அறிவியல் அகராதி/M
machine - எந்திரம்: ஒரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குத் திறனைச் செலுத்தும் கருவி. பா. simple machine. (இய)
macrobiotics - பெருவாழ்வியல்: வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை. (உயி)
macromere - பெருவணு: சில விலங்குகளின் பிளவிப் பெருகலின்போது மஞ்சள் கருவுள்ள பெரிய அணு. (உயி)
macrometer - பெருமானி: ஒளியியல் கருவி. குவிக்குந்தொலை நோக்கியும் இரு ஆடிகளுங் கொண்டது. இதைக் கொண்டு தொலைபொருள் எல்லையை மதிப்பிடலாம். (இய)
macronucleus - பெருவுட்கருவு: குற்றிழை தோன்றிகளின் (ciated protozoa) இருவுட் கருக்களில் ஒன்று. மற்றொன்று சிறுவுட்கரு. எ டு: பரமேசியம். (உயி)
macronutrient - பெருவுட்டப் பொருள்: ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்கு அதிக அளவில் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு. கரி, நீர் வளி, இரும்பு, மக்னீசியம் வெடிவளி முதலியவை. (உயி)
maggot - புழுஇளரி: இது ஒரு காலற்ற இளரி. தலையும் கால்களும் இல்லா இந்த வேற்றிளரி, சில அறுகால்களில் வாழ்வது. காற்றில் காணப்படுவது, எ-டு: ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள். ஒ. (உயி)
magic number - கண்கட்டு எண்: (1). 2,8,20,28,50,82,126 ஆகிய எண்கள் (2). இவ்வெண்களைக் கொண்டவை அணுக்கரு நடு நிலையனுக்களும், முன்னணுக்களும். இவற்றிற்குத் தனி நிலைப் புத்திறன் உண்டு. (இய)
magma - கற்குழம்பு: பாறைக் குழம்பாக எரிமலையிலிருந்து வருவது. உறைந்து பாறையாக மாறுவது. (பு:அறி)
magnalium - மக்னாலியம் : அலுமினிய அடிப்படையில் அமைந்த உலோகக் கலவையின் வாணிபப் பெயர். செம்பு, மக்னீசியம் ஆகிய உலோகங் களும் சேர்ந்திருக்கும். (வேதி)
magnesite - மக்னசைட்: மக்னீசியத் தாது. (வேதி)
magnesium - மக்னீசியம்: Mg. வெண்ணிறக் காரமண் உலோகம், கார்னலை ட், டோலமைட், எப்சம் உப்பு, மாக்னைட்டு ஆகிய தாதுக்களாக இயற்கையில் கிடைப்பது. உருகிய மக்னீசிய குளோரைடை மின்னாற்பகுக்க இப்பொருள் கிடைக்கும். கூசொளி குமிழிகளிலும் பல கரிமச் சேர்மங்கள் செய்யவும் சிலிக்கனைப் பிரிக்கவும் பயன் படல். (வேதி)
magnesium chloride- மக்னீசியம் குளோரைடு: MgCL2. நீரற்ற உப்பு. உலர்ந்த நீர்வளிக் குளோரைடில் அறுஅய்டிரேட்டை வெப்பப்படுத்திப் பெறலாம். நெசவுத்தொழிலில் பயன்படுதல். (வேதி)
magnesium hydroxide- மக்னீசியம் அய்டிராக்சைடு: Mg(OH)2. வெண்ணிறத்துள். இழுது போன்ற வீழ் படிவு. கழிவுப்பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுதல். (வேதி)
magnesium oxide - மக்னீசியம் ஆக்சைடு: MgO. நீரில் கரையும் வெண்ணிறத்துள். காற்றில் மக்னீசியத்தை எரித்துப் பெறலாம். உலைகளில் வெப்பத் தடைக்கரைகளை அமைக்கவும் மூசைகள் செய்யவும் காடித் தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் பயன்படல். (வேதி)
magnesium sulphate - மக்னீசியம் சல்பேட்டு: MgSO4. இயற்கையில் கிசரைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். திட்ட மான ஒளிபுகும் படிகம். காற்றில் திறந்து வைக்கப்படிக நீரை இழக்கும். பேதிமருந்து, நிறம் நிறுத்தி (வேதி)
magnet - காந்தம்: பொதுவாக இரும்பைக் கவரக் கூடிய பொருள்களைக் காந்தம் என்கிறோம். இது சட்ட வடிவத்திலே வளைவு வடிவத்திலோ இருக்கும். பின்னதிற்குக் காந்த ஆற்றல் அதிகம், வடிவகாந்தம் நிலைக்காந்தமாகும். மின்காந்தம் தற்காலிக காந்தம். இதில் மின்சாரம் இருக்கும் வரையில் தான் காந்தம் இருக்கும். (இய)
magnetism - காந்தவியல்: காந்த விசைப் புலங்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயுந்துறை. (இய)
magnetic axis - காந்த அச்சு: ஒரு காந்தத்தின் இரு முனை மையங்கள் வழியாகச் செல்லும் கோடு. (இய)
magnetic circuit - காந்த சுற்று: காந்த விசைக்கோடுகளால் உண்டாகும் மூடியவழி. எ-டு. இலாட காந்தம். இதன் அடியில் ஒர் இரும்புச் சட்டத்தை வைக்க, அதன் சுற்று மேம்பாடு அடையும். (இய)
magnetic compass - காந்த திசைகாட்டி: காந்த விசைப் புலத்திசையைக் காட்டுங்கருவி, இதிலுள்ள காந்தம் அசைந்து திசையைக் காட்டுவது. (இய)
magnetic constant - காந்த மாறிலி: எஸ்ஐ அலகில் தனிக் கிசவுத் திறன் (அப்சல்யூட் பர்மியபிலிட்டி என்பது ஒரு பொருளின் காந்தப்பாய அடர்த்திக்கும் (B) புறக்காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். µ=B/H. அலகு ஹென்றி./மீட்டர் (Hm-1). ஒரு பொருளின் சார்புக் கசிவுத் திறன் என்பது (ரிலேட்டிவ் பர்மியபிலிட்டி அதன் தனிமக் கசிவுத் திறனுக்கும் வெற்றிடக் கசிவுத் திறனுக்குமுள்ள வீதம். ஆகவே, அது பருமனற்றது. μr = μ/μ0 (இய)
magnetic declination - காந்த விலக்கம்: நிலமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், காந்த முனை வழிவட்டத்திற்கும் நில முனை வழி வட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம். (இய)
magnetic dip, inclination - காந்தச்சரிவு: நிலமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நில காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவுக்குமிடையில் உள்ள கோணம். (இய)
magnetic dipole - காந்த முனை: சட்ட காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் ஒரிணை காந்தமுனைகள். (இய)
magnetic elements - காந்த மூலங்கள்: நிலவுலகின் காந்த ஆற்றல், எப்புள்ளியிலும் மூன்று காந்த மூலங்களால் வரையறுக்கப்படுகிறது. அப்புள்ளியில் இவை காந்தப் புலத்தின் வலிமையையும் திசையையும் அளிக்கும். அவை 1. கிடைமட்டச் செறிவு 2. சரிவுக்கோணம் 3. விலக்கக் கோணம் ஆகும். இவை இடத்திற்கிடம் மாறுபடுபவை. (இய)
magnetic equator - காந்த நடுக்கோடு: சுழிச்சரிவின் புள்ளி களைச் சேர்க்கும் கோடு (இய)
magnetic field - காந்தப்புலம்: காந்தவிசை உணரப்படும் பகுதி. (இய)
magnetic field strength, Intensity-காந்தப்புலச் செறிவு: காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் (M) அதன் பருமனுக்கும் (V) இடையே உள்ள தகவு. அதன் காந்தச் செறிவு (J) ஆகும். (இய)
magnetic flux-காந்தப்பாயம்: ஒரு பரப்புவழி அமையும் காந்தப் புலவலிமை. ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. (இய)
magnetic flux density - காந்தப் பாய அடர்த்தி: ஒரு காந்தப் புலத்தில் ஓரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் ஒட்டம். ஒரலகு பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்றும் கருதப்படுகிறது. (இய)
B=F/Qv, (B- புலம். F- விசை. Q-ஏற்றம். V-நேர்விரைவு)
magnetic induction - காந்த தூண்டல்: புறக்காந்தப் புலத்தினால் ஒரு பொருளைக் காந்த மாக்குதல்.( இய)
magnetic meridian - காந்தமைய வரை: நில்வுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்கு பவர் வழியே செல்வது. (இய)
magnetic moment - காந்தத் திருப்புத்திறன்: காந்த அச்சில் 90° இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப்படும் திருப்புவிசை M-T/B. (M- திருப்புத்திறன் T- திருப்பு விசை B - புலம்) (இய)
magnectic permanence - காந்த காப்புத்திறன்: எஃகு அதிக முள்ளது; நிலைக்காந்தம். தேனிரும்பு குறைந்தது; தற்காலிகக் காந்தம் ஏற்புத்திறனும் காப்புத்திறனும் அதிகமுள்ள பொருள்கள் கடினக் காந்தப் பொருள்கள். இவற்றைக் கொண்டு சிறந்த வலிமைமிக்க காந்தங்கள் செய்யலாம். எ-டு. அல்நிக்கோ (எஃகு அலுமினியம், நிக்கல், கோபால்டு) (இய)
magnetic permeability - காந்தக் கசிவுத் திறன். பா. M. Constant (இய)
magnetic poles - காந்த முனைகள்: காந்தத்திற்கு வடமுனை, தென்முனை என்னும் இருமுனைகள் உண்டு. ஒத்த முனைகள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர்முனைகள் ஈர்க்கும். (இய)
magnetic pole strength - காந்த முனை வலிமை: வெற்றிடத்தில் ஒரலகு முனையிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் போது, ஒரு காந்தமுனையினால் உண்டாகும் விசை (இய)
magnetic potential - காந்த அழுத்த வேறுபாடு: இது காந்த இயக்குவிசையாகும். மின்னியக்கு விசை போன்றது. (இய)
magnetic resistance - காந்தத் தடை : ஒரு காந்தச் சுற்றில் முழுக்காந்த ஓட்டத்திற்கும் காந்த இயக்குவிசைக்கும் இடையே உள்ள வீதம் அலகு ஹென்றி மீட்டர்-1 (Hm-1) (இய)
magnetic substances, ferro - இரும்புக் காந்தப் பொருள்கள்: இவை இரும்புத் தொடர்பான பொருள்கள். இவற்றின் காந்தப் புல வலிமையை அதிகமாக்கக் காந்தத் தன்மையும் அதிகமாகும். எ-டு இரும்பு, எஃகு, நிக்கல், கோபால்டு (இய)
magnetic susceptibility - காந்த ஏற்புத்திறன்: பயன்படுத்திய காந்தப்புல வலிமைக்கும் காந்த மாக்கலுக்கும் உள்ள தகவு. தேனிரும்பு அதிக அளவும் எஃகு குறைந்த அளவும் காந்த ஏற்புத் திறன் உள்ளவை. (இய)
magnetic variation-காந்த மாறுபாடு: நிலவுலகின் மேற்பரப்பில் ஒரு புள்ளியில் காந்த மூலங்களில் ஏற்படும் பல மாற்றங்கள். இது காலத்திற்கேற்பவும் வேறுபடும். (இய)
magnetite - மாக்னடைட்: இரும்புத்தாது (ஆக்சைடு) (வேதி)
magneto - காந்தவழிப்பிறப்பி: பெட்ரோல் எந்திரங்களின் பற்று ஏற்பாடுகளில் உயர்அழுத்த மூலமாகப் பயன்படும் மாறு திசை மின்னோட்டப் பிறப்பி. (இய)
magneto meter - காந்த மானி: ஒரு வகைத் திசைக்காட்டி. காந்தப் புலங்களை ஒப்பிடப் பயன்படுவது. இது விலகு காந்தமானி, அதிர்வு காந்தமானி என இரு வகைப்படும். (இய)
magnetosphere - காந்த வெளி: இது நிலவுலகைச் சுற்றிலும் சுமார் 3000 கிலோமீட்டருக்கு மேல் ஒரு இலட்சம் கிலோ மீட்டர்வரை பரவியுள்ளது. (இய)
magnification - உருப்பெருக்கம்: உருவின் நீளத்திற்கும் பொருளின் நீளத்திற்குமுள்ள வீதம் உருப் பெருக்கம். இது அதிகமாக அதிகமாகப் பொருளைப் பெரிதாகப் பார்க்கலாம். நோக்கு கருவிகளுக்குரியது. (இய)
magnitude - ஒளிர் அளவு: வின் மீனின் சார்பு ஒளிர்தன்மை. தோற்ற ஒளிர்வளவு, தனி ஒளிர் அளவு என இரு வகைப்படும். (வானி)
magno - மாக்னோ: உலோகக் கலவை. நிக்கல் (95.5%) மாங்கனீஸ் (4.5%) சேரந்தது. வானொலிக் குழாய்கள் செய்யவும் வெண்சுடர் விளக்குகள் செய்யவும் பயன்படல். (வேதி)
major gene - பெருமரபணூ: புற முத்திரையை (பினோடைப்) உறுதிசெய்யும் மரபணு. (உயி)
malachite - மாலகைட்: செம்புத்தாது. (வேதி)
malaria - நச்சுக்காய்ச்சல்: ஒரு வெப்பமண்டல நோய். பிளாஸ்மோடியம் என்னும் நுண்ணுயிரியினால் உண்டாவது. அனோபிலஸ் கொசுவினால் பரப்பப் படுவது.
malathion - மாலதியான்: C10H1906PS2 ஆர்கனோ பாஸ்பேட்டு உப்பு. மாநிற நீர்மம். பெரும்பான்மையான கரிமச் சேர்மங்களில் கரைவது. கார ஊடகத்தில் நிலையற்றது. பாதுகாப்பான பூச்சிக் கொல்லி. (வேதி)
malic acid - மாலிக் காடி: நிறமற்ற படிகக் கார்பாக்சைலிகக் காடி. காடிக்கனிகளான கொடி முந்திரியிலும், கூஸ்பெரியிலும், ஆப்பிளிலும் உள்ளது. உயிரிச் செயலான கிரப்ஸ் சுழற்சியின் ஓர் இன்றியமையாப் பகுதி மெலெட் அயனி (உயி)
maligant - தீயுறு வளர்ச்சி, கட்டி: சில புதுக்கணியங்கள் . (நியோபிளாசம்ஸ்) மிகுதியாகப் பெருகுதல். இதை நிறுத்தத் தகுந்த மருத்துவமுறைகளை மேற்க்கொள்ள வேண்டும். இல்லை எனில் புற்றுநோயாகவல்லது. (உயி)
malleability - தகடாக்கல்: குறிபிடத்தக்க உலோகப் பண்புகளில் ஒன்று. (வேதி;
malleus - சுத்தி எலும்பு: நடுச் செவிச் சிற்றெலும்புகளில் முதல் சிற்றெலும்பு. பா. ear. (உயி) maltase - மால்டேஸ்: மால்டோ சைக் குளுகோசாக மாற்றுவது. ஈஸ்டு என்னும் ஓரணு உயிரியில் உள்ளது. (உயி)
maltose - மால்டோஸ்: இருமச் சர்க்கரை. முளைக்கும் தானிய விதைகளில் காணப்படுவது (உயி)
mammalia - பாலூட்டிகள்: முதுகுத்தண்டு விலங்குகள். குட்டி போட்டுப் பால்கொடுப் பவை. உடலில் மயிர் உண்டு. குறுக்குத்தசை இருப்பது சிறப்பு. உடல் வெப்பநிலை மாறா விலங்குகள். எ.டு. பசு, எருமை, மான், பாலூட்டிகளை ஆராயுந்துறை பாலூட்டிஇயல் (மம் மாலஜி) ஆகும். (உயி)
mammary glands - பால்சுரப்பிகள்: பாலை உண்டாக்கும் சுரப்பிகள். (உயி)
mandible - தாடை: முதுகெலும்புகளின் கீழ்த்தாடை அல்லது கணுக்காலியின் கடினத்தாடை (உயி)
manganese - மாங்கனீஸ்: Mn. சாம்பல்நிற வெண்ணிற உலோகம், கடினமானது. நொறுங்கக் கூடியது. இயற்கையில் ஆக்சைடு தாதுவாகக் கிடைப்பது உலோகக் கலவை செய்யப் பயன்படுவது. (வேதி)
manganese bronze - மாங்கனீஸ் வெண்கலம்: செம்பும் துத்தநாகமும் சேர்ந்த கலவை. கலவை எஃகுகளில் பயன்படுதல். மாங்கனீஸ் எஃகு (வேதி)
manganese dioxide - மாங்கனீஸ் ஈராக்சைடு: MnO2. நீரில் கரையா கறுப்புத்துள். வினை யூக்கி உலர் மின்கலத்தில் பயன் படல், சுண்ணாம்புத் தொழிலில் நிறம் நீக்கி (வேதி)
manganin-மங்னானின்: உலோகக் கலவை. செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்தது. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது. (வேதி)
mantid - தொழுபூச்சி: நீண்டும் மெலிந்தும் உள்ளது. ஊன் உண்பது. முட்கால்களினால் இரையைப் பிடிப்பது. இக்கால்களை வைத்திருக்கும் நிலை தொழுவது போல் இருக்கும். ஆகவே இப்பெயர். (உயி)
mantle - மூடகம்: மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது)
manure-எரு: உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப் பொருள். சாணம், தழை, புண்ணாக்கு முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்கள். பாஸ்பேட் முதலியன செயற்கை உரங்கள். (வேதி)
maragingsteel- புத்தெஃகு: புதிய தலைமுறையைச் சார்ந்தது. மீஉயர் வலுவுள்ளது. இரும்பு நிக்கல் அடிப்படையில் அமைந்தது. கரி மிகக் குறைவு. ஏவுகணை உயர்த்து உத்திகளை இலேசாக்கும். குறிப்பாக, ஏவுகணை உந்திஉறைகள் செய்யப் பயன்படுவது.(தொது)
margarine - மார்கரைன்: வெண்ணெய் மாற்று. நீர்வளி செலுத்திய எண்ணெய்களிலிருந்து பெறப்படுவது. (வேதி)
marine biology - கடல் உயிரியல்: கடல் உயிரிகளை ஆராயுந்துறை. கடல் உயிர் ஆராய்ச்சி நிலையம் பறங்கிப்பேட்டையில் உள்ளது. (உயி)
marine microbiology - கடல் நுண்ணுயிரியல்: கடல் நுண்ணுயிரிகளை ஆராயுத்துறை. (உயி)
manubrium - பிடியம்: 1. கைப்பிடி ஒத்த உறுப்பு 2. பாலூட்டிகளின் மார்பெலும்பின் முன்பகுதி. 3. மணிவடிவ உடலியின் (மெடுசா) தொங்கு வாய்ப்பகுதி 4. பாசி ஆணியத்தின் (ஆந்திரிடியம்) உட்சுவர்களிலுள்ள கழல் பகுதிகள் (உயி)
marble - சலவைக்கல்: கால்சியம் கார்பனேட்டின் கனிம வடிவம். சுண்ணாம்புக்கல்லிலிருந்து உண்டாவது, தளம் போடப் பயன்படுவது. (வேதி)
mariner's compass - மாலுமி திசைகாட்டி: இதிலுள்ள ஊசி எப்பொழுதும் வடக்கு தெற்கு நோக்கி இருக்கும். கப்பல்களில் பயன்படுவது. (இய)
marrow-சோறு: எலும்பின் மென்மையான கொழுப்புத்திக குருதியணுக்கள் உண்டாவது. (உயி)
marsh gas - சதுப்புனிலவளி: இதிலுள்ள முதன்மையான வளிப்பொருள் மீத்தேன். சிதையுந் தாவரப் பொருளிலிருந்து உண்டாவது (வேதி)
marsupial-மதலைப்பை விலங்கு. பா. kangaroo. (உயி)
Mars - செவ்வாய்: தன் சுற்றுவழி யைப் புவிக்கும் வியாழனுக்குமிடையில் கொண்ட கோள். இரு நிலாக்கள் உண்டு. அமெரிக்க, சோவியத்துக் கோள் நிலாக்கள் இதனை நன்கு ஆராய் ந்துள்ளன. (வானி)
maser - மேசர்: தூண்டு கதிர்வீச்சு உமிழ்வால் நுண்ணலையைப் பெருக்கல், இலேசர் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். ஒருங்கிணைந்த நுண்ணலைக் கதிர்வீச்சை உண்டாக்குங் கருவியமைப்பு. இலேசர் போன்று இயங்குவது. பா. laser (இய)
mass - பொருண்மை, நிறை: ஒரு பொருளிலுள்ள அணுக்களின் தொகுதி. இது எங்கும் ஒரே அளவு இருக்கும். ஒரு பொருளின் மீது ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவே எடை இது இடத்திற்கிடம் மாறுபடும். வான வெளியில் சுழி ஈர்ப்புநிலை இருப்பதால், எடையே இராது, ஏவுகனை இயங்கும்பொழுது முடுக்கம் அதிகமாவதால் எடை மிகும். (இய)
mass defect-பொருண்மை வேறுபாடு: உட்கரு பொருண்மைக்கும் அதன் ஆக்க உட்கருவன்களின் (நியூக்ளியான்கள்) பொருண் மைத் தொகைக்குமுள்ள வேறு பாடு (இய)
mass flow - பொருள் ஓட்டம்: முஞ்ச் என்பவரால் 1930ல் முன் மொழியப்பட்ட கருதுகோள். பட்டைத் திசுவின் கடத்துஞ்செயலின் விசை நுட்பத்தை விளக்குவது. (உயி)
mass spectometer - பெருண்மை நிறமானி: தகுந்த காந்தப் புலத்தையும் மின்காந்த புலத்தையும் உண்டாக்கி, அயனிக்கற்றைகளின் பொருண்மை நிறவரைவைப் பெறுங்கருவி. (இய)
mass spectrum - பெருண்மை நிறமாலை: பொருண்மை நிற வரைவி, பொருண்மை நிறமானி ஆகிய இரண்டு கருவிகளாலும் பெறப்படும் நிறமாலை, பொருண்மைத் தகவு ஏற்ற உணர்வுக் கேற்ப, அயனிக்கற்றை அமைக்கப்படும். (இய)
mass media - மக்கள் ஊடகங்கள்: மக்கள் தகவல் கருவிகள். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி. (தொது)
mastication-அசைபோடுடல்: chewing the gud (உயி)
materials science - ஆக்கு பொருள் அறிவியல்: பொறியியலில் கட்டுமானப் பொருள்களைப் பற்றி ஆராயும் துறை.
mathematical models - கணித மாதிரிகள்: உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய துறைகளிலிருந்து அறிவைப் பெற்று, உண்மையை அளவிட இவை உதவுதல். இவற்றின் பயன்களாய் வந்தவை பின்வருமாறு சார்புக் கொள்கை, புள்ளி விளக்க மதிப்பீடு, மக்கட்தொகை வளர்ச்சி மாதிரிகள், மரபணுவியல், அண்மையில் உயிரியலிலும் சூழ்நிலை இயல் தொடர்பாக பயனுள்ள மாதிரிகள் உருவாகியுள்ளன (ப.து)
mathematics - கண்க்கு: கணிதம். எண், எண் மதிப்பு ஆகியவை பற்றியும் அவற்றின் எல்லாத் தொடர்புகளையும் ஆராயுந்துறை. தாய் அறிவியல், இதன் பெரும்பான்மைப் பிரிவுகளாவன. 1. இயற்கணிதம் (அல்ஜிப்ரா) 2. நுண்கணிதம் (கால்குலஸ்) 3. வடி வக்கணிதம் (ஜியாமட்ரி).
