இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/இங்கிலாந்து பிரயாணம்

பத்தாவது அதிகாரம்


இங்கிலாந்து பிரயாணம்

ஜூன் மாத முதலிலேயே என் பரீக்ஷை முடிவு தெரிந்து விட்டது. நான் பி. ஏ. பரீக்ஷையில் சென்னை மாகாணத்துக்கே முதல் வகுப்பில் தேறினேன் என்று அறிந்து, எல்லாரையும் விட தந்தைதான் பெருமகிழ்ச்சி கொண்டார். நான் மறுபடியும் குறிப்பிடுவதற்கு முன்பே இங்கிலாந்து பிரயாணம் 159

சீமையில் உயர்தரக் கல்வி கற்க என்னே அனுப்புவதற்கு அவரே எல்லா ஏற்பாடுகளையுஞ் செய்யலானர். எனது சிற் 'றப்பாவைப்பற்றி உமக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். அவர் ஹாக்கி பக்தாட்டத்தில் கெட்டிக்காரராதலால், சென்னை பந்தாட்ட கோஷ்டியோடு லண்டனுக்குச் சென் றிருக்கிரு.ர். அத்துடன் மோட்டார் மெக்கானிஸம் கற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் ஒரு முறை இங்கிலாந்து போயிருக்கிரு.ர். ஆகவே, அவருக்கு லண்டன்மா நகரின் கிலேமை நன்கு தெரியுமாதலால், என் தந்தை அவரை என் லுடன் அனுப்பி ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் என்னேச் சேர்க்கும்படி தெரிவித்தார். -

எனது இங்கிலாந்துப் பிரயாணம் என் தாய்க்குச் சிறி தும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை வெளிக்குக் காட் டிக் கொள்ளாமல் எனக்குப் புத்திமதி கூறி யனுப்பினுள். என் தந்தை எங்களுடன் ரயிலில் பம்பாய் வரை வந்தார். பின்னர், பம்பாய் துறைமுகத்துக்குப் போய், கப்பலேறிப் பிறகு, என் தந்தை மிக வருத்தத்தோடு பிரியா விடை கொண்டு பிரிந்தார் நானும் என் சிற்றப்பாவும் முதல் வகுப்பில் பிரயாணஞ் செய்தோம். நாங்கள் எங்களுக்கு ஏற்ப்டுத்தப்பட்ட முதல் வகுப்பு அறையில் நுழையப் போகும்போது, ஜான் கில்பர்ட் புன்னகையோடு அங்கு தோன்றினன். - -

அவனைக் கண்டதும் எனக்குண்டான ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஏன்? இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவன் என்னைக் கடற்கரையில் சந்தித்து நெடுநேரம் பேசிவிட்டுச்சென்டுன் அச்சமயம், எனது சீமைப்பிரயா ணத்தைப்பற்றி விசாரித்தானே யொழிய, தானும் லண்ட னுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவேயில்லே. அப்படி யிருக்க எதிர்பாராத விதமாக அவனைக் கப்பலில் கண்ட 160 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தும், எனக்கு வியப்பு எற்பட்டது இயற்கைதானே? எனவே, நான் அவன் எனக்கு வந்தனம் கூற வாயெடுக் கையிலேயே, என்ன ஜான்! நீ லண்டனுக்குப் புறப்படுவ தாக என்னிடஞ் சொல்லவில்லையே இப்பிரயாணம் திடீ. ரென்று ஏற்பட்டதா என்ன!” என்று பரபரப்பாகக் கேட் டேன். w : - . "ஆமாம் என் தாய் மாமன் லண்டனில் இருக்கிரு.ர். அவருக்கு நோய்கண்டு அபாயமான நிலையிலிருப்பதாக எங்களுக்குத் தந்தி வந்தது. என் தங்தையின் உத்தியோகக் தான் தெரியுமே! திடீரென்று லிவு போட்டுவிட்டுப் போக முடியாது. ஆகையால், அவர் என்னேப் பார்த்து வரச் சொல்லியனுப்பியிருக்கிருர்” என்று சிறிது யோசனையோ டேயே பேசினன். மேலும், அவன் முகத்தில் என்னே முத. வில் சந்திக்கும்போதிருந்த உற்சாகம் இப்போது இல்லை. அவன் என்னேடு பேசுகையில் என் சிற்றப்பாவை அடிக் கடி கடைக்கணித்து முகத்தைச் சுளித்து வந்ததை நான் கவ. னித்தேன். அவன் என்னுடன் சிற்றப்பாவும், வருவா ரென்று முதலில் எதிர்பார்த்திருக்க மாட்டான் என்று. எண்ணுகிறேன். என் சிற்றப்பாவும், கில்பர்ட் முதலில் என்ன நோக்கிப் புன்சிரிப்பு கொண்டதைக் கண்டதும் ஒரு. விதமாக அவனைப் பார்த்தாராயினும், அவைேடு நான் பேச ஆரம்பித்த பின்னர், இருவருக்கும் ஏற்கனவே பழக்கமிருக் கலாமென்று கருதி அவர் சிறிது தாரமாகப் போய்விட்டார்.

