அவள் ஒரு மோகனம்/மனத்தின் குரல்

11. மனத்தின் குரல்


விடியலுக்கு விடிமோட்சம்.

ரேவதி நீராடினாள்; நீறு தரித்தாள். புதிய சேலையும் சோளியும் இளகிய மஞ்சள் இழைகளில் பளிச்சிட்டன.

புதிய உணர்வுகளில் புதிதாக உள்ளத்தைப் பெற்றுவிட்டதைப் போல, மகிழ்ச்சியில் திளைத்தாள். ராகம் புரிந்து விட்டது. சுகமான தேவமனோகரி ராகம் இனிமையாகப் பண் சேர்த்தது. அப்புறம் அவள் பம்பரமாகச் சுழலக் கேட்க வேண்டியதே இல்லை!

குழலியை மனமில்லாமலே எழுப்பினாள். குளிக்கச் செய்தாள். அந்த நாளில் அவளுக்காக எடுத்திருந்த புதுப் பாவாடை, சட்டை, தாவணியை கொடுத்து அணிந்துகொள்ளவும் வைத்தாள். குழலியின் கழுத்தில் அசிங்கமாகத் தொங்குகிற கோல்டு கவரிங் சங்கிலிக்குப் பதிலாக அசல் தங்கத்திலே ஒரு சங்கிலியையும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்!

காலைச் சிற்றுண்டி முடிந்தது.

பூவையர் மணத்தனர்.

“குழலி, இன்றிலிருந்து நீ என் செயலாளர். அதற்கான நியமன உத்தரவு இது; இந்தா!" என்று செல், 'டைப் ' செய்யப்பட்டிருந்த ஓர் உறையை நீட்டி டாக்டர் ரேவதி. குழலி பிரித்தாள்.

ரூபாய் நோட்டுகள் சிதறின.

குழவியின் கண்கள் பேசவில்லை; கண்ணீர் பேசியது. "சுளை சுளையாய் ஆயிரம் ரூபாய் இருக்குதுங்களே, அம்மா !”

“ உனக்குச் சம்பளம் ஐநூறு ரூபாய்தான் இப் போதைக்கு என்னாலே தர முடியும். உன் சாப்பாடு, மற்ற செலவுகள் எல்லாமே இனிமேல் என்னோடு’ நடந்திடும்! இந்தப் பணம் உனக்கு முன்பணம். நீ ஒருத்தியாவது நிம்மதியோட சிரிச்சிக்கிட்டு இருக்க வேணாமா, குழலி?" என்றாள் ரேவதி.

இப்போது குழலி அழுகிறாள் ஆனந்தமாக!

ரேவதி இல்லம் புதியதோர் உலகம் செய்திடத் தயாராகிக் கொண்டிருந்தது.

இப்போது-

இங்கே-

காலம் சுவரிலேதான் ஒடும்.

மணி: நான்கு, பதினைந்து.

விடியல் பொழுதில் ஏற்பட்ட மனச் சிலிர்ப்பு இப் பொழுது மேனியிலும் பரவத் தொடங்கி, கண்ணாமூச்சி விளையாடி இருளுக்கும் ஒளிக்கும் மத்தியில் அலை சய்ந்தது.

ஐந்து மணிக்கு இங்கே நடைபெற இருக்கிற நவீன சுயவரத்தில் ரேவதி சுழன்றாள்!

“என் மட்டிலே இன்னிக்கு ஒரு சோதனை நாளாட்டம் தான்; மணமகன் தேவை போட்டிக்காக வந்த சேர்ந்த 68 மனுக்களிலே நான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைகளும் இந்நேரம் வழியிலே வந்துக்கலாம். அவங்களிலே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்

தாக வேண்டிய விதியை எனக்கு நானே ஏற்படுத்திக்கிட்டேன்; எனக்கு நான்தான் விதி! அதனாலேதான், இப்படிச் செஞ்சேன். சோதனையோட நல்லதும் கெட்டதும் எனக்குப் புரிஞ்ச புதிர்தான்! அதுதான் ரேவதியோட ஜாதக சிறப்பு. ரேவதின்னா ரேவதி தான்! அவள் ஒண்னும் கொக்கு இல்லே!...விதின்னு ஒண்ணு இருந்தால்கூட, அதோட வறட்டு ஜம்பம் என்கிட்டே சாயவே சாயாது! ஈரமான ரோஜாவின்களின் பணித்துளிகள் சிலிர்த்தன.

