இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/லண்டன் மாநகரின் சிறப்பு

பதினேராவது அதிகாரம்


லண்டன்மா நகரின் சிறப்பு

டைசியாக, எட்டாம் நாள் நாங்கள் பிரயாணஞ் செய்த கப்பல் லண்டன் துறைமுகத்தையடைந்தது. நாங்கள் இருவரும் கப்பலை விட்டு இறங்கினோம். என் சிற்றப்பா, நாங்கள் போய் சேருமிடத்துக்கு டாக்ஸி கேப் (Taxi cab) ஒன்றை அமர்த்தினார். அதிலேறிப் புறப்பட்டோம். கப்பல் விட்டிறங்கும்போதே எனக்கு லண்டன்மா நகர் காட்சியளித்தது. நகரினுள் செல்லும்போது பூத உட லோடு சுவர்க்கம் புகுவது போன்ற ஒருவித புத்துணர்ச் சியை யடைந்தேன்.

லண்டன்மாநகரின் அமைப்பையும், கம்பீசக் தோற். றத்தையும் என்னென்பேன்! வானளாவியமாட மாளிகை களும் கூடகோபுரங்களும் வியாபார ஸ்தலங்களும் கண் களுக்கு கல் விருந்தளிக்கக் கூடியனவா யிருக்கின்றன. மக் கள் வசிக்கும் மாளிகைகளின் மாண்பை நாள் முழுதும், பார்த்துக் கொண்டிருக்கலாம். சில தெருக்களில் நாலு கிலே மாடங்க ளமைந்த மாளிகைகளும் மற்றுஞ் சில வீதிகளில் ஐந்து நிலை மாடங்க ளமைந்த மாளிகைகளும் ஒரே தன்மை யனவாய்க் கட்டப்பட்டிருந்தன. வியாபார ஸ்தலங்கள்: தொழிற்சாலைகள், ஹாஸ்டல்கள் முதலியன மட்டும் எட்டு நிலை மாடங்களமைந்தனவாயிருந்தன. சில தெருக்களில் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டிருந்தது பார்ப்பதற்கு விநோதமா யிருந்தன. நகரின் பல விடங்களிலும் நாடக சாலைகளும், நடன சாலைகளும், சினிமாப் படக்காட்சி சாலை களும், சித்திரசாலேகளும், பொருட்காட்சி சாலைகளும், ஏரா ளமாயிருந்தன. அதுவன்றி உய்யானவனங்களும் (Parks) பூங்காவனங்களும் (Gardens) நகரை அலங்களித்துக்கொண் டிருந்தன. தெருக்களின் ஒழுங்கை என்னென்று விவரிப் பது? பெரிய தெருக்கள் மரத்தாலமைத்த செங்கல் பதித் துத் தார்பூசி, ஒருவகைத் தாள் துளவி அழகாக அமைக்கப் பட்டிருந்தன. தெருக்களின் இரு பக்கங்களிலும் எட்டெட் டடி அகலம் சிமிண்டுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அப் பிளாட்பாாங்களின் மீது நகரமாக்தர் கடந்து சென்று கொண்டிருந்தனர். தெருக்களின் நடுவே மோட்டார் 178 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

முதலிய பலவகையான வண்டிகள் ஒழுங்காக ஒடிக் கொண்டிருந்தன.

லண்டன் நகரின் இச்சிறப்புக்களை நேரில் பார்த்த போது நான் உண்மையிலேயே ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தேன். இதற்கு முன் என் சிற்றப்பா வாயிலாகவும், லண்டன் சென்றுவந்த மற்றும் பல நண்பர் மூலமாகவும், இங்கிலாந்து தேச வரலாற்றைப் படித்ததன் பயனுகவும், நான் லண்டன்மா நகரின் அமைப்பையும், சிறப்புக்களையும், ஒருவாறு அறிந்து வைத்திருந்தேனுயினும், இவ்வளவு அலங் காரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை. இரண் டாயிரம் வருடங்களுக்கு முன், ஐந்தாறுமைல் பரப்பை யுடையதாயிருந்த ஒரு சிற்றார்-நாகரிக மில்லாத செம்பட வர்களே நிறைந்திருந்த ஒரு சிற்றார், இப்போது 700 மைல் பரப்பினே யுடையதாய் நாகரீகத்திலும், அறிவிலும், ஆராய்ச் சியிலும், அரசியல் தந்திரத்திலும் சிறந்த பல்லாயிரம் மக் களைக் கொண்டதாய், பலவகைச் சிறப்புக்களையும் வாய்ந்த தாய் இருக்கின்றதென்ருல் அது பேராச்சரியமுறத் தக்க தன்ருே இப்போதுகூட உலகப் படத்தில் பிரிட்டிஷ் தீவுகள் எங்கே இருக்கின்றனவென்று விளக்கைக் கொண்டு தேடிப் பிடிக்கக்கூடிய நிலையிலன்ருே - இருக்கின் 1றன எனினும், இங்கிலாந்து தேசத்தின் தலைநகரான லண் .டன்மா நகரம் உலகத்திலுள்ள பெரிய நகரங்களுள் தலை சிறந்து விளங்குகிறது என்று கூறுவது மிகையல்ல. மனி தராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் லண்டன்மா நகரைப்

பார்த்தே தீரவேண்டும்.

இவ்வாறு நான் லண்டன்மா நகரச் சிறப்பைப் பாராட்டிக்கொண்டே சிற்றப்பாவோடு டாக்ளி கே பில் சென்று கொண்டிருந்தேன். இதனிடையே, ஜான் கில் லண்டன்மா நகரின் சிறப்பு 179

பர்ட் நாங்கள் கப்பலேவிட்டு இறங்கிய சமயத்தில் கூட வந்து சந்திக்கவில்லையே என்ற எண்ணம் என் உள்ளத்தில் எழும்பிச் சிறிது யோசனையை யுண்டாக்கியது. கடைசி யாக காங்கள் இந்தியர்களால் நடத்தப்படும் ஒரு ஒட்டலே யடைந்து, நாங்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியை ஏற்படுத்திக்கொண்டோம். - -

என் சிற்றப்பா என்னைக் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை யில் சேர்ப்பதற்குரிய முயற்சிகளைச் செய்யலானர். நான் ಹTib. ಥ್ರ: வகுப்பில் சேர்ந்து வாசிப்பதற்காகச் சர்வ கலா சாலேத் தலைவருக்குப் போட்ட மனு அநுமதி வரும்வரை சிற்றப்பா என்னுடனேயே இருந்தார். நான் அக்கலாசாலே யில் எம். ஏ. வகுப்பு மாணவியாக எற்றுக்கொள்ளப் பட்டு, கலாசாலையைச் சேர்ந்த ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்க எனக்கு இடங்கொடுக்கப்பட்ட பின்னரே, அவர் இந்தியாவுக்குத் திரும்பினர். அதற்குள் அவர், எனக்கு லண் டன் நகரைச் சுற்றிக் காண்பித்து வரலானர். காங்கள் டிராம் வண்டியிலும் ஆம்னி பஸ்ஸிலுமாக (ஒரு வகை பஸ்) நகரின் பல பாகங்களையும் பார்த்து வந்தோம். டிராமோ, பஸ்லோ நம் காட்டிலுள்ளவைகளைப் போலில்லாமல், இரண்டு மூன்று மாடிகளை யுடையனவாயிருந்தன. அவ் வண்டிகளின் மேல் மாடியிலிருந்து பிரயாணஞ் செய்தால்: லண்டன் ககர முழுவதையும் நாம் பார்க்கலாம்.

நாங்கள் ஒரு நாள் மாலை சித்திரக் காட்சி சாலையைப் பார்த்துவிட்டு ஒட்டலுக்குத் திரும்பி வங்ககொண்டிருந் தோம். இருந்தாற்போலிருந்து எங்களுக்குப் பின்னல் சிறிது தூரத்தில் ஒரு சிறு ஆரவாரங் கேட்டது. நான் திரும் பிப் பார்த்தேன். ஒரு சில ஆங்கிலேயர்கள் எங்களைச் சுட் டிக்காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக்கொண் 180 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

டிருந்தனர். சிறுவர் எங்களை நோக்கி, “@errá®! (Blackie) பிளாக்கி' என்று உரக்கக் கூவிக் கைகொட்டிச் சிரித்த னர். எனக்கு அவர்கள் செய்கை யொன்றும் விளங்க வில்லை. சிற்றப்பாவுத் திரும்பிப் பார்த்துவிட்டுப் புன்சிரிப் புடன், நாம் கருப்பர்களாம். அம்மா! வெள்ளையர்களாகிய அவர்கள் வாழு மிடத்துக்கு நாம் வந்து நடமாடுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இந்தியர்களைக் கண்டால் அவர்கள் இவ்வாறுதான் கேலி செய்வது வழக் கம் என்று கூறினர். நான் வியப்போடு நடந்தேன்.

நான் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. சிறிய தந்தை என்னைவிட்டுச் சென்ற இரண்டு நாட்களுக் கப்புறம், ஜான் கில்பர்ட் ஹாஸ்டலில் என்ன வந்து பார்த்தான். கப்பல் எறிய்போது சந்தித்ததற். கப்புறம் என்னைப் பார்க்க முடியாமல் போனதற்கு அவன் ஏதேதோ காரணங்களெல்லாம். கூறினன். ஐந்தாறு மாக காலம் இந்நகரிலேயே இருக்கவேண்டி நேருமென்றும், ஆதலால் அடிக்கடி என்னே வந்து பர்ர்ப்பதாகவும் கூறி ன்ை. முதல் நாள் தான் இந்த பீடிகையெல்லாம். அப்புறம் அவன் நினைத்தபோதெல்லாம் வருவதும், என்னேப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வது மானன். நான் அவ: ைேடு பழைமை போலவே பழக ஆரம்பித்தேன்.

ஒரு நாள் சனிக்கிழமை இரவு எட்டு மணி யிருக்கும்! சனிக்கிழமைகளில் தொழிலாளர் முதல் அனைவரும் பலவித ம்ான கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும் இரவு முழு வ்தையுங் கழிப்பது வழக்கம். ஆகவே, மக்கள் ஆண்களும் பெண்களும், அணியணியாக நேடனசாலை, நாடக சாலை முதலிய இடங்களக்குச் சென்றுகொண்டிருந்தனர். இராக் கள்லங்களில் லண்டன்மா நகரம் ஒப்பற்ற அழகுடன் லண்டன்மா நகரின் சிறப்பு 181

விளங்கும். எங்கு பார்த்தாலும், பலவித கிறம் வாய்ந்த மின்சார விளக்குகள் பிரகாசிப்பது இதென்ன பூலோக சுவர்க்கமோ என்று கருதும்படியாக இருக்கும். அன்று ஜான் கில்பர்ட் என்னே ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்ருன். அங்கு ஏராளமாகக் கூட்டம் இருந்தது. இருப்பினும், மக்கள் அமைதியாக இருந்து ஒவ்வொருவ ராக டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நாங்களும் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம். ஆங்கில நாடக ஆசிரிய ரான ஷேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத்" (Macbeth) என்னும் நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.

ஜான் கில்பர்ட் மற்ற நாட்களைக் காட்டிலும் மிகுந்த குதுகலமா யிருந்தான். நாடகம் ஆரம்பமானதும் அவன் அதில் நடிக்கும் நடிகர்களுடைய திறமையைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவன் இடையிடையே சம்பந்தமில் லாத வார்த்தைகளைக் கொட்டி யளக்கலானன். அத்துடன் அவன் கைகளே இப்படியும் அப்படியுமாக ஆட்டி, என்ன இடித்து இடித்துப் பேசினன். நான் அவனது செயல்களை அவ்வளவாகப் பாராட்டவில்லை. கடைசியாக, அவன் காதல் சம்பவங்களை வருணிப்பதில் ஷேக்ஸ்பியரின் நிபுணத் வத்தைப் பலபடக் கூறி வந்தவன் உணர்ச்சி மேவீட் டாலோ என்னவோ சுற்று வட்டத்தைக்கூடக் கவனியாது உரக்கப் பேசத் தொடங்கி என் தோளின்மீது கையைப் போட்டு வீணைத் தந்தியைத் தடவுவதுபோல், என் கன் னத்தை வருடலானன். இச்செயல் எனக்கு ஒருவித திகைப் பையும், பரம சங்கடத்தையும் உண்டு பண்ணியது. இவன் என்ன மூளையை இழந்து விட்டர்ன என்றுகூட எண்ணி னேன். இச்சமயம் என் பின்னிருந்து கலுக்' என்று
184 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

யாரோ நகைக்குஞ் சப்தங் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். பின் வரிசையிலிருந்த ஒரு வாலிபர்'தம் கண் பருக்கு எங்கள் நிலைமையைச் சுட்டிக்காட்டி எதோ கூறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் நான் நாணத்தால் தலே கவிழ்ந்தேன். -

அதற்கப்புறம் எனக்கு அங்கு இருக்கை கொள்ள வில்லை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை ராஜதான்ரி கலாசாலையிலும் மியூஸியம் தியேட்டர் முதலிய நாடகக் கொட்டகைகளிலும் கலாசாலே மாணவர்களும் ԼՁற்றும் நடிகர்களும் நடித்திருப் பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், இப் போது இந்த லண்டன் தியேட்டரில் நடிக்கப் பெற்ற பமாக்பெத்’ நாடகத்தின் மேன்மையை எவ்வாறு புகழ்ந் துரைப்பேன் அதில் நடித்த நடிகர்களின் நடிப்புத் திறமை யைப் போல், அதன் பின்னரும் இன்றுவரைக் கண்டதில்லை. நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எடுத்துள்ள பாத் திரங்களாகவே ஆகிவிடுகின்றன. அதில் தான் ஜீவநாடி யிருக்கிறது. நாடகம் இவ்வளவு சிறப்புடையதாயிருந்தும் கான் அமைதியா யிருந்து, பார்ப்பதற்கில்லாமற் போயிற்று. ஜான் கில்பர்ட் அறிவில்லாமல் செய்த குரங்கு சேஷட்ை யால், பிறர் எங்களைக் கண்டு நகைக்க நேர்ந்த பிறகு நான் அங்கு எப்படி அமைதியாக இருந்து நாடகத்தைப் பார்க்க முடியும்? அனலின்மீது உட்கார்ந்திருப்பதுபோல் சங்கடப் பட்டேன். மனவேதனை காங்க முடியவில்லை. நாடகத்தி னிடையே எழுந்து வெளியே போவதுஞ் சாத்தியமில்லை:

ஜானே பின்னிருந்தவர்களின் ஏளனச் சிரிப்பை யுணர்ந்த தாகவே தெரியவில்லை. என் தோளின் மீது அமர்ந்து விஷமஞ் செய்துகொண்டிருந்த கைகளை நான் லண்டன்மா நகரின் சிறப்பு 185

துக்கியெறிந்தது அவனுக்கு ஒரு வேளை கோபமுண்டாக்கி யிருக்கலாம். நான் அவனே மீண்டும் சங்கோஜத்தோடு கவனிக்கும்போது அவன் தாரதிருஷ்டிக் கண்ணுடியால் நாடகத்தை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந் தான். சிறிது நேரத்திற்குப் பிறகே, நான் தலையைத் தூக்கி காலா பக்கத்தையுஞ் சுற்றிப் பார்க்கலானேன். எங்கு பார்த்தாலும், அணியணியாகவே இருந்த ஆண்களும் பெண் களும் ஒருவருக்கொருவர் சாகசச் செயல்களையும் சல்லாப மொழிகளையுமே பரிமாறிக் கொண்டிருந்தனர். இக்காட்சி யைக் கண்ட பின்னர், என்னிடம் குடி கொண்டிருந்த நாணம் அவ்வளவாகத் தலைகாட்டவில்லை. ஆண் பெண் பேத மின்றிச் சமத்துவம்ாகவே பழகும் நாட்டில் பிறந்த ஜான் என்னிடம் யாதொரு விகற்பமுமின்றிச் சர்வ சாதாரண மாகவே நடந்திருக்கிரு னென்றும் அவனது அக்கியோங்கிய பாவத்தை பறியாது அவனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது அடிமை நாடாகிய இந்தியாவில்-அதிலும் மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்த தென்னிந்தியாவில் பிறந்ததன் பயனுக உண்டான சகவாச கோஷமென்றும் கருதி மனம் வருந்தினேன். ஆகவே, இதல்ை ஒருவேளை உண்மை நண்பனுகிய ஜான் கில்பர்ட்டின் மனம் புண்பட் டிருக்கலாம் என்று எண்ணிய நான் அவனைக் குதுகலப் படுத்த வேண்டி கானகவே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் அவனே மிக நெருங்கிக் காதருகே முகத்தை வைத்து சம்பந்த மில்லாத வார்த்தைகள் பேச லானேன். ஜான் சிறிது நேரம் எங்கோ கவன முள்ளவன் -போலிருந்து, என் பக்கங் திரும்பி ஒரு விதமாகப் புன்முறு வல் கொண்டான். அதற்குப் பதிலளிப்பவள் போல் கானும் ஜானேப் பார்த்துச்சிரித்தேன். அதென்ன அர்த்தமில்லாத

13 i86 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அசட்டுச் சிரிப்பு என்று நீருஞ் சிரிக்கிறீரல்லவா தோழரே!

கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலேயனுபவமும், லண்டன்மா நகர வாசமும் ஏற்பட்டு எறக்குறைய நான்கு மாதங். களாய் விட்டன. சர்வகலாசாலேயின் விசேஷமோ, சீமை யின் மகிமையோ எனது தோற்றத்தில்-செயலில்-பேக் சில் பெரு மாறுதல் ஏற்பட்டிருப்பது எனக்கே நன்ருகத் தெரிந்தது. இளமையிலேயே, வெள்ளைக்காரத் தாதியால் வளர்க்கப்பட்டதஞல்ோ, பிறகு ஆங்கிலப் பாடசாலையிலும்: ஆங்கிலக் கிறிஸ்தவப் பாதிரிமார் பெரிதும் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவக் கலாசாலேயிலும், மேடுைகளில் பெரிய பெரிய பட்டம் பெற்று வந்திருக்கும் புரொபலர்களே நிறைந்த ராஜதானிக் கலாசாலேயிலும் படித்ததனுலோ உண்டாகாத, ஒரு மாற்றம் லண்டன்மா நகருக்கு வந்த பின்னர் ஏற்பட் டிருக்கிற தென்முல், அதற்கு ஏதேனும் முக்கிய காரணம். இருக்கவேண்டு மல்லவா ஆமாம்: உண்டு. சுற்று வட்ட மும் இடமும் எனது பெருமாறுதலுக்கு உண்மையான காரணமாகும். லண்டன்மா நகரில் வசிப்பவர்கள் பெரும் பாலோர் கந்தருவ லோகத்து மக்களோ என்று எண்ணு. orp. வேலை யென்பதே சிறிது மின்றி எப்போதும் உல்லாச மாகவே இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் விதவித மான நூதன உடைகளையும் நவீன நாகரிகப் போக்கையும் உடையவர்களா யிருந்தனர். கேம்பிரிட்ஜ சர்வகலாசால்ை மாணவ மாணவிகள் வகுப்பு நடக்கும் நேரங்களில் மட்டு மின்றி, மற்றக் காலங்களில் கலந்துறவாடிக் கொண்டிருக் தன்ர். கலாசாலையைச் சேர்ந்த ஹாஸ்டலில், பெண்களுக்கு, வேறு ஆண்களுக்கு வேறு தனி இடம் எற்படுத்தப்பட் டிருந்தது. ஒரு சமயம் ஆங்கில மகளிர் பலர், ஆண் லண்டன்மா நகரின் சிறப்பு 187

பெண் சமத்துவம் பாராட்டும் இங்காளில் பெண்களுக்கு தனி ஹாஸ்டல் ஏற்படுத்தியிருப்பது மிகவும் கேவலமானதா யிருப்பதோடு பெண்ணுலகை இழிவு படுத்துவதுமாகும். ஆகவே, மகளிராகிய நாங்களும் ஆடவர்களோடு கல்வி முதலிய விஷ்யங்களில் கலந்து பழகும்படிச் செய்வதற்கு ஹாஸ்டலில் வசதி செய்து தருதல் வேண்டும்’ என்று கிளர்ச்சி செய்தார்கள். ஆனல், அக்கிளர்ச்சி பயன் தர் வில்லை. இதிலிருந்து மேட்ைடு மகளிரின் அதி தீவிர மனப் போக்கை நீர் அறிந்து கொள்ளலாம். என்போன்று இங் தியாவிலிருந்து வந்து வசிக்கும் இந்திய மாணவர்களோடு ஆங்கில மாணவிகளும், இந்திய மாணவிகளோடு ஆங்கில வாலிபர்களும் மிகவும் அங்கியோங்கியமாகப் பழகி வருவது குறிப்பிடத்தக்கதாகும். என்னேடொத்த மாணவ மாணவி களின் அதி தீவிரப் போக்கும் என்னிடம் மிக நெருங்கிப் பழகும் கில்பர்ட்டின் மனப்போக்கும் என்னே நாளடை வில், ஆங்கில மகளாகப் புனர்ஜன்மம் எடுக்கச் செய்து விட்டது. நாகரிகம் முதிர்ந்த ஆங்கிலப் பெண்மணிகள் உடுத்துவதுபோன்ற பாரஸிக மாதர் உடைகளையே உடுத்தி வந்தேன். லண்டனுக்கு வரும்போது கப்பலில் இந்திய மாணவ மாணவிகள் கடந்துகொள்ளும் மாதிரியைக் கண்டு அருவருப்புற்ற யானே இப்போது அவர்களைக் காட்டிலும் நடை யுடை பாவனைகளில் விஞ்சி கின்றேன் என்று அன் பரே வெட்கத்தோடு கூறுகிறேன். . .

கலாசாலையிலும் எனக்குப் பல மாணவ மாணவிகள் சிசேகமாயினர். ஆயினும் கலாசாலை நேரம்போக மற்ற நேரங்களில் பெரும் பகுதியை ஜான் கில்பர்ட் கொள்ளை கொண்டு விட்டான்-அதாவது அவன் என்னைப் பல இடங் களுக்கு அழைத்துச் சென்று வந்தான்;. ஆகையால், 188 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அவர்களே டெல்லாம் நட்பு அவ்வளவாக வேரூன்ற

& 、x ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கள் இருவரும் லண்டன் நகரைப் பொழுது போக்காகச் சுற்றிவரப் புறப் பட்டோம். முதலில் ஹைட் பார்க் (Hyde Park) குக்குச் சென்ருேம். மற்ற பார்க்குகளே விட அது எல்லா வகைகளி அம் சிறப்புடையதாய் இருந்ததால் அங்கு எப்போதுமே கூட்டம் அதிகமாயிருக்கும். அங்கு බුෂ பக்கம் ஆஸ்திகப் பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது. மற்ருெரு பக்கம் அர சியல் வாதி அரசாட்சியில் உள்ள குற்றங் குறைகளை எடுத்து வாதித்துக் கொண்டிருந்தர்ர். இன்ைெரு பக்கம் பெண்ணுரிம்ைபைப் பற்றி பிரசங்கம் நடந்து கொண்டிருந் தது. பிறநாடுகளின் கிலேமையைப் பற்றி வேருெருவர், வேருெரு பக்கம் சொற் பொழிவு செய்து கொண்டிருந் தார். ஒவ்வொரு இடத்திலும் ஜனங்கள் கூட்டங் கூடி ஆவ லோடு கேட்டுக் கொண்டிருந்தனர். இவைகளே யெல்ல்ாம் இலட்சியஞ் செய்யாது பலர் ஒய்யாரமாக உடை யுடுத்திக் கொண்டு ரேடியோ சங்கீதத்தைக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர். . - .

நாங்கள் அந்தப் பார்க்கில் சிறிது நேரம் உலவிவிட்டு வெளிவந்தோம். எங்கள் எதிரில் இருவர் (அவர்களில் ஒரு வர் குருடர்) ஹார்மோனியம் வாசித்த வண்ணம் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தில் க்டிதம் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது. அக் கடிதத்தில் அவர்கள் வறுமை நிலை விவரிக்கப்பட்டிருந்தது. லண்டனில் பிச்சைக்கர்ரர்கள் வெளியே திரிந்து யாசகம் வாங்கினல் திண்டன் படைப் நேருமாதலால் தீப்பெட்டி விற்பது பாட்டு க்ள் பாடி வருவது போன்ற போக்குக் காட்டி லுெளியே

% லண்டன்மா நகரின் சிறப்பு 189,

திரிவது வழக்கம். எனவே, நாங்கள் அப்பிச்சைக்காரர் களுக்கு இரண்டு பென்னி (இங்கிலாந்து நாணயம்) களைக் கொடுத்துவிட்டு அப்புறம் சென்ருேம். -

நாங்கள் நீண்ட ஒரு தெருவழியாகப் போப்க்கொண் டிருந்தோம். ஒரிடத்தில் பாதையின் நடுவில் இரும்புக் கம்பி களே வளைத்து வைத்திருக்கும் இடமொன்று காணப்பட் டது. அதனருகில் பூமியிலுள் குகைபோல ஒரு வழி தோன் றியது. அதன் வழியே ஒருவரிருவர் இறங்கிப் போய்க் கொண்டிருந்தனர். இதைக்கண்ட யான், இது என்ன! பூமியிலுள் சுரங்க வழி யிருக்கிறதா அவ்வழியாகப் போனல் எங்கே போகலாம்?' என்று ஜானே நோக்கி கேட்டேன். - -

