H

Haber process-ஹேபர் (புராசஸ்) முறை: தொழில்முறையில் அம்மோனியா உண்டாக்கும் முறை. வேதி

habit - வளரியல்பு: வளருகின்ற தன்மையை ஒட்டித் தாவரங்கள் செடிகள் (கத்தரி), கொடிகள் (அவரை), குற்று மரங்கள் (மூங்கில்), மரங்கள் (மா) எனப்பல வகைப்படும் (உயி 2. படிகங்கள் பெருகுந்தன்மை. (வேதி)

habitat - வளரிடம், வாழிடம்: ஒர் உயிரி இயல்பாக வாழுமிடம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இது வேறுபடும். இது நீராகவும் நிலமாகவும் இருக்கலாம். (உயி).

haematite - ஈமைடைட்: செந்நிறமுள்ள இரும்பின் ஆக்சைடு தாது. (வேதி)

haematocoel - குருதிக்குழி: பூச்சிகளின் உறுப்புகளைச் சுற்றியுள்ள குழிகள். பா. haemocoel. (உயி)

haematology - குருதி இயல்: குருதி அமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயுந் துறை. (உயி)

haemoglobin - ஈமோகுளோபின்: செந்நிறமி, சிவப்பணுக்களில் உள்ளது. உயிர்வளியைக் கொண்டு செல்வது. இதைச் செங்கோளியன் எனலாம். (உயி)

haemolymph - குருதிக் கொழுநீர்: நிணநீர் திறந்த குருதியோட்ட மண்டலத்திலுள்ள குருதி முதுகெலும்பிலிகளுக்குரியது. திறந்த குருதியோட்ட மண்டலம் என்பது குழாய் இல்லாத மண்டலம் ஆகும். எ-டு. கரப்பான். (உயி)

haemolysis - குருதிச் சிதைவு: மேற்பரப்புப் படலம் சிதைவதால் சிவப்பணுக்களிலுள்ள ஈமோகுளோபின் நீங்குதல் (உயி)

haemophilia - குருதிஉறையாமை: குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் கானப்படும் பால் தொடர்பு நோய் எனலாம். (உயி)

haemorrage - குருதி கசிவு: குருதிக் குழாயிலிருந்து குருதி வெளியேறல் (உயி)

haemorrhoid- குருதிமூலம்: கழிவு வாய்க்கருகிலுள்ள சிரை விரிதல். (உயி)

haemostat- குருதித்தடை: குருதிக்கசிவை நிறுத்தும் கருவி (உயி)

hailstone - கல்மழை: உறைந்த நீர்த்துளிகள் பொழிவதற்குக் கல்மழை என்று பெயர். மழைக் கல்பட்டாணி அளவுக்கு இருக்கும். (புஅறி)

hair - மயிர்: 1. பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி, 2. தாவர புறத்தோலின் வளர்ச்சி. (உயி)

hair follicle- மயிர்க்கால் குழாய் போன்ற பை. அகத்தோலில் புறத்தோல் அணுக்களின் உள் வளர்ச்சியால் உண்டாவது. மயிரின் வேரை முடியிருப்பது. (உயி)

half life period - அரைவாழ்வுக் காலம்: ஒரு மாதிரியிலுள்ள கதிரியக்க ஒரிமத்தின் செம்பாதி சிதைய ஆகுங்காலம். (வேதி)

halfnium - ஆஃப்னியம்:Hf. வெண்ணிற உலோகம். காற்றில் எரிந்து ஆஃப்னிய ஆக்சைடைக் கொடுக்கும். அறுவையிலும் கம்பியிலாத் திறப்பிகள் செய்வதிலும் பயன்படுவது. (வேதி)

halide- ஏலைடு: உப்பிலுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது புரோமைடு, குளோரைடு, புளோரைடு, அயோடைடு என நான்கு வகைப்படும். (வேதி)

halite - ஏலைட்: பாறையுப்பு. இயற்கையில் கிடைக்கும் சோடியம் குளோரைடு (வேதி)

Halley's comet - ஏலி வால்மீன்: 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது. 1986இல் கடைசியாகத் தோன்றியது. இதன் சுற்று வழியை ஏலி (1656 1742) 1705இல் கணக்கிட்டார். ஆகவே, இது அவர் பெயர் தாங்குவது. கோள்களுக்கு எதிர்த்திசையில் கதிரவனைச் சுற்றி இயங்குவது. (வானி)

hallucination - இல்பொருள் தோற்றம்: வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழுந்தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை என்று எண்ணி நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள். (உயி)

hallucinogen - இல்பொருள் தோற்றி: மனமயக்கத்தை உண்டாக்கும் மருந்து. (மரு)

hallux - கால்முதல்விரல்: சில பறவைகளிலும் பாலூட்டிகளிலும் காணப்படுவது. ஆனால், முயலில் இல்லை. (உயி)

halo - ஒளிவட்டம்: திங்கள் அல்லது கதிரவனைச் சுற்றியுள்ள ஒளி வளையம், காற்று வெளிப் பனிக்கட்டிப் படிகங்கள் ஒளிமறிப்பு ஏற்படுத்துவதால் உண்டாவது (இய)

halobiont - உப்பிடவாழ்வி: உப்பு நீரில் வாழ்கின்ற தாவரம். அதாவது, சதுப்பு நிலத்தாவரம். எ-டு, அவிசீனியா. பா. halophyte. (உயி)

halo effect - அல்விளைவு: ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் ஒருவரது நிலையறிதல் அறிந்து பின் அதனுடன் தொடர்பற்ற பிற பண்புகளிலும் அவர் அதே நிலையில் இருப்பார் எனத் தவறான முடிவுக்கு வருதல். (உயி)

halogens - உப்பீனிகள்: ஐந்து தனிமங்களைக் குறிக்கும். அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவற்றிற்குத் தொடர்புடையதும் படிநிலை உடையதுமான பண்புகள் உண்டு. இவற்றின் தொகுதி உப்பீனிக் குடும்பம் எனப்படும். கூடுதல், பதிலிடல் அல்லது மாற்றிடல் ஆகிய செயல்களினால் ஒரு கூட்டுப் பொருளில் உப்பீனி அணுக் களைச் சேர்ப்பதற்கு உப்பீனி யாக்கல் (ஹேலஜனேஷன்) என்று பெயர். (வேதி)

halophyte - சமதுப்பு (உப்பு) நிலவாழ்வி: தாவரக்கூட்டத்தின் ஒருவகை உப்புச் செறிவு அதிகமுள்ள மண்ணில் வாழ்வது. கடற்கரைக்கு அருகில் இருக்கும். பறங்கிப்பேட்டைக்கு அருகிலுள்ள பிச்சாவரக் காடுகள். அங்கு சுற்றுலா மையம் உள்ளது. (உயி)

hatters - நிறுத்திகள்: ஈக்களின் தொடக்கப்பின் சிறகுகள். சிறியவை. கரனை வடிவமானவை. பறக்கும்போது, இவை அதிர்ந்து நிலைநிறுத்திகளாகப் பயன்படுதல். உயி)

haplodiplont - ஒருமத்தாவரம்: உயிரணுக்களில் நிறப்புரி ஒற்றைப் படை எண்ணிக்கையுள்ள சிதல் பயிர் (ஸ்போரா பைட்) (உயி)

haploid - ஒருமம்: பாலணுக்களில் உள்ளது போன்று ஒரு தொகுதி (ஒற்றைப்படை நிறப்புரிகளைக் கொண்டது. ஒரும நிலையினைக் கொண்டது. ஒருமத்தாவரம் (ஹெப்லாண்ட்). (உயி)

haplostele - ஒரும மையத்திசு: குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மென்மையான வட்ட வெளிக் கோடுகளைக் கொண்ட முன் மையத்திசு (புரோட்டோஸ்டீல்). (உயி)

haptotropism - தொடுநாட்டம்: பா.thigmotropism. (உயி)

hard disk - வன்தட்டு: காந்தப் படலப் போர்வை போர்த்தப் பட்டுள்ள விறைப்பான பிளாஸ் டிக் தட்டு. கணிப்பொறித் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பது. ஒ. floppy disk. (இய)

hard glass - வண்கண்ணாடி: பொட்டாசியம் சிலிகா அதிக அளவு கொண்ட கண்ணாடி. கண்ணாடிக் கலன்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

hard radiation - வன் கதிர்வீச்சு: மீயாற்றல் ஒளியன்களைக் கொண்ட கதிர்வீச்சு. ஒளித் துகள்கள் ஒளியன்களாகும். உலோகங்கள் உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும ஊடுருவ வல்லது. (இய)

hardening - வன்மையாக்கல், கெட்டியாக்கல்: 1. நீர்மத்தாவர எண்ணெயைத் திண்மக் கொழுப்பாக மாற்றும்முறை. எ-டு. வனஸ்பதி. 2. உலோகவியலில் எஃகைப் பதப்படுத்தும் முறை. (வேதி)

hardware - வன்னியம்: கருவியம். மின்னணு அல்லது எந்திரக் கருவித் தொகுதி. இதனைக் கொண்டது கணிப்பொறி. ஒ. software.

