ஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்
அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளிய
ஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்
தொகுபெரிய பெருமாள்
தொகு- திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
- செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
- இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
- இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
- அரியதய ரதன்மகனா யவதரித்தோன் வாழியே
- அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
- பெருகிவரும் பொன்னிநடுப் பின்றுயின்றான் வாழியே
- பெரியபெரு மாளெங்கள் பிரானடிகள் வாழியே. (1)
பெரிய பிராட்டியார்
தொகு- பங்கயப்பூ வில்பிறந்த பாவைநல்லாள் வாழியே
- பங்கினியி லுத்தரநாள் பாருதித்தாள் வாழியே
- மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
- மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
- எங்களெழிற் சேனைமன்னர்க் கிதமுரைத்தாள் வாழியே
- இருபத்தஞ் சுட்பொருள்மா லியம்புமவள் வாழியே
- செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
- சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே. (2)
சேனைமுதலியார்
தொகு- ஓங்குதுலாப் பூராடத் துதித்தசெல்வன் வாழியே
- ஒண்டொடியாள் சூத்ரவதி யுறைமார்பன் வாழியே
- ஈங்குலகில் சடகோபற் கிதமுரைத்தான் வாழியே
- எழில்பிரம்பின் செங்கோலை யேந்துமவன் வாழியே
- பாங்குடன்முப் பத்துமூவர் பணியுமவன் வாழியே
- பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
- தேங்குபுக ழரங்கரையே சிந்தைசெய்வோன் வாழியே
- சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (3)
நம்மாழ்வார்
தொகு- மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
- வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
- ஆதிகுரு வாய்ப்புவியி லவதரித்தான் வாழியே
- அனவரதஞ் சேனையர்கோ னடிதொழுவோன் வாழியே
- நாதனுக்கு நாலாயிர முரைத்தான் வாழியே
- நன்மதுர கவிவணங்கும் நாவீறன் வாழியே
- மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
- மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே. (4)
நாதமுனிகள்
தொகு- ஆனிதனி லனுடத்தி லவதரித்தான் வாழியே
- ஆளவந்தார்க் குபதேச மருளிவைத்தான் வாழியே
- பானுதெற்கிற் கண்டவன்சொல் பலவுரைத்தான் வாழியே
- பராங்குசனார்சொற் பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே
- கானமுறத் தாளத்திற் கண்டிசைத்தான் வாழியே
- கருணையினா லுபதேசக் கதியளித்தான் வாழியே
- நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
- நலந்திகழு நாதமுனி நற்பதங்கள் வாழியே. (5)
உய்யக்கொண்டார்
தொகு- வாலவெய்யோன் றனைவென்ற வடிவழகன் வாழியே
- மால்மணக்கால் நம்பிதொழு மலர்ப்பதத்தோன் வாழியே
- சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
- சித்திரையில் கார்த்திகைநாள் சிறக்கவந்தோன் வாழியே
- நாலிரண்டு மையைந்தும் நமக்குரைத்தான் வாழியே
- நாலெட்டி னுட்பொருளை நடத்தினான் வாழியே
- மாலரங்கர் மணவாளர் வளமுரைப்போன் வாழியே
- வையமுய்யக் கொண்டவர்தாள் வையகத்தில் வாழியே. (6)
மணக்கால் நம்பிகள்
தொகு- தேசமுய்யக் கொண்டவர்தாள் சென்னிவைப்போன் வாழியே
- தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
- தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
- தமிழ்நாத முனியுகப்பைத் தாபித்தோன் வாழியே
- நேசமுட னாரியனை நியமித்தான் வாழியே
- நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
- மாசிமகந் தனில்விளங்க வந்துதித்தான் வாழியே
- மால்மணக்கால் நம்பிபதம் வையகத்தில் வாழியே. (7)
ஆளவந்தார்
தொகு- மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
- மறைநான்கு மோருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
- பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
- பாடியத்தோ னீடேறப் பார்வைசெய்தோன் வாழியே
- கச்சிநகர் மாயனிரு கழல்பணிந்தோன் வாழியே
