இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/புவனசுந்தரியின் இளம் பருவம்

இரண்டாவது அதிகாரம்


புவனசுந்தரியின் இளம் பருவம்

ங்ஙனம் எல்லா சாமான்களையும் முன் போல் ஒழுங்காக வைத்து விட்டு, அம்மங்கை எனக்குச் சிறிது தூரத்தில் எதிரே உட்கார்ந்த வண்ணம், “ஐயா! என் கதையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.

“ஆஹா! தாராளமாய்” என்று உற்சாகத்தோடு சொன்னேன். இங்கு வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். நான் அம்மங்கையைப் பார்த்தது முதல் இவ்வளவு நேரமாகப் பேசி வந்தது வரை, அவள் ஆடவனாகிய என்னோடு தனியாகப் பேசுவதைப் பற்றி நாணமோ அல்லது அச்சமோ ஆகிய எவ்வித உணர்ச்சியையுங் கொள்ளவேயில்லை. சாதாரணமாக, ஓர் ஆடவனோடு மற்றொரு ஆடவனோ, ஒரு மங்கையோடு மற்றொரு பெண்ணோ பேசுவது போலவே, யாதொரு வேற்றுமையுமின்றிப் பேசினாள்; பழகினாள் என்றே சொல்ல வேண்டும். இது எனக்கு ஒரு பெரிய வியப்பையுண்டு பண்ணியது. பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணமும், இவளுக்கு—சமூகத்தை விட்டு வெளியேறியிருப்பதால்—அற்று விட்டதோ என்றும் எண்ணினேன்.

அம்மங்கையினது கடைசிக் கேள்விக்கு நான் பதிலளித்ததும், அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். இப்போது அவள் முகத்தில் துயரங் குடிகொண்டது. இம்மாறுதலை, வானத்தில் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த புவன சுந்தரியின் இளம் பருவம் 25

சந்திரனை மேகங்கள் மறைத்தால் எவ்வாஅ இருண்டு விடுமோ அதுபோல, அவள் வதனத்தைத் துன்பஞ் சூழ்ந்து கொண்டதென்றே உவமிக்கவேண்டும். இதிலிருந்து அவளது மனம் அச்சமயம் மிகுதியும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது என்று நன்கு தெரிந்தது. பின்னர் அவள் தலை குனிந்த வண்ணம் மெதுவான குரலில் தன் வரலாற் றைக் கூற ஆரம்பித்தாள். - - -

தோழரே! ஆம், எனக்கு உற்ற தோழர்தான். உமது கொள்கையும், உணர்ச்சியும் பெரும்பாலும் எனக்கு ஒத் திருக்கின்றமையால், நான் நட்புகொண்டு பழகுகந்குரியவ சென்றே நான் நம்புகிறேன்-வன விலங்கு களிடையே இம் மலையில் வாழும் நான், செல்வத்திலேயே பிறந்து செல்வத் திலேயே வளர்ந்தவள். ஆனல், அச்செல்வத்திலேயே புரண்டு இறக்கும்படியான ఇడి)ణాu அடையாததற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். கருவிலேயே திருவுடையார்’ என்று சொல்கிருர்களே! அம்மொழி எனக்காகவே பிறக் தது என்று எண்ணி இறுமாந்த காலமு முண்டு. எனது தந்தையார் சென்னமா நகரிலுள்ள லட்சாதிபதிகளில் ஒரு வர். அவருக்கு நான் ஒருத்தியே பிள்ளேயும், பெண்ணுமா யிருந்தேன். எனவே, எனது பெற்மூேர்கள் என்னே எவ் வளவு அருமையாகவும், செல்வமாகவும் வளர்த்திருப்பார் கள் என்பதை நீங்களே ஊகித்தறிந்து கொள்ளலாம். என் தந்தைக்குக் தம்பி யொருவர் உண்டு. அவரது குடும்பத் தாரும் எங்களுடனேயே வசித்துவத்தனர். எனது தங்தை யும், சிறிய த்ங்தையும் இளமையிலிருந்தே ஒற்றுமைய. யிருந்து வந்தனராம். அதோடு, அவர்களிருவரும், ஒரே வயிற் திற் பிறந்த சகோதரிகண் முறையே விவாகஞ் செப்து

