ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள்
அப்பிள்ளை
தொகுதிருவாய் மலர்ந்தருளிய
தொகு
ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள் - மூலம்
தொகு- மண்ணுலகத் துள்ளோர்கள் மகிழ்ந்துவாழ மணவாள மாமுனிகளருள் தன்னாலே
- பண்ணருளிச் செயல்விளக்கம் வாழிநாமம் பத்தியுடனிவ் வுலகிற்பயில் வார்கேட்பார்
- விண்ணுலகத் தோர்களினுங் கீர்த்தியுற்று விளங்கியிட மெய்ஞ்ஞான வாழ்வுபெற்றே
- கண்ணனடி யார்களுடன் கலந்துநாளும் காசினியிற் சதிராகவாழ் வார்தாமே.
- வேதத்தின் நுண்பொருளைத் தமிழால் நாளும் விளக்கியிடப் பன்னிருவர் வந்து தோன்றும்
- மாதத்தை அவரவர்க ளுதித்த நாளை வாழ்பதியைக் கலைத்தொகையை மனதில் வைத்துப்
- போதத்தைத் தருந்தமிழால் வாழி நாமம் பூதலத்திற் பேசுகின்றே னிதனைக் கற்பார்
- பாதத்தை யென்முடிமேல் அணியாப் பூண்டு பன்னாளுங் கைகூப்பிப் பணிவேன் யானே.
- போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
- புகழ்பேயார் மழிசையர்கோன் புத்தூரன் வாழியே
- நாதமுனி தொழுங்குருகை நாவீறன் வாழியே
- நற்பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
- ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே
- அருட்கலியன் மதுரகவி யாண்டாளும் வாழியே
- ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே
- இவருதித்த நாள்மாத மெழிற்பதியும் வாழியே.
பொய்கையாழ்வார்
தொகு- செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே
- திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
- வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
- வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
- வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
- வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
- பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
- பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே. (1)
பூதத்தாழ்வார்
தொகு- அன்பே தகளிநூறும் அருளினான் வாழியே
- ஐப்பசியி லவிட்டத்தி லவதரித்தான் வாழியே
- நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
- நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
- இன்புருகு சிந்தைதிரி யிட்டபிரான் வாழியே
- எழின்ஞானச் சுடர்விளக்கை யேற்றினான் வாழியே
- பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
- பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே. (2)
பேயாழ்வார்
தொகு- திருக்கண்டே னெனநூறுஞ் செப்பினான் வாழியே
- சிறந்தஐப் பசிசதயம் செனித்தவள்ளல் வாழியே
- மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
- மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
- நெருங்கிடவே யிடைகழியில் நின்றசெல்வன் வாழியே
- நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
- பெருக்கமுடன் திருமழிசைப் பிரான்தொழுவோன் வாழியே
- பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே. (3)
திருமழிசைப்பிரான்
தொகு- அன்புடனந்தாதி தொண்ணூற் றாறுரைத்தான் வாழியே
- அழகாருந் திருமழிசை யமர்ந்தசெல்வன் வாழியே
- இன்பமிகு தையில்மகத் திங்குதித்தான் வாழியே
- எழிற்சந்த விருத்தம்நூற் றிருபதீந்தான் வாழியே
- முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
- முழுப்பெரு்ககில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
- நன்புவியில் நாலாயிரத் தெழுநூற்றான் வாழியே
- நங்கள் பத்திசாரனிரு நற்பதங்கள் வாழியே. (4)
நம்மாழ்வார்
தொகு- ஆனதிரு விருத்தநூறும் அருளினான் வாழியே
- ஆசிரிய மேழுபாட் டளித்த பிரான் வாழியே
- ஈனமறவந் தாதியெண்பத் தேழீந்தான் வாழியே
- இலகுதிருவாய் மொழியாயிர முரைத்தான் வாழியே
- வானணியுமா மாடக்குருகை மன்னன் வாழியே
- வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
- சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
- திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே (5)
குலசேகரப் பெருமாள்
தொகு- அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியே
- அணியரங்கர் மணத்தூணை யடைந்துய்ந்தோன் வாழியே
- வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
- மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
- அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே
- அநவரத மிராமகதை அருளுமவன் வாழியே
- செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
- சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (6)
பட்டர்பிரான்/பெரியாழ்வார்
தொகு- நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
- நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
- சொல்லரிய வாணிதனிற் சோதிவந்தான் வாழியே
- தொடைசூடிக் கொடுத்தாள்தான் தொழுந்தமப்பன் வாழியே
- செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
- சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
- வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
- வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே. (7)
தொண்டரடிப்பொடியாழ்வார்
தொகு- மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியே
- மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
- தெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
- திருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே
- பண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
- பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
- தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
- தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே (8)
திருப்பாணாழ்வார்
தொகு- உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியே
- உரோகிணிநாள் கார்த்திகையி லுதித்தவள்ளல் வாழியே
- வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
- மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
- அம்புவியில் மதிளரங்க ரகம்புகுந்தான் வாழியே
- அமலனாதி பிரான்பத்து மருளினான் வாழியே
- செம்பதுமை யருள்கூரும் செல்வனார் வாழியே
- திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே. (9)
கலியன்
தொகு- கலந்திருக் கார்த்திகைக்கார்த் திகைவந்தோன் வாழியே
- காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
- நலந்திக ழாயிரத்தெண் பத்துநாலுரைத் தோன்வாழியே
- நாலைந்து மாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
- இலங்கெழுகூற் றிருக்கையிரு மடலீந்தான் வாழியே
- இம்மூன்றி லிருநூற்று மூவொன்பான் வாழியே
- வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
- வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே. (10)
மதுரகவியாழ்வார்
தொகு- சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
- திருக்கோளூ ரவதரித்த செல்வனார் வாழியே
- உத்தரகங் காதீரத் துயர்தவத்தோன் வாழியே
- ஒளிகதிரோன் தெற்குதிக்க வுகந்துவந்தோன் வாழியே
- பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
- பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
- மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
- மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே. (11)
ஆண்டாள்/கோதைநாச்சியார்
தொகு- திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
- திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
- பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
- பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
- ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
- உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே
- மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
- வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. (12)
ஆழ்வார்கள் வாழித்திருநாமங்கள் முற்றும்
தொகுஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்
[[]]
[[]]
[[]]
[[]]