கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
405709Q12987860முடியரசன்முடியரசன்முடியரசன்19201998முடியரசன்கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.