3. 26 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பலப்பட்டு வந்தது. அதோடு அவர்கள் பிதிரார்ஜிதச் சொக் தைப் பாகஞ் செய்துகொள்ளாமல் எக குடும்பமாக இருக்தே அனுபவித்து வந்தனராம். நாலைந்து ஆயிரத்துக்குப் பெறுமானமாயிருந்த பிதிரார்ஜித சொத்தை முதலாகக் கொண்டு என் கங்கை பலவிதமான வியாபாரங்கள் செய் தும், கவர்ன்மெண்டு கண்டிராக்டுகள் எடுத்தும் விடா முயற்சியோடு பணவருவாயை அதிகப்படுத்திக் கடைசி யாக இருபது இருபத்தைக்து லட்சத்துக்குச் சொந்தக்கா சானர். சாதாரண நிலையிலிருந்தவரை எதோ தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்த எனது சிறிய தந்தையார், சிறிது மேல் நிலைக்குக் குடும்பம் உய ஆரம்பித்ததுமே, எல்லா வற்றையும் விட்டுச் செல்வப் பிள்ளையாகவே உலவி வர ஆரம்பித்தாராம். அவருக்கு என் தந்தையின் வியாபார முயற்சியில் சிறிதுங் கவலேயே கிடையாதாம். ஆளுல் அவர் எப்போதும் என் தந்தைக்கடங்கி மரியாதையாகவே இருந்து வந்தாராம். எனக்கு அறிவு தெரிந்து தான் பார்த்தபோது கூட அவர் உல்லாச புருஷராகவும், ஆடம்பரப் பிரியராக வுமே இருந்தார். அவர் இரண்டு பிள்ளைகளுக்கும் மூன்று பெண்களுக்கும் தந்தையான பிறகும் தமது பொறுப்பை யுணர்ாது விளையாட்டுப் பிள்ளேபோலவே திiந்து வந்தா

சென்ருல் அதிகன் கூறுவானேன்!

என் தாய் என் தந்தைக்கு வாழ்க்கைப்பட்ட பின் னரே, அவர் பலராலும் போற்றப்படும் தனபதி செட்டி யார் என்று பெயருக்குரிய தகுதியை உண்மையாகப் பெற் முர் என்று பலரும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே, என் தகப்பஞர் அவ்ளேத் தம் கிருக லக்ஷ்மியாகப் போற்றிவந்திருப்பார் என்று கூறுவது மிகையாகாது. ஆயி இம் என்னுடைய தாய் சிற்சில சமயங்களில் சிறிதும் உற் புவன சுந்தரியின் இளம் பருவம் 27

சாகமின்றி வருத்தமாயிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் நான் கல்லூரிக்குச் சென்றுவிட்டு என் மாளிகையை அடைந்தேன். உடனே நேரே என் தாயிருக்கும் அறையில் துழைந்ததும், அவள் கண்களில் நீர்த்துளிகள் ததும்பி யிருப் பதைக் கண்டு நான் மனம் பதறினேன். நான் அச்சமயம் ஆறு வயது சிறுமியா யிருந்தும், என் காப் எதோ துன்பத் தால் மனம் புழுங்கிவருகிருள் என்று ஒருவாறு உணர்க் தேன். ஆகவே, நான் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் தாயைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு, அம்மா என் அழு கிருப் பலதடவை நீ இம்மாதிரி வருத்துவதை நான் பார்த் திருக்கிறேன். இதற்குக் காரணமென்ன என்பதை எனக்குச் சொல்லமாட்டாயா அம்மா' என்று கெஞ்சிக் கேட்டேன்.

எனது எதிர்பாரா வருகையையும், செர்ல்லேயுங்கேட்ட என் காய் கண்களைத் துடைத்துக்கொண்டே, கண்ணு' உனக்கேன் இந்தக் கவலே? என் தலைவிதி நான் ஏதோ அனு பவிக்கிறேன்.-அது கிடக்கட்டும். நீ சாப்பிட்டு வெகு தாழிகையாச்சே வா கொஞ்சம் பக்ஷணம் தருகிறேன். அதை பருந்திவிட்டுக் காப்பி குடி!" என்று கூறி என் கவனத்தை வேறு விதத்தில் மாற்ற முயன்ருள்.

அவள் கையைப் பிடித்து அழைத்தும் ஒரே பிடிவாக மாய் அங்கேயே கின்று, 'அம்மா என்னிடம் எதையோ மறைக்கிருப்! உன் மனவாட்டத்தை நான் தெரிந்து கொள் ளவாறு எத்தனையோ தடவை இவ்விதமே மறைத்து வந் திருக்கிருப்? உன் மனதைச் சதாகாலமும் வருக்கி வரும் அவ்விஷயத்தை என்னிடம் இப்போது சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் நான் ஒன்றும் இன்றைக்குச் சாப்பிடவே மாட்டேன். எத்தனே நாளானுலும் பட்டினி தான் கிடப்பேன்.-அவ் விஷயம் என்ன, நான் தெரிந்து 38 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கொள்ளக்கூடாதா? உன் மனதிலேயே வைத்துக்கொண்டு சங்கடப்படுவதைக் காட்டிலும், என்னிடத்தில் சொன்னல் ஆறுதல் ஏற்படாதா? அவ்வளவு இரகசியமா அது?" என்று சிறிது கோபத்தோடும் ஆனல் அழுகைக் குர்லிலுங் கேட்டேன். -

எனது உணர்ச்சி தீவிரத்தைக் கண்டோ என்னவோ என் தாய் என்னே அப்படியே வாரியனைத்து முகத்தோடு முகத்தைப் பொருத்தி, என் கலிதீர்க்க வந்த கண்ணே புவன உன்னிடமும் ஒளிக்கக்கூடிய தொன்று இருக் கிறதா விஷயத்தைச் சொன்னல் உன் மனம் வருந்துமே என்ற எண்ணமே யொழிய வேறல்ல....நீ இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்பதல்ை சொல்லுகிறேன். ஆனல், இவ் விஷ்யத்தை உன் தந்தையிடம் எப்போதும் வாய் தவறியும் சொல்லிவிடாதே தெரியுமா!

நான் உன் தந்தைக்கு வாழ்க்கைப்பட்டு நீண்டநாளா கியும் பிள்ளைப் பேறு வாய்க்காமல் மனம் வருந்திவந்தேன். இந்நிலையில், உனது சிறிய தந்தைக்கு விவாக ஏற்பாடு நடைபெற்றது. வெளியே எங்கெங்கோ பெண் பார்த்தார் கள். நான் பலவித செளகரியங்களே உத்தேசித்து என் தங் கையையே மணஞ் செய்துகொள்ள வேண்டுமென்று பிடி வாதஞ் செய்தேன். ஆகவே, முடிவில், என் விருப்பப்படி திருமணம் நடைபெற்றது. என் தங்கை என்ளுேடு முதலில் அன்பும் பணிவுங் காட்டியே கடந்து வந்தாள். அவளுக்கு விவாகமான ஒரு வருஷத்திற்கெல்லாம் அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்ருள். பிள்ளையில்லாத விட் டி ல் குழந்தை பிறந்ததைப்பற்றிப் பொதுவாக காங்கள் எல். லோரும் மகிழ்ச்சி கொண்டாடினேம். நான் அக் குழக் தையை என் பிள்ளையைப்போலவே சீராட்டிப் பாராட்டி புவன சுந்தனியின் இளம் பருவம் 29

வளர்த்தேன். மற்றும் ஒன்றரை வருஷத்திற்குப் பின்னர், என் தங்கை பெண் மகவொன்றைப் பெற்ருள். அக் குழந் தையும் அருமையாக வளர்க்கப்பட்டது. என் பிள்ளைக்கலி இக்குழங்தைகளால் ஒருவாறு தீர்ந்ததென்றே மகிழ்க்து நான் அவைகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து வங் தேன். என் தங்கையோ உன் சிறிய தந்தையைப்போலவே சிறிது உல்லாசப் போக்குடையவ ளாதலால், இவைகளே அவ்வளவாகக் கவனிப்பதில்லை. குழந்தைகளைக் கண்காணிப் பதற்கு வேலைக்காரியும், அருமையாக வளர்ப்பதற்கு யானும் இருக்கிறேனென்ற எண்ணம் அவளுக்கு இருந்தது . போலும் ஆணுல் இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு என் தங்கையிடம் ஒரு பெரு மாறுதல் ஏற்பட்டது. அவள் முன்போல் என்னிடம் அடக்க வொடுக்கமாக நடந்து கொள்வதில்லை. அதற்கு முன் எதையாகிலும் செய்வ தென்ருல் என்னைக் கேட்டே செய்வாள். இப்போதோ எதற்கும் என்னே எதிர்பார்ப்பதில்லை. எதையேனும் கேட்பதென்ருலும் என்ன அவள் அதிகாரத் தோரணையி லேயே கேட்க ஆரம்பித்தாள். தனக்குக் குழந்தைக ளிருப் பதால் இக் குடும்பத்தில் இப்போது செல்வாக்கிருக்கிறது என்று அவள் எண்ணிக்கொண்டாள் என்று கினைக்கிறேன். ஆனல் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் சொந்த தமக்கை என்ற உரிமையில் நடந்துகொள்ளுகிருள் என்றே அச்சமயம் எண்ணினேன்.