நான், ஜான் கில்பர்ட்டின் நிலையைக் குறிப்பாலுணர்ங். ததும், அவனேடு மீண்ட நேரம் பேச்சை வளர்த்த விருப்புச் மில்லாமல், அப்படியா! சரி; முன்பின் போ யறியாத நக க்குக் கல்வியின் பொருட்டுச் செல்லும் எனக்கு, அதே நாட்டில் பிறந்து வளர்ந்த உன் போன்ருர் உடன் வருவது இங்கிலாந்து பிரயாணம் 161

பதும் பார்க்காததுமாக நிற்குஞ் சிற்றப்பாவை விளித்து) அப்பா இவர் என்ைேடு ராஜதானி கலாகாலேயில் வாசித்த வர். முன்னெல்லாம் நம் விட்டுக்கு அடிக்கடி வருவாள் பாரப்பா கிரேஸ்: அவளுடைய சகோதார். இவரும் லண்டனுக்குத்தான் வருகிருராம். இவருடைய தாய்நாடே அதுவாதலால், நமக்கு உதவியாக இருப்பார்-ஜான் இவர் தான் என் சிற்றப்பா. இவர்கட இரண்டுமுறை உங்கள் காட்டுக்கு வந்திருக்கிருர்- எங்கே தங்கி யிருக் கிருய்? ஏழெட்டு நாள் தான் கப்பலிலேயே பிரயானஞ் செய்யப் போகிருேமே, நாம் சாவகாசமாகச் சந்திப் போம்” என்று நயமாகப் பேசி வழிகூட்டி யனுப்ப முயன் றேன். N.

நான் என் சிற்றப்பாவையும், கில்பர்ட்டையும் ஒரு. வர்க்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தேனுயினும், அவன் வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வருவித்து, சம்பிரதாயத் துக்கு வந்தனம் மட்டும் அளித்துவிட்டுப் பேசாமல் கின்ருன்.

- இச்சமயம் ஜான் கில்பர்ட் நடந்துகொள்ளும் மாதிரி சிறிதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால். நான் சிறிது பதட்டமாகவே, சரி ஜான், போய் வருகிருயா வந்த னம்’ என்று கூறிக்கொண்டே, அவனது பதிலைக்கூட எதிர்பாராது, எங்களுக்காக விடப்பட்ட அறையில் துழைந்தேன். என் சிற்றப்பாவும் என்னைப் பின்தொடர்ந்து வந்தார், அப்புறம் ஜான் எப்படிப் போனன் என்பதை நான் கவனிக்கவில்லை.

எனக்குக் கப்பல் பிரயாணம் குதுகலத்தை யளித்த தாயினும், இரண்டு மூன்று நாள்வரை மயக்கம் என்னைத் கல்துக்க விடவில்லை. அதற்கப்புறமே, நான் என் சிற். 162 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

றப்பாவோடு கப்பலேச் சுற்றிப் பார்த்து வரலானேன். கப் .பலில் பல தேசத்து மக்கள். இருந்தனர். அவர்களுடைய பழக்க வழக்கங்களும் மனப் - போக்கும், நடையுடை பாவனைகளும் எனக்கு விந்ோதமாக இருந்தன. அவற்றை யெல்லாம் விவரித்து உமக்குக் கூறுவதென்ருல், பெரிய பாரதமாகிவிடும். இப்பிரயாணிகளில் ஐரோப்பா கண் .டத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலோராக - இருந்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைக ளோடு அணியணியாக இருந்து களியாட்டயர்ந்து கொண் டிருக்தனர். அவர்கள் ஊக்கமும், உற்சாகமுமாக எப் பொழுதும் இருந்து வந்தது. சுதந்தர நாட்டில் சுகமாக வாழ்பவர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டியது. இந்தியர்களில் பிரமுகர்களும், பணக்காரர்களும் பலர் அக் கப்பலில் இருந்தனர். அதுவன்றி, என் போன்று, உயர்தரக் கல்விக்காக மேடுைகளுக்குச் செல்லும் மாணவி களும் மாணவர்களும் சிலர் காணப்பட்டனர். அவர்களது போக்கும் செயலும் மிகவும் விபரீதமாய் இருந்தன. அவர்க வளிடத்தில் ஐரோப்பியர் பழக்க வழக்கங்கள் மிகுதியாகக் காணப்பட்டன. இதிலிருந்து அவர்கள் தங்களே ஐரோப்பா கண்டத்தில் நாகரிகம் பழுத்த நகரில் வாழ்பவ்ர்கள் என்று கினைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அவர்களில் சில ஆடவர்களும், பெண்களும் வரம்பு கடந்து வாயில் வந்த வாறு ஆபாசமாகப் பேசிய வண்ணம் மிருக வுணர்ச்சி மேலீட்ட்ால், தங்களைப் பிறர் என்ன கருதுவார்கள் என் புதையுஞ் சிந்தியாது, கிலே தடுமாறி இருந்தனர். இக்காட்சி என்னைத் திடுக்கிடச் செய்ததோடு, சகிக்கக் கூடாத நிலை -யையும் உண்டுபண்ணியது. இவர்களைப் போன்றே ஐரோப்பியர்களிலும் பலர் பலவிதமான கிலேயிலிருந்தன ரயிலும், அது என் மனதை இவ்விதம் சுருக்கெனச் ®ಸಿಹಿಖTತ್ತು SuTಣಿ 163.

