ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பிராமணியத்திற்கு இறுதி எச்சரிக்கை

பிரமணியத்திற்கு இறுதி எச்சரிக்கை!

பிராமணியம் இந்த நாட்டைக் கெடுத்ததுபோல் வேறு எந்த ஆற்றலும் எந்த நாட்டையும் கெடுத்துவிடவில்லை. ஒவ்வொறு தனி மாந்தனும் இச்த நாட்டில் பிராமணியத்தால் சிதைக்கப்பட்டிருக்கின்றான். அதன் கொடுமைப்பிடியில் சிக்கிய ஒவ்வொருவனும் தன்மானத்தை இழந்திருக்கின்றான்; அறிவை விலை போக்கியிருக்கின்றான்; தன் வாழ்க்கையை ஒரு நாயைப் போலும் பன்றியைப் போலும் நடத்தியிருக்கின்றான். ஏறத்தாழ ஈறாயிரத்தைந்நூறு ஆண்டுகளாய்த் தமிழன் அதில் சிக்குண்டு தன்னையே இழந்திருக்கின்றான். அரசியல் துறையிலும் சரி, குமுகாயத் துறையிலும் சரி, பொருளியல் துறையிலும் சரி, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் எந்த வீழ்ச்சிக்கும் பிராமணியமே முழுக் கரணியமாக இருந்திருக்கின்றது. அதன் நச்சுப் பல்லால் கடியுண்டு சிதைந்து போகாத துறையே இல்லை. பெண்ணை, ஆணை, குழந்தைகளை எல்லாரையும் கடித்துக் குதறி, அவர்களின் சதைகளையும் நார் நரம்புகளையும் அணுஅனுவாய்ச் சிதைத்திருக்கின்றது பிராமணீயம்.

வெள்ளைக்காரன் இந்திய மண்ணை விட்டுப்போய் இருபத்து மூன்றாண்டுகள் ஆகியும், இம்மண்ணில் சரிவர அரசியல் மலர்ச்சியோ, பொருளியல் வளர்ச்சியோ எள்ளத்துணையும் ஏற்படவில்லை யென்பதற்கும் பிராமணியமே கரணியம். அது விதைத்த நச்சு விதைகளே இந்நிலத்தில் வேறு எந்த விளையும் ஏற்படா வண்ணம் கெடுத்து வந்திருக்கின்றது. மக்களிடையில் ஒற்றுமை ஏற்பட வழியில்லையென்றால் அதற்கு பிராமணீயம் விதைத்த இன ஏற்றத்தாழ்வுகளைத் தவிர வேறு எந்தக் கரணியத்தையாவது எவராவது காட்ட முடியுமா? மக்களிடையே கல்வி பரவவில்லையென்றால், அதற்குப் பிராமணியம் ஊன்றிய மூடத்தனங்களைவிட வேறு ஏதுக்களை எந்த அறிஞனாகிலும் எடுத்துக்கூற முடியுமா? மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிராமணியத்தைவிட வேறு தடையிருக்க முடியுமா?

எல்லா மக்கள் நிலையினின்றும் தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு, வேறு பிரித்துக்கொண்டு, காப்பமைத்துக் கொண்டு பிராமணியம் முன்னேறியதை பிற இன முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இட்டதை வரலாற்றடிப்படைகளைக் கொண்டு எந்த அறிஞனாகிலும் இல்லை என்று மெய்ப்பிக்க முடியுமா? வானத்தினின்று. பொழிகின்ற மழைக்கும், மண்ணிலிருந்து விளைகின்ற பயிர்க்கும் ‘வருணபகவானும்’ ‘பூமாதேவியுமே’ கரணிய கருத்தாக்கள் என்று பிராமணீயம் இட்டுக்கட்டிப் பேசியிருக்கவில்லையானால் இந்நாட்டில் அறிவியல் வளர்ந்திருக்குமா, வளர்ந்திருக்காதா? அவர்களால் கண்டு காட்டப்பெற்ற ‘சரசுவதிதேவி’ இங்கிருந்த மக்களின் நாவிலும் நெஞ்சிலும் வந்து நின்றாலொழியக் கல்வியருள் கிடைப்பது அரிது என்னுமொரு கருத்தை இந்த பிராமணர்கள் பரப்பியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் எத்துணையளவு கல்வி முன்னேறியிருக்கும் பணம் பெருத்தவனாகவும் பஞ்சையாகவும் ஒருவன் வாழ்வதற்கு அவனவன் முற்பிறவியிலே செய்த வினைகளே கரணியமென்றும், அதற்கு ‘இலட்சுமி’யின் (இந்தச் சரசுவதி, இலட்சுமி போன்ற கற்பனைக் கடவுள்களைக் ‘கலைமகள்’ என்றும், தூயதமிழ்ப் பெயர்களாகக் குறிப்பிட எனக்கு மனம் வரவில்லை.) கடைக் கண் அருள் வேண்டும் என்று இந்த ஆரியப் பார்ப்பனர் பிதற்றியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் பொதுவுடமை பூத்திருக்குமா? பூத்திருக்காதா? இப்படிப்பட்ட பிராமணியப் பூசல்களை இன்னமும் இந்த நாட்டில் வைத்துக்கொண்டு, அவற்றை ஆண்டுதோறும் தவறாமல் நினைவூட்டிக்கொண்டு, மேனாடுகளைப்போல் இந்த நாட்டில் கல்வி வளரவில்லை, செல்வம் செழிக்கவில்லை, பொதுவுடைமை பூக்கவில்லை என்று கூறித்திரியும் மடயர்களை, மடயர்கள் என்று சொல்வதால் என்ன பிழையேற்பட்டுவிட்டது என்று எவனாவது கூற முடியுமா?

பிறந்து கொப்பூழ்க்கொடி அறுபடும் நேரத்திலிருந்து, இறந்து மண்ணைப் போட்டு மூடும்வரை, இங்குள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் மேல் பிராமணியம் எவ்வளவு ஆட்சி செலுத்தி வருகின்றது என்பதை, இந்த நாட்டின் நடைப்போக்கை அன்றாடம் தன் விருப்பம் போல் மாற்றி மகிழும் இந்திரா காந்தி முதல், சென்னைத் தியாகராய நகர் சாய்க்கடையில் கிடந்து நெளியும் புழு வரை, எவராகிலும் மறுத்துரைக்க முடியுமா? எத்தனை யெத்தனைச் சடங்கு சாங்கியங்கள்? எத்தனை யெத்தனைக் கழிப்பு, கருமாந்திரங்கள்? எத்தனை யெத்தனைப் பூசனை, புனைவுகள்? எத்தனை யெத்தனை விழா, வேடிக்கைகள்? கடவுள்கள் என்ற பெயரால் எத்தனை யெத்தனைக் கொண்டைத் தலைகளும், மொட்டைத் தலைகளும், பம்பைத் தலைகளும், காவி உடைகளும், கமண்டலங்களும்? இவற்றுக்கெல்லாம் என்ன விளக்கம், என்ன விளைவு, என்று இந் நாட்டின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு, ஒருபுறம் பூரிசங்கராச்சாரிகள், காஞ்சி காமகோடிகள் முதலியோர்களின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டே, ஒருபுறம் கால்சட்டை குப்பாயத்துடன் உருசியா முதலிய பொதுவுடைமை நாடுகளை வலம்வந்து கொண்டிருக்கும் கிரி முதலியோர் கூற முடியுமா? இவற்றால்தான் இந்தியா முன்னேற முடியும் என்று உறுதிகூற முடியுமா? இந்தியாவில் உள்ள கோயில் கோபுரங்களே, அவற்றுள் செருகியிருக்கும் வேல்கள், சூலங்களே இந்தியப் படைகளுக்குப் போதுமென்றால், அவர்கள் கைகளில் ஏன் வெடிகுண்டுகளும் வேட்டெஃகங்களும்? இவற்றிற் கெல்லாம் பிராமணியப் ‘பட்டாள’ப் படைத்தலைவர் இராசாசி விடை கூறுவாரா? இவை யெல்லாம் என்ன மூடத்தனங்கள்? எத்தனை வகைப் புரட்டுகள்? இவற்றில் கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் எவ்வளவு? சொத்துகள் எவ்வளவு? இந்தக் கோயில் பெருச்சாளிகளுக்குண்டான விளைநிலங்கள் எவ்வளவு? இவை யெல்லாம் ஏன் இந்தப் பொதுவுடைமைக்காரர்களின் கண்களிலும், ‘நக்சல்பாரி’களின் கைகளிலும் படவில்லை?

