இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/அரும்பொருள்

அரும்பொருள்

பகலின் விளிம்பை இரவு எந்த இடத்தில்
தொடுகிறதோ,
வெளிச்சம் இருளை எந்த இடத்தின் முகப்பில்
தொடுகிறதோ,
கரைகளின் முத்தத்தை ஒரு கரையிலிருந்து மறு
கரைக்கு அலைகள் எந்த இடத்தில் எடுத்துச்
செல்கின்றனவோ,
அந்த இடத்தில் என்னை நான் கூடுகிறேன்.
ஆழம் காணமுடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து
பொன்ணொத்த குரலொன்று என்னை அழைக்கிறது.
மாலை நேரத்துக் கண்ணீருக்கிடையே உன்முகம்
காண முயல்கிறேன்.
உன்னை பார்த்துவிட்டேன் என்பது கூட கண்களால்

உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

-எ

ன்பின் ஒளியே உலகின் திரண்ட செல்வம், அந்த உலகின் வாயிற் கதவை எனக்காகத் திறந்து வைக்கிறது. ஞாயிற்றின் வெளிச்சம்.

- மின்



விண்மீன்களை எட்டிப் பிடிக்கத் தங்கள் கைகளை உயர்த்தும் குழந்தைகளின் ஆர்வத்தைப் போன்றன குன்றுகள்.

- ப.ப

னி மனிதன் மூலமாக உலகின் உணர்வுகளை வெளிப்படுத்துவதே கலை.

-எ.எ


ங்கள் தங்கள் முயற்சிகளில் தோல்வியுற்ற உலகங்களை முன் நிறுத்தும் எனது உலகத்தை நான் தாங்கி நிற்கிறேன்.

- ப.ப

(எனது வாழ்க்கையும்)நாணல் செடிபோன்று, நம்பிக்கை, வெற்றி, தோல்வி என இடைவெளி காட்டி மிளிரும் பல வண்ணங்கள் கொண்டுள்ளது.

- மின்

மாந்தர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்கள். ஆனால் மாந்தன் கருணை உள்ளம் படைத்தவன்.

-ப.ப

ன்னைத் தன் பணியாளனாகப் பார்ப்பதில்லை இறைவன். யாவருக்கும் பணிபுரியும் தன்னையே என்னில் காண்கிறான் அவன்.

- மின்

ன் கனவுகள் யாவற்றிலும் அசைந்தாடும் அவளுடைய கூந்தலின் நறுமணத்தையே உணர்கிறேன்.

-கா.ப

வாழ்க்கைப் பாதையில் நடைபோட நமக்குத் துணை புரிவது தன்னுணர்வு என்கிற ஒளியே.

-எ.எ

றிவைத் தேடி அலைபவர்களும் உள்ளனர்; செல்வத்தைத் தேடி அலைபவர்களும் உள்ளனர். நான் பாட விரும்புகிறேன். ஆகவே உன் துணையை நாடுகிறேன்.

-மின்

னக்கே உரிய மலர்களை மனிதனின் கைகளிலிருந்தே பரிசாகப் பெறவே இறைவன் காத்திருக்கிறான்.

-ப.ப

ரிக்கரையிலே வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள், தலைவிரித்தாடி இருண்ட வானை மோதி அறைகின்றன. மழையில் நனைந்து அலங்கோலமாய் இருக்கும் சிறகுகளுடன், காகங்கள் புளிய மரக்கிளைகளிலே மௌனமாக வீற்றிருக்கின்றன. ஆற்றின் கீழைக் கரையிலே இருள் இருண்டு வருகின்றன.

-ப.ப

டையிடையே இன்னல்களைச் சந்தித்து நம்பிக்கையைப் புதுப்பித்து முன்னேறும் மாந்தனின் வரலாறே அவனது உலகம்.

-படை

மற்றவர்களின் நுகத்தடிக்கு எனது நெஞ்சம் வளைந்து கொடுக்காமலிருக்கட்டும்.

-எ

னைத்துமே உண்மைதான். உண்மையின் வெளிப்பாடுதான் பேரழகு.

- எ.எ

நீயும் நானும் இரு கரைகள். நமக்கிடையே விரிந்து கிடப்பது பேராழி. எழும்பி நின்று அதைக் கடக்க விரும்புகிறேன் நான்.

- மின்

ம் நெஞ்சங்களில் ஒளியைப் பொழுகிறது வானம்.

-எ.சு

ன் முகத்தின் ஈர்ப்பாற்றல் அத்தனையும் தானாகவே கிட்டியதில்லை என்பதை நான் அறிவேன். நினைவிற்கு எட்டாத ஒரு கூடலின் பின் என் கண்களில் தேங்கியிருந்த கட்டுக்கடங்கா உணர்ச்சி ஒளியை நீ கவர்ந்து கொண்டிருக்கிறாய்.

- நா

ணர்வு நிலையின் விடுதலையே உள்ளொளி வாழ்வு.

- எ.எ

மக்கு நாமே எல்லாமாயிருக்கும் நிலையில், உலகம் நமக்கு அத்தனைச் சிறப்பாகப் படுவதில்லை.

- எ.எ

ருவருமறியாமல் இரவு மலர்களை இதழ் விரிக்கச் செய்கிறது; நன்றியை விடை பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.

-ப.ப

னது வரையறைகளை உண்மை விரும்புகிறது. ஏனெனில், அங்கே அது அழகினைச் சந்திக்கிறது.