கில்பர்ட் புன் கிரிப்போடு, இதுவரை இதைப்பற்றி உனக்குத் தெரியாகா இது சுரங்கமுமல்ல; வேருென்று மல்ல. குகைபோலக் காணப்படும் இவ்வழியாகச் சிறிது தாரஞ் சென்ருல், கற்களால் கட்டப்பட்ட அழகான தோரி டத்தை யடையலாம். அது.மாந்தர் சிறுநீர் கழித்தற்கு ஏற். படுத்தப்பட்ட இடமாகும். அதனருகில் இருக்கும் வாயி லின் தொளையில் ஒரு பென்னி'யை யிட்டால், அவ்வாயில் திறக்கும். அதனுள் மலங் கழித்தற்கான இடம் வசதியாக அமைந்திருக்கிறது. பெரிய தெருக்களில் இதுபோன்றே பல இடங்கள் இருக்கின்றன” என்று சொன்னன். -

மேலுஞ் சிறிது தூரம் நடந்து சென்றதும், ஜான் எதையோ நினைத்துக் கொண்டவன் போல், ஆமாம்; புவன அந்த இடத்தைப் பார்த்துச் சுரங்க வழியா என் முயே! கினைத்த மாதிரி இது சுரங்கவழியா யில்லா விட் டாலும், உண்மையாகவே சுரங்கவழிகள் இந்நகரில் இருக் கின்றன. அவைகளின் வழியாகத் தரைக்குள் பிரயாணஞ் 190 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

செய்யலாம். இது நேரே பார்க்கத் தகுந்த சிறந்த காட்சி களுள் ஒன்ருகும். வா! அதை உனக்குக் காட்டுகிறேன்" என்று கூறி யழைத்துச் சென்ருன். நான் ஆச்சரியத்தோடு அவனைப் பின் தொடர்ந்தேன்.

ஒரிடத்தில் அழகான சிறிய கட்டடமொன்று காணப்பட் ட்து. அதன் வாயில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்புறத்தில் "Underground (தரையின் கீழ்) என்று எழுதி யிருந்தது. ஜான் அங்கு கற்களால் அழகாக அமைந்திருந்த பாலத்தின் வழியாக என்னே பழைத்துச் சென்ருன். அவ் வழியாகக் கீழே இறங்கியதும் எலக்டிரிக் விளக்குகள் வரிசையாக எரிந்து பிரகாசித்துக் கொண்டிருந்த வழி யொன்று தென்பட்டது. அதன் வழியே சிறிது தாஞ் சென்றதும் டிக்கெட் விற்கு மிடத்தை யடைந்தோம். ஜான் அங்கே வைத்திருந்த பெட்டியின் தொளையில் சில பென்னிகளை வைத்தான். உடனே வேருெரு வழியாக ஒரு டிக்கெட் வெளியே வந்தது. இவ்வாறே இன்னுெரு டிக் கெட்டும் வாங்கிக்கொண்டான். அந்தப் பெட்டியின் மீது இன்ன இன்ன இடங்களுக்கு இதில் டிக்கெட் கிடைக்கும் என்றும், அவ்வவ் விடங்களுக்குக் கூலி இத்தனை பென்னி என்றும் அக்கூலியைப் பெட்டியின் துவாரத்தில் வைக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தது. இவ்வியந்தித்திரன் மூல மாக வன்றி அங்குள்ள குமாஸ்தா (Booking-clerk) விடத் திலும் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் எதிரே காணப்பட்ட ஒருபால் தொட்டியண்டை ஜான் என்னைக் கூட்டிச் சென்ருன். அதில் "Lift என்று எழுதியிருந்தது. அத்தொட்டியில் நாங் கள் ஏறியதும், அங்கிருக்கும் வேலைக்காரன் தொட் டியின் இருபுறத்துக் கதவுகளையும் அடைத்து, ஒரு யந்திரத்தால் லண்டன்மா நகரின் சிறப்பு 191

அதை மெதுவாகக் கீழே இறக்கினன். தொட்டி 120 அடி களுக்குக் கீழே போய் கின்றது. நாங்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறிளுேம். அங்கு பல விடங் களுக்கும் வழி சென்றது. நாங்கள் கொஞ்ச தாரஞ் சென் றதும், அப்போதுதான் வந்து கின்ற மின்சார வண்டி யொன்றில் ஏறினேம். அவ் வண்டியில் கதவைத் திறந்து மூடுவதற்கு switch அமைந்திருந்தது. அதைக் கவனித்தற் கென்று அமர்த்தப்பட்டிருந்த வேலேயாளொருவன் வண்டி ஒரு இடத்தில் கின்றதும், அந்த ஸ்டேஷன் பெயரும், வண்டி புறப்பட்டவுடனே அடுத்த ஸ்டேஷன் பெயரும் உரத்துக் கூறிக்கொண்டிருந்தான். அதுவன்றி ஸ்டேஷன் பெயரும் பெரிய எழுத்தில் எழுதி யிருந்தது. பூமியின்கீழ் வண்டிகள் போவதற்கும், வருவதற்கும் வேறு வேறு வழி (Tracks) இருந்தது. வண்டிகள் போவதற்குப் பூமியைத் கொளத்து உள்ளிடத்தில் செங்கல்களால் கட்டி வழி அமைத்திருந்தது. அங்கு டிராம் வண்டிகள் கூட ஒடிக் கொண்டிருந்தன. & -

தரையின் உள் வழியாகவே லண்டன் நகரின் பல பாகங்களுக்குஞ் சென்று விட்டு, மீண்டும் நாங்கள் தரை யின் கீழாகவே யிருந்து மேலேறினுேம். இச்சமயம் (Lift)ல் ஏறுவதற்குப் பதிலாக, இப்போது அசையும் படிகள் (Moving stairs) ஒன்றில் ஏறி கின்ருேம். உடனே நாங்கள் அப்புடிமீது கின்றவாறே மேலிடத்தை படைந்தோம்.