hard water - வன்னீர்: சவர்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காத நீர், கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாகும் கடினத் தன்மை நிலைத்த கடினத் தன்மை. இந்நீருடன் சோடியம் கார்பனேட்டைச் சேர்க்க மென்னீர் கிடைக்கும். பெர்முடிட்டு முறையிலும் இதை மென்னீராக்கலாம். அதாவது, சோடியம் அலுமினியம் சிலிகேட்டு பெர்முடிட்டில் கடின நீரைச் செலுத்த மென்னீர் கிடைக்கும். (வேதி)

harmonic- (ஹார்மோனிக்) சீரிசை ஒலிகள்: ஒலி வரிசைகள். இவை ஒவ்வொன்றின் அதிர்வெண்ணும் அடிப்படை அதிர்வெண்ணின் முழு எண் மடங்காகும். முதல் வரிசை f. இரண்டாம் வரிசை 2f என்னும் அளவில் இருக்கும். (இய)

Hartree - கார்டிரி: அலகுச்சொல். ஆற்றலின் அணு அலகு (வேதி)

haustellum - குழல்வாய்: உறிஞ்சு குழல், எ-டு, வண்ணத்துப்பூச்சி. பா. proboscis, (உயி)

haustorium - உறிஞ்சி: ஒட்டுண்ணியின் தனி உறுப்பு: ஒம்பு திசுவில் ஊடுருவி. அதிலிருந்து ஊட்டத்தையும் நீரையும் பெறுவது. (உயி)

Haversian canals - ஏவர்சியள் குழாய்கள்: இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள்வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும், நரம்புகளும் செல்லும் (உயி)

headache - தலைவலி: தலையில் ஏற்படும் நோவு. பல நோய்களின் அறிகுறி. இது ஒத்தைத் தலைவலி, நெருக்கடித் தலைவலி எனப் பலவகைப்படும். (உயி)

health - நல்வாழ்வு இயற்பியல்: அணு இயற்பியல் தொடர்பாக ஏற்படும் தீங்குகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மருத்துவ இயற்பியல் பிரிவு. (மரு)

heart இதயம், நெஞ்சம்: உட் குழிவான தசை உறுப்பு. குருதியை உடல் முழுதும் செலுத்துவது. மார்பில நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. நான்கு அறைகளாலானது, திறப்பிகளைக் கொண்டது. (உயி)

heartwood - வயிரக்கட்டை: நடுமரத்தின் கடினமான மையப்பகுதி, மரக்குழாய்களாலானது. இக்குழாய்கள் நீரைக் கடத்து வதில்லை. இவற்றில் பிசியங்களும் டேனின்களும் படிவதால் கட்டைக்குக் கறுப்பு நிறம் உண்டாகும். பா. wood.

heat - வெப்பம்: பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி அல்லது ஜூல். எ-டு 1000 கலோரி வெப்பம். இயல்பான நிலையில் நம் உடல் வேலை செய்ய 3,000 கலோரி வெப்பம் தேவை. (இய)

heat capacity - வெப்பேற்புத்திறன்: ஒரு பொருள் முழுவதை யும் 1 செ.க்கு உயர்த்துவதற்கு வேண்டிய வெப்பத்தின் அளவு. T=ms கலோரிகள் (T- வெப்ப ஏற்புத்திறன், m- பொருண்மை. s-வெப்ப எண்). (இய)

heat exchanger - வெப்பமாற்றி: பாய்மங்கள் ஒன்றோடு மற்றொன்று கலவாமல், அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்துங் கருவி. (இய)

heat flux- வெப்ப ஓட்டம், பாயம்: ஓரலகு நேரத்தில ஓரலகு பரப்பில் இடமாற்றம் பெறும் வெப்பம், இய)

heat of adsorption - வெளிக்கவரல் வெப்பம்: நிலையான அழுத்தத்தில், ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின் மீது வெளிக்கவரப்படும் பொழுது, உள்ளீட்டு வெப்பத்தால் உண்டாகும் உயர்வு. வெளிக்கவரல் வெப்பத்தைப் பரப்பூன்று வெப்பம் என்றுங் கூறலாம் (இய)

heat of atomization - அணுவாதல் வெப்பம்: ஒரு மோல் அளவுள்ள பொருளை அணுக்களாகச் சிதைக்கத் தேவையான வெப்பம். இய)

heat of combustion - கனற்சி வெப்பம்: மிகு உயிர்வளியில் ஒரு மோல் அளவுள்ள பொருளை எரிக்க உண்டாகும் வெப்பளவு. (இய)

heat of crystallization - படிகமாதல் வெப்பம்: தன் உறைநிலையில் நீர்மத் தொகுதி படிகமாகும் பொழுது உண்டாகும் வெப்ப அளவு. (இய)

heat of dilution - நீர்த்தல் வெப்பம்: நிலையான வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப் பானைச் சேர்க்க உண்டாகும் உள்ளிட்டு வெப்ப உயர்வு. (இய)

heat of disassociation - பிரிகைவெப்பம்: நிலையான அழுத்தத்தில் இணைதிறன் பிணைப்பு விடுபடும் போது அல்லது மூலக்கூறுகள் தெறிக்கும்போது ஏற்படும் உள்ளீட்டு வெப்ப உயர்வு. (இய)

heat of formation - தோன்றுதல் வெப்பம்: நிலையான வெப்ப நிலையில், ஒரு மோல் அளவுள்ள பொருள். தன் தனிமங்களிலிருந்து உருவாகத் தேவையான வெப்பம். (இய)

heat of fusion - உருகுதல் வெப்பம்: உருகுநிலையில், ஓரலகு பொருள் திணிவுள்ள தனிமத்தை நீர்மமாக்கத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை. (இய)

heat, latent - உள்ளுறை வெப்பம்: 1. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம் உருகலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் பியூஷன்) ஆகும். 2. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதிநிலையில் ஆவியாக எடுத்துக் கொள்ளும் வெப்பம் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் எவாப்ரேஷன்) ஆகும். எ.டு. நீரின் உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 80 கலோரி, நீராவி உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 537 கலோரி, பின்னதில் வெப்பம் அதிகமிருப்பதால், அதனால் ஏற்படும் புண் கடுமையாக உள்ளது. (இய)

heat processes - வெப்பநிகழ்வுகள்: இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறது. எ.டு. பனிக்கட்டி உருகுதல். வெப்பமாறா நிகழ்வு: (அடியாபேட்டிக் புராசஸ்) இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக உள்ளதால், வெப்பம் சுற்றுப் புறங்களுக்குச் செல்லாமல் கலத்தின் உள்ளேயே இருக்கும். எ-டு. உலர்ந்த பனிக்கட்டி உறை கலவை தவிர, வளிகளை நீர்மமாக்கியும் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஜூல் கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம். குளிர்ப் பதனமும் வெப்பநிலையைக் குறைக்கும் நெறிமுறையிலேயே அமைந்துள்ளது. (இய)

heat of neutralisation - நடுநிலையாக்கல்வெப்பம்: ஒரு காடி அல்லது படிமூலி நடுநிலையாக்கப்படும் பொழுது உண்டாகும் வெப்பம். (வேதி)

heat of reaction - வினையாதல் வெப்பம்: வேதி வினையில் உறிஞ்சப்படும் அல்லது வெளிவிடப்படும் வெப்பம். (வேதி)

heat of solution - கரைதல் வெப்பம்: நிலையான அழுத்தத்தில், குறிப்பிட்ட கரைப்பானில் அல்லது அதிக அளவு பருமனுள்ள நீரில் ஒரு மோல் அளவுள்ள பொருள் கரையும் பொழுது உண்டாகும் மாறு வெப்ப அளவு அல்லது ஆற்றல் மாற்றம். (வேதி)

heat, specific - வெப்ப எண்: ஒரு கிராம் பொருளை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதமே வெப்ப எண். இவ்வெண் அதிகமிருப்பதால், நீர் மெதுவாக வெப்பத்தைப் பெற்று மெதுவாக அதனை வெளிவிடுகிறது. இதனால் ஒற்றடம் கொடுக்க அது பயன்படுகிறது. நிலவுலகின் வெப்ப நிலையைக் கோடையில் குறைக் கவும் குளிர்காலத்தில் அதகமாக்கவும் அது பயன்படுகிறது. பா. specific latent heat. (இய)

heat, methods of propagation - வெப்பம் பரவும் முறைகள்: வெப்பம் பின்வரும் மூன்று முறைகளில் பரவுகின்றது. 1. கடத்தல் கண்டக்‌ஷன்): ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் வழியாக வெப்பம் செல்லுதல். இதில் இம்மிகள் இடம் பெயர்வதில்லை. இஃது உலோகங்களில் நடைபெறுவது. தாவீது காப்புவிளக்கு வெப்பக் குடுவை ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை. 2. சுழற்சி (கன்வெக்‌ஷன்) இதில் ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் சுழற்சியால் வெப்பம் செல்கிறது. மரத்துள் கலந்த நீரை வெப்பப்படுத்த, மேலுள்ள தூள் கீழும் கிழுள்ள தூள் மேலும் செல்லும், அடர்த்தி குறைந்த இம்மிகள் மேல்வர, அடர்த்தி அதிகமுள்ள இம்மிகள் கீழ்ச் செல்லும். இதை மரத்துாள் சுழற்சி நன்கு விளக்குகிறது. இது நீர்மங்களிலும் வளிகளில் மட்டும் நடைபெறுவது. வெற்றிடத்தில் நடைபெறாது. இதனடிப்படையில் காற்றோட்டமும் நீரோட்டமும் ஏற்படுதல். 3. கதிர்வீசல் (ரேடியேஷன்) இதில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடைப்பொருள் சூடடையாமல் வெப்பம் செல்லுகிறது. எ-டு. குளிர்காயும் பொழுது உடலில் வெப்பம் உறைத்தல், கதிரவனிடமிருந்து நிலவுலகு வெப்பம் பெறுதல். இது வெற்றிடத்திலும் நடைபெறுவது. இம்முன்று முறைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு வெப்பக்குடுவை. (இய)

heat of sublimation - பதங்கமாதல் வெப்பம்: ஒரு மோல் எடையுள்ள திண்மத்தைப் பதங்கமாக்கத் தேவையான வெப்ப அளவு, சூடம், அயோடின் முதலியவை பதங்கமாகும் பொருள்கள். ஆவியாகிக் குளிரும்போது, இவை மீண்டும் உண்டாகும். இச்செயல் பதங்கமாதல் எனப்படும். (இய)

heat of vapourisation - ஆவியாதல் வெப்பம்: நிலையான வெப்பநிலையில் ஓரலகு பொருள் திணிவுள்ள நீர்மத்தை ஆவியாக்கத் தேவையான வெப்ப அளவு. (இய)

heavy water, deuterium oxide - கனநீர், டியூட்டிரியம் ஆக்சைடு: D2O இது ஒருவகை நீர். இதில் நீர்வளி டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது. நீர் டியூட்டிரியம் - டியூட்டிரியம் ஆக்சைடு + நீர்வளி, H2O + D2 <--> D2O + H2, அணு உலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதை மாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுதல், (வேதி)

heliocentric universe - கதிரவன் மைய விண்ணகம்: பகலவனை மையமாகக் கொண்ட உலகம் என்னும் அறிவியல் கருத்து. ஒ. geocentric universe. (வானி)

heliotropism - ஈலியநாட்டம்: பா. phototropism. (உயி)

helium - ஈலியம், எல்லியம்: He. ஓரணுவளி, தீப்பிடிக்காதது. இலேசானது. இயற்கைவளி அல்லது நீர்மக்காற்றிலிருந்து பெறப்படுவது. குமிழிகள், காற்றுக்கப்பல்கள் முதலியவற்றில் பயன்படுதல். (வேதி)

Henry's law - என்றியின் விதி: நிலையான வெப்பநிலையில் ஒரு நீர்மத்தில் வளிக்கரைதிறன், அவ்வளியழுத்தத்திற்கு, நேர் வீதத்திலிருக்கும். பிரிட்டிஷ் வேதியியலாரும் மருத்துவருமான ஜோசப் என்றி (1797-1878) 1801இல் கண்டறிந்தது. (இய)

heptavalent - எழுஇணைதிறன்: இணைதிறன் 7. (வேதி)

hepatic portal system - கல்லீரல் வாயில் மண்டலம்: இதில் கல்லீரல் வாயில் சிரை உள்ளது. இது ஊட்டப்பொருள்களைக் (குளுக்கோஸ், அமினோகாடி) குடலிலிருந்து கல்லீரலுக்கு எடுத்துச் செல்வது. கல்லீரலில் இப்பொருள்கள் சேமிக்கப்படும் ; மாற்றப்படும். அல்லது கல்லீரல் சிரை வழியாகப் பொதுக்குருதி ஓட்டத்தை அடையும். (உயி)

herb - செடி: மரவூட்டத் தண்டு இல்லாத செடி கத்தரி, மிளகாய். (உயி)

herbarium - பயிர்ப்பதனம், பயிர்ப் பதனத் திரட்டு: முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு (உயி)

herbicide - பயிர்க்கொல்லி: தாவர வளர்ச்சியைத் தடைப்படுத்தும் அல்லது அழிக்கும் வேதிப்பொருள். (உயி)

herbivore- தாவர உண்ணி: புற்கள் அல்லது தாவரங்கள் மட்டுமே தின்னும் விலங்கு : யானை, முயல் (உயி)

heredity - மரபுவழி, கால்வழி: பெற்றோரிடமிருந்து பெறும் மரபுக் கொடையின் தொகை. (உயி)

hermaphrodite - இருபாலி: ஒரே உயிரியில் ஆண்பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல்: மண்புழு.

heroin - ஈராயின்: மார்பைன் வழிப்பொருள். மருத்துவத்தில் பயன்படுவது. கடத்தப்படும் போதைப் பொருள். விலை அதிகமுள்ளது.

heparin - கெபாரின்: புரோதிராம்பினை நடுநிலையாக்கிக் குருதிக்கட்டைத் தடுக்கும் வேதிப்பொருள். (உயி)

Hertz - ஹெர்ட்ஸ் : அலகுச்சொல். எஸ்ஐ அதிர்வெண் அலகு. C= சுற்று வினாடி (இய)

hesperidium - நாரத்தை வகைக் கனி : பா. berry, fruit.

Hess's law - ஹெஸ்(லா) விதி: தொடக்க இறுதிநிலைகள் மாறாமல் இருப்பின், ஒருபடி அல்லது பலபடிகளில் வினை நடைபெற்றாலும் எவ்வேதிவினைக்கும் உள்ளீட்டு வெப்பம் (என்தால்பி) நிலையானது. உயிரிய வேதியலார் ஹென்றி ஹெஸ் (1802-1850) 1840இல் முன்மொழிந்தது. (வேதி)

heterodont-வேற்றகப் பல்லுடைய : வேறு வகையான பற்களைக் கொண்ட எ-டு, வெட்டுப்பல், கோரைப்பல், கடவாய்முன்பல், கடவாய்ப் பின்பல். (உயி)

heterogametic sex - வேற்றகப் பால்: வேறுபட்ட நிறப்புரிகளைக் கொண்ட பால் (x,y). (உயி)

heterogenous - வேற்றகநிலை: பலபடித்தான நிலை. வேறுபட்ட வீதங்களில் வேறுபட்ட பண்புகளைக் கொண்ட நிலை. (வேதி)

heterogenous action - வேற்றக வினை: வேறுபட்ட நிலைகளிலுள்ள பொருள்களுக்கிடையே நடைபெறும் வினை. எ-டு. நீர்மத்திற்கும் வளிக்குமிடையே நடைபெறும் வினை. (வேதி)

heterokaryosis - வேற்றகக்கரு நிலை: ஒரு தனி உயிரணுவில் வேறுபட்ட மரபு முத்திரைகள் கொண்ட கருக்கள் அமைந்திருத்தல் (உயி)

heterolytic fission - வேற்றகப் பிளவு: வேதிப்பிணைப்பு நீங்குவதால், ஒன்றுக்கொன்று எதிர் மின்னேற்றமுடைய அயனிகள் உண்டாதல். (வேதி)

heterophylly - வேற்றக இலையமைவு: ஒரே தாவரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பொது இலைவடிவம் இருத்தல்.

hetero sexuality - வேற்றகப் பால்கவர்ச்சி: ஆண் பெண்ணிற் கிடையே உள்ள கவர்ச்சி. (உயி)

heterosporous - வேற்றகச் சிதல் நிலை: கலவி இல்லாமல் உண்டாகிய வேறுவகைச் சிதல்களைக் கொண்டிருத்தல். (உயி)

heterostyly- வேற்றகச் சூல்தண்டு: இஃது ஒர் ஈருருவத் தோற்றம். இதில் ஒரே சிறப்பினத்தின் சூல்தண்டுகள் வேறுபட்ட நீளங் கொண்டிருக்கும். ஒரு நிலையில் நீண்ட சூல்தண்டும் குறுகிய மகரந்தத் தாள்களும் மற்றொரு நிலையில் குறுகிய சூல்தண்டும் நீண்ட மகரந்தத் தாள்களும் இருக்கும். (உயி)

heterothermic - வேற்றக வெப்பநிலை விலங்குகள் : நிலைத்த உடல் வெப்பநிலை இல்லா விலங்குகள். தங்கள் செயல் ஆக்கக் காலத்தில் அகவெப்பநிலை ஒழுங்குபாடுகளைக் காட்டுதல். பா. cold blooded animals. (உயி)

heterotrophy - வேற்றக முனைப்பு உயிரிகள்: தம் உணவைத் தாமே ஈட்ட இயலாத உயிர்கள். காரணம், பச்சையம் இல்லாமை, ஒட்டுண்ணிகள், காளான். (உயி)

heterozygote - வேற்றகக் கருவணு: இரு கருமூலவணுக்களால் உண்டாகும் உயிர். ஒரு குறிப்பிட்ட பண்பிற்கு மாற்றிணை மரபணுக்களைக் கொண்டிருக்கும். (உயி)

herozygous-வேற்றக இணைப்பி: ஒவ்விய இரு மரபணுக்கள் அல்லது பண்புகள் வேறுபட்டிருக்கும் உயிரி. (உயி)

hexact - அறுமி: அறுகதிருள்ள கடற்பஞ்சு முள்ளி (உயி)

hexad - அறுதிறமி: இணைதிறன் ஆறுள்ள அணு, தனிமம் அல்லது படிமூலி. வேதி)

hexadactylous - அறுவிரலிகள்: ஆறு விரல்களைக் கொண்டவை. (உயி)

hexagonal system-அறுகோணத் தொகுதி: ஒரு படிகத் தொகுதி. 120° இல் வெட்டும் மூன்று சம அச்சுகள் ஒரு தளத்திலும், சமமிலா நான்காம் அச்சு ஏனைய மூன்று அச்சுகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும். (வேதி)

hexane - ஹெக்சேன்: C4H14.. மீத்தேன் வரிசையில் 6ஆவது அய்டிரோகார்பன். பெட்ரோலியத்திலுள்ளது. கரைப்பான். (வேதி)

hexaploid - அறுமம்: பொதுவான நிறப்புரி எண்ணிக்கைபோல், அறுமடங்கு நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு (உயி)

hexapoda - அறுகாலிகள்: கணுக்காலிப் பிரிவின் வகுப்பு. எல்லாப் பூச்சிகளுக்கும் மூவிணைக் கால்கள் உண்டு. (உயி)

hexasomic - இரும அறுமம்: இரட்டைப்படை எண்ணிக்கையுள்ள உயிரணு. இதில் ஒரு நிறப்புரி ஆறு தடவைகள் குறிக்கப்பெறும் (உயி)

hexavalent - அறுஇணைதிறன்: அறுஇணைதிறன் கொண்ட (வேதி)

hibernation - குளிர்கால உறக்கம்: குளிர்காலத்தில் உயிரிகள் இயக்கமற்று இருத்தல். எ.டு. நுரையீரல் மீன், வெளவால், வெள்ளைக்கரடி இதனைக் குளிர் முடக்கம் என்றுங் கூறலாம். (உயி)

hiccough - விக்கல்: இது குறுகிய உள்மூச்சுத் திணறல். குறுக்குத் தசை சட்டென்று சுருங்குவதால், இது ஏற்படுகிறது. குரல்வளையும் உடன்மூடுவதால் உள்மூச்சு தடைப்பட்டு விக்கல் ஒலி உண்டாகிறது. இயல்பாக ஏற்படும் விக்கலுக்கும் நோய் விக்கலுக்கும் வேறுபாடுண்டு. (உயி)

hierarchy - படிநிலைமரபு: தாவர உலகிலும் விலங்குலகிலும் காணப்படும் வரிசைத்தொகுதி. வேறுபட்ட படிநிலைகளைக் குறிக்கும் வகைப்பாடு. (உயி)

high frequency - உயர்அதிர்வெண்: 3,000 கிலோ கெர்ட்சுக்கும் 30,000 கிலோ கெர்ட்சுக்கும் இடைப்பட்ட வானொலி அதிர்வெண்கள். (இய)

high speed steel - உயர்விரைவு எஃகு: உயிர்விரைவு கடைசல் எந்திரங்களில் கருவிகளை வெட்டப் பயன்படும் எஃகு. (வேதி)

high tension - உயரழுத்தம்: உயர்மின்னழுத்த வேறுபாடு. பலநூறு ஒல்ட்டுகளுக்கு மேல். (இய)

hilum - தழும்பு: 1. விதையுறையிலுள்ளது. காம்புடன் விதை தான் முன்பு இணைந்திருந்த இடத்தைக் குறிப்பது. 2. ஒர் உறுப்பிலுள்ள குழிவு. இங்குக் குழாய்கள், குழல்கள் முதலியவை சென்று வெளியேறுகின்றன. (உயி)

Hill reaction -ஹில்வினை: ஒளிச்சேர்க்கைத் தொடர்பாக 1937இல் இராபர்ட் ஹில் என்பார் முதன் முதலில் விளக்கிக் காட்டிய ஆய்வு. முதலில் நடைபெறுவது ஒளிச்செயலாகும். இதைத் தொடர்வது இருட்செயல் அல்லது வினை. பா. Calvin cycle, dark reaction. (உயி)

hippopotamus - நீர்யானை: பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி தாவர உண்ணி, நீரில் கிடப்பது ஆப்பிரிக்காவில வாழ்வது. ஒரே அளவுள்ள கால்கள். விலங்கு காட்சிச் சாலைகளிலும் வளர்க்கப்படுவது. காட்சி விலங்கு (உயி)

hirudinea - அட்டைகள்: இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை. (உயி)

histogenesis - திசுவாக்கம்: விலங்கில் வேறுபட்ட திசுக்கள் தோன்றிப் பெருகுதல் (உயி)

histology - திசுவியல்: திசுக்களை ஆராயுந்துறை. (உயி)

histolysis. திசுச்சிதைவு: திசுக்கள் சிதைதல். (உயி)

HIV, human immuno deficiency virus. எச்.ஐ.வி. மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம். எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது. உயிர்க் கொல்லி.