தைக்கவில்லை. பொதுவாக, இவ்வித ஆபர்சக் காட்சிகள் என் மனதைச் சலனமும் விகாரமும் அடையச் செய்தன.

இவ்விதம், ஒவ்வொரு நாளாக, நாங்கள் தங்கியிருந்த மேல் தளத்தையும், கீழ் தளத்தையும் சுற்றிப் பார்த்து விட் டுக் கடைசியாக, மூன்ருவது வகுப்புப் பிரயாணிகள் தங்கி யிருக்கும் இடத்தை யடைந்தேன். ஆ. அங்கு நான் கண்ட காட்சியை எவ்வாறு வருணிப்பேன்! அவ்விடம் என்ன நரகலோகமா? அங்கிருப்பவர்கள் என்ன மிருகங்களா அல்லது மக்கள்தான?’ என்று எனக்குச் சந்தேக மேற் பட்டது. எனக்கு மட்டுமல்ல-பார்க்கும் மற்றவர்களுக் கும்-சந்தேகமும் இரக்கமும் ஏற்படுவது திண்ணம். அவ்விடம் அவ்வளவு அசுத்தமாக இருந்தது. சுற்றிலும் பலவிதமான சாமான்களும் மூட்டைகளுமுள்ள அவ்விடத் தில் பிரயாணிகள் கும்பல் கும்பலாகப் படுத்துக்கொண்டும், உட்கார்ந்துகொண்டு மிருந்தனர். மாலுமிகளும், கப்பல் சிப்பந்திகளும் அவர்களே அலட்சியமாக நடத்தியதோடு அவதாருகவும் பேசினர். பூமியினுள் செல்லும் சுரங்கம் போல் காணப்பட்ட அவ்விடத்தைப் பார்க்கப் படிகளின் வழியாக இறங்கிய நான், அம்மேல் படிகளின் மீதிருந்தே இக்காட்சியைப் பார்த்துத் திகைத்து கின்று விட்டேன் சில நிமிடங்களுக்குப் பின்னரே அங்கிருந்து வீசிய முடை காற்றம் மூக்கைக் கொளத்தது உணர்ந்தேன். ஆகவே, அதைச் சகிக்க மாட்டாது மேல் படிகளிலிருந்த வண் ணமே, என் சிற்றப்பாவோடு வெளியேறினேன்.

இரண்டாவது தளத்திலிருந்து, மேல் தளத்துக்கு நாங்களிருவரும் போய்க்கொண் டிருக்கையில், சிறிது

தாரத்தில் ஜான் கில்பர்ட் ஒரு ஆங்கிலப் பெண்ணுேடு கை கோத்தவ்ண்ணம், குதுகலமாகப் பேசிக்கொண்டு வருவி 164 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தைக் கண்டேன். அவ்விருவரும் எங்களுக்குச் சமீபமாக வருகையில், ஜானும் என்னைப் பார்த்துவிட்டான். ஆயினும் உடனே அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு என்னைக் கவனிக்காததுபேர்ல், தன் கோழியோடு விரைந்து சென் முன். அவன் நான் அன்று சந்தித்தபோது, இவன் நடந்து கொண்டமாதிரி பிடிக்காது போய்விட்டகை, இவனே அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றதாகத் கவருக கினைத்து என்மீது கோபித்துக்கொண்டிருக்கிரு. னென்றும் அதனல் தான் அப்புறம் அவன் என்ன வந்து பார்க்கவில்லை யென் அம் நினைத்தேன். ஒருவகையில் என்னே வந்து பார்த்துப் பேசாமலிருப்பது நல்லதென்று என் மனம் எண்ணியதால், அவன் அவ்வாறு போனதைப்பற்றி நான் கொஞ்சமும் சங்கடப்படவில்லை.

கப்பல் முழுவதையுஞ் சுற்றிப் பார்த்த பின்னரே, இயற்கைக் காட்சியைக் காண்பதில் கவனஞ் சென்றது. ஆகவே, ஒவ்வொருநாள் காலேயும், மாலையும் நான் கப்பல் மேல் தளத்தின் ஒரத்தில் கின்றுகொண்டு, கடலையும், வானத்தையும் கண்டு களித்து வந்தேன். இவ்வனுபவத் கால் சூரிய வெப்பமும், பெரு மழையும், கடும்புயலும், கடல் கொந்தளிப்பும் இல்லாமலிருப்பின், ஆயுள் முழுவ தும் கப்பல் பிரயாணத்திலேயே உற்சாகமாகக் காலங். கழித்துவிடலாம் என்று எனக்குத் தோன்றியது. நீலக் கடலின் ரமணியமான தோற்றத்தை இன்றெல்லாம் பார்க் துக்கொண்டிருந்தாலும் பசியோ உறக்கமோ உண்டாகாது. மாலைப் பொழுதில் கிழக்குப் பக்கத்தில் பார்த்தால், கட அம் வானமும் ஒன்ருயிருப்பதுபோலத் தோன்றும், கடல் அசைவின்றியும், அலையெழும்பாமலும் இருந்தால்-வானத் தில் மேகம் முதலிய களங்கமெதுவும் இன்றி யிருந்தால் இங்கிலாந்து பிரயாணம் 165

