இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/பெண்ணா! பேயா!! தெய்வ மகளா!!!

௳

“இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்”



முதலாவது அதிகாரம்


பெண்ணா! பேயா !! தெய்வ மகளா !!!

“அம்மம்மா இப்பாழும் உலகை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகிறது; என் வயிறு பகீரெனப் பற்றி யெரிகிறது. ஆ என்ன அநியாயமான உலகம்? இதில் நடக்கும் கொடுமைகளை எம்மொழியால் அளவிட்டு எடுத்துரைப்பது! எங்கு பார்த்தாலும், வஞ்சகம், பேராசை, பொறாமை, காமம், கோபம், உலோபம், மதம், மாற்சரியம் முதலியவைகளே நிறைந்திருக்கின்றன. இக்கொடுங் குணங்களின் பரிணாமங்களாகவே மக்கள் பெரும்பாலும் இருக்கின்றனர். இத்தகைய கொடியோர் பெரும்பான்மையாக வாழும் இவ்வுலகத்தை, துன்பவுலகமாகிய நரகத்திலும் போக பூமியாகிய சுவர்க்கத்தினும் சிறந்ததென்று கவிஞர் வருணிக்கின்றனர். ஐயோ! இவர்களது பேதமையையும், பிச்சுக்கொள்ளித் தன்மையையும் என்னென்பது!—அவ்வளவு தூரம் போவானேன்! நானே ஒரு காலத்தில் அவ்வாறுதானே நம்பினேன்? பேரின்பத்தைத் தருவதாகக் கூறப்படும் மோட்சலோகமுங்கூட இவ்வுலகத்துக்கு இணையாகா தென்றன்றோ எண்ணியிருந்தேன்? அதிலும் இவ்வுலகத்தில் என்னைவிட அதிர்ஷ்டசாலி ஒருவரும் இருக்க முடியாதென்றன்றோ இறுமாப்புக் கொண்டிருந்தேன்? அவ்வெண்ண மெல்லாம் வெறும் பகற் கனவென்று இப்போதன்றோ தெரிகிறது!-நான் யாருக்காக உயிர் வாழ்ந்தேனோ, யாருக்காக இம்மனித உடம்பு எடுத்ததாகக் களித்திருந்தேனோ, யாருக்காக அல்லும் பகலும் உழைத்துப் பாடுபட்டுப் பணஞ் சேர்த்தேனோ, யாரை என் உயிரினுஞ் சிறந்த பொருளாக எண்ணிக் காதலித்தேனோ, யாரை எப்போதும் மகிழச் செய்ய—இன்பத்தில் ஆழ்ந்த—ஒவ்வொரு கணமும் பெரு முயற்சி செய்தேனோ அம்மங்கை அமிர்த வல்லி—பெயரைப் பார்! காராட்டை வெள்ளாடு என்றழைப்பதுபோல், ஆலால விஷத்தினுங் கொடியவளாகிய அவளுக்கு அமிர்தவல்லி என்ற அழகிய பெயரை யாரிட்டார்களோ? அவர்களைக் கண்டால் இப்போது என்ன செய்வேன் தெரியுமா! (பற்களை நறநறவெனக் கடித்துப் பிறகு)—என்னை மோசஞ் செய்து ஏமாற்றி—நம்பிக்கைத் துரோகஞ் செய்து வஞ்சித்து—வேறொருவனை—அவன் வைத்திருக்கும் பணத்தைப் பெரிதாகக் கருதி—விவாகஞ் செய்துகொண்ட பின்னர், எனக்கு இவ்வுலகமே இருண்டு போய் விட்டது. எனக்கு இதற்கு முன்பெல்லாம் இன்பமாயிருந்த இவ்வுலகம் இப்போது துன்பம் நிறைந்ததாய்க் காணப்படுகிறது! இனி இவ்வுலகில் இருக்க எனக்குச் சகிக்கவில்லை. இதில் இருப்பது அனல்மேல் இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இவ்வுலகை ஏறிட்டுப் பார்க்கவும் என் கண் கூசுகின்றது. இனி, இங்குள்ள மனிதர் முகத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்று என்னுள் சபதஞ் செய்துகொண்டேன். இதை உண்மையாக நிறைவேற்றுவதென்றால், இதற்குத் தற்கொலையே சிறந்த வழி. ஆயினும் அக்கொடிய முறையைக் கைக்கொள்ள என் மனந் துணியவில்லை. ஆதலால் நான் என் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு இத்தனை நாட்களாகப் பட்டினி கிடந்தே அலைந்து வருவது போலவே, மேலும் மன உறுதியோடு உண்ணா விரதம்பூண்டு, அதன் வாயிலாக எளிதில் உயிர் விடுவதே மிகவும் சிறந்தது!-ஆ! நான் இதுவரை கட்டிய மனக்கோட்டை யென்ன! இப்போது யான் அடைந்த கேவல நிலையென்ன....அந்தோ! என் கைகால்களெல்லாம் சோர்வுற்றுக் துவண்டு தள்ளாடுகின்றனவே! கண் பஞ்சடைகின்றதே! என் செய்வேன் ஈசா........” என்று வாயில் வந்தவாறு பிதற்றிய வண்ணஞ் சென்று கொண்டிருந்த யான், திடீரென்று ஏற்பட்ட ஒருவித ஒசையைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்று விட்டேன்.

“பொய்திகழும் உலகநடை என்சொல்கேன்? என்சொல்கேன்?
பொழுதுபோக்கு ஏதுஎன்னிலோ பொய்யுடல் நிமித்தம்...”

என்னும் அருமைப்பாடல் இன்னிசையோடு கலந்து அமுததாரை பொழிவதுபோல் என் காதில் விழுந்தது. அதில் உள்ள வெறும் இசை மட்டும் என் கவனத்தைக் கவரவில்லை; அதனோடு கனிந்த உருக்கமுங் கலந்திருந்ததால் என் மனம் பாகாய் உருகிவிட்டது. மேலும், அப்போதைய எனது மன நிலைக்கு அப்பாடல் மிகவும் பொருத்தமாயிருந்ததால், நான் அதில் பெரிதும் ஈடுபாடுடையவனானேன். அப்பாட்டில் என் மனம் கவர்ச்சியுற்றதும், எனது பெருந்துயரமெல்லாம் மறைந்து போயிற்று. இவ்வளவுதூரம் என் மனத்துக்குப் பெரும் ஆறுதலை யுண்டாக்கிய அப்பாடலைப் பாடியவர் யார்? என்று அறிய என் மனம் பெரிதும் விரும்பியது. எனவே, அவ்வினிய ஒசை வருந் திசையை நோக்கி நான் நடக்கையில், திடீரென்று அப்பாட்டு நின்று விட்டதால், நான் திகைக்கலானேன். இதுவரை பாடப்பட்ட பாட்டு ஆகாயத்திலிருந்து பாடியதுபோலிருந்ததால், எனக்கு நேரே மேலே நோக்கினேன். என் முன்னர் ஒரு பெரிய மலை நிற்பதை யறிந்து பேராச்சரிய முற்றேன். அதன்மீது செடி கொடி மரங்கள் படர்ந்து அடர்ந்து வளர்ந்திருந்ததால், அது கண்களுக்குக் குளிர்ச்சியையும் இனிமையையுந் தரும். பசுமைத் தோற்றத்தை வழங்கிய அம்மலைத் தொடர்ச்சி நீண்டதூரம் சென்றிருந்தது. அது போலவே, அதன் உயரமும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு மேல் வளர்ந்திருந்தது. அம்மலையின் ஒரு பக்கத்திலிருந்து நீர் அருவி இனிய ஒசையோடு இடையறாது கீழ்நோக்கி ஒடிக்கொண்டேயிருந்தது. இவ் அருவி எவ்விடத்துச் சென்று முடிகிறதென்று தெரியவில்லை.

நான் நின்றிருந்த பாதை மிகக் குறுகியதும், கரடு முரடானதுமாகும். அதன் வலப்பக்கத்தில் காட்டுப் பூஞ்செடிகளும், பெரிய மரங்களும் அடர்ந்த புதர்களும் வரிசை வரிசையாக வளர்ந்திருந்தன. அவைகளில் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்ததோடு அவைகளைப் பறிப்பாரில்லாமையால், அவைகளாகவே கீழே உதிர்ந்திருந்தன. அம்மலர்களிலிருந்து வழிந்தொழுகும் தேனைக் குடித்துச் சில வண்டுகள் மயங்கி வீழ்ந்திருந்தன. சில வண்டுகள் செடி கொடிகளைச் சுற்றிச் சுற்றி ரீங்காரஞ் செய்துகொண்டிருந்தன. இவ்வாறு வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் கூக்குரலும், நீர் வீழ்ச்சியின் ஒசையும் ஒன்று சேர்ந்து, என் உள்ளத்தை என்றுமில்லாதவாறு குதூகலிக்கச் செய்தது. பொழுது சாயும் அந்நேரத்தில் மக்கள் நடமாட்டஞ் சிறிது மில்லாததும், கொடிய மிருகங்கள் நிறைந்ததும், காடாந்தகாரமுமான அவ்விடத்தில், உலகத்தை வெறுத்து உயிரைத் துரும்பாக நினைக்கும் என் போன்ற பைத்தியக்காரர்களன்றி, எவ்வளவு மனத்திண்மையும், வீரமும் வாய்ந்தவர்களாயினும் தனித்திருக்கத் துணியமாட்டார்கள் என்பது திண்ணம்.

உலக மக்கள் செய்யுங் கொடுமையைக் கண்டு சகிக்காமலோ என்னவோ, சூரியன் கோபத்தால் முகஞ் சிவக்க மேற்குக் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரைந்து சென்றான். தன் பகைவன் மாள்வதைப் பார்த்து மகிழும் நோக்கத்தோடு, சந்திரன் சிரித்துக்கொண்டே கிழக்குப் பக்கம் தோன்றினான். இதற்கிடையே இருள் அரக்கன் தன் ஆட்சியைச் செலுத்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். தென்றற் காற்று மிக ரமணீயமாக வீசத் தொடங்கியது. இயற்கை அன்னை வழங்கிய அழகிய காட்சியில் யான் என் துன்பங்களையெல்லாம் மறந்து வசப்பட்டிருந்தேன்; ஆயினும், மேலே யான் கேட்ட இனிய பாடலைப் பாடியவர் யார் என்பதை யறிய என் மனம் பெரிதும் விரும்பியது. ஆகவே, நான் நாலா பக்கமும் என் கண்களைச் செலுத்தி ஆராயலானேன். அச் சமயத்தில் மீண்டும் கீழ்வரும் பாடல் காற்றில் மிதந்து வந்தது.

“வஞ்ச வினைக் கொள்கலனாம் உடலைத் தீவாய் மடுக்கிலேன்
வரை யுருண்டு மாய்ப்பே னல்லேன்
நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லன்
நாதனே யதுவும் நினது உடமை யென்றே
அஞ்சினேன் தானேயும் அழியாது ஆவி
ஐயனே நினைப்பிரிந்தும் ஆற்றகில்லேன்
என்செய்கோ ! எந்தாயோ! எந்தாயோ!
.........................................”


இவ்வமுதத் துளிகள் செவிவழியாகப் பொழிந்து என் தேகத்தைப் புளகாங்கிதமடையச் செய்தன. எனவே, என் பசிப்பிணியும் களைப்பும் பறந்தோடின. நான் பாட்டு இசை வரும் திசையை நோக்கி மலைமீது ஏறினேன். நான் சென்ற வழி தேய்ந்த பாதையல்லவாதலால், என் காலில் ஆங்காங்கு வேலம் முட்கள் தைத்து, உபத்திரவஞ் செய்தன. அதுவன்றி, சில இடங்களில் செங்குத்தாகவும் காடு முரடாகவும் இருந்ததால் நான் மலைமீது ஏறுவது சிறிது சிரமமாகவே இருந்தது. ஆனாம், எனது தற்போதைய மனப் போக்குக் கொத்த பாடலைப் பாடியவர் யார் என்று அறிய என் மனம் மிகவும் விழைந்து நின்றதால், இக் கஷ்டத்தையெல்லாம் பொருட்படுத்தாது மெல்ல மெல்ல ஏறி மலையுச்சியை யடைந்தேன்.


