இங்கிலாந்தில் சில மாதங்கள்/வீட்டுக்கொரு கார்
வீட்டுக்கொரு கார்
அவர்கள் வாழ்க்கை வசதியைக் காக்கிடச் சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வீட்டு முன்பும் ஒரு கார் நிற்கிறது. ஒன்று என்பது சாதாரணம். அதிகமும் நிற்கலாம். நாம் வீட்டுக்கு ஒரு சைக்கிள் வைத்துக்கொள்வது போல அவர்கள் கார் வைத்திருக்கிறார்கள். ஷெட்டில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படவேண்டும் என்பது இல்லை. கார்களை யாரும் திருடமாட்டார்கள்; அவற்றிற்கு ஊறும் விளைவிக்க மாட்டார்கள்; வெளியிலேயே நிறுத்தி வைப்பார்கள், அவரவர் வசதிக்கும் நிலைமைக்கும் ஏற்படக் கார்களின் தராதரம் வேறுபட்டு இருக்கும். எப்படியும் கார் இருக்கும்.