விரகதாபத்தால் தவித்த பெண் புறா ஒன்று த. இணையை - துணையைக் கூவிக்கூவி அழைத்தபடி விட்டத்தில் வந்துகிறீச்சிட்டது; குக்கூ... கூ... கூ!"

ரேவதி ஆச்சரியம் அடைந்தாள். நாணமும் அடைந்திருக்க வேண்டும்.

என்ன அதிசயம்! பெண் புறா அழைத்ததும், அதோ அந்த ஆண் புறா தன் ஜோடியைத் தேடி ஓடி வந்து விட்டது .

ரேவதி ஏதோ இன்பமயமான கற்பனைகளில் மன்ம் லயித்தாள்; தன்னையும் மறந்த நிலையில் சங்கிலியின், பதக்கத்தைத் தடவியவளுக்கு “சுரீர்” என்றது. நெஞ்துை என்னவோ உறுத்தியது.

கண் கொட்டாமல் பதக்கத்தையே பார்வைவிட்டாள். மறுகணம், தேள் கொட்டிவிட்ட மாதிரி துடித்தாள். பதக்கத்திலே அந்தத் தாலியை தரிசித்திருப்பாளோ?

டக். டிக். டக்!

மணமகன் தேர்வுக்குரிய பேட்டிக்கும் போட்டிக்கும். உரியனவாகப் பொறுக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களையும் அவற்றோடு இணைக்கப்பட்டிருந்த சூப் படங்களையும் மேலும் ஒரு முறை பார்வையிட்டாக்டர் ரேவதி.

'இந்த எட்டுப் பேருக்குள்ளே, யாருக்குத்தான் லாட்டரிப் பரிசு கிடைக்கப் போகுறதோ?’ நினைத்துப் பார்த்த மாத்திரத்திலே,அவளது அடி மனத்தில் எக்காளச் சிரிப்பு ஒன்று சீறிச் சிதறியது! ஆம்; எல்லா வகையிலும் என் மனதுக்குப் பிடித்தமான ஒருவரை எனக்கு எல்லா வழியிலும் பொருத்தமான ஒருவரை எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுப்பேன், நான். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற அந்த மனிதர் ஊரறிந்த உயர்வு மனப்பாமையை மதித்தும் போற்றியும் நடக்கத் தெரிந்தவர் என்று நான் நம்பினால்தான், அவர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, எனக்கு நாயகனாக ஆகவும் முடியும்!... ஆமாம்; இது என் வாழ்வுப் பிரச்சினை: ஊர் உலகம் பற்றி எனக்குக் கவலை இல்லை! தவிரவும், சுதந்திரப் பறவையான இந்த டாக்டர் ரேவதியின் சுதந்திர உரிமையாக்கும் இது! இந்த உரிமைக்கு, உயிரால் உறவு சொல்லத் தெரிந்த - உறவு காட்டத் துணிந்த அசலான மனிதர் ஒருவர் கிடைத்தால்தான் எனக்குப் புது வாழ்க்கை கிடைக்கும். இதுவேதான் சத்தியமான, தர்மமான உண்மையான என் முடிவு ஆகும். ஏன் தெரியுமா? எனக்கு நான் தான் விதி!... அந்த விதிதான் டாக்டர் ரேவதி ! டாக்டர் ரேவதி ஒன்றும் கொக்கு ‘இல்லை. அவள், ஆமாம், நான் விதியின் நாயகியாக்கும்! -என்னென்னவோ நினைவுகள், இனம் ரிந்தும், இனம் புரியாமலும் என்னென்னவோ ராகங். ளில் கொட்டி முழங்கின.

ஜோடிப் புறாக்கள் இருட்டிலே வெளிச்சத்தை அனுபவிக்கப் புறப்படுகின்றன போலும்!

அவள் நாணம் பூத்தாள்; நாணத்தின் மென்மையான முகத்தோடு, அந்த முதல் இரவை நினைவு கூர்ந்தாள்;நீ என்னோட நேசமான, பாசமான, அன்பான மனைவி என்பன விடவும், என்னோட முதல் மரியாதை அளிச்சு அங்கீகரிச்சு ஏற்றுக் ‘உன்னதமான ஒரு மாயத் தேவதை நீ என்கிறது தான் பொருத்தமான சங்கதி...! அதனால், மெய்யாவே பரிசுத்தமான என் நெஞ்சிலே இன்றைக்கு மட்டுமல்ல: என்றைக்குமே நீ ஒருத்தியேதான் எனக்கு அன்புத் துணைவியாகவும், “அருமைத் தேவதையாகவும் சத்தியமாகக் கொழு இருக்க முடியும்!...”-நெஞ்சத்திலே அளவிட்டுச் சொல்ல முடியாத நேசம் வழிந்தோட, கண்களிலே அளவு கட்டிச் சொல்லும் படியான தண்ணீர் பெருகி வழிய,