- இச்சமயத்தில் தெய்வச் செயலாக நான் எதிர்பாராத அளவில் கர்ப்பமுற்றேன். இச் செய்தி உன் தந்தைக்குப் பெரு மகிழ்ச்சி தந்ததென்றே சொல்லவேண்டும். இது வரை தன் வியாபார விஷயத்திலேயே அல்லும் பகலும் கிங்தையைச் செலுத்திக் குடும்பத்தைப்பற்றி யொன்றுங் 30 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கவலை யெடுத்துக்கொள்ளாதிருத்த அவர், இப்போது தன் கவனத்தைத் திருப்பலானர். என் உடல் நலத்தில் மிகவுங் கண்ணுங் கருத்துமாயிருந்தார். ஆனல், நானே இப்போ தும் என் தங்கை குழந்தைகள் விஷயத்தில் முன்போலவே அன்பாக இருக்து வந்தேன். அப்படி யிருந்தும் கான் கர்ப்பமுற்ற செய்தி யறிந்த பின்னர், என் தங்கை எக்கார ணத்தாலோ முகவாட்ட முற்றிருந்தாள். என்னிடம் முன் போல அளவளாவிப் பேசுவதில்லே. அவள் இவ்வாறு இருப்பதற்குக் காரண மென்னவென்று தெரியவில்லை; நான் அதை அறிந்துகொள்ளவும் முயலவில்லை. அவள் வருத்தங் கொள்வதற்குரிய விஷயம் எதாகிலும் இருக்கலாம்; அவ. ளது தனிப்பட்ட விஷயத்தில் நாம் தலையிடுவானேன் என்று வாளாவிருந்தேன்.

பத்து மாதமும் பூரணமாயிற்று. பிரசவத்தை ஒவ் வெர்ரு கணமும் யாவரும் எதிர்பார்த்திருந்தனர். உன் தந்தை ஒரு லேடி டாக்டரையும் இரு கர்ஸ்-க்ளேயும் தரு வித்து பிரசவம் முடியும்வரை இருக்கும்படி ஏற்பாடு செய்து விட்டார். நீண்ட நாளிருந்து கருப்ப முற்றிருப்பதால் மிக வும் எச்சரிக்கையாக இருக்கவேண்டி யிருந்தது. பிரசவக் குறிகளும் பயங்கரமாய் இருந்தன. ஒரு நாள் எனக்குப் பிரசவ வேதனே யேற்பட்டது. யாவரும் ஆவலோடு என் னேச் சூழ்ந்து கின்று, அச்சமயம் எனக்குக் தேவையான உதவிகளைச் செய்ய ஆயத்தமாயினர். ஆனல் இவ்வளவுக் கும் என் தங்கை மட்டும் சர்வ சாதாரணமாகவே இருந்து வந்தாள். வெளியார் காட்டும் சிரத்தைகூட இவளுக்கு இல்லாததை யறிந்து எனக்கு ஆச்சரியமாகவே இருக்கது. பிரசவ வேதனை நெருங்கியது. என் அறையில் என் தங்கையும், லேடி டாக்டரும், இரு சர்ஸுகளும் மட்டுமே புவ்ன சுந்தரியின் இளம் பருவம் 3i

இருந்தனர். வெளியே உன் தந்தை சிறிய கங்தை முதலி யோர் மிக ஆவலோடும் படபடப்போடும் கின்றுகொண் டிருந்தனர். வேதனை அதிகமாகவே என் ஸ்மானே தவறி விட்டது. அப்புறம் என்னுயிற்று என்று தெரியாது. பின் னர், உணர்ச்சி பெற்றுக் கண் விழித்தபோது, என் கட்டி லுக்குச் சிறிது தாரத்தில் சிறு தொட்டிலில் நீ கண் வளர்வ தைக் கண்டு ஆனந்தமுற்றேன். குழந்தை ஆணு பெண்ணு என்று என்னெதிரே இருந்த சர்ஸைக் கேட்டதும், அவள் பெண் குழந்தை என்று கூறிவிட்டு, கன் முகத்தைத் திருப் பிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் முகம் கவலே

யைக் காட்டியது.

பிரசவமுற்றுப் பத்து பதினைந்து நாளாயிற்று. ஒரு நாள் மேற்படி கர்ஸ் என்னே யனுகி இரகசியமாக, அேம்மா! உன்னிடம் ஒரு விஷயத்தை அவசரமாகச் சொல்ல வேண்டி யிருக்கிறது. உங்கள் மனம் இதைக் கேட்டுச் சகிக்குமா என்றும் எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனல் அதைச் சொல்லாமலுமிருக்க முடியவில்லே. பின்னல் ஏதேனும் விபரீகம் எற்பட்டால்........ ” என்று இழுத்தாள்.

