உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/தொடர்
விளையாட்டு என்பது, தனக்குரிய திறமையை தெரிந்து கொண்டு, மகிழ்ச்சி பெறுவதற்காக ஏற்பட்டதாகும்.
விளையாட்டுப் போட்டி என்பது, தனது திறமையுடன் மற்றவர்கள் திறமையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகும்.
தனது திறமை மற்றவர்கள் திறமையுடன் சரிசமமாக இருக்கிறதா, அல்லது சரிந்துபோய் கிடக்கிறதா என்பதைப் புரிந்து கொண்டு, மேலும் திறமைகளில் தேர்ச்சி கொள்ள, எழுச்சி பெற, உணர்ச்சி கொள்ள, போட்டிகள் உதவுகின்றன.
அப்படிப்பட்ட அறிவார்ந்த நிலையில், உயர்ந்த தன்மையில் அமைந்துள்ள போட்டிப் பந்தயங்களை, எப்படி, நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு நியதியும் நேர்மையும் இருக்க வேண்டுமல்லவா!
எல்லார்க்கும் சமவாய்ப்பு, சமஅந்தஸ்து என்ற ஜனநாயகப் பணியிலே உருவாக்கப்பட்டிருக்கும், போட்டித் தொடர் பந்தயங்கள் பற்றி, இங்கே விரிவாகக் காண்போம்.
தொடர் போட்டிப் பந்தயங்களின் அடிப்படை நோக்கம் வெற்றி தோல்வியை விளைவித்துக் கொடுப்பது தான் என்றாலும், வழிமுறைகளும், வாய்ப்பு நிலைகளும் கொஞ்சம் மாறியே தான் அமைந்திருக்கின்றன.
எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல்கின்றன என்பது ஒரு மேனாட்டுப் பழமொழி.
எல்லா தொடர் போட்டிப் பந்தயங்களும், ஆட்டக்காரர்களின் திறமையை மதித்து; ஆடும் யுக்தியை வளர்த்து. போட்டி நடத்துபவர், பங்கு பெறுபவர். நடுவராகப் பணி யாற்றுகிறவர், பார்வையாளர்கள் என்று எல்லோருக்குமே எல்லாம் தருவதாக அமைந்திருப்பதால் தான், பல்வேறு விதமாகப் பிரிந்து, பாங்கான நோக்குடன், பண்பான, அமைப்புடன் பணிபுரிந்து, பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இனி, பந்தயங்களின் பல வகை பிரிவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
I ஒரு வாய்ப்பு முறை அல்லது நீக்குமுறைப் பந்தயங்கள்
(Knock out or Elimination Tournaments)
இதிலே இருக்கின்ற வெவ்வேறு பிரிவுகள்.
- அ) ஒரே ஒரு வாய்ப்பு முறை (Single elimination)
- ஆ) ஆறுதல் வாய்ப்பு முறை (Consolation Type)
- இ) இரட்டை வாய்ப்பு முறை (Double Knock out)
- ஈ) பாக்னால் ஒயில்டு வாய்ப்பு முறை (Bagnall wild elimination)
II தொடர் வாய்ப்புப் பந்தயங்கள் அல்லது சுழல் முறை பந்தயங்கள் (League or Robinhood Tournaments)
அ) ஒரு வாய்ப்புத் தொடர் (Single league)
ஆ) இரட்டை வாய்ப்புத் தொடர் (Double league)
III ஒருங்கிணைந்த தொடர் போட்டிப் பந்தயங்கள் (Combination Tournaments)
அ) ஒரு வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (Knock out Cum Knock out)
ஆ) ஒரு வாய்ப்பு முறையுடன் தொடர் வாய்ப்பு முறை (Knock out Cum League)
இ) (பல) தொடர் வாய்ப்பு முறையுடன் தொடர் வாய்ப்பு முறை (League Cum League)
ஈ) தொடர் வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (League Cum Knock out)
IV சவால் போட்டிப் பந்தயங்கள் (Challenge Tournaments)
அ) ஏணி முறை (Ladder)
ஆ) கோபுர அடுக்கு முறை (Pyramid)
இத்தனை பிரிவுகள் எதற்கென்ற ஐயம், உங்களுக்கு ஏற்படுவது இயற்கையே.
ஒரு போட்டித் தொடரை நடத்துவது என்றால், கீழ்க் காணும் நிகழ்ச்சிகளை அனுசரித்துத் தான் ஏற்பாடு செய்திட வேண்டும்.
1. போட்டியை நடத்துகின்ற காலம் (Season)
2. போட்டியை நடத்தக்கூடிய நேரம் (Time)3. இருக்கின்ற ஆடுகள வசதி, உதவி சாதனங்கள் (Play ground & Equipment)
4. போட்டி நடத்துகிற விளையாட்டின் தன்மை (Type of game)
5. ஆட்ட அதிகாரிகள் எண்ணிக்கையின் அளவு (Officials)
6. போதிய பொருளாதாரத்தைப் பொறுத்து (Finance)
இனி, ஒவ்வொரு வகை தொடர்போட்டிப் பந்தயத்தை நடத்த, போட்டி நிரல் (Fixtures) தயாரிக்கும் முறையினையும், அதற்கான எடுத்துக்காட்டு மூலம் அறிந்து கொள்வோம்.
1. ஒரு வாய்ப்புப் போட்டி முறை
(Single Knock out or Single Elimination)
இதை நீக்குமுறை போட்டி என்றும் கூறுவார்கள்.
இந்த ஒரு வாய்ப்புப் போட்டித் தொடரில், பங்கு பெறுகின்ற குழுக்கள், ஒரு முறை தோற்றுப் போனாலே, போட்டியிலிருந்து இடமிழந்துபோகின்றன. மீண்டும் ஆட வாய்ப்பே அதற்கு கிடையாது. கிடைக்காது.
இந்தப் போட்டியில் பங்கு பெறுகின்ற குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போட்டி ஆட்டங்களின் எண்ணிக்கையும் அமையும்.
உதாரணமாக, 12 குழுக்கள் போட்டியில் பங்கு பெறுகின்றன என்றால், நடக்கின்ற போட்டி ஆட்டங்கள் 11 என்று அமையும்.
- இதற்கான சூத்திரம் n-1 என்பது.
- N என்றால் Number of Teams என்பது அர்த்தம்.
அதில் ஒன்றைக் கழித்தால், எத்தனை ஆட்டம் என்று தெரியும்.
ஆகவே 12 குழுக்கள் என்றால், 12-1 = 11 என்று தெரிந்து கொள்ளலாம்.
போட்டி நிரல் தயாரிக்கும் முறை (Drawing Fixtures)
போட்டியில் கலந்து கொள்கிற குழுக்களின் எண்ணிக்கை- இரட்டைப்படையில், 2ன் பெருக்கத்தில் இருந்தால், அதற்கான போட்டி நிரல் தயாரிக்கும் முறை வேறு. அதாவது 2, 4, 6, 8, 16, 32, 64, 128, என்ற கணக்காக இருக்கும் போதும் இரட்டைப் பெருக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்காமல், 5, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 17லிருந்து 31, 33லிருந்து 63 என்பதாக இருந்தால், போட்டி நிரலின் தயாரிப்புத் தன்மை வேறாக இருக்கும்.
இரட்டைப் பெருக்க எண்ணிக்கையில் உள்ள குழுக்களின் எண்ணிக்கை 8 என்று கொள்வோம். அதற்கான போட்டி நிரலை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
1. சரியான அளவுள்ள காகிதத்துண்டுகள் 8 எடுத்து, அவற்றில் 1 முதல் 8 எண்களை தனித்தனியே எழுதி, சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பிறகு ஒவ்வொரு காகிதச் சுருளையும் குலுக்கி எடுத்து, அதிலுள்ள எண்ணைப் படித்து, அதன்படி வரிசையாக எழுத வேண்டும். அதாவது, மேல் தட்டில் உள்ள (Top), அடித்தட்டில் உள்ள எண்களுக்கேற்ற குழுக்களின் பெயர்களை எழுத வேண்டும்.
3. முதல் சுற்று ஆட்டத்திற்கான குழுக்களை அடைப்புக்குறி மூலம் இணைத்து, ஆடக்கூடிய தேதி, நேரம், இடம் முதலியவற்றைக் குறிக்க வேண்டும்.
4. இரண்டாம் சுற்று முதல் இறுதிச் சுற்று வரை, தொடர்ந்து அடைப்புக் குறியில் காட்டிட வேண்டும்.
8 குழுக்கள் என்கிறபோது, மேல் தட்டில் 4ம், கீழ்த் தட்டில் 4ம், என்றும் அமையும்.
இனி, போட்டி நிரல் பட்டியலைப் பார்ப்போம்.
1. 8 அணிகளுக்கான போட்டி நிரல்
2. 11 அணிகளுக்கான போட்டி நிரல்
போட்டியிடுகின்ற குழுக்களின் எண்ணிக்கை 2ன் பெருக்கத்தில் இல்லாமல் இருந்தால் (8, 16, 32); அதற் கேற்ப போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
அதற்கு உதவுவதுதான் சிறப்பிடம் தருகின்ற விலக்கு முறை (Bye)
எத்தனை குழுக்கள் என்று அறிந்து கொண்ட பின், அந்த எண்ணிக்கையை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
11 குழுக்கள் வந்திருந்தால் 5ம்,
12 குழுக்கள் வந்திருந்தால் 4ம்,
13 குழுக்கள் வந்திருந்தால் 3ம்,
20 குழுக்கள் வந்திருந்தால் 12ம் என்ற எண்ணிக்கையில் சிறப்பு விலக்கு (Bye) கொடுக்க வேண்டும்.
இது எப்படி வருகிறது? ஏன் கொடுக்க வேண்டும்? என்று கேள்விகள் எழுவது உண்மை தான்.
நாம் இரண்டின் பெருக்கம் என்று முதலில் கூறினோம் அல்லவா! அது 2,4, 8, 16, 32,64 என்று வருகிறது அல்லவா!
6 குழுக்கள் என்றால் 8க்கு உட்பட்டதல்லவா! அப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 2 குழுக்கள். 8-6 = 2 11 குழுக்கள் என்றால் 16க்கு உட்பட்டதல்லவா! அப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 5 குழுக்கள். 16–11 = 5
20 குழுக்கள் என்றால் 32க்கு உட்பட்டதல்லவா! அப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 12. 32-20 = 12
இப்படியாக, நாம் கழித்து, முடிவு செய்துவிட வேண்டும்.
சிறப்பு விலக்கு பெறுகின்ற குழுக்கள், முதல் சுற்றுக்கு மட்டுமே விளையாடாத வாய்ப்பைப் பெறுகின்றன.
ஒரு போட்டி ஆட்டத்தை ஆடாமல் இருப்பதனாலே, அந்தக் குழுக்களுக்குப் பெரிதாகப் பயன் ஏதும் விளைந்துவிடப் போவதில்லை.
ஒரு சுற்று ஆட்டம் ஆடிய பிறகு, ஓய்வு கிடைத்தாலும் நல்லது. சுற்றுக்கு முன்னே ஓய்வு கிடைப்பதால் என்ன லாபம்?
எனவே, முதல் சுற்று ஆட்டத்திற்கு மட்டும் சிறப்பு விலக்குத் தருகின்ற குறிப்பை மட்டும் நீங்கள்புரிந்துகொள்ள வேண்டும்.
சிறப்பு விலக்கு அளிக்கின்ற முறை
1. 5 குழுக்கள் சிறப்பு விலக்கு பெறுகின்றன என்றால், அந்த 5 குழுக்களின் பெயர்களையும், தனித்தனியே ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி, சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பதினோரு குழுக்கள் பங்கு பெறுகின்றன என்றால், அந்த 11 குழுக்களின் பெயர்களையும் வரிசையாக எண்கள் தந்து, பட்டியலில் நிரப்ப வேண்டும்.
3. பிறகு, 5 துண்டுச் சுருள்களிலிருந்து, ஒன்று ஒன்றாக, ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துப் பார்த்து, முதலில் வருகின்ற குழுவின் பெயரை, கீழ்த் தட்டு பட்டியலில் உள்ள 11வது இடத்தில் எழுத வேண்டும். முதல் விலக்கு, கீழ்ப்பட்டியலில் கடைசி. 2ம் விலக்கு மேல் பட்டியலில் முதல் இடம் 1, 3வது விலக்கு கீழ்ப்பட்டியலில் 10. நான்காவது விலக்கு மேல்பட்டியலில் 2. 5வது விலக்கு கீழில் உள்ள 9வது இடம். இந்த முறையை அடைப்புக் குறிப்பில் காண்பித்திருக்கிறோம். அறிக.
11 குழுக்களுக்கான போட்டி நிரல்
சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
இதில் மேல்பாதி, கீழ்ப்பாதி என்று நாம் அடிக்கடி குறிப்பிடுகிறோம். இதை எப்படிக் கண்டுபிடிப்பது?
1. குழுக்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருந்தால் எளிது. அதற்கான சூத்திரம் . 10 அணி என்றால், மேல்பாடு யில் 5ம், கீழ்ப்பாதியில் 5ம் வரும்.
2. குழுக்ளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால், அதற்கான சூத்திரம் (n + 1)÷2.
- மேல்பாதிக்கானது இது.
- உம் : 11 குழுக்களுக்கு : 11 + 1 = 12. = 6.
- ஆக மேல்பாதி 6 குழுக்களைக் கொண்டதாக இருக்கும் கீழ்ப்பாதிக்கு சூத்திரம் : (n-1)÷2,
- உம் : 11 குழுக்களுக்கு : 11-1 ÷ 10. = 5.
- ஆக, மேல்பாதி 6. கீழ்ப்பாதி 5 என்று கொள்ள வேண்டும்.
சிறப்பு விலக்கு (Bye) கொடுக்கிறபோது, கடைப்பிடிக்க வேண்டிய முறை கீழே தரப்பட்டிருக்கிறது.
விலக்குக்கு இரட்டைப்படை எண்ணாக அணிகள் இருந்தால்
மேல்பாதிக்குத் தரவேண்டிய சூத்திரம் nb÷2.
- உம் : 6 சிறப்பு விலக்கு என்றால் : = 3.
- கீழ்ப்பாதிக்கும் அதுவே சூத்திரம் nb÷2.
- உம் : 6 சிறப்பு விலக்கு என்றால் : = 3.
விலக்குக்கு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால்
- மேல்பாதியை அறிய : (mb-1)÷2.
- உம் : 5 விலக்குக் குழுக்கள் : 5-1 = 4 ; = 2.
- கீழ்ப்பாதிக்குரியது : (mb + 1)-2,
- உம் : 5 விலக்குக் குழுக்கள் : 5 + 1 = 6 ; = 3.
ஆகவே, 11 குழுக்கள் பங்குபெறுகின்றன என்கிறபோது, 6 சிறப்பு விலக்கு எண்ணிக்கை வருகிறது.
அதில் கீழ்ப்பாதியில் 3ம், மேல்பாதியில் 2ம் என்கிற விகிதத்தில், இடம்பெற்று இருப்பதைக் கண்டு தெளிக.
சில உதாரணங்களைத் தருகிறோம்
13 குழுக்கள் மொத்தம் என்றால் : 3 சிறப்பு விலக்கு. ழ்ேப்பாதியில் 2; மேல்பாதியில் 1.
19 குழுக்கள் மொத்தம் என்றால் 13 சிறப்பு விலக்கு. கீழ்ப்பாதியில் 7. மேல்பாதியில் 6.
27 குழுக்கள் மொத்தம் என்றால் 5 சிறப்பு விலக்கு. இழ்ப்பாதியில் 3. மேல்பாதியில் 2.ஒரு வாய்ப்புத் தொடர் போட்டி பந்தயங்களில் உள்ள, கிறைகளும் குறைகளும்.
நிறைகள்
1. பந்தயங்களைக் குறித்த நேரத்தில், குறுகிய காலத்திற்குள் விரைவாக நடத்தி முடிக்க முடியும்.
2.எல்லாம் திட்டமிட்டபடி நடப்பதால், அதிக பொருட்செலவு வராது.
3.பந்தயத்தில் ஒரு வாய்ப்பு தான் உள்ளது என்பதால், போட்டியில் அதிக ஆர்வத்தோடும், தீவிர முயற்சியோடும் குழுக்கள் பங்குபெறும், தோற்கும் குழு இடம் இழந்து போகிறதல்லவா!
குறைகள்
1. போட்டி ஒன்றில் எதிர்பாராத விதமாக தோற்றுப் போகிற குழு, மீண்டும் தனது திறமையை வெளிக் காட்ட இயலாமல் போகிறது.
2. மற்ற குழுக்கள் வெற்றி பெற்று, அதனுடன் போட்டியிடுவதற்காக ஒரு குழு, காத்திருக்க வேண்டியிருக்கிற கால தாமதம் நேர்கிறது.
3. சீட்டுக் குலுக்கிப் போட்டு, போட்டி நிரல் தயாரிக்கப்படுவதால், நல்ல திறமையுள்ள அணிகள் ஒரு பாதியில் வந்து, சந்திக்கிறபோது, நல்ல குழு இடமிழந்து போக நேரிடுகிறது.
சில சமயங்களில் திறனற்ற குழுவும் திறமையான குழுவும் இறுதிப் போட்டியில் சந்திக்க நேரிடுவதும் உண்டு; அந்த நிலையை இந்த ஒரு வாய்ப்புத் தொடர் அடிக்கடி உண்டாக்கி விடுகிறது.
இந்தக் குறையை நீக்கத்தான் சிறப்பிடம் தரும் முறை (Seeding Method) பின்பற்றப்படுகிறது.
ஒரு போட்டிக்கு 12 அணிகள் போட்டிக்கு வந்திருக் கின்றன. சிறப்பு விலக்கு 4 அணிகள் உண்டு என்று நாம் அறிவோம்.
அந்த இடத்தில் வருவதற்கு, சீட்டுக் குலுக்கிப்போடுகிற முறையில், முன்பு நாம் தேர்ந்தெடுத்தோம்.
இங்கு, சிறப்பிடம் தரும் முறையில், சீட்டுக் குலுக்கல் மூலம் அளிக்காமல், போட்டியை நடத்துபவர்களே அணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுப்பது?
அதற்கு 2 வழிகள் உள்ளன.
1. கடந்த காலத்தில், சிறப்பாக ஆடிய அணிகளின் சாதனைகளைக் கொண்டும்;
2. அப்படி தெரியாவிட்டால், நேரில் அந்த அணிகள் பற்றி கேட்டுக் கொண்டும், தீர்மானிக்கலாம்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை மட்டும் (இங்கே 4 என்று வைத்துக் கொள்வோம்) சீட்டுக் குலுக்கலின் மூலமாக அல்லது பரிந்துரை மூலமாக, சிறப்பிடம் கொடுத்திடலாம்.
இதில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், பங்குபெறுகிற குழுக்கள் 4ம், வருகிற தூரம், பெற்றிருக்கிற திறமை, தரம் முதலியவற்றையும் குறிப்பில் கொள்ளலாம்.
சென்னையில் போட்டி நடக்கிறது. நாகர் கோவில், கோவை, திருச்சி, மதுரை எனும் இடங்களிலிருந்து குழுக்கள் வருகின்றன. அந்த அணிகளின் தரமும் திறமும் நன்றாக இருக்கிறது என்பதால், அந்த நான்கு அணிக்கும் சிறப்பிடம் (Seeding) தருகின்றோம்.
72 குழுக்களுக்கு சிறப்பிடம் தந்திடும் ஒரு வாய்ப்புத் தொடர் போட்டி நிரல்
குறிப்பு இது போல் குழுக்களுக்கு சிறப்பிடம் தருகிற போது, அரை இறுதி ஆட்டத்தில், திறமையுள்ள குழுக்கள் போட்டி யிடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில், நல்ல குழுக்கள் 4ம், மேற்பாதியில் 2; கீழ்ப்பாதியில் 2 என்று பிரிக்கப்பட்டு விடுகின்றன.
2. சிறப்பிடம் தருகிற குழுவை, பரிந்துரை மூலம் போடலாம். அவற்றின் திறமைகள் சரியாக. இருக்கும் பட்சத்தில், சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுப்பதன் மூலம், சிக்கலை சரிசெய்து விடலாம்.
இவ்வாறு சிறப்பிடம் தந்து, விலக்களிக்கும் முறையை (Seeding - byes) எப்படி செய்வது என்பதை, இனி நாம் காண்போம்.
மொத்தம் 25 குழுக்கள் பங்கு பெறுகின்றன.
அவற்றில் 8 அணிகளுக்கு நாம் சிறப்பிடம் தரவேண்டும்.
8 அணிகளும் ஒரே பாதியில் வந்து விடக்கூடாது.
மேல் பாதி, கீழ்ப்பாதி என பிரித்துத் தந்தாலும், 4, 4 என்று வருகிற போது, ஒரு பகுதியிலேயும் வந்து விடக் கூடாது.
ஆகவே, அந்த எட்டு அணிகளும், கால் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வது போலச் செய்தாக வேண்டும்.
முழு போட்டி நிரலையும் நாம் இதுவரை இரண்டாகப் பிரித்து, மேல்பாதி, கீழ்ப்பாதி என்று பெயர் தந்திருக்கிறோம்.இப்பொழுது மேல்பாதியை இரண்டாகவும், கீழ்ப். பாதியை இரண்டாகவும் பிரித்தாக வேண்டும். அந்த அரைப்பாதி இரண்டாகப் பிரிகிற போது, கால் பகுதி (Quarter) என்ற பெயரைப் பெறுகிறது.
எனவே, இங்கு நான்கு கால்பகுதிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் 1, 2, 3, 4 என்று பெயரிடுவோம்.
ஒவ்வொரு கால்பகுதியிலும் 2 அணியாக 4 கால்பகுதியிலும் 8 அணிகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு இடம் பெறுகிற சிறப்பிடம் பெற்ற அணிகள், கால் இறுதிப் போட்டியில் தான், வந்து போட்டியிடும்.
அப்படியென்றால், அரையிறுதிப் போட்டியில் 4 அணிகள், இறுதிப் போட்டியில் 2 அணிகள் என்று இடம் பெறும்.
இதற்கிடையில் சிறப்பிடங்கள் பெறுகிற குழுக்கள், முதல் சுற்றிலேயே தோற்றுப் போனாலும் போகலாம். அது வேறு விஷயம்.
நாம் சிறப்பிடம் தருவது என்பது தான், இங்கே முக்கியமானதாகும்.
அந்த சிறப்பிடம் தருகிற முறையை, கீழ்க்காணும் முறைப்படி தரலாம்.25 குழுக்களுக்குரிய போட்டி நிரல்
முக்கியக் குறிப்புகள்
1. 8 அணிகள் சிறப்பிடம் பெறுகின்றன. அவற்றின் பெயர்கள் தனித்தனி துண்டு சீட்டில் எழுதப்பட்டு, சீட்டுக் குலுக்கல் மூலம் எடுக்கப்பட வேண்டும்.
அதில் சிறப்பிடம் 1, சிறப்பிடம் என்று குறித்திருக்கிறோம்.
அதாவது, சீட்டுக் குலுக்கலில் முதலாவதாக வருகின்ற அணி கீழ்பாதியில் உள்ள 4வது கால்பகுதியில் கடைசியிலும்: 2வதாக வருகிற அணி, மேல்பாதியில் உள்ள 2வது கால் பகுதியிலும், இப்படியாக இடம்பெற வேண்டும்.
- குலுக்கலில் முதல் சீட்டு-கீழ்பாதியில்-4வது பகுதி.
- 2வதாக வருகிற சீட்டு-மேல்பாதி-2வது பகுதியில்.
- 3வதாக வருகிற சீட்டு-கீழ்பாதி-3வது பகுதி.
- 4வதாக வருகிற சீட்டு-மேல்பாதி-1வது பகுதி.
- மீதியை படம் பார்த்துப் புரிந்து கொள்க.
25 குழுக்கள் என்றால், 7 சிறப்பிடம் தானே உண்டு. நமக்கு. 8 அணிகளுக்கு இடம் தர வேண்டுமே!
அதற்காக, 8வதாக சீட்டில் வரும் அணிக்கு, மேல் பாதியில் உள்ள 1வது இடத்தை அளித்திட வேண்டும்.
2. பிறகு, மீதியுள்ள 17 இடங்களுக்காக, சீட்டுக் குலுக்கல் போட்டு, அவற்றை வரிசையாகக் குறித்துக் கொண்டே வரவேண்டும். அதாவது மேலிருந்து, கீழாகக் குறித்துக் கொண்டுவர வேண்டும்.
3. அதற்குப் பிறகு ஆடவேண்டிய குழுக்களை இணை இணையாக (Pair) இணைத்து, அடைப்புக் குறியிட்டுக் காட்ட வேண்டும்.
தேர்ந்தெடுத்து சிறப்பிடம் தரும் முறை (Special Seeding)
ஒரு ஆட்டத்தில், திறமை பெற்ற ஆட்டக்காரர்கள் அல்லது ஆடும் குழுக்கள் இருப்பதுண்டு.
அவற்றை அவரை முதல் சுற்றிலிருந்து ஆடவிடாமல், நேரடியாக கால் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வது போல, சிறப்பிடம் அளிக்கும் முறையும் இருக்கிறது.
இம் முறை சரியானது இல்லையென்றாலும், போட்டித் தொடரில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே கையாளப்படுகின்றது.
இங்கே நாம் 12 குழுக்கள கலந்து கொள்ளும் ஒரு தொடர் போட்டியில், 4 அணிகளைத் தேர்ந்து சிறப்பிடம் தருகிறோம். அந்தப் போட்டிப் பட்டியலை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம். 12 குழுக்களுக்கான போட்டி நிரல்
முதல் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி ஆட்டம்
குறிப்பு :
1. 4 குழுக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொன்கிறோம்.
2. அவற்றை சீட்டுக் குலுக்கல் மூலம் பொறுக்கி எடுக்கிறோம்.
3. முதலாவதாக வருகிற குழுவை — கீழ்ப்பாதி கடைசியில் 12ல் குறிக்கிறோம்.
4. 2வதாக வருவதை மேல்பாதி கீழில் 6ல் குறிக்கிறோம்.
5. 3வதாக வருவதை கீழ்ப்பாதி மேலில் 7ல். குறிக்கிறோம்.
6. 4வதாக வருவதை மேல்பாதி 1ல் குறிக்கிறோம்.
7. பிறகு குழுக்களை இணை இணையாக சேர்த்து விடுகிறோம்.
இப்படியாக, இந்தப் போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும். இது போல், எத்தனை குழுக்கள் வந்தாலும், முறையாக சிறப்பிடக் குழுக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பிட விலக்குகனைக் கணக்கிட்டு, நிரலை தயாரிக்க வேண்டும்.
ஆறுதல் வாய்ப்பு முறை பக்தயங்கள்
(Consolation Tournaments)
ஒரு வாய்ப்புள்ள போட்டித் தொடரில், திறமை. வாய்ந்த ஒரு குழு ஏதோ ஒரு காரணத்திற்காக, அசாதாரண முறையில் தோற்றுப்போவதுண்டு.
அப்படி ஏற்படுகிற தோல்வியால், இடமிழந்து போகும். அந்தத் திறமையான குழு, தனது முழு திறமையையும். வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் போய் விடுவதால், அப்படிப்பட்ட குறையைப் போக்கி, மீண்டும் ஆட வாய்ப்பளிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் முழுத். திறமையையும் வெளிப்படுத்திக்காட்டி, மிஞ்சி இருக்கின்ற. வெற்றியையும், பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற. வழி ஏற்படுத்தி வாய்ப்புத் தருவதே, ஆறுதல் வாய்ப்புத் தொடர் போட்டி என்று அழைக்கப்படுகிறது.
இதனை, இரண்டு வகையாக்கி, வாய்ப்புத் தருவார்கள். முதலில் முதல் வகையைப் பார்ப்போம். (First Type) 13 குழுக்களுக்கான ஆறுதல் வாய்ப்புக் தொடர் போட்டி
முதல் சுற்றில் தோற்ற 2, 4, 5, 9, 11 சிறப்பிடம் பெற்ற முதல் சுற்றில் ஆடாமல், 2ம் சுற்றில் ஆடித் தோற்ற 13ம், ஆறுதல் போட்டியில் இடம் பெற்றுக் கொள்கின்றன
அவற்றிற்கு. நாம் போட்டி நிரல் தயாரிக்க வேண்டும்.
தோற்றிருக்கும் குழுக்களின் எண்ணிக்கை 6.
ஆகவே, இதில் 2 சிறப்பிட விலக்கு நாம் அளிக்க வேண்டும்.
ஆறுதல் வாய்ப்பு போட்டி நிரல்
குறிப்பும் விலக்கமும்
1. இந்த ஆறுதல் வாய்ப்பில், தோற்ற குழு, இரண்டாவதாக விளையாடுகிற வாய்ப்பைப் பெறுகிறது.
2. தோற்றக் குழுவினர் தங்களுக்குள்ளே, மீண்டும் வாய்ப்புத் தொடர் போட்டியை ஆடி, நிறைவு கொள்கின்றனர்.
3. முதல் சுற்றில் தோற்ற குழுக்களையும், சிறப்பிடம் பெற்று 2வது சுற்றில் ஆடித் தோற்ற குழுக்களையும், இந்தப் போட்டி நிரலில் சேர்த்துக் கொள்ளலாம்.
4. ஆறுதல் வாய்ப்புப் போட்டிக்கான போட்டி நிரல் தயாரிக்கிற பொழுதும், இரட்டைப் பெருக்கம், அதில் விலக்கம் தருகிற விதிமுறைகளையும், இங்கே கடைபிடித்திட வேண்டும்.
5. அதிகமான போட்டிகள் நடைபெறுவதால், போட்டித் தொடரானது புத்துணர்ச்சி ளித்திடும் பெருமையையும் வாய்ப்பையும் பெறுகிறது.4 சிறப்புவிலக்கு குழு (Bye) = 4 — 1 = 3 போட்டிகள் அதிக அளவு : 8 சிறப்பு விலக்கு பெறாத குழுக்கள்
ஆகவே 8 — 1 = 7 போட்டிகள்
3. கலந்து கொண்டிருக்கின்ற குழுக்கள், நடுவ்ன் எண்ணுக்கும் கீழானதாக இருந்தால் (less than the middle number)
நடுவன் எண்ணுள்ள அமைப்பின்படியே, ஆறுதல் ஆட்டங்கள் ஆடப்படும்.
நடுவன் எண்ணுக்கும் அதிகமான அமைப்பில், குழுக்கள் இருந்தால் 2ஐ கழிக்க வேண்டும்.
உம் : 10 குழுக்கள் பங்கு பெறுகின்றன.
குறைந்த பட்ச ஆட்டம் கண்டுபிடிக்க :10க்கு நடுஎண் 5 என்று கொள்ளவும்.
ஆகவே, 5 — 2 = 3 ஆறுதல் ஆட்டங்கள் குறைந்த பட்சம். அதிகபட்ச ஆறதல் ஆட்டம் எவ்வளவு என்பதை அறிய (n - minus 2 minus minimum) என்று கணக்கிடுக.
மொத்த குழு எண்ணிக்கை 10.
அதில் 2ஐ கழித்தால் — குறைந்தபட்ச ஆட்டங்களை கழித்தால் |
10 — 2 — 3 = 5 |
4. கலந்து கொள்ளும் குழுக்களின் எண்ணிக்கை, நடுவன் எண்ணுக்கும் அதிகமாக இருந்தால். (more than the middle number).
அதற்கான சூத்திரம் - நடுவன் எண் எத்தனையோ அந்த எண்ணிக்கை தான் குறைந்த பட்ச போட்டி ஆட்டம்.
அதிக அளவு ஆட்டம் கண்டுபிடிக்க- (n- minus 2 and minus maximum)
உதாரணத்திற்கு பார்ப்போம்.
15 குழுக்கள் பங்கு பெறுகின்றன.
குறைந்த பட்சம் போட்டி ஆட்டம் : நடுவன் எண் 15க்கு 7.
ஆகவே 7 ஆறுதல் ஆட்டங்கள் ஆடலாம். அதிகபட்ச ஆட்டங்கள் காண : 15-2-7 = 6ஆட்டங்கள்
இனி, ஆறுதல் போட்டியின் 2வது வகையைப் பார்ப்போம்.
இந்த இரண்டாவது வகை ஆறுதல் போட்டியில், போட்டியில் தோற்று வாய்ப்பிழந்த எல்லாக் குழுக்களுமே, போட்டியிட்டு, அதற்குரிய வெற்றிப் பெருமையை அடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆரம்பச் சுற்றுகளில் மோதிய குழுக்களையே, மீண்டும் மோதவிடாமல் தவிர்த்து, போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும்.
இந்தப் போட்டி நிரலை இரண்டு முறையாக நாம் தயாரிக்கலாம்.1. சிறப்பு விலக்கு தராதபடி தயாரித்தல்.
2. சிறப்பிடம் (விலக்கு) கொடுத்து தயாரித்தல்.
16 குழுக்களுக்குரிய போட்டி நிரல்
(சிறப்பு விலக்கு தராதபடி உள்ளது)
தோற்ற குழுக்களின் ஆறுதல் போட்டி நிரல்
முதல் சுற்றில் தோற்றவர் |
2ம் சுற்றில் தோற்றவர் |
3ம் சுற்றில் தோற்றவர் |
4ம் சுற்றில் தோற்றவர் |
2 | 2 | 5 | 9 |
4 | 7 | 13 | |
6 | 11 | ||
8 | |||
10 | |||
12 | |||
14 | |||
16 |
இப்படி தோற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவர்களுக்கு இடையே போட்டி நிரலை மீண்டும் தயாரிக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் 9ம் குழு ஆறுதல் வெற்றியாள ராகக் கருதப்படுகிறது.
இந்த போட்டி நிரல் முறை எப்படி அமைந்தது என்று இங்கே விளக்கமாகக் காண்போம்.
1. எட்டு குழு முதலில் தோற்றிருக்கின்றன. அவற்றுக்கு இடையே போட்டி நடத்தி, 4 குழுவை தேர்ந்தெடுக்கிறோம்.
3. இந்த 2வது சுற்றில் வெற்றி பெற்று வருகிற 2 குழுக்களுடன், 3வது சுற்றில் தோற்றிருந்த 2 குழுக்களுடன் போட்டியிட வைக்கிறோம்.
4. இதில் ஜெயித்த ஒரு குழுவை இறுதிப் போட்டியில் தோற்ற குழுவுடன் போட்டியிட வைக்கிறோம்.
இனி, சிறப்பிடம் கொடுத்து (Byes) எப்படி இந்த ஆறுதல் போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. முதல் சுற்றில் ஒரு ஒரு குழு தான் தோற்றிருக்கிறது.
2. 2வது சுற்றில் 4 குழுக்கள் தோற்றிருக்கின்றன.
3. 2வது சுற்றில் தோற்றதைவிட, முதல் சுற்றில் தோற்ற குழு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், அதையும் இந்தக் குழுக்களுடன் சேர்த்துக் கொண்டு, 3வது சுற்றில் தோற்ற குழு எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவாக வருவது போல், செய்து கொள்ள வேண்டும்.
4. மற்ற சுற்றுக்களுக்கு, முந்தைய ஆறுதல் நிரலைக் காண்க.
இப்பொழுது, சிறப்பிடம் தந்த, 9 குழுக்களுக்குரிய போட்டி நிரலைக் காண்போம்.7 சிறப்பிடங்கள் கொடுத்திருக்கிறோம்.
இந்தப் போட்டியில் தோற்ற குழுக்கள்
முதல் சுற்று | 2ம் சுற்று | 3ம் சுற்று | 4ம் சுற்று |
3 | 2 | 4 | 8 |
| 2 | 6 | |
6 | 11 | ||
| 7 | ||
9 |
ஆறுதல் போட்டி நிரல்
இதில் 8ம், குழு ஆறுதல் போட்டியில் வெற்றிக்குழுவாக அமைகிறது.
இனி, இதிலே உள்ள 2வது முறையையும் காண்போம். மாதிரி போட்டி நிரலை மட்டும் தந்திருக்கிறோம்.சிறப்பிடம் தராமல் 8 குழுக்களுக்குரிய போட்டி நிரல்
ஆறுதல் போட்டி நிரல்
6 சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
ஆறுதல் போட்டி நிரல்
இதில் 9, வெற்றிக் குழுவாக அறிவிக்கப்படுகிறது.
இந்த 2வது முறையில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், தோற்ற குழுக்களை, ஒவ்வொரு சுற்றாக எடுத்து, போட்டியிட வைத்திருப்பது தான்.
ஒவ்வொரு சுற்றிலும் போட்டியிட்ட குழுக்களில் வென்ற குழு, அடுத்த சுற்றில் வெற்றி பெற்ற குழுவுடன் போட்டியிட்டு, இறுதியாக, வெற்றி நிலைக்கு வருவது தான் சிறப்பம்சமாகும்.
இந்த 2வது வகையில் உள்ள ஆறுதல் போட்டி நிரலில், 2வது முறையே சிறந்ததாக, வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
முறையாக வெற்றிநிலையை அடைந்த குழு வெற்றி யாளராகவும் (Winner) , ஆறுதல் போட்டியில் வெற்றியை அடைந்த குழுவை 2வது வெற்றிக் குழுவாகவும் (Runner8 tp) அங்கீகரிக்கப்படுகிறது.
இந்த இரண்டு முறைக்கும் உள்ள ஒற்றுமை-முன்றையாக போட்டியில் வெற்றி பெற்று வந்த குழுவை முதலிடம் கொடுத்து பாராட்டுவது தான்.
ஆனால், ஆறுதல் போட்டியில் வெற்றி பெற்ற குழுவை 2வது வெற்றிக் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அந்தக் குழு எல்லாக் குழுக்களிடமும் விளையாடி வெல்லாமல், ஆறுதல் போட்டிக் குழுக்களை மட்டுமே வென்றுவருவதால், இது ஒரு குறையாகவே இருக்கிறது.
இதில் எத்தனை போட்டி ஆட்டங்கள் நடக்கும் என்று கண்டறிய சூத்திரம் (2n-3).
3. இரட்டை வாய்ப்பு முறை (Double Knock Out)
இரட்டை வாய்ப்பு முறை தொடர் போட்டிப் பந்தயத்தில், ஒரு குழு, போட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றால், அது இரண்டு முறை தோற்கடிக்கப்பட வேண்டும்.போட்டியில் பங்கு பெறுகிற குழுக்கள் அனைத்தும், இரண்டு முறை தோற்கிற வரையில், இந்தப் போட்டித் தொடர் தொடரும்.
இந்தப் போட்டியானது, ஒற்றை வாய்ப்பு முறை, ஆறுதல் வாய்ப்பு முறை பந்தயங்களை விட சிறந்ததாகும்.
இதுவும் ஆறுதல் போட்டித் தொடர் முறையின், இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும். ஏனென்றால், முறையாகப் பெற்ற வெற்றிக் குழுவும் (RW), ஆறுதல் போட்டி நிரலில் வெற்றி பெற்ற குழுவும் போட்டியிட்ட பிறகு தான், உண்மையான வெற்றிக் குழுவை தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கான சூத்திரம் (2n—2) அல்லது (2n—1).
9 குழுக்களுக்கான இரட்டை வாய்ப்பு முறை போட்டி நிரல்
4. பக்னால் ஒய்ல்ட் நீக்கு முறை போட்டித் தொடர்
(Bagnall wild Elimination Tournament)
உண்மையான முதல் 3 வெற்றிக் குழுக்களையும் இந்தப் போடடி முறை நன்கு தெரிவு செய்யும் வாய்ப்பினை நல்குகிறது.
10 குழுக்களுக்கான போட்டி நிரல்
முதல் நிலை I : ஒரு வாய்ப்பு முறை போட்டியின் மூலமாக 6 முதல் இடம் பெற்று விட்டது.
இரண்டாம் நிலை 1 : முதலிடம் பெற்ற (6) குழுவிடம் இறுதிப் போட்டியில் தோற்ற (4) குழுவைத்தவிர, மற்ற குழுக்கள் மீண்டும் போட்டியிடுகிற வாய்ப்பைப் பெற்று. அதில் முதலாவதாக வருகிற குழு (7), இறுதிப் போட்டியில் தோற்ற (4) குழுவுடன் போட்டியிட இரண்டாம் நிலை நிர்ணயிக்கப்படுகிறது.
மீண்டும் பார்ப்போம். 6 முதல்நிலை பெற்ற குழு. 6 இடம் தோற்ற குழு 4 மீண்டும் தோற்ற குழுக்கள் போட்டி ஆயிடுகிறபோது, 9ம் 7ம் மோதுகிறது, அதில் 7 வெற்றி பெறுகிறது.
வெற்றி பெற்ற 7ம் நம்பர் குழுவும், முன்னர் இறுதிம் போட்டியில் தோற்ற 4ம் நம்பர் குழுவும் போட்டியிட 4ம் தம்பர் குழு ஜெயிக்கவே, அது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது.
மூன்றாம் நிலை III : இறுதிப் போட்டியில் தோற்றக் குழுவிடம் (4) தோற்றுப்போன குழுக்கள் (மேல்பகுதியில் உள்ளது) தங்களுக்குள்ளே போட்டியிட்டு: அதில் வெற்றி பெறுகிற குழு இறுதிப் போட்டியில் தோற்றக் குழுவிடம் மோத, அதில் வெல்லுகிற குழு 2ம் இடத்தைப் பெறுகிறது.
உம் : இறுதிப் போட்டியில் தோற்ற 4ம் நம்பர் குழுவிடம் 1ம் 5ம் தோற்றிருக்கின்றன. 4ம் 5ம் போட்டியிட, அதில் வெற்றிபெறுகிற குழுவான 5ம் நம்பருடன் (கீழ்ப்பாதியில்) அடுத்த பாதியில் வெற்றி பெற்றுள்ள 7ம் நம்பருடன் போட்டியிட வேண்டும். இதில் வெல்லுகிற குழு 3ம் இடத்தைப் பெறுகிறது.
குறிப்பு : இந்தப் போட்டியில் 4ம் நம்பர் ஜெயிப்பதற்குப் பதிலாக, 7ம் நம்பர் குழு ஜெயித்துவிட்டால், 7ம் நம்பர் குழு 2ம் இடத்தைப் பெறுகிறது. தோற்ற 4ம் நம்பர் குழு, முன்னரே, இறுதிப் போட்டியில் தோற்றிருந்தாலும் 7ம் நம்பரிடம் தோற்றதன் காரணமாக, மூன்றாம் நிலையைப் பெறுகிறது.
11. தொடர் வாய்ப்புப் பந்தயங்கள்
(League or Round Robin Tournment)
இந்தப் பந்தய முறையை, 2 வகையாகப் பிரிக்கலாம்.
1. ஒரு தொடர் வாய்ப்புமுறை. (Single league)
2. இரட்டைத் தொடர் வாய்ப்பு முறை Double league)
1. ஒரு தொடர் வாய்ப்பு முறையில், எல்லாக் குழுக்களும், ஒன்றுக்கு ஒன்று என ஒரு தடவை மட்டும். போட்டியிடுகின்றன.
இதனால் ஏற்படும் மொத்தம் போட்டி ஆட்டங்களின் எண்ணிக்கை அதற்கான குத்திரம் n (n-1) + 2.உம் : 8 குழுக்கள் போட்டியிடுகின்றன.
8 (8-1) ÷ 2 = 8 ×7÷2 = 56÷2 = 28
மொத்த போட்டி ஆட்டங்கள் 28 ஆகும்.
2. இரட்டை தொடர் வாய்ப்பு முறையில், எல்லாக் குழுக்களும், ஒன்றுக்கு ஒன்று இரண்டு தடவை போட்டி போடுகின்றன. மொத்த போட்டி ஆட்டங்களைக் கண்டு பிடிப்பதற்கான சூத்திரம் : n (n-1).
உம்: 8 குழுக்கள் என்றால் 8 (8-1) = 8x 7 = 56
தொடர் வாய்ப்புப் பந்தயத்தில் உள்ள நிறையும் குறையும்
நிறைகள்
1. போட்டியிடும் குழுக்களிலிருந்து, உண்மையான திறமைவாய்ந்த வெற்றிக் குழுவைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
2. அதிகமான எண்ணிக்கையில் போட்டி ஆட்டங்கன் நடைபெறுகின்றன.
3. குழுக்களின் திறமையை வரிசைப்படுத்த இது உதவுகிறது.
4. ஒரு வாய்ப்பு முறையில் நடப்பது போல, ஒரு குழு ஆடி ஜெயித்து வருகிற வரைக்கும், மற்ற குழுக்கள் வீணாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆடுவதற்குத் தயாரர்க எந்த குழு இருக்கிறதோ, அதனுடன் ஆடிட முடியும்.குறைகள்
1. அதிகமான போட்டி ஆட்டங்கள் நடைபெறுவதால், அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. வசதிகள் செய்து கொடுக்க வேண்டியிருப்பதால், பொருட் செலவும் அதிகமாகிறது.
2. அடிக்கடி தோற்கிற குழு, உற்சாகம் இழந்து, போகிறது. போட்டியில் அதிக ஈடுபாடு கொன்வதும் அதனால் குறைகிறது.