அங்கு சென்றதும் நான் நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கலானேன். அங்கு யாரும் இருந்ததாக எனக்கு முதலில் தெரியவில்லை. மலைச் சிகரத்திலும் பெரிய மரங்களும் செடி கொடிகளும் நிறைந்து வளர்ந்திருந்தன. ஆயினும்

சிற்சில இடங்களில் வெறுங் கற்பாங்கான இடை வெளிகளும் காணப்பட்டன. அவ்விதமான ஓரிடத்தில் பல விழுதுகள் தாங்கிநின்ற ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஒரு சிறு குடிசை இருந்தது. அதன் கூரைமீது சணல் வேய்ந்திருந்தது. அது பார்வைக்குப் பழைய காலத்து ரிஷிகளது ஆசிரமமான பர்ணகசாலை போன்று காணப்பட்டது. நான் பைத்தியக்காரன் போல் மலைமீது அலைந்துகொண்டே வருகையில், செடிகொடிகள் அடர்ந்து படர்த்திருந்த ஒரிடத்தில் மங்கையொருத்தி நின்று கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த மலர்களைப் பறித்துக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டுத் திகைத்து நின்றேன். ‘என்ன அது ! பெண்ணா !பேயா! தெய்வ மகளா! தேவலோக மகளிர் காடுகளிலும், மலைகளிலும் சிற்சில சமயங்களில் திரிந்து கொண்டிருப்பர் என்று சொல்லுகிறார்களே! அவர்களில் ஒருத்தியா இவள்? ஒருவேளை இது பொய்த் தோற்றமா? அல்லது என் மன மயக்கமோ? (என் கண்களை நன்கு துடைத்துக்கொண்டு மீண்டும் அவ்விடத்தைக் கூர்மையாக நோக்கி) இல்லை? இல்லை. இது பொய்த் தோற்றமில்லை. உண்மையே! அவள் பெண்ணே! மானுட மகளே! இதில் சிறிதுஞ் சந்தேகமில்லை. அவளது உருவம் என் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறதே!-- ஆமாம்; இவள் மானுடப் பெண்ணாயிருந்தால், இங்நிர்மானுஷயமான-கொடிய மிருகங்கள் வசிக்கக்கூடிய பயங்கரமான-இடத்தில் எப்படி யிருக்கமுடியும்? அப்படியானால, நான் கேட்ட-என்னை இன்பக்கடலி லாழ்த்திய, அவ்வினிய பாடலைப் பாடியவர் யார்? அவ்வுருக்கமான -- மெல்லோசை மிகுந்த-நெஞ்சங்கனிந்த-பாடலை இம்மங்கையே பாடியிருக்க வேண்டும்! அருகே சென்று பார்ப்போம்’ என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டே, அம்மங்கை - நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தேன். நான் பத்துப் பதினைந்து கஜதூரம் நடந்திருப்பேன். என் காலடியோசை அவன் காதில் விழுந்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, தான் செய்த மலர்களைத் தன் கூந்தலில் சூட்டிக்கொண்டிருந்த அவள் திடீரென மருட்சியோடு திரும்பிப் பார்த்தாள். ஆ! அவள் முகத்தினழகை எவ்வாறு வருணிப்பேன்! நான் என்ன கம்பனா? காளிதாசனா? அவர்களைப்போன்ற கவிஞனாக இல்லாது போய்விட்டேனே என்று தான் நான் வருந்துகிேறன். பொங்கிய கடலினின்றும் பூரித்தெழும் பூரண சந்திரனைப் போல் உருட்சியுந் திரட்சியும் பிரகாசமும் பொருத்திய முகம், அவள் பேரழகி பென்பதைத் தெளிவாகக் காட்டியது. அவளது ஆடையலங்காரத்தையும், ஒப்பனையையும் பர்த்த யான் அவள் ஒரு நவ நாகரீக நாரீ மணியென்று அறிந்து பெரிதும் ஆச்சரிய மடைந்தேன். அப்பேர்ப்பட்டவள் இம்மலைக்கு எப்படி வந்தாள் என்று என் மனதில் பெரிய ஆராய்ச்சி யுண்டாயிற்று. ஆனால், உடுத்தியிருந்த ஆடை முதலியன மரவுரிய லானவை என்று யான் உந்து நோக்கியதில் தெரிந்தது. அவள் அழகாகப் பின்னிவிடப் பட்ட கூந்தலில் காட்டுப் பூக்களை நிறையச் சூடியிருந்தாள். அவளுக்கு வயது முப்பதுக்கு மேலிருக்கும்.

அவள் என்னைக் கண்டாளோ இல்லையோ, பேயைப் பிசாசைப் பூதத்தைக் கண்டால் மக்கள் எவ்வாறு பயந்தோடுவார்களோ, அவ்வாறு முகத்தில் கலக்கத்தைக் தோற்றுவித்துக் குடிசையிருக்கும் பக்கமாக நோக்கி ஓட ஆரம்பித்தாள். இவ்வேறுபாட்டைக் கண்டதும் எனக்கு என்னென்னமோவெல்லாம் மனதில் தோன்றியது. டார்ஜான் கதையிலுள்ளதுபோல் இவள் என்ன மிருங்களால் வளர்க்கப்பட்ட பெண்ணா? அல்லது நாட்டு மக்கள் கூட்டுறவு பெறாத காட்டுச் சாதி மகளா? அவ்விதமிருந்தால் இவள் இவ்வளவு நாகரிகமாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க முடியாதே! எவ்வாறேனும் இவளை யணுகி இவள் யார் என்பதை யறிந்துகொண்டு விடவேண்டும்!” என்று நினைத்து மிகவும் துணிவாக அவள் ஓட எத்தனிப்பதற்கு முன் நான் மிக வேகமாக ஒடி அவளை வழி மறித்து நின்றேன்.

எனது இம் மீறிய செயலைக் கண்டதும் அம் மங்கை ஒன்றுந்தோன்றாது திகைத்து நின்றுவிட்டாள். நான் முதலில் ஏதோ அசட்டுத் துணிவோடு வழிமறித்தேனே யொழிய, அவள் எதிர் நின்றதும் என் நாவெழவில்லை; நானும் உயிர்ப் பதுமைபோல் அசைவற்று நின்றுவிட்டேன். ஆனால் அவள்மட்டும் தன் அழகிய முகத்தை வேறொரு பக்கங் திருப்பிக்கொண்டிருந்தாள். இதனால், பொதுவாக மகளிர் நாணங்கொள்வதுபோல் அவள் ஆடவனாகிய என்னைப் பார்த்து நாணங்கொண்டாள் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பதிலாக, என்னைக் கண்டதனால் அவளுக்குண்டான வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டினாள் என்றே கூறவேண்டும்.