வானத்துக்கும், கடலுக்கும் நிறத்திலோ மற்றெதிலோ வேற்றுமையே காண முடியாது. -

அதிகாலேயில் சூரியன் உதயமாவதற்கு முன் அதா வது அருளுேதய காலத்திலும் மாலே அஸ்தம்ன சமயத்தி அம் ஆகாயத்தில் உண்டாகும் அற்புதத் தோற்றங்களையும், கருங்கடலில் ஏற்படும் கண்கொள்ளாக் காட்சிகளையும் கண்டபோது, என் உள்ளம் அடைந்த பரவச நிலையை, இதற்குமுன் எப்பொழுதும்-எவ்வித மகிழ்ச்சியான கிலே யிலும் அடைந்ததில்லை. அதிலும், வளர்பிறைக் காலத்துக் காணப்படும் நீலக்கடலின் அதியற்புத தோற்றத்தை நான் எங்ங்னம்-எம்மொழிகளைக்கொண்டு-வருணித்து உரைப் பேன்? என்னுல் மட்டுமன்று, மகா கவிகளான காளிதாஸன் வான்மீகி, கம்பர் பெருமான், திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள், ஷேக்ஸ்பியர், டென்னிஸன், ஷெல்லி, ஒர்ட்ஸ் வொர்க் போன்றவர்களாலும் வருணித் துரைக்க முடியா தென்று துணிந்து கூறுவேன். இயற்கை யன்ன யளிக்கும் கற்பனேக் கடங்கா அற்புதமான இக்காட்சியைக் கண்ட பின்னர், செயற்கைக் காட்சிகளைக் காணக் கண்கள் கூசும் என்பது திண்ணம். எனக்கிருந்த ஆர்வத்தில் வல்லமை யிருந்தால் கடல் நடுவில் ஒரு மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன். என் செய்வது எல்லாம் நாம் கினைத்தபடியே முடிகிறதா? கடலில் கப்பல் பிரயா ணம் செய்து ஒரு சில நாட்களாயினும், இயற்கை யன்ன யோடு நெருங்கி உறவாடும் வாய்ப்புக் கிடைத்ததே பெரும் பேறு என்று கருதினேன். நம் நாட்டில் எத்துணைபேர் பெருஞ் செல்வமிருந்தும், தகுந்த வசதிகள் கிடைத்தும், கண்களிருந்தும், இவ்வித இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க விரும்பாதிருக்கிருர்கள். அவ்ர்களே நினைக்கும்போது இரக்கமே உண்டாகிறது. . . . . . , 166 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எனக்கு இயற்கைக் காட்சியைக் காண்பதில் இருந்த ஆர்வம் என் சிற்றப்பாவுக்குக் கிடையாது. அவரது மனப் போக்கு வேறுவிதமாயிருந்தது. நான் முன்னமே சொன்ன படி, விளையாட்டிலும் தோழர்களோடு கூடிக் களிப்பதி லுமே கவனம் அதிகமாகச் செல்லும். ஆகவே, அவரது போக்கிலேயே அவரைவிட்டு, நான் தனியாகவே இயற்கை யழகில் ஈடுபட்டு வந்தேன்.

எனக்குப் பொதுவாக எல்லாவகையிலும், கடல் பிர யாணம் மிகுந்த குதூகலத்தை யளித்தது. உணவு முதலியன வும் எங்களுக்கு ஏற்ற விதமாகவே அளிக்கப்பட்டு வந்தது. என் சிற்றப்பாவின் சிநேக முறையாலோ என்னவோ கப் பல் தலைவனை காப்டன், முதல் ஆபீஸர், இரண்டாவது ஆபீஸர் முதலியவர்கள். எங்களிடம் மரியாதையாகவும் எங் களுக்கு வேண்டிய செளகரியங்களைச் செய்வதில் கண் லுங் கருத்துமாகவும் கடந்து வந்தனர். அதிலும் காப்ட லும், இரண்டாவது ஆபீஸரும் என்னிடத்தில் விசேஷ மரி யாதை காட்டி வந்ததோடு, சக்தர்ப்பம் நேருங்கால் வாஞ் சையாகவும் பேசினர். இது, மற்ற பிரயாணிகளுக்குப் பொருமையாகக்கூட இருந்தது. -

நாங்கள் பிரயாணஞ் செய்த கப்பல் முக்கியமான துறைமுகங்களில் மட்டும் கின்று கின்று, பிரயாணிகளை இறக்கிக்கொண்டும், ஏற்றிக்கொண்டும் சென்றது. கடைசி யாக, எடன் துறைமுகத்தைத் தாண்டிக் கப்பல் சென்று. கெ ண்டிருந்தது. நடு இரவு சுமார் பன்னிரண்டு மணி யடிக் மயமாயிருக்கும், கப்ப்லோட்டிகளைத் தவிர, மற்றெல் ம் தூங்கிக்கொண்டிருந்தனர். எனக்கென்னமோ : நடுநேரமாகியும். அக்கம் வரவில்லை. படுக்கையில் ண்டு பார்த்தேன். கண்களே இறுக மூடிக்கொண்

புரண் இங்கிலாந்து பிரயாணம் 167

டேன். என்ன செய்தும் பாழான எண்ணங்கள் மனத்தில் வந்து குவிந்து என்னேக் கவிந்துகொண்டது. எனவே, நான் மன அமைதிபெற வேண்டி, சிறிது நேரம் வெளியே சென்று கடலழகைப் பார்த்துவிட்டு வரலாமென்று படுக் கையைவிட்டு எழுந்தேன். গত பக்கத்தில் என் சிற்றப்பு. நன்ருகத் தாங்கிக்கொண்டிருந்தார். நான் அறையின் கக

வைத் திறந்து வெளியே கால யெடுத்து வைக்கப்ே பானேன். அச்சமயத்தில் சமீபத்தில் யாரோ நடந்துவரும் கலாடி

யோசையும், பேசும் சப்தமும் என் காதில் விழவே, திடுக்

கிட்டுப் பின் வாங்கினேன். கதவை முக்கால் பாகம் சாத்தி" விட்டு, இடுக்கில் வெளியே நோக்கினேன்............ ஆ. சண்

டாளன் துரோகி என்னை எவ்வளவு நாட்களாக இந்த மாதிரி எமாற்றிக்கொண்டு வருகிருனே தெரியவில்லையே!. கற்பகம் சொன்னபோது விளையாட்டாகக் கூறுகிரு ளென்

றல்லவோ நினைத்தோன். அவள் கூறிய ஊகமும், எனது

சந்தேகமும் சரியாகப் போய்விட்டன். ஊரில் இருந்தால் கான் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிருனே! வெளியூருக்

குக் கொஞ்ச நாள் போய் வந்தாலாயினும் அவளே மறந்து தொலைப்பான் என்று பார்த்தால்.அத்தேவடியர்களசட்டைக் காரச்சியை எனக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டல்லவா வந்திருக்கிருன். அச் சமாசாரம் முந்தா

நாளன்று தானே தெரிந்தது. அதிலிருந்து நான் எவ்வளவு எச்

சரிக்கையாகக் கட்டிக்காத்து வந்தும் என்னே ஏமாற்றிக் தாங்க வைத்துவிட்டு அவளோடு கூடிக் குலாவவன்ருே

போய்விட்டான் அக் கிழப்பாவியும் அச்சிறுக்கியும் கட்டிப்

புரளுவதை இந்தப் பாழும் கண்களால் பார்த்து விட்டும், என்னல் சகித்துக்கொண்டிருக்க முடியுமோ... ....அட

பர்வி கட்டின் ப்ெண்டாட்டிக்குத் துரோகஞ் செப்டி 168 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நன்ரு யிருப்பாயா கடவுள் உனக்குக் தண்டனை'கொடுக் காமலா போய்விடுவார்............இனி, இப்பாவியோடு வாழ் வதை விட................” என்ற இச் சொற்களே என் காதில் விழுந்தன. இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொண்டு வந்த உருவம் என் அறையைக் கடந்து போயிற்று. அவ்வுரு வத்தின் பேச்சிலிருந்து, ஒரு பெண்னெனத் தெரிந்ததோடு, அப்பெண்ணின் துயர வாழ்க்கையும் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. ஆகவே அவ்வம்மையின் மீது அளவு கடந்த

இரக்க முண்டாயிற்று. * : «

இந்நடு இரவில் தனியே பிரலாபித்துக்கொண்டு போகும் பெண்ணின் நிலையை முழுவதும் கவனிக்க என் மனம் விரைந்து சென்றது. ஆகவே, நான் அறையைவிட் டுச் சிறிது வெளியே வந்து, அவ் வம்மாள் போகும் வழியைக் கவனித்தேன். அப் பெண்மணி கொஞ்சதுரம் போய், தளத்தின் ஓரத்தில் கின்று சிறித் நேரம் கடலேப் ண்டிருந்தாள். அப்புறம் ஏகே முடிவுக்கு