இராமாயணப் பாரதக் கதைகளை எழுதியும், சொல்லியுமே இராசாசிகளும், வாரியார்களும் இந்த நாட்டில் பிழைத்துக்கொள்ள முடியும்! ஆனால் இந்த மண்ணில் உள்ள புழுவொடு புழுவாய் நெளிந்து கிடக்கும் ஒரு விறகுவெட்டியும், செருப்புத் தைக்கும் ஏழையும் அப்படிப் பிழைக்க முடியுமா? அவர்களும் அவர்கள் பெண்டு பிள்ளைகளும் என்றென்றைக்கும் அந்தப் ‘பெரிய'வர்களின் கால்களைப் பிடித்துத் தானே பின்ழக்க வேண்டி உள்ளனர் அவர்கள் கண்ட கடவுள்களெல்லாம் அந்த இரும்புக் கோடரிகளும், எருமைத் தோல்களுந் தவிர வேறு எவை? அவர்கள் அப்படியே இருப்பதைத் தானே இராசாசிகளும், வாரிகளும், பூரிகளும் விரும்புகின்றன? இல்லையென்றால் அவர்களை வாழ்விக்க அல்லது குமுகாயத்தின் மேல்நிலைக்கு அவர்களை உயர்த்த இவர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் எவை? இராமாயணமும் மகாபாரதமுந் தாமா? அவற்றைப் படித்தாலும் படிக்கக் கேட்டாலும் அவர்கள் முன்னேறி விடுவார்களா? இராசாசியும், காமகோடியும் கூறும் ‘ஆன்மீக’மும், ‘பக்தி’யும் அவர்களுக்கு எந்த வகையில் கைகொடுத்துதவும்? அல்லது இதுவரை உதவின? இவற்றைப் பற்றியெல்லாம் ஏன் இவர்கள் தங்கள் ‘கல்கி’களிலும் ‘ஆனந்தவிகடன்’களிலும், ‘துக்ளக்’களிலும் எழுதித் தீர்க்கவில்லை? ‘பார்ப்பான்’ என்றாலோ ‘ஆரியன்’ என்றாலோ கீழ்ப்பாய்ச்சிக்குமேல் ஒரு தார்ப் பாய்ச்சை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும் இவர்கள், இராமாயணமும் மகாபாரதமும் பகவத்கீதையுந்தாம் இந்த நாட்டை முன்னுக்கு கொண்டுவரும் என்றால் துணிந்து வெளிப்படையாக ‘ஆம்’ என்று அவர்கள் அச்சுப்பொறியில் அச்சுப்போட்டுக் காட்டட்டும். இல்லையானால் ‘இல்லை’ என்று வெளிப்படையாக எழுதிக் காட்டட்டும்.

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தமிழன் அடிமையாகவே இருந்தான்; இன்னும் இருப்பான்; அவன் அடிமடியும் நெஞ்சாங்குலையும் என்றென்றைக்குமே நம்முடையவைதாம்; எனவே அவன் நெஞ்சில் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் விதைப்போம்; அவற்றின் விளைவை அவன் அடிமடியிலிருந்து அறுப்போம்’ என்று ஆரியப் பார்ப்பனர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் இந்தத் தலைமுறையைத் தங்கள் இறுதித் தலைமுறையாக எண்ணிக் கொள்ளட்டும். இப்பொழுதுள்ள வீடனத் தமிழர்களையே தங்கள் இறுதி அடிமைகளாகக் கருதிக் கொள்ளட்டும் இல்லையெனில் இனிமேலாகிலும் தங்கள் மதக் குப்பை, கூளங்களான ‘வேத’ ‘புராண’ங்களையும், ‘இராமாயண, மகாபாரதங்’களையும் எடுத்துக் கொண்டு போய் இலெனின் கிராடிலோ, கென்னடி முனையிலோ குவித்துக் கொளுத்தட்டும். அந்தச் சாம்பலை ‘வால்கா’விலும் பசிபிக்கிலும் கரைத்து விடட்டும். ஏனென்றால் இந்தச் சாம்பல் எருக்கூட – தமிழக மண்ணின், அல்லது இந்திய மண்ணின் விளைச்சலைக் கெடுத்துவிடும்.

இங்குள்ள ஆரியப் பார்ப்பனர்களை எவரும் வெறுக்கவில்லை. அப்படி இங்குள்ளவர்களில் எவரும் முழுக்க முழுக்க, நூற்றுக்கு நூறு ஆரியர்களும் இல்லை. அவர்கள் நாடிநரம்புகளில் ஒடிக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க ஆரிய அரத்தமும் இல்லை. அவற்றில் பண்டைத் தமிழர்களின் அரத்தமும் கலந்து ஒடுகின்றது. எனவே நாங்கள் வெறுப்பது, குறைகூறுவது, திருந்திக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவது ஆரியத்தை, ஆரியப் பார்ப்பனியத்தை – இன்னும் தெளிவாகவும் சரியாகவும் சொல்வதானால் பிராமணியத்தை! ஆமாம், படைப்புக் கருத்தா(!)வான பிரமனின் முகத்தில் உள்ள கருவாயினின்று

புறப்பட்டார்களாமே, அந்த உயிரினங்களின் கொள்கை – கோட்பாடுகளை, அப்படியாக அவர்கள் எழுதி வைத்துக்கொண்டு ஏமாற்றிவரும் ‘வேத’, ‘புராண’ ‘இதிகாச’ விளக்கங்களை! அவற்றால்தான் பண்டைத் தமிழன் இடுப்பொடிக்கப்பட்டான்; அவற்றால்தான் அவன் மனைவி, மக்கள், பிறங்கடைகள் ஆகிய யாவரும் என்றென்றும் மீளா அடிமைகளாக விலைபேசப்பட்டனர். அவற்றில்தான் தமிழர்களின் அடிமைப் பட்டயமே தீட்டிவைக்கப் பெற்றுள்ளது.

அந்த ‘அவை’ இருக்கும்வரை தமிழர்கள் ‘பிராமணர்கள்’ எனப்படுவோரைத் தங்களின் புலத்தை வேறுக்க வந்தவர்களாகத் தான் கருதிக்கொள்ள முடியும். தங்களின் வாழ்க்கைப் பகைவர்களாகத் தான் எண்ணிக் கொள்ள முடியும். தங்கள் முன்னோர்களைப் பழிவாங்கியவர்களாகத்தான் நினைத்துக் கொள்ள முடியும். தங்கள் பின்னோர்களையும் பழிவாங்கக் காத்திருக்கும் கழுகுகளாகத்தான் பேசிக்கொள்ள முடியும். இவ்வியல்பான போக்கிலிருந்து மாறுபடும் தமிழ் உடம்புகளைத் தமிழ் மறவனுக்கோ தமிழ் மறத்திக்கோ பிறந்தவையாகக் கருத முடியாது, ஒருவேளை அவ்வுடம்புகளின் தந்தையோ, அதைப் பெற்ற பாட்டனோ அல்லது அதையும் பெற்ற பூட்டனோ ஆரியனாக அல்லது ஆரியப் பார்ப்பானாக இருந்திருக்கலாம் என்று கருதிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இவற்றையெல்லாம் எழுதுகையில் இவற்றைப் படிக்கப் போகும் ‘அவர்’களின் உள்ளக் கொதிப்பு என்ன என்பதை நான் உணர்வேன். இங்குக் கொட்டப்பெற்ற சொற்கள் எவரெவர் உள்ளங்களைப் புண்படுத்தும், எவரெவர் உயிர்களைக் கொத்தித் தின்னும் என்பதும் எனக்குத் தெரியும். அவை இப்பொழுதுள்ள இவ்விந்தியச் சட்ட அமைப்புகளுக்கு எவ்வெவ் வகையில் மாறுபட்டன என்பதையும் நான் அறிவேன். அவற்றால் என்னென்ன அகப்புற விளைவுகள் நேரும் என்பதையும் நன்கு உணர்வேன். இச் சொற்களைத் தூக்கிக் கொண்டு எத்தனை வீடணத் தமிழர்கள் ஆரியப் பார்ப்பன நெஞ்ச அரிப்புகளுக்கேற்பச் சொரிந்து கொடுப்பார்கள் என்பதையும் ஒருவாறு உய்த்துணர்வேன். ஆனால் அவையாவும் அவற்றின் பிராமணியம் என்னையும் என் முன்னோர்களையும் படுத்திய பாடுகளைவிட மிகமிகக் குறைந்தவையே. இக்கால் நானும் என் தமிழர்களும் படும் பாட்டைவிட மிகவும் சிறியவையே! எனவே அவற்றிற்கெல்லாம் நான் விடைகூற. வேண்டும்; அல்லது தண்டனை ஏற்கவேண்டும் என்று நான் அழைக்கப்படும்பொழுதுதான் என்னையும் என் தாய்நிலத்தையும் இந்தப் பிராமணியம் படுத்திவரும் பாடுகளுக் கெல்லாம் விடிவு ஏற்படும் என்று கருதுகின்றேன். எனவே சொற்களை உணர்வு

நெருப்பில் புரட்டி உங்கள் முன் வைக்கின்றேன். கனிவான சொல்லைப் பேசத் தெரியாதவனல்லன் நான்; கண்ணியமாக எழுதி மக்களைக் குளிப்பாட்ட உணராதவனல்லன் நான்; காற்றைப் போலும் நீரைப்போலும் சொற்களைப் பயன்படுத்த என்னால் முடியும். இருந்தாலும் நெஞ்சத்தை மறைத்துப் பேசும் இயல்பு எனக்குச் சொற்களால் புனைந்துரைத்து நல்ல பெயர் தேடிக்கொள்ளுவோர் பார்ப்பனர்களாகவோ அல்லது அவர்களின் பாங்கர்களாகவோதாம் இருக்க முடியும். என்னைப்போல் ஆரியத்தால் நெருக்குண்ட, நசுக்குண்ட ஏழைகளின் கூட்டத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வோரடி மண்ணிலும் ஆரிய நச்சு துவப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு மனத்திலும் ஆரிய நினைவுகள் அலைமோதுகின்றன. தமிழ் கற்றவனாயினும் சரி, அறிவியல் ஆய்ந்தவனாயினும் சரி, மருத்துவ மண்டையாயினும் சரி, வானூர்தி வலவனானாலும் கப்பல் மீகாமனானாலும், படைத் தலைவனானாலும் சரி, எல்லாருடைய நடை, உடை, தொழில், அறிவு, மனைவாழ்வு யாவற்றிலும் ஆரிய நச்சு நன்கு பாய்ச்சப்பட்டுக் கிடக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போன்று ‘நான்கு பக்கமும்’ வேடர் சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல்’ தமிழனின் அகம், புறம், உயிர், உடல் யாவும் ஆரிய வலையால் பின்னப்பட்டுக் கிடக்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பிராமணீயம் அவனை வாட்டி வதைக்கின்றது. பண்டையில் அன்று; இன்றுங்கூட அவனை ‘அது’ நாள்தொறும் கொட்டி வருகின்றது. அச்சு வடிவில் தாளிகைகளாக ‘அது’ விற்கப்படுகின்றது. செய்தி வடிவில் ‘அது’ விளம்பரப்படுத்தப்படுகின்றது. வானொலி உயிர்ப்பில் ‘அது’ பீச்சப்படுகின்றது. பள்ளிப் பொத்தகங்களில், கோயில் குளங்களில் பிராமணியம் தன் நச்சுக் கைகளைப் பரப்பியிருக்கின்றது. ‘இராகு’ காலம் பார்க்காமல் தமிழன் காலெடுத்து வைப்பதில்லை; முழுத்தம் பாராமல் அவன் மனைவியொடு கூடுவதில்லை; பிள்ளையார் சுழியிடாமல் அவன் எழுதத்தொடங்குவதில்லை; ‘நீறு’ ‘நாமம்’ என்ற பெயரால் அவன் நெற்றிகளிலும், ‘கொட்டை’ ‘மணி’ என்ற பெயரால் அவன் கழுத்துகளிலும், பிராமணீயம் நெளிந்து புரள்கின்றது. எல்லாம் வல்ல இறைப் பேராற்றல் ஒன்றுண்டு என்ற தூய அறிவியல் உண்மை, ‘சிவ’மாகவும் ‘மாலி’யமாகவும் ஆரியப் பூச்சுகளால் பல்லாயிரங்கோடி வடிவங்கள் கொண்டு மக்களை மருட்டி

வருகின்றது. பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் திரிக்கப் பெற்று விலைபேசப் பெறுகின்றன. ‘கல்விக்குக் கலைமகள்’ ‘செல்வத்திற்குத் திருமகள்’ – என்று கற்ற தமிழ்ப் புலவர்களும் தூயதமிழ் என்ற பெயரால் ஆரியத்தைப் பறைசாற்றுகின்றனர். அரசினர் சார்பில் வந்திறங்கும் அமெரிக்க, உருசிய, செருமானிய, சப்பானியப் பொறிகளும் இங்குள்ள ஆரியப் பார்ப்பான் ஒருவன் பூசனைகள் செய்த பின்னர்தாம் இயக்கப் பெறுகின்றன. ‘வானியல்’ ஆய்வு ஒருபுறம்; மழைபெய்ய ஆரிய வேள்விகள் ஒருபுறம், சாணியும் சோறும் பிசைந்துண்ணப் பெறுதல் போன்றதொரு நிலையை இவ்விந்திய நாட்டைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. நிலவில் அடி வைத்த காலத்திலேயே மாம்பலத்தில் தான்தோன்றிப் பிள்ளையாரின் கல்படிமம் ஒன்று நிலத்தினின்று வெடித்து வந்ததென்ற புரட்டு நடந்திருக்கிறதென்றால், ‘வேத’ காலத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்று சற்றே எண்ணிப் பார்த்தால் விளங்காமல் போகாது.

இவற்றிற்கெல்லாம் முடிவு என்ன? இவை இப்படியேதான் போய்க் கொண்டிருக்குமா? இப்படிப்பட்ட பிராமணீயத்திற்குத் தமிழன் அடிமைப்பட்டு ஏமாறத்தான் வேண்டுமா? அவனும் அவன் பிள்ளைகளும் என்றென்றும் அடிமைகளாக இத் தமிழ் மண்ணில் பிறந்து பிறந்து சாகத்தான் வேண்டுமா ? இவற்றிற்கெல்லாம் ‘ஆம்’ என்று ஆரியம் விடையிறுக்குமானால், நாம் அவர்களுக்குக் கூற – அல்லது எச்சரிக்க விரும்புவது – “இவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியிட்டாக வேண்டும்; அதுவும் இந்தத் தலைமுறையிலேயே வேண்டும்” என்பதுதான், அதன்படி, அவர்களின் பூணூல் முதலியவை கழற்றப்பட வேண்டும். கோயில் கருவறைகளினின்று ‘பிராமணியம்’ வெளியேற்றப்பட வேண்டும். தமிழ் மொழியினின்று ‘அது’ தூக்கியெறியப்பட வேண்டும். அரசின் காவலிலிருந்து அது விலக்கப்படவேண்டும். ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச’ ‘மநு’ முதலிய நூல்கள் எரிக்கப்பட வேண்டும். அவற்றைப் படிப்பது ‘குற்றம்’ என்று சட்டமியற்ற வேண்டும். இவை அத்தனையும் இந்தத் தலைமுறையிலேயே செய்யப் பெற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறையில் தமிழ் இருக்காது; தமிழனும் இருக்கமாட்டான். எனவே இதனைப் பிராமணீயத்திற்கு விட்ட எச்சரிக்கையாக மட்டும் கொள்ளாமல் தமிழர்க்கு விட்ட எச்சரிக்கையாகவும் கொள்ளுக.

– தென்மொழி, சுவடி : 8, ஒலை : 5–6, 1970