mathsscience - கணக்கு அறிவியல்: அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத்துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணிதமேதை இராமானுஜத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.
mating - கலப்பு: ஆண் பெண் ஆகிய இரு உயிர்களுக்கிடையே ஏற்படும் புணர்ச்சி. (உயி)
mating strain-கலப்புத்தோரிணி: ஒருவகை உயிர்த்தொகுதி.
matrix அணியம்: 1. உயிரணு இடைப்பொருள். இதில் விலங் கணுக்கள் பதிந்துள்ளன. 2. தொடர்ச்சியான திண்ம நிலை. இதில் வேறுபட்ட திண்ம நிலைத்துகள்கள் உள்ளன. 3. அணி.
matte - உருக்கு: தாமிரத்தாதுக்களை உருக்கும்பொழுது, இடை நிலையில் கிடைக்கும்பொருள். இரும்பு, செம்பு ஆகியவற்றின் சல்பைடுகள் சேர்ந்த கலவை. (வேதி)
matter - 1. பருப்பொருள்: இடத்தை அடைத்துக் கொள்வதும் நிறையும் உள்ளதே பருப்பொருள். கண்ணால் பார்க்கக் கூடியது. பா. abstract 2. செய்தி. (ப.து)
maxillae - மேல்தாடை எலும்புகள்: ஓரிணை எலும்புகள் பாலுட்டிகளின் மேல்தாடையில் உள்ளவை. இதில் பற்கள் பொருந்தியுள்ளன. 2. பூச்சிகளில் வாய்ப் பகுதிகளின் மேல் தாடைகள் (துருவுதாடைகள், மென்தாடைகள் (உயி)
maximum and minimum thermometer-பெரும சிறும வெப்ப நிலைமானி: உயர்வெப்ப நிலையையும் தாழ்வெப்ப நிலையையும் பதிவு செய்யுங் கருவி. இவ்வெப்பநிலைகள் ஒரே நாளில் ஏற்படுபவை. (இய)
Maxwell's cork screw rule - மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி: இது காந்த விதிகளில் ஒன்று. கண்டறிந்தவர் மாக்ஸ் வெல். கடத்தியில் மின்னோட்டம் எத் திசையிலுள்ளதோ, அத்திசையில் ஒரு வலஞ்சுழி தக்கைத் திருகைப் பயன்படுத்தித் திருகுவதாகக் கற்பனை செய்து கொள்க. அப்பொழுது கையின் கட்டைவிரல் எத்திசையில் திரும் புகிறதோ அத்திசையில் தான் காந்த விசைக்கோடுகள் அமையும். (இய)
maze-சிக்கலறை: கற்றல் நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படும் சிக்கலான அமைப்புள்ள அறை (உயி)
measles - தட்டம்மை: குழந்தை களுக்கு வரும் தொற்றுநோய். நீர்க்கொள்ளல் தொண்டைக் கரகரப்பு, இருமல், வெப்பநிலை உயர்வு முதலியவை அறிகுறிகள். உடலில் தடிப்புகள் ஏற்படும். அடைகாலம் 12 நாட்கள் (உயி)
meat - இறைச்சி: ஊன் உணவு. புரத ஊட்டம் மிகுந்தது. ஆட்டிறைச்சி அதிகம் பயன்படுவது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அதற்கு அடுத்தாற் போல் பயன்படுபவை. (உயி)
meatus-குழல்: உடலிலுள்ள வழி. எ-டு புறச்செவிக் குழல் (உயி)
mechanic - விசைப்பொறியர்: பொறிகளின் விசைநுட்பத்தை (பொறியத்தை) அறிந்து கையாள்பவர். (இய)
mechanics- விசைப்பொறி இயல்: எந்திரவியல், இயற்பியலின் ஒரு பிரிவு. பொருள்கள் விசைக்குட்படும் பொழுது அவற்றின் நடத்தையை ஆராயுந்துறை. (இய)
mechanism - விசைப்பொறியம்: 1. விசைநுட்பம். 2. படிமுறை விளக்கம் ஒரு வேதிவினையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் படிப் படியாகக் கூறுதல் (ப.து.)
media persons - மக்கள் ஊடகத்தார்: செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றிற்காகச் செய்தி சேகரிப்பவர்கள். (தொ.து)
medium - ஊடகம்: பொதுவாக, ஒளி ஊடுருவிச் செல்லும் பொருள். இது அடர்மிகு ஊடகம் (முப்பட்டகம், நீர், கண்ணாடிவில்லை), அடர்குறை ஊடகம் (காற்று, வெற்றிடம்) என இருவகைப்படும். இது பொருளின் மூன்று நிலைகளிலும் இருக்கலாம். சிலர் வெற்றிடத்தை ஊடகமாகக் கருதுவதில்லை. 2. வளர்ப்புக்கரைசலும் ஊடகமே. (இய)
medulla-1. சோறு: ஓர் உறுப்பின் உட்பகுதி, 2. அகணி: சிறுநீரகத்தின் உட்பகுதி (உயி)
medulla oblongata - முகுளம்: அடிமூளைப் பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டப்படுத்துவது. தண்டுவடத்தோடு தொடர்வது. பல மூளை நரம்புகள் இதிலிருந்து கிளம்புகின்றன. பா. brain. (உயி)
medusa - மணி(உட)லி: குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நடைபெறுவது. ஒ. Polyp. (உயி)
megahertz - மெகாஹெர்ட்ஸ்: mHz ஒரு மில்லியன் ஹெர்ட்ஸ் அதிர்வெண் அளவு. இது 10°சுற்றுகளுக்குச் சமம். (இய)
mega (macro) phyll - பேரிலை: இலைப்பரப்பில் நரம்புகள் கிளைத்த தொகுதியுள்ள தழைப் பிலை. பெரணிகள், உறையில் விதையுள்ள தாவரங்கள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றிற்கே உரியது. பா. frond. (உயி)
meganucleus - பெருவுட்கரு: பா. paramecium, macronucleus. (உயி)
megasporangium - பெருஞ்சிதலகம்: பெருஞ்சிதல்களை உண்டாக்கும் உறுப்பு. எ.டு. செலாஜினல்லா. (உயி)
megaspore - பெருஞ்சிதல்: பெரணிகளிலும் விதைத் தாவரங் களிலும் காணப்படுவது. இவற்றி லுள்ள இருவகைச் சிதல்களில் இது பெரியது. பெண் பாலணுப் பயிரை உண்டாக்குவது. (உயி)
megasporophyll - பெருஞ்சிதல் இலை: மாறிய இலை, பெருஞ் சிதலகத்தைத் தாங்குவது. எ-டு. செலாஜினல்லா.
megaton bomb - மெகாடன் குண்டு: அனுப்போர்க்கருவி. வெடிதிறன் 4 x 1015 ஜூல்களுக்கு இணையானது. (ஒரு மில்லியன் டன் டிஎன்டி) (இய)
megger - காப்பறிமானி: இது மின்காப்புப் பொருளின் தன்மையை ஆராயப் பயன்படுவது. இதில் ஒர் ஒம் மானியும் கையடக்க மின்னியக்கியும் உள்ளன. இயக்கி உண்டாக்கும் மின்சாரத்தைக் கொண்டு மின்தடையின் அளவை ஓம்மானியின் மூலம் அளக்கலாம். இதனால் காப்பிடல் போதுமானதா என்பதை அறியலாம். பழுதடைந்த மின்காப்புகளைக் கண்டறியவும் இக்கருவி பயன்படுவது. (இய)
megohm - மெகாஓம்: ஒரு மில்லியன் ஓம். (இய)
meiosis - குன்றல் பிரிவு: கண்ணறைப்பிரிவில் ஒருவகை. இதில் நிறப்புரிகள் இரும நிலையிலிருந்து (2n) ஒருமநிலைக்கு (n) குறைக்கப் படுகின்றன. பா. mitosis.
melting - உருகல்: வெப்பம் அல்லது அழுத்தத்தினால் திண்மம் நீர்மமாதல். உருகுநிலை என்பது திண்ணமமும் நீர்மமும் இணைந்திருக்கும் வெப்பநிலை. (இய)
membrane - படலம்: கண்ணறை, உறுப்பு முதலியவற்றைச் சூழ்ந்துள்ள திசு. ஒரு சில பொருள்களையே ஊடுருவ விடும். எ.டு. கண்ணறைப்படலம், கணிமப் படலம் (உயி)
membrane bone - படல எலும்பு: இணைப்புத்திகவால் உண்டாவது குருத்தெலும்பு பங்கு பெறுவதில்லை. (உயி)
memory - 1. நினைவாற்றல்: பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவில் இருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். (உயி) 2. நினைவகம்: தகவல் சேமிக்கப்படும் கணிப்பொறிப் பகுதி.
mendelevium - மெண்டலிவியம்: Md. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.
Mendelism - மெண்டலியம்: கால் வழி பற்றி ஜோகன் கிரிகார் மெண்டல் (1822-84) முன்மொழிந்த விதிகள் கொண்டது. அவை பிரிதல் விதியும் ஒதுக்கல் விதியும் ஆகும். (உயி)
Mendel's laws - மெண்டல் விதிகள்: 1. பிரிதல் விதி (லா ஆஃப் செக்ரிகேஷன்) எப்பண்பும் இரு காரணிகளாகவே உள்ளது. இக்காரணிகள் இரண்டும் உடல கண்ணறைகளில் அமைந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே ஏதாவது ஒருபாலணுவுக்குச் செல்வது. 2. ஒதுக்கல் விதி (லா ஆஃப் இண்டிபெண்டண்ட் அசார்ட்மெண்ட்) இக்காரணிகளின் பரவல், வரம்பிலா முறையில் உள்ளது. காரணி இணைகள் பலவற்றைக் கருதும்பொழுது, ஒவ்வொரு இணையும் தனித்துப் பிரிவது அல்லது ஒதுங்குவது. மெண்டலின் பண்புகள் தற்காலத்தில் மரபணுக்கள் என்று கூறப்பெறுகின்றன.
meninges - முப்படலங்கள்: மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள். அவை யாவன.
