அறிவியல் வினா விடை - விலங்கியல்/முதுகு எலும்புள்ள விலங்குகள்
1. ஆம்பியாக்கஸ் என்பது யாது?
- இது ஒரு முனைக்கூர் உயிரி. புழுவிற்கும் மீனுக்கும் இடைப்பட்ட முதுகுத் தண்டுள்ள விலங்கு.
2. மீன்களின் சிறப்பியல்புகள் யாவை?
- 1 நீரில் மட்டுமே வாழ்பவை.
2. மூச்சுறுப்புகள் செவுள்கள்.
3. செதில்கள் உடலை மூடியுள்ளன.
4. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறும்.
5. காற்றுப்பை மிதக்க உதவும் உறுப்பு.
3. நன்னீர் மீன்கள் யாவை?
- கெளுத்தி, கெண்டை முதலியவை.
4. மீன்கள் அதிகம் எங்க வாழ்கின்றன?
- கடல் நீரில் வாழ்கின்றன.
5. மீன்களின் பொருளாதாரச் சிறப்பென்ன?
- 1. சிறந்த உணவு.
2. புரதம் மிகுந்துள்ளது.
3. மீன்பிடித்து விற்பனை செய்வது ஆதாயமுள்ள தொழில்.
6. நுரையீரல் மீன்கள் என்பவை யாவை?
- நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்கள் உண்டு. புரடாப்டிரிஸ், லியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ்.
7. பறக்கும் மீன் என்றால் என்ன?
- இது ஒர் எலும்பு மீன். தன் இடுப்புத் துடுப்புகள் மூலம் நீரிலிருந்து தாவிக் காற்றில் சிறிது நேரம் இருக்கும்.
8. காட்மீனின் சிறப்பு யாது?
- இது ஒரு வகை உணவு மீன். இதன் ஈரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வைட்டமின் D உள்ளது.
9. கடல் குதிரை என்றால் என்ன?
- குதிரை ஒத்த தலை இருப்பதால் இதற்கு இப்பெயர். வாலுள்ள சிறிய மீன்.
10. நிலம் நீர் வாழும் விலங்குகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. இரு நிலை வாழ்விகள்.
- 2. வால் இல்லை.
- 3. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்.
- 4. கருவுறுதல் வெளியே நீரில் நடைபெறுவது.
- 5. முன்கால்களில் குறுகலானவை, பின்கால்கள் நீண்டவை.
- 6. பின் கால் விரல்களில் விரல் இடைத்தோல் உண்டு.
- 7. தலைப்பரட்டையாக இருக்கும் பொழுது செவுள்களாலும் முதிர்ச்சி நிலையில் நுரையீரல்களாலும், தோலினாலும் மூச்சுவிடுபவை.
11. வால் என்றால் என்ன?
- மலப்புழைக்கு பின்னுள்ள நீட்சி. எல்லாத் தண்டு வட உயிர்களுக்கும் வால் உண்டு.
12. விலாங்கு மீன் என்றால் என்ன?
- 1. நீண்டதும் நொய்ந்ததுமான எலும்புமீன்.
- 2. கடல் நீரிலும் நன்னீரிலும் வாழ்வது.
- 3. இடுப்புத்துடுப்புகள் இல்லை. இதைப் பிடிக்க ஈட்டி பயன்படுகிறது.
13. பாம்புகளின் சிறப்பியல்புகள் என்ன?
- 1. காலற்றவை.
- 2. உடல் முழுதும் செதில்கள் உண்டு
- 3. செவி இல்லை.
- 4. செதில்கள் மூலமே ஒலியை உணர்பவை.
- 5. மணம் உணரும் நாக்கு.
14. மகுடிக்கு நாகம் கட்டுப்படுகிறது என்பது உண்மையா?
- இல்லை. செவி இல்லை. ஆகவே காது மூலம் ஒலியை உணர முடியாது. மகுடி அசைவு பிடாரன் உடல் அசைவு ஆகியவற்றை அறிந்தே அது தலையை ஆட்டுகிறது.
15. நச்சுப்பாம்பு எப்பொழுது கடித்தால் நஞ்சு அதிகம்?
- இரவில் கடித்தால் நஞ்ச அதிகம்.
16. தன்னினம் உண்ணல் பாம்புகளிடம் உண்டா?
- உண்டு சிறிய பாம்புகளைப் பெரிய பாம்புகள் விழுங்கும்.
17. எலும்புகளையும் செரிக்க வைக்கும் ஆற்றல் பாம்பின் செரித்தல் நீருக்கு உண்டா?
- உண்டு. பாம்பின் இரைப்பையில் முழு இரையும் செரிமானமாகிறது.
18. பாம்பியல் என்றால் என்ன?
- பாம்புகளை ஆராயுந்துறை.
19.பாம்புப் பண்ணை சென்னையில் எங்குள்ளது?
- கிண்டிக் குழந்தைகள் பூங்காவில் உள்ளது.
20. கட்டுவிரியன் என்பது யாது?
- கொடிய நஞ்சுள்ள இந்தியப் பாறைப் பாம்பு. வயிற்றுச் செதில்கள் பெரியவை. வால் சுருண்டிருக்கும்.
21. விரியன் என்றால் என்ன?
- இது சிறிய நச்சுத்தன்மையுள்ள பாம்பு. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் எனப் பலவகை.
22. நஞ்சுள்ள பாம்புகளில் பெரியது எது?
- அரச நாகம் காடுகளில் வாழ்வது. நீளம் 2 மீட்டர்.
- ஓபியாபேகஸ் ஹான்னா இதன் அறிவியல் பெயர்.
23. நச்சற்ற பாம்புகளில் மிகப் பெரியது எது?
- மலைப்பாம்பு. காடுகளில் வாழ்வது. நீளம் 3 மீ.
24. நச்சுப்பற்கள் என்பவை யாவை?
- நச்சுப்பாம்பின் மேல் தாடையிலுள்ள வளைந்த இரு கோரைப் பற்கள் கடிக்கும் பொழுது நஞ்சைச் செலுத்த ஊசிபோல் பயன்படுவது.
25. தோலுரித்தல் என்றால் என்ன?
- பல்லி, பாம்பு, கரப்பான் முதலியவை தங்கள் தோலை உரித்தல். இது பாம்பைப் பொறுத்த வரை சட்டை உரித்தல் ஆகும்.
26. மலைப்பாம்பு என்பது யாது?
- பாம்புள்ள மிகப்பெரியது, நச்சற்றது. தன் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கிக் கொன்று விழுங்கும். விலங்குக் காட்சியகங்களில் பார்வைப் பொருள்.
27. மலைப்பாம்பிற்கு அடுத்த பெரிய பாம்பு எது?
- அரசநாகம் இதற்கு அடுத்ததாகச் சொல்லத்தக்கது சாரைப் பாம்பு.
28. அனகோண்டா என்பது யாது?
- மலைப்பாம்புக் குடும்பத்தைச் சார்ந்த பெரிய பாம்பு தென் அமெரிக்காவில் நீரில் வாழ்வது.
29 கடற்பாம்பு என்பது யாது?
- கடலில் வாழும் சிறிய பாம்பு, நஞ்சுள்ளது.
30. முதலைகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. பெரும்பாலும் ஆறு, ஏரி முதலிய நீர் நிலைகளில் வாழபவை.
- 2. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவை.
- 3. கடினப் புறத்தோல் செதில்களால் மூடப்பட்டிருக்கும்
- 4. முட்டையிடுபவை.
31. ஆமையின் சிறப்பென்ன?
- ஓட்டிற்குள் வாழும் முதுகெலும்புள்ள விலங்கு. தீங்கு நேரிடும்பொழுது ஒட்டிற்குள் தன் தலையையும் கால்களையும் சுருட்டிக் கொள்ளும்.
32. யாக்கோப்சன் உறுப்புகள் என்றால் என்ன?
- மூக்கோடும் வாயோடும் தொடர்புடைய இருபைகள். பாம்புகளில் நன்கு வளர்ந்துள்ளன. வாயில் உணவின் மணமறிவது வேலை.
33. கொடுபல்லி என்றால் என்ன?
- அற்றுப்போன மிகப்பழங்காலத்து விலங்கு நீளம் 25 மீ.