HLA, Human Leucocyte Antigen - எச்எல்ஏ மனித வெள்ளணு எதிர்ப்பி. மனிதரிடம் இதை அடையாளங் கண்டறிவது உறுப்புப் பதியஞ் செய்தலுக்கும் நோய்ச் சேர்க்கையை அறியவும் இன்றியமையாதது.

holmium - ஓல்மியம்: Ho. மென்மையான மையான தனிமம். தகடாக்கலாம். ஏனைய லாந்தனாய்டுகளுடன் சேர்ந்தே காணப்படுவது. பயன்கள் குறைவு. (வேதி)

hologamy- முழுக்கலப்பு: முதிர்ந்த இரு அணுக்கள் சேர்ந்து, ஒவ்வொன்றும் முழுமையாகப் பாலணுவாதல் (கேமடான்கியம்) (உயி)

hologram - முழு உருவரைப்படம்: முழு உருவரைவியல் மூலம் கிடைக்கும் படம் (இய)

holography - முழு வரைவியல்: புகைப்படப் பெட்டியும் வில்லைகளும் இல்லாமல், புகைப்படலம், ஒருங்கிணைந்த ஒளி ஆகியவற்றைக் கொண்டு முப்பரும உருவங்களை உண்டாக்கும் நுணுக்கம். 1949இல் டென்னிஸ் கேபர் என்பவர் இதனைப் புனைந்தார். (இய)

holometabola - முழுஉருமாறிகள்: தம் வாழ்க்கைச் சுற்றில் முழு உருமாற்றத்தைப் பெறும் பூச்சிகள் - வண்ணத்துப் பூச்சி. முட்டை கம்பளிப்புழு, கூட்டுப் புழு, முதிரி. (உயி)

holophytic - முழுத்தாவர ஊட்டம்: ஒர் உயிரி தனக்கு வேண்டிய உணவைத் தானே உருவாக்கி ஊட்டம் பெறுதல், பசுந்தாவரங்கள். வேறுபெயர் (போட்டோ ஆட்டோ டிராபிக்) ஒளித்தன்னூட்டம் (உயி)

holotype - முழுவகை. மாதிரியில் மூலவகையின் பெயர் எழுதப் பெறுதல் (உயி)

holozoic - முழுவிலங்கு ஊட்டம்: பெரும்பாலான விலங்குகளில் இவ்வூட்டம் உண்டு. இதில் நடைபெறுஞ் செயல்களாவன. உட்கொள்ளல், விழுங்கல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல். (உயி)

homodont - ஓரகப் பல்லமைவு: எல்லாப் பற்களும் ஒரே வகையாகவுள்ள பல்லமைவு தவளை, பல்லி, ஒ. (உயி)

homoeosis - ஓரகப் பண்பேற்பு: ஒரு பகுதி மற்றொரு வட்டம் அல்லது துண்டத்தின் பகுதியின் பண்பைக் கொண்டிருத்தல். (உயி)

homoeopathy - ஓரகப் பண்டுவம்: ஒரு நோய் நீக்குமுறை. இதில் பண்டுவம் செய்யப்படும் நோய்க்குரிய அறிகுறிகளை இயல்பான உடல் நலமுள்ளவரிடம் உண்டாக்குவதற்குரிய மருந்துகள் சிறிய அளவில் செலுத்தப்படுதல். ஒ. allopathy (மரு)

homogamy ஒரகக் கலப்பு: ஒத்த உயிர்களிடையே கலப்பு செய்தல் உட்கலப்பு. (உயி)

homogenous-ஓரக இயல்பு ஒரு படித்தான இயல்பு ஒரே வகையான ஆக்கப்பகுதிகளைக் கொண்டது. (வ.து)

homogenesis - ஓரகத் தோற்றம்: பெற்றோரை ஒத்த கால்வழி உண்டாகி, அதே வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருத்தல். ஒரக ஆக்கம் என்றுங் கூறலாம். (உயி)

homogeny - ஓரக இயல்பு: பொதுக் கால்வழியினால் உண்டாகும் ஒத்த தன்மை. உயி)

homolecithal - ஓரகவணு: மஞ்சட்கரு சீராகப் பரவியுள்ள முட்டை (உயி)

homologous genes - ஓரக மரபணுக்கள்: ஒரே இயல்புகள் உள்ள நிறப்புரிகளைக் கொண்ட மரபணுக்கள். ஒன்று தந்தையிடமிருந்தும் மற்றொன்று தாயிடமிருந்தும் வருதல் (உயி)

homologous organs - ஓரக உறுப்புகள்: தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும். இவை தோற்ற ஒற்றுமை உடையவை. ஆனால் வேலையில் வேறுபட்டவை. தாவரம். 1. பற்றுக்கம்பி ஒற்றுமை: பிரண்டைப் பற்றுக்கம்பிகள் நுனி மொட்டொடு ஒத்தமைபவை. 2. முள் ஒற்றுமை இலந்தை, கருவேல் ஆகியவற்றின் முட்கள் இலையடிச் செதில்களோடு ஒத்தமைபவை. (உயி)

homologous series - ஓரக வரிசைகள்: இயற்பண்புகளில் ஒழுங்கான படிநிலை காட்டும் ஒரே வகையான வேதிச் சேர்மங்கள் : மீத்தேன், ஈத்தேன். (வேதி)

homologues - ஓரக உருக்கள்: 1. ஒத்தநிலை கொண்ட மனிதனின் கை, பறவைச்சிறகு, திமிங்கலத்தின் துடுப்பு (உயி) 2. ஓரின வரிசை உறுப்புகள்: ஈத்தேன், மீத்தேன். (வேதி)

homology - ஓரகநிலை, ஓரமை: உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை. வேலையில் வேற்றுமை, ஓ. analogy

homolysis, homolytic fission - ஓரகப்பிளவு: வேதிப்பிணைப்பு அறுபடுவதால் நடுநிலை அணுக்கள் அல்லது படிமூலிகள் உண்டாதல். (வேதி)

homomorphous molecules - ஓரக உருவமூலக்கூறுகள்: அளவிலும் வடிவத்திலும் ஒத்த மூலக்கூறுகள். ஏனைய பண்புகளில் அவ்வாறு இரா. அதாவது ஒத்த படிவ உருவமும் வேறுபட்ட வேதி இயைபுங் கொண்டவை. (வேதி)

homosexuality - ஓரகப் பால் கவர்ச்சி: இது ஆண் ஆணை விரும்புதல். பெண் பெண்ணை விரும்புதல். (உயி)

homosporous- ஓரகச்சிதல்: ஒரே வகைச்சிதல். (உயி)

homotaxis - ஓரகமரபமைவு: உயிர் மலர்ச்சியில் மரபு வரிசை ஒன்றிப்பு. இது காலவரிசையில் அமையவேண்டும் என்பதில்லை. (உயி)

honey-தேன்: பூக்களின் தேன் சுரப்பிகளிலிருந்து பெறப்படும் நீர்மத்தைப் பூச்சிகள் பாகு நிலையில் இனிப்பாக்குதல், ஆகவே, இது ஓர் இனிப்பு நீர்மம். தேனீக்களின் உணவு வழியின் விரிவே தேன்பை. இதில் தேன் சேமித்து வைக்கப்படுகிறது. (உயி)

honey buzzard - தேன்பருந்து: தேனீக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து. ஆகவே, இதைத் தேனித்தின்னி எனலாம். (உயி)

honey comb - தேனடை: அறுகோண மெழுகு அணுஅமைப்பு. சேமிப்புக்காகத் தேனீக்களால் கட்டப்படுவது. (உயி)

honey dew - தேன்திவலை: ஓரகச் சிறகிகளின் கழிவாயிலிருந்து வெளியாகும் இனிப்பும் ஒட்டக்கூடிய தன்மையுள்ள நீர்மம். எ-டு. வெண்ணீக்கள். (உயி)

honey guides - தேனீ வழிகாட்டிகள்: பூவின் அல்லிகளிலுள்ள புள்ளிகள். இவை பூச்சிகளைத் தேன் சுரப்பிகளுக்கு வருமாறு தெரிவிப்பவை. (உயி)

hoof- குளம்பு: பசு, குதிரை, ஆடு முதலியவற்றின் காலடியில் உள்ள கடினப்பகுதி. நடக்கப்பயன்படுவது. பா. horn. (உயி)

