ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/M
M | |
M.A. | ம.வ. (மன வயது) |
machine | இயந்திரம், பொறி |
machinery | பொறியமைப்பு |
macrocosm | பேரண்டம் |
mad | பித்தேறிய, கிறுக்குற்ற |
magazine | சஞ்சிகை, பத்திரிகை |
magic | மந்திரம் |
magnetic | காந்த |
magnitude | அளவு |
main | முதன்மையான, மூல |
maintenance | காப்பாற்றல், பிழைப்பு |
majority | பெரும்பான்மை |
major premise | துணி பொருள் வாக்கியம் |
major term | துணி பொருள் சொல் |
make-believe | பாசாங்கு, பாவனை, நடித்தல் |
make-up | வேடங்கட்டுதல் |
maladjustment | பொருத்தப் பாடின்மை |
maladministration | ஆட்சிக் குளறுபடி |
malady | நோய், பிணி |
malaria | மலேரியா |
male | ஆண் |
malformation | தோற்றக் கேடு, தப்பமைப்பு |
malnutrition | உணவுச் சத்துக் குறை |
malpractice | கெட்ட வழக்கம் |
mammal | பால் உணி, கருப்பையுயிர், பாலி |
mammoth | மிகப் பெரிய |
man | மனிதன் |
management | செயலாட்சி |
manager | செயலர், செயலாட்சியாளர் |
mandate | கட்டளை |
mania | பைத்தியம், வீறு |
manic depression | வீறுச் சோர்வு |
manifest | வெளிப்படை (யான) |
manifest content | வெளிப்படைப் பொருள் |
manifesto | கொள்கையறிவிப்பு |
manifold | பல படியான, பல வகை |
manipulation | கையாளுதல் |
mankind | மனித இனம் |
manner | வகை முறை |
mannerisms | அங்கச் சேட்டைகள் |
manual | கைப் புத்தகம், கையேடு, கை வினை |
manual work | உடலுழைப்பு |
manufacture | உற்பத்தி |
manure | உரம், எரு |
manuscript | கையைழுத்துப் படி |
map | நிலப் படம், தேசப் படம் |
march | அணி வகுத்து நட, எடு நடை, “நட” |
margin | ஓரம், ஓர வரம்பு, விளிம்பு |
mark | மதிப்பெண், குறி, அடையாளம், அமிசம், மார்க்கு |
market | சந்தை, அங்காடி |
marriage | திருமணம், மன்றல், மணம் |
martial | மற, சமர் புரி |
masculine | ஆண்(பால்) |
masculine protest | ஆண் அவாதல் |
mask | முகமூடி, மாற்றுரு |
masochism | வலி வேள் வெறி, துன்பு உண் வேட்கை |
mass | திரட்சி, கூட்டம் |
mass drill | திரள் பயிற்சி, பேரணிப் பயிற்சி |
mass suggestion | கூட்டக் கருத்தேற்றம் |
massage | தசை பிடித்தல், உடம்பு பிடித்தல் |
masses | மக்கள் திரள் |
master | ஆசிரியர், வல்லுநர் |
master-sentiment | தலைமைப் பற்று |
mastication | மெல்லுதல் |
match | பொருத்து, இணை, ஆட்டம் |
matched group | இணை குழு |
matching test | பொருத்தியமைத்தற் சோதனை, இணைத்தற் சோதனை, பொருத்து சோதனை |
mate | தோழன் |
material | பருப் பொருளான |
materialism | பருப் பொருட் கொள்கை, சடக் கொள்கை |
maternal | தாய்மை சார்ந்த, தாய் வழியான |
mathematics | கணிதம் |
arithmetic | எண்ணியல், எண் கணிதம் |
algebra | அல்சிப்ரா |
calculus | கால்குலஃச் |
geometry | வடிவ கணிதம் |
trigonometry | திரிகோணமிதி |