அதோடு, அவள் என் முன்னே அவ்வாறு நீண்ட நேரமிருக்க விரும்பாதவள் போலவும், சமயம் நேர்ந்தால் என்னைத் தாக்கி வீழ்த்திவிட்டாயினும் ஓடிவிட வேண்டுமென்ற எண்ணங்கொண்டவள் போலவும் இருந்தாள் என்பது அவளது மெய்ப்பாட்டிலிருந்து அறிந்தேன். இக்குறிப்பை யுணர்ந்ததும் நான் அவள் அவ்விதம் செய்ய, முயலுமுன், ‘அவள் யார்? அவள் இவ்வடலியில் எவ்வாறு வந்தாள்? ஏன் வந்தாள்?’ என்பனவற்றை அறிந்துகொண்டு விடவேண்டுமென்று பதைபதைத்தேன்.என் காதல் ஏமாற்றத்தினால் உலகத்தை – முக்கியுமாகப் பெண்ணுலகையே இதுவரை, வெறுத்து வந்தேனாயினும், இப்பெண்மணியைக் கண்டதும் அவளது அமைதியான வடிவிலும், அழகிலும் என் மனம் பெரிதுங் கவர்ச்சியுற்றது. இதனால் அவள் பால் காதல் குறிப்புக் கொண்டேன் என்று வாசகர்கள் யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது. அவ்விதக் காதல் நாடகம் எங்களுக்குள் ஏற்படவில்லை. அறிவும் அமைதியும் ஒருங்கே வாய்ந்த பெண்மையின் முன், வீரமும் ஆற்றலுங் கொண்ட ஆண்மை செயலற்றுப் போவது உண்மையென்பதை ஒப்புக்கொள்வோர், அம் மங்கையினெதிரே நான் கோழைபோல் வாய் திறவாது நின்றதை யறிந்து ஏளனஞ் செய்யமாட்டார்கள்.

பின்னர் யான் மனத்திடங்கொண்டு அம்மங்கையை அணுகி, “அ-ம்-மா-!............” என்று. சிறிது இழுத்தேன். அவ்வோசையைக்கேட்டு அவள் பின்வாங்கி ஒதுங்கி நின்றாள். மீண்டும் நான் “அம்மா! நீங்கள் என்னைக் கண்டு பயப்படவேண்டாம்..............” என்று மெதுவாகக் கூறினேன். அவள் முகத்தை என் பக்கம் திருப்பி என்னைக் கடைக்கண்ணால் நோக்கினாள்;

“சிறிது நேரத்திற்கு முன்..............................”

“....................”

“மிகவும் இனிமையும் உருக்கமுமான பாட்டோசை”

“........................”

“என் காதில் விழுந்து என்னை மகிழச்செய்து இங்கே இழுத்து வந்தது. அதைப் பாடியது நீங்கள்தானா?”

“.....................”

எனது கேள்விகளுக்கு அவள் ஒன்றும் பதிலளிக்காது போகவே, நான் பலபல எண்ணலாயினன். ஒரு வேளை அவள் ஊமையா யிருக்கலாமோ அல்லது ஆடவர்களிடம் பேசுவதில்லையென்ற விரதம் பூண்டிருக்கிறாளோ 12 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

லாம் கருதினேன்; ஆயினும், இன்னும் பார்ப்போம் என்று கினைத்து மறுபடியும் அவளே கோக்கி, "அம்மா! இக்கேள்வி களுக்குப் பதில் சொல்ல உங்களுக்கு விருப்பமில்லை. யென்று கருதுகிறேன். அது போகட்டும்; நீங்கள் யார்? மனித சஞ்சாரமில்லாத இம்மலைப் பிரதேசத்திற்கு என் வாறு வந்தீர்கள்; என் வந்தீர்கள்? இங்கு இவ்வாறு தனித்து வாழவேண்டிய அவசியமென்ன சேர்ந்தது? இவற். றையாகிலும் தயவு செய்து எனக்குக் கூறக்கூடாதா?" என்று இாக்கமாகக் கேட்டேன்.

கான் யாரா யிருந்தால் உமக்கென்ன? கிர்மானுஷிய னே இவ்விடத்தில் கர்ன் வசிப்பதைப் பற்றி உமக்கென்ன கவலே; உம் வழியைப் பார்த்து நீர் செல்வதை விட்டு இங்கு வந்து என்னே வழி மறித்துக் கொத்தரவு செய்ய உமக் கென்ன அவ்வளவு துணிவு..................”என்று பெண் சிங்கம் போல் ஒரே கர்ஜனேயாகக் கர்ஜிக்கத் தொடங்கிய

பேச முடியாது தயங்.

அம்மங்கை ஆத்திரத்தால் மேலே கினுள். எதிர்பாராதவாது அவள் முழக்கிய முழக்கத்தைக் கேட்டு நான் உண்மையிலேயே கடுங்கிப் போனேன். કુ கொதித் தெழுந்த அம்மங்கையின் அப் போதைய தோற்றத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டுமே: தன் கணவன் கொலையுண்டான் என்பதைக் கேட்டுக் கொதிக் கெழுந்து மதுரைமாகரை யெரித்த கண்ணகிபிரான்ஸின் சுதந்திரத்துக்காகப் போராடிய மாக்ஸ்வினிவிரப் பெண்மணி ஜர்ன்ஸி ராணி-ஆகியவர்களின் விரக் தோற்றங்கள் கூட இக் கம்பீசப்யங்க கோற்றத்துக்கு ஈடாகாது என்று துணிந்து சொல்லுவேன். இப்பெருமாறு தலைக் கண்டு கான் பேராச்சரிய டுதிற்றேன். சிறிது தேரத் திற்கு முன் அமைதியே வடிவாய் கின்ற மங்கையா இப். போது இவ்வளவு கோமாக விளங்குகிருள்? அவள் தன.

கோபத்தால் பெண்ணு பேயா !! தெய்வ மகளா!!! 13

ജൂഖ് என்று நேரில் பார்ப்போர் எவரும் சந்தேகிக்காம லிருக்க முடியாது. -

எனவே, நான் அவளை ஏறிட்டுப் பார்த்துப் பேசவும் அஞ்சித் தலை குனிந்தவண்ணம், இல்லையம்மா சிறிது நேரத்திற்கு முன் நீங்கள் பாடிய பாடல்கள்-ஆம், நீங்கள் பாடியதுதான் என்று நான் திடமாக நம்புகிறேன்-தற் போதைய எனது மன நிலைக்கு மிகவும் ஒத்ததாக இருந்தன. அப்பாடல்களே வழியே போகும் என்னை இங்கு இழுத்து வந்தன. ஆகவே நான் இங்கே வந்ததற்கு உங்களது பாடல் கள் காரணமே யொழிய நான் ஒரு சிறிதும் பொறுப்பாளி யல்லன். அவ்வாறு வந்த எனக்கு உங்களை இவ்விடத்தில் தனியே கண்டதும் ஆச்சரியமும், பரிவு முண்டாயின. பெண்ணெனின் பேயும் மனமிரங்கு மென்பது உண்மை மொழியல்லவா. ஆதலால், உங்களது நிலைமையை அறிந்து எதேனும், என்னுல் உதவிபுரியக் கூடுமானல் செய்யலாம் என்ற எண்ணத்தோடு கேட்டேனேயன்றி வேறல்ல. இவ் வாறு கேட்டது உங்களுக்குத் தவருகத் தோன்றில்ை அதற் காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று தாழ்மையாகச் சொன்னேன். - இவ்வார்த்தைகளைக் கேட்டு அவள் என்ன கினைத் தாளோ, வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். அவளது மந்த காள முகத்தில் இப்போது கோபத்தைக் காணவில்லை. "ஐயா! நீர் மிகவும் குறும்பராக இருக்கிறீர்! நீர் இங்கு வந்ததற்கு யான் பாடிய பாடல்களா காரணம்? நீராக இங்கு வரவில்லையா? உம்;-ஆடவர்களே பெரும்பாலும் இப்படித்தான் சாதுரியமாகப் பேசி என் போன்ற பேதைப் பெண்களைத் தங்கள் வசப்படுத்திப் பின்னர் எமாற்றிச் செவ்வது வழக்கம். இந்த சூழ்ச்சி எனக்குத் தெரியாததன்று. இவ்வித வஞ்சக வார்த்தைகளும் எனக்குப் °14 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்.

புதிதல்ல. இனி ஒருக்கால் ஆண்மக்களே நம்புவேனென்ரு கினைக்கிறீர்! அது இந்தப் பிறப்பில் இல்லே' என்று முதலில் புன்னகையோடு பேசத் தொடங்கியவள், பின்னர் முகஞ் சிவக்கப் பேசி முடித்தாள். -

இப்ப்ேச்சிலிருந்து அவளது மனப்போக்கை ஒருவதுை ஊகித்தறித்த நான் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தேன். எனவே என்னுடைய மனகிலேயை உண்மையாக எடுத்துரைக்கத் துணிந்து சிறிது வேடிக்கையாகவே, அப்படியா! மிகவுஞ் சந்தோஷம். என்னுடைய அனுபவம் இதற்கு நேர்மாரு னது. பெண்கள்-பெரும்பாலும் மட்டுமல்ல-எல்லோ ரும்ே ஆடவரைக் கண்டதும் முதலில் இவ்வாறுதான் கடு மையாகப் பேசிப் பயப்படச்செய்து பின்னர் தாங்கள் விரித்திருக்கும் வலேயில் சிக்கவைத்துப் படுகுழியில் விழ்த்தி அல்லதுறச் செய்வார்கள். இது அவர்களுக்கு இயற்கை ஆதலால்தான் நாலும் . இப் பெண்களையே அடியோடு வெறுக்கிறேன்” என்று மொழிக்தேன்.

-- "金து' என்ன பரிகாசமா? அல்லது எட்டிக்குப் போட்டியா?" 'i.

இல்லை; இல்லை. உண்ம்ைபாகவே உரைக்கிேജ്ജ്. என் - உடைய இரண்டு வருட காதல் அனுபவத்தின் முடிவு இது.” பெண்களை வெறுக்கும் நீர் என் என்னோடி வந்திஸ்?" ರ್ಸಕ சொல்வதை சம்பு. கீ பாடிய பாடல்கனே என்ன இங்கு இழுத்து விக்கன. என் மனம் இப்போது என்ன நிலையிலிருக்கிறதோ அதுவே பிரதி பலிப்பதுபோல் இப்பாடல்கள் என் காதில் விழவே, அவற்றைப் பாடியவர் யார், என்ற திய விரைக்கோடிவந்தேன். ஓர் இளம் பெண் பயங்கமரான இடத்தில் தனித்திருந்து, இவ்விதப் பாடல் களைப் பாடுவாள் என்று கான் சிறிதும் எதிர்பார்க்கவில்ை பெண்ணு பேயா!! தெய்வ மகளா!!! 15

யாதலால் உன்னேக் கண்டதும் பேராச்சரிய முற்றேன். பெண்களிடத்து எனக்கு எற்பட்டிருந்த வெறுப்புணர்ச்சி இச்சமயம் தலைகாட்டவில்லை. பழைய மனச் சபலம் மேலெழவே, உன்னுடைய தனித்த கிலேமையைக் கண்டு வேருென்றுமல்ல-உதவி செய்யவேண்டுமென்ற ஒரு பெரும் நோக்கக்கோடேயே உன் விவரத்தை பறிய விரும்பினேன்’ என்று நீண்ட பிரசங்கஞ் செய்தேன். - - - - - -

அம்மங்கை வியப்புக்கொண்டோ என்னவோ 6765rr எற இறங்கப் பார்த்தாள். பின்னர் ஒருவாறு கலேயை யசைத்துவிட்டு, அப்படியானுல், கீர் பொய் திகழும் (கிறைந்த) உலகத்தை வெறுத்துவிட்டா வந்திருக்கிறீர்?" என்று ஆழ்ந்த யோசனையோடு வினவினுள். *

"ஆம், பொதுவாக உலக்ை-முக்கியமாகப் பெண் னுலகை-வெறுத்தே வந்திருக்கிறேன்.”

'கானும் உலக நடையை-முக்கியமாக ஆண் மக்கள் டேவடிக்கையைக்- கண்டு வெறுப்படைந்தே இங்கு வந்துவிட்டேன்." * -

என்ன! நீயாகவா இங்கு வந்துவிட்டாய்? வேறு யாராலேயோ அல்லது எப்படியோ தப்பித் தவறியோ இப்பயங்கரமான இடத்தில் வந்து சேர்ந்திருக்கிருப் என் றன்ருே நினைத்தேன்?” ---

இல்லை; இல்லை. நானுகவேதான் இவ்விடத்துக்கு வந்து சேர்ந்தேன்.”

'இது உனது மன உறுதியையும் அளவு கடந்த துணி வையுங் காட்டுகிறது. அது கிடக்கட்டும். கருத்து வேற் அறுமை) இருந்தாலும், நமது நோக்கம் ஒன்ருகவே இருப்ப தைக் கண்டு கான் ஒரு வகையில் மன மகிழ்கிறேன்:ஆமாம், கொடிய மிருகங்களும் விஷ ஜத்துக்களும் நிறைந்த 16 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இம்மலைப் பிரதேசத்தில் நீ எவ்வாறு தனித்து வசிக்கிருப்? உனக்குப் பயமாக இல்லையா?”

