாணி அல்லது கலைப் பண்பின் மாதிரி

sub-base: (க.க) அடித்தள அகடு: ஓர் அடித்தளத்தின் அடிப்பகுதி

sub cloud car (வானூ) முகிலடி ஆய்வு ஊர்தி : விண்கலத்திலிருந்து மேகத்திற்குக் கீழே ஒரு நிலைக்கு இறக்கக்கூடிய ஓர் ஆய்வு ஊர்தி

subhead: (அச்சு) துணைத் தலைப்பு: அச்சுப் பணியில் உட் தலைப்பு

sublimation: (குளி.பத) பதங்கமாதல்: ஒரு பொருள் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறாமலேயே வாயுவாக மாறுதல்

submarine: நீர்மூழ்கி: கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்க வல்ல போர்க்கப்பல்

subsatellite: (விண்) துணை செயற்கைக் கோள்: ஒருபூமி செயற்கைக் கோளினுள் சுற்றி வருவதற்காக வடிவமைக்கப்பட்டு, பின்னர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியில் அனுப்பப்படும் ஒரு பொருள்

subsoil: அடிமண்: மண்னுக்குக் கீழ், ஆனால் கடினமான பாறைக்கு மேல் உள்ள மண்

substation :(மின்) துணை மின் நிலையம்: மின்விசை வசதியாகப் பயன்படுத்தக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகிற ஒரு மின்நிலையம். இதில் மின்மாற்றிகள், மின்விசைகள், மின்சுற்றுவழி முறிப்பிகள் போன்ற துணைச் சாதனங்கள் அடங்கியிருக்கும்

sub-stratosphere: அடிமீவளி மண்டலம்: மீவளி மண்டலத்திற்குக் கீழே உள்ள பூமி மண்டலத்தின் படுகை. இதில் மிக உயரப்போக்கு வரத்து நடவடிக்கைகள் நடத்தப் பெறுகின்றன

substratum: கீழடுக்கு : அடித்தள அடுக்கு

substructure: (க.க) கீழ்க்கட்டுமானம்: ஒரு கட்டுமானத்தின் கீழ்ப் பகுதி. இதன் மேல் எதனையும் கட்டுவர் subtangent: தொடுவரை நீட்டம்: ஊடுவரையில் தொடுவரை நீட்டம்

suction: பற்றீர்ப்பு: உறிஞ்சி எடுத்தல்

suction-fan: பதர் உறிஞ்சி: தானி யத்திலிருந்து பதர் வாங்கி விட உதவும் உறிஞ்சு விசிறி

suction stroke: உறிஞ்சு வீச்சு : நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு

suede calfskin : வறுதோல் ; கையுறை, காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிப்படாத வெள்ளாட்டுக் குட்டித் தோல். இது உயர்தரமான தோல், இது நேர்த்தியான உள்வரித் துணியாகப் பயன்படுத்தப்படுகிறது

suede lambskin : துறு தோல்: கையுறை, காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப்படாத வெள்ளாட்டுக் குட்டித் தோல்

sugar pine : (மர) சர்க்கரைத் தேவதாரு : அமெரிக்காவில் கலிஃபோர்னியா, ஆரிகான் மாநிலங்களில் மிகுதியாக வளரும் மிகப் பெரிய தேவதாரு மரவகை. இதன் விட்டம் 4.5மீ. வரைஇருக்கும் ,30மீ. வரை உயரமாக வளரும். இதன் வெட்டு மரம் இளவண்ணம் கொண்டது. இதில் எளிதாக வேலைப்பாடுகள் செய்யலாம். உள் அலங்கார வேலைகளுக்கு மிகுதியும் பயன்படுகிறது

sulphated battery : (க.க) கந்தகி மின்கலத் தொகுதி : மின்னேற்றக் குறைவு அல்லது குறைந்த நீர் மட்டம் அல்லது இவ்விரண்டும் காரணமாக வெள்ளை நிறக் கந்தகி (சல்பேட்) பூசப்பட்ட தகடுகளுடைய சேம மின்கலத் தொகுதி

sulphate paper ; கந்தகிக் காகிதம் : முற்றிலும் கந்தகிக் (சல்பேட்) கூழினால் செய்யப்பட்ட காகிதம். இது சில சமயம் சலவை வெண்மையாகவும், பழுப்பாகவும் சாயமிட்டதாகவும் இருக்கும்

sulphite bond : கந்தகியத் தாள்: உறுதி வாய்ந்த உயர்தரத் தாள். இது நான்கு வகைகளில் கிடைக்கும். முதலிரு உயர்வகைகள் எழுது தாள் உற்பத்தி வாணிக மரபுகளுக்கேற்ப நீர்க் குறியிடப்பட்டிருக்கும்

sulphite pulp : கந்தகிகக் கூழ் : ஊசியிலை மரம் மற்றும் அது போன்ற மரங்களிலிருந்து சல் பைட் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மரக்கூழ்

sulphur : (வேதி) கந்தகம் (S) : இரும்பிலும் எஃகிலும் கந்தகம் அடங்கியிருப்பதால் எப்போதும் விரும்பத்தகாத விளைவுகளே ஏற்படுகின்றன. இது வார்ப்பிரும்பை கடினமானதாகவும், வெண்மையானதாகவும் ஆக்கி விடுகிறது. மெல்லிரும்பில் அல்லது எஃகில் கந்தகத்தில் கந்தகம் மிகச் சிறிதளவு இருந்தாலும், அதனால் சிவப்புக் குறைபாடு உண்டாகிறது

sulphuric acid : (வேதி) கந்தக அமிலம் : (H2so4): இது கந்தகத் திராவகம், கந்தகத்தை அளவில் வாட்டி அல்லது அயப் பைரைட்டை அல்லது பிற சல்பைடுகளை அளவில் வாட்டி அதனால் உண்டாகும் டையாக்சுடன் ஆக்சிஜனைச் சேர்த்து, அந்தத் கலப்புப் பொருளை நீருடன் கலப்பதன் மூலம் இந்த அழிலம் தயாரித்கப்படுகிறது. கலை வேலைப்பாடுகளிலும், சேம மின்கலத்தில் மின் பகுப்பானாகவும், மசகு எண்ணெயாகவும் பயன்படுகிறது

sump : கட்டுதொட்டி: சுரங்கம், விந்திரம் ஆகியவற்றுல் மழை நீர், கழிவுநீர் ஆகியவற்றைச் சேகரிப்பதற்கான சுட்டுகுழி sun compass : (வானூ) சூரியத் திசைகாட்டி : காந்த வட, தென் துருவ திசைக்குப் பதிலாக சூரியனின் திசை பயன்படுத்தப்படும் திசைகாட்டி

sun effect : (குளி.பத) சூரிய விளைவு : சன்னல்கள், கட்டிடச் சுவர்கள் வழியாக அறைகளுக்குள் மாற்றப்பட்ட சூரிய ஆற்றல்

sunspot : (விண்.) சூரியப் புள்ளி/ சூரியக் களங்கம்: சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் கரும்புள்ளிகள்

sunspot cycle : (விண்) சூரியப் புள்ளிச் சுழற்சி; சூரியனின் மேற்பரப்பில் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கையும் பரப்பளவும் சராசரியாக 11.1 ஆண்டுகளுக்கொருமுறை மாற்றமடைதல்

sun-stone : சூரிய காந்திக்கல் : ஒருவகைப் படிகக்கல்

sun-stroke : (நோயி) வெப்ப தாக்கு நோய் : வெயில் கடுமையினால் தாக்குண்டு மயக்கமுறும் நோய்

superbronze : (உலோ) மிகு நேர்த்தி வெண்கலம் : இது அரிமானத்தை எதிர்க்கக் கூடிய மிகுந்த விறைப்புத் தன்மை வாய்ந்த, அலுமினியமும், மாங்கனீசும் அடங்கிய வலுவான பித்தளை

supercalendered : (தாள்) மிகு மெருகு: துணி, தாள் ஆகியவற்றை உருளை எந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் மட்டுமீறு மெருகேற்றி மழமழப்பாக்குதல்

super charge : (வானூ) மீவிசையேற்றம் : உந்துகலம், விமானம் முதலியவற்றில் நிலவர அழுத்தத்திற்கு அதிகமாக காற்று அல்லது கலவையை அடைத்தல்

supercharged engine: (வானூ) மீவிசையேற்ற எஞ்சின் : விமானம் மிக உயரத்தில் பறப்பதற்காக எஞ்சினுக்கு மீவிசையேற்றம் செய்தல்

supercharger : (தானி) மீவிசைக் காற்றுக் குழாய்: உந்துகலம், விமானம் முதலியவற்றில் அளவுக்குமீறி காற்றடைக்கப்பட்ட குழாய் உள் வெப்பாலையில் மீவிசை அழுத்த மூட்டுவதற்குரிய அமைவு

superconductivity : (மின்.) மிகை மின்கடத்தல் : மின்தடை மறைந்து விடுவதாகத் தோன்றும் முழுப் பூச்சிய வெப்ப நிலைகளில் மின்கடத்தல் நடைபெறும் நிகழ்வு

super control tube : (மின்) மிகைக் கட்டுப்பாட்டுக் குழல் : கட்டுப்பாட்டு வலைச் சார்புடன் மிகைப்புக் காரணி மாறுபடுகிற ஒரு குழல்

super fines : (தாள்) நேர்த்திக் காகிதம் : மிக நேர்த்தியான முறையில் நயமாகத் தயாரிக்கப் பட்ட உயர்தரமான எழுதுவதற்குரிய தாள்

super heated steam : மிகு வெப்ப நீராவி : நீராவி எந்த அழுத்த நிலையில் உண்டாகியதோ அந்த அழுத்தத்திற்கு நேரிணையான வெப்ப நிலையைவிட அதிக வெப்ப நிலையுடைய நீராவி

super heterodyne : மிகை அலை மாற்றி : உள்வரும் உயர் அலைவெண் அலையின் மீது மாறுபட்ட அலைவெண் கொண்ட அதே போன்ற அலையினை மேன் மேலடுக்கும் தத்துவத்தைப் பொறுத்து அமைந்துள்ள ஒரு வானொலி வாங்கி மின்சுற்றுவழி

super imposition : மேற்சுமத்தீடு: தொலைக்காட்சியில் ஓர் ஒளிப் படக் கருவியிலிருந்தும் உருக்காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக் காட்சி படியச் செய்தல். உருக்காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல்

superior figures or letters : (அச்சு.) வரிமேல் உருவம் அல்லது எழுத்து :- அச்சுக்கோப்பில் ஒரு வரிக்கு மேலாக அமைக்கப்படும் சிறிய உருவம் அல்லது எழுத்து. B3;Cn

super sonic : (மின்) மிகையொலி அலைவெண்: ஒலி அலைவெண் வீச்சுக்கு மேற்பட்ட அலைவெண்கள்

supersonic : (விண்) ஒலியினும் விரைவு விமானம் : ஒலியைவிட விரைவாகச் செல்லும் விமானம்

super structure : மேற்கட்டுமானம்: ஒரு கட்டிடத்திற்கு மேலே கட்டப்படும் கட்டுமானம்

supplement of an angle :துணைக்கோணம்: கோணத்துடன் இணைந்து நேர்க்கோணமாகும் துணைக்கோணம்

suppressor : (மின்) அடக்கி : தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

suppressor grid: (மின்) அடக்கி மின்வலை : ஓர் எலெக்ட்ரான் குழலில், திரைவலைக்கும் தகட்டுக்கு இடையில், தகட்டிலிருந்து இரண்டாம் நிலை எலெக்ட்ரான்களை எதிர்ப்பதற்கு அல்லது அடக்குவதற்குள்ள ஒரு மூன்றாவது மின்கம்பி வலை

surd : (கணி.) பகுபடா எண் : பதின் கூற்றில் தீராக் கீழ்வாய்ப் பின்னம்

surface action : (இயற்) மேற்பரப்பு வினை : மேற்பரப்பில் விளைவுகளை உண்டாக்கும் வினை. எடுத்துக்காட்டு:வண்ணம் பூசிய பரப்பில், புகை, ஈரம் முதலியவற்றின் வினை

surface alloy transistor: (மின்) மேற்பரப்பு உலோகக் கலவை மின் பெருக்கி : இது ஒரு சிலிக்கன் இணைப்பு மின்பெருக்கி (டிரான் சிஸ்டர்), இதில் அலுமினிய மின் முனைகள், ஒரு மெல்லிய சிலித்கன் படிகத்தின் இருபுறங்களிலும் செதுக்கப்பட்டுள்ள குழிகளில் படிகின்றன

surface barrier transistor : (மின்.) மேற்பரப்புத் தடை மின் பெருக்கி : மின் ஊர்திகளின் சேகரிப்பும், வெளிப்பாடும் நடை பெறுகிற இடைத்தொடர்பு முனைகள், மேற்பரப்பில் அமைந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்)

surface-craft :அலை மேவுலகம்: நீர் மூழ்கியல்லாத கப்பல்

surface gauge : மேற்பரப்பு அளவி ; எந்திர நுட்பாளர்கள் உள்வரியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி

surface grinding : (உலோ) மேற்பரப்புச் சாணை: தட்டையான உலோகப் பரப்புகளைச் சாணையிட்டுத் தீட்டுதல்

surface noise : (மின்) மேற்பரப்பு ஒலி : ஓர் ஒலிப்பதிவில், ஓர் ஒலித்தட்டினை வெட்டியெடுத்த பின்பு அதன் வரிப்பள்ளங்களில் தேங்கியிருக்கும் சொரசொரப்பான துகள் களிலிருந்து அல்லது ஒழுங்கற்ற பரப்புகளிலிருந்து எழும் ஒலி

surface speed : (எந்) மேற்பரப்பு வேகம் : ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை ஆடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ, நீள் உருளை வரைகோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சக்கரத்தின் மேற்பரப்பு வேகத்தைக் கணக்கிடுவதற்கு அடிக்கணக்கிலான அதன் சுற்றளவை, அது ஒரு நிமிடத்தில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையினால் பெருக்குதல் வேண்டும்

surface water : (கம்மி.) மேல் ஒடுநீர் : நிலமேற்பரப்பின் மீதாக ஒடும் நீர் சாக்கடைநீர்

surveying : நிலஅளவை : நிலத்தை அளவிடும் அறிவியல்

surveyors compass: நிலஅளவையாளர் திசைகாட்டி : கிடைமட்டக் கோட்டிற்கும் ஒரு காந்தமுள்ளுக்கு மிடையில் திசை வேறுபாட்டைக் குறிக்கும் கருவி. இதனை அளவையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்

suspension : (வேதி.) மிதவல்: நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக மிதக்கும் மிதவைப் படலம்

swab : (வார்.) ஒத்துப்பட்டை : வார்ப்படத்தில் ஒரு தோரணியைச் சுற்றியிருக்கும் மணலை ஈரத்தில் ஒற்றியெடுக்கும் துணித்துண்டு அல்லது உறிஞ்சு பஞ்சு

swag : தோரணம் : அறைகலன்களை அலங்காரமாகச் செய்வதற்கான தோரண வடிவமைப்பு

swage : பணியிரும்பு : பதிவச்சுப் பொறியினால் வடிவம் கொடுப்பதற்குப் பயன்படும் பணியிரும்பு

swage block: பதிவச்சுருக் கட்டை : பணியிரும்பை உருவாக்குவதில் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை

swages : (உலோ.) உலோக வடிவாக்கப் பொறிகள் : நீர் உருளை உறுப்புகளை வடிவமைப்பதற்கான உட்குழிவான முகப்புகளையுடைய உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கும் கருவிகள்

swarf: (உலோ.) உலோகச் சிம்பு: சாணைக்கல்லில் உலோகப் பொருட்களைச் சானை தீட்டும் போது சிதறும் உலோகச் சிம்பு செத்தை

sweating sickness: (நோயி.) வியர்வைக் காய்ச்சல்: லண்டனில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய கொடிய வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய்

swash letters: (அச்சு.) வளைவுக் கோட்டு எழுத்து: அச்சுப் பணியில் வளைவு கோடுகளினாலான அலங்கார எழுத்துக்கள்

sweating: (உலோக.) உலோக இணைப்பு: உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவாய் ஒன்றுபடுத்திப் பொருத்துதல்

swedish iron: (உலோக.) சுவீடிஷ் இரும்பு: பாஸ்வரம், கந்தகம் சிறிதும் இல்லாத மிக உயர்ந்த தரமான இரும்பு

sweet: அக வளைவியக்கம்: ஒரு தொலைக்காட்சிப் பட அல்லது ஒளிப்படக்குழாயில் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்

sweet circuit: (மின்.) வீச்சு மின்சுற்றுவழி: ஓர் எதிர்மின் முனைக் கதிர்க்குழலில் ஒரே விகித எலெக்ட்ரான் கற்றையை இயக்குவதற்காக கால இடைவெளிகளில் செலுத்தப்படும் மாறுபடும் மின்னழுத்தம்

sweet generator: (மின்.) வீச்சு மின்னாக்கி: ஒரு வானொலி அலை வெண் மின்னாக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. இதில் ஒரு சோதனைக் கருவி. ஒரு சராசரி அலை வெண்ணுக்குக் கூடுதலாக அல்லது குறைவாக அலைவெண் மாறுபடும். இதனை ஒர் அலைவுப் பதிப்பானுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒர் ஒருங்கியைபு மின்சுற்றுவழிகளின் மாறுதல் போக்குகளைக் கண்காணிக்க முடியும்

sweep oscillator: (மின்.) வீச்சு ஊசல்: ஒர் எதிர்மின் முனைக் குழலில் எலெக்ட்ரான் கற்றையை விலக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் ஊசல்

sweet gum: (மர.) இனிப்புக் கோந்து: குங்கிலியப் பிசின். இதனைச் செம்மெழுகு என்றும் கூறுவர். மலைகளில் வளரும் ஒரு வகை மரத்தின் பிசினிலிருந்து இது கிடைக்கிறது

sweet oil: (வேதி.) ஒலிவ நெய்: குறைந்த தரமுடைய, கெட்டியான ஒலிவ நெய். இது மருந்துப் பொருளாகவும், சமையலுக்காகவும் மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது

sweet or red gum: (மர.வே.) செம்மெழுகு மரம்: செம்மெழுகு தரும், மலையில் வளரும் மரம். இது பெரிதாக வளரும். இது மென்மையானது; எனினும் வலுவானது. இது அழகான வடிவம் பெறும்; எனினும் உருத்திரிந்து வளரும்

swell: (வார்.) புடைப்புரு: வார்ப் படத்தைப் போதிய அளவு அழுத்தம் கொடுக்காததால் ஏற்படும் புடைப்பு

swing saw: (மர.வே.) ஊசல் ரம்பம்: மேலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கீலுள்ள சட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள வட்ட வடிவ ரம்பம். வேலைப்பாடு வேண்டிய பொருள் நிலையாக இருக்க, ரம்பத்தை அங்குமிங்கும் அசைத்து இயக்கி அறுப்பு வேலை செய்யப்படுகிறது

swinging choke: (மின்.) அலையாட்டத் தூண்டுசுருள்: இது ஒரு வகைத் தூண்டு சுருள். இதில் கம்பிச் சுருளின் வழியே செல்லும் சராசரி மின்னோட்டத்திற்கேற்பத் தூண்டலும், தூண்டமும் மாறுபடுகிறது

switch : (மின்.) மின் விசை: மின் சுற்றுவழியை இணைக்கவும் முறிக்கவும் பயன்படும் சாதனம்

switch board: (மின்.) மின்விசைப் பலகை: பல மின் தொடர்பு இணைப்புகள் கொண்ட பலகை. பதில் மின்மானியும் பொருத்தப்பட்டிருக்கும்

switch box: (மின்.) மின்விசைப் பெட்டி: மின்விசை அமைப்பினைப் பாதுகாக்கவும், மின்னோட்டம் செல்லும் உறுப்புகள் ஒன்றையொன்று தொட்டு விடாமல் தடுக்கவும் பயன்படும் இரும்புப் பெட்டி

switch rotary: (மின்.) விசைச் சுழலி: சுழல்வினை மூலம் இயக்கப் படும் ஒரு விசை. பல சமயங்களில் பல விசைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டு ஒற்றைத் சுழல் தண்டு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது

swivel: (எந்.) சுழல் திருகு: ஒன்றின் மீது ஒன்று சுழலும்படி அமைந்த திருகு அமைப்பு

swivel joint: (கம்மி.) சுழல் மூட்டு: ஒன்றன் மீது ஒன்று சுழலும் படி அமைந்த பொருத்து

swivel vise: (பட்.) சுழல் குறடு: இது ஒரு மேசைக் குறடு. இது தான் பற்றியிருக்கும் பொருளைத் தேவை

swivel vise: (பட்.) சுழல் குறடு: படம் யான நிலைக்குக் கொண்டு வரும்

S_wrench: (எந்.) S-திருகுக்குறடு: S என்ற ஆங்கில எழுத்தின் வடிவிலுள்ள திருகுக்குறடு இது நிலையானதாக அல்லது தக்கவாறு அமைத்துக் கொள்ளத் தக்கதாக அமைந்திருக்கும்

sycamore : (மர.வே.) அத்தி மரம்: 46.மீ. உயரம் வளரக்கூடிய மிகப் பெரிய மரம். மிதமான அளவு கனமுடையது; இதனைப் பிளப்பது மிகக் கடினம், ஒரு கன அடியின் எடை சுமார் 8 கி.கி. இருக்கும். அழகான வரிகளுடையது, இளம் பழுப்பு நிறமுடையது. அறை கலன்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. விமானங்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது

symbol: சின்னம்: சுருக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படும் அடையாளக் குறியீடு

symbol : (மின்.) குறியீடு: ஒர் அலகினை அல்லது உறுப்பினைக் குறித்துக்காட்டும் எழுத்து அல்லது உறுப்பினைக் குறித்துக் காட்டும் எழுத்து அல்லது குழுஉக் குறி. எடுத்துக்காட்டு: 'X' என்ற எழுத்து எதிர்வினைப்பைக் குறிக்கிறது

symmetrical: செவ்வொழுங்கு: உறுப்புகள் இருபுடை ஒத்திசைவாக அமைந்திருத்தல்

sympathetic nervous system : (உட.) பரிவு நரம்பு மண்டலம் : முதுகந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டுப் பரவலாக அமைந்திருக்கும் பழுப்பு நிற நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது இந்த நரம்பு மண்டலத்தின் முக்கிய பணி. எடுத்துக்காட்டாக, அபாயம் நேரிடும்போதும் மனக்கிளர்ச்சி ஏற்படும் போதும் செயற்படத் தூண்டுவது இந்த நரம்பு மண்டலமேயாகும். தானியங்கும் நரம்பு மண்டலத்தின் இன்னொரு பகுதி துணைப்பரிவு நரம்பு மண்டலமாகும். உடலினைப் பேணி வருவதற்கும், அதன் எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இது உதவுகிறது

sympathetic pain : (நோயி .) பரிவு நோவு: தொடர்புணர்ச்சியால் ஏற்படும் நோவு

sympathetic resonance: (இயற்.) பரிவு ஒலியதிர்வு : வாயு நிலைத் தொடர்புறவு காரணமாக ஏற்படும் ஒலியதிர்வு

sympathetic sound : (இயற்.) பரிவு ஒலி : வாயு நிலைத் தொடர்புறவு காரணமாக உண்டாகும் ஒலி

symphysis : கூட்டினை வளர்ச்சி: இயற்பண்பு இதழ்களை ஒன்றாக ஒருங்கிணைத்து வ்ளர்த்தல். எடுத்துக் காட்டு : இளமஞ்சள் உருளைக் கிழங்கு

symphysis : (உட.) கூட்டுக்கனு: எலும்புகளை உடலின் மையக் கோட்டில் ஒன்றாக இணைத்தல்

sympiesometer: (இயற்.) அழுத்த வளியிணைவுப் பாரமானி : நீர்மத்துடன் இணைவாக அழுத்தமிக்க வாயுவும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வாயுமண்டல அழுத்த மானி

symptom : (நோயி ) நோய்க்குறி: நோயினை உணர்த்தும் அறிகுறிகள். நோயாளி தானே உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்ப நிலை, நாடித் துடிப்பு போன்றவை மருத்துவர் கருவிகள் மூலம் கண்டறியும் நோய்க் குறிகள்

symptomatology (sympto matics) : (நோயி.) நோய்க் குறியியல் : நோய்க்குறிகள் பற்றி ஆராயும் அறிவியல்

synaesthesia: பிறிது நுகர்வுணர்வு: நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் ஒருவகைக் கோளாறு

synchro: (மின்.) இணக்கமாற்றுப் பொறி : ஒரு சுழல் தண்டின் சாய்வு நிலையை எந்திரப் பிணைப்பு ஏதுவுமின்றி ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு மின்னியல் எந்திர சாதனம்

synchrotron: (மின்.) மின்விசைப் பெருக்கி : மின்ம விசைப் பெருக்க மூட்டப் பயன்படும் மின்காந்த விசை இணையமைவு

synchro-mesh : (தானி.) உந்து விசை மாற்றமைவு : உந்து ஊர்திகளில் விசை மாற்றுப் பற்சக்கர இடை உராய்வு அமைவு

synchronous motor : (மின்.) இணக்க மின்னோடி: மின் வழங்கும் மின்னோடியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் தனது வேகத்தை நிலையாகக் கொண்டிருக்கிற ஒரு மின்னோடி

synchronous vibrator : (மின்.) இணக்க அதிர்வி : ஒரு விசை எடுப்பு மின் சுற்றுவழியில் மின் சுமைவழியே ஒரே திசையில் மின்னோட்டம் பராமரிக்கப்படும் வகையில் கூடுதல் தொடுமுனைகளைக் கொண்டுள்ள ஓர் அதிர்வி

synchronization : ஒருங்கிசைவுறுத்தல் : தொலைக்காட்சியிலும் திரைப்படக் காட்சியிலும் ஒளியும் ஒலியும் ஒன்றி ஒருங்கிசைந்து இயங்கும்படி செய்தல்

synchroreceiver: (மின்.) இணக்க அலைவாங்கி : இது இணக்க மின் செலுத்தியைப் போன்றது. ஆனால், இது சமிக்ஞைகளை எந்திர இயக்கமாக மாற்றுகிறது

synchroscope : (மின்.) இணக்கங் காட்டி :' விளக்குகளின் மூலமாக இணக்குவிப்பதை அறுதியிடும் ஒரு கருவி. இணக்கச் சமிஞை வந்தால் மட்டுமே உண்டாகக் கூடிய மிகக்குறுகிய கால வீச்சினைக் கொண்ட ஓர் அலைப்புக் கருவி

synchro transmitter : (மின்.) இணக்க மின் செலுத்தி : ஒரு சுழலும் மின் கலத்தைக் கொண்ட ஒரு மின்மாற்றி. இது எந்திர உட்பாட்டினை மின்னியல் சமிக்ஞைகளாக மாற்றி அந்தச் சமிக்ஞைகளை அலை வாங்கிக்கு அனுப்புகிறது

synchrotron : மின்காந்த இணையமைவு : மின்மவிசைப் பெருக்க மூட்டப் பயன்படும் மின்காந்த விசை இணையமைவு

synchronous motor : (மின்.) இணக்க மின்னோடி : மின் வழங்கும் மின்னாக்கியின் வேகம் நிலையாக இருக்கும் வரையில் வேகம் நிலையிர்க் இருக்கும் மின்னோடி

syncline : (மண்.) மை வரை மடிவுப் படுகை : பாறை கீழ்முகமாக மடிந்திருத்தல்

sync pulse : (மின்.) இணக்கத் துடிப்பு : ஒர் ஊசலியை அல்லது மின்சுற்று வழியை இயங்கத் தூண்டும் இணக்கத் துடிப்பு

sync separator : (மின்.) இணக்கப் பிரிப்பான் : தொலைக்காட்சி சமிக்ஞையில் படத் தகவலிலிருந்து இணக்கத் துடிப்புகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் ஒரு குழல்

syndrome : (நோயி.) நோய்க் குறித்தொகுதி : ஒரு நோயைக் காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகுந்த உடல் ப்பம், தொண்டை வீக்கம், மெதுவான நாடித்துடிப்பு, அடிக்கடி ஏற்படும் மயக்கம் ஆகியவை இதயத்தின் மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலான தடுக்கிதழ் அடைப்பட்டிருப்பதைக் குறிக்கிறது

synthesis: செயற்கைப் பொருளாக்கம் : தனிமங்களிலிருந்து அல்லது தனிக்கூட்டுப் பொருட்களிலிருந்து ஒரு செயற்கைச் சேர்மப் பொருளை ஆக்குதல்

synthetic : (குழைம.) செயற்கைப் பொருள் : தனிமங்களிலிருந்து அல்லது எளிய கூட்டுப் பொருள்களிலிருந்து செயற்கையாகச் செய்யப்பட்ட வேதியியல் கூட்டுப் பொருள்

synthetic resin : (குழை.) செயற்கைப் பிசின்: வேதியியல் வினைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு குழைமக் (பிளாஸ்டிக்) கூட்டுப்பொருள். இது இயற்கைப் பிசின்களைப் போன்று இருப்பினும் வேதியியல் அமைப்பிலும் எதிர் வினைகளிலும் பெரிதும் வேறுபட்டிருக்கும்

syphilis : (நோயி.) கிரந்தி/மேகப்புண் : திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு முலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும், பெண்ணிலிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற்பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின் னர் இரத்த நாளங்கள், இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற் றையும் தாக்குகிறது. இது குழந்தைகளையும் பீடிக்கிறது

syringe : பீற்று மருந்தூசி : உடலில் விசைப் பீற்று மருந்து குத்திச் செலுத்துவதற்கான குழல் ஊசி.

system : (தானி.) கருவித்தொகுதி: ஒரே ஆக்கப்பண்புகளுடன் ஒருங்கிணைந்து இயங்கும் கருவிகளின் முழு மொத்தத் தொகுதி

systems engineering : (தானி.) கருவித் தொகுதிப் பொறியியல் : கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகளை வடிவமைக்கும் பொறியியல்
T

T.B.(tuberculosis) : (நோயி) டி. பி. (காசநோய்): எலும்புருக்கி நோய். இது உடம்பிலுள்ள பெரும்பாலான திசுக்களைக் கழலைப்புற்றுப் பாதிப்பதாலும், ஒரு தனிவகை நோய்க் கிருமி உருவாவதாலும் உண்டாகும் நோய்

T.N.T: டி.என்.டி : பெருவிசை வெடி மருந்து

tab : (வானூ.) கட்டுப்பாட்டுத் துணைப் பகுதி : கட்டுப்பாட்டு விசையைக் குறைக்க அல்லது விமானத்தைச் சமநிலப்படுத்துவதற்குக் கட்டுப்பாட்டுப் பரப்புடன் இணைக்கப்பட்ட துணைக் கட்டுப்பாட்டுப் பகுதி

tabernacle : (க.க.) தொழுகைத் தலம் : கிறிஸ்துவர்களின் சர்ச் அல்லது தொழுகைத் தலம்.

tabernacle : (க.க ) வழிபடுயறை : வழிபாட்டுக்கான உருவம் வைக்குமிடம்

taboret : (மர.வே.) சிறுமேசை : சிறிய முக்காலி அல்லது உயரம் குறைந்த மேஜை. பெரும்பாலும் தாவரங்கள், அலங்காரப் பொருட் கள் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுவது

tabular meter : (அச்சு) அட்டவணை மானி : பெரும்பாலும் கோக்கப்பட்ட எண்கள் பத்திகளாக அடுக்கப்பட்டவை

tabulate : பட்டியலிடு : பொருட்களை அல்லது தகவல்களை அட்டவணையாக அல்லது பட்டியலாக வகைப்படுத்து

tachometer : (பொறி) விசை மானி : தண்டுகளின் வேதத்தை ஒரு நிமிடத்துக்கு எத்தனை சுழற்சிகள் என்று காட்டும் கருவி

tackle: (எந்.) பாரந்தூக்கு கலன்: பளுமிக்க பொருட்களைக் கட்டித் தூக்குவதற்குப் பயன்படும் சங்கிலிக் கயிறு, கப்பி அல்லது பிளாக்குகள்

tack: (அச்சு.) பசைப்பு: அச்சு மையத்தில் அடங்கிய வார்னிஷ் சற்று கெட்டியாவதால் அச்சு மையில் ஏற்படும் பிசு பிசுப்பு

tack weld: (பற்.) பொருத்தானிப் பற்றாசு : ஓர் இணைப்புக் கருவியின் உறுப்புகளைத் தற்காலிகமாக ஒன்றாகப் பற்றிவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறிய பற்றாசு

taenia : (க.க.) தலைப்பட்டி: கிரேக்க டோரிக் பாணி கட்டடங்களில் தூண்கள் மேல் அமைந்த உத்தரத்துக்கும் அதற்கும் மேலே உள்ள சிறு சுவர்களுக்கும் நடுவில் அமைந்த தட்டையான பட்டை

tail : (வானூ.) விமான வால் : விமானத்தின் பின்புறப் பகுதி. பொதுவில் நிலைப்படுத்தும் பலகைகள் அல்லது துடுப்புகள் அடங்கியது. இவற்றுடன் விமானத்தின் தூக்கிகள், சுக்கான்கள் ஆகிய கட்டுப்படுத்தி பரப்புகள் இணைக்கப்பட்டிருக்கும்

tail beam or tail joist : (க.க.) வால் உத்தரம் : தலை உத்தரத்துடன் வந்து சேருகிற உத்தரம் tail boom : (வானூ) வால் தண்டு ;வால் பகுதிகளையும் பிரதான ஆதாரப் பிரிவுகளையும் இணைக்கிற தண்டு

tail heavy: (வானூ ) வால் இறக்கம் : (விமானம்) காற்றை விட எடை கூடிய விமானம் பறக்கும் போது நீளவாட்டு கட்டுப்பாடு விடுபடும்போது வால்புறம் கீழ்நிலையில் இருக்கும். அப்போது விமானி குறிப்பிட்ட உயரத்தி லேயே இருக்க விரும்பினால் கண்ட்ரோல் தடியை இயக்கியாக வேண்டும்

tailing : (க.க.) புடைப்புக்கல் : சுவரில் செருகப்பட்டு வெளியே துருத்தி நிற்கும் செங்கல் அல்லது கல்லின் பகுதி

tail joist (க.க.) வால் உத்தரம்: ஒரு முனை தலை உத்தரத்துடன் வந்து முடிகிற உத்தரம்

tailless airplane : (வானூ) வாலில்லா விமானம்: நிலைப்படுத்த பயன்படுத்தப்படுகிற பகுதிகள் இறக்கைக்குள்ளாகவே அமைக்கப்பட்ட விமானம்

tail light , (வானூ;பொறி.) வால் விளக்கு பின்புற விளக்கு: ஒவ்வொரு மோட்டார் வாகனத்திலும் பின்புறத்தில் சட்டப்படி அமைக் கப்பட வேண்டிய இரவில் பூட்டப் படுகையில் எரிய வேண்டிய சைகை விளக்கு

taipiece (அச்சு.) இறுதிப்பகுதி முத்தாய்ப்பு :: ஒரு நூலின் ஓர் அத்தியாயத்தின் முடிவில் அல்லது அச்சிடப்படுகிற குறி

tailpiece : ( கம்.) சாக்கடை வடி குழாய் : கழிவு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இணைக்கப்படும் 'T' வடிவ படிகுழாய்

tail pipe : உறிஞ்சு குழாய்

tail print : வால் அச்சு : அச்சுக் குள்ளிருந்து மாதிரி வடிவத்தை வெளியே எளிதில் எடுப்பதற்கான வகையில் மைய வடிவத்தில் அமைந்த பிடி, உள் அச்சு நன்கு அமைய, அதற்கு வசதி செய்வது

tail screw: வால் திருகாணி: கடைசல் (லேத) எந்திரத்தில் நிலைப்பிடிமானத்தின் தண்டை இயக்கச் செய்யும் திருகாணி

tail skid: (வானூ.) வால் சறுக்குக் கட்டை: தரையில் நிற்கிற விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கிற சறுக்குக் கட்டை

tail slide: (வானூ.) வால் சறுக்கு விமானம்: செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் வால், கீழ்நோக்கியதாக பின்புறம் கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை

tail spin: (வானூ) வானூர்தியின் கழல் கழுகுப் பாய்ச்சல்

tail stock: (எந்.) வால் பிடிமானம்; ஒரு கடைசல் எந்திரத்தில் ஒரு பொருளைப் பொருத்துவதில் ஒரு புறம் நிலையாக இருத்திய தலைப் பிடிமானம் இருக்கும். மற்றொரு புறத்தில் முன்னும் பின்னும் நகர்த்தக் கூடிய வால் பிடிமானம் இருக்கும்

tail stock spindle: (எந்.) நிலைப்பிடிமானத் தண்டு: கடைசல் எந்திரக் கடைசல் நிலைப் பிடிமானத்தில் செயலற்ற மையத்தைத் தூக்குகிற செருகு குழல் அல்லது தண்டு

tail surface: (வானூ) வால் பரப்பு: ஒரு விமானத்தின் வால் பகுதியில் உள்ள நிலைப்படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற பரப்பு tail unit: (வானூ) வால் தொகுதி: விமானத்தை நிலைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவ விமானத்தின் பின்புறத்தில் அமைந்த எல்லா பரப்புகளும் அதாவது நிலைப்படுத்தி, துடுப்பு, சுக்கான் தூக்கி, ஆகியவை அடங்கும்

tail wheel: (வானூ.) வால் சக்கரம்: தரையில் உள்ளபோது ஒரு விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கும் சக்கரம். அது திருப்பத்தக்கதாக அல்லது திருப்ப முடியாததாக, நிலையாக அல்லது சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம்

tain: வெண் மெல் தகடு: முகக் கண்ணாடியின் முகட்டுக் காப்புத் தகரம்

take: (அச்சு.) எழுத்துப் பகுதி: அச்சுக்தோப்பவர் எந்த ஒரு சமயத்திலும் வைத்திருக்கின்ற ஒரு வாசகத்தின் ஒரு பகுதி

take-off distance: (வானூ.) எழும்பு தொலைவு சுழி: நிலை வேகத்திலிருந்து கிளம்புகிற ஒரு விமானம், இறுதியாகத் தரையி லிருந்து அல்லது நீரிலிருந்து தொடர்பகன்று மேலே எழும்புவது வரையிலான தொலைவு. மேலெழும்பும் தொலைவு, காற்றமைதி அல்லது குறிப்பிட்ட காற்று வேக அடிப்படையில் கணக்கிடப்படுவது

take-off speed (வானூ) எழும்பு வேகம்: ஒரு விமானம் முற்றிலுமாக வானில் எழும்பிய நிலையில் உள்ள காற்று வேகம்

take-up.: (பட்.) இறுக்கமைவு: தேய்மானத்தால் அல்லது வேறு காரணங்களால் பகுதிகளில் ஏற்பட்ட தவிர்வைப் போக்குவதற்கான ஒரு கருவி

