இங்கிலாந்தில் சில மாதங்கள்/தமிழக ஆட்சியின் துணிவு

தமிழக ஆட்சியின் துணிவு

மக்கள் உயிர் வாழ்வுக்கு உறுதுணையாக நிற்பது ஆட்சியின் பொறுப்பு என்ற கோட்பாட்டில் தமிழகம் கால் வைத்துள்ளது. இதைச் செய்யமுடியாவிட்டாலும் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் போதிப்பதை விட அவர்களுக்கு உணவு அளிப்பது ஆட்சியின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவது ஒரு திருப்பு நிலை என்றே கூறலாம். ‘சத்துணவுத் திட்டம்’ நாடு மக்கள் வாழ்வுக்குப் பொறுப்பேற்கிறது. என்ற கோட்பாட்டை ஏற்கிறது என்பது பொருளாகிறது. இங்கிலாந்து தேசத்தில் குழந்தைகளுக்குத் தரும் மானியத் தொகையும், வளர்ந்தவர்களுக்குத் தரும் வாழ்க்கைத் தொகையும் கண்ட பிறகு இந்தத் திட்டம் அவற்றைப் போன்ற ஒன்று என்பதை உணர முடிகிறது. இந்த வகையில் நாம் வளர்ச்சிப் பாதையில் இயங்கி வருகிறோம் என்பதை உணரமுடிகிறது.