சாந்தி முகூர்த்த ராத்திரியில் சத்தியம் செய்த ஞானசீலனின் அன்பான் பேச்சு தர்மத்தின் குரலாகவும். சத்தியத்தின் ஆணையாகவும் அவளது பெண் மனத்தில் மீண்டும் ஒலித்திருக்க வேண்டும். தெய்வமே! இப் நான் என் செய்வேன்? அலறினாள் அவள். “மிஸ்.. ஞானசீலனோட சத்தியப் பேச்சை இவ்வளவு காலமும் நான் எப்படி மறந்தேன்?... ஆத்தாளே கருமா உண்மையாகவே நான் பாவி ஆகிவிட்டேன. ஐயையோ!... தெய்வமே... என் தெய்வமே!” கதரினாள், அவள். அவள் சாட்சாத் ரேவதி டாக்டர் ரேவதி

எங்கேயோ, சொறி நாய் ஒன்று ஊளையிடுகிறது. அவளுக்கு நெஞ்சு வலித்தது. மேஜை டிராயரை இழுத்தாள். மாத்திரைகளைத் தேடினாள். ஆனால், கைகளில் ஏதோ காகிதங்கள்தாம் சிக்கின. எடுத்தாள். மணமகன் போட்டியில் பங்குபெற வந்த சிதம்பரத்தின் ‘மனு அது.

கட்டின மனைவி கோயில் கல்லாக இருக்க, இது என்ன விளையாட்டு: அன்றைக்கே இம்மனுவை நிராகரித்து விட்டாள். இன்னொன்று வயிற்றுவலி முத்தையனுடையது, ஆற்றது, கிழக்கட்டை ஒன்றுக்குச் சொந்தம்!-சே! ஆயினம் காலத்துப் பயிரான புனிதமான திருமணம்கூட வெறும் கிள்ளுக்கீரை தான் ஆகிவிட்டதா?

அவள் கேட்ட கேள்வியே அவளை மடக்கிப் போட்டுச் சுட்டது; சுட்டெரித்தது. திண்டாடினாள்; திக்குமுக்காடினாள். அன்றைக்கு ஏற்பட்ட தாம்பத்தியப் பிணக்கு விபரீதம் ஆகிவிட்டது. மனம் இருந்திருந்தால் அந்த ஊடல் அந்நியோந்நியமான கூடவிலே சுபம் கண்டிருக்க முடியாதா? அதற்கு விவாகரத்துதான் தலையெழுத்தாக அமைய வேண்டுமா?

ஞானசீலன் பேரிலேதான் தப்பு. அந்தத் தப்பை மன்னித்திருக்க முடியாதா, என்ன? எங்கோ தொடங்கிய எதை எங்கோ முடிந்தது.

காகிதங்களை வேண்டா வெறுப்போடு குப்பைக் கூடையில் வீசி எறிந்தாள். மாத்திரைகளை எடுத்தாள். எடுத்த மாத்திரைகளையும் மேஜைக்கு அடியிலேயே ஆத்திரத்தோடு போட்டுவிட்டு, அலங்கோலமாக எழுந்தாள்.

வலி மிஞ்சியது. வலிக்கட்டுமே ! உயிர் போய்விடுமா, என்ன? அவமானம் மிஞ்சியதுதான் மிச்சம்!

அந்தரங்கக் கூடம் கைதட்டி அழைக்கிறது. ஒரு வேளை அது கைகொட்டி அழைத்திருக்கலாமோ?

கூடத்தில் பல வகை அழகுகளும் பல வழிகளில் சொல்விச் சொல்லி வழிந்தன. நவீன காதல் சுயம்வரம் நடக்கவிருக்கும் மண்டபமென்றால், அங்கே நவநாகரிகம் கண்சிமிட்டிக் களிநடனம் புரியவேண்டாமா? ரேவதிக்கு உயிர்த் தீ பற்றி எரிகிறது. பானங்கள் சிதறின. நாற்காலிகள் முட்டி மோதிக் கொண்டு புரள்கின்றன.

மார்பில் ஊசலாடிய பதக்கத்தையும் சேர்த்து அழுத்திப் பார்த்தாள், ரேவதி. காம்பு முனைகில் எரிச்சல் மூண்டிருக்கலாம். அவள் ஆகாயத்திலே மிதந்தாளோ?... போட்டியாம்... சே! நடந்தாள். இரகசியமான பீரோவை வெட்ட வெளிச்சத்தில் திறந்தாள்.