ஒற்றைத் தொடர் வாய்ப்பு போட்டி விரல் (Single)
6 குழுக்களுக்கானது. சூத்திரம் 6 × (6-1)÷2 = 15.
அதாவது 6 × 5 = 30 ÷ 2 = 15 ஆகும்.
முதல்சுற்று | II | III | IV | V | ||
---|---|---|---|---|---|---|
6-1 | 5–1 | 4–1 | 3–1 | 2 -1 | மொத்தம் | |
5–2 | 4-6 | 3-5 | 2-4 | 6-3 | 15 ஆட்டங்கள் | |
4–3 | 3–4 | 2–6 | 6–5 | 5-4 |
இது (சைக்கிள் சுழல்) வட்டப் போட்டி நிரல் முறை. (Cyclic method) என்று அழைக்கப்படுகிறது.
அடுத்துள்ள இன்னொரு முறை : அட்டவணை முறை (Tabular method) 5 குழுக்களுக்கானது
இந்த அட்டவணை முறைக்குரிய கட்டங்களை பின்வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
1. இரட்டைப் படையில் குழுக்களின் எண்ணிக்கை இருந்தால் : n+1 என்பதாக கட்டங்கள். 6 என்றால் 7 கட்டங்கள்.
2. ஒற்றைப் படையில் குழுக்களின் எண்ணிக்கை இருந்தால் n + 2 கட்டங்கள். அதாவது 7 என்றால் 9 கட்டங்கள். 7 குழுக்களுக்குரிய அட்டவணை முறை
எப்படி இந்த அட்டவணை முறையைத் தயாரிப்பது? படுக்கை வசமாக (Horizontal) உள்ள பகுதியில் 1 முதல் 7 வரை எண்களைக் குறித்திருப்பதைக் காணவும்.
பிறகு செங்குத்தாக (Vertical) உள்ள பகுதியைப் பாருங்கள். Bயில் 1, Cயில் 2, 3, Dயில் 3,4,5, Fல் 5, 6, 7. 1, 2, என்று தொடர்ந்து வருவது போல, குழுக்களின் நம்பர்களைக் குறிக்கவும்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எண்வந்திருப்பது போல, குறித்துக் கொண்டு, பிறகு எழுதிக் கொள்ளவும்.
சதுரங்களில் குறிக்கப்பட்டுள்ள எண்கள், அந்தந்தக் குழுக்கள் ஒன்றையொன்று சந்திக்க வேண்டிய சுற்றைக் குறிக்கும். குறிப்பிட்ட சுற்றுகளுக்கான போட்டியாட்டம், நடைபெற. வேண்டிய நாளையும், அந்தந்த சதுரங்களில் குறித்துக் காட்டலாம்.
3. படிக்கட்டு முறை (Staircase method)
7 குழுக்களுக்கான போட்டி நிரல்
இந்தப் படிக்கட்டு முறையில் உள்ள குறைகளாவன:-
2. வட்டமுறை, அட்டவணைமுறை இவைகளைப் போல, தயாரித்துள்ள படிக்கட்டுப் போட்டி நிரல் முறையில், எந்தெந்த நாட்களில் எந்தெந்தக் குழுக்கள் போட்டியிட வேண்டும் என்பதை எளிதில் குறித்துக் காட்டவும் இயலாது.
3. பந்தயத்தில் கலந்து கொள்கிற குழுக்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருந்தால், எந்தெந்த சுற்றில் (Round) எந்தெந்தக் குழுவிற்கு சிறப்பிடம் அளித்து விலக்களிக்க (Bye) வேண்டும், என்பதையும் அறிந்து கொள்ள இயலாது.
தொடர் வாய்ப்புப் பந்தயத்தில், வெற்றிக் குழுவைத் தீர்மானிக்கும் முறை (To decide the winners)
1 போட்டி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் -
2 வெற்றி எண்கள்
1 போட்டி ஆட்டத்தில் தோற்று விட்டால் -
1 வெற்றி எண்
குழுவும் சமநிலை (Tie) அடைந்தால் -
1 வெற்றி எண்
போட்டித் தொடரில், அதிகமான வெற்றி எண்களைப் பெறுகிற குழுவே, வெற்றி பெற்றது என்று அறிவிக்க வேண்டும்.
வெற்றி எண்கள் விகிதத்தில், இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்கள் சமநிலை பெற்றிருந்தால், அந்தத் தடையைத் தீர்த்து, வெற்றிக்குழு எதுவென்று தீர்மானிக்க, கீழ்க்காணும் விதிமுறைகளைப் பயன் படுத்தலாம்.
சமகிலையை சமாளித்து வெற்றியைத் தீர்மானிக்கும் விதிகள்
1. சமநிலை பெற்ற் 2 குழுக்களில், முதல் போட்டியின் போது ஒன்றை முதலில் வென்றுள்ள குழுவையே வெற்றிக் குழுவென்று அறிவிக்கலாம்.
2. அப்பொழுதும் வெற்றி தோல்வியை அறின் முடியாத அளவில் சிக்கல் இருந்தால், சமநிலையில் இருக்கும் குழுக்களில், எந்தக் குழு, அதிகமான குழுக்களை வென்றிருக்கிறது என்பதைக், கண்டறிந்து, முதலிடம் கொடுக்கலாம்.
3. மீண்டும் தீர்க்க முடியாதபடி சிக்கல் இருந்தால். எந்தக் குழு அந்தப் போட்டி முழுவதிலும் அதிக வெற்றி எண்கள் பெற்றிருக்கின்றன (Points), அல்லது அதிக கோல்கள் (Goal) போட்டிருக் கின்றன என்பதைக் கண்டறிந்து, முடிவை எடுக்கலாம்.
மேலும் புரிந்து கொள்வதற்காக, தந்திடும் சான்றினைம் பாருங்கள். AB என்ற 2 குழுக்கள், ஹாக்கியில் சமநிலையில் உள்ளன. அதற்கான முடிவினை அறிய உதவும் பட்டியல் இது.174
இந்த எண்ணிக்கை அளவிலும் இரு குழுக்களும் சமநிலையில் இருந்தால்,
1. சமநிலையில் உள்ள குழுக்களை, மீண்டும் ஒருமுறை போட்டியிடச் செய்து, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம்.
1. அதிலும் கண்டுபிடிக்க முடியாமல் அல்லது நேரம் இல்லாமற்போனால், அல்லது முடிவறிய சாதகமான சூழ்நிலை அமையாமல் இருந்தால், நாணயம் சுண்டி, அதில் முடிவு காணலாம். இதை எவரும் விரும்பமாட்டார்கள் என்றாலும், மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். மற்ற நிலையில் உள்ள (1, 2 தவிர குழுக்களுக்கு, அதே இடங்களை அளித்து, முடிவு கூறி விடலாம்.
(Combination Tournaments)
அதிகமான எண்ணிக்கையில், குழுக்கள் பங்கு பெறுகிறபோது, இந்தப் பந்தய முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருகிற குழுக்களை பல பிரிவுகளாக (Group) அல்லது பல தொகுதிகளாகப் (Zones) பிரித்துவிட்டு, ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே ஆடவிட்டு, அவற்றில் வருகிற வெற்றிக் குழுக்களை மட்டும், ஒரு வாய்ப்பு முறை அல்லது பல வாய்ப்புத் தொடர் முறை மூலமாக ஆடவிட்டு, முடிவு காணலாம்.
தமிழகம் முழுவதும் கலந்து கொள்கிற போட்டி என்று வைத்துக் கொள்வோம். எல்லா குழுக்களையும் கொண்டு வந்து, ஓரிடத்தில் போட்டி நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம்.
ஆகவே, தமிழகத்தை 4 தொகுதியாகப் பிரித்து (A,B,C,D Zones) ஒவ்வொரு தொகுதியையும் ஆங்காங்கே ஆடவிடுகிற முறை.
தமிழ்தாட்டுப் பள்ளிகளுக்கிடையே நடக்கும் குடியரசுப் போட்டிகள், இந்த முறையில் தான் நடத்தப்படுகின்றன.
3-1. ஒரு வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (Knock out Cum Knock out)
ஒரு வாய்ப்புப் போட்டி முறையில் 4 குழுக்கள் வெற்றி பெற்று வந்திருக்கின்றன. அவற்றுக்கிடையே, ஒரு வாய்ப்புப் போட்டி முறையில், இறுதிப் போட்டிகளை நடத்துவதுதான். இந்த முறை.
தொகுதிகளுக்கிடையில் நடத்தும் ஒரு வாய்ப்புப் போட்டி நிரல்.
வெற்றிக் குழுக்கள்
(Knock out Cum League)
நான்கு தொகுதிகள் ABCD.
பிறகு, பல வாய்ப்புத் தொடர் போட்டி முறையை, பயன்படுத்துதல் வேண்டும்.
A—B
A—C B—C
A—D B–D C—D
3—3. தொடர் வாய்ப்பு முறையுடன் தொடர் வாய்ப்பு முறை
(League Cum League)
A B C D என்ற நான்கு தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 4 குழுக்களும், ஒன்றுக்கொன்று பல முறை போட்டியிட்டுக் கொள்கின்றன.
இப்பொழுது, வெற்றிக குழுக்களுக்கிடையே தொடர் வாய்ப்புப் போட்டி.
А—В
A—C B—C
A—D B—D C—D 3-4. தொடர் வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை
(League Cum Knock out)
நான்கு தொகுதிகள் கொண்டது ABCD.
முதலில் 4 தொகுதிகளிலும் தொடர்வாய்ப்பு முறையில் பல முறை ஆடி, வெற்றி பெற்றக் குழுக்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நான்கு குழுக்களுக்கு இடையே, ஒரு வாய்ப்பு முறையில் போட்டியை நடத்தி முடிவு காண்பது.
போட்டி நிரல்
4. சவால் போட்டிப் பந்தயங்கள் (Challange Tournaments)
சவால் போட்டிப் பந்தயங்கள் ஒற்றையர் பந்தயம், அல்லது இரட்டையர் பந்தயம் உள்ள விளையாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். (Singles and Doubles). பூப்பந்தாட்டம், டென்னிஸ், மேசைப் பந்தாட்டம், டென்னி காட்ட் போன்ற ஆட்டங்களை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
கிரிக்கெட், கைப்பந்தாட்டம் போன்ற முதன்மை விளையாட்டுக்கள் போன்ற குழு விளையாட்டுகளுக்கு, இது தேவைப்படாதது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்கிற அனைவரும், ஒருவருக்கொருவர் தனித் தனியே போட்டியிட்டு, வெற்றி பெற்று வர வேண்டும்.
இந்த முறையில், தனிப்பட்ட சிறந்த வீரர்களை, கவனத்துடன் தேர்ந்தெடுத்து விட முடிகிறது.இதற்கான போட்டி நிரலை. 2 வகையாகப் தயாரிக்கலாம்.
1. ஏணி முறை.
2. கோபுர முறை.
1. ஏணி முறை (Ladder Method)
இதை ஒரடுக்கு முறை என்று கூட கூறலாம்.
சிறந்த ஆட்டக்காரர்களுடன், திறமையற்ற ஆட்டக்காரர்கள் மோதுவது என்பது இதில் இல்லை. எல்லோரும் எல்லாருடனும் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பது தான், இந்த முறையின் சிறப்பம்சமாகும்.
சீட்டுக் குலுக்கல் மூலமாகவோ, தெரிந்து வைத்திருக்கும் தன் முனைப்பு மூலமாகவோ, போட்டி நிரலைத் தயாரிக்கலாம்.
அதற்கான, சில விதி முறைகள் உள்ளன. அவற்றையும் காண்போம்.
1 |
---|
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
- 1. இந்தப் போட்டித் தொடர் எப்பொழுது தொடங்கி, எப்பொழுது முடியும் என்பதைக் கட்டாயம் குறிப் பிட்டாக வேண்டும். (1 மாதம் அல்லது 8 மாதம். என்பதாக)
- 2. ஒரு ஆட்டக்காரர், தனக்கு மேல்தட்டில். உள்ள ஒரு ஆட்டக்காரருடன் தான், போட்டியிட வேண்டும். அல்லது மேல் வரிசையில் உள்ள 2. அல்லது 3 ஆட்டக்காரர்களையும். போட்டியிட அழைக்கலாம்.
- உம் 6 வது ஆட்டக்காரர் 5 வது ஆட்டக்காரருடன் போட்டியிடலாம். அல்லது 4, 3 ம் எண் ஆட்டக்காரர்களையும் போட்டிக்கு. அழைக்கலாம்.
- 3. போட்டி நிரலின் படியே தான் ஆட வேண்டும் என்ற நியதியைக் கடைபிடிக்க்சு செய்யலாம்.
- 4. போட்டிக்கு அழைத்தால், ஓரிரு நாட்களுக்குள் அந்தப் போட்டி ஆட்டத்தை, ஆடி முடித்து விட வேண்டும்.
5. சவாலிட்டுத் தோற்றுப் போனவர், ஏணி போட்டி நிரவில், முன் இருந்த இடத்தை, மாற்றிக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தகுதிக்கேற்ப, வரிசையாகக் கொடுக்கப்பட்ட இடத்திலேயே இருந்து ஆட அனுமதிக்கலாம்.
6. இருவர் சவாலிட்டு ஆடி முடித்து, வெற்றி தோல்வி அறிந்த பிறகு, மீண்டும் அந்த இருவரும் போட்டியிட்டு ஆட வேண்டும் என்பது அவசியம் இல்லை.
உம் : 3ம் 4ம் ஆடிய பிறகு, 4 தோற்று விட்டால், மீண்டும் 3ம் 4ம் ஆட வேண்டியதில்லை. 4ம் எண், மற்ற 2, 1 போன்ற நம்பர்களுடன் ஆடலாம்.
7. போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக, சாக்கு போக்குகள் கூறினால், அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இயற்கைக் காலநிலை மோசமாக இருந்தால் மட்டுமே, ஆட்டம் மாற்றி வைக்கப்படலாம்.
அப்படி ஆடவராதவர் அல்லது மறுப்பவர், தமது தகுதி இடத்தை விட்டு மாற்றப்படக் கூடிய நிலையை அடைகிறார்.
8. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ளே, ஏணிப் போட்டி நிரலில், முதல் இடத்தை வகித்துக் கொண்டிருப் பவரே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார்.
4–2. கோபுர முறை (Pyramid method)
ஏணி முறையில் சற்று மாறுபட்ட வடிவமைப்புள்ளது. இது.
ஏணி முறைக்கான விதி முறைகள். அனைத்தும் இதற்குப் பொருந்தும். சீட்டுக் குலுக்கல் மூலம் அல்லது ஆட்டக்காரர்களைத் தெரிந்தெடுத்துப் போடுவதன் மூலமாகப் போட்டி நிரலைத் தயார் செய்யலாம்.
தனக்குரிய பகுதியில் இருந்து (Rank) அடுத்து மேல் வரிசையில் உள்ளவர்களை மட்டுமே சவால் இட்டு அழைக்கலாம். அதுவும் தனது பகுதியில் உள்ளவர்களுடன் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அது இயலும்.
கோபுர போட்டி நிரல்