இளையர் அறிவியல் களஞ்சியம்/தோல்

தோல் : நம் உடலில் இதயம், ஈரல் போன்ற நம் உடலைப் போர்த்தியிருக்கும் தோலும் ஒரு

தோலின் உள் அடுக்குத் தோற்றம்

முக்கிய உறுப்பாகும். மனிதத் தோலை "சருமம்’ என்று அழைப்பார்கள். இதயம் எவ்வாறு குறிப்பிட்ட பணிகளைச் செவ்வனே செய்கின்றதோ அதே போன்று மனிதத் தோலாகிய சருமமும் குறிப்பிட்ட சில பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.

உடலின் மற்ற உறுப்புகள் சிறிய அளவில் இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால், தோல் உடலின் வெளிப்புறம் முழுவதையும் தன் இடமாகப் பெற்றுள்ளது. இத்தோலின் அடிப்புறம் வியக்கத்தக்க வகையில் உயிரணுக்களாகிய செல்களையும் இரத்த நாளங்களையும் நரம்புகளையும் பெற்றுள்ளது.

தோல் இரண்டு அடுக்குத் திசுக்களையுடையதாக அமைந்துள்ளது. கீழ் அடுக்கு (Covium), மேல் அடுக்கு (Epidermis) ஆகிய இவ்விரு அடுக்குகளும் வியக்கத்தக்க வகையில் இணைந்துள்ளன. கீழடுக்கிலுள்ள முளைகள் மேலடுக்குக்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவை அவற்றைப் பிணைத்து வைக்கும் வார்ப்புபோல் அமைந்துள்ளன. இந்த முளைகள் பெற்றுள்ள முனைகள் உடல் தோலின் சில பகுதிகளில் வெளிப்புறமாகவும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட வகை வடிவங்களில் அமைந்துள்ள அவற்றை நாம் கண்ணால் காணலாம். நம் ரேகைகள் அவ்வாறு அமைந்தனவே யாகும்.

மேலடுக்காக அமைந்துள்ள தோலின் மேற் பகுதியில் எந்தவித இரத்த நாளங்களும் இல்லை. இப்பகுதியில் அமைந்துள்ள உயிரணுக்களாகிய செல்கள் மடியும் முன்பாகவே புதிய உயிரணு இத்தகைய செல் கொம்புகளால் வேயப்பட்ட கூரை போல் அமைகின்றன. இஃது நமக்குப் பெரும் பயனளிப்பதாக உள்ளது. இவை உடலைப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது.

தோலின் கீழ் அடுக்கு உயிரோட்டத்துடன் இயங்குவதாகும். இதன் முக்கிய பணியே புதிய புதிய உயிரணுச் செல்களை உருவாக்கித் தருவதாகும். உருவாக்கப்பட்ட புதிய செல்களை மேல் நோக்கித் தள்ளுகிறது.

நம் இயல்பான செயற்பாடுகளால் நாள் தோறும் இலட்சக்கணக்கான செல்களை மடியச் செய்து வெளியேற்றுகிறோம். நல்ல வேளையாக அதே சமயத்தில் நாள்தோறும் இலட்சக்கணக்கான பதிய செல்கள் கீழடுக்குத் தோலால் உருவாக்கி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடல் தோல் எப்போதும் இளமைப்பாங்குடனேயே வைத்துக் கொள்ளப்படுகிறது.

நம் தோலில் 80 அடுக்குக் கொம்பு செல்கள் (Horm Cell) இருக்கின்றன. ஒவ்வொரு நேரமும் கழுவுவதாலோ அல்லது துடைப்பதனாலோ தோலின் மேலடுக்கை அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அந்த இடம் உடனே நிரப்பப்பட்டு விடுகிறது. நாம் ஒரு போதும் தோலின் அனைத்து அடுக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அடித்தோலிலிருந்து புதிய புதிய செல்கள் மேல் நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது.