S

sacculus - செவிப்பை: உட்செவியின் அடிப்பகுதி. பை அறை வழியினால் செவிப் பறையோடு இணைந்துள்ளது. (உயி)

sacculus rotundus - வட்டப்பை: பிங்சிறுகுடல், நடுப்பெருங்குடல், குடல்பை ஆகியவற்றின் சந்திப்பில் உள்ள வட்டப்பை. இதில் திட்டமான திறப்பிகள் உள்ளதால், அவை உணவை நடுப்பெருங்குடல் அல்லது குடல்பைக்கு மட்டுமே செல்லவிடும். (உயி)

sacculus vascubsus - குழாய்ப்பை: மூளையின் மெல்லிய அடிவிரிவு. ஆழ்கடல் மீன்களில் நன்கு வளர்ந்துள்ளது. (உயி)

sacral ribs - திரிசு மருங்கு எலும்புகள்: தவளையில் திரிகமுள் எலும்பின் மருங்குகளிலுள்ள குறுக்கு முட்கள். 'உயி)

sacral vertebrae - திரிக (மூவக) முன் எலும்புகள்: அடிமுதுகு முள் எலும்புகளுக்குக் கீழ்த் தொடர்ந்துள்ள 3 அல்லது 4 முள் எலும்புகள். இவை சேர்ந்து இணைதிரிகத்தை (சின்சேக்கரம்) உண்டாக்குகின்றன. (உயி)

sacrum - திரிகம்: மூவகம். முது கெலும்பில் இருப்புப் பகுதிக்கும் வால் பகுதிக்கும் இடையிலுள்ள எலும்பு. (உயி) |

safety valve - காப்புத்திறப்பி: கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் குறையும். (இய)

sagittate - அம்புநுனி: இலைப் பரப்பு அம்புத்தலை போன்று இருக்கும், அதன் இருமடல்கள் கீழ்நோக்கி அமைத்திருக்கும். எ-டு சேஜிடேரியா. (உயி)

salamander - சலமாந்தர்: வாலுள்ள இருநிலைவாழ்வி. 15செமீ நீளமுள்ளது. தீங்கற்றது. ஈரமுள்ள மென்மையான உடல். இதன் இளரி புறச் செவுள் பெற்று நீரில் வாழ்வது. முதிரி நிலத்தில் வாழ்வது. (உயி)

sal ammoniac - நவச்சாரம்: அம்மோனியம் குளோரைடு ஈயம் பூசவும் சாயத்தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

salinity - கரிப்பு: கடல்நீரின் உப்படக்க அளவு. (வேதி)

salinometer - உப்புச்செறிவுமானி: உப்புக் கரைசல்களின் செறிவை உறுதி செய்யப் பயன்படும் ஒரு வகை நீர்மானி. அக்கரைசல்களின் அடர்த்தியை அளப்பதன் மூலம் செறிவை உறுதிசெய்யலாம். (வேதி)

saliva - உமிழ்நீர்: உமிழ்நீர்ச்சுரப்பி சுரப்பது.

salivary glands - உமிழ்நீர்ச்சுரப்பிகள்: வாய்க்குழியிலுள்ள சுரப்பிகள். வாயை உமிழ்நீர் ஈரமாக வைப்பதால்தான் நாம் பேசமுடிகிறது. இதிலுள்ள டயலின் என்னும் நொதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குகிறது. (உயி)

Salk vaccine - சால்க் ஆவைன்: இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்டது.

sal soda - சால்சோடா: Na2CO3. 10H2O. சோடியம் கார்பனேட்டு டெக்கா ஹைடிரேட்டு சலவைச்சோடா. (வேதி)

salt - உப்பு: கார காடி வினையால் உண்டாகும் சேர்மம். இவ்வினைக்கு நடுநிலையாக்கல் என்று பெயர். இதில் காரமும் காடியும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்கின்றன.

உப்பின் வகைகளாவன. 1. இயல்பான உப்புகள்: பொட்டாசியம் குளோரைடு 2. காடியுப்புகள்: சோடியம் இருகார்பனேட்டு. 3. கார உப்புகள்: காரக்காப்பர் கார்பனேட் 4. கலப்பு உப்புகள்: சோடியம் பொட்டாசியம் சல் பேட்டு, 5. இரட்டை உப்புகள்: பொட்டாஷ் படிகாரம் 6. அணைவு உப்புகள்: பொட்டாசியம் பெரோசயனைடு.

salt petre - வெடியுப்பு: KNO3. பொட்டாசியம் நைட்ரேட்டு. காற்றிலுள்ள நீரை ஈர்க்கும் பொருள். நீரில் கரைவது. கரிம வேதி இயலில் பயன்படுவது. (வேதி)

samara - சிறகுக்கனி: ஒருவிதையுள்ள பிளவுறாக் கனி. கனியுறை சிறகாக மாறியுள்ளது. தண‌க்கு, வேம்பாடம் (உயி) samarium - சமாரியம்: Sm. வெள்ளி நிறத்தனிமம். ஏனைய லாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ளது. உலோகவியல், கண்ணாடித் தொழில் அணுத் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது. (வேதி)

sandwich compound - இடையீட்டுச்சேர்மம்: இத்தொகுதியில் மாறுநிலைத் தனிமத்தின் ஓர் அணு, இரு ஒரு போக்கு பென்சீன் வளையங்களோடு சேர்க்கப்படுகிறது. எ-டு பெரோசீனும் அதன் ஒப்புருக்களும் (அனலாக்ஸ்). (வேதி)

sap - சாறு: உயிர்ப்பான பாய்மம். கனிமங்களும் சர்க்கரையும் சேர்ந்தது. மரவியக் குழாய்களிலும் (சைலம்) பட்டையக் குழாய்களிலும் (புளோயம்) நுண் குமிழியிலும் காணப்படுவது. (உயி)

sapling - நாற்று: நட்டுப் பயிரிடுவதற்காக நாற்றங்காலில் வளர்க்கப்படுவது. (உயி)

saponification - சவர்க்காரமாதல்: இஃது ஒரு வேதிவினை. இதில் எஸ்தர் நீராற் பகுக்கப்பட்டு அய்டிராக்சைடாக மாறுகின்றது. (வேதி)

sapphire - நீலமணிக்கல்: ஒளி ஊடுருவக்கூடிய நீலமான குருந்தக்கல்லின் (AI2O3) இயற்கைப் படிகவடிவம். கொபால்ட்டும் மற்ற உலோகங்களும் சிறிதளவு இருப்பதால் நீல நிறம் பெற்றுள்ளது. விலை உயர்ந்த கல். (வேதி)

saprophyte - சாறுண்ணி: மட்குப்பொருளில் வாழ்கின்ற உயிரி - நாய்க்குடை பூஞ்சணம். ஒ. parasite.(உயிரி)

sapwood, albumum - சாற்றுக்கட்டை: உள்பட்டைக்கும் வைரக் கட்டைக்கும் இடையிலுள்ள பகுதி, மரவியத்தின் (சைலம்) மென்மையான வெளிப்புறப் பகுதி, பா. wood (உயி)

sarcolemma - தசைப்படலம்: குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம். (உயி)

sarcology - தசைஇயல்: தசைப் பகுதிகளின் உள்ளமைப்பை ஆராயுந்துறை. (உயி)

sarcoplasm - தசைக்கணியம்: தசை இழைகளிலுள்ள முன் கணியம். (உயி)

saser - sound amplifiction by stimulated emission of radiation - சேசர்: உயரிய ஒலியமைப்புக் கருவி. (1997) ஒ. laser, maser. (இய‌)

satellite - துணைக்கோள்: துணை நிலா. இது இயற்கைநிலா, செயற்கைநிலா என இருவகைப்படும். திங்கள் புவியின் இயற்கைநிலா. புவி முதலிய கோள்களை வலம் வருபவை செயற்கை நிலாக்கள். பணியின் அடிப்படையில் அவை முக்கியமாக மூன்று வகைப்படும்.

1. செய்தித்தொடர்பு நிலாக்கள்: உலக அளவில் செய்திகளை அறிதல், பகிர்ந்து கொள்ளுதல். இன்று வெற்றிதரும் வகையில் நடைபெறுவது. டெல்ஸ்டார். இன்சட் 2. வானிலை நிலாக்கள்: உலக அளவில் வானிலைச் செய்திகளை அறிந்து பகிர்ந்தளித்தல். இதுவும் இன்று நன்கு நடைபெறுகிறது. டிராஸ், இன்சட் 3. ஆராய்ச்சி நிலாக்கள்: விண்வெளியை விரிவாக ஆராயும் நிலாக்கள். டிஸ்கவரர், வேன்கார்டு, அப்பல்லோ, ரோசட். எல்லா வகைக் கருவிகளும் ஒரு செயற்கை நிலாவில் அமைந்து, அது சிறந்த ஆய்வுக்கூடமாக வானவெளியில் விளங்குவது தனிச்சிறப்பு. அதிலுள்ள கருவிகள் எல்லாம் தாமே இயங்கிச் செய்திகளைத் திரட்டிப் புவிக்கு அனுப்புபவை. (வா.அ.)

ஒரு கணக்கு: 1957- 2000 வரை 43 ஆண்டுக்கால வான வெளி வரலாற்றில் 2400க்கு மேற்பட்ட செயற்கை நிலாக்கள் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் 70க்கு மேற்பட்ட நிலாக்கள் மனிதனை ஏற்றிச் சென்றன. 12 அமெரிக்க வீரர்கள் திங்களில் நடந்துள்ளனர். 20க்கு மேற்பட்ட வானவெளி வீரர்கள் புவியை வலம் வந்துள்ளனர். (இய)

satellite DNA - துணை டிஎன்ஏ: டிஎன்ஏவின் ஒரு பகுதி. (உயி)

saturated colour - நிறைவுறுநிறம்: வெள்ளைநிறத்தால மாசுறாத துயநிறம். (இய)

saturated compound - நிறைவுறு சேர்மம்: கட்டவிழ் இணைதிறன்களில்லாத கரிமச் சேர்மம். இதில் பதிவீட்டுச் செயலினால் அணுக்கள் சேர்தல் நடைபெறுகின்றன. (வேதி)

saturated solution - நிறைவுறு கரைசல்: குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் பெரும அளவு கரைபொருள் கரையக்கூடிய கரைசல். (வேதி)

Saturn - சனி: வியாழன், யுரேனஸ் ஆகிய இரு கோள்களுக்கிடையே சுற்றுவழியமைந்த கோள். வளையங்களைக் கொண்டுள்ளது தனிச்சிறப்பு. அமெரிக்கக் கோள் துருவி பயணியர், வாயேஜர், ஆகியவை இக்கோளை ஆராய்ந்துள்ளன. 17 நிலாக்கள் உண்டு. அவற்றில் பெரியது டைட்டான். (வாணி)

scabies - சொறிசிரங்கு: அரிப் புண்ணியால் ஏற்படும் அதிகம் தொற்றக்கூடிய தோல்நோய். கந்தகக் களிம்பு மருந்து தடவலாம். ஊசியும் போட்டுக் கொள்ளலாம். (உயி)

scalar quantity- அளவுசார்அளவு: திசை சிறப்பாகக் கொள்ளப்படாத அளவு. தொலைவு எ-டு ஒ. vector quantity.

scale - 1. அளவுகோல்: ஆய்வுக் கூடக் கருவி. 2. செதில்: மீன், பூக்கள் ஆகியவற்றில் காணப் படுவது. (ப.து)

scale formation - செதில்படிதல்: கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும்பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக்கார்பனேட்டாகக் கொதிகலன்களில் அடியில் சேறுபோன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி. ஆகவே, எரி பொருள் செலவு. 2. கலன் உருகல். 3. கலனைச் செதில் அரித்தல். போக்க வழி: கடின நீரைத் தகுந்த வழியில் மாற்றல். (இய)

scandium - ஸ்கேண்டியம்: Sc. இலேசான எடையுள்ள தனிமம். 800க்கு மேற்பட்ட கனிமங்களில் சிறிதளவுள்ளது. மீச்செறிவு ஒளிகளில் பயன்படுவது. (வேதி)

scanning - அலகிடுதல், வரி வரைவு செய்தல்: மின்னணுத் துப்பாக்கியிலிருந்து வரும் மின்னணுக்கதிர்கள் இடவலமாகவும் மேலுங்கீழாகவும் படத்தின் மீது விழுகின்றன. இந்நிகழ்ச்சி அலகிடுதலாகும். (இய)

scanning microscope - அலகிடும் வட்டு, வர வரைவுத்தட்டு: இதனை நிப்காவு என்பார் 1884இல் கண்டறிந்தார். உருவினைப் பல இணைக் கூறுகளாக இது பிரிக்கிறது. இதன் வேலையை இப்பொழுது எதிர்மின் கதிர்க்குழாய் செய்கிறது. (இய)

scanning microscope - அலகிடும் நுண்ணோக்கி. (இய)

scapula - தோள்பட்டை எலும்பு: தோள் வளையத்திலுள்ள இரு எலும்புகளில் ஒன்று. மற்றொன்று கழுத்துப் பட்டை எலும்பு. (உயி)

scattering - சிதறல்: பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது ஒரு கதிர்வீச்சுச் சுற்றைப் பரவுதல். முதல் திசையில் செல்லும் ஆற்றலைக் குறைப்பது. இது மூன்று செயல்களின் சேர்க்கையாக அமையலாம். ஒளிமறிப்பு, உட்கவரல், விளிம்பு வளைவு. (இய)

scavenger - தோட்டி: இறந்த‌ விலங்குகளையும் மட்கும் பொருள்களையும் கழிவுகளையும் உண்ணும் விலங்கு. இதனால் துப்புரவு வேலை நடைபெறுகிறது. எ-டு பன்றி, காகம், ஓநாய். (உயி)

Schiff's base - ஷிஃப் காரம்: நறுமண‌ அமைனுக்கும் ஆல்டிகைடுக்கும் இடையே நடைபெறும் குறுக்கல் வினையினால் தோன்றுங் கூட்டுப்பொருள். (வேதி)

Schiffs reagent - ஷிஃப் வினையாக்கி: ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையுங் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள். (வேதி)

schizocarp - பல்பிளவுறுகனி: இது ஒரு வெடிகனி, வழக்கமாக, இதில் இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகள் இருக்கும். இவ்விலைகள் சிறுகனிகளாகப் பிளவுறுகின்றன. ஒவ்வொரு சிறு கனியிலும் ஒருவிதை இருக்கும். ஆமணக்கில் கனி உறைதெறித்து விதை வெளிவரும். எ-டு துத்தி, கொத்துமல்லி. (உயி)

schizophyta - பிளவுறுதாவரங்கள்: பிளவுறல் மூலமே பெருகுந் தாவரங்கள். எ-டு குச்சியங்கள், நீலப் பசும்பாசிகள். (உயி)

Schultz's solution - சுல்லட் கரைசல்: பொட்டாசியம் அயோடைடும் துத்த குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல். செல்லுலோசை ஆய்ந்தறியப் பயன்படுவது. (வேதி)

science - அறிவியல்: இயற்கையின் இயல்பை ஆராயுந்துறை. முறையான அறிவுள்ள துறை அனைத்தும் அறிவியலே. இது இயற்கை அறிவியல்கள், உயிரியல் அறிவியல்கள், சமூக அறிவியல்கள் என மூன்று வகைப்படும். முதல் வகையில் இயற்பியல், வேதியியல் முதலியனவும் இரண்டாம் வகையில் விலங்கியல், தாவரவியல் முதலியனவும் மூன்றாம் வகையில் சமூக அறிவியல், உளவியல் முதலியனவும் அடங்கும். உற்நோக்கலும் ஆய்வுகளும் அறிவியலுக்கு அடிப்படையானவை. அறிவியல் முறை அதனை வளர்ப்பது. அறிவியல் பயிற்சியினால் உண்டாவது அறிவியல் மனப்பான்மை அல்லது பார்வை. (பது)

scientific method - அறிவியல் முறை: அறிவியல் சிக்கலுக்குத் தீர்வு காணும் முறை. இதில் சிக்கல்கள் இனமறியப்பட்டு அவற்றிற்குரிய தகவல்கள் திரட்டப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தற்காலிக முடிவு மேற்கொள்ளப்படுகிறது. இது கருதுகோள் ஆகும். உற்று நோக்கல் ஆய்வுகள் மூலம், இம்முடிவு சரியாக்கப்பட்டு இறுதியாக விதி அல்லது கொள்கையாக வகுக்கப் படுகின்றது. ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண இம்முறை எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. (பது)

scion - ஒட்டு: ஒரு தாவரத்திலிருந்து பிரிக்கப்படும் மொட்டு அல்லது தண்டகம் (தண்டு + இலை). இது அரும்புதல் அல்லது ஒட்டுதல் மூலம் புதிய தாவரமாக வளரவல்லது. எ-டு எலுமிச்சை, மா. (உயி)

scierenchyma - கடுந்திசு: வந்திசு. இது ஒருவகை நிலைத்திசு. இதன் உயிரணுச்சுவர்கள் தடிமனாக முன்கணியம் பயன்படுவதால், இதன் அணுக்கள் உயிரற்றவை. இதில் நார்த்திசுவும் கல்லனுக்களும் உள்ளன. இவை தாவரங்களுக்கு வலுவளிக்க வல்லவை. இத்திசுவிற்குக் கடினத்தன்மை இருப்பதால் இதனை கடுமம் எனலாம். (உயி)

scierotic coat - விழிவெளிப் படலம்: கண்ணில் மூன்று போர்வைகள் உள்ளன. அவற்றில் முதல்போர்வை இவ்வெளிப் படலமாகும். ஏனைய இரண்டு விழியடிக் கரும்படலம், விழித் திரை. இது கடினமான போர்வை. ஆகவே, இதைக்கடும் படலம் எனலாம். இப்படலம் கண்ணுக்கு முன்னே விழிவெண் படலமாகியுள்ளது. இது கண்ணுக்குப் பாதுகாப்பளிப்பது. (உயி)

scorpioid cyme - தேன்வடிவப் பூக்கொத்து: இது ஒரு முடிவுள்ள கிளைப்பூக்கொத்து. முதல்காம்பிற்கு இரண்டாங் காம்பு வலமிருத்தல், மூன்றாங் காம்பு இரண்டாங் காம்பிற்கு இடமிருத்தல். மூன்றாங் காம்பிற்கு நான்காம் காம்பு வலமிருத்தல். இவ்வமைப்புமுறை மாறி மாறித் தொடரும். மாறி மாறியுள்ள கிளைகள் ஒடுங்குவதால், இவ்வளைவு நிலை ஏற்படுகிறது. எ-டு ஈலியோ டிராபியம். இதனை வளையப் பூக்கொத்து என்றும் கூறலாம். பா. inflorescence (உயி)

scorpion - தேள்: எண்காலி வகுப்பு. நீளம் 10- 30 செ.மீ தலையும் மார்பும் இணைந்த முன்னுடல், உடலில் முன்புறம் ஓரிணை பெரிய இடுக்கிகள் உண்டு. தவிர, இதன் உடலில் இரண்டாம் இனை ஒட்டுறுப்பும் நான்கு இணைக் கால்களும் உண்டு. உணரிகள் இல்லை. வளையத்தாலான வயிறு. வளைந்த வால் பின்னுடலில் இடையுடலில் முடியும். வால் முனையில் கொடுக்குள்ளது. (உயி)

screw - திருகு: சாய்தள அடிப்படையில் அமைந்த கருவி. எந்திரலாபம் அதிகமுள்ளது. ஆகவே, செய்யப்படும் வேலையும் அதிகம். எ.டு திருகு உயர்த்தி. பேருந்துகளின் டயர்களைப் பழுதுபார்க்க அவற்றைச் சிறிது உயர்த்தி நிறுத்தப் பயன்படுவது. (இய)

Screw gauge - திருகுமானி: திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையிலுள்ள தொலைவு புரியிடைத் தொலைவு ஆகும். மீச்சிற்றளவை = புரியிடைத் தொலைவு தலைக்கோல மொத்தப் பிரிவுகள். (இய)

scurvy - கர்வி: உணவில் உயிரியன் சி குறைவினால் உண்டாகுங் குறைநோய். நெல்லிக்காய், நாரத்தை முதலிய உணவுகளை உட்கொள்ள இது நீங்கும். பா. vitamins.

scutellum - கேடயம்: 1. பறவைக் காலின் செதில், 2. பூச்சியின் மேற்புற மார்புமுட்கள். 3. நெல் விதை முளைக்கும்போது அதன் மெலிந்த விதையிலை, முளை குழ்தசையிலிருந்து உணவுப் பொருளை உறிஞ்சிப் பாதுகாப்பு இலையாக மாறும். இப்பகுதியே கேடயம். (உயி)

sea - கடல்: உப்புநீர்த் தொகுதி. 75% நிலமேற்பரப்பு இதனாலானது. (உயி)

sea adder - கடல்சூழல்மீன்: மெலிந்த மீன், நீண்டது. உடல் கடினத்தட்டுகளால் மூடப்பட்டுள்ளது. (உயி)

sea elephant - கடல்யானை: யானைசீல். (உயி)

seahorse - கடல்குதிரை: குதிரை ஒத்த தலை இருப்பதால் இதற்கு இப்பெயர். வாலுள்ள சிறிய மீன். நீரில் செங்குத்தாக மிதப்பது. கழுத்தையும் உடலையும் கடினத்தட்டுகள் முடியுள்ளன. வால் துடுப்பில்லை. பல வகைகளில் ஆண் தன் வயிறு அல்லது வாலுக்கருகில் ஒரு பை கொண்டுள்ளது. இப்பையில் பெண் இடும் முட்டை கொண்டு செல்லப்படும். (உயி)

sea lion - கடலரிமா: பெரிய சீல். இதன் புறச்செவிகளும் பின் துடுப்புகளும் முன்னோக்கி அமைந்துள்ளன. வட பசிபிக் பெருங்கடலில் வாழ்வது. (உயி)

sea snake - கடற்பாம்பு: கடலில் வாழும் சிறியபாம்பு, நஞ்சுள்ளது. (உயி)

sea urchin - கடல் முள்ளெலி: சிறிய கடல் விலங்கு. இதனை முடியுள்ள ஒடு கூரிய முட்களுடையது. (உயி)

sea weeds - கடற்பாசிகள்: பல‌ கண்ணறையுள்ள பெரிய பாசிகள். (உயி)

seal - சீல்: மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டை பாடப்படுவது இதற்குக் கடலரிமா என்னும் பெயருமுண்டு. (உயி)

seal rookery - சீல் வளர்ப்பகம்: சீல்கள் உண்டாகுமிடம். உயி)

sebaceous glands - கொழுப்புச் சுரப்பிகள்: பாலூட்டிகளின் சுரப்பிகள். இவற்றின் சுரப்பு மயிரைப் பளபளப்பாக வைப்பது. (உயி)

Seebeck effect - சீபெக் விளைவு: வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த சந்திகளை வெவ்வேறான வெப்ப நிலைகளில் வைத்தால், அவற்றின் கற்றில் மின்னோட்டம் நிகழ்கிறது. இவ்வெப்ப மின்னோட்ட நிகழ்ச்சிக்குச் சீபெக்கு விளைவு என்று பெயர். இதனை முதன் முதலாக 1826இல் சீபெக்கு என்பார் கண்டறிந்தார். (இய)

sebum - கொழுப்புச்சுரப்பு: கொழுப்புச் கரப்பிகளினால சுரக்கப்படுவது. இது மயிரையும் தோலையும் உயவிடுகிறது. (உயி)

second - வினாடி, நொடி: அலகுச்சொல். காலத்தின் எளிய அடிப்படை அலகு. ஒரு நிமிடத்துக்கு 60 வினாடி. 602 = ஒரு மணி. (இய)

seconds pendulum - வினாடி ஊசல்: 2 வினாடி அலைவு நேரமும் 100 செ.மீ நீளமுள்ள ஊசலே வினாடி ஊசல், இதை நொடி ஊசல் என்றுங் கூறலாம். ஒ. pendulum. (இய)

secondary cell - இரண்டாம் நிலை மின்கலம்: துணை மின்கலம். (இய)

secondary colours - இரண்டாம் நிலை நிறங்கள்: முதன்மை நிற இணைகளை கலப்பதால் தோன்றும் நிறங்கள். ஒ. primary colours. (இய)

secondary growth, secondary thickening - இரண்டாம் நிலை வளர்ச்சி: இரண்டாம் நிலை அல்லது பக்க ஆக்கு திசுக்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இருவிதை இலைத் தாவரங்களுக்கே உரியது. இரண்டாம் நிலைத்தடிப்பு என்றும் பெயர். ஒ primary growth. (உயி)

secondary sexual characters - இரண்டாம் நிலைப் பால் பண்புகள்: பால் தொடர்புடைய விலங்குப் பண்புகள். இவை இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையவை அல்ல, எ-டு மீசை முளைத்தல், முலை உண்டாதல், ஆண் தவளையின் கலவித்திண்டு. (உயி)

secretion - சுரப்பு: உயிரணு உண்டாக்கும் நீர்மப் பொருள். குறிப்பிட்ட வேலையைச் செய்வது. எ-டு ஸ்டார்ச்சு செரிக்க உமிழ்நீர் உதவுகிறது.

section - வெட்டுப்பகுதி: நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு. (உயி)

sedative - தணிப்பி: தணிப்பு மருந்து. படபடப்பு. நடுக்கம் முதலியவற்றைக் குறைக்கும் மருந்து. (மரு)

sedimentation - வண்டல் படிதல்: மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய விலக்கி உதவியுடன் பயன்படுகிறது. (வேதி)

seed - 1.விதை: கருவுற்ற சூலே விதை; ஒரு விதை இலை, இரு விதை இலைத் தாவரங்களுக்கு மட்டுமே உரியது. 2. நுண்படிகம்: ஒரு கரைசல் வீழ்படிய நீர்மம் அல்லது வளியுடன் சேர்க்கப்படும் சிறிய படிகம்.

seed coat - விதையுறை: இது வெளியுறை, உள்ளுறை என இருவகைப்படும். சூலுறையின் புறப்பகுதியே வெளியுறை. அகப்பகுதி உள்ளுறை. ஒ. integument (உயி)

segment - துண்டம்: சிறுதுண்டு, துண்டம். (உயி)

segmentation - துண்டாதல்: பா.metamerism. (உயி)

segregation - தனித்துப்பிரித்தல்: மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல் பிரிவில் நடைபெறுகிறது. அப்போது ஒற்றை மய முதிர்ந்த கருவணுக்கள் (விந்தணுவும் முட்டையும்) உண்டாகின்றன. (உயிர்)

seismology - புவிநடுக்க இயல்: நிலநடுக்கங்களைப் பற்றி ஆராயுந்துறை. (பு:அறி)

seismometer - புவிநடுக்கமானி: நிலஅதிர்வுகளைப் பதிவு செய்யுங்கருவி. (பு:அறி)

selenology - திங்களியல்: திங்களை அறிவியல் அடிப்படையில் ஆராயும் வானியல் பிரிவு. இத்துறை வானவெளி ஆராய்ச்சியால் நன்கு வளர்ந்துள்ளது. (வானி)

selenium - செலீனியம்: Se. நான்கு வேற்றுருக்களில் உள்ள உலோகம். அவையாவன 1. உருவமற்ற செந்நிறத்திரள். 2. உருவமற்ற கறுப்புநிறக் கண்ணாடி போன்ற திரள். 3. கிச்சிலி சிவப்பு நிறமுள்ள படிகங்கள். 4. சாம்பல் நிறப்படிகங்கள். கண்ணாடித் தொழிலில் நிறம் நீக்கியாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். ஒளிமின் கருவிகளிலும் பயன்படுதல். (வேதி)

self-fertilization - தற்கருவுறுதல்: மரபுவழியில் ஒரே மூலத்திலிருந்து பெறப்பட்ட இரு பாலனணுக்களுக்கிடையெ ஏற்படுங்கலப்பு. வழக்கமாக, இது ஒரே தனி உயிரியில் ஏற்படுவது. தாவரங்களிலும் விலங்குகளிலும் மிக அரிதாக நடைபெறுவது. எ.டு நிலக்கடலை, மண்புழு, பரமேசியம். இதைத் தற்கலப்பு என்றும் கூறலாம். (உயி)

Seliwanoff's test - செலிவான்ஃப் ஆய்வு: கரைசலில் பிரக்டோஸ் இருப்பதைக் கண்டறியும் ஆய்வு. (உயி)

semem - விந்து: விரைகளும் துணை ஆண் உறுப்புகளும் சுரக்கும் பாய்மம். இதில் விந்தணுக்களும் ஊட்டப் பொருள்களும் உள்ளன. (உயி)

semicircular canal - அரை வட்டக்குழல்: உட்செவியில் உள்ளது. (உயி)

semiconductor - அரைகுறைக் கடத்தி: சிலிகான் அல்லது ஜெர்மானியம். படிகத்திண்மம். மின்கடத்தும் திறன் எளிதில் கடத்திக்கும் காப்புப் பொருளுக்கும் இடைப்பட்டது. மின்னணுவியலில் பெரும்புரட்சி ஏற்படுத்திய படிகம். (இய)

seminal receptacle - விந்து ஏற்பகம்: பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள பை. பயன்படும்வரை இதில் விந்தனுக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. (உயி)

seminal vesicle - விந்து கொள்ளகம்: ஆண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள பை, பெண்னிடம் செல்லும் வரை இதில் விந்தனுக்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. (உயி)

seminiferous tubules - விந்தனுக் குழலிகள்: விரையில் நேர்த்தியாகச் சுருண்டு அமைந்துள்ள குழலிகள். இவற்றில் வித்தணுக்கள் உண்டாகின்றன. மனிதனிடம் ஒவ்வொன்றும் 15 மி.மீ குறுக்களவும் 50 செமீ நீளமும் உள்ளது. விந்துகுழலில் விந்தணுவை இது சேர்க்கிறது. (உயி)

semipermeable membrane - அரைகுறை ஊடுருவு படலம்: சில மூலக்கூறுகளை மட்டும் தன் வழியே செல்ல விடும் படலம், எ-டு செல்லோபேன்தாள். (இய)

senescence - மூப்படைவு: வயது ஆக ஆக உள்ளமும் உடலும் இயல்பாக மாற்றம் அடைதல். (உயி)

sensation - புலனுணர்தல்: ஒரு புலன் தனக்குப் பொருத்தமான தூண்டலினால் தாக்குறுவதால் உண்டாகும் உடன் உணர்வு. (உயி) -

sense organ - புலன் உறுப்பு: துண்டலுக்குத் துலங்கலை உண்டாக்கும் உறுப்பு ஐம் பொறிகள். பா. ear eye. (உயி)

sentiment - பற்று: ஆள், பொருள் அல்லது கருத்துப்பற்றிய உணர்ச்சிகளின் தொகுப்பு. பொதுவாக, விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும பற்று உள்ளடக்கியது. சூழ்நிலைப் பட்டறிவிற்கேற்ப உயர்வது. (உயி)

sepal - புல்லி: பூவிதழ்களில் ஒருவகை. பா. petal. (உயி)

sepsis - புரை உண்டாதல்: சீழ் உண்டாக்கும குச்சியங்கள் உடலில் தொற்றி நசிவை ஏற்படுத்துதல். (உயி)

septum - தடுப்பு: பிரிசுவர். இருகுழி அல்லது அறைகளுக்கிடையே உள்ள தடுப்பு. இதயம் மேலறை கீழறையாகவும் இடது அறை வலது அறையாகவும் தடுப்பினால் பிரிக்கப்பட்டிருத்தல். (உயி)

sequestration - அயனிமுடமாதல்: ஒரு கரைசலிலுள்ள அயனியோடு அணைமம் (காம்ப்ளக்ஸ்) தோன்றுவதால், அந்த அயனி தன் இயல்பான செயலை இழத்தல். அயனி முடமாக்கிகள் தீங்கு நீக்கும் பொருள்களே. (வேதி)

series - 1. தொடர் 2 வரிசை: (ப.து)

serous membrane - தெளியப் படலம்: நுரையீரல் குழிகள் முதலியவற்றைக் கரையிடுந்திசு. (உயி)

serrate - பல்விளிம்பு: இலையில் முனைநோக்கி முக்கோனப் பற்கள் அமைந்திருத்தல். எ-டு குப்பைமேனி. (உயி)

serrulate - நுண்பல் விளிம்பு: இலையில் முனைநோக்கி நுண்ணிய பற்கள் அமைந்திருத்தல். (உயி)

serum - தெளியம்: தெளிவான நீர்மப் பாய்மம். அல்லது உறைந்த குருதியிலிருந்து பிரிந்த கணிமம். (ப்ளாஸ்மா). இது வெளிறிய மஞ்சள் நிற நீர்மம். பைபிரினோஜன் நீங்கியது. மற்ற வகையில் இது அமைப்பில் கணிமத்தை ஒத்தது. ஊட்டச் சத்தையும் எதிர்ப்புப் பொருள்களையும் எதிர்ப்பிகளையும் எடுத்துச் செல்வது. (உயி)

sesamoid bone - எள் வடிவ‌ எலும்பு: சிறிய முட்டை வடிவ எலும்பு, தசை நாணில் உண்டாவது. பா. patella. (உயி)

sessile - இயக்கமற்ற, இடம் பெயராத: கடல் அனிமோன்கள். 2. காம்பற்ற ஓக் இலை. (உயி)

seatae - 1. புள்ளிகள்: வளைய உடலியான மண்புழுவில் இடப்பெயர்ச்சிக்காகப் பயன்படும் பகுதிகள். இயக்கத்தின் பொழுது தரையில் பிடிப்பை உண்டாக்கப் பயன்படுபவை. 2. சிதல்காம்பு: மாசிகளின் சிதல் பயிர்க்காம்பு.

setting - இறுகுதல்: சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப் பொருளாதல். இக்காரையினுள்ள சேர்மங்களின் நீரேற்ற வினையும், இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்களாகும். (வேதி)

sewage - சாய்க்கடை: கழிவுநீர் செல்லும் வழி. நல்ல வாழ் நலத்திற்கு நல்ல சாய்க்கடைத் திட்டம் இன்றியமையாதது. (உயி)

sex- பால்: ஆண், பெண் என்னும் தனி உயிர்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளின் தொகுப்பு. (உயி)

sex appeal - பால் கவர்ச்சி: பொதுவாக, ஆண் பெண்ணைக் கவருந்திறன், விலங்குகளிடத்து இதற்குப் பல அமைப்புகள் உள்ளன. நிறம், மணம், உறுப்பு முதலியவற்றைக் கூறலாம். (உயி)

sex cell - பாலணு: ஆண் அணு (விந்து). பெண் அணு (முட்டை). (உயி)

sex chromosome - பால்நிறப்புரிகள்: இது பாலை ஆனா பெண்ணா என்று உறுதி செய்வது. (உயி)

sex determination - பால் உறுதி செய்தல்: ஒரு சிறப்பினத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக இருக்கும்பொழுது, பால் உறுதி செய்தல் மரபணு வழி அமைந்ததாகும். சில சமயங்களில் ஒற்றை இணை இணைமாற்றுகள் பாலை உறுதி செய்தல். வழக்கமாக முழுநிறப்புரிகளே நிறப்புரிகளே. பாலை உறுதி செய்பவை. (உயி)

sex hormones - பால்தூண்டிகள்: ஆண்ட்ரஜன்களும் ஆஸ்ட்ரஜன்களும். (உயி)

sextant - உயரமானி: அணுக‌ இயலாக் கதிரவன் முதலிய விண் பொருள்களை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

sexual reproduction - பாலினப் பெருக்கம்: ஆண் பெண்ணாகிய இரு பாலணுக்களும் சேர்வதால், புதிய உயிர்கள் தோன்றும் முறை. உயிரின் அடிப்படைச் செயல்களில் ஒன்று. (உயி)

shadow - நிழல்: ஒளி ஊடுருவாப் பொருள். ஒளியைத் தடுக்கும் போது, ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு. ஒளிமூலம் புள்ளியாக இருக்குமானால் நன்கு உறுதி செய்யப்பட்ட வெளிக் கோட்டினை நிழல் கொண்டிருக்கும். மூலம் குறிப்பிட்ட அளவு இருக்குமானால், நிழலில் இரு தெளிவான பகுதிகள் இருக்கும். ஒன்று முழு நிழல், மற்றொன்று அரைநிழல். கோள் மறைவில் இந்நிகழ்ச்சியுள்ளது. (இய)

shark - சுறா: பெரிய கடல்மீன், நீளம் 13.5 மீ. பெருந்தீனி வேட்கையுள்ளது. திட்டமான கறுப்பு சாம்பல் நிறத்தோல், மீன் உண்ணி, மனிதனையும் தாக்க வல்லது. (உயி)

shell - ஒடு: மீன் அல்லது ஆமை யின் கடின வெளிப்புற உறை. (உயி)

shellac - அரக்கு: பெண் அரக்குப் பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும். நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது. (உயி)

sheradizing - துத்தநாகம் பூசல்: காற்றில்லாமல் துத்தநாகத்துளை வெப்பப்படுத்தித் துத்தநாகப் பூச்சு பூசுதல். இம்முறையைப் புனைந்தவர் ஷெராடு. வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்ய இம்முறை பயன் படுதல். இவை அரிமானத் தடையுள்ளவை. (வேதி)

shock wave - அதிர்ச்சி அலை: ஒரு பாய்மத்தில் உண்டாவது. உயரழுத்தமும் வெப்பநிலையுமுள்ள மிகக் குறுகிய பகுதி அல்லது மண்டலம். ஒரு நிலையான பொருளின் மீது மீவொலி நிலையில் பாய்மம் அல்லது வீழ்பொருள் ஒன்று செல்கின்ற பொழுது, இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மின்னல் தாக்கு, குண்டுவெடிப்பு முதலிய அலைக் கழிவுச் செயல்களாலும் இவ்வலை உண்டாகும். (இய)

shoot - தண்டகம்: தண்டும் இலையும் சேர்ந்த பகுதி. தாவர உடல் அச்சின் மேல்பகுதி. தரைக்குமேல், நில ஈர்ப்பை எதிர்த்து வளர்வது, தண்டு, இலை, பூக்கள், ஆகியவை அடங்கியது. இது தண்டகத் தொகுதி. வேர்த் தொகுதி அச்சின் கீழ்ப் பகுதி. இது நில ஈர்ப்பு நோக்கி வளர்வது. இதில் ஆணிவேர், இரண்டாம் வேர், மூன்றாம் வேர் முதலியவை உள்ளன. (உயி)

short circuit - கிட்டச்சுற்று: இஃது இயல்பு மீறிய சுற்று. பக்க இணைப்பு, தொடர் இணைப்பு ஆகிய இரண்டிலும் ஏற்படுவது. காப்பிடப்பட்ட கம்பிகள் உறை நீங்கிய இடத்தில் சேருவதால் உண்டாகும் மின்னோட்ட வழி. உருகிகளைப் பயன்படுத்தல். கம்பிகளைக் காப்பிடுதல் ஆகிய வற்றின் வாயிலாகத் தடுக்கலாம். இதன் குறைகளாவன. 1. தீ நேர்ச்சி உண்டாதல் 2. வீணாக மின்சாரம் செலவழிதல். பா. circuit (இய)

shoulder girdle - தோள்வளையம்: பா. pectoral girdle. (உயி)

shunt - தடம்மாற்றி: ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். இத்தடையே தடம் மாற்றி. (இய)

Siamese twins - சியாமிய இரட்டையர்: ஒரு தனி உயிரணுவிலிருந்து உண்டாகிய இரு தனி உயிர்கள். பிறப்பிலிருந்து ஒரு தசைக் கயிற்றினால் பிணைக்கப் பட்டிருந்தவை. இச்சீன இரட்டையர் காலம் (1811 - 74) இது போன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பெயர் வழங்குவது நடைமுறையில் உள்ளது. (உயி)

sibling - கால்வழி: ஒரே கலப்பிலிருந்து உண்டாகும் இரண்டு அல்லது மூன்று கால்வழிகள் சகோதரர்களும் சகோதரிகளும். (உயி)

sidereal time - விண்மீன் அளவு நேரம்: விண்மீன்களைக் கொண்டு அளக்கும் நேரம். (வானி)

side reaction - பக்கவினை: முதன்மை வினை போலவே நடக்கும் வேதிவினை. வரையறுக்கப்பட்ட அளவுக்கு நடைபெறுவது. (வேதி)

Siemen's process - சீமன் முறை: எஃகு உருவாக்கும திறந்த உலை முறை.

sieve elements - சல்லடைக் கூறுகள்: சல்லடைக் குழாய்களை உறையில் விதையுள்ள தாவரங்கள் உண்டாக்குபவை. (உயி)

sieve tube - சல்லடைக்குழாய்: சல்லடைக் கூறுகளால் உருவாவது. இதன் வழியாக உணவு செல்கிறது. (உயி)

sight, long - எட்டப்பார்வை: விழிக்கோளம் சுருங்குவதால், அருகிலுள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளிக் குவியம் விழித்திரைக்குப் பின் விழுகிறது. இதனால் அருகிலுள்ள பொருள்களை மட்டும் பார்க்க முடியும். இதைப் போக்க குவிவில்லையைப் பயன்படுத்த வேண்டும். (இய)

sight, short - கிட்டப்பார்வை: விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால், தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலை பொருள்களைப் பார்க்க முடிவதில்லை. இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும். (இய) sign - குறி: ஓர் எண் எதிரிடையானதா நேரிடையானதா என்று தெரிவிப்பது. குறியில்லாத எண் நேரிடை எண்ணாகவே கருதப்பெறும் ஒ. symbol. (இய)

signal - குறிகாட்டி: போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவுள்ள அமைப்பு. பெருநகரங்களில் சாலைகள் சந்திக்குமிடத்தில் உள்ளது. 2. குறிபாடு: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தப்படும் செய்தி. எ-டு இருநிலைக் குறித்தொகுதி, மோர்ஸ் குறித்தொகுதி. (இய)

signal generator - குறிபாடு இயற்றி: அலைவடிவப் பிறப்பி. (இய)

silica - சிலிகா: கடினக் கண்ணாடி போன்ற கனிமம். பல வடிவங்களில் உள்ளது. மண் வகைகள், படிகக்கல், மண். (வேதி)

silica gel - இழுமம்: ஒளி புகக் கூடிய நுண்துளைப் பொருள். நீலமும் வெள்ளையும் கலந்தது. அதிக மேற்பரப்புடையது. நாற்றம் நீக்கியாகவும், வளி உறிஞ்சியாகவும் பயன்படுவது. (வேதி)

silican - சிலிகன்: Si. அதிகங் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்கள் உள்ளன. உருவமற்றது. படிகமுள்ளது. உருவமற்றது மென்மையானது. மாநிறமானது. நீருள்ளது. மின் அரிதில் கடத்தி. படிக வடிவம் கடினமானது. சாம்பல் நிறமுடையது. பளபளப்பானது. மின் எளிதில் கடத்தி சிலிகன் அரிமான எஃகு கண்ணாடி காந்தங்கள், உயிர்வளி நீக்கி ஆகியவை உருவாக்கப் பயன்படுகிறது. (வேதி)

silican carbide - சிலிகன் கார்பைடு: நிறமற்றது. வணிகச் சிலிகன் கார்பைடு தூய்மையற்றதாக இருப்பதால், கருத்த மாநிறங் கொண்டது. வைரத்திற்கடுத்த கடினத் தன்மை கொண்டது. துப்புரவுத் தேய்ப்புப் பொருள். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றப் பயன்படுவது. (வேதி)

silican process - சிலிகன் முறை: நீர்வளி உண்டாக்கும் முறை. சிலிகனில் சோடியம் அய்டிராக்சைடைச் சேர்க்க, இவ்வளி கிடைக்கும். (வேதி)

silicate - சிலிகேட்: உலோக அயனியையும் அரிய சிலிகான் உயிர்வளிக்கூட்டுப் பொருளையுங் கொண்ட வேதிப்பொருள். எ-டு அலுமினியம் சிலிகேட் (வேதி)

silicate minerals - சிலிகேட் கனிமங்கள்: பாறை தோற்றுவிக்கும் கனிமத் தொகுதி. புவி வெளிப்புற ஒட்டில் அதிகமுள்ளது. எல்லாக் கனிமங்களிலும் மூன்றில் ஒரு பங்குள்ளது. ஆறு தொகுதிகள். எ-டு பைலோசிலிகேட் காக்கைப்பொன், களிமண் கனிமங்கள். (வேதி)

silicone - சிலிகோன்: கரிமச் சிலிகன் சேர்மங்களில் ஒன்று. வெப்பத்திற்கும் நீருக்கும் தடையளிப்பது. உயவிடு பொருளாகவும் மெருகுப் பொருளாகவும் பயன்படுகிறது. (வேதி)

siliconising - சிலிகன் முலாம் பூசுதல்: உயர்ந்த வெப்பநிலையில் உலோகத்தில் சிலிகனைப் பரவச் செய்தல். (வேதி)

silicon oxide - சிலிகன் ஆம்சைடு: SiO2. இரு வேற்றுருக்கள் உண்டு. படிகமுள்ளது, படிகமற்றது. இரண்டும் நீரில் கரைந்து காடிகளைக் கொடுக்கும். கண்ணாடி செய்யவும் சிமெண்டு (படிகாரை) செய்யவும் பயன்படுகிறது. (வேதி)

silican steel - சிலிகன் எஃகு: சிலிகன் 05.4.5% கொண்ட எஃகு மின்மாற்றிச் சுருள்கள் செய்யப் பயன்படுதல். (வேதி)

silver - வெள்ளி: Ag. பளபளப்பான வெண்ணிற உலோகம். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். மின்சாரத்தையும் வெப்பத்தையும் எளிதில் கடத்துவது. உலோகமாகவும் உலோகத் தாதுவாகவும் கிடைத்தல், சல்பைடு, சல்பைடுதாது அர்ஜண்டைட்டு, குளோரைடு தாது கொம்பு வெள்ளி. நாணயங்கள், பாண்டங்கள். அணிகலன் முதலியவை செய்யப் பயன்படுகிறது. (வேதி)

silver bromide - வெள்ளிப் புரோமைடு: AgBr. வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. கரையக் கூடிய புரோமைடை வெள்ளி நைட்ரேடுக் கரைசலுடன் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுதல். (வேதி)

silver iodide - வெள்ளி அயோடைடு: AgI. வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலுடன் கரையக் கூடிய அயோடைடு கரைசலைச் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுகிறது. (வேதி)

silver nitrate - வெள்ளி நைட்ரேட்டு: AgNO3. சாய் சதுரப் படிகங்கள். நிறமற்றவை. நீரற்றவை. நீரில் கரையக்கூடியவை. நீர்த்த நைட்ரிகக் காடியில் வெள்ளியைக் கரைத்து ஆவியாக்கிப் படிகமாக்க, இப்பொருள் கிடைக்கும்.

simple harmonic motion - தனிச்சீரிசை இயக்கம்: இயங்கும் பொருள் ஒன்றின் முடுக்கம், எப்போதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கியும், அப்புள்ளியிலிருந்து உள்ள தொலைவிற்கு நேர்வீதத்திலும் இருந்தால், அவ்வியக்கம் சீரிசை இயக்கம் என்று பெயர்பெறும். எ-டு தனி ஊசலின் அலைவுகள். (இய)

simple machine - தனி எந்திரம்: ஒரு கருவியில் ஓரிடத்தில் செயற்படும் விசை, வேறோரிடத்தில் அளவும் திசையும் மாறச் செயல்படுமானால், அது தனி எந்திரம். எ-டு நெம்புகோல், கப்பி சாய்தளம், செயற்படுத்தும் விசை திறன். திறனால் இயற்றப்படும் விசை எடை. எந்திர இலாபம் = எடை/திறன்

= W/P (இய)

simple pendulum - தனிஊசல்: முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் குண்டு. இது தக்கையின் அடியில் தொங்குமிடம் தொங்கு புள்ளி. குண்டின் மையம் அலைவுப்புள்ளி. இவ்விரு புள்ளிகளுக்கு இடையிலுள்ள தொலைவு ஊசலின் நீளம்.

sine - சைன்: இது ஒரு நிலை எண். குறிப்பிட்ட கோணத்தின் எதிர்ப் புயத்திற்கும் கர்ணத்திற்குமுள்ள வீதம். 1-90° பாகைகளுக்குச் சைன்களை அட்டவணையிலிருந்து அறியலாம். (இய)

single bond - ஒற்றைப் பிணைப்பு: இரு - தனிமங்களுக்கிடையே உள்ள உடன்பிணைப்பு. இதில் இரு மின்னணுக்கள் சேர்கின்றன. (வேதி)

sintered glass - உருக்கி இணைத்த கண்ணாடி: தூளாக்கிய கண்ணாடியை உருக்கி இணைத்துச் செய்யப்படும் துளையுள்ள கண்ணாடி, எடையறி பகுப்பில் வீழ்படிவுகளை வடிகட்டப் பன்படுதல். (வேதி)

sintering - உருக்கி இணைத்தல்: உலோகம், பீங்கான் முதலியவற்றைத் துள் செய்து அவற்றின் உருகு நிலைக்குக் கீழ்வெப்பப்படுத்த அவை உறையும். உருக்கி இணைந்த கண்ணாடிகள் (சிண்டெர்டு கிளாஸ்) ஆய்வுக் கூடத்தில் வடிகட்டப் பயன்படும் துளையுள்ள பொருளாகும். (வேதி)

sinus - அறை, குழி, வழி: முக்கு வழி, சிரைக்குழி. (உயி)

sinus venosus - சிரைஅறை: மீனில் இதயத்தின் முதல் அறை. மெலிந்த சுவருடையது. (உயி)

Siphon - வடிகுழாய்: 1. ப வடிவமுள்ள வளைந்த குழாய். உயரத்திலுள்ள ஒரு கலத்திலிருந்து கீழுள்ள ஒரு கலத்திற்கு நீர்மத்தை மாற்றப் பயன்படுகிறது. நீர்மக் காற்றழுத்தம் இதில் பயன்படுகிறது. நீரூற்று கழுவு பீங்கானில் இந்நெறிமுறை யுள்ளது. (இய)

site - directed mutagenesis, STM - இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம், எஸ்டிஎம்: இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த் தொழில்நுட்ப இயலார் மைக்கல் சிமித். இக்கண்டுபிடிப்பிற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்களிக்கப்பட்டது. இந்த முறையால் புதுப் பண்புள்ள புரதங்களை உருவாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இதுவும் அச்சாணி போன்றது. (உயி)

SI units - எஸ்ஐ அலகுகள்: அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்துலக அலகுமுறை. இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி. இவ்வலகுகளைக் கொண்டு ஏனைய இயற்பியல் அளவுகளையும் வழியலகுகளாகப் பெறலாம். ஆக, அலகுகள் அடிப்படையலகுகள், வழியலகுகள் என இரு வகைப்படும். பா. base unit (இய‌)

sizing - பசையூட்டல்: எழுதுவதற்குப் பயன்படுத்தாள், நீர்மத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கக் கூடாது. அதற்காக இதில் ஜெலாட்டின் என்னும் பசைப் பொருள் தாளில் துளைகளை அடைப்பதற்காகப் பூசப்படுகிறது. இம்முறைக்குப் பசையூட்டல் என்று பெயர். (வேதி)

skatole - ஸ்கேட்டேல்: C9H9N. கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். வீறுள்ள மணமுண்டு. நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

skeletal muscle - எலும்புத் தசை: வேறு பெயர்கள், வரியுள்ள தசை, இயங்குதசை. சட்டகத்தின் எலும்புகளை அசையச் செய்வது. மைய நரம்புமண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. (உயி)

skeleton - எலும்புக்கூடு, சட்டகம்: தாங்குதலுக்காக விலங்குகளுக்குள்ள சட்டகம். இது புற எலும்புக்கூடு. அக எலும்புக்கூடு என இருவகைப்படும். பொதுவாக, முன்னது முதுகு எலும்பிலிகளுக்கும் பின்னது முதுகு எலும்பிகளுக்குமுண்டு. இதில் தலை, உடம்பு, புறத்துறுப்புகள் என்னும் உடல் பிரிவிற்கேற்ப எலும்புகள் அமைந்திருக்கும். (உயி)

skin - தோல்: உயிரிகளுக்கு இயற்கைப் போர்வையாக உள்ளது. இது புறத்தோல், அகத்தோல் என இரு பகுதிகளாக உள்ளது. இவ்விரு வகைத்தோல்களிலும் மேலும் பல பகுதிகள் உள்ளன. ஐம்பொறிகளில் பரப்பால் பெரியது தோல். உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலின் வெப்பநிலையைச் சரிசெய்கிறது. வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. (உயி)

skull - தலை எலும்புக்கூடு: தலை எலும்புச் சட்டகம். மண்டை ஓட்டு எலும்புகளையும் முக எலும்புகளையும் கொண்டது. (உயி)

slag - கசடு: உலையில் உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்போது உண்டாகும் கழிவு. இது இளக்கியினால் உண்டாவது. இரும்பு அதன் தாதுவிலிருந்து பிரிக்கப்படும் போது, அத்தாதுவுடன் கல்கரி, சுண்ணாம்புக்கல் ஆகிய இரண்டும் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் கல்கரி ஒடுக்கி, சுண்ணம்புக்கல் இளக்கி. இதனால் உருகிய இரும்பின் மேல் கசடு மிதக்கும். இரும்பு ஒரு திறப்பின் வழியாகவும் கசடு மற்றொரு திறப்பின் வழியாகவும் வெளியேறும். (வேதி)

sleep - உறக்கம்: துயில். வெளித் தூண்டல்களுக்குத் துலங்கல் குறைவாக உள்ள நிலை. உடலுக்கும் உள்ளத்திற்கும் இயற்கை ஓய்வு உறக்கமே. கனவில்லா உறக்கமில்லை. இது பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டள்ளது. (உயி)

sleep movements - உறக்க அசைவுகள்: பா. nyctinasty. (உயி)

slurry - பசைத்தொங்கல்: சேறு. நீர்மத்தில் தொங்கும் திண்மத் துகள்களின் மெல்லிய பசை. (வேதி)

small intestine - சிறுகுடல்: இரைப்பைக்கும் பெருங்குடலுக்கும் இடையிலுள்ளது. உணவு செரித்தலும் உறிஞ்சலும் நடைபெறுவது. (உயி)

smeltting - உருக்கல்: ஊதுலையில் ஓர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகளில் ஒன்று. இதில் வெப்பம் பயன்படுகிறது. தாது வறுக்கப்பட்ட பின், இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. செம்பு அதன் சல்பைடு தாதுவிலிருந்து இம்முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. (வேதி)

smog - புகைபனி: இதில் தடித்த கரும்புழுதியும் புகைக்கரி படிந்த கந்தகமும் இருக்கும். சாதகக் காற்று வெளிநிலைகளில் தொழிற்சாலை நகரங்களின் காற்றை மாசுபடுத்துவது. துரையீரல்களைப் பாதிப்பது. (இய)

smoke - புகை: வளியிலுள்ள நேர்த்தியான திண்மத்துகள்களின் தொங்கலாகும். நிலக்கரிப்புகை முதன்மையாகக் கரித்துகள்களாலானது. (இய)

smooth muscle - மென்தசை: இயங்குதசை உள்ளுறுப்புத்தசை பா. skeletal muscle (உயி)

smuts - கரிப்பூட்டை: ஒட்டுண்ணிப் பூஞ்சைகள், நெற்பயிரில் மணிகளுக்குப் பதிலாகக் கரிய சிதல்களை உண்டாக்குபவை. இந்நோய் கரிப்பூட்டைநோய் எனப்படும். (உயி)

snail - நத்தை: நிலக்காற்றை உண்டு வாழ்வது. நன்கு வளர்ந்த கருள் ஓடு உண்டு. சில வகைகள் உண்ணக் கூடியவை. (உயி)

snakes - பாம்புகள்: ஊர்வன வகுப்பைச் சார்ந்தவை. பலவகைகள். சிறப்பாக நச்சுள்ளவை. நச்சற்றவை என இருவகைப்படும். பெரியவை மலைப்பாம்பும் அரச நாகமும். (உயி)

sneezing - தும்மல்: இச்செயல் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள்முச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி முக்கு வழியாகவும் பாதி வாய் வழியாகவும் காற்று செல்லும். (உயி)