taking பp; (பட்.) சரிப்படுத்து: எந்திரம் போன்றவற்றில் தேய்மானத்துக்காகத் தகுந்தபடி பொருத்துதல் சம்பந்தப்பட்ட்து

talc: சவர்க்காரக்கல்: காகிதம், மசகுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாக்கல்

talc. (வன்) வண்ணச் சுண்ணம்: வண்ணங்களில் நிமிர்த்து பொருளாகப் பயன்படுத்தப்படும் நீரடங்கிய மக்னீசியம் அலுமினியம் சிலிக்கேட்

talo: வெளிமக் கன்மகி; மென் கல் பொடி:காகிதம், உய்வுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிற மென்கல்பொடி

tallow: கொழுப்பு விலங்கின் உருக்கிய நிணம்: விலங்குக்கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படுவது

tambour; ( க.க. ) கூரையிட்ட பாதை: கூரையுள்ள சிறிய மூடப் பட்ட நடைபாதை

tamo, japanese ash: (மர. வே.): ஜப்பானி தாமோ சாம்பல்: தாமோ, ஜப்பானில் சாம்பல் (மரவேலை) ஃபிராக்சிமஸ் மஞ்சூரியா. இப் பொருளானது, நிறத்திலும் தன்மையிலும் பெரும் வித்தியாசம் கொண்டது. இருக்கைச் சாதனங்கள், அறைத் தடுப்பு, அழகுச் சுவர் போன்று பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிறையப் பயன் படுத்தப்படுகிறது. தாமோ நேர்த்திப் பூச்சு மூலம் மரத்தின் கீற்றுப் பாணிகள் மிக எடுப்பாகத் தெரியும்

tamp; கெட்டித்தல்: வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச் சுரங்க வாயில் களிமண் திணித்து வைத்தல் tamping: (பொறி.) கெட்டித்தல்: சிறு கற்கள் போன்ற பொருள்களைப் பதித்து அடித்து கெட்டித்தல். ஒரு மாதிரிப் பாணியைச் சுற்றி மண்ணை வைத்துத் தட்டுதல்

tampion :(கம்.) கூம்பு அடைப்பான்: ஓர் ஈயக்குழாயின் வாய் முகப்பை அடைப்பதற்கான கூம்பு வடிவ மரக் கட்டை அடைப்பான்

tambark: பதனிடு பட்டை: ஒக் மரத்தின் பட்டை போன்று டானின் அடங்கிய மரத்தின் பட்டை. தோல் பதனிடப் பயன்படுத்திய பின்னர் ஓரளவில் எரிபொருளாகப் பயன்படுவது

tandem airplane: (வானூ.) அடுக்கு இறக்கை விமானம்: ஒரே மட்டத்தில் முன்னும் பின்னுமாக அமைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறக்கைகளைக் கொண்ட விமானம்

tang :முனை விளிம்பு: ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி

tangent தொடுகோடு: குறுக்காத வெட்டிச் செல்லாமல் ஒரு கோட்டை அல்லது பரப்பை ஒரு புள்ளியில் தொடுதல்-தொடுகோடு

tangent of an angle: (கணி) இருக்கை: ஒரு கோணத்துக்கு எதிரே உள்ள பக்கத்தை அருகில் உள்ள பக்கத்தால் வகுத்து வரும் ஈவு

tangible: தொட்டுணரத்தக்க: தெளிவாக உணர முடிகிற, உண்மையான

tank. (தானி.எந்.) தொட்டி: மோட்டார் வாகனம் ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்படும் தொட்டி

tannin or tannic acid: (வேதி) டானின் அல்லது டானிக் அமிலம்: பளபளப்பான சற்று மங்கலான மஞ்சள் ஒழுங்கற்ற பொடி (C14H1009) கால்நட், சுமாக், தேயிலை போன்றவற்றிலிருந்து பழுப்பான வெள்ளைப் பளபளப் புள்ள செதில் போன்ற வடிவில் கிடைப்பது, மருத்துவத்தில் இது உடல் திசுக்களை சுருங்க வைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

tantalum: (உலோ.) டாண்டாலம் (வெம்மம்): வெப்பத்தினாலும், திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாது வெள்ளை உலோகத் தனிமம், இது 'டாண்டாலைட்' என்றும் தாதுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இது பளபளப்பானது ; இதனைக் கம்பியாக நீட்டலாம். மின்விளக்குக் குமிழ்களிலும், வானொலிக் குழல்களிலும் இழைகளாக மிகுதியும் பயன்படுகிறது. இது கம்பியாகவும் சலாகையாகவும் விற்பனை செய்யப்படுகிறது

tantanium: (உலோ.) டான்டானியம்: டேன்டலைட்டிலிருந்து பெறப்படுகிற, அமிலத்தை எதிர்க்கும் தன்மையுள்ள, கம்பியாக இருக்கத்தக்க பளப்பளப்பான வெள்ளை நிற உலோகம். பெரிதும் மின் பல்புகளிலும் ரேடியோ குழல்களிலும் இழையாகப் பயன்படுவது, கம்பியாக, தண்டாக விற்கப்படுவது

tap: புரியாணி உள்வரி இழைப்புக் கருவி; புரியிடுதல்: புரிதண்டு கொண்டு புரிகளை அமைத்தல்.(எந்.) உள்ளிடைப் புரிகளை அமைப்பதற்கான புடைத்த புரிகளைக் கொண்ட கருவி, (கியர் வரை) ஒரு துளை யிடப்பட வேண்டுமென்பதற்கான குறியீடு

tap bolt: (எந்) புரியிடப்பட்ட தாழ்துளை: பொதுவில் முழு நீளத்துக்கும் புரியிடப்பட்ட தாழ், தலையின் அடிப்புறத்திலும் படியும் இடத்திலும் மட்டும் சீர் செய்யப்பட்டது. இந்தத் தாழ்களின் தலை சதுர அல்லது அறுகோண வடிவில் இருக்கும்

tape (பொறி.) அளவிடு பட்டை: லினன்.அல்லது பருத்தி அல்லது மெல்லிய உருக்கினால் செய்யப்பட்ட வளையத்தக்க அளவுச் சாதனம். பொதுவில் வட்ட வடிவ உறைக்குள் இருக்கும். பயன்பாட்டுக்குப்பின் மீண்டும் சுருட்டி உள்ளே அடக்கி விடலாம்

taper: (எந்) குவிந்தமைதல்: படிப்படியாக, சீராக அள்வு குறுகிக் கொண்டு வருதல், குவிந்த குழிவு. குவிந்த தண்டு, குவிந்த நடுத்தண்டு என்பது போல

tap recorder:(மின்) நாடா ஒலிப்பதிவுக் கருவி: இது ஒரு மின்ணுவியல் ஒலிப்பதிவுக் கருவி. இதில் ஒலிச் சமிக்ஞைகள், மின்னியல் சமிக்ஞைகளாக மாற்றப்படு கின்றன. இந்த மின்னியல் சமிக்ஞைகள், ஒரு தனிவகை நாடாவில் ஒரு காந்தத்தோரணியாகப் பதிவாகின்றன

taper angle: (உலோ.) கூர்ங் கோணம்: நுணிநோக்கிச் சிறுத்துச் செல்கிற பரப்பளவுகளுக்கிடையிலான உள்ளடக்குக் கோணம்

taper attachement: (எந்.) குவிய இணைப்பு: குலிந்து அமையும் வகையில் கடைவதற்கு ஒரு லேத்தில் பொருத்துவதற்கான சாதனம். அளவுக்குத் தக்கபடி இதில் மாற்றம் செய்ய இயலும்

tapared-shank drill: (எந்.) குவியத் தண்டுக் குடைவி: குவிந்து செல்லும் நடுத்தாங்கி கெர்ண்ட், சாதாரண குடைவுச் சுழல்வியில் அல்லது குழியில் பயன்படுத்தப்படுகிற, திரும்புகிற அல்லது அப்படி அல்லாத குடைவி

tapered spindle: (எந்) குவியத் தண்டு: குவியத்தண்டு வேலைக் கருவி அல்லது தண்டைப் பொருத்தும் வகையில் ஒரு புறத்தில் உள் பகுதியில் குவிந்து அமைந்த துளை உள்ள தண்டு

taper gauge: (எந்.) குவியளவு மானி: உள்ளே அல்லது வெளியே எந்த அளவுக்கு குவிந்து அமைந்துள்ளது என்பதை துல்லியமாக அளக்கும் கருவி

taper per ft (எந்) அடி வீதம் குவிதல்: குவிந்தமைவது எந்த அளவில் உள்ளதை வெளிப்படுத்தும் முறை, அதாவது ஜார்னோ குவிவு (அல்லது குவியம்) அடிக்கு .6" பிரவுன் மற்றும் ஷார்ப் குவிவு அடிக்கு .5" பத்து மட்டும் வராது

taper pin: (எந்:பொறி.) குவிய ஆணி: உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட் டது. எண் 1 என்பது அகலப் பகுதியில் 396 செ.மீ.குறுக்களவும் 2 முதல் 2.54செ.மீ. நீளமும் கொண்டது. எண் 10 என்பது அகலப்பகுதியில் 1.8செ.மீ. குறுக்களவும் 3.8 முதல் 15.செ.மீ. நீளமும் கொண்டது

taper-pin drills: (உலோ.வே) குவிய ஆணிதுளை கருவி: 30செ.மீக்கு .6.செ.மீ. வீதம் குவிந்து அமைந்த, பல் போன்ற கூரான விளிம்புகளைக் கொண்ட துளையிடு கருவி. கட்டி உலோகத்திலி ருந்தான குவிய ஆணிகளை செருகுவதற்கான துளைகளைப் போடவல்லது

taper reamer :(எந்) குவியத் துளை துருவி: குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை போடப் பயன்படுவது

taper tap: குவிய புரியிடு கருவி: நீளவாட்டில் குவிந்து அமைந்த புரியிடும் கருவி, துளையிடப்பட்ட பின் துளையில் திருகு புரியிடுவதற்கு எளிதில் உதவுவது

taper turning: (எந்.) குவியக் கடைசல்: கடைசல் எந்திரத்தில் நிலைப்பிடிமானத்தைப் பொருத்தாமல் அல்லது குவிய இணைப்பைப் பொருத்திக் கடைவது

tap drill: (உலோ) துளைத் துரப் பணம்: உலோகத்தில் துளையிடுவ தற்குப் பயன்படும் துரப்பணம்

tap, hob, sellers: (எந்.) நீண்ட புரியிடு கருவி: இதில் நீள் வாட்டில் ம்த்திய பகுதியில் மட்டும் புரி இருக்கும். அத்துடன் பல குழிவு கள் இருக்கும். அச்சுகளில் மற்றும் கடைசல் எந்திர புரியிடு கருவிகளில் புரி போடுவதற்கு அது பயன்படுகிறது

tapestry: அலங்கார திரைத் சீலை: தொங்கவிடுவதற்கும், இருக்கைகளின் பரப்பு மீது பொருத்துவதற் குமான அலங்கார சித்திரவேலைப் பாடு அமைந்த துணி

tap hole: (வார் ) வடி துளை:

உலோகத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் குழிவு வாண லியின் புடைப்பில் உள்ள துளை. உருகிய உலோகம். இதன் வழியே பெறப்படும்

taping: நாடாப்பதிவு: ஒரு காந்த நாடாவின் அல்லது துளையிட்ட நாடாவின் செயல்முறைகளை அல்லது விளைவுகளை பதிவு செய்யும் முறை

tapped face plate: (பட்.) புரியிட்ட முகத் தகடு: ஒரு முகப்புத் தகட்டில் துளைகளுக்குப் பதில் அல்லது காற்றுடன் சேர்த்து புரியிட்ட துளைகள் இருக்கும்

tapper tap: (எந்.) புரி எந்திர புரி தண்டு: புரியிடும் எந்திரங்களின் நட்டுகளில் புரியிடுவதற்கான விசேஷ புரிதண்டு

tappet: (தானி.) டாப்பெட்: புடைச் சக்கரத்துக்கும் வால்வுக்கும் இடையே முன்னும் பின்னுமாக இயங்கும் பகுதி

tappet valve: (தானி.) தட்டியக்கப் பிதுக்கத் தடுக்கிதழ்: வட்டுத் தலையுடன் கூடிய தடுக்கிதழிலிருந்து ஒரு தண்டு நீண்டு செயல்வியாக இருக்கும். உள் எரி என்ஜினில் பொதுவில் பயன்படுகிறது

tapping: (உலோ.வே.) புரியிடுதல்: கையால் அல்லது எந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு புரிதண்டு மூலம் ஒரு துளையினுள் புரிகளைப் போடுதல்

tapping bar: (வார்.) வடிதண்டு: (வார்ப்பு) 2 முதல்3செ.மீ.அங்குல குறுக்களவும், முதல் 3மீ. நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் திறப்பதற்குப் பயன்படுவது

tap remover: (பட்.) புரிதண்டு அகற்றி; துளைக்குள் உடைந்த புரிதண்டை வெளியே திருகி எடுப்பதற்கு அதைப் பற்றிக் கொள்வதற்கான கருவி tap splice: (மின்.)டேப் பிணைப்பு: காண்க கிளை இணைப்பு

tap wrench: (எந்.) புரிதண்டு பிடி கருவி: துளைகளில் புரியிடு கையில் புரிதண்டை கெட்டியாகப் பற்றிக் கொண்டு இயங்குவதற்கான இரட்டைப்பிடி நெம்பு கோல்

tarnish : மங்கு : மினுமினுப்பு இழப்பு மங்கலாகுதல்

tar: (வண்.) கீல் (கரி எண்ணெய்): மரம், தூள் நிலக்கரி, நிலக்கரி, மென்களிக்கல் போன்ற தாவர அல்லது கனிமப் பொருள்களை வாலை வடித்தல் மூலம் எஞ்சு பொருளாகக் கிடைக்கும் கெட்டியான, பழுப்பு அல்லது கறுப்புநிற திரவம்

tar-paulin: கருங்கித்தான் : கான்வாசினால் ஆன நீர் புகாத கெட்டியான போர்வை

tapping machines (பட்.) புரியிடு எந்திரம்: சிறு உறுப்புகளில் உற்பத்திப் பணிகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற ஒரு எந்திரம், ஒரு துளையில் புரியிட முன்புற இலக்கமும் பின்னர் வெளியே எடுக்க எதிராகச் சுற்றும் இலக்கமும் கொண்டது

taste-bud : (உட.) சுவை அரும்பு; நாக்கிலுள்ள சுவை நரம்பின் நுனியின் தனிவகை உயிரணுக்கள் உள்ளன. இந்தத் தனிவகை உயிரணுக்களும் நரம்பு முனைகளும் ஒன்றாகச் சேர்ந்து கவை அரும்புகளாக அமைந்துள்ளன

taut : விறைப்பு : விறைப்பாக நன்கு இழுக்கப்பட்ட தொய்வு இல்லாமல் ஒரு கயிறு விறைப்பாக இழுக்கப்பட்டது போல்

tawing :பதனிடுதல் : படிக்காரம் அல்லது உப்பைக் கொண்டு தோலைப் பதனிடுதல்

taxi : (வானூ.) தரை கடலில் ஓடும் விமானம் : சொந்த இயங்கு திறன் கொண்டு ஒரு விமானத்தைத் தரையில் ஓடச்செய்தல். கடல் விமானத்தை நீரின் மீது ஓடச் செய்தல்

taxi - meter : (எந்.) உந்து வேகமானி : ஒரு வாடகை வண்டி ஓடிய தூரத்தை அளவிடும் கருவி. வாடகையைக் கணக்கிடுவதற்குமான கருவி

taxi - way : (வானூ ) விமான நகரு பாதை : விமானம் இறங்கு தளத்தில், தரையிறங்கும் வட்டாரத்திலிருந்து அல்லது அந்த வட்டாரத்துக்கு விமானம் ஓடுவதற்கென சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தரை

T bolt : (எந்.) 'T' வடிவ செருகு ஊசி : ஆங்கில 'T' எழுத்து போன்ற வடிவம் கொண்ட போல்ட். அதன் தலைப்பகுதியானது கடைசல் எந்திர அல்லது இழைப்பு எந்திர மேடை போன்ற வற்றின் T துளைகளில் படிமானமாகப் பொருத்துவது

teak : (மர.வே.) தேக்கு : கிழக்கு இந்தியாவில் காணப்படுகிற பெரிய வடிவிலான மரம். இதன் மரக்கட்டை மிக நீடித்து உழைக்கக் கூடியது. கப்பல் கட்டுமானத்துக்கும் இருக்கைச் சாதனங்கள் செய்யவும் மிகவும் விரும்பப்படுவது

tears :கிழிதல் : தொலைக்காட்சித் திரையில் ஓசை காரணமாக கிடைமட்டமாக ஏற்படுகிற பாதிப்பு, படம் கிழிவது போன்று தோன்றும்

technical : தொழில் நுட்பம் : குறிப்பிட்டதொரு கலை அறிவியல் பிரிவு, வேலை, தொழில் போன்றவை தொடர்பான தொழில்நுட்பப்பள்ளி, தொழில் நுட்பச் சொல் போன்றது

technical director : தொழில்நுட்ப இயக்குநர் : ஒரு ஸ்டுடியோவில் தொழில்நுட்பக் கருவிகள், ஊழியர்களை மேற்பார்வையிடுபவர்

technicolour: திரைப்பட வண்ணம்: திரைப்படத் துறையில் வண்ண ஒளிப்பட நுட்பமுறை

telekinesis : சேய்மை இயக்கு திறம்: தொடர்பின்றியே தொலைவிலுள்ள பொருளை இயக்கும் அருந்திறம்

telemechanics: வானிலை இயக்கு திறல் :தொலைவிலுள்ள எந்திரங்களை வான் அலையாற்றல் மூலம் இயங்கச் செய்யும் கலை

technology: தொழில் நுட்பவியல்: தொழில் துறைக் கலைகள் சம்பந்தப்பட்ட அறிவியல் துறை

tee :இணைப்பி: (குழாய்.) வெவ்வேறு குறிக்களவுள்ள குழாய்களைப் பொருத்துவதற்கான இணைப்பி அல்லது குழாயின் ஒட்டத் திசையை மாற்றுவதற்கான இணைப்பி. மாட்டுத் தலை இணைப்பியல் நுழைவாயைவிடத் திறப்பு வாய் பெரிதாக இருக்கும். நேர் இணைப்பியல் இரு வாய்களும் சம அளவில் இருக்கும்

telecast :_தொலைக்காட்சி ஒளி பரப்பு : தொலைக்காட்சி ஒளிபரப்பு

telecommunication : தொலைத்தொடர்பு: தொலைப் போக்குவரத்து, தந்தி, கடலடி வடக்கம்பி, கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச் செய்தி அறிவிப்பு முறை

telecon : வானொலித் தொலை முறை அமைவு : வானொலி-தந்தி வட- இணைப்பு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக் காட்டுவதன் மூலம் பலர் ஒருங்கு கூடி கலந்தாய்வு செய்ய விழிகோலும் அமைவு

telegraph : (மின்) தந்தி: கம்பி வழியே செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான சாதனம். இதன் வழியே எழுத்துகளைக் குறிக்கின்ற வகையிலான மின் சிக்னல்கள் அனுப்பப்படும்

telegraph - key: தந்தி மின்னோட்ட இயக்கமைவு: தந்தித் துறையில் மின்னோட்டத்தைப் பாய்ச்சவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு

telekinema:திரைக்காட்சி: தொலைக்காட்சி மூலம் திரைப் படங்கள் காட்டும் திரைக்காட்சி

telemeter : தொலைவுமானி : நில அளவையிலும் பீரங்கி சுடும் பயிற்சியிலும் தொலைவைக் கணிப்பதற்கான கருவி

telemeter : தொலைக் கணிப்பியல் :

telephone : (மின்) தொலைபேசி: குரலை நீண்ட தொலைவுகளுக்கு மின் சிக்னல் வடிவில் அனுப்புவதற்கான சாதனம்

telephone drop:(மின்.) தொலைபேசி விழுதுண்டு: தொலைபேசி சுவிட்ச் பலகையில் கவன ஈர்ப்புத் துண்டுகளில் ஒன்று கீழே விழும் போது தொலைபேசி தொடர்பாளியின் கவனம் ஈர்க்கப் பட்டு ஒருவர் தொடர்பு கோருகிறார் என்பதை அறிந்து கொள்வார்

telephone exchange : (மின்.) தொலைபேசி இணைப்பகம் : ஒரு பிரிவுக்குள் தொலைபேசி வைத்திருப்போர் இடையிலும், பிற இணைப்பகங் கள் மூலம் தொலைபேசி கட்டமைப்புக்குள்ளான வேறு ஒரு தொலைபேசியுடனும் இணைப்புகளை அளிக்க சுவிட்ச் பலகைகளைக் கொண்ட மத்திய அமைப்பு

telephone hook switch : தொலைபேசி கொக்கிவிசைக் குமிழ்: தொலைபேசியில் ரிசீவரின் எடை காரணமாகச் செயல்படுகின்ற பிரி நிலை நெம்புகோலினால் கட்டுப் படுத்தப்படும் சுவிட்ச். தொலை பேசி மணி அடிப்பதுமற்றும் பேசு வதற்கான சர்க்கிலும் செயல்படுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுவது

telephony: தொலைபேசி இயக்கம்: ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசிகள் தொகுப்பின் இயக்கம்

telephoto : (மின்) தொலை ஒளிப்படம் : தொலை நோக்காடியுடன் ஒளிப்படக் கருவியை இணைத்து ஒளிப்படம் எடுக்கும் முறை

telephoto lens ; தொலைநோக்கி லென்ஸ்: மிகத் தொலைவில் உள் ள பொருட்களின் மிகப் பெரிய காட்சிகளை அளிப்பதற்காகப் பயன்படும் மிகக் குறுகிய கோணமுள்ள லென்ஸ்

teleprinter : (அச்சு) தொலை அச்சடிப்பான் : தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் தந்தி முறையில் தட்டச்சடிக்கும் பொறி

telescope : (இயற்.) தொலைநோக்கி : தொலைவில் உள்ள பொருளின் தெளிவான, பெரிய காட்சியைப் பெறுவதற்காகப் பயன்படும் பார்வைக் கருவி

telescoping gauge:(உலோ ) தொலைநோக்கி அளவுக் கருவி :துளைகளின் உட்புற விட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி. இதில் அளவிடு கருவி துளையினுள் செருகப்பட்டு இயன்றவரை உச்ச அளவுக்கு விரிவடைய அனுமதிக்கப் படுகிறது. பின்னர் அளவிடு கருவியைப் பூட்டிவெளியே.எடுத்து ஒரு நுண்ணளவைமானி மூலம் விட்டம் அளவிடப்படுகிறது

teletherapy: (மருந்) கதிரியக்க மருத்துவம்: புற்று நோய் முதலிய வற்றில் உடலில் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் (x-rays) குணப்படுத்தும் முறை

teletype : (மின்.) தொலைத் தட்டச்சு : சாதாரண மொழியைக் குழுஉக் குறிகளைச் சாதாரண மொழியாகவும் தட்டச்சு செய்து தரும் ஓர் எந்திரம். இது ஒரு தட்டச்சுப் பொறி போன்றே அமைப்புடையது

television: தொலைக்காட்சி: தொலைவில் நடப்பதைக் காணும் சாதனம்.ஒரு காட்சியை வரியிடு முறையின்படி சிறு சிறு துணுக்கு களாகப் பிரித்து எண்ணற்ற நுண்ணிய மின் சைகைகளாக் மாற்றி அனுப்பும் ஒரு வகை தகவல் தொடர்புச் சாதனம். பெறப்படும் மின் சைன்ககள் மறுபடி ஒளி-நிழல் துணுக்குகளாக மாற்றப்படும் போது தொலைக்காட்சித் திரையில் ஆரம்பத்தில் படமாக்கப்பட அசல் காட்சியாகத் தெரிகிறது

television camera tube : தொலைக்காட்சி படக் குழாய் : ஒரு காட்சியில் ஒளி நிழல் பகுதிகளை மின் குறிகளாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்னணுக் குழாய்

television channel : (மின்) தொலைக்காட்சி அலைவரிசை : படங்களையும் ஒலித் தகவல்களையும் ஒளிப்பரப்புவதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் வரிசை

telltale: (எந் ) நிகழ்ச்சிப் பதிவீட்டுக் கருவி : எந்திரம் அல்லது வேலையின் ஒரு பகுதி மீது இணைக்கப்பட்ட தற்காலிகக் கருவி குறிப்பிட்ட வேலை செய்து முடிக்கப்பட வேண்டும் என்பது போன்ற தகவலை பணியாளருக்குத் தெரிவிக்கும் நோக்கம் கொண்டது

tellurium: டெல்லூரியம்(மண்மம்): எளிதில் உடைய, அரிய வெண்ணிற உலோகத் தனிமம். துத்த நாகத்தைத் தூய்மைப்படுத்துதற்கும், ஈயத்துடன் சேர்த்து உலோகக்கலவை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

telpher line: தொங்கு இருப்பூர்தி: தொங்கு இருப்பூர்தி இங்கே காணும் ஒற்றைத் தண்டவாளத்தில் ஓடும் சக்கர ஆதாரத்தில் தொங்கியவாறு மின்விசையால் இயங்குகிற சரக்கு இருப்பூர்தி

temper : (உலோ.) செம்பதமாக்கல்: எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீட்டிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குப் பக்குவப்படுத்துதல்

temperament : (உள.) மனப்பாங்கு: மனிதனின் உணர்ச்சி,செயல்களுக்கு அடிப்படையாக இயல்பில் அமைந்த உடல்நிலைப் பாங்கு; உளப்பாங்கு. இது ஆவனது நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் ஆகியவற்றினால் உண்டாகிறது

temperature : (இயற்) வெப்பநிலை : ஒரு பொருள் பெற்றுள்ள வெப்பத்தின் அளவு

tempering : குவியமாகு : வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்குக் கடினத்தன் மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை. கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் சூடேற்றி அதை எண்ணெய் அல்லது நீரில் அமிழ்த்தி எடுத்து நிறத்தைச் சோதித்தபின் இறுதியாக அமிழ்த்துவர். விசேஷ உருக்குகள் வெப்பப் பக்குவ முறையில் கடினமாக்கப்படுகின்றன

tempering Sand : (வார்) மணல் பதமாக்கு: அச்சுகளைத் தயாரிப்பபதற்காக வார்ப்பட மணலுடன் நீரைச் சேர்த்துத் தகுந்த ஈரப்பதத்தை அளித்தல்

template : (எந்) வடிவத்தகடு: தற்காலிகமான வடிவக் குறிப்பு அல்லது மாடல். இதைப் பயன்படுத்தி வேலை வடிவம் குறிக்கப்படுகிறது. அல்லது செய்த வேலையின் வடிவம் சரியா என்று இதைப் பயன்படுத்தி சோதிக்கப்படுகிறது

temple or tenter hook: குறுக்குக் கழி : கையால் நெசவு செய்யும் துணி ஒரே சீரான அகலத்தில் இருக்கும் வகையில் துணியை விறைப்பாக இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் சாதனம் tenacity : கெட்டிமை : கிழித் தெறிய முற்படுகிற விசைகளை எதிர்த்து நிற்க ஒரு பொருளுக்கு உள்ள தன்மை

tenom :(மர.வே.) நாக்கு :இரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு, இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருத்தும், இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும்

tenon saw ; (மர.வே.) முதுகு ரம்பம் : வேலை மேடைமீது மரத் தொழிலாளர் பயன்படுத்துகிற முதுகுப்புறத்தில் கெட்டிப் பட்டையுள்ள சாதாரண முதுகு ரம்பம்

tensile : (பொறி.) இழு தன்மையுடைய : எளிதில் அறுத்துவிடாமல் நீளமாக இழுக்கத்தக்க, நீட்டத்தக்க,இழுதிறன் கொண்டது

tensile strain : (பொறி) விறைப்பாற்றல் : நீளவாட்டில் இழுத்தல் அல்லது நீட்டுதல் நிலையில் ஏற்படும் எதிர்ப்பு, நசுக்குவதற்கு நேர்மாறானது

tensile strength : (பொறி) இழு தாங்கு வலிமை : இழுக்கும் விசையை எதிர்த்து நிற்க ஒரு உலோகக் கட்டைஅல்லது பொருளுக்குத் தேவையான வலிமை. (இயற்) பிய்த்துக் கொள்ளும்வரை ஒரு பகுதி தாங்கி நிற்கிற, நேரடியாக செலுத்தப்படுகிற இழுவிசை, இது ஒரு சதுர அங்குல குறுக்குப் பரப்புள்ள தண்டை உடைப்பதற்குத் தேவையான இவ்வளவு பவுண்ட் விசை என எண்களில் அளிக்கப்படுகிறது

tensile stress : (பொறி) இழுப்புத் தாங்கு விசை :ஒரு தண்டு அல்லது ஒரு பொருள் இழுப்புக்குள்ளாகும் போது அதை எதிர்த்துத் தாங்கி நிற்பதற்காகத் தோன்றும் விசை

tension : இழுவிசை : இழுக்கின்ற அழுத்தலுக்கு நேர் எதிரானது

tension spring: (எந்) இழுப்பு விசை சுருள் வில்: இழுப்பு விசையின் கீழ் செயல் படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட விசை திருகு சுருள்வில்

terminal : (க.க) முடிவிடம்: சுழல் படிக்கட்டு தாங்கு தூண் அல்லது தாங்கு தூணின் பூச்சு, (மின்) மின் சாதனம் ஒன்றுக்கும் வெளி சர்க்கியூட்டுக்கும் இடையிலான இணைப்பு நிலை

termite:(உயி.) கறையான்(செல்): இது எறும்புபோல் தோற்றமுடைய 'வெள்ளை எறும்பு.' இது மரங்களை அழிக்கிறது. இது பெரிய அளவில் கடினமான மண் புற்றுகளை உருவாக்குகிறது

term of patent : காப்புரிமைக் காலம் : ஒருவருடைய காப்புரிமைக்கு முழுப் பாதுகாப்புக் காலம். இது நீட்டிப்பு எதுவும் இன்றி புதினேழு ஆண்டுகள் தொடங்கும்

ternary alloy : (உலோ) மூவுலோகக் கலவை : மூன்று வேறு பட்ட உலோகங்கள் அடங்கிய ஒரு இக்கலான உலோகக் கலவை

ternary steel : (உலோ) உருக்கு உலோகம் : இரும்பு, கார்பன், மற்றும் ஏதேனும் ஒரு விசேஷத் தனிமம் கலந்த எல்லா வகையான கலோக உருக்குகளுக்குமான பொதுப் பெயர்

terneplate (உலோ) மட்டத் தகரம் : காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள் terra Cotta :சுட்ட களி: கட்டடங்களின் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற சுட்ட களி

terrazzo flooring : கல்துண்டுத் தரை : கருங்கல் துண்டுகளும் சிமென்டும் கலந்து பரவியது போன்று மெருகு ஏற்றப்பட்ட தரை, சிமென்டில் பல் வண்ணக் கல் துண்டுகளைப் பதித்து பாவிய தரை

tertiary colour : மூன்றாம் வகை வண்ணம்: ஆரஞ்சு, பச்சை, ஊதா போன்ற இரண்டாவது வகை வண்ணங்களை இரண்டிரண்டாகக் கலப்பதன் மூலம் பெறப்படும் ஒரு வண்ணம். இதன்மூலம் ஆலிவ், எலுமிச்சை. சிவந்த பழுப்பு வண்ணங்கள் பெறப்படும்

terylerie : (வேதி.) டெரிலீன் : ஒருவகைச் செயற்கை நூல்வகை. எத்திலீன் கிளைக்கோல், டெரப்தாலிக் அமிலம் போன்ற வேதியியல் பொருட்களானது. இது மிக வலிமை வாய்ந்தது; எளிதில் சலவை செய்யக் கூடியது. வெயிலாலும், வெண்ணிராலும் பாதிப்புக் குள்ளாகாதது

tessera : (க.க.) பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளம்: மொசைக் தாழ்வாரம், நடைகள் ஆகியவற்றை அமைக்கப் பயன்படுகிற சிறிய சதுர வடிவிலான கல் அல்லது ஓடு

test bar : (வார்.) சோதனைக் கட்டை: பழுப்பு வார்ப்பு இரும்புத் துண்டை வைத்து சோதனை.அதன் குறுக்கு வாட்டு வலிமை, உடையும் தன்மை, சுருங்கும் தன்மை, குளிர்வடையும் தன்மை, கெட்டித் தன்மை ஆகியவை சோதிக்கப்படும். சோதனைக்கான அத்துண்டுகள் பொதுவில் 3.8செ. மீ. குறுக்களவும் 38செ.மீ. நீளமும் உடையவை

test bench : (தானி. மின்.) சோதனை மேடை: தானியங்கி மின் சாதனங்களை சோதிப்பதற்குப் பல்வேறு கருவிகள் மற்றும் அளவு மானிகள் இணைக்கப்பட்ட ஒரு பெஞ்சு அல்லது மேஜை

tester :கட்டில் மேற்கட்டு : படுக்கைக்கு மேல் படுக்கைக் கால்கள் தாங்கி நிற்கிற விதானம்

testing : (எந்.) சோதித்தல் : எந்திரக் கருவிகள் அல்லது மின் சாதனம் வேலைக்கான நிலையில் உள்ளனவா என்று கண்டறிவதற்கான ஒரு முறை

testing machine : (பொறி.) சோதிப்பு எந்திரம் : ஒரு பொருளின் உறுதி மற்றும் இழுவைத் தன்மையை சோதிப்பதற்கான ஒரு எந்திரம்

testing set (மின்) சோதனை தொகுப்பு : வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள் அல்லது சாதனங்கள்

test lamp : (மின்) சோதனை விளக்கு : நன்கு காப்பிடப்பட்ட பொருத்திக்குள் அமைந்த சாதாரண மின் பல்பு

test pattern : சோதனைப் பாணி: பல கோடுகள், வளையங்கள் முதலியவை அடங்கிய ஒரு வரைடக் கருவியை சோதித்து சரிப்படுத்துவதற்காக அனுப்பப்படுவது. அனுப்பு கருவியை சோதிப்பதற்குப் பயனாவது

test-tube : சோதனைக் குழாய் : வேதியியல் ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் அடிப்பகுதி மூடியுள்ள குழல் வடிவக் கண்ணாடிக்கலம்

test-tube baby : சோனைக் குழாய்க் குழந்தை: செயற்கைக் கருவூட்டுமுறை மூலம் பிறந்த குழந்தை

tetany : (நோயி..) முறை ஈரப்பிசிவு நோய் : உடலின் ஒரு சிறு பகுதியில், அதாவது, கைகள், பாதம், குரல்வளை போன்றவற்றில், இரத்தத்தில் கால்சிய அயனிகள் (அயனி யாக்கிய கால்சியம்) இல்லாததன் காரணமாகத் தசைகள் சுருங்கி விடுவதால் உண்டாகும் நோய்

tetraethyl lead : (வேதி) டெட்ரா எத்தில் காரீயம் : நச்சுத்தன்மையுள்ள எளிதில் ஆவியாகிற திரவம். என்ஜினில் கோட்டி இலக்கத்தைக் குறைப்பதற்கும் பெட்ரோலுடன் சிறிதளவு சேர்க்கப்படுவது

tetrode : (மின்.) நான் முனையம் : எதிர்முனை, தகட்டுக் கட்டுப் பாட்டுவலை, திரைவலை உட்பட நான்கு முனையங்களையுடைய ஒர் எலெக்ட்ரான் குழல்

tetrode transistor : (மின்) நான் முனைய மின் பெருக்கி: நான் மின் முனையங்களைக் கொண்ட ஒரு மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்)

text : (அச்சு.) வாசகம் : ஒரு நூலில் அல்லது அச்சிடப்பட்ட வேறு ஏதேனும் ஒன்றில் அடங்கிய வாசகம்

taxt type : (அச்சு.) வாசக எழுத்து அலகு வகை : அச்சிடப்பட்ட எழுத்துக்களின் வடிவளவைக் குறிக்கின்ற அலகு

thawing : (குளி.பத.) உருகியக்கம் : பனிக்கட்டியைக் கூடுதலாக வெப்பமூட்டுதல் மூலம் உருகி நீராக மாற்றுதல்

T-head engine : (தானி) T தலை என்ஜின்: T என்னும் எழுத்து போன்ற வடிவமைப்பு கொண்ட மோட்டார் பிளாக்கின் குறுக்கு வெட்டுப் பகுதி வால்வுகள் என்ஜினில் இரு புறங்களிலும் அமைந்திருக்கும்.எனவே ஒரு கேம் ஷாப்டுகள் இரு கேம் ஷாப்ட் டிரைவ் கீர்கள் தேவை. விலையுயர்ந்த கட்டுமானம்.

