ஆவூர்க்காவிதிகள் சாதேவனார்

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் தொகு

அகநானூறு: 159. பாலைத்திணை தொகு

(பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)

தெண்கழி விளைந்த வெண்க லுப்பின் தெள் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக வொழுகை கொள்ளை சாற்றிய கொடு நுகம் ஒழுகை
யுரனுடைச் சுவல பகடுபல பரப்பி உரன் உடைச் சுவல பகடு பல பரப்பி
யுமணுயிர்த் திறந்த வொழிக லடுப்பின் உமண் உயிர்த்து இறந்த ஒழி கல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடுவி லாடவ (5) வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் ( )
ரணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப் அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி
பல்லான் நெடுநிரை தழீஇக் கல்லெனபல் ஆன் நெடு நிரை தழீஇக் கல் என
வருமுனை யலைத்த பெரும்புகல் வலத்தர் அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி கனை குரல் கடும் துடிப் பாணி தூங்கி
யுவலைக் கண்ணிய ரூன்புழுக் கயருங் (10) உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் ( )
கவலைக் காதல ரிறந்தன யெனநனி கவலைக் காதலர் இறந்தன என நனி
யவலங் கொள்ளன்மா காதலந் தோழி அவலம் கொள்ளன்மா காதலம் தோழி
விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது நறும் பூ சாரற் குறும் பொறைக் குணாஅது
வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் (15) வில் கெழு தடம் கை வெல் போர் வானவன் ( )
மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத் மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தடமருப் பொடிய நூறிக் தொடி உடைத் தட மருப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங் குரூஉக்க ணெடுமதிற் கொடு முடி காக்கும் குரூஉக் கண் நெடு மதில்
சேண்விளங்கு சிறப்பி னாமூ ரெய்தினு சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
மாண்டமைந் துறையுந ரல்லர்நின் (20) ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் ( )
பூண்தாங் காகம் பொருந்துதல் மறந்தே. பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
குறிப்பு
இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா” ஆகும்.

நற்றிணை: 264. பாலைத்திணை தொகு

பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு
வான்தளி பொழிந்த காண்பின் காலை வான் தளி பொழிந்த காண்பின் காலை
யணிகிளர் கலாவ மைதுவிரித் தியலும் அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணிபுரை யெருத்தின் மஞ்ஞை போலநின் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீபெய் கூந்தல் வீசுவளி யுளரவீ பெய் கூந்தல் வீசு வளி உளர
யேகுதி மடந்தை யெல்லின்று பொழுதே ஏகுதி மடந்தை எல் இன்று பொழுதே
வேய்பயி லிறும்பிற் கோவலரி யாத்த வேய் பயில் இறும்பின் கோவலர் யாத்த ( )
வாபூண் தெண்மணி யியம்பு ஆ பூண் தெள் மணி இயம்பும்
முதுக்காண் தோன்றுமெஞ் சிறுநல் லூரே. உதுக்காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே.
( )
குறிப்பு
இப்பாடல் ஈற்றடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா” ஆகும்.
சங்கத்தொகையுள் ஆவூர்க்காவிதிகள் சாதேவனார் பாடிய பாடல் தொகை 2 (இரண்டுமட்டும்) ஆகும்.

பார்க்க தொகு

அகர வரிசையில் சங்க இலக்கியம்