பார்த்துக்கொ
直70 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வந்தவள்போல், திடீரென்று, அம்மாது கடலில் குதித்தாள். இதைக் கண்டதும் நான் திகைத்து கின்றுவிட்டேன். ஆனல் என்னை யறியாது என் வாய் 'ஒ'வென்று கூவியது. என் கூச்சல் பெரிய சப்தத்தை யுண்டுபண்ணி யிருக்க வேண்டும். உடனே காப்டனும், உத்தியோகஸ்தர்களும், மாலுமிகளும் வடக்கேயிருந்து ஓடி வந்தனர். என் சிற்றப் பாவும் திடுக்கிட்டு ஓடி வந்தார். சிறிது நேரத்தில் மற்ற வர்களும் தங்கள் தங்கள் இடத்தைவிட்டு ஒடி வந்துவிட்ட னர். எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு, என்ன என்ன விஷயம்" என்று பரபரப்போடு கேட்டனர். எனக்கு வாய் திறந்து ஒன்றும் பேசமுடியவில்லை. ஊமைபோல், அம்மாது விழுந்த இடத்தைக் கையால் சுட்டிக் காட்டி னேன். எல்லோரும் விரைந்தோடிப் பார்த்தனர். நானும் ஒடினேன். என் கண்கள் அம்மாது விழுந்த இடத்தை விரைவில் கண்டு பிடித்துவிட்டது. உடனே, அகோ. அதோ' என்று சுட்டிக் காட்டிக்கொண்டே பைத்தியக் காரிபோல் கூவினேன். அக்கணமே ஒரு மாலுமி, லேப் பெல்ட்" Life-belt என்னும் ஒருவகை ரப்பர் டயரைத் துக்கி - அம்மாது விழுந்து தத்தளிக்கும் பக்கமாக விசி யெறிந்தான். மற்ருெருவன் கயிற்றேணியைக் கட்டித் தொங்கவிட்டு விரைந்து இறங்கினன். காப்டனும் மற்றவர்களும் ஆவ லோடும், பரபரப்போடும் பார்த்துக்கொண்டு மாலுமியைச் சைகை காட்டி எவினர். லேப் பெல்ட்" அம்ம்ாது அருகே மிதந்து சென்றும், அதைப் புணையாகப் பற்றிக்கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை. r r

அச்சீமாட்டி கைகளையும் கால்களையும் உதறி யாட்டிக் காண்டிருந்தாளே யொழிய, தான் உயிர் தப்பித்துக்கொள் னப் பற்றுக்கோடு அகப்பட்டதே யென்ற ஆவலோடு அந்த கல்ப்-பெல்டை'ப் பற்றிக்கொள்ள முயலவில்லை. இங்கிலாந்து பிரயாணம் 171

அவள் கைகளால் நீரை யலேத்தமையால், அந்த லேப். பெல்ட்' அவளை நெருங்காமல் துணர மிதந்து போப்க்கொண் டிருந்ததோடு, அவளும் பின்னுக்குச் சென்ற வண்ணமிருந் தாள். இதனிடையே இரண்டொரு முழுக்கும் முழுகிவிட் டாள். இதற்குள் கயிற்றேணி வழியாக இறங்கியமாலுமி கடலில் அவள் விழுந்து தத்தளிக்கும் இடத்தை நோக்கிக் குதித்தான். அதன் பின், அவன் சிறிது தாரத்தில் மிதந்து கொண்டிருந்த லேப்-பெல்டை இடது கையால் பற்றிக் கொண்டே சீமாட்டியை நோக்கி விரைந்து சீக்திச் சென் முன். இடையிடையே, காப்டனும், மற்றவர்களும், அம் மாலுமிக்கு ஊக்கம் உண்டாகுமாறு கைகளே யாட்டி ஆர வாரம் செய்துகொண்டிருந்தனர். இவ்வேளையில் அம்மாது கை கால்களை அப்படியப்படியே போட்டுவிட்டுச் செய லற்று நீரில் கட்டையைப்போல் மிதந்துகொண்டிருக்கு மிடத்தைச் சமீபித்துவிட்டான். இன்னும் ஒரு வினாடியில் அவளைப் பற்றிவிட்டிருப்பான். இதற்குள் மூன்ருவது தடவையாக, அவள் நீரில் முழுகினள். எனவே, அவள் முழுகிய இடத்தை ஆராய்ந்துகொண்டு வெகு வேகமாக நீர் திச் சென்ற மாலுமி, திடீரென்று எதையோ கண்டு வெருண்டவன்போல், கால்களைப் பின்னுக்கு உதைத்தவண் ணம் ஒரு பலத்த கூச்சல் போட்டான். அதே சமயத்தில் மற்ருெரு கூச்சலும் நீரைக் கிழித்துக்கொண்டு வெளி வந் தது. அடுத்த கணம், அச்சீமாட்டியின் தலைமட்டும் வெளிக் கிளிம்பியது. இதுவரை கடலில் விழுந்தபோதோ நீரில் மூழ்கி யெழுந்து தத்தளித்த சமயத்திலோ கூச்சலிடுவதோ, திணறுவதோ செய்யாத அம்மாது, இச்சமயம் மிகப் பரி தாபமாகக் கதறியழுதாள். மாலுமியோ எதிர்பாராதவாறு ஏற்பட்ட எதோ ஒரு சம்பவத்தால் கிலே தடுமாறியவன் போல் ஈடுகடுங்கி லேப்பெல்டை"யும் கழுவவிட்டு நீரில் 172 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மூழ்கி மூழ்கி யெழுந்தான். மாலுமியின் கூக்குரலும், அச் சீமாட்டியின் கதறலும் கப்பலில் இருந்தவர்கள் ஒவ்வொரு வர் உள்ளத்தையுந் திடுக்கிட்டுக் கலங்க வைத்தனவென்றே சொல்லவேண்டும். இவர்களது கூக்குரலுக்குக் காரண மென்னவென்று நாங்கள் கூர்ந்து கவனித்தோம். ஆ அக் கோரக் காட்சியை என்னென்பேன்! இப்போது நினைத்தா லும் என் உள்ளம் கடுங்குகிறது. அச்சீமாட்டியை ஒரு பெரிய சுரு மீன் அப்படியே பற்றி விழுங்குவதைக் கண்டு நாங்கள் உடல் பதறினுேம். எங்களில் சிலர் அக்கோரக் காட்சியைக் காணச் சகியாது ஆ” வெனக் கூவிக் கண் களைப் பொத்திக்கொண்டனர். இரவா யிருப்பினும் வளர் பிறைக் காலமாதலால், பகல்போல் நிலவு காய்ந்தது. அவ் வெளிச்சத்தில், நீரினுள் சுருமீன் வந்து அம்மாதை விழுங் கிச் செல்வது எங்களுக்கு நன்ருகத் தெரிந்தது அவ்வாறு சுரு:மீன் வாயில்பற்றி இழுத்துச் செல்லும்போது அச் மோட்டி அழுத அழுகையை அங்கோ நான் எவ்வாறு வரு ணிப்பேன்! எப்பேர்ப்பட்ட கன்னெஞ்சராயினும் அதைச் செவியுற்ருல், அகங் கரைந்துருகிக் கண்ணிர் விடுவர் என் பது திண்ணம். அப்பரிதாப அழுகை யொலி இச்சம்பவம் நடந்து பல வருடங்களாயினும் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண் மூடிக் கண் திறப்பதற் குள், சுருமீன் அச் சீமாட்டியை இழுத்தக்கொண்டே வெகு தாரம்போய் நீரினுள் மறைந்துவிட்டது. இதுவரை என் மனதைத் திடப்படுத்திக்கொண்டிருந்த நான், இதைப் டிார்த்ததற்கப்புறம், பொறி கலங்கி கிலேமயங்கிச் சோர்ந்து விழுந்தேன். அப்புறம் என்ன கடந்தது என்பதொன்றும் எனக்குத் தெரியவே தெரியாது.