34. பறக்கும் பல்லி என்றால் என்ன?
- தட்டார் பல்லி. சிறகுப்படலம் முன்புறத்துறுப்புக்களுக்கும் பின்புறத்துறுப்புகளுக்கு இடையே இருப்பதால் இது பறக்க இயலும்.
35. தன்முடமாதல் என்றால் என்ன?
- ஓர் உயிரி தன் உடல் பகுதியைத் தானே முறித்துக் கொள்ளுதல். எ-டு. பல்லி வால் முறிதல்.
36.பறவைகள் என்பவை யாவை?
- 1. பறத்தல் இவற்றிற்கு மட்டுமே உரியது.
- 2. இச்செயலுக்குச் சிறகுகள் பயன்படுகின்றன.
- 3. இவற்றின் உடல் வெப்பநிலை மாறாதது.
- 4. காற்று விரிபைகள் உண்டு. இவை நுரையீரல் நீட்சிகள். மூச்சு விட உதவுபவை.
37. பறக்காத பறவைகள் யாவை?
- கோழி, வாத்து, மயில். இவற்றின் இறக்கைகள் பறப்பதற்கு ஏற்றவை அல்ல.
38. வான்கோழியின் சிறப்பென்ன?
- சேவல் போன்ற பறவை. நீளம் 95 செ.மீ. நீண்டவால். விளையாட்டுப் பறவை. இதன் கறி உணவாகப் பயன்படுவது.
39. ஆர்க்கியாப்டிரிக்ஸ் என்பது யாது?
- அழிந்தொழிந்த புதைபடிவப்பறவை. ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் இணைப்பாக அமைவது.
40. எமு என்பது யாது?
- பறக்க இயலாத மிகப் பெரிய ஆஸ்திரேலியப்பறவை. உயரம் 1.5 மீட்டர்.
- பறக்க இயலாத நியூசிலாந்து பறவை. அந்நாட்டின் இலச்சினை. பகலில் உறங்கி இரவில் இரை தேடுவது.
42. பறவைகளில் மிகப்பெரியது எது?
- நெருப்புக் கோழி, ஆப்பிரிக்காவில் வாழ்வது. உயர்வரை உயரம் 3 மீ. எடை 150 கிகி. விரைவாக ஓடுவது. இதன் சிறகுகள் விலைமதிப்புள்ளவை.
43. பறவை வழியறிதல் என்றால் என்ன?
- பறவைகள் பறத்தலை உற்று நோக்கி, அவை செல்லும் வழியறிதல்.
44. மாறா வெப்பநிலை விலங்குகள் என்றால் என்ன?
- சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள்.
45. இறகுகள் என்பவை யாவை?
- பறவையின் உடல் முழுதும் அமைந்துள்ள புறத்துறுப்புகள். உடலுக்குக் கதகதப்பு அளிப்பவை.
46. உடல் இறகு என்றால் என்ன?
- பறவையின் உடலுக்கு இது உருவத்தை அளிப்பது. உடல் கதகதப்பிற்கும் பறத்தலுக்கும் காரணம்.
47. ஒர் இறகின் கொக்கியமைப்பின் பயன் யாது?
- இக்கொக்கியமைப்பு காற்றுத் தடையை உண்டாக்கிப் பறவை பறக்க உதவுகிறது.
48. இறகுத் தின்னிகள் என்பவை யாவை?
- இறகுகளைத் தின்னும் இறகிலாப் பூச்சிகளான ஒட்டுண்ணிகள். எ-டு பறவைப்பேன், தலைப்பேன்.
49. சூல்நாண் என்றால் என்ன?
- பறவை முட்டையின் மஞ்சள் கருப்பையை நிலை நிறுத்தும் கயிறு.
50. தீனிப்பை என்றால் என்ன?
- உட்கொண்ட உணவுப் பொருளைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எ-டு பூச்சிகள், பறவைகள்.
51. அரைவைப்பை என்றால் என்ன?
52. ஆந்தையின் சிறப்பியல்புகள் யாவை?
- இரவில் இரைதேடும் பறவை. அலறுவது, கூடு கட்டாதது. தலையைப் பின்பக்கம் திருப்பிப் பார்ப்பது.
53. இரையும் நாரை என்பது யாது?
- வட அமெரிக்கப் பறவை, அழியும் நிலையில் உள்ளது. இதன் கொம்பிரைச்சல் குறிப்பிடத்தக்கது. உயிரியலார் இதன் வகைகளைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர்.
54. விரல்மூடு பறவைக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
- நான்கு விரல்களும் விரலிடைத்தோலினால் இணைக்கப்பட்டிருக்கும். எ-டு வாத்து.
55. உப்புச் சுரப்பிகள் பறவைகளுக்கு எவ்வாறு பயன்படு கின்றன?
- கடல் பறவைகள் ஊடுபரவலைக் சரி செய்யத் தங்கள் தலையில் கொண்டுள்ள ஓரிணைச் சுரப்பிகள். இவை உப்புகளைச் சுரப்பவை.
56. அடைகாத்தல் என்றால் என்ன?
- முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டைகளுக்குப் போதிய வெப்பம் அமைத்துப் பொரிய வைத்தல். பெட்டைக்கோழி தன் முட்டை மீது அமர்ந்திருத்தல். இது அடைக்காக்கும் எந்திரத்தின் மூலமும் செய்யப்படுகிறது.
57. பெற்றோர் பாதுகாப்பு என்றால் என்ன?
- இளம் உயிர்கள் நன்கு வளர்ந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடையும் வரை அவை தங்கள் பெற்றோர்களால் பேணப்படும். இது பாலூட்டிகளிடமும், பறவைகளிடமும், மீன்களிடமும் காணப்படுகிறது.
58. பென்குயின் பறவையின் சிறப்பென்ன?
59. பறவைக்குஞ்சுகளில் இரு வகைகள் யாவை?
- 1. தங்குகுஞ்சுகள்- பறவைகளிள் குஞ்சுகள் முட்டை பொரிந்ததும் நகர இயலா. ஆகவே, கூட்டில் தங்கித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்.எ-டு புறாக் குஞ்சு
- 2. தங்காக்குஞ்சுகள் முட்டை பொரித்ததும் குஞ்சுகள் அதைவிட்டு வெளியேறித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். எ-டு கோழிக்குஞ்சு.
- 60. காதலாட்டம் என்றால் என்ன? புணர்ச்சிக்கு முன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை. மென்மையும் வன்மையும் கலந்தது. இது பறவைகளுக்குரிய தனிக் கலை.
61. பாலூட்டிகளின் சிறப்புகள் யாவை?
- 1. குட்டிப்போட்டு பால் கொடுப்பவை.
- 2. உடலில் மயிர் உண்டு.
- 3. குறுக்குத் தசை உண்டு.
- 4. உடல்வெப்பநிலை மாறா விலங்குகள்.எ-டுஎருமை, மான்.
62. இறுதி இரைப்பை என்றால் என்ன?
- பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை. இதுவே உண்மை இரைப்பை.
63. அசைபோடுதல் என்றால் என்ன?
- விழுங்கப்பட்ட உணவு இரைப்பையிலிருந்து வாய்க்குக் கவளங்களாகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு உமிழ் நீருடன் கலந்து நன்கு அரைக்கப்படுகிறது, மீண்டும் விழுங்கப்படுகிறது. எ-டு பசு, ஆடு.
64. அசைபை என்றால் என்ன?
- பசு முதலிய அசைபோடும் விலங்குகளை முதல் இரைப்பை
அசைபோடும் விலங்குகள் யாவை?
- பசு, ஆடு, எருமை.
65. கொறிக்கும் விலங்குகள் யாவை?
- அணில், எலி முதலிய பாலூட்டிகள் கொறிக்கும் விலங்குகள் ஆகும்.
67. மரம்வாழ் விலங்கு எது?
- அணில்.
68. காயடித்தல் என்றால் என்ன?
- பிறப்புறுப்புகளைக் குறிப்பாக விரையை நீக்குதல். இது பொதுவாகக் கால்நடைகளுக்குச் செய்யப்படுவது. எ-டு காளை மாடுகள்.
69. ஓரகப் பல்லமைவு என்றால் என்ன?