அதோ அந்தத் திருமணப் படம்! ஞானசீலனும் ரேவதியும் மாலையும் கழுத்துமாக புன்னகையும் புது நிலவுமாக எத்துணை கம்பீரமான தூய்மையுடன் தரிசனம் தருகிறார்கள்.

அது... அது... திருமாங்கல்யம்!

ரேவதி சிலையானாள். சிலையென்றால், சாமானியச் சிலையா? - மோகினிச் சிலை அல்லவா! தீயிலே கால்கள் இடறி விழுந்துவிட்ட பாவனையில், உயிர்துடித்தாள் உடல் துவண்டாள். மனச்சாட்சி தீ மூட்டிய புண்ணி, நெருப்பிலே அவள் உயிர் திரிகரண சுத்தியோடு அக்கினி பிரவேசம் செய்ததோ என்னவோ?

படிக்கட்டில் காலடி ஓசை .

செல்வி குழலி நம்பகமான, நல்ல தகவல்களோடு சீக்கிரத்தில் திரும்பிவிட மாட்டாளா?

ரேவதி ஏங்கினாள்; தவித்தாள். உருகினாள்.

‘மணமகன் தேர்வுக்காக அஞ்சு மணிக்கு நடக்க விருக்கிற இன்டர்வ்யூ இப்ப எனக்கு அவசியம் இல்லையே! தேவையும் கிடையாது!... அதை நான் கான்ஸல் செஞ்சிடப் போறேன்!... இப்ப முதலும் முடிவுமாக எனக்குத் தேவைப்படுவது ஒண்ணே ஒண்ணுதான்! - இன்றைக்கு மிஸ்டர் ஞானசீலனின் உண்மையான நிலை என்ன, நிலவரம் என்ன? இந்த விவரம் எனக்குத் தெரிஞ்சால் போதும்; மற்றதை நான் பார்த்துக்குவேன்! - நான் டாக்டர் ரேவதியாக்கும்! - மனத்தில் ஏற்பட்ட அழுத்தம், ஏற்படுத்திய ஆற்றாமையில் அவள் தளர்ந்திருக்கலாம்.

யார்?

"அம்மா, நான்தான் அங்கம்மா!"

“நான் உன்னைக் கூப்பிட்டேனா?”

"இல்லீங்களே! ராவ் ஐயாதான் அனுப்பிச்சு வச்சாருங்க. உங்கள் கல்யாணப் பேட்டிக்காகப் பெரிய பெரிய ஐயாமாருங்களெல்லாம் கச்சிதமா வந்து சேர்ந்திட்டாங்களாம்! சொல்லிட்டு வந்திடச் சொன்னாங்கம்மா!"

"நான் இப்போ யாரையுமே பார்க்கப் போறது. கிடையாது; நீ போகலாம்!”

மறுபடி சத்தம்...

"யார்? - குழலியா?’’

"அம்மா, நான்தான் ராவ்.’’

"என்ன வாம்?"

"வந்துங்க..."

"அதான் வந்திட்டீங்களே!...”

"நீங்கள் நடத்தப் போற பேட்டிக்கு மணி அஞ்சாகியும் பொறுமையோட காத்துக்கினுதான் இருந்தாங்க அந்த எட்டுப் பேரும் அந்நேரத்திலே, சிதம்பரம் வந்து, அவங்களோட காதிலே என்னமோ இரகசியத்தை ஒதினார். என்னவோ எச்சில் பழம், எச்சில் பழம்’ என்கிற வார்த்தைங்க மட்டிலுந்தான் எனக்குக் கேட்டிச்சு. அவ்வளவுதான்; வந்தவங்க அத்தனை பேரும் பேய் பிசாசைக் கண்டதாட்டம் விழுந்தடிச்சிட்டு ஓடிப் போயிட்டாங்களே, அம்மா. இப்ப நான் என்ன செய்யட்டும்?’’

அஞ்சி ஒடுங்கினார், ராவ்.

“நீங்கள் ஒண்னும் செய்ய வேண்டியதில்லே. பழம் நழுவிப் பாலிலே விழுந்தாச்சு; அதுபோதும் எனக்கு! சரி; இந்தாங்க, உங்களுக்குச் சேரவேண்டிய சம்பளப் பணம்!

ராவ், இனி நீங்கள் நேரா உங்க வீட்டுக்கே புறப் பட்டுடலாம். சீக்கிரம் புறப்படுங்க... குட் பை!"