அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்/001-006


டாக்டர் எஸ். இராதாகிருட்டிணன்

உயர்வுறு தத்துவ ஆய்வு நிறுவன முதல் இயக்குநர்

பேராசிரியர் T.M.P. மகாதேவன் அவர்கட்கு

அன்புப்படையல்

தத்துவத் துறையில் விளக்கினை இட்ட
        சால்பினர்; பண்பினால் உயர்ந்தோர்;
சித்திரம் சான்ற நூல்களைப் பண்பு
        திகழ்தரும் ஆங்கிலத் தளித்தோர்;
வித்தக ஆழ்வார் பகர்ந்தஅத் துவிதம்
        விளக்கென எனைமுனம் பணித்தோர்;
புத்தனே அனைய மகாதேவ நம்பி
        பொன்னடிக் குரியதிந் நூலே.