நான் படுக்கையைவிட்டுத் திடுக்கிட்டு எழுந்து, என்ன என்ன!” என்று துடிப்பாகக் கேட்டேன்.

அதற்கு அந்த நர்ஸ், ஒன்றுமில்லை; அம்மா பதை பதைக்காதீர்கள் இங்கிலமையில் உடம்பை அலட்டிக் கொண்டால் பலவீன மேற்படும். அமைதியாயிருப்பதே நல்லது....விஷயத்தைச் சொல்கிறேன். நீங்கள் பிரசவித்த போது என்ன நடந்ததென்பது உங்களுக்குக் தெரியா தல் ல்வா! நீங்கள் மிகவுங் கஷ்டப்பட்டுப் பிரசவித்து மூர்ச் சையா யிருந்தீர்கள். உங்களுக்கும், குழங்கைகளுக்குஞ் செய்யவேண்டிய முதல் உதவியைச் செய்து, குழந்தையை ஒரு சிறு கட்டிலில் கிடத்திவிட்டு, உங்கள் மூர்ச்சையைத் தெளிவிக்க லேடி டாக்டரும், நாங்களும் முயன்று கொண்டிருந்தோம். அச்சமயம் பக்கத்தில் ஏதோ சிற்றரவம் உண்டானதைக் கேட்டுத் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கையில், உங்கள் தங்கை குழந்தையின் கழுத்தை நெரிக்கக் கைகளைக் கொண்டு செல்வதைக் கண்டு நாங்கள் பதறிப் போய் ஒடினோம். எங்கள் வருகையை யறிந்து அந்தம்மாள் அப்படியே திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்கள் தோற்றம் பைத்தியம் பிடித்தவர்கள் அல்லது பைசாசம் பிடித்தவர்கள் தோற்றத்தைப்போல மிகவும்

. நான் குழந்தையை வாரி யெடுத்து மார்பி லணைத்துக்கொண்டேன். டாக்டர் அம்மாள் இவ் விபரீதச் செயலைக் கண்டு ஒன்றுந் தோன்றாது அப்படியே


34 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கின்றுவிட்டார்கள். உங்கள் தங்கை டாக்ட்ர் அம்மாள் முகத்தைக் கெஞ்சிப் :பாவனையாகக் சிறிது நேர்ம் பார்த்து. கின்ருர்கள். பின்னர் அந்தம்மாள் ஒருவாற் துணிந்து கன் இடுப்பில் செருகியிருந்த பணப்பையை எடுத்து நாலைந்து சவரன்களை டாக்டர் அம்மாள் கையில் வைத்துக் காதோடு காதாக, "இந்தக் குழந்தையை எப்படியாகிலுக் தீர்த்துவிட வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்யவேண்டும். சீக்கிரம் அவள் மூர்ச்சை தெளிவதற்குள் காரியம் நடந்து விடவேண்டும். உங்க ளிருவருக்கும் ஏராளமான பொருளே வாரி இறைப்பேன். என்ன சொல்கிறீர்கள்?’ என்று பரபரப்போடு கேட்டார்கள்.

டாக்டர் அம்மாள் அநுபவமும், சாமர்த்தியமும் ஒருங்கே வாய்ந்தவர்களாதலால், பளபளவென மின்னும் அப்புது சவரன்களைக் கண்டு மயங்காது அவற்றை வாங்கா மலே, இருங்கள்; இதோ வருகிறேன்” என்று சொல். விக்கொண்டே ஒரே தாவு காவிக் கதவைத் திறந்து, ஐயா!. இதோ பெண் குழந்தை பிறந்திருக்கிறது; பாருங்கள்; சுகப்பிரசவமே! ஒன்றும் பயமில்லே' என்று கூறிய வண் ணம் என்னைப் பார்த்துக் கண் சைகை காட்டினர்கள். கான் அக்குறிப்பறிந்து குழந்தையைக் கொண்டுபோய் உம்முடைய கணவருக்கும் மைத்துனருக்குங் காட்டினேன். இதைக்கண்டு உங்கள் தங்கை சிறிதுநேரம் அசைவற்று கின்றுவிட்டார்கள். அதற்குமேல் கன் எண்ணம் ஒன்றும் நடவாது என்று அறிந்துகொண்டார்கள். மேலும், டாக் டர் அம்மாள், பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியதும், அந்தம்மாள் முகம் ஒருவாறு மாறுத் லடைக் #ತಿ அப்போதே குழந்தையைக் கடைக்கண்ணுல் கூர்ந்து கவனிக்கலாஞர்கள். இதையெல்லாம் நான் குறிப்பாகப் புவன சுந்தரியின் இளம் பருவம் . 35.

