அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/M

M

Mechinable: எந்திர வேலைப்பாடு: செய்யத்தக்க: கருவிகளினால் அல் லது எந்திரக்கருவியிலுள்ள வெட்டு கருவிகளினால் வேலைப்பாடு செய்யத்தக்க பொருள்.

Machine: (எந்) எந்திரம்: விசை யாற்றலை உருமாற்றுவதற்கான அல்லது இடமாற்றுவதற்கான ஒரு சாதனம்.

Machine eomposition : (அச்சு.) எந்திர அச்சுக்கோப்பு: எந்திர முறை மூலம் அச்செழுத்துக்களைக் கோத்தல்.

Machine drawing: எந்திர முறைப்பட வரைவு: எந்திரத்தின் அல்லது எந்திர உறுப்புகளின்வரைபடங்களை எந்திரத்தின் மூலம் வரைதல். இதில் குறிப்புகளும், பரிமாணங்களும் பட்டறைத் தகவல்களும் குறிக்கப்பட்டிருக்கும்.

Machine dried: எந்திர உலர்த்து தாள்: எந்திரத்தின் உலர்த்து உருளைகளில் உருட்டி முழுமை உலர்த்தப்பட்ட காகிதம்.

Machine drilling (எந்.) எந்திரத் துரப்பணம்: விசையினால் இயக்கப்படும் எந்திரத்தின் மூலம் துரப்பண வேலைகள் செய்தல்.

Machine finish: எந்திர மெருகீடு : எந்திரத்தின் மூலமாகக் காகிதத் தின் மேற்பரப்புக்கு மெருகூட்டுதல். Machine glazed: மெருகேற்றிய தாள்: ஒருபக்கம் நன்கு மெருகேற்றப்பட்ட தாள்.

Machine molding: (வார் .) எந்திர வார்ப்படம்: வார்ப்புருவங்களைத் தயாரிப்பதற்கான வார்ப்படங்களை தனிவகை எந்திரங்களைப் பயன் படுத்தி உருவாக்குதல்.

Machine rating: (மின்.) எந்திர அறுதிப்பாடு: ஒர் எந்திரம் அளவுக்கு மீறிச் சூடாகிவிடாமல் விசையை அனுப்பும் திறன்.

Machinery :எந்திரத் தொகுதி: எந்திரக் கருவிக்கலன்களின் தொகுதி. ஒர் எந்திரத்தின் செயலுறு உறுப்புகளையும் குறிக்கும்.

Machinery stees: (எந்.) எந்திர எஃகு: திறந்த உலை முறையில் தயாரித்த எஃகு, இதில் 0. 15% முதல் 0, 25% கார்பன் கலந்திருக்கும். கடும் பதப்படுத்தக்கூடிய, ஆனால் செம்பதமாக்க முடியாத மென்மையான எஃகு அனைத்தை யும் இச்சொல் குறிக்கும்.

Machine screw; எந்திரத் திருகு: தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையாணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும்.

Machine tool: (பட்.) வெட்டுக் கருவி: கடைசல் எந்திரம், துரப்பன எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள். இவை மற்ற எந்திரங்களைத் தயா ரிப்பதற்குப் பயன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்' என்று அழைக்கப்படுகின்றன.

Machining: எந்திர வேலைப்பாடு: உலோக வேலைப்பாடுகளில் எந்தி ரங்களினால் செய்யப்படும் நுட்ப வேலைப்பாடுகள்,

Machining allowance: (எந்.) மெருகுவேலை மிகைப்பகுதி: வெட்டுக் கருவிகளினால்மெருகு வேலைப்பாடு செய்வதற்கு வசதியாகப் போதிய அளவு விடப்படும் மிகைப் பகுதி.

Machinist: எந்திர இயக்குநர்: எந்திரக் கருவிகளை இயக்குபவர்.

Mach number: (வானூ.) ஒப்பு வேக எண்: உண்மையான காற்று வேகத்திற்கும் ஒலியின் வேகத்திற்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கும் எண். ஒலியை விடக் குறைந்த வேகத்திற்கான இந்த எண் ஒரு பின்னமாகும். ஒலியினும் மிகுதியான வேகத்திற்கு இந்த எண் ஒன்றுக்கு மேற்பட்டதாகும்.

Macro molecule: (குழை.) பெரு மூலக்கூறு: கரைதக்கை நிலைப் பண்புகளை வெளிப்படுத்து அனவுக்கு வடிவளவுள்ள ஒரு மூலக்கூறு.

Madrono: (மர. வே.) மாட்ரோனோ: ஒரு பூக்கும் இன மரம். பசிபிக் கடற்கரையோரம் வளர்கிறது. இதன் வெட்டு மரம் கரடு முரடானது; கனமானது. இளஞ்சிவப்பு நிறமுடையது. அறைகலன்கள் செய்வதற்கு மிகுதியும் பயன்படு கிறது.

Magazine : (க.க.) படைக்கலக் கொட்டில் : போர்க்காலத்தில் படைக்கலங்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம்: துப்பாக்கி மருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம்.

(2) பருவ இதழ் : பல எழுத்தாளர்களின் படைப்புகளடங்கிய புத்தக வடிவிலுள்ள பருவவெளியீடு

(3) அச்சுக்கோப்பு எந்திரப் பகுதி : அச்சுக்கோப்பு எந்திரத்தின் ஒரு பகுதி. இதில், அச்சு வார்ப்புருக்கள் அல்லது எழுத்துகள் வரிகளாக ஒருங்கிணைப்பதற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

Magnalium : (உலோ.) மாக்னாலியம் : அலுமினியமும் மக்னீசிய மும் கொண்ட இலேசான உலோகக் கலவை . இதில் 2%-10% மக்னீசியம் கலந்திருக்கும். இந்த உலோகக் கலவை மிகக் கடினமானது, இதனை எளிதில் வார்க்கலாம்; வடிவமைக்கலாம்; இதில் எளிதில் வேலைப்பாடுகள் செய்யலாம்.

Magnesia : (வேதி.) மெக்னீசியா:

இதனை வெளிம உயிரகை என்றும் கூறுவர். இது வயிற்றுப் புளிப் பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும வெண்பொடி,

Magnesium : (உலோ.) மெக்னீசியம் : மிக இலேசான உலோகத் தனிமம். இதன் வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத் தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலியவற்றின் இலேசான உறுப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்து கிறார்கள். இந்த உலோகம் எளிதில் தீப்பற்றும் தன் மையுடையது. அதனால், இதில் எந்திரத்தால் வேலைப்பாடுகள் செய்யும் போது தீப்பிடிப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இது கண்கூச வைக்கும் ஒளி விளக்கு களிலும், வாண வேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுகிறது

Magnet : (மின்.) காந்தம் : வளை வில் (குதிரைலாட) அல்லது சலாகை வகைத் துகள்களைக் கவர்ந்திழுக்கு இயல்புடைய பொருள்.

Magnet core (மின்.) காந்த உள்ளீடு: இது பெரும்பாலும் மெல்லிரும்பாக அமைந்திருக்கும். இதனை மையமாகக் கொண்டு கம்பி சுற்றப் பட்டிருக்கும். இக் கம்பியில் மின்விசை பாயும்போது மின்காந்தம் உண்டாகும்.

Magnetic chuck : (மின் .:பட்.) காந்தப்பற்றி : காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்று கருவி. மேற்பரப்பிணை அரச வித தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை நேர் மின்னோட்டத்தை மட்டுமே கொண்டு பயன்படுத்த முடியும்.

Magnetic circuit (மின்.) காந்தச் சுற்று வழி: ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஒர் இடைவெளியையும் கொண்டி ருக்கலாம்.

Magnetic circuit breaker : (மின்.) காந்தச்சுற்று வழிமுறிப்பான்: ஒரு கற்று வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு மின்காந்தச் சாதனம்.

Magnetic coil : (மின்.) காந்தச் சுருணை: ஒரு மின் காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின் னோட்டம் பாயும் போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும்.

Magnetic cutout: (மின்.) காந்த வெட்டுவாய்: ஒரு மின்சுற்று வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம்.

Magnetic deflection: காந்த

விலக்கம்: காந்தப் புலங்கள் மூலம் மட்டுப்படுத்தப்படும் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்.

Magnetic density: (மின்.) காந்த அடர்த்தி: பார்க்க பெருக் கடர்த்தி

Magnetic field: (மின்.) காந்தப் புலம்: ஒரு காந்தத்தின் அருகி லுள்ள இடப்பகுதி. இதன் வழியே காந்த விசைகள் செயற்படுகின்றன

Magnetic flux: (மின்.) காந்தப் பெருக்கடர்த்தி: மின் காந்தம், நிலைக்காந்தம் அல்லது கம்பிச் சுருள் மூலம் உருவாக்கப்படும் காந்தவிசைக் கோடுகள்.

Magnetic force: (மின்.) காந்த விசை: ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகச் செல்கிறவிசை,

Magnetic fuel pump, (தானி.) காந்த எரிபொருள் இறைப்பான்; வெற்றிட அமைப்பு முறையின் உதவியின்றி எரிபொருள் வழங்கு வதை முறைப்படுத்தும் மின்விசையால் இயங்கும் எந்திர இறைப்பான்.

Magnetic hoist: (மின்.) காந்தப் பாரந்தூக்கி: மின் காந்தத்தின் மூலம் பாரத்தைத் தூக்கும் ஒரு பாரந்தூக்கி எந்திரம்.

Megnetic induction; (மின்.) காந்தத் தூண்டல்: பாய்வுத் திசைக்குச் செங்குத்தாகவுள்ள குறுக்கு வெட்டுப் பரப்பின் ஒர் அலகிலுள்ள காந்தக் கோடுகளின் அல்லது காந்தப் பெருக்கத்தின் எண்ணிக்கை.

Magnetic needle: (மின்.) காந்த ஊசி: ஒரு நுண்ணிய எஃகுக் காந்தம். இதனை ஒரு ஆதாரத்தில் வைக்கும்போது, பூமியின் காத்தத் துருவங்களுக்கேற்ப, இயல்பாக வடக்கு-தெற்குத் திசையில் நிற்கும். வடக்கு நோக்கிய கருவியில் எப்போதும் வடக்கையே காட்டும் காந்த ஊசி.

Magnetic permeability; (மின்.) காந்தத் தகவு: காந்தத் தாக்கு தலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு, ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு.

Magnetic potential: (மின்.) காந்த ஆற்றல்: காந்தப் புலத்தின் எல்லையிலிருந்து ஒரு காந்தத் துருவ அலகினைக் காந்த ஆற்றல் தேவைப்படும் புள்ளிக்கு நகர்த்துவதற்குத் தேவைப்படும் பணியின் அளவு.

Magnetic screen or shield: (மின்.) காந்தத் திரை அல்லது கேடயம்: இது உட்புழையான இரும்புப் பெட்டி . இதன் மையப்பகுதி காந்த விசைக்கோடுகளின்றி அமைக்கப் பட்டிருக்கும்.

Magnetic switch: (மின்.) காந்த இணைப்பு விசை: மின்காந்தம்

மூலம் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் ஒர் இணைப்பு விசை,

Magnetic whirl: (மின்.)காந்தச் சுழற்சி: மின்னோட்டம் பாயும் ஒவ்வொரு கம்பியைச் சுற்றிலும் ஒரு வடிவமான காந்தப்புலம் நீர்ச்சுழி அல்லது சுழல் போல் அமைந்திருக்கும். இதுவே காந்தச் சுழற்சி எனப்படும். இது தூண்டலற்ற சுருணையைக் குறிப்பதில்லை.

Magnetism (மின்.)காந்த விசை:இரும்பு, எஃகு, வேறு பொருள் களுக்குள்ள ஒருவகை ஈர்ப்பு இயல்பு. இந்த இயல்பு காரணமாக, இவை குறிப்பிட்ட விதிகளுக் குட்பட்டு, ஈர்ப்புவிசைகளையும், எதிர்ப்புவிசைகளையும் செலுத்து கின்றன.

காந்தவியல்: காந்தவிசை பற்றிய விதிகளையும் நிலைகளையும் ஆராயும் அறிவியல் பிரிவு.

Magnetite: (கனி.) அயக்காந்தம் . (மாக்னட்டைட்): காந்த விசையுடைய இருமபுக் கனிமம (Fe3O4)

Magnetization: (மின்.) காந்த விசையூட்டுதல்: க ந் த த் தி ன இயல்புகளை ஏற்றல் அல்லது காந்தவிசையினை ஊட்டுதல்.

Magneto (மின்.) தனிக்காந்த மின்னாக்கி: உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக் கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின் விசை உற்பத்தி செய்வதற்காக நிலைக் காந்தங்களும், ஒரு மின்னகமும் அமைந்திருக்கும்.

Magnet-o-motive force: (மின்.) காந்தவியக்க விசை: ஒரு முழுமையான காந்தச் சுற்று வழியின் நெடுகிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான காந்தம் ஏற்றும் விசை.

Magnet steel: காந்த எஃகு:இது சாதாரணமாக, குரோமியமும் மக்நீசியமும் கலந்த உயர்தரமான எரியும் மின்னிழைம எஃகினைக் குறிக்கும். இது நிலைக் காந்தங்களுக்குப் பயன்படுகிறது.

Magnet wire: (மின்.) காந்தக் கம்பி: மின்னகங்கள், புலச் சுருள்கள், தூண்டு சுருள்கள் முதலியவற் றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது, ஒரே செம்புக் கம்பியிாைலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிடப்பட்டது; செறிவூட்டப் பெறாதது.

Mahl stick: (வண்.) தாங்கு கோல்: ஓவியம் வரைபவர்கள் இடது கைத் தாங்கலாகப் பயன் படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.

Mahogany: சீமை தூக்கு : உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள், மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற் றில் மிகுதியாக வளர்கிறது. இம் மரம் வெட்டியவுடன் இளஞ் சிவப்பு அல்லது வஞ்சிரம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வெயில் படப்படக் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும். அடர்த்தி வேறுபடும் கரணைகள் கவர்ச்சியான உருவங்களில் அமைந்திருக்கும்.

Main bearings: (தானி.) முதன்மைத் தாங்கிகள்: உந்து ஊர்தி எஞ்சின்களில் வணரி அச்சுத் தண்டினைத் தாங்கி நிற்கும் தாங்கிகள் முதன்மைத் தாங்கிகள் ஆகும்.

Mains: (மின்.) மின்வாய்கள்: கிளைமின் சுற்று வழிகளுக்கு மின் விசை வழங்குகிற மின்னியல் கடத்திகள்.

Main shaft: (எந்.) முதன்மைச் சுழல்தண்டு: எஞ்சினிலிருந்து அல்லது இயக்கியிலிருந்து நேரடியாக மின்விசையைப் பெற்று, மற்ற உறுப்புகளுக்கு விசையை அனுப்புகிற சுழல்தண்டு.

Main supporting surface: (வானூ.) முதன்மை ஆதாரப்பரப்பு: விமானத்தில், இறகுகளின் மேற்பரப்பு. இப்பரப்பு விமானம் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது.

Major axis: நெட்டச்சு:ஒரு நீள் வட்டத்தின் நீள் விட்டம்.

Maj

414

Man


Major diameter: (எந்.) நீள் விட்டம்: இதனைப் புற விட்டம்’ என்றும் அழைப்பர். ஒரு திருகில் அல்லது சுரையாணியில் உள்ள மிகப் பெரிய விட்டம்.

Make up: (அச்சு.) பக்கத் தயாரிப்பு: அச்சுக்கலையில் அச்சுக் கோத்த எழுத்துகளைப் பக்கங்களாகத் தயாரித்தல்.

Make - up rule: (அச்சு.) பக்கத் தயாரிப்பு வரித்தகடு: அச்சுக்கலையில் பக்கங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எஃகு வரித் தகடு.

Malachite: (கனி.) மாலாஷைட்: தாமிரத் தாதுக்களில் ஒன்று பச்சை நிறமான, அடிப்படைத் தாமிரக் கார்போனேட். மேலேட்டுப் படிவங்களாகப் பெருமளவில் கிடைக்கிறது. 'மலைப் பச்சை' என்னும் பெயரில் வண்ணப் பொருளாகப் பயன்படுகிறது.

Malleable: நெகிழ் திறனுடைய : தங்கம் போன்ற உலோகங்களை உடைந்து விடாதபடி தகடாக நீட்டத்தக்க நெகிழ்திறத் தன்மையுடைய.

Malleable cast iron : (உலோ.) நெகிழ்திற வார்ப்பிரும்பு : ஒரளவுக் குக் கரிம நீக்கம் செய்யப்பட்ட வார்ப்பிரும்பு. இது சாதாரண வார்ப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். இதில் கட்டமைப்புக் கரணையாக இருப்பதற்குப் பதிலாக இழை இருக்கும். கடும் அதிர்ச்சிக்குள்ள

கும் உறுப்புகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது.

Malleablizing : (உலோ.) நெகிழ்திறனுரட்டுதல் : வெண்மை யான வார்ப்பிரும்பிலிருந்து பெரும் பாலான கார்பனை அகற்றுவதற் காக அல்லது கார்பனைச் செம் பதமாக்கிய கார்பனாக மாற்றுவதற்காகப் பதப்படுத்தும் முறை.

Maltose: (வேதி.) மால்ட்டோஸ் : மாவூறலிலிருந்து எடுக்கப்படும் படிக வடிவச் சர்க்கரை , ரொட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.

Management : மேலாண்மை : நிருவாகம் செய்தல்; நெறிப்படுத்துதல்; கண்காணித்தல்; கட்டுப்படுத்துதல்.

Mandrel : (எந்.) குறுகு தண்டு: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் நடுவச்சு. கடைசல் பிடிக்க வேண்டிய பொருளை இதில் பொருத்தி, இதனைச் சுழலச் செய்து கடைசல் வேலை செய்வார்கள்.

Mameeuwer :(வானூ.) நுட்ப இயக்கம் : (1) விமானத்தைத் தேர்ச்சித் திறனுடன் மிக நுட்பமாக இயக்குதல்.

(2) விமானத்தில் சுழன்று பறந்து சாதனை புரிதல்.

Maneuverability: (வானூ.) நுட்ப இயக்கத் திறன்: விமானத்தை எளிதாக இயக்குவதற்கு இடமளிக்கும் நுட்ப இயக்கத்திறன். Manganese : (கனி;) மாங்கனீஸ் (மங்கனம்): கடினமான, எளிதில் உடைந்து போகக்கூடிய உலோகத் தனிமம். பழுப்பான வெண்மை நிறம் முதல் சிவப்பு நிறம் வரை பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது காந்தத் தன்மையற்றது. எஃகு, கண்ணாடி, வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Manganese bronze : (உலோ.) மாங்கனீஸ் வெண்கலம் : ஒர் உலோகக் கலவை இதில் 55%-80% செம்பு, 85% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ் , அலுமினியம், இரும்பு. ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்படுகிறது.

Manganese dioxide (மின்.) மாங்கனீஸ் டையாக்சைடு : மின் கலங்களில் மின் முனைப்பு நீக்கப் பொருளாகப் பயன்படும் வேதியியல் பொருள்.

Manga, : (உலோ.) மாங்கனீஸ் எஃகு : இதில் 0.10% 0.50% கார்பனும், 1.00%-1.80 மாங்கனீசும் கலந்திருக்கும். இது மிக அதிக அளவு விறைப்புத்திறன் உடையது. 8.5% நிக்கல் எஃகுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள மாங்கனிஸ் அளவை அதிகரிப்பதால், இது முறியும் தன்மையுடையதாகிறது.

Manganin : (உலோ.) மாங்கானின்: செம்பு, நிக்கல், அய மாங்கனிஸ் கலந்த உலோகக்கலவை. தரமான தடைச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Manifold : (தானி.) புறம்போக்குக் குழாய்! உந்து ஊர்தி எஞ்சினில் உள்ள புறம் போக்குப் பல் புழை வாய்க் குழாய்கள் இது ஒவ்வொரு நீள் உருளையிலிருந்தும் புறம் போக்கு வாயுக்களைத் தனியொரு புறம்போக்குக் குழாயினுள் செலுத்துவதற்குப் பயன்படுகிறது.

Manifold paper : (அச்சு.) : பல் படித்தாள் : பல படிகளை ஒருங்கே எடுப்பதற்குப் பயன்படும் மென்மை யான காகிதம், *

Manifold vacuum : (தானி.) புறம் போக்குக் குழாய் வெற்றிடம் :எஞ்சின் இயங்கும்போது புறம் போக்குக் குழாயிலுள்ள வாயு மண்டல அழுத்த நிலை,

Manila : சனல் தாள் : சிப்பம்கட்டுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற அல்லது மஞ்சள் பழுப்பு நிறக் காகிதம்,

Manometer: (இயற்.) அழுத்த மானி: ஆவி, வாயு போன்றவற்றின் அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.

Mansard roof: (க.க.) இரு சரிவு மோடு: மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச் சாய்வு செங்குத்தாகவுள்ள இரு சரிவு மோடு.

Mansion: (க.க.) மாளிகை: ஒரு பெரிய அலங்காரமான வீடு. Mantel: (க.க.) தண்டயம்: அடுப்பங்கரையிலுள்ள தண்டயப் பலகை.

Mantissa: (கணி.) மடக்கைப் பதின்மானம்: இயற்கணிதத்தில் ஒரு மடக்கையின் தசமப்பகுதி அல்லது பின்னப்பகுதி.

Manual: (பட்.) (1) கையேடு: அறிவுறுத்தங்கள் அடங்கிய சிறு குறிப்பு ஏடு. (2) கைவேலை: கைகளால் செய்யப்படும் பணிகள்.

Manual arts: கைவேலைப்பாடு: கைகளினால் செய்யப்படும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்.

Manual switch: (தானி) ஆளியக்க விசை: உந்து ஊர்திகளில், கைகளால் அல்லது கால்களால் இயக்கப்படும் விசை. இது மற்ற வழிகளில் இயக்கப்படும் விசைக்கு மாறானது.

Manuscript: (அச்சு) எழுத்துப்படி: அச்சிடுவதற்குக் கையால் எழுதி அல்லது தட்டச்சு செய்து கெசடுக்கப்படும் மூல வரைபடி.

Marble: (க.க.) (1) சலவைக்கல், பளிங்குக்கல்: வெண்மை, கரும் பழுப்பு, பழுப்பு வண்ணங்களிலுள்ள ஒரு வகைச் சுண்ணாம்புக் கல் கட்டிடங்களின் உட்புற, வெளிப்புற அலங்கார வேலைப் பாடுகளுக்கு மிகுதியும் பயன்படுகிறது.

(2) பளிங்குத் தாள்: பளிங்குபோல் பளபளப்பாகத் தோற்றமளிக்கும் காகிதம்.

Marble dust: பளிங்குத் தூள்: அரைத்துத் தூளாக்கிய சுண்ணாம்புக்கல். மெருகு சுண்ணத்தாள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Marblíng: பளிங்கு வண்ணப் பூச்சு: பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல்.

Margin: (அச்சு.) பக்க ஒரம்: அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஓர இடம்.

Marginal note (அச்சு.) ஓரக் குறிப்பு: பக்கங்களின் ஓர இடத்தில் எழுதப்படும் குறிப்புகள்.

Marine glue: (மர.வே.) கடற் பசைப் பொருள்: ஒரு பகுதி கச்சா ரப்பர், இரு பகுதி அவலரக்கு, மூன்று பகுதி நிலக்கீல் கொண்ட பசைப் பொருள்.

Marking awl (மர.வே.) குறியிடு தமரூசி: கடினமான மரத்தில் குறி யிடுவதற்கான கூர்மையான எஃகுக் கருவி.

Marking machine: (மர. வே.) குறியிடு பொறி: வாணிக முத்திரைகள், புனைவுரிமைத் தேதிகள் ஆகியவற்றை வெட்டுகருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம். Marl: (மண்.) சுண்ணக்கரிகை உரம்: களிமண்ணும், சுண்ணக் கரிகையும் கலந்த மண்வள உரச்சத்து.

Marquetry: (மர.வே.) உள் இழைப்பு வேலை: மரத் தளவாடங்களில் உள் இழைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல், அரிதாக தந்தம், எலும்பு, முத்து ஆகியவற்றிலும் இந்த வேலைப்பாடு செய்வதுண்டு.

Marsh gas or methane:(வேதி.) சதுப்பு வாயு அல்லது மீத்தேன்: (CH4): இலேசான, நெடியற்ற, தீப்பற்றக்கூடிய, ஹைட்ரோ கார்பன் என்னும் வாயு. சதுப்பு நிலங்களிலும், சுரங்கங்களிலும் கரிமப் பொருள்கள் சிதைவுறுவதால் இயற்கையாகக் கிடைக்கிறது. பல கரிமப் பொருள்களை வாலை வடிப்பதன் மூலமும் பெறப்படுகிறது.

Martensitic alloy steels: (உலோ.) மார்ட்டன்சிட்டிக் உலோகக் கலவை எஃகு: முழுமையாக மார்ட்டன்சைட் கொண்ட ஒரு வகை எஃகு. மார்ட்டன்சைட் என்பது, கார்பனும், ஆல்ஃபாவும் (இரும்புப் படிகங்கள்) அணுவியக்கச் சிதறல் மூலம் உண்டாவது. இந்த வகை எஃகு, மிகக் கடினமானது; ஆயினும், பதப்படுத்திய அல்லது மென்மையான எஃகினைப் போன்று அத்துணை கடினமானதன்று. ஆஸ்டினைட்டை 300°C-வெப்ப நிலையில், மெல்ல மெல்லக் குளிர வைப்பதன் மூலம் இது படிகிறது. புகழ்பெற்ற ஜெர்மன் உலோகவியலறிஞர் பேராசிரியர் ஏ. மார்ட்டன்ஸ் என்பாரின் பெயரில் இது அழைக்கப்படுகிறது.

Mash seam welding. (பற்ற.) மசிவு மடிப்புப் பற்றவைப்பு: இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்ற வைக்கப்படுகிறது.

Mask: முகமூடி: முகத்தை மூடிக் கொள்வதற்கு விசித்திரமான வடிவங்களில் செய்யப்பட்ட பொம்மைத் தலைகள்.

Masonite: மாசோனைட்: மர இழையிலான மின்காப்பு அட்டையின் வாணிகப் பெயர். இது பல்வேறு வகையான மேற்பரப்பு மாதிரிகளில் தயாரிக்கப்படுகிறது. இது பொட்டிப்புகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது.

Masonry: கட்டுமான வேலை: கல், செங்கல் போன்றவற்றால் கட்டிடங்கள் கட்டும் வேலை.

Mass: பொருண்மை: இயற்பியலில், ஒரு திரளில் செறிந்தடங்கியுள்ள பொருளின் அளவு.

அச்சுக் கலையில் ஒரு பக்க அச்செழுத்துச் செறிவுப் பகுதிகள்.

Mass production: பேரளவு உற்பத்தி: எந்திரக் கருவிகளைப் பயன்படுத்தித் திட்டமிடப்பட்ட பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல். Master cylinder: (தானி.) தலைமை நீள் உருளை: உந்து தண்டு உடைய பாய்மரப் பொருளடங்கிய நீள் உருளை . இதன் மூலம் கால் மிதியை அழுத்தித் தடுப்பு செய்யப் படுகிறது.

Master gauge: தலைமை அளவி : அன்றாடம் பயன்படும் அளவிகளின் துல்லியத்தை அவ்வப்போது சோதனை செய்து பார்ப்பதற்குப் பயன்படும் அளவி.

Master key: (பட்.) ஆணித்திறவு: பல பூட்டுகளைத் திறக்க வல்ல திறவுகோல்.

Master switch : (மின்.) தலைமை விசை : ஒரு பிரதான மின் விசை. இதன் மூலம் மற்ற விசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Master taper : (எந்.) தலைமை அளவை வார் : செந்நிறமான அளவை வார். இதன் மூலம் உட்புறம் அல்லது வெளிப்புறம் மற்ற அளவை வார்கள் அளவிடப்படுகின்றன.

Master workman : தலைமைத் திறவாளர்: சாதாரண அளவை விட அதிகத் தேர்ச்சித் திறன் வாய்ந்த தொழிலாளர். "தலைமைப் பொறிவினைஞர்" என்பது பட்டறை மேன் முறையாளையும்,கண்காணிப்பாளர்களையும் குறிக்கும்.

Misstic : பூனைக் கண் குங்கிலியம் (கல்புகைக்கீல்) : நிலக்கீலினால் இயற்கையாகப் பூரிதமடைந்த மணற்பாறை. தளம் பரவுவதற்கு மிகவும் உகந்தது.

Mat : (குழை.) பாய் : குழைமவியலில் நெசவு .செய்யப்படாத இழைக் கண்ணாடிப் பொருள். ஊதிப்பெருக்கச் செய்தல் மூலம் செய்த குறுகிய கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருள்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும்.

Mat board : பாய் அட்டை : படச் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் கனமான காகித அட்டை.

Matched boards : [மர.வே.] ஒட்டிணைப் பலகை : ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.

Matched Metal Moulding : (குழை.) ஒட்டினை உலோக வார்ப்படம் : இரு உலோக வார்ப்படங்களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம்.

Match plates : (வார்.) ஒட்டிணைத் தகடுகள் : தோரணிகள் ஏற்றப்பட்ட உலோக அல்லது மரத் தகடுகள். பெருமளவு எண்ணிக்கையிலான வார்ப்படங்கள் தேவைப்படும் போது உற்பத்தியை அதிகமாக்க இது பயன்படுகிறது.

Mated position : (தானி.) இணைவுறு நிலை: நழுவுப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணை வுறு நிலையில் இருப்பதாகக் கூறப்படும்.

Material well: ( குழை.) பொருள் குழிவிடம்: அழுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வார்ப்புப் பொருளை வைப்பதற்குரிய குழிவான இடம்.

Mat finish: பாய்முறைச் செப்பம்: பளபளப்பின்றி மங்கலாக இறுதிச் செப்பமிடுதல்,

Mathematics: கணிதவியல்: எண்ணளவுகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் அறிவியல் .

Matrix: (அச்சு.) அச்சு வார்ப்புரு: அச்செழுத்துகளை வார்த்தெடுக்கும் எந்திரத்திலிருந்து எடுக்கப்படும் எழுத்து வார்ப்புருவின் பகுதி. இந்த அச்சு வார்ப்புருக்களிலிருந்து அச்சு வார்ப்புருத் தகடுகளைத் தயாரிக்கப்படும் கனத்த அட்டையினையும் இது குறிக்கும்.

Matt: சரவைப் பரப்பு: கரட்டுத் தளமான சரவை வேலைப்பாடுடைய மேற்பரப்பு.

Matte: (உலோ.) கலவைச் செம்பு: முழுமையாகச் சுத்திகரித்து எடுக்கப்படாத செம்பு. வேறு பல உலோகங்கள் அடங்கிய கலவையையும் இது குறிக்கும்.

Mattar (இயற்.) சடப்பொருள்: எடையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய பருப் பொருள்.

Maul: சம்மட்டி: கனமான சம்மட்டிக்கட்டை.

Mausoleum: (க. க.) கல்லறை மாடம்: விறார்ந்த கல்லறை மாடம்.

Mauve: ஊதாச் சாயம்: ஒள்ளிய மெல் ஊதாநிறச் சாயம்.

Maxhete: (உலோ.)மாக்செட் : நிக்கல், குரோமியம், டங்ஸ்டன், செம்பு, சிலிக்கன் அடங்கிய கலவை எஃகு. இது அரிமானத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கக் கூடியது. கொள்கலன் குழாய்கள் • உலைகளின் உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Maximum : (உலோ.) பெருமம் :(1) அனைத்திலும் மிகப் பெரியதான அளவு.

(2) ஒரு சார்பலன் மூலம் இயன்ற வரையிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிடத்தக்க ஒரு மதிப்பு.

Maximum range : (வானுர்.) பெரும வீச்செல்லை : ஒரு விமானம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அளவான வேகத்தில், அனைத்து உயரங்களிலும் மிகப் பெருமளவில் பறக்கக்கூடிய தொலைவு.

Maximum revolutions : (வானூ.) பெருமச்சுழற்சிகள் : ஒரு நிமிடத்தில் மிக அதிக அளவில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கை. இது பெருமக்குதிரைத் திறனுக்கு நேரிணையானது.

Maximum voltage : (மின்.) பெரும மின்னழுத்தம்: ஒரு மாற்று மின்னியக்க வரிசையில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் உண்டாகும் மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம்.

Mean : (கணி.) சராசரி : இயற் கணிதத்தில் இரண்டு எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள எண்.

Mean chord of a wing (வானூ.) இறகின் இடைநிலை இயைபளவு : விமானத்தில் இறகின் பரப்பளவை ஒர் இறகின் முனையிலிருந்து இன்னொரு இறகின் முனை வரையிலான இடையகல அளவினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவு.

Mean line : (வானூ.) இடை நிலைக் கோடு : விமானத்தின் உரு வரைப் படிவப் படத்தில் மேல்கீழ் உருவரைகளுக்கிடையிலான இடை நிலைக்கோடு.

Measure: (அச்சு.) அகலளவு : அச்சுக்கலையில் ஒரு பத்தியின் அல்லது அச்சுப் பக்கத்தின் அகலம் அல்லது ஒரு பணியின் அகலம்.

Measurement : அளவு : வடிவளவு; பரப்பளவு; கொள்ளளவு. அளவிடுதல்.

Measures: அளவைகள்: நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்ற அளவைகள். இவற்றில் மெட்ரிக் முறை, ஆங்கில முறை போன்ற முறைகள் உண்டு.

Measuring machine: (பட்.) அளவிடு எந்திரம்: தேவையான வடி

வத்திலுள்ள ஒரு நுண் அளவு மானி. இதனைக் கொண்டு குழாய்கள், துளைகள் முதலியவற்றை நுட்பமாக அளவிட உதவுகிறது. இவற்றுள் சில இப்போது எந்திர முறைகளுக்குப் பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்தி இயக்குகின்றன .

Measuring tape: அளவு நாடா: அளவுகள் குறிப்பிடப்பட்ட எஃகினாலான அல்லது நார்த் துணியினாலான நாடா. இது சாதாரணமாக 50"-100 நீள மிருக்கும். இதனைப் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுவோர், நில அளவையாளர்கள் போன்றோர் பயன்படுத்துகின்றனர்.

Mechanic: பொறிவினைஞர்: எந்திரங்களைப் பழுது பார்க்கிற அல்லது எந்திரங்களை அல்லது எந்திர உறுப்புகளை ஒருங்கிணைக்கிற தேர்ச்சிபெற்ற கைவினைஞர்.

Mechanical brakes: (தானி.) எந்திரத் தடை: உந்து ஊர்திகளிலுள்ள தடையமைப்பு முறை: இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச் சலாகைகள், நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள், ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது.

Mechanical drawing : எந்திர வரைபடம்: கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன. Mechanical efficiency: (எந்.) எந்திரத் திறன்: (1) ஓர் எஞ்சினின் எந்திரத்திறன் என்பது, அதன் தடைக் குதிரை விசைக்கும், அதன் குறிப்பிடப்பட்ட குதிரை விசைக்குமிடையிலான விகிதமாகும்.

எந்திரத்திறன் = தடைக்குதிரை விசை / குறிப்பிடப்பட்ட குதிரை விசை

(2) இயற்பியலில், உட்பாட்டுக் கும் வெளிப்பாட்டுக்குமிடையிலான விகிதம்.

வெளிப்பாடு / உட்பாடு = எந்திரத் திறன்

Mechanical engineer: எந்திரப் பொறியாளர்: எந்திரங்களை அல்லது எந்திர சாதனங்களை வடிவமைத்து உருவாக்கிப் பயன்படுத்துவதில் வல்லுநர்.

Mechanical engineering: எந்திரப் பொறியியல்: விசையை உற்பத்தி செய்து அனுப்பும் எந்திர சாதனங்களை வடிவமைத்து, உருவாக்குதல் தொடர்பான அறிவியல்.

Mechanical vibrator: (மின்.) எந்திர அதிர்ப்பி: எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம்.

Mechanic arts: கம்மியர் கலை: கைவினையில் பட்டறையிலும், கருவிகளிலும், எந்திரத்திலும் பயிற்சி பெறுதல்.

Mechanics:இயக்கவியல்: பொருள்களின் மீது விசையின் விளைவு

பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு.

Medaleion: (க.க.) பதக்கம் : (1) பட்டாத் தகடு.

(2) ஒரு பெரிய பதக்கம்.

Median: மைய நிலை: நடுவூடான நிலை; சராசரி.

Medium carbon steel: நடுத்தர கார்பன் எஃகு: 0.80% முதல் 0.70% வரை கார்பன் அடங்கிய எஃகு.

Meg or mega: (மின்.) பத்து லட்சம்: மின்னியலில் பத்து லட்சம் அளவினைக் குறிக்கும் சொல்.

Mega volt (மின்.) நூறுகோடி ஒல்ட்: மின்னியலில் பத்துலட்சம் ஒல்ட் மின்னியக்க விசையைக் குறிக்கும் அலகு.

Megohm: மெக்ஓம்: மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு.

Melting point: (உலோ.) உருகு நிலை: உலோகங்கள் திடநிலையிருந்து திரவநிலைக்கு மாறுவதற்குரிய வெப்பநிலை.

Melting zone: (வார். ) உருகு மண்டலம் : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில், உலோகம் உருகுவதற்கான ஊதுலைக் குழாய்களுக்கு மேலுள்ள பகுதி.

Mensuration: (கணி.) உரு அளவியல்: நீளம், பரப்பு, கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான கணிதப் பிரிவு.

Mer: (குழை.) மீச்சேர்ம கட்டலகு:மீச்சேர்மத்தின் கட்டுமான அலகு Mercerize :(வேதி.) துணிப் பக்குவமாக்குதல்: நூல், துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியும் கொடுப்பதற்காகக் கடுங்கார உப்பிட்டுப் பக்குவப்படுத்துதல்.

Merchant bar: (உலோ.) வாணிக இரும்புச் சலாகை: விற்பனை செய்வ தற்கு ஏற்பக் குறுகலாக வெட்டப் பட்ட இரும்புச் சலாகை.

Mercury: (வேதி.) பாதரசம் : வெள்ளிபோல் வெண்ணிறமான திரவ உலோகம். இதன் எடை மானம் 13.6. இரசக் கந்தகை அல்லது பாதரச சல்ஃபைடு (HgS) மூலம் கிடைக்கிறது. சிவப்புப் படிக வடிவில் கிடைக்கிறது. இரசக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Mercury arc rectifier; (மின்.) பாதரசச் சுடர் திருத்தி: மாற்று மின் னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பீட்டர்கூப்பர் ஹெவிட் கண்டுபிடித்த ஒரு சாதனம்.

Marcury vapor lamp: (மின்.) பாதரச ஆவி விளக்கு: கூப்பர் ஹெவிட் உருவாக்கிய விளக்கு. இதில் பாதரச ஆவி வழியே மின்னோட்டம் செலுத்துவதன் மூலம் விளக்கு உண்டாக்கப்படுகிறது.

Mesh : (பட்.) வலைக்கண்: வலைப் பின்னல் அமைப்பு.

Mesocolloids: (வேதி.) மெசோ கொலாய்டுகள்: ஹெமி கொலாய்டுகளுக்கும் யூகொலாய்டுகளுக்கும்

இடைப்பட்ட மீச்சேர்மங்கள்.அதாவது, 100 முதல் 1000 வரையில் மீச்சேர்ம இணைவுடையவை.

Metal: உலோகம் : அடிப்படையான உலோகப் பொருள்களை மட்டுமின்றி, ஒரு திறன். நெகிழ் திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருள்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும்.

Metal arc welding : உலோகச் சுடர் பற்றவைப்பு: இது ஒரு வகை சுடர் பற்றவைப்பு. இதில் பற்றாக இட்டு நிரப்புவதற்கான உலோகத்தை மின்முனை அளிக்கிறது.

Metal dip brazing : உலோக அமிழ்வுப் பற்றரசு இணைப்பு : உருக்கிய உலோகத்தில் அமிழ் வித்து நிரப்பு உலோகத்தைப் பெறுவதற்குரிய ஒரு செய்முறை.

Metalene nails : உலோகப் பொருத்தாணி: வட்டமான அல்லது தட்டையான பெரிய கொண்டைகளையுடைய ஆனிகள். அறைகலன்களில் தோல் இழைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Metal filament : (மின்.) : உலோக இழை: ஒரு வகை மின் கடத்தி. இதனை வெண்சுடர் விளக்கில் சூடாக்கும் போது இது ஒளியுடன் எரியும்.

MetaI finishing : உலோக மெருகிடல்: உலோக வேலைப்பாட் டில் வேலைப்பாடு செய்யப்படும்பொருளுக்கு இறுதியாகப் பளபளப் பான மெருகூட்டுதல்.

Metal furniture : (அச்சு.) உலோக அச்சுத்துண்டு:அச்சுக் கோத்துப் பக்கங்களை முடுக்கும் போது இடைவெளிகளை நிரப்புவதற்காகப் பயன்படும் உலோகத் துண்டு. இது அச்செழுத்தின் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும். Metalizing: (குழைம.) உலோக உறையிடல்: பிளாஸ்டிக்கிற்கு ஒரு மெல்லிய உலோகப் படலத்தின் மூலம் உறையிடுதல்.

Metal lacquer : உலோக மெரூகெண்ணெய்: உலோகத்தினாலான பொருள்களுக்கு மெருகெண்ணெயாகப் பயன்படுத்தப்படும் வெடியகப் பஞ்சின் அமில் மற்றும் மெதில் அசிட்டே கரைசல்கள்.

Metallurgy : உலோகக் கலை:உலோகத் தாதுக் களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் அல்லது உலோகக் கலவைகளை உண்டாக்கும் கலை அல்லது அறிவியல், உலோகங்கள் பற்றி ஆராயும் துறை.

Metal pattern: (வார்.)உலோகத் தோரணி: நீண்ட நாட்கள் உழைப்பதற்காக மரத் தோணிகளிலிருந்து உருவாக்கப்படும் வார்ப்படத் தோரணிகன்,

Metal spinning: (பட்.) உலோகத் திரிப்பு: தகடாக்கக் கூடிய உலோகங்களில் இலேசான உறுப்புகளை வட்டமான வார்ப்பு வடிவங்களாக உருவாக்கும்முறை. கடைசல் எந்திரத்தில் வேகமாகச் சுழலும்போது அழுத்தம் கொடுக்கும் போது இந்தத் திரிப்பு ஏற்படுகிறது.

                                                                                                                                                                          Metal spraying : உலோகத் தெளிப்பு: உலோகங்களுக்கான காப்பு மேற்குப் பூச்சு ஒரு கம்பியை ஹைட்ரஜன் -ஆக்சிஜன் சுடர் வழியாகச் செலுத்தும்போது அது அணுக்களாக குறைந்து கம்பி பரப்பில் மேற்பூச்சாகத் தெளிக்கப் பட்டு படிக்கிறது 

Matamorphic rock:(கனிம.) உருமாற்றப் பாறை : தனது மூலப் பண்பியல்பிலிருந்த எரிமலைக் குழம்புப் பாறையாக அல்லது படிவியற் படுகைப் பாறையாக மாற்றம் பெற்றுள்ளப் பாறை

Meteorograph: (வானூ") வானிலைப் பதிவுமானி ; பூமியின் மேற்பரப்பிற்கு மேலேுள்ள வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப், பதிவிட்டு காட்டும் அமைவு. இது வெப்ப நிலை காற்றழுத்தம் ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்யும்.

Meteorology: (இயற்.) வானிலையியல்: வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை

Meter: (எந்.) (1) மீட்டர்: மெட்ரிக் அளவு முறையில் அடிப்படையான நீட்டலளவை அலகு. 1 மீட் டர்=89,87. (2) அளவுமாணி: திரவங்கள், வாயுக்கள், மின்னோட்டம் முதலியவற்றை அளவிடுவதற்கான அளவு கருவி.

Metering orifice: (தானி. ) அளவித்துளை: பல் வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை.

Metering pin : (தானி.) அளவிப் பிணைப்பூசி: அளவித் துளையின் மீது அமைந்துள்ள ஒரு பிணைப் பூசி. இது அளவித் துறையின் வழியாக வாயு பாய்வதை முறைப் படுத்துகிறது.

Metering rcd : (தானி .) அளவித் தண்டு: எரிபொருள் பாய்வதை முறைப் படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப் பட்டுள்ள தண்டு.

Methane : (வேதி .) மீத்தேன் : மணமற்ற வாயு (CH4). தாவரப் பொருளின் இருமடிச் சேர்மானம் காரணமாக அல்லது கரிமப் பொரு எளின் உலர் வாலை வடித்தல் மூலமாக உண்டாகும் வாயு. ஒளிரும் வாயுவின் முக்கியமான கூறு.

Methanot : (வேதி.) மெத்தனால் (CH3OH): மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மர ச்சாராவி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளா கவும், வண்ணங்கள், மெருகெண் ணெய்கள் ஆகியவற்றின் கரைப் பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிறது.

Methyl (வேதி. ) மெத்தில்:(CH3 மீத்தேனிலுள்ள ஒரு ஹைடிரஜன் அணு இடம் பெயர்வதால் ஏற்படும் மூலக்கூறு. இது பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஓர் அங்கமாக உள்ளது.

Methyl acetone : (வேதி.) மெத்தில் அசிட்டோன்: மெத்தில் அசிட்டேட்டும், அசிட்டோனும் கலந்த ஒரு கலவை. ரப்பரின் கரைப்பானாகப் பயன்படுகிறது.

Metric gear ; (பட்.) மெட்ரிக் பல்லிணை : மெட்ரிக் அளவு முறைக்கிணங்க வடிவமைக்கப்பட்ட பல்லிணை.

Metric plug : (தானி .) மெட்ரிக் செருகி: மெட்ரிக் தர அளவுகளுக் கேற்ப திருகிழைகளைக் கொண்ட ஒரு கடர்ப் பொறிச் செருகி.

Metric system : (பொறி.) மெட்ரிக் முறை : பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் அளவை கள். முதலில் இது ஃபிரான்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல் பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படு கிறது.

Metric threads : மெட்ரிக் திருகிழைகள: மெட்ரிக் அளவுகளுக் கிணங்க விகிதமுறையில் அமைந்த திருகிழைகள்.

Mezzanine : (க.க..) : இடை மாடி:இரண்டு உயர்மாடிக் கட்டிடங் களில் நிலத்தளத் தளத்திற்கும் முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி .

Mezzotint ! (அச்சு.) முருட்டு அச்சுப் பாளம் : கரடு முரடாக்கப் பட்ட தகட்டின் பின்னணியையே செறிநிழல் வண்ணமாகக்கொண்டு பிற பகுதிகளில் கரடு முரடு நீக்கப் பட்ட ஒளி நிழற்பட அச்சுப்பாளம். இதனை 1648இல் லுட்விக் கண்டு பிடித்தார்.

Mica : (கனிம.) அப்பிரகம் (காக்காய்ப் பொன்): முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில் களாகப் பிளவுபடும்.

Micas: அப்பிரகக் காகிதம்: அலங் காரப் பெட்டிகள் செய்வதற்கான காகிதம். இதில் அனிலைன் சாயப் பொருளுடன் கலந்து அப்பிரகம் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செதுக்கு வேலைப்பாடாக வும் புடைப்பாாவும் அச்சிடப்படும்.

Micro ampere: (மின் .) மைக்ரோ ஆம்பியர்: ஒரு ஆம்பியரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஆம்பியர்.

Micro farad: (மின்.) மைக்ரோ ஃபாராட்: ஒரு கொள்ளளவு அலகு. மின் காந்தப் பரும அளவான ஒரு ஃபாராடின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி.

Micrometer  : நுண்ணளவி மானி: துண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங்கருவி.

Micrometer caliper: நுண் இடுக்கியளவி: மிக நுண்ணிய தொலைவு களை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி.

Micron ; (மின்.) மைக்ரோன்: பதின்மான நீட்டலளவை அலகில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி.

Microphone : (மின்.) ஒலி பெருக்கி : நுண்ண்ணொலிகளைத் திட் பப்படுத்தியும், ஒலிகளை மின் னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற்படுத் துங் கருவி.

Microscope : நுண்ணோக்காடி (பூதக் கண்ணாடி): மிக நுண்ணிய பொருள்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி.

Microvolt  : (மின்.) மைக்ரோ வோல்ட்: மின் இயக்க ஆற்றல் அலகின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஓல்ட்.

Microwave :நுண்ணலை: மீட்டருக்குக் குறைவான நீள முள்ள வானொலி அலைகள். இது நெடுந்தொலை விலுள்ள கருவிகளை நிலையத்துடனும், நிலையங்களை மற்ற நிலையங்களுடனும் இணைப்பதற்குப் பயன்படுகிறது, Microwave reflectors: நுண்ணலைப் பிரதிபலிப்பான்: நுண்ணலைக் கற்றைகளை நெறிப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரே மாதிரியல்லாத பிரதிபலிப்பான்கள்.


Middle space : (அச்சு.) நடு இடைவெளி : அச்சுக்கோப்பில் எழுத்துகளிடையிலான இடை வெளி.

Middle - tones : (அச்சு.) நடுவண்ணச் சாயல்: ஒளிப்படத்தில் அல்லது நுண்பதிவுப் படத்தில் இளம் வண்ணத்திற்கும் அடர் வண்ணத்திற்குமிடையிலான வண்ணச் சாயல்கள்.

Midwing monoplane: (வானூ.) கடுக்கிறகு ஒற்றைத்தட்டு விமானம்: விமானத்தின் மையக் கோட்டில் இறகு பொருந்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்.

Mil : மில்: கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அலகு. இது அங்குலத்தில் ஆயிரத் தில் ஒரு பகுதி, 0.001",

Mild steel: மேன்னெஃகு: கரியம் குறைவாகவுள்ள எஃகு; இது பற்ற வைக்கக் கூடியது. ஆனால் இது பதமாவதில்லை.

Mildew : பூஞ்சணம் : ஈரம்படும் பொருள்களின் மீது படியும் ஒரு வகை பூஞ்சக்காளான்.

Mil foot: மில் அடி: கம்பியிலுள்ள மின் தடையின் ஒரு தர அலகு. ஓர் அடிகம்பியில் மின் தடையின் அளவு = விட்டத்தில் ஒரு மில்.

Milk sugar: (வேதி.) பால் சர்க்கரை : பார்க்க : பால் வெல்லம்.

Mill: ஆலை : (1) உற்பத்திச் செய் முறைகள் நடைபெறுவதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடம் அல்லது கட்டிடங்களின் தொகுதி. பல்வேறு தொழிற்சாலை களைக் குறிப்பிட இச் சொல் பயன் படுகிறது.

(2) செய்முறை வேலைகளுக்கான திரிகைப் பொறியமைவு.

<b?Milli ampere: (மின்.) மில்லி ஆம்பியர்: ஒரு ஹென்ரியில் ஆயிரத்தில் ஒரு பகுதி. கொள்ளளவின் ஓர் அலகு.

Millimeter: (பொறி.) மில்லிமீட்டர்: பருமணலளவு அலகு. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒருபகுதி, 03937."

Milling : (பட்.) சால்வரிவிடல் : உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை.

Milling cutters: (எந்.) துளை வெட்டுங்கருவி : உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள்.

Milling machine: (பட்..) துளையிடு எந்திரம் : உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம், Milling machine universal: (பட்.) பொதுத்துளையிடு எந்திரம் : எல்லாவகையான பரப்புகளையும் கொண்ட உலோகத் தகடுகளிலும் துளையிடுவதற்கான எந்திரம்.

Milling machine vertical: (பட்.) செங்குத்துத் துளையிடு எந்திரம் : துளையிடுவதற்குச் செங்குத்தான கதிர் கொண்ட எந்திரம், இது இடைமட்ட எந்திரத்திலிருந்து வேறுபட்டது.

Millivolt: (மின் ) மிலிவோல்ட்: ஓர் பகுதி. 0.001 வோல்ட்.

Millwright: ஆலை அமைப்பாளர்: ஒர் ஆலையில் அல்லது பட்டறையில் எந்திரங்களை திட்டமிட்டு அமைப்பவர்.

Mimeograph: படியெடுப்பான்: கையெழுத்து அல்லது தட்டெழுத்துப் படியின் பல படிகளை எடுப்பதற்கான தகடு ஆக்க அமைவு.

Minaret: (க.க.) தூபி: பள்ளி வாயில் தூபி.

Mineralogy: கனிமயியல் : கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல்.

Miners safety lamp: சுரங்க காப்பு விளக்கு: பார்க்க: டேவிகாப்பு விளக்கு.

Minimum: குறுமம்: மிகக்குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை.

Minimum flying speed :(வானூ .) குறும பறக்கும் வேகம் : ஒரு விமானம் தனது இறகுகளின் இடையகல் அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கும் மட்டத்தில் ஒரே சீராகப் பேணக்கூடிய மிகக் குறைந்த அளவு வேகம்.

Minimum gliding angle: (வானூ.) குறுமச் சறுக்குக் கோணம் : விமானத்தின் முற்செலுத்தி அழுத்தம் கொடுக்கா திருக்கும் போது, விமானத் தின் கிடைமட்டப் பாதைக்கும், ஏறத்தாழ அதன் கிடைமட்டப் பாதைக்குமிடையிலான கூர்ங்கோணம்.

Minimum speed: (வானூ.) குறும வேகம்: விமானத்தில் எந்தக் குறைந்த அளவு வேகத்தில் ஒரே சீராகப் பறக்க முடியுமோ அந்தக் குறைந்த அளவு வேகம்.

Mining: சுரங்கத் தொழில்: பூமியிலிருந்து உலோகம், கணிப்பொருள் கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்தல்.

Mining engineer:சுரங்கப் பொறியாளர்: சுரங்கங்களைத் தோண்டி, அவற்றிலிருந்து உலோகத் தாதுப் பொருள்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளைச் செய்யும் பொறி யாளர்,

Minion: (அச்சு.) குறும் அச்செழுத்து : மிகச்சிறிய அளவு அச்செழுத்து. இது 7 புள்ளி அளவுக்குச் சமமானது. அச்செழுத்தில் புள்ளி முறை பயனுக்கு வருவதற்கு முன்பு இப்பெயர் வழங்கியது. Minor axis: சிறுபடி அச்சு: ஒரு நீள் வட்டத்தின் குறுகிய விட்டம்.

Minor diameter: சிறுபடி விட்டம்: ஒரு திருகில் அல்லது மரையாணி யில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம்.

Minus charge: (மின்.) மறிநிலை மின்னேற்றம் :கழித்தற்குறியின் மூலம் சுட்டப்படும் எதிர்மின்னேற்றம். பிசின் பொருள்களை கம்பளப் பொருள்களில் உரசும் போது இத்தகைய மீன்னேற்றம் உண்டாகிறது.

Minute: (க. க.) நுண்பாகை: கோண அளவில் ஒரு பாகையின்

அறுபதில் ஒரு கூறு.

Misalignment of wheels: (தானி.) பொருந்தாச் சக்கர இணைப்பு: சீருந்தின் சக்கரங்கள் முறையாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால், சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு, டயர்கள் விரைவாகத் தேய்ந்து விடும். சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஒரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்.

Misprint: (அச்சு.) அச்சுப் பிழை: பிழையாக அச்சிடுதல் , அச்சிடுவதில் ஏற்படும் பிழை.

Mission type : பெரு வடிவ அறைகலன்: கருவாலி மரத்தில் கருமை வண்ணத்தில் வளைவுகளின்றி நேர்கோடுகளில் தயாரிக்கப்படும் மிகப் பெருமளவில் வடிவங் கொண்ட அறை கலன்.

Miter : செங்கோண இணைப்பு: மரத்துண்டுகளைச் செங்கோணத்தில் இணைத்தல்.

துண்டுகளின் இணை வாயின் சாய்வு 45° கோணம்படும்படியாக இணைத்தல்.

Miter box: கோண அறுவைக் கருவி: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்கு துணை செய்யும் அமைவு:

Miter Cut : (மர.வே..) கோண அறுவை: துண்டுகளின் இணைவாயின் சாய்வு 46° வை கோணமாக அமையுமாறு அறுத்தல் இரு துண்டுகளும் இணையும்போது ஒரு செங்கோணம் உண்டாகும்.

Miterer : (அச்சு) செங்கோண இணைப்பான்: அச்சுக்கலையில் கரையோரங்கள். கோடுகள் முத்லியவற்றை செங்கோணத்தில் இணைப்பதற்குப் பயணம் ஒரு சாதனம். இதனைக் கையினாலோ விசையினாலோ இயக்கலாம்.

Miter gear: (எந் .) செங்கோண இணைப்புப் பல்லிணை: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய பல்லிணை.

Miter plane: (மர.வே. ) செங்கோண இணப்புத் தளம்: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப் பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம்.

Miter-saw cut (மர.வே.) கோண வெட்டு ரம்பம்: மரத்தைத் தேவையான கோணத்தில் வெட்டு வதற்குப் பயன்படும் ரம்பம்,

Miter square: (மர.) கோண மட்டச் சதுர்ம்: மூலமட்டப் பலகை போன்ற ஒரு கருவி. ஆனால், இதில் 90°,45° கோணங்களை அமைக்க இடமளிக்கும் ஒரு தலைப் பினைக் கொண்டது.

Miter wheel: சாய் பற்சக்கரங்கள்: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.

Mitography: (அச்சு,) திரையச்சுக்கலை: பட்டுத்திரைச் சீலை அச்சுக் கலை,

Mixture (வேதி.) கலவை: வேதியியல் முறையில் ஒன்றோடொன்று இணையாத இரண்டு அல்லது மூன்று பொருள்களின் கலவை.

M.M.F.: காந்த இயக்குவிசை: (கா.இ.வி).

Modeling: உருப்படிவக்கலை:காட்சி மாதிரிகளை உருநிலைப் படிவங்களாக உருவாக்குதல்.

Mock-up.: (வானூ.) எந்திர மாதிரிப் படிவம்: செய்யக் கருதியுள்ள மாதிரிப் படிவம்.

Modulation : அலை மாற்றம்: வானொலியில் அலையகலஅதிர்வு, அதிர்வு மாற்றமைப்பு.

Module: (க.க) அளவை அலகு: கட்டுமானப் பொருள்களின் தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.

Modulus நிலை தகவு: மடக்கைகளின் வகை மாற்றத்திற்கான நிலையான வாய்ப்பாடு.

Modulus of elasticity : மின் விசை நிலை தகவு: இழுவிசைத் திரிபு தெகிழ் வரம்பிற்குள் இருக்கும்போது, ஒர் அலகுப்பரப்பின் மீதான அழுத்தத்திற்கும், அதற்கு இணையான ஓர் அலகு நீளத்தின் மீதான இழு விசைக்குமிடையிலான வீத அளவு.

Modulus of rigidity to (பொறி.) விறைப்பு நிலைதகவு : அழுத்தச் சறுக்குப் பெயர்ச்சி இழு விசையினால் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தத்தை வகுப்பதால் கிடைக்கும் ஈவு.

Mogul , (மின்.) மோகல் : 800 வாட்டுகளுக்கு அதிகமான பெரிய வெண்சுடர் விளக்குகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு குதை குழி அல்லது கொள்கலன்.

Mohair : ஆங்கோரா ஆட்டுக் கம்பளி : ஆங்கோர ஆட்டுமயிரைக் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை.

Mohs scale : மோஹ்ஸ் அளவு : கனிமப் பொருள்களின் கடினத் தன்மையைத் தரம் பிரித்துக் காட்டப் பயன்படும் எண்மான முறை.

Moisture content : (அச்சு.) நீர் நயப்பு : தயாரித்து முடித்த காகி தத்தில் உள் ள ஈரப்பதன்ரின் அளவு

Molar solution : (வேதி .) : மூலக் கூற்றுக் கரைசல்  : ஒரு கரைவத்தின் மூலக்கூற்று எடையைக் கொண்டுள்ள ஒரு கரைசல். இது ஆயிரம் கன செ.மீ. யில் இவ்வளவு கிராம் என்று குறிக்கப்படும்.

Mold : (வார்.) வார்ப்படம் : வார்ப்புருக்களை உருவாக்குவதற் கான ஒரு படிவம்.

பிளாஸ்டிக் உருவங்களை வெப்பம், அழுத்தம் அல்லது வேதியியல் வினை மூலமாக உருவாக்குவதற்குப் பயன்படும் உலோகக் கொள் கலம்.

அச்செழுத்துகளை வடிவமைக்கும் வார்ப்பட எந்திரம்.

Mold board  : (மர. வே.) : முனைப் பலகை : உழுசாலில் மண்ணைப் பெயர்த்து தள்ளும் எ ஃ கு முனைப் பலகை

Molders rammer : (வார்.) வார்ப்படத் திமிசு கட்டை  : வார்ப்படத் தை அடித்து இறுக்குவதற்குப் பயன் படுத்தப்படும் உருளை வடிவ மரக் கருவி.

Molding: (க.க.) வார்ப்படஉருவம்: கட்டிடம், மரவேலை முதலியவற் றில் வார்ப்பட முறையில் செய்யப்

படும் சித்திர வேலைப்பாடு

Molding board : (குழைம.) பிசைவுப் பலகை : வார்ப்படப் பொருட்களை வலுவாக்குவதற்காகப் பயன்படும் அழுத்திய தகடு கள், கலப்பு இழைகள், பிசின்கள் ஆகிய

Molding plane : வார்ப்பட இழைப்புளி : வார்ப்படங்களை வெட்டி யெடுப்பதற்குப் பயன்படும் சிறிய இழைப்புளி,

Molding sand (வார்): வார்ப்பட மணல் : வார்ப்படங்கள் செய்வதற்குப் பயன்படும் வார்ப்பட மணல்

Mole , (வேதி.) மூலக்கூற்று எடை: கிராம்களில் குறிப்பிடப்படும் மூலக் கூற்று எடை.

Molecular theory! (வேதி.இயற்.) மூலக்கூற்றுக் கோட்பாடு: சடப் பொருட்கள் 'மூலக்கூறுகள்' எனப்படும் நுண்ணிய துகள்களினாலானது என்றும்,ஒவ்வொரு துகளும் அந்தப் பொருள் முழுமைக்குமுள்ள குண இயல்புகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறும் கோட்பாடு.

Molecule: (வேதி; இயற்.) மூலக் கூறு: ஒரு பொருளில் அடங்கியுள்ள மிகச் சிறிய நுண்கூறு, இதன் பண்பு, பொருளின் பண்பிலிருந்து மாறுபடாதிருக்கும்.

Mofybdenite : முறிவெற்றித்தாது : முறிவெள்ளி (மாலிப்டினம்) என் னும் உலோகத்தின் தாது. இது பசைத் தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும்.

Molybdenum: (உலோ.) முறி வெள்ளி: (மாலிப்டினம்): தகர்வியல்புடடைய வெள்ளிநிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக் கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது.

Moment: (பொறி.) நெம்புதிறன்: ஒரு விசைக்கும், அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத்தொகை . சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு.

Moment of a couple: (கணி.) இருவிசை இணைவு நெம்புதிறன்: விசைகளில் ஒன்றுக்கும், விசைகளின் செயல்விசைக் கோடுகளுக்கிடையிலான செங்குத்துத் துரத்திற்குமிடையிலான அளவுகளின் பெருக்குத்தொகை.

Moment of inertia: (பொறி.) மடிமை நெம்புதிறன்: நகரும் பொருளிின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகள்களின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை.

Momentum. உந்துவிசை: இயக்க உந்து விசையின் அளவு. இது ஒரு பொருளிின் பொருண்மையை அதன் வேக விகிதத்தினால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகையாகும்.

Mond "seventy” alloy;(உலோ.) மாண்ட்"70"உலோகக் கலவை:நிக்கலும், செம்பும் கலந்த ஒர் உலோகக் கலவை. இதன் விறைப்பாற்றல் 40823 கிலோகிராம் வரை உயர்வாக இருக்கும்.

Monkey wrench: இயங்கு குறடு: இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

<ப>Monobloc: (எந்.) ஒற்றைப் பாளம்: ஒரே துண்டாகவுள்ள வார்ப்படம்.

Monograph; (அச்சு.) தனி வரைவு நூல்: ஒரே பொருள் அல்லது ஓரினப் பொருள்கள் பற்றிய தனிநூல்.

Monolith: ஒற்றைப் பாளக்கல்: தன்னந்தனியாக நிற்கும் மிகப் பெரிய அளவிலான ஒரே பாளமாகவுள்ள கல்.

Monomer: (வேதி:குழைம.)எண் முகச் சேர்மம்: ஒரே முற்றுறா வாய் பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்கும்.

Monomial: (கணி.) ஓருறுப்புக்கோவை: இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினை க் கொண்ட கோவை.

Monoplane : (வானூ.) ஒற்றைத் தட்டு விமானம் : ஒற்றைத் தொகுதிச் சிறகுகளையுடைய விமானம்.

Monorail crane: (பொறி.)ஒற்றைத் தண்டவாளப் பாரந்துக்கி: ஒற்றைத் தண்டவாளத்தில் இயங்கும் நகரும் பாரந்துக்கி.

Monoscope : சோதனை ஒளிப்படக் கருவி : சோதனைகளுக்காகப் பயன்படும் எளிய ஒளி அல்லது தோரணி அமைப்பைக் கொண்ட தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி.

Monotone : (அச்சு.) சமநிலை அச்செழுத்து: எல்லாக் கூறுகளும் சம அகலத்தில் உள்ள அச்செழுத்து முகப்பு.

Monotron hardness test : வைர கடினச் சோதனை: வைரத்தின் ஊடுருவும் ஆழத்தினைக் குறிப்பிட்ட பார நிலைகளில் எண் வட்டில் பதிவு செய்யக்கூடிய ஒரு சோதனை எந்திரம்.

Monotype: (அச்சு.) எழுத்துருக்கு அச்சுப்பொறி: தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்.

Mordant : அரிகாரம் : செதுக்குருவக் கலையில் பயன்படுத்தப் படும் அரிமானப்பொருள். சாயத்தைக் கெட்டிப்படுத்தப் பயன்படுத்தப்படும் நிறம் கெட்டியாக்கும் சரக்கு.

Moresque : அராபிய பாணி : வட மேற்கு ஆஃபிரிக்க அராபிய இஸ்

லாமியர் பாணிக்குரிய வேலைப் பாடு.

Morocco goatskin : பதனிட்ட வெள்ளாட்டுத் தோல் : சாயப்பதனீட்டு இலைத் தூள் கொண்டு பதனிடப்பட்ட வெள்ளாட்டுத் தோல். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கனத்த தோல்களில் அக உறையாகவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகிறது.

Morse code : (மின்.) மோர்ஸ் குறியீடு : மோர்ஸ் என்பார் அமைத்த தந்திப் பதிவுக் குறியீட்டு முறை இந்த முறையில் எழுத்துகளையும், எண்களையும் குறிக்கும் புள்ளிகள், கோடுகள் மூலம் செய்தி கள் அனுப்பப்படுகின்றன.

Morse taper : (எந்.) மோர்ஸ் கூம்புச் சரிவு : துரப்பணத்தண்டு களையும், மற்றக் கருவிகளையும் எந்திரக் கதிர்களுடன் பொருத்துவதற்குரிய 0 முதல் 7 வரையிலான திட்ட அளவுக் கூம்புச் சரிவு.

Mortar : [1] கல்வம் : உலக்கையால் பொருள்களை இடித்துத் தூளாக்குவதற்குப் பயன்படும் கனமான சுவருடைய குழியுரல்.

(2) சாந்து : காரை, சுண்ணாம்பு, மணல் கலந்த சாந்து.

Mortar board : (க.க.) சாந்துத்தட்டு : காரைச் சாந்து வைப்பதற்கு அடியில் கைப்பிடியுள்ள ஒரு சதுரத் தட்டு.

Mortar box : (க.க.) சாந்துக் கலவைப் பெட்டி : சாந்து கலப்ப தற்குப் பயன்படும் பெரிய பெட்டி அல்லது தொட்டி.

Mortar joints : சாந்து இணைப்புகள் : செங்கல் அல்லது காரைக் கட்டுமானப் பணிகளில் சாந்து கொண்டு இணைப்பதற்கான பல் வேறு பாணிகள்.

Mortise : ( அச்சு.) துளைப் பொருத்து : பொருத்து முளையிடும் துளைச் சட்டம்.

அச்சுக் கலையில் அச்சுத் தகட்டில் எழுத்துகளைச் செருகுவதற்கான வாயில்.

Mortise chisel: (மர.வே.) துளைப் பொருத்து உளி : துளை பொருத்திடும் தடித்த அலகுடைய உளி.

Mortise gauge:(மர.வே.) துளைச் சட்டமானி : தேவையான அகலத்திற்குத் துளைச் சட்டத்தினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Mortise lock: (க.க.) துளைச் சட்டப் பூட்டு : துளைச்சட்டத்துடன் பொருத்தப்படும் ஒரு பூட்டு.

Mortising machine: (மர.வே.) துளைப் பொருத்து எந்திரம்: மரத்தில் உளியாலோ சுற்று வெட்டு மூலமாகவோ துளைச் சட்டம் வெட்டுவதற்கான ஒர் எந்திரம்.

Mosaic: பல் வண்ணப் பட்டை: தரையில் பல வண்ணப் பட்டைகளினால் அணிசெய்தல்:

Mother-of-pearl : முத்துக் கிளிஞ்சல் : கிளிஞ்சல்களின் உட்புறத்தி லுள்ள பளபளப்பான பொருள். பொத்தான் போன்ற சிறிய பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Motion : (இயற்.) இயக்கம் : ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல்.

Motion study: (க.க.) இயக்க ஆய்வு: சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல். தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப் படுகிறது.

Motive power (பொறி.) எந்திர விசை: எந்திரத்தில் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் திறமுடைய ஆற்றல்.

Motometer : (எந்.) இயக்க மானி : நீராவி எஞ்சினின் வேகத்தைக் கணித்திடும் கருவி. இதனை வேகமானி என்றும் கூறுவர்.

Motor : (மின்.) (1) மின்னோடி : மின் விசையை எந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.

(2) விசைப் பொறி : எந்திரத்திற்கு இயக்க ஆற்றலை அளிக்கும் பகுதி.

Motor analyzer : (தானி.) இயக்கப் பகுப்பாய்வுக் கருவி : உந்து வண்டியில் ஒரு தனிப் பெட்டியில் அல்லது ஒரு தனிச்சேணத்தில் ஒருங்கிணைத்து வைத்த கருவி களின் ஒரு தொகுதி. இதன் மூலம் நீள் உருளை அழுத்தம், காற்று -எரி பொருள், அனல் மூட்டும் நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்க லாம்.

Motor drive : (பட்.) மின்னோடி விசை : ஓர் எந்திரத்திற்கு ஒரு மின்னோடியின் மூலம் மின் விசையளிக்கும் நவீன முறை. இது எந்திரத்துடன் நேரடியாக இணைக்கப் பட்டிருக்கும் Motor generator : (மின்.) மின்னோடி மின்னாக்கி : ஒரு மின்னாக்கியை இயக்கும் மின்னோடி. இது மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாகவும், நேர் மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாகவும் மாற்றுவதன் மூலம் மின்னாக்கியை இயக்குகிறது.

Motor hoist : இயக்கு உயர்த்தி : கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந் தூக்கிச் சாதனம்.

Motor jet : (வானூ.) [1] மின்னோடித் தாரை : எதிரீட்டு வாயு எஞ்சின் மூலம் இயங்கும் அழுத்தியினைக் கொண்ட ஒரு தாரை எஞ்சின்.

(2) இத்தகைய எஞ்சின் உடைய ஒரு விமானம்.

Motor starter : (மின்.) மின்னோ

டித் தொடக்கி : தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத் தடைப்பெட்டி. இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதி கரிக்க தடை குறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமாக நீங்கி விடும்.

Motor torque : (மின்.) மின்னோடி முறுக்குப் பதக்கம் : ஒரு மின்னோடியில் சுழற்சியை அல்லது சுழலும் போக்கினை உண்டாக்கும் திருகு முயற்சி அல்லது திருகு விசை

Mottled : பல் வண்ணப் புள்ளியமைவு : பல் வண்ணப் பட்டை கள் அல்லது புள்ளிகள் இட்ட அமைவு.வேண்டுமென்றே பல்வேறு வண்ணக்கோலங்களில் தயாரிக்கப்பட்ட பரப்புடைய காகிதம்.

Mount : ஒப்பனைச் சட்டம் : அறைகலனை வலுவாகப் பொருத்துவதற்குரிய அலங்கார ஒப்பனைச் சட்டம். இது பெரும்பாலும் உலோகத்தில் அமைந்திருக்கும்.

Movieola : திரைப்படத் தொகுப்பான் : திரைப்படத்தைத் தொகுப்பதற்குப் பயன்படும் ஒரு திரைப்படச் சாதனம்.

Moving - coil galvanometer : (மின்.) இயங்கு சுருள் மின்னோட்ட மானி : ஒரு நிரந்தரக் காந்தத் தினால் உருவாக்கப்பட்ட வலுவான காந்தப்புலத்தின் ஆதாரத்தி லுள்ள நகரக்கூடிய சுருளினைக் கொண்ட ஒர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின் னோட்டம் பாய்ந்தாலும் அதனைச் கட்டிக் காட்டும்.

Moving needIe : (மின்.) இயங்கு ஊசி மின்னோட்டமானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்தஊசி கொண்ட ஒரு சாதனம், இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் கட்டிக் காட்டக்கூடியது.

Mucilage : தாவரப் பசை : ஒரு வகைத் தாவரப் பிசினிலிருந்தும் நீரிலிருந்தும் செய்யப்படும் தாவரப் பசைப் பொருள்.

Muck bar (உலோ.) கூள உலோகக் கட்டி : தேனிரும்புத் தயாரிப்பில் முழுவதும் உருகாத உலோகக் கட்டியைக் கூளங்களின் உருளை வழியே செலுத்துவார்கள். அப்போது அது 'கூளக்கட்டி' என அழைக்கப்படுகிறது. இந்த உலோகக் கட்டியில் கசடு அதிகமாகக் இருக்குமாதலால், இதனைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது.

Mudsill: (க.க.) சேற்றுப்படிக் கட்டை: ஒரு கட்டுமானத்தின்அடித் தளப் படிக் கட்டை. இது தரையில் நேரடியாக வைக்கப்படும்.

Muffle* (1) சூளை உலை : மண்பாண்ட வேலையில் சுடுவதற்காகப் பாண்டம் வைக்கப்படும் சூளை உலையறை.

(2) ஒலித்தடுப்பான்: ஒரு மின்னோடிப் புகைபோக்கியில் ஓசையை அடக்குவதற்கான சாதனம்.

Muffle furnace : (உலோ.) பொதியுலை: மின்விசையினாலோ எரிவாயுவினாலோ இயக்கப்படும் ஒரு சிறிய உலை. உலோகங்களைக் கடும்பதப்படுத்துதல், கடினமாக்குதல், முலாமிடுதல் போன்ற அதிகவெப்பம் தேவைப்படும் வேலைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

Muffier : (தானி.) ஒசையடக்குச் சாதனம் : உட்புழையான நீள் உருளை கொண்ட ஒரு எந்திர சாதனம், இது ஒரு கேசோலின் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கும. இதன் வழியே புறம்போக்கும் வாயு வெளியே சென்று ஒசை வராமல் அடக்கிவிடும்.

Mule-pulley stand : (எந்.)கலப்புக் கப்பி நிலை : ஒரு துணைச் சுழல் தண்டின் மேலுள்ள தளர்வான இரு கப்பிகளை இரு சுழல் தண்டுகளுக்கிடையில் விசையினை அனுப்புவற்கு வசதியாக அமைத் துள்ள நிலை.

Multicolor press : (அச்சு.) பல வண்ண அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வண் ணங்களில் அச்சடிக்கவல்ல அச்சுப் பொறி, Multi filament lamp : (மின்.) பல இழை விளக்கு: பெரிய வெண்சுடர் விளக்குகள் பெரும்பாலும் பல இழைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த இழைகள் இணை யாக அமைந்திருக்கும். இதனால் ஓர் இழை எரிந்துபோனாலும், விளக்கு தொடர்ந்து எரியும்.

Multigraph : தட்டச்செழுத்துச் சாதனம் : கடிதங்களையும் ஆவணங்களையும் தட்டச்சு செய்த படிகள் போல் தோன்றுமாறு அச்சடிக்கவல்ல ஒரு சாதனம் ,

Multigraph paper : தட்டச்செழுத்துக் காகிதம் : தட்டச் செழுத்துச் சாதனத்தில் பயன்படுத்துவதற்குரிய காகிதம்.

Multipart bearings: (எந்.) பல உறுப்புத் தாங்கிகள் : எந்திரததில் இருசுக் கட்டையுடன் இணைந்துள்ள மூன்று அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட தாங்கிகள் . இவை எண்ணெய்ப் படலத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடங்கியிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடக்கியிருக்கும. கனரக எந்திரங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

Multiplane : (வானூ.) பல தட்டு விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதாரத் தட்டுகளைக் கொண்ட விமானம்.

Multiple : பன்மடங்கு : பல் கூறுகளானது : எண்ணின் பல மடங்கு ; மீதமின்றி ஓர் எண்ணால் வகுக்கப்படத்தக்க தொகை

Multiple disk clutch : (தானி.) பன்முக வட்ட ஊடினைப்பி : பன்முக வட்ட தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுததப்பட்ட சுருணை விற்கருள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஊடிணைப்பி மிதி கட்டையை அழுத்துவதன் மூலம் ஊடிணைப்பி விடுவிக்கப்படுகிறது. இந்த ஊடிணைப்பிகள் உலர், ஊடிணைப்பி, ஈர ஊடிணைப்பி என இருவகைப்படும்.

Multiple drilling machine : பன்முகத் துரப்பன எந்திரம் : ஒன்றுக்கொன்று இணையாகப் பல துரப் பணக் கதிர்கள் அமைக்கப்பட் டுள்ள ஓர் எந்திரம். இவை ஒரே சமயத்தில் இயக்கப்படும்.

Multiple projection welding : பன்முக வீச்சுப் பற்றவைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பற்றாசுகளை ஒரே சமயத்தில் இயங்கச் செய்யும் முறை.

Multiple sếries, (மின்.) பன்முகத் தொடர் மின்சுற்று வழி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர் மின் சுற்று வழிகளின் ஒரிணையான இணைப்பு.

Mustiple - threaded screw : (எந்.) பன்முக இழைத்திருகு : தனது உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு. இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக்கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம்

Multiplier : (மின்.) விசைப் பெருக்கி : மின் விசை ஆற்றலளவைப் பன்மடியாகப் பெருக்குவதற்குரிய சாதனம்.

Multipolar motor : (மின்,) பல் துருவ மின்னோடி : நான்கு அல்லது அவற்றுக்கு புலக்காந்தத் துருவங்களையுடைய ஒரு மின்னோடி.

Multispeed motor : (மின்.) பன்முகவேக மின்னோடி : எவ்வளவு பாரமிருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்ல ஒரு மின்னோடி, \

Muntz metal : (உலோ.) மண்ட்ஸ் உலோகம் : 60-62 பகுதி செம்பும், 38- 40 பகுதி துத்ததாகமும் கலந்த உலோகக் கலவை.இது கப்பற் கவசத்தட்டுகள் செய்யப் பயன்படுகிறது.

Muriatic acid : (வேதி.) நீரகப்பாசிகை அமிலம் : ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் (HCI) வாணிகப் பெயர்.

Mushet steel.: (உலோ.) முஷட் எஃகு : 9% டங்ஸ்டன், மாங்கனிஸ், 1.85% கார்பன் கொண்ட எஃகு. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது.

Muslin : மென்துகில் (மஸ்லின்) : பெண்டிர் உடைகளுக்கும், திரைகளுக்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென் துகில்,

Mutual inductance : (மின்.) பிறிதின் துண்டல் : ஒரு சுருணையின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு.

ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலினால் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மின்தூண்டல்.

Mutule t (க.க.) பிதுக்கற் கவரணை : டோரிக் என்னும் கிரேக்கக் கலைப் பாணியின் படி தூணின் மேல் வரம்பிலுள்ள பிதுக்கக் கவரணை.

Myrtle : புன்னை : இதனைக் கலிபோர்னியாப் புன்னை என்றும் கூறுவர். இதன் மரம் கடினமானது; வலுவானது; பசு மஞ்சள் நிறமுடையது. இந்தப் பசுமை மாறாத தன்மையுடைய இது பல நோக்க மரம். அமெரிக்காவின் மேற்குக் கரையில் இது மிகுதியாக வளர்கிறது

.