mating | கூட்டம், இணைவிழைச்சு, கலவி |
matriarchy | தாய் வழி மரபு, பெண் ஆட்சி |
matriculation | பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு |
matrix | கருப்பை, பிறப்பிடம் |
matron | அரிவை, மேற்பார்வை யிடுபவர் |
matter | பொருள் |
maturation | முதிர்ச்சி, முதிர்வடைதல், பக்குவமடைதல் |
maturity | முதிர்வுப் பருவம் |
maxim | முது மொழி, மேற்கோளுரை |
maximum | மீப்பெரு |
maze | சிக்கலறை |
meal | உணவு |
mean | இடை |
arithmetic | எண்ணியல் இடை, எண் கணித இடை. |
geometric | வடிவ கணித இடை |
harmonic | இசை இடை |
weighted | நிறை கொண்ட இடை |
meaning | பொருண்மை |
meaningful | பொருள் செறி |
measles | தட்டம்மை, மணல்வாரி |
measure | அளவு, படி, அளவிடு |
measurement | அளவீடு |
mechanic | எந்திரத் தொழிலாளி |
mechanical | புற அமைப்பைச் சார்ந்த, இயந்திர, பொறி- |
mechanism | பொறி நுட்பம் |
mechanistic | சடப் பொருள் சார்ந்த |
mechanize | பொறி மயமாக்கு |
medal | பதக்கம் |
medallion | பெரும் பதக்கம் |
median | மைய நிலை |
mediate | இணக்கு |
medical | மருத்துவ |
medicine | மருத்துவம், மருந்து |
medieval | இடைக் காலத்திய |
mediocre | மட்டமான |
meditation | ஆழ்ந்து நினைத்தல் |
medium | ஊடகம், ஊடு பொருள், நடு வாயில் |
medium of instruction | கல்வி வாயில் |
medulla | முகுளம், முகிழி |
meet | சந்தி, சந்திப்பு |
meeting | கூட்டம் |
melancholia | அழுங்கு நோய் |
melancholic person | வியாகுலன் |
melody | பண், இசையினிமை, இன்னிசை |
member | உறுப்பு, உறுப்பினர் |
membership | உறுப்புரிமை |
membrane | சவ்வு, படலம் |
memorandum | நினைவுக் குறிப்பு |
memorial | நினைவுச் சின்னம் |
memoritor system | பாராமற் சொல்லும் முறை |
memorize | உருப் போடு |
memory | ஞாபகம், நினைவு |
immediae | உடனடி நினைவு |
logical | தொடர்புறு நினைவு |
mechanical | தொடர்பில் நினைவு, கிளிப் பிள்ளைப் பாடம், நெட்டுரு |
racial | இன வழி நினைவு |
span | நினைவு வீச்சு |
menace | பேரிடர் |
mend | திருத்து, சரிப்படுத்து |
Mendelion variation | மெண்டல் வேறுபாடு |
meningites | மூளை உறை அழற்சி |
mensuration | உரு அளவையியல், அளத்தல் |
mental | மன |
mention | குறிப்பிடு, கூறு; குறிப்பீடு, கூற்று |
merit | சிறப்பியல்பு, மதிப்பு |
mesmerism | வசிய வித்தை, மன வசியம் |
message | தூது, செய்தி, தகவல் |
metabolic disease | உணவொட்டா நோய் |
metabolism | உயிர்ப் பொருள் மாறுதல், உயிரிழை மாற்றம் |
metaphor | உருவகம் |
metaphysics | நுணுக்க ஆராய்ச்சியியல், நுண் ஆய்வியல் |
meteorology | வானிலையியல் |
method | முறை |
analytic | பகு முறை |
anecdotal | வாழ்க்கைத் துணுக்கு முறை, தனி நிகழ்ச்சி முறை |
biographical | வரலாற்று முறை |
clinical | மருத்துவ முறை |