பார்த்துக்கொண்டிருந்தேன். அப்புறம் அவர்கள் அங்கு நிற்கவில்லே-உங்கள் குடும்பக் கோளாறு என்னவோ எனக்குத் தெரியாது. இவ்விதம் சம்பவம் கிகழ்ந்திருக்கிறது. ஆதலால் நீங்கள் குழந்தை விஷயத்தில் மிகவும் ஜாக்கிச தையா யிருக்கவேண்டும். டாக்டர் அம்மாள் இவ்விஷயத் தைச் சமயம் பார்த்து உங்களிடம் சொல்லி எச்சரிக்கை செய்யச் சொன்னர்கள்' என்று சொன்னுள். இதைக் கேட்டு என் மனம் எப்படியிருக்கும் என்று கினேக்கிருப் கண்ணு! அதை இப்போது கினேத்தாலும் என் உடல் முழு தும் நடுங்குகிறது. என் கங்கை என்ன நோக்கத்தோடு இவ் வாறு செய்ய எத்தனித்தாள் என்று அன்றிருந்து ஆராய லானேன். நீ பிறந்த பின்னர், அவள் சடத்துகொண்ட விதத்திலிருந்து, அவளது உள் நோக்கத்தை ஒருவாறு கிர கித்துக் கொண்டேன். அதாவது, நான் நீண்டநாள் பிள்ளே யில்லா திருந்தமையாலும், அவள் வெகு விரைவிலேயே குழந்தைகளைப் பெற்றமையாலும், உன் தந்தை மிகவும் முயன்று சம்பாதிக்கும் சொத்தெல்லாம் தன் பிள்ளைகளையே சேரும் என்றும் தாங்கள் ஏகபோகமாக எல்லாவற்றையும் அனுபவிக்கலாமென்றும் அவள் எண்ணி யிருந்தாள். அவ ளது எண்ணத்தில் இடி விழுந்ததுபோல் நான் கர்ப்ப மாகவே, அவள் மனம் வேதனையை படைக்கது. அவள் என்மீது மிகவும் பொருமைகொண்டாள். அவள் மனத்தில் பொருமை கொழுந்துவிட்டு எரிந்தமையாலேயே, அன்று அவளேயும் மறந்து இவ்வளவு துணிவாக உன்னைக் கொல்ல முயன்றிருக்கிருள். ஏனென்ருல், எனக்குப் பிறக்கும் குழக் கைக்குத்தானே நம் சொத்தை யனுபவித்ததற்குரிய சகல உரிமையும் அதிகாரமும் ஏற்படும். ஆதலால், சக்தடி செப் யாது அதைக் கொலேத்துவிட்டால், தன்னுடைய மக்கள் இடையூறின்றி யாவற்றையும் அனுபவிக்கலா மென்பது 36 இவ்வுலகைத் திரும்பிட் ரேன்

அவளது எண்ணம். இவ்வனவு காரியமும், அவள் பிறந்த குழங்கை ஆண் என்ற எண்ணத்தோடேயே செய்திருக் கிருள். தனது முயற்சி பலிக்காது போன பின்னர், பெண் குழக்கை என்று அறிவிக்கப்பட்டதும், ஒருவாறு அவள் மன சிம்மதியுற்றிருக்கிருள். இந்துச் சட்டப்படி பெண் களுக்குத் தந்தையின் சொத்தில் பாக மில்பேன்றே! உன்னே ஒருவனுக்கு விவாகஞ் செய்துகொடுத்துச் சீள்சிறப் புச் செய்து அனுப்பிவிட்டால், சொக்கெல்லாம் அவளுடைய பிள்ளைகளுக்கன்ருே போப்ச் சேரும். ஆதலால், அவள் முதலில் எதிர்பார்த்தபடி அவ்வளவு மோசமில்லை என்று ஒருவ அ கணக்குள்ளே முடிவுசெய்துகொண்டிருக்கிருள். இவ்வளவு விஷயமும், எனக்கோ உன் தந்தைக்கோ தெரியா தென்றே இன்னமும், கினைத்துக்கொண்டிருக்கிருன், ஒன்றும் மனதில் களங்க மில்லாதது போலவே என்னிடம் நடித்து வருகிருள். லேடி டாக்டரும், கர்வுகளும் சீமாட்டியாகிய தனக்கு எதிராக விஷயத்தை எங்களிடம் அணித்து சொல்லியிருக்கமாட்டார்க ளென்பது அவளது கினேவு. இவளது இத்தீய கருத்துக்களும், செயலும் உன் சிறிய தந்தைக்கு இன்னமும் தெரிந்திராதென்றே கினைக் கிறேன். அவர் இவ்வித தீக் குணங்கள் உடையவ சல்ல வாகையால், இவளது இச் செயல்களுக்கெல்லாம் சிறிதும் இடங்கொடுக்க மாட்டார். இருந்தாலும் எப்படியோ! இத்துணை கொலே பாதகச் செயலைச் செய்யத் துணிந்தவன், அவரையும் இவ்வித காரியங்களுக்கு உடன்படச் செய்யத் தானு இயலாது?--உம். எனது இந்திரபோக இன்ப வாழ்வை நம் தங்கையும் பங்கிட்டு அனுபவிக்கட்டுமே என்ற கல்லெண்ணத்தோடு, மிகவும் சிரமப்பட்டு அவளே எனக்கு ஒரகத்தியாகும்படிச் செய்ததற்கு இது கைமேல் பலன் போலும் இருக்கட்டும்.-ஆணுல் இவ் புவன சுந்தரியின் இளம் பருவம் 37.