"ஒருவித பயமுமில்லை: கொடுங் குனங்கள் நிறைந்த மக்கள் இடையே வாழ்வதைவிட, இங்கு வசிப்பது எவ் வளவோ இன்பமாய் இருக்கிறது. மக்களைவிட மிருகங்கள் எவ்வளவோ கல்லவைகளாக இருக்கின்றன; அவை என் னிடம் எவ்வளவு விசுவாசமாகவும், நன்றியறிவுடைமை யாகவும்) இருக்கின்றன; தெரியுமா?-ஆ! சம் மக்களிடம்அற்றுக்குத் தொண்ணுறு பேரிடம்-சிறிதாகிலும் கன் றியோ நேசமோ இருக்கிறதா எதோ ஒரு விதமான உத வியை-பயனே-எதிர் பார்த்தே ஒருவரை யொருவர் கேசிப் பதுபோல கடிக்கின்றனர். காரியம் முடிந்ததும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.--ஐயகோ இந்த மனித சமூகத்தைப் போல் கொடியதொன்றை இவ்வுலகத்திலேயே காண முடி யாது. ஒருவரை யொருவர் எமாந்தால் பள்ளத்தில் வீழ்த்தி உயிரோடு புதைக்கவன்ருே சமயம் பார்த்துக்கொண்டிருக் கின்றனர்? வலியார்-பொருளாலோ தேக பலத்தாலோ வன்மை யுடையவர்களாக இருப்போர்-எளியரைப் படுத் அங்கொடுமை-உயிரோடு சித்திரவதை செய்துவருங் கொடுமை-அளவிட்டுச் சொல்லக்கூடியதல்ல. இவற்றை யெல்லாம் நோக்கும்போது மிருகங்களும், விஷ ஜந்துக் களும் எவ்வளவோ மேலல்லவா!' இப்போது அவள் முகத்தில் கோபங் கொழுந்துவிட்டு எரிக்கது. தேகத்தில் படபடப்புக் காணப்பட்டது. அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்திலுள் இருத்து எழுந்தது என்பதை நான் கன்முக அறிக்தேன். - リー。ふ・エ 、 ミー =?等*

.ே இம்மலைப் பிரதேசத்துக்கு வந்து எவ்வளவு கால மாயிற்று' - பெண்ணு பேயா!! தெய்வ மகளா!! ! 17

"சுமார் நான்கைந்து மாதமிருக்கும்.”

இதுவரை நீ இங்கு மனிதர் யாரையுஞ் சக்திக்க வில்லையா?” - - - -

"இல்லை. இங்கு வந்த பின்னர் முதன் முதலாக உம் மையே இன்று கண்டேன்." - -

"ஆச்சரியம்! இவ்வளவு தூரம் மனித சமூகத்தையே வெறுத்து, பெற்ற தாய். தந்தையரைப் பிரிந்து, உயிரையும் பொருட்படுத்தாது இங்கு வந்து தனித்து வசிப்பதற்கு ஏதேனும் காரணமிருக்க வேண்டுமல்லவா! அது என்ன வென்று நான் அறிய விரும்பலாமா! உனது வரலாற்றை நான் தெரிந்துகொள்ள விரும்புவதில் தவருென்று மில்

லேயே?’ என்று நயமாகக் கேட்டேன்.

- அதற்கு அவள் கோப நகை நகைத்து, தாராளமாகத் தெரிந்து கொள்ளலாம். நீர் மட்டுமல்ல; இவ்வுலகமே தெரிந்துகொள்ள வேண்டுமென்பது எனது பேரவா. எனது வாழ்க்கை வரலாறு மனித சமூகத்துக்குப் பெரும் படிப் பினேயாக இருக்குமென்று கான் நம்புகிறேன். அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்றுதான் இதுவரை தயங்கி யிருந்தேன். மனித சமூகத்தையுந் திரும்பிப் பார்ப்பதில்லை; எனது வரலாற்றையும் வெளிப்படுத்த வேண்டுமென்ருல் அது சாத்தியமான காரியமா? ஏதோ நீர் எவ்விதமோ இங்கு வந்து தோன்றி, மடங்கியிருந்த எனது உணர்ச்சி பைத் துண்டிவிட்டுவிட்டீர். அதுவன்றி நீரும் ஒரு வகை யில் என்னைப் போலவே மனித சமூகத்தை வெறுத்து வக் திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் ஒத்த கொள்கையும் நோக்கமும் உடையவர்களிடம் எதையும் சொல்வது நல்ல. தென்றே கருதுகிறேன். நீர் எனது வரலாற்றைக் கட்டு.

உலகத்துக்குப் பரப்பிலுைஞ் சரி எவ்வாறு செய் ாலும் 18 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

இனி உம் இஷ்டம். ஆணுல் ஒன்று. எனது வாழ்க்கை வரலாற்றைக் கேட்பதற்கு உமது இருதயம் பலமுடைய தாக இருக்கவேண்டும். அதற்குத் தகுந்தவாறு உமது மனதையும் திடப்படுத்திக் கொள்வீராக’ என்ருள்.

நான் கிரித்துக்கொண்டே, அவ்வளவு கொடுமை நிறைந்ததா? உம்-அத்துனே கொடுமைகளையு மனுபவித்து விட்டு நீ இருக்கும்போது, நான் கேட்டுக் காங்கத்தான முடியாது? சி சொல்லப் போவதைப்போன்ற கொடுமை, களைக் கண்டுங் கேட்டும் அனுபவித்தும் நான் நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ந்திருக்கிறேன். ஆதலால், எங்கு உன் வர லாற்றைக் கேட்டுத் தாங்கமாட்டாது இருதயம் வெடித்து இறந்து விடுவேனே என்று பயப்பட வேண்டிய அவசிய மில்லே. இனி நீ தயங்காமல் உனது வாழ்க்கை வரலாற். றைக் கூறலாம்,' என்று சொன்னேன். .

மிேகவுஞ் சந்தோஷம்.--சரி; நான் இப்போது என் அறிவு தெரிந்த நாள் முதல் என் வாழ்க்கையில் எற்பட்ட சம்பவங்களே ஒன்றும் ஒளியாது கூறப்போகிறேன்; இதில் மின்கப்படுத்திக் கூறல் குறைத்துக் கூறல் ஒன்றுமில்லை. சிலர் தங்கள் வாழ்க்கை வரலாற்றைக் (Autobiography) கூறுகையில், தங்கள் கெளரவத்துக்குப் பாதகமான பாகங் களே-தீய ஒழுக்கங்களை-கெட்ட குணங்களே.மறைத்து, தங்கள் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களின் தீக்குணச் செயல்களையே அதிகப்படுத்திக் கூறி, அதன் வாயிலாகக் தாங்கள் பரிசுத்த மூர்த்திகள் என்று காட்டிக்கொள்ளபிறர் கினைக்கும்படிச் செய்ய-முயல்வார்கன். அது பெருக் தவறு. அவ்வாறு நான் கூறமாட்டேன் என்பதை நீக்கன் நினைவில் வைக்கவேண்டும். அவ்விதம் பொப் வரலாறு கூறுவது உலக மக்களுக்கு ஒரு கல்ல படிப்பினையைப் போதிப்பதாகாது என்பதை நான் நன்கு அறிவேன்"என்று பெண்ணு பேயா !! தெய்வ மகளா!! ! 19

பெரிய பீடிகை போட்டுவிட்டுத் தன் வாழ்க்கை வரலாற். றைக் கூறத் தொடங்கினுள்.

அவள் இதுவரை என்னிடம் பேசிவந்த வார்க்கைகளி லிருந்து நான் அவளது தெளிந்த அறிவையும் ஆழ்ந்த உலக ஞானத்தையும் அறிந்து என்னுள் பெரிதும் வியப்புற்றேன். ஆல்ை அவ்வாச்சரியத்தை மொழி மூலமாகக் காட்ட ஆரம் பித்தேைைல், எங்கு பேச்சு வளர்ந்து அவள் வரலாற்றைக் கேட்கத் (அவ்வளவு ஆவலும் துடிதுடிப்பும் இருந்தது: வாசகர்களுக்கு எப்படி இருக்கிறதேர் எனக்குத்தெரியாது) தடைபடுமோ என்று அஞ்சி வாய்திறவாது அவள் முகக் தையே நோக்கி நின்றேன்.

வரலாற்றைக்கூற ஆயத்தமான அப்பெண்மணி, திடீ ரென எதையோ கினைத்துக்கொண்டவள்போல், நான் என்ன முட்டாள்தனமான காரியம் செய்தேன்! என்னை நாடிவந்த அதிதியாகிய உம்மை இதுவரை நிற்கவைத்தே ஏதேதோ பேசிவிட்டேன். அப்பிழைபோதாகென்று இனி யும், உம்மை இங்கேயே கிற்கவைத்து என் கதையை அளக்க ஆரம்பித்துவிட்டது எனது பெரும் பேதைமையை பன்ருே காட்டுகிறது? மேலும், பொழுது சாய்ந்துவிட்டது. துஷ்ட மிருகங்களும், விஷஜந்துக்களும் காராளமாக வெளிவந்துல வப் போகும் நேரம். ஆதலால் நாம் நம்முடைய குடிசைக் குப் போவோம். வாரும்” என்று கூறிக்கொண்டே காங் கள் கின்றிருந்த இடத்துக்குச் சிறிது தாரத்தில் மேற்கே இருந்த குடிசையை நோக்கிக் கைகாட்டிய வண்ணம் நடக் தாள். அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல் என் கால் கள் அவள் பின்னே என்னே யிழுத்துச் சென்றன. அவள் முதலில் என்னைக் கண்டதும் நடந்துகொண்ட மாதிரியும் பேசிய முடுக்கான வார்த்தைகளும் தளர்ந்துபோய், ! படியாகக் கீழ்ப்படிந்து வருவதற்குக் காரண.ெ 20 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வென்று யேர்சித்துக்கொண்டே நான் செல்லலானேன். சமூகக் கொடுமையை கினேந்து நினைந்து மனம் புண்ணுகி வெறுப்புணர்ச்சி மிகுந்து காட்டில் சிலகாலம் அவள் மிரு கங்களிடையே வசித்து வந்தமையால், முதலில் என்னைக் கண்டவுடனே அவ்விரக்தி மனுே பாவத்தோடே கடுமை யாக என்னிடம் நடந்துகொண்டாள் என்றும், சில மணி நேரங்கள் என்ளுேடு பேசி என் மனப்போக்கை பறிந்து பழகியகளுல் பழைய மனித சுபாவம் வந்து மரியாதை, தயாள குணம் மேலெழுந்து வேலை செய்கிறது என்றும் அத்து மகிழ்க்கேன். - -

அம்மங்கை குடிசையருகு சென்றதும், நான் பின்னே வருகிறேன என்று திரும்பிப் பார்த்துவிட்டு, அக்குடிசை யின் கதவைத் திறந்து உள் நுழைந்தாள். அங்கு ஒரு பக் கத்தில் மாட்டப்பட்டிருந்த காழை மடலால் அழகாகப் பின்னப்பட்ட சிறிய பாயைக் கீழேபோட்டு, அதில் அபi ரும்படி என்னேக் கூப்பிட்டாள். நான் வாப் பேசாது இயந்திரம்போல் அவள் சொல்லிய வண்ணமெல்லாம் இயங்கலானேன். கான் உள்ளே சென்று அத்தாழம் பாயின்மீது உட்கார்த்ததும் அகன் உள்ளமைப்பைக் கவன மாகப் பார்த்தேன். அவ்விடம் மிகவும் பரிசுத்தமாக இருந் தது. மரத்தாலாகிய பாத்திரங்கள் நாலந்தும், பிரம்பினுல் பின்னப்பட்ட கட்டு முதலிய சாமான்கள் சிலவும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மரக்கட்டி லொன்று ஒரு மூலையில் கிடக்கது. . பூக்குடலேகள் இரண்டு மூன்று மேலே தொங்கவிடப்பட்டிருந்தன. இரு மரக் கூஜாக்கள் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்தன.ஆளுல் இம்மரச் சாமான் கள் எல்லாம் தச்சர்கள் செய்வதுபோல் திருத்தமாக இல்லை. எனினும், அவை பொதுவாக, உபயோகத்துக்கு ஏற்றவை யாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தன. இவ்வாறு பெண்ணு பேயா தெய்வ மகளா!! ! 2].

இவையெல்லாம் அவையவை இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது, அவளது மனத்தின் செம் மையைக் காட்டியது. தன் உபயோகத்துக்கு வேண்டிய ச. மான்களை யெல்லாம் இப்பெண்ணே செய்து கொண் டிருக்கிருள் என்பதை அவைகளின் அமைப்பிலிருந்து ஒரு வாறு ஊகித்துக்கொண்டேன். முற்றும் துறக்க முழு முன்ரிவரது ஆசிரமங்கூட இவ்வளவு தூய்மையாகவும் திருத்தமாகவும் இருக்காது என்று துணிந்து கூறுவேன். இவளது விசித்திர வாழ்க்கையையும், சங்கியாச (அக்கத்து வத்தில் இல்லாவிடினும்) நிலைமையுங் கூர்ந்து காணக் காண எனக்கு ஆச்சரியமே மிகுந்தது.

இதற்குள் அப்பெண்மணி, பூக்குடலேகள் ஒன்றி

விருந்து பழ வகைகள் சிலவற்றை எடுத்து ஒரு பிரப்பந்தட் டில் வைத்து என் முன் கொண்டுவந்தவள், யான் ஆழ்ந்த சிந்தனையி விருப்பதைக் கண்டு அப்படியே கின்று, என்ன! எதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருக்கிருப்போ விருக் கிறது. ஏதேனும் உலகத்தின் முக்கிய பிரச்சினை யொன் றைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு உமக்கு ஏற்பட் டிருக்கலாம் என்று கினேக்கிறேன். அப்படித்தானே!" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். -

அவளது குறுபுத்தனமான கேள்வியைக் கேட்டு எனக்கும் நகைப்பு வந்துவிட்டது. நான் என்ன உல கத்தை உய்விக்க வந்த தலைவன? அல்லது சக்கரவர்த்தியா? உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அப்படி யொன்றுமில்லை. இம்மலைப் பிரதேசத்தில் இயற்கை யன்ன யளிக்கும் அற்புதக் காட்சியில் என் மனம் இலயித்துப் போய்விட்டது. ஆண்டவனது படைப்புத் திறத்தையும் அருள் விளக்கத்தையும் இங்குதான் நன்ருகக் காண்கி றேன்” என்று உணர்ச்சியோடு கூறினேன். 蛇盛 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இதைக் கேட்ட அம்மங்கை முகமலர்ச்சியுற்று, உம் முடைய வார்க்கையிலிருந்து நீர் ஓர் இயற்கை வாதி, தத் துவ ஞானி என்று தெரிகிறது.-நகரத்தில் அறுசுவை பகார்த்க வகைகளோடு உண்டியருந்திப் பழகிய உமக்கு, குரங்கு தின்னும் இப்பழ உணவு பிடிக்குமோ என்று அஞ் சினேன். இனி அவ்விதம் மயக்கங்கொள்ளவேண்டிய அவசியமில்லை யென்று கினைக்கிறேன்: தயவு செய்து இப் பழங்களே உண்டு நீருக்திக் களேப்பாறும்’ என்று கூறிப் பழத்தட்டை என் முன் வைத்து கூஜாவில் தண்ணீரைக் ெ காண்டு வந்து శొ} த்தாள் *

நான் உண்ணுவிசகம்பூண்டே உயிரைவிட வேண்டுமென்ற கொள்கையோடு கான்கைந்து நாட்களாகப் பட்டினியாகக் கிடந்தே வழி நடந்து வந்தே குகையால், முன்னரே குறித்த படி பெரும் பசியும், சோர்வும் என்ன வாட்டின. ஆயினும் இம்மங்கையின் இனிய பாடலக் கேட்டதலுைம், அவ ளோடு பேசியதஞலும் அவற்றின் துன்பம் சிறிது மறைத் திருந்தத. அதோடு அவளது வரலாற்றைக் கேட்க வேண்டு மென்ற ஆவலில், எனது மனத்துன்பம் முதலிய யாவற்றை யுமே மறந்திருந்தேன். அவ்வாறிருக்க அவளது வரலாற் றைக் கேட்பதற்கு இடையூருக, அவளுடைய உபசரிப்பு முதலியவைகள் இருக்கவே, எனக்கு அருவருப்பும், ஆயாச் மும் உண்டாயின. எனினும், அம்மங்கையின் வார்க்கைக்கு மாருக நடக்கவும் எனக்குச் சிறிது பயம். ஆகவே, அப் பழங்களைச் சிறிது கிறிதாகத் தின்ேறன். அவளும் சில பழங் களே பெடுத்து வைத்துக்கொண்டு என்னெதிரே உட்கார்ந்து உண்டாள். நான் கின்ற பழங்கள் மிகவும் இனிமையாக இ. தேன். என் வாளுளிலேயே அவ்வித பழங்களைத் தின்றது. கிடையாது. ஆகவே கான் அவளேப் பார்த்து, இப் வழங்கள் மிக இனிமையாக இருக்கின்றன." என்றேன். பெண்ணு பேயா !! தெய்வ மகளா ! 23

அவள் புன்சிரிப்போடு, இப்பழங்கள் எவ்வளவு இனி மையாக இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு, என் வாழ்க்கை வரலாறு மிகக் கசப்பாக இருக்கும். அதை உம் காதுகள் எவ்வாறு கேட்டுச் சகிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறிஞள்.

நான், அக்கரையில்லை; நீ அதைப்பற்றிக் கவலேப்பட வேண்டாம். நீ இப்போது பேசிவரும் பீடிகையும், உப -சா வார்த்தையுமே எனக்குக் கசப்பா யிருக்கிறது. அது தவிர, நீ எவ்வளவு சீக்கிரம் உன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிருயோ அவ்வளவுக் கவ்வளவு எனக்கு மிகத் கிருப்தியாக இருக்கும்.

'செவிக்கு உணவிலாத போத்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.”

என்று தமது தமிழ் நாவலர் சொல்லியிருப்பது உனக்குத் தெரியுமென்று கினைக்கிறேன். என் செவிக்கு விருந்து கொடுக்க வேண்டிய சமயத்தில், அதைத் தடைப்படுத்தி போடப்போட தூர்ந்து போகாத பேராசை மிகுந்த இவ் வற்ப வயிற்றுக்கு விருந்துவைக்க நீ ஆரம்பித்துவிட்டது கான் எனக்குச் சிறிதும் சகிக்கவில்லை. ஆதலால் இனியும் பேச்சை வளர்த்தாது உன் வரலாற்றைக் கூற ஆரம்பியும்' என்று என் தமிழ்ப்புலமையைக் காட்டிப் பட படப்பாகப் பேசினேன். -

அம்மங்கை ஆச்சரியமாகவும், குறும்பாகவும் என்னைப் பார்த்து,"அப்படியா அத்துணை ஆவலா அவ்வளவு அவ. சரமா என் வரலாற்றை யறிய” என்று கேட்டுக்கொண்டே கூஜாத், கண்ணிரைக் குடித்துவிட்டு எழுந்த நான் கின்று விட்டு வைத்திருந்த பழத்தட்டையும், கூஜாவையும் எடுத்து ஒன்ாக வைத்தாள்.