- எல்லாப் பற்களும் ஒரே வகையாக உள்ள பல்லமைவு. எ-டு தவளை, பல்லி.
70. வேற்றகப் பல்லமைவு என்றால் என்ன?
- பற்கள் வேறுபட்டு அமைந்திருத்தல். வெட்டுப்பல், கோரைப் பல், கடைவாய்ப்பல். எ-டு மனிதன்.
71. ஒரக உறுப்புகள் என்றால் என்ன?
- தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும்.இவை தோற்ற ஒற்றுமை உடையவை. வேலையில் வேறுபட்டவை.
72. விலங்குகளிலேயே மிக உயரமானது எது
- ஒட்டைச்சிவிங்கி, 7 மீட்டர் உயரம் உள்ளது.
73. மூன்றாம் இரைப்பை என்றால் என்ன?
- அசைபோடும் விலங்குகளின் இரைப்பையின் மூன்றாம் பிரிவு.
74. திமிங்கிலத்தின் சிறப்பென்ன?
- நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது, பாலூட்டி, கூரிய செவியுணர்வு மிக்கது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
75. யானையின் சிறப்பென்ன?
- நில விலங்குகளில் மிகப் பெரியது, புல் பூண்டுகளை உண்ணுவது. இதன் தந்தங்கள் மதிப்புள்ளவை.
76. ஆப்பிரிக்க யானையைப் பழக்க முடியுமா?
- முடியாது.
- அற்றுப்போன துதிக்கை விலங்கு. மிகப் பழங்காலத்தைச் சார்ந்தது.
78. தடிமத்தோல் விலங்குகள் யாவை?
- யானை, நீர் யானை.
79. ஒற்றைக் கொம்பன் என்பது யாது?
- காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவர உண்ணி. மூக்கிற்கு மேல் நேரான ஒரு கொம்பு இருக்கும். இது ஒரு பாலூட்டி.
80. நீர் யானை என்றால் என்ன?
- பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி. தாவர உண்ணி நீரில் கிடப்பது. ஒரே அளவுள்ள கால்கள். காட்சிச்சாலை விலங்கு.
81. ஒட்டகத்தின் சிறப்பு யாது?
- ஒரு பாலூட்டி. பாலைவனக்கப்பல். சவாரி செய்யவும் பொதி சுமக்கவும் பயன்படுவது.
82. அணில் குரங்கு என்பது யாது?
- பொன்னிற மயிருள்ள சிறிய தென்னமரிக்கக் குரங்கு.
83. புதிதாக இரு குரங்குச் சிறப்பினங்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
- டச்சு அறிவியலாரான மார்க் வான் ரூஸ்மாலன். இவற்றை 1990 களில் கண்டறிந்தார்.
84. விலங்குகளில் மனிதன் போல் நடப்பன யாவை?
- கரடி, மனிதக்குரங்கு.
85. கடலரிமா என்றால் என்ன?
- வட பசிபிக் பெருங்கடலில் வாழும் சீல் என்னும் விலங்கு மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டையாடப்படுகிறது.
86. வௌவால்களின் சிறப்பென்ன?
- பறக்கும் பலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. கேளா ஒலிளைக் கேட்பவை.
87. பறக்கும் நரி என்றால் என்ன?
88. பெருங்கரடி என்பது யாது?
- கரடி போன்ற பாலூட்டி. கறுப்பும் வெள்ளையும் கலந்தது. 1.8 மீ. உயரம். சீனாவிலும் திபெத்திலும் காணப்படுவது.
89. நம் நாட்டில் சிங்கம் எங்கு வாழ்கிறது?
- அஸ்ஸாம் காடுகளில் வாழ்கிறது.
90. புலி என்பது யாது?
- பூனைக்குடும்பத்தை சார்ந்த கொடிய ஊன் உண்ணும் விலங்கு. இது அழிந்து வருவதால் இதைப் பாதுகாக்க புலிப் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பயனளித்து வருகிறது. நம் நாட்டிற்கே உரியது.
91. வேங்கை என்பது யாது?
- பூனைக்குட்டி குடும்பத்தைச் சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் காணப்படுவது.
92. வேங்கையின் சிறப்பு யாது?
