இளையர் அறிவியல் களஞ்சியம்/நியூட்ரான்

நியூட்ரான் : பொருட்களின் அடிப்படை பகுதி உறுப்புகளுள் துகள் ஒன்று. துகள் பகுதியின் கருவில் இஃது அமைந்துள்ளது. ஹைட்ரஜன் அணுவைத் தவிர்த்து பிற அணுப் பகுதிகள் அனைத்திலும் நியூட்ரான் அமைந்துள்ளது. ஹைட்ரஜன் அணுக் கருவில் புரோட்டான் உண்டு; நியூட்ரான் இல்லை. மற்ற அணுக்கருக்களில் புரோட்டானும் நியூட்ரானும் அமைந்துள்ளன.

1980ஆம் ஆண்டிலேயே ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்களான போத்தே, பெக்கர் என்பவர்களால் நியூட்ரான் கண்டறியப்பட்ட போதிலும் அதன் முழுத் தன்மைகளை ஆய்ந்தறிந்து கூறிய அறிவியல் அறிஞர் சாட்விக் என்பவராவார். 1982ஆம் ஆண்டில் தன் ஆய்வையும் அதற்கு நியூட்ரான் எனும் பெயரையும் அறிவித்தவர் இவரேயாவார்.

அணுச்சக்தி மூலம் மின் விசை உற்பத்தி செய்வதில் நியூட்ரானின் பங்கு பெரிதாகும்.