இங்கிலாந்தில் சில மாதங்கள்/டாக்சிகள்

டாக்சிகள்

அது குளிர் நாடு, நம் நாட்டைப் போல் ஆட்டோ ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள், கைவண்டிகள் இவற்றைப் பார்க்க முடியாது. ‘போன்’ செய்தால் டாக்சி வீட்டுக்கு வந்து சேரும். பெண்களும் டாக்சியை ஒட்டு கிறார்கள், பெரிய லாரிகளிலும் பெண்கள் இருந்து ஓட்டுவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டணத்துக்கு மேல் அவர்கள் கை நீட்டி வாங்கியது இல்லை; எந்த எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுவது இல்லை. சைக்கிள், ஸ்கூட்டர்கள் , மோட்டார் சைக்கிள்களும் ஒரு சிலர் வைத்திருக்கின்றனர். எல்லாம் வேகமாகச் செல்லும் இயல்பின. சாலைகளின் நடுவில் நாம் போவது கூடாது; சென்றால் உயிருக்கு ஆபத்து என்றுதான் கூறமுடியும். மெதுவாகக் கார்கள் போவதே கிடையாது. சாலைகளைக் கடக்கும் போது விதிமுறைகளை மீறுவது இல்லை. அதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. அங்கே கார் ஓட்டிப் பழகியவர்கள் இங்கே வந்து ஓட்டுவது மிகவும் கடினம். ஏனெனில் தெருவில் யார் எப்படி நடப்பார்கள் குறுக்கிடுவார்கள் என்று சொல்ல முடியாது, பிளாட்பாரத்தில் நடப்பதே இல்லை; நடக்கும்படி அவை தூய்மையாக இருப்பதும் இல்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாலைகளைக் கடக்கிறோம்.