ஆசிரியர்:அஞ்சில் ஆந்தையார்
←ஆசிரியர் அட்டவணை: அ | அஞ்சில் ஆந்தையார் (சங்ககாலம்—) |
இவர் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவராவார். |
பாடிய பாடல்கள்
தொகுசங்க இலக்கியங்களில் இவரது பெயரில் இரண்டு பாடல்கள் உள்ளன.
குறுந்தொகை- 294. நெய்தல்திணை
தொகு- (பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது)
- கடலுட னாடியுங் கான லல்கியுந்
- தொடலை யாயமொடு தழூஉவணி யயர்ந்தும்
- நொதுமலர் போலக் கதுமென வந்து
- முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
- துத்திப் பாந்தட் பைத்தக லல்குற் (5)
- றிருந்திழைத் துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
- தழையினு முழையிற் போகாள்
- தான்றந் தனன்யாய் காத்தோம் பல்லே.
நற்றிணை- 233. குறிஞ்சித்திணை
தொகு- (வரையாது நெடுங்காலம் வந்தொழுக இவள் ஆற்றாளென்ப துணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது)
- கல்லாக் கடுவ னடுங்கமுள் ளெயிற்று
- மடமா மந்தி மாணா வன்பறழ்
- கோடுய ரடுக்கத் தாடுமழை யொளிக்கும்
- பெருங்கன் னாடனை யருளினை யாயின்
- இனியென கொள்ளலை மன்னே கொன்னொன்று (5)
- கூறுவன் வாழி தோழி முன்னுற
- நாருடை நெஞ்சத் தீரம் பொத்தி
- ஆன்றோர் சென்னெறி வழாஅச்
- சான்றோ னாதனற் கறிந்தனை தெளிமே.
பார்க்க
தொகுசங்க இலக்கியம் ஆசிரியர் அகரவரிசை அடிப்படையில்.