theorem : தேற்றம்: எண்பிக்கத் தக்க ஓர் உண்மை நிரூபிக்கப்பட வேண்டிய ஒரு கூற்று

theoretical : கொள்கையளவில்: ஒரு கருத்துக் கோட்பாடு தொடர்பான அல்லது அளவுச் சார்ந்தன; அனுமான; கற்பிதமான

theory : கோட்பாடு : ஒன்றுக் கொன்று மிக நெருங்கிய தொட்ர் புள்ள கவனிப்புகள் அல்லது தோற்றங்கள் பலவற்றை விளக்கும் முயற்சி

therapeutic : (நோய்) நோய் நீக்க வியல் ; நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலை

therlo : (உலோ.) தெர்லோ : தாமிரம், அலுமினியம், மாங்கனிஸ் ஆகியவை அடங்கிய கலோகம்

thermal agitation : (மின்.) வெப்பக் கிளர்ச்சி : ஒரு மின்சுற்று வழியில் எலெக்ட்ரான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசைவதால் உண்டாகும் ஓசை

thermal conductivity : (பற்.) வெப்பக் கடத்து திறன்: (பற்ற வைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன். அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறு வதற்கு முந்தைய நிலை. தேர்ந்தெடுக்கப் பட்ட வெப்ப ஊது குழல் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் thermal efficiency : (தானி) வெப்பத் திறம்பாடு: ஓர் எஞ்சினின் விசை உற்பத்தி அளவுக்கும், விசை உற்பத்தி செய்யப்பயன்படுத் தப்படும் எரிபொருளிலுள்ள ஆற்றலுக்கு மிடையிலான தொடர்பு

thermal heating : வெப்பச் சூடாக்கம் : வாயுமண்டலத்தின் வழியாக ஒலியினும் வேகமாகப் பயணம் செய்யும்போது உண்டாகும் வளி இயக்க வெப்பம்

thermal jet engine : (வானூ) வெப்ப ஜெட் என்ஜின் : பின்புறமான பீச்சுக்கு வாயுக்களை விரிவாக்க வெப்பத்தைப் பயன்படுத்தும் ஒரு ஜெட் ஏன்ஜின். இது விமான ஜெட் என்ஜினின் வழக்கமான வடிவம்

thermal reaction : (குழை) வெப்ப விளைவு : திடவடிவைப் பெறுகையில் வேதியியல் விளைவால் பிளாஸ்டிக்கில் தோன்றும் வெப்பம்

thermal runaway : (மின்) மீள்விளைவு வெப்ப உயர்வு : ஒரு மின் பெருக்கியில் (டிரான்சிஸ்டர்) திரள் மின்னோட்டத்திலும், இணைப்பு வெப்ப நிலையில் ஏற்படும் மீள்விளைவு உயர்வு

thermal unit : (இயற்) வெப்ப அலகு : வெப்பத்தைக் கணக்கிட அல்லது ஒப்பிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அலகு. இதர அளவுகளின் ஒப்பிடுவதற்கான நிர்ணய அலகு

thermionic emission : (மின்) கதிரியக்க வெப்ப உமிழ்வு : சூடாக்கிய எதிர்மின் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் உமிழப்படுதல்

thermionics : (மின்) கதிரியக்க வெப்பவியல் : வெப்பத்தின் மூலம் எலெக்ட்ரான்கள் உமிழப்படுவதைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை

thermistor : (மின்) வெப்பத் தடை மின்கலம் : எதிர்த்தாக்கள வில் வெப்பநிலை பெறத்தக்க தாக்கப்பட்ட, அதனால், வெப்பத்தடையுடைய தாக்கப்பட்ட மின் கலம்

thermit : (பொறி.) மீவெப் பூட்டி : அலுமினியப் பொடியும் இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடும் கலந்த பொடி. தெர்மிட் (பொடி வைத்துப் பற்ற வைத்தல்) முறையில் பற்றவைப்பதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது

thermit (pressure) welding: மீவெப்ப அழுத்தமுறை பற்றவைப்பு: அழுத்த முறையில் பற்றவைக்கும் இதில் தெர்மிட் விளைவு உண் டாக்கும் திரவப் பொருட்கள் மூலம் வெப்பம் பெறப்படுகிறது

thermit welding : மீவெப்பூட்டி பற்றவைப்பு: அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு)பற்றவைப்பு முறை.இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின்போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை. கீறல்களை நிரப்பப் பயன்படுகிறது

thermo-couple :(மின்) வெப்ப மின்னாக்கி இது ஒருவகை மின்னாக்கி. இரு உலோகங்களால் ஆன தண்டுகள் அல்லது வயர்களை ஒன்றாகப் பற்ற வைத்த பின்னர் இவ்விதம் இணைந்த பகுதியைச் சூடேற்றினால் தண்டு அல்லது வயர்களின் மறுமுனையில் மின்சாரம் தோன்றும். மிகுந்த வெப்பத்கை அளிக்கும் அதிவெப்பமானிகளில் இது பயன்படுத்தப்படுகிறது

thermocouple meter : (மின்) இணை மாழை வெப்ப மானி : ஒரே மாதிரியாக இல்லாத இரு உலோ கங்கள் ஒன்றாகப் பற்றவைக்கப்பட்டு இணைப்பு சூடாக்கப்படும் போது திறந்த முனைகளின் குறுக்கே ஒரு நேர் மின்னோட்ட அழுத்தம் உருவாகிறது என்ற விதியினை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெப்ப அளவி. வானொலி அலைவெண் மின்னோட்டங்களை அளவிட இது பயன்படுத்தப்படுகிறது

thermo dynamics : (பொறி) வெப்ப இயக்கவியல்: வெப்பத்தை ஆற்றலின் வடிவமாக அல்லது வேலைக்கான ஒரு சாதனமாகக் கருதி ஆராய்கிற அறிவியல் பிரிவு

thermoelectric metals : வெப்ப மின் உலோகம்: உயர் வெப்பத்தை அளவிடுவதற் காக வெப்ப இணைப்பிகளில் பயன்படுத்தப் படுகிற உலோகங்கள் அல்லது கலேர்கங்கள். பிளாட்டினம் நிக்கல், தாமிரம், ரேடியம் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன

thermograph: (வானூ) வெப்ப அளவுக் கருவி : வெப்ப அளவைப் பதிவு செய்யும் கருவி

thermometer : வெப்பமானி : வெப்ப நிலையிலான மாற்றங்களை அளவிடுவதற்கான அளவீட்டுக் கருவி

thermonuclear : (விண்) அணு வெப்பாற்றல் தொடர்பு சார்ந்த : அணு எந்திரத் தாக்கு ஆற்றலுக்கும் வெப்ப ஆற்றலுக்குமிடையேயுள்ள தொடர்பு சார்ந்த

thermonuclear reaction : (வேதி.) அணுக்கருப் பிணைப்பு விளைவு : எடை குறைந்த இரு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து எடை கூடிய அணு வாக மாறும்போது மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகிற விளைவு

thermopile : (மின்) கதிரியக்கக் வெப்பக் கூற்றுமானி: வெவ்வேறான பொருட்களை மாற்றி மாற்றி வரிசையாக ஒரு தொகுப்பாக அமைத்து இந்த இணைப்புகளைச் சூடேற்றினால் மின்சாரம் உற்பத்தியாகும்

thermoplastic : (குழை) உருகு குழைமம் : குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும்

thermoset - (குலை) வெப்ப நிலைப்பி : ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு அச்சுக்கு ஏற்ற வடிவைப்பெற்று மீண்டும் உருக்க முடியாதபடி நிலைத்த நிலையைப் பெறுகிறது

thermosiphon system: (தானி) வெப்ப வடிகுழாய் ஏற்பாடு : இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிபபடையாகக கொண்டது. என்ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும்போது ஒப்பு நோக்கு கையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது

thermostat : வெப்ப நிலைப்பி : வெப்பஅளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி thermostatic: வெப்பச் சீர்நிலைக் கருவி: வெப்பச் சீர்நிலை (வெப்ப மேற்று) நீராவி மூலம் வெப்ப மேற்றும் முறைகளில் காற்றையும் படிவுத் திவலைகளையும் நீராவி வெளியேற வாய்ப்பின்றி ரேடியேட்டரிலிருந்து வெளியேற்றுதல்.வெளியேற்று வால்வு எளிதில் ஆவியாகிற திரவம் நிரம்பிய இடைத் திரையினால் இயக்கப்படுகிறது. இது விரைவாக சுருங்கவோ, விரியவோ செய்கிறது

'thermostatic element : வெப்பச் சீர்நிலைக் கோட்பாடு: : வெப்பச் சீர்நிலை இயக்கி குறிப்பிட்ட வெப்ப நிலையில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இயக்கி அல்லது கருவியானது அக்குறிப்பிட்ட வெப்பத்தைப் பெறும்போது வால்வைத் திறக்கும் அல்லது மூடும் சுவிட்ச் அல்லது வேறு உறுப்புகளை இயக்கும். பொதுவில் இது சுருள் வடிவில் இருக்கும். அல்லது ஈதர் அல்லது வேறு திரவம் நிரப்பப்பட்டு இரு புறங்களிலும் சீலிடப்பட்ட வெற்று உலோகக் குழலாகவும் இருக்கலாம். விரியும் போது அல்லது சுருங்கும்போது ஒரு பட்டாம் பூச்சி வால்வை இயக்கும் இரு உலோகப் புயமாகவும் இருக்கலாம். இது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதல்ல

thickness gauge or feeler : (எந்.) பருமன் அளவுமானி : இது பேனாக் கத்தி போன்ற வடிவம் பருமன் கொண்டது. இதன் விளிம்புகள் ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் இவ்வளவு பங்கு என்ற அளவில் பருமன் வித்தியாசப்படும். மோட்டார் வாகன வால்வுகள் போன்ற உறுப்புகளில் இடைவெளி அளவை சரிப்படுத்தப் பயன்படுத்தப்படும்

thickness ratio : (வானூ) திண்மை விகிதம்: விமான இயக்கக் கட்டுப்பாட்டுப் பரப்புகளின் அதிகபட்ச பருமனுக்கும் அவற்றின் குறுக்குக் கோட்டுக்கும் இடையே உள்ள விகிதம்

thick space : (அச்சு) தடிப்பு இடை வெளி : எந்த ஒரு குறிப்பிட்ட முகப்பிலும் மூன்று முதல் ஒரு 'யெம்' வரையில் அமைக்கப்பட்ட இடைவெளி

thimble : விரற்சிமிழ் : சிறுகுழாய் (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப்படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல்

(2) கயிறு அல்லது கேபிள் தேயாமல், பிரியாமல் இருப்பதற்காக அதன் நடுவே பொருத்தப்படுகிற குழிவுகள் கொண்ட வளையம்

T hinge: (க.க.) 'T' வடிவ கீல் : கிட்டத்தட்ட T வடிவிலான கீல் பட்டையான அமைப்புடன் நேர் கோணத்தில் இணைந்த மற்றொரு பட்டையைக் கொண்டது. முக்கியமாக கதவு, கேட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவது

thin space : (அச்சு) மென் இடைவெளி :சொற்களிடையே ஐந்து முதல் ஒரு யெம் வரை அமைக்கப்பட்ட இடைவெளி

thoriated-tungsten : (மின்.) தோரிய மின்னிழைமம் : மெல்லிய தோரியம் முலாம் பூசப்பட்ட ஒரு மின்னிழைம (டங்ஸ்டன்) உமிழ்வி

thorium : தோரியம் : (1) சுடரொளி விளக்குகளின் வலைக்குப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம் ஓர் அணு உலையில் நியூட்ரான் களுக்கு ஆதாரமான யுரேனியம், என்ற தனிமமாக மாற்ற லாம். இதன் ஆக்சைடு (th02) வாயு ஒளித்திரை வலைகள் தயாரிக்கப் பயன்படுகிறது

(2) அணு எண் 90 கொண்ட ஒரு தனிமம். இது எதிர்முனை உமிழ்விப் பொருளாகப் பயன்படுகிறது

thixotropic : (குழை) திக்ஸோட்ரோபிக் : மிக நைசாகப் பொடி செய்த சிலிக்கா போன்ற கரையாத திடப்பொருட்கள் அடங்கிய திரவ பிளாஸ்டிக்குகள். கலத்தில் இருக்கும் போது பாகு போல் இருக்கும். பரப்பில் பூசினால் திரவமாகி விடும். இவ்வகைப் பிசின் சரிவான பரப்பில் பூசப்பட்டால் வழிந்து இறங்காமல் பரப்பின் மீது நிலையாக இருக்கும்

thixotropy : (வேதி; குழை.) திக்ஸோட்ரோபி : சில சேர்மானங்கள் அசையா நிலையில் கூழ்மமாக இருந்து நன்கு கிளரும்போது திரவ நிலைக்கு உள்ளாகும் தன்மை

thread : நூல் : பட்டு, பருத்தி அல்லது கம்பளி போன்று வழக்கமாக உலோகமல்லாத பொருளால் ஆன மெல்லிய கயிறு அல்லது இழை

thread-cutting screws : (எந்) புரிவெட்டும் திருகு : வரிவரியாக அமைந்த வெட்டுமுனை கொண்ட ஸ்குருக்கள் உள்ளே இறங்கும் போது புரிகள் வெட்டப்படும். இது புரி தண்டை தேவையற்ற தாக்குகிறது. உலோகத் தகடுகள், மென்மைக் கலோகங்கள் பிளாஸ்டிக் போன்றவற்றில் புரியிட ஏற்றது

threaded sleeve : (பட்) புரியிட்டயிட்ட உறை : உலோகத்தால் ஆன உள்ளீடற்ற உறைகள். வழக்கமாக உருளை வடிவில் உட்புறம் புரியிடப் பட்டது. இரு தண்டுகள் அல்லது இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படுவது

thread gauge : (உலோ.வே). புரியளவு மானி: திருகு புரிகளின் இடைவெளியைச் சோதிப்பதற்கான அளவுமானி

threading : புரியிடுதல்: உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் திருகு புரிகளை அமைத்தல்

thread mitler : (எந்) புரி கடைசல் எந்திரம் : புரிகளை இடுவதற்கும், வெட்டி வேலைப்பாடு செய்வதற்குமான கடைசல் எந்திரம்

thread plug: (குழை) புரிசெருகு: உள்ளிடைப்புரிகளை உருவாக்குவதற்காகச் செருகப்படுகிற வார்ப்பு:அச்சுப்பகுதி, வேலைக்குப் பிறகு வெளியே திருகி எடுக்கப்பட வேண்டியது

thread - rolling : (எந்) புரியமைத்தல் : ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வலுவானவை; செலவு குறைவு

threads per inch: (எந்) அங்குல வாரிப் புரி: இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குலக் குறுக்களவு அங்குலத்துக்கு 8 புரி. இப்படியாக புரிகளின் நோக்கம் (1) ஸ்குரு போல்ட், நட்டு ஆகியவற்றை ஒன்றாக இருத்தி வைத்தல் (2) திரவம் அல்லது வாயுக்களின் அழுத்தத்தை அதாவது குழாய் இணைப்புகளின் உறுப்புகளை நன்றாக இறுக்கிப் பொருத்துதல் (3) ஜாக் ஸ்குரு, பல் இணைப்பு செலுத்தி போன்றவை மூலம் விசையை செலுத்துதல் (4) மைக்ரோ மீட்டர், காலிபர் போன்ற கருவிகளின் பகுதிகளைத் துல்லியமாகப் பிரித்துஅமைத்தல்

thread tool (எந்) புரிகருவி: கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது

three and four fluted drills : (உலோ. வே.) மூன்று மற்றும் நான்கு திருகு பள்ள துளையீடுகள் : சுரண்டு துருவிகளுக்குப் பதில் பல சமயங்களில் பயன்படுவது. புதிதாகத் துவங்கி துளையிட அவை பயனற்றவை.ஆனால் ஏற்கெனவே துளையிடப்பட்ட துருவப்பட்ட துளைகளைப் பெரிதாக்க உதவுபவை

three phase : (மின்) மூன்று பேஸ் : மூன்று ஏ. சி. சுற்றுகள் அல்லது 120 மின் பாகைகளில் பேஸ் வித்தியாசப்படும் சர்க்கி யூட்டுகள்

three-phase alternating current : (மின்.) மூன்று நிலை மாற்று மின்னோட்டம் : மூன்று மாற்று மின்னோட்டங்களின் ஓர் இணைப்பு. இதில் இவற்றின் மின்னழுத்தங்கள் 120 அல்லது ஒரு சூழற்சியின் இடம் பெயர்ந்து இருக்கும்

three ply : மூவடுக்கு ஒட்டுப் பலகை : தனித்தனியான மூன்று அடுக்குகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒட்டுப் பலகை (பிளைவுட்)

three-point suspension :(தானி.) மும்முனை நிலைப்பு (மோட்டார் வாகன): மோட்டார் வாகனத்தில் என்ஜினின் எடையை மூன்று நிலைகள் தாங்கி நிற்கும் வகையில் என்ஜினை நிலைப்படுத்தும் முறை

'three-point perspective : (வரை.) மும்முனைத் தொலைவுத் தோற்றம் : ஒரு பொருளின் படத்தில் அதன் முதன்மை விளிம்பு களில் எதுவும் படப்பரப்புக்கு இணையாக இல்லாதிருக்கும் தோற்றம். ஒவ்வொரு விளிம்பு களின் தொகுதியும் தனி மறைவு முனையைக் கொண்டிருக்கும்

three-quarter binding: முக்கால் நூல்கட்டு : அரைநூல் கட்டுப் (பைண்டிங்) போன்றதே, ஆனால் தோல் பகுதி நிறைய வெளியே தெரியும்

three-quarter floating axse: (தானி.) முக்கால் மிதப்பு அச்சு : பின்புற அச்சின் உறைப்பெட்டி சக்கரங்களின் மையத் தண்டுவரை நீண்டிருக்கும். அச்சின் வெளிப்புற முனைகள் சக்கரத்தண்டின் தகட்டு விளிம்புகளுடன் பற்றவைக்கப் பட்டிருக்கும் அல்லது இணைக்கப் பட்டிருக்கும் தகடு சக்கர மையத் தண்டுடன் போல்ட்மூலம் பொருத்தப்பட்டிருக்கும்.சக்கரம் ஒவ்வொன்றிலும் ஒரு பேரிங்குதான் இருக்கும். அது அச்சுத் தண்டின் உறைப்பெட்டி மேல் பொருத்தப்பட்டிருக்கும்

three-square file : (தானி) முப்பட்டை அரம்: மூன்று முளை கொண்ட அரம், ரம்பத்தின் பற்களைக் கூராக்குவதற்குப் பயன்படுவது

three-square file : (உலோ) முச்சதுர அரம் : முக்கோண அல்லது மும்முனையுடைய ஓர் அரம். இது இரம்பத்தைக் கூர்மையாக்கப் பயன்படுகிறது three-way switch : (மின்) மூன்று வழி மின் விசை: ஒரு மின் விளக்கு அல்லது பல மின் விளக்குகளை வெவ்வேறான இரு இடங்களிலிருந்து இயக்குவிப்பதற்கான ஒரு சுவிட்ச்

three-wire method: மூன்று கம்பி முறை : அமெரிக்க தர நிர்ணய அமைப்பு சிபாரிசு செய்தபடி திருகுகளில் புரிகள் நடுவில் உள்ள இடைவெளியை அளக்கும் முறை. பயன்வழி கையேட்டைக் காண்க

three-wire circuit : (மின்) முக்கம்பி மின்சுற்றுவழி : மூன்று கம்பிகள் கொண்ட மின்சுற்றுவழி அமைப்பு. இது மைய அல்லது நடு நிலைக்கம்பிக்கும், புறக்கம்பிகளில் ஏதேனும் ஒன்றுக்குமிடையிலான மின்னழுத்த வேறுபாட்டினை 120 ஓல்ட்ஸ் அளவுக்கும், புறக் கம்பிக்களுக்கிடையிலான இரு மின்னழுத்த வேறுபாட்டினை 250 ஓல்ட்ஸ் அளவுக்கும் வழங்குகிறது .இது இரு தொடர்வரிசை தொடுப்பு மின்னாக்கிகளின் தத்துவத்தின்படி அமைக்கப்படுகிறது

three wire distribution: (மின்) முக்கம்பிப் பகிர்மானம் : நேர் மின்னோட்ட மின்சுற்று வழிகளில் மூன்று கம்பிகள் வாயிலாக நடை பெறும் மின் வழங்கீடு. இதில் ஒரு கம்பி நேர்மின் கம்பியாகவும், இரண்டாவது எதிர்மின் கம்பியாகவும், மூன்றாவது நடுநிலைக் கம்பியாகவும் செயற்படுகிறது. மின் விசையை நடுநிலை கம்பியிலிருந்தும், நேர்மின்கம்பி அல்லது எதிர்மின் கம்பியிலிருந்தும் எடுக்கலாம்

threshold (க.க.) தலைவாயில் : 1. ஒரு கட்டடத்தின் நுழைவு வாயில் 2. கதவுக்கு அடியில் அமைந்த மரப்பலகை கல்பலகை, அல்லது உத்தரம்

threshold of sound : (மின்) குறும ஒலி: ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணில், காதால் கேட்கக் கூடிய ஒலியின் மிகக் குறைந்த அளவு

third-angle projection : மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம் : அமெரிக்காவில் பின்பற்றப்படுகிற எந்திரவியல் வரைபடங்களில் வெவ்வேறு தோற்றங்களை எடுத்துக்காட்டல். பொதுவில் வரைபட அதாவது மேலிருந்து காட்சி, முன்பக்கக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, பின்புறக்காட்சி ஆகியவை எடுத்துக்காட்டப்படும். ஒவ்வொரு காட்சியும், எடுத்துக்காட்டப்பட்ட பக்கக் காட்சியின் பின்புலனாக வைத்துக் காட்டப்படும்

third brush ; (தானி) மூன்றாம் பிரஷ் : புலம்-சுற்று மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின்னாக்கியின் மின் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தும் துணை பிரஷ்

third-class lever : (எந்) மூன்றாம் வகை நெம்புகோல் : விசையானது எடைக்கும் ஆதாரத் தானத்துக்கும் இடையே செலுத்தப்படும் நெம்புகோல்

thrips (உயி.) செடிப்பூச்சி : வயல்களிலும் தோட்டங்களிலும் வெங்காயம், திராட்சை போன்ற செடிகளை அரிக்கும் பூச்சி வகை

throat : (க.க.) கணப்புத் தொண்டை: கணப்பிலிருந்து புகை அறைக்குச் செல்லும் திறப்பு (எந்திர) துளை வெட்டும் எந்திரத்தில் வெட்டு கருவிக்குப் பின்னால் உள்ள இடைவெளி போடப்படும் துளையின் அளவு இந்த இடைவெளியின் ஆழத்தைப் பொருத்தது throttle : திராட்டில் : நீராவி போன்றதைக் கட்டுப்படுத்த அல்லது அடைத்து நிறுத்த, இதைச் செய்வதற்கான ஒரு கருவி

throttle valve : (எந்) நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் ; 1. மோட்டார் வாகன என்ஜினில் பெட்ரோலுடன் கலப்பதற்கு காற்று உள் புகுவதைக் கட்டுப் படுத்துவது போன்று, ஒரு குழாயில் அல்லது திறப்பில் முற்றிலுமாக அல்லது ஓரளவு மூடியபடி இருப்பதற்காக்ப் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய பட்டையான தகட்டு வால்வு

2. நீராவிக் குழாயில் நீராவி வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான வால்வு

through bolt: (எந்) திருபோல்ட்: இணைக்கப்பட வேண்டிய பகுதிகளில் உள்ள துளைகளில் உள்ள இடைவெளி வழியே செல்கின்ற போல்ட். இணைப்புப் பகுதிகள் முற்றிலும் நட்டுகளைப் பயன்படுத்தி முடுக்கப்படுகின்றன

through shake : மர உத்திரத்தில் வருடாந்திர வளர்ச்சி வளையங்கள் இடையே உறுதியின்றி இருக்கின்ற இடைவெளி. உத்திரத்தின் இரு முகப்பகுதிகளிலும் இது நீண்டு அமைந்திருக்கும்

throw : (எந்.) விரை சூழல் இயக்கப் பொறி : ஓர் என்ஜினின் கிராங் ஷாப்டில் உள்ளது போன்று அச்சு மைய வேறுபாட்டு அளவு. இது பிஸ்டனின் அடியின் நீளத்தில் பாதிக்குச் சமம்

throwing : வளைதல் : மட் பாண்ட வளைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல்

thrust bearing or thrust block : (எந்.) தள்ளு தாங்குதல் அல்லது குழை முட்டு : நீளவாட்டில் தள்ளு விசையைத் தாங்குகின்ற பொறி உறுப்பு

thrust chamber : (மின்) உந்து கூண்டு : ஒரு ராக்கெட் மின்னோடி அல்லது எஞ்சின்

thrust collar : (எந்) தள்ளு வளையம் : ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோக்கம்

'thumb nut : (எந்) திருகுமரை: கட்டைவிரலாலும், ஆள்காட்டி விரலாலும் இயக்க முடிகிற திருகுமரை

thumb plane : (மர.வே.) சிறு இழைப்புளி : (இழைப்புளி) 10 அல்லது 13செ.மீ. நீளம் உள்ள சிறிய இழைப்புளி. ஓர் அங்குல _ அகலமுள்ள இழைப்புத் துண்டு கொண்டது

thumb screw : (எந்) நக திருகாணி: கட்டை விரல் நகத்தை பயன்படுத்தி திருகிவிடக் கூடியத் திருகாணி

thumb tack : அழுத்து ஆணி; அகன்ற தலை கொண்ட கூரான முனை கொண்ட ஆணி. வரைபடக் காகிதம் நகராமல் இருக்க அதன் ஓரங்களில் பொருத்திவைக்க வரைபடக்காரர்கள் பயன்படுத்துவது

thurm : செங்குத்தான சதுரக் கட்டைகள், பலகைகளில் ரம்பத்தைக் கொண்டு அறுப்பது, கடைசலில் தோன்றுவது போன்ற பாணிகளை உண்டாக்குவது tick (உயி..) உண்ணி : நாய், ஆடு, மாடுகளைப் பற்றிக் கொண்டு இரததத்தை உறிஞ்சும் சிலந்திக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சு ஈ வகை

tie ; (க.க.) செருகு துண்டு : மற்ற துண்டுகள் விழாமல் அவற்றின் இடத்தில் இருப்பதற்காக ஒரு துண்டைச் செருகுதல் அல்லது சேர்த்தல்

'tie beam . (க.க.) வரிக்கை : கட்டு உத்தரம்: முக்கோண வடிவக் கூரையில் அமையும் சாய்வு உத்தரங்களின் கீழ் துணிகள் விலகி விடாதபடி தடுக்கிற அல்லது நிலையாகச் சேர்த்து வைக்கிற உத்தரம்

tie dyeing : கட்டுச்சாயம்: சாயம் ஏற்றும்போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன

tie piece : கட்டு துண்டு : விறைப்பேற்று வதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத் துண்டு. இது வரைபடத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை

tier : அடுக்கு : பெட்டிகள் அடுக்கப்பட்டது போல ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவது

tiering machine : அடுக்கும் எந்திரம் : ஆட்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமின்றி, பொருட்களை ஒன்றன்மீது ஒன்றாக அல்லது வரிசையாக அடுக்கும் பணியைச் செய்யும் எந்திரம்

tie rod : (தானி.எந்.) இணைப்புத் தண்டு : ஒரு மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களை இணைக்கும் குறுக்குத் தண்டு. வண்டி திருப்பப்படும்போது சக்கரங்கள் இணைந்து செயல்பட உதவுகிறது

tie-up material : (அச்சு) கட்டுநிலை கோக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள்

tight fit: (எந்.) அழுத்தப் பொருத்தம் : சிறிதளவு அழுத்தம் மூலம் செய்யப்படுகிற சரிபொருத்தம்

tight pulley ; (எந்) இறுக்கக் கப்பி : தண்டுடன் இணைக்கப்பட்ட கப்பி இதற்கு மாறான அமைப்பில் தண்டுடன் இணையாமல் இருக்கிற கப்பியானது சுலபத்தில் சுழலும்

tile : (க.க.) ஓடு: மண், சிமென்ட் அல்லது கண்ணாடியால் ஆனவை. கூரையில் அமைக்கப் பயன்படுத்தப்படுபவை. கலையம்சம் பொருந்திய டிசைன், நேர்த்தி ஆகியவற்றுடனும் தயாரிக்கப்பட்டு தரையிலும், சுவரிலும் பதிக்கப் பயன்படுபவை

tilt top table: சாய்ப்பு மேசை : பீடம் கொண்ட மேசை, இதன் மேல் பலகை கீல் கொண்டு பொருத்தப்பட்டுள்ளதால் கிடைமட்ட நிலையிலிருந்து செங்குத்து நிலைக்குக் கொண்டு வர இயலும்

timber: வெட்டுமரம்: மரம்: பல் வேறான வேலைகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட கட்டைகளாக சதுரப் பலகைகளாக அறுத்து வைக்கப்பட்டுள்ள மரம். காடுகளில் வெட்டப்பட்ட மரக் கட்டைகளிலிருந்து இவ்விதம் தயாரிக்கப் படுகிறது

timber trestle: (பொறி.) மரக் கட்டுமானம்; ஓடை அல்லது பள் ளங்கள் மீது ரயில்பாதை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற மரக்கட்டுமானங்கள். செங்குத்தாக, கிடைமட்டமாக, குறுக்காக மரக்கட்டைகளை அமைத்துக்கட்டப்படுபவை

time measure: கால அளவு:

60 வினாடி - 1 நிமிடம்

60 நிமிடம் - 1 மணி

24 மணி - 1 வாரம்

7 நாள் - நாள்

28, 29, 30 - 1 காலண்டர் அல்லது 31 நாட்கள் மாதம்

30 நாள் - 1வட்டிக் கணக்குக்கு ஒரு மாதம்

52 வாரம் - 1ஆண்டு

365 நாள் - ஆண்டு

366 நாள் - 1 லீப் ஆண்டு

timer: (தாணி.) முன்னேற்பாட்டுக் கருவி: மோட்டார் வாகனத்தில் சிலிண்டர்களில் தக்க சமயத்தில் தீப்பொறி தோன்றும் வகையில் முதன்மை தீப்பற்று சர்க்கியூட்டைத் துண்டிப்பதற்குப் பயன்படும் கருவி

time switch: (மின் ) நேர ஒழுங்கு மின்விசை மாற்றுக்குமிழ்: கடிகாரத்தினால் கட்டுப்படுத்தப் பட்டு குறித்த நேரத்தில் இயங்கும் சுவிட்ச்

timing: (தானி எந்.) காலத் திட்ட அமைப்பு: 1. மிகப் பயனுள்ள குதிரை சக்தி கிடைக்கின்ற வகையில் என்ஜின் வால்வுகளையும், கிராங்க்ஷர் ப்டையும் அவற்றின் உரிய இடத்தில் அமைத்தல். 2.பிஸ்டனின் முகப்பு:மீது மிக அதிகபட்ச பயன் பிளவு ஏற்படு கிற வகையில் பிஸ்டனின் மேற்புற செயலுறா நிலைக்கு ஏற்ப எரி தலைத் துண்டிக்கும் உறுப்பைப் பொருத்துகிற நிலை

timing gear: கால ஒழுங்கு பல்லிணை: மோட்டார் வாகன என்ஜினில் கேம்ஷாப்டை இயக்கும் பல்லிணைகள். பிஸ்டன்களின் இயக்கத்துக்கு ஏற்ப கால ஒழுங்குடன் வால்வுகள் திறந்து மூட கேம் ஷாப்ட் உதவுகிறது. கிராங்க் ஷிாப்ட் இருமுறை சுழன்றால் கேம் ஷாப்ட் ஒரு முறை சுழலும். எனவே இந்த கியர்கள் இயக்கம் 2-க்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைய வேண்டும்

timing marks: (தானி) கால ஒழுங்குக் குறியீடு: எரிதல்; என்ஜின் பிளை வீல் அல்லது இயக்கச் சமநிலை மீதும் முதல் நம்பர் சிலிண்டர் எரிதலுக்குத் தயாராகிற நிலை மிகச் சரியாகப் பொருந்தி நிற்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்பட்டுள்ள குறியீடுகள்

வால்வு: மெக்கானிக்குகள் வால் வுகளை பிஸ்டன் நிலைக்கு ஏற்ப கால ஒழுங்கு இருக்கும் வகையில் அமைப்பதற்காக வால்வு மீதுள்ள குறியீடுகள்

tin: (உலோ.) ஈயம்: வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். அடர்த்தி எண் 7, 3 தொழில் காரியங்களுக்கு, குறிப்பாக கலோ கங்களைத் தயாரிக்க மிக முக்கியத்துவமும், விலை மதிப்பும் கொண்டது

tincture: சாராயக் கரைசல் மருந்து வகை: ஒரு பொருளிலிருந்து கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கப்படுகிற மிக நன்கு கரைகிற, நைசான பகுதிகள்

tinder: எரி துண்டு: தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகத் தீயில் போடப்படுகிற உலர்ந்த, எளிதில் எரியக்கூடிய பொருள்

tinning: (உலோ.) ஈயம் பூசுதல்: (1) தகரத் தயாரிப்பில் இரும்புத் தகடுகள் மீது அளிக்கப்படுகிற மெல்லிய பூச்சு (2) பற்று வைப்புக்கோல் மீது அதைப் பயன்படுத்தும் முன்னர் பற்று வைப்புப் பொருளைப் பூசுவது

tin plate: கரத் தகடு: ஈயம் பூசப்பட்ட. மல்லிய உருக்குத் தகடு

tin smith ; தகர வேலைக்காரர்: தகரத் தகடுகளைக் கொண்டு பொருட்களைத் தயாரிப்பவர்

tin snips: (உலோ;வே.) தகர வெட்டுக் கத்திரி: உலோகத் தகட்டு கத்தி வெட்டு அதற்குப் பயன்படுத்தும் வேலைக்காரர்கள் கையால் இயக்கும் கத்திரிக்கோல்

tint block: செதுக்குருப்பாளம்: டின்ட் பிளாக் (அச்சு.) ஒரு திட வண்ணத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான உலோகத்தால் ஆன அல்லது பிளாஸ்டிக் முகப்புக் கொண்ட் உலோகத் தகடு, பொதுவில் வண்ணம் லேசாக அல்லது அடிப்படை வண்ணத்துக்கு மாறுபாடு காட்டுவதாக இருக்கும்

tints: (வான்.) மென்னிறம்: லேசான நிறங்கள், குறிப்பாக ஓரளவு வெண்மை கலந்த நிறங்கள்

tip radius: (வானூ) நுனி ஆரம்: சுழல் அச்சிலிருந்து சுழலிப் பட்டையின் வெளி விளிம்பு வரையிலான தூரம்

tire bolt: பட்ட ஆணி : சக்கரத்தின் வெளிப்புற மரப்பகுதி மீது உலோகப்பட்டை பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் துளை யற்ற பட்டையான தலை கொண்ட போல்ட்

tire tool: (தானி.) டயர் மாற்றும் கருவி: மோட்டார் வாகன டயர்களை அகற்றுவதற்காகப் பயன் படும் இரும்பு அல்லது உருக்குப் பட்டை இவ்விதமான் எந்த ஒரு கருவியையும் டயர் மாற்றும் கருவி எனலாம்

tissue: திசு (இழைமம்): உடலின் ஒரு பகுதியாக அல்லது படலமாக ஆமைந்துள்ள உயிரணுக்களின் திரளை. எடுத்துக்காட்டு தசைத் திசு; தோல் திசு; இணைப்புத் திசு; நரம்புத் திசு

tissue manila: மெல்லிய மணிலா: உறுதியான நாரினால் ஆன மணிலா நிறமுள்ள மெல்லிய காகிதம்

tissue paper: மெல்லிழைத் தாள்: பல்வேறான தரம் கொண்ட மிக மெல்லிய காகிதத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்

titanium: (உலோ) டைட்டானியம்: கரிமக் குழுவைச் சேர்ந்த உலோகத் தனிமம். தாமிரம், வெண்கலம் மற்றும் இதர உலோகங்களுடன் சேர்த்து கலோகம் செய்யப் பயன்படுத்தப்படுவது. வெள்ளை வண்ணத்தில் டைட்டானியம் ஆக்சைட் முக்கியப்பொருள். இதைப் பயன்படுத்தும் பெயிண்டுகள் மிக நன்கு உழைக்கின்றன

titanium dioxide: (வண் ) டைட்டானியம் ஆக்சைடு: ஒரு வெண்ணிற நிறமி. வண்ணங்கள் தயாரிப்பதில் மிகுதியாகப் பயன்படுகிறது. இது வேதியியல் வினைபுரிவதில் செயலற்றது. நீர்த்து அமிலங்கள், வெப்ப்ம், ஒளி_இவற்றால் இது பாதிக்கப்படுவதில்லை

title block: தலைப்பு மூலை; ஒரு வரைபடத்தில் பொதுவில் வலது புறத்தின் கீழ்மூலையில் அல்லது கீழ்ப்புறம் நெடுக, கம்பெனியின் பெயர். வரைபடத்தின் தலைப்பு, அளவு அலகு, தேதி, மற்றும் தேவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்

title page: (அச்சு) தலைப்புப் பக்கம்: ஒரு புத்தகத்தின் துவக்கத்தில் புத்தகத் தலைப்பு, நூலாசிரியர் பெயர். வெளியிட்டவரின் பெயர் முதலியவை அடங்கிய பக்கம்

T joint: T இணைப்பு: ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமையும் வகையில் இரு இரும்புத் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பற்ற வைக்கப்பட்ட ஒருவகை இணைப்பு (குழாய் வேலை). சாதாரண 3 வழி குழாய் இணைப்பு மேலும் கீழுமாக உள்ள நீண்ட குழாயில் தடுப்புறத்திலிருந்து இந்த இரண்டுக்கும் செங்கோணத்தில் மூன்றாவது குழாய் அமைந்திருக்கும்

titration control: (மின்) இணைமக் கூறளவுமானி: வேதியியல் செய்முறைகளில் கரைசல்களின் அமிலத் தன்மையை அல்லது காரத் தன்மையை அளவிடுவதற்கும் கட்டுப்படுத்து வதற்கும் பயன்படும் ஒரு வகை மின்னணுவியல் சாதனம்

T.N. T. Trinitrotoluol : (வேதி) TNT, டிரா நைட்ரோடோலுவேரல் (C7H3(NO2)3) நிறமற்ற நீர்ம ஹைட்ரோ கார்பனான டோலு வோலுடன் நைட்ரேட் சேர்ப்பு மூலம் உருவாக்கப்படும் வெடிப்பொருள் உருகுநிலை 30 டிகிரி சென்டிகிரேட். இந்த வெடிப் பொருள்,அதிர்ச்சு மூலம் தீப்பற்றுவுதல்ல. எனவே ஒப்புநோக்குகையில் கையாள்வதற்கு ஓரளவுப் பாதுகாப்பானது

tobin bronze: (உலோ) டோபின் வெண்கலம்: தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப் பகுதிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது

toe: (உலோ; வே.) விளிம்போரம்: ஒரு தண்டின் விளிம்பு ஓரம்

toe-in: (தானி) முன்புறப் பொருத்து: மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களைப் பொருத்துவது தொடர்பானது. பின்புறச் சக்கரங்களைவிட முன் புறச் சக்கரங்கள் 3.முதல்,6 செ.மீ. குல அளவுக்கு நெருக்கமாக இருக்கும். முன் ட்யர் தேய்மானத்தை குறைந்தபட்ச அளவுக்குக்குறைக்க இது தேவை. தவிர வண்டியை ஓட்டிச்செல்வது இதன்மூலம் சுலப மாகும். கார் வேகமாகச் செல்கையில் சக்கரங்கரங்கள் அகன்று அமைய முற்படும். முன்புறப் பொருத்து இதை சமப்படுத்துவதாக இருக்கும்

toeing (மர.வே.) ஓரச்செலுத்து: ஒரு பலகையை மற்றொன்றுடன் இணைப்பதற்காக அப்பலகையின் ஒரு ஓரத்துக்கு அருகே ஆணிகளை சாயவாக அடிததல்

toenailing : (மர.வே) பலகை மூலைச் சாய்வாணி ;சாய்வு செலுத்து: ஆணிகளின் தலை வெளியே நீட்டியிராத வகையில் ஆணிகளை சாய்வாக அடித்தல்.தரை அமைப்பதற்கு பலகைகளைப் பொருத்துவதற்கு செய்வதைப் போல

toe switch:(தானி.) மிதிமின்விசை: காரின் உட்புறத்தில் தரை போர்டில் அமைக்கப்பட்ட சுவிட்ச், காலால் மிதித்து அமுக்கினால் ஸ்டார்ட்டர் செயல்படும் toggle : (எந்.) இறுக்கி பிடிப்பு : நடுவில் கீல் கொண்ட இரட்டை இணைப்பு

toggle bolt: (மின்.) இறுக்கத் தாழ்ப்பாள்: உள்ளீடற்ற ஓட்டினால் ஆன சுவரில் பொருத்துவதற்கானது. இதில் திருகாணியின் தலைப்புறத்தில் சுழலும் வளையம் இருக்கும். இதைத் திருப்பி நீளவாட்டு நிலைக்குக் கொண்டுவந்து அதில் தாழ்ப்பாளை மாட்டலாம்.பின்னர் அதைச் செங்குத்து நிலைக்குத் திருப்ப முடியும்

toggle switch : (மின்.) இறுக்க மின்விசை மாற்றுக் குமிழ் : குமிழ் அல்லது நீட்டிக் கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின்விசை மாற்றுக் குமிழ்

tolerance : (எந் ) ஏற்கைப் பிசகு : தயாரிக்கப்பட்ட எந்திர உறுப்புகளின் அளவுகள் ஏற்கத்தக்க அளவு கூடக் குறைய இருப்பது. ஏற்கத்தக்க அளவுக்கு உள்ள அளவுப் பிசகு. (எந்) ஏற்கை வரம்பு என்றும் குறிப்பிடப்படும்

toluene : (வேதி,) சாயப் பிசின் : நிலக்கரித் தாரிலிருந்து தயாரிக்கப்படுவது. இது முக்கியமாக சாயப்பொருட்களையும், T.N.T. தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது

toncan metal : (உலோ.) டொங்கன் உலோகம் : மிகவும் நேர்த்தியான கார்பன் மிகக் குறைவான உருக்கு அல்லது இரும்பின் வணிகப் பெயர். அரிமானத்தை நன்கு எதிர்த்து நிற்பதால் உலோகத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது

tone : (வண்.) வண்ண நயம் : வண்ணச் சாயை (நிறம்) ஒரு வண்ணத்தின் தன்மை அல்ல்து அளவை அது அழுத்தமாக உள்ளதா அல்லது லேசாக உள்ளதா என்று குறிப்பிடுவது

tone arm (மின். ஒலியிணைப்புக் கரம் : இசைப்பாடற் பெட்டியில் உள்ள ஒலியிணைப்புக் கை

tone control : (மின்) தொனிக் கட்டுப்பாட்டுக் கருவி : ஒலி மிகைப்பியில் ஒலி அதிர்வலைகளைக் குறைப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்குப் பயன்படும், தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய சாதனம்

tongs : இடுக்கி: ஒரு பொருளைப் பிடித்து எடுப்பதற்கு அல்லது ஒரு பொருளை அடித்து, தட்டி வேலை செய்ய அதை நன்கு பற்றிக் கொள்வதற்குப் பயன்படும் இரு புயங்களைக் கொண்ட கருவி

tongue (மர.வே.) காக்கு : ஒரு சட்டம் அல்லது பலகையின் ஓரத்தில் தக்க வடிவில் வெட்டி உருவாக்கப்பட்டு அளவில்,சிறியதாகத் துருத்தி நிற்கிற பகுதி. இது இன்னொரு சட்டம் அல்லது பலகையில் தக்க வடிவில் வெட்டி அகற்றப்பட்ட பள்ளமான பகுதியில் நன்கு பொருத்தி இரண்டையும் நன்கு சேர்க்க உதவுகிறது

tonic (மருந்) சத்து மருந்து : உடலுக்கு அல்லது உடலின் சில உறுப்புகளுக்கு உரமூட்டி, வலிமையூட்டுகிற மருந்து

tonsils : (உட.) அடிநாச்சதை : உள்வாயில் நாக்கில் அடியிலுள்ள இரு சிறு சுரப்பிகள், இவை நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன tonsilitis:(நோயி.)அடிநா அழற்சி: அடிநாச்சதையில் ஏற்படும் அழற்சி நோய்

tool bit (எந்.) வேலைக் கருவித் துண்டு : உயர்வேக உருக்கினால் ஆன சிறிய துண்டு. வேலைக் கருவிப் பிடிப்பானில் வைக்கப்பட்டு வெட்டு வேலைக் கருவியாகப் பயன்படுவது

tool box or tool head : (எந்) வேலைக் கருவிப் பெட்டி: (மெஷின்) இழைப்பு எந்திரத்தில் வேலைக் கருவி இடம் பெற்றுள்ள குறுக்குப் புறத்துடன் தொகுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்புகள். கருவிக்கு வேலை அளிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது

tool holder for lathe or plner (பட்.) வேலைக்கருவி பிடிப்பான் : தண்டு அல்லது உருக்கினால் ஆன ஒரு துண்டு வெட்டுவதற்கான வேலைக் கருவியை இத்தண்டுக்குள் செருக முடியும். மிக விலை உயர்ந்த உருக்கினால் ஆன வேலைக் கருவியையும் இவ்வகையில் பயன்படுத்த முடியும். இப்பிடிப்பானை நகர்த்த வேண்டிய அவசியமின்றியே வேலைக் கருவியை அப்புறப்படுத்தமுடியும்

tooling calf: கன்றுத் தோற்கருவி: பட்டை மூலம் பதனிடப்பட்ட தோல் புத்தக பைண்டிங் செய்யும் போது எழுத்துக்களைப் பதிக்கும் காரியத்துக்கு மிகச் சிறந்தது

tooling sheepskin : சிறுபொருள் ஆட்டுத்தோல்: விலை மலிவான நிறங்களில் கிடைக்கிற தோல். பர்ஸ், கார் செருகி, சாவி உறை முதலிய சிறுபொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது

tooling up : கருவிகளை ஆயத்தமாக்குதல் : ஒரு பொருளை நிறைய அளவில் உற்பத்தி செய்யும் முறைகளைப் பயன்படுத்தும் நோக்கில் உற்பத்திக்குத் தேவையான சிறப்புக் கருவிகள், கட்டுமானச் சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ஆயத்தப்படுத்துதல்

tool, knurling ; (பட்) முகட்டுக் கருவி: மடிப்பு போன்ற பல முகடுகளைக் கொண்ட கருவியை க் கொண்டு கழலும் உலோகப் பொருள்மீது பல வரிப் பள்ளங்களை உண்டாக்குவது, அழகுக்காகவும், நல்ல பிடிப்புக்காகவும் இப்படிச் செய்யப்படும்

tool maker : (எந்) வேலைக் கருவியாளர் : பணிச் சாதனங்கள் பொருத்திகள், அளவு மானிகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்

tool makers clamp : கருவியாளியின் திருகுபிடி : மரத்தச்சர் பயன்படுத்தும் திருகுபிடி போன்ற ஆனால் அதைவிடச் சிறிய வடிவிலான முற்றிலும் உலோகத்தால் ஆன பிடிப்புச் சாதனம்

tool post : (எந்) தாங்கு கருவி; பற்றுக்கருவி : உச்சியில் வளையத்தைக் கொண்ட தம்பம். கடைசல் எந்திரத்தின் மேற்புரத்தில் அமைந்த மரு. இந்த வளையத்துக்குள் வெட்டுக் கருவி பொருத்தப்படும்

tool room : (எந்) கருவி அறை; வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்படுகிற இடம்

tool steel : (உலோ) வெட்டுக் கருவி உருக்கு : வெட்டுப் பகுதிகளாகப் பயன்படுத்துவதற்குத் தகுந்த ஏதேனும் ஒரு கரிம உருக்கு அல்லது அதிவேக உருக்கு

tool tip : (எந்.) கருவிமுனை : பருமனான கார்பன் உருக்குத் தண்டின் மீது பற்றவைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு

tooth : காகித நேர்த்தி : கிரேயான் அல்லது பென்சிலைக் கொண்டு வரைவதற்கு உகந்த அளவுக்குக் காகிதம் கொண்டுள்ள நேர்த்தியைக் குறிப்பது

tooth face : (எந்) பல் முகப்பு: கடைசல் எந்திர வெட்டுக்கருவியின் பரப்பு பணியின்போது துண்டு வெட்டப் படுகையில் இப்பரப்பின் மீது தான் படுகிறது

toothing : (க.க) சுவரின் பல் விளிம்பு : சுவர் போன்ற கட்டுமானத்தைக் கட்டுகையில் பின் னால் மேற்கொண்டு சுவரை விரிவுபடுத்து வதானால் புதிதாக வைக்கிற செங்கற்களுக்குப் பிடிமானம் இருக்க வேண்டும் என்பதற்காக, செங்கற்களை மேலிருந்து கீழாக நீட்டியும் உள்ளடக்கியும் அமைப்பது

top : நீள் கம்பளி இழை : சிக்கு எடுக்கப்பட்டு கம்பளி நூலாக நூற்பதற்காக உள்ள நீண்ட கம்பள ரோமம்

top dead center : (தானி) சுழலா மேல் நிலை : முதல் நம்பர் பிஸ்டனின் சிலிண்டரில் பிஸ்டன் மேல் உச்சிக்கு வரும்போது உள்ள நிலை. இந்த நிலை பிளைவீலில் குறிக்கப்பட்டிருக்கும். என்ஜினின் உச்சபட்ச திறனுக்காக சரிப் பொருத்தம் செய்யும்போது இந்த நிலை கணக்கில் கொள்ளப்படும்

topping : மேல் வண்ணமூட்டல் : சாய மேற்றப்பட்ட துணியை இன்னொரு வண்ணம் கலந்த கரைசலில் முக்குவது

torque : (மின்.) திருப்பு விசை : சுழல் பகுதி திரும்பும் முயற்சி. (பொறி) விசையை அளிக்கையில் தண்டும் சேர்ந்து சுற்ற முற்படுவது

torque arm : திருப்புத் தடிப்புப் புயங்கள்: உந்து வண்டியில் பின்புற அச்சுக்கு விசை அளிக்கப்படு கையில் பின்புற அச்சின் உறைப் பெட்டியும் சேர்ந்து சுற்றாமல் தடுப்பதற்கு உள்ள இரு புயங்கள்

torque converter : (தானி.எந். ) திருப்புளிசை மாற்றி : பின் சக்கரங்களில் திருப்பு விசையை அதிகரிக்கும் பொருட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட இயங்கு விசை செலுத்தும் முறை. இதன்மூலம் விரைவில் வேகம் எடுக்கும்

torque stand : (வானூ;தானி.) திருப்பு விசை மானி: ஒரு என்ஜினின் திருப்பு விசையை அளப்பதற்கான சோதனை மேடை

torgue wrench : (எந்) திருப்புக் குறடு : திருகு குறட்டைப் பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் திருப்ப முடியாது

torr : (விண்.) டார் : பாதரசத்தின் மில்லி மீட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்னாட்டுச் செந்திறச் சொல்

torsion : (பொறி) முறுக்கு: ஒரு தண்டைத் திருப்புகையில் உருமாற்றமடைய முற்பட்டு முறுக்கிக் கொள்ளும் போக்கு torsional strength : (பொறி) முறுக்கு திறன் : முறுக்கு விசையை எதிர்த்து, தாங்கி நிற்பதற்கு ஒரு தண்டு போன்றவற்றுக்கு உள்ள திறன். இத்திறன் ஒரு தண்டின் குறுக்களவின் முப்படிக்கு ஏற்ப மாறுபடுகிறது

torsion balancer : (தானி) திருகு சமனாக்கி : பிஸ்டனின் உந்தல்களால் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்கும் பொருட்டு கிராங்க்ஷாப்டின் முளையில் பொருத்தப்பட்ட கருவி

torsion spring ; திருகு விற்சுருள்: மேலிலிருந்து கீழாக வளைந்து வளைந்து புரிபோல அமைந்த ஸ்பிரிங். இதன் இரு முனைகளும் நன்கு பொருத்தப்பட்ட நிலையில் அழுத்தப்படும்போது சுருளுவதும், நீளுவதுமாக இருக்கும்

torso : (க.க.) சிலை முண்டப் பகுதி : (1) கட்டுமானக் கலையில் உருமாறிய தூண்களைக் குறிப்பது (2) தலைப்பகுதி இல்லாமல் உடல் மட்டுமே காணப்படுகிற சிலை


torus (க.க.) பீடப் புடை வளையுறுப்பு ; பெரிய வடிவிலான குவிந்த அமைப்புக்கொண்ட அரைவட்ட அச்சு, அடித்தளத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுவது

tote boxes or pans : (பட்) உதிரிப் பொருள் கிண்ணம் : தொழிற்சாலைகளில் சிறிய உறுப்புகளை சேமித்து வைக்க அல்லது எடுத்துச் செல்வதற்குப் பொதுவில் பெட்டிகள் அல்லது உலோகத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவில் சற்று சரிவான வடிவில் இருக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து அடுக்குவதற்கு இது வசதியாக இருக்கும்

touchdown : (விண்) தரையிறங்குதல் : மனிதனால் இயக்கப்படும் அல்லது தானே இயங்கும் ஒரு விண்வெளிக்கலம், சறுக்கு முறையில் அல்லது வேறெந்த முறையிலேனும் பூமியில் தரையிறங்குதல்

toughness : (பொறி) கடினத்துவம் : நிரந்தர உருமாற்றத்தை எதிர்த்து நிற்பதிலும், அவ்வித நிரந்தர உருமாற்றம் ஏற்பட்ட பின்னர் முறிவை எதிர்த்து நிற்பதிலும் ஓர் உலோகத்துக்குள்ள திறன்

touring car: (தானி.) உலா கார் : ஐந்து அல்லது ஏழு பயணிகள் ஏறிச் செல்கின்ற வகையில் அமைந்த திறந்த உடற்பகுதி கொண்ட கார்

toxamin : ஊட்ட எதிர்பொருள் : வைட்டமின் எதிர்ப்புப் பொருள். இது வைட்டமின்கள் செயற்படுவதைத் தடுக்கிறது. எடுத்துக் காட்டாக, முட்டையிலுள்ள வெண்கரு, 'B' குழும வைட்ட மின்களுடன் இணைந்து, அவை உடலின்மீது வினைபுரிவதைத் தடுக்கிறது

toxicology : நச்சூட்ட ஆய்வியல் :நஞ்சுகள் பற்றி ஆராயும் அறிவியல் துறை

tourmaline : (மின்) டூர்மாலின் : பலவகை மின்திறமிக்க பல வண்ணக் கனிமப் பொருள் வகை

T plate (க.க.) 'T' வடிவத் தகடு: ஆங்கில 'T' வடிவம் கொண்ட ஓர் உலோகத் தகடு. இரு பரப்புகள் ஒன்று சேரும் இணைப்புப் பகுதியை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவது

trace : பற்றி வரை (வரைதல்) : மூலவரைபடம், தேசப்படம் போன்றவற்றின் மீது மெல்லிய துணி அல்லது காகிதத்தை வைத்து அதன்மீது கோடு வரைந்து பிரதி எடுத்தல்; பென்சில் கொண்டு ஓரப் படம் தயாரித்தல்; தேசப்படம் தயாரித்தல்

tracer : பற்றி வரைவாளர் : வடிவரை வாளர் தயாரித்த வரைபடங்கள் மெல்லிய காகிதங்களை வைத்து பற்றி வரைப்பிரதிகள் பல வற்றை எடுக்கிற உதவியாளர் அல்லது துணை வடிவரையாளர்

tracer element : தடங்காண் மெய்யூடகம் : மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழிக் காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிமம்

tracer : (க.க.) ஊடு சித்திரம் : வட்ட வடிவ கண்ணாடி பலகணிகள், பலகணிகளுக்கு மேல் அமைந்த கண்ணாடிகள் ஆகியவற்றின் மீது ஊடுருவுகிற அலங்கார வேலைப்பாடுகளை அமைத்தல்

trachelium . (க.க) டிராக்கிலியம் : கிரேக்க டோரிக் பாணித் தூண்

tracing : பற்றி வரைதல் : (வரைபடம்) முதல் நிலை வரை படம், வடிவப்படம் வரைபடம் தயாரித்தல் மெல்லிய துணி, காகிதம் அல்லது ஒளி ஊடுருவுகின்ற விரிப்புப் பொருட்களை வரை படங்கள் மீது வைத்து பிரதிகளை எடுத்தல்

tracing a circuit : (தானி:மின்) மின்சுற்றுவழியைக் கண்டறி: (மோட்டார்-மின் மூலத்திலிருந்து இயக்க நிலைவரை ஒரு சர்க்கியூட்டை மீட்டரைப் பயன்படுத்தி, மணி அடிக்கி ஜெனரேட்டரைப் பயன்படுத்தி கோளாறைக் கண்டுபிடிப்பது அல்லது சர்க்கியூட்டை மேலும் நீட்டிப்பது நூல்களின் நிறத்தை வைத்து அடையாளம் காண்பது

tracing cloth : (வரை) மெருகச்சுத்துணி: ஒரு வரைபடத்தை நிரந்தரமாகப் படியெடுப்பதற்குப் பயன்படும் ஒளி ஊடுருவக்கூடிய ஒரு துணி

tracing linen : பற்றி வரையும் துணி : (வரைதல்) துணி மீது தக்க பூச்சு அளித்துப் பிறகு அத்துணியைப் பற்றி வரைதலுக்கு பிரதி எடுப்பதற்காக பயன்படுத்துதல்

tracing paper : பற்றி வரைதாள் : (வரைபடம்) ஓரளவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத் துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத போது பற்றி வரைத்துணியை விட பற்றி வரை தாள் உகந்தது

tracing tool : பற்றி வரைக் கருவி : தோல் மீது டிசைன்களை எழுதவும், அமைத்து முடிக்கவும் பயன்படுகிற கூரான சிறிய தொரு கருவி

track : (மின்.) ஒலித்தொடர் : ஒலியைப் பதிவு செய்கிற ஓர் ஒலிப்பதிவு நாடாவின் ஒரு பகுதி

tracking : (மின் ) தடத்தொடர்பு: வானொலியில் ஒருங்கியைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சுழல் அலைவெண்ணைப் பின்பற்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் இணைக் கும் முறை. செயற்கைக்கோளின் தடத்தை வானொலி மூலம் பின்தொடர்தல்

traction : டிராக்ஷன்: சாலை மீது சக்கரங்கள் உருளும்போது ஏற்படுவது போன்ற உருள் உராய்வு. அல்லது பிடிமான உராய்வு

tractor air plane : (வானூ) டிராக்டர் விமானம் : தாங்கு பரப்புகளுக்கு முன்புறமாக அமைந்தி சுழலி அல்லது சுழலிகளைக் கொண்ட விமானம்

tractor propeller : (வானூ) டிராக்டர் புரொப்பல்லர்: விமான என்ஜினின் முன்புற முனை மீது அல்லது சுழலித் தண்டுக்கு முன்புறமாக அமைந்த சுழலி

trade-union : தொழிற் சங்கம்: உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத்தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு

traffic beam : (தானி.எந்) முகப்பொளிக் கற்றை: மோட்டார் வாகன முகப்பு விளக்கிலிருந்து தரையை நோக்கிப்படுகிற ஒளிக்கற்றை, எதிர்வரும் வாகன ஓட்டியின் கண் கூசாவண்ணம் இருக்க ஓர் ஏற்பாடு. நகரங்களின் சாலைகளில் இது பயன்படுவது ஊருக்கு வெளியே ஒட்டிச் செல்கையில் எதிரே வாகனம் வந்தால் பயன்படுவது

traffic control projector : (வானூ.) ஒளி சமிக்ஞை காட்டி : விமான ஓட்டிக்கு ஒளி சமிக்ஞைகள் அரிப்பதற்கான ஒரு புரொஜக்டர்

trailing edge : (வானூ ) பின் புற முனை: விமானக் கட்டுப்பாட்டுப் பரப்பு அல்லது சுழலியின் பின்புறமுனை

train : டிரெயின் (பணிக்கூடம்) : விசையை செலுத்தவும், வேகத்தை மாற்றவும் ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்ட பல்லிணை ஏற்பாடு

trammel :தண்டு வட்ட வரைவி : பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏற்பத் தலைப்பகுதியை அதில் உள்ள ஸ்குரு கொண்டு முடுக்கிப் பயன்படுத்தலாம்

tramp : (தானி ) மிதிச் சுழற்சி : சக்கரங்கள் எதிர்த் திசைகளில் மேலும் கீழுமாக இயங்குதல்

transceiver : (மின்) வானொலி இருமைக் கருவி : ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி

transcription: (மின்) நேரடி நிகழ்ச்சிப் பதிவு: தொலைக்காட்சியில் பின்னர் ஒளிபரப்புவதற்காக ஒரு நேரடி நிகழ்ச்சியைப் பதிவு செய்தல்

transducer: (மின்) இயல் மாற்றி: ஒருவகை ஆற்றலை, மின்னியல் ஆற்றல், எந்திர ஆற்றல், ஒலியாற்றல் போன்ற வேறு வகை ஆற்றலாக மாற்றுவதற்கான ஒரு சாதனம்

transept : (க.க.) இருபுறத் தாழ்வாரம் : சிலுவை வடிவில் அமைந்துள்ள சர்ச்சின் நுழைவாயிலின் மறு கோடியில் இருபுறங்களிலும் நீண்டு அமைந்துள்ள தாழ்வாரங்கள்

transfer : மாற்று: ஒன்றை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அகற்றுதல்

transfer calipers : (எந்) மாற்றும் காலிபர்: இடுக்களையும் அத்துடன் அளந்த பின்னர் பணி நிலையிலிருந்து அகற்ற அளவை மாற்றியாக வேண்டியுள்ள இடங்களிலும் அளப்பதற்கான கருவி. பணிநிலையிலிருந்து எடுத்த பின் கால்களை அளக்கப்படும் பகுதியின் மிகச் சரியான அளவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்

tranfer characteristic: (மின் ) பண்பு மாற்றம் : ஒரு சாதனத்தின் உட்பாட்டு, வெளிப்பாட்டுப் பண்புகளுக்கிடையிலான தொடர்பு

transfer machine : (தானி) இடமாற்று எந்திரம் : பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் திறனுள்ள ஓர் எந்திரம். அந்தப் பொருள் மீது ஒவ்வொரு இடத்திலும் பல வேலைப்பாடுகள் செய்யப்படும்

transfer molding . (குழை) மாற்றிடும் அச்சு: உள்வீச்சு வார்ப்புக்கு அதாவது வெப்பம் அளிக்கப்பட்டு குளிர்ந்த பின் உறுதியாகிய பொருட்களை வார்ப்பதற்கு மற்றொரு பெயர்

transformer: (மின்) மின்மாற்றி: மின்னோட்டத்தில் மின்னழுத்தத்தையும் மின் அளவையும் உயர் நிலையிலிருந்து குறைந்த நிலைக்கு அல்லது குறைந்த நிலையிலிருந்து உயர் நிலைக்கும் மாற்றுவதற்கான சாதனம்

transformer current : மின்னோட்ட மின்மாற்றி:' மின்மானிகளின் இயக்கத்திற்கேற்ப பேரளவு மின்னோட்டங்களை சிற்றளவு மின்னோட்டங்களாகக் குறைப்பதற்குப் பயன்படும் ஒரு மின் மாற்றி

transformer potential (மின்) மின்னழுத்த மாற்றி : அதிக அளவு மினனழுத்தங்களைக் குறைந்த அளவு, மின்னழுத்தங்களைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி

transfusion : குருதியூட்டுதல்: நோயுற்ற ஒருவரின் உடலுக்குள் நலமாகவுள்ள ஒருவரின் இரத்தத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்துதல். செலுத்தப்படும் இரத்தம், நோயாளியின் இரத்தம் எந்தப்பிரிவைச் சேர்ந்ததோ அதே பிரிவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்

transient response : (மின்) குறுநேர எதிர்வினை : கணநேரச் சமிக்ஞைக்குரிய அல்லது விசைக்குரிய ஒரு குறுகியநேர எதிர்ச் செயல்

transistor . (மின்.) டிரான்சிஸ்டர் (மின்) : மின்னணு மின்னோட்டங்களில்_முன்னர் வெற்றிடக் குழல்கள் செய்து வந்த பணிகளைச் செய்கின்ற அடக்கமான சின்னஞ் சிறிய பொருள். வடிவில் சிறியது சூடேறாது. உடனடியாகச் செயல்படுவது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் வாய்களைக் கொண்ட தீவிர அரைக் கடத்திக் கருவி

transistor radio : (வானொ.) மின்மப் பெருக்கி வானொலி : வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மின்மப் பெருக்கிகள் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்படும் வானொலி. இவை மின்சுற்றுவழி, விசை வழங்கீடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் நுண்பதிப்பு உறுப்பகளாகும். இவை சாதாரணமாக வீட்டு மின்னோட்டத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய மின்கலத்தொகுதி களாக இருக்கும். இந்த வகை வானொலிக்கும் குறைந்த அளவே மின்விசை தேவைப்படுவதால், மின்கலங்கள் நெடுநாட்கள் வேலை செய்யும். இவை அளவில் சிறியதாக இருப்பதால் இந்த வானொலிகளை மிகச் சிறியதாகக் கையடக்க அளவிலும் தயாரிக்க முடிகிறது

transit : கோண நிலை அளவீட்டுக் கருவி : இக்கருவியானது (1) பார்ப்பதற்கு தொலைநோக்கி, (2) அளவுகள் குறிக்கப்பட்ட வில்கள். கிடைமட்ட செங்குத்துக் கோணங்களை அளப்பதற்கு ஒரு வெர்னியர், (3) சமநிலை மட்ட்ம் (4) சம நிலைப்படுத்தும் ஸ்குருக் களுடன் ஒரு முக்காலி ஆகியவை அடங்கியது. (சர்வே) கோணங்களை அளக்கவும், பேரிங்குகளை நிர்ணயிக்கவும் சம நிலை காணவும் சர்வேயர்களும் என்ஜினியர்களும் பயன்படுத்தும் கருவி

transite : (உலோ) டிரான்சிட்ஸ் : கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகியவற்றைத் தயாரிக்கவும் அடுப்பு சூளைக்குள் உள்பரப்புப் பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது

transit time : (மின்) கடப்பு நேரம் : ஓர் எலெக்ட்ரான் குழலில் எதிர்முனையிலிருந்து தகட்டுக்குச் செல்வதற்கு எலெக்ட்ரான் கள் எடுத்துக் கொள்ளும் நேரம்

transition strip : (வானூ) விமான ஓரப் பாதை : விமான நிலையத்தில் ஓடு பாதை அல்லது இதர கெட்டிக்கப்பட்ட பரப்புக்கு அருகே உள்ள விமான இறங்கு வட்டாரத்தின் ஒரு பகுதி. இது உடைத்த கற்கள் அல்ல்து வேறு தகுந்த பொருட்களால் கெட்டிக்கப்பட்டது. விமானம் பத்திரமாக இறங்கவும் ஓடுபாதையில் அல்லது மேற்படி ஒரப்பகுதியில் எந்தத் திசையிலும் தரையில் ஓடவும் இப்பாதை உதவும்

transit man : டிரான்சிட் உதவியாளர் : சர்வேயர் அல்லது என்ஜினியர் பயன்படுத்துகிற டிரான் சிட் கருவியைக் கையாளுபவர். அவர் ஒரு பட்டதாரி என்ஜினியராக இருக்கத் தேவையில்லை

transitron : (மின்.) டிரான்சிட்ரான் : ஓர் ஊடுரு ஊசலியில் திரைக்கும் அடக்கி வலைகளுக்கு மிடையில் வைக்கப்படும் படிகம்

translucent: ஒளிக்கசிவு : ஓரளவு ஒளி ஊடுருவுகிற (காகிதத் தாயரிப்பு) பளபளப்பான நேர்த்தி கொண்ட, பூச்சு உள்ள அட்டை

translunar space: (விண்.) நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி: பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதையில் தாழ்ந்த வரம்புத் தொலைவில் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோளப் படுகையாக உருவகிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. இது சந்திரனுக்கு அப்பால் பல்லாயிரம் மைல்கள் பரப்புள்ளது

transmission: (தானி) செலுத்தீடு: மோட்டார் வாகனத்தின் பின் பகுதியில் உறுப்புப் பெட்டிக்குள் கியர்கள் அமைந்துள்ள ஏற்பாட்டைக் குறிப்பது. இதில் ஏற்படுகிற மாறுதல்களின் விளைவாக வேக விகிதத்தில் மாற்றம், முன் புறத்தை நோக்கி இயக்கம் ஆகியவை சாத்தியமாகின்றன transmission line: (மின்) மின் அனுப்பீட்டுக் கம்பி: முன்விசையைச் செலுத்துவதற்கு அல்லது கொண்டு செல்வதற்குப் பயன்படும் கம்பி அல்லது கம்பிகள்

transmitter ;(மின்) ஒலிப்பரப்பனுப்பீட்டுக் கருவி: தொலைபேசிக் கருவியில் பேசுகின்ற முனையைக் குறிக்கும். இது இரு தட்டையான கரிம மின்வாய்கள் உள்ளன.இவற்றில் ஒன்று அசையும்

transmitting set: அனுப்பு சாதனம் : குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மாறலை அல்லது தொடர்ச்சியான ஊர்தி அலையைத் தோற்றுவிப்பதற்குப் பயன்படும் சாதனம்

transmutation: (மின்) தனிம மாற்றம்: ஒரு தனிமத்தை வேறு தனிமமாக மாற்றுதல் கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியத் தயாரிப்புகளிலிருந்து வெளிப்படும் துகள்களைக் கொண்டு தாக்குவதன் மூலம் சமீப ஆண்டுகளில் தனிமங்களை வேறு ஒன்றாக மாற்றுவது சாதிக்கப்பட்டுள்ளது. சைக்ளோட்ரானைப் பயன்படுத்தி இதைச் சாதிப்பது மற்றொரு முறை

transom: (க.க.) சிறு சாளரம் : (கட்டட) ஒரு கதவு அல்லது ஜன்னலுக்கு மேலாக உள்ள சிறு கதவு.

transom: (க.க.) குறுக்குக் கட்டை : வாசற்படிநிலைக் குறுக்கட்டை

transombar: (க.க.) நடுச்சட்டம்: கதவை, ஜன்னலை இரண்டாகப் பிரிக்கிற கிடைமட்டமாக அமைந்த நடுச்சட்டம். இதன் பலகை மேல் பகுதியை மட்டும் தனியே திறக்க முடியும்

transparency: ஊடுருவு ஒளிப்படம்: இதுவும் ஒரு ஒளிப்படமே எனினும் இது ஒளி ஊடுருவுகின்ற பிலிம் வடிவில் அமைந்த படம். ஒளியில் காட்டுவதன் மூலமே படத்தைக் காண இயலும்

transparent: ஒளி ஊடுருவுகிற: பொருட்களைத் தெளிவாகக் காண்கிற வகையில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது

transportation: (தானி) சரக்குப் போக்குவரத்து: சரக்குகளை உற்பத்திச் சாலைகளிலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு செல்லுதலும், உற்பத்திச் சாலைகளுக்கும் பொருள்களைக் கொண்டு வருதலும்

transpose: மாற்றிப்போடு: ஒரு சமன்பாட்டில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு உறுப்புகளின் சமத்துவ நிலை மாறாமல் இருக்க மாறிய அடையாளக் குறியுடன் மாற்றிப் போடுதல்

trap: நீராவி பொறியமைவு: நீராவியால் வெப்பமேற்றும் முறைகளில் நீர் படிதலையும், காற்றையும் ரேடியேட்டர் குழாய் முதலிய வற்றிலிருந்து நீராவியைச் செலுத்தாமல் வெளியேற்றுதல்

trap door: (க.க) கள்ளக் கதவு: தரையில், மச்சுப்புறத்தில் அல்லது கூரையில் அமைந்த திறப்பை மூடுவதற்கான கதவு அல்லது மூடி

trapezium: நாற்கரம் : எந்த இரு பக்கங்களும் இணையாக இல்லாத நான்கு புறங்களைக் கொண்ட வடிவம்

trapezoid: கோடகம்: நாற்கரம் கொண்ட உருவம். இதில் இரு புயங்கள் இணையானவை(கணித) பரப்பு= இணையாக உள்ள பக்கங்களின் கூட்டுத் தொகையில் பாதி X செங்குத்துக் கோட்டின் நீளம் trap rock: இடைப்பாறை: மிக உறுதியான, உழைக்கக் கூடிய பாறை: வெட்டி எடுப்பது கடினம். சாலைகள் அமைக்கவும், ரயில் தண்டவாளங்களுக்குத் தளமாகவும் பயன்படுவது

trass: பூச்சுக்கலவை: (குழை.)ஒரு வகையான சாம்பல், மஞ்சள் அல்லது வெண்மை நிறமண், எரிமலைகள் உள்ள பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுவது. நீருக்கடியில் நன்கு கெட்டிப்படுகிற சிமென்ட் தயாரிப்புக்குப் பயன்படுவது

traveling crane: (வார்) நகரும் பளுத்தூக்கி: நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்தூக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது.பெர்துவில் மேலி ருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன். அடிப்பகுதி குறுக்குத் தண்டு மீது அமைந்தது. இத்தண்டின் முனைகள் இணை அமைந்த தண்டவாளங்கள் மீது உட்கார்ந்திருக்கும்

treacle stage: டிரேசில் ஸ்டேஜ்: (குழை.) வெப்பமாக்கப்பட்ட பின் குளிர்ந்ததும் கெட்டியா கின்ற பிசின் திரவ நிலையில் இருப்பது

tread: படித்தரை: கட்டுமானபடியின் சமதரையான பகுதி. படி யேறுகையில் பாதங்களை வைக்கும் பகுதி

treadle: (எந்) மிதித்தியக்கும் காலால் இயக்குகின்ற எந்திரத்தின் பகுதி

trefoil: மூமட்ட (க.க.) ஒன்றிணைந்த மூவட்ட அலங்காரப் பகுதி

treillage: (க.க.) பந்தல்: கொடிகள் படர்ந்து அமைவதற்காகப் போடப்படும் பந்தல்

trellis (க.க.) பின்னல் தட்டி: குறுக்குக் கம்பிப் பின்னல் அமைவு. தாவரங்களுக்கும் மலர் களுக்கும் ஆதாரமாக இது பயன்படுத்தப்படுகிறது

trench: நெடும்பள்ளம்: (பல நெடும் பள்ளம்) குழாய்களைப் புதைப்பது போன்று தரையில் அமைக்கப்படுகிற நீண்ட குறுகிய பள்ளம்

trend: நிலவரம்: பொதுவான போக்கு

tre-pan: (எந்.) ஒரு துளையைச் சுற்றி வட்டமான குழிவை வெட்டுதல்

T rest: டி.ரெஸ்ட்: மரவேலை லேத் எந்திரத்தில் வேலைக் கருவிக்கான தாங்கு நிலை. பணி செய்ய வேண்டிய பொருளை தேய்ப்புச் சக்கரம் கொண்டு வேலை செய்வதற்கும் தாங்கு நிலை

trestle: நாற்கால் தாங்கி: கீழ் நோக்கி சரிவாக அமைந்த நான்கு கால்கள் மீது அமைந்த உத்தரம். இவ்விதமான இரண்டைப் பக்கம் பக்கமாக வைத்து அவற்றின் மீது ஒரு பலகை அமைக்கலாம். பள்ளம் அல்லது குழிவின் மீது இவ் விதக் கட்டுமானத்தை அமைத்து அதன் மீது சாலை அல்லது ரயில் பாதை போடலாம். (இருக்கை) இவ்விதக் கட்டடத்தின் மீது பலகை அமைத்து மேசையாக்கலாம். (மெத்தை) அகன்ற மேல் பகுதி யைக் கொண்ட அறுப்பதற்கான தாங்கு தூண். வெளிமுனைகளில் திண்டு வைக்கப்பட்டது

trest'e table: (வரை) நாற்கால் தாங்கி மேசை: நாற்கால் தாங்கி மீது வரைவதற்காக அமைக்கப்பட்ட பெரிய பலகை

triangle: முக்கோணம்: மூன்று புறங்களையும் மூன்று உள்கோணங்களையும் கொண்ட வடிவம். செங்கோணத்தில் ஒரு கோணம் நேர் கோணமாக இருக்கும்

triangular scale: (வரை) முக்கோண அளவுகோல்: பல்வேறு அளவீடுகளை ஒரே கோலில் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கோண வடிவ அளவு கோல்

triangular truss: முக்கோணந்தாங்கி: குறுகிய விரிபரப்புக்கான குறிப்பாக கூரைகளை அமைப்பதற்கான தாங்கி

triangulation: முக்கோணமாக்கு முறை: நிலம் மற்றும் நீர் மீதான் பரப்புகளையும் இவற்றின் மீதுள்ள குறிப்பிட்ட நிலைகள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் அளவிட இந்த நிலைகளைச் சேர்த்து பல கோணங்களை உருவாக்கிக் கொண்டு அடித்தளம், கோணம் ஆகியவற்றைக் கணக்கிடும் முறை

trickle charge: துளி மின்னேற்றி: இரு திசை மின்சாரத்தை நேர்மின் சாரமாக மாற்றுகிற திருத்தி. தேங்கு மின்கலத்துக்கு தினமும் 24 மணி நேரம், பொதுவில் மிகக் குறைவான விகிதத்தில் நேர் மின்சாரத்தை அளிப்பது

trifiorium; ரிஃபியோரியம்: ஒரு சர்ச்சின் உள்ளே பிரதான நடுப் பாதைக்கு மேலாக உள்ள சரிந்த கூரைக்கும் நடைபாதை விதானத்துக்கும் இடையே உள்ள வெளி

trigonometry: (ணி) திரி கோணமிதி: ஒரு முக்கோணத்தின் புறங்கள், கோணங்கள் ஆகியவற்றை அளக்கும் அறிவியல்

trim: (க.க.) டிரிம்: ஒரு கதவு அல்லது பலகணியின் நிலைத் தண்டுக்கும் பிளாஸ்டருக்கும் இடையில் உள்ள இணைப்புகளை மறைப்பதற்கு மரம் அல்லது உலோகத்தால் ஆன பகுதிகள். காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட் காகிதத்தின் ஓரம் வெட்டுவதற்கு முன் மிக அதிகபட்ச அகலம்.

