அறிவுக்கு உணவு/யோசியாமற் செய்
வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்தபோது வாங்காதே! கொடுத்து விடலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்து விட்டால் கொடுத்து விடு: உண்ணலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்துவிட்டால், உண்ணாதே! இம்மூன்றும் யோசியாமல் செய்ய வேண்டிய முடிவுகளாம்.