அறிவியல் வினா விடை-வேதியியல்/வேதிக் கருவிகள்
1. பெட்ரி கிண்ணம் என்பது யாது?
பெட்ரி என்பவர் பெயரால் அமைந்தது. தட்டை அடியுள்ள வட்டக் கண்ணாடிக் கிண்ணம்.
2. புக்கனர் புனல் என்றால் என்ன?
புக்கனர் வைத்துாற்றி உறிஞ்சுதல் மூலம் வடிக்கட்டப் பயன்படும் பீங்கான் புனல்.
3. நைட்ரோமானி என்றால் என்ன?
நைட்ரஜனையும் அதன் சேர்மங்களையும் மதிப்பிடுங் கருவி.
4. வெள்ளி உப்புமானி என்றால் என்ன?
கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படும் கருவி.
5. உல்ப் குப்பி என்பது என்ன?
இரு கழுத்துள்ள கண்ணாடிச்சீசா. நீர்மத்தின் வழியாக வளியைச் செலுத்தப் பயன்படுவது.
6. புடக்குகை என்றால் என்ன?
பொருள்களை உயர்வெப்பநிலைக்குச் சூடாக்கும் பீங்கான் கிண்ணம்.
7. நிறமானி என்றால் என்ன? நிறங்களின் செறிவைப் பிரிக்கும் கருவி.
8. லெயிடன் உருளை என்பது யாது?
கண்ணாடி உருளையிலான மின்தேக்கமானி. 1745இல் லெய்டன் என்பவர் அமைத்தது.
9. லிபிக் குளிர்விப்பி என்பது யாது?
லிபிக் என்பவர் ஜெர்மன் கரிம வேதியியலார். இவர் பெயரால் அமைந்தது இக்கருவி. ஆய்வகத்தில் தயாரிக்கும் பொருள் ஆவியாக இருக்குமானால், அதைக் குளிர்வித்து நீர்மமாக்கப் பயன்படுவது.
10. கிப்பின் கருவி என்பது யாது?
வேதிப்பொருள் செய்யப் பயன்படும் ஆய்வகக் கருவி. எ-டு அய்டிரஜன் சல்பைடு.
11. ஜெல்டால் குடுவையின் பயன் யாது?
ஜெல்டால் முறையில் நைட்ரஜனை மதிப்பீடு செய்யப் பயன்படுவது. இம்முறை பருமனறி பகுப்பாகும்.
12. உலர்த்துவான் என்றால் என்ன?
ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது.
13. பைடட்குழாய் என்பது யாது?
பாய்ம விரைவை அளக்க உதவுங் கருவி.
14. தெள்ளளவுமானி என்றால் என்ன?
வேதிவினைகள் நடைபெறும்பொழுது வளிப்பருமனால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியுங் கருவி.
15. உப்புச்செறிவுமானி என்றால் என்ன?
உப்புக்கரைசல்களின் செறிவைக் காணும் கருவி.
16. புன்சன் எரிப்பான் என்றால் என்ன?
எளிய வளிஎரிப்பான். எரிவதற்கு முன் வளியுடன் போதிய அளவுக்குக் காற்றைக் கலக்கக் குறைந்த அளவுள்ள சுடர் உண்டாகும். இதற்குப் புன்சன் சுடர் என்று பெயர். இச்சுடருக்கு அதிக வெப்ப ஆற்றல் உண்டு.
17. உலர்த்தும் பாண்டம் என்றால் என்ன?
வேதிப்பொருள்களை உலர்த்துவதற்குரிய கருவியமைப்பு. இதில் ஈரத்தை உறிஞ்சும்பொருள் கால்சியம் ஆக்சைடு.
18. வடிகட்டி என்றால் என்ன?
ஒரு நீர்மத்திலுள்ள மாசுள்ள தொங்குபொருள்களைப் பிரிக்கப் பயன்படுங் கருவி.
19. வாலை என்றால் என்ன?
நீர்மத்தைக் காய்ச்சி வடிக்கும் கருவியமைப்பு.
20. எதிர்வெப்ப உலை என்றால் என்ன?
தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் உலை.
21. எடையறிமானி என்றால் என்ன?
அளவறி பகுப்பின் ஒரு பிரிவு. அடங்கி இருக்கும் பொருளை உறுதி செய்ய, அதை வேதி இயைபு தெரிந்த ஒரு பொருளாக மாற்றிப் பின் பிரித்துத் தூய்மையாக்கி எடையிடப்படுகிறது.
22. மூலக்கூறு எடைமானி என்றால் என்ன?
வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங் கருவி.
23. கொதிநிலைமானி என்றால் என்ன?
கரைசல்களின் தனிக்கொதிநிலையையும் வேறுபட்ட கொதி நிலையையும் நுண்மையாக அளக்கப்பயன்படுங் கருவி.
24. காற்றுக்குழாய் என்றால் என்ன?
காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளும் திறந்திருக்கும்.
25. வளியடுப்பு என்றால் என்ன?
சமையலுக்குப் பயன்படும் அடுப்பு. இதில் நிலக்கரி வளி எரிபொருள்.
26. இடப்பெயர்ச்சி எக்கி என்றால் என்ன?
வேதிநிலையங்களைச் சுற்றியமைந்து நீர்மங்களையும் வளிகளையும் அகற்றப் பயன்படுங் கருவி.
27. ஊதுகுழாய் என்றால் என்ன?
வளியும் காற்றும் சேர்ந்த கலவை அழுத்தத்தில் இக்குழாயிலிருந்து வெளியேற்றப்படும் பொழுது தீச்சுடர் உண்டாகும். ஊதுவிளக்கு28. காரமானி என்றால் என்ன?
காரச்செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
29. ஊதுலை என்றால் என்ன?
இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்பயன்படும் உலை.
30. ஏனைய கருவிகள் யாவை?
பூரட் பிப்பெட், முகவை, கண்ணாடி உருளிகள்.