trim: டிரிம்: ஒரு விமானம் திருப்பாமல், ஏறி இறங்காமல் பறக்கிற நிலையில் காற்று வீசும் அச்சுக்கும் விமான அச்சுக்கும் இடையிலான கோணம். (கட்டிட) கதவு, பல கணி ஆகியவற்றைச் சுற்றிலும் உள்ளே அல்லது வெளியே, அமைந்த வடிப்பு வேலை அல்லது இதர நேர்த்தி வேலை

trim angle : டிரிம் கோணம்: கடல் விமானத்தின் மிதவைப் பகுதி, பறக்கும் படகின் உடல் பகுதி, இவற்றின் கிடைமட்டக் கோட்டுக் கும், நீளவாட்டுக் கோட்டுத்கும் இடையிலான கோணம். மேற்கூறியவற்றின் முன்புறப் பகுதி, பின்புறப்பகுதியை விடத் தூக்கலாக இருந்தால் கோணம் நேர்மறையானது

trimmer arch : (க. க.) நீள் வளைவு : கணப்பு மேலுள்ளது போன்று சற்று தட்டையான வளைவு

trimmers : (க.க.) டிரிம்மர்: மரப்பலகைகள், உத்தரங்கள் கொண்டு தரைத்தளம் அமைக்கும் போது பயன்படும் தாங்கு உத்தரம்

trimming dies : (எந்) பிசுறு நீக்கு அச்சுகள் : நீட்டப்பட்ட அல்லது வேறு வகையில் உருவாக்கப்பட்ட உலோகப் பொருட்களின் ஓரங்களில் உள்ள பிசுறுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அச்சுகள்

trimming joist : ( க.க) டிரிழ்மிங் உத்தரம் : சுவர் பிதுக்கங்கள் மேல் அமைந்த உத்தரத்தைத் தாங்கும் உத்தரம் trim size : ஓரம் வெட்டிய அளவு : ஓரங்கள் வெட்டப்பட்ட பின் பைண்ட் செய்யப்பட்ட பின்னர் உள்ள பக்கத்தின் அளவு

triode : (மின்.) மும்முனையம் : எதிர்முனை: வலை; தகடு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வெற்றிடக்குழல்

trip hammer : (எந்) விழு சம்மட்டி : விசைமூலம் இயங்கும் சம்மட்டி. இந்த வகை சம்மட்டியில் சம்மட்டி உயரே சென்ற பின் அது தானாகக் கீழே விழுகின்ற மாதிரியில் ஏற்பாடு இருக்கும்

triphibian (வானூ.) முத்திற விமானம் : நிலம், நீர், விழுபணி. அல்லது ஐஸ் கட்டித் தரையிலிருந்து கிளம்புவதற்கு அல்லது இறங்குவதற்கு வசதியான அடிப்புற சாதனம் கொண்ட விமானம்

triplane : (வானூ.) மூவிறக்கை விமானம் : ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று இறக்கைகள் அமைந்த விமானம்

triple case : (அச்சு) மூன்று கேஸ் : வெவ்வேறான மூன்று வடிவங்களில் உள்ள எழுத்துகளைப் போட்டு வைப்பதற்கான பல அறைச் சட்டம்

triple point : (குளி.பத.) மும்மடி நிலை : வாயு, திரவ, திட நிலையிலுள்ள மூன்று பொருட்கள் சமநிலையில் இருக்கக்கூடிய நிலையான மையம்

triplex steel : (உலோ.) முப்படி உருக்கு : பெஸ்ஸிமர் முறை. திறந்த உலைமுறை, மின்சாரமுறை ஆகிய மூன்றையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உருக்கு

tripoli : திரிபோலி : பொடிப் பொடியாக உதிர்ந்து போகிற அளவுக்குத் தரம் கெட்டுப்போன சுண்ணாம்புக்கல், பாலிஷ் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

tripper : (பட்.) விடுவை : எந்திரத்தில் ஓர் உறுப்பு திடீரென மற்றோர் உறுப்பை விடுவிக்கிற ஏற்பாடு அல்லது அவ்விதம் விடுவிக்கிற உறுப்பு. இந்த ஏற்பாடு கையால் இயங்குவதாக அல்லது விசையால் இயங்குவதாக இருக்கும்

tri-sect : மூவெட்டு : மூன்று சம பகுதிகளாகப் பிரித்தல்

tristimulus values : (மின்) முத்தூண்டல் மதிப்பளவுகள்: வண்ணத் தொலைக்காட்சியில், ஒரு மாதிரி வண்ணத்திற்கு இணையாக இணைய வேண்டிய ஒவ்வொரு அடிப்படை வண்ணத்தின் அளவு

triton (மின்:) டிரைட்டான்: ஒரு புரோட்டானும் இரு நியூட்ரான்களும் அடங்கிய உமிழ்வுத் துகள்

trivalent : (மின் ) மூவணு இணைவுத் திறன் : மூன்று அணுக்களுடன் இணையும் எலெக்ட்ரான்களின் திறன்

trochanter, (great trochanter:) (உட.) பெருங்கால் எலும்பு : காலின் உச்சிப்பகுதியின் புறத்தே தொட்டு உணரக்கூடிய எடுப்பான எலும்பின் பகுதி. காலை வெளிப்புறமாகத் திருப்புவதற்கும் காலைப் பக்கவாட்டில் திருப்புவதற்கும் பயன்படும் தசைகளில் சில இதனுடன் பொருத்தப்பட்டுள்ளன. சிறு கால் எலும்புத் தசைகள், முழங் காலை மேல்நோக்கித்தூக்க உதவுகின்றன

trolley : (மின்.) தொடு சக்கரம் : ஒரு சாதனத்தை இயக்க அல்லது சாலையில் ஓடும் வாகனம் இயங்குவதற்கு தலைக்குமேலே உள்ள மின் கம்பியிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு ஒரு தண்டின் மேல் நுனியில் மின் கம்பிமீது உட்காரும் வகையில் சிறு சக்கரம் இருக்கும் அல்லது வழுக்கிச் செல்லும் தொடு சாதனம் இருக்கும். (எந்திர) சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தைத் தூக்குவதற்கான சக்கர வடிவிலான தாங்கு பகுதி. இது ஒரு நீண்ட உலோகத் தண்டும்து நகர்ந்து செல்லக்கூடியது

troostite : (உலோ.) டிரூஸ் டைட்டு: மார்ட்டென்சைட் என்ற எஃகின் கடினத் தன்மைக்குக் குறைவான கடினத்தன்மையுள்ள எஃகின் இடைமாறு நிலைக் கட்டமைப்புத் தனிமம்

troposphere: (மின்.) அடிவளி மண்டலம் : பூமியின் வாயுமண்டலத்தின் அடிப்பகுதி. இதில் மேகங்கள் உருவாகின்றன. உயரே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது

trouble lamp : (மின்) சங்கட விளக்கு: மிக நீண்ட மின் கம்பியின் நுனியில் பல்பு பொருத்தப்பட்ட விளக்கு. பழுது பார்க்கும் போது அவ்விடத்துக்கு ஒளி கிடைக்க உதவுவது

trowel : (வார்ப்.) கரணை : வார்ப்பட ஆலைக்கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 3.8 செ.மீ. அகலமும் 12 அல்லது 15 செ.மீ. நீளமும் உள்ளவை

troy weight :டிராய் எடை; அளவு முறைப்படி ஒரு ராத்தல் என்பது 12 அவுன்ஸ். பொற் கொல்லர்களும், நகைக் கடைக்காரர்களும் பயன்படுத்தும் எடைமுறை. 24 கிரெய்ன் = 1 பென்னி வெயிட் 20 பென்னி வெய்ட்

வெயிட் = 1 அவுன்ஸ்

12 அவுன்ஸ் = 1 பவுண்டு

true power : (மின்.) மெய்விசை: ஒரு மின்சுற்றுவழியில் உள்ள படிக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் மின்விசையின் அளவு

true air speed meter : (வானூ) விமான அசல் வேகமானி: இது ஒரு வகையான காற்று வேகமானி, இது காற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டு விமானத்தின் உண்மையான வேகத்தையும் கண்டறிந்து கூறுவது

trunk : (மின்.) மைய ஊடுருளை: மின்விசைப் பலகைகளுக்கும் தொலைபேசித் தொடர்பகங்களுக்கு மிடையில் கம்பிகளையும் கம்பிவடங்களையும் இடையிணைப்பு செய்யும் ஊடுருளை

trunnion சாய்வு புயங்கள் : நீண்ட குழல் அல்லது தண்டின் நடுப்பகுதியில் இரு புறங்களிலும் நீட்டிக் கொண்டிருக்கிற புயங்கள். இவற்றைத் தாங்குதூண்கள் மீது அமைத்தால் குழலை அல்லது தண்டை மேலும் கீழுமாகத் தக்க படி சாய்த்து அமைக்க முடியும்

truss : (க.க.) மூட்டு: கட்டடத்தில் நீண்ட இடைவெளிகளுக்கு நடுவே பாரத்தைத் தாங்குவதற்காக அமைக்கப்படுகிற முன்கூட்டி இணைக்கப்பட்ட முக்கோண வடிவ கட்டுமானப் பகுதிகள், இருக்கைகளில் இரு ஓரங்களைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உறுதியான சட்டங்கள். பொதுவில் இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்

trussed axle : (தானி) முட்டுத் தண்டு: முட்டுத் தண்டு மூலம் உறுதியேற்றப்பட்ட அச்சு

trussed beam : (க.க.) முட்டுக் கம்பி மூலம் வலுவேற்றப்பட்ட நீண்ட தண்டு truss rod: முட்டுக் மூலம் வலுவேற்றப்பட் தண்டின் இருமுனைகளிலும் பிணைக்கப்பட்ட கம்பி

try square : (எந்) அளவுச் சதுரம் : தாங்கள் கையாளும் பொருள் உண்மையில் சதுரமானதானதா என்று சோதிக்க மெக்கானிக்குகள் பயன்படுத்தும் ஒரு சிறு சதுரம், செங்கோணத்தைக் குறிக்கவும் இது பயன்படும்

T slot: (எந்.) T. குழி : கடைதல் ,இழைத்தல், மற்றும் வேறு பணிக்கான எந்திரத்தின் மேடையில் உள் வெட்டு மூலம் டி. போல்ட்டின் தலை உட்காருகிற அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட குழிவு. இக்குழிவானது டி. போல்ட்டை தக்க நிலைக்கு சரிபொருத்தம் செய்ய உதவும்

T slot cutter : (எந்) T குழிவெட்டுக் கருவி : குழிகளின் அகன்ற பகுதிக்கு நேர்த்தி அளிப்பதற்காகப் பயன்படுகிற கடைசல் வெட்டுக் கருவி

T sqaure : (க.க) T. சதுரம்: வடி வரைவாளர் பயன்படுத்தும் கருவி. இரண்டு முதல் மூன்று அங்குல அகலம் கொண்ட ஒன்று முதல் ஐந்து அடி நீளம் கொண்ட பட்டை. இதன் தலைப்புறத்தில் செங்கோண்மாக அமையும் வகையில் இப்படை பொருத்தப்பட்டுள்ளது. தலைப்புறப் பட்டை குறைந்தது இரு மடங்கு பருமன் கொண்டது. டி. சதுரமானது இணைகோடுகளையும் வரையப் பயன்படுவது

tube : (மின்.) குழாய்: ரேடியோ கலைகளைக் கண்டுபிடித்து பெருக்குவதற்கான கருவி, மற்றும் சிறு அளவு மின்சாரங்களைக் கண்டறியவும், இருதிசை மின்சாரத்தை நேர்திசை மின்சாரமாகத் திருத்துவதற்கும் பயன்படுகிற சாதனங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுகிற கருவிகள் உட்பட பொதுப்படையான சொல்

tube punch : (தோல்) குழல் துளைக்கருவி : கட்டிங் பிளையர் போன்று கையால் இயக்கித் துளையிடும் கருவி. துளையிடுவதற்கென குழிவான சிறு குழல் அல்லது குழல்கள் உள்ளன. பொத்தான் பொருத்துவதற்கு அல்லது கண் அமைக்க இவ்விதம் துளையிடப்படும்

tub-sizing : (அச்சு) தொட்டி முக்கு : காகிதத்தின் மேற்பரப்புக்கு நேர்த்தி அளிப்பதற்காகக் கூழ் பூச்சு அளிக்க பெரிய காகிதச் சுருளை கூழ் தொட்டியில் முக்குதல்

tubular axle : (தானி) குழல் அச்சு : உருக்கினால் ஆன குழலினால் செய்யப்பட்ட அச்சு

tubular radiator : (தானி.) குழாய்முறை வெப்பமகற்றி : வெப்பம் அகற்றும் சாதனம், பல சிறிய குழாய்களைக் கொண்டது. இவற்றின் வழியே நீர் பாய்ந்துசெல்லும் போது வெப்பத்தை எடுத்துக்கொண்டு குளிர்விப்பு நடைபெறுகிறது

tudor style : (க.க) டியூடர் பாணி : டியூடர் வம்ச அரசர்கள் இங்கிலாந்தை ஆண்ட காலத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைப்பாணி. பொதுவில் எட்டாம் ஹென்றி மன்னர் காலத்தைக் குறிப்பது tufting : குஞ்சத் தையல் : மெத்தை பதித்த உள்ளே இருக்கிற மென்பொருள் இடம் நகராமல் இருக்க அதையும் போர்த்து துணியையும் சேர்த்துத் தைத்தல்.குஞ்சத்தையல் போட்ட இடத்தில் போர்த்துத் துணியை கெட்டி நூல் அறுத்து விடாமல் இருக்க ஒரு பொத்தான் அமைக்கப்படும், அது பார்வையையும் அளிக்கும்

tulip tree : (மரம்.) துலிப் மரம்: போப்லார் அல்லது துவிப்போப் லார் எனப்படும் மரம். லேசான மஞ்சள் நிறம் கொண்டது. மென் மையானது. வேலைப்பாடுக்கு எளியது. வெள்ளை ஊசியிலை மரம் போல இதைப் பலவகைக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்

tumble : பிசிறு உருட்டு : வார்ப்படப் பொருட்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கப்பட்ட உடன் ஒரு பெரிய பீப்பாயில் போட்டு உருட்டுதல். ஒன்றோடு. ஒன்று நன்கு உராயும் போது பிசிறுகள் அகன்று இப்பொருட்கள் சுத்தமாகி விடும்

tumbling : (உலோ) உருட்டுச் சுத்திகரிப்பு : சிறு உலோகப் பகுதிகளைத் தனிவகை உராய்பொருள் களைக் கொண்ட சுழலும் பீப்பாய் வடிவ எந்திரத்தில் இட்டு உருட்டுவதன் மூலமாகத் துப்புரவு செய்து வடிவமைத்தல்

tumbled : (அச்சு) புரண்டு போதல் : அச்சிடப்பட்ட தாளை மேலிருந்து கீழாகப் புரட்டிப் பார்ப்பது, இது தவிர்க்கப்பட வேண்டும். வலமிருந்து இடமாகத் தான் புரட்ட வேண்டும்

tumbler gear :புரட்டு கியர்: வரிசையான பல கியர்களில் நடுவில் அமைந்த கியர்.இயக்கப்பட்ட கியரின் திசையை பின்புறமாக மாற்றுவதற்கு இது உதவும்

tumour, tumor:(நோயி) கழலை: உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். 'புற்றுக்கழலை' என்பதை மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக்கூடியதாகும். 'வெற்றுக்கழலை' என்பது சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்

tuned amplifier : (மின்) இசைவிப்பு மின் மிகைப்பி ; உட்பாட்டுப் பிணைப்புக்காவும், வெளிப்பாட்டுப் பிணைப்புக்காகவும் இசை விப்பு செய்த மின்சுற்று வழியைப் பயன்படுத்தும் ஒரு மின்மிகைப்பி

tuned circuit : (மின்.) இசைவிப்பு மின்சுற்றுவழி : கொண்மம், தூண்டம், தடை இம் மூன்றையும் வரிசையாக அல்லது இணையாகக் கொள்ள ஒரு மின் சுற்று வழி. இதற்கு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் விசை யூட்டும்போது, அதன் மின்கம்பிச் சுருளுக்கும் கொண்மிக்குமிடையில் ஆற்றல் பரிமாற்றம் நடை பெறுகிறது

tuner : அலைத்தேர்வி : தேவையான குறிப்பிட்ட ரேடியோ அலைகளை மட்டும் தேர்ந் தெடுத்து மற்ற அலைகளை நிராகரிக்கும் வகையில் சரியமைக்கப்படுகிற கன்டென்சர் சர்க்கியூட்

tung oil : (வண்) டங் ஆயில்: சீனாவிலும், ஜப்பானிலும் காணப்படும் டங் மரத்தின் விதை யிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய், வார்னிஷ் உலர்விகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது. சீன மர எண்ணெய் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு

tungsten : (வேதி) டங்ஸ்டன் : சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின்பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் டங்ஸ்டே (Na2W04) வடிவில் மரம், துணிகளின் மீது தீப்பிடிக்காத தன்மை அளிக்கப் பயன்படுகிறது

tungsten carbide : டங்ஸ்டன் கார்பைட் : மீதேன் அல்லது ஹைட்ரோ கார்பன் வாயுவில் வைத்து பழுக்கக் காய்ச்சிய டங்ஸ்டனை கரிம்முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புப் பழுப்புப் பவுடர். இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. அல்லது இது கோபால்ட் அல்லது வேறு கெட்டிப்படுத்தும் பொருளுடன் சேர்க்கப்பட்டு கட்டியாக்கப்பட்டு அதைக் கொண்டு உயர்வேக வெட்டு உலோகம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் வேலைக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உலோகப் பொருள் விடியாமெட்டல், கார்போலாய், போரான் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்பட்ட வெட்டுக் கருவிகள் முன்னர் இருந்தவற்றை விட 3 முதல் 5 மடங்குவேகத்தில் வெட்டுபவை. இது விலை உயர்ந்தது என்றாலும் பல அமைப்புகள், செலவுக்கு ஏற்ப இது உழைக்கிறது என்று கருதுகின்றனர்

tungsten lamp : (மின்) டங்ஸ்டன் பல்பு : டங்ஸ்டன் உலோகத்தால் ஆன மெல்லிய கம்பியை இழையாகக் கொண்ட மின்சார பல்பு

tungten steel : (உலோ) டங்ஸ்டன் உருக்கு : வெட்டு வேலைக் கருவிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோக உருக்கு

tuning : (மின்.) இயைவிப்பு : ரேடியோ அலைகளைப் பெறும் சர்க்கியூட்டின் மின் பண்புகளை மாற்றி, நாம் விரும்புகிற குறிப்பிட்ட சிக்னல்கள் நன்கு தெளிவாகவும், வலுவாகவும் பெறும் படி செய்தல்.

tuning fork : (மின்) இசைக் கவடு: ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக் கருவி

tuning fork : (மின்) இசைக் கவடு:படம்

tunel engineer: (பொறி) சுரங்கப் பொறியர் : போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மலைகள் ஊடாகவும் ஆறுகளுக்கு அடியிலும் சுரங்கப் பாதை அமைக்க அளவீடுகள் டிசைன்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுபவர்

turbidity : கலங்கல்: தெளிவான நீருடன் ஒப்பிடுகையில் வண்டல் போன்றவற்றால் நீர் கலங்கி இருக்கும் அளவு

turbine : டர்பைன் ; ஒரு வகை நீராவி என்ஜின். இதில் இயக்குவிக்கும் உறுப்புகள் அனைத்தும் சுழல்கின்றன

turbojet : (விண்) பீற்றுவளி விசைப்பொறி உருளை: பீற்று துளியால் இயக்கப்படும் விசையாழி. மின்னோடியின் பீற்று வாயுக்க்ள் மூலம் விசையாழி இயக்கப்படுகிறது

turbo - propeller engine : (வானூ.) டர்போ கழலி என்ஜின் : வாயு ட்ர்பைன் மாதிரியிலான விமான என்ஜின், இதில் டர்பைன் மாதிரியிலான விமான என்ஜின். இதில் டர்பைன் விசையானது கம் பிரசரையும் அத்துடன் சுழலியை இயக்கப் பயன்படுகிறது. அநேக சமயங்களில் இது 'டர்போராப்' என்றும் குறிப்பிடப்படுகிறது

turbulent flow : (வானூ) கொந்தளிப்பான ஓட்டம் : நீர்ம் ஒட்டத்தில் எந்த குறிப்பிட்ட இடத்திலும் வேகத்தின் அளவும், திசையும் நேரத்துக்கு நேரம் விரைவாக மாறிக்கொண்டே இருக்கின்ற நிலை

turf or peat: டர்ப் அல்லது பீட்

turn - and - bank Indicator : (வானூ.) திருப்பு சாய்வுமானி : விமானம் எந்த அளவுக்குத் திரும்பு கிறது என்பதையும் எந்த அள்வுக்குத் சாய்ந்து செல்கிறது என்பதையும் காட்டுவதற்கு ஒரே உறைக்குள் அமைந்துள்ள கருவி

turn buckle : (எந்) திருப்பு பிணைப்பு : இரு தண்டுகளை ஒன்றோடு ஒன்று திருகி இணைப்பதற்கு புரி கொண்ட இணைப்பு

turned sort ; (அச்சு) திரும்பிய எழுத்து : அச்சுக் கோக்கும்போது வேண்டுமென்றே மேல் பகுதி அல்லது முகப்புப்பகுதி கீழ் நோக்கி இருக்கும் வகையில் அமைக்கப்படுவது. இதனால் பிரதி எடுக்கும் போது அடிப்பகுதி மேல் நோக்கி இருப்பதால் கருப்பாக விழும். உரிய எழுத்து இல்லாத நிலையில் அந்த இடத்தில் உரிய எழுத்தைப் பின்னர் அமைக்க வேண்டும் என்று குறிப்பதற்காக இவ்விதம் தலைகுப்புற வேறு எழுத்து வைக்கப்படுகிறது

turning gouge : (மர.வே.) திருப்பு செதுக்குளி: கடைசல் எந்திரத்தில் மரக்கட்டைகளை சாய்வான முனை கொண்ட செதுக்குளியைப் பயன்படுத்தி மரத்தைச் செலுத்தி எடுப்பது. இவ்வித செதுக்குளி முனையின் அகலம். .6 முதல் 3 8செ.மீ. வரை இருக்கும்

turning machine : வளைப்பு எந்திரம் : ஒரு உருளையின் விளிம்பை வெளிப்புறமாக உள்ளே கம்பி அமைக்கிற வளையம் வளைத்து மடிக்கும் எந்திரம். வாளி அல்லது புனலின் விளிம்பு போன்று அமைக்கவல்லது

turn meter ; (வானூ) திரும்பு மீட்டர் ; விமானம் ஏதாவது ஒரு பக்கம் திரும்புகையில் அவ்விதம் திரும்புகிற விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அச்சிலிருந்து எந்த அளவில் உள்ளது என்பதைக் காட்டுகிற கருவி

turmeric: (வேதி.) மஞ்சள்: சீனா, கிழக்கிந்தியா மற்றும் பல வெப்ப மண்டல நாடுகளில் விளையும் பயிரிலிருந்து பெறப்படுவது. மஞ்சள் தாள் தயாரிப்புக்கு இது மஞ்சள் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. காரப் பொருள்களை சோதிப்பதற்கு இத்தாளைப் பயன் படுத்தும்போது மஞ்சள் தாள் பழுப்பு நிறமாக மாறும். மருத்துவம், உணவுப் பாருட்களுக்கு, நிறம் ஏற்றவும், துணிகளுக்குச் சாயமேற்றவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது

turns ratio (மின்) சுழற்சி விகிதம்: ஒரு மின்மாற்றியின் அடிப்படைச் சுருணையின் சுழற்சிகளின் எண்ணிக்கைக்கும், துணைச் சுருணையின் சுழற்சிகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்

turpentine: (வண்) கற்பூரத் தைலம்: விரைந்து ஆவியாகக் கூடிய நிறமற்ற திரவம். ஒரு வகைத் தனி நெடியும் சுவையும் உடையது. தேவதாரு மரங்களிலிருந்து கிடைக்கும் பிசின ரக்கு நெய்மப் பொருளிலிருந்து வாலை வடித்தல் மூலம் எடுக்கப்படுகிறது

turret (க.க.) துருத்து: பெரிய கட்டடத்தில் பொதுவில் ஒரு மூலையில் பிதுக்கத் தூண்களிலிருந்து மேலெழும்பி நிற்கும் சிறு கோபுரம் .காமிராவில் பல லென்சுகள் அமைக்கப்பட்ட ஓர் ஏற்பாடு. நான்கு லென்சுகளில் எதை வேண்டுமானாலும் முன்னே வரும்படி செய்துகொள்ள முடியும்

turret lathe: சுழல் கோபுர கடைசல் எந்திரம்: கடைசல் எந்திரத்தில் வெவ்வேறான வேலைக்கருவிகள் ஒரு சுழல் உருளையில் கீழ்நோக்கி செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். எதையும் கழற்றி பொருத்த வேண்டிய அவசியம் இன்றி தேவையான வேலைக் கருவியை முன் கொண்டு வந்து நிறுத்தி இயக்கலாம்

tuscan: டஸ்கன்: (க.க.) புராதன கட்டடக் கலையின் ஐந்து வகையில் நுணுக்க வேலைப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ள கட்டடக் கலை வகை

tueyre: காற்றுத் திறப்பு: இரும்புக் குழம்பு உள்ள தொட்டிக்குள் 'காற்றுப் பெட்டி' மூலம் காற்றைச் செலுத்துவதற்காக தொட்டியினுள் அமைந்த திறப்பு

tweezers: (அச்சு.) சிறு சாமணம்: சாமணம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை. அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமானால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது

twill: சாய்வரித் துளி: நெசவுப் பாலை காரணமாக துணியின் மேற்பரப்பில் சற்று மேடான குறுக்காகச் செல்வது போன்ற கோடுகள் காணப்படும்

twin ignition: (தானி) இரட்டைத் தீ பற்றுகை: இரு பற்ற வைப்பு உள்ள எரி என்ஜினில் ஒரே சமயத்தில் அல்லது மாறி மாறி வாயுக்கலவை தீப்பற்றும்வகையில் அமைக்கப்பட்ட இரட்டைப்பிரிப்பு முனைகளைக் கொண்ட ஏற்பாடு

twin-six engine: (தானி) இரட்டை ஆறு எஞ்சின்: 6 சிலிண்டர்களைக் கொண்ட இரு ஜோடி, 60 டிகிரி கோணத்தில் பொருத்தப் பட்டிருக்கும்

twist bits: (மர.வே) திருகு துண்டுகள்: உலோகத்தில் துளையிடப் பயன்படுத்தப்படும் திருகு துளைக் கருவிகள் போன்றவை.ஆனால் இவை சிறிய துண்டுகள். கருவியைப் பொருத்தப் பயன்படுபவை. இவற்றில் திருகு வரிப்பள்ளங்கள் பக்கம் பக்கமாக இருக்கும்.மரத்தில் ஸ்குருக்களை இறக்குவதற்கான துளைகள் போடப் பயன்படுபவை

twist bits: (மர.வே) திருகு துண்டுகள்படம்

twist drill: (எந்.) திருகு துளைக் கருவி: உலோக உருளை தண்டில் இரு புரிகள் பக்கம் பக்கமாக அமைந்து மேலிருந்து கீழாக நுனி வரை இறங்கும். உலோகம், மரம் இரண்டிலும் பயன்படுத்த இவை தயாரிக்கப்படுகின்றன. துளைத் தண்டு ஒரே சீராக இருக்கலாம். அல்லது கீழ்ப்புறத்தில் குவிந்தும் இருக்கலாம்

twist drill: (எந்.) திருகு துளைக் கருவி:படம்

two-filament bulbs.: (காண்க) இரு இழை பல்புகள் : இரட்டை இழை பல்பு.

two-line letter : (அச்சு) இரு வரி எழுத்து: ஒரு வாசகத்தின் முதல் எழுத்து; பெரிய அளவிலானது. இதன் உயரம் இரு வரிகள் அளவுக்கு உள்ளது

two-on: (அச்சு.) டூ ஆன்: ஒரே சமயத்தில் அதிகப் பிரதிகளை அச்சிட்ட இரண்டு அல்லது அதற்கு மேலான "பாரங்களை" அமைத்தல்

two-phase: (மின்) இரு ஃபேஸ்: இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள்

two-phase alternator: (மின்.) இரு ஃபேஸ் மின்னாக்கி: பல ஃபேஸ் நீர் திசை மின்சார மின்னாக்கி. ஃபேஸ் 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற வகையில் இரு வதை மின்னோட்டங்களை அளிக்கும் சுற்றுகளைக் கொண்டது

two-speed rear axle; (தானி. எந்.) இரு வேக பின் அச்சு: இந்த ஏற்பாட்டில் பின்புற அச்சில் இரு வேகச்சுற்றுக்கு அதாவது ஒற்றை வேக அச்சில் கிடைப்பதைப் போல இரு மடங்கு வேகத்துக்கு வழி செய்ய்ப்படுகிறது, குறிப்பாக லாரிகளில் இவ்விதம் செய்யப்படும். இதனால் என்ஜின் தேய்மானம் குறையும். பெட்ரோல் உபயோகம் குறையும்

two-tone steerhide: இரு வழி தோல் பயன்: விலை குறைந்த தோல் பொருள் புத்தகங்களை பைண்ட் செய்கையில் மேற்புறத்தில் அமைக்கவும், உறைப்பெட்டிகளின் மேற்புறத்தில் அமைக்கவும் பயன்படுவ்து. இயற்கை நிலையில் அல்லது பல வண்ணப் புள்ளிகளுடன் கிடைக்கப் பெறுவது

two way radio: இரு வழி வானொலி தொடர்புக் கருவி: பல்வேறு இடங்கள் இடையே ரேடியோ தொடர்பு கொள்வதற்கு உதவும் சாதனம். எங்கும் எடுத்துச் செல்லத்தக்கது. ரேடியோ அலைகளைப் பெறுவதற்கும் அனுப்புவதற்குமான கருவிகள் அடங்கியது

T wrench: 'T' வடிவ திருப்பு கருவி: 'T' வடிவில் உள்ள திருப்பு கருவி பற்றிக் கொள்வதற்குக் குழிவு இருக்கும்

tympan: (அச்சு) அழுத்துப் படலம்: திருப்பு கருவி அச்சிடும்போது காகிதம் மீது எழுத்துக்கள் நன்குபதிந்து அச்சிடுவதற்கான வகையில் தகுந்த அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அச்சு எந்திரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேலாக வைக்கப்படும் காகிதங்கள்

tympanum; (க.க) முகட்டுக் குமிழ்: கட்டடத்தின் மேற்புறத்தில் அலங்காரமாக முக்கோண வடிவில் அமைக்கப்படுகிற இடம்

type: (அச்சு:) அச்சு எழுத்து: உலோகத்தால் ஆன எழுத்து அச்சிடுவதற்குப் பயன்படுவது. இதன் உயரம். 0.918 அங்குலம்

type caster: (அச்சு.) அச்சு வார்ப்பு எந்திரம்: அச்சு எழுத்துக்களை வார்க்கும் எந்திரம்

type gauge: (அச்சு.) எழுத்து அளவி: அச்சுக் கோக்கப்பட்ட வாசகத்தில் எவ்வளவு வரிசைகள் உள்ளன என்று அளவிடுவதற்கு குறியீடு செய்யப்பட்ட மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன அளவி

type high: (அச்சு.) அச்சு உயரம் : அச்சு எழுத்தின் உயரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் இதன் உயரம் 0.918 அங்குலம் type metal: (அச்சு) அச்சு உலோகம்: ஒரு பங்கு ஈயம், இரு பங்கு ஆண்டிமணி, ஐந்து பங்கு காரீயம் ஆகியவற்றால் ஆன உலோகம்

type planer: (அச்சு.) எழுத்து சமன்படுத்தி: நல்ல கெட்டியான மரக்கட்டை சேரில் எழுத்துக்களை கலங்களாக அடுக்கிய பின்னர் எழுத்துக்களின் தலைகள் சமச் சீராக ஒரே மட்டத்தில் அமைய இக்கட்டை கொண்டு தட்டி விட்டுப் பிறகு கேஸை முடுக்குவர்

typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் : (டைபாய்டு). செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கேடும், நீண்ட நாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற ஒருவகை நச்சுக்காய்ச்சல். (படத்தில்) காணப்படும் ஒரு சிவப்பணுவின் பகுதியைக் காட்டுகிறது. இது 1000 மடங்கு பெரிது படுத்தப்பட்டதாகும்

'typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் படம்

typographer: (அச்சு) அச்செழுத்தாளர்: தலைமை அச்சாளர் அல்லது அச்சு எழுத்துக்களை வடிவமைப்பவர்

typographic: (அச்சு.) அச்சுக் கலை: அச்சுக்கலை தொடர்பாக

typography: (அச்சு.) அச்செழுத்தியல்: 1. அச்சுக்கோத்தல் அல்லது எழுத்துக்களை தக்கவாறு அடுக்குதல்

2. அச்சுக்கலை
U
U-bolt : (எந்.) U.மரையாணி : "U" என்ற ஆங்கில எழுத்தின் விடிவில் அமைந்த மரையாணி. இதன் இரு முனைகளிலும் திருகிழை அமைக்கப்பட்டிருக்கும்.இதனை உந்து ஊர்தியில் உள்ளது போன்ற விற்கருளைப் போல் 'பிடிப்பு ஊக்கு" என்றும் கூறுவர்

U clamp : (எந்.பட்.). U-பற்றுக் கருவி : "U" என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த பற்றுக்கட்டை. சமதளப் படுகைகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய இறுக்கிப் பொருத்துவதற்கு இது பயன்படுகிறது

u-dometer : (இயற்.) U-மழைமானி : ஒருவகை மழை மானி

ulcer : (நோயி..) கீழ்ப்புண் : தோலில் அல்லது வயிற்றிலோ வாயினுள்ளே இருக்கும் ஒரு சவ்வில் ஏற்புட்டுள்ள, விரைவில் ஆறாதிருக்கிற சீழ்ப்புண்

ullage : (விண்.) ஆவிச் சேதாரம் : ஆவியாய்ப் போனதால் ஏப்படும் குறைவிழப்பு

ulna : (உட.) அடி முழ எலும்பு : முன்கையின் இரு எலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. இது கையின் புறப்பகுதியுடன் கட்டை விரல் அருகில் இணைகிறது

ultimate strength : (பொறி.) இறுதி வலிமை : எந்திரத்தில் மிக அதிக அளவில் நிலைப்படுத்தக்கூடிய பாரவிசை

ultramarine blue : (வண்.) கடல் நீலம் : சீனாக் களிமண் சோடியம் கார்பனேட்டு, கார்பன், கந்தகம் ஆகியவை கலந்த ஒரு கலவையைச் சூடாக்குவதால் உண்டாகும் நீல நிறமி

ultra micro meter : (வண்.) உறு துண்ணளவை மானி : அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் துள்ளியமாகக் கணிக்கும் அளவைமானி

ultra microscope : (வண்.) புடையொளி நுண்ணோக்காடி: நுண்ணோக்காடி கொண்டும் காணமுடியாத அளவில் மிகச் சிறியதான துகள்களைப் பார்ப்பதற்குப் பயன்படும் நுண்ணோக்காடி

ultrasonic : (விண்.) ஒலி கடந்த வேகம் : ஒலியைவிட விரைந்து செல்லும் வேகம்

ultra sonics : (இயற்.) கதழ் ஒலியலையியல் : ஒலியலை வகையில் அதிர்வுகளை ஆராய்தல்

ultra speed welding : கடும் வேகப் பற்றவைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்றவைப்பு மின் முனைகளைக் கொண்டு, பற்றவைக்க வேண்டிய பொருளை ஒரே சமயத்தில் தொட்டுச் செய்யப்படும் மிக வேகப் பற்றவைப்பு முறை

ultra-violet : புற ஊதாப்பகுதி : கண்ணுக்குப் புலனாகாத நிறப் பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாற்பட்ட மண்டலம்.

