இளையர் அறிவியல் களஞ்சியம்/விமானங்தாங்கிக் கப்பல்

விமானங்தாங்கிக் கப்பல் : கப்பற் படையில் போர்க் கப்பல்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எதிரிக் கப்பல்களின் மீதும் கடலோரப் பகுதிகளிலும் குண்டு வீசித் தாக்கக் கூடிய போர் விமானங்கள் தரை விமான தளங்களிலிருந்து புறப்படுவது போன்றே பெரும் போர்க்கப்பல்களின் மேல் தளத்திலிருந்து போர் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும். ஆனால், இத்தகைய விமானங்கள் வடிவில் சிறியதாக அமைந்திருக்கும். இவ்விமானங்கள் இறங்கவும் பறக்கவும் ஏற்ற வகையில் கப்பலின் மேல்தளம் அமைந்திருக்கும். இத்தளம் சமதளமாக அமைந்திருப்பதோடு போதிய அளவு அகலமுடையதாகவும் இருக்கும்.

விமானந் தாங்கிக் கப்பல்களிலிருந்து குண்டு வீச்சு விமானங்கள் எளிதாகப் பறந்து செல்லவியலும். ஆனால் இறங்கும் விமானங்களுக்குப் போதிய ஓடு பாதை இருக்க வேண்டும். அப்போதுதான் போதிய அளவு ஓடி நிற்கவியலும். இதற்காகக் கப்பலின் மேல் தளத்தில் இழுப்புக் கொக்கிச் சங்கிலி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். கப்பலின் மேல்தளத்தில் வந்து இறங்கும் விமானம் இக்கொக்கியில் மாட்டிக் கொள்வதால் சிறிது தூரத்திலேயே விமானம் நின்று விடும்.

இத்தகைய விமானந்தாங்கிக் கப்பல்களின் மேல்தளத்தின் அடிப்பகுதியில் மேலே உள்ளது போன்றே சமதளம் அமைந்திருக்கும். அத்தளத்தில் குண்டு வீச்சு விமானங்களும் உளவறியும் விமானங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். வேண்டியபோது இத்தளத்திலிருந்து விமானங்களை மேல் தளம் கொண்டு செல்லவும் மேல்தளத்திலிருந்து கீழ் தளம் நோக்கி விமானங்களைக் கொண்டு சேர்க்கவும் போதிய வசதிகள் உண்டு. கப்பலில் பணியாற்றுவோர் தங்குவதற்குத் தனிப்பகுதிகள் இருப்பதுபோன்று விமானம் பழுது பார்ப்பதற்குத் தனிப்பகுதியும் உண்டு. விமானந் தாங்கிக்கப்பலின் அடிப்பகுதியில் எரிபொருள். வெடி குண்டுகள், வெடி மருந்து போன்றவைகட்கான சேமிப்புக் கிடங்குகளும் தனித்தனியே உள்ளன.

விமானந் தாங்கிக் கப்பல்களில் சுமார் 100 குண்டுவீச்சு, வேவு விமானங்கள் வரை வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய போர்க் கப்பல்களில் எதிரிக் கப்பல்களையும் எதிரி குண்டு வீச்சு விமானங்களையும் தாக்கும் வகையில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

முதன்முதலில் விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்கிய பெருமை ஆங்கிலேய கப்பல் படைக்கேயுண்டு. 1928இல் இக் கப்பல் உருவாக்கப்பட்டது. அதன்பின் பத்து ஆண்டுகள் கழிந்தபின்னர் அமெரிக்கர் தங்கள் கப்பல் படையில் விமானந் தாங்கிக் கப்பல்களைச் சேர்த்தனர். இன்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கென கப்பற்படையில் விமானந் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்

நமது இந்தியக் கப்பற்படையில் புகழ் பெற்ற விமானந் தாங்கிக் கப்பலாக அமைந்திருப்பது

விக்ராந்த்

'விக்ராந்த்' கப்பலாகும். ‘விராம்” என்பது மற்றொரு புகழ்பெற்ற இந்திய விமானந் தாங்கிக் கப்பலாகும். இது 1987ஆம் ஆண்டில் கப்பற்படையில் இணைக்கப்பட்டது.