இளையர் அறிவியல் களஞ்சியம்/மூக்கு

மூக்கு : மனிதனுக்குள்ள ஐம் பொறிகளில் மூக்கு முக்கிய உறுப்பாகும். நாம் காற்றைச் சுவாசிக்கவும் மணத்தை நுகரவும் மூக்கே வழியாயமைந்துள்ளது. மூக்கின் நடுப்பகுதியிலுள்ள குருத்தெலும்பு மூக்கை இரு துவாரங்களாகப் பிரிக்கிறது. இருமூக்குத் துவாரங்களின் உட்பகுதியில் இரு மூக்குக் குழாய்களாகத் தொண்டையுடன் இணைகின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்று தொண்டை வழியாக மூச்சுக் குழாய் மூலம் நுரையீரலை அடைகிறது.

மூக்குக் குழாய்களின் உட்புறம் ஈரப்பசையுள்ள மெல்லிய கோழைச் சவ்வால் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மெல்லிய மயிரிழைகளும் உண்டு இதன்மூலம் நாம் சுவாசிக்கும் காற்றிலுள்ள தூசிகள் முக்கு மயிரால் தடுக்கப்படுகிறது. அல்லது முக்கிலுள்ள ஈரப்பசையுள்ள கோழையில் ஒட்டிக்கொள்வதால்

முக்கின் வெட்டுததோற்றம்

நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்கபடுகிறது.

மணத்தை நுகர்ந்தறியும் புலனாகவும் மூக்கு பட்டுள்ளன. அத்துடன் மெல்லிய மயிரிழை அமைந்துள்ளது. இதற்கேற்றவாறு ஒவ்வொரு மூக்குத் துவாரங்களின் உள்ளே மேற்பகுதியில் மெல்லிய சவ்வு அமைந்துள்ளது. இது நரம்பு அணுத்திரளாலானதாகும். இங்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நரம்பு நுனிகள் மணத்தின் தன்மையை நுட்பமாக உணரும் உணர்வுப் பகுதியாகும். இஃது மூளைப்பகுதியுடன் இணைந்துள்ளதால் மணத்தை நம்மால் நன்கு நுகர்ந்தறிய முடிகிறது.

மணத்தை நுகரும் மணப்புலனும் சுவையை உணரும் சுவைப்புலனும் ஒன்றுக்கொன்று நெருக்கமுடையனவாக இருப்பதால் ஒரே சமயத்தில் மணத்தையும் சுவையையும் ஒருசேர அறிந்துணர முடிகிறது.

சளியால் நாம் பாதிக்கப்படும்போது நம் மூக்குத் துவாரங்களில் உள்ள சவ்வுப் படலம் அழற்சியடைய நேரிடுகின்றது. இதனால் மணப்பகுதிக்குச் செல்லும் வழி அடைபடுவதால் நம்மால் மணத்தை நன்கு அறிய இயலாமற்போய்விடுகிறது. இவ்வாறு ஏற்படும் அழற்சியைப் போக்க மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெற்று அழற்சியை நீக்க வேண்டும். இல்லையேல் அது மூச்சுக்குழல் அழற்சி போன்ற நோய்க்காளாக்கிவிடும்.

தெளிவாகப் பேசுவதற்குதவும் புலனாகவும் மூக்கு அமைந்துள்ளது. குரல் நாண்களின் அதிர்வால் உருவாகும் பேச்சொலி தொண்டை வாய், மூக்குப் பகுதிகளில் உள்ள காற்றின் துணையால் வலுவடைந்து தெளிவான பேச்சொலியாக வெளிப்படுகிறது. வெளிப்படும் ஒலி வெளிக்காற்றின் மூலம் மற்றவர் காதுகளை அடைகிறது. இவ்வாறு தெளிவான ஒலி வெளிப்பாட்டுக்கும் முக்குப் பெருந்துணை புரிகிறது.