இளையர் அறிவியல் களஞ்சியம்/புயல்

புயல் : புயல் உருவாவதற்கு அடிப்படை காரணம் வாயு மண்டலத்தின் போக்கில் திடீரென ஏற்படும் மாறுபாடுகளேயாகும். மழை, ஆலங்கட்டி மழை, பனிப்புயல், தூசிப்புயல் போன்றவை தோன்றுவதற்கும் இதுவே காரணமாகும்.

பெரும்பாலான புயல்கள் கடல்களிலேயே தோற்றம் கொள்கின்றன. கடலில் உருவாகும் புயல் கடல்நீரோடு இணைந்து எழும். நீர் சுழற்சியினால் உண்டாகும் இப்புயலால் நீர் சில சமயம் 1½ கிலோ மீட்டர் உயரம்வரை எழும்புவதுண்டு.

புயல் எல்லாக் கடல்களிலும் உருவாவதில்லை. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வெப்ப மண்டலக் கடற்பகுதிகளில்தான் அதிகமாக உண்டாகின்றன. குறிப்பாக வங்காள விரிகுடாக் கடல், இந்து மாகடல், அட்லாண்டிக் மாகடல், தென்பசிபிக் மாகடல் ஆகியவற்றில்தான் புயல்கள் அடிக்கடி உண்டாகின்றன. இப்புயல் தரைப்பகுதியை எட்டும் போது இடி மழை உண்டாகிறது. சுழன்று வீசும் காற்றின் கடும்வேகத்தில் மரங்கள் வேரோடு வீழ்கின்றன; கட்டிடங்கள் இடிகின்றன. கடுமையான பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. இப்புயல் பல கிலோமீட்டர். தூரம்வரை வீசி படிப்படியாக பலவீனமடைந்து மறையும்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பக் காற்றின் நீண்ட நாக்கு குளிர்காற்றை ஈர்க்க விரைந்து நீளும். இதனால் வெப்பக் காற்றின் முனைப்பகுதி தாழ்ந்த காற்றழுத்தமண்டலமாக ஆகும். அதை நோக்கி காற்று விரைந்து வீசத் தொடங்கும். இதுவே பெருங்காற்றாகவும் பின்னர் புயலாகவும் வடிவெடுக்கின்றன. இப்புயற்காற்றின் மையத்தில் கண் போன்ற பகுதி உண்டு. இப்புயற் கண்ணை மையமாகக் கொண்டே புயல் உருவாகிறது.

வெப்பக் காற்றும் குளிர்காற்றும் இணையும்போது அதன் கலப்பு மிகச் சிறுஅளவிலேயே அமைகிறது. அப்போது சாய்வான பரப்பு நெடுக ஓரளவு வெப்பமுள்ள காற்று குளிர் காற்றின்மீது பரவுகிறது. இதன்மூலம் வெப்பக்

தமிழகத்தை நெருங்கும் புயல்

காற்று ஒரளவு ஈரமடைகிறது. இதன் விளைவாக மேகம் உருவாகிறது. இறுதியில் மழையாகவோ அல்லது பனிப் பொழிவாகவோ ஆகிறது.

இன்று புயலின் அறிகுறிகள் தோன்றும் போதே அதைக் கண்டறிந்து அறிவிக்க எச்சரிக்கைரேடார் சாதனங்களும் செயற்கைக் கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன.