அறிவியல் வினா விடை - விலங்கியல்/கால்நடை மருத்துவம்
14. கால்நடை மருத்துவம்
1. கால்நடை அறிவியலின் புதுப் பெயர் என்ன?
- விலங்கு அறிவியல்
2. முதன் முதலில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது எது?
- 10,000 ஆண்டுகளுக்கு முன் நாய்தான் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டது.
3. அடுத்து வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டவை எவை?
- கி.மு. 7,000 இல் ஆடுகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. இவற்றிற்குப் பின் குதிரைகள், மான்கள், ஒட்டகங்கள் முதலியவை வீட்டு விலங்குகளாக ஆயின.
4. குதிரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நாடு எது?
- சீனா
5. சீனாவிற்கு அடுத்துக் கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை?
- இந்தியா, அமெரிக்கா, பிரேசில், உருசியா, டென்மார்க் முதலியவை.
6. மரபுவழிப் பாடத்திட்டத்தில் விலங்கு அறிவியலின் நிலை என்ன?
- கால்நடை உற்பத்தியின் தொழில்நுட்பத்தை ஆராய்தல். கால்நடை என்பது ஆடு, மாடு, குதிரை, பன்றி முதலியவை ஆகும்.
7. புரதத்தின் வகைகள் யாவை?
- 1. தாவரப்புரதம்
- 2. விலங்குப் புரதம்.
8. தாவரப்புரதம் உலக அளவில் எந்த அளவு கிடைக்கிறது?
- 70% அளவு கிடைக்கிறது.
9. விலங்குப் புரதம் எந்த அளவு கிடைக்கிறது?
- 30% அளவு கிடைக்கிறது.
10. கால்நடை மருத்துவம் என்றால் என்ன?
- வீட்டு விலங்குகளிடத்தும் காட்டு விலங்குகளிடத்தும் நோய்கள் உண்டாதலை ஆராய்தல், தடுத்தல், பண்டுவம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
11. கால்நடை நோய்களால் ஏற்படும் தீமைகள் யாவை?
- 1. உணவு உற்பத்தி குறைதல்.
- 2. நோய்கண்ட விலங்குகளைப் பயன்படுத்த முடியாது.
- 3. ஒட்டண்ணி நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் கம்பளம் மட்டமாக இருக்கும்.
- 4. கோமாரி ஏற்படும் பசுக்கள் பால் குறைவாய்த்தரும்.
- 5. நோய்களைக் குணப்படுத்தும் செலவுகள் அதிகமாவதால், இறைச்சியின் விலையும் அதிகமாகிறது.
- 6. சூழ்நிலைக் காரணிகளால் விலங்கு நோய்கள் மனிதருக்குப் பரவக் கூடும். எ-டு சால்மோனெல்லா.
12. செயற்கை விந்நேற்றம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
- 1930 களில் நடைமுறைக்கு வந்தது.
13. மிகச்சிறந்த பெருக்கும் நுணுக்கமாகக் கருதப்படுவது எது?
- வணிகச் சிறப்புள்ளதும் பயனுள்ளதுமான விலங்குகளை, உரிய வழியில் மரபணுக்களைக் கையாண்டு உற்பத்தி செய்தல்.
14. விலங்கு நோய் என்றால் என்ன?
- ஒட்டுண்ணிகளில் ஏற்படும் நோய். மனிதருக்கும் பரவக் கூடியது. எ-டு நாய்க்கடி
15. எத்தனை விலங்கு நோய்கள் உள்ளன?
- 100 க்கு மேற்பட்ட விலங்கு நோய்கள் உள்ளன.
16. ஆங்கில மருத்துவர் எட்வர்டு ஜென்னர் (1749 - 1823) கண்டறிந்த உண்மை யாது?
17. இவர் அம்மை குத்துதலை எந்த ஆண்டு கண்டறிந்தார்?
- 1796 இல் கண்டறிந்தார்.
18. இதிலுள்ள அடிப்படை என்ன?
- நோய்க்கு எதிராக எதிர்ப்புப் பொருள்கள் உண்டாகின்றன.
19. கால்நடை நோய்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
- இரண்டு வகை.
- 1. தொற்றும் நோய்கள்
- 2. தொற்றா நோய்கள்.
20. இவை பரவக் காரணிகள் யாவை?
- நச்சுயிரிகள், குச்சிவடிவ உயிர்கள், பூஞ்சைகள்.
21. நமக்கும் கால்நடைக்கும் பொதுவாக வரும் இரு நோய்கள் யாவை?
- 1. அம்மை
- 2.என்புருக்கி நோய்.
22. கால்நடைக் கொள்ளை நோய் என்றால் என்ன?
- இது தீமை தருவது, தொற்றக்கூடியது. கால்நடையில் காய்ச்சல் உண்டாகும், கழிச்சலும் இருக்கும். சளிப் படலத்திலிருந்து ஒழுக்கும் இருக்கும். ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவது. மூச்சு மூலமும் மாசுள்ள பொருள்களைத் தொடுவதின் மூலமும் ஏற்படுவது. தடுப்பு மருந்து உள்ளது.
23. கோமாரி எவ்வாறு உண்டாகிறது?
