G

galactose - கேலக்டோஸ்: C6H12O6. இப்பேரகராதிக்கு லேக்டோஸ் சர்க்கரையை நீராற் பகுக்கக் கிடைப்பது. இது பால் சர்க்கரையாகும். (உயி)

galaxy - விண்மீன்திரள்: விண்மீன் கூட்டம். வான வெளியில் பல விண்மீன் திரள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பால்வழி ஆகும். இதில் பல மில்லியன் விண்மீன்கள் நெருக்கமாக உள்ளன. (வானி)

galena - கலீனா: காரீயச் (II) சல்பைடின், ஒரே கனிம வடிவம். வெள்ளி, துத்தநாகம், செம்பு முதலியவற்றுடன் சேர்ந்திருப்பது. (வேதி)

gall bladder - பித்தநீர்ப்பை: கல்லீரலில் உள்ளது. பித்தநீரைச் சேமிப்பது. (உயி)

gallic acid - கேலிகக் காடி: C6H2(OH)3COOH. இப்பேரகராதிக்கு ஒரு நீர்மூலக்கூறுள்ள நிறமற்ற படிகம். நீரிலும் ஆல்ககாலிலும் அரிதாகக் கரைவது. காடி நீராற்பகுப்பு அல்லது நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுவது. மைகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

gallium - கேலியம்: Ga. வெண்ணிற உலோகம், நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுதல். (வேதி)

galvanised iron - நாகமுலாம் இரும்பு: கந்தகக் காடியில் துப்புரவு செய்த இரும்பு, உருகிய துத்தநாகத்தில் தோய்த்து எடுக் கப்படுகிறது. இதுவே நாகமுலாம் இரும்பு. (வேதி)

galvanometer - மின்னோட்ட மானி: சிறுஅளவுள்ள மின்னோட்டங்களை அளக்கப் பயன்படுங் கருவி. இது இயங்கு சுருள் மின்னோட்டமானி, தொகு.

gametanglum - பாலணுவகம்: பாலனுக்கள் உருவாகும் உறுப்பு. இளந்தண்டகத் தாவரங்களில் (தேலோபைட்டா) இவ்வுறுப்பு உள்ளது: மாசி. (உயி)

gamete - பாலணு: கலவி இனப்பெருக்கத்தை உண்டாக்குவது. ஒருமம் அல்லது ஒருமநிலை (ஹேப்லாய்டு). பால் வேறுபாடு கொண்டது. பெண்பாலணு கருமுட்டை ஆண் பாலணு விந்தணு இவ்விரண்டும் சேர்ந்து கருவணுவை உண்டாக்குதல். (உயி)

gametocyte - தாய்ப்பாலணு: பாலணுவை உண்டாக்கக் குன்றல் பிரிவடையும் உயிரணு. (உயி)

gametogenesis - பாலணுத்தோற்றம்: பாலணு உண்டாதல், இதில் விந்தணுத்தோற்றமும் (ஸ்பெர்மடோ ஜெனிசிஸ்) முட்டைத் தோற்றமும் (உவோ ஜெனிசிஸ்) அடங்கும். பாலணுவாக்கம் என்றுங் கூறலாம். (உயி)

gametophyte - கருத் தவரம்: பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் கருத்தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இது பால் உறுப்புகளைத் தோற்றுவிப்பது. பெரணியின் முன் தண்டகம் (புரோதேலஸ்) கருத்தாவரமாகும். இதைப் பாலணுத் தாவரம் என்றுங் கூறலாம். பா. sporophyle.

gamma rays - காமா கதிர்கள்: மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம். (இய)

gamopetalous - இணை(ந்த்)அல்லி: அல்லிகள் இணைத்திருக்கும் எ-டு, ஊமத்தை (உயி).

gangliபn-நரம்பு முடிச்சு: நரம்புத்திரட்சி. மைய நரம்பு மண்டலத்திற்கு வெளியில் இருப்பது. இம்மண்டலத்தின் ஒரு பகுதி. (உயி)

ganglion cells - நரம்பு முடிச்சணுக்கள்: நரம்பு மண்டலத்திற்கு வெளியே உள்ள நரம்பு முடிச்சுகளில் காணப்படும் நரம்பணுக்கள். (உயி)

gangrene - அழுகல்: குருதி வழங்குதல் குறைவதால் திசு அதிக அளவு அழிவுறுதல். உலர் அழுகல். ஈர அழுகல், வளியழுகல் எனப் பலவகைப்படும். (மரு)

gangue - தாதுக்கூளம்: மண், பாறை முதலிய பயனற்ற பொருள்கள் அடங்கிய தாதுக்கள். (வேதி)

ganet - மாணிக்கக்கல்: இயற்கையில் கிடைக்கும் மென்மையானதும் சிலிக்கன் உள்ளதுமான தேயப்புப் பொருள். கண்ணாடித் தட்டுகளை மெருகேற்றப் பயன்படுவது. (வேதி)

gas - வளி: வளிமம். திட்டமான எல்லைகளோ பருமனோ இல்லாத காற்று போன்ற பொருள். எ.டு. நீர்வளி, உயிர்வளி, (வேதி)

gas cleaning - வளித்துப்புறவு: வளிகளிலுள்ள மாசுகளையும் கறைகளையும் நீக்கல். (வேதி)

'gas condenser - வளிஏற்பி: தாரிலிருந்து நிலக்கரி வளியை நீக்குங் கருவி. (வேதி)

gas jar - வளிஉருளி: வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். நீர்வளி, உயிர்வளி தயாரித்து அவற்றை நிரப்பப் பயன்படுவது. (வேதி)

gas laws - வளி விதிகள்: ஒரு குறிக்கோள் வளியின் பருமன், அழுத்தம், வெப்பநிலை பற்றிய விதிகள். பாயில் விதி: நிலையான வெப்ப நிலையில், ஒரு மாதிரியின் அழுத்தம் (p) அதன் பருமனுக்கு (w) எதிர்வீதத்தில் இருக்கும். p x v = மாறிலி.