Hooke's law - ஹூக் விதி: மீட்சி எல்லைக்குள் தகைவும் திரிபும் ஒன்றுக்கொன்று நேர்வீதத்திலிருக்கும். இது ஒரு மாறிலி. கம்பிச்சுருள்கள் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவை. ஆங்கில அறிவியலாரான இராபர்ட் ஹூக் (1635-1703) என்பவரால் வகுக்கப்பட்டது. இம்மாறிலி சுருள்வில்லின் யங் எண் (யங் மாடுலஸ்) எனப்படும். (உயி)

horizon - தொடுவானம்: 1. புவியும் வானும் ஒன்றை மற்றொன்று தொடுவது போன்று காணப்படும் வட்டம். இது பார்வைத் தொடுவானம் ஆகும். 2. பார்வைத் தொடுவானத்திற்குப் புவிமையம் இணையாக இருக்கும் தளம். 3. கிடைமட்டம் புதை படிவங்கள் உள்ள மட்டம் 4. அறிவெல்லை. (ப.து)

horizontal intensity of earth's magnetic field-நிலக்காந்தப் புலத்தின் கிடைமட்டத் தள வலிமை: இது ஒரிடத்தில் நிலக் காந்தப்புல வலிமையின் கிடைமட்டத் தளக்கூறு ஆகும். தமிழ்நாட்டில் இது 0.38 ஊர்ஸ்ட்டட்டு. (இய)

hormones - வளர்ச்சியாக்கிகள்: வளர்ஊக்கிகள், வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் முதலிய செயல்களை ஒழுங்குபடுத்தும் உயிரியல் வினை ஊக்கிகள். தைராய்டு முதலிய குழாயிலாச் சுரப்பிகளால் சுரக்கப்படுபவை. எ.டு. தைராக்சின், பிட்யூட்டரின். ஒ. auxins (உயி)

horn - கொம்பு: பசு, எருமை முதலிய விலங்குகளின் தலையிலுள்ள நீள் உறுப்புகள். தோலின் புற வளர்ச்சிகள். ஒ. hoof. (உயி)

homet-பெருங்குளவி: பூச்சிவகையைச் சார்ந்தது. (உயி)

horse power - குதிரைத்திறன்: அலகுச் சொல். ஆற்றலின் அலகு. ஒரு வினாடிக்கு 550 அடி பவுண்டு விசை. இது 745.7 வாட்டுக்குச் சமம். ஜேம்ஸ் வாட்டு என்பார் இவ்வலகை அறிமுகப்படுத்தினார். மின் உந்திகளின் திறன் உரிய குதிரைத்திறனிலேயே கூறப்பெறுகிறது. 1 கு.தி. 2 கு.தி. என்று அதன் படிநிலை உயரும். (இய)

horripillation - மயிர்ச்சிலிர்ப்பு: தோல்தசை சுருங்குவதால் மயிர்ச் சிலிர்ப்பும் தோல்சிலிர்ப்பும் ஏற்படுதல். (உயி)

host- ஒம்புயிர் ஒம்பி ஒட்டுண்ணி வாழ இடமளிக்கும உயிரி. திட்ட ஓம்பி (புகையிலை), இடைநிலை ஓம்பி (அனோபிலஸ் கொசு) என இருவகைப்படும். (உயி)

hotline - உயர்விரைவுச் செய்தித் தொடர்பு: நெருக்கடி நிலையில் விரைந்து செய்தி அனுப்பும் கம்பிவழிச் செய்தி. (தொ.நு)

hovercraft - காற்றுத்திண்டூர்தி: தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் இயங்கும் வான ஊர்திவகை. இதன் கீழுள்ள திறப்பிகள் உண்டாக்கும் காற்றுத்திண்டைக் கொண்டு இது முன்னோக்கிச் செல்கிறது. (இய)

Hubble's constant - அபிள் மாறிலி: தொலைவிலிலுள்ள விண்மீன் கூட்டங்களின் பின் தள்ளு நேர்விரைவுகள் நம்மிடமிருந்து அவை இருக்கும் தொலைவுகளுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இது விண்ணகத்தின் பொதுவிரிவே. இதுவே அபிள்ஸ் மாறிலி Ho, இங்கு Ho என்பது பின்தள்ளு விரைவைத் தொலைவோடு தொடர்புபடுத்துவது. இக்கருத்தை 1920இல் எல்லோருக்கும் இவர் தெரிவித்தார்.

Hubble space telescope- அபிள் வானவெளித் தொலை நோக்கி: 25 குறுக்களவுள்ள ஒளித் தொலைநோக்கி, புவிக்காற்று வெளிக்கு மேல் செயற்கை நிலாவால் கொண்டு செல்லப் பட்டது. புவிக் கருவிகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாக வானவெளிப் பொருள்களை உற்றுநோக்குவது (வா.அறி)

hue - நிறம்: நீலம் முதலிய வண்ணங்களைக் குறிப்பது. இதனை அதன் அலைநீளத்தால் உறுதி செய்தல். (இய)

humerus - மேற்கை எலும்பு மேல் புய எலும்பு. தோள்பட்டை மூட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ளது. (உயி)

humidifier - ஈரமாக்கி: காற்றுக்கு ஈரத்தை அளித்துத் தேவையான ஈரநிலைமைகளை நிலைநிறுத்துங்கருவி (இய)

humidity - ஈரநிலை: காற்று வெளியில் நீராவியின் செறிவு. இது இரு வகைப்படும்.

தனிஈரநிலை: ஒரலகு காற்றுப் பருமனிலுள்ள நீராவியின் பொருண்மை.

ஒப்பு ஈரநிலை: காற்றிலுள்ள ஈரத்திற்கும் ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் காற்று நிறைவுறுமானால் அதில் அப்பொழுதுள்ள ஈரத்திற்குமுள்ள வீதம் விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது. (இய)

humus formation - மட்கு தோன்றல்: குப்பை கூளங்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் பொழுது உண்டாவது மட்கு. இதல் மடிந்த தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பகுதி கள் இருக்கும்.

Hund's rule - ஹூண்ட் விதி: வேறு ஒரு வெற்றுப் பரிதியம் (ஆர்பிட்டல் கிடைக்கும் வரை எந்த ஒரு மின்னணுவும் முன்னரே ஒரு மின்னணு இடங்கொண்ட பரிதியத்தில் சென்று இரட்டையாகாது. அனுப் பரிதியங்களில் மின்னணுக்கள் சென்று இடங்கொள் நிகழ்ச்சி பற்றிய விதிகளில் ஒன்று. பா. aufbau principle. (வேதி)

hurricane - பெரும்புயல்: வெப்ப மண்டலச் சூறைக்காற்று, வட அட்லாண்டிக் கடலில் ஏற்படுவது. (பு.அறி.)