மற்ருெரு நாள் ஜான் கில்பர்டும், நானும் லண்டன்மா நகரை யடுத்துள்ள குன்றுகளையும், வனங்களையும் சுற்றிப் பார்த்துவரச்சென்ருேம். நாங்கள் ஒரு தனி மோட்டார் காரில் ஏறிச் சென்ருே மாதலால், இயற்கைக் காட்சிகளைக் கண்ணுரக் கண்டு களித்தோம். பொழுது சாயுஞ் சமயத் 192 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தில் நாங்கள் நகருக்குத் திரும்பி வந்தோம். கடைசியாக நாங்கள், லண்டன் நகரையே வளம்படுத்தி நிற்கும் தேம்ஸ் நதிக்கரைப் பக்கமாக வந்துகொண்டிருந்தோம். அங்கதி யின் படகுகளும் ஸ்டீம் லான்சுகளும் இங்கு மங்குமாக ஒடிக்கொண்டிருந்தன. கதியின் இரு பக்கங்களில் இருந்த உயர்ந்த மாடங்களும் அடுத்தடுத்துக் கட்டியுள்ள பாலங் களும் அம் மாலேக்காலத்தில் நகரைப் பேரழகு செய்து கின்றன. w

தேம்ஸ் நதியின் கரையில், சுற்றிலும் இரும்புக் கம்பி களால் வளைக்கப்பட்டு, இரு பக்கத்தும் உயர்ந்தோங்கிய பெரிய கோபுரங்களை யுடையதாய், பேரழகு வாய்ந்ததாய் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலெஸ்” என்னும் பார்லி மெண்டு சபைக் கூட்டத்தின் தோற்றம் என் கண்களுக்கு கல்விருந்தா யிருந்தது. - . .ب

நான், தேம்ஸ் நதியின் ரமணியமான அழகிலும் பார்லி மெண்ட் சபைக் கட்டடத்தின் கம்பீரத் தோற்றத்திலும் அறிவைப் பறிகொடுத்துப் பார்த்து வருகையில் என் பக்கத் தமர்ந்து மோட்டாரை ஒட்டியவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டு வந்த ஜான் கில்பர்ட் திடீரென்று வெறி பிடித்த வன்போல், வலது கையால் பிடித்திருந்த ஸ்டிரீங்கை விட்டு விட்டு, டார்லிங்' மை டியர் டார்லிங்!! (Darling!! My Dear Darling!!)----···---···········---···· ’ என்று கூறிய வண் ணம் என்னைச் சேர்த்துக் கட்டி முத்த மழை பொழிந் தான். நான் திகைப்பும் வியப்பும் ஒருங்கே எழ ஏதோ கூற முயன்றேன். ஆனல் இதற்குள்..........ஆ எங்கள் மோட்டார் கட்டுக் கடங்காது வளைந்து ஓடியதன் பயனுக எதிரே வந்த மோட்டா ரொன்றில் மோதிக் கவிழ்ந்தது. கில்பர்ட் ஒரு பக்கம் போப் விழுந்தான். நான் ஒரு லண்டன்மா நகரின் சிறப்பு 193.

மூலையில் போய் உருண்டேன். நான் விழுந்த அதிர்ச்சி பில் உணர்வு கலங்கி மயங்கு நிலையை யடைகையில், ஜனங் கள், 'ஆ' ஆ! ஐயோ! போய்விட்டார்களே' என்று அல துஞ் சப்தங் கிணற்றிலிருந்து கேட்பதுபோல் என் காதில் விழுந்தது. - -

நான் மீண்டும் கண் விழித்தபோது ஒரு படுக்கையில் இருப்பதை யுணர்ந்தேன். என் தலை மிகவும் பளுவாய் இருந்தது. உடம்பெல்லாம் வலி யெடுத்தது. நான் சுற்று. முற்றும் பார்த்தேன். லேடி டாக்டர்களும், சர்ஸ்-களும் என்னைக் கவனித்தவண்ணம் நின்றிருந்தனர். இகளுல் நான் இருப்பது ஒரு ஆஸ்பத்திரியென்று புலப்பட்டது. அதற்கப்புறக்கான், நான் பார்லிமெண்டு சபைக் கட்டடத். துக்குச் சமீபத்தில் கில்பர்ட்டுடன், மோட்டாரிலிருந்து விழுந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அவ்விபத்தி லிருந்து நான் எவ்வாறு உயிர் தப்பினேன் என்பது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. ஜான் கில்பர்ட் எக்கதி. யானுன் என்னுங் கேள்வி அடுத்தபடியாக, என் மனதில் உதித்தது. எனவே, கவலையோடு சான் என்னைச் சூழ்ந்: திருப்பவர்களே மருள மருள விழித்துப் பார்த்தேன்.

என் அருகிலிருந்த லேடி டாக்டர், லளிதமாக என் னைப் பார்த்துக் கையமர்த்திவிட்டு, ஸ்டெதாஸ்கோப்' என் உங் கருவியால் என் தேக முழுவதையும் பரிசீலனை செய் தாள்; நாடியைக் கவனித்தாள்; பின்னர் அவள் எனக்கு. உள்ளுக்கும் வெளிக்கும் மருந்துகொடுத்துவிட்டு, பக்கத்தி" லிருந்த நர்ஸிடம் எதோ சொல்லிவிட்டு அவ்விடத்தினின் மம் அகன்ருள். சிறிது நேரத்திற்கெல்லாம் என்னைக் கவ னிப்பதற்கென்றே நியமிக்கப்பட்ட மேற்படி நர்ஸ் தவிர மற்றவர்களெல்லாம் போய்விட்டனர். 194 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பிறகு நான் மெதுவாக எழுந் துட்கார முயன்றேன். ஆனல் என்னல் எழுந்திருக்க முடியவில்லை. இதற்குள் அந்த கர்ஸு, நான் உடம்பை அலட்டிக்கொள்ளக் கூடா தென்றும், அசையாமலே படுத்திருந்தால்தான் சீக்கிரம் தேகம் குணமடையுமென்றும் தெரிவித்தாள். நான் படுத்த வண்ணமாகவே ஜான் கில்பர்ட் என்னவானன் என்று -மெதுவாகக் கேட்டேன். - -

அந்த கர்ஸ் என்னை ஒருவிதமாகப் பார்த்து விட்டுப் புன்சிரிப்பு கொண்டாள். பிறகு, "அம்மா! அவர் வேருெரு ஆஸ்பத்திரியில், கவலைக்கிடமான நிலையிலிருக்கிருர். அவ ருக்கு உடம்பு முழுதும் பலமாகக் காயங்கள் ஏற்பட்டிருக் கின்றன. ஆனல், அவரது உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. பயப்படாதே....உ.ம். கடவுள்தான் உங்க ளிருவரையும் இப்பேராபத்தினின்றும் காப்பாற்றினர். இல்லாவிடில், நீங்கள் இம்மோட்டார் மோதலில் பலியாகி இருப்பீர்கள். --TamilBOT (பேச்சு) 03:28, 10 ஏப்ரல் 2016 (UTC)’ என்று கூறினுள். இதைக் கேட்டதும் என் தேகம் நடுங்கியது. எதிர்பாராத இப்பேராபத்து நேர்ந்த தற்கு முக்கிய காரணமானவன் ஜான் கில்பர்ட் அன்ருே அவனது அசட்டுச் செயலாலன்ருே இவ்வாறு நடந்தது? என்று நான் எண்ணியபோது, ஜான்மீது உண்மையிலேயே ஆத்திரம் பொங்கி யெழுந்தது. ஆல்ை, அடுத்த கணம் அவனிடம் எனக் கேற்பட்டிருந்த பாசம் அக் கோபத்தின் வேகத்தை யடக்கி யொடுக்கியது. மேலும், அவன் என் னேக்காட்டிலும் பலத்த காயங்களுக்குள்ளா யிருக்கிருன். என்றறிந்ததும், வருத்தத்தையும் மறந்து அவன்பால் இரக் கங்கொண்டேன். . . . .

பத்துப் பதினேந்து நாட்களுக்கள் நான் பூரண குண மடைந்து ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறினேன். ஜான் லண்டன்மா நகரின் சிறப்பு 195

கில்பர்ட் குணமடைவதற்கு மட்டும். இரண்டு மாதங்க ளாயின.” ‘. . .

இவ்வாறு தன் வரலாற்றைக் கூறிக்கொண்டே வந்த புவனசுந்தரி என்ன உற்று நோக்கி, என்ன தோழர்ே! உமது முகம் எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் காட்டு கிறதே! என்ன யோசிக்கிறீர்?' என்று திடீரெனக் கேட் டாள். - - •

நான் (புன்னகையோடு);-ஒன்றுமில்லை” என்றேன். புவனசுந்தரி:-உம் - தெரிந்துகொண்டேன். நீர் என்ன சிந்திக்கிமீர் என்பதை அறிந்துகொண்டேன். எனக் கும் ஜான் கில்பர்ட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய தொடர்பும், அவன் சமயா சமயங்களில் செய்துவரும் சாச சல்லாபங்களுக்கெல்லாம் உட்பட்டு இணங்கியிருந்து வரும் மனுேபாவமும் உமக்கு ஆலோசனையை புண்டாக்கிவிட் டது என்று தெரியும்.-நான் ஊகிப்பது சரிதானே! என் தயங்குகிறீர்? சரியென்று சொல்வதால் எனக்கு காணம் ஏற்படுமோ என்று கருதுகிறீர்ா! அதெல்லாம் ஒன்றும் உண்டாகாது. நான் செய்தது தவறு என்று எனக்கே கன் முகத் தெரிகிறதே! ஆனல் நான் கெட்ட் பிறகு உண்டான அறிவும் அனுபவமும் முன்னரே ஏற்பட்டிருக்குமானல், நான் இக்கதியை யடைந்திருக்கமாட்டேன். ஜான் கில் பர்ட் போன்ற எமகாதக வாலிபர்களின் காதல் லீலைகளுக் குக் கருவியாக அமைந்திருக்க மாட்டேன் என்பது நிச்ச யம். ஜான் கில்பர்ட் தன் கருத்துக்கு என்ன எப்படி இணங்கி வரும்படிச் செய்தான் என்பது எனக்கே தெரி யாது. அதை நினைத்தால் எனக்குப் பேராச்சரியமாய் இருக்கிறது. ஜன சமூகம் மிக விபரீதமான செயலென்று கருதக்கூடிய விஷமச் செயல்களையும் சர்வ சாதாரண்மான. #96 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தென்றும், சிநேகிதர்க்ளினிடையே சகஜமாக நடைபெறக் கூடிய விளையாட்டுச் செயலென்றும் நான் கருதிப்பேசாம லிருக்கும்படி அவன் முதலிலிருந்தே மிகத் தந்திரமாகப் பழக்கி வந்திருக்கிருன். அதிலும் லண்டனுக்கு வந்ததற்கு அப்புறம் அவன் முன்னேயினும் தாராளமாகப் பேசியும் பழகியும் வந்ததோடு, என் விருப்பத்தை யறியாமலே, எந் தச் சமயத்திலும், என்னவானுலும் செய்வது என்ற கிலேக்கு வந்து விட்டான். இராத்திரி சங்கம் (Night Club), சினிமாப் u -áærlig Frå» (Picture Palace) முதலிய இடங்களுக்கு என்னை அடிக்கடி அழைத்துச் சென்று, விட புருடரோடு திரியும் விலைமகளிர் போக்கைக் காட்டி, உலகம் என்ருல் இதுதான்.மக்கள் வாழ்க்கை என்பது இதுதான்-என்று எண்ணி மனவிகாரமடையும்படிச் செய்து, அவன் கருத்தை நிறைவேற்றுவதற்கு என்னைப் பண்படுத்தி வந்தான் என்று தெரிகிறது. அதிகம் கூறுவானேன்! ஜான் கில்பர்ட், பூநீகி வாஸன் போன்றவர்கள் என்னே மயக்குவதற்குச் செய்து வந்த ஆடம்பரமான உடைகளிலும், தடபுடலான செயல் களிலும், நயவஞ்சகப் பேச்சிலும் நான் அறிவைக்கொள்ளை கொடுத்தேனே யொழிய உண்மையானவர்கள் நட்பை நான் சிறிதும் மதித்தேனில்லே.

எனது சிநேகிதர்களில் என்னே எனக்காகவே நேசித்து, - என் நன்மையையே விரும்பி வந்தவர் ஒருவர் உண்டு என் ருல் அவர் சத்தியநாதன் என்பவ ரொருவர்தான். அவரைப் போன்ற உத்தம புருஷரை என் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவர் ராஜதானி கலாசாலையில் என்ளுேடு வாசித்தவர். அவரைப்பற்றி உமக்கு இதுவரை ஒன்றுமே கூறவில்லை. அவரது அமைதியான தோற்றமும், மேன்மை யான பேச்சும் போலி நவ நாகரிகச் சேற்றில் அழுந்திய லண்டன்மா நகரின் சிறப்பு 197

என் போன்ற இளம் பெண்களே வசீகரிக்காது. ஆயினும் உருவத்திலோ, கல்வி அறிவிலோ, துண்ணிய ஆராய்ச்சி யிலோ குற்றங் குறை கூறுதற்கு முடியாது. மாணவர்க வளிடத்திலோ, ஆசிரியர்களிடத்திலோ, பாரிடத்திலானலுஞ் சரி, அவர் அநாவசியமாக உரையாட மாட்டார். இவரது இத்தன்மையைக் கண்டு சில மாணவர்களும், மாணவிகளுங் கூடக் கேலி செய்வதுண்டு. எனினும், அதையெல்லாம் அவர் லட்சியமே செய்ததில்லை. அத்தகையவர், என்னிடம் என்ன காரணத்தாலோ கேசமுடையவரா யிருந்தார். அவர் எனது கலத்தை அடிக்கடி விசாரிப்பார். எனக்கு ஏதேனும் உம்ருல், அவருக்கு ஏற்பட்டதுபோல் வருந்துவார். வகுப் பில் நான் ஏதேனும் பாடத்தில் விஷயமறியாது தடுமாறி ல்ை, உடனே அவர் அதை எனக்கு விளக்கிக் கூறித் தெளிவுபடுத்துவார். இவ்வளவு தாரம் அவர் என்னிடம் பரிவுடன் நட்புரிமை பாராட்டி வந்தும், நான் அவரை லட் சியஞ் செய்வதேயில்லை. அவர் எனது தோழமைக் குரிய வர் என்று கருதியதுமில்லை. சமய சந்தர்ப்பம் நேர்ந்தால் அவரோடு பேசுவது என்ற அளவில் சாதாரணமாகவே பழகி வந்தேன். எனது இவ்வலட்சிய பாவத்தை யறிந்து கொண்டாலும், அவர் என்னிடம் அன்புடையவராகவே யிருந்தார். அவரது போன்புக்கும் எனது அலட்சியத்துக்கும் உதாரணமாக ஒரு சிறு சம்பவத்தை மட்டும் இங்கு உமக் குக் கூறுவது அவசியமென்று எண்ணுகிறேன். -

கோடைக் காலம், ராஜதானி கலாசாலை விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆதலால் ஒருநாள் நானும் என் தாயும் பெரம்பூரிலுள்ள உறவின ரொருவர் விட்டுக்குச் சென்று விட்டு, பிற்பகல் மூன்று மணிக்குமேல் விடு திரும்பிக் தொண்டிருந்தோம், எங்களுடன் என் சிற்றன்னேயும் வத் 198 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

திருந்தாள். போகும் வழியில், சைபைஜாருக்குச் சென்று சில துணிமணிகளை வாங்கிச் செல்லலாமென்று எங்களுக்கு யோசனை யுண்டாயிற்று. எனவே, நாங்கள் ஏறிவந்த (Governess cart) ஐ சைனுபஜார் பக்கம் ஒட்டச் செப் தோம். வண்டி பெரியமெட்டு வழியாக வந்து பீபில்ஸ் பார்க்குக்குள் நுழையும்போது, இருக்காற்போலிருந்து குதிரை இடக்குச் செய்ய ஆரம்பித்தது. வண்டி யோட் டிக்கு அது அடங்காது முன்னங்கால்களைத் தாக்கிக்குதித்து முன்னுக்கும் பின்னுக்குமாக இழுத்து எங்களே யலட்டியது. அது செய்யும் ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் வண்டியிலிருந்து துக்கி யெறியப்படுவோம் போலிருந்தது. என் சிற்றன்னே யின் குழந்தைகள் இதைக் கண்டு பயந்து அழ ஆரம்பித் தன. இங்கிலையைக் கண்டு ஜனங்கள் கூடி விட்டார்கள். ஆல்ை, எல்லாரும் குதிரையின் சண்டித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களே யொழிய, வண்டியி லிருப் பவர்களுக்கு விபத்தொன்றும் நேராதவாறு காப்பாற்ற: வேண்டுமே என்ற எண்ணம் ஒருவருக்காயினும் இருந்ததா கத் தெரியவில்லை. நாங்கள் இறங்குவதற்கோ வழியில்லை; சங்கடப்பட்டுக் கொண்டிருந்தோம். இச்சமயத்தில் யாரோ ஒரு வாலிபர் கிழக்குப் பக்கமாக இருந்து ஓடிவந்து துள் ளித் துள்ளிக் குதிக்கும் குதிரையின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, ஒரு காவுத்தாவிக் கடிவாள வாளைப் பற்றி இழுத்துப் பிடித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் குதிரை அடங்கி கின்றுவிட்டது. உடனே வண்டியோட்டி வண்டியினின்றும் கீழே குதித்து, அவ்வாலிபருக்கு நன்றி கூறிவிட்டு, குதிரையைத் தட்டிக் கொடுத்துச் சாந்தப் படுத்தினன். இவ்வளவு துணிகரமாகக் குதிரையை படக் கிய வாலிபர் யாரென்று நான் பார்த்தேன். என்ன ஆச் சரிய்ம் எனது கலாசாலைத் தோழர் சத்தியநாதனே அவ்: வாலிபர். எனவே, நன்றியறிதலும், மகிழ்ச்சியில் தாங்க மாட்டாமல், “மிஸ்டர் சத்திநாத! எங்களை விபத்தினின்றுங் காப்பாற்றியதற்காக மிகவும் வந்தனம்” என்று கூறிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். அப்போதே வண்டியிலிருப்பவர்களைக் கவனித்த சத்தியநாதர் என்னை நோக்கி, “ஆ புவனா! உங்கள் வண்டியா இது! எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே…”என்று வியப்போடு கூறினார்.

பின்னர் அவர், தாம் பொழுது போக்கிற்காக, பார்க்குக்கு வந்ததாகவும், தூரத்தில் குதிரை பண்ணும் இடக்கைப் பார்த்து விட்டு, ஓடி வந்ததாகவுஞ் சொன்னார். “கடவுள்தான் உங்களை இந்நேரத்தில் இங்கு கொண்டு வந்து விட்டார்” என்று நான் ஆறுதலாகக் கூறிக் கொண்டேன். அவர் என்னுடைய நன்றியறிதலான வார்த்தையை அவ்வளவாகப் பாராட்டாது, இரண்டொரு வார்த்தை கூறி விட்டு, விடை பெற்றுச் சென்றார். நான் வண்டியிலேறியதும், குதிரை பழையபடி ஒழுங்காக ஓடியது.