- நிலம் வாழ் ஊனுண்ணி. புலியை ஒத்த சீற்றமிகு விலங்கு.
ஏனைய விலங்குகளை வேட்டையாடுவது.
93. மதலைப்பை விலங்குகளுக்கு இரு எடுத்துக்காட்டுகள் கூறுக.
- கங்காரு, கோலா.
94. கோலா என்பது யாது?
- மதலைப்பையுள்ள ஆஸ்திரேலிய விலங்கு. 1 மீட்டர் நீளமுள்ளது. மரம் ஏறும்.
95. கங்காரு என்பது என்ன?
- மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய பாலூட்டி இதன் நீண்ட பின்கால்கள் குதித்தோடப் பயன்படுபவை. மதலைப்பை குட்டிகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.
96. சின்னாய் என்றால் என்ன?
- வட அமெரிக்க விலங்கு. நாய் போன்று குரைக்கும். அணில் போன்று கொறிக்கும்.
97. கடல் முள் எலி என்றால் என்ன?
98. தொப்பூழ்க்கொடி என்றால் என்ன?
- கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திகவடம். இதன் வழியே குருதி மூலம் உள்ளே ஊட்டப்பொருள் செல்கிறது. வெளியே கழிவுப்பொருள் வருகிறது.
99. சூல்கொடி என்றால் என்ன?
- நஞ்சுக்கொடி வளரும் கருவைக் கருப்பபையோடு இணைத்து ஊட்டம் வழங்கும் கொடி,
100. முதுகுத்தண்டுடை விலங்குகள் யாவை?
- இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுதண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்பு வடம் ஆகிய மூன்று சிறப்பு உறுப்புகள் காணப்படும். எ-டு ஆம்பி யாக்சஸ்.
101. மயிர் என்பது என்ன?
- பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி, தாவரப் புறத்தோலின் வளர்ச்சி. உயிர் நின்ற பிறகும் வளர்வது மயிர்.
102. குளம்பு பிளவுபட்ட விலங்குகள் யாவை?
- ஆடு, மாடு.
103. குளம்பு பிளவுப்படாத விலங்கு எது?
- குதிரை, கழுதை.
104. பனிக்குடம் என்றால் என்ன?
- நிலம் வாழ் முதுகெலும்பு விலங்குகளின் கருப்படலம், கருவினைப் பாதுகாப்பது.
105. பூழ்ப்பை என்றால் என்ன?
- பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் மூச்சு விடுவதற்காகக் கருவில் காணப்படுவது.
106. ஐவிரல் உறுப்பு என்றால் என்ன?
- ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால்.
107. முதுகுத்தண்டு என்பது யாது?
- உயிரணுக்களான தனிவடம். தண்டுவடம் முன்னோடி முதுகெலும்பு தோன்றியதும் மறைவது, சில கீழனி விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது.
108. நகங்கள் என்பவை யாவை?
- உயர் வகை முதுகு எலும்புகளின் விரல் நுனியில் காணப் படும் தட்டையான கடினத்தகடுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக்கூடியவை.
109. நீந்துயிர்கள் என்பவை யாவை?
- ஏரி, கடல், பெருங்கடல் ஆகியவற்றில் வீறுடன் நீந்தும்
விலங்குகள். எ-டு மீன், சுறா, திமிங்கிலம்.
110. நாற்கால் விலங்குகள் யாவை?
- மான், மாடு, தவளை, ஓணான் முதலியவை.
111. முத்துச்சாரம் என்றால் என்ன?
- மீன்செதில்களிலிருந்து பெறப்படும் வெண்ணிறப்பற்கள். செயற்கை முத்துகள் செய்ய பயன்படுவது.
112. முத்து என்றால் என்ன?
- முத்துச் சிப்பியினால் உண்டாக்கப்படும் பொருள்.
113. முத்து எவ்வாறு உண்டாகிறது?
- சிப்பியின் கூட்டிற்குள் மூடகத்திற்கும் ஓட்டிற்கும் இடையில் மணல், துகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்று சேரும்பொழுது அதைச் சுற்றி மூடகம் ஓர் உறையை உண்டாக்கும். இதுவே பின் முத்துகளாக வளர்வது.