ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
ஆரியப் பார்ப்பனரின்
அளவிறந்த கொட்டங்கள்
— பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பதிப்பு : | முதல் பதிப்பு : தி.பி. 2036 ஆடவை 4 (18.06.2005) |
நூல் தலைப்பு : | ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் |
உள்ளடக்கம் : | கட்டுரை |
ஆசிரியர்: | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
வெளியீடு: | தென்மொழி பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம், 1, வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம், சென்னை - 601 302. |
அச்சாக்கம்: | தென்மொழி அச்சகம், சென்னை - 601 302. |
தாள்: | வெள்ளைத்தாள் |
பக்கங்கள்: | 296 |
அளவு: | மடி(தெம்மி) 1/8 |
படிகள்: | 1000 |
விலை: | உரு 100/- |
பதிப்புரை
பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன.
அவரின் எண்ணமும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் குறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புகளுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன.
விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.
எனவே அவரின் எழுத்து உயிர்ப்பாற்றல் கொண்டவை. உயிர்ப்பிக்கும் உணர்வு சான்றவை.
ஐயா அவர்களின் பாக்கள் எப்படி வீரிய ஆற்றல் சான்றவையோ அப்படி அவரின் உரைநடை நேரிய சீற்றம் கொண்டவை.
எவ்வகை அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் வீறிட்டுப் போர்க்குரலாய் ஒலிப்பவை.
ஆரியக் கொட்டங்கள் குறித்தும், சாதியத் தீமைகள் குறித்தும் ஐயா அவர்களின் உரைவீச்சுகள் எதிரிகளின் குலைகளை நடுங்க வைத்தன.
1995 – தம் வாழ்நாள் இறுதிநாள் வரை ஐயா அவர்களால் எழுதப்பெற்ற ஆரியப் பார்ப்பனர் குறித்த கட்டுரைத் தொகுப்புகள் யாவும் கால வரிசைப்படுத்தப்பட்டு ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் இத் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் தனித் தலைப்பிட்ட கட்டுரை தென்மொழியின் ஆசிரியவுரையில் தொடராக வெளி வந்தவை.
அத் தொடர் கட்டுரை சிறுவெளியீடாக மூன்று மறுபதிப்புகளோடு இதற்கு முன்னர் வெளியிடப் பெற்றிருக்கின்றன என்றாலும், ஆரியப் பார்ப்பனக் கொட்டங்கள் குறித்து ஐயா அவர்களால் எழுதப் பெற்ற அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பாக இந்நூல் இப்போதே முதல் பதிப்பாக வெளிவருகின்றது.
இத் தொகுப்புள் முதல் கட்டுரையாக ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் அமைக்கப் பெற்று, அதைத் தொடர்ந்த கட்டுரைகள் கால வரிசைப்படி நிரல்படுத்தப்பட்டுள்ளன
இவையன்றி, ஆரியப் பார்ப்பனியம் குறித்து எழுதப்பெற்ற ஐயா அவர்களின் பாடல்கள் யாவும் கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுப்புள் உள்ளடக்கப்பட்டதால், இக் கட்டுரைத் தொகுப்புள் இணைக்கப் பெறவில்லை.
பாவலரேறு தமிழ்க்களம் – கட்டுமானப் பணி, அலுவலக அமைப்புப் பணிச் சுமைகளின் அழுத்தத்தால் கடந்த ஈராண்டுகளாக ஐயா அவர்களின் நூல்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய பெரும்பணிகள் இடைநின்று போயின.
இனி, ஐயா அவர்களின் வெளிவராத நூல்கள் அனைத்தும் ஒருசேரவும், வெளிவந்த நூல்களின் மறுபதிப்புகள் அனைத்தும் ஒருசேரவும் படிப்படியாக ஓராண்டுக்குள் முழுமையாக வெளியிடப்பட வேண்டுமான முயற்சி மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது.
தென்மொழி பதிப்பகம் – முன்னெடுத்திருக்கிற இம் முயற்சிக்குத் துணை வேண்டி தென்மொழியில் வேண்டுகை வெளியிடப் பெற்றது.
சிலர் உடனடியாக முன்தொகை செலுத்தியிருந்தனர். அவர்களின் பெருந்துணையைக் கொண்டும், பிற வகையில் கடன்பெற்றும் இந் நூல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றன.
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – எனும் இத்தொகுப்பு நூல் உருவாகப் பெருமளவில் துணைநின்ற பேரன்பு உள்ளங்களுக்குத் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
திருக்குறள்மணி ஐயா புலவர் இறைக்குருவனார், ஐயா புலவர் கு. அண்டிரன், திருவாளர்கள் தென்மொழி ஈகவரசன், குணத்தொகையன் – ஆகியோர் முழுமையாய் இருந்து திருத்தம் செய்து பெருந்துணை நின்றனர்.
அரசி, தமிழ்மொய்ம்பன் – ஆகியோர் காலத்தே கணிப்பொறி அச்சாக்கம் செய்தும், அச்சீடு செய்தும் பணியாற்றினர்.
அவர்கள் அனைவர்க்கும் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.
தமிழ் இன உணர்வாளர்கள் இந் நூலினை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்வதோடு, தமிழின முன்னேற்றத்திற்குப் பெரும் பணியாற்றிடுவதே பாவலரேறு அவர்களின் கருத்தாக்கத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.
தி.பி. 2036, ஆடவை 4
18-6-2005
சென்னை – 601 302 — தென்மொழி பதிப்பகம்
முன்னுரை
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.
தமிழ்மொழியிலும், தமிழர்தம் இலக்கியம், சமயம் முதலிய கலைத்துறைகளிலும், நாகரிகம் பண்பாடு ஆகிய வாழ்வியல் துறைகளிலும் ஆளுமை பெற்று மேம்பட்ட ஆரியப் பார்ப்பனர்கள் அவற்றையெல்லாம் மறைத்துத் திரித்துந் தம்மனவாக்கிக் கொள்ளும் பொருட்டுச் செய்த வகைவரிசைகள் பலப்பல. கெடுத் தொழித்தனவும் எண்ணில.
கோயில் வழிபாடு ஆரியர்க்குரிய தன்று. ஆனால் இன்று கோயில்களெல்லாம் ஆரியக் கூடாரங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ் வழிபாட்டு உரிமைக்குத் தடையாக நின்று வழிமறிப்பவர்கள் அவர்களே. பிராமணன் எவனுக்கும் சமற்கிருதம் தாய்மொழியன்று. ஆனால், ஒவ்வொருவனும் சமற்கிருதமே தன் தாய்மொழிபோல் கருதிக்கொண்டு, அதன் மேல் அளவு கடந்த பற்றுவைத்துக் கொண்டிருக்கின்றான்; அவ்வளவிற்குத் தமிழ் மொழி மேல் வெறுப்பும் கொண்டிருக்கின்றான். இஃதொன்றே ஆரியப் பார்ப்பனரின் மனப்பான்மையை வெளிப்படுத்தப் போதுமானதாகும்.
ஆரியத்தளையை அறுத்தெறிந்து விடுதலை பெறுவதே தமிழினம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணியாகும். ஆரிய அழிம்புகளை வரலாற்றடிப்படையில் நாம் எடுத்துக் கூறும்போது அதனை ஒப்புக் கொள்கின்ற நம்மவர்கள் சிலர், பிராமணர்கள் இப்போது திருந்திவிட்டனர் என்றும், முன்னை நிலைகளையே சுட்டிக்காட்டி அவர்கள்பால் பகைமை பாராட்டக்கூடாது என்றும் ‘பரந்த’ மனத்தவர்போல் பேசுகின்றனர். அவர்கள் திருந்திவிட்டனர் எனக் கருதுவது ஏமாறித்தனமே.
இற்றை நிலையிலும், இந்த நொடியிலும் கூட ‘வர்ணாசிரம (அ) தர்மம்’ ஓரளவு நெகிழ்ந்து விட்டமைக்கு வருந்தி யழுது கொண்டிருக்கின்றனரே யன்றி அந்நிலையை வாழ்த்தி வரவேற்கவில்லை. அதனைக் கட்டுக்குலையாமல் காப்பாற்றவும், தம் மேனிலை வாழ்வை நெகிழவிடாமல் நிலைப்படுத்திக் கொள்ளவும் மற்றையோர் தலையெடுக்க மாட்டாமல் தாழ்ந்து கிடக்கவும் ஆரியப் பார்ப்பனன் ஒவ்வொருவனும் மடிதற்று நிற்கின்றமை அவர்களுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.
திருக்குறளை மாணவர்கள் படிக்கத் தேவையில்லை என்று அறிவுரை (!) கூறிக் கொண்டும், இன்னும் தம் வருணாசிரம வரையறைகளைக் கடைபிடித்துக் கொண்டும், ஆர்.எசு.எசு. இயக்கத்தினைப் பாராட்டி வாழ்த்திக் கொண்டும் சங்கர(ஆசு) ஆரியர்கள் இன்னும் வளமாகவும் நலமாகவும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள்.
‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ என்னும் இந்நூலில் ஆட்சி - அலுவல் துறைகளிலும், தாளிகை(பத்திரிகை), வானொலி, நூற்பதிப்பு முதலிய பல்வேறு துறைகளிலும் இன்றும் நடைபெறும் ஆரிய வல்லாண்மைத்திறம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் பெயர் இடஞ் சுட்டித் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டிருக்கின்றன.
தமிழின விடுதலையிலும் அதன் மேம்பாட்டு முயற்சிகளிலும் ஈடுபடும் மறவர்கட்கு இந் நூல் போர்வாளாகப் பயன்படுவதொன்றாம். தமிழ்மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வார்களென நம்புகின்றோம்.
— புலவர் இறைக்குருவனார்
எண்.
தலைப்பு
பக்க எண்
1. | 11 |
2. | 63 |
3. | 67 |
4. | 75 |
5. | 80 |
6. | 89 |
7. | 96 |
8. | 104 |
9. | 111 |
10. | 118 |
11. | 123 |
12. | 130 |
13. | 138 |
14. | 143 |
15. | 150 |
16. | 166 |
17. | 176 |
18. | 179 |
19. | 187 |
20. | 192 |
21. | 199 |
22. | 205 |
23. | 209 |
24. | 212 |
25. | 215 |
26. | 220 |
27. | 223 |
28. | 226 |
29. | 232 |
30. | 237 |
31. | 240 |
31. | 243 |
32. | 249 |
32. | 252 |
34. | 254 |
35. | 256 |
36. | 261 |
37. | 263 |
38. | 266 |
39. | 270 |
40. | 272 |
41. | 277 |
42. | 281 |
43. | 288 |
44. | 292 |