  1. 来源 来 # 来 இங்கிலாந்து பிரயாணம் 173

எனக்கு உணர்ச்சி வந்து நான் கண்விழித்துப் பார்க் கையில், என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டு மூவர் உட் கார்ந்திருப்பதைக் கண்டேன். என் எதிரே கவலையோடு கவனித்துக்கொண்டிருந்த என் சிறிய தந்தை நான் கண். விழித்ததை யறிந்து, புவன உடம்பு னப்படி யிருக்கிறது.

அம்மா' என்று ஆவலாகக் கேட்டார். * .

சூடாகக் கொஞ்சங் காப்பி கொடுக்கலாம், சார். குடி த்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்ருர் என் தலைப்பக்கம் இருந்தவர். அவர் இரண்டாவது கப்பல் உச் தியோகஸ்தர். - - - *

வலப் பக்கத்தில் என் தோழன் ஜான் கில்பர்ட் முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்: தான.

என் சிற்றப்பா பேச ஆரம்பித்ததும், நான் மூர்ச்சை படைந்த விவரம் ஞாபகத்துக்கு வரவே, என் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கி கடுங்கியது. அன்னியர்-அதிலும் ஆட வர்-எதிரில் நான் அவ்வாறு படுத்திருப்பது எனக்கு மிக வும் காண முண்டாயிற்று. ஆகவே, எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையப்பா!' என்று கூறிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தேன். இச்சமயத்தில் எங்கள் அறையில் ιοτε, டப்பட்டிருந்த கடியாரம் ஒன்பது மணி அடித்தது. இவ் வளவு நேர்மா மூர்ச்சையாகக் கிடந்தேன்? என்று கருதி நான் ஆச்சரியப்பட்டேன்.

பின்னர், நான் அவசர அவசரமாகக் காலேக் கடன்களே, முடித்துக்கொண்டேன். இதனிடையே ஜான் கில்பர்ட் என் சிற்றப்பாவிடம் எதோ சொல்லிவிட்டு வெளியே சென். முன். இரண்டாவது கப்பல் உத்தியோகஸ்தரும், என் சிற். றப்பாவும் மட்டும் முன்னிருந்த கவலே நீங்கிப் பொறுமை, 174 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் நாங்கள் மூவரு மாகச் சேர்ந்து காலைச் சிற்றுண்டி யருந்தினுேம். எனக்கு அப்போதும் உடலயர்வு தீரவில்லை. இதனிடையே சிற் றப்பா பேச்சை ஆரம்பித்தார். புவன! நீ ஒன்பது மணிக்கே உறங்கச் சென்ருயே! நடு கிசியில் அச்சீமாட்டி கடலில் விழுந்தது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று மெதுவாகக் கேட்டார். - நான் படுக்கைக்குச் சென்றதும் தாக்கம் வராமலிருந்த தையும், சிறிது வெளியே சென்று வரலாமென்று புறப் பட்டபோது அச்சீமாட்டி தனியர்கப் பேசிக்கொண்டு வங் ததையும், சந்தேகப்பட்டு மறைந்திருந்து கவ்னிக்கையில், திடீரென்று அம்மாது கடலில் குதித்ததையும் விரிவாகச் - சொன்னேன். இரண்டாவது கப்பல் உத்தியோகஸ்தர் நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டு வந்தார். -

