ஆடும் தீபம்/புதுமையான இந்த நாவல்

புதுமையான இந்த நாவல்

தனி யொருவரால் புனைந்து எழுதப் பெற்றதல்ல.

அல்லது ஒருவருடைய கருத்தை மையமாகக் கொண்டு பலர் எழுதியது மல்ல,

ஒருவர் கதையைத் தொடங்கினார்.

மற்றும் பலர் கதையை அவரவர் கருத்தோட்டத்தின்படி வளர்த்தார்கள்.

கடைசியாக இம் மாதிரி முறையில் ஒரு கதை நிறைவு பெற்றால், எந்த அளவு சிறப்புப் பெறும் என்று நினைத்துப் பார்த்து வழி வகுத்த நண்பர் திரு பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் முடித்துள்ளார்கள்.

பதினொரு கதை மன்னர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் பழகி உயிரூட்டி யிருக்கிறார்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறப்புடன் திகழ்கிறது.



படிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் சிறந்த நாவலாக பரிமளித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லுகிறோம்.

இந்தப் புது முறையான நாவலை எழுதிச் சிறப்பித்த எழுத்துலகச் சிற்பிகளுக்கும், ‘உமா’ பத்திரிகை உரிமையாளர்களுக்கும், சிறப்பாக இந்நூலைப் பதிப்பிக்கத் தந்த பூவை.எஸ். ஆறுமுகம் அவர்களுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியதாகும்.

வீர. சிவராமன்



இந்த நாவலின்
ஆசிரியர்கள்:

வாசவன்
வல்லிக்கண்ணன்
ஸரோஜா ராமமூர்த்தி
கிருஷ்ணா
ஸி.ஆர்.ராஜம்மா
நெடுமாறன்
எல்லார்வி
ஏ. எம். மீரான்
சி.சு.செல்லப்பா
பி.வி.ஆர்
பூவை எஸ். ஆறுமுகம்