இளையர் அறிவியல் களஞ்சியம்/அட்ரீனல் சுரப்பி

அட்ரீனல் சுரப்பி : இது ஒரு அண்ணீரகச் சுரப்பியாகும். இது நாளமில்லா சுரப்பியுமாகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்றுவீதம் இருபுறமும் அமைந்திருக்கும். இவை முக்கோண வடிவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புற பகுதிக்குப் புறணி என்று பெயர். இச்சுரப்பியின் எடை சுமார் 12 கிராம்களாகும்.

அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை

அட்ரீனல் சுரப்பிகள்


இயக்கு நீர்கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து "ஸ்டீராய்ட்ஸ்" (Steroids) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கியப் பணி திசுக்களைத் தூண்டுவதும், உடம்பின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதுமாகும்.

அட்ரீனல் சுரப்பியிலிருந்து ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன.