ஆவூர்கிழார் மகனார் கண்ணகனார்
ஆவூர் கிழார் மகனார் கண்ணகனார்
தொகுஅகநானூறு: 202. குறிஞ்சித் திணை
தொகுஇரவுக்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.
- வயங்குவெள் ளருவிய குன்றத்துக் கவாஅற் வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
- கயந்தலை மடப்பிடி யினனே மார்ப்பப் கயம் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப்
- புலிப்பகை வென்ற புன்கூர் யானை புலிப் பகை வென்ற புன் கூர் யானை
- கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பி கல் அகம் சிலம்பின் கை எடுத்து உயிர்ப்பின்
- னல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன் (5) நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
- குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச் குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கிச்
- சிறுபன் மின்மினி போலப் பலவுடன் சிறு பல் மின் மினி போலப் பலவுடன் ( )
- மணிநிற யிரும்புதற் றாவு நாட மணி நிற இரும் புதல் தாவு நாட
- யாமே யன்றியு முளர்கொல் பானா யாமே அன்றியும் உளர்கொல் பால் நாள்
- ளுத்தி யரவின் பைத்தலை துமிய (10) உத்தி அரவின் பை தலை துமிய
- வுரவுரு முரறு முட்குவரு நனந்தலைத் உரவு உரும் உரறும் உட்கு வரு நனம் தலைத்
- தவிர்வி லுள்ளமொ டெஃகுதுணை யாகக் தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்
- கனையிருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
- தேராது வரூஉம் நின்வயி தேராது வரூஉம் நின் வயின் ( )
- னாரஞ ரரும்படர் நீந்து வோரே. (15) ஆர் அஞர் அரும் படர் நீந்துவோர் ஏ.
- ( )
- குறிப்பு
- இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
- சங்க இலக்கியத்தொகையுள் “ஆவூர் கிழார் மகனார் கண்ணகனார்” பாடிய பாடல் தொகை 1 (ஒன்றுமட்டும்) ஆகும்.