ஆடரங்கு/விளம்பரம்



கலைமகள் வெளியீடுகள்

குங்குமச் சிமிழ்

விலை ரூ.2-0-0

சிறுகதைத் தொகுதி - ஆர்வி

"இன்று தமிழ்நாட்டில் சுயமாகவும் சுவையாகவும் சிறுகதைகள் எழுதும் ஒரு சிலருள் ஸ்ரீமான் 'ஆர்வி' அவர்கள் சிறப்புற விளங்குகிறார். அவர் தமிழ் மக்களின் நடையுடை பாவனைகள், உள்ளத்துணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் ஆகியவற்றை ஊடுருவி நோக்கியிருப்பவர். அவருடைய நோக்கில் பட்டவையாவும் அவர்தம் கற்பனை, உணர்ச்சிகள் ஆகிய உலையில் புத்துருவும் புதுமெருகும் பெற்று இனிய இலக்கிய வடிவம் பெறுகின்றன. அவருடைய இனிய நடை வேறு அவற்றிற்குச் சுவையூட்டுகின்றன. இந்தத் தொகுதியிலுள்ள பன்னிரண்டு கதைகளும் இவ்வண்ணமாகவே இனிமையுடன் விளங்குகின்றன.... ஒவ்வொரு கதையையும் ஜீவனும் உணர்ச்சியும் ததும்பும் பாத்திரங்களின் மூலம் துடிக்கும் ஜீவ நடையில் சித்திரிக்கிறார் ஆர்வி. ஆர்வி இயற்கையாக எழுதுகிறார். இனிமையாக எழுதுகிறார்.அவர் கலைஞர்,"

—சுதேசமித்திரன்: 28-4-33.

அணையா விளக்கு விலை ரூ.4-0-0

நாவல் - ஆர்வி

சந்தானம் பணக்காரன், அழகன், திடசித்தன், அறிவாளி, வகுப்பைக் கடந்து அவனுடைய அன்பு, விழி வீசுகிறது. சிப்பியிலே உதித்த முத்தைப்போல உள்ளழகும் வெளியழகும் உருவெடுத்த பெண்ணரசி பாப்பா, அவனை ஆட்கொள்கிறாள், அன்பு வளர்கிறது. ஆனால் ஊர் நகைக்கிறது; சுவரிலே கிறுக்குகிறது. ஆயினும் அவன் உறுதிகொண்டு அவளோடு வாழ்க்கை நடத்துகிறான். பழமையான ஆசார அநுஷ்டானங்களில் தோய்ந்த தாய் ஒரு பக்கம்; பொன்னும் மணியுமாக விளையக் காத்துக்கிடக்கும் கிராமம் ஒரு பக்கம்; இடபேதமான காதல் ஒரு பக்கம்; எதிர்ப்பு ஒரு பக்கம். இப்படிப் பல சக்திகள் அவனை அலக்கழிக்கின்றன. நிகழ்ச்சிகள் ஓடுகின்றன. குணசித்திரம், வியங்கியமான நடை, உணர்ச்சிகளைப் போஷிப்பது, புரட்சிகரமான லட்சியவாதத்தை 'ரியலிச'த்தோடு கலவை செய்திருப்பது - இத்தனையையும் அமிதமான வெற்றியுடன் ஆர்வி இந்த நாவலில் சாதித்திருக்கிறார். அரிய சாதனை; பெரிய சாதனை.


கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை-4.



"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/விளம்பரம்&oldid=1526862" இலிருந்து மீள்விக்கப்பட்டது