umber : (வண்.) செங்காவி : மங்கனீஸ் ஆக்சைடும், களிமண்ணும் அடங்கிய பழுப்புச் செங்காவி வண் ணம், இது நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது

umbra : (விண்.) உருநிழல்|கருமையம் : கதிரவன் கறைப் பொட்டின் கருமையம்;கோள் மறைப்பில் செறிநிழல் கூறு

unbalanced load : (மின்.) சம நிலையற்ற மின்சுமை : ஒரு மின்வழியில் ஒரு புறத்தைவிட மறுபுறத்தில் மின்சுமை அதிகமாக இருத்தல்

uncontrolled spin : (வானூ.) கட்டற்ற சுழற்சி : விமானத்தில் கட்டுங்கடங்காமல் சென்று விடும் சுழற்சி

undamped wave : (மின்.) ஒடுக்கமிலா அலை : ஒரே அளவுடைய அலைவெண்ணும் வீச்சளவும் கொண்ட ஒரு தொடர்ச்சியான அலை

undercompounded : (மின்.) கூட்டுச் சுருணை மின்னாக்கி : மின் சுமை அதிகமாக அதிகமாக முடிவு மின்னழுத்தம் குறைகிற வகையில் அமைந்துள்ள ஒரு கூட்டுச்சுருணை மின்னாக்கி

under-ground cable : (மின்.) தரையடிக் கம்பிவடம் : ஈயல் அல்லது பிற நீர்புகாப் பொருட்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும்

underlay : (வண்.) அடித்தாங்கல் : அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக்கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல்

underload relay : (மின்.) மின் சுமைக்குறைவஞ்சல் : மின்சுமை முன்னரே தீர்மானித்த ஒர் அளவுக்குக் குறையும்போது, மற்றொரு மின்சுற்றுவழியை இயக்குவிக்கிற ஒரு அஞ்சல் சுற்றுவழி

under pinning : (பொறி.) அடையுதைவுக் கட்டுமானம் : சுவர்க் கட்டுமானங்களில் கீழ்க்கட்டுமான ஆதரவு அமைத்துத் தாங்குதல் அமைத்தல

under shot wheel : (பொறி.) நீர்விசைச் சக்கரம் : அடியில் நீரோடல் மூலமாக இயக்கப் பெறுகிற சக்கரம்

undertone : (வண்.) மங்கிய வண்ணம் : மேற்பூச்சாக வேறு வண்ணங்கள் பூசப்பட்ட ஒரு வண்ணம். ஒளியில் பார்க்கும்போது மற்ற வண்ணங்களுடன் மங்கலாகத் தோன்றும்

under writer : (மின்.) மின்சாதன ஆய்வாளர் : மின் சாதனங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியனவா, எளிதில் தீப்பிடிக்காமல் காப்புடையனவா என்பதைச் சோதனை செய்து ஆராய்ந்தறிய வல்ல நிறுவன ஆய்வாளர்

undulatory movement : (வானூ.) அலையூசல் இயக்கம் : அலைகளைப் போல் ஏற்ற இறக்கத்துடன் இயங்குதல்

uniconductor : (மின்.) ஒற்றை மின்கடத்தி : மின்காப்பிடப்படாத ஒற்றை மின்கம்பி அல்லது மின்கம்பித் தொகுதி. இது மின் கடத்தலுக்கு ஒற்றைப் பாதையாக அமையும்

unidirectional : (மின்.) ஒற்றை வழி : மின்விசை ஒரே திசையில் மட்டும் பாய்தல் uniform load : (பொறி.) மாறா நிலைச் சுமை : வேறுபர்டின்றி மாறாத நிலையிலுள்ள சுமையளவு. இதில் எஞ்சினின் கட்டமைப்புச் சுமையும், அதில் ஒரு சீராகப் பரப்பி வைக்கப்பட்டுள்ள பாரத்தின் சுமையும் உள்ளடங்கும்

unilateral conductor : (மின்.) ஒருபக்க மின்கடத்தி : ஒரே திசையில் மட்டுமே மின்னோட்டத்தைக் கடத்தக்கூடிய ஒரு சாதனம்

unilateral tolerance : ஒரு பக்கத்திறம் : அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுதலாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு:13.36-5.08செ.மீ

union : (கம்.) கூட்டிணைப்பு : குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல்

uniphase : (மின்.) ஒற்றை நிலை மின்னோட்டம் : ஒரே நிலையுடைய மின்னோட்டம் அல்லது மின்னழுத்தம்

unit charge : (மின்.) அலகு மின்னேற்றம் : சமஅளவு மின்விசையின் மீது ஒரு டைன் விசையைச் செலுத்தி ஒரு சென்டிமீட்டர் தூரம் நகர்த்தக் கூடிய மின்விசையின் அளவு

unit magnetic pole : (மின்.) அலகு காந்தத் துருவம் : ஒரு செ.மீ. தூரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செமீ. விழுக்காடு செலுதத வல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு ஆகும்

unit measurement : (மின்.) அலகு அளவு : மற்ற அளவுகளுடன் ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் செந்திற உயர்வு அளவுகள்

unit of Illumination : (மின்.) ஒளியடர்த்தி அலகு : மெழுகு விளக்காளி.ஒரு விளக்கின் ஒளிர்திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின் மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட விளக்கொளி என்பது, விளக்கின் ஒளிமையத்திலிருந்து கிடைமட்டத் தளத்தில் பரவும் சராசரி ஒளித்திறன் ஆகும்

unit of magnetic flux : (மின்.) காந்தப்பாய்வு அலகு : ஒரு காந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ள காந்த விசை வழிகளின் மொத்த எண்ணிக்கை. இது, ஒரு காந்தச் சுற்று வழியில் பாயும் காந்த ஓட்டமாகக் கருதப்படுகிறது

unit of magnetic intensity : (மின்.) காந்த அடர்த்தி அலகு : காந்த இயக்க விசையின் அலகு. காந்தச் சுற்று வழியின் மூலமாக காந்தவிசை வழிகளைச் செலுத்தும் காந்த அழுத்த விசை

unit of magnetic reluctance : (மின்.) காந்தத் தடை ஆலகு : காந்த மூட்டிய பொருளினால் காந்தப் பாய்வுக்கு ஏற்படும் தடையின் அளவு

unit power plant : (தானி.) மின்னாக்கி அலகு : உந்து ஊர்தியில் மின்னாக்கம் செய்வதற்கான எந்திரப் பகுதிகளின் முழுத் தொகுதி. இதில் மின்னோடி, மின் செலுத்தி, மின்னோடியின் துணைக் கருவிகள் அனைத்தும் அடங்கும்

unit stress : (பொறி.) அழுத்த விசை அலகு : ஓர் அலகு பரப்புப் பகுதியின்மீது ஏற்படும் அழுத்த விசையின் அலகு. இது பெரும்பாலும் ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனை பவுண்டு என்ற கணக்கில் குறிப்பிடப்படும்

universal : இன முழுதளாவிய : இயல்பாகப் பல பொருட்களுக்கும் உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம்

universal grinding machine : (பட்.) பொது சாணை எந்திரம் : சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முனை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம். இது நீள் உருளைச் சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் பயன்படுகிறது

universal joint : (எந்.) பொது இணைப்பு : ஊடு அச்சுகள் நேர்கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒருவகை இணைவமைவு

universal milling machine : (எந்.) பொது வெட்டு எந்திரம் : ஊடுவெட்டாகவும்,நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான, ஒர் எந்திரம். இதில் சுழலும் வெட்டுக் கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுக்கருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும்

universal saw table : (மர.வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை

unlimited ceiling : (வானூ.) வரம்பற்ற உயர எல்லை : மேக மட்டம் 2742 மீட்டருக்கு மேற்பட்ட நிலையில் விமானம் தங்கு தடையின்றிப் பறப்பதற்கான உயரத்தின் எல்லை

unshielded carbon arc welding : காப்பற்ற கார்பன் வில் பற்ற வைப்பு : காப்புக்கருவி எதுவுமின்றி கார்பன் வில் பற்றவைப்பு முறை

unshielded metal arc welding : காப்பற்ற உலோக வில் பற்றவைப்பு : வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை

up-holşterry : (uot.Gsv.) மெத்தை வேலைப்பாடு : அறை கலன்கள் முதலியவற்றுக்கு மெத்தை, திண்டு பொருத்தும் வேலைப்பாடு

up keep : (தானி.) பேணுகைச் செலவு : உந்து ஊர்திகளைப் பேணிக் காப்பதற்கான செலவு

upper air : (விண்.) மேல் வளி மண்டலம் : மீவளி மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கு மிடையிலான வாயு மண்டலம்

upper cass : (அச்சு.) மேலின எழுத்து : அச்சுக்கலையில் சிறிய எழுத்துக்களிலிருந்து வேறுபட்ட தலைப்பு எழுத்துக்களைக் குறிக்கும் மேலின எழுத்துக்கள்

upper stage : (விண்.) இரண்டாம் கட்டம் : பலகட்டங்களுடைய ஒரு ராக்கெட்டில் இரண்டாவது அல்லது பிந்திய கட்டம்

up right : (க.க.) பாரந்தாங்கி: கட்டிடத்திற்குத் தாங்கலாக அமையும் தூண் அல்லது கம்பு upset : நிலை மாற்றுதல் : சுத்தியால் அடித்தல் அல்லது அழுத்தம் கொடுத்தல் மூலம் உலோகத்தைக் குறுக்குதல் அல்லது கனமாக்குதல் upset : (உலோ.) உலோக நிலை மாற்றம் : ஓர் உலோகத் துண்டின் நீளத்தைக் குறைப்பதன் மூலம் அதன் குறுக்கு வெட்டுப் பரப்பினை அதிகரிக்கும் முறை

uranium : (உலோ.) யுரேனியம் (விண்மம்) : அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம், கடினமான, தகடாக நீட்டக்கூடிய உலோகம். மிகு வேக எஃகுகளின் வலிமையினையும், விறைப்புத் தன்மையினையும் அதிகரிப்பதற்கு இது பயன்படுகிறது. இயற்கையான யுரேனியத்தில் U-235, U-238 என்ற இரு முக்கிய ஓரகத் தனிமங்கள் உள்ளன. இயற்கை யுரேனியத்தின் 140 பகுதியில் ஒரு பகுதி U-235 என்பதாகும்

urea : (குழை.) யூரியா : பால் உணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப் பொருள். இது யூரியா ஃபார்பால் டி ஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது

urea resin : (குழை.) யூரியா பிசின் : பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால்டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினை புரிவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது பதங்கெடுவதைத் தடுக்கக் கூடியது; எண்ணெய்ப் பசையைத் தடுக்க வல்லது; மேற்பரப்பு கடினத்தன்மை கொண்டது. இதனால், இது மின் பொருள்கள், பொத்தான்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

ureter : (நோயி.) மூத்திரக் கசிவு நாளம் : குண்டிக்காயிலருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம்

useful load : (வானூ.) இன்றியமையாச் சுமை : விமானத்தில் இன்றியமையாது தேவைப்படும் சுமை விமான ஊழியர்கள், பயணிகள், எரிபொருள் இதில் அடங்கும்

uterus : (உட.) கருப்பை : பெண்ணிடம் குழந்தை உருவாகும் உறுப்பு

கருப்பை
utility : பயனோக்கப் பண்பு : நடைமுறைப் பயனுடைய பண்பு அல்லது நிலை. நடைமுறைப் பயன் பாடுள்ள பொருள்
V


V's (எந்:பட்) 'V' வழிகள்: மேசை அல்லது பொருட்கள் நிறைந்த கலங்கள் நகர்ந்து செல்வதற்கென சற்று உயரமான அல்லது குழிவான வகையில் அமைந்த 'V' வடிவப் பாதைகள்

Vaccine : (நோயி..) அம்மைப் பால் : 1. பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர். இந்த காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதருக்கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்கு அம்மை குத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

2. ஒரு நோயின் இறந்து போன அல்லது வலுவிழந்து போன பாக்டீரியாவில் அடங்கியுள்ள திரவம். இந்தத் திரவம், அதே நோய்க்கு எதிரான பொருட்களை உடலில் உற்பத்தி செய்வதற்காக ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது

Vaccum : (இயற்.) வெற்றிடம்: காற்று அல்லது வேறு ஏதேனும் ஒன்று வெளியேற்றப்பட்ட கொள்கலம் (நீராவி, வெப்பம்)

Vaccum brake : (தானி.) வெற்றிடமுறை தடை: கனரகப் பயணி வாகனங்களுக்கு மிகவும் உகந்த ஏற்பாடு. தடை இயக்கு முறையானது உள்வாங்கு பன்முனைக்குழாய் அல்லது கார்ப்பரேட்டரிலிருந்து திராட்டிலுக்கு சற்று மேலே வெற்றிடத்தை பெற்றுக் கொண்டு இயங்குகிறது

Vaccum control : (தானி.) வெற்றிடக் கட்டுப்படுத்தி : பன்முனைக்குழாய் வெற்றிடத்தினால் கட்டுப்படுத்தப்படுகிற தடை (பிரேக்), கவ்வான் (கிளட்ச்)போன்று மோட்டார் வாகனத்தின் எந்த ஓர் உறுப்புக்கும் பொருந்தும்

Vaccum cleaner : வெற்றிடமுறை துப்புறவி : கம்பள விரிப்பு, போன்றவற்றிலிருந்து குப்பை, தூசு ஆகியவற்றை வெற்றிடமுறை மூலம் உறிஞ்சும் மோட்டாரால் இயங்கும் மின்விசிறிக் கருவி

Vaccum forming : (குழை.) வெற்றிடமுறை உருவாக்கம் : சிட்டை / பதாகை (ஷீட்) உருவாக்கம் (அ) வெப்பமுறை உருவாக்கம் என்றும் பெயர் உண்டு. முக்கியமான ஒரு வெப்பமுறையில் குழைமம் (பிளாஸ்டிக்), குழைகிற அளவுக்கு சூடேற்றப்பட்டு பிறகு வெற்றிடமுறை மூலம் ஒரு அச்சில் வந்து படியும்படி செய்யப்படுகிறது. இதில் பல மாறுபட்ட முறைகள் உள்ளன. காற்றைக் கீழ்நோக்கிச் செலுத்தி குழைமம் சிட்டைகளாக (ஷீட்டுகளாக) உருவாகும்படி செய்யலாம். அல்லது காற்றை மேல் நோக்கிச் செலுத்தியும் சிட்டைகளை (ஷீட்களை) உருவாக்கலாம். இந்த முறையைப் படிமான முறை என்றும் கூறலாம். விளம்பர அடையாளங்கள், விமான உறை போன்றவற்றைச் செய்யப் படிமான முறை பயன்படுத்தப்படுகிறது

vaccum fuel supply : (தானி.) வெற்றிடமுறை எரிபொருள் அளிப்பு: பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர் மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது இயந்திரம் (என்ஜின்) ஓடும்போது கார்புரேட்டரில் தோற்றுவிக்கப்படும் வெற்றிடத்தின் பலனாக வெற்றிடத் தொட்டியில் ஓரளவு வெற்றிடம் பராமரிக்கப்படுகிறது

vaccum gauge : (தானி.) வெற்றிட அளவுமானி : ஓர் இயந்திரத்தின் (என்ஜினின்) உள்வாங்கி பன்முனைக்குழாயில் அல்லது எரிபொருள் குழாயில் உள்ள வெற்றிடத்தை அளந்து கூறுவதற்கு, காற்று மண்டல அழுத்த அடிப்படையில் குறியீடுகள் செய்யப்பட்ட அளவுமானி

vaccum metalizing : (குழை.) வெற்றிட உலோகப் பூச்சு: ஆவியாக்கப்பட்ட அதாவது மின் நுண்திவலைகள் வடிவிலாக்கப்பட்ட உலோகத்தைக் (அலுமினியம்) கொண்டு, பிளாஸ்டிக் உறுப்புகள் மீது, மெல்லிய பூச்சு அளித்தல். இது வெற்றிடத் தொட்டியில் நிகழ்த்தப்படுகிறது. மின்சார இழை மூலம் ஆவியாக்கப்படுதல் நிகழ்த்தப்படுகிறது. உலோகக் குழம்பில் நிறம் சேர்க்கப்பட்டுத் தங்க, பித்தளை, அல்லது தாமிர நிறம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. இறுதி தயாரிப்புகளின் மேற்புறம் ஒரளவு உலோகத்தன்மை பெற்றிருக்கும்

vacuum plating : (உலோ.) வெற்றிட முலாம்பூச்சு : காற்று வெளியேற்றப்பட்ட ஓர் அறையில் வைத்து உலோக உறுப்புகளுக்கு முலாம் பூசுதல்

vacuum system : (குளி. பத. ) வெற்றிடச் சாதனம் : நீரை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதிக்க வைப்பதற்கு வெற்றிடத்தைப் பயன்படுத்தும் ஒரு குளிர்பதனச் சாதனம் (அல்லது)

vacuum system : (குளி. பத. ) வெற்றிட அமைப்பு : வெற்றிட உந்து (பம்ப்) வெற்றிடத் தொட்டி (அ) கலன், குழாய்கள் ஆகியவற்றைக் கொண்ட, வெற்றிடத்தை உருவாக்கும் ஒரு அமைப்பு. இந்த வெற்றிட அமைப்பு ஒரு அடைக்கப்பட்ட கலனில் அழுத்த வேறுபாட்டை உண்டாக்கி அதன் மூலம் ஒரு அறையில் (அ) கலனில் குறை வெப்பத்தை அல்லது குளிரை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது

vaccum tube : (மின்.) வெற்றிடக் குழாய் : வெற்றிட உந்து (பம்ப்) மூலம் வெற்றிடம் உண்டாக்கப்பட்டு பின் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடி மின்னனுக்குழாய். உள்ளிருந்து வாயு அல்லது ஆவி அகற்றப்பட்ட பின் மிச்ச மீதியாக சிறு அளவுக்கு இருக்குமானால் அதனால் மின் தன்மைகள் பாதிக்கப்படும் என்பதால், மின் தன்மைகள் பாதிக்கப்படாத அளவுக்கு முழுமையாக வெற்றிடமாக்கப்பட்ட மின்னனுக்குழாய்

vagina : (உட.) யோனிக் குழாய் : பெண்ணின் கருப்பைவாய்க் குழாய். பிறக்கும் குழந்தை இதன் வழியாகவே வெளியே வருகிறது

vagus nerve : (உட.) மூளை நரம்பு : மூளையின் கீழ்ப்பகுதியிலிருந்து தொண்டை, நுரையீரல்கள், இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு. துணைப்பரிவு நரம்பாகிய இது, சுவாசத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச் செய்கிறது

valence : (மின்.) இணைவுதிறன் : ஒரு தனிமத்தின் இணைவுறும் ஆற்றல் அளவு. ஒப்பீட்டளவில், ஹைட்ரஜன் அணுவுடன் ஒரு தனிமத்தின் பொருளணுவின் (பிற அணு நீக்கி) இணைவுறும் ஆற்றல் (அ) வீத அலகு

valence : (வேதி.) வேதியியல் இணைவுதிறன் : ஒரு தனிமத்தின் மூல அணு , ஒரு குறிப்பிட்ட நிலையான வீத அளவில், மற்றத் தனிமங்களுடன் அல்லது மற்ற தனிமங்களின் மூல அணுக்களுடன் இணையும் பண்பு

valley : (க.க.) கூரைப்பள்ளம் : இரு கூரைகளின் சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம் அல்லது அந்தச் சந்திப்பில் உள்ள வடி நீர்ப்பாதை

valley : (க.க.) பள்ளத்தாக்கு : மலைச்சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம் அல்லது மலைச்சரிவுகளின் சந்திப்பில் உள்ள வடி நீர்ப்பாதை

valley rafter : (க.க.) கூரைப் பள்ளச் சட்டம் : இரு கூரைகளின் சரிவு சந்திக்கின்ற பள்ளத்துக்கு அடியில் நெடுக அமைந்த சட்டம்

value : (வண்.) உயர் தகவு : ஒரு வண்ணத்தின் அழுத்தம், அல்லது மென்மையைக் குறிக்கும் தன்மை valve :தடுக்கிதழ் : குழாய்களின் வழியே நீர்மம் அல்லது வாயுவின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனம்

valve action : (தானி) தடுக்கிதழ் செயல்பாடு: டைமிங் கியர்கள், செயின் கேம் ஷாப்ட் லிப்டர்கள், வால்வு தொகுப்பு ஆகிய வால்வுகள் திறந்து மூடுவதைக் கட்டுப்படுத்தும் பகுதி

valve action : (தானி) தடுக்கிதழ் படம்

valves : (தானி.) தடுக்கிதழ்கள் : என்ஜின் சிலிண்டர்களுக்குள் அல்லது அவற்றிலிருந்து வாயுக்கள் வெளியே செல்வதை மற்றும் உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும் கருவிகள். மோட்டார் என் ஜின்களில் அவை போப்பெட் வால்வுகள் என்று குறிப்பிடப்படுகின்றன

valve spring : (தானி) தடுக்கிதழ் திருகு சுருள் விசைவில் : தடுக்கிதழ் மூடிய நிலையில் இருக்கும் பொருட்டு 18 முதல் 41கி.கி. தல் அழுத்தத்தை ஏற்படுத்துகிற அழுத்து வகை திருகு சுருள் விசைவில்

valve stem ; (தானி) தடுக்கிதழ் தண்டு : போப்பெட் வகை தடுக்கிதழ் தண்டு

valve timing : (தானி) தடுகிதழ் காலத் திட்டம் : பிஸ்டனின் நிலையைப் பொருத்து தடுக்கிதழின் செயல்பாட்டைத் தக்கபடி பொருத்துதல்

vanadium : (உலோ.) வெண்ணாகம்: வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனிமம். உலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய வெண்ணாக உருக்குப் பயன்படுகிறது

vanadium steel: (உலோ) வெண்ணாக உருக்கு : O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாடியம் நிக்கல்-வனாடியம் உருக்குகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன

vandyke brown : (வண்) வான் படைப்பழுப்பு நிற :பழுப்பு நிறக் கலவைப் பொருருள் கலந்த இயற்கையில் கிடைக்கிற களிமண் ஆழ்ந்த நிறம் காரணமாக கலவை பெயிண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுவது

vane : (க.க.) :காற்று திசைகாட்டி: காற்று எந்தத் திசையை நோக்கி வீசுகிறது என்பதைக் காட்டும் சாதனம்

vanishing point: மறையும் புள்ளி: பின்னணி காட்சியை குறிப்பிடுகையில் பயன்படும் சொல். படம் வரையும்போது பின்னோக்கிச் செல்கின்ற இணை கோடுகள் ஒரு புள்ளியில் போய்ச் சேரும். இப்புள்ளியே மறையும் புள்ளியாகும்

vapor : (தானி.) ஆவி : வாயு நீராவி, பெட்ரோலும் காற்றும் சேர்ந்த கலவை

vaporize : (வேதி.) ஆவியாக்கு : ஆவி அல்லது வாயு நிலைக்கு மாற்றுதல்

voporizer : ஆவியாக்கி : ஆரம்ப காலத்து கார்புரேட்டர் vapor lock : ஆவித் தடை : எரி பொருள் ஆவி சேர்ந்து விடுவதன் காரணமாக என்ஜினுக்கு எரி பொருள் வருவது தடைப்படுதல் அல்லது குறைதல்

vapor rectifier ; (மின்) ஆவித் திருத்தி : பாதரச ஆவியை அயனியாக்கம் செய்வதன் மூலம் மின் கடத்தல் நடைபெறும் திருத்திக் குழல்

variable : (கணி) மாறி : மதிப்பு மாறக்கூடிய அளவு அப்படி மாறும்போது மற்றவற்றின் மதிப்பு மாறாதிருக்கும்

variable condenser ; (மின்) மாறு மின்தேக்கி : சில வரம்புகளுக்கு உட்பட்ட மின்தேக்கி சில வரம்புகளுக்கு உட்பட்டு இதன் திறனை மாற்ற முடியும்

variable motion : (பொறி) மாறுபடு இயக்கம் : ஒரு பொருள் சரி சமமான தூரங்களை வெவ்வேறு கால அளவுகளில் கடக்குமானால் அது மாறுபடுத்தும் இயக்கம் எனப்படுகிறது

variometer : (மின்) கிளர்மின் மாற்றி : மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு

varnish : (வண் ) வார்னிஷ் : ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை ஒரு பரப்பின் மீது உறுதியான நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது. வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம்

varnish cambric : (மின். ) மெருகுத் துணி : மின்காப்பு மெருகு பூசப்பட்ட பருத்தித் துணி

varying speed motor : (மின்.) வேகம் மாறுபடும் மோட்டார் : செய் சுமைக்கு ஏற்ப வேகம் மாறுகின்ற மோட்டார். பொதுவில் செய் சுமை அதிகரிக்கும்போது வேகம் குறையும். எனினும் விரும்பியபடி வேகக்தை மாற்றத்தக்க மோட்டாரிலிருந்து இது வேறுபட்டது

vascular : (உட.) குருதி நாளம் சார்ந்த : குருதி நாளங்கள், உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர் பானவை. தாவரங்களில் குழல் திசு, வேர்த்திசு ஆகியவற்றின் மூலம் தாவரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு திரவங்கள் செல்கின்றன

vault :(க.க.) வளைந்த கூரை : அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை. வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம்

V belt: V வார்ப்பட்டை: விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை, உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு

V blocks: (எந்.) V பிளாக்குகள்: உருளை வடிவிலான உலோகப் பொருட்களைச் சோதிக்கும் போது அல்லது உருக்கொடுக்கும் போது நகராமல் இருப்பதற்காக ஒரு புறத்தில் V வடிவில் செதுக்குதல்

vector: (மின்.) வெக்டார்: மாறு திசை மின்சாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுகிற பகுதிகளை விளக்கிக் காட்டுகிற படம்

vee radiator: (தானி) V ரேடியேட்டர்: இரு பகுதிகளாகத் தயா ரிக்கப்பட்டு நடுவில் 180 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இணைக்கப்பட்டது

vegetable tannage: தாவரப் பதனம்: டான்னிக் அமிலம் கலந்த தாவரப் பொருட்களைக் கொண்டு தோலைப் பதப்படுத்துதல்

vehicle: (வேதி.) பூச்சு சாதனம்: வார்னிஷ் அல்லது அரக்குச் சாயப் பொருளை கரைத்துப் பூசுவதற்கான திரவப் பொருள்

Veins: (உட) சிரைகள்: உடலிருந்து அல்லது நுரையீரல்களி லிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். ஆனால், கல்லீரல் சிரையானது குடலிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்கிறது. அது மற்ற சீரண உறுப்புகளுடன் சிரைகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கிறது. எனவே, சீரணி க்கப்பட்ட பொருட்களை நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறது. நுரையீரல் சிரையானது, நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இத யத்திற்கு எடுத்துச் செல்கிறது. 2. தாவரங்களில் இலைகளில் உள்ள இலை வரிநரம்பு

Vellum: வரைநயத் தோல்: தோலினால் ஆன ஆவணம் போன்று தோன்றும் காகிதம்

velocity (எந்.) திசை வேகம்: கடக்கும் தொலைவை நேரத்தால் வகுத்து ஒரு விநாடிக்கு அல்லது ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு அடி என்று கூறுதல் (இயற்.) ஒரு பொருள் செல்லும் விகிதம்

velocity modulation: (மின்) வேக அலை மாற்றம்: ஓர் எலெக்ட் ரான் குழலில் எலெக்ட்ரான் வேக வீதத்தில் அவ்வப்போது ஏற்படும் மாறுதல்கள்

velocity of light: (மின்) ஒளி வேக வீதம்: ஒளி மற்றும் மின் காந்த அலைகளின் வேகவீதம். இது வினாடி 1,86,000 மைல் அல் லது வினாடிக்கு 3,00,000,000 மீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது

velox paper: வெலாக்ஸ் காகிதம்: குறிப்பிட்ட வகைப் புகைப்படத் தாளின் வணிகப் பெயர்

veneer:(க.க. மர.வே.) நேர்த்தி முகப்பு: (தொல்-மர நேர்த்தி) சாதாரண மேற்பரப்புக்கு நேர்த்தியான உயர்ந்த பார்வை அளிக்க அல்லது செலவைக் குறைக்க மரம் அல்லது வேறு பொருள் மீது மெல்லிய படலத்தைப் படிய வைத்தல்

veneer press: (மர.வே) மேலொட்டு அழுத்தப்பொறி : ஒட்டுப் பலகை அல்லது நீள் சதுரப் பலகைத் துண்டுகளைப் பசையிட்டு ஒட்டுவதற்கான பெரிய, கனமான அழுத்தப் பொறி

Veneer saw: (மர.வே.) மேலொட்டு ரம்பம்: மெல்லொட்டுப் பலகைகளை வெட்டுவதற்குப் பயன்படும் தனி வகை வட்ட வடிவ ரம்பம்

venetian blind: (க.க.) பல கணித் திரை: மடக்கு வரிச்சட்டம் பல கணித் திரை

venetian red: (வண்) இரும்பு ஆக்சைடு (Fe2O2: சிவப்பு வண்ணப் பொடியாகப் பயன்படும் இரும்பு ஆக்சைடுக் கலவை. இது இரும்பு ஆக்சைடுக் கலவை. இது இரும்பு சல்பேட்டை சுண்ணாம்புடன் சூடாக்குவதன் மூலம் கிடைக்கிறது

vent: (வாயு) வாயுத் துளை: வார்ப்பட வேலையில் வாயுக்கள் வெளியேற இடமளிப்பதற்காக அமைக்கப்படும் ஒரு சிறிய துளை

venthole: (உலோ) காற்றுப் புழைவாய்: ஒரு மணல் வார்ப் படத்தில் வாயுக்கள் வெளியேறுவதற்குள்ள துவாரங்கள்

ventilation: (க.க.) காற்றோட்டம்: அறையில் காற்றோட்டம் ஏற்படுமாறு செய்யும் முறை

ventilator: (க.க. ) பலகணி: வெளிச்சமும், காற்றும் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாதனம். அசுத்தக் சாற்றை வெளியேற்றுவதற்கான புழை

venti pipe: (க.க.) காற்றுக் குழாய்; பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய்

ventricle: (உ.ட) 1.குழிவுக் கண்ணறை; உடலின் உட்குழிந்த பகுதி. 2. இதயக் கீழறை; சுருக்காற்றலை யுடைய இதயத்தின் கீழறை. வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது 3. மூளை உட்குழி: மூளையின் உட் குழிவுப் பள்ளம்

vent stack: (க.க.) புகைக்கூம்பு: காற்றுக் குழாய்களுடன் இணைக் கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளியேறுகின்றன

vent wire :(வார்.) வாயுக் கம்பி ;வார்ப்பட வேலையில் நீராவியும், வாயுவும் வெளியேறு வதற்காக,வார்ப்பிலிருந்து தோரணியை அகற்று வதற்கு முன்பு ஒரு கம்பி மூலமாகத் துளைகள் உண்டாக்கப்படுகின்றன

veranda, (க.க.) தாழ்வாரம்: கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைக்கப் படும் திறந்த நிலை ஒட்டுத் திண்ணை

veverdigris: (வேதி) தாமிரத்துரு; இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பு தாலும் தாமிரத்துரு உருவாகி றது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும் பயன்படுகிறது

verge : (க.க.) மோட்டு விளிம்பு: முக்குட்டுச் சுவர் கடந்த மோட்டு விளிம்பு. இது கூரையின் மஞ்சடைப்புக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும்

vermiculations (க.க) புழு அரிப்புத் தடம்: புழு அரிப்பு போன்ற வரிப்பள்ளங்களுடைய தடம்

vermilion: (வண்.) இரசக் கந்தகை; செந்நிறமான இரசக் கந்தகை. இது நிறமியாகப் பெரு மீள்வில் பய்ன்படுத்தப்படுகிறது. பாதரசச் சல்பைடிலிருந்து (HgS) பெறப்படுகிறது

Vernier: (விண்.) வெர்னியர்: ஒரு ஏவுகணையின் வெளிப்புறத்தில் ஏற்றப்பட்டுள்ள சிறிய ராக்கெட் எஞ்சின் இதனைக் கட்டுப்படுத் தும் கருவி மூலம் திருப்பலாம். இதனை கண்டுபிடித்தவர் பியர் வெர்னியர் (1580-1637) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை. அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது vernier: (எந்.) வெர்னியர்: ஒரு நிலையான அளவு கோலின் உட் பிரிவுகளின் பின்னப் பகுதிகளைக் கணக்கிட்டு அறிவதற்குப் பயன்படும் ஒரு சிறிய நகரக்கூடிய துணை அளவுகோல்

vernier depth gauge: (எந்) பெர்னியர் ஆழ அளவி: வெர்னிய ருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகைச் சலாகை வடிவ அளவு கருவி. இது குறுகலான ஆழப் பகுதிகளின் ஆழத்தை அளந்தறியப் பயன்படுகிறது

vernier caliper: (உலோ) வெர்னியர் திட்பமானி: திட்பமானியில் விட்டம், திட்பம், ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களையுடைய அளவு கருவி

vertical: (கம்) செங்குத்து நிலை: செங்கோட்டு நிலை; வான விளிம்புக்குச் செங்கோணத்திலுள்ள நிலை

vertical boring mill: (எந்.) செங்குத்துத் துளைக்கருவி: கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல்_மேசையில், இழைப்புளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் நகர்த்தி கடைசல் வேலை செய்வதற்கான கருவி

vertical centering: நிலை குத்து மையம்: தொலைக் காட்சிப் பெட் டியின் திரையில் படத்தை செங் குத்தாக நிலைப்படுத்துவதற்கு உதவும் கட்டுப்பாட்டு அமைவு

vertical lathe: (எந்) செங்குத்துக் கடைசல் எந்திரம்: பக்கவாட்டில் தலைப்பக்கம் உடைய ஒரு செங்குத்துத் துளைக்கருவி

vertical polarization :(மின் ) செங்குத்துத் துருவ முனைப்பாக்கம்: வானலை வங்கியின் மின்தலம், பூமியின் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானலை வாங்கி

vertical tall area : (வானு ) செங்குத்து வால் பகுதி : விமானத்தில், சுக்கானின் உள்ளபடியான புறக்கோட்டுக்கும், செங்குத்துத் தளத்தில் நீடடிக் கொண்டிருக்கும் நிமிர் நேர் விளிம்புக் குட்டையிலான பகுதி

vertimeter : (வானு) செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியாகும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது

vestibule : (க.க ) முன் கூடம் : வீட்டின் முன் அறை, திருக் கோயில் முக மண்டபம்

viaduct : (பொறி.) மேம்பாலப் பாதை: இருப்புப் பாதை சாலை போன்றவற்றுக்கு மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலம்

viaduct : (க.க.) மேம்பாலம்: மலை இடுக்கின் அல்லது பள்ளத் தாக்கின் மேலாக சாலைக்காக அல்லது இருப்பூர்திக்காக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதை

vibrating bell: (மொன்) அதிர்வு மணி: மணியடிக்கும் நா அல்லது சுத்திய உடைய ஒரு மின்சாதனம். இதன் வழியே மின்னோட்டம் பாயும் போது நா அல்லது சுத்தி ஒரு மணியைத் தட்டி ஒலி எழுப்பும். இது மின்காந்த தீர்ப்புத் தத் துவத்தின் படி இயங்குகிறது

vibrating reed meter (மின் ) அதிர்வுக்கோல் மானி: இயற்கையான அதிர்வு அலைவெண் களுடைய கோல்களைப் பயன் படுத்தும் ஒரு வகை அலைவெண் அளவுமானி

vibration dampeners : (தானி) அதிர்வுத் தளர்வுறுத்தி : ஒரு கோட் டச் சுழல் தண்டின் அதிர்வினைக் குறைப்பதற் காகப் பயன்படுத்தப்படும் எதி எடை அல்லது சமநிலைப்படுத்தும் கருவி

vibrator : (மின்) அதிர்ப்பி: சீரான நிலையிலுள்ள் நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படும் காந்தத்தினால் இயங்கும். அழைப்புமானி அலலது மின்சார அழைப்புக் கருவி போன்ற ஒரு சாதனம்

vibrator coil : (மின்) அதிர்வுச் சுருள் : ஒருவகை தூண்டுச் சுருள். உள்ளிட்டின் காந்தத் தன்மையானது, அடிப்படைச் சுற்று வழியினை முறிக்கும் வகையில் இயங்குமாறு இது அமைக்கப்படடிருக்கும்

vibrios: (நோயி..) வளைவுக் கிருமிகள் : நீந்துவதற்கான ஒரு வாலையுடைய சலாகை போல் வளைந்த உருவமுடைய பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது (1000 மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டுள்ள ஓர் இரத்த உயிரணுவை இந்த வட்டம் காட்டுகிறது)

video : ஒளிக்காட்சி : படம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகையின் பகுதி. அமெரிக்காவில் தொலைக் காட்சியையும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

video signal :(மின்) ஒளிச் சமிக்ஞை : தொலைக்காட்சிச் செலுத்தியில் அலைமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப் படக் கருவியிலிருந்து வரும் மின்னியல் சமிக்ஞை

viewing miror : காட்சிக்கண்ணாடி: தொலைக்காட்சியில், படக்குழாயில் உருவாகும் உருக்காட்சி யை, பார்வையாளர்கள பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி

vignette : (க.க.) சித்திர வேலைப்பாடு : தளிர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு; முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு; முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூ வேலை ஒப்பனைக் கோலம்; பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலைப்பாடு: பெயர்ப் பக்க அடிவரிப் பூ வேலைப்பாடு

vinyl acetal resins : (வேதி; குழை) வினில் அசிட்டால் பிசின் : பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படுகிறது. இது விறைப்புடையது; ஒட்டுத் தன்மை கொண்டது; ஈரம் புக இடமளிக்காதது; ஒளியாலும் வெப்பத்தாலும் நிலை குலையாதது

vinylidene chloride resins : (வேதி) வினிலிடின் குளோரைடுப் பிசின் : கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்து ஊர்திகளில் இருக்கைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உராய்வுச் சக்கரங்களுக்குப் பிணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது

vinyl resin : (குழை.) வினில் பிசின்; பிசின் குடும்பத்தில் ஒரு முக்கியமான வகை

virus : (நோயி.) நோய்க் கிருமி (நோய் நுண்மம்) : மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உணடாகும். சன்னிக்காய்ச்சல், அம்மை, நாய்வெறி நோய், இளம்பிள்ளைவாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபு ளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன

viscid: (இயற்.) நெய்ப்புத் தன்மை: நெய்ப்புத் தன்மை, ஒட்டும் இயல்பு

'viscosity : (குழை.) குழைம நிலை: பிசைவுப் பொருளின் திட்ட ஆற்றல், பிசைவுப் பொருளின் தன் ஈர்ப்பு ஆற்றல்

viscous : (வேதி.) பசைத் தன்மை: மெதுவாகப் பாயும் திரவங்களின் ஒட்டுத் தன்மை

viscosimeter : (குளி.பத.) பிசைவுப் பொருள் திட்டமானி : ஒரு திரவத்தின் பசைத் தன்மையை அளவிடும் கருவி

viscous friction : (தானி ) பசை உராய்வுத் திறன் : எண்ணெயின் அல்லது திரவத்தின் பாய்வுத் தடுப்புத்திறன். எண்ணெய்ப் படுகைகளுக்கிடையிலான உராய்வு

vise : (பட்.) பட்டறைப் பற்றுக் குறடு: பிடித்து நிறுத்துவதற்குரிய மரம் அல்லது உலோகத்தினாலான பற்றுக்குறடு, இதில் இரண்டு தடைகள், ஒன்று நிலையாகவும், இன்னொன்று நகரக்கூடியதாகவும் அமைந்திருக்கும்

visibility : (வானூ.) காண்பு நிலை : சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களை எவ்வளவு தூரத்திலிருந்து தெளிவாகக் காணலாம் என்பதைக் குறிக்கும் ஒளியளவு நிலை

vista : (க.க.) காட்சி வரிசை : சாலை மர அணிவரிசை

visual attral range : வானூர்தி நெறிமுறை : வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறிமுறை

visualize : உருவாக்கிக் காண் : அகக் காட்சியாக உருவாக்கிக் காண்; கற்பனை செய்து காண்

vital glass: புறஊதாக் கண்ணாடி: கட்புலனுக்கு அப்பாற்பட்ட ஊதாக்கதிர்களையும் ஊடுருவ விடும் கண்ணாடி

vitamins : ஊட்டச் சத்துக்கள் (வைட்டமின்கள்) : உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்படும் கரிமப் பொருட்கள்

vitreosity: (வேதி) பளிங்கியல்பு: கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கும் தன்மையும், பளிங்கின் திண்மையும், கண்ணாடி போலப் படிக உருவமற்ற இயல்பும் உடைய பண்பியல்பு

vítreous enamel : (உலோ ) கண்ணாடி எனாமல்: உலோகத்தில் பூசக்கூடிய குறைந்த நுண்துளையுடைய, கண்ணாடி போன்ற பள பளப்பான பூச்சுப் பொருள். இதனைப் பீங்கான் எனாமல் என்றும் கூறுவர்

vitreous electricity , (மின் ) பளிக்கு மின்வலி : கண்ணாடியில் பட்டினைத் தேய்ப்பதால் ஏற்படும் மின்னாற்றல்

vitreous body vitreous humour : (உட.) கண்விழி நீர்மம் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மம் vitreousness : (வேதி) கண்ணாடித் தன்மை : கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கக் கூடிய தன்மை; பளிங்கின் தன்மை

vitrescibility: கண்ணாடியாகுந் திறன் : கண்ணாடியாக மாறக் கூடியதன்மை

vitreum : (உட.) கண்விழித் திண்ணீர்மம் : கண் விழிக் குழியிலுள்ள திண் நீர்மம்

vitrifiability : கண்ணாடியாக்கத் திறன் : கண்ணாடியாக மாறத் தக்க தன்மை, கண்ணாடி போன்ற பொருளாக மாறும் நிலை

vitrification : பளிங்காக்கம் : கண்ணாடியாக மாற்றுதல்

vitriol : கந்தகத் திராவகம் : உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகளில் ஒன்று

voice coil : (மின்) குரல் சுருள் : ஒலி பெருக்கிக் கூம்புடன் இணைக்கப்படும் சிறிய கம்பிச் சுருள். குரல் சுருளின் புலத்திற்கும் நிலையான காந்தப் புலத்திற்குமிடையிலான எதிர் விளைவினால் கூம்பின் அசைவு உண்டாகிறது

volatile : (வேதி.) விரைந்து ஆவியாதல் : விரைவாக ஆவியாகும் தன்மை

volatile liquid : (குளி.பத.) ஆவியாகும் திரவம் : அறை வெப்ப நிலையிலும் வாயுமண்டல அழுத்தத்திலும் விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம்

volatile oil : நறுமண நெய்மம்: தாவரங்களுக்கு மணம் தரும் எண்ணெய்ப் பொருள்

volatility : (தானி) ஆவியாகும் தன்மை: ஒரு திரவம் அல்லது எரி பொருள் திரவ நிலையிலிருந்து விரைவாக ஆவியாகும் தன்மை

volt ;(மின்.) மின் அலகு (ஓல்ட்): ஒரு 'ஓம்' தடைக்கு எதிராக ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தைக் கொண்டு செல்லக்கூடிய மின்னியக்கு விசை ஒரு 'ஓல்ட்' எனப்படும்

volta, Alessandro (174-51827): (மின்.) ஓல்ட்டா, அலசாண்ட்ரோ (1745-1827) ; புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானி. கால்வானிஸ் விலங்கு மின்விசை, வேதியியல் மின்கலம், வேதி மின்கலத் தகட்ட டுக்கு போன்ற முக்கிய அறிவியல் க்ண்டுபிடிப்புகன்ளச் செய்தவர். அணுக்கத்தால் நிலை மின்னாற்றல் உண்டு பண்ணும் பொறியமை வையும் இவர் கண்டுபிடித்தார்

voltage . (மின்.) மின் வலியளவு : மின் வலி அலகு எண்ணிக்கை அளவு

voltage multiplier : (மின்) மின்னழுத்தப் பெருக்கி : மின்னழுத்தத்தை இரண்டு, மூன்று, நான்கு மடங்குகளாகப் பெருக்கக்கூடிய திருத்திமின் சுற்றுவழி

volt-ampere - (மின்.) ஓல்ட் ஆம்பியர் : மேலீடாகத் தோன்றுகிற மின்விசை அளவீட்டு அலகு

volta’s law . (மின்) ஓல்ட்டா விதி : எந்த உலோகங் களுக்குமிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடானது. தொடர் வரிசையிலுள்ள எடை உலோகங் களுக்கிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடுகளின் கூட்டுத் தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது இந்த விதி

voltage amplification ; (மின்) மின்னழுத்த விரிவாக்கம் : வானொலி அலைவெண் விரிவாக்க நிலைகளில் உண்டாகும் வானொலிச் சைகைகளைப் பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு வகை voltaic lcell : (மின்) ஓல்ட்டா மின்கலம் : ஒரு வகை அடிப்படை மின்கலம். இதனை முதலில் கண்டு பிடித்தவர் ஓல்ட்டா. அதனால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது இரு முரண்பட்டி உலோகங்கள் ஒரு கரைசலில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும், அந்தக் கரைசல், ஓர் உலோகத்தை இன்னொரு உலோகத்தின் மீது அதிக அளவில் வேதியியல் வினைபுரியும். இதனால் இரு உலோகங்களுக்குமிடையே மின்னழுத்த நிலை வேறுபாடு உண்டாகிறது

voltmeter ; (மின்) மின்னழுத்த மானி : மின்வலி அலகீட்டுக் கருவி

volume :(மின்.) ஒலியளவு ; ஒலியின் செறிவளவு

volumenometer : போக்களவுமானி : நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருட்களின் பொருண்மையை அளக்கும் கருவி

volumenometry : போக்களவு மானம் : நீக்கும் நீர்ம அளவால் திடப் பொருளின் பரும அளவு காணும் முறை

volumeter : (மின்.) வளிப்பிழம் பளவுமானி : காற்றின் பொருண்மையை அளக்கும் கருவி

V-thread : (எந்;பட்.) V-திரு கிழை ; 'V' என்ற ஆங்கில எழுத் தின் வடிவில் அமைந்துள்ள திரு கிழை 60° கோணத்தில் அமைந்த்திரு கிழையையும் இது உள்ளடக்கும்