- சிலந்திப்படலம் (அரக்னாய்டு)
- வன்படலம் (டியுராமேட்டர்)
- இளம்படலம் (பயாமேட்டர்)
meningitis - முப்படல் அழற்சி: முப்படல வீக்கம். நினைவுக் குலைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள். (உயி)
meniscus - பிறைத்தலம்: பரப்பு இழுவிசையால் ஒரு குழாயிலுள்ள நீர்மத்தில் தோன்றும் குழி அல்லது குவி வடிவ மேற்பரப்பு. நீருக்குக் கீழமைந்தும் பாதரசத்திற்கு மேலமைந்தும் இத்தலமிருக்கும். (இய)
menopause - விலக்கு நிற்றல்: 40 வயதில் பெண்களிடம் வீட்டு விலக்கு ஓய்தல். (மரு)
mensuration - வடிவ அளவியல்: அளவுகளைப் பற்றி ஆராய்தல். அதாவது, பொருள்களின் நீளம், பரப்பு, பருமன் முதலியவற்றை அளவையினாலும் கணக்கீட்டினாலும் காணல். (இய)
mental hygiene - உளநலனியல்: தசைக்கேடுகளை நீக்கி உளப் போராட்டங்களைத் தவிர்க்க உதவும் செயல்முறைகளை ஆராயும் நடைமுறை உளவியல் பிரிவு. (உயி)
mercury - பாதரசம்: Hg, வெண்ணிறம். நீர்மம் நிலையில் உள்ள ஒரே கனஉலோகம். இங்குலிகத் தாதுவிலிருந்து கிடைப்பது. பளுமானி, அழுத்தமானி, வெப்ப நிலைமாணி ஆகியவற்றில் நிரப்பும் நீர்மம். பல்மருத்துவத்தில் பயன்படுதல், புற ஊதாக் கதிரின் மூலமாகும். (வேதி)
Mercury - புதன்: கதிரவன் குடும்பப் பெருங்கோள்களில் சிறியது. அமெரிக்க மெரைனர். 10 இதனை நன்கு ஆராய்ந்துள்ளது. (வானி)
mercury lamp - பாதரச விளக்கு: குமிழிலுள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீலநிற ஒளியைத் தரும் விளக்கு புற ஊதாக்கதிர்வீச்சு நிறைந்த ஒளி. மருத்துவத்தில் பயன்படல். ஆவி விளக்கு (இய)
mericarp - பகுதிக்கனி: கனியின் ஒருவிதப் பகுதி. பல்பிளவுறு கனியில் காணப் படுவது. எ-டு: கொத்துமல்லி, பா. fruit. (உயி)
meridian - மையவரை: புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெருவட்டம். (பு.அறி) meridian, first - முதல் மையவரை: கிழக்கு அல்லது மேற்காக அளக்கப்பெறும் நடுவரைக் கோடு (கிரீன்விச்சு வழியாக) (பு.அறி)
meristem - வளர்திசு: இதனை ஆக்கத்திசு என்றும் கூறலாம். இதிலுள்ள அணுக்கள் பிரிந்து வளர்ச்சியை உண்டாக்குபவை. ஆகவே, இத்திசுவைப் பிரிதிசு என்றும் கூறலாம். இத்திசு உயரினத் தாவரங்களின் தண்டு முனையிலும் வேர்முனையிலும் காணப்படுவது. தாவர உடலில் இருக்கும் நிலைக்கேற்ப, இத்திசு மூன்று வகைப்படும். 1. நுனி வளர்திசு (ஏபிகல்மெரிஸ்டம்) 2. இடைபொருந்து வளர்திசு (இண்டர்கேலரி மெரிஸ்டம்) 3. பக்க வளர்திசு (லேட்டரல் மெரிஸ்டம்) (உயி)
mesentry - நடுமடிப்பு: 1. மெல்லிய ஒளிபுகும் படல மடிப்பு. உடற் சுவரோடு பல உறுப்புகளையும் இணைப்பது. 2. கடல் சாமந்திகளின் குழிக்குடல் செங்குத்துத் தடுப்புகளில் ஒன்று. (உயி)
mesocarp - நடுவுறை: தாவரக்கனியிலுள்ள சுற்றுறையின் நடுவடுக்கு புறவுறைக்கும் உள்ளுறைக்கும் இடையே உள்ளது. எ-டு. தக்காளி, கொய்யா. பா. fruit (உயி)
mesoderm - நடுப்படை: கருப்படை. இதிலிருந்து தசைகள், இணைப்புத்திசு, குருதி முதலியவை உண்டாகின்றன. (உயி)
meson - நடுவன்: நடுவணு. அடிப்படைத்துகள். மின்னணுவை விடப் பொருண்மை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டைவிட இலேசானது. உட்கருவன், உட்கரு ஆகியவற்றிற்கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது. பா. elementary particles. (இய)
mesophyll - நடுத்திசு: இலையின் மேற்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையிலுள்ளது. வேலிக்கால் திசு, பஞ்சத்திசு. வளரியம் என்னும் மூன்றுவகைத் திசுக்களைக் கொண்டது. இத் திசுவில் பசுங்கணிகங்கள் நிறைய உண்டு. (உயி)
mesophytes - நடுநிலைவாழ்விகள்: வள நிலத் தாவரங்கள். இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு செம்மையாக இருக்கும். வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. விலங்கு வாழ்விக்கும் நீர்வாழ்விக்கும் இடைப்பட்டவை, எ-டு பூவரசு, ஆல் (உயி)
mesozoa - நடுநிலை உயிரிகள்: நுண்ணிய உயிரினங்கள். புரோட்டோசோவா, மெட்டசோவா ஆகிய இரண்டிற்குமிடையே உள்ளதாகக் கருதப்படுபவை. (உயி)
mesozoic - நடுவூழி: புவிவளரியல் பெருங்காலங்களில் ஒன்று. 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது ஊர்வன காலம் எனப்படும். (பு.அறி) metabolism - வளர்சிதைமாற்றம்: ஓர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம், சிதைமாற்றம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. வளர்மாற்றம் ஆக்கநிலை கொண்டது. உணவு தன்வயமாகித் திசு வளர்தல் எடுத்துக்காட்டு, சிதைமாற்றம் அழிவு நிலை. உயிர்வளி ஏற்றம் திசுக்களில் நடைபெறுவதால், ஆற்றல் உண்டாதல் எடுத்துக் காட்டு. வளர்சிதை மாற்றத்தில் உட்படும் பொருள் வளர்சிதை மாறி (மெட்டபோலைட்) ஆகும். இது வினைப்படு பொருளாகவோ விளை பொருளாகவோ இருக்கும். (உயி)
metacarpals - அங்கை எலும்புகள்: மணிக்கட்டோடு விரல்களை இணைக்கும் கையின் 5 எலும்புகள். (உயி)
metacarpus - அங்கை: உள்ளங்கை எலும்புகள் கொண்டது. (உயி)
metal composites - உலோகத் தொகுவைகள்: இவை கலவைகள். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்கள் வார்ப்பியப் பொருளில் இருக்கும். துத்தநாகம், காரீயம், அலுமினியம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை உருவாக்கப்படடுள்ளன. (1993)
metalloid - உலோகப்போலி: உலோகப் பண்பையும் அலோகப் பண்பையும் பெற்றிருப்பவை. எ-டு. சவ்வீரம், அண்டிமணி, டெல்லூரியம். (வேதி)
metallurgy - உலோகவியல்: தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயுந்துறை. (வேதி)
metamorphosis - வளர்உரு மாற்றம்: முட்டைப் பருவத்திலிருந்து (வெளிவந்த வேற்றிளரியிலிருந்து) முதிர்ச்சிப் பருவத்திற்கு முன்வரை நடைபெறும் மாற்றங்கள் இதில் அடங்கும். எ-டு. தலைப்பிரட்டை தவளையாதல், கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாதல். (உயி)
'metaphase - நடுநிலை: இழைப் பிரிவு அல்லது குன்றல் பிரிவில் நிறப்புரிகள் கதிரின் நடுக்கோட்டுத் தளத்தில் அமைதல். உயிரணுப்பிரிவில் இரண்டாம் நிலை. (உயி)
metazoa - மெட்டாசோவா: பின் தோன்றிகள். பல்கண்ணறை (செல்) விலங்குகள். உடல் பல கண்ணறைகளாலானது. புரோட்டோசோவா (முதல் தோன்றிகள்) பாராசோவா (இணைப்புத் தோன்றிகள்) கடற்பஞ்சுகள் நீங்கலாக ஏனைய எல்லா விலங்குகளையும் இவ்வுள்ளினம் கொண்டது. (உயி)
meteor - விண்கொள்ளி: விண்ணிலிருந்து ஒளிர்வுடன் விழும் பொருள். தரையில் விழும் பொழுது விண்கல்லாக மாறுவது. வானவெளிப்பயணத்திற்குத் தடையாக இருப்பது. (வான்)
meteorology - வானிலை இயல்: வானிலை பற்றி ஆராயுந்துறை. செயற்கைக் கோள்களால் நன்கு வளர்ந்துள்ளது. (பு.அறி)
meteorological satellites - வானிலை நிலாக்கள்: வானிலைத் தொடர்பாகச் செய்திகளைத் திரட்ட ஏவப்படும் நிலாக்கள். எ-டு டிராஸ், அமெரிக்கர் அதிகம் ஏவியுள்ளவை. (பு.அறி)
methane - மீத்தேன்: CH4. நிறமற்றதும் மணமற்றதுமான நஞ்சிலா வளி, எண்ணெய்க் கிணறு வளிகளில் உள்ளது. நீர்வளி, மீத்தைல் குளோரைடு முதலிய பொருள்கள் உண்டாக்கப் பயன்படுதல். (வேதி)
methyl alcohol - மீத்தைல் ஆல்ககால்:(CH3OH). வேறு பெயர் மெத்தனால், மர ஆல்ககால், நிறமற்ற நீர்ம ஆல்ககால். கரைப்பான். மெத்தனால் தயாரிக்க, மெத்தனால் பிளாஸ்டிக் மற்றும் மருந்து தயாரிப்பதில் பயன்படுதல். (வேதி)
methylated spirit - மெதிலேறு சாராயம்: மெத்தனால் சேர்ந்த ஈத்தைல் ஆல்ககால். எரிபொருள். (வேதி)
methyl orange - மீத்தைல் (ஆரஞ்சு) கிச்சிலி: காடிச்சாயம். டைய சோனிய உப்புசேர்ந்த சல்பானிலிகக் காடியையும் இரு மீத்தைல் அனிலைனையும் சேர்த்துப் பெறலாம். பட்டுச் சாயமேற்றவும் காடி காரத் தகுதி பார்த்தலில் நிலைக்காட்டியாகவும் பயன்படல். (வேதி)
methyl red - மீத்தைல் (ரெட்) சிவப்பு: காடிச்சாயம். இரு மீத்தைல் அனிலைனுடனும் டையசோனியம் உப்பு கொண்ட ஒ-அமினோ பென்சாயிகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். காடி காரத் தகுதி பார்த்தலில் நிலைக்காட்டி (வேதி)
metric system - மெட்ரிக் முறை: 10இன் மடங்கு அடிப்படையில் அமைந்த அளவுகள் எடைகள் ஆகியவற்றின் பதின்மை (தசம) முறை. உலகம் முழுவதும் பயன்படுவது.