வாறு என்னத் துரோகஞ் செய்துவரும் அவளே நான் இன்னமும் வெறுக்கவில்லை; அவளிடம் எவ்வித வேறு பாடுமின்றி முன்போலவே நடந்து வருகிறேன். இவ் விஷயத்தை இதுவரை யாருக்குக் தெரிவிக்கவில்லை. பேச் சோடு பேச்சாகக் குறிப்பாகக்கூட உன் தங்தைக்குச் சொல்லவில்லை. அவர் உன்மீது தம் உயிரையே வைத்திருக் கிருள். உன் பேரழகையும் துண்ணறிவையும் கண்டு அவர், ஆனந்த வெள்ளத்தில் அழுந்திப் போயிருக்கிருர். இங்கிலே யில் அவர் தம் தம்பிக்கு நியாயமாகச் சேரவேண்டிய சொத்துப் போக, மற்றனைத்தையும் உனக்கும், உன்னை மணஞ் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கும் வைப்ப தென்று அடிக்கடி கூறிவருகிருர். இத்தகவல் என் கங்கை காதில் விழுந்திருக்கிறது என்று கருதுகிறேன். அவள் தன் எண்ணத்துக்கு மறுபடியும் பழுது ஏற்பட்டு விடும்போ லிருக்கிறது என்று எண்ணி மீண்டும் சூழ்ச்சி செய்ய ஆரம் பித்திருப்பதாகத் தெரிகிறது. ஐயோ! கொடுங் குணங் களுக்கு இருப்பிடமான அவள் இன்னமும் என்ன சூழ்ச்சி செய்வாளோ? அதிலிருந்து உன்னே எப்படித் தப்புவிப்பதுt. என்று எனக்கு மிகவும் மலைப்பா யிருக்கிறது. உள்ள விஷ் யத்தை உன் தந்தையிடம் தெரிவித்து இதற்குப் பரிகாரக் தேடலாமென்ருலோ, இதன் மூலமாக விபரீத மேதேனும் எற்பட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறேன். இக் கிலேயில் இதை மெல்லவுமாட்டாமல், விழுங்கவுமாட்டாமல் நான் தத்தளித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே என் துயரத்துக்குக் காரணம். வேருெரு குறையும் எனக்கு, இல்லே பம்மா' என்று சொன்னுள்.