hyaena-கழுதைப்புலி: ஆப்பிரிக்க ஓநாய். சரிவுடலில் அடர்ந்த கழுத்தும் பிடரிமயிரும் உண்டு. அழுகும் இறைச்சியை உண்பது. (உயி)

hyaline-பளிங்குக் குருத்தெலும்பு: மென்மையாகவும் முத்துப் போன்றும் இருப்பது. எலும்புகளின் புழக்கப் பரப்பை மூடுவது. (உயி)

hybrid-கலப்பின உயிரி, கலப்பினி: வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி, எ-டு, கோவேறு கழுதை. இவ்வகை உயிர்களுக்குள்ள வீறு கலப்பின வீறு (ஹைபிரிட் விகர்) ஆகும். இவ்வீறு குறையும்போது, வீறுள்ள வேறுவகைகளைப் பயன்படுத்துவது நல்லது.(உயி)

hybridization - கலப்பினமாதல்: 1. வீறுள்ள வேறுபட்ட கால்வழிகளைச் சேர்த்தல். எ-டு. ஆடுதுறை நெல்வகை (உயி) 2. அணுவின் வேறுபட்ட பரிதியங்கள் (ஆர்ப்பிட்டல்கள்) சேர்ந்து புதிய பரிதியங்கள் (வட்ட வழிகள்) உண்டாதல். (வேதி)

hydathode - நீர்த்தண்டு: நீர்விடும் புறத்தோல் உறுப்பு. இதற்கு வேறுபெயர் நீர் இலைத்துளை. எ-டு. சேனை, நீராவிப்போக்கு நடைபெறச் சாதகச் சூழ்நிலை இல்லாதபோது, தாவரங்கள் துளித்துளியாக நீரை வெளித் தள்ளுவதற்கு நீர்ச்சொட்டல் (கட்டேஷன்) என்று பெயர் இதை நீர்விடல் என்றுங் கூறலாம். (உயி)

hydra - அய்டிரா, நீரி: மெல்லுடலைக் கொண்டது. குழி உடலிவகுப்பைச் சார்ந்தது. 3 10 மி.மீ நீளம். உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இரு பாலி (உயி)

hydranth - நீராம்பு: அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி. பா. polyp. (உயி)

hydride - அய்டிரைடு: அய்டிரஜனின் சேர்மம். இது மூவகைப்படும். 1. உட்பூசப்பட்ட அய்டிரைடு 2. பகிர்விணைப்பு அய்டிரைடு, 3. உலோக அய்டிரைடு. (வேதி)

hydraulic press - நீரியல் அழுத்தி: பாஸ்கல் நெறிமுறையில் வேலை செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல். (இய)

hydrazine - அய்டிராசின்: N2H4, நிறமற்ற நீர்மம். ஆற்றல் வாய்ந்த ஒடுக்கி, அய்டிரஜன் அய்ட்ரேட் ஏவுகணை எரிபொருள். (வேதி)

hydrocarbons - அய்டிரோகார்பன்கள்: அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிக மூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள். இவை மூவகைப்படும். 1. நிறைவுற்றவை; ஒவ்வொரு கரியணுவின் 4 இணை திறன்களும் ஒற்றைப் பிணைப்பினால் நிறைவு பெறுபவை. எ-டு. ஈத்தேன், மீத்தேன். 2. நிறைவற்றவை: அடுத்தடுத்துள்ள இருகரி அணுக்களின் இணைதிறன்கள் ஒற்றைப் பகிர்வு பிணைப்பினால் முழுதும் நிறைவு பெறாதவை. எ-டு. ஈத்தீன், ஈத்தைன். 3.நறுமணமுள்ளவை: வளைய அமைப்புடையவை. எ-டு. பென்சீன், நாப்தலீன். (வேதி)

hydrochloric acid - அய்டிரோகுளோரிகக் காடி: HCL அடர் கந்தகக் காடியுடன் சோடியம் குளோரைடைச் சேர்த்துச் சூடாக்கக் கிடைக்கும் அய்டிரஜன் குளோரைடை நீரில் கரைத்துப் பெறலாம். இக்கரைசலைக் காய்ச்சி வடிக்க அடர் அய்டிரோ குளோரிகக்காடி கிடைக்கும். புகையும் நீர்மம். அரசநீர்மம் உண்டாக்கவும் குளோரின் உண்டுபண்ணவும் பயன்படுதல். வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இத்துடன் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும். இது இக்காடிக்கு ஆய்வு. பொதுவான மூன்று காடிகளில் இதுவும் ஒன்று. ஏனைய இரண்டு கந்தகக்காடி, நைட்ரிகக்காடி (வேதி)

hydrocracking - நீர்வழிப்பிளப்பு: நீர்வளியுடன் தகுந்த வினையூக்கியைச் சேர்த்துப் பெட்ரோலியத்தையும் அதன் வழிப் பொருள்களையும் சிதைத்தல். (வேதி)

hydro electricity - நீர்மின்சாரம்: மின்னியக்கியை நீரால் சுழல வைத்து, மின்னாற்றலைப் பெறுதல். மேட்டூர், சிவசமுத்திரம் முதலிய இடங்களில் இம் மின்சாரம் பெறப்படுகிறது. (இய)

hydroelectric power - நீர்மின்னாற்றல்: நீரோட்டத்தினால் உண்டாகும் மின்சாரம். மேட்டூரில் இம்மின்சாரம் உண்டாகிறது. (இய)

hydrogen - அய்டிரஜன், நீர்வளி, நீரியம்H: அடிப்படை வளிப்பொருள். இலேசானது. நிறமற்றது. உயிர்வளியுடன் சேர்ந்து, நீரைக்கொடுக்கும் 1766இல் கேவண்டிஷ் என்னும் வேதி நூலார் பகுத்தறிந்தது. (வேதி)

hydrogenation - அய்டிரஜன் ஏற்றம்: நீர்வளி ஏற்றம். ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து ஆற்றும் வினையாற்றல். ஹேபர் முறையில் நைட்ரஜனோடு அய்டிரஜனை சேர்க்க அம்மோனியா உண்டாதல். தாவர எண்ணெயோடு நீர் வளியைச் சேர்த்து அரைக் கெட்டி நிலையுள்ள வனஸ்பதி உண்டாக்கப்படுகிறது. (வேதி)

hydrogen bomb-நீர்வளிக்குண்டு: அணுப்பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் நீர்வளி உட்கருக்கள் ஈலிய உட்கருக்களாக மாற்றப்படுவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. 1952 நவம்பர் திங்களில் அமெரிக்கா இக்குண்டை வெடித்தது. அணுப்பிணைவிற்கு இயற்கை உலையாக இருப்பது கதிரவன் (இய)

hydrogen ion concentration - அய்டிரஜன் அயனிச்செறிவு: ஒரு லிட்டர் கரைசலில் அடங்கியுள்ள அய்டிரஜன் அயனிகளின் கிராம் எண்ணிக்கை, ஒரு கரைசலின் காடித்தன்மையை அளக்கப் பயன்படுவது பி.எச். மதிப்பாகும். நீரின் பிஎச் 7. (வேதி)

hydrogen peroxide - அய்டிரஜன் பெராக்சைடு: நிறமற்ற நீர்மம், பேரியம் பெராக்சைடுடன் நீர்த்த கந்தகக்காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். ஆல்ககால், ஈதர், நீர் ஆகியவற்றில் இது கரையும். உயிர்வளி ஏற்றி அல்லது குறைப்பி, புரைத்தடுப்பான், புழுக்கொல்லி, வெளுப்பி (வேதி)

hydrology - நீரியல்: நீரை ஆராயுந்துறை. குறிப்பாக, அதன் தோற்றம் பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது. பண்பறிபகுப்பில் பயன்படுவது. (இய)

hydrolysis - நீராற்பகுப்பு: நீரைச் சேர்த்து அரிய பொருள்களை எளிய பொருள்களாகப் பிரித்தல். (இய)

hydrometer - நீர்மானி: நீர்மங்களின் ஒப்படர்த்தி காணப்பயன்படுங் கருவி. (இய)

hydrophillic- நீர்நாட்டம்: நீரை ஈர்க்கும் தன்மை. (வேதி)

hydrophily - நீர்க் கவர்ச்சி: நீரினால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை, எ.டு. நீர்ப்பாசி. (உயி)

hydrophobic - நீரச்சம்: 1. நீரைக் கண்டு அஞ்சுதல். 2. தொண்டைச் சுருக்கத்தினால் நீர் விழுங்க இயலாமை. வெறிநாய்க்கடி அறிகுறி. (உயி)

hydrophone - நீரொலிமானி: நீருக்குக்கீழ் ஒலியைப் பதிவு செய்யுங் கருவி. (உயி)

hydroponics - நீர்வளர்ப்பியல்: மண்ணில்லாமல் வேதிக்கரைசலில் தாவரங்களை வளர்த்தல். (உயி) hydrophyte - நீர்வாழ்வி: நீர்த்தாவரம். எ-டு. அல்லி, தாமரை. (உயி)

hydrostatics - நிலைநீரியல்: குளம்,அணைக்கட்டு முதலியவற்றிலுள்ள நீரை ஆராயுந்துறை. (இய)

hydrotropism - நீர்நாட்டம்: தூண்டல் நீர்நோக்கி அமையும் அசைவு. இது ஒருவகை வேதி நாட்டமாகும். (உயி)

hydrozoa - அய்டிரோசோவா: குழியுடலி வகுப்பைச் சார்த்தது. இதில் அய்டிரா, இழுதுமீன், பவழங்கள் முதலியவை அடங்கும். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவி இலாச் சிற்றுயிரி. நீராம்பு நிலையும் அப்டிராய்டு) கலவியுள்ள பாலாம்பு நிலையும் (மெடுசாய்டு) மாறி மாறி உண்டாதல். (உயி)

hygiene - வாழ்நலம்: நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந்துறை. சமுதாய வாழ்நலம், தொழிற்சாலை வாழ்நலம், உள வாழ்நலம் தனிவாழ்நலம் எனப் பல வகைப்படும். (உயி)

hygrometer - ஈரநிலைமானி: காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்குங்கருவி. (இய)

hydroscope - ஈரநிலை நோக்கி: காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி, (இய)

hymen - படலியம்: பூப்படைந்த நங்கையின் பிறப்பு வழியைப் பாதிமூடி இருக்கும் படலம். (உயி)

hymenium - படலகம்: பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு. (உயி)

hyoid - நாவடி எலும்பு: நாவிற்கு அடியிலுள்ள எலும்பு அல்லது குருத்தெலும்புத் தொகுதி (உயி)

hypertension-மீக்குருதியழுத்தம்: உயர்த்த குருதியழுத்தம். பா. hypotension. (உயி)

hypertonic-மீப்பரவழுத்தம்: ஒரு கரைசல் மற்றொரு கரைசலை விட மீப்பரவழுத்தத்தைக் கொண்டிருத்தல். (வேதி)

hypertrophy - மீப்பெருக்கம்: உயிரணு அளவு அதிகமாவதால், உடல் அல்லது உடல்பகுதி இயல்புமீறி வளர்தல். (உயி)

hypha-நுண்பூஞ்சிழை: பூஞ்சையின் கிளைத்த இழை உடல், பா. mycelium (உயி)

hypnosis-அறிதுயில்: உறங்குவது போன்ற நிலை, உளநோய் மருத்துவத்தில் பயன்படுவது. இதில் புறக் கருத்தேற்றங்களுக்கு உள்ளம் துலங்கி, மறந்த நினைவுகளை நினைவுகூர இயலும், இச்சொல்லைத் தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார் அறிமுகப்படுத்தினார். (உயி)

hypnospore - துயில்சிதல்: ஓய்வுறும் உயிரணு அல்லது சிதல். தடித்த சுவரும் ஓர் உட்கருவும் கொண்டது. கசை இழையும் இயக்கமும் இல்லை. பல பாசிகளில் காணப்படுவது. (உயி)

hypnotic துயில்மூட்டி: தணிப்பு மருந்து. உறக்கத்தைத் தூண்டுவது. (உயி)

hypo - அய்ப்போ: Na2S3O35H2O. சோடியம் தயோ சல்பேட்டு. புகைப்படக் கலையில் பயன்படல். (வேதி)

hypocotyl - விதையிலைக் கீழ்த்தண்டு: ஒ. epicotyl. (உயி)

hypoderm - புறக்கீழ்ப்படை: புறத் தோலுக்குக் கீழ் அமைந்துள்ள திசு. இலைகளிலும் தண்டுகளிலும் ஒன்று அல்லது இரண்டடுக்கு உயிரணுக்களாலானது. (உயி)

hypodermis - புறக்கீழ்த்தோல்: புறத்தோலுக்குக் கீழுள்ள கண்ணறை அடுக்கு வரிசை. உட்திசுக்களுக்குப் பாதுகாப்பளித்தல் வேலை. (உயி)

hypogeal germination - தரைகீழ் விதை முளைத்தல்: விதை இலை தரைக்குக் கீழ் இருக்குமாறு விதை முளைத்தல்: நெல். (உயி)

hypoglossal - நாக்கீழ் நரம்பு: 12ஆம் மூளை நரம்பு, பாலூட்டிகளில் மட்டும் காணப்படுவது. நாவிற்குக் கீழ் உள்ள தசைகளில் செல்வது. (உயி)

hypogynous - மேற்சூல்பைப் பூ: புல்லிகள், அல்லிகள் மகரந்தத் தாள் ஆகியவற்றிற்கு மேலுள்ள சூல்பை மேற்குல்பை ஆகும். இப்பையிலுள்ள பூ மேற்குல் பைப்பூ ஆகும். எ-டு. வெங்காயம். ஒ. epigynous.

hyponasty - தண்டுகீழ்வளர்ச்சி: தூண்டலால் உறுப்பின் கீழ்ப் பகுதி அதிகம் வளர்வதால், அதன் மேல்பகுதி வளைதல். (உயி)

hypophysis- கீழ்வளி: மாசிகளில் பொதிகைக் காம்பின் பருத்த பகுதி. பூக்குந்தாவரங்களில், தாங்கி முனையிலுள்ள உயிரணு. (உயி)

hypoplasia - கீழ்நிலைவளர்ச்சி: ஊட்டக்குறைவினாலோ நோயினாலோ தாவர வளர்ச்சி குன்றிக் குருளைத் தன்மை ஏற்படுதல். (உயி)

hypothalamus - கீழ்த்தாளம்: மூளையின் பகுதி. உடலின் செயல்களைக் கட்டுப்படுத்துவது. (உயி)

hypotension- கீழ்குருதியழுத்தம்: தாழ்வான குருதியழுத்தம் (உயி)

hypothesis - கருதுகோள்: அறிவியல்முறையில் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கற்பனையாகக் கொள்ளப்படும் தற்கோள். உற்றுநோக்கலாலும் ஆய்வாலும் உறுதி செய்யப்படுவது. இறுதியாக விதியாக வகுக்கப்படுவது. பா. scientific method. (மெய்)

hypsometer - காற்றழுத்தமானி: காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படுங் கருவி. நீர்மத்தின் கொதிநிலையை உறுதி செய்வதன் மூலம் உயரங்களை மதிப்பிடலாம். நீராவி வெப்பநிலையில், வெப்பநிலை மானிகளில், அளவீடுகள் குறிக்கவும் பயன் படுதல் (இய)

hysteresis - காந்தத் தயக்கம்: காந்தப் பின்னடைவு. காந்தச்செறிவு. காந்தமாக்கும் புலத்துடன் ஒரே கட்டத்தில் இல்லாமல் பின்தங்குவது. அதாவது, இரும்புக் காந்தப் பொருள்கள் தாம் காந்தம் பெறும்போதும் நீங்கும்போதும் கொள்ளும் நடத்தை. தற்காலிகக் காந்தங் களுக்குக் குறைந்த காந்த நீக்கு விசையும் குறைந்த காந்தத் தயக்க ஆற்றல் இழப்பும் கொண்ட பொருள்கள் தேவை. இதற்குத் தேனிரும்பு நன்கு பயன்படுகிறது. மின்னியக்கி (டைனமோ) மாற்றிகளிலுள்ள உள்ளகங்கள் ஒரு வினாடியில் பல சுழற்சிகளுக்கு உட்படும். இவற்றிற்கும் குறைந்த ஆற்றல் இழப்புள்ள பொருள்கள் தேவை. இவைகளிலும் தேனிரும்பு பயன்படுகிறது. (இய)

hysteria - நரம்பு வலிப்பு: உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது. உடல் அறிகுறிகளாவன: இழுப்பு, மயக்கம், தசை நடுக்கம். விலகு நிலை இதன் தனித்தன்மை. (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/H&oldid=1040341" இலிருந்து மீள்விக்கப்பட்டது