mica - காக்கைப்பொன்: அப்பிரகம், ஒரு கனிமம். நீட்சியுடையது. ஒளி ஊடுருவக்கூடியது. பல வண்ணங்கள் உண்டு. மின்காப்புப் பொருள்களாக, கண்ணாடி மாற்றுப் பொருள்களாக பயன்படுதல். இதை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. பீகார், ஒரிசா, மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. (வேதி)
micro-analysis - நுண்பகுப்பு: நுண்ணிய அளவுகளின் வேதிப் பகுப்பு. (வேதி)
microbe - நுண்ணுயிரி: வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது. எ-டு. அமீபா, குச்சியங்கள் (பாக்டிரியங்கள்). (உயி)
microbiology - நுண்ணுயிரியல்: நுண்ணிய உயிர்களை ஆராயும் துறை. நச்சியம் (வைரஸ்) குச்சியங்கள் (பாக்டிரியா) முதலியவை நுண்ணுயிரிகள். உயிரியலின் ஒரு பிரிவு. (உயி)
microbody - நுண்பொருள்: கண்ணறைக் கணிய உறுப்பு. முட்டை வடிவில் இருப்பது படலத்தால் சூழப்பட்டது. பல நொதிகளைக் கொண்டது. அகக்கணிய வலையிலிருந்து உண்டாவது (உயி)
microchemistry - நுண் வேதியியல்: நுண்ணிய வேதிப் பொருள்களை ஆராயுந்துறை. வேதியியலின் ஒரு பிரிவு. (வேதி)
microdissection - நுண்பிளப்பு: உட்கரு முதலிய நுண்பொருள்களை நுண்ணோக்கியில் பிளக் கும் நுணுக்கம். (உயி)
microelectronics - நுண் மின்னணுவியல்: சிலிகான் நறுவல்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் பற்றி ஆராயுந்துறை. இவற்றில் அரிய மின்சுற்றுகள் உண்டாக்கப்படுகின்றன. இச் சுற்றுகள் பல ஆயிரக்கணக்கான பகுதிகளைக் கொண்டவை. மனித வாழ்க்கையில் அதிக அளவு புரட்சியை உண்டாக்கி வருவது. (இய)
micrometer - நுண்மானி: திருகுமாணி. சிறிய குறுக்களவுகள், தடிமன் முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. பா. screw gauge (இய)
micro-miniaturization - மீநுண்ணியதாக்கல்: கருவிகளைச் சிறிதாக்கலுக்கு அடுத்த நிலை. இது இயலுமா என்பது ஆராய்ச் சியில் உள்ளது. (ஜப்பான்). இதற்கு ஒளியனியல் விடை காணும். (தொ.து)
micronucleus - நுண்உட்கரு: குற்றிழை உயிரிகளில் இரு உட்கருக்கள் உண்டு. ஒன்று பெரு உட்கரு. மற்றொன்று சிறு உட்கரு. எ.டு. பரமேசியம். (உயி)
micronutrients - நுண்ஊட்டப் பொருள்கள்: நுண்ணிய அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படும் சத்துப்பொருள்கள். (உயி)
micro-organisms, microbes - நுண்ணியிரிகள்: நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள். (உயி)
microphone - நுண்ணொலிப்பி: ஒலியலைகளை மின்னோட்டமாக மாற்றும் கருவி. (இய)
microphotograph - நுண்ஒளிப் படம்: நுண்ணோக்கி மூலம் எடுக்கப்படும் படம். (உயி)
microphyl - நுண்ணிலை: ஒரு செழிப்பிலை. கிளைக்கா ஒற்றை நரம்புடையது. அடியிலிருந்து முனை வரை செல்லும். எ-டு. குதிரை வாலிகள். ஒ. megaphyl. (உயி)
micropyle - நுண்துளை: சூல்துளை. சூல்திசுவிற்குள் செல்லும் துளை. விதையில் இருக்கும் பொழுது விதைத்துளை. (உயி)
microscope - நுண்ணோக்கி: சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவில்லை என இரு குவி வில்லைகளைக் கொண்டது. பெருக்குந்திறன் அதிகம். 3. மின்னணு நுண் ணோக்கி: ஒரு போக்குக் கற்றை மின்னணுக்களைப் பயன்படுத்துவது. உருப்பெருக்கம் 2,50,000 தடவைகள். இது கண்டுபிடிக்கப்பட்ட பின் அறிவியலின் பல துறைகளும் குறிப்பாக உயிரியல் விரைவாக வளர்ந்தன. 4. புற ஊதாக்கதிர் நுண்ணோக்கி: புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தப் படுகின்றன. படிக வில்லைகள் பயன்படுதல். ஒளிப்பட முறையில் உருப்பதிவு செய்யப்படுகிறது. உருப்பெருக்கம் 1,500 தடவைகள்.
microsomes-நுண்புரிகள்:கோல் கை உறுப்பு. அகக்கணிய வலைப் பின்னல் ஆகியவற்றின் துண்டுகள். (உயி)
microsporangium - நுண்சிதலகம்: பெரணித் தாவரங்களிலுள்ள சிதலியம், நுண்சிதல்களை உண்டாக்குவது. இது நுண்சிதல் இலையில் உள்ளது. எ.டு. செலாஜினெல்லா (உயி)
microspore-நுண்சிதல்: வேற்றகச் சிதல் தாவரங்களில் குன்றல் பிரிவுக்குப்பின் இரு சிதல்கள் தோன்றுகின்றன. ஒன்று பெருஞ்சிதல், மற்றொன்று நுண்சிதல் அல்லது சிறுசிதல்
micro sporophyll - நுண்சிதல் இலை: மாற்றுரு பெற்ற இலை, இதில் நுண்சிதலகம் இருக்கும். தனி நுண்சிதல் இலைகள் என்பவை உறையில் விதையில்லாத் தாவரங்களின் ஆண் கூம்புகளிலும் லைக்கோபாடுகளின் செழிப்பான ஒளிச்சேர்க்கை இலைகளிலும் காணப்படும் செதில்களே. உறையில் விதையுள்ள தாவரங்களின் மகரந்தத் தாள்கள் மாற்றுரு பெற்ற நுண்சிதல் இலையே. பா.
microtome - நுண்வெட்டி: நுண்ணாய்விற்காக இலை, திசு தண்டு முதலிய பகுதிகளை மெல்லிய சீவல்களாக வெட்டுங்கருவி. உயிரியல், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுவது. (உயி)
microvilli - நுண்விரலிகள் : கணிமப் படலத்தின் நீண்டதும் நொய்ந்ததுமான நீட்சிகள் சுரப்பணுக்களிலும் உறிஞ்சணுக் களிலும் காணப்படுபவை. (உயி)
microwaves - நுண்ணலைகள்: கம்பியிலாத் தொடர்பில் பயன்படும் மிகக் குறுகிய அலைகள். வெளிநாட்டு ஒலிபரப்புக்கு மட்டும் பயன்படுபவை. (இய )
mid brain, mesencephalon - நடுமூளை மூளையின் மூன்று அடிப்படைப் பிரிவுகளில் ஒன்று. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது. ஒ. fore brain, hind brain (உயி) middle ear - நடுச்செவி: பறைக்குழி, மண்டை ஓட்டில் நீர் நிரம்பிய குழி, புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ளது. தொண்டையின் பின்புறத்தோடு செவிக் குழலினால் இணைக்கப்பட்டுள்ளது. பா. ear. (உயி)
midgut - நடுக்குடல்: கணுக்காலி, முதுகெலும்பிகள் ஆகியவற்றின் உணவுக் குழலின் மையப்பகுதி. உணவு செரிப்பதற்கும் உறிஞ்சப்படுவதற்கும் காரணம் (உயி)
midrib - நடுநரம்பு: இலையின் நடுவே உள்ளது. இலைப்பரப்பில் பலகிளை நரம்புகளை உண்டாக்குவது. இந்நரம்பமைப்பினால் பல இலை வகைகள் உண்டாதல்.(உயி)
migration-பருவ இடப்பெயர்ச்சி: பருவத்திற்கேற்ப விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல். (உயி)
milk- பால்: நிறை உணவு. வெண்ணெய், நெய் முதலிய பொருள்களைக் கொடுப்பது. பால் பண்ணை. பொருள் வளமிக்க தொழிலாகும். (உயி)
milk sugar - பால்சர்க்கரை: லேக்டோஸ், (உயி)
milk teeth - பால்பற்கள்:குழந்தைகளின் விழும் பற்கள். (உயி)
milk of lime - சுண்ணாம்புநீர்: (வேதி)
milk of magnesia - மக்னீசியப்பால்: மக்னீசியம் அய்டிராக்சைடு. இது நீரில் கரைந்து பால் வெள்ளைத் தொங்கலை உண்டாக்குவது பேதி மருந்து. (வேதி)
milkyway - பால்வழி: விண்ணை இருட்டில் நோக்க, அடர்ந்த விண்மீன் வட்டங்கள் வடக்கிருந்து தெற்காக ஒளிக்கற்றை போல் தெரியும். இதுவே பால்வழி. இதில் பலஇலட்சக் கணக்கில் விண்மீன்கள் உள்ளன. (இய)
millerite - மில்லிரைட்டு: நிக்கல் சல்பைடு. மஞ்சள் நிறமுள்ள உலோகத்தாது. இங்கிலாந்து கனிமவியலார் மில்லர் பெயரால் அமைந்தது. (வேதி)
millimicron-மில்லிமைக்ரான்: பா.nanometre. (இய)
millipede - மரவட்டை: பயிருண்ணி, உருளை வடிவ உடல். தலையில் ஓரிணை உணரிகள். உடல் பல வட்டுக்களாலானது. முதல் மூன்று வட்டுகளைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை. காற்றுக் குழாய்கள் மூலம் மூச்சுவிடுதல். (உயி)
Millon's reagemt-மில்லன் வினையாக்கி: நைட்டிரிகக்காடி பாதரசம், நீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை. புரதத்தைக் கண்டறியப் பயன்படுவது.இவ்வினையாக்கியை ஆய்ந்து பார்க்க வேண்டிய பொருளோடு வெப்பப்படுத்தப்படும் பொழுது செங்கல் சிவப்பு நிற வீழ்படிவு உண்டாகும். இதுவே புரதத்திற்கு ஆய்வு (உயி)
milt - விந்து: ஆண்மீனின் விந்து நீர்மம் (உயி)
mimicry-தகைவுப்போலி: உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்கற்ற விலங்குகள் தீங்குள்ள விலங்குகளை ஒத்திருத்தல். ஓலைப்பாம்பு உறுப்பிலும் நிறத்திலும் விரியனை ஒத்திருத்தல், சாரைப்பாம்பு நல்லபாம்பு போல் சீறுதல். இது தகைவின் ஒரு பகுதியே. (உயி)
minerl- கனிமம்: இயற்கையில் கிடைக்கும் தாது. சிறப்பு வேதித்தன்மை கொண்டது. படிக அமைப்புடையது. எ-டு. சிட்ரைட் கனிமங்களை ஆராயுந்துறை, கனிமவியல். (மினராலஜி) (வேதி)
mineral oil - கனிம எண்ணெய்: கனிமத்தோற்றத்தையும் அய்டிரோ கார்பன் கலவையையுங்கொண்ட எண்ணெய். எ-டு. மண்ணெண்ணெய். (வேதி)
mineralisation - கனிம வயமாதல்: மட்கு என்பது நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படும் கரிமப் பொருள்களைக் கொண்டது. இறுதியாக, இவை எல்லாம் கார்பன் டை ஆக்சைடு, நீர், கனிமங்கள் என்னும் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியே கனிமவயமாதலாகும். (வேதி)
Mir - மிர்: 1986இல் ஏவிய மிகப் பெரியதும் நுட்பம் வாய்ந்ததுமான ரஷ்ய வான வெளி நிலையம், இன்னும் வானவெளியில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இதில் அமெரிக்கா, உருசியா ஆகிய இருநாடுகளும் கூட்டாகப் பல சிறந்த ஆய்வுகளை நடத்தியுள்ளன. (வா.வெ)
mirrage - கானல்நீர்: காற்றடுக்கு அடர்த்தி வேறுபாட்டினால், ஒளிவிலகல் வழி, முழு அகமறிப்பு மூலம் நடைபெறும் நிகழ்ச்சி வெயில்காலத்தில் மணற்பரப்பைப் பார்க்கும் போதும் தார் சாலையைப் பார்க்கும் போதும் நீர் ஓடுவது போல் காட்சியளிக்கும். (இய)