Snell's law - சினெல் விதி: எவ்வகை இரு ஊடகங்களுக்கும் படுகோண சைன் வீதமும் விலகு கோண சைன் வீதமும் மாறா எண். இது ஒளிவிலகலின் இரண்டாம் விதி. (இய)

snoring - குறட்டை விடுதல்: உள் நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் முச்சுவிடுவதால் இது நடைபெறுகிறது. (உயி)

snow - பனி: காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று, நீராவி, படிகமாக உறைகிறது. இதுவே பனி ஒ. Smog, dew. (இய)

snowstorm -பனிப்புயல்: காற்று வெளியின் உயர் பகுதிகளில் உள்ள காற்று விரைந்து குளிர்ச்சி அடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலுக்கு வழி வகுப்பவை. (இய)

soap - சவர்க்காரம்: உயர் கொழுப்புக் காடியின் காரஉப்பு. கழுவவும், துப்புரவு செய்யவும் பயன்படுதல். (வேதி)

soda - சோடா: வேதிப்பொருள். இருவகைப்படும். சலவைச் சோடா, சோடியம் கார்பனேட் சமையல் சோடா. சோடியம் இரு கார்பனேட் தவிர சோடா எனுஞ் சொல் பின்வருவனவற்றையும் குறிக்கும். சோடியம் ஆக்சைடு, சோடியம் அய்டிராக் சைடு (வேதி)

Soda ash - சோடா சாம்பல்: நிறமற்ற சோடியம் கார்பனேட். NaCO3 (வேதி)

soda water - சோடா நீர்: கரி ஈராக்சைடு அழுத்தத்தில் கரைந்த நீர், திறப்பதின் மூலம் அழுத்தத்தை நீக்க, வளியின் கரைதிறன் குறைவதால், நுரை ஏற்படுகிறது. (வேதி)

sodium - சோடியம்: Na. வெள்ளி போன்ற வெண்ணிற உலோகம். சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் புளோரைடு ஆகியவை சேர்ந்த உருகிய கலவையை மின்னாற் பகுப்பதன் மூலம் இப்பொருள் கிடைக்கும். நீருடனும் உப்பீனிகளுடனும் சேர்ந்து, விரைந்து வினையாற்றும் ஒடுக்கி யாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். (வேதி)

sodium aluminate - சோடியம் அலுமினேட்: Na2AI2O4. வெண்ணிறத் திண்மம். நிறம் நிறுத்தி, கண்ணாடி உற்பத்தியிலும் பயன்படுதல். (வேதி)

sodium bicarbonate - சோடியம் இரு கார்பனேட்டு: NaHCO3. ஆப்பச்சோடா. நுரைக்கும் பானங்களில் பயன்படுதல். அமிலநீக்கி. (வேதி)

sodium carbonate - சோடியம் கார்பனேட்டு: Na2CO3. சலவைச் சோடா. வெண்ணிறப் பொருள். சால்வே முறையில் இது உற்பத்தி செய்யப்படுகிறது. எரிசோடா, கண்ணாடி, சவர்க்காரம் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி) sodium chlorate - சோடியம் குளோரேட்டு: NaClO3. கரையும் படிகம், நிறமற்றது. நச்சுத்தடை உயிர்வளி ஏற்றி, வெடிமருந்துகளில் பயன்படுவது. (வேதி)

sodium chloride - சோடியம் குளோரைடு: NaCl. சாதாரண உப்பு. வெண்ணிறக் கனசதுரப் படிகம். நீரற்றது. முதன்மையாகக் கடலிலிருந்து கிடைப்பது. உணவின் இன்றியமையாப் பகுதிப் பொருள். எரிசோடா, குளோரின், சோடியம் கார்பனேட்டு முதலிய பொருள்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

sodium cyanide - சோடியம் சயனைடு: NaCN. நிறமற்ற திண்மம். சோடியம் கார்பனேட்டு, பண்படாக் கால்சியம் சயனமைடு ஆகியவற்றின் கலவையைச் சூடாக்கி, இப்பொருளைப் பெறலாம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்பு முலாம், பொன்முலாம், வெள்ளி முலாம் பூசவும் பயன்படுவது. (வேதி)

sodium hydroxide - சோடியம் அய்டிராக்சைடு: NaOH. எரி சோடா. வெண்ணிறத் திண்மம். பாதரச மின்வாயைப் பயன்படுத்திச் சோடியம் குளோரைடை நீராற் பகுக்க, இப்பொருள் கிடைக்கும். சாயங்கள், சவர்க்காரங்கள், மருத்துகள் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

sodium lamp - சோடிய விளக்கு: சோடியம் ஆவியில் எரியும் விளக்கு. (இய)

sodium nitrate - சோடியம் நைட்ரேட்டு: NaNO3. வெடியுப்பு. வெண்ணிறக் கன சதுரப்படிகம். சோடியம் அய்டிராக்சைடுடன் நீர்த்த நைட்ரிகக் காடியைச் சேர்த்து நடுநிலையாக்கி, இதனைப் பெறலாம். இயற்கையில் சிலிவெடியுப்பாகக் கிடைத்தல். உரம் நைட்ரேட்டுகள், நைட்ரிகக் காடி ஆகியவற்றிற்கு ஊற்றாக உள்ளது. (வேதி)

sodium peroxide - சோடியம் பெராக்சைடு: Na2O2. வெளிறிய மஞ்சள் நிறத்திண்மம். காற்றில் பட வெண்ணிறமாகும். அதிக அளவு சோடியத்தைச் சூடாக்கி இதனைப் பெறலாம். மயிர், கொம்பு, பட்டு முதலியவற்றை வெளுக்கும் நீர் செய்யப் பயன்படுவது. (வேதி)

sodium sulphate - சோடியம் சல்பேட்டு: Na2SO4. வெண்னிறப்படிகம். அடர் கந்தகக்காடியோடு சோடியம் குளோரைடைச் சேர்த்து சூடாக்க, இப்பொருள் கிடைக்கும். கண்ணாடி, தாள் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

sodium sulphite - சோடியம் சல்பைட்: Na2SO3. வெண்ணிறப் படிகம். நீரில் கரையக் கூடியது. உணவுப் பாதுகாப்புப் பொருள். ஒளிப்படத் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

sodium thiosulphate - சோடியம் தயோசல்பேட்டு: வெண்ணிறத் திண்மம், தூளாக்கிய கந்தகத்தோடு சோடியம் சல்பைடின் கொதி கரைசலைச் சேர்க்க, இப்பொருள் கிடைக்கும். ஒளிப்படத் தொழிலில் நிறம் நிறுத்தி. (வேதி)

sodium vapour lamp - சோடியம் ஆவிவிளக்கு: ஒளிர்வான மின்னேற்றத்தை அளிக்கும் விளக்கு. சோடிய ஆவி குழாயிலுள்ள இரு மின் வாய்களுக்கிடையே குறைந்த அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தி, இந்த ஒளிர் வினைப் பெறலாம். வெண்ணிற ஒளியைக் காட்டிலும், மஞ்சள் நிற ஒளி மூடுபனியால் குறைவாக உறிஞ்சப்படுவதால், இது தெரு விளக்குகளில் பயன்படுகிறது. (இய)

soft iron - மென்னிரும்பு: ஆல்பா இரும்பு. குறைந்த ஊடுருவு ஆற்றலும் சார்புநிலையில் நீண்ட அலைநீளமுள்ள அயனியாக்கும் கதிர்வீச்சு (வேதி)

software - மென்னியம்: கணிமம். கணிப்புக்குட்பட்ட நிகழ்ச்சி. கட்டளைகள் அல்லது நிகழ் நிரல்கள் சேமிக்கப்பட்டுக் கணிப் பொறியில் கையாளப்படுதல். எ-டு மென்தட்டு, நிகழ்நிரல். (கணி). ஒ. hardware.

software engineering - மென்னியப் பொறியியல்: கணிமப் பொறியியல். குறிப்பிட்ட வகையில் பயன்படுத்துவதற்காகக் கணிப்பொறி நிகழ்நிரல்களை உருவாக்குதலும் வடிவமைத்தலும் பற்றி ஆராயுந் துறை. (கணி)

softwater - மென்னீர்: சவர்க்காரத்தைச் சேர்க்க உடன் நுரை கொடுக்கும் நீர். கால்சியம் மக்னீசியம் ஆகியவற்றின் இரு கார்பனேட்டு உப்புகள் கரைந்திருப்பதால், தற்காலிகக் கடினத்தன்மை நீருக்கு ஏற்படுகிறது. கொதிக்க வைத்தல் மூலமும் கால்சிய அய்டிராக்சைடைச் சேர்ப்பதன் மூலமும் இதைப் போக்கலாம். நிலைத்த கடினத் தன்மை, கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைந்திருப்பதால் ஏற்படுவது. சோடியம் கார்பனேட்டு, பெர்முடிட்டு மூலம் இக்கடினத் தன்மையைப் போக்கலாம். (வேதி) ஒ. hard water.

SOHO - சோகோ: கதிரவன் விண்வெளிக்கலம். ஈசா நாசா ஆகிய இரு வானவெளியமைப்புகளும் சேர்ந்து நிறைவேற்றும் அனைத்துலகக் கூட்டுறவுத் திட்டம். 1995 டிசம்பர் 2இல் ஏவப்பட்டது.

soil - மண்: இது பயிர்கள் வாழத் தகுதியுள்ள புவியின் ஒடு ஆகும். இது இயற்கைத் தேய்வினால் உண்டாவது நீர், காற்று, வெப்பம் முதலிய இயற்கை ஆற்றல்களால் சிதைந்து பாறை மண்ணாவதை இயற்கைத் தேய்வு என்கிறோம். (உயி)

soil aeration - மண் காற்றோட்டம்: மண்ணில் காற்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் மண்ணுக்கு உயிர்வளி கிடைக்கும். கரி ஈராக்சைடு வெளியேறும். இதற்குச் சிறந்த முறை புழுதி உழுதல். வேர் வளர்ச்சிக்கும் உயிர்கள் மூச்சு விடவும் மண் காற்று மிக இன்றியமையாதது. (உயி)

soil conservation - மண்வளப் பாதுகாப்பு: மண் அரிப்பைத் தடுத்து, அதன் அமைப்பை நிலைநிறுத்தி, மண் வளத்தைப் பேணுவதற்கு மண் வளப் பாது காப்பு என்று பெயர். இதற்குப் பின்வரும் முறைகளை மேற்கொள்ளலாம். 1. காற்றைத் தடுத்து நிறுத்த மரங்களைப் பயிரிடுதல், 2. நிலங்களைத் தரிசு போடாமல் சாகுபடி செய்தல் 3. மாற்றுப் பயிரிடுதல் 4 அடிக்கடி நீர்ப்பாய்ச்சுதல் 5. எரு அடித்தல். 6. புழுதி உழுதல் 7. எருவிடுதல் 8. பாள முறையில் பயிரிடுதல். (உயி)

soil erosion - மண் அரிப்பு: தீமை தரும் அளவுக்கு மண் அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்கிறோம். இது இயற்கை அரிப்பு, விரைவு அரிப்பு என இருவகைப்படும். காற்று, நீர், வெப்பம் முதலியவை அரிப்பிற்குரிய காரணிகள். (உயி)

soil reaction - மண்வினை: காடி, காரம், நடுநிலை ஆகிய பண்புகளில் ஏதேனும் ஒன்றை மண்பொருள்கள் மண்ணிற்கு அளிக்கும். இது அப்பொருள்கள் தரும் எச் அயனி, ஓஎச் அயனி ஆகியவற்றைப் பொறுத்தது. பிஎச் 7.0 ஆகவுள்ள கரைசல் நடுநிலைக் கரைசல். 7.14 வரை காரத்தன்மை உயர்வினைக் குறிக்கும். 7-1 வரை காடித் தன்மையின் உயர்வைச் சுட்டும். இவற்றில் இரண்டாவது அதிகமிருக்கும் நிலம் காரநிலம். மூன்றாவது அதிகமிருந்தால் காடிநிலம். (உயி)

soil tired - களைத்த நிலம்: ஒரு நிலத்தில் மாறி மாறிப் பயிர் செய்யப்படுவதால், அதிலுள்ள உப்புகள் தீர்ந்துவிடும். அது, தன்வளத்தை இழக்கும். ஆண்டு தோறும் எருவிடுதல், செயற்கை உரமிடல் ஆகியவற்றினால் இக்களைப்பை நீக்கலாம். (உயி)

soil water - மண்நீர்: இது மூன்று வகைப்படும். 1. புவிஈர்ப்பு நீர்: இது தொடர்ந்து வேர்களுக்குக் கிடைக்க மழை பெய்ய வேண்டும். 2. நுண்துளை ஈர்ப்பு நீர்: இது மண் இடைவெளிகளிலும் மண்துகள்களைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்களுக்குப் பெரிதும் பயன்படுவது. 3. ஈரப்பசை நீர்: நுண்துளை ஈர்ப்பு நீர் நீங்கியபின் உள்ள நீர். (உயி)

solar cells - கதிரவன் மின்கலங்கள்: இவை அரைகுறைக் கடத்திகள் ஆகும். கதிரவன் கதிர்வீச்சுகளை மின்னாற்றலாக மாற்றுபவை. இக்கலங்களில் கதிர்வீச்சுகள் படும்போது, அவற்றின் பொலிவுக்கேற்ப மின்னணுக்களும் மின்னோட்டங்களும் உண்டாகின்றன. இவை இரைச்சலையோ கழிவையோ உண்டாக்குவதில்லை. இவற்றிற்கு எரிபொருள்களும் தேவை இல்லை இவற்றில் மின்னியக்கு விசை உண்டாக ஒளிக்கதிர்கள் காரணமாக உள்ளன. சிலிகன் மின்கலங்கள் ஒளிக்கதிர்கள் படும்போதும், செலீனியம் மின்கலங்கள் வெப்பக் கதிர்கள் படும்போதும், வேலை செய்கின்றன. செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுகின்றன. (இய)

solar eclipse - கதிரவன் மறைவு: கதிரவனுக்கும் நிலவுலகிற்கும் நடுவில் திங்கள் இருக்கும். அதன் நிழல் நிலவுலகின் மேல் விழும்பொழுது இம்மறைவு உண்டாகிறது. இது அறிவியல ஆய்விற்கு இடமளிப்பது. (இய)

solar energy- கதிரவன் ஆற்றல்: கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீவெப்பநிலையில் இருக்கும். அணுக்கருச் சேர்க்கை முறையில் ஒவ்வொரு வினாடியும் 4.3 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் ஆற்றலாக மாறி, 3.8 X 1026 கிலோ வாட் ஆற்றல் உண்டாகிறது. இவ்வாற்றல் மின்காந்தக் கதிர் வீச்சுகளாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது கதிரவன் மின்கலங்கள், அடுப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது. (இய)

solar heater - கதிரவன் அடுப்பு: கதிரவன் ஆற்றலால் இயங்குவது. குழி ஆடியால் ஒளிமறிக்கப்பட்டு, வெப்பம் பெறப்படுகிறது. கதிரவன் போக்குக்குத் தகுந்தவாறு, வெப்பம் பெற ஆடியை மாற்ற வேண்டும். (இய)

solar system - கதிரவன் மண்டலம்: கதிரவன் ஒரு விண்மீன். இதுவும் இதனைச் சார்ந்த 9 கோள்களும அடங்கிய தொகுதியே கதிரவன் மண்டலம். கோள்களாவன. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, நிலவுலகு, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ. இத்தகைய வான வெளிப் பொருள்களை ஆராயுந்துறை வானவியல் (அஸ்ட்ரானமி) ஆகும்.

solder - பற்றாக: உலோகப் பரப்புகளை இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை. இது மென்பற்றாசு, கடினப் பற்றாசு, பற்ற வைப்புப் பற்றாசு என மூன்று வகைப்படும். (இய)

soldering iron - பற்றாசுக்கோல்: பற்ற வைக்கும் கருவி. (இய)

solenoid - வரிச்சுற்று: காப்பிட்ட செப்புக் கம்பி ஒன்றை ஒர் உள்ளகத்தின் மேல் அடுத் தடுத்துச் சுற்றுவதாகும். மின் காந்தம் செய்ய இது தேவை. தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம். கம்பிச் சுற்றுகளை அதிகமாக்கல், காந்த வடிவத்தை மாற்றல், மின்னோட்ட வலிமை யை அதிகமாக்கல் ஆகிய செயல்களால் காந்த ஆற்றலை மிகுதியாக்கலாம். (இய)

solid - திண்மம்: கெட்டிப்பொருள். துகள்கள் மிக நெருக்கமாக இதில் இணைந்திருக்கும். இது வடிவமாற்றத்தை எதிர்ப்பது. திண்ம நிலையில் இருப்பது. (இய)

solstice - கதிரவன் நிற்றல்: சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இப்பொழுது விண்நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலைவில் இருப்பதற்குக் கோடைக்கதிரவன் நிற்றல் என்றும் தெற்கே இருப்பதற்கு மாரிக்கதிரவன் நிற்றல் என்றும் பெயர். (வாணி)

solute - கரைபொருள், கரையம்: கரைப்பானில் கரைந்து கரைசலைக் கொடுக்கும் பொருள்.

உப்பு + நீர் உப்புக் கரைசல்

இதில் கரைபொருள் உப்பு. கரைப்பான் நீர். கரைசல் உப்புக்கரைசல். (வேதி)

solubility - கரைதிறன்: குறிப்பிட்ட வெப்பநிலையில் 100கிராம் கரைப்பானை நிறைவுள்ள கரைசலாக்குவதற்குத் தேவையான கரைபொருளின் கிராமின் எடை (வேதி)

solution - கரைசல்: கரைப்பானும் கரைபொருளும் சேர்ந்த ஒரு படித்தான கலவை. குறிப்பிட்ட வெப்பநிலையில் கரைப்பானில் கரைய வேண்டிய அளவுக்குக் கரைபொருள் கரைந்து, அதில் கொஞ்சம் தங்குமானால் அது நிறைவுறு கரைசல். தங்கா விட்டால் நிறைவுறாக் கரைசல். கரைபொருளைப் பொடி செய்து நீரில் போடுதல், குலுக்கல், வெப்பமாக்கல் ஆகிய செயல்களால் கரைசலை விரைவாகவும் நன்கும் உண்டாக்கலாம்.

கரைபொருள் + கரைப்பான் கரைசல்

உப்பு + நீர் உப்புக்கரைசல்

(வேதி)

solvate - கரைவை: இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும். (வேதி)

solvation - கரைவை நாட்டம்: கரைப்பானிலுள்ள மூலக்கூறுகளைக் கரைசலிலுள்ள அயனிகள் கவர்தல். (வேதி)

solvent - கரைப்பான்: நீர்மம். இதில் கரைபொருள் கரையக் கரைசல் உண்டாதல். நீர் அனைத்துக் கரைப்பானாகும். கரை பொருளுக்கேற்ற கரைப்பானும் உண்டு. காட்டாகக் கந்தகத்தைக் கார்பன் இரு சல்பைடுதான் கரைக்கும்.

solvolysis கரைப்பான் பகுப்பு: ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல். (வேதி)

somite - இடைக்கண்டம்: உடல் கண்டம் அல்லது வளையம். (உயி)

somnambulism - துயில்நடை: தானாக இயங்கும் நரம்புத் தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் உறக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்த பின், அவர்களுக்குத் தாம் செய்த செயல்கள் நினைவுக்கு வாரா. சேக்ஷ்பியர் நாடகங்களில் இந் நிலை மாந்தர் வருகின்றனர். (உயி)

sonar - சோனார்: ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச்சொல். இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் ஆகும். இது ஒரு கருவி மட்டுமல்லாது நுணுக்கமும் ஆகும். இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறிகிறது. இந்நிகழ்ச்சியில் உயர் அதிர் வெண்ணுள்ள ஒலித்துடிப்பு பொருளுக்கு அனுப்பப்படுகிறது. இது பொருளில் பட்டு எதிரொலித்து மீண்டும் கருவியை அடைகின்றபோது, வழியறிதலும் எல்லை காணலும் ஒரு சேர நடைபெறுகின்றன. துடிப்பு பொருளை அடைந்து மீண்டும் கருவியை அடைய ஆகும் நேரம் பொருளின் ஆழத்தைக் குறிக்கும். (இய)

sonometer - ஒலிமானி: இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பிகளின் அதிர்வுகளைப் பற்றி அறிய உதவும் கருவி. ஓர் உள்ளீடற்ற பெட்டி, மரத்தாலானது. நீளம் 1.மீ. இதன் ஒரு முனையில் கொக்கியும் மறுமுனையில் கப்பி ஒன்றும் இருக்கும். இவற்றிற்கிடையே முக்கோண வடிவமுள்ள மரத்துண்டுகள் இருக்கும். கொக்கியிலிருந்து இவை வழியே கப்பிமூலம் கம்பி சென்று அதனடியில், தன் முனையில் எடையுடன் தொங்கும். (இய)

sorosis - கூட்டுக்கனி: சொறிக்கனி, பல்திரள்கனி, பூக்கள் நெருங்கியமைந்த பூத் தொகுதி யிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், இக்கனி பார்ப்பதற்கு ஒரே கனி போன்று பொய்த்தோற்றமளிக்கும். எ-டு பலாப்பழம் , அன்னா சிப்பழம், துனாப்பழம். பா. (உயி)

sorus - சிதல்கொத்து: பெரணியிலுள்ள இனப்பெருக்க உறுப்பு. சிதலகங்களைக் கொண்டது. சிதலகங்கள் சூல் ஒட்டில் இருக்கும். (உயி)

sound - ஒலி: புலன் உணர்வு. காற்று அல்லது ஏனைய‌ ஊடகத்தினால் செலுத்துப்படும் அதிர்வுகள் அடங்கியது ஒலி. இவை மாறி மாறி நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் அமையும். அழுத்த அலை என்று ஒலி கூறப்பெறுவது. இது நெட்டலை வடிவமாகும். இதில் பண்புகளாவன: எடுப்பு, உரப்பு, பண்பு. இதன் விரைவு இதனைச் செலுத்தும் ஊடகத்தைப் பொறுத்தது. காற்றில் 0° செ இல் இதன் விரைவு 331.3 மீட்டர் வினாடி-1 நீரில் 250 செ.இல் 1498 மீட்டர் வினாடி-1, கண்ணாடியில் 20° செ.இல் 5,000 மீட்டர் வினாடி - 1. (இய)

space - இடம்: பொருள்களை அடைத்துக் கொள்ளும் பகுதி. 2. இடைவெளி: தட்டச்சு, அச்சு 3. வெளி: காற்றுவெளி, திறந்த வெளி, வெற்றுவெளி, வான வெளி (ப.து)

space accord - வானவெளி உடன் பாடு: அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய 7 ஆண்டு ஒப்பந்தத்தை 30.1;95இல் கையெழுத்திட்டுள்ளன. வாணிப அளவில் இதன்படி இருநாடுகளும் வான வெளிக் கலங்களை ஏவும். (வா.அ)

space age - வானவெளிக்காலம்: 1957 ல் உருசியா தன் முதல் புட்னிக்கை ஏவியதிலிருந்து தொடங்கிய காலம். வானவெளி வரலாற்றில் ஒரு பொற்காலம். பல அருஞ்செயல்கள் நடைபெற்ற காலம். அவற்றில் ஒன்று மனிதன் புவியை வலம் வந்ததும் திங்களில் காலடி எடுத்து வைத்ததும் ஆகும். (ப.து)

spaceage materials - வானவெளிக் காலப்பொருள்கள்: இவை கண்ணாடிகளும் வனை பொருள்களும் ஆகும். மின்னணுவியில், ஒளிஇயல் முதலிய துறைகளில் பயன்படுபவை. கரைய இழும முறையில் உருவாக்கப்படுபவை. (வா.அ)

spacecraft - வாணவெளிக்கலம்: புவியையும் திங்களையும் சுற்றி வருவது. சனி முதலிய பிற கோள்களுக்கும் செல்வது, பொதுவாகப் புவியைச் சுற்றி வரும் நிலாக்களில் மனிதன், நாய் முதலிய உயிரிகள் இருக்கும். வானவெளிக் கப்பலும் இதுவே வாஸ்தோக், ஜெமினி, அப்பல்லோ. (ப.து)

space discoveries - வானவெளிக் கண்டுபிடிப்புகள்: 1. வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள் புவியைச் சூழ்ந்துள்ளன. (எக்ஸ்புளோரர் 1) 2. ஞாயிற்றின் கதிர்வீச்சுகள் காற்றுவெளியில் காந்தப்புயல்களையும் முனை ஒளிகளையும் உண்டாக்குகின்றன. 3. திங்களைச் சுற்றிக் கதிர்வீச்சு வளையம் இல்லை, அயனவெளி உண்டு (உலூனிக்) 4. அளந்தறியக்கூடிய கோள் இடைக்காந்தக் களம் உள்ளது. 5. புவி பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. 6. வான வெளியில் வெப்பநிலை மிகுதியாக இல்லை. 7. மனிதன் வான வெளி நிலைமைகளைத் தாங்கி வான வெளிச் செலவை மேற்கொள்ள இயலும், 8. காற்று வெளியின் மேல் எல்லை 3000 கி.மீ. வரை பரவி உள்ளது. (புட்னிக்) 9. 3500 கி.மீ. உயரத்தில நமக்கு நன்கு பழக்கமான நைட்ரஜன் ஆக்சைடு உள்ளது. 10. அயனிவெளியில் வானொலி அலைகள் செல்வதற்குரிய வழிகள் அமைந்துள்ளன. (ப.து) space firsts - வானவெளி முதல் நிகழ்ச்சிகள்: அமெரிக்கா உருசியா 1. 1957 அக். 4, உருசியா முதல் புட்னிக் ஏவப்பட்டது. 2. 1957 நவ, 3, புட்னிக் 2இல் முதல் வானவெளி விலங்கு இலய்க்கா அனுப்பப்பட்டது. 3. 1959 ஜூன் 2, திங்கள் நிலாவான உலூனிக்1 உருசியாவால் வெற்றி தரும் வகையில் ஏவப்பட்டது. 4. 1961 ஏப். 12, உருசியா முதன் முதலில் ககாரினை வான வெளிக்கு வாஸ்தோக் கப்பலில் அனுப்பியது. 5. 1963 ஜூன் 16, உருசியா முதல் வீராங்கனை வேலண்டினா தெரஷோவா வாஸ்தோக் 6இல் அனுப்பப்பட்டார். 6. 1965 ஜூன் 3, ஜெமினி 4இல் சென்ற அமெரிக்க எட்வர்டு ஒயிட் கப்பலை விட்டு வெளியேறி முதன்முதலில் வான வெளியில் நடந்தார். 7. 1969 ஜூலை 16, திங்களில் முதன் முதலில் நெயில் ஆம்ஸ்டாங் ஜூலை 21இல் காலடி எடுத்து வைத்தார். 8. 1987 டிச3, உருசியா வான வெளிவீரர் யூரி ரோமனென்கோ 360 நாள் வானவெளிச் சூழ்நிலைத் தாங்காற்றல் பதிவுக் குறிப்பை முறியடித்தார். இக்குறிப்பு உருசிய வானவெளி வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது. ஆக, 1957 முதல் 1987 வரை 31 ஆண்டுகளில் வான வெளி வரலாற்றில் நடைபெற்ற அருஞ் செயல்கள். இவை. இந்தியா: 1. 1975 ஏப். 19, இந்தியா முதல் செயற்கை நிலா ஆரிய பட்ட உருசியாவிலிருந்து ஏவப்பட்டது. 2. 1981 ஜன 19, இல் இந்திய முதல் செய்தித் தொடர்பு நிலா ஆப்பிள் பிரான்சிலிருந்து விடப்பட்டது. 3. 1981 ஜூலை 24, ரோகினி இந்தியாவிலிருந்து முதன்முதலில் ஏவப்பட்டது. 4. 1984 ஏப்ரல் 3, ரகேஷ் சர்மா முதல் இந்திய வானவெளி வீரரானார். இரு உருசிய வான வெளி வீரர்களுடன் சோயஸ் டி IIஇல் சென்றார். ஆக, 1975 முதல் 2000 வரை 25 ஆண்டுகளில் இந்தியாவின் வானவெளி அருஞ் செயல்கள் இவை. பா. Indian space efforts (ப.து)

space history - வானவெளி வரலாறு: 1957லிருந்து 2000 வரை 43 ஆண்டுகள் செயல்நிலை வரலாறு உண்டு. இக்கால கட்டத்தில் பல அரிய செயல்கள் நடந்துள்ளன. பா. space firsts, (ப.து)

space funeral - வானவெளி இறுதிச்சடங்கு: வானவெளி அருமுயற்சிகள் மற்றும் பிற துறை முயற்சிகள் தொடர்பாக உயிர்நீத்த 24 பேர்களுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு, அவர்கள் பினச்சாம்பலை அலுமினியக் குப்பிகளில் வைத்து ஏவுகணை மூலம் அமெரிக்கா புவியை வலம் வரச் செய்தது. இது இரண்டு ஆண்டுகள் வலம் வந்தது. சுற்றுகாலம் 90 நிமி. இந்த ஏவுகணை 22.4.97 அன்று ஏவப்பட்டது. 24 பேர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். டிமோதி லியரி, பபத்த வானவெளி அறிவு மிக்கவர் ஒ நெயில் வானவெளி இயற்பியலார், ஜெனி ராடன் பெரி, ஸ்டர் டிரக் தொலைக்காட்சித் தொடரை உருவாக்கியவர். டிமோதி 1996 மே திங்கள் இறந்தார். (வா.அ)

space man - வானவெளி மனிதன்: வேறுபெயர்கள், வானவெளி வீரர் வானவெளிப்பயணி, இவர்களில் மகளிரும் அடங்குவர். இவர்கள் ஒரிருவரைத் தவிர ஏனையோர் வானவெளிக்குச் சென்று திரும்பியவர்கள். காட்டாக ககாரின் முதல் வானவெளி வீரராக இருந்தாலும் பிறிதொரு சமயம் கடைசியாகக் கப்பலிலிருந்து தரையில் இறங்கும்பொழுது அவர் இறக்க நேர்ந்தது. (ப.து)

space Odyssey - வானவெளி நெடும்பயணம்: 2001 என்னும் முயற்சி. 1994இல் தொடங்கப்பட்டது. 20.3.97 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்குக் காரணமானவர் வான வெளி ஆசான் எனப்படும் ஆர்தர் கிளார்க் (வா.அ)

space platform - வானவெளி மேடை: வேறுபெயர் வாணவெளி நிலையம். ஓர் உற்றுநோக்கும் ஆய்வுக்கூடம். புவியை வலம் வருவது, எ-டு உருசிய உலூனிக் (ப.து)

space powers - வானவெளி வல்லரசுகள்: இவை அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நான்கு நாடுகள் ஆகும்.

space probe - வானவெளி துருவி: வானவெளி நிலைமைகளையும் திகழ்ச்சிகளையும் ஆராயும் நிலா, எ-டு அமெரிக்கப் பயணியர், உருசிய உலூனிக் (ப.து)

space problems - வானவெளிச் சிக்கல்கள்: இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வழிப்படுத்தலும் செலவும், 8. வழியறிதலும் உற்றுநோக்கலும், 9. கலத்தைச் செலுத்துதல், 10. நுட்ப ஏற்பாடுகள், 11. உணவு, 12. எடை, 13. எடைமிகுதி, 14. எடையின்மை, 15. விண்கொள்ளி, 16. கதிர்வீச்சுகள், 17. வானவெளி நோய்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டு 2400க்கு மேற்பட்ட நிலாக்கள் வெற்றிதரும் வகையில் ஏவப்பட்டுள்ளன. (ப.து)

space programme merger - வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு: 1993இல் நவம்பரில் அமெரிக்காவும் உருசியாவும் தங்கள் வானவெளித் திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தன. 1997க்குள் புவியை வலம் வரும் அனைத்துலக வானவெளி நிலையத்தை அமைப்பது இவ்விரு நாடுகளின் முதல் திட்டமாகும். இதற்கு 12 வானவெளி ஒடங்களும் 12 உருசிய உயர்த் திகளும் பயன்படுத்தப்படும். அனைத்துலக அளவில் மேற் கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது. இதன் கட்டுப்பாடு அமெரிக்காவின் கையில் இருக்கும். இத்திட்டத்தில் ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும். இதன் இரு பெரும் நன்மைகள். 1. விரைந்த செயலாக்கம், 2. பயன்கள் அதிகம்.

space research - வானவெளி ஆராய்ச்சி: வானவெளியைப் பல நிலைகளில் ஆராய நடைபெறும் ஆராய்ச்சி. மனிதன் வான வெளிப்பயணத்தை மேற்கொள்ள எடையின்மை முதலிய வான வெளி நிலைமைகளையும் உயிர் வாழ்வதற்கேற்ற கோள் நிலை மைகளையும் முதலில் ஆராய வேண்டும். ஆகவே, இவ் வாராய்ச்சியால் மேற்கூறிய நிலமைகள் உற்றுநோக்கலாலும் ஆய்வாலும் தீர ஆராயப் படுகின்றன. அதற்கு ஏவுகணை களும் செயற்கை நிலாக்களும் பெரிதும் பயன்படுகின்றன. (வா.அ.)

சிறப்புகள்: 1. புதுமைகளையும் புத்தம்புது கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளது. 2. செறிந்த துணுக்கங்களையும் முறைகளையும் எழச் செய்தது. 3. எல்லா வகைச் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் விடிவெள்ளி. 4. பல அறிவியல் துறைகளும் விரைந்து வளர வாய்ப்பளித்துள்ளது. 5. வானவெளி தன்கு ஆராயப் பெற்றுள்ளது. பல புது உண்மைகள் வெளியாகியுள்ளன. (ப.து.)

space science - வானவெளி அறிவியல்: இயற்பியல், வேதி இயல், உயிரியல், கணக்கு ஆகிய அடிப்படை அறிவியல்களின் அடிப்படையில் உருவாகிய பயனுறு அறிவியலும் தொழில் நுட்ப அறிவியலுமாகும். வானவெளி வெற்றிக்கு இவ்வறிவியலே முதற்காரணமாகும். இதில் வான வெளி இயற்பியல், வேதிஇயல், உயிரியல், மருத்துவம், தொழில் துட்ப இயல் முதலிய துறைகள் அடங்கும்.

spaceship - வான்வெளிக்கப்பல்: குழுப்பயணம் மேற்கொள்ளும் வானவெளிக்கலம், இது மனிதன் செல்வதையே குறிக்கும். (வா.அ.)

space shuttle-வானவெளி ஓடம்: ஏவுகணை போன்று செல்வதும் வானவூர்தி போன்று இறங்குவது மான மிக முன்னேறிய வான வெளிக்கலம். வானவெளி நிலையத்திற்கு மனிதரையும் பொருள் களையும் கொண்டு செல்வது. எ-டு உருசியா பரான், அமெரிக்க எண்டவர். (ப.து.)

space station - வானவெளி நிலையம்: ஆராய்ச்சி மேற் கொண்டு புவியை வலம் வருவது. எ-டு மிர். பா. Mir,

space Suit - வானவெளி உடை: வான வெளி நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க வான வெளி வீரர்கள் அணியும உடுப்பு, புவியிலுள்ள இயல்பான சூழ் நிலைமைகள் வானவெளியில் இல்லாமையே இவ்வுடுப்பு அணி ஆராய்ச்சியால் நன்கு வளர்ந் வதற்குக் காரணமாகும். (ப.து)

space super woman - வானவெளி மாபெரு வீராங்கனை: அமெரிக்கரான இவர் 1996இல் மிர் என்னும் வானவெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி ஒரு புதுக் குறிப்பை உண்டாக்கியவர். 23.9.96 அன்று அட்லாண்டிஸ் வாணவெளி ஓடம் இவரைப் புவிக்குக் கொண்டு வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன் இவரை நெஞ்சாரப் பாராட்டிச் சிறப்பு செய்தார்.

space systems - வானவெளி ஏற்பாடுகள்: வானவெளிக் கலத்தில் அமைந்துள்ள இன்றிய மையா ஏற்பாடுகளாவன. 1. உயிரியல் ஏற்பாடு: உயிர்நலமுடன் இயங்கக் காரணமானது. 2 மீட்பு ஏற்பாடு: கலம் மீண்டும் புவியை அடைவதற்குரிய ஏற்பாடு. 3. வழிப்படுத்து ஏற்பாடு: வரை யறுக்கப்பட்ட வழியில் கலத் தைச் செலுத்துவதற்குரியது. 4. கருவி ஏற்பாடு: பலவகை உற்றுநோக்கல்களைப் பதிவு செய்வது. (ப.து.)

space technology - வானவெளி தொழில்துட்ப இயல்: வான வெளித் தொழில்துணுக்கஇயல். ஏவுகணைகளை அமைத்தல், அவற்றைக் கொண்டு செயற்கை நிலாக்களை ஏவுதல், அவற்றைப் பின் வழியறிதல், மீண்டும் புவியில் இறக்குதல் முதலியவை பற்றி ஆராயுந்துறை, வானவெளி ஆராய்ச்சியால் நன்கு வளர்ந்துள்ள உயரிய தொழில்நுணுக்கச் செறிவு மிக துறை. (ப.து.)

space tragedy - வானவெளிக் கொடுமை: வானவெளித் துயர நிகழ்ச்சி. 1986 ஜனவரி 29இல் அமெரிக்க வானவெளி ஒடமான சேலஞ்சரில் ஆறு வானவெளி வீரர்களும் ஒரு வீராங்கனையும் (பள்ளி ஆசிரியை) சென்றனர். ஏவுகணை கிளம்பிய 75 வினாடிகளுக்குப் பின் நடுக்காற்று வெளியில் அது வெடித்துத் தீப் பிழம்பாகியது. எழுவரும் இறந்தனர். இவர்கள் தேசிய வீரர்கள் என அமெரிக்கா அறிவித்துச் சிறப்பு செய்தது. வானவெளித் துயர நிகழ்ச்சிகளில் மிகக் கொடுமையானது இதுவே. இதற்குச் சேலஞ்சர் கொடுமை என்று பெயர்.

1967 ஜூன் 27இல் அப்பல்லோ கொடுமை நடைபெற்றது. இதில் மூன்று அமெரிக்க வானவெளி வீரர்களான கிரிசம், சாஃப், ஒயிட் ஆகியோர் இறந்தனர். 1967 ஏப்ரல் 24இல் நடைபெற்ற சோயஸ் கொடுமையில் மூன்று உருசிய வானவெளி வீரர்களான டோப்ரோ வால்ஸ்கி, வால்கள், பாட்சாயவ் ஆகியோர் இற்தனர். (ப.து.)

space travel - வானவெளி பயணம்: வானவெளிக்கலம் வாயிலாகப் புவியைச் சுற்றியும் திங்களைச் சுற்றியும் நடை பெறும் செலவு. மனிதன் புவி

யைச் சுற்றியுள்ளான். திங்களில் காலடி எடுத்து வைத்துள்ளான். கருவி நிலாக்கள் செவ்வாய் முதலிய கோள்களை ஆராய்த்துள்ளன. கனவாய் இருந்த வான வெளிப் பயணம் இன்று நன வாகியுள்ளது. (ப.து.)

space Walk - வானவெளி நடை: மார்க்லி, ஸ்டீவன் சிமித் ஆகிய இரு அமெரிக்க வானவெளி வீரர்களும் வானவெளியில் 6 தடவைகள் நடந்து ஹப்பிள் வாணவெளித் தொலைநோக்கியின் சிதைந்த காப்புப் பகுதியை 17-2-97 அன்று சரிசெய்தனர். 7 ஆண்டு சுற்று வழியில் இருப்பதால் பளபளப்பான இப்பகுதி கதிரவன் வெப்பத்தால் பழுதுபட்டது.

spadix - மடல் பூக்கொத்து: முடிவில்லாத பூக்கொத்தின் வகை. முழுப்பூக்கொத்தும் ஒரு பெரிய பூவடிவச் செதிலில் பொருந்தி இருக்கும். இதற்குப் பாளை அல்லது மடல் என்று பெயர். எ-டு தென்னை, inflorescence (உயி)

spasm - தசை வலிப்பு: நடுங்கு தசைச் சுருக்கம், தானாகவே நடைபெறுவது. (உயி) spathe - பானை:பா. Spadix ( உயி)

spatula - அள்ளி: அள்ளுமடல். அகன்ற மழுங்கல் முனைப் பரப்புள்ள கரண்டி உணவு, மருந்து முதலியவை கலக்கப் பயன்படு வது. (மரு)

spawn - முட்டைத்தொகுதி: தவளை முதலிய விலங்குகளால் இடப்பட்டு, நீரில் மிதக்கும் நுரை போன்ற முட்டைக் குவியல். உயி:

specialist - வல்லுநர் : ஒரு துறையில் தேர்ந்தவர். எ-டு இதயநோய் வல்லுநர். (பது)

specialization - வல்லுமை பெறல்: 1. தனிச்சிறப்பு பெறுதல். 2. குறிப்பிட்ட சூழலுக்கு ஒர் உயிரி தன் தகவை உயர்த்திக் கொள்ளுதல். (பது)

species - சிறப்பினம்பா.taxonomy (உயி)

spacial name : சிறப்பின பெயர்: சிறப்பினத்தால் அமையும் பெயர், பேரினத்தால் அமையும் பெயர் பேரினப் பெயர் (ஜெனரிக் நேம், ஒரு தாவரத்தை அல்லது விலங்கை எளிதில இனங்கண்டறிய பேரினப் பெயரைவிடச் சிறப்பினப் பெயரே இன்றியமையாதது. எ-டு அய்பிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ், இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது சிறப்பினப் பெயர். இது இரு பெயரொட்டு பண்புத் தொகை போன்ற சொல். (உயி)

specific gravity-ஒப்பெடை : பா. relative density (இய).

specific heat-வெப்ப எண் : ஒரு கிராம் பொருளை 1o செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒருகிராம் நீரை 1o செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதம். இது ஒரு எண். இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். நீரின் வெப்ப எண் 1 செம்பு 094 ஹ்(இய)

specific resistance -மின்தடை எண்: ஒரு மீட்டர் நீளமும் ஒரு சதுர மீட்டர் குறுக்குப் பரப்பு முள்ள உலோகக் கம்பியின் மின்தடை, அதன் மின்தடை எண் ஆகும். (P) (இய)

spectrometer - ஒளிவிலகல் மானி: இது ஒருவகை நிறமாலை நோக்கி, ஒளி விலகல் எண்களைத் துல்லியமாக அளக்கப்பயன்படுவது. எ-டு ஒளி விலகல் எண்: கண்ணாடி 1.5, வைரம் 2.5 2. நிறமாலைமானி: ஒரு ஒளிமூலத்தின் நிறமாலையினைப் பகுத்தறியப் பயன்படுங்கருவி. (இய)

spectroscope - நிறமாலை நோக்கி: நிறமாலையைப் பெறவும் உற்று நோக்கவும் பயன்படுங்கருவி. (இய)

Spectrum -நிறமாலை: இது ஒரு பின்உரு. முப்பட்டகத்தால் உண்டாக்கப்படும் நிற எல்லை. குறிப்பிட்ட நிலைமைகளில் ஓர் உறுப்பினால் உறிஞ்சப்படும் அல்லது உமிழப்படும் மின் காந்தக் கதிர்வீச்சு எல்லை. இது துய நிறமாலை, மாசு நிறமாலை, தொடர்நிறமாலை, வரி நிற மாலை, கதிரவன் நிறமாலை எனப் பலவகைப்படும். (இய)

speculum - நோக்கி: 1. உடலின் குழிகளைக் காணப் பயன்படுங்கருவி, 2. ஆடி 3 பளபளப்பான உலோகத்தால் செய்யப்பட்ட மறிப்பான். (பது.)

speed - விரைவு: ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு. அலகு மீ/வி. விரைவு = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம். பா. velocity (இய)

speedometer - விரைவுமானி: இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங்கருவி. ஊர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும். (இய)

sperm, spermatozoan - விந்ததணு: பால் இனப்பெருக்கத்தில் பங்கு பெறும் ஆண் அணு (உயி)

spermatophyta-விதை தாவரங்கள்: உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள். முன்னவை விதையுறைத் தாவரங்கள் (தென்னை). பின்னவை விதையுறை இலாத்தாவரங்கள் (சைக்கஸ்). இரண்டும் பூக்குந்தாவரங்கள். (உயி)

spherometer - கோனமானி: ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியில் படிவது திருகின் கூரிய முனையே. எடுக்கும் அளவுகள் மூலம் வளைவை உறுதி செய்யலாம். வாய்பாடு r = (l2 +x2 ) /2 (r-ஆரம், l-நீளம், x- உயரம்). (இய)

sphincter -சுருக்குதசை: பா. muscle. (இயி)

spider-சிலந்தி: பூச்சிவகை (உயி)

spike-கதிர்: நெடும் பூக்கொத்தின் ஒருவகை. இதில் காம்பிலாப் பூக்கள் கீழிருந்து மேல் அமைந்திருக்கும் : நாயுருவி. (உயி)

spinal canal - தண்டுவட வழி: முதுகெலும்பில் முள்ளெலும்புகள் வழியாகத் தண்டுவடம் செல்லுவதற்குரிய வழி. (உயி)

spinal column - முதுகெலும்பு. பா. backbone. (உயி)

spinal cord - தண்டுவடம்: முதுகெலும்பில் செல்லும் நாண், முதுகெலும்புகளின் முக்கிய நரம்பச்சு. (உயி)

spinal nerves -தண்டுவட நரம்புகள்: நரம்புகளில் ஒருவகை (உயி)

spindle - கதிர்: கண்ணறைப் பிரிவில் உண்டாகும் ஓர் உப்பு. (உயி)

spine - முள்: 1. இது தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படுவது. தாவரங்களில் கிளை அல்லது முள்ளாகும். மீன்களில் கூரிய முட்கள் இருக்கும். முள்ளுக்கு அடுத்த பகுதி சிறுமுள் ஆகும். 2 முதுகெலும்பு (உயி)

spinneret - பின்னி: பட்டு பின்னுவதற்காகச் சிலந்தியின் வயிற்றிலுள்ள இரட்டை ஒட்டுறுப்பு. தாவரத்தில் வலை பின்னவும், முட்டைக் கூட்டை உண்டாக்கவும், பிடித்த இரையைச் சூழ்ந்து கொள்ளவும் பயன்படுவது. (உயி)

spin - off technologies- விளை பயன் தொழில்நுட்பங்கள்: ஒரு முதன்மையான தொழில் நுணுக்கத்திலிருந்து கிடைக்கும் தொழில் நுட்பங்கள். எடுத்துக்காட்டாக, வான வெளித் தொழில் துணுக்கம் முதன்மைத் தொழில்துணுக்கம். இதிலிருந்து கிளைத்தது செயற்கை நிலாத் தொழில்நுட்பம் அல்லது தொலையுணர்தல். spiracle-மூச்சுவாய்: பூச்சி மூச்சுக் குழலின் வெளித்திறப்பு. முச்சு விடப் பயன்படுவது. (உயி)

spiral valveக்சுருள்திறப்பி: மென் படலச் சுருள்வடிவ மடிப்பு. எல்லா மீன்களின் குடலில் காணப்படுவது. உணவு செல்வதைத் தாமதப்படுத்திச் சுரத்தலுக்கும் உணவு உறிஞ்சப்படுதலுக்குமுரிய பரப்பை அதிக மாக்குவது. (உயி)

spirit-சாராயம்: இது மெத்தனால் கலந்த சாராயம். (மெத்திலேட்டேட் ஸ்பிரிட்டு), வடித்துப் பகுத்த சாராயம் (ரெக்டிபைடு. ஸ்பிரிட்) என இருவகைப்படும். முன்னதில் மெத்தில் ஆல்ககால், எத்தில் ஆல்ககால் ஆகிய இரண்டும் 110 என்னும் வீதத்தில் இருக்கும். இஃது ஓர் ஆய்வக எரிபொருள். பின்னது எத்தில் ஆல்ககாலை பலமுறை காய்ச்சி வடிக்கக் கிடைப்பது. இது 95% ஆல்ககால். இதைச் சுட்ட கண்ணாம்புடன் சேர்த்து மேலும் வடித்துப் பகுக்கக் கிடைப்பது தனி ஆல்ககால். (அப்சல்யூட் ஆல்ககால்) இது நீரற்றது. பொதுவாக, எத்தில் ஆல்ககால் கரைப்பானாகவும பெட்ரோலுடன் சேர்த்துத் திறன் ஆல்ககால் செய்யவும் மருந்துகள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

spirogyra - ஸ்பைரோகைரா: சுருளி இழையுள்ள பசும்பாசி. தண்ணிரில் காணப்படுவது. சுருள் வடிவப் பகங்கணிகம் இருப்பது சிறப்பு. (உயி)

spleen - மண்ணிரல்: இரைப்பையின்மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு. குருதியமைப்பை மாற்றுவது. அதாவது, நாட்பட்ட சிவப்பணுக்களை அழிக்கிறது. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது. குருதிச்சேமிப்பகம். தவிர, வெள்ளணுக்களையும் கணிமத்தையும் (ப்ளாஸ்மா) உண்டாக்குகிறது. (உயி)

sponge - கடற்பஞ்சு: இடம் பெயரா நீர் வாழ்வி, புரையுடலி (பொரிபெரா) வகுப்பைச் சார்ந்தது. குவளை வடிவப்பையாகும். உடல் மேல், ஒரு துளையுள்ளது. தவிர, உடல்முழுதும் துளைகள் அல்லது புரைகள் காணப்படுகின்றன. உடலின் உள்ளே ஒரே ஒரு குழியுள்ளது. ஒத்தி எடுக்கவும் துடைக்கவும் பயன்படுகிறது. பல கடற் பஞ்சுகளின் கூட்டில் காணப்படும் கொம்புப் பொருளுக்கு ஸ்பான்ஜின் என்று பெயர். (உயி)

sporangium - சிதலகம்: சிதல்கள் உண்டாகும் பை, பூக்காத்தாவர இனப்பெருக்க உறுப்பினால் உண்டாவது. பூக்காத் தாவரங்களுக்கே உரியது. பூக்குந்தாவரங்களில் இது விதை. ஆகவே, விதைக்கு முந்தியது சிதல். (உயி)

spore mother cell, sporocyte - சிதல் தாயணு, சிதலணு: குன்றல் பிரிவினால் ஒருமயச் சிதல்கள் நான்கினையளிக்கும் கண்ணறை. (உயி)

sporogonium - சிதல்மம்: மாசிகளில் காணப்படும் கருப்பயிர்த் தலைமுறை. கருவணுவிலிருந்து உண்டாவது. இதற்கு அடி, பொதிகை, காம்பு என்னும் மூன்று பகுதிகள் உண்டு. பாலணுப் பயிர்த் தலைமுறையில் ஒட்டுண்ணியாக வாழ்வது. (உயி)

sporophore - சிதல்தாங்கி: சில பூஞ்சைகளில் காணப்படும் காம்பு. இது சிதல்களை உண்டாக்குவது. (உயி)

sporophyll - சிதல்இலை: சிதல் உள்ளது சிதலகம். இச்சிதலகத்தைக் கொண்டிருப்பது சிதல் இலை. (உயி)

sporophyte -சிடல் டாவரம்: சிதல் பயிர். பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் இது சிதல் தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இத்தலைமுறை ஓங்குதலை முறையாகும். இதில் தாவரமே உண்மையான பெரணி. பா. gametophyte. (உயி)

sprain - சுளுக்கு: ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென்திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். அயோடக்ஸ் முதலிய வலி நீக்குமருந்தைத் தடவலாம். (உயி)

spring balance - வில்தராசு: பா.balance, spring (இய)

Sputnik - புட்னிக்: வானவெளி வரலாற்றில் 1957இல் உருசியா முதன்முதலில் ஏவிய செயற்கை நிலா. பா. satelite. (இய)

Sross- C2- சிராஸ் - சி2: இந்தியச் செயற்கை நிலா 1994 மே 4இல் ஏவப்பட்டது. ஏவுகை வெற்றி. எடை 113 கி.கி. ஏஎஸ்எல்வி டி4 ஏவுகணை ஏவியது. தொழில் நுட்பத்திற்காகவும் பயன்பாட்டிற்காகவும் (வா.அ)

stability - நிலைப்பு: உறுதிநிலை. பா. equilibrium. (இய)

stabilizer - நிலைப்பு : 1. வானூர்திக்கு நிலைப்பளிக்கும் கருவி. 2. வேதி மாற்றத்தை நிறுத்தச் சேர்க்கப்படும் பொருள். அதாவது, எதிரிடை வினையூக்கி, 3. மின்சாரத்தை ஒரே சீராக வைப்பது. (ப.து).

stable equilibrium - உறுதி சமநிலை: பா. equibrium.(இய)

staining- சாயமேற்றல்: உயிரியல் ஆய்வுகளில் பயன்படுவது. வேறுபட்ட உறுப்புகளின் மாறுபாட்டைக் காண்பிக்கப் பயன்படுவது. கறையேற்றல் என்றுங்கூறலாம். ஆய்வு நுணுக்கங்களில் ஒன்று. (உயி)

stainless steel - கறுக்கா எஃகு: 12% குரோமியம் சேர்ந்த எஃகு துருப்பிடிக்காதது. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவது. (வேதி)

stamen - மகரந்தத்தாள்: தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு. அவரை விதை வடிவ மகரந்தப்பையும் அதைத்தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும். மகரந்தத் தூள் மகரதந்தப்பையில் உண்டாகும். (உயி)

staminode -மலட்டு மகரந்தத்தாள்: இழையை மட்டுங் கொண்டிருப்பது : அத்தித்தட்டு, அல்லது தெரியக்கூடிய பகுதியாக இருப்பது : ஐரிஸ். (உயி)

standard cell - திட்ட மின்கலம்: ஓல்ட்டா மின்கலம். இதன் மின்னியக்கு விசைதிட்ட நிலையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. (இய)

standard pressure - திட்ட அழுத்தம்: 76 செமீ நீளமுள்ள பாதரசக் கம்பத்தின் அழுத்தம். காற்று 76 செமீ நீளமுள்ள பாதரசக் கம்ப அழுத்தத்தையே தாங்கும். இது அனைத்துலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட மதிப்பு. 101325 பா ஆகும். (இய)

standard solution -திட்டகரைசல்: பருமனறி பகுப்பில் பயன்படும் செறிவு தெரிந்த கரைசல். (வேதி)

standard temperature - திட்ட வெப்பநிலை: இது நீரின் உருகு நிலை 0°செ அல்லது 273.15 செ. அனைத்துலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட மதிப்பு. (இய)

standing crop - உணவுப்பயிர்: குறிப்பிட்ட காலத்தில் ஒரு பகுதியிலுள்ள உயிர்த் தொகையின் ஊட்டப்பகுதி. (உயி)

stapes - அங்கவடி எலும்பு: உட்செவியிலுள்ள மூன்று சிறிய எலும்புகளில் ஒன்று. (உயி)

starch-ஸ்டார்ச்: பன்மச் சர்க்கரை, அரிசி, கோதுமை முதலியவற்றில் அதிகமுள்ளது. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது மாப்பொருள். (உயி)

starfish-நட்சத்திரமீன்: விண்மீன் வடிவமீன். நீரில் வாழ்வது. 100 வகைகள். மையத்தட்டில் ஆரக்கைகள் இருக்கும். புறச்சட்டகம் கடினமானது. முள் நிறைந்தது, இடம்பெயர்ச்சி நீர்க்குழாய்த் தொகுதியினால் நடைபெறுவது. ஒவ்வொரு ஆரக்கையிலும் பல இணை குழாய்கள் உண்டு. (உயி)

starter - துவக்கி: 1. குழாய் விளக்கில் மின் சுற்றை மூடி ஒளி உண்டாக்கும் குமிழ் போன்ற அமைப்பு, 2. தாமியங்கிகளில் மின் உந்திகள் வரிசை, பெட்ரோல் எந்திரம் தானாக இயங்கி ஓடும் வரை அதை முடுக்கப் பயன்படுவது. 2. துவக்குபவர்: விழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பவர். (ப.து)

stationary waves - நிலை அலைகள்: ஒரே அலைநீளமும் ஒரே வீச்சும் கொண்ட இரு அதிர்வுகள் எதிர்எதிர்த் திசைகளில் ஓர் ஊடகத்தில் பரவும் போது நிலை அலைகள் உருவாகின்றன. அலைவியக்கம் முன்னேறுவதில்லை. ஊடகத்தில் கணுக்களும் நள்ளிடைக் கணுக்களும் உண்டாகின்றன. (இய)

static electricity-நிலைமின்சாரம்: அசையாநிலையிலுள்ள மின்னேற்றங்கள் உண்டாக்கும் விளைவுகள். (இய)

statics - நிலைஇயல்: அசையா நிலையிலுள்ள பொருள்களை ஆராயும் விசைஇயல் பிரிவு. (இய)

stator-நிலைப்பி: ஒரு மின்னுந்தியின் அல்லது மின்னணுக் கருவியமைப்பின் அசையாப் பகுதி. ஒ. rotor (இய)

steady state theory - நிலைப்பு நிலைக்கொள்கை: விண்ணகம் எப்பொழுதும் நிலைப்பு நிலையில் உள்ளது. தொடக்கமோ முடிவோ அதற்கில்லை என்னும் கொள்கை (வானி)

steam - நீராவி: எந்திரத்தை இயக்கும் ஆற்றல். இது பல வகைப்படும். ஈரஆவி ஆவியாகாமல் நீர் இருக்கும்வரை கிடைக்கும் ஆவியில் நீர்த்துளிகள் இருக்கும். இதுவே ஈரஆவி. எல்லா ஆவியும் நீருடன் தொடர்புள்ள வரை ஈரஆவியே. 2. உலர்ஆவி: ஈரஆவியை உலர்த்த இது கிடைக்கும். நீர் முழுவதும் நீங்கியது. 3 மீஉலர் ஆவி: வளி விதிக்குட்பட்ட ஆவி. 4. குறிக்கோள் ஆவி: மீஉயர் வெப்ப நிலையிலுள்ள ஆவி. ஆக, ஈரம் நீங்குவதைப் பொறுத்து ஆவியும் அதன் வகையும் வேறுபடுகின்றன. (இய)

steam engine - நீராவி எந்திரம்: அழுத்தத்தில் ஆவியைப் பயன்படுத்தும் வெப்ப எந்திரம். இதில் வெப்பஆற்றல் எந்திர ஆற்றலாகிறது. இதைக் கண்டறிந்தவர் நியூகோமன். அமைத்தவர் ஜேம்ஸ் வாட்டு. (இய)

steel - எஃகு: இரும்பும் கரியுங் கொண்ட உலோகக் கலவைகளில் ஒன்று. கரி எஃகு, உலோகக் கலவை எஃகு, கறுக்கா எஃகு எனப் பல வகையுண்டு. பெசிமர் உலையில் தயாரிக்கப்படுவது. வில் சுருள்கள், உலோகக் கலவைகள் முதலியவை தயாரிக்கப்பயன்படுவது. (வேதி)

steering-கலத்தைச் செலுத்துதல்: சிற்றுந்தை ஓட்டுவது கப்பலையும் வானூர்தியையும் செலுத்துவது, அவ்வளவு கடினமன்று. ஆனால், வானவெளிக் கலத்தைச் செலுத்துவது என்பது மிகமிகக் கடினமாகும். வழியில் ஏற்படும் திரிபைத் திருத்துவது முன்னதில் எளிது. பின்னதில் அரிது. வான வெளி வலவர் உணரும் முடுக்கங்களும் அவர்தம் நொடி நேரச் செயற்பாடுகளும் கலத்தைச் செலுத்துவதிலுள்ள கடினத்திற்குக் காரணமாகும். ஆகவே, கலத்தைச் செலுத்தப் பொதுவாகப் பயிற்சியும் சிறப்பாக உடற்பயிற்சியும் வலவருக்குத் தேவை. (இய)

stele - மையத்திசு. தாவரத்தண்டு அல்லது வேரிலுள்ள உருளைத் திசு. உட்தோல், சுற்றுவட்டம் ஆகியவற்றைக் கொண்டது. (உயி)

stem - தண்டு: தரைக்கு மேல் வளரும் தாவரப்பகுதி. இலை, இலைக்கோணம், கணுவிடை முதலிய பகுதிகளைக் கொண்டது. ஈர்ப்புக்கு எதிராக வளர்வது. ஒ. root (உயி)

stenopodium - சுருங்குகால்: இரு கிளைக்கால். இதன் புறப்பகுதியும் அகப்பகுதியும் நீண்டும் குறுகியும் இருப்பதால், நடப்பதற்கும் உணவு உண்பதற்கும் பன்படுவது. பா. (உயி) biramous appendage ஒ. pseudopodium.

step - படி: ஒரு வேதிவினையின் தொடக்கநிலை. இதில் ஆற்றல் ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாறலாம். பிணைப்புகள் முறிபடலாம் தோன்றலாம். மின்னணுக்கள் மாற்றப்படலாம். 2. வழி கணக்கு போடுவதில் வழி 1,2,3 என்று அமைதல். (ப.து)

stereid - கல்லணு: தண்டின்பட்டைத் திசுவிலும் பஞ்சத் திசுவிலும் காணப்படும் கடினக் கண்ணறை. சில பழங்களிலும் உண்டு. எ-டு பேரிவகைக்கனி,

stereochemistry - திண்ம வேதியில்: மூலக்கூறுகளில் அணுக்களின் இடஅமைவு பற்றி ஆராயுந்துறை. (வேதி)

stereoscope - முப்பரும நோக்கி: ஒரு பொருளை இரு கண்களினாலும் பார்க்கும்போது, அது பொருளின் முப்பருனிலும், இயற்கைத் தன்மையிலும் தெளியளவு தொலைவிலும் தெரியும். (இய)

sterigma - சிதல்காம்பு: சிதல்களைத் தாங்கும் விரல் போன்ற நீட்சி பூஞ்சைகள். (உயி)

sternum - மார்பெலும்பு: மார்புக் கட்டிலுள்ளது. இதில் விலா எலும்புகளின் முனைகள் இணைதல். 2 மார்புத்தகடு: கைட்டினாலான கடினத்தகடு, பூச்சியின் மார்பு. வயிறு ஆகிய உறுப்புகளின் ஒவ்வொரு கண்டத்தின் வயிற்றுப் புறப்பாதுகாப்பு உறையாக அமைவது. (உயி)

sterilization - நுண்ணமழித்தல்: வெப்பம், வேதிப்பொருள் முதலியவை கொண்டு நுண்ணுயிர்களை அழித்தல், மலடாக்கல்: ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை நீக்கி இனப்பெருக்க ஆற்றல் இல்லாமல் செய்தல், (உயி)

stethoscope-மார்பாய்வி: இதயம், நுரையீரல் ஆகியவற்றின் நிலைமையினைத் தெரிவிக்கும் கருவி. இதில் மேற்குறித்த இரு உறுப்புகளின் அசைவுகள் ஒலித்துடிப்புகளாக உணரப்படுகின்றன. இதனைப் புனைந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ் (1804-78). (உயி)

stick insect - குச்சிப்பூச்சி இது பாதுகாப்பு நிறத்திற்கு எடுத்துக்காட்டாகும். இந்நிறம் சூழ்நிலையை ஒத்தது. காய்ந்த குச்சி போன்றே தெரிவதால், செடியில் இருக்கும்போது, இது தன் எதிரியாகிய பறவையிடமிருந்து எளிதில் தப்ப முடிகிறது. (உயி)

still - வாலை: ஆல்ககாலைக் காய்ச்சி வடிக்கப் பயன்படுங்கருவி. (வேதி)

stilt root - ஊன்றுவேர்: தாங்கு வேர். வேற்றிட வேர் பாண்டனஸ், ரைசோபோரா முதலிய தாவரங்களில் காணப்படுவது. (உயி)

stimulus-தூண்டல்: ஓர் உயிரியல் துலங்கலை உண்டாக்கும் காரணி. தூண்டல் இல்லையேல் துலங்கல் இல்லை. வெப்பம், குளிர்ச்சி முதலியவை தூண்டல்கள். சூடான பரப்பைத் தொட்டவுடன் வெடுக்கென்று கையை எடுப்பது துலங்கலாகும். சுடுவது தூண்டல், (உயி)

sting - கொட்டுதல்: தேள் தன் கொடுக்கால் கொட்டுவது. பா. bite (உயி)

sting ray - கொடுக்குக்கதிர் மீன்: வால் மெலிந்து நீண்ட முதுகெலும்பு வாள் போன்றது. (உயி)

stipe - காம்பு: 1. பாசியில் இலைப் பரப்பிற்கும் பிடிப்பு உறுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி 2. நாய்க் குடையில் கனியுறுப்பின் காம்பு. (உயி)

stipule - இலையடிச் செதில்: மாற்றுரு பெற்ற இலை, இலையடிக் காம்பின் புறவளர்ச்சி செம்பருத்தி (உயி)

stock -1.அடி: ஒட்டைப் பெறும் செடியின் கீழ்ப்பகுதி 2. மரத்தின் முதன்மைத் தண்டு. (உயி)

stoichiometry- தனிம அளவை இயல்: தனிமங்கள் சேர்மங்களை உருவாக்கும் அளவுகள். (வேதி)

stolon - பெருகுதண்டு: 1. தாவர அடியிலிருந்து வளரும் தண்டு. மண்ணுக்குக் கீழ்க் கிடைமட்டமாக வளரும். கணுக்களில் வேர்விடும், அரும்புவிடும். எ-டு கூஸ்பெரி, சேனைக் கிழங்கு வகை. 2. குழிக் குடல்களில் கிளைத்த தண்டு போன்ற பகுதி இதிலிருந்து புதிய உயிரிகள் உண்டாகும். (உயி)

stoma - இலைத்துளை: தாவரப் புறத்தோல் அடுக்குகள் தொடர்ச்சியாக இரா. அவற்றில் பல நுண்ணிய துளைகள் காணப்படும். இவையே இலைத்துளைகள், இலைக்குக் கீழ்ப்பரப்பில் அதிகமிருக்கும்.

stomach - இரைப்பை: முதுகெலும்பிகளின் வலுவான தசைப்பை, உணவு இங்கு இரைப்பை நீரிலுள்ள நொதிகளால் செரிமானமும் பாகுநிலையும் அடைகிறது. (உயி)

stomach poison - இரைப்பை நஞ்சு: உண்டபின், உணவில் கலந்த நஞ்சு, குடலுக்குச் சென்று உயிரைக் கொல்கிறது. (உயி)

stomium - வாய்த்துளை: பெரணி முதலிய பூக்காத்தாவரங்களில் சிதல் பரவ உதவும் உறுப்பு. நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்வது இதன் வேலைகள். (உயி)

stone cell-கல்லணு.: பா. Stereid

strain - 1. திரிபு: வில் சுருளில் தகைவினால் ஏற்படுவது. 2. சேர்வகை: கலப்பினமாக்கலால் புதிய வகையை உண்டாக்கல். 3. தோரிணி. (ப.து)

streamline motion - நீரோட்ட இயக்கம்: பொதுவாக, நீர்மம் ஒன்று பாயும் பொது, அதன் ஒவ்வொரு புள்ளியிலுமுள்ள விரைவு மாறாத ஒன்று. ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் வழியிலும் அதே நேர் விரைவுடனும் செல்லும். இந்த இயக்கம் கட்டுப்பாட்டிற்குரியது.

stress - தகைவு: திரிபை உண்டாக்குவது. ஒ. strain (இய)

striae - தழும்பு வரிகள்: வயிறு விரைவாகப் பருப்பதால், தோல் விரிந்து வயிற்றிலும் தொடையிலும் தழும்புகள் உண்டாதல். கருப் பேற்றில் காணப்படுபவை (உயி),

striated muscle - வரித்தசை: இயக்குத்தசை, பா. skeletal muscle (உயி)

stridulation -கீச்சொலி எழுப்பல்: கீச்சொலி உண்டாக்கல். ஆண் பூச்சிகள் தரையில் தம் உறுப்புகளைத் தேய்த்து உண்டாக்கும். பாச்சைகள் தம்முன் சிறகுகளைத் தேய்த்து ஒலி ஏற்படுத்துதல். காதலாட்டத்தில் பெண் பூச்சி களைக் கவர இது பெரிதும் உதவுகிறது.

strobila-1.திருகி: நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர். (உயி)

stroboscope - சுழல்பொருள் நோக்கி : சீரான இயக்கத்துடன் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பொருள்களை, அவை நிலையாக இருப்பது போல் பார்க்கும் கருவி (அய).

stroma-அடரி: 1. பசுங்கணிகத்தில் உள்ள துணுக்க அணுக்களுக்கிடையே உள்ள வெண்ணிற அடிப்பொருள். 2. பூஞ்சை நுண்ணிழைகள் தொகுதி.

strontium - ஸ்ட்ரான்ஷியம்:Sr வெண்ணிற உலோகம், இயற்கையில் ஸ்ட்ரான்ஷியனேட்டாகவும் கிடைப்பது. மத்தாப்புத் தொழிலிலும் சர்க்கரையைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுவது (உயி)

structural formula - அமைப்பு வாய்பாடு: வேதி வாய்பாடு. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களைக் காட்டுவதோடு கூட, அதன் அமைப்பையும் தெரிவிப்பது. ஆகவே, அது மூலக்கூறு வாய்பாடுமாகும்.

H
|
H--C--H
|
H

இது மீத்தேன் மூலக்கூறு அமைப்பு.

structure - அமைப்பு: ஒரு பொருள் அமையும் வகை மூலக்கூறு அமைப்பு 2. கட்ட மைப்பு: உயிரியின் உடலமைப்பு.கட்டிடத்தின் கட்டுமான அமைப்பு. (பது)

structured programming - கட்டமைப்புக்குட்பட்ட நிகழ்நிர லாக்கம்: திறன் வாய்ந்த கணிப்பொறி நிகழ்நிரல்களை உருவாக்கும் வகை, பா. programme (இய)

style - 1. நடை 2 எழுத்தாணி 3. சூல்தண்டு: சூல் இலையின் காம்புப் பகுதி. சூல்பையையும் சூல்முடியையும் இணைப்பது. (ப.து)

stylus - எழுதுகூர்: 1. சிறிய படிகத்துண்டு. எ-டு வைரம். நறுவலில் (சிப்) பொருந்தியது. வினைல் தட்டிலுள்ள காடிப் பள்ளத்தைத் தொடர்ந்து செல்வது. 2.எழுது கோல் போன்ற கருவி. எண் ணிலக்கக் கருவியிலிருந்து (டிஜிடைசர்) கணிப்பொறிக்குத் தகவல்களை மாற்ற வல்லது. (இய)

subscriber trunk dailing, STD - உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்: இது ஒரு தொலைபேசிப்பணி இயக்குபவர் இல்லாமல் நெடுந்தொலைவிலுள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள, உறுப்பினர் தொலைபேசிக்கருவி முகப்பைச் சுற்றுதல். இது நேரடிச் செய்தித் தொடர்பாகும். இதற்கென்று இப்பொழுது தனிவகை நிலையங்கள் உள்ளன. ஒரு நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிற்கும் (ஐ.எஸ்.டி) இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். (தொ.நு)

subscript -கீழ்க்குறி: ஓர் எண் அல்லது எழுத்திற்குக் கீழ் அச்சிடப்படும் சிறிய எழுத்து அல்லது எண். СO2, இல் (கரி ஈராக் சைடு) 2 என்பது கீழ்க்குறி. (இய)

sublimation-1. பதங்கமாதல்: ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல், எ-டு சூடம். அயோடின். ஆவியைக் குளிர்விக்க வெப்பப்படுத்திய திண்மம் மீண்டும் கிடைக்கும். கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. பதங்கமாகும் பொருள் (சப்ளிமேட்) சூடம். 2. மடை மாற்றம்: தன் இயல்பான இலக்கிலிருந்து சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேறோரு இலக்கை நோக்கி, ஓர் இயல்பூக்கத்தை நல்வழிப்படுத்துதல். பாலூக்கம் பற்றி உளப்பகுப்பாளர்களால் முதன்முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. (ப.து)

submarines - நீர்மூழ்கி கப்பல்கள்: இவை மீன்வடிவிலுள்ளவை இவற்றிலுள்ள நிறை தொட்டியில் நீர் நிரப்ப நீரினுள் செல்லும், எடை அதிகமாவதால், நீரில் மூழ்கும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த இவை மீண்டும் நீரின் மேலே வரும். இவை புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுபவை. (இய)

substitution reaction - பதிலீட்டுவினை: இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள நீர்வளி அணுக் களைக் கதிரவன் ஒளியில், குளோரின் அணுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர். இவ்விருவளிகளும் கதிரவன் ஒளியில் இவ்வினையில் ஈடுபட்டுப் பயனுள்ள வினைப் பொருள்களைத் தரும். எ-டு மெத்தில் குளோரைடு, மெத்திலின் குளோரைடு, குளோரபாம். மாற்றீட்டு வினை என்றும் கூறலாம். (வேதி)

substrate - 1. வினைப்படுவி: வினைப்படும் பொருள். நொதிச் செயலுக்குட்பட்டது. 2. படிபொருள்: உயிரி வாழும் அல்லது வளரும் உயிரற்ற பொருள். (வேதி),

succession - தொடர்வு: ஒரு பகுதியில் தாவரங்களும் விலங்குகளும் குடியேறி நிலைத்த பின், அவற்றின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்ற மாற்றங்களின் தொடர்ச்சி. பா. sere (உயி)

sucker - உறிஞ்சிவாழ்வி: தரைகீழ் தண்டு. ஒரு நிலையில் மண்ணுக்கு மேல்வந்து புதிய தாவரத்தை உண்டாக்குவது. தான் நிலைப்பு பெறும்வரை இது தாய்த் தாவரத்திலிருந்து ஊட்டம் பெறுவது. எ-டு வல்லாரை, புளியாரை. (உயி)

suction pressure-உறிஞ்சழுத்தம்: உறிஞ்சுவதால் ஏற்படும் அழுத்தம் (இய)

suffocation - மூச்சுத்திணறல்: பா.asphyxia (உயி).