சார்லஸ் விதி: நிலையான அழுத்தத்தில் வெப்ப இயக்க வெப்பநிலைக்குப் (T) பருமன் (V) நேர் வீதத்திலிருக்கும். V/T = மாறிலி, அழுத்த விதி: நிலையான பருமனிலுள்ள ஒரு மாதிரியின் வெப்ப இயக்க வெப்பநிலைக்கு, அழுத்தம் நேர்வீதத்திலிருக்கும். இம்மூன்று விதிகளை அனைத்துச் சமன்பாட்டில் ஒன்றாக இணைக்கலாம். மாறிலியிலுள்ள வளியளவு. R. வளி மாறிலி. Pஅழுத்தம் T வெப்பநிலை.

gas light - வளி ஒளி: வளி எரிவதால் உண்டாகும் ஒளி. (வேதி)

gas liquor - வளிநீர்மம்: வளியாக்கத்தில் பெறப்படும் அம்மோனியாவும் அம்மோனியம் உப்புகளும் சேர்ந்த கரைசல் (வேதி).

gas mask-வளிமூடி: மூச்சுக்கருவி. வளிகளின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க முகத்தில் அணிந்து கொள்வது. வாய், முக்கு, கண் ஆகியவற்றை இது மூடும். (உயி)

gasmeter-வளிமானி: செலவாகும் வளியை அளக்கப் பயன்படுங்கருவி. (வேதி)

gas oil - வளி எண்ணெய்: நீர்மப் பெட்ரோலிய் வடிபொருள். பாகுநிலை, கொதிஎல்லை ஆகியவை மண்ணெண்ணெய்க்கும் உயவிடு எண்ணெய்க்கும் இடைப்பட்டது. இதில் டீசல் எண்ணெய், வெப்ப எண்ணெய், பளுக்குறை எண்ணெய் ஆகியவை அடங்கும். (வேதி)

gasolene - கேசோலின்: குறை கொதிநிலை கொண்ட பெட்ரோலிய வழிப்பொருள். எரி பொருள் (வேதி)

gasometer - வளிச்சேமிப்புமானி: வளி கொள்குழாய், வளிதேக்கி வைக்கும் பெரியதொட்டி. (வேதி)

gas stove - வளியடுப்பு: சமையலுக்குப் பயன்படும் அடுப்பு. இதில் நிலக்கரி வளிஎரி பொருளாகப் பயன்படல். (வேதி)

gastric juice - இரைப்பை நீர்: இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது. (உயி)

gastrology- இரைஇயல்: உணவுத்தேர்வு, உணவு உண்டாக்கல், உண்ணல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. உணவியல் என்றும் கூறலாம். 2. இரைப்பை இயல் இரைப்பையையும் அதன் நோய்களையும ஆராயுந்துறை. (மரு)

இரைப்பை இயல்: உணவுத்தேர்வு, உணவு உண்டாக்கல், உண்ணல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. உணவியல் என்றும் கூறலாம். 2. இரைப்பை இயல்: இரைப்பை யையும் அதன் நோய்களையும் ஆராயுந்துறை. (மரு)

gastro-poda - வயிற்றுக் காலிகள்: உடல்சமச்சீரில்லா நத்தைகள். தசையாலான பெரிய கால் உடலின் கீழ்ப் பகுதியாக இருக்கும். உடல் ஒரே ஒட்டினால் மூடப்பட்டிருக்கும். மூடகம் (மேண்டில்) பிரியாதது இவற்றைத் தசை உடலிகள் என்றுங் கூறலாம். எ-டு, கழனி நத்தை, தோட்ட நத்தைகள் (உயி)

gastro-vascular - செரி-குழாய்க்குழி: செரித்தல், சுற்றோட்டம் ஆகிய இரு வேலைகளும் நடை பெறும் குழி. எ.டு. அய்டிரா. (நீரி) (உயி)

gastrula - முப்படைக்கோளம்: கருவளர்ச்சியில் ஒருநிலை. புறப்படை அகப்படை, நடுப்படை ஆகிய மூன்றையும் இதில் கருகொண்டிருக்கும். இதனுள் ஒரு மூலக்குடல் குழியும் (ஆர்க்கெண்ட்ரான்) இருக்கும். (உயி)

gastrulation - முப்படைக்கோளமாதல்: ஒரு படைக்கோளம் (பிளேஸ்டுலா) இதில் முப்படைக்கோளம் (கேஸ்ட்ருலா) ஆதல் அதாவது, கருவணுக்கள் மூன்றடுக்கில் அமைதல். பா. gastrula. (உயி)

Gas turbine - வளியாழி: உள்கணர்ச்சி எந்திரம். (இய)

gate- வாயில்: கதவு, கணிப்பொறியில் மின்சுற்றைத் திறக்க மூடப் பயன்படும் பொத்தான் அல்லது சொடுக்கி, இது முறையமைவு வாயில் (லாஜிக் கேட்) உம்மிணை வாயில் (அண்ட் கேட்) அல்வாயில் (நாட்கேட்) எனப் பலவகைப்படும். (இய)

gauss - காஸ்: G, காந்தப்பாய அடர்த்தியின் சிஜிஎஸ் அலகு. 10 டெஸ்லாவுக்குச் சமம், இய,

gavial - நீள்மூக்கு முதலை, நீள் மூக்கன்: பெரிய இந்திய முதலை, மீன் உண்ணுவது. நீண்ட நொய்ந்த முஞ்சி கொண்டது. கங்கை ஆற்றில் வாழ்வது. எ-டு. கேவியாலின் கேஞ்சடிகஸ், (உயி)

GayLussac's law - கேலூசக் விதி: கே லூசாக் என்னும் அறிவிய லார் 1804இல் வெளியிட்ட விதி வளிகள் வினைப்படும்போது, அவற்றின் பருமனும் வினையால் விளைந்த வளிப்பருமனும், ஒரே வெப்ப அழுத்த நிலைகளில், சிறிய முழு எண் வீதத்தில் இருக்கும். இய:

gear - பல்லிநை: பல் உருளைகள் ஒன்றுடன் மற்றொன்று பொருந்திய அமைப்பு. சுற்றியக்கத்தை ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்கு மாற்றி, அதிக எந்திர இலாபத்தைப் பெற எந்திரங்களில் பயன்படுவது. எ.டு. உந்து வண்டியின் பல்லினைப்பெட்டி பல் உருளைகள் பொருந்திய சங்கிலி இய)

Geiger counter - கெய்கர் எண்ணி: கதிரியக்கத்தை ஆய்ந்து, ஆல்பா பீட்டா, கதிர்களின் வலுவை அளக்குங்கருவி. இதனால் குழாய்களில் ஏற்படும் கசிவை அறிய இயலும். (இய)

gel - இழுமம்: கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol. (இய)

gelatin - இழுதியன்: கலப்புப் புரதம். நிறமற்றது. மணமற்றது. சுவை யற்றது, பிசின்போன்றது. எலும்பு, அதள்கள் (ஹைட்ஸ்) ஆகியவற்றைக் கொதிக்க வைத்தும் பெறலாம். பிசின்களாகவும் உணவுப்பொருள்களாகவும் புகைப்படங்களாகவும் பயன்படல். (தொ.நு)

gemmation - அரும்பாதல்: அரும்புகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுதல் (உயி)

gene - மரபணு: நிறப்புரியில் குரோமசோமில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள காரணி. இது தனியாள் மரபுப் பண்புகளைக் குறிப்பது. மரபுப் பண்பின் அலகு. மரபன் என்றுங் கூறலாம். (உயி)

genecology - மரபு இயைஇயல்: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளரிடத்தொடர்பாக ஆராய்வது. (உயி)

genelogy - மரபுவழி இயல்: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிய துறை. (உயி)

gene frequency - மரபு நிகழ்தகவு: ஒர் உயிர்த்தொகுதியில் குறிப்பிட்ட மரபணு அடிக்கடி தோன்றுதல். அதன் இணை மாற்றுகளும் (அலீல்கள்) அடிக்கடி உண்டாதல். (உயி)

gene library - மரபணு நிலையம்: டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் ஒரு குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும். (உயி)

gene pool - மரபணுச் சேமகம்: ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகுதியின் எல்லா மரபணுக்களின் தொகு மொத்தம் (உயி)

generative cell - பிறப்பணு : விதையுறை இல்லாத் தாவரங்களின் மகரந்த மணியின் அணு. இது பிரிந்து காம்பணுவையும் உடலணுவையும் உண்டாக்குதல், (உயி)

generative nucleus-பிறப்புட்கரு: முளைத்து வரும் மகரந்தக் குழலின் மேலே உள்ள பகுதி. இது பிரிந்து இரு பாலணுக்களை உண்டாக்கும். இவையே சூல்பையை அடைந்து இணைந்து கருவுறுதலுக்குக் காரணமாக உள்ளன. tube nedeus. (உயி)

Generator- மின்பிறப்பி: மின் இயற்றி எந்திர ஆற்றலை மின்னாற்றலாக்கும் பெரிய எந்திரம். சிறியது மின்னியக்கி (டைனமோ) (இய)

gene revolution - மரபணுப்புரட்சி: மரபாக்கம் மூலம் வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் அமைதியாக நடை பெற்று வரும் முன்னேற்றம் (உயி)

genesis - தோற்றம், பிறப்பு, ஆக்கம்: உயிர்வகை அல்லது தொகுதியின் தோற்றம். இதில் உயிரணு, திசு, உறுப்பு முதலியன வும் அடங்கும். (உயி)

gene splicing - மரபணுப்பிணைவு: ஒரு மரபணு மற்றொரு மரபணுவுடன் நொதி மூலம் இணைதல் (உயி)

gene therapy - மரபணுப்பண்டுவம்: மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே. (உயி)

genetic code-மரபுக் குறியம்: ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுவழிப் பண்புகள் செல்வதைப் பற்றிய நெறிப்பாடு. உயிரணு நிறப்புரியின் மூலக்கூறு அமைப்பினால், இது வெளிப்படுகிறது. (உயி)

genetic complex - மரபுக்கலவை: அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந்துள்ள மரபுக் காரணிகளின் தொகுமொத்தம். (உயி)

genetic drift - மரபணு மிதப்பு: உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த் தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றக மரபணு இணைகள், ஒர் இனை மாற்றுக்கு (அலீல்) அல்லது மற்றொன்றிற்கு ஒரக இணைகளாதல். வாய்ப்பாக நிகழ்வது. தேர்வாக அன்று. (உயி)

genetic engineering - மரபணுவாக்கம்: இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக்கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இந்நுட்பத்தில் அடங்கும். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும்வரை, அவை வளர்ப்புக் கரைசலிலேயே பெருகும். புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்புப் பொருள்கள் உண்டாக்கவும் பயன்படுவது. இத்துறை வளர்ச்சியில் அதிக நாட்டம் செலுத்தியவர்கள் இங்கிலாந்து அறிவியலாராவர். அடுத்து அமெரிக்க அறிவியலாரும் இதில் அக்கறை காட்டி வருகின்றனர். இதற்கு வேறு பெயர் மீள்சேர்ப்பு டிஎன்ஏ தொழில் துணுக்கம் என்பதாகும். (உயி) பா. Cloning.

genetic equilibrium - மரபணு நடுநிலை: ஒர் உயிர்த்தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலை முறைகள், குறிப்பிட்ட மரபணுக் களைப் பொறுத்தவரை, ஒரே மரபு முத்திரயினை (ஜெனோடைப்) ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருத்தல். (உயி)

genetics - மரபணுவியல், மரபியல்: உயிரின் மரபுவழி, வளர்ச்சி, வேறுபாடு, மலர்ச்சி ஆகியவை பற்றி ஆராயுந்துறை. (உயி)

genitals , பிறப்புறுப்புகள்: இனப்பெருக்க உறுப்புகள். அதாவது, ஆண், பெண்ணுக்கென்று அமைந்த தனிப் பாலுறுப்புகள். (உயி)

genome - மரபணுத் தொகுதி: ஒர் உயிரியில் அமைந்துள்ள நிறப்புரிகளின் நிறைத்தொகுதி (உயி)

genotype - மரபுமுத்திரை: ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இன மாதிரி (டைப் ஸ்பீசிஷ்) என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப் பட்டிருக்கும். ஒ. Phenotype. (உயி)

genus - பேரினம்: தொகையினம். வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. சிறப்பினத்திற்கும் குடும்பத்திற்கு இடையிலுள்ளது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப்பட்டிருக்கும். species. (உயி)

geocentric universe - புவிமைய விண்ணகம்: புவியை மையமாகக் கொண்ட உலகம் என்னும் பழைய கருத்து. (பு.அறி)

geochemistry - புவிவேதி இயல்: புவி அறிவியல். புவியின் வேதி இயைபை ஆராய்வது. (பு.அறி)

geodesy - புவிவடிவ இயல்: புவி உருவியல், புவிமேற்பரப்பைப் படமாக்குதல், அளவை செய்தல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. புவி அறிவியல் சார்ந்தது. இதனால் அதன் வடிவம், அளவு, ஈர்ப்புப்புலம் ஆகியவற்றை உறுதி செய்ய இயலும், (பு. அறி).

geography - புவியியல் புவி அறிவியல், புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல், வினை ஆகியவை பற்றி ஆராயுந்துறை. மனிதப் புவிஇயல், இயற்கைப் புவி இயல், பொருளாதாரப்புவிஇயல் எனப் பல வகைப்படும். (பு:அறி)

geological eras - புவி வளரியல் ஊழிகள் :

1. புத்துழி (செனோ சூவாயிக்) 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

2. இடை பூழி (மீசோகுவாயிக்) 65 - 225 மில்லியன் ஆண்டுகள்,

3. தொல் லூழி (பேலியோகுவாயிக்) 570 - 225 மில்லியன் ஆண்டுகள்

4. முன் தொல்லுழி (பிரீகேம் பிரியன்) 4500-2500 மில்லியன் ஆண்டுகள். (பு:அறி)

geology - புவிவளரியல்: 116.7% தோட்டின் வரலாறு, வளர்ச்சி மற்றும் அதிலுள்ள திணை உயிர்கள் ஆகியவற்றை ஆராயுந்துறை. இதுவும் ஒரு புவி அறிவியலே.

geomagnetism - புவிகாந்தம்: புவியோடு காந்தப்புலத்தை ஆராய்தல். (இய)

geometry-வடிவக்கணிதம்: இடத்தொடர்பாக அமையும் புள்ளிகள், வரைகோடுகள், திண்ம வடிவங்கள் முதலியவற்றை ஆராயுந்துறை. இது மூன்று வகைப்படும்.

1. யூக்ளிட் வடிவக் கணிதம்: இக்கணிதம் கிரேக்க கணக்கு மேதை யூக்ளிட் (கி.மு. 300) என்பவரால் தம் மூலங்கள் என்னும் நூலில் விளக்கப் பட்டுள்ளது.

2. யூக்ளிட் சாரா வடிவக் கணிதம்.

3. பகுப்புவடிவக் கணிதம் (கண)

geophysical prospecting - புவி இயற்பியல் கனி வளத்தேட்டம்: புவி இயற்பியல் முறைகளைக் கொண்டு கனிவளங்களை ஆராய்தல். (பு:அறி)

geophysics -புவிஇயற்பியல்: புவி அறிவியல், இயற்பியல் முறைகளில் புவியையும் அதன் காற்று வெளியையும் ஆராயுந்துறை. (பு:அறி)

geophyte - புவித்தாவரம்: தரைக்குக் கீழுள்ள அரும்புகள் மூலம் மேல் வளரும் தாவரம். இவ்வரும்புகள் தண்டுக்கிழங்கு, குமிழம், குமிழ்க்கிழங்கு ஆகியவற்றில் இருக்கும். எ.டு. கருணைக்கிழங்கு வெங்காயம் (உயி)

geotechnology - புவி தொழில் நுட்பவியல்: கட்டுமானப் பணிகளுக்காக மண் பண்புகளை ஆராயும் துறை.

geotropism - புவிநாட்டம்: ஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தாவரத் தண்டும் அவ்விசை நோக்கி வேரும் வளர்பவை. தொட்டிச் செடியின் தண்டு கிடைமட்மாக வைக்கப்பட்டாலும், வேர் கீழ்நோக்கியும் தண்டு மேல் நோக்கியும் வளர்வன. (உயி)

gem - நுண்ணம்: 1. நுண்ணுயிரி. குறிப்பாக நோய் உயிரி (பேத்தஜன்) 2. மூலம் கருமூலம் (உயி)

germanium - ஜெர்மனியம்: Ge. அரிய உலோகம், நொறுங்கக் கூடியது. வெண்ணிறமானது. சிலிகனை விட வீறுடையது. உலோகக்கலவைகள், கண்ணாடி, குறைக்கடத்திகள் ஆகியவற்றில் பயன்படுவது (வேதி)

German silver-ஜெர்மன் வெள்ளி: நிக்கல் வெள்ளி, துத்தநாகம், நிக்கல், செம்பு ஆகியவை சேர்ந்த உலோகக் குறைவான அணிகலங்களிலும் இரும்புத் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

germ cell - கருமூலக் கண்ணறை: பாலணுக்களை (கேமட்ஸ்) உண்டாக்கும உயிரணுக்கள். (உயி)

germicide - நுண்ணிக்கொல்லி: நுண்ணியிர்களைக் கொல்லும் வேதிப்பொருள். (வேதி)

germination - விதை முளைத்தல்: தகுந்த சூழ்நிலைகளில் விதையிலுள்ள குழந்தைச் செடி முளைத்து வெளிவருதல். இது தரைமேல் விதை முளைத்தல், தரைக்கீழ் விதை முளைத்தல் என இருவகைப்படும். (உயி)

germ layer - கருமூல அடுக்கு: கருவின் முக்கிய மூன்றடுக்குகளில் ஒன்று. புறப்படை நடுப் படை அகப்படை இப்படைகளிலிருந்து முதிர் உயிரியின் திசுக்களும் உறுப்புகளும் தோன்று பவை. (உயி)

gerontology- கூப்பியல்: உயிரியல் தொகுதிகளில் முப்புமுறைகளை ஆராயுந்துறை. குறிப்பாக மணி தனிடத்து முப்பாதலை ஆராயுதி துறை. (மரு).

gestation period -கருவளர்காலம்: கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடை வெளி. இஃது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். யானைக்கு அதிகம். (உயி)

getter- எச்ச நீக்கி: வளிகளிலிருந்து எஞ்சிய பொருளை நீக்கும் வேதிப்பொருள். (வேதி)

ghosting-இரட்டிப்புக் கோளாறு: தொலைக்காட்சியில் தோன்று வது. (தொது)

giant panda - பெருங்கரடி: கரடி போன்ற பாலூட்டி. கறுப்பும் வெள்ளையுங் கலந்தது. 1.8 மீட்டர் உயரம். சீனாவிலும் திபெத்திலும் காணப்படுவது. (உயி)

gibberellic acids, GA - கிபெரிலிகக் காடி (ஆசிட்) ஜிஏ: கிபெரிலின் தாவர வளர்ப்பி, கியெரில்லா புஜிகுரை என்னும் பூஞ்சையிலிருந்து கிடைப்பது. தாவரப் பகுதிகள் பலவும் வளரக் காரணமாகவுள்ளது. பா. auxin/ ஒ. harmone. (உயி).

gigantism - அறக்கமை: பருவ முதிர்ச்சிக்கு முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறைநோய். (உயி)

gill - செவுள்: மீன்களின் மூச்கறுப்பு (உயி)

girafe- ஒட்டைச்சிவிங்கி: விலங்குகளிலேயே மிக உயரமானது. 7 மீட்டர் உயரம். செம்மஞ்சள் நிறம். தோலில் கறுப்புப் புள்ளிகள் உண்டு. கழுத்தும் முன் கால்களும நீண்டவை. அசைபோடுவது. ஆப்பிரிக்காவில் வாழ்வது. (உயி)

gizzard - அரைவைப் பை: இரண்டாம் இரைப்பை உணவுவழியின் தசைப்பகுதி வளைய உடலிகள், பறவைகள், சில கணுக்காலிகள் ஆகியவற்றில் காணப்படுவது. உட்கொண்ட உணவை அரைக்கப் பயன்படுவது. (உயி)

'glacier - பனியாறு: நகர்கின்ற நிறைபனியே பணியாறு. நீரைப்போல் பணியாறு விரைவாக நகர்வதில்லை. இது மூன்று வகைப்படும். 1. கண்டப் பணி யாறு. 2. பள்ளத்தாக்குப் பணி யாறு. 3. மலையடிப்பணியாறு. (பு:அறி)

gland - சுரப்பி: சுரக்கும் உறுப்பு. தாவரங்கள், விலங்குகள் ஆகிய வற்றில் காணப்படுவது விலங்கு களில் சுரப்பிக்கு நாளம் இருந்தால் நாளமுள்ள சுரப்பி (உமிழ் நீர்ச்சுரப்பி) என்றும் நாளம் இல்லையெனில் நாளமில்லாச் சுரப்பி (தைராய்டு என்றும் பெயர் பெறும். (உயி)

glass - கண்ணாடி: படிகமல்லாத திண்மம். மீக்குளிர்ச்சியடைந்த நீர்மங்களே கண்ணாடிகள். சோடா கண்ணாடி சீசாக்கள் செய்யவும். போரோ சிலிகேட் கண்ணாடிகள் சமையல் பாண்டங்கள், ஆய்கருவிகள் ஆகியவை செய்யவும் பயன்படுதல். (வேதி)

glasswool-கண்ணாடிக் கம்பளம்: பஞ்சுக் கம்பளத்தைப் போன்ற செயற்கைப் பொருள். ஆனால் மிக நுண்ணிய கண்ணாடி இழையாலானது. அரிக்குத் தன்மையுள்ள நீர்மங்களை உறிஞ்சவும் வடிகட்டவும் பயன்படுதல். (இய)

Glauber's salt - கிலாபர் உப்பு: படிகச் சோடியச் சல்பேட்டு. (வேதி)

GLC, gas liquid chromatography - ஜி.எல்.சி. வளிநீர்ம நிறப் பகுப்பியல்: ஆவியாகக் கூடிய பொருள்களின் அரிய கலவையின் பகுதிகளைப் பகுத்துப் பார்க்கும் மிக நுண்ணிய முறை. (வேதி)

glenoid cavity - சுழல்குழி: தோள் பட்டையிலுள்ள கிண்ண வடிவக்குழிவு. இதில் மேற்கை எலும்பின் தலை சுழலும், பா. acetabulum. (உயி)

glochidium - உதட்டிளரி: நன்னீர்ச் சிப்பிவகை மட்டியின் (மசல்) இளம் உதட்டு உயிரி.

glomerulus - குழலிமுடிச்சு: சிறு நீரகப் புறணியில் அமைந்துள்ள சிறிய தந்துகி முடிச்சு. இதனைப் gla

பெளமன் பெட்டகம் சூழ்ந் துள்ளது. இம்முடிச்சும் பெட்ட கமும் சேர்ந்து மால்பிஜியன் பெட்டகத்தை உண்டாக்கு கின்றன. இதற்குத் தமனிக்குருதி செல்கிறது. ஒ. Malphigian (உயி)

glossa - உதடு: பூச்சியின் உதடு. (உயி)

glottis - குரல்வளை: தொண்டைக்கு மேலுள்ள பிளவு. நூரையீரலுக்குக் காற்று செல்லும் துளை.

glucose - குளுகோஸ்: வேறு பெயர்கள் டெக்ஸ்ரோஸ். முந்திரிச் சர்க்கரை, ஒற்றைச் சர்க்கரை, கிளைகோஜனில் உள்ளது. (உயி)

glume - செதிலுமி: புற்களின் சிறுகதிரின் அடியிலுள்ள உலர் மலட்டுப் பூவடிச் செதில்களில் ஒன்று. (உயி)

glycerine - கிளிசரின்: முந்நீரிய ஆல்ககால். நிறமற்றது. இனிய சுவை. நடுநிலையான மணமற்ற நீர்மம். நீரிலும் ஆல்ககாலிலும் கரைவது. மை உருளை வச்சிரம் செய்வதில் சேர்க்கப் படுகிறது. அச்சகங்களில் ஒட்டுப்பொருளாகப் பயன்படல். கரைப்பான் (வேதி)

glycerol - கிளைசரால்: மூன்று ஒஏசி தொகுதிகள் கொண்ட ஆல்ககால் கொழுப்பு உண்டாக உதவுவது. (வேதி)

glycogen - கிளைகோஜன்: விலங்கு ஸ்டார்ச்ச. கல்லீரலில் உள்ளது. நீராற் பகுக்கக் கிளைகோஸ் கிடைக்கும். குளுகோஸ் சர்க்கரையே கிளைகோஸ், (உயி)

gote - கழுத்துக்கழலை: தைராக் சின் சுரப்பில் அயோடின் ஊட்டங் குறைகின்றபோது ஏற்படுங்குறைநோய், தொண்டைச் சுரப்பி பருப்பதால், கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாதல் (உயி)

gold - பொன்: தங்கம். ஒளிர்வான மஞ்சள் நிற உலோகம். மென்மையானது. மிக நுண்ணிய தகடாகவும் கம்பியாகவும் ஆக்கலாம். அரச நீர்மத்தில் மட்டுமே கரையும். பல்கட்டவும், உலோகக் கலவை செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படல். (வேதி)

Golgi body-கோல்கை அமைப்பு: விலங்கணுக்களில் மைய உறுப்பைச் சுற்றியமைந்துள்ள பொருள், 1898இல் காமிலோ கோல்கை என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. செல்சுரப்புகளுக்குக் காரணமானது. இதற்கு வேறு பெயர்கள் கோல்கை கலவை (கோல்கை காம்ப்ளக்ஸ்). கோல்கை கருவி (கோல்கை அப்பரட்டஸ். (உயி)

gonad-பாலின உறுப்பு: விந்தனுக் களும் கருமுட்டை அணுக்களும் தோன்றும் உறுப்பு (உயி)

gonidium - பிரப்பணு: இது ஒரு பாசி அணு. பூப்பாசிகளில் (லைக்கன்ஸ்) காணப்படுவது. பூஞ்சையும் பாசியும் சேர்ந்தது பூப்பாசியாகும். (உயி)

gonimoblast -பிறப்புப்படல்: செந்நிறக் கடற்பாசியில் கருவுற்ற சூலியத்திலிருந்து (கார்ப்போ கோனியம்) உண்டாகும் சிதலுள்ள இழை (உயி)

goniometer - கோண அளவுமானி: படிக முகங்களுக்கிடையே உள்ள கோணங்களை அளக்குங் கருவி. (வேதி)

gonococcus - மேகக்கோளியம்: வெட்டை உண்டாக்கும் குச்சியம். பிறப்புப் பரப்பில் சளிப்படலத்தை உண்டாக்கித் தொற்றச் செய்வது இக்கோளியத்தின் இயல்பு (உயி)

gorrilla-கொரில்லா: ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு. தவிர, இது வாழும் குரங்குகளுள் மிகப் பெரியதாகும். நிலத்தில் வாழ்வது. பெரிய உடம்பு. நீண்ட ஆற்றல் வாய்ந்த வளைந்த குறுகிய கால்கள். (உயி)

gout - கீல்வாதம்: இது ஒரு மூட்டுநோய். இதில் குருதியிலுள்ள மிகுகாடி, மூட்டுகளில் சோடியம் பையூரேட்டாகப் படிதல். வீக்கம் ஏற்படும். (உயி)

Gouy balance - காந்த நிறுதராசு: காந்த ஏற்புத் திறனை உறுதி செய்யும் தராசு (இய)

Governor - ஆளும் கருவி: ஆளி எந்திரங்களின் விரைவைச் சீராக்கும் கருவி.

gradient - வாட்டம்: 1. கிடை மட்டத்திற்குச் சார்பான சரி வளவு, 2. தொலைத் தொடர்பாக அளவில் ஏற்படும் மாற்றம் வீதம் பளுமானி அளவீடுகள். (இய)

Graffian follicle - கிரேபியன் நுண்ணியம்: சூல்பைக்குழி. பாலூட்டிகளில் காணப்படுவது. பல அணுக்களும் முட்டையுங் கொண்டது. இதனைச் கரையம் எனலாம். (உயி)

grafting-ஒட்டுதல்: உறுப்பு இனப்பெருக்க முறைகளுள் ஒன்று. இரு தாவரத் தண்டுகள் சேர்ந்து புதிய ஒட்டுச் செடியை உண்டாக்கல்: மா. கொய்யா. அரு கொட்டு (கொய்யா), தண்டு ஒட்டு (மா), மொட்டு ஒட்டு (ரோஜா) என இது மூவகைப்படும். ஒட்டுதலினால் விரை வாகப் பலனை எதிர்பார்க்கலாம். புதிய வகைகள் கிடைக்கும். (உயி)

Graham's law - கிரகாம் விதி: வளியின் பரவு நேர்விரைவு, அதன் அடர்த்தியின் வர்க்க மூலத்திற்குத் தலைகீழ்வீதத்தில் உள்ளது. பரவல் முறையில் ஒரிமத்தனிமங்களைப் பிரிக்கப் பயன்படுதல், தாமஸ் கிரகாம் (1805-69) என்பவரால் இது 1829இல் வகுக்கப்பட்டது. (இய)

gram ion - கிராம் அயனி: ஒரு அயனியிலுள்ள அணு எடைகளின் தொகை கிராமில் குறிப்பிடப்படுவது. (வேதி)

gram molecular weight - கிராம் மூலக்கூறு எடை: ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு நீர்வளி அணுவின் எடையைவிட எத்தனை மடங்கு கனமாக உள்ள தோ, அந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடையாகும். மூலக்கூறு எடை= பொருளின் மூலக்கூறு ஒன்றின் எடை நீர்வளி அணு ஒன்றின் எடை (வேதி)

gram negative - கிராம் எதிர்க் குச்சியம்: கிராம்கறையோடு சேர்க்கும்போது எதிர்க்கறை யோடு சேர்ந்து நிறமற்றதாகும் குச்சியம். (உயி)

gram positive -கிராம் நேர்க் குச்சியம்: செந்நிற எதிர்க்கறை யாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல், ஊதா நிறக் கறையை நிலைக்க வைத்திருக் கும் குச்சியம்.

gram weight -கிராம் எடை : அலகுச் சொல். விசையலகு ஒரு கிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது செயற்படும் நில ஈர்ப்புவிசை. 1 கிராம் எடை = டைன்கள். மதிப்பு மாறுவது. (இய)

granite - கிரானைட்டு: நேர்த்தி யிலா எரிமலைப் படிகப்பாறை. இதில் படிகக்கல். காக்கைப் பொன், கனிமம் (பெல்ஸ்பார்) ஆகியவை அடங்கியுள்ளன. (வேதி)

granulocytes -வெளிரணுக்கள், துணுக்கணுக்கள்: குருதி வெள் ளணுக்கள். இவற்றில் துணுக்கு அணுக்கணியம் உள்ளது. உடலுக்குப் பாதுகாப்பளிப்பவை எதிர்ப்பாற்றலை உண்டாக்கு பவை (உயி)

granum - துணுக்கம்: பசுங்கணிகத்திலுள்ள படலத் தொகுப்பு. இது நுண்ணோக்கியில் மணியாகத் தெரிவது. (உயி)

graphics -வரைகலை: படப்பொறிப்பு கணிப்பொறிக்காட்சித் திரையில் தோன்றும் படச் செய்தி. இய)

graphics characters-வரைகலை வடிவங்கள்: எழுத்து, எண் போன்றே காட்சித் திரையில் இடத்தை அடைத்துக் கொள்ளும் சிறிய வடிவங்கள். கணிப் பொறி விளையாட்டுகளில் பயன்படுபவை. (இய)

graphite - கிராபைட்டு: கரியின் வேற்றுரு. அறுகோண வடிவ முள்ள படிகம். மின்சாரத்தையும் வெப்பத்தையும் எளிதில் கடத்தும், உயவிடுபொருள். மின் வாய்கள் செய்ய (இய)

grasshopper - புல்வெட்டுக்கிளி: தாவிச் செல்லும் நேர்ச் சிறகுடைய பூச்சி. வெட்டுக் கிளியோடு தொடர்புடையது. வெட்டும் வாய்ப்பகுதிகள், தடித்த முன்சிறகுகள் உண்டு. சிறகுகள் படலப்பின் கால்களை மூடுபவை. (இய)

gravimeter - எடையறிமானி: நீரில் அளவுகள் எடுக்கவும் நீரிலுள்ள எண்ணெய்ப் படிவுகளை உறுதி செய்யுவம் பயன்படும் நீர்மானி. (வேதி)

gravimetric analysis -எடையறி பகுப்பு: அளவறி பகுப்பின் ஒரு பிரிவு. அடங்கி இருக்கும் பொருளை உறுதி செய்ய, அதை வேதி இயைபு தெரிந்த ஒரு பொருளாக மாற்றிப் பின் பிரித்துத் துய்மையாக்கி எடை யிடப்படுகிறது. (வேதி)

gravitational force -ஈர்ப்புவிசை: ஒரு பொருள் பிற பொருள்களின் மீது ஏற்படுத்தும் கவர்ச்சியினால், பொருளில் உண்டாகும் விசை, இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். கதிரவனுக்கு மிக அதிகம். (இய)

gravitational constant -ஈர்ப்பு மாறிலி(G):நியூட்டன் ஈர்ப்பு விதி மாறிலி. 6.664 x10-11 Nm2Kg-2 என்பது அதன் மதிப்பு (இய)

gravity - ஈர்ப்பு: கதிரவன், விண் மீன், கோள் முதலிய விண் பொருள்களின் இயற்கைக் கவர்ச் சியை ஒரு நிலையில் குறிப்பது. மற்றொரு நிலையில் முடுக்கத்தால் ஏற்படும் எடைமிகு நிலைமையைச் சுட்டுவது. இந்த எடை மிகு நிலைமை ஜி எனப்படும். சுழி நிலைக்கு ஈர்ப்பு வருமானால் எடையின்மை ஏற்படும். ஏவுகணை முடுக்கம் பெறும்போது, எடைமிகு நிலைமையை உணர லாம். (இய)

gravity, centre of- ஈர்ப்புப் புள்ளி: ஒரு பொருளில் எடை முழுதும் தாக்கும் புள்ளி. இது தாழ்ந் திருந்தால், பொருள் உறுதிச் சம நிலையில் இருக்கும். பொருள்களுக்குத் தகுந்தவாறு இது வேறுபடும். வட்டம் மையப் புள்ளி, உருளை மைய அச்சின் நடுப்புள்ளி. முக்கோணம் ஒவ் வொரு மூலையிலிருந்து எதிர் பக்க நடுப்புள்ளிகளுக்கும் வரையப்படும் கோடுகள் சந்திக்கு மிடம் கோளம் அதன் மையம் இணைகரம், செவ்வகம் முலை விட்டங்கள் சேருமிடம். (இய)

grease - மசகு: அரைக்கெட்டி நிலையிலுள்ள உயவிடுபொருள். கூழ்மமாகிய பெட்ரோல் எண்ணெய்கள் கொண்டது. கரை யக்கூடிய அய்டிரோகார்பன் களும் சவர்க்காரங்களும் இதிலுண்டு.(வேதி)

green - பச்சை: ஒற்றை நிறக்கதிர் வீச்சு. அலை நீளம் 492-570 நேனோ மீட்டர்கள். (இய)

green house -பசுமை இல்லம் : பருவம் தவறிய தாவரங்களைப் போதிய தட்பவெப்பக் கட்டுப் பாட்டுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கும் கண்ணாடிக் கூடத் திற்குப் பசுமை இல்லம் என்று பெயர். (உயி)

green vitriol-பசுந்தத்தம்: பெரஸ் சல்பேட்டுப் படிகம். (வேதி)

grey matter - சாம்பல்நிறப் பொருள்: நரம்பணுக்களாலான நரம்புத்திசு. தண்டு வட உள்ளகத் திலும் முளைப்புறணியிலும் காணப்படுவது. (உயி)

grid - தடுவாய்: மின்னாற்றல் வழங்கும் அமைப்பு. (இய)

Griess reagent -கிரிஸ் வினையாக்கி: சல்பானிலிகக் காடிக் கரைசல். ஆல்பா நாப்தைல் அமைனும் அசெட்டிகக் காடி யும் நீரில் சேர்ந்த கரைசல். நைட்ரசக் காடியைக் கண்டறியப் பயன்படுதல். (வேதி)

ground state -அடிநிலை: ஓர் அணு, மூலக்கூறு அல்லது ஒரு தொகுதியின் மிகக் குறைந்த ஆற்றல் நிலை. (இய)

ground tissues -அடிநிலை திசுக்கள்: முனைவளர் திசுக் களால் உண்டாக்கப்படும் தாவரத் திசுக்கள். எ-டு. புறணி, சோறு, (உயி)

ground waves -அடியலைகள்: வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு. நேரடியாகச் செலுத்தும் அலை வாங்கியிலிருந்து இவை பெறும் அலைவாங்கிக்குச் செல்பவை. (இய)

growth - வளர்ச்சி: இயற்பியல் உடலியல் செயல்களால் உயிரணு உடலின் உலர் எடையிலும் அளவிலும் ஏற்படும் பெருக்கம். மீள்மாறு நிலை இல்லாதது. (உயி)

growth inhibitor - வளர்ச்சித் தடுப்பி: தாவர வளர்ச்சியை நிறுத்தும் வேதிப்பொருள் (உயி)

growth ring - வளர்ச்சிவளையம்: பா. annual ring.