V-type engine: (தானி) V-வடிவ எஞ்சின் : V என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தில் அடுக்கப் பட்ட நீள் உருளைத் தொகுதிகளைக் கொண்ட ஓர் எஞ்சின்

'vulcanite , (வேதி.) கந்தக ரப்பர்: கந்தகம் கலந்து கடுமையூட்டப் பட்ட ரப்பர். இந்திய ரப்பரும் கந்தகமும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். இது நெகிழ் திறம் இல்லாத கடினமான ரப்பர்

vulcanizing : (வேதி.) கந்தக வலி ஆட்டம் : இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல் ரப்பருக்கும் வலிமையும் நெகிழ்திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய்யப்படுகிறது wainscot : (க.க.) சுவர்ப் பலகை : உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளைப் பதித்து அழகுபடுத்துதல்

wainscoting : (க.க.) சுவர்ப் பலகையிடு : உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளை அமை

wainscoting cap : (க.க) சுவர்ப் பலகைத் தொப்பி : சுவர்ப் பலகைகளின் உச்சியில் வார்ப்புகளை அமைத்தல்

walke-talkie : (மின்.) சிறு சேணி : செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கையடக்க வானொலிப் பெட்டி. இது நடுத்தரத் தொலைவுகளில் களச்செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது

wall box : (மின்.) சுவர்ப்பெட்டி : வீடுகளில் மின்கம்பி இணைப்புகள் அமைப்பதில் மின்விசைக்கு அல்லது கொள்கலனுக்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பெட்டி

wallbed : (க.க.) சுவர்ப் படுக்கை : சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப்படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும். பல வகைகளிலான இவ்விதப் படுக்கைகள் சிறிய இல்லங்களில் பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன

wall board : (க.க.) சுவர் போர்டு : கட்டடத்துக்குள்ளாக உள்புறச் சுவர்களிலும் கிடைமட்டக் கூரைகளிலும் பிளாஸ்டர் பூச்சுக்குப் பதில் ஒட்டி நிற்கும் வகையில் பயன்படுத்தப்படுவது

wall bracket : (எந்.) சுவர் பிராக்கெட் : செங்கோண வடிவிலான தண்டு இரு புயங்களில் ஒன்றைச் சுவர்மீது அல்லது கம்பம் மீது பொருத்தலாம். எதையேனும் தாங்கி நிற்க மற்றொரு புயம் உதவும்

wall plate : (க.க.) சுவர் பிளேட் : வேலை பளு பரவலாக அமையும் பொருட்டு உத்தரம், இரும்பு கர்டர் ஆகியவற்றை இரு ஓரங்களிலும் தாங்கி நிற்க சுவரில் பிதுக்கமாக அமைந்துள்ள மரத்தண்டு

wall section : (வரை.) குறுக்கு வெட்டுச் சுவர் : சுவரின் உயரங்களையும், சுவரைக் கட்டும் முறைகளையும் காட்டும் சுவரின் குறுக்கு வெட்டுச் சுவரின் வரைபடம்

wall socket : (மின்.) சுவர் துளையம் : மின்சாரம் பெறுவதற்கென சுவருக்குள் அல்லது சுவர் மேல் அமைந்த மின்னோட்ட முனை

walnut, black : (தாவ.) கரும் வாதுமை மரம் : அமெரிக்காவைத் தாய்கமாகக் கொண்ட அழகிய கடின மரங்களில் ஒன்று. இது சாக்கலேட் பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இது நேர் கரணைகளையுடையது; நீண்ட காலம் உழைக்க வல்லது. இதில் எளிதாக வேலைப்பாடுகள் செய்யலாம். பீரங்கிக்குழல் மரச்சட்டம், மேலடை மெல்லொட்டுப் பலகை நிலைப்பெட்டி ஆகியவை தயாரிக்க இது பயன்படுகிறது

wane : (மர.வே.) கோட்டம் : உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறுநுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவது ஒரு புறம் சற்று கோணலாக இருத்தல்

warding file : (எந்.) பட்டை அரம் : மெல்லிய தட்டையான அரம். குறிப்பாக பூட்டுத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவது

warm-blooded : (உயி.) வெப்பக் குருதிப் பிராணிகள் : உயிரினங்களில் பாரன்ஹீட் 98 முதல் 1129 வரை வெப்பநிலையுடைய பிராணிகள். இவை சூழ்நிலையை விட மிகுதியான சூழ்வெப்ப நிலை கொண்டவை

warp : (வானூ.) பாவு நூல் : விமான இறக்கையின் வடிவம் மாறும் வகையில் அதை வளைத்தல் (துணி) தறியில் நீளவாட்டில் அமைந்த பாவு நூல். (மர.வே.) ஈரப்பசை அல்லது வெப்பம் காரணமாக மரம் நெளிந்து போதல்

warping : (வார்.) நெளிசல் : ஒரு வார்ப்படம் ஆறும்போது ஏற்படுகிற சீரற்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக வார்ப்படத்தில் ஏற்படுகிற கோணல் அல்லது நெளிசல்

wash : (வானூ. ) குலைவு : வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு

washer : (எந்.) வாஷர் : ஓர் இணைப்பு அல்லது ஸ்குரூ போன்றவை சிறிதும் இடைவெளியின்றி நன்கு பொருந்தி உட்காருவதற்காகப் பயன்படுத்தப்படுகிற நடுவே துளையுள்ள ஒரு தட்டையான சிறிய வட்டு

washer : (எந்.) பட்டை வளையம் : சுரியாணி மரைக்குக் கீழே இடும்பட்டை வளையம்

வாஷர்

washer cutter : வாஷர் வெட்டர் : தோல், ரப்பர் போன்றவற்றைக் கொண்டு வாஷர் தயாரிக்கின்ற கருவி நிலையான நடுவெட்டுப் பகுதியையும், மாற்றியமைக்கத்தக்க இரு வெட்டுமுனைகளையும் கொண்டது

வாஷர் வெட்டர்

washin : (வானூ.) வாஷின் : விமானத்தின் இறக்கை நுனியில் தாக்கு கோணம் அதிகரிக்கின்ற அளவுக்கு இறக்கையை வளைத்துவிடல்

wash out : (வானூ.) வாஷவுட் : விமான இறக்கையின் நுனியில் தாக்கு கோணம் குறைகின்ற வகையில் இறக்கையை வளைத்துவிடல்

wassermann reaction : (நோயி.) மேகக்கிரந்தி நோய்ச் சோதனை : ஒருவர் கிரந்தி என்னும் மேகப்புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவி செய்யக்கூடிய "இணைப்பான்' என்னும் பொருள் அடங்கியுள்ளது. ஒரு நச்சுப் பொருள், அதாவது, 'ஆ' என்ற வேறொரு பிராணியின் இரத்தம், 'அ' என்ற பிராணியின் இரத்தத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரத்தம்), தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுடன் கலக்க வேண்டும். இணைப்பானுடன் நச்சுப் பொருள் கலந்திருந்தால், நச்சு 'அ' வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ' வின் குருதியை மேகக்கிர்ந்தி பீடித்திருக்குமானால், 'ஆ' நச்சு கலப் பதற்கு முன்பு 'அ' இரத்தம் இணைப்பானுடன் இணைந்து விடும். அப்போது, 'ஆ' நச்சு கலப்பதற்கு இணைப்பான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால் 'ஆ' நச்சு 'அ' குருதியைத் தாக்க இயலாது. 'அ' குருதியின் உயிரணுக்கள் சேதமடையாமல் இருக்கும். இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்

waste : (உலோ.) கழிவுப்பஞ்சு : பஞ்சாலைகளில் கழிக்கப்படும். மெல்லிய பருத்தி இழைகள். இது எந்திரங்களைத் துப்புரவு செய்யப் பயன்படுகிறது

wastes : (பட்.) கழிவுப் பருத்தி : பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக்கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மொத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்

waste lubrication : (எந்.) கழிவு மசகு : அச்சுமுனை அமைந்த பெட்டிக்குள்ளாக எண்ணெய் தோய்ந்த கழிவுப் பொருளை அடைத்து வைத்தல். ரயில் பெட்டிகளில் இவ்விதம் மசகிடும் முறை கையாளப்படுகிறது

water bar :' (க.க.) நீர்த் தடுப்புத் தண்டு : நீர், குறிப்பாக மழை நீர் உள்ளே நுழையாமல் இருப்பதற்காக ஜன்னலின் அடிப்புறத்தில் மரக்கட்டைக்கும், கல்லுக்கும் இடையிலும் செருகப்படுகிற தண்டு அல்லது பட்டை

water cooling : (பொறி.) நீர் வழி குளிர்விப்பு : உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை

water gas : (வேதி.) நீர் வாயு : ஒரு வித வாயு. மிகச் சூடான நிலக்கரி அல்லது கோக் மீதாக நீராவியைச் செலுத்தும்போது உண்டாவது. இந்த வாயு திரவ ஹைட்ரோ கார்பன்களைக் கொண்டது. சில சமயங்களில் எரிபொருளாக அல்லது வெளிச்சம் தருவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது

water glass : (வேதி.) நீர்க் கண்ணாடி : குவார்ட்ஸ் மணலை, பொட்டாஷ் அல்லது சோடியம் ஹைட்ரேட்டுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிற சோடியம் அல்லது பொட்டாசியம் சிலிக்கேட் கரைசல். இது எண்ணெய் கலந்தது போலக் குழம்பாக இருக்கும். ஒட்டுவதற்கும், காப்புப் பூச்சாகவும், தீக்காப்புப் பொருளாகவும் பயன்படுவது

water hammer : நீர் அறைவு: ஒரு குழாயின் வழியே செல்லும் நீரைத் திடீரென்று தடுத்து நிறுத்தினால் சம்மட்டி அறைவது போன்று எழும் ஒலி

water jacket : (பொறி.) நீர்ப் போர்வை : மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்தைத் தொடர்ந்து அகற்றுவது இந்த ஏற்பாட்டின் நோக்கம்

water main : (கம்.) பெருங்குழாய் : சீர் வழங்கும் திட்டத்தின் அடித்தளப் பெருங்குழால்

water mark : நீரோட்டம் : காகிதம் தயாரிக்கப்படுகையில் புடைப்பான டிசைன் கொண்ட ஒரு சிலிண்டர் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக காகிதத்தில் ஏற்படும் குறியீடு. பின்னர் காகிதத்தில் வெளிச்சம் ஊடுருவும் வகையில் வைத்துப் பார்த்தால் அந்த டிசைன் தெரியும். அது நீரோட்டம் எனப்படும்

water proofing walls : (க.க.) நீர் புகாப் பூச்சு : சுவருக்குள் நீர் அல்லது ஈரம் பாயாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டுடன் ஒரு கலவையைக் கலத்தல். அல்லது அந்தக் கலவையைச் சுவர் மீதே பூசுதல்

water pump : (தானி.) நீர் பம்ப் : மோட்டார் என்ஜினைக் குளிர்விப்பதற்கான முறையில் நீரோட்டம் நடைபெறுவதற்குப் பயன்படும் பம்ப். இந்த பம்புகள் பொதுவில் சிலிண்டர் பிளக் முன்பாக அமைந்திருக்கும். விசிறி இயக்கத்துடன் அல்லது ஜெனரேட்டர் மூலம் பம்ப் இயக்கப்படுகிறது

water putty : (மர.வே.) அடைப்புப் பொடி : இப்பொடியை நீருடன் கலந்து மரப்பொருட்களில் உள்ள மெல்லிய வெடிப்புகள், ஆணித் துவாரங்கள், முதலியவற்றை அளப்பதற்குப் பயன்படுத்தலாம். எனினும், பளபளப்பூட்டுவதற்கு உகந்ததல்ல

water recovery apparatus : (வானூ.) நீர் சேகரிப்புச் சாதனம் : வான் கப்பலில் உள் எரி என்ஜின்களிலிருந்து வெளிப்படுகிற வாயுக்களைச் சேகரித்து குளிர்வித்து அவற்றில் அடங்கிய நீரைப் பிரித்தெடுக்கிற சாதனம்

water softener : (கம்.) நீர் மென்னாக்கி : வீடுகளில் கிடைக்கும் நீரில் கால்சியம், மக்னீசியம், சல்பேட், பைகார்பனேட் அடங்கியிருந்தால் சோப்பிலிருந்து நுரை வராது. நீரிலிருந்து உட்பொருட்களை அகற்றும் கருவி. இந்த நோக்கில் பயன்படுத்துகிற வேதிப் பொருள்

water spots :(வண்.அர) பூச்சுத் திட்டு : ஒரு பொருளுக்கு வார்னிஷ் பூச்சு அளிக்கும்போது மாறுபட்ட நிறத்துடன் சிறு திட்டுகள் காணப்படும். சில சமயங்களில் சற்று ஆழமாகவும் காணப்படும். ஈரப்பசை உள்ளே அமைந்த காரணத்தால் ஏற்படுவது

water table : (க.க.) நீர் வடிகை : ஒரு கட்டடத்தைச் சுற்றி சற்று நீட்டிக் கொண்டிருக்கிற சரிவான பலகை. மழைநீர் சுவர் மீது விழாமல் இருப்பதற்கான ஏற்பாடு

water vapor : (குளி.பத.) நீராவி : வாயுமண்டலத்திலுள்ள நீராவி

watt, James ( 1736–1819) : வாட், ஜேம்ஸ் (1736-1819) : நீராவி எஞ்சினைச் சீர்திருத்தி முதலாவது செறிமான நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காத்லாந்து விஞ்ஞானி. நீராவி எஞ்சினின் வேகத்தை முறைப்படுத்துவதற்கான சாதனத்தையும் இவர் கண்டுபிடித்தார். 1874 இல் நீராவி இருப்பூர்தி எஞ்சினுக்குப் புனைவுரிமை பெற்றார்

watt : (மின்.) வாட் : மின்சக்தி மின் அலகு. இது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கினால் கிடைக்கும் தொகைக்குச் சமம்

watt hour : (மின்.) வாட் மணி : மின்சக்தியின் பணியை அளக்கும் அலகு. இது ஒரு மணிநேரம் ஒரு வாட்டைச் செலவழித்தால் ஆகும் மின்சக்தியின் அளவு

wattless current : (மின்.) வாட் இல்லா மின்சாரம் : மாறுமின்னோட்டத்தில் விசையை உற்பத்தி செய்ய வோல்டேஜூடன் சேராத பகுதி. செயலற்ற பகுதி. செயல் பகுதிக்கு மாறானது

wattmeter : (மின்.) வாட்மாணி : மின்சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம் மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது

watt second : (மின்.) வாட் விநாடி : மின்சக்தியை அளக்கும் அலகு. இது ஒரு விநாடி நேரத்துக்கு ஒரு வாட் செலவழித்தால் ஆகும் மின்சக்திக்குச் சமம்

watts per candle :(மின்.) கேண்டில் அளவில் வாட் : ஒரு மின் எவ்வளவு மின்சாரத்தை பல்பு. பயன்படுத்துகிறது என்பதை இடை மட்டமாக சராசரியாக உற்பத்தியாகிற கேண்டில் பவர் அளவில் வாட் கணக்கில் கூறுவது

wave form : (மின். ) அலை வடிவம் : காலத்திற்கு எதிரான ஒரு சுழற்சியின்போது ஓர் அலையின் உடனடி மதிப்பளவுகளை வரைவதன் மூலம் கிடைக்கும் ஓர் அலையின் வடிவம்

wave front : (மின்.) அலைமுனை : மிகவும் முன்னேறிய ஓர் அலையின் மிக முந்திய முனை

wave meter : (மின்.) அலைமானி : ஓர் அலையின் அலை வெண்ணை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவு கருவி

wave train : (மின்.) தொடர் அலை : ஒரு குறுகியகாலத்திற்கு ஏற்படும் அலைச் சுழற்சிகளின் தொடர் வரிசை

wave length : (மின்.) அலை நீளம் : இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம். வானொலியைப் பொருத்தவரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் புள்ளிகள் இடையிலான தொலைவு

wave : (மின்.) அதிர்வலை : ஓர் ஊடகத்தில் ஏற்படும் அதிர்வலை அலைகள் மூலம் ஆற்றலை அனுப்பலாம். எடுத்துக்காட்டு : ஒலி,ஒளி அலைகள.

wave, electromagnetic : (மின். ) மின்காந்த அலை : ஒரு மின்னியல் புலமும், ஒரு காந்தப்புலமும் உடைய ஓர் அலை. எடுத்துக் காட்டு: வானொலி அலை

waviness : (குழை.) அலைவம் : மேற்பரப்பு அலை மாதிரியில் வளைந்து அமைதல்

wax : (வேதி.) மெழுகு : உயர் ஒற்றை அணு ஆல்கஹாலின் கரிம உப்பும், மிகுந்த கொழுப்பு அமிலமும் கலந்தது. உதாரணம்: தேன் மெழுகு

wax engraving : (அச்சு.) மெழுகி உருமானம் : மெழுகு அளிக்கப்பட்ட தாமிரத் தகடுகளின் மீது தக்கபடி வடிவம் கொடுத்து பின்னணியை தயார்படுத்தி அதிலிருந்து எலெக்ட்ரோ பிளேட்வகை பிளேட்டைத் தயாரித்து அச்சிடுதல்

wax finish : (மர.வே) மெழுகு நேர்த்தி : மரத்தால் ஆன பொருட்கள் மீது இதற்கென்று தயாரிக்கப்பட்ட மெழுகைப் பூசித் தேய்ப்பதன் மூலம் மிக நைசான நேர்த்தியைப் பெறமுடியும்

ways : (பட்.) சறுக்குப் பள்ளம் : நெடுக அமைந்த சிறுபள்ளம். வேலை செய்யப்படுகின்ற பொருள் அல்லது அதைத் தாங்கிய பொருள் இப்பள்ளங்களின் மீது அமைந்தபடி சறுக்கிச் செல்லும்

weak sand : (வார்.) சேரா மணல் : வார்ப்பட வேலைக்கான மணலில் சிறு சத அளவுக்குக் களிமண் இருப்பதன் விளைவாக ஒன்று கூடிச் சேராத மணல் wear and tear : தேய்ந்தழிதல் : பயன் காரணமாக மதிப்பில் ஏற்படும் குறைவு

weather : பருவ நிலை : மரம், கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து, உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை

weather boards : (க.க.) மழைப்பலகை : கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள், மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு

weathering : (க.க.) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு : சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்பு கள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற்புறத்தில் ஏற்படும் பாதிப்பு

weather strip : (க.க.) கசிவுத் தடுப்பான் : சன்னல், மற்றும் கதவுகளின் வெளிப்புறத்தின் கீழ்ப்பகுதியில் உலோகம், மரம் அல்லது வேறு பொருளில் செய்யப்பட்ட பட்டையை அமைத்தல். கதவு மீது படும் நீர் கீழிறங்கும் போது உள்ளே வராமல் தடுக்கும் ஏற்பாடு

web : (எந்.) வெப் : வார்ப்படங்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் இரு பகுதிகளை இணைக்கும் மெல்லிய தகடு அல்லது பகுதி. (காகிதத் தயாரிப்பு) காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரிப்பு நிலையில் உள்ள அல்லது தயாரிக்கப்பட்ட காகிதம்

webbing : சாக்குப் பட்டை : சணல் இழையைக் கொண்டு 3,3 1/2 மற்றும் 4 அங்குல அகலத்தில் 72 கெஜ நீளத்துக்குத் தயாரிக்கப்படுகிற சாக்குப்பட்டை மர இருக்கை பிரேம்களில் ஸ்பிரிங்குகளுக்குக் கீழே அமைக்கப்படுவது

webbing stretcher : விறைப்புக் கட்டை : மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொருள் சுற்றப்பட்டிருக்கும். மறுபுறத்தில் செருகுவதற்கு வசதியாக கூரான உருக்கு முனைகள் இருக்கும்

web-calendered : சுருள் நேர்த்தி : காகித உற்பத்தியின்போது காகிதம் நீண்ட சுருளாக இருக்கும் போதே சுழல் உருளைகள் இடையே செலுத்தப்பட்டு மழமழப்பாக் கப்படுதல்

weber's law : (மின்.) வெபர் விதி : "துலங்கலில் கணிசமான ஒரு மாறுதலை உண்டாக்குவதற்குத் தேவைப்படும் குறைந்த அளவுத் தூண்டல் மாற்றமானது, ஏற்கெனவே உள்ள தூண்டலுக்கு வீத அளவில் இருக்கும்" என்பது வெபர் விதியாகும்

weber, wilhelm Eduard (1024-1891) : வெபர், வில்ஹெல்ம் எட்வர்ட் (1804-1891) : மின்னியலில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஒரு ஜெர்மன் இறைமையியலாளர்; விஞ்ஞானி

web of drill : (எந்.) குடைவி முனை : ஒரு குடைவு கருவியில் சுழன்று இறங்கும் வெட்டுக் குழிவுகளின் அடிப்புறத்தில் குடைவியின் பருமன் wedge : (தாவ.) ஆப்பு : மரத்தைப் பிளத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப் படும் மரம் அல்லது உலோகத்தாலான செருகு தண்டு

wedge : (எந்.) ஆப்பு : ஆங்கில 'V' வடிவில் மரம் அல்லது உலோகத்தால் ஆன துண்டு. ஒரு பொருளில் வலுவான அழுத்தத்தை ஏற்படுத்த அல்லது இரண்டாகப் பிளக்கப் பயன்படுவது

wedging ; பதமாக்கம் : களி மண்ணைப் பொருளாக உருவாக் கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது

weft or woof :ஊடு: தறியில் குறுக்காக அமையும் நூல்கள்

weight : காகித எடை : ஒரு ரீம் காகித்தின் அல்லது 1000 வீட் காகிதத்தின் எடையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல்

weight font : (அச்சு.) பான்ட் எடை : இன்ன எழுத்து இன்ன விலை என்பதற்கு மாறாக எடைக் கணக்கில் விற்கப்படும் அச்சு எழுத்துக்கள்

weighting : துணி எடைமானம் : பட்டுடன் கனிம உப்புகள் அல்லது வேறு பொருட்களைச் சேர்த்து பட்டுக்கு கனம் சேர்த்தல்

weightlessness : (விண்) எடையற்ற நிலை : ஒரு பொருளின் மீது ஈர்ப்பாற்றல் இயங்காம லிருப்பதால் உண்டாகும் நிலை. ஒரு வெற்றிடத்தில், ஆதாரமின்றி எளிதில் விழுந்து விடக்கூடியதாகவுள்ள ஒரு பொருள் எடையற்றது எனப்படும்.விண்வெளிக்கு அனுப்பப்படும் மனிதன் அல்லது விலங்கின்மீது ஈர்ப்பாற்றல் இயங்காமற் போவதால், எடையின்மை நிலை உண்டாகிறது

Weir .(பொறி) தும்பு :ஆறு, அல்லது ஓடையின் குறுக்கே எழுப்பப்படும் சுவர் அல்லது அணைமின் உற்பத்திக் காரியங்களுக்கு, போதுமான சீர் கிடைக்கச் செய்வதற்காத நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கட்டப்படுவது

welding :(எந்.) பற்றவைப்பு : இரும்பு அல்லது உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை. ஆக்சி ஆசிடி லீன், மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது

welding flux: (பற்ற.) பற்ற வைப்புப் பொருள்: பற்றவைக்கும்போது துப்புரவு செய்யவும், ஆக்சிகரண் மாவதைத் தடுக்கவும், இணைப்பு களை எளிதாகக் கூட்டிணைப்பு செய்யவும் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுப் பொருள்

welding rod : (பற்ற) பற்ற வைப்புத் தண்டு : பொதுவில் 24 அங்குல நீளமும், ¼, ⅜ அல்லது ½ அங்குலக் குறுக்களவும் கொண்டது. தீப்பீச்சு மூலம் பற்றவைக்கையில் இணைக்க வேண்டிய இடத்தில் இத்தண்டுகள் உருகி இணைக்கும். பற்ற வைப்புத்தண்டு கள் செய்ய வேண்டிய வேலையின் தரத்தைப் பொருத்து வெல்வேறு வகைப் பொருட்களால் ஆனது

Welding sequence: (பற்ற) பற்றவைப்பு வரிசை: உறுப்புகளை எந்த வரிசையில் பற்றவைக்க வேண்டுமோ அந்த வரிசை

welding transformer: (மின்.) பற்றுவைப்பு மின்மாற்றி : ஒன்றோடு ஒன்று பொருத்தப் படுகிற உலோகப் பகுதிகளை இணைப்பதற்கு வெப்பம் பெறப் போதுமான மின்சாரத்தை உடனே தரும் இறக்கு மின்மாற்றி

weld-mark: (குழை.) இணைப்பு அடையாளம்: பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம்

weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளின் தொகுதி

weld metal: (பற்ற.) பற்றவைப்பு உலோகம்: பற்றவைப்பின் போது உருகி ஒட்டிக்கொள்ளும் உலோகம்

weld period : பற்றவைப்புக் காலம் : பற்ற வைப்பதை ஒரு தடவை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு ஆகும் காலம்

weld time : பற்றவைப்பு நேரம் : ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக்கப்படுகிற நேரம், துடிப்பு-பற்ற வைப்பில் பற்ற வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும்

weld hole : (க.க.) மாடிப் படிக் குழி : படிக்கட்டும் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி

welted edge : தடித்த விளிம்பு: இருக்கைச் சாதனங்களில் போர்த்து துணிகளின் விளிம்பு களைச்சேர்த்துத் தைக்கையில் உட்புறமாக துணி போர்த்திய ஒரு கயிற்றைக் கொடுத்துத் தைத்தல். இதன் மூலம் இணைப்புகள் புடைப்பாக இருக்கும்

Weston cell ; (மின்) வெஸ்டான் மின்கலம் : ஒரு வெந்நிற உலர் மின்கலம்

wet end : ஈர முனை : காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் காகிதம் உருப்பெற்று முதலாவது ஈரம் போக்கும் உருளை வரையிலான பகுதி

wet rot : ஈர உருத்து : ஈரப்பசை உகந்த வெப்பம் காரணமாக மரக்கட்டை உளுத்துப் போதல்

wet steam :ஈர நீராவி: ஈரப்பசை அடங்கிய தெவிட்டியநீராவி

wheatstone's bridge : (மின்.) மின் தடைவுமானி : மின் தடையை அளவிடும் ஒரு முறை சீரமைவு செய்துகொள்ளத்தக்க, அறியப்பட்டுள்ள மூன்று மின்தடைகளுக்கும், கண்டறியக்கூடிய மின் தடைக்கு மிடையிலான வீத அளவு

wheel and axle :சக்கரமும் அச்சும் : பளுவைத் தூக்குவதற்கு எளிய எந்திர விதி. அச்சில் அமைந்த சக்கரத்தின் வெளிச்சுற்று மீது விசை செலுத்தப்படுகிறது. சங்கிலி அல்லது கயிறு மூலம் எடையானது அச்சுடன் இணைக்கப்படுகிறது

wheel base :சக்கர அடிமானம்: கார் அல்லது வாகினில் உள்ளது போன்று முன் சக்கர மையத்திலிருந்து பின் சக்கர மையம் வரை உள்ள தூரம்

wheel balance (தானி) சக்கரச் சமநிலை: ஒரு சக்கரத்தில் ஏற்றத்தாழ்வான விசைகளைச் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கு எதிரெதிர் எடைகளைச் சேர்த்தல்

wheel dresser (எந்.) சக்கரத் தீட்டுக் கருவி: அரைப்பு சக்கரங்களின் வெட்டு முகங்களை மறுபடி கூராக்கவும்,சுத்தப்படுத்தவும் பயன்படும் கருவி wheel hub :சக்கரக் குடம் : ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக்கும்

wheel lathe : சக்கரக் கடைசல்: எந்திரம் : குறுகிய மேடையும் ஆழமான இடைவெளியும் கொண்ட விசேஷ கடைசல் எந்திரம். சக்கரங்களைக் கடைவதற்குப் பயன்படுவது

wheel puller :(தானி.) சக்கர இழுவி: மோட்டார் வாகனச் சக்கரங்களை அச்சிலிருந்து விடுவித்து வெளியே இழுப்பதற்கான கருவி

wheel truing : (எந்.) சக்கர வடிவச் சீரமைவு: ஒரு சாணைச் சக்கரத்தைச் சமநிலைக்கு கொண்டு வருவதற்கு அல்லது சாணைத் திறனை மேம்படுத்துவதற்கு அதன் உறுப்பு எதனையும் சீரமைவு செய்யும் முறை

Wheel window: (க.க) சக்கரப் பலகணி : சக்கரத்தில் உள்ளது போன்று ஆரைகள் அமைந்த வட்ட வடிவச் சாளரம்

wheel wright :சக்கரப் பணியாளர் : வாகின்கள் அல்லது அலை போன்றவற்றைத் தயாரிக்கிற அல்லது பழுது பார்க்கிற பணியாளர்

Whetting : (எந்.) தீட்டுதல்: வெட்டு முனையைக் கூறாக்கு வதற்காக சிறு துளி எண்ணெய் சேர்க்கப்பட்ட தீட்டுக் கல்லில் தீட்டுவது

whirler: சுழல்வி : மண்பாண்டங் களுக்கு பட்டையிடும் போது அல்லது அலங்கார வேலைப்பாடு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுழல் கருவி

white antimony : (வெண்.அர.) வெள்ளை ஆன்டிமனி : பெயின்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற நச்சற்ற வெள்ளை நிறப் பொருள் டைட்டானியம் ஆச்சைட் பெயின்ட் போன்று மெல்ல உலரும் தன்மையை அளிப்பது

white cedar : (மர. வே.) வெள்ளை செடார் : . முதல் 15 மீ. உயரம் வளரும் மரம். குறுக் களவு ஒன்று முதல் 6 மீ., இருக்கும். லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுவது

white coat : வெள்ளைப் பூச்சு: சிமென்ட் போன்ற பூச்சு அளிக்கப்பட்ட சுவர் மீது உறுதியான வெள்ளைப் பூச்சு அளித்தல். இப்பூச்சுப் பொருளானது பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிசும், சுண்ணாம்புக் குழைவும் அடங்கியது. இதனுடன் சில சமயம் பொடியாக்கப்பட்ட சலவைக் கல்லும் சேர்க்கப்படும். மேல் பூச்சுக்கு ஜிப்சம் குழைவும் பயன்படுத்தப்படலாம்

white iron : (உலோ.) வெள்ளை இரும்பு : மிகவும் உறுதியான வார்ப்பு இரும்பு, தயாரிப்பின் போது வார்ப்பானது உலோக அச்சில் குளிர்விக்கப்படுகிறது

white lead: (வேதி.வண்.) ஒயிட் லெட் : காரீயத்தின் ஹைட்ரேட் கார்பனேட் பெயின்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது

white light : (மின்) வெண்ணொளி : சிவப்பு, பச்சை, ஊதா வண்ணங்கள் உரிய வீத அளவு களில் கலந்த கலவை

white-metal alloys : (உலோ.) வெள்ளை உலோகக் கலோகங்கள் : துத்தம், ஈயம், தாமிரம் ஆகிய வற்றைச்சேமித்துத் தயாரிக்கப்படுகிற ஆலோகம். மோட்டார் வாகனத்தில் கடினமான உறுப்புகளை அச்சு வார்ப்பு மூலம் தயாரிக்கப் பயன்படுவது

White oak : (தாவ.) வெண் கரு வாலி : மிகுந்த வலிமையும் நீண்ட காலம் உழைக்கும் திறனும் உடைய நெருக்கமான கரண்கள் உள்ள கனமான மரம்.அமெரிக்காவிலுள்ள கருவாலி மரங்களில் மிகவும் கனமானது

white peak : தொலைக்காட்சியில் வெண்மைத் திரையில் வெண்ணிறப் படச்சமிக்ஞைகளின் உச்ச அளவு முனைப்பு

white pine : (மர. வே.) வெள்ளை பைன்: நீளவாட்டில் உள்ளோட்டம் அமைந்த மென் மரம்; வெளிறிய நிறம்; வடிவமைப்புப் பணிகளுக்கும் இணைப்புப் பணிக்கும் விரிவாகப் பயன்படுவது

white space : (அச்சு) வெள்ளிடம்: ஒரு ஷீட்டில் அச்சிடப் படாத பகுதி

white Spots : (வண்; அர.) வெள்ளைத்தட்டு : இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள். அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப்பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத மட்டமான கரைப்பானை பயன்படுத்துவதாலும் ஏற்படுவது

white spruce : (மர.வே.) விலை குறைவான சாதாரண மரம் : பெரிதும் பிரேம்களைச் செய்யவும், தரைகளை அமைக்கவும் மற்றும் அது போன்ற பணிகளுக்கும் பயன்படுவது

white wash : (க.க) வெள்ளையடி: நீரில் கரைத்த சுண்ணாம்பை பிரஷ் கொண்டு பூசுதல் அல்லது ஸ்பிரே கருவி மூலம் ஸ்பிரே செய்தல். சுண்ணாம்பு நன்கு ஒட்டிக் கொள்ள சில சமயங்களில் உப்பு சேர்ப்பது உண்டு. நீலத்தைச் சேர்த்தால் நல்ல வெண்மை கிடைக்கும்

whithing ; (வேதி.) வெள்ளைப் பசை : நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந்தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது

Whitney keys : (எந்.) விட்னி கீ: சதுர தண்டு சாவிகள். இருமுனைகளிலும் நுனிகள் மழுங்கலாக இருக்கும்

whitworth thread : (எந்.) விட்வர்த் திருகு ; தர நிர்ணயப் படுத்தப்பட்ட இங்கிலாந்தின் திருகுபுரி தலைப்பகுதியும் நுனியும் மழுங்கலாக இருக்கும். புரியின் கோணம் 55 டிகிரி

whole depth : (பல்லி) மொத்த ஆழம் : ஒரு சக்கரத்தின் பல் பற்றிய அளவு. மேல் விளிம்புக் கோட்டிலிருந்து பற்களுக்கு இடையே உள்ள பள்ளத்தின் அடி மட்டம் வரையிலான மொத்த ஆழம்

whorl : (மர.வே.) சுருள் பாணி: நெருக்கமாக இல்லாத சுருள் வடிவப் பாணி

wicket ; (க.க) உள் கதவு : பெரிய கதவுக்குள்ளாக அதன் பகுதியாக அமைந்த சிறுகதவு

wick - feed oilers : (எந்.) திரி மசகு : தேக்கி வைக்கப்பட்ட எண்ணெயிலிருந்து வெளிப்படும் திரி மூலம் மசகிடுதல். எண்ணெய்யில் மூழ்கியுள்ள முனையிலிருந்து எண்ணெயானது திரி வழியே மசகிட வேண்டிய பகுதிக்குச் செல்லும் ஏற்பாடு

wiggler : (எந்.) மையக் குறியிடு கருவி : துளையிடப்பட வேண்டிய பொருளின் நடுமையத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, துளைத்தண்டின் நுனிக்கு நேர் சங்குத்தாக அந்த மையம் அமையும் படி செய்ய உதவும் கருவி

wild black cherry : (மர.வே.) காட்டு கருப்புச் செர்ரி மரம் : பொதுவில் 6 முதல் .9.மீ. குறுக் களவுடன் 15 முதல் 1.5 மீ. உயரம் வரை வளரும் மரம். இந்த மரம் சிவந்த பழுப்பு நிறம் கொண்டது. கணிசமான அளவுக்கு கெட்டியானது; உறுதியானது. பருவ நிலைகளால் பாதிக்கப்பட்டு வெடிப்பு விடாதது; வளையாதது. இருக்கைகள், நுண்ணிய வேலைப்பாடுள்ள பலகைகள் முதலியவற்றைத் தயாரிக்கப் பயன்ப்டுவது

winch : (எந்.) விஞ்ச் : பாரம் தூக்கும் திருகு உருளை ஏற்றப் பொறி

wind :நெளிசல் : ஒரு மரத்தில் இருக்கின்ற நெளிசல் அல்லது கோணல்

wind cones . (வானூ.) காற்று திசைகாட்டி: விமான நிலையத்தில் காற்று வீசும் திசையைக் காட்டு வதற்காக உள்ளது. குறுகிக் கொண்டே வரும் நீண்ட துணி ஒரு தண்டின்மீது கட்டி வைக்கப்படும்

