அறிவியல் வினா விடை - விலங்கியல்/முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
5. முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
1. அமீபா என்பது யாது?
- முதல் தோன்றிகள் பிரிவைச் சார்ந்த ஒற்றைக்கண்ணறை விலங்கு உயிரி. இதன் ஒற்றைக் கண்ணறையே உடல் செயல்கள் யாவற்றையும் செய்வது. இது அடிக்கடித்தன் உருவத்தை மாற்றுவது.
2. பரமேசியம் என்பது யாது?
3. நுண் விலங்கு என்றால் என்ன?
- கண்ணுக்குத்தெரியாத உயிரி. எ.டு அமீபா.
4. உணவுக் குமிழ் என்றால் என்ன?
- அமீபா, பரமேசியம் முதலிய ஓரணு உயிரிகளில் காணப்படும் கண்ணறையின் செரித்தல் பகுதி.
5. போலிக்கால் என்றால் என்ன?
- அமீபா முதலிய உயிரிகள் தங்கள் உணவைப் பற்ற அல்லது நகரத் தற்காலிகமாக உண்டாக்கும் முதல் கால் நீட்சிகள்.
6. கடல் மிதவை வாழ் உயிரிகள் என்பவை யாவை?
- மேற்பரப்பு நீர்கள் அல்லது கடலின் நடுஆழப்பகுதியில் வாழும். இவை மிதப்பிகள் நீந்திகள் என இருவகை. எ-டு. நுண்ணுயிர்த் தாவரங்கள், நுண்ணுயிர் விலங்குகள்.
7. துளை உடலிகள் என்பவை யாவை?
- இவை மட்டுமே இடம் பெயரா நீர் வாழ் விலங்குகள். ஒற்றை உடற்குழியில் பல துளைகள் உண்டு.
8. உப்பு நீரிலேயே கடற்பஞ்சுகள் காணப்படும் அய்டிரா என்பது யாது?
- மெல்லுடலைக் கொண்டகுழி உடலிவகுப்பைச் சேர்ந்தது. உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இருபாலி.
9. நீராம்பு என்றால் என்ன?
- அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி.
10. உணர்விரல் என்றால் என்ன?
- மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சியுள்ள உறுப்பு. உணரவும் பற்றிப் பிடிக்கவும் பயன்படுவது. எ-டு. அய்டிரா
11. மணிஉடலி என்றால் என்ன?
- குழி உடலிகளின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. உடல் மணி வடிவில் இருக்கும் உயிர்.
12. இழுது மீன் என்றால் என்ன?
- கடல்வாழ் குழிக்குடலி. பனை நொங்கு போன்ற உடல் திண்மை. உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடை வடிவ உடல்.
13. அய்டிரோசோவா என்றால் என்ன?
- குழிஉடலி வகுப்பபைச் சார்ந்தது. எ-டு பவழங்கள், இழுது மீன். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவியிலாச் சிற்றுயிரி நீரம்பு நிலையும் கலவியுள்ள பாலாம்பு நிலையும் மாறிமாறி உண்டாதல்.
14. பவழ உயிரிகள் என்பவை யாவை?
- குழிக்குடலி வகுப்பைச் சார்ந்தவை. பவழப்பாறைகளை உண்டாக்குபவை. பசிபிக் பெருங்கடலிலும் மையத் தரைக்கடலிலும் காணப்படுபவை.
15. பவழத் தீவு என்றால் என்ன?
- வட்டவடிவப் பவழ மலைத் தொடர் மைய உப்பங் கழியைச் சார்ந்தது.
16. இழைப்புழுக்கள் என்பவை யாவை?
- உடல் துண்டங்கள் இல்லா விலங்குகளின் பிரிவு உருளை வடிவ உடல். மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக்குழாய் மண்டலமும் இல்லை. எ-டு. நாக்குப் பூச்சி.
17. நாக்குப்பூச்சி என்றால் என்ன?
- குடலில் வாழும் ஒட்டுண்ணி.
18. முட்தோலிகள் என்றால் என்ன?
- ஆரச்சமசீருள்ள விலங்குகள். உடல் சுவரில் சுண்ண ஊட்டமுள்ள தட்டுகள் வலுவூட்ட இருக்கும். குழாய்க ளால் இயக்கம் நடைபெறும். எ-டு நட்சத்திர மீன், கடல் அல்லி
18. வாயினின்று விலகியது என்பது எதைக் குறிக்கும்?
20. உடற்குழி என்றால் என்ன?
- மிக முன்னேறிய விலங்குகளின்இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி முதலியவற்றில் இது முதன்மையானது.
21. கண்ட அமைவு என்றால் என்ன?
- கீழின விலங்குகளில் உடல் கண்டங்கள் அல்லது துண்டங்கள் அமைந்திருக்கும் முறை. எ-டு மண்புழு
22. வளைய உடலிகள் என்றால் என்ன?
- வளைத்தசைப் புழுக்கள். உடல் வளையங்களானவை. திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். எ-டு. மண்புழு,
23. அட்டை அட்டைகள் என்பவை யாவை?
- இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. தட்டையான உடல். உடலின் முன்னும் பின்னம் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம் பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை.
24. இருபாலி என்றால் என்ன?
- ஒரே உயிரியல் ஆண் பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல், மண்புழு.
25. மெல்லுடலிகள் என்பவை யாவை ?
- மெல்லுடலிகள்டங்கள் இரா. தசைக்கால் மூடகம் உண்டு. புறக்கூடு ஒட்டாலானது. நிலம், நன்னீர், கடல் நீர் ஆகிய மூன்றிலும் வாழ்வது. எண்காலி, சிப்பி, நத்தை.
26. முதுகு எலும்பு இல்லாத விலங்குகளில் மிகப் பெரிய பிரிவு எது?
- கணுக்காலிகள், கரப்பான்.
27. அரசநண்டு என்பது யாது?
- உண்மை நண்டன்று. தொடக்க காலக்கணுக்காலி. புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது.
28. இரு கிளை உறுப்பு என்றால் என்ன?
- நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு.
29. இறால் என்பது யாது?
- சிறிய நண்டுவகை விலங்கு. கடலில் வாழ்வது உண்ணக்கூடியது.
30. இறால் வளர்ப்பு என்றால் என்ன?
- உணவுச் சிறப்புக்கருதி இறால்கள் நன்னீர் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் 500-2000 கிகி இறால் கிடைக்கிறது. ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 6000 கிகி இறால் கிடைக்கிறது.
31. ஆளி என்பது யாது?
- இருதிறப்பு ஓட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது.
32. எண்காலி என்றால் என்ன?
- எட்டுக்கால்களைக் கொண்ட மெல்லுடலி. கைநீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. எ-டு அக்டோபஸ்.
33. கனுக்காலிகள் என்றால் என்ன?
- விலங்குலகின் பெருந்தொகுதி, கரப்பான்.
34. கணுக்காலிகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. புற எலும்புக் கூடு உண்டு.
- 2. கால்கள் கணுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும்.
- 3. உடற்குழி சிறியது.
- 4. நக உயிரிகளில் மட்டுமே குற்றிழைகள் உண்டு.
35. கணுக்காலிகளின் வகுப்புகள் யாவை?
1. நகத்தாங்கிகள் | - | கரப்பான் |
2. தோட்டுயிரிகள் | - | நண்டு |
3. பலகாலிகள் | - | பூரான் |
4. சிலந்தியங்கள் | - | சிலந்தி |
36. பூச்சி என்பது யாது?
- இது கணுக்காலி. தலை, மார்பு, வயிறு என உடல் பிரிந்திருக்கும். எ-டு கரப்பான்.
37. பூச்சிக்கொல்லி என்றால் என்ன?
- பூச்சிகளைக் கொல்லும் வேதிப்பொருள்
38. பூச்சியுண்ணி என்றால் என்ன?
- பூச்சி உண்ணும் விலங்கு, பல்லி.
39. தேனீத்தாண்டவம் என்றால் என்ன?
- உணவு ஊற்றுவாயின் திசையையும் தொலைவையும் காட்ட வேலைக்காரத் தேனிக்கள் நடத்தும் இயக்கக் கோலம்.
40. தேன் என்பது என்ன?
- பூக்களின் தேன் சுரப்பியிலிருந்து பெறப்படும் நீர்மத்தைப் பூச்சிகள் பாகுநிலையில் இனிப்பாக்குதல். இது கெடாது நீண்ட நாள் இருக்கும். பாதுகாப்புப் பொருள்.
41. தேன் பருந்து என்றால் என்ன?
- தேனிக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து.
41. தேன் மெழுகின் பயன்கள் யாவை?
- பல சேர்மங்கள் சேர்ந்த மஞ்சள் நிறப்பொருள். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது.
43.தேனீ நச்சின் இயல்பு யாது?
- தேனிக்கள் கொட்டும்பொழுது, உட்செலுத்தப்படும் நச்சு. குறைந்த அளவு மூலக்கூறு மதிப்புள்ள புரதமும் இஸ்டமைனும் உண்டாக்கும் நொதிகளும் இதில் முதன்மையாக இருக்கும்
44. எறும்புகள் என்பவை யாவை?
- சமூகப் பூச்சிகள். சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. வீட்டுத் தொற்றுயிரிகள்.
45. எறும்பால் பரவல் என்றால் என்ன?
- விதைகள் முதலியவை எறும்புகளினால் பரவல். எ-டு. கேஃவிபோரஸ் வகை விதைகள்.
46. அரக்கு என்பது யாது?