grub - இளரி: விட்டிலின் முதிரா உயிரி, காலற்றது, உடல் சதைப்

பற்றுள்ளது. சுருக்கமுள்ளது. வளைந்தது. சிறிய தலையும் சில புலனுறுப்புகளும் கொண்டது. (உயி)

GSLV, geostationery lauch vehicle - புவிநிலைப்பு ஏவுகலம்: இது மேம்பட்ட இந்திய ஏவு கலம்,(இய)

guard cell -காப்பணு: இலை துளையின் பக்கத்திலுள்ள அவரைவிதை வடிவமுள்ள புறத் தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவ்வணுக்கள் இலைத் துளை முடித்திறப்பதைக் கட்டுப் படுத்துகின்றன. பா. stoma.

guided missiles - வழிப்படுத்து எறிபடைகள்: இவை ஏவுகனை இயக்கும் எறிபடைகள். நிலத்தி லிருந்து செல்லும் வானொலிக் குறிபாடுகளினால் இவற்றின் பறத்தல் கட்டுப்படுத்தப்படும். பொதுவாக, இவை அழிவை உண்டு பண்ணுபவை. (இய)

guiding - வழிப்படுத்தல்: இதனைப் பொறுத்து வானவெளிக் கலத் தின் செலவு திருத்தமாக அமை யும். கலத்தின் செலவில் வீறுள்ள நிலை மட்டுமே வானொலிக் குறிபாட்டினால் கட்டுப்படுத்தப் படும். இந்நிலையில் கட்டுப்பாடு திருத்தமாக அமையுமானால், வீறற்ற நிலையில் கலத்தைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. கட்டுப்படுத்தவும் இயலாது. ஆகவே, கலம் இலக்கை அடையும்.

gum - பிசின்: கோந்து. தாவரப் பொருள். மாப்பொருள் ஊட்டம் உள்ளது. (உயி)

gummosis. பிசின் ஒழுக்கு:தாவர நோய், அதிகமாகப் பிசின் ஒழுகி மரப்பட்டையில் சேர்வது. கருவேலில் காணலாம். (உயி)

gun Cotton -வெடி பஞ்சு:நைட் ரிகக் காடியையும் கந்தகக்காடி யையும் பஞ்சில் சேர்த்துச் செய்யப் படுவது. (வேதி)

gun metal-வெடிகுழல் உலோகம்: செம்பும் வெள்ளியமும் (9:1) துத்தநாகமும் (4%) சேர்ந்த கலவை. வெடிகுழல்கள் செய்ய. (வேதி)

gun powder - வெடி தூள்:வீட்டுக் கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட்டு சேர்ந்த வெடி கலவை. (வேதி)

gutta- உறைபால்: மரத்தில் உறைகின்ற பால். (உயி)

guttation - திவலை படிதல்: 1.வேர ழுத்தம் காரணமாக இலைகளில் திவலைகள் தோன்றல், 2. தாவர மேற்பரப்பிலிருந்து நீர் இழப்பு ஏற்படுதல் (உயி)

gymnospermae - உறையில் விதையில் தாவரங்கள்: பூக்குந் தாவரங்கள். விதையுள்ள தாவரங் களின் ஒரு துணைப்பிரிவு. (உயி)

gynaecology - மகளிர் நோய் இயல்: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயுந்துறை. (மரு)

gynobasic style-அடிச்சூழ் தண்டு: சூல்பைச் சூல்களின் அடியிலிருந்து உண்டாகும் சூல்தண்டு. (உயி)

gymoecium - சூல்வட்டம்: பூவின் நான்காம் வட்டம். இது பெண் பகுதி, சூல்பை குல்தண்டு, சூல் முடி ஆகியவற்றைக் கொண்டது. இதிலிருந்து உண்டாகும் சூல் முதிர்கின்ற பொழுது விதை உண்டாகிறது. சூல்பை முதிர் கின்ற பொழுது, அது காய் அல்லது பழமாகிறது. ஒ. (உயி)

gypsum - ஜிப்சம்: (CaSO4). கால்சியம் சல்பேட் வெண்ணிறப் பொருள். இதிலிருந்து நீர் நீக்கப் படும்பொழுது பிளாஸ்டர் ஆஃப் பேரிஸ் ஆகின்றது. வனை பொருள் தொழில், வண்ணஞ் செய்தல், தாள் செய்தல் முதலிய தொழில்களில் பயன்படுதல். எலும்பு முறிவுக்கட்டு போடவும் பயன்படுதல், (வேதி)

gynophore - பூத்தாங்கி: சூலகத் திற்கும் மகரந்தத்திற்குமிடையே பூத்தளம் நீண்டு சூல்பையினைத் தாங்குதல் (உயி)

gyrocompass - சுழல் கவராயம்: அமெரிக்க எல்மர் பெரி இதனை 1911இல் புனைந்தார். காந்தம் இதில் பயன்படாததால், காந்தப் புயல்களால் இது தாக்குறு வதில்லை. (இய)

gyromagnetic ratio -சுழல்காந்த வீதம்: ஒர் அணுவின் காந்தத் திருப்புத் திறனுக்கும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள வீதம். (இய)

gyroscope - சுழல்நோக்கி: சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர்விரைவில் சுழலும் உருளையுள்ள கருவி. கல்வி விளையாட்டுக் கருவி. கப்பலை நிலைப்படுத்துங் கருவி. (இய)

gyrus gyri சுருளிகள்: . மூளையின் சுருள் பகுதிகள். 2. இரு பள்ளங்களுக்கிடையே உள்ள சுருள்தொடர் (உயிர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/G&oldid=1040340" இலிருந்து மீள்விக்கப்பட்டது