அவள் ஒரு மோகனம்/தூங்காத இரவு என்று ஒன்று



16. தூங்காத இரவு என்று ஒன்று


அடுத்த ஐந்தாவது வினாடியில்;

கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் எதிரொலித்தது.

வானத்துத் தேவதைக்கு இந்தப் பொல்லாத மண் கசந்து விட்டதோ?

நெஞ்சு வெடிக்கக் கதறினார், ஞானசீலன்!

ரேவதி தனக்குத்தானே சமர்ப்பித்துக்கொண்ட இரத்தக் காணிக்கையில் சல்லாபமாகச் சாய்ந்து கிடக்கிறாள். செக்கச் சிவந்த உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.

ரேவதி: வீரிட்டு அலறியவராக, அவளை அலுங்காமல் குலுங்காமல் வாரியெடுத்துத் தன்னுடைய மடியில் கிடத்திக் கொண்டார், ஞானசீலன். அவசரப்பட்டுட்டியேம்மா!’ அழுது புலம்பினார்; புலம்? அழுதார்.

ரேவதியின் அழகான கண்கள் அழகாகத் திறக்கின்றன. அத்தான், என்னைப் பாருங்கள். இப்ப அந்தரங்க சுத்தியோட சொல்லுங்கள். நான் யாராம்?” குறும்புப் புன்னகையுடன் வினவினாள்,

...நீ. என்னோட ரேவதி ஞானசீலன்... டாக்டர்ரேவதி ஞானசீலனாக்கும் ஞானசீலன் கதறினார்:

மார்புத்தாலி இரத்தச் சிலுவையென நிர்மலமாகத் தரிசனம் தந்தது.

ரேவதிக்கு ஆற்றாமை மேலிட்டிருக்க வேண்டும். ஒய்ந்து போய்விட்ட கைகளை உயர்த்த முயன்றாள். ஞானசீலனின் கண்ணிரைத் துடைக்கவா? முடியவில்லை.

ஒட்டிக் கிடந்த உயிரின் மூச்சைப் பிரயத்தனப்பட்டு உள்வசமாகத் தாங்கிக் கொண்டாள்; உதடுகளில் இரத்த வரிகள் கசிந்தன.

சத்தியமாகச் சொல்றேனுங்க, அத்தான்; இப்பத் தான் என் மனசு உண்மையிலேயே சமாதானப் பட்டுச்சுங்க!... இந்த அளவுக்காச்சும் எனக்கு ஆறுதல் கிடைச்சுதே! - அந்த மட்டுக்கும் நான் கொடுத்து வச்சவள்தான்! என்னைப் பாருங்களேன்; நான்

துளியானும் அழறேனா? என்னை மாதிரி நீங்களும் சமர்த்தாய் அழாமல் இருங்க அத்தான்! இந்த மகோன்னதமான நிம்மதியோட நான் புறப்பட்டாகணும். நான் மகா பாக்கியவதி. என்னை உயிராலும் உள்ளத் தாலும் ஆத்மார்த்தமாக நேசிச்ச புண்ணியவான் ஞானசீலனை நெஞ்சிலே சுமந்துக்கிட்டு, பூவோடும், பொட்டோடும் உங்ககிட்டேயிருந்து விடைபெறக் கொடுத்து வச்ச நான் புண்ணியவதிதான்.

‘பேச்சை நிறுத்திக் கொண்டதோடு நின்றிருக்கக் கூடாதா ரேவதி? முச்சும் நின்றுவிட்டதே!... தெய்வமே!... தாயே!...”

என்னோட கண் திறந்தப்ப, நீ கண்ணை மூடிக் கிட்டா எப்படி? இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காதே?... கண்ணைத் திற ரேவதி, கண்ணைத் திற!’

கண்கள் திறக்கவில்லை. ரேவதி ரோஷக்காரி!.

‘கண்ணே ரேவதி!... கோபப்பட்டுடாதே. கோவிச் சுக்கிடாதே!... அம்மோடி ரேவதி ஞானசீலன்... இந்த மண்ணிலே நீ இல்லாமல் போனப்புறம் நான் இருந்து என்ன பயன்? உன்னோட நானும் புறப்படுறேன்! அப்பத்தான், நமக்கு நாமே விதியாகி, வினையுமாகி விளையாடிக்கிட்ட நம்மளோட வாழ்க்கை விளையாட்டுக்கு உண்மையான அர்த்தமும் கிடைக்க முடியும்."

கீழே கிடந்த துப்பாக்கியை கையில் எடுத்தார்.

மீண்டும் அது ஒலித்தது.

அதோ ...

ஞானசீலனின் ரேவதியும், ரேவதியின் ஞான சீலனும் பளிங்குத் தரையிலே ஆனந்தமாகப் பள்ளி கொண்டிருக்கிறார்கள்!

தயவு செய்து, யாருமே. அந்த விசித்திரத் தம்பதியை எழுப்பி விடாதீர்கள்!



மணிவாசகர் பதிப்பகத்தின்

சிறந்த நாவல்கள்

சு. சமுத்திரம்

ஊருக்குள் ஒரு புரட்சி
வளர்ப்பு மகள்
உயரத்தின் தாழ்வுகள்
புதிய திரிபுரங்கள்
இல்லந்தோறும் இதயங்கள்
நெருப்புத் தடயங்கள்
சத்திய ஆவேசம்
வெளிச்சத்தை நோக்கி
ஒரு கோட்டுக்கு வெளியே

வேரில் பழுத்த பலா

நீல பத்மநாபன்

பள்ளிகொண்டபுரம்

எம். வி. வெங்கட்ராம்

அரும்பு

வேள்வித் தீ

க. நாராயணன்

மயிலாசனம்

ப. கோ. கலியபெருமாள்

கடலோரம்

கமலா சடகோபன்

வாரிசு