- கடகவுத் திராடத்துக் காலுதித்தோன் வாழியே
- அச்சமற மனமகிழ்ச்சி யணைந்திட்டான் வாழியே
- ஆளவந்தார் தாளிணைக ளனவரதம் வாழியே. (8)
பெரியநம்பிகள்
தொகு- அம்புவியில் பதின்மர்கலை யாய்ந்துரைப்போன் வாழியே
- ஆளவந்தார் தாளிணையை யடைந்துய்ந்தோன் வாழியே
- உம்பர்தொழு மரங்கேசர்க் குகப்புடையோன் வாழியே
- ஓங்குதனுக் கேட்டைதனி லுதித்தபிரான் வாழியே
- வம்பவிழ்தார் வரதருரை வாழிசெய்தான் வாழியே
- மாறனேர் நம்பிக்கு வாழ்வளி்த்தான் வாழியே
- எம்பெருமானார் முனிவர்க் கிதமுரைத்தான் வாழியே
- எழில்பெரிய நம்பிசர ணினிதூழி வாழியே. (9)
திருக்கச்சிநம்பிகள்
தொகு- மருவாருந் திருமல்லி வாழவந்தோன் வாழியே
- மாசிமிருக சீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
- அருளாள ருடன்மொழிசொல் லதிசயத்தோன் வாழியே
- ஆறுமொழி பூதூரர்க் களித்தபிரான் வாழியே
- திருவால வட்டம்செய்து சேவிப்போன் வாழியே
- தேவரா சாட்டகத்தைச் செப்புமவன் வாழியே
- தெருளாரு மாளவந்தார் திருவடியோன் வாழியே
- திருக்கச்சி நம்பியிரு திருவடிகள் வாழியே. (10)
எம்பெருமானார்
தொகு- அத்திகிரி யருளாளரடி பணிந்தோன்வாழியே
- அருட்கச்சி நம்பியுரையாறு பெற்றோன் வாழியே
- பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
- பதின்மர்கலை யுட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
- சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
- தொல்பெரிய நம்பிசரண் தோன்றினான் வாழியே
- சித்திரையி லாதிரைநாள் சிறக்க வந்தோன் வாழியே
- சீர்பெரும்பூ தூர்முனிவன் திருவடிகள் வாழியே. (11)
கூரத்தாழ்வான்
தொகு- சீராருந் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
- தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
- பாராரு மெதிராசர் பதம்பணிந்தோன் வாழியே
- பாடியத்தி னுட்பொருளைப் பகருமவன் வாழியே
- நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
- நாலூரான் றனக்குமுத்தி நல்கினான் வாழியே
- ஏராருந் தையிலத்தத் திங்குவந்தான் வாழியே
- எழில்கூரத் தாழ்வான்றன் னிணையடிகள் வாழியே. (12)
முதலியாண்டான்
தொகு- அத்திகிரி யருளாளர் அடிபணிந்தோன் வாழியே
- அருட்பச்சை வாரணத்தி லவதரித்தோன் வாழியே
- சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
- சீபாடியந் தன்னில் சீர்பெறுவோன் வாழியே
- உத்தமாம் வாதூல முயரவந்தோன் வாழியே
- ஊர்திருந்து சீர்பாத மூன்றினான் வாழியே
- முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
- முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே. (13)
திருவரங்கத்தமுதனார்
தொகு- எந்தாதை கூரேச ரிணையடியோன் வாழியே
- எழில்மூங்கிற் குடிவிளங்க விங்குவந்தோன் வாழியே
- நாந்தாம லெதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
- நம்மதுர கவிநிலையை நண்ணினான் வாழியே
- பைந்தாம வரங்கர்பதம் பற்றினான் வாழியே
- பங்குனியி லத்தநாள் பாருதித்தோன் வாழியே
- அந்தாதி நூற்றெட்டு மருளினான் வாழியே
- அணியரங்கத் தமுதனா ரடியிணைகள் வாழியே. (14)
எம்பார்
தொகு- பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
- பொய்கைமுதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
- மாவளரும் பூதூரன் மலர்ப்பதத்தோன் வாழியே
- மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
- தேவுமெப் பொருளுமதில் திருந்தினான் வாழியே
- திருமலைநம் பிக்கடிமை செய்யுமவன் வாழியே
- பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
- பட்டர்தொழும் மெம்பார்பொற் பதமிரண்டும் வாழியே. (15)
பட்டர்
தொகு- தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்கவந்தோன் வாழியே
- திருநெடுந்தாண் டகப்பொருளைச் செப்புமவன் வாழியே
- அன்னவயல் பூதூர னடிபணிந்தோன் வாழியே
- அநவரத மெம்பாருக் காட்செய்தோன் வாழியே
- மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
- வைகாசி யனுடத்தில் வந்துதித்தான் வாழியே
- பன்னுகலை நால்வேதப் பயன்தெரிவான் வாழியே
- பராசரனாம் சீர்பட்டர் பாருலகில் வாழியே. (16)
நஞ்சீயர்
தொகு- தெண்டிரைசூழ் திருவரங்கம் செழிக்கவந்தோன் வாழியே
- சீமாதவ னென்னும் செல்வனார் வாழியே
- பண்டைமறைத் தமிழ்ப்பொருளைப் பகரவந்தோன் வாழியே
- பங்குனியி லுத்தரநாள் பாருதித்தான் வாழியே
- ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
- ஒன்பதினா யிரவுரையை யோதுமவன் வாழியே
- எண்டிசையும் சீர்பட்ட ரிணையடியோன் வாழியே
- எழில்பெருகும் நஞ்சீய ரினிதூழி வாழியே. (17)
நம்பிள்ளை
தொகு- தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
- திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
- தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
- தாமரைக்கை யிணையழகுந் தடம்புயமும் வாழியே
- பாமருவுந் தமிழ்வேதம் பயில்பவளம் வாழியே
- பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
- நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
- நம்பிள்ளை வடிவழகு நாடோறும் வாழியே. (18)
- காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
- கார்த்திகைக்கார்த் திகையுதித்த கலிகன்றி வாழியே
- போதமுட னாழ்வார்சொற் பொருளுரைப்போன் வாழியே
- பூதூரன் பாடியத்தைப் புகலுமவன் வாழியே
- மாதகவ லெவ்வுயிர்க்கும் வாழ்வளி்ததான் வாழியே்
- மதிளரங்க ரோலக்கம் வளர்த்திட்டான் வாழியே
- நாதமுனி யாளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
- நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே. (19)
வடக்குத்திருவீதிப்பிள்ளை
தொகு- ஆனிதனிற் சோதிநா ளவதரித்தான் வாழியே
- ஆழ்வார்கள் கலைப்பொருளை யாய்ந்துரைப்போன் வாழியே
- தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
- சடகோபன் தமிழ்க்கீடு சாத்தினான் வாழியே
- நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
- நல்லவுல காாியனை நமக்களித்தான் வாழியே
- ஈனமற வெமையாளு மிறைவனார் வாழியே
- எங்கள்வட வீதிப்பிள்ளை யிணையடிகள் வாழியே. (20)
பிள்ளைலோகாசாரியர்
தொகு- அத்திகிரி யருளாள ரனுமதியோன் வாழியே
- ஐப்பசியிற் றிருவோணத் தவதரித்தான் வாழியே
- முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
- மூதறிவ மணவாளன் முன்புதித்தான் வாழியே
- நித்தியம்நம் பிள்ளைபதம் நெஞ்சில்வைப்போன் வாழியே
- நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே
- உத்தமமாம் முடும்பைநக ருதித்தவள்ளல் வாழியே
- உலகாரியன் பதங்க ளூழிதோறும் வாழியே. (21)
திருவாய்மொழிப்பிள்ளை
தொகு- வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
- வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
- ஐயனருண் மாரிகலை யாய்ந்துரைப்போன் வாழியே
- அழகாரு மெதிராச ரடிபணிவோன் வாழியே
- துய்யவுல காரியன்தன் துணைப்பதத்தோன் வாழியே
- தொல்குருகா புரியதனைத் துலக்கினான் வாழியே
- தெய்வநகர் குந்திதன்னில் சிறக்கவந்தோன் வாழியே
- திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே. (22)
மணவாளமாமுனிகள்
தொகு- இப்புவியி லரங்கேசர்க் கீடளித்தான் வாழியே
- எழிற்றிருவாய் மொழிப்பிள்ளை யிணையடியோன் வாழியே
- ஐப்பசியிற் றிருமூலத் தவதரித்தான் வாழியே
- அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்றும் வாழியே
- எப்புவியும் சீசைல மேத்தவந்தோன் வாழியே
- ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
- முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
- மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே. (24)
- செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்துசிறந்து மகிழ்ந்திடுநாள்
- சீருலகாரியர் செயதரு ணற்கலை தேசு பொலிந்திடுநாள்
- மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்
- மாசறு ஞானியர்சே ரெதிராசர்தம் வாழ்வு முளைத்திடுநாள்
- கந்தமலர்ப் பொழில்சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்
- காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களி்ததிடுநாள்
- அந்தமில்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்
- அழகு திகழ்ந்திடுமைப் பசியிற்றிரு மூலம தெனுநாளே. (25)
ஆசாரியர் வாழித் திருநாமங்கள் முற்றும்