Winders: (க.க.) விரியும் படி: மாடிப்படிகளில் சில படிகள் மட்டும் ஒரு புறம் அகன்றும் மறு புறத்தில் குறுகியும் அமைந்திருப் பது. மாடிப்படிகளில் வளைவிலும், திருப்பங்களிலும் இவ்விதமாக அமைந்துள்ள படிகள்

wind indicator: (க.க.) காற்று காட்டி: தரைமட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி

winding stair: சுழல்படி: தொடர்ந்து திசை மாறியபடி உயரே செல்லும் படிகள். படிகள் வளைந்து செல்லலாம். அல்லது நடுவில் திட்டுகளுடன் வளைந்து செல்லலாம். படிகளின் நடுவே உள்ள கிட்டத்தட்ட வட்டவடிவ இடைவெளியானது படிக்கிணறு எனப்படும், இது அகன்று இருக்கும். படிகளின் கைப்பிடியும் சுழன்று மேலே செல்லும்

windlass; பாரம் தூக்கும் பொறி: 'வண்டி லாசு' என்றும் கூறுவது உண்டு

wind load: (பொறி.) காற்று விளைவு: ஒரு கட்டுமானம் மீது வீசும் காற்றினால் ஏற்படுகின்ற பாரம்

window: (க.க.) பலகணி: ஒரு கட்டடத்தில் அமைந்த பல திறப்புகள். உள்ளே வெளிச்சமும், காற்றும் கிடைப்பதற்காக அமைக்கப்படுவது. வேண்டும்போது மூடிக் கொள்ள சட்டங்களுக்குள் ளாக ஒளி ஊடுருவும் பொருள் இணைக்கப்பட்ட ஏற்பாடு கொண்டது

window head: (க.க.) பலகணித் தலை: பலகணிச் சட்டத்தின் மேல் பகுதி

window jack: பலகணிச் சாரம்: பலகணி அடிச்சட்டத்துடன் பொருந்துகிற, அத்துடன் வெளி யே நன்கு நீட்டிக்கொண்டிருக்கிற சிறிய வலுவான மேடை. பொதுவில் பெயின்ட் அடிப்பவர்கள் பயன்படுத்துவது

window seat: (க.க) பலகணி இருக்கை: பலகணிக்குக் கீழே அல்லது பலகணியின் உள் அமைந்த இடத்தில் பொருந்துகிற இருக்கை

wind shake: காற்று வெடிப்பு: மரத்தை வெட்டுவதற்கு முன்னதாக மரத்தின் தண்டுகளில் காற்று காரணமாக ஏற்படும் வெடிப்பு

windshield wiper: (தாணி.) கார் கண்ணாடித் துடைப்பான்: காரின் முன்புறத்தில் உள்ள கண் ணாடியில் மழைநீர், அல்லது விழு பனி படியும் போது அதைத் தொடர்ந்து அகற்றி ஓட்டுபவருக்கு எல்லாம் தெளிவாகத் தெரிய உதவும் கருவி. எந்திர முறை மூலம் பல வெற்றிட ஏற்பாட்டின் கீழ் மின்சார மூலம் அல்லது கையால் இயக்கப்படுவது. மழை நீரை, விழுபனியை அகற்ற உறுதியான நீண்ட தண்டின் முன்புறத்தில் ரப்பர் பட்டை அமைந்தது

wind tee: (வானூ.) காற்று திசை காட்டி: காற்று எத்திசையை நோக்கி வீசுகிறது என்று காட்டு வதற்கு விமானம் தரை இறங்கும் பகுதியில் அல்லது அருகே உள்ள கட்டுமானத்தின் உச்சியில் 'T' வடிவில் அமைந்த பெரிய காற்று திசைக் காட்டி

wind tunnel: (வானூ) காற்றுச் சுரங்கம் ;காற்றுப் புழைவழி: செயற்கையாக வேண்டிய் அளவில் காற்று வீசும்படி செய்வதற்கான சாதனம் அடங்கிய கூடம்: விமான மாடல் போன்றவை வைக்கப்பட்டு காற்று வீசுவதால், காற்று இயக்க விசைகள் சோதனைப் பொருள் மீது ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய காற்றுச் சுரங்கம் உதவுகிறது

wing: (வானூ.) இறக்கை: விமானத்தின் முக்கிய தாங்கு பரப்புகள். இடது இறக்கை, வலது இறக்கை, மேல் இறக்கை ஆகியன அடங்கும். (கட்டிட) முதன்மை கட்டிடத்திலிருந்து பிரிந்து நீண்டு அமைந்த கட்டிடப் பகுதி

wing axis: (வானூ.) இறக்கை அச்சு: இறக்கையின் எல்லாப் பகுதிகளின் வான் இயக்க மையங்களின் குவியம்

winged dividers; இறக்கையுள்ள பகிர்வி: நீளமான கோடுகளைப் பகிர்ந்து. பிரித்துப் பிரித்து அளப் பதற்காக இறக்கையுள்ள கருவி. கூரான இரு கால்களில் ஒன்றின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய தகடு மற்றதன் ஊடாகவும் சென்று அமைந்திருக்கும். துளையுள்ள காலில் பொருத்தப்பட்ட நிலைப்பு ஸ்குருவை முடுக் கினால் இக்கருவி அளவு மாறாமல் அப்படியே இருக்கும். குறுகாது; விரியாது

wing heavy: (வானூ) இறக்கை இறக்கம்: விமானம் குறிப்பிட்ட தொரு போக்கில் சாதாரண மாகப் பறக்கும்போது கிடைநிலைக் கட்டுப்பாடுகள் இயக்கப் படாத நிலையில் விமானத்தின் வலது அல்லது இடது இறக்கை கீழ்நோக்கிச் சாய்ந்த நிலை

wing loading: (வானூ) இறக்கை எடைமானம்: முற்றிலுமாக பளு ஏற்றப்பட்ட நிலையில் மொத்த எடையை, தாங்கு பரப்பினால் வகுத்து வரும் எண்

wing nut: (எந்.) இறக்கை நட்டு: நட்டுகளில் ஒரு வகை. இந்த வகை நட்டில் அதன் இரு புறங்களிலும் இறக்கை போல இரு மெல்லிய பகுதிகள் நீட்டிக்கொண்டிருக்கும். இறக்கைகளைப் பற்றி நட்டு முடுக்கப்படும் அல்லது வெளியே எடுக்கப்படும்

wing profile. (வானூ) இறக்கை விளிம்புரு: ஒரு விமானத்தின் இறக்கையின் ஓரங்களை மட்டும் காட்டும் படம் wing rib; (வானூ.) இறக்கை முதுகு: விமான இறக்கையின் உள் கட்டுமானத்தில் விமான வயிற்றுப்புறப் பகுதியிலிருந்து இறக்கையின் ஊடே அதன் வெளி விளிம்புவரை அமைந்த தண்டு. அதுவே இறக்கைக்கு வடிவத்தை அளிக்கும் அடிப்படைத் தண்டு

wing section; (வானூ) இறக்கைக் குறுக்கு வெட்டு: விமான இறக்கையின் நீளவாட்டு அல்லது வேறு கோணத்திலான குறுக்கு வெட்டுத் தோற்றம்

wing skid: (வானூ.) இறக்கை முட்டு: விமான இறக்கை சாய்ந்து தரையைத் தொடாதபடி தடுக்க இறக்கையின் நுனியின் கீழ் நிறுத்தப்படுகிற முட்டு

wing spar: (வானூ.) இறக்கைத் தண்டு: விமானத்தின் இறக்கையின் உட்புறக் கட்டுமானத்தால் நீளவாட்டில் அமைந்த பிரதான தண்டு

wing tip; (வானூ.) இறக்கை முனை: விமானத்தின் இறக்கையின் வெளிக்கோடி முனை

wing tip flare: (வானூ) இறக்கை முனை வானூர்தி: விமானம் கீழிறங்குகையில் வெளிச்சம் தேவைப்படுமானால் இயக்குவிப்ப தற்கான வாகனம். இது இறக்கை யின் நுனிகளில் பொருத்தப்பட்டிருக்கும்

wing truss: (வானூ.) இறக்கைக் கூடு: விமான இறக்கையின் உட்புறக் கட்டுமான பிரேம்களின் கடு. இணைப்புத் தண்டுகள், கம் பிகள், கேபிள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இதன் வடிவமைப்பின் விளைவாக இறக்கையின் எடை விமானத்தின் உடலுக்கு மாற்றப்படுகிறது

wiped joint: (கம்மி) துடைப்பு ஒட்டு: இரு துண்டுகளை ஒன்றாக வைக்கும்போது இரண்டையும் சூடேற்றி தக்க சூடு ஆந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவ்ற்றின் மீது, உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், குழம்பு நிறையில் ஒட்டுக்கு மேலுள்ள எஞ்சிய உலோகத்தை துடைப்புத் துணி கொண்டு துடைத்து அகற்றுதல்

wiper_(எந்) துடைப்பி; கோண வட்ட இயக்கியின் ஒரு வடிவம், சரிந்து ஏறுகிற அல்லது துடைக்கிற பணியைச் செய்வது

Wire bar: (உலோ) கம்பிப் பாளம்: உருளைகளில் கொடுத்து தண்டுகளாக மாற்றுவதற்கான தாமிரப் பாளம். உருளைக்குள் எளிதில் செருக சரிவான விளிம்பு இருக்கும்

wire brush: கம்பி பிரஷ்: தூரிகைக்குப் பதில் உருக்கினால் ஆன மெல்லிய துண்டுகள் அல்லது கம்பிகளைக் கொண்ட பிரஷ். ஒரு பரப்பின் மீதுள்ள துருசு. அழுக்கு அல்லது வேறு பொருட்களை அகற்றப் பயன்படுவது.

wire cloth (உலோ ) கம்பித் துணி: நெசவு செய்த கம்பியினாலான ஒரு வகைத் துணி

wired edges (உலோ) கம்பி விளிம்பு: ஒரு கம்பியில் அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட உலோ கத் தகட்டின் விளிம்பு.

wire drawing: கம்பி இழுத்தல்: கம்பி தயாரிக்கும் முறை. உலோகத் தண்டு தக்க உலோகத் தட்டின் நடுவே உள்ள ஓட்டை வழியே இழுக்கப்படும்

wire gauge: (எந்.) உயர் அளவு மானி: தயாரிக்கப்படுகிற கம்பி மற்றும் தகடுகளின் குறுக்கு அறை களைக் கண்டறிவதற்கென குறியீடுகளையும், அளவு எண்களையும், கம்பி, தகடு ஆகியவற்றை வைத்து அளவு பார்க்க வெவ்வேறு அளவுகளில் குழிவுகளையும் கொண்ட தகடு. அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிற அமெரிக்கா தர நிர்ணய உருக்கு கம்பி அளவு மானி அதிகார முறையில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்ட மதிப்பு இல்லாதது. வரி விதிப்புப் பணிகளுக்கு பிர்மிங்ஹாம் அளவுமானி அமெரிக்க சட்டமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்ட்து ஆகும். அமெரிக்கன் பிரவுன் அண்ட் ஷார்ப் காஜ், தாமிரக் கம்பிகளையும், இரும்பல்லாத உலோகங்களால் ஆன கம்பிகளையும் அளக்கப் பயன்படுகின்றன

wire glass: (க.க.) கம்பி பதித்த கண்ணாடி : அகன்ற இடைவெளி கொண்ட கம்பி வலை உள்ளே புதிக்கப்பட்ட கண்ணாடி. தற்செயலாகக் கண்ணாடி உடைந்தாலும் துண்டுகள் சிதறாமல் தடுக்க இந்த ஏற்பாடு உதவும்

wire mark: கம்பிக் குறி : காகிதம் மீது ஃபோர்ட்ரீனியர் எந்திரத்தின் கம்பி அல்லது உருளை எந்திரத்தின் உறை ஏற்படுத்தும் அடையாளக்குறி

wire nails: கம்பி ஆணிகள்: கம்பிகளிலிருந்து செய்யப்படுகிற ஆணிகள் பல்வேறு காரியங்களுக்கு ஏற்ப, பல அளவுகளில் பல விதமான தலைகளுடன் தயாரிக்கப்படுபவை. முன்னர் இருந்த வெட்டு ஆணிகளுக்குப் பதில் இவை பரவலாகப் பயன்படுபவை

wirh recorder (மின்.) கம்பி ஒலிப்பதிவுக் கருவி: ஓர் ஒலிப்பதிவு சாதனமாக ஒரு காந்தக் கம்பியைப் பயன்படுத்தும் ஓர் ஒலிப் பதிவுக் கருவி

wire worm (உயி) கம்பி புழு: புல்லுக்கு அடியில் வாழும் ஒரு ஆண்டின் முட்டைப்புழு. புல் நிலத்தை உழும் பொழுது இந்த்க் கம்பிப்புழுக்கள் வெளியே வந்து பயிர்களுக்குப் பெருஞ்சேதம் விளைவிக்கிறது

wiring diagram : (மின்.) கம்பித் தொடர் வரைபடம் : மின் தொடர்புச் சாதனங்களையும், அவற்றுக் கிடையிலான இணைப்புகளையும் குறியீடுகள் மூலம் காட்டுகிற வரைபடம்

withe : (க.க.) வித் : அதே புகைக் குழாயில் புகை வழிகளுக்கு இடையில் அமைந்த பகுதி

wolframite : (உலோ) வோல்ஃப் ராமைட் : அலுமினியம், டங்ஸ்டன், மற்றும் சிறு அளவில் தாமிரம், துத்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஜெர்மன் அலோகம். இது டுராலுமினியத்தின் பல பண்புகளைப் பெற்றுள்ளது

wood alcohol (வேதி.) மர ஆல்கஹால் : காண்க மெதனால்

woodcut : (அச்சு.) மரச் செதுக்கு அச்சு : அச்சடிப்பதற்கு மரக் கட்டையால் செய்யப்படுகிற பிளேட். இதில் தேவையில்லாத பின்னணி செதுக்கி அகற்றப்படும். அச்சிடப்பட வேண்டியவை புடைப்பாக நிற்கும்

wood engraving : (அச்சு.) மர செதுக்கு வேலை : மரச்செதுக்கு அச்சுகளைத் தயாரிக்கும் அலை

wood finishing : (மர.வே.) மர நேர்த்தி : மரப்பொருட்களுக்கு இறுதி நேர்த்தி அளிக்க இவற்ன்றத் தயார்படுத்துவது, பின்னர் பெயின்ட் அல்லது வார்னிஷ் கொடுப்பது குறிப்பிட்ட நேர்த்தி தேவைப்பட்டால் பாலிஷ் அளிப்பது wood flour ;மர மாவு: மிக நைசாகப் பொடி செய்யப்பட்ட மரம். பொதுவில் ஒயிட் பைன் மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது. லினோலியம் தரை, ரப்பர் ஆகிய வற்றில் உள்ள சிறு ஓட்டைகளை அடைப்பதற்குப் பயன்படுவது

wood pattern making : மரத்தால் ஆன வடிவங்கள் : மரத்தைக் கொண்டு மாடல்கள் அல்லது பிளான்களைத் தயாரிப்பது

wood pulley : (எந்) மர உருளை: இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை)யை விட லேசானது. எனிலும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல

wood screws : (பட்) மர வேலை திருகாணிகள் : மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள் வட்ட, வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப் படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப் பிடிக்கின்ற நிலையிலிருந்து முனைவரை கணக்கிடப்படுகிறது. ஜிம்லெட் கூர்முனை அளவுகள் தரப்படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பலவகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன. அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி

wood turning :மரக்கடைசல்:மரக்கட்டைகளை கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைவது

wood work: மர வேலைப்பொருள்: மரத்தால் ஆன பொருட்கள்

woof : குறுக்கு இழை : நெசவில் அகலவாட்டில் அதாவது குறுக்காக அமைந்த இழை நீளவாட்டிலான பாவு நூலுக்கு நேர்மாறானது

woofer : (மின்.) மூவொலிப் பெருக்கி: குறைந்த அலைவெண் கொண்ட ஒலிகளைப் பெருக்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய ஒலி பெருக்கி, இது உயர் திறன்; ஒலி பெருக்கிகளில் இது பயன்படுத்தப்படுகிறது

work ; வேலை : வேலை என்பது நேரக் கணக்கில் அன்றி அடி/ராத்தல். அங்குலம்/ராத்தல், கணக்கில் கூறப்படுகிறது. (இயற்) விசையை தொலைவினால் பெருக்கி வரும் தொகையானது வேலைக்குச் சமம்

working depth : (பல்லி) செயல் ஆழம் : பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம்

working drawing: (க.க.) செயல் வரைபடம்: எல்லா அளவுகளும், தேவையான பணிக் குறிப்புகளும் கொண்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உதவுகிற வரைபடம்

working gauges : (எந்.) செயல் அளவுமானிகள் : உற்பத்திக்குப் பயன்படுத்துகிற அளவுமானிகளைக் குறிக்கும் சொல்

working load (பொறி.) பணிநிலை பாரம் : ஒரு கட்டுமானம் சாதாரணமாக உள்ளாகிற பாரம். அது அதிகபட்ச பாரம் அல்ல. மாறாக சராசரி பாரம் working sketch : (along.) செயல்முறை புனையா வரைபடம் : இறுதியான வரைபடத்தை வரைவதற்குத் தேவையான பரிமாணங்களையும் பிற விவரங்களையும் காட்டும் முதல் நிலை மாதிரி வரைபடம்

working unit stress : (பொறி.) செயல் யூனிட் அழுத்தம் : இறுதியான அழுத்தத்தை பாதுகாப்பு அலை எண்ணால் வகுத்து வருவது

working voltage : (மின்.) பயன் மின்னழுத்தம் : சுடர் பாய்வு அபாயம் இல்லாமல் ஒரு கொண்மியில் சீராகச் செலுத்தப்படும் உச்ச அளவு மின்னழுத்தம்

work life : (குழை.) பசைக் காலம் : ஒரு செயலூக்கியுடன் அல்லது பிற பொருளுடன் கலந்த பின்னர் ஒரு பசைப் பொருள் உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ள நேரம்

works manager : பணி மேலாளர் : ஒரு தொழிற்சாலையின் ஜெனரல் சூப்ரின்டெண்ட். பல தொழிற்சாலைகளில் பிரதம என்ஜினியர் போன்றவர்

worm-and-gear steering : (தானி.) நெளிதண்டு மற்றும் கியர் ஸ்டியரிங் : ஸ்டியரிங் கியர் தண்டின் கீழ்முனையில் அமைந்த நெளிதண்டுடன் கூடிய ஏற்பாடு. நெளிதியர் குறுக்குத் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தகுந்தபடி பொருத்தியுள்ளதா என்று சரி பார்த்து அமைக்க இயலும்

worm drive : (தானி.) நெளிதண்டு இயக்கம் ;' பெவல் பல்லிணை பிணியன் அல்லது செயின் மூலமாக இல்லாமல் நெளிதண்டும் சக்கரமும் இணைந்த செயல்மூலம் இயங்குவது

worm gearing : (பல்லி.) நெளி பல்லிணை : திருகுபுரி பல்லிணையும், பல்சக்கர பல்லிணையும் இணைந்த பல்லிணை

worm threads : (எந்.) நெளிபுரி : இப்புரிகள் ஆக்மி வகையைச் சேர்ந்தவை. 29 டிகிரி கோணத்தில் அமைந்தவை. எனினும் தரப்படுத்தப்பட்ட ஆக்மி புரியைவிட ஆழமானவை

wove paper : வலைச்சட்டக் காகிதம் : நெருக்கமான வலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதம். இதில் நீரோட்டம் இராது

wreath : (க.க.) படிகளின் வளை கைப்பிடி :. மாடிப்படியின் கைப்பிடியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வளைந்த பகுதி. மாடிப்படியின் துவக்கத்தில் கீழே உள்ள தாங்கு தூணுடன் பக்கவாட்டில் இணைக்கப்படுவது

wreath piece : (க.க.) மாடிப்படி வளை கைப்பிடித் துண்டு : சுழன்று செல்லும் மாடிப்படிகளின் வளைந்து வளைந்து செல்லும் கைப்பிடியின் ஒரு பகுதி

wrecking bar : (எந்.) பாடழிவுக் கைப்பிடி : பொதுவில் ஒன்று முதல் இரண்டு அடி நீளமுள்ள உருக்குத் தண்டு. ஒரு முனையில் மெல்லிய விளிம்பு இருக்கும். மறுமுனை வளைந்து பிடிமானத்துக்கு உகந்தபடி குழிவுடன் கூடிய பல் இருக்கும்

wrench : (எந்.) திருகுக் குறடு : சாதாரண வகைகள் நட்டுகளுக்கு ஏற்ப எளிதில் மாற்றிக் கொள்ளத்தக்கவை. மங்கி குறடு, இரட்டைமுனை குறடு, 'எங்' குறடு, பாக்ஸ் குறடு, டி குறடு, துளைக்குறடு முதலியவை (எந்திர) போல்ட் அல்லது நட்டுகளைத் திருப்புவதற்கு விசையைச் செலுத்துவதற்கான இசைக் கருவி

wrinkling : (வண்;அர) திரளுதல் : பெயின்ட் அல்லது வார்னிஷ் அடக்கம் போதிய அளவுக்கு அதிகமாகக் கனமாக பூசினால். வெப்பம் அதிகமாக இருந்தால், காற்றில் ஈரப்பசை மிகுதியாக இருந்தால் அல்லது பரப்பின்மீது நீட்சித் தன்மை கொண்ட பிலிமை பரப்பினால் சுருக்கம் விழும் அல்லது பெயின்ட், வார்னிஷ் திரண்டு நிற்கும்

wrist pin : (எந்.) இருசுக் கடையாணி : ஓர் இணைப்புச் சலாகையை ஏற்கும் ஒரு பிணைப்பூசி அல்லது உந்துமுனைப் பிணைப்பூசி.பொதுவாக ஒரு கேசோலின் எஞ்சினில் உந்து தண்டுடன் சலாகையை இணைக்கும் பிணைப்பூசி

wrong font : (அச்சு.) தவறான பான்ட் : அச்சுக்கோக்கப்பட்ட வாசகத்தால் இதர எழுத்துகளிலிருந்து வித்தியாசமாக உள்ள வேறு அளவிலான எழுத்து

wrong side : தவறான பக்கம் : கம்பி வலை கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கம்பி வலைமீது அமைந்த புறத்தில் அடையாளம் இருக்கும். இது தவறான பக்கமாகும்

wrought iron : (உலோ.) தேனிரும்பு : இரும்பிலுள்ள கார்பனும் மாசுப் பொருட்களும் முற்றிலுமாக அகற்றப்பட்ட தூய்மையான இரும்பு
X

 X-axis : (மின்.) எக்ஸ்-அச்சு : ஓர் அறுகோணப் படிகத்தின் மூலைகளின் வழியாக வரையப்பட்ட அச்சு

X-braced chair : எக்ஸ் இருக்கை நாற்காலி : நாற்காலியில் அமரும் பகுதியானது X வடிவில் அமைந்தது

X-cut crystal : (மின்.) எக்ஸ்-வெட்டுப் படிகம் : எச்ஸ்-அச்சுக்குச் செங்குத்தாக வெட்டப்பட்ட ஒரு படிகம்

xerography : (மின்.) மின்துகள் ஒளிப்படமுறை : வேதியியல் மாற்றமின்றி மின்னூட்டப்பட்ட தூசித்துகள் மூலம் ஒளிப்படம் ஆக்கப்படும் முறை

X-ray member : (தானி.) எக்ஸ் உறுப்பு : அழுத்து உருவாக்கப்பட்ட 'ப' வடிவ குறுக்குத் தண்டுகள் ஆங்கில X வடிவில் அமைக்கப்பட்து. மோட்டார் வாகன கட்டுமானத்தின்போது பிரதான பிரேமில் வைக்கப்படுவது

x-ray : எக்ஸ் கதிர் : காமா கதிர்கள் போன்றவை மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் இவை உண்டாகின்றன. எக்ஸ் கதிர்கள் பெரும்பாலான பொருட்களை ஊடுருவிச் செல்கின்றன. இக்கதிர்கள் மூலம் எலும்புகளின் உள் உறுப்புகளின் நிழல்களைப் பார்க்கவும், படம் பிடிக்கவும் முடியும். (இயற்) ரான்ட்ஜன் கதிர்களின் ஜனரஞ்சகப் பெயர். குரூக்ஸ் குழாயில் கேதோட் கதிர்கள் எதிர்ப்புறம் உள்ள சுவரில் அல்லது குழாயில் உள்ள ஒரு பொருளைத் தாக்கும் போது தோன்றும் ஆற்றல் வடிவிலான கதிர்கள்

X-ray tube : எக்ஸ் கதிர்குழாய் : எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிப்பதற்கான வெற்றிடக்குழாய். இதன் உள்ளே நிலை மின்புலத்தின் மூலம் எலெட்ரான்கள் மிக வேகத்தில் செல்லும்படி செய்யப்படுகின்றன. இவற்றைத் திடீரென நிறுத்தி இலக்கைத் தாக்கும்படி செய்கின்றன

எக்ஸ் கதிர் குழாய்
X-shaped chair : (மா.வே). எக்ஸ் வடிவ நாற்காலி : பழங்காலப் பாணியிலான நாற்காலி. இதில் கீழ்ப்புறம் உள்ள தாங்கும் பகுதி X வடிவில் இருக்கும். பல சமயங்களிலும் அழகிய வேலைப்பாடு இருக்கும். தவிர இது பெரும்பாலான சமயங்களில் மடிக்கத்தக்கதாக இருக்கும்
Y

yagiantenna : (மின்.) யாகியான் அலைவாங்கி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட இயக்கு கம்பிகள் உடைய மின்அலை வாங்கிகளின் தொகுதி.

yard : (க.க.) முற்றம் : ஒரு கட்டிடத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுற்று வட்டகை வெளி.

yardage : (பொறி.) யார்டேஜ் : எவ்வளவு மண்தோண்டப்பட்டது என்பதை கன கெஜத்தில் குறிப்பிடுவதற்குப் பயன்படும் சொல்.

yard stick : கெஜக்கோல் : 91 செ.மீ. நீளம் கொண்ட, அளவுகள் குறிக்கப்பட்ட நீண்ட மெல்லிய மரச்சட்டம், உலோகத்தில் செய்யப்பட்ட அவ்வித அளவு கோல் 36 அங்குல அளவுகோல் எனப்படுகிறது.

yaw : (வானூ.) திருக்கை : பறக்கும் பாதைக் கோட்டிலிருந்து கோண இயக்கத்தால் விமான அச்சிலிருந்து வலது புறம் அல்லது இடம் புறம் திரும்பும் போக்கு.

yaw meter : (வானூ.) திருக்கை அளவுமானி : ஒரு விமானத்தின் திருக்கையின் கோணம் எவ்வளவு என்று அளந்து கூறும் கருவி.

Y-axis : (மின்.) ஒய்-அச்சு : ஓர் அறுகோணப் படிவத்தின் முகங்களுக்குச் செங்கோணமாக வரையப்பட்டுள்ள அச்சு.

Y connection : (மின்.) ஒய் இணைப்பு : மூன்று பேஸ் சர்க்கியூட்டில் பயன்படுகிற கிளை இணைப்பு.

Y-cut crystal : (மின்.) ஒய் வெட்டுப் படிகம் : ஒய்-அச்சுக்குச் செங்குத்தாக வெட்டப்பட்ட ஒரு படிகம்.

year ring : (மர.வே.) ஆண்டு வளையம் : இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும் ஓர் ஆண்டைக் குறிக்கும். மரம் வளருகையில் சாறு இவற்றின் வழியே தான் உயரே செல்கிறது.

yeast : நொதி (ஈஸ்ட்) : சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள். இது உயிருள்ள பூஞ்சணம் போன்ற ஒரு பொருள். சர்க்கரையை ஆல்ககலாக மாற்றும் பொருளும் இது தான். நொதியானது, புரதங்களை உற்பத்தி செய்கிறது. சிறிதளவிலான இந்தப் புரதங்கள், தாங்கள் மாறாமல் பெருமளவு வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது. இந்தப் புரதங்கள்தாம் சர்க்கரையிலும் வேதியியல் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.

yellow : (வண்.) மஞ்சள் : அடிப்படை நிறம். நிறமாலையில் சிவப்புக்கும், பச்சைக்கும் இடையே அமைந்துள்ளது.

yellow brass : (உலோ.) செம்பித்தளை : 70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது

yellow fever (yellow jack): (நோயி.) மஞ்சள் காய்ச்சல் : மஞ்சள் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய். ஒரு வகைக் கொசுவினால் உண்டாகும். இந்நோயின் விளைவாக, சிறுநீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும். தோல் மஞ்சள் நிறமாகும். கருநிறத்தில் வாந்தி ஏற்படும்

yellow ocher : (உலோ.) மஞ்சள் பித்தளை : 70 பங்கு தாமிரமும், 30 பங்கு துத்த நாகமும் கலந்த கலோகம். இது மட்டரகக் கலோகம். உறுதி தேவையற்ற கனிமங்களுக்குப் பயன்படுவது

yellow ocher : (வண்.) மஞ்சள் காவி : மண் போன்ற இரும்புக் கனியிலிருந்து பெறப்படும் நிறம். பெயின்டுகளில் சாயம் அளிக்கப் பயன்படுவது

yellow pine : (மர.வே.) மஞ்சள் ஊசியிலை : என்றும் பசுமை மாறாத மரம் இரு வகைப்பட்டது. ஒன்று நீண்ட இலை. மற்றொன்று குட்டை இலை நீண்ட இலை ஊசியிலை வகையின் மரம் அடர்த்தியாக இருக்கும். கனமாகவும், உறுதியாகவும் இருக்கும். பெரும்பாலும் கனத்த உத்திரங்களாகப் பயன்படுத்தப்படும். குட்டை இலை வகை எளிதில் முறியும். அவ்வளவு உறுதியற்றது. விலையும் குறைவு. செலவு குறைந்த தரைத் தளமாகவும், இதர வகைகளிலும் பயன்படுவது

yellow spot : (நோயி.) மஞ்சள் புள்ளி : கண்விழிப்புறத்திரைக் கூர் நோக்கிடப்புள்ளி

yew : (மர.வே.) யூ மரம் : மெதுவாக வளருகின்ற நடுத்தர அளவுள்ள பசுமை மாறாத மரம். மரத்தின் உள்ளே துணுக்குகள் அடர்ந்து கெட்டியாக இருக்கும். சற்று நெகிழும் தன்மை கொண்டது. ஆரஞ்சு சிவப்பு முதல் பழுப்பு வரையிலான நிறம் கொண்டது

yield point : (எந்.) முறி நிலை : மாதிரி உலோகத் துண்டு மீது கூடுதல் பளுவைச் சேர்க்காத நிலையில் அது விரிந்து கொடுக்கத் தொடங்கும்போது உள்ள நிர்ப்பந்தத்தின் அளவு

yield strength : (பொறி.) வலிமை இழப்பு நிலை : ஒரு உலோகப் பொருள் நிரந்தரமாக நீண்டு போகின்ற நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் பளு

yield value : (குழை.) இளகு நிலை : பிளாஸ்டிக் திர்வம் போன்று பாய்வதற்கு மிகக் குறைந்தபட்ச அழுத்த நிலை.இதற்கும் குறைவான அழுத்தத்தில் பிளாஸ்டிக் நெகிழும் கொண்ட திட வடிவில் இருக்கும். இந்த நிலைக்கும் அதிகமான அழுத்தத்தில் பிசுபிசுப்பான திரவமாக இருக்கும்

yoke : (க.க.) மேல் குறுக்கு : பலகணிச் சட்டத்தில் மேற் குறுக்குச் சட்டம். (தொலை) மின்னணுக் கற்றையை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் திருப்பிவிட மின்னணு காமிரா அல்லது படக் குழாயின் கழுத்துப் பகுதியில் அமைந்த சுருள்கள்

yolk : (உயி.) மஞ்சள் கரு :முட்டையிலுள்ள மஞ்சள் கரு

yolk-sac (yolk-bag) : (உயி.) மஞ்சள் கருப்பை : முட்டை மஞ்சள் கருப்பொதிவு இழைப்பை

Y-signal : (மின்.) ஒய்-சமிக்கை : தொலைக்காட்சியில் ஒளிரும் சமிக்ஞை
Z

Z-axis : (மின்.) இசட்-அச்சு : ஒரு படிகத்தின் விழிக்காட்சி அச்சு

zebrano : (மர.வே.) ஜீப்ரானோ : ஆஃப்ரிக்காவின் மேற்குக் கரையைச் சேர்ந்த மிகப்பெரிய மரம். மரம் மிகக் கெட்டியானது. எடை மிக்கது. வலிமை கொண்டது. இதன் சற்று மங்கலான பின்னணி நிறம், கரும் பழுப்பான இணை கோடுகள் காரணமாக இது பார்வைக்கு மிக எடுப்பானது. மிக நளினமான மரவேலைப் பொருட்கள், சுவர் மறைப்புப் பலகைகள் ஆகியவற்றுக்கு மிக அரிய மரமாகக் கருதப்படுகிறது

zee bar : (பொறி.) ஜீ பார் : கட்டுமான உருக்குத் தண்டு. அதன் குறுக்கு வெட்டு ஆங்கில 'Z' வடிவில் அமைந்து மேற்புறத்தையும் கீழ்ப்புறத்தையும் இணைப்பது. பெரும்பாலும் கப்பல் கட்டுமானத்துக்கும், இதர கட்டுமானங்களுக்கும் பயன்படுவது

zeolite : (கம்.) ஜியோலைட் : ஒரு வகைக் கனிமம். இது ஒரு வேதியியியல் கூட்டுப் பொருள். இது கரைசலில் இதனுடன் கலந்திருக்கும் பிற வேதியியற் பொருள்களின் கட்டமைப்பைப் பொறுத்துத் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக்கூடியது

zero : பூச்சியம் : எண்களில் சூன்யத்தைக் குறிப்பது. மதிப்பில் மிகத் தாழ்ந்தது

zero ceiling : (வானூ.) பூச்சிய வரம்பு : 30மீட்டருக்குக் கீழான மேகக்கூட்டம். விமானம் பறப்பதற்குத் தகுதியற்ற வானிலை

zero gravity : (விண்.) ஈர்ப்பின்மை : ஈர்ப்பு விளைவு முற்றிலும் இல்லாத நிலை

zerone : துருத்தடை : குளிர் உறைவுத் துருத்தடை அமைவு

zig zag rule; மடியும் அளவு கோல் : அளவு கோலானது மடிக்கும் வசதி கொண்டது. மடித்து விரிக்கும் போது உள்ள நிலையைக் குறிப்பது. மொத்தம் 6 முதல் 2.4மீ. நீளம் இருக்கும். எனினும் இது தனித்தனியே 5.செ.மீ. பகுதிகள் கொண்டது. இவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை

zinc : (உலோ.) துத்தநாகம் : நிலம் பாய்ந்த வெண்மை நிற உலோகம். கால்வனைசிங் செய்வதற்கும் கலோகங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுவது

zinc chloride : (வேதி.) துத்த குளோரைடு : வெள்ளை நிறமுள்ளது. நீர்த்துப் போகிற உப்பு. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் துத்தத்தை, அல்லது துத்த ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் அல்லது துத்தத்தை குளோரினில் எரிப்பதன் மூலம் பெறப்படுவது. பற்ற வைப்புக் காரியங்களுக்கு எளிதில் உலோகத்தை உருக்கத்துணைப் பொருளாகப் பயன்படுவது

zinc engraving or . etching : (அச்சு.) துத்தச் செதுக்கு : துத்த நாகத்தினால் ஆன அச்சுத் தகடு. அச்சிடப்பட வேண்டிய பகுதியை மட்டும் விட்டு விட்டு மீதிப்பகுதியை மட்டும் செதுக்கி அகற்றிவிடுதல் zinc chromate : துத்தநாகக் குரோமேட் (துத்தநாக மஞ்சள்) : துருப்பிடிக்காத முக்கியமான பண்புகளையுடைய உலோக நிறமி

zing oxide : (வேதி.) துத்தநாக ஆக்சைட் : துத்த நாக கார் பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகப் பவுடர். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது

zinc sulphate : (Gao.) துத்தநாக சல்பேட் : கழிவு துத்தத் துண்டு களை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவும், மரம் மற்றும் தோல்களை கெடாமல் காக்கவும் பயன்படுவது

zing white : (வண்.) துத்த வெள்ளை : பெயின்ட் தயாரிப்புக்கு நிறமியாகப் துத்த நாகப் பவுடர்

zinox : (வண்.) ஜினோக்ஸ் : எனாமல் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் துத்தநாக ஹைட்ரேடட் ஆக்ஸைட்

zoom : (வானூ.) செங்குத்தான ஏற்றம் : விமானம் செங்குத்தாக உயரே ஏறுவது. அப்போது உயரே ஏறுகின்ற விகிதமானது. சீராகப் பறக்கும்போது கிடைப்பதை விட அதிக அளவில் இருக்கும்

zoom lens (zoomar) : அணுக்க நிரலீட்டுக் கண்ணாடி : தொலைக்காட்சிப் பட எடுப்பில் படக்கருவியைப் புடை பெயர்க்காமலே தொலை அணிமையாக்கும் திறமுடைய கண்ணாடியமைவு

zoonosis : தாவு நோய் : விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய்

zyglo : (உலோ.) சைக்ளோ : காந்தத் திறனில்லாத உலோகங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பயன்படும் ஒளிர்ந்து ஊடுருவும் ஆய்வுச் சோதனை

zyme : (நோயி..) புளிமா : நோய்க்கிருமி

zymosis : (நோயி.) புளிப்பூட்டம் : நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு

zymurgy : (வேதி.) புளிக்காடியியல் : மதுப்புளிக்காடி பற்றிய வேதியியல்