- பெண் அரக்குப்பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும் நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது.
47. பெராமோன் என்றால் என்ன?
- செய்தித் தொடர்பிற்காகப் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்.
48. நிலைநிறுத்திகள் என்பவை யாவை?
- குறுகிய கரணை வடிவமுள்ள உண்மை ஈக்களின் பின் இறக்கைகள் பறக்கும் பொழுது அதிர்ந்து, நிலை நிறுத்திகளாகச் (சமனாக்கிகளாக) வேலை செய்பவை.
49. வண்ணத்துப்பூச்சி என்றால் என்ன?
- இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும் செதில்களாலும் உடல் மூடப்படுவது. தொகுப்புணரிகள் இருப்பதால் அத்துப்பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் தேன் உறிஞ்சும் சிறப்புறுப்பு.
50. போலிப்புணர்ச்சி என்றால் என்ன?
- தன் நிறமொத்த பூவைப் பூச்சி என எண்ணி, அதனை ஆண்பூச்சி புணரமுயலுதல். விளைவு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுதல். நிறமட்டுமல்லாமல் வடிவமும் மணமும் புணருவதற்குக் காரணம்.
51. குழல் வாய் என்றால் என்ன?
- உறிஞ்சுகுழல் எ.டு வண்ணத்துப்பூச்சி.
52. இனப்பிரிவு என்றால் என்ன?
- தேனி, எறும்பு முதலிய சமூகப்பூச்சிகளில் காணப்படும் பிரிவு. எ-டு. அரிசி, வேலையாட்கள், ஆண்கள்.
53. மரவட்டை என்றால் என்ன?
- பயிருண்ணி. காற்றுக் குழாய்மூலம் மூச்சுவிடுவது. உருளை வடிவ உடல் முதல் மூன்று வட்டுக்களைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை.
54. பற்றிகள் என்றால் என்ன?
- சில ஆண் பூச்சிகளின் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஒரினை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண்பூச்சியைப் பற்றப் பயன்படுபவை.
55. உள்ளுறை வளர்ச்சி என்றர் என்ன?
- சில ஈக்களில் முட்டை பொறிந்ததும் இளம் உயிரிகள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறும். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப் புழுவாகும்.
- நோய் பரப்பும் உயிரிகள். குயூலக்ஸ் பேட்டிகன்ஸ் யானைக் காலையும் அனோபிலிஸ் மலேரியாவையும் பரப்புபவை.
57. அனோபிலிஸ் கொசு என்றால் என்ன?
- மலேரியா நோயைப்பரப்புவது.
58. இதைக் கண்டறிந்தவர் யார்?
- சர் ரெனால்டு ராஸ்.
58. மின்மினி ஒளிர்வது எவ்வாறு?
- இதன் வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் உள்ளன. இங்கு லுசிபெரின் என்னும் வேதிப்பொருள் லுசிபெரஸ் என்னும் நொதியினால் ஆக்ஸிஜன் ஏற்றம் பெறுவதால், நிற ஒளிர்வு இரவில் உண்டாகிறது.
60. சிலந்தியங்கள் என்றால் என்ன?
- கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.
61. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. நிலத்தில் வாழ்பவை
2. உடல் மேற்பரப்பு அல்லது காற்றுக்குழல் மூலம் மூச்சு விடுபவை.
3. தலை, மார்பு, வயிறு என உடல் கண்டங்கள் பிரிந்திருக்கும்.
4. தலை - மார்பில் முதிர்ச்சி நிலையில் நான்கிணை கால்கள் இருக்கும்.
62. ஒட்டுறுப்பு என்றால் என்ன?
- இணையுறுப்பாக உள்ள புறவுறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வழங்கக் காரணம்.
63. ஒட்டுறப்புகளில் மிகப்பெரியது எது?
- யானையின் துதிக்கை.
64. உணரிகள் என்றால் என்ன?
- தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள்.
65. சிற்றுணரிகள் என்றால் என்ன?
- நண்டின விலங்குகளில் உணரிகளுக்கு முன்னுள்ளவை, சிறியவை, கணுக்களாலானவை. ஓரினை முதல் உணர் உறுப்புகளே சிற்றுணரிகள் ஆகும்.
66. மட்டப்பட்டு என்றால் என்ன?
- கூட்டுப்புழுப் பருவம் தாண்டி முதிர்ந்த நிலையில் பட்டுப் பூச்சி வெளிவந்தவுடன், அதன் கூட்டிலிருந்து எடுக்கப்படும் நூல்.
67. தரத்தில் மிகக் குறைந்தது. நிமிளை என்றால் என்ன?
- மஞ்சள் நிறப்படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில் பயன்படுவது.
68. மாலதியான் என்பது யாது?
- பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.
69. மெலானிள் என்பது என்ன?
- தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் நிறமித் தொகுதிகளில் ஒன்று.