mirror-ஆடி: ஒழுங்கான மறிக்கும் பரப்பை உடையது. இருவகைப்படும். 1. சமதள ஆடி மறிக்கும் பரப்பு சமதளம். முகம் பார்க்கும் கண்ணாடி, 2. கோள ஆடி: மறிக்கும் பரப்பு வளைவாக இருத்தல். இது மேலும் இருவகைப்படும். 1. குவியாடி மறிக்கும் பரப்பு குவிந்திருத்தல், இதில் எப்பொழுதும் பொய்யுரு விழும். உந்து வண்டியில் ஒட்டுநருக்கு முன் இருப்பது. 2. குழியாடி: மறிக்கும் பரப்பு குழிந்திருத்தல். ஒரு நிலை தவிர, ஏனைய ஐந்து நிலைகளிலும் உண்மை உரு விழும் மருத்துவர் தொண்டை கண் பார்க்கும் ஆடி (இய)
Mish-metal - மிச்சு உலோகம்: உலோகக் கலவை. லாந்தனம், செரியம், டைடைமியம் ஆகியவை சேர்ந்த கலவை, வளி ஒளி ஏற்றிகள், மின்வாய்கள், துலக்கு குண்டுகள் முதலியவற்றில் பயன்படுதல். (வேதி)
missile - எறிபடை: எறியப்படும் அல்லது ஏவப்படும் கருவி அல்லது கருவித்தொகுதி அழிவை உண்டு பண்ண ஏவப்படுவது. வில், வேல், அம்பு, குண்டுகள், ஏவுகணைகள் முதலியவை எடுத்துக்காட்டுகள். வளைகுடாப்போரில் (1991) அமெரிக்க ஏவுகணை பேட்ரியட் ஈராக் ஏவுகணை ஸ்கட்டைத் (உருசியா உருவாக்கியது) தகர்த்தது. பா. rocket, satellite.(இய)
Mitscherlich's law -மிட்சர்லிச்சு விதி: ஓரகச் சீரிய விதி : ஓரக வடிவங்களில் படிகமாகும் பொருள்கள். ஒத்த வேதி இயைபுகளைக் கொண்டவை என்பது விதி. இவ்விதியை சேர்மங்களின் வாய்பாட்டைச் சுட்டிக் காட்டப் பயன்படுதல். (வேதி)
mitochondria -இழையன்கள்: இழை உரு உள்ளவை. உயிரணுவில் காணப்படும் மூச்சு மையங்கள். (உயி)
mitosis இழைப்பிரிவு: கண்ணறைப் பிரிவில் ஒருவகை. இதில் உட்கரு மறைமுகமாகப் பிரிகிறது. இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதிகளான தண்டு முனையிலும் வேர்முனையிலும் நடைபெறுவது. இதில் வலைப்பின்னலை உடைய உட்கரு பல தொடர்ந்த மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு நடைபெறும் மாற்றங்கள் பின்வரும் நான்கு நிலைகளில் அடங்கும். 1. முதல்நிலை (புரோபேஸ்) 2. நடுநிலை (மெட்டாபேஸ்) 3. பின்னிலை (அனபேஸ்) 4. முடிவுநிலை (டிலோபேஸ்), பா.meiosis (உயி)
mitralvalve-ஈரிதழ் திறப்பி: இரு படலமடிப்புகளைக் கொண்டது. இதயத்தின் இடது மேலறைக்கும் கீழறைக்கும் நடுவே அமைவது. கீழறைக்குக் குருதியைச் செலுத்துவது. கீழறை சுருங்கும்பொழுது முடிக்கொள்வது. இதனால் மேலறைக்குக் குருதி செல்ல இயலாது. ஒ.tricuspid valve.(உயி)
mixture - கலவை: இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வீத அளவு மாறிச் சேர்ந்தது. தகுந்த இயற்பியல் முறைகளால் இதிலுள்ள பகுதிகளைப் பிரிக்கலாம். எ-டு. உப்புக் கரைசலை ஆவியாக்க, நீர் ஆவியாகும், உப்பு கிண்ணத்தில் தங்கும். (வேதி)
MKS System-.எம்.கே.எஸ் முறை: மீட்டர், கிலோகிராம், வினாடி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அலகுமுறை. எஸ்.ஐ அலகுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. பா. metric system (இய)
moderator -சீராக்கி: அணுக்கரு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். நீர், கரிக் கோல், பாரமின் மெழுகு பெரிவியம் முதலியவை குறைப்பிகள் ஆகும். (இய)
modernisation -காலத்துக்கேற்ற தாக்குதல்: நவீனமாக்குதல் இது ஒரு தொழில்துறை நுணுக்கம். வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்துறையினால் ஏற்பட்டது.
modulation-பண்பேற்றம்: ஊர்தி அலையில் குறிபாட்டைச் சேர்த்தல். இதனால் குறிபாட்டிலுள்ள செய்தி ஊர்தியலையோடு சேர்ந்து செல்லும். ஒ.demodulation (இய)
module - பொதி: 1. ஒரு கட்டிலுள்ள பகுதிகள் ஒரு முழு வேலை அலகாக ஒரு தொகுதியில் இயங்குதல், 2. ஓர் அலகின் பல கிளைகள், 3. கூண்டு: திங்கள் கூண்டு. (இய)
modulus - எண்: ஒரு விளைவு அல்லது விசையின் அளவைக் குறிப்பது யங் எண். (இய)
molality-மோலமை: ஒரு கிலோ கிராம் தூய கரைப்பானிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை மோலால் என்பது கரைபொருளின் எடையைக் குறிப்பது. (வேதி)
molars - கடைவாய்ப்பற்கள்: இரு தாடைகளிலுமுள்ள அரைக்கும் பற்கள். இவை கடைவாய் முன் பற்கள் கடைவாய்ப் பின்பற்கள் என இருவகைப்படும். (உயி)
molarity - மோலாரிமை: ஒரு லிட்டர் கரைசலிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை.மோலார் என்பது கரைபொருளின் பருமனைக் குறிக்கும். (வேதி)
molasses - கழிவுப்பாகு: கரும்புச்சக்கையிலிருந்து கிடைப்பது, ஆல்ககால் தயாரிக்கப் பயன்படுவது. (வேதி)
mole - அகழெலி: சிறிய பூச்சி உண்ணும் விலங்கு சிறிய கண்கள். மென்மையான மயிர். வளை தோண்டி வாழ்வது. (உயி)
mole - மோல்: அலகுச்சொல். துய கார்பன் 12 இன் 12 கிராம்களில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அத்தனை அடிப்படைத் துகள்கள் உள்ள பொருளின் அளவு. இங்குத் துகள்கள் என்பது அணு, அயனி. மூலக்கூறு, படிமூலி ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, ஒரு மோல் 6.022045x1011 அடிப்படைத்துகள்களைக் கொண்டிருக்கும். (வேதி)
mole fraction- மோல் பின்னம்: ஒரு கரைசலிலுள்ள ஒரு பொருளின் மோல்களின் எண்ணிக்கைக்கும் அக்கரைசலிலுள்ள அனைத்துப் பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம். இதற்கு அலகில்லை. வெறும் எண். (வேதி)
molecular biology - மூலக்கூறு உயிரியல்: உயிரியலில் சிறப்புள்ள மூலக்கூறுகளின் மரபணு அமைப்பினை ஆராயுந்துறை. (உயி)
molecular formula - மூலக்கூறு வாய்பாடு: ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு மூலக் கூறு வாய்ப்பாடாகும். நீரின் மூலக்கூறு வாய்பாடு H2O. ஒரு மூலக்கூறில் ஒர் உயிர்வளி அணுவும் இரு நீர்வளி அணுக்களும் உள்ளன என்பது பொருள். இவ்வாய்பாடு உணர்த்தும் உண்மைகளாவன சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களையும் அவற்றின் குறியீடுகளையும் காட்டும். 2. சேர்மத்திலுள்ள தனிமங்களின் தகவைக் காட்டும். 3. சேர்மத்தின் ஒரு மூலக்கூறிலுள்ள தனிமங்களின் எடையைக் காட்டும். 4. சேர்மத்தின் மூலக்கூறு எடையைக் கணக்கிட உதவும். (வேதி)
molecule-மூலக்கூறு: ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச்சிறியதும் அதன் பண்புகளைப் பெற்றதும் தனித்தியங்குவதுமான நிலைத்ததுகள் மூலக்கூறுவாகும். எ.டு. நீர், H2O. (வேதி)
mollusca - மெல்லுடலில்கள்: உடலில் துண்டங்கள் (செக்மெண்ட்ஸ்) இல்லை. 90,000 வகைகள். தசைக்கால், மூடகம் (மேண்டில்) உண்டு. புறக்கூறு ஓட்டாலானது. நிலம், நன்னீர், கடல்நீர் ஆகிய மூன்றிடங்களிலும் வாழ்வது. எ.டு. எண்காலி, சிப்பி, நத்தை. இவற்றைக் கொல்லும் மருந்து மெல்லுடலிக் கொல்லி (மொலசைடு). (உயி)
molybdenum - மாலிப்டினம்: Mo. கடின வெண்ணிற உலோகம். இயற்கையில் மாலிப்டினைட்டு, உல்பனைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். உலோகக்கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுதல். (வேதி)
moment of a force - விசையின் திருப்புத்திறன்: ஓர் அச்சில் ஒரு விசை உண்டாக்கும் திருப்பு விளைவின் அளவு. அச்சில் விசை செயற்படும் கோட்டிலிருந்து உள்ள செங்குத்துத் தொலைவையும் விசையையும் பெருக்கி வரும் தொகை திருப்புத்திறனின் எண் மதிப்பு ஆகும். எவ்வச்சிலும் அதன் மேலுள்ள விசைகளின் எல்லாத் திருப்புத்திறன்களின் குறிக்கணக்குக் கூட்டுத்தொகை சுழியாக இருக்குமானால், ஒரு பொருள் சுழல் நடுநிலையில் இருக்கும். (இய)
momentum - உந்தம்:ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் நேர்விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் P= m x w (p- உந்தம் m-நிறை w- நேர்விரைவு (இய)
momentum, conservation of - உந்தம் மாறாக் கொள்கை: இரு பொருள்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதும்போது, மோதலுக்குப் பின் மொத்த உந்தமானது மோதலுக்கு முன்னிருந்த மொத்த உந்தத்திற்குச் சமம். (இய)
monadelphous stamens - ஒற்றை முடி மகரந்தம்: (உயி)
monandrous - ஒற்றை மகரந்தமுள்ள: ஒரு மகரந்தத்தாள் அல்லது ஆணியத்தைக் கொண்ட தாவரம் இவ்வகுப்பு மொனான் டிரியா ஆகும். (லின்னேயஸ் முறை) (உயி)
monelmetal-மோனல் உலோகம்: நிக்கலும் செம்பும் சேர்ந்த உலோகக் கலவை. இதில் 1% கரி, இரும்பு, மாங்கனீஸ், சிலிகன் ஆகியவையும் சேர்ந்திருக்கும். காடித்தடை உண்டாக்கும் பொருள்கள் செய்ய. (வேதி)
monitor - கண்காணிப்பி: கணிப்பொறி மென்னியம், கணிப்பதற்குரிய பகுதி. (இய)
monocarpellary pistil - ஒரு சூல் இலைச்சூலகம்: பூக்குந்தாவரப் பூவின் சூலகம். ஒரே ஒரு சூல் இலையைக் கொண்டது. (உயி)
monocarpous - ஒரே ஒற்றைச் சூல்பை கொண்ட: ஒரு சூல்பை உடையது. ஆகவே ஒரே ஒரு கனியைக் கொடுப்பது. (உயி)
monochasium - ஓரு கிளை குறுங்கொத்து: முடிவுள்ள பூக்கொத்து. இதன் வகைகளாவன. 1. சுருள் கொத்து: (ஹெலிகாய்டு) பிகோனியா. 2. கொடுக்குக் கொத்து: (ஸ்கார்பியாய்டு) ஈலியோட்ராபியம் (உயி)
monochlamydeous - இதழ் வட்டப்பூ: இதழ் வட்டத்தைக் கொண்ட பூ, வெங்காயப்பூ (உயி)
monocompound - ஓரணு சேர்மம்: ஒரணு அல்லது அணுத் தொகுதி கொண்ட சேர்மம். (வேதி)
monocotyledons - ஒரு வித்திலைத் தாவரங்கள்: விதையில் ஒரு விதை இலை மட்டும் உண்டு. முளைக் குருத்து பக்கத்திலும் வித்திலை முனையிலும் இருக்கும். வேற்றிட வேர்கள். எ-டு. தென்னை, பனை.
