இனியவை நாற்பது-மூலமும் உரையும்/தமிழ் வாழ்த்து
நீரார்ந்த உலகமிதில் நிலைத்திருக்கும் மொழிகளுள்ளே
சீரார்ந்த முதல்மொழியாம் சிறப்புறுநல் தமிழ்மொழியே!
உன்னுடைநல் உருமாறி ஒருமொழிநீ பலவானாய்
உன்னுடைய நிலப்பகுதி உயரளவு குறைந்ததுவே.
செந்தமிழே பைந்தமிழே சிலர்நாங்கள் உள்ளோம் நீ
நொந்தழிய விடமாட்டோம் நோன்புகொண்டோம் - வளர்த்திடவே.
ஆளுவோரின் உதவியின்றி அறிவுமிகு பலபுலவர்
சாலவுனை வளர்ப்பரிந்நாள் சான்றுபல இதற்குமுண்டே.
தாயோடு தெய்வமும் நீ தக்கபெருஞ் செல்வமும்நீ
சேய்நாங்கள் உனதுபணி செய்துநனி போற்றுதுமே.
தேனெனவே மிகஇனிக்கும் தீந்தமிழே தெள்ளமிழ்தே
வானளாவ உலகளந்து வாழ்கஎன வாழ்த்துதுமே!
—சுந்தர சண்முகனார்