இளையர் அறிவியல் களஞ்சியம்/ராடார்

ராடார் : ராடார் (Radar) என்னும்சொல் (Radio Detection and Ranging) என்ற ஆங்கில எழுத்துக் கூட்டுச் சொல்லின் ஒலி பெயர்ப்பாகும். இதற்கு 'பொருளின் இடத்தையும் தூரத்தையும் ரேடியோ அலைகளைக் கொண்டு அறிதல்’ என்பது பொருளாகும்.

மின்காந்த அலைகளான ரேடியோ அலைகள் ஏதாவது ஒரு பொருள் மீது பட்டுப் பிரதிபலித்துத் திரும்பும் தன்மையுடையது. இவ்வாறு பிரதிபலித்துத் திரும்பும் நேரத்தின்

செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களைப் பெறும் ரேடார் கருவிகள்

அடிப்படையில் பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும் கணித்து அறியலாம். இப்

பணியைச் செய்வதே ராடாரின் முக்கிய வேலை.

ஒலி அலைகளைவிட மிக வேகமாகச் செல்வதை நுண்ணலைகள் (மைக்ரோ வேவ்ஸ்) எனும் ரேடியோ சிற்றலைகள் அதாவது சாதாரண ஒலி அலைகளைவிட ரேடியோ சிற்றலை அதிக ஆற்றலுள்ளவைகளாகப் பத்து இலட்சம் மடங்கு அதிவேகத்தில் செல்ல வல்லனவாகும்.

போரின் போது எதிரி விமானங்கள், கப்பல்கள், அல்லது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்குமிடத்தைத் துல்லியமாய்க் கணித்தறிந்து தாக்கி அழிக்க ராடார் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விமானங்களிலும் கப்பல்களிலும் நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இச் சாதனம் பொருத்தப்படுகிறது. இருளிலும் பனிமூட்டத்திலும் கூட ராடார் சாதனம் நன்கு செயல்படும்.

போரின் போது மட்டுமல்லாது அமைதிக் காலத்திலும் பல நல்ல காரியங்களுக்கு ராடார் சாதனம் பயன்படுத்தப்படுகின்றது. விமான தளங்களில் விமானங்கள் சரியாக இறங்கவும், பனிமூட்டம் உள்ள சமயங்களில் இடரின்றிக் கப்பல்கள் வந்து சேர வழிகாட்டவும் ராடார் சாதனம் பயன்படுகிறது. வானிலையை அறியவும் ராடார் சாதனம் பயன்படுகிறது.