- மின்

ளந்தென்றலில்தான் இறைவனது பெரும் பேராற்றல் காணப்படுகிறது; புயல்காற்றில் காணப்படுவதில்லை.

- ப.ப

நான் விடைபெற வேண்டிய நாளில்தான் செங்கதிர் முகில்களிலிருந்து வெளிவருகிறான். இறைவன் கடலைப் போன்று வானம் நிலத்தின் மேல் தன் பார்வையைப் பதிக்கிறது.

- எ

ண்களுக்குக் இமைகள் போல், உழைப்பிற்கு ஓய்வு உரிமையாகிறது.

- ப.ப


ழிவின்மையாகிய நீரூற்றின் களியாட்டமே வாழ்வு.

-எ.எ

ன் நெஞ்சம் வருத்தத்தில் உள்ளது; காரணம் அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பது அதற்குத் தெரியாததே.

- எ


னது சொற்களினாலேயே சிந்தனை உயிர் வாழுகிறது, வளரவும் செய்கிறது.

- ப.ப


கவையும் இறப்பும் என்பதெல்லாமல் உண்மையானால், குழந்தை மனிதனின் நெஞ்சத்திற்கு அத்தனை மகிழ்ச்சி கொணர முடியுமா?

- எ.எ


னது அமைதியான உருவத்தைப் பார்க்கிறேன்.என்னை சுவைத்துக் கொண்டிருக்கும் உன் விழிகளின்மேல் திடீரென்று என் பார்வை விழுகிறது.

- எ


சாலையின் எல்லையிலிருக்கும் ஆலயத்திற்கில்லை எனது காணிக்கைகள். ஒவ்வொரு திருப்பத்திலும் என்னைத் திகைப்பிலாழ்த்தும் சாலையோர குட்டிக்கோவில்களுக்கே எனது காணிக்கை.

-மின்

ன்னைத் துன்புறுத்துவது எது? வெளியில் வர முயலும் என் ஆன்மாவா? இல்லை, வெளி உலகிலிருந்து என் நெஞ்சுக்குள் புகுவதற்காகக் கதவைத் தட்டும் ஆன்மாவா?

- ப.ப

றிவு, உணர்வு இவற்றின் மூலம் பக்குவப் படுத்தப் பட்ட குழந்தையின் குணம் கொண்டது மெய்யறிவு.

- எ.எ

னது உடம்பை வளர்ப்பதற்காக உலகனைத்திலிருந்தும் மகிழ்ச்சி வெள்ளம் ஓடி வருகிறது.

-க.கொ

விண்மீன்கள் யாவையும் என்னில் ஒளிவீசுகின்றன என்பதை நானறிவேன். வெள்ளம் போல் என் வாழ்வில் பீறிடுகிறது உலகம்.

- க.கொ

ஓ, படகோட்டியே, அது தான் திருப்புமிடத்தில் அமர்ந்து கொள். காரணம், எனது படகு விடுதலை பெறத் துடிக்கிறது.

-எ

ப்பலில் இருக்கும் நீர் பளபளக்கிறது. கடலில் உள்ள நீர் கருமை படர்ந்திருக்கிறது.சின்னஞ் சிறிய உண்மைச் சொற்கள் தெளிவாக உள்ளன. பேருண்மையில் அமைதியே குடி கொண்டுள்ளது.

-ப.ப

லியாகிற நெருப்பை அணைப்பதன் மூலம் மனிதன் நலம் பெறுகிறான். நெருப்பின் மேல் ஆட்சி செய்தவன் மூலம், அவன் அறிவொளியை ஏற்றி வைக்கிறான்.

- எ.எ

ன் அன்பிற்குரியவர்களுக்கென நான் விட்டுச் செல்வது சிறிய பொருள்களையே. பெரிய பொருள்கள் யாவருக்கும் உரியவை.

-ப.ப

ருட்டில் குமைந்து கொண்டிருக்கும் என் கொண்டல்களே, ஒன்றை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். செஞ்சுடரை மறைத்தது நீங்கள் தானே.

-மின்

பெண்ணே, நிலத்தைக் கடல் குழ்ந்துள்ளது போல், ஆழமான உன் கண்ணின் வாயிலாக உலகின் நெஞ்சத்தை நீ சூழ்ந்திருக்கிறாய்.

-ப.ப

மாந்தனின் வாயில் ஒவ்வொரு குழந்தையும் தனது குரலை மாறி மாறி எழுப்புகிறது. நிலைத்திருப்பது காலைப்பொழுதின் செய்தி அந்தக் குரலைப் பழுதில்லா மலேயே விட்டு வைத்துள்ளது.

- எ.எ

ல்லைக் கோட்டைத் தொட்டதுடன் முடிவடைவதில்லை உண்மையான குறிக்கோள், எல்லையற்ற ஒரு நிறைவான நிலையைத்தான் குறிப்பிடுகிறது அது.

-மின்

னது அழகான நிழலின் மேலேயே மரம் தன் அன்புப் பார்வையைச் செலுத்துகிறது. ஆனால் அதன் பொருளை மரம் என்றுமே புரிந்து கொள்ள முடியாது.

- மின்

நமது கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதே வாழ்வில் நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு.

-எ.எ

, பெண்ணே, வாழ்வின் இசை உன் சிரிப்பில் புதைந்துள்ளது.

- ப.ப

யர்ந்த மாந்தர்களைக் காணும் இடமெங்கும் தானும் உயர்ந்தவனே என்பதை அறிந்து கொள்கிறான் மாந்தன்.

- எ.எ