இருண்ட வீடு/அத்தியாயம்-21


21

சங்கிலி தேறுதல், தலைவியின் மீறுதல்


சங்கிலி வந்து தலைவியை நோக்கியே
தங்க மான தங்கள் கண வருக்
கிப்படி யெல்லாம் எரிச்சலுண் டாக்குதல்
தப்பா அல்லவா சாற்றுவீர் என்றாள்
உரைத்தது போதும் உட்கார் என்று
தலைவி சொன்னாள் சங்கிலி அமர்ந்தாள்.


மலைக் குரங்கா மனிதரா அவர்தாம்?
கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார்.
ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும்
இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை
சுவரா கல்லா சொல்லுவதைப் பொறுக்க
மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார்
சீச்சி இவரொரு சின்னப் பிறவி
என்றிவ் வாறு பன்றிபோல் உறிமிச்
சென்று சோறுபோடு - என்றாள் தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-21&oldid=1534763" இலிருந்து மீள்விக்கப்பட்டது