இருண்ட வீடு/அத்தியாயம்-22


22

மண்ணெண்ணெய்க் கையோடு சாப்பிடுகிறார்கள்.

சமையல் நன்றாயில்லை என்பதற்குக் காரணம் தோன்றவில்லை.


பையன் நோய் சிறிது படிந்திருந்ததால்
பைய எழுந்து பசிபசி என்றான்!
பைய னுக்கும் பரிமாறி னார்கள்.
தாயும் பிள்ளையும் சரேலென் றெழுந்தே
இட்டமண் ணெண்ணெய்ப் புட்டியை இடறி
எண்ணெய் சாய்ந்ததால் இச்இச் என்றே
இருவரும் கையால் எடுத்துரு வாக்கிக்
கடிது சமையல் கட்டினை அடைந்தார்.


சோற்றில் ஏதும் சுடுநாற்றம் இல்லை
சாற்றி லேதும் தவறே இல்லை
குழம்பில் ஏதும் குற்றமில்லை
அவைகள் அன்று சுவையுடன் அமைந்தன:
அவைகள் அன்று சுவையுடன் அமைந்தன:
அந்த இருவரும் அலம்பாத கையோடு
வந்துட் கார்ந்தார் வழக்கப்படியே.
சோற்றில் ஏதோ சுவை குறைவுற்றது
சாற்றில் ஏதோ தவறு தோன்றிற்றுக்
குழம்பில் ஏதோ குறை தோன்றிற்றுச்
சுவையுடன் அமைந்தவை கவலை விளைத்தன.
வீட்டுக் காரி மிகவும் சினந்து
இவற்றில் இனிமேல் சுவைதனை ஏற்ற
முடியுமா என்று மொழிந்தாள்; மொழிந்ததும்,

என்னா லாவ தினி யொன்று மில்லை
என்று கூறினாள் எதிர்நின்ற சங்கிலி,
உண்டு முடிந்ததும் உள்ள கறியையும்
மீந்த சோற்றையும் வேலைக் காரிகள்
ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-22&oldid=1534764" இலிருந்து மீள்விக்கப்பட்டது