- இது ஒரு தொற்றுநோய், ஆவைன் நச்சுயிரியினால் உண்டாவது, பசுவின் காம்பிலும் மடியிலும் புண்களை ஏற்படுத்துவது. இதன் மித வடிவம் மனிதரைத் தொற்றக் கூடியது.
24. நாய்க்கடி என்றால் என்ன?
25. சால்மோனெல்லா என்பது யாது? அதன் தீமை என்ன?
- கோல் வடிவ உயிரி. மிகப் பெரிய பேரினத்தில் ஒன்று. அழுகிய உணவில் நஞ்சு உண்டாக இதுவே காரணம். எலிகள், சுண்டெலிகள், பறவைகள் முதலியவை இந்த நச்சுயிரோடு தொடர்பு கொண்டு நோயைப் பரப்புபவை.
26. சால்மோனெல்லா நோய் என்றால் என்ன?
- விலங்குகளிடம் ஏற்படும் நோய், பல வடிவங்களில் உள்ளது. சால்மோனெல்லா காலராயிஸ் என்பது பன்றிகள் பெருமளவுக்குச் சாகக் காரணமாய் உள்ளது.
27. அரிப்பு நோய் (scrape) என்றால் என்ன?
- இதன் அடைகாலம் நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் இருக்கும். செம்மறியாடுகளில் அழிவை உண்டாக்கும் நச்சுயிரி நோய். இதன் அறிகுறிகள் அரிப்பு ஏற்படும். அரிப்பைப் போக்க ஆடுகள் மரத்தில் தங்கள் உடலைத் தேய்த்துக் கொள்ளும், ஒரு நரம்புக் கோளாறு நோய். பண்டுவம் இல்லை.
28. பஞ்சு வடிவ மாட்டு மூளைநோய் (BSE) என்றால் என்ன?
- அரிப்பு நோய் நுண்ணுயிரி தீவனத்தில் கலப்பதால் ஏற்படுவது. 1990 களில் பிரிட்டனில் இந்நோய் ஏற்பட்டது. இது அரிப்பு நோயோடு தொடர்புள்ளது. என்புருக்கி நோய் என்றால் என்ன? குச்சிவடிவ உயிரியால் ஏற்படும் தொற்றுநோய் இந் நுண்ணுயிரியின் பெயர் மைக்கோபேக்டிரியம் டியுபர்குளோசிஸ் உணவு மூலம், மூச்சுமூலமும் ஏற்படுவது. இதன் அறிகுறிகள் உடல் மெலிதல், திசு சிதைதல், இறுதியில் இறப்பு
30. அடைப்பான் நோய் என்றால் என்ன?
31. லெப்டோஸ்பைரா நோய் என்றால் என்ன?
- கால்நடைக்கு லெப்டோஸ்பைரா என்னும் குச்சிவடிவ உயிரியினால் ஏற்படும் கொடிய தொற்றுநோய். துப்புரவற்ற நீர் மூலமும் உணவு மூலமும் பரவுவது. இதன் அறிகுறிகள் குருதிச் சோகை, கல்லீரலும் சிறுநீரகமும் சிதைதல், மஞ்சட்காமாலை, கருச்சிதைவு. இந்நோய் மனிதரிடத்து ஏற்படுமானால் தசைவலியும், காய்ச்சலும் விழி வெண்படல அழற்சியும் ஏற்படும்.
32. புருசெல்லா நோய் என்றால் என்ன?
- உலக அளவில் கால்நடைகளிடம் காணப்படும் இனப்பெருக்க நோய். நச்சுயிரியால் ஏற்படுவது. அதன் பெயர் புருசெல்லா. ஆகவே இந்நோயும் புருசெல்லா என்று பெயர் பெறுகிறது. புருசெல்லா B பேரினத்தில் நான்கு சிறப்பினங்கள் உள்ளன. காற்று மூலம் பரவுவது. அடிக்கடி புணர்ச்சி வாயிலாகவும் பரவுவது. கால்நடைகளின் இது கருச்சிதைவை உண்டாக்கும். தங்கும் நஞ்சுக்கொடி, பெருகுவதில் கடினம், இன வளமின்மை ஆகியவை அறிகுறிகள்.
33. அஸ்பர்ஜில்லஸ் நோய் என்றால் என்ன?
- அஸ்பர் ஜில்லஸ் என்னும் பூஞ்சையினால் கால்நடைக்கு ஏற்படும் நோய்.
34. ஒட்டுண்ணி நோய்களின் வகைகள் யாவை?
- 1. உள் ஒட்டுண்ணி நோய்கள் - நாடாப் புழு, வட்டப்புழு முதலியவற்றால் ஏற்படுவது.
35. விலங்குகளிடம் தொற்றா நோய்களுக்குக் காரணிகள் யாவை?
- 1. ஊட்டக் குறை
- 2. வளர்சிதை மாற்றக் கோளாறுகள்
- 3. நச்சுகள்
- 4. புண்கள்
- 5. கட்டிகள்.
36. கால்நடை மருத்துவக் கல்வியைப் வளர்ப்பவை யாவை?
- 1. கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
- 2. கால்நடை மருத்துவமனைகள்
- 3. கால்நடை மருத்துவப் பல்கலைகழகம். (தமிழ் நாடு)