அறிவுக்கு உணவு/நகைச்சுவை
சிரிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது என்பது மருத்துவ அறிஞர்களின் கருத்து. மக்களைச் சிரிக்கவைக்க நகைச்சுவை ஒரு சிறந்த கருவி. இக் கருவியை விழிப்பாகக் கையாள வேண்டும். இன்றேல், இது தீமையே தரும்.
நகைச்சுவை வேறு, நையாண்டி வேறு, நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு மயிரிழை தவறினாலும் நையாண் டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும்.
ஒருவன் கூறியது நகைச்சுவையா? நையாண்டியா என்பதை அறிய விரும்பினால், அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா? என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.