monocytic- ஒற்றைவட்ட வளைய: ஒரு பூவட்டங் கொண்ட பூ. (உயி)
monocyte - ஒற்றையணு: மிகப் பெரிய வெள்ளணு, துணுக்குகள் இல்லாது கண்ணறைக் கணியத்தைக் கொண்டது. பெரிய அவரை விதை வடிவ உட்கரு ஒன்றுண்டு. வெளிரணுக்களில் 5% உள்ளது. அயற்பொருள்களை விழுங்கி அழிப்பதே அதன் வேலை. (உயி)
monodactylous - ஒரு விரல் கொண்ட. (உயி)
monodont- ஒற்றைத் தந்தன்: (உயி)
monoecious - ஒரில்லப்பூ: தாவரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியே இருத்தல், எ-டு. தென்னை. ஒ. dioecious (உயி)
monogamy - 1. ஒற்றைக் கலப்பு: பாலிலா இனப்பெருக்கம்.2. ஒருமுறை மணம் (உயி)
monohybrid - ஒற்றைக் கலப்பினம்: ஒரே காரணியின் வேறுபட்ட இணைமாற்றுகளைக் கொண்ட ஓரகத் தாவரங்களின் வேற்றகக் கால்வழி. ஒ. dhybrid. (உயி)
monomer - ஒருபடி: மூலக்கூறு அல்லது தொகுதி. இதிலிருந்து இருபடி (டைமர்), முப்படி (ட்ரைமர்), பல்படி (பாலிமர்) ஆகியவை உருவாகின்றன. (இய)
monophylitic - ஒற்றை மரபு வழி: ஒரு தனிக்கால்வழித் தோற்றம் (உயி)
monoplane - ஒற்றை ஊர்தி: ஒரு தொகுதி சிறகுகளைக் கொண்ட ஊர்தி (இய)
monoploid - ஒரு மய: பா. haploid (உயி)
monopodial branching -ஒற்றைக்கால் கிளைப்பு: முதல் அச்சிலிருந்து உண்டாகும் இரண்டாந்தண்டுகளைக் கொண்ட வளர்ச்சி. நுனி மொட்டுக்கிளைப்பு. ஒ. symbodial.
monosaccharide- ஒற்றைச் சர்க்கரைடு: தனிச் சர்க்கரை. மேலும் நீராற் பகுக்க முடியாதது. எ-டு. பிரக்டோஸ், குளுகோஸ், பா. (உயி)
monotrichous-ஒற்றைநீள் இழையன்கள்: ஒரு முனையில் ஒரு கசை இழை மட்டும் கொண்ட உயிரிகள்-குச்சியங்கள் (பாக்டீரியா)(உயி)
monotropy-ஒற்றை வேற்றுமை: ஒரு தனிமத்தின் ஒற்றை வேற்றுரு மட்டும் தனித்திருத்தல், வெப்ப நிலைக்குச் சார்பில்லாமல் எப்பொழுதும் நிலைத்திருப்பது பாகவரம், பா. allotropy (வேதி)
monovalent - ஓரிணைதிறன்: இணைதிறன் ஒன்று கொண்டவை. எ.டு. வெள்ளி, வேதி,
monoxide - ஓராக்சைடு: ஒரு மூலக்கூறில் ஓர் உயிர்வளி அணுவுள்ள ஆக்சைடு. எ.டு. கரி ஓராக்சைடு (வேதி)
moon- திங்கள்: புவியின் இயற்கை நிலா அல்லது துணைக்கோள். இதில் காற்று இல்லாததால் உயிர் வாழ இயலாது. நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் காலடி வைத்த முதல் மனிதன். லூனா, அப்பல்லோ முதலிய செயற்கை நிலாக்களால் திங்கள் நன்கு ஆராயப் பெற்றுள்ளது. பா. space Science (வானி)
moon, motions of-திங்கள் இயக்கங்கள்: திங்கள் தன் அச்சில் சழன்று கொண்டு புவியைச் சுற்றி வருகிறது. தன்னைத்தானே சுற்றி வர 24 மணி 5 நிமிடம் புவியை ஒரு முறை சுற்றிவர 27 நாட்கள் 8 மணியும் ஆகின்றன. (வானி)
moped- விசை மிதிவண்டி: பளுக்குறை உந்து மிதிவண்டி (இய,)
mordant - நிறம் நிறுத்தி: சாயந்தோய்க்கப் பயன்படும் கனிமப் பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு (வேதி)
morphine-மார்பைன்(C17H1803N): அபினில் முதன்மையாகவுள்ள காரமம். மார்பைன் ஹைடிரோ குளோரைடு, வலிநீக்கி. (வேதி)
morphology-உருவியல்: ஓர் உயிரியின் உருவத்தை ஆராயுந்துறை. புறஉருவியல், அகஉருவியல் என இருவகைப்படும். (உயி) mortality - இறப்புத்தகவு: மக்கள் தொகைக்கு ஏற்ப இறப்பு நிகழ்தல் (உயி)
mosaic gold - செதில்வடிவப் பொன்: Sns2. படிக வெள்ளியச்சல்பைடு. பளபளக்கும் பொன்னிறச் செதில்களைக் கொண்டது. (வேதி)
mosquitoes - கொசுக்கள்: நோய் பரப்பும் உயிரிகள். குயூலக்ஸ் பேட்டிகன்ஸ் யானைக் காலையும், னோபிலஸ் மலேரியாவையும் பரப்புபவை. பா. (உயி)
mosses - மாசிகள்: பூக்காத் தாவரங்கள். (உயி).
mother-cell - தாயணு: சேய்யணுக்கள் வேறுபாடு அடைவதால் பிரிவுக்குப்பின் தன் உருநிலையினை இழக்கும் அணு. (உயி)
moths - அந்துப்பூச்சிகள்: பூச்சிகளில் ஒரு வகை. (உயி)
motion -இயக்கம்: ஒரு பொருள் நிலையாக இல்லாமல், தொடர்ந்து இடம் பெயர்வது இயக்கமாகும். இது பலவகைப்படும். 1. தன்னியக்கம்: காற்பந்தின் இயக்கம். 2.நேர்கோட்டு இயக்கம்: கவண்கல் இயக்கம் 3. வட்ட இயக்கம்: நூல்கட்டிய கயிற்றைச் சுற்றுதல் 4. அதிர்வுறு இயக்கம்: சுருள்வில் இயக்கம் (இய)
motion, laws of gases of - வளி இயக்க விதிகள்: 1860இல் இவற்றை ஜேம்ஸ் கிளர்க்கு மாக்ஸ்வெல் என்பார் வெளியிட்டார்.இதன் அடிப்படை புனைவுகளான 1. அனைத்து வளிகளும் மூலக்கூறுகள் என்னும் துகள்களாலானவை. 2. வளிமூலக்கூறுகள் நிலையாக நில்லாமல், எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து முடிவின்றி ஒழுங்கற்ற முறையில் இங்குமங்குமாக இயங்கும். 3. வளிமூலக்கூறுகள் இயங்கும் போது ஒன்றுடன் மற்றொன்றும் மோதிக் கொள்வதோடு, மேலும் கலன்களின் சுவர்களிலும் மோது கின்றன. 4. வளிமூலக் கூறுகள் மீள்தன்மை உடையவை. ஆகவே மோதல் காரணமாக, அவற்றில் இயக்க ஆற்றல் இழப்பில்லை. 5. வளி மூலக்கூறுகள் கலன் சுவர்களில் விசையுடன் மோதுவதால் ஏற்படு விளைவே வளியழுத்த மாகும். 6. வளிமூலக்கூறுகளின் இயக்க ஆற்றல், வளி வெப்ப நிலையுடன் நேர்வீதத் தொடர்பு டையது. 7 வளிநிலையில் மூலக் கூறுகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவு கவர்ச்சி இல்லை. ஆதலால், மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி இயங்குகின்றன. 8. வளியுள்ள கலப்பருமனோடு ஒப்பிடும் போது, மூலக்கூறுகளின் பருமன் மிகக்குறைவு. ஆதலால், அதைப் புறக்கணிக்கலாம். (இய)
mother liquor - தாய்நீர்மம்: படிகங்கள் தோன்றிய பின் எஞ்சியுள்ள கரைசல். (வேதி)
moto(r)neuron-இயக்க நரம்பன்: நரம்பணு. மூளையிலிருந்து தசைக்கு துலங்கலைத் தெரிவிப்பது. (உயி) Motorola - மோட்டோரோலா: இஃது ஓர் அயல்நாட்டுச் செயற்கை நிலா நிறுவனம். இது தன் இரிடியத் திட்டத்தின் மூலம் 66 நிலாக்களை ஏவி, உலக அளவில் வாணிப முறையில் செய்தளிக்கத் திட்டமிட்டுள்ளது. (1994)
mould - பூஞ்சணம்: பூஞ்சை இனத்தைச் சார்ந்தது. உணவுப் பொருள்களிலிருந்து படிந்து வாழ்வது. ரொட்டிப் பூஞ்சணம் (உயி)
moult - தோலுரித்தல்: தோலி, செதில்கள், இறகுகள் முதலியவை உதிர்தல். (உயி)
mouth - வாய்: உணவு வழியின்முன்திறப்பு (உயி)
mouthparts - வாய்ப்பகுதிகள்: கணுக்காலியின் தலையிலுள்ள இணைந்த உறுப்புகள். உணவைப் பெறப் பலவழிகளில் மாற்றுரு பெற்றிருக்கும். அவை மேலுதடு (லேப்ரம் ). 1.மேல்தாடைகள் (மேண்டிபிள்) 2. கீழ்த்தாடைகள் (மேக்சிலே) 3. கீழுதடு (லேபியம்) 1 ஆகியவை ஆகும். (உயி)
movement-இயக்கம்: 1. விலங்கில் ஏற்படும் இடநகர்ச்சி, 2.தொண்டு, கட்சி சார்ந்த அமைப்பு (ப.து)
mucilage - 3 சளிமம்: விதை, பட்டை, வேர் முதலியவற்றிலிருந்து உண்டாகும் தாவரப் பொருள். குளிர்ச்சியாலும் வெப்பத்தாலும் இதைப் பெறலாம். (உயி)
mucous membrane - சளிமப்படலம் படலம்: குடல்வழி, மூக்குவழி. (உயிர)
mucus - சளிமம்: கோழைப்பொருள். சளிமப்படல அணுக்களால் சுரக்கப்படுவது. பாகு போன்றது. கரையாதது, கிளைகோபுரத்தாலானது. தான் சுரக்கும் பரப்பைப் பாதுகாப்பதும் உயவிடுவதும் ஆகும். (உயி)
mule - கோவேறு கழுதை: ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினம் (உயி)
multicellular- பல் கண்ணறைகள் கொண்ட: உடல் பல உயிரணுக்களாலானது. எ-டு: கடற்பஞ்சு, அய்டிரா (உயி)
muticentre-பல்மையப் பிணைப்பு: இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களின் (வழக்கமாக3) சுற்றுவழிகள் ஒன்றின் மீது மற்றொன்றுபடுவதால் உண்டாகும் இரு மின்னணுப் பிணைப்பு. (வேதி)
multimeter - பன்னிலை மானி: மின்னோட்டம், மின்தடை, மின்னழுத்தம், முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)
multiennials -பல்லாண்டு வாழ்விகள்: இவை பல ஆண்டுகள் வாழ்ந்து தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் பூப்பவை. ரயில் கற்றாழை, தாளிப்பனை. (உயி)
multimedia - பன்ம ஊடகங்கள்: பல தகவல்களை அளிப்பவை. ஒலி, ஒளி வழி அமைபவை. கல்வி, பொழுதுபோக்கு முதலியவற்றில் பயன்படுபவை.