sugar - சர்க்கரை: C12H22O11, சுக்ரோஸ் அல்லது கரும்புச் சர்க்கரை, நிறமற்ற படிகம். இனிப்புச் சுவை, நீரில் கரையும். கரும்பு, பீட்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து தயார் செய்யப்படுவது. இனிப்புகள் செய்யவும் பயன்படுவது. (உயி)

sulpha drugs- சம்பா மருந்துகள்: சல்பனாமைடு தொகுதியுள்ள கரிமக்கூட்டுப் பொருள்கள் சேர்ந்த கலவை. குச்சிய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுவது. (வேதி)

sulphate - சல்பேட்: கந்தகக்காடி உப்பு. இது கனிம உப்பாகும். எ-டு: துத்தநாகச் சல்பேட் (வேதி)

sulphation - சல்பேட்டாக்கல்: சல்பைடை உயிர்வளி ஏற்றம் செய்வதன் மூலம், ஒரு கூட்டுப் பொருளைச் சல்பேட்டாக மாற்றுதல். (வேதி)

sulphide - சல்பைடு: கந்தகக் கூட்டுப்பொருள். எ-டு. கரி இரு சல்பைடு. (வேதி)

sulphite - சல்பைட்: கந்தகக்காடி உப்பு. எ-டு கால்சியம் இருசல்பைட் (வேதி)

sulphofication - கந்தக ஏற்றம்: கந்தகத்தையும் அதன் கூட்டுப் பொருள்களையும் உயிர்வளி ஏற்றம் செய்து, சல்பேட் உப்புகளைப் பெறுதல் மண்ணில் இது குச்சியங்களினால் நடைபெறுவது. (வேதி)

sulphonation - சல்போனிகக் காடியாக்கல்: ஒரு கரிமப் பொருளில் சல்போனிகக் காடித் தொகுதியைச் சேர்த்தல். (வேதி)

sulphur - கந்தகம்: குறைந்த உருகுநிலை கொண்ட அலோகம், மஞ்சள் நிறம், நொறுங்கக் கூடியது. மூன்று வேற்றுருக்களில் உள்ளது. தொற்றுநீக்கி, பூச்சிக்கொல்லி (வேதி)

sulphuration- கந்தகமாக்கல்: ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல். (வேதி)

sulphur dioxide - கந்தக ஈராக்சைடு: S02, நிறமற்ற வளி, திணற வைக்கும் மணம், சலவை செய் யவும் ஆவியூட்டவும் குளிர்விக் கும் பொருளாகவும் பயன்படுதல். (வேதி)

sulphuric acid - கந்தகக்காடி: H2S04. எண்ணெய் போன்ற நீர்மம், நிறமற்றது. தொடுமுறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. கந்தக முவாக்சைடு கந்தகக்காடியுடன் உறிஞ்சு கூண்டுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஒலியம் கிடைக்கிறது. இத்துடன் வேண்டிய அளவு நீரைச் சேர்த்துக் கந்தகக்காடி யைப் பெறலாம். நீர்நீக்கி, உயிர் வளி ஏற்றி, உரங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுவது. (வேதி)

sulphurous acid - கந்தசக்காடி: H2SO3. வீறற்றது. கந்தக ஈராக்சைடை நீரில் கரைத்துப் பெறலாம். ஒடுக்கி, (வேதி)

sulphur trioxide - கந்தக மூவாக்சைடு: SO3. புகையக்கூடிய வெண்ணிறப் பொருள். பெரச் சல்பேட்டைச் சூடாக்கிப் பெறலாம். கந்தகக்காடி தயாரிக்கவும் வளிகளை உலர்த்தவும் பயன்படுவது.

summation - தொகையாக்கல்: 1. ஒரு நரம்பு அல்லது தசை கூடுமிடத்திற்கு வரும் பல துடிப்புகள் உண்டாக்கும் கூட்டு விளைவு. ஒரு தனித்துடிப்பு தூண்டலை உண்டாக்க இயலாது. 2. கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியில் ஒத்த விளைவுகளோடு இரு பொருள்கள் வினையாற்றல். (ப.து)

sun - கதிரவன்: பகலவன் குடும்பத்தின் மையத்திலுள்ள விண் மீன். ஆற்றல் ஊற்று. புவிக்கும் புவியிலுள்ள உயிர்களுக்கும் ஆற்றல் அளிப்பது. ஒன்பது கோள்களும் இதை மையமாகக் கொண்டே சுழல்கின்றன. (வானி)

sunspots - கதிரவன் புள்ளிகள்: 1610இல் கலிலியோ இவற்றைக் கண்டறிந்தார். இவை நகர்பவை. இந்நகர்ச்சியிலிருந்து கதிரவன் தன்னைத் தானே சுற்றிக் கொள் கிறது என்னும் உண்மையை இவர் கண்டறிந்தார். (வானி)

supercooling - மீக்குளிர்வு: குறிப்பிட்ட அழுத்தத்தில், உருகு வெப்பநிலைக்குக் கீழுள்ள வெப்பநிலைக்கு ஒரு நீர்மம் கெட்டியாகாமல் குளிர்தலுக்கு மீக்குளிர்வு என்று பெயர். இதை ஆராயும் துறை குளிரியல் ஆகும். (இய)

super conductivity - மீக்கடத்து திறன்: சில பொருள்களைத் தனிச்சுழி நிலைக்குக் குளிர்விக்கும் பொழுது மின்தடை மறையும். பெரிய மின்காந்தப் புலங்கள் உண்டாக்கப் பயன்படுவது. (இய)

super fluid - மீப்பாய்மம்: உராய்வின்றி ஓடும் நீர்மம். இதற்கு இயல்பு மீறிய உயர் கடத்தும் திறன் உண்டு. இத்திறனுக்கு மீப்பாய்மத்திறன் என்று பெயர். (இய)

super gene - மீமரபணு: மரபணுக்கள் நெருங்கி இணைவதால் உண்டாகும் திரட்சி. இவை ஒரே அலகாக நடப்பவை. ஏனெனில், அவற்றிற்கிடையே குறுக்குக் கலப்பு மிக அரிதாக நடைபெறுவது. (உயி)

superheating - மீவெப்பமாக்கல்: அழுத்தத்தை மிகுதியாக்கிக் கொதி வெப்பநிலைக்கு மேல் ஒரு நீர்மத்தின் வெப்பநிலையை உயர்த்துதல் (இய)

super high frequency - மீவுயர் அதிர்வெண்: 3000 - 30000 மெகா ஹேர்ட்ஸ் எல்லையிலுள்ள வானொலி அதிர்வெண்கள். 1.10 செமீ அலைநீளங்களுக்கு இணையானவை. (இய)

superior ovary - மேற்சூல்பை: சூல்பையின் நிலைகளிலும் பூக்கள் வேறுபடுகின்றன. வழக்கமாக மற்றப் பூக்களைக் காட்டிலும் சூல்பை உயர்ந்த மட்டத்தில் இருக்கும். இவ்வாறு புல்லிகள் அல்லிகள் மகரந்தத்தாள்கள் ஆகியவற்றோடு மேலிருக்கும் சூல்பை மேற்சூல்பையாகும். இப்பையுள்ள பூ மேற்சூல்பைப்பூ (உயி)

super magnet - மீக்காந்தம்: அமெரிக்க அறிவியலார் உருவாக்கிய பேராற்றல் வாய்ந்த காந்தம். புலவலு 13.5 டெல்சா. புவிக்காந்தத்தைப் போல் 2,50,000 மடங்கு வலுவுள்ளது. (1977).

superphosphate - மீப்பாஸ்பேட்: கால்சியம் அய்டிரஜன் பாஸ் பேட் கால்சியம் சல்பேட் சேர்ந்த கலவை. உரம். கந்தகக் காடியைக் கால்சியம் பாஸ்பேட்டில் சேர்த்துப் பெறலாம். (வேதி)

supersaturated solution - மீ நிறைவுறு கரைசல்.

superscript - மேற்குறி: ஓர் எண் அல்லது எழுத்திற்கு மேல் அச்சிடப்படும் சிறிய எழுத்து அல்லது எண். 222 இல் 2 என்பது மேற்குறி. ஒ. Subscript (இய)

supersonics - மீஒலிஇயல்: மீ ஒலி அலைகளை ஆராயுந்துறை. ஒலி விரைவுக்கு மேலுள்ள அலை மீ. ஒலியலை ஆகும். (இய)

supination - புறம் புரட்டல்: உள்ளங்கை மேலிருக்குமாறு முன்கையைக் கொண்டு வருதல். ஒ. (உயி)

supplementary units - துணையலகுகள்: பருமனற்ற அலகுகள். அடிவழியலகுகளுடன் வழியலகு களை உருவாக்கப் பயன்படுத்தப்படுபவை. எ.டு. ரேடியன். (இய)

supremolecular chemistry - மீ மூலக்கூறு வேதிஇயல்: முழு மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள வினைகளை ஆராய்வது. அடிப்பொருள் மூலக்கூறுடன் வினையாற்றும் நொதி இயற்கை மீக்கூறு வேதியமைப்புக்கு எடுத் துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு சைக்ளோபேன். இம் மூலக்கூறு நச்சுப் பொருள்களைப் பிடிக்க வல்லது. கிரிப்டோபேன் மற்றும் கேலிக்கரின் குடும்பத்தில் இத்தகைய மூலக்கூறை உருவாக்கலாம். (வேதி)

surface science - பரப்பு அறிவியல், பரப்பியல்: ஒரு திண் பொருளின் மீஉச்சி அடுக்குகளின் அணுக்களை ஆராயும் புதிய அறிவியல், தொழில்நுட்பச் செறி வுள்ளது. 1960களில் உருவான அரைகுறைக் கடத்தி மின் தொழில் இதைத் தோற்று வித்தது. (தொது)

surface tension - பரப்பு இழு விசை: அனைத்துப் பொருள்களிலும் மூலக்கூறுகள் உண்டு. அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே பரப்பு இழு விசை, நீர் மேற்பரப்பு இதில் நீட்டிய மீட்சிப்படலம் போல் இருக்கும். எ-டு நீர்மேல் குண்டுசி மிதத்தல். (இய)

surfactant - பரப்பு இழுவிசைக் குறைப்பி: மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம் (இய)

surveying - அளவையிடல்: நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பயன்படுவது. (இய)

suspension - தொங்கல்: ஒரு திண்மத்தின் அல்லது நீர்மத்தின் சிறிய துகள்கள் நீர்மம் அல்லது வளியில் சிதறுதல் ஒ. butter. (வேதி)

suspensor - தாங்கி: தற்காலிகக் காம்பு போன்ற உறுப்பு. கருவுறுதலுக்குப் பின் ஊட்டமுள்ள முளை சூழ்தசையில் கருவைத் தாங்குவது. உறையில் விதையுள்ள தாவரங்கள், பெரணிகள் (செலாஜினெல்லா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் (சளம் பனை) ஆகியவற்றில் காணப்படுவது. (உயி)

suture - தையல்வாய்: அடுத்தடுத்துள்ள பகுதிகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பைக் குறிக்கும் கோடு. தலைச்சட்டக எலும்புகளின் இணைவாய்கள், சூல் இலையின் விளிம்புகள் எடுத்துக் காட்டுகள், 2. தையல்: கிழிந்த உடல் உறுப்பைத் தைத்து சேர்த்தல். 3. தையல் பொருள்: நைலான், பட்டு, நூலிழை முதலிய தைப்புப் பொருள்கள். (உயி)

swallowing - உணவு விழுங்கல்: கவளம் கவளமாக உணவு உட் கொள்ளுதல் (உயி)

swarming of bees - தேனீக்கள் கூட்டமாகச் செல்லுதல்: ஒரிடத்தில் தங்கள் கூடுகட்டிய வாழ்க்கை முடிந்த பின் வேறோர் இடத்திற்கு அரசியும் அத்துடனுள்ள மற்றத் தேனிக்களும் புடைசூழச் செல்லுதல். அங்குத் தேன்கூடு கட்டி வாழத் தொடங்குதல். (உயிர்

sweat gland - வியர்த்தல்: 1. வியர்வை வெளியேறல். 2. கொழுப்பகற்றல்: கொழுப்பு நீக்கும் முறைகளில் உண்டாகிய வடிதுண்டிலிருந்து எண்ணெயையும் குறைந்த உருகுநிலை மெழுகுகளையும் அகற்றல் (உயிர்

sweat gland - வியர்வைச்சுரப்பி: சுருண்ட குழாய்ச் சுரப்பி. தோலில் காணப்படுவது. வியர் வையைச் சுரப்பது. ஒரு கழிவுச் சுரப்பி. (உயி)

swim bladder - நீந்துபை: எலும்பு மீனில் காணப்படும் பெரியதும் மெலிந்த சுவருள்ளதுமான குழி, நீந்த உதவுவது. (உயி)

switches - சொடுக்கிகள்: மின்சுற்றை மூடித்திறக்க உதவும் கருவியமைப்புகளில் ஒருவகை. (இய)

symbiosis - கூட்டுவாழ்வு: இஃது ஓர் இணைந்த வாழ்வு. இரு தனி உயிரிகள் இணக்கமுடன் வாழ்ந்து இரண்டும் நன்மை பெறுதல். பட்டாணி முதலிய தாவர வேர் முண்டுகளில் குச்சியங்கள் வாழ்ந்து தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைப் பெற்று மாற்றாக நைட்ரேட்டு உப்பைத் தாவரங்களுக்கு அளித்தல் இதற்குச் சிறந்த எ-டு ஒ commensalism (உயி)

symbol - குறியீடு: 1. அணுவின் பெயரை ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் சுருக்கமாகக் குறித்தல். எ-டு உயிர்வளி O வெள்ளி Ag. பா. sign (வேதி) 2. குறிப்பிட்ட அளவு அல்லது அலகைக் குறிக்கும் எழுத்து. d என்பது அடர்த்தியையும் m என்பது பொருண்மையையும் குறிக்கும். 3. ஒரு மின்சுற்று அல்லது தொகுதியில் கட்டுத் தொகுப்பின் வேலையைக் குறிக்கப் பயன்படும் எளிமையாக்கப்பட்ட வடிவம். (இய)

symmetrical - சமச்சீருள்ள: இரு சமபகுதிகளால் பிரிக்கக்கூடிய எவ்வுருவத்தையும் குறிக்கும். இப்பகுதிகள் ஒன்று மற்றொன்றுக்கு ஆடிப் பிம்பமாக அமையும். பொதுவாக, ஒரு சமச்சீருள்ள தள உருவம் குறைந்தது ஒரு கோட்டைக் கொண்டிருக்கும். இக்கோடே சமச்சீர் அச்சு. இவ்வச்சு அதனை இரு ஆடிப்பிம்பங்களாகப் பிரிக்கும். (இய)

symmetry - சமச்சீர்: ஓர் அடிப்படைக் கருத்துச் சொல். தாவரப் பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை. முதன்மையாக இது இருவகைப்படும். 1. இருபக்கச் சமச்சீர் (பை லேட்ரல் சிமெட்ரி) ஒரு செங்குத்துக் கோட்டில் இரு சமபகுதிகளாக மட்டும் பிரிக்கலாம். எ-டு. புலிநகக் கொன்றை, மீன் 2. ஆரச் சமச்சீர் (ரேடியல் சிமெட்ரி) எச் செங்குத்துக்கோட்டிலும் இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு வெங்காயம், நட்சத்திர மீன். (ப.து)

sympathetic nervous system - பரிவு நரம்பு மண்டலம்: இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. இதன் நரம்புகள் இதயம், நுரையீரல் முதலிய உள்ளுறுப்புகளுக்குச் சென்று அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. (உயி)

symphysis - குருத்தெலும்பு மூட்டு: மூட்டுகளில் சிறிதே அசையும் மூட்டு, பா. joint, pu- bic symphysis. (உயி)

synapse - கூடல்வாய்: வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் (உயி)

synchronous culture - ஒருமுக வளர்ப்பு: கண்ணறைகள் வளர்ப்பு உடலியல், உயிரிய வேதி ஆராய்ச்சிகளில் இவ்வகை வளர்ப்பு அதிக மதிப்புள்ளது. (உயி)

syncrony-ஒருமுக இயக்கம்: ஒரே சமயத்தில் உடலின் குறிப்பிட்ட பகுதி அல்லது பகுதிகள் ஒருமுகமாக இயங்குதல். எ-டு பரமேசியக் குற்றிழை இயக்கம். (உயி)

syndrome - நோய்க்குறியம்: அறிகுறிகள் ஒருங்கிணைதல், உயிரியின் இயல்பிறழ் நிலைமையினைக் காட்டுதல். (மரு)

synecology - ஒருங்கு சேர் சூழ்நிலை இயல்: ஓர் இயற்கைச் சமுதாயத்தின் உயிருள்ள பகுதியையும் ஒன்றோடு மற்றொன்று அவை கொள்ளும் தொடர்புகளையும் ஆராயுந்துறை. ஒ. autecology.(உயி)

syngraft - ஒருங்கொட்டு: பா. graft (உயி)

synovial fluid - உயவிடு நீர்: உயவிடுபடலம் சுரக்கும் நீர் (உயி).

synovial membrane - உயவிடு படலம்: ஒரு மூட்டினைச் சூழ்ந்துள்ள பொதிகையினைத் தோற்றுவிக்கும் படலம். கடின இணைப்புத் திசுவாலானது. இத்திசுவில் அதிக அளவு வெண்ணிறக் கொலேஜன் இருக்கும். (உயி)

synthesis - சேர்க்கை: தொகுப்பு. எளிய பொருள்களிலிருந்து அரிய பொருள்கள் உண்டாதல், எ-டு ஸ்டார்ச் தொகுப்பு. புரதத் தொகுப்பு (உயி)

synthetic fibres - சேர்க்கை இழைகள்: தொகுப்பிழைகள். எ-டு தைலான், பிவிசி. (வேதி)

syringe - பீச்சுகுழல்: பாய்மங்களைச் செலுத்தவும் உறிஞ்சவும் பயன்படும் கருவி. (இய)

syrinx - குரல்வளை: பறவையின் குரல் உறுப்பு. (உயி)

systematics - முறைப்பாட்டியல்: பா taxonomy (உயி)

system - 1.தொகுதி: வேர்த்தொகுதி, கப்பித்தொகுதி. 2. மண்டலம்: எலும்பு மண்டலம் 3. முறை: பெந்தம் கூக்கர் முறை. 4. ஏற்பாடு: கட்டுப்பாட்டு ஏற்பாடு 5. அமைப்பு: அமைப்புக் கட்டுப்பாடு. (ப.து)

system programme - அமைப்பு நிகழ்நிரல்: வீட்டுப்பணி அல்லது மேற்பார்வைப் பணியை நிறை வேற்றக்கணிப்பொறியைப் பயன்படுத்துதல். (கணி)

systems analysis - அமைப்பு பகுப்பு: அலுவலகப்பணிகளைப் பகுத்துக் கணிப்பொறி வாயிலாக நடைமுறையாக்கல் (கணி)

systems analyst - அமைப்புப் பகுப்பாளர்: கணிப்பொறி மூலம் அலுவலகப் பணிகளை நடைமுறைப்படுத்துபவர். (இய)

systole-இதயச் சுருக்கம்: இதயச் சுழற்சியின் சுருங்கு நிலை. இது இதய விரிவுக்கு எதிரானது. இச்சுருக்கம் இதயக் கீழறைகள் சுருங்குவதையே குறிக்கும். ஒ. diastole (உயி)

systolic blood pressure - சுருங்கு குருதியழுத்தம்: எவ்விசையுடன் இடது கீழறை சுருங்குகின்றதோ அவ்விசை வெளிப்புறத் தமனிகளில் அளக்கப்படுதல். (உயி)

systolic murmur - சுருங்கு முணுமுணுப்பு: இதயம் சுருங்கும் பொழுது கேட்கப்படும் இரைச்சல். இரு பெரும் தமனிகள் அடைப்பாலும் அல்லது மூவிதழ் திறப்பு அடைப்பாலும் உண்டாவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/S&oldid=1040367" இலிருந்து மீள்விக்கப்பட்டது