"அப்படியா!................"என் சிற்றப்பா. நான் சிறிது சிந்தனையிலிருந்து பிறகு, ஆமாம் அப்பா! அச்சீமாட்டியின் புருஷர் யாரென்று அறிந்தீர்களா? இவ் அம்மையார் விஷயத்தில், அம்மனிதர் துரோகஞ் செய்தார் என்பது உண்மைதான' என்று பகட்டமாகவே கேட் டேன். அதற்கு என் சிற்றப்பாவோ, கப்பல் உத்தியோ கஸ்தரோ பதில் சொல்வதற்குள் நான் மீண்டும் ஆலோசனை யோடு, கப்பலில் ஏறிய நான்காம் நாள் கப்பல் முழுவதை யுஞ் சுற்றிப் பார்த்து வந்தோம்; பாரப்பா அப்போது கப் பல் இரண்டாவது தளத்தில் வயது முதிர்ந்த-ஆல்ை அலங் கா மிகுந்த-கனவான் ஒருவர் ஒரு வெள்ளைக்கார மாதோடு உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் கின்றிருந்த சிறிது தாத்திற் கப்புறம் மறைவான தோர் இடத்தில் இருந்து சுமார் 36-வயதுள்ள ஒரு மங்கை இங்கிலாந்து பிரயாணம் 175

இவர்கள் களியாட்டத்தைக் கவனிப்பதும், பெருமூச்சு விடு. வதும், ஆத்திரப்படுவதுமாக இருந்தார். இக்காட்சியை கான்-நீங்கள் கவனித்தீர்களோ என்னவோ-தற்செய லாகக் காண நேர்ந்தது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் அவர்களாகத்தான் இருக்குமோ என்று சந்தேகப் படுகிறேன். இருட்டில் கடலில் விழுந்த மாதை இன்னர் என அடையாளங் கண்டுகொள்ள என்னுல் முடியவில்லை. ஒரு வேளை இம்மாதின் கணவனைக் கண்டால் அடையாளங் கண்டு பிடிக்கக்கூடும்” என்று கூறினேன். .

உடனே என் சிற்றப்பா தலையை யசைத்து, ஆமாம் ஊகித்தது சரியே? நானும் நீ கண்ட காட்சியைப் பார்த் தேன். அக்கனவானே கடலில் விழுந்த சீமாட்டிக்குக் கணவர். ஒளிந்திருந்து கவனித்த மங்கையே அச்சீமாட்டி: அக்கனவான் தமக்குள்ள செல்வச் செருக்கால், பஞ்சமா பாதகங்களையும் வெகு சாதாரணமாகச் செய்பவரென்றும், கூடாவொழுக்கங்கொண்ட அவர் தம் மனைவியை ஏறெடுத் துக்கூடப் பார்ப்பதில்லை யென்றுக் தெரிகிறது. இருந்திர லும், இவ்வம்மையார் அவரைத் தீய நெறியினின்றும் விலக் கத் தம்மால் கூடுமானவரை முயன்று வந்தாராம்............” என்ருர். . . .”

என்ன செய்தும். பாவம்! அவ்வம்மையாரால் அம் மிருகத்தைத் திருப்பவே முடியவில்லை. அதேைலயே, அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ருர். ஆனல் கோர மரணத்துக்காளானர்; சார்” என்று கப்பல் உத்தியோகஸ்தர் தொடர்ந்து கூறினர். -

தம்மனைவி கடலில் விழுந்திறந்ததைப்பற்றி அக் கன வான் என்ன கூறுகிருர்?' என்று நான் கேட்டேன். அதற்குக் கப்பல் உத்தியோகஸ்தர், “என்ன சொல்வது? வெளிக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறார். உள்ளுக்குள், ‘சனி ஒழிந்தது’ என்று சந்தோஷப்படுவார்” என்று சொன்னார்.

“இம்மாதிரி மனிதர்களின் கூடாவொழுக்கத்தைக் கண்டித்துத் தண்டிப்பதற்குச் சட்டமேற்படுத்த வேண்டும்” என்று யோசனையோடு, கூறினேன். கப்பல் உத்தியோகஸ்தர் புன்சிரிப்பு கொண்டார். இத்துடன் எங்கள் சம்பாஷணை முடிந்தது.

அன்று மாலை காப்டன் என்னிடம் வந்து, எனது உடல் நிலையை விசாரித்தார். கப்பலிலுள்ளவர்கள் என்னைப் பாராட்டி, மரியாதை செய்தனர். சிலர் அக்கனவானையும், வெள்ளைக்கார மாதையும் நேராகவும், மறைமுகமாகவும் கேலி செய்ததோடு வையவுஞ் செய்தனர். இத்தொந்தரவையும், அவமானத்தையும் பொறுக்க மாட்டாது, அக்கனவான் வெள்ளைக்காரியோடு அடுத்த துறைமுகத்தில் இறங்கி விட்டனர்.