இளையர் அறிவியல் களஞ்சியம்/குடல்வால் அழற்சி

குடல்வால் அழற்சி : சிறு குடலும் பெருங்குடலும் இணையுமிடத்தில் குடல்வால் (Appendix) என்ற பகுதி அமைந்திருப்பதை நாம் அறிவோம். இது ஒரு மெல்லிய குழாயாகும். இது அரை சென்டிமீட்டர் விட்டமும் பத்து சென்டிமீட்டர் நீளமும் கொண்டது. உடலின் பிற உறுப்புகள் ஏதாவது ஒரு பணியைச் செய்கிறது. ஆனால், குடல்வால் எவ்வித வேலையும் செய்வதில்லை. எனவே, நமக்கு எந்தவிதப் பயனும் குடல்வாலால் ஏற்படுவதில்லை.

குடல்வால் தொங்கும் நிலையில் அமைந் திருப்பதால் அதில் பிற பொருள்கள் எளிதில் சென்று தங்க நேரிடுகிறது. இதனால் பாக்டீரியாக்கள் பெருகி அழற்சியை ஏற்படுத்துகிறது. இங்கு தங்கும் மலம் மேலும் மேலும் அழுக்குப் படிய இறுகிக் கெட்டியாகிறது. இஃது அழற்சி நோய், வயிற்று வலியை உண்டாக்கும். இவ்வழற்சி

குடல் வால்

வழற்சி நோய் பிற பகுதிகளுக்கும் பரவ நேரின் வேறு சில உடற்கேடுகள் உண்டாகலாம். குடல்வால், அழற்சியின் கடுமையைக் கருத்தில்கொண்டு பாதிப்புக்காளான குடல் வால் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றிவிடலாம். இவ்வாறு செய்வதால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.