உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/தேர்வு
தேர்வு நெறிகளும், அளவு முறைகளும், மாணவர்களின் திறமை, தேர்ச்சிபற்றி, தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
தேர்வுகள் எல்லாம் மாணவர்களின் திறமைகள், வலிமை, நீடித்துழைக்கும் ஆற்றல், விளையாட்டு பற்றிய அறிவு, நடத்தை, பண்பாற்றல் பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றன.
அளவு முறைகள் எல்லாம், மாணவர்களின் உடல் அளவு, அமைப்பு, உயரம், எடை, உடல் இயங்கு ஆற்றல், சாதனை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.
தேர்வும் அளவும் எதற்காக?
1. மாணவர்களின் பலத்தையும் பலஹீனத்தையும் அறிந்து கொள்ள.
2. மாணவர்களை ஓரினப் பிரிவாகப்பிரித்துக் கொள்ள.
3. மாணவர்கள் தங்கள் திறமையைத் தெரிந்து கொள்வதுடன், மற்றவர்கள் திறமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, உயாத்திக்கொள்ள.
4. மாணவர்களின் திறமை வளர்ச்சியை மதிப்பீடு செய்ய.5. ஆசிரியர்கள் தங்கள் போதனையில், மாணவர்கள் எவ்வளவு தூரம் பயனடைந்தார்கள் என்று அறிந்து கொள்ள.
6. மேலும், முன்னேற்றத்திற்காக ஆய்வும் சோதனையும் மேற்கொள்ள.
நல்ல தேர்வு நெறிக்கான அளவு முறை (Criteria)
1. எத்தனை முறை தேர்வுகள் நடத்தினாலும், ஒரே விளைவை (Result) ஏற்படுத்தித்தரக்கூடிய, நம்பிக்கையை (Reliability) ஊட்டுவதாக தேர்வு முறை அமைந்திருக்க வேண்டும்.
2. ஐம்புலன்களாலும் அறிந்து செயல்படுத்தக் கூடிய தாக (Objectivity) தேர்வு அமைந்திட வேண்டும்.
3. சிக்கல் இல்லாத எளிய தன்மை (Simplicity) கொண்டதாக தேர்வுமுறை இருக்க வேண்டும்.
4. என்றென்றும் மாறிப்போகாத நிலையான தன்மை (Standard) கொண்டதாக விளங்க வேண்டும்.
5. தேர்வுகளை நடத்த ஒரு சீரான நடை முறைகளையும் திட்டவட்டமான தகவல்களையும் தரக் கூடியதாக (Standard directions) இருக்க வேண்டும்.
6. தேர்வு நெறியானது எதனை அளக்கவேண்டும் என் பதைத் தெளிவாக சுட்டிக்காட்டி, நடத்தும் குணம் கொண் டதாகவும் (Validity) விளங்க வேண்டும்.
உடல் திறத் தேர்வுகள் (Physical Efficiency Tests)
உடல் திறம் என்பது பற்றி, பல நூற்றாண்டுகளாக ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும், ஒரு முடிந்த முடிவுக்கு யாராலும் வர முடியவில்லை .
அமெரிக்காவைச் சேர்ந்த சார்ஜென்ட் (Sargent) என்பவர், தசைவலிமையால் தான் ஒருவர் உடல் திறம் வளர்கிறது என்று கண்டு பிடித்துக் கூறினார்.தசை வலிமையானது உடலுறுப்புக்களின் மொத்த செயல் திறனால் வளர்கிறது என்று பின்னாளில் கண்டு பிடிக்கப்பட்டது.
ஆகவே, ஒருவர் உடல் திறம் (Physical Fitness) உடையவர் என்பதை, பின்வரும் கூறுகள் கொண்டு, முடிவு செய்யலாம் என்ற ஒரு மரபு ஏற்பட்டது.
1. வலிமை (Strength)
2. வேகம் (Speed)
3. நெகிழ்ச்சித் தன்மை (Agility)
4. நீடித்துழைக்கும் ஆற்றல் (Endurance)
5. நரம்புத் தசை இணைந்த செயலாற்றல் (Neuro muscular Coordination)
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, தனியாள் உடல் திறத் தேர்வு, தரமான பொது உடல் திறத் தேர்வு என்று இரு பிரிவுகளாகப் பிரித்து, தேர்வு செய்து பார்க்கலாம்.
தனியாள் உடல் திறத் தேர்வு (Individual Physical Efficiency Test)
கீழ்க்காணும் உடலியக்க செயல்கள் மூலமாக, பள்ளி மாணவர்களின் உடல் திறனை தேர்வு செய்து பார்க்கலாம்.
1. 100 மீட்டர் ஓட்டம் (வேகம்).
2. உயரம் தாண்டல் (நெகிழ்ச்சியும், உறுப்புக்கள் இணைந்த செயல் ஆற்றல்)
3. நீளம் தாண்டல் (வேகம், நெகிழ்ச்சி, உறுப்பு செயல் ஆற்றல்)
4. கிரிக்கெட் பந்தெறி (வலிமை, இணைந்த செயலாற்றல்)
5. தொங்கு கம்பியில் ஏறி இறங்கல். (வலிமை, தசைச் சக்தி) (Pull ups)6. 800 மீட்டர் ஓட்டம் (நீடித்துழைக்கும் ஆற்றல்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், இவ்வளவு சாதனை செய் தால், இத்தனை வெற்றி எண் கிடைக்கும் என்று குறிப் பிட்டு, தயாரித்துக் கொண்டு அதற்குப் பிறகு, தேர்வு செய்து, அறியலாம்.
100 மீட்டர் | உயரம் தாண்டல் | நீளம் தாண்டல் | கிரிக்கெட் பந்தெறி | தொங்கு கம்பியில் ஏறி இறங்கவும் | 800 மீட்டர் | வெற்றி எண் |
---|---|---|---|---|---|---|
2. தரமான பொது உடல் திறத் தேர்வுகள் (Standard Physical Efficiency Tests)
15-வது தலைப்பில் உள்ள ஒடுகளப்போட்டிகள் என்பதில், திறமறியும் போட்டிகள் (Tabloid Sports) என்ற பகுதியில் இருக்கின்ற குறிப்புகள், இந்தத் தேர்வுக் கும் பொருந்தும்.