comparative | ஒப்பு முறை |
deductive | பகுத்தறி முறை |
developmental | வளர்ச்சி முறை |
direct | நேர் முறை |
dogmatic | கொண்டது நிறுவு முறை |
dynamic | இயக்க முறை |
genetic | தோற்ற முறை, உற்பத்தி முறை |
heuristic | கண்டறி முறை |
indirect | மறைமுக முறை |
interview | பேட்டி முறை |
look and say | பார்த்துச் சொல்லும் முறை |
objective | புற வய முறை |
of error | பிழை முறை |
of limits | எல்லை முறை |
of mean | சராசரி முறை |
part | பகுதி முறை |
pathological | நோய் முறை |
play | விளையாட்டு முறை |
psychiatric | ம ன மருத்துவ முறை |
psychological | உளவியல் முறை |
part | பகுதி முறை |
part progressive | பகுதி முன்னேற்ற முறை |
question and answer | வினா விடை முறை |
reductio ad absurdum | பிழைக்கு ஒடுக்கு முறை |
sentence | வாக்கிய முறை |
spiral | சுருள் முறை |
synthetic | தொகு முறை |
teaching | கற்பிக்கும் முறை |
trial and error | தட்டுத் தடுமாறு முறை, பட்டறி முறை |
whole | தொகுதி முறை, முழுமை முறை |
methodology | முறையியல் |
metonym | ஆகு பெயர் |
metre | மீட்டர் |
microcosm | பிண்டம், சிற்றண்டம் |
microscope | உருப் பெருக்காடி, நுண் நோக்காடி |
midday meal | நண்பகலுணவு |
middle | இடை, மைய |
middle ear | நடுச் செவி |
migration | இடம் பெயர்தல், குடி பெயர்தல் |
emmigration | குடியேற்றம் |
immigration | குடியிறக்கம் |
military | போர்—; படை— |
mill | மாவாலை |
millenium | நல்லூழிக் காலம் |
millibar | கீழ் ஆயிர அமுக்க அளவு |
mimesis | மனச் சேமிப்பு |
mimicry | போலிப் பகர்ப்பு |
mind | மனம், உள்ளம், கருத்து |
mine | சுரங்கம், கருவூலம்; எனது |
miniature | சிற்றுருவம், சிற்றுருவ |
minimum | மீக்குறைந்த; மீக்குறைவு |
ministerial | அமைச்ச, ஊழிய |
minor | சிறிய, இளைய, குறும் |
minor premise | பக்க வாக்கியம் |
minor term | பக்கச் சொல் |
minority | சிறுபான்மையோர் |
minus | கழித்தல், குறைவான (க) |
minute | நிமிடம் |
minutes | நடவடிக்கைக் குறிப்பு |
mirror drawing test | ஆடி வரை சோதனை |
misappropriation | கையாடல் |
misbehave | நெறி தவறி நட |
miscellaneous | நானா வித |
misconduct | ஒழுக்கத் தவறு, தீய நடக்கை |
misfit | பொருந்தான் |
misinterpret | தவறுரை, தவறுணர் |
mislead | தப்பு வழி காட்டு |
misnomer | தவறான வழக்கு |
mission | சமயச் சங்கம் |
missionary | சமயப் பரப்பாளர் |
mis-spell | எழுத்துப் பிழை செய் |
mistake | தவறு, குற்றம் |
misuse | தவறாக வழங்கு, தப்பு வழக்கு |
mixed diet | கலப்புணவு |
mixed school | கூட்டுப் பாடசாலை |
mneme | பதிவு நிலை, உயிர்ச் சேமிப்பு |
mnemonics | நினைவுக் குறிப்பீடு, ஞாபக சூத்திரம், நினைவுச் சங்கேதம் |
mob | கும்பல் |
mobility | எளிதியக்கம், நிலையின்மை |
mobilize | படை திரட்டு, திரட்டு |
mock-parliament | போலிச் சட்ட சபை, போலிப் பார்லியமெண்டு |
modal curve | வழக்கிடைப் பாதை |
mode | வழக்கிடை, முகடு |
bi-modal | இரு முகட்டு |
multi-modal | பல் முகட்டு |
uni-modal | ஒரு முகட்டு |
model | மாதிரி உருவம் |
moderate | மட்டாக்கு, நடுத்தர |
modern | தற்கால |
modicum | சிறு அளவு, எள்ளளவு |
modity | மாற்று, மட்டுப்படுத்து |
modulation of voice | குரல் அடக்கம் |
momentum | உந்தம் |
monarchy | முடியரசு |
monastery | மடம் |
monastic | மடம் சார்ந்த |
monasticism | மடம் சார் கொள்கை |
monetary | பண |
monger, information | செய்தி வணிகன் |
monism | ஒரு பொருட் கொள்கை |
monitor | சட்டாம் பிள்ளை |
mono | ஒரு, ஒற்றை |
monograph | ஒரு பொருட் கட்டுரை |
monomania | பீடிப்புப் பித்து |
monopoly | தனி உரிமை |
monolony | அலுப்பு, தொண தொணப்பு. |
monsters | குறைப் பிறவிகள் |
monthly | திங்களிதழ், திங்கள் வாரி, மாதாந்த |
monument | நினைவுச் சின்னம் |
mood | தற்கால மன நிலை, உட்பாட்டு நீட்சி |
moral | அற |
moral habits | அற நெறிப் பழக்கங்கள் |
morale | மனவுறுதி, ஒழுக்கவுறுதி |
morbid | நோய்த் தன்மையுள்ள |
mores | குழுப் பொது நெறி, “மோர்” |
morons | பேதையர் |
morphology | உறுப்பமைப்பியல் |
mortality | இறப்பு(த் தன்மை) |
mosque | மசூதி |
motion pictures | அசைவுப் படங்கள், சினிமா |
motion study | இயக்க ஆராய்ச்சி |
motivate | ஊக்குவி |
motivation | ஊக்குவித்தல், ஊக்கு நிலை |
motive | ஊக்கி |
primary | முதனிலை ஊக்கி |
secondary | வழிநிலை ஊக்கி |
motor | இயங்கும் (விம்பம்), இயக்க |
mould | அச்சு, வார்ப்பு |
mount | பதி, (சட்டத்தில்) ஏற்று |
movement | இயக்கம், அசைவு |
movies | அசைவுப் படங்கள் |
mucous membrane | சிலேட்டுமப் படலம் |
muddle | குழப்பு |
multi-lateral schools | பல் நெறிப் பள்ளிகள் |
multi-purpose schools | பல் நோக்குப் பள்ளிகள் |
multi-modal | பல் முகட்டு |
multiple | மடங்கு |
multiple choice | பல் விடையில் தேர்வு |
multiple personality | பலவாய் ஆளுமை |
multiplication | பெருக்கல் |
mumps | மன்னைக் கட்டி, பொன்னுக்கு வீங்கி |
mundane | உலகியலான, இம்மைக்குரிய |
mural, intra | எல்லைக்குள், பள்ளிக்குள் |
muscle | தசை |
involuntary | இயங்கு தசை |
voluntary | இயக்கு தசை |
muse | கலை, கலைத் துறை |
museum | பொருட்காட்சிச் சாலை |
music | இசை |
mutation | புதுமையாக்கம், திடீர் மாறுதல் கொள்கை |
mute | ஊமையான, ஊமை |
mutt | மடம் |
mutual | ஒன்றுக்கொன்றான, பரஃச்பர |
mutual choice | இரு வழித் தேர்தல் |
myopia | கிட்டப் பார்வை |
mystery | மறை பொருள் |
mystic | உள்ளுணர்வுடையோன் |
mysticism | உள்ளுணர்வுக் கொள்கை |
myth | புராணம் |
mythology | புராணக் கதை, பழங்கதை, புராணவியல் |