multiple alleles - பன்ம இணை மாற்றுகள்: குறிப்பிட்ட இடத்திலுள்ள மூன்றிற்கு மேற்பட்ட மரபணு வகைகள். அதாவது, ஒரு மரபணுவிற்கு மூன்றிற்கு மேற்பட்ட இணைமாற்று வரிசை இருத்தல், பா. alleles (உயி)
multiple bond-பன்மப்பிணைப்பு: பலநிலைப் பிணைப்பு. ஓரிணை மின்னணுக்களுக்கு மேலுள்ள இரு அணுக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பு. எ.டு. இரு பிணைப்பு, முப்பிணைப்பு (வேதி)
multiple fission - பன்மப் பிளவு: கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைகள் பிளவுபட்டுப் பல இளவுயிரிகள் தோன்றுதல் (உயி)
multiple fruit -கூட்டுக்கனி: பா.fruit (உயி)
multiple parasitism - கூட்டு ஒட்டுண்ணி வாழ்வு: ஒரே ஓம் புயிரில் ஒன்றிற்கு மேற்பட்ட ஒட்டுண்ணிகள் வாழ்தல். (உயி)
multiple resistance -கூட்டு நிலைத்தடை: நோய், வறட்சி, பூச்சி முதலிய நெருக்கடிகளுக்கு உயிரி உண்டாக்கும் தடை (உயி)
mumetal - மியுமெட்டல்: காந்த
ஊடுருவும் தன்மை அதிகங் கொண்ட உலோகக் கலவை. 78% நிக்கல் மற்றும் இரும்பு, செம்பு, மாங்கனீஸ் ஆகியவற்றைக் கொண்டது. மாற்றிகளின் உள்ள கங்களில் பயன்படுவது. (வேதி)
mumps தட்டம்மை, தாளம்மை: காதுமுன் உமிழ்நீர்ச்சுரப்பிகள் (பராடிட் கிளாண்டஸ்) வீங்குவதால் உண்டாகும் நோய் நிலைமை. பண்டுவம் உண்டு. (உயி)
muntz metal - முன்ஸ் உலோகம்: மூன்று பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை, ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுதல், முன்ஸ் (1794 - 1857) என்பவர் பெயரால் அமைந்தது. (வேதி)
muscle - தசை: எலும்புகள் ஒன்றுடன் மற்றொன்று இயங்குவதற்குக் காரணமான இணைப்புத் திசு. உடலின் திட்டமான வடிவத்திற்கும் உடல் இயங்கவும் மூலகாரணமானது. தசையும் எலும்பும் சேர்ந்தே உடலுக்கு இயக்கமளித்தல். இது வரித்தசை (எலும்புத்தசை இயக்கதசை) வரியிலாத்தசை (எலும்பிலாத் தசை, இயங்கு தசை என இருவகைப்படும். முன்னதற்கு இருதலை, முத்தலைத் தசையும், பின்னதற்கு உள்ளுறுப்புத் தசைகளும் எடுத் துக்காட்டுகள். சுருக்குத் தசைகள்: இவை ஒருவகை இயங்கு தசைகளே. இவற்றில் தசைநார்கள் வட்டமாகவும், குறுக்காகவும் அமைந்துள்ளன. இவை இரைப்பையின் அடிப்பகுதி. கழிவாய், கருவிழிப்படலம் முதலிய பகுதிகளில் உள்ளன. குறுக்கு நார்கள் சுருங்கும்போது, இவற்றின் துளை விரிந்தும் வட்ட நார்கள் சுருங்கும்போது துளை சுருங்கியும் கொடுக்கும். எடுத்துக்காட்டாகக் கண்மணி சுருங்கி விரிவதைக் கருவிழிப்படலத் தசை கட்டுப்படுத்துகிறது. (உயி)
muscular dystrophy-தசைநலிவு; வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல். (உயி)
mushroom - காளான்: உண்ணக்கூடிய பூஞ்சை நாய்க்குடையின் சிதல்தாங்கி, இது குடைவடி வத்தில் இருக்கும். நுண் பூஞ்சிழைகளின் (ஹைபே) போலப் பஞ்சுத்திசுவிலானது. காய்கறியாகும். ஒயின் உண்டாக்கவும் பயன்படுவது.(உயி)
music - இசை: ஒழுங்கானதும் சீரானதுமான அதிர்வுகளால் உண்டாகும் ஒலி. ஒ. noise (உயி)
music note, characteristics of - இசை ஒலியின் பண்பியல்புகள்: 1. இசைப்பு: அதிர்வெண் அதிகமாகும்பொழுது இசைப்பும் அதிகமாகும். இப்பொழுது ஒருவகைக் கீச்சொலி உண்டாகும். அதிர்வெண் குறையும் பொழுது, இசைப்பும் குறைகிறது. இப்பொழுது கட்டை ஒலி உண்டாகிறது. 2.வலிமை: செவியில்
உண்டாகும் ஒலியின் அளவை வலிமை குறிக்கும் ஒலியலை வீச்சின் இருமடிக்கு வலிமை நேர் வீதத்தில் இருக்கும். கேட்பவருக்கும் ஒலி மூலத்திற்கும் இடை யேயுள்ள தொலைவு இருமடிக்கு எதிர்வீதத்திலிருக்கும். 3.பண்பு: ஒரே அதிர்வெண்ணும் வீச்சுங் கொண்ட இரு இசைக் குறிப்புகளை வேறுபடுத்தி அறியப் பண்பு உதவுகிறது. ஒவ்வொரு பொருளும், ஒரு குறிப்பிட்ட இயல்பான அதிர்வெண்ணுடன், பெருவீச்சில் அதிர்கின்றது. இவ்வதிர்வெண் அப்பொருளின் அடிப்படை அதிர்வெண்ணாகும். அவற்றுடன் அதிர் வெண்ணின் மடங்குகளும் அதிர்வெண்ணுள்ள இதர ஒலிகளும் உண்டாகும். இவை மேற்சுரங்கள் (ஓவர் டோன்ஸ்) எனப்படும். இவற்றின் எண்ணிக்கை அதிக மாகும்பொழுது, இசையின் பண்பும் அதிகமாகிறது. (இய)
mustard gas -கடுகு வளி; மிக நச்சுள்ள வளி, போரில் பயன்படுவது.(வேதி)
mutagen - சடுதி மாற்றி: சடுதி மாற்றத்தைத் தூண்டவல்ல காரணி நியூக்கிளியோடைடுகள். கதிர்வீச்சுகள், கார மூலங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வினையாற்றும் வேதிப்பொருள். டிஎன்ஏ சேர்க்கையின்போது இயல்பான கார மூலங்களுக்குப் பதிலாக இவை இருக்கும். (உயி)
mutation - சடுதி மாற்றம்: மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது கால்வழிப் பண்புடயது. இதனால் திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாதல். காட்டாக, இயல்பான புகையிலைச் செடியில் 20 இலைகளும் மாற்றம் பெற்ற செடியில் 70 இலைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டிரோசோ பைலா என்னும் கனி ஈயில் மட்டும் 1000 மாற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இம்மாற் றம் நான்கு வகைப்படும். 1.நிறப்புரி மாற்றம் 2.மரபணு மாற்றம் 3.தான் தோன்று மாற்றம் 4.தூண்டு மாற்றம் (உயி)
mycelium - பூஞ்சிழை: பூஞ்சிழையின் தண்டகத்தை (தேலஸ்) உண்டாக்கும் வெண்ணிற நுண் பூஞ்சிழைகள் தொகுதி பா. hypha (உயி)
mycology -பூஞ்சை இயல்: பூஞ்சைகளை ஆராயுந்துறை. (உயி)
mycophyta-பூஞ்சிழைத் தாவரங்கள்: அணுவுறை உள்ள எளிய பூஞ்சைத் தொகுதி, பச்சையம் இல்லை. உடலம் ஓரணுவாலானது. அல்லது குழாய் இழைகள் இருக்கும். நுண் பூஞ்சிழை, கலவி மூலமும் கலவி இல்லாமலும் (சிதல்கள்) இனப்பெருக்கம் செய்யவல்லது. (உயி)
mycorrhiza - பூஞ்சையவேரி: பூஞ்சையின் நுண் இழைக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு இருவகை வேரிகள் உள்ளன. 1.புற ஊட்ட வேரிகள்: இதில் மரங்களிலுள்ள சிறிய வேர்களால் பூஞ்சை ஒரு வலைப்பின்னலை உண்டாக்கும். எ டு மரங்கள்.2.அகஊட்டவேரிகள்: இதில் வேர்களின் புறணிக் கண்ணறைகளில் பூஞ்சை வளரும். எ.டு. ஆர்க்கிட்டுகள். (உயி)
mycosis - பூஞ்சையழற்சி: பூஞ்சையினால் ஏற்படும் நோய். (உயி)
mylocyte - பித்தனு: எலும்பிலுள்ள செஞ்சோற்றின் பித்துத் திசுவிலுள்ள சோற்றணு. இவ்வணுக்கள் துணுக்கணுக்களாக மாறிக் குருதி யோட்டத்தோடு சேர்பவை. பித்து சோறு, பா. granulocyte. (உயி)
myloid tissue -பித்துத்திசு:வெள்ளணுக்களை உண்டாக்கும் திசு குருதிக் குழாய்களைச் சூழ்ந்துள்ள எலும்பின் செஞ்சோற்றில் தோன்றுவது. (உயி)
myelin - பித்தியன்: நரம்பிழைகளின் உறை. புரதம் சேர்ந்த கொழுப்பாலானது. (உயி)
myelin sheath - பித்திய உறை: நரம்பிழையைச் சூழ்ந்துள்ள அடுக்கில்லாக் கொழுப்பு (உயி)
myocardial infarction - இதயத்தசை நசிவு: குருதி வழங்கல், இதயத்தசை உறைப்பகுதிக்குக் கடுமையாகக் குறைதல், தமனி அடைப்பு, திராம்பின் உண்டாதல் முதலிய காரணிகளால் இந்நிலை ஏற்பட்டுத் தசையுறை அணுக்கள் இறப்பதால், இறப்புப் பகுதி தோன்றும். (மரு)
myocaridial ischemia - இதயத் தசை சோகை: குருதிக்குழாய்ச் சுருக்கத்தினால் தசை உறையின் ஒரு பகுதிக்குக் குருதி செல்வதால் குறைவு உண்டாதல். (மரு)
myocardium - இதயத் தசை உறை: இதய உள்ளுறை அணுக்களிலிருந்து உண்டாகும் இதயத் தசை உறை. (உயி)
myocyte - தசையணு: தசையிலுள்ள அணு(உயி)
myograph-தசை வரைவி: தசைச் கருக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி. (உயி)
myology -தசை இயல் :தசைகளை ஆராயுந்துறை.(உயி)
myotma - தசைக்கட்டி: தசைத்திசுவுள்ள கட்டி (மரு
myomere - தசைவட்டு: தசைத் துண்டு.(உயி)
myoneme - தசைச்சுருங்கிழை:விலங்குக் கண்ணறைக் கணியத் தில் சைட்டோ பிளாசத்தில்) காணப்படும் சுருங்குஇழை (உயி)
myope - கிட்டப்பார்வையாளர்: அருகிலுள்ள பொருள்களை மட்டும் பார்க்குந் திறனுள்ளவர். (உயி)
myrioscope - பல்லுருக்காட்டி:பா.kaleidoscope.(இய)
myxobacteria - சளிக்கியங்கள்:கோல்வடிவ நுண்ணியங்கள். இவற்றின் வழுக்கியக்கம் சிறப்பானது. உயிரணுச் சுவர் நீட்சி உடையது. (உயி)
myxoedema - சளியழற்சி: தொண்டைச் சுரப்பி (தைராய்டு) சுரப்பு குறைவதனால் உண்டாகும் நோய், மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு எடை மிகுதல், உளச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக் குறைவு ஆகியவை இதன் அறிகுறிகள்.(உயி)
myxomatosis-கட்டியழற்சி: வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய். (உயி)