என் பொருட்டாக, என் தாய் படும் துயரத்தைக். கேட்டு என் இளநெஞ்சம் பாகா அருகிவிட்டது. கான் 38 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அணிந்திருந்த சட்டையால் என் அருமைத் தாயின் கண்ணி ரைத் துடைத்து, அம்மா இனி இதைப்பற்றிக் கவலேப் படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன் என்ன வருகிற தென்பதை இவள் சூழ்ச்சியா லெல்லாமா நான் இறந்து விடுவேன்? பூ-........” என்று துணிவாகக் கூறினேன். "இளங்கன்று பயமறியாது” என்ற அதுபவ மொழியை நிலைநிறுத்தக் கூடியதாக என் தேறுதல் மொழி யிருக்கிற தென்று எண்ணி, நீர் என் வெள்ளே யறிவுக்காக என்னை எள்ளி நகை பாடலாம். ஆனால் உண்மை யதுவன்அ. அச் சமயம் உண்மையிலேயே துணிவுகொண்டிருந்தேன். திமையை எதிர்க்குங் குணம் எனக்கு இளமையி லிருந்தே உண்டு. எனது தைரியமான வார்த்தைகளேக் கேட்டு என் தாப் துக்கத்தை யெல்லாம் மற்க்து வாய்விட்டுச் சிரித்து விட்டாள். அவள் ஆர்வத்தோடு என்னே வாரித் தழுவி முத்தமிட்டு உச்சி மோந்தாள். பின்னர் அவள் ஆனந்தக் கண்ணிரைச் சொரியவிட்டு, கண்னு சுந்தரி! நீ ஒன்றும் மனத்தைச் சங்கடப்படுத்திக்கொள்ளதே அம்மா கான் பார்த்துக் கொள்ளுகிறேன் எகை யெதை எப்படி செய்ய வேண்டுமென்று. ஆளுல் உன் சிற்றன்னே யிடத்தில் மாத் திரம் அதிகமாக நெருங்காது தந்திரமாக நடந்துகொள். ஏதாகிலும் பக்ஷணம் கொடுத்தால்கூடத் தின்னுது மறை வாக எறிந்து விடு. கான் சொல்வது தெரிகிறதா' என்று புத்திமதி கூறினுள். நான் பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்க தால் இன்னது கூறுவதென்று தெரியாலே சும்மா கலேயை பசைத்தேன். அப்புறம் என் தாய் மாலேக் சிற்றுண்டி பருந்த என்ன அழைத்துச் சென்ருள். இவ் விஷயத்தை என் முதலிலேயே இவ்வளவு பிரமாதமாகக் கூறினே னென் முல், இச் சம்பவமே எனது வாழ்க்கையில் கடந்த மற்ற பெரும் போராட்டங்களுக் கெல்லாம் அடிப்படையாக புவன சுந்தரியின் இளம் பருவம் 39

என்-முன் அறிகுறியாக-இருந்தது என்பதைக் குறிப் பிக்கவே யாகும். -

இவ்விஷய மெல்லாம் ஒன்று மறியாத என் தங் தையோ, நெடுநாளாகப் பிள்ளை யில்லாது வருந்திய தம் பிள்ளைக் கலி தீர்ந்தது என்ற மகிழ்ச்சிப் பெருக்கில், என் பொருட்டாகக் தாம் பல வருடங்களாக மிகவுஞ் சிரமப் பட்டுச் சம்பாதித்து வைத்த பணத்தைத் தண்ணீர்போல் வாரி யிறைத்தாராம். யான் பிறந்த தினத்தைக் கொண் டாடியதற்கும் பத்தாம் நாள் புண்ணியாவசனச் சடங்கு செய்து நாமகரணஞ் சூட்டியதற்கும் மட்டும் ஆயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்தாரென்ருல், அவர் எனது ஜனனத்தை எவ்வாறு எண்ணினர் என்று விவரித்துக் கூறுவானேன்! அவ் வைபவத்தில் கலந்து இன்ப மனு பவித்த எங்களது சுற்றமும் ஏழை மக்களும் இன்னமும் அதைப்பற்றிப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அச் சமயத்தில், வேதாகம பண்டிதர் களான பிரதம்மணர்கள் ஜாதக கணிதத்தை ஆராய்ந்தும், உருவும் திருவுருவம் நோக்கியும் எனக்குப் புவன சுந்தரி" என்று பெயரிட்டனராம். என்னை ஊக்கமாகக் கவனித்து வருவதற்கென்றே என் தங்தை வெள்ளைக்காரத் தாதி யொருத்தியை ஏற்படுத்தி யிருந்தார். எனவே, நான் 'அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் வளர்வ தற்குப் பதிலாக, பெற்றேர் என்னைச் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சிக் குலாவும் கோம் தவிர. மற்ற வேளை முழுதும் அத்தாதி தோளின்மீதும் மார்பின் மீதுமே வளர்ந்து வந்தேன். இதனிடையே என்னிடம் என் சிற் றன்னேயின் பிள்ளைகள் கொஞ்சி விளையாட வருவதும் யாலும் மற்றவர்களைப் பார்த்துத் தாவிச் செல்ல விரும்புவதும் உண்டெனிலும், அத்தாதி அதிகமாக அவற்றிற்கு இடங் தருவதில்லை; அதாவது, மற்றவர்கள் சிறு பிள்ளைகளோ, பெரியவர்களோ யாராயினும் என்னிடம் தாராளமாக நெருங்கிப் பழகவும், கொஞ்சிக் குலாவவும் அவள் அநுமதிப்பதேயில்லை என்று என் தாய் கூட அதையொரு குறையாக எடுத்துக் கூற நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறு ‘மேட்டிமை’யாக என் இளமைப் பருவங் கழிந்தது. அவ்வித நிலையை, நான் அப்போது ஒரு பெருமையாக நினைத்திருக்கக் கூடுமாயினும், இச்